தமிழ் அரங்கம்

Saturday, November 19, 2005

இலங்கை அரசியலில் விபச்சாரம்

செய்வோரை மக்கள் தெளிவாகவே அம்பலப்படுத்துகின்றது.

இலங்கையில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தல் முடிவுகள், மக்களின் மனநிலையையும் இந்த ஜனநாயகத்தின் மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளது. மக்களையே பிளந்து அவர்களை குறுகிய வட்டத்தில் நிறுத்தி, இது தான் மிகயுயர்ந்த ஜனநாயகம் என்று கூறி வாக்களிக்க விட்டனர். அதாவது வளர்ப்பு மந்தைக்கு கருக்கட்ட ஆண் மந்தைகளை புணர விடுவது போல், அரசியல் கட்சிகள் மக்களை புணரவிட்டனர். இந்த புணர்வில் மூலம் பலரும் எதிர்பாரத முடிவுகளையே, எதார்த்தம் சார்ந்து வெளிபடுத்தியுள்ளனர். மக்களைப் பிளந்து அரசியல் செய்யும் இந்த மோசடியான ஜனநாகத்தில், மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மனித அழிவுகளை பெருமளவில் எற்படுத்தக் கூடிய, எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய பல எதிர்வுகூறல்களுக்கு எதார்த்தம் எம்மை இட்டுச்செல்லுகின்றது. மொத்த இலங்கையும் மிகவும் முன் கண்டிராத நெருக்கடியான காலகட்டத்தில் ஊடாகவே நகரவுள்ளது. என்றுமில்லாத ஒரு பயங்காரமான மனித அழிவுகளை எற்படுத்தக் கூடிய, வன்முறைகளை மக்கள் மேல் எவப்படும் சூழலலே பொதுவாக உள்ளது. அதேநேரம் இத்தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்திய எண்ணப்பாடுகள், எதிர்நிலையில் அரசியல் விபச்சாரத்தையே எள்ளி நகையாடியுள்ளது. இதை நாம் விரிவாகப் பார்ப்போம்.

தேர்தல் முடிவுகள் எதைக் குறிப்பாக்கி காட்டுகின்றன

சிங்கள இனவாத கோசங்கள் மூலம், புலிகளின் மறைமுகமான அனுசாரனை மூலம் தான் ஜனதிபதியாகியுள்ளார். இந்த ஜனநாயகம் வழங்கும் கூத்தில் பெறப்பட்ட வெற்றி, மிகக் குறுகிய பெருபான்மையுடன் கூடியது. இதுவே அவரின் எதிர்கால அரசியலை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது. இந்த வெற்றியை உருவாக்கித் தந்த புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை, மஹிந்த ராஜபக்ஷ வெற்றியால் புளுங்காதிதம் அடையும் ஜே.வி.பியும், ஈ.பி;.டி.பியும் இந்த வெற்றி ஜனநாயக விரோத புலிகளின் நடத்தையால் தமக்கு கிடைத்த வெற்றி என்று கூறி ஜனநாயகத்தின் காவலராக மாறிவிடவில்லை. ஜனநாயகம் என்பது இவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, தமது குறுகிய நலன் சார்ந்தாக இருப்பதால் தான் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றில் தமது பங்குக்காக வாலாட்ட தொடங்கிவிட்டனர். இந்த வெற்றிக்கு புலிகளின் ஜனநாயக விரோதம் உதவியதால், அது ஜனநாயக மீறல் அல்ல என்பது அரசியல் பிழைப்புவாதிகளின் நக்கிபிழைப்பாக உள்ளது. ஆனால் புலிகளின் ஜனநாயக விரோத செய்ல்பாட்டை அனுமதிக்க முடியாது என்பது இவர்களின் மற்றொருபக்க சந்தர்ப்பவாத அரசியலே இனவாதமாக கொக்கரிக்கின்றது.

இது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுரையின் ஒரு பகுதி மட்டும்.

Saturday, November 12, 2005

மதத்துக்கு எதிராக

எப்படிப் போராட வேண்டும்

லெனின் "... நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். இது அனைத்துப் பொருள்முதல் வாதத்தின், ஆகவே மார்க்சியத்தின் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள் முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும்; அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள் முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான – சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது; அத்தகைய போதனையாக அதைச் சுருக்கிவிடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.... விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான... மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார்
முதலாளித்துவ வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே; மதம் ஓழிக; நாத்திகம் நீடூழி வாழ்க; நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்லளூ இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய, கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லைளூ அவற்றைப் பொருள் முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை, இன்று மதத்தின் மிக ஆழமான வேர், பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக ரீதியில் கீழே அழுத்தப்பட்டுக் கிடக்கும் நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் தான்ளூ முதலாளித்துவம் யுத்தங்கள், பூகம்பங்கள், இதரவைகளைப் போன்ற அசாதாரணமான சம்பவங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கடுமையைக் கொண்ட மிகவும் அதிகமான அளவுக்கு மோசமான துன்பம், மிகவும் அதிகமான அளவுக்குக் காட்டுமிராணடித் தனமான சித்திரவதையைச் சாதாரணமான உழைக்கின்ற மக்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஏற்படுத்துகிறது. 'அச்சம் கடவுள்களைப் படைத்தது' மூலதனத்தின் குருட்டுச் சக்தியை – பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது – பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் 'தீடிரென்ற', 'எதிர்பாராதவிதமான', 'தற்செயலான' அழிவை நாசத்தை, ஏழையாகவும் பாப்பராகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதை, பாட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகின்றது. இது தான் நவீன மதத்தின் வேர்;... முதலாளித்துவத்தின் குருட்டுத் தனமான அழிவுச் சக்திகளின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதனத்தின் ஆதிக்கத்தைன் எல்லா வடிவங்களையும் எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வுபூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்ற வரை எந்தக் கல்வி புகட்டும் புத்தகமும் அவர்களுடைய மனங்களிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது...

ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதி, அதாவது மதத்தின் விரோதியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞான ரீதியான, ஒருபோதும் மாற்றம்மடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்" என்றார்.

இங்கு ஒரு விடையத்தின் இரண்டு பக்கங்ளையும், அதாவது மதத்தை எதிர்க்காது அதை அப்படியே பாதுகாத்தல் என்ற வர்க்கப் போராட்டத்தின் பின் மதத்தை ஒழித்தல் அல்லது மதத்தை முதலில் ஒழித்த பின் சமூக இயக்கம் என்ற இரண்டு பிற்போக்கு தத்துவக் கூறுகளை எதிர்த்து எப்படிப் போராட வேண்டியுள்ளது என்பதை லெனின் தெளிவாக மதம் சார்ந்து எடுத்துக் காட்டுகின்றார்.

இன்றைய சமூக எதார்த்ததில்

எதைத் தான் நான் செய்ய முனைகின்றேன். இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல


இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டிய ஒரு எதார்த்த சூழல் அவசியமாகி விடுகின்றது. நான் வைக்கும் கருத்துகள் மீதும், கட்டுரை வடிவங்கள் மீது, எனது போராட்ட நடைமுறைகள் மீது சிலர் அபிராயங்களை வைக்கின்றனர். இதில் சில விமர்சனங்களாகவும்;, சில என்னை ஒத்த முன்மாதிரிகளுடன் செயல்பட முனைவதாக பலவிதமான கருத்துகள் முன்வைக்கின்றனர். இந்த நிலையில் நான் சிலவற்றை உங்களுடன் நேரடியாக பேசியேயாக வேண்டியுள்ளது.

உதாரணமாக தமிழ்மணம் விவாதத் தளத்தில் ஜனநாயகம் "அறிவைப் பயனுள்ள முறைமைகளில் பயன்படுத்துதல் அவசிமானதால் 'தமிழ் அரங்க' ஆசிரியர் இரயாகரன் கூட தமிழ்மணத்தைத் தவிர்க்க முடியாத தளமாகக் கண்டு இங்கும் பதிவிட வந்துள்ளார். ஆதலால் பலரைப் படிக்கத் தூண்டும் ஒரு தளத்தை எப்படிதான் வளர்த்தெடுக்கிறது? இதுகுறித்துச் சிந்திக்காதவர்கள், ப்புளக்கரை தமிழ்மணத்தைவிட்டு வேறெங்கோ பதிவுகளிட ஆலோசிப்பது அறிவார்ந்த செயற்பாடாகத் தெரியவில்லை. நாம் சமூகமாகக் காரிமாற்றப் போகிறோமா? அப்போ வாருங்கள்!" என்று ஜனநாயகம் விவாதத்தளம் கூறுகின்றது. இது போன்று பலர் வேறுபட்ட கருத்துகளுடன் தூண்டில் விவாதத் தளம், மயூரன் விவாதத் தளம்... இப்படி பல.

மற்றொரு தரப்பினர் எனது கட்டுரைகள் பொரிதாக இருக்கின்றன என்கின்றனர். சிறிய கட்டுரையாக விடையத்தை சுருக்கிச் சொல்லவும் கோருகின்றனர். வேறு சிலர் கட்டுரைகள் விளங்கவே முடியாதுள்ளதாக கூறுகின்றனர். மற்றறொரு பகுதியினர் பரந்துபட்ட மக்களுக்கு எற்றவகையில் எழுதக் கோருகின்றனர். இப்படி பல கருத்துகள், விமாசனங்கள் என்னை நோக்கி முன்வைக்கப்படுகின்றது. இவற்றைக் கடந்து என்னை தூசணத்தால் புணர்ந்து எழுதுவதும், தூற்றுவதும், வதந்திகளை புனைந்து புணர்ந்து பரப்புவதும் மற்றொரு தரப்பாரின் அரசியலாகவுள்ளது.

பொதுவாக ஒருபுறம் கட்டுரையின் வடிவங்கள் மீதான விமர்சனங்கள் மறுபுறம் என்னை முன்மதிரியாக தேர்ந்தெடுக்கும் போக்கு குறித்து, நான் உங்களுடன் பேசியேயாக வேண்டியுள்ளது. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒருநிலையில், தனிமைப்பட்டுள்ளேன். சமூகம் சார்ந்த அறிவின் பின்புலம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எங்கும் நுனிப்புல் மேய்கின்ற சமூக போக்கில், நான் தனித்து நடத்தும் போராட்டம் மிகக் கடினமானதாகவே உள்ளது, கடுமையானதாக மாறிவருகின்றது. உளவியல் ரீதியாக நான் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்டு, உண்மைக்காகவும் மனித விடுதலைக்காக சளையாது போராடவது என்பதைக் கூட ஒரு அரசியல் கலையாக நான் வளர்த்துள்ளேன்.
யாருடனும் கருத்துகளைப் பகிரமுடியாத தனிமைப்படுத்தப்பட்ட எனது கருத்த சார்ந்த விவாத உணர்வையே, கடுமையாக நெருடுகின்ற ஒன்றாகவே சமூக எதார்த்தம் என்முன் உள்ளது.

இந்த நிலையில் எனது கருத்தை நான் சமூகம் முன்கொண்டு வருவதே, மரண தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. சாதரணமாக மற்றவர்கள் போல் நான் சுதந்திரமாக வீதிகளில் இயல்பாக நடமாடமுடியாது ஒருநிலை. அதாவது எச்சரிக்கை உணர்வின்றி நாம் சுதந்திரமாக நடமடமுடியாத ஒருநிலையில் வாழ்கின்றேன். வீட்டில் கூட எச்சரிக்கை உணர்வுவின்றி சுதந்திரமாக இருக்க முடியாதநிலை. கொலையாளிகள் எந்த ரூபத்திலும் எப்போதும் எமானாக காட்சியளிக்க கூடிய வகையில், வக்கிரம் பிடித்த வகையில் அலைகின்றனர். வீட்டில் யன்னலுக்கு அருகில் இருப்பதற்கு கூட, எச்சரிக்கை உணர்வுகள் இன்றி, நான் உயிர் வாழ்ந்துவிடவில்லை. வீதியில் நிற்கும் போது, நடமாடும் போது கூட பின்னால் யார் நடமாடுகின்றனர் என்ற சுய உணர்வுவின்றி, நான் உயிர் வாழ முடியாதுள்ளது.
வெளியில் உணவு உண்ணும் போதும் கூட, அதில் நஞ்சு கலக்கப்பட்டுவிடும் என்ற எச்சரிக்கை உணர்வின்றி நான் உயிர்வாழ முடியாத ஒரு நிலை. கொலையாளிகள் எமன் கோலத்தில் எப்படியும் வருவார்கள் என்பதையே, எமது சமூக எதார்த்தம் சார்ந்த அனுபவம் காட்டுகின்றது. இது கடந்தகாலத்தின் எனது சொந்த அனுபவம் கூட. கடுமையான நெருக்கடிக்குரிய ஒரு புறச் சூழலில், இயல்பு தன்மையைக் கடந்த ஒரு போராட்டத்தின் பின்பே எனது எழுத்துகள் வெளிவருகின்றது. இதைக் கூட, யாரும் இன்று புரிந்துகொண்டது கிடையாது.
நான் அன்றாடம் பயணங்களின் போதே பெருமளவில் நூல்களை வாசிப்பது வழக்கம்.
பயணுத்துக்காக ஒரு புகையிரத நிலையத்தில் புகையிரத்துக்காக காத்து நிற்கும் போது கூட, பாதுகாப்பான ஒரு நிலையில் நின்றுதான் நூலை வாசிப்பது வழக்கம். புகையிரதத்தில் தள்ளிக் கொலை செய்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுவின்றி, நான் வாழ முடியாத அவலம். இதுவே அன்றாட மனநிலை கூட. கிரகித்தலுக்குரிய ஒரு அமைதியான சூழல் எப்போதும் கடுமையாகவே பாதிக்கப்படுகின்றது.

இது என் சார்ந்த பொதுச் சூழல். இந்த ஒரு நிலையில் தான், சமூகத்தை விடுதலைக்காக அதன் உண்மைக்காக போராடவேண்டிய நிலையில் உள்ளேன். ஆனால் நான் காணும் சமூகத்தில் சமூக அவலங்களை பகட்டுத்தனத்தால் மூலமிடப்படுகின்றது. ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளல் என்பது, நுனிப்புல் மேய்வது போல் மேய்ந்து தெரிந்து கொள்ளமுடியாது. இந்த நுனிப்புல் மேய்தலே அறிவாகிவிட்ட ஒரு நிலையில், தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகளையே இயல்பாக இல்லாதாக்கி வருகின்றது.

சமூகத்தில் பொதுவாக கொஞ்சம் விடையம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளும் இன்றைய இலக்கிய மற்றும் அரசியல் தளத்தில் கூட, இதுவே நிலைமை. இவர்களின் சமூக அறிவை எடுத்து ஆராய்ந்தால், உள்ளடக்க ரீதியாக வெற்றுக் கோம்பைகளே என்பதை தெரிந்து கொள்ளமுடியும்;. அந்தளவுக்கு அவர்களின் சமூக அறிவின்மை மூடிமறைக்கப்பட்டுள்ளது.

பொதுவான சமூகத்தின் பலவீனமான பொது அறிவு மந்த புத்தி கொண்டதாக இருப்பதால் தான், இவர்கள் அவர்கள் முன் தங்களை தாங்கள் அறிவளிகளாக காட்டிக் கொண்டு நடிக்கமுடிகின்றது அவ்வளவு. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சமூகக் கூறுகளை நெருங்கி அனுகமுடியாத வகையில், இவர்களின் வீம்பு (வம்பு) பேச்சுகள் தான் அனைத்தையும் மேவி நிற்கின்றன. இன்று பொதுவாக வாசிப்பு திறனை முற்றாகவே எமது சமூகம் இழந்து நிற்கின்றது. குறிப்பாக இவர்கள் வசிப்பது என்வென்று தேடினால், குளுகுளுப்பை எற்படுத்தும் இந்திய சந்தையை நிரப்பும் கழிசடைக் குப்பகைளே. சந்தையை மையமாக கொண்டு மக்களின் சிந்தனையை சீராழிவாக்கி, அதில் காசு பண்ணும் இந்த சமூக விரோத வக்கிரங்களையே இவர்கள் விரும்பிப் படிக்கின்றனர். இதையே தான், தாம் அறிவாளியாக சமூகத்துக்கு காட்டிக் கொள்ளும் புத்திஜீவிகளும் கூட விரும்பிப் படிக்கின்றனர். இதற்கு வெளியில் எமது தமிழ் மீடியாக்கள் பரப்பும் பொய்யையும் புரட்டையும், அப்படியே விமர்சனமின்றி சமூகம் உள்வாங்குகின்றனர். இதற்கு எற்ப சமூகத்தின் அறிவின் மட்டத்தையே நலமடித்துள்ளனர், நலமடிக்கின்றனர். இது உண்மையில் தனிநபர் புகழ்பாடும், சொந்த பினாமிய பிழைப்பைச் சார்ந்து வழங்கப்படும், மலிவான வக்கிரமான மனிதவிரோத சிந்தனைக் கொத்துக்களே. இதுதான் இன்றைய எமது தமிழ் சமூகத்தின் அறிவின் உயர்ந்தபட்ச எல்லையாகும். அதை உதாரணமாகவும் சிறப்பாக புரிந்தகொள்வோமாயின், அனைத்தையும் துரோகி தியாகி என்ற வார்த்தைக்குள் அடக்கிவிடுவார்கள்.

சமூக அறிவின் மட்டம் தொடர்ச்சியாகவும், மிக வேகமாகவும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. விவாதங்கள், விவாதத் தளங்கள் எங்கும் இதே கதிதான். சமூக நேசிப்புள்ள எழுத்துகள் அறவே கிடையவே கிடையாது. சமூகத்தை புரிந்துகொள்ளும் முயற்சிகள் முற்றாகவே சிறுமைப் படுத்தப்படுகின்றது. சமூகத்தின் உயிர்துடிப்புள்ள ஆற்றல் உள்ள புரட்சிகர சமூக அறிவு கிடையாது. நலமடிக்கப்பட்ட அறிவாக, மலட்டுத்தனம் கொண்டு கணப்படுகின்றது. இதற்கு இசைவான வகையில், லும்பன்தனமான மூடர்களின் வன்முறையிலான காட்டுமிராண்டி சமூகமே கட்டமைகப்படுகின்றது. எமது சமூகம் ஆதிகத்தில் உள்ள பாசிசத்தின் சமூக இருப்பில் இருந்து, இது மேலும் ஆழமாக சிதைந்து நற்றமெடுக்கின்றது.

இந்த நிலையில் தான் சமூகம் சார்ந்த எனது எழுத்துகள், மிகவும் பின்தங்கிய எமது சமூக அறிவில் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு நிலைக்குள் சமூகம் தாழ்ந்து கிடக்கின்றது. இது என் எழுத்துக்களை மட்டுமல்ல, சமூகம் சார்ந்த உலகளவிய விடையங்களைக் கூட புரிந்து கொள்ளமுடியாத நிலைக்கு தாழ்ந்து கிடக்கின்றது. இன்று ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்க வேண்டிய நிலைக்கு, இதுவே காரணமாகின்றது. இல்லாதுபோனால் அதை மொட்டையாக குறுக்கி, துரோகி தியாகி என்று கூறுவது போல் கருத்தையே திரித்து தமது அறிவின்மைக்கு எற்ப பயன்படுத்திவிடுவது அன்றாடம் நிகழ்கின்றது. அறிவு சார்ந்த உண்மையை, தனித்துவமாகவே முரணற்ற வகையில் மீண்டும் சமூகத்திடம் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.

அடுத்து சமூகத்தின் பினள்தங்கிய அறிவினால், ஒரு விடையத்தைப் பற்றி விரிவாக விளக்க வேண்டியநிலை உருவாகின்றது. மறுபக்கத்தில் வசிப்புத் திறனையே இழந்து சீராழிந்து வரும் சமூகத்தில், விரிவான கட்டுரை என்பது விலகியோடவும் வைக்கின்றது. இதனால் எழுதுவதை நிறுத்திவிட முடியுமா! இன்று நூல்கள் சமூகத்தில் என்ன பாத்திரத்தை வகின்றனவோ, அதேயொத்த பத்திரத்தையே எனது எழுத்துகள் அடிப்படையாக கொண்டது. ஒரு செய்தி பத்திரிகைக்குரிய செய்திகள் அல்ல எனது கட்டுரைகள். ஒரு நூலில் சொல்லும் விடையத்தை சிறிய பகுதியில் கூறிவிடமுடியாது. இந்த அடிப்படையில் எனது கட்டுரைகள், பெருமளவில் தத்துவ ஆழம் செறிந்த வகையில் உள்ளது. 80, 100 பக்கத்தில் பலரும் புரியும் வகையில் விரிவாக எழுதவேண்டிய ஒரு விடையத்தை, நான் சுருக்கி எழுதுகின்றேன். இதனால் கட்டுரை ஆழம் செறிந்தாக உள்ள அதேநேரம், எல்லோரும் புரிந்து கொள்வதில் சிரமங்கள் எற்படுகின்றது. இதற்கு சமூகத்தின் அறிவில் எற்பட்டு வரும் வீழ்ச்சியும் ஒரு காரணம். தொலைக்காட்சியை பார்த்து அறிவை வளர்க்கும் குருட்டுச் சமூகம் அப்படித்தான் இருக்கும். வாசிப்பது கடினமானதாக சிரமானதாக கருதும் இவர்கள் தான், சிறிய கொசுறுச் செய்திகளை தரும்படி வேண்டுகின்றனர். சமூக சார்ந்த எழுத்தாளன் முன் எதைச் செய்ய வேண்டும் என்பதிலும், செய்வதிலும் ஒரு முரனே எற்படுகின்றது. சமூக அறிவின் மட்டும் வீழ்ச்சியான ஒரு நிலையில் விரிவாகவே அனைத்தையும் சொல்ல வேண்டியுள்ளது. அதேநேரம் சுருக்கமாக சொல்ல வேண்டியுள்ளது. இதை ஒருங்கே தீர்க்க முடியாதுள்ளது. எமது நோக்கம் சார்ந்த வாசகன் யார் என்பதை தெரிவு செய்யும் படி ஒரு முடிவை எற்படுத்திவிடுகின்றது. நான் யாரை நோக்கி எழுத வெண்டியுள்ளது என்பதை, லெனின் கூறுவது ஊடகவே உடறுத்துக் கண்கின்றேன். லேனின் ".. வெகுஜனங்கள் வாழ்க்கையின் வாயிலாகவே கற்றறிகின்றனர், புத்தகங்களின் வாயிலாய் அல்ல" என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டே வினையாற்றுகின்றேன்.

இந்த நிலையில் சமூகத்தில் இன்று வாசிப்புத் திறனை பலர் கொண்டிருப்பதில்லை. இதனால் கருத்துகளை புரிந்து கொள்வதில் சிராமம் எற்படுகின்றது. சமூகத்தின் நிகழ்வது தொடர்ச்சியான ஆழமான சமூகச் சிதைவுதான். இதற்கு சமூக பொரளாதார அரசியல் காரணங்களே அடிப்படையாகவுள்ளது.

இதில் முக்கியமானது தமிழ் தேசியத்தின் பாசிசக் கூறே. பாசிசம் தனது இருத்தல் என்ற அடிப்படையில், சமூக அறிவின் இருத்தலையே நலமடித்து அழித்தொழிக்கின்றது. சுயமான சிந்தனையைக் கூட, தேசத் துரோகமாக கருதி அழிக்கின்றது. இதற்கு இசைவாக இசைவாக்கம் அடைந்த செக்கு மாட்டுத்தனமே, சமூகத்தின் பொதுப் போக்காகியுள்ளது. இதனடிப்படையில் தான் தமிழ்தேசியத்தின் பெயரில் அதிகாரத்தில் உள்ள புலிகள், தமிழ் மக்கள் வாசிக்கவே கூடாது என்பது அவர்களின் அடிப்படையான சித்தாந்தமாக இருந்தது. உதாரணமாக பிரபாகரனுடன் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்தோர் எதாவது வாசிக்க முற்பட்டபோதெல்லாம், அதை அவர் இழிவாக பார்த்ததுடன் இந்த நடவடிக்கைகளை கூட நக்கலடித்து பழிக்கப்பட்டது. இதுவே பின்னால் படிப்படியாக வசிப்பது கூட துரோகமாகக் கருதப்பட்டது. ஏன் பின்னால் வாசிப்பது என்வெனக் கூட கண்கணிகப்பட்டது. வாசிப்பவர்கள் விசேடமாக கண்கணிக்கப்பட்டார்கள். நூல்கள் வாசிப்பவர்கள் இயக்கத்தின் ஒற்றுமையை சிதைப்பவராகவும், மக்களை குழப்புபவராகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரானவராகவும் கூட கருதப்பட்டனர். நூல்களின் இருத்தல் கூட, இன்று இடம் மாறியுள்ளது. தம்மை அறிவாளியாக காட்டும் புலித்தலைவர்களின் விளம்பரப் படங்களின் பின்னால், நூல்கள் அலங்கரிக்கும் ஒரு அலங்காரப் பொருளாகவே தரம்தாழ்ந்து போனது. இப்படி அறிவின் வளர்ச்சி என்பது, தமது சொந்த இருப்பிற்கே ஆபத்து என்பது புலியின் பாசிச சித்தாந்தம், மக்களின் அறிவின் வளர்ச்சியை முடக்கி முடமாக்கியது.

வாசிப்பும் அது எற்படுத்தும் சமூக அறிவும், இயல்பாகவே இன்றைய எதார்த்த சமூகம் மீது ஆழமான ஒரு சமூகக் கேள்வியை உருவாக்கும். கேள்விகளே, இச் சமூக அமைபின் இருத்தலையே மாற்றக் கோரும். இதை புலிகள் அனுமதிக்கவில்லை. அறிவை விருத்தி செய்த புத்தகங்களைக் அன்று கைப்பற்றிய புலிகள் அவற்றையே எரியுட்டினர் அல்லது அதை கறையானுக்கு இரையாக்கினர் அல்லது தம்மை அறிவாளியாக காட்டவே தமக்கு பின்னால் அலங்காரப் பொருளாக்கி அதை அடுக்கினர். அன்று எனது வீடு உட்பட பலரது வீட்டில் இருந்த நூல்களை, புலிகள் பலக்காரமாகவே அள்ளி எடுத்துச் சென்றனர். அன்று புலிகள் நபர்களை மட்டும் கடத்திச் செல்லவில்லை, அந்த நபர்களின் கருத்தை உருவாக்கிய நூல்களையும் கூட கடத்திச் சென்றனர். புலிப் பாசித்துக்கு அஞ்சி ஒட நிர்பந்தித்த போது, குழந்தைகளின் அறிவை வளர்த்த நூல் வைத்திருக்கவே பல பெற்றோர்கள் பயந்தனர். அச்சம் காரணமாக அதைப் புதைத்தனர் அல்லது எரித்தனர். இப்படி தமிழ் சமூகத்தின் அறிவே நலமடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.

எமது சமூகத்தில் அறிவு சார்ந்த சமூக நூல்கள் முற்றாக தடுக்கப்பட்டன. வாசிப்பு துரோகமாக கருதப்பட்டது. இப்படி பொதுவாகவே சமூகத்தின் அறிவின் வீழ்ச்சி விரைவாகவே நடைபெற்றது. மறுபுறம் அறிவைப் கொஞ்சம் பெற்றவர்கள், அதைக் கொண்டு பிழைத்து வாழும் வகையில் சீராழிந்தனர். தமது அறிவைக் கொண்டே, அறிவுமட்டம் குறைந்த சமூகத்தை எமாற்றி வாழும் ஒரு இழிவான வாழ்வை வந்தடைந்தனர். புலிகள் அறிவு சார்ந்து எதைச் செய்தனரோ, அதையே இந்தக் கும்பலும் செய்தது. மற்றொரு பிரிவு பினாமியாகவும், பிழைப்புவாதிகளாகவும் நக்கிப்பிழைக்கவும், தமது குறைந்தபட்ச அறிவை பயன்படுத்திக் கொண்டனர். சமூகத்தின் மிக பின்தங்கிய அறிவுமட்டமே, இவர்களின் மேலன்மையாகியது. இன்னுமொரு பக்கம் அறிவு என்பதைக் கொண்டு சமூக மேலன்மையை எற்படுத்த முடிந்த நிலையில், கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலைக்குள் இந்தக் கும்பல் சீராழிந்தனர். இருக்கும் மலட்டுச் சரக்கைக் கொண்டு, தம்மைத் தாம் அறிவளியாகக் காட்டிக் கொண்டனர்.

இந்த நிலையில் எமது சமூகத்துக்கு வழிகாட்டக் கூடிய அறிவுத்துறையின்றியும், சமூகத்தின் அறியாமை மீதும் எமது சமூகம் இழிந்து கிடக்கின்றது. இந்த சமூகத்தை அனுகும் போது, என் மீதான விமர்சனமும், முன்மாதரியான எடுகோலாகவும் மாறிவிடுகின்றது. மறுபக்கத்தில் பொது சமூகத்தில் பைத்தியம் பிடித்த ஒரு மனநோயாளியாகவே என்னைக் கருதுகின்றனர். அன்று 1986 இல் ராக்கிங்கை எதிர்த்து நான் தனித்து கருத்தியல் ரீதியாக அம்பலப்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தேன். அதன் போது இதை எதிர்த்து அதை வாபஸ் வாங்கக் கோரியும் பல்கலைகழக பகிஸ்கரிப்பை நடத்திய மாணவர்கள், இதை மனநோய்க்குரிய ஒரு செயலாக கூறி ஒரு துண்டுபிரசுரத்தை வெளியிட்டதுடன், அதை அன்று ஈழநாடு பத்திரிகையிலும் கூட பிரசுரிக்க வைத்தனர். இப்படிதான் இன்று எனது எழுத்தை அல்லது எனது நடத்தையை மனநோய்க்குரிய ஒன்றாக சிலர் எள்ளிநகையாடுகின்றனர். குறுகிய வாழ்க்கை வட்டத்தில், அந்த சிந்தனைக்கு உட்பட்டு வாழ்வதையே, இயல்பான மனநிலைக்குரிய ஒன்றனதாகக் கூட கருதுகின்றனர். அந்தளவுக்கு எமது சமூகம் தரம் தாழ்ந்து மற்றவரின் கால் தூசு துடைத்தபடி மண்டியிட்டு கிடக்கின்றது.

அறிவு என்பது இயங்கியல் ரீதியானது. அன்றாடம் நாம் கற்றுக் கொள்ளும் விடையங்களே, எமது அறிவை மேலும் ஆழமாக்கின்றது. வயதின் முதிர்ச்சியுடன் கூடிய கற்கும் அறிவும், வாழ்வின் அனுபவ அறிவும், ஆளுமையுள்ள சமூக வழிகாட்டிகளையே உருவாக்கும். இதுவே பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான மதிப்பைக் கூட உருவாக்கியது. மாறாக கற்றுக்கொள்வது என்பதையே மறுக்கும் ஒரு சமூகத்தில், வயதுசெல்ல எற்படும் அறிவின்மை விதண்டவாதமாகவும், கண்மூடித்தனமான வழிபாடாகவும் மாறுகின்றது. இந்தப் பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், வெறுமனே லும்பன்களாகவே உருவாக்கப்படுகின்றனர். சாதாரணமாக சக மனிதனுடன் விவாதிக்கவும் பேசிக்கொள்ள முடியாத வகையில், வன்முறை கொண்ட குழந்தைகளையே எமது சமூகம் உருவாக்கின்றது.
எமது சமூக இயலாமை, படிப்படியாகவே சமூக இருப்பின் மேலான கண்மூடித்தனமான நம்பிக்கையை விதைக்கின்றது. அதை கண்ணை மூடிக்கொண்டு பாதுகாக்க முனைப்புக் கொள்கின்றது. அதைவிட்டால் எதுவும் கிடைக்காது என்ற அங்கலாய்பும், பதைபதைப்பும் உருவாகின்றது. கண்மூடித்தனமான நம்பிக்கையும், அது சார்ந்த வாழிபாடு உருவாகின்றது. கருத்துகள், சிந்தனைகள் விதண்டவாதமான வக்கிரமாக மாறுகின்றது. விவாதப் பண்பே சமூகக் குற்றமாக கருதும் நிலைக்கு சமூகம் தரம் தாழ்ந்து போகின்றது.

மறுபக்கத்தில் சமூகத்தின் பின்தங்கிய அறிவின் மட்டம், சிலருக்கு சமூகத்தையே அடிமையாக பயன்படுத்தி தமது வாழ்வை வளப்படுத்தவதில் முடிகின்றது. அதாவது சிலர் சமூகத்தை எமாற்றி வாழவும், சொகுசாக இருக்கவும் இதுவே உதவுவதால், சமூக அறியாமை பாதுகாக்கவே அறிவின் மீது அடக்குமுறையை எவுகின்றனர். அறிவை சொச்சைப் படுத்துகின்றனர். அறிவின் மீதான திட்டமிட்ட கொலைகள் முதல் தூசணதல் பலக்காரமாக புணர்தல் வரை, அன்றாடம் நாம் இதை சமூகத்தில் பலவிதத்தில் காணமுடிகின்றது.

சமூகத்தையே கேள்விக்குள்ளாக்கல், எமது வாழ்வை கேள்விக்குள்ளாக்கல் என்று எதையும் நாம் செய்ய மறுக்கின்றோம். சமூகம் மேலும் மேலும் எமாற்றப்படுவதை கண்டுகொள்ள முடியாத ஒரு குருட்டுச் சமூகமாக மாறுகின்றது. சமூகத்தின் அவலத்தையே தெரிந்துகொள்ள முடியாத வகையில், மந்தைக் கூட்டமாக மாற்றப்பட்டு விடுகின்றது. மக்கள் பட்டியில் அடைக்கப்பட்ட ஒரு நிலையில், வரையறைக்குட்பட்ட எல்லைக்குள் வினையற்று அனுமதிக்கப்பட்டுள்ளர். பட்டியை வீட்டு மீறி வெளிவருபவர்களுக்கு, உயிர் வாழ்வதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. பட்டியில் உள்ள மந்தைக்குரிய குணம்சத்துடன் தான், தமிழ் சமூகம் பாசிசமாக ஒழுங்கமைகப்பட்டுள்ளது.

இதில் இருந்து மீட்சி என்பதே, சமூகத்தை இயல்பாக இயற்கையாகவே சிந்திக்கத் துண்டுவதே. அதாவது மனிதனின் இயல்பான இயற்கை இயல்பை மீண்டும் பெறத் துண்டுவதே இன்றைய எனது பணியாகும். அந்த வகையில் சமூகத்தை நாம் கற்கத் துண்டுகின்றோம். வாழ்வின் அனுபவங்களை தொகுக்கக் கோருகின்றோம். பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட நூல்களை, சுயமாகவே படிக்க கோருவது இதில் ஒரு அம்சமாகும். கற்றல் என்பது உள்ளடக்க ரீதியாகவே, சமூக அறிவை திரட்டி ஒருங்கமைந்த நூல்களை கற்கத் துண்டுவதன் மூலம், சொந்த வாழ்வின் அனுபவத்தையே சுயமாக இனம் காணத் துண்டுகின்றோம். அதாவது இன்று கற்றலை வரையறையற்ற வகையில் துண்டுவதன் மூலம், கற்கும் முறைமையையே சமூகத்துக்கு உருவாக்குவது அவசியமாகும்.

பொதுவாகவே எமது சமூகம் அதிகமாகவே சுயநலம் கொண்டது. மிக குறுகிய வட்டத்தில் மேலும் சிதைந்து போகின்ற நிலையில், கல்விசார் அறிவு மட்டம் கூட தரம்குறைந்து வருகின்றது. பாடப் புத்தகத்தை அப்படியே பாடமாக்கி ஒப்புவிக்கும் எமது இளம் தலைமுறையின் அறிவுமட்டம், வெறுமனே மந்தைக் குணம் கொண்டதாகவே அமைகின்றது. அதாவது பண்ணை மந்தைக்கு ஒரு சில உணவை மட்டும் போட்டு, சந்தை விளைச்சலுக்காக வளர்ப்பது போல்தான், எமது குழந்தைகளுக்கு கல்வியும் திணிக்கப்படுகின்றது. இதில் பெற்றோரின் குறுகிய புத்தியுள்ள சுயநலப்பண்பு, இக் கல்வியை மேலும் சிறுக்கவைக்கின்றது. சேடம் கட்டிய குதிரையாட்டம், கவ்வி இயந்திரத்தன்மை வாய்தாக மாற்றி அறிவை ஒப்புவிக்கும் எல்லைக்குள் மலடாக்கின்றனர்.

அதாவது குழந்தைகளுக்கே உரிய துடிப்புள்ள கேள்விகளும், ஆராய்வு முறைகளும் கூட மலடாக்கப்படுகின்றது. இன்று சமூகத்தை வழி நடத்தக் கூடிய, சமூகப் பொறுப்புள்ள குழந்தைகள் உருவாவதில்லை. ஒரு இயந்திரத்தின் ஒரு புரியாக மட்டும், குழந்தையின் கல்வி சிறுக்க வைக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த சமூகத்தின் சமூகக் கல்வியின்மை, அது சார்ந்த அறிவின்மையும், சமூகத்தின் வீழ்ச்சியை பறைசாற்றி நிற்கின்றது. இதைப் பாதுகாக்கும் அரசியல் தலைமையே எம்மை சர்வாதிகாரமாக ஆட்சி செய்கின்றது.

இந்த நிலையில் இதை புரிந்துகொண்டு மாற்றியமைக்கும், நடைமுறை சார்ந்த ஒரு சமூக இயக்கத்தை உருவாக்க முடியாத அரசியல் சூழல் காணப்படுகின்றது. தனித்த ஒரு மனிதனாக நான் இதை மாற்றிவிட முடியாது. இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன், சமூக விடையங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;. இதைப் பைத்தியக்காரத்தனம் என்று என்னைச் சுற்றியுள்ள, சமூக அறிவில் குறைந்துள்ள சமூகம் என்னை எள்ளி நகையாடுகின்றது.

எந்த சமூக ஆதாரவுமின்றி, எள்ளி நகையாடும் பலவிதமான சமூக எதிர்வினைகளை எதிர்கொண்டு எதிர் நீச்சலீடுவது என்பது கூட, கடினமான ஒரு போராட்டமாகவே என்முன்னுள்ளது. லெனின் கூறியது போல் "கஸ்டங்களையும் தவறுகளையும் கண்டு அஞ்சுவது கோழைத்தனம்; பொறுமையான, தொடர்ச்சியான, உறுதியான பாட்டாளி வர்க்க முயற்சிக்கு அறிவாளியின் 'கூச்சல்' மாற்றாக உள்ளது." என்ற அடிப்படை உள்ளடகத்தில் நான் செயல்பட முனைகின்றேன். இந்த நிலையில் சமூகம் சார்ந்த எனது எழுத்தை, பத்து பேர் படித்தால் கூட மிகப்பெரிய விடையம்தான். இது நான் சந்திக்கும் எதார்த்தம். இந்த நிலைமையை நான் முதலில் தெளிவாக புரிந்து கொண்டுள்ளேன்;. எனது சொந்த உழைப்பில் தான், எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன்;, கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்கள் காசு கொடுத்த வாங்குவோர் கிடையாது. இதுவும் உண்மை. சமூகத்தில் உழைப்பபை வீடாகவும், ஆடம்பர நுகர்வாகவும் மாற்றும் போது, நான் எனது உழைப்பை இப்படி நூலாக்கின்றேன்;. இதைக் கூட சமூகத்தின் ஒரு முரண்பாடகவே பலர் பார்ப்பதுடன், பைத்தியக்காரத்தனமானதாக கூட சமூகம் இழிவாடுகின்றது.

நான் எனது சேமிப்பில் வைத்துள்ள 3000 மேற்பட்ட நூல்களின் பெறுமதி கூட, 12 முதல் 15 ஆயிரம் ஈரோ (டொலர்) பெறுமதியானவை. பணத்தை செலவு செய்து இப்படி சேகரித்துள்ள நூல்கள் பைத்தியக்காரத்தனமானதாகவும், வீட்டில் அவை வெறும் குப்பையாகவும், அழகுணர்ச்சியற்ற நடவடிக்கையாகவும் கூட இழிவுபடுத்தப்படுகின்றது. அந்தளவுக்கு எமது சமூகத்தின் அறிவுசார் கண்ணோட்டம் மிக மோசமானதாகவும், வெறுப்புட்டுவதாகவும் கூட அமைகின்றது. நான் எனது உழைப்பில் சேகரித்த இந்த நூல்களை எனது மரணத்தின் பின், சமூகத்தின் ஒரு பொதுச் சொத்தாக இலங்கை அல்லது இந்திய அல்லது பிரான்சில், ஒரு பொது நூலகத்துக்கு கொடுக்கவே எனது குடுபத்திடம் கோரியுள்ளேன்;. சமூகத்தின் இன்றைய அறிவு சார்ந்த உணர்வு மட்டும், இதையும் கூட முன்கூட்டியே கோரவைக்கின்றது. உழைப்பு, வாழ்க்கை எங்கும் சமூகம் சார்ந்த உணர்வுடன் இயங்க முனைகின்றேன். ஆனால் வெறும் நடைப்பிணமாகவே தனித்து நிற்கின்றேன். அந்தளவுக்கு எமது சமூகத்தில், சமூக உணர்வு கொண்டோரை சமூகத்தில் காண்பதரிது.

இதுவரை நான் எட்டு நூல்கள் எழுதி வெளிவந்துள்ளது. மூன்று நூல்கள் வெளிவர வேண்டிய நிலையில் உள்ளது. நான் உழைத்து வாழவும், இந்த நூல்களை வெளிக் கொண்டுவரவும் எனது சொந்த உழைப்பையே பயன்படுத்துகின்றேன்;. சமூகம் எனக்கு எந்த வகையிலும் உதவவில்லை. சமூகம் எனக்கு உதவியிருப்பின், நான் நூல்களை எழுதுவதற்காக எடுத்துள்ள சமூகம் குறிப்புகள் (சாதியம், இலக்கியம்....) சார்ந்து குறைந்தது 30 நூல்களை வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்;. சமூகம் சார்ந்து எனது வாழ்வை, சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் போது எற்படும் துன்பம் மிகவும் கடுமையானது. ஆனால் இதைப் புரிந்து கொண்டு எதிர்வினையற்ற வேண்டியுள்ளது. உண்மையில் லெனின் கூறியது போல் "மாபெரும் உண்மைகளைக் கூடக் கொச்சைப்படுத்திவிட முடியும், மிகவும் உயர்ந்த நோக்கங்களைக் கூட வெறும் வாய்வீச்சு என்ற அளவுக்குக் குறைத்துவிட முடியும்." இந்த எதார்த்தம் தான் இன்று நான் சந்திக்கும் நிலை.

இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல, சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன். என்? எனது நண்பர் கூறியது போல் சமூக அங்கீகாரம் கிடைக்கமால் போகலாம், எழுதியவை புத்தகமாக வெளிவாரமல் கூட இருக்கலாம், ஆனால் எழுதுவதை நிறுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை என்னிடம் விடுத்தார். இந்த சமூகம் காணத ஒரு சமூக உண்மையை, எதிர்கால தலைமுறை தன்னும் காணும் என்றார். தீர்க்கதரிசமான உண்மையும் கூட. அவர் இதைக் கூறுவதுற்கு முன்பும், இதே உள்ளடகத்தில் தான் நான் எழுதுகின்றேன்;. இந்த சமூகத்தில் ஒருவர் கூட படிக்கவிட்டாலும் கூட, சமூக உண்மைக்காக, சமூக விடுதலைக்காகவும் எழுதுகின்றேன்;. அதை பாதுகாக்க வாழ்வின் தேவைகளை வரையறுப்பதன் மூலம், எனது உழைப்பையே இதற்கு பயன்படுத்துகின்றேன்.

உண்மையைச் சொல்லப்போனால் எனது நிலையை ஊக்குவிப்போர் யாரும் கிடையாது. ஒருவர் இருவர் ஒரிரு சந்தர்ப்பங்களில் உதவிகளை செய்ததை நான் மறுக்கமுடியாது. ஆனால் இந்த எதார்த்தம் வேறு ஒன்றே. புத்தகத்தின் விலையைக் கூட கொடுத்து வாங்குவதில்லை. சிலர் புத்தகத்தை பெற்றுவார்கள், ஆனால் பணத்தைத் தருவதில்லை. இது நான் சந்திக்கும் எதார்த்தம். உண்மையில் இந்த சமூகம் பற்றிய ஆய்வு சார்ந்த அறிவிற்கான எனது முயற்சியை, உண்மையில் யாரும் புரிந்துகொண்டது கிடையாது. நான் இறந்த பின் அஞ்சலிகளை விடுவதிலும் அல்லது என்னைப் போற்றுவதிலும் கூட எந்தவிதமான அர்த்தமும் இருப்பதாக நான் கருதவில்லை. நான் வாழும்போது, எனது முயற்சிகளுக்கு கிடைத்த சமூக ஊக்குவிப்பு என்ன என்பதே, அரசியல் ரீதியாக முக்கியத்துவமானது. எனது சமூக சார்ந்த எழுத்தின் வரவுக்காக, என்ன பங்களிப்பைச் செய்தீர்கள் என்பதே முக்கியமானது. பாசிசம் சூழந்துள்ள எமது இந்த அமைப்பில், அதை மற்றுவதற்கான அறிவு சார்ந்த சிந்தனை சார்ந்த நடைமுறை முயற்சிக்கு பங்களிப்பு செய்யாதவர்கள் கூட, பாசிசத்துக்கு துணைபோனவர்கள் தான்.

மாறாக அதீதமான துற்றுதலை நான் அனைத்து தரப்பிலும் இருந்து சந்திக்கின்றேன். பாசிசம், பாசித்தை ஒத்த ஏகாதிபத்திய சார்பு எதிரணியும், அத்துடன் இதனுடன் சேராத ஆனால் கலவைக் கோட்பாடுகளைக் கொண்ட அணியினர் அனைவரிடமும் இருந்து, நான் வாசவுகளையும் துற்றுதலையும் எப்போதும் சந்திக்கின்றேன். கருத்தை கருத்தாக எதிர்கொண்டு பதிலளிக்க முடியாத இந்த பிராணிகள், என்னை துற்றுவதே அவர்களின் சொந்த அரசியலாகிவிட்டது. உண்மையில் இவர்கள் முன் நான், நான் சார்ந்த கோட்பாட்டின் சரியான தன்மை மூலம் வானளவுக்கு உயர்ந்து நிற்கின்றேன். மக்களை நேசிப்பதில், அவர்களை தமது சொந்த விடுதலைக்காக சமூக இயக்கத்தில் அவர்களை இயங்கக் கோருவதன் மூலம், ஒரு நடைமுறைவாதியாகவும் கூட உயர்ந்த நிற்கின்றேன். மக்கள் மட்டும் தான் தமது சொந்த விடுதலைக்காக போராடமுடியும் என்ற அரசியல் உள்ளடகத்தை, நான் மட்டும் தான் இலங்கையில் பகிரங்கமாக இதைக் கோருபவனாக உள்ளேன். இதற்காகவே நான் போராடுகின்றேன்;. ஆச்சரியமானது, ஆனால் இதுவே உண்மை. இதற்கு வெளியில், எனக்கு என்று ஒரு தனிவாழ்க்கை கிடையாது. இதற்கு வெளியில் முன்வைக்கப்படும் கருத்துகள் கோட்பாடுகள் என அனைத்தும், ஏன் இலக்கியத்தில் கூட மக்கள் தான் வரலாற்றை படைக்க வேண்டும் என்று கோருவதில்லை. இது இன்றைய எதார்த்தம்.

இந்த நிலையை சமூக முன்னோடிகளாக காட்டிக் கொள்வோர் இடையில் எனது கருத்துகள் புரியாமல் நடிப்பது அல்லது புரிந்துகொள்ள முடியாது இருப்பது இயல்பானது. பொது சமூக மட்டத்தில் விளங்காமை, நீண்ட கட்டுரை என்ற விமர்சனங்கள், என் மீதான விமர்சனமாக வைப்பதில் அர்த்தமற்றது. இதற்கு மாறாக சமூகத்தின் அறியாமை மீது, அதை விமர்சனமாக இனங்கண்டு கொண்டு அதை மாற்றமுனைவது தான், இன்றைய அரசியல் கடமையில் ஒன்றாகும். உண்மையான இதுவே இன்றைய சமூக பணியும் கூட. சொந்த அறிவை விருத்தி செய்யும் வகையில் படிக்கவும், சமூக அறிவை விருத்தி செய்யும் வகையில் சமூகங்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிக்க வைப்பது அவசியமானது. இதை மையமாக வைத்து போராடுவது இன்றைய சமூகப்பணிகளில் ஒன்றாகும்.


இதை நாம் வறட்டுத்தனமாகவும் ஒருதலைபட்சமாக திணிக்க முடியாது. இது எவ்வளவு பெரிய உண்மையாக இருந்தாலும் கூட இது தான் நிலைமை. அதற்காக உண்மை பொய்யாகிவிடாது. உண்மையை கைவிட வேண்டுமென்பதல்ல. ஆனால் சமூகத்தின் உயிர்துடிப்பள்ள சமூக வாழ்வியலுடன் ஒன்று கலந்த வகையில் மிக நெருக்கமாவே அவர்களை உடறுத்து அனுக வேண்டும். மக்களை ஆழ உடுரூவி அது அவர்களை அடைமையாக்கும் மதத்துக்கு எதிராக எப்படிப் போராட வேண்டும் என்பது பற்றி லெனின் கூறும் கூற்று, இந்த கட்டுரையப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியத்தவம் வாய்ந்தவை.
லெனின் "... நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். இது அனைத்துப் பொருள்முதல் வாதத்தின், ஆகவே மார்க்சியத்தின் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள் முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும்; அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள் முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான – சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது; அத்தகைய போதனையாக அதைச் சுருக்கிவிடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.... விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான... மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளித்துவ வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே; மதம் ஓழிக; நாத்திகம் நீடூழி வாழ்க; நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்லளூ இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய, கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லைளூ அவற்றைப் பொருள் முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை, இன்று மதத்தின் மிக ஆழமான வேர், பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக ரீதியில் கீழே அழுத்தப்பட்டுக் கிடக்கும் நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் தான்ளூ முதலாளித்துவம் யுத்தங்கள், பூகம்பங்கள், இதரவைகளைப் போன்ற அசாதாரணமான சம்பவங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கடுமையைக் கொண்ட மிகவும் அதிகமான அளவுக்கு மோசமான துன்பம், மிகவும் அதிகமான அளவுக்குக் காட்டுமிராணடித் தனமான சித்திரவதையைச் சாதாரணமான உழைக்கின்ற மக்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஏற்படுத்துகிறது. 'அச்சம் கடவுள்களைப் படைத்தது' மூலதனத்தின் குருட்டுச் சக்தியை – பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது – பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் 'தீடிரென்ற', 'எதிர்பாராதவிதமான', 'தற்செயலான' அழிவை நாசத்தை, ஏழையாகவும் பாப்பராகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதை, பாட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகின்றது. இது தான் நவீன மதத்தின் வேர்;... முதலாளித்துவத்தின் குருட்டுத் தனமான அழிவுச் சக்திகளின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதனத்தின் ஆதிக்கத்தைன் எல்லா வடிவங்களையும் எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வுபூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்ற வரை எந்தக் கல்வி புகட்டும் புத்தகமும் அவர்களுடைய மனங்களிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது...

ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதி, அதாவது மதத்தின் விரோதியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞான ரீதியான, ஒருபோதும் மாற்றம்மடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்" என்றார். இங்கு ஒரு விடையத்தின் இரண்டு பக்கங்ளையும், அதாவது மதத்தை எதிர்க்காது அதை அப்படியே பாதுகாத்தல் என்ற வர்க்கப் போராட்டத்தின் பின் மதத்தை ஒழித்தல் அல்லது மதத்தை முதலில் ஒழித்த பின் சமூக இயக்கம் என்ற இரண்டு பிற்போக்கு தத்துவக் கூறுகளை எதிர்த்து எப்படிப் போராட வேண்டியுள்ளது என்பதை லெனின் தெளிவாக மதம் சார்ந்து எடுத்துக் காட்டுகின்றார். இதுவே எனது அனைத்துக் கருத்திலும் தெளிவாக வெளிப்படும் வகையில் முன்வைக்கின்றேன்.

இதை விடுத்து சிலர் தமது சொந்த அரசியல் அரிப்புக்கு எற்பவே, என்னிடம் கட்டுரைகளை எதிர்பாக்கின்றனர். உதாரணமாக புலிசார்பு, புலியெதிர்ப்பு அணியினர் குறிப்பாக தமது சொந்த அரிப்புக்கு எற்பவே சிறிய கட்டுரையை எதிர்பார்க்கின்றனர். இதை நான் செய்யவே முடியாது. சமூக விடுதலை என்ற அடிப்படையில் சமூகத்தைச் சிந்திக்கத் துண்டுவதே, எனது சமூக கடமையாக நான் கருதுகின்றேன். இதையே அனைவரும் கட்டாயம் செய்யவேண்டியதும் கூட. இதைவிடுத்து நாம் வம்பளக்க முடியாது. எனது சக்தியை விரயம் செய்யமுடியாது. சமூக அடி நிலையில் உள்ள மக்களுக்கு விளங்கும் வகையில், நான் எனது எழுத்தை மாற்ற முடியாது. மாறாக சமூகத்தை வழிநடத்தக் கூடிய முன்னணியாளர்ளை உருவாக்கும் அடிப்படையில் தான், நான் எழுத வேண்டியுள்ளது. சமூகத்தையே புரட்சிக்கு இட்டுச் செல்லக் கூடிய சமூக முன்னோடிகளே, இன்று சமூகத்துக்கு தேவையாக உள்ளனர். சமூகத்தை தலைமை தாங்கக்கூடிய முன்னணி சமூக சிந்தனையளார்களை உருவாக்கும் வகையில், அவர்களின் சமூக அறிவின் பரந்த தளத்தை உருவாக்கும் அடிப்படையில் தான், எனது எழுத்து குறிப்பான திசையில் நகர்கின்றது.

இதை ஒருவர் அடைந்தாலும் கூட அது எனது வெற்றிதான். இதுவே எனது உடனடி இலட்சியமாக உள்ளது. இதை அடைவது என்பது ஒரே நாளில் சாத்தியமில்லை. குறிப்பாக எனது அறிவு என்பதும், அறிவு சார்ந்த சமூக நடைமுறை என்பது ஒரு நாளில் எற்பட்டதல்ல. கடந்த 25 வருடமாக சமூகம் சார்ந்த அரசியல் ஈடுபட்டதன் மூலம், முரணற்ற வகையில் சமூகத்துடன் செல்லும் ஒரு உறுதியான போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. சமூக நடைமுறை மற்றும் சமூகம் சார்ந்த தேடுதல் அறிவை, ஒரு நாளில் ஒருவருக்கு எற்படுத்திவிட முடியாது. நான் எனது குடும்ப வறுமை காரணமாக, சமூகத்தில் சிறுவயது முதலே உழைத்து வாழவேண்டிய நிலைமைக்கான சமூகக் காரணத்தைக் தேடவெளிக்கிட்டவன். சிறுவயது உழைப்பு, அது சார்ந்த வாழ்வின் அனுபவம் கூட, எனது பிந்திய அரசியல் வாழ்வில் பாரிய பாதிப்பை எற்படுத்தியது.

அனைத்தையும் ஒருங்கு சேர உருவான எனது அறிவு. சமூக நடைமுறையில் இருந்து அன்னியமான ஒரு புதிய சூழலில், கடந்த 15 வருடங்களாக வாழ் நிhப்பந்திக்கப்பட்டுள்ளேன். ஒட்டும் உறவுமான எனது சமூகத்தில் இருந்த அன்னியமான ஒரு நிலையிலும், எனது சமூகத்தை புரிந்து கொள்வதில் பிழையற்ற ஒரு சமூக அனுகுமுறைக்கு சமூகத்தின் உணர்வுடன் ஒன்றி நிற்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. சமூகத்தை நெருங்கி பார்த்தல் என்பது, இலகுவாக உருவாகிவிடுவதில்லை.

இதுவும் ஒரு நாளில் நடந்து முடிவதில்லை. இங்கும் ஒரு போராட்மே அவசியமானது. நான் வாழும் பூர்சுவா சூழல், தனிமைப்படுத்தப்பட்ட எனது சிந்தனையும், தனிமனித வாவைத் தண்டி முன்னேறவே போராடுவது அவசியமானதாக இருந்தது. இதை யாரும் எடுத்த மாத்திரத்தில் வந்தடைந்து விடமுடியாது. அப்படி சிலர் எண்ணுகின்றனர். முற்றிலும் தவறானது, அபத்தமானது கூட. சமூகத்தை முரணற்ற இயங்கியல் வகையில் புரிந்து கொள்வது அவசியம். சமூகத்தின் பிரச்சனைகளை அவர்களின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. அதனடிப்படையில் நான் எனது வாழ்வையே, முரணற்ற வகையில் இட்டுச் செல்வது அவசியம். மார்க்ஸ் கூறியது போல் "கண்டிப்பான விஞ்ஞானக் கருத்தும் சாதகமான போதனையும் இல்லாமல் வேலை செய்யும் மனிதனை நாடுவது என்பது நேர்மையற்ற, வெற்று பிரச்சார விளையாட்டிற்குச் சமமானது; இது ஒருபுறம் உத்வேகம் நிறைந்த தீர்க்கதரிசியையும் மறுபுறத்தில் வாயைப் பிளந்து கொண்டு இவனைக் கேட்கும் கழுதைகளையும் ஊகிக்கிறது... இதுவரை எப்போதும் யாருக்கும் அறியாமை உதவியதில்லை" நாம் சமூக விஞ்ஞானத்தின் உண்மைகளை, உண்மைகளாகவே எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்பூர்வமாகவே உள்வாங்க வேண்டியிருந்தது. உணர்பூர்வமாகவே அதை செறிவூட்டி மீள சமூகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது. சமூக விஞ்ஞானம் என்பது எப்போதும் எங்கும் சமூகத்துக்கு முரணற்றதாக இருப்பதை, சரியாக உள்வாங்க வேண்டியதன் அவசியத்தைக் புரிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது.

சமூகம் சார்ந்த எனது உண்மையை யாராலும் நிராகரிக்க முடியாது என்ற அடிப்படை, எனது கருத்தின் சரியான தன்மைக்கான அடிக்கட்டுமானமாக உள்ளது. இதனால் தான் என்னால் தனித்தும் கூட, இந்த சமூகத்தின் முன் அச்சமின்றி நிமிர்ந்து நிற்க முடிகின்றது. பல தளத்தில் என்னைத் துற்றுவோர், என்ன கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளவே முடியாது வக்கற்றுப் போகின்றனர். சமுகத்தின் எதிரிகளாகவே உள்ள இவர்கள், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்து பலத்தில் உள்ள என்னை நெருங்கக் கூட முடிவதில்லை. அவர்களால் முடிந்ததெல்லாம் தனிமனித தூற்றுதல்கள் மட்டுமே. ஆனால் அவை எல்லாம் எப்போதும் வழமைபோல் சருகாகிப் போகின்றன.

எனது கட்டுரையின் வடிவம் சார்ந்த விமர்சனங்கள் என்னை நோக்கி அல்ல, சமூகத்தை நோக்கி திருப்ப வேண்டும். சமூகத்தின் பின்தங்கிய அறிவின் நிலையை மாற்றவேண்டிய அவசியத்தையும், அதை நீங்களே செய்ய வேண்டியது உங்கள் சமூகக் கடமையாகும். மிகவும் சிரமானது கடுமையானதும் கூட. நீங்கள் ஒரு சமூக முன்னோடியாக, முன்னணியாளராக, சமூகத்தின் உண்மையான ஒரு தலைவனாக மாறவேண்டிய அடிப்படையில், நீங்கள் உங்களையே சுயவிமர்சனம் செய்து சமூகத்துக்காக போராடவேண்டும்;. என்னை பின்பற்ற முனைபவர்கள் நிச்சயமாக சமூகத்தை, முரணற்ற வகையில் புரிந்துகொள்ள வேண்டும் எந்தக் கருத்தையும் சமூகத்தின் உண்மையான வாழ்வியல் நலன்களுடன் தொடர்புபடுத்தி, அதில் இருந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவவேண்டும்;. எமது குறுகிய சிந்தனை முறைக்குள்ளும், எனது விருப்பு வெறுப்புக்குள்ளும் சமூகத்தை உட்படுத்தி, சமூகத்துக்கு ஒருக்காலும் யாரும் வழிகாட்டமுடியாது. குறைந்தபட்சம் சமூகத்துக்கு நேர்மையாக கூட அவர்களால் வாழமுடியாது.

Wednesday, November 9, 2005

பாரிஸ் தொடரும் இன வன்முறைகளை

நிறவெறி ஆட்சியாளர்களே ஊக்குவிக்கின்றனர்.


பிரான்சில் தொடரும் இனவாத வன்முறைகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுடன் நேரடியாகவே தொடர்புடையவை. வன்முறையை கட்டுப்படுத்தல் என்ற நிறவெறிக் கூச்சலே, அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்யும் என்ற நம்பிக்கையே வன்முறையை ஊக்குவிக்கின்றது. அந்த வகையில் பொலிசாரின் நடத்தைகள் மூலம், வன்முறை மேலும் தீ விட்டு எரியும் பிரச்சனையாக மாற்றப்படுகின்றது. பின் இதைக் கட்டுப்படுத்தி காட்டுவதன் மூலம், அடுத்த ஜனாதிபதியாகிவிட முடியும் என்ற இன்றைய உள்துறை அமைச்சாரின் அரசியல் வியூகம், எதிர்வினையான வன்முறையாக மாறுகின்றது. இந்த வன்முறையைக் கட்டுப்படுத்தும் இனவாதம் சார்ந்த அரசியல் அனுகுமுறையே, தீவிர நாசிக் கட்சியான தேசிய முன்னணி அரசியலாக கடந்த காலத்தில் இருந்து வந்தது. அதை இன்று ஆளும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சார் தனது அரசியல் கோரிக்கையாக்கி அதை வன்முறையை எரியவிட்டுள்ளார்.

பாரிஸ் சுற்றுப்புறங்களில் தொடங்கிய வன்முறை படிப்படியாக பிரான்ஸ் முழுக்க பரவிப் படர்ந்து வருகின்றது. 27.10.2005 அன்று 15, 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயர் அழுத்த மின்சார மின் அழுத்திக்குள் சிக்கி இறந்து போன நிகழ்வைத் தொடர்ந்தே, இந்த வன்முறைகள் பீறிட்டுக் கிளம்பின. சம்பந்தபட்ட இருவரின் மரணம் எதோ ஒரு வகையில் பொலிஸ்சாருடன் தொடர்புடையதாக இருந்தது. இவ் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பது பற்றி சரியான உண்மையான தரவுகளை பெறமுடியாது உள்ளது. பொலிஸ் தரப்பு செய்திகளே பொதுவான செய்தியாக, உத்தியோகபூர்வமற்ற செய்திகள் பற்பலவாக உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் பொலிசார் இருந்துள்ளனர் என்பதும் உண்மை. பொலிசார்ருக்கும் அவர்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பது மர்மாகவே உள்ளது. மின் அழுத்தியைச் சுற்றி இருந்த அண்ணளவாக 4 மீற்றர் உயரமான மதிலை எப்படி அவர்கள் கடக்க முடிந்தது என்று, பல மர்மங்கள் நிறைந்த கேள்வியாக எம்முன் உள்ளது. சம்பந்தபட்ட இருவரும் இதுவரை எந்தக் குற்றத்திலும் ஈடுபட்ட ஆதாரங்கள் கூட கிடையாது. இப்படி சம்பவம் மர்மாகவே உள்ளது. இச் சம்பவம் ஒருபுறம். நாம் பிரான்சின் இந்த நிலையை சரியாக புரிந்துகொள்ள, இந்த சம்பவத்துடன் மட்டும் வைத்து நிலைமையை ஆராயமுடியாது.

1.இருவரின் மரணத்துடன் பரிஸ் புறநகரப் பகுதியிலும், பின் பிரான்ஸ் தேசம் முழுக்க இன வன்முறைகள் நடப்பதற்கான சமூக அடிப்படைகள் என்ன?
2.இந்த வன்முறைக் கலவரங்களில் யார் ஏன் ஈடுபடுகின்றனர்?
3.இது பற்றிய பல்வேறு தரப்பு சார்ந்த கருத்துகள் என்ன?
4.தமிழ் தரப்பின் கருத்துகள் என்ன?

நாம் இதற்குள் கட்டுரையை ஆய்வு செய்வது அவசியமாகி விடுகின்றது. பொதுவாக இது பற்றிக் கருத்துக் கூறுவோர் பொலிசை எதிர்த்து அல்லது ஆதாரித்து விவாதம் செய்வோராக சமூகம் பிளவுண்டுள்ளது. இதற்குள் அங்கு இங்கும் கருத்துச் சொல்வோர் உள்ளனர்.
உண்மையில் இதை வன்முறைக்குள்ளும் மற்றும் பொலிஸ் சட்ட ஒழுங்குக்குள்ளும் வைத்து விடையத்தை புரிந்துகொள்ள முடியாது. அப்படி பார்ப்பதே பெரும்பலனோரின் சிந்தனையாக உள்ளது. உண்மையில் என்ன நடக்கின்றது? ஏன் இவை நடக்கின்றது?

குறித்த இரண்டு மரணங்களின் எதிர்வினையல்ல இவை. இவை திட்டமிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் அல்ல. மாறாக தன்னெழுச்சியான பிரஞ்சு அல்லாத சமூகத்தின் எதிர்வினை நிகழ்ச்சியே. பிரான்சில் இந்த வருடம் மட்டும் நகாப்புற கெரிலா தாக்குதலுக்கு உட்பட்ட 30000 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன என்றால், இ;தன் சமூக விளைவுகள் தான் என்ன. பிராஞ்சு சமூகத்தில் அன்றாடம் வன்முறைகள் நிகழ்கின்றன என்பதும், இன்றைய சம்பவங்கள் ஒரு எழுச்சியாக உள்ளது அவ்வளவே. இந்த வன்முறைகள் நேரடியாக, வெள்ளையின மக்களை குறிவைத்து தாக்குதலாக நடப்பதில்லை. மாறாக பொருட்களை சேதமாக்குவதாக, பொலிசுடன் மோதுவதாக உள்ளது. இங்கும் இன அடிப்படையில் திட்டமிட்டு தெரிவு செய்த தாக்குதலாக நடப்பதில்லை. குறிபட்ட இனம் பெருபான்மையாக தாக்குதலில் ஈடுபடும் போது, தனது இனத்தைத் தவிர்த்து அல்லது சலுகை வழங்கி வன்முறையை நடத்துவதில்லை. இது மிக முக்கியமான ஒரு அம்சம் கூட. உதிரியான களவுகளின் போது மட்டும் மனிதர்கள் தாக்கப்படுவதும், இனம் கண்ட வகையில் சிறுபான்மை இனங்கள் மேலானதாக இவை அமைகின்றது.

உண்மையில் இந்த வன்முறையின் மூலம் என்பது, பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொள்கைதான் காரணமாகும்;. சமூகங்களை பிளந்து அவர்களை ஒடுக்க கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சியின் எதிர்வினைகள் தான் இவை. பிராஞ்சு வெள்ளையின ஆளும் வர்க்கம், திட்டமிட்ட வகையில் வெள்ளையின அல்லாத பிரிவுகள் மீதான ஒழுக்குமுறையின் எதிர்வினை தான் இந்த வன்முறைகள்.

இந்த வன்முறையில் ஈடுபடுவர்களின் முதல் தலைமுறையினர் யார் என்று பார்த்தால், பிரஞ்சு தேசத்தை கட்டிய அரையடிமைக் கூலிகள். பிரன்சின் இன்றைய அழகிய தோற்றத்தை நிர்மாணிக்க இறக்குமதியான அன்றைய அரை அடிமைக் கூலிகள்தான், இன்று அதை வன்முறை மூலம் சேதமாக்க முனைகின்றனர். தமது வாழ்வை இழந்து எரிந்து கிடக்கும் சமூகம், அனைத்தையும் எரிக்கின்றது. தனக்கும் தனது வாழ்வுக்கும் உதாவமறுத்த கல்வி நிலையங்களை, தான் நுகர முடியாத வாகனங்கள் என அனைத்தையும் எரியுட்டுகின்றது.

இந்த தலைமுறையின் முதல் தலைமுறை இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் நகரத்தை மீள நவீனமாக கட்டியமைக்க, அரை அடிமைகளை பிரான்ஸ் ஏகாதிபத்தியம் அரபு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்தனர். அவர்கள் தங்க வைக்கவென நகர்புறச் சேரிகளை உருவாக்கி, அதில் அரை அடிமைகளாகவே வாழ் நிhப்பந்தித்து சுரண்டியது பிரஞ்சு முதாலளி வர்க்கம். மிகக் கேவலமான வாழ்கை முறையையும், வாழ்விடங்களையும் திணித்து, வெள்ளையினம் நெருங்காத வண்ணம் அந்த சமூகத்தையே ஒதுக்கியே வைத்தனர்.

வெள்ளையினம் அவர்களை மிகவும் நகரிகம் குன்றி ஒரு சமூகமாக கருதும் வண்ணம், அவர்களின் வாழ்வை திட்மிட்டே மிகக் கீழ்நிலையில் வாழவைத்தனர். மூன்றாம் உலகில் சேரிகளை ஒத்த குடியேற்றங்களில் அவர்களின் இழிந்துபோன வாழ்க்கை தொடங்கியது. ஒருபுறம் கடுமையான வறுமை, மறுபுறம் குளிரை எதிர்கொள்ள முடியாத குடிசைகளில்; அந்தத் தலைமுறை நசிந்து கிடந்தது. மிகவும் பணிவுள்ள கூலிகளாகவே அடங்கியொடுங்கி இருக்கும் வகையில், பிராஞ்சு முதலாளித்துவ இயந்திரம் கசக்கிப் புளிந்தது. உண்மையில் இந்த மக்களின் இழிவான வாழ்வில், பிரஞ்சு முதலாளி வர்க்கம் கொழுத்து மேலும் நகரிகமடைந்தது.

நகரிகமான பிரஞ்சு தேசத்தின் நவீன நிர்மானங்கள் பூர்த்தியானதைத் தொடர்ந்து, இவர்கள் வேண்டாக் கூலிகளாக மாற்றப்பட்டனர். மறுபக்கம் அரசுக்கு எதிரான பிரஞ்சு தேசமக்களின் சமூக கொந்தளிப்புகளால் மட்டும்தான், அவர்கள் இங்கு வாழவைக்க வேண்டிய ஒரு நிலை உருவானது. அத்துடன் அவர்களின் வாழ்வியல் அடிப்படை மீதான கேள்விகள், அது சார்ந்த போராட்டங்கள், இவர்களுக்காக பிரஞ்சு சமூகத்தின் போராட்டங்களே அவர்களுக்கான நவீன குடியிருப்புகளை அமைக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டது.

இதற்கு எற்ப அரசு வீட்டுத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் வெள்ளையின ஆதிக்க அரசு மிகவும் திட்டமிட்ட வகையில் பிரஞ்சு சமூகங்களுடன் கலக்காத வகையில், திட்டமிட்ட இனக் குடியிருப்புகளையே உருவாக்கினர். இக்குடியிருப்புகள் பல அடுக்கு மாடிகளாகுது. இதற்குள் பிரஞ்சு தேசத்தவர்கள் அல்லாத குடியேற்றத் திட்டங்களாகவே அமைக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களின் அவை குறித்த இனங்களின் குடியிருப்புபகளாகவே உருவாக்கினர்.
இப்படி உருவான குடியேற்றங்கள் மிகவும் திட்வட்டமான புறக்கணிப்புக்குட்பட்ட ஒரு சூழ்நிலையில், வெள்ளையின வாழ்விடங்களை விடவும் மிகத் தரம் தாழ்ந் நிலைக்குள் வைக்கப்பட்டது. இந்தக் பெற்றோரின் எதிர்காலக் குழந்தைகளின் கல்வி கூட பெருமளவுக்கு தனித்துவமானதாகவும், பிரஞ்சு சமூகத்துடன் கலக்காத வகையில் குடியேற்றத்தை அண்டிய பகுதியில் அமைந்து இருந்தது. இங்கு இனத் தூய்மை பேனும் நாசிய அனுகுமுறையே இதன் மையக் கூறாக இருந்தது.

இந்த குடியேற்றங்களில் பெருமளவில், சமூக கட்டுமானத்துக்கு என மிகக் குறைந்த கூலிக்காக கொண்டுவரப்பட்டு பின் வேலையிழந்தவர்களின் குடியேற்றமாக மாறியது. சமூக பொருளாதார கூறுகளில் மிகவும் பின்தாங்கிய ஒரு சமூகமாக மாற்றமடைந்தது. இதை மூடிமறைக்க, அவர்களின் சொந்த நாட்டு பண்பாடுகளில் கணப்பட்ட மிகப் பிற்போக்கான சமூகக் கூறுகளை ஊக்குவிக்கப்பட்டது. பிற்போகான சமூகக் கூறும் மிக இறுக்கமான வடிவில் வளாச்சியுற்றது. பிரஞ்சு சமூகத்தில் இருந்த அன்னியமாக இக்குடியேற்றங்கள் மற்றொரு பண்பாட்டு கலச்சாரத்தின் இறுக்கமான போக்கில், தனது பிற்போக்கு அம்சங்களுடன் திருத்தியடைய வைக்கப்பட்டது. வேலையின்மை, வறுமை இதில் இருந்து தப்ப சமூக உதவியை நம்பி வாழ் வேண்டியநிலை. சமூக உதவியை அதிகம் பெற, அதிக குழந்தை என்ற தத்துவம் இக்குடியிருப்புகளின் எழுதப்படாத சட்டமாகியது. எதிர்கால சந்ததியின் நெருக்கடியை இது மேலும் பறைசாற்றியது.

குறித்த சமூகங்கள் பிரஞ்சு சமூகத்திடமிருந்த திட்டமிட்ட வகையில் மிகவும் ஒதுக்கபட்ட ஒரு நிலையில், தமது பிற்போகான சமூகக் கூறுகளின் வளர்ச்சியுடன் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தான் பிரஞ்சு ஆளும் வர்க்கம் விரும்பியது. சொந்த அரசியல் நலனுக்காகவும், வெள்ளையின இனவெறிக் கொள்கைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கும் இது பாதகமான வகையில் திட்டமிட்ட ஒன்றாகவே அமைந்தது. புதிதாக பிரான்சுக்குள் வந்தோரையும் இக் குடியேற்றங்களுக்குள் திணித்தனர். அல்லது இதுபோன்ற குடியேற்றங்களையே உருவாக்கி அதில் நிலைநிறுத்தினர்.

ஆனால் இந்த தலைமுறையின் குழந்தைகளோ, அடங்கியொழுகிய ஒரு சமூகத்தின் (அதாவது பெற்றோரின்) கட்டுக்கோப்பை எற்க மறுக்கும் வகையில் அவர்களின் சூழல் நிர்ப்பந்தித்தது. பெற்றோரிடம் காணப்பட்ட மிக பிற்போக்கான கூறும், வெள்ளையினத்தவரின் திட்டமிட் இன ஒடுக்குமுறையும், அவர்களை தனித்துவமாக்கியது. இது பெருமளவில் லும்பன் கலச்சாரத்தை அடிப்படையாக கொண்ட புதிய ஒரு வன்முறைக் குழுக்களாகவே உருவாகின. இவர்களுக்கென ஒரு தனித்துவமான கலச்சாரத்தை உருவாக்கும் வகையில், பெற்றோரும் பிரஞ்சு வெள்ளையினச் சமூகமும் உதைத்து தள்ளியது. இது நாடு முழுக்க ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலும், ஒரே மாதிரியானதாக குறித்த குடியிருப்புகளில் உருவாக்கியது. இது பிரஞ்சு பொதுக்கலாச்சார நடைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதால், அவர்களைக் கையாள்வது ஒரு முரண்பாடாகவே மாறியது. இதை எதிர் கொள்ளும் போது, இதைப் பிழற்சி குன்றி ஒன்றாக காண்பதில் இருந்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறானதாக மாறியது.

பிரஞ்சு சமூகப் பொருளாதாரத்தில் நுகர்வுக் கலச்சாரமே முதன்மைப் பண்பாடக உள்ள ஒரு அமைப்பில், அதை நுகர்வது என்பது இலட்சியமாக வாழ்க்கையாக ஒழுங்குகமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வாழ்க்கை நெறியாக புகட்டப்படுகின்றது. கல்வி முதல் பொழுது போக்கு ஊடாகங்கள் வரை இதையே மீளமீள ஒதுகின்றன. இந்த நிலையில் இந்த நுகர்வுக் கலச்சாரத்தை அடைய முடியாத வகையில், இக்குடியேற்ற பெற்றோர்கள் வேலையிழந்து அல்லது ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் என்ற ஒரு வாழ்க்கை முறை உள்ளது. ஒருபுறம் வேலையின்மை, மறுபுறம் மிதப்படுத்தும் பணத்தை சொந்த நாட்டுக்கு அனுப்பவேண்டிய ஒரு நிலைமை. இது இவர்களின் குழந்தைகளுக்கு மிக முரண்பாடன ஒன்றாகவே அமைந்தது. குழந்தை தனது சொந்த நுகர்வில் மட்டும் கவணத்தை குவிக்கும் இச் சமூக அமைப்பில்;, பெற்றோரின் நடத்தைகள் முரண்பாடானதாக மாறுகின்றது. பெற்றோரின் வேறுபட்ட சிந்தனை மற்றும் கலச்சார முறைமை மற்றும் தமது பிற்போக்கு அம்சங்களை குழந்தைக்கு திணிக்க முயலுதன் எல்லாம் முரண்பாடகவே மாறுகின்றது. குழந்தை இதற்கு எதிராக முரண்பாடகவே வளருகின்றது.

மறபுறத்தில் பிரஞ்சு சமூகத்தில் இருந்த நிறம் சார்ந்த இனம் சார்ந்த புறக்கணிப்பு ஒரு முரண்பாடாகவே இக் குழந்தைகள் உணருகின்றன. அனைத்தும் பிஞ்சில் இருந்தே இக் குழந்தைகள் அனுபவித்த ஒரு முரண்பாடகவே வளருகின்றன. வெள்ளையின நிறவெறிக் கொள்கை கல்வி ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாக இவர்களை புறக்ணிக்கும் போது, வீதியில் அராஜகவாத லும்பன்களாக வீசியெறிப் படுகின்றனர். பிரஞ்சு இனவாத நடத்தைகள், இவர்களை வீதியில் அலையும் சமூக லும்பன் கும்பலாக உருவாக்கியது. இது பிரஞ்சு தேசம் முழுக்க குறித்த குடியிருப்புக்களின் தொடர்பற்ற ஒரு நிலையிலும் கூட ஒரு பொதுப்பண்பாகும். அவர்கள் பிரஞ்சு பண்பாடாக உள்ள நுகர்வை அடைய ஒரு வெறிகொண்ட மனிதர்களாகவும், அதேநேரம் பணம் கொடுத்தே வாங்க முடியாத வாழ்கை நிலைமை லும்பதனமான வன்முறையின் பிறப்பிடமாகின்றது. இதுவே அராஜாகவாதக் கும்பலாக மாற்றம் எடுக்கின்றது. இருப்பதை எல்லாம் அடித்து நொருக்கும் பண்பாடாகவே மாறுகின்றது. எந்த சமூக ஓழுங்கையும் மறுக்கும், இயல்பான வன்முறைக் கும்பலாக மாறுகின்றது. மற்றவனிடம் இருப்பதை பறிப்பதும், அதை நுகர்வதும் இதன் கொள்கையாகின்றது.
சமூகத்தையிட்டு ஒரு பொதுப்பார்வை இது கொண்டிருப்பதில்லை.

இப்படி முரண்பாடகவே சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளாகும் ஒரு சமூகம் எதைச் செய்யுமோ, அதை அப்படியே செய்கின்றது. இது எங்கும் யாருக்கும் பொருந்தும்;. தமிழ் பேசும் மக்களுக்கும் கூட பொருந்தும்;. இதன் விளைவு தான் இன்றைய இனம் சார்ந்த சில பிரிவினரின் கலவரம் சார்ந்த வன்முறைகள். எதற்கும் அஞ்சாத வன்முறையாளராக இவர்கள் மாறுகின்றனர். இவர்களுக்கு என்று எந்த இலட்சியமும் இச் சமூக அமைப்பில் இல்லாமையால், எதற்கும் துணிந்து வன்முறையில் ஈடுபடுகின்றது. இதனால் தான் இதை கட்டுபடுத்த முடியாதுள்ளது. சட்டம் மற்றும் தண்டனைகளுக்குள் இது அடங்கிப் போய்விடுவதில்லை. இது சமூக ரீதியாக மட்டும் தீர்க்கப்பட வேண்டியவையாக உள்ளது. ஆளும் வர்க்கத்தினரிடையேயான முரண்பாடாக இது மாறுகின்றது. இதனால் இந்த வன்முறை பிரஞ்சு அரசியலில் மிக முக்கிய இன நிறவாத அரசியல் விடையமாகிவிட்டது.

குறித்த சம்பவம் தொடங்கிய பகுதியில் வேலை இல்லாத் திண்ணடாம் 25 சதவீகிதத்துக்கு மேலாதாக உள்ளது. அதாவது பிரான்சில் வேலை இல்லாத் திண்ணடாம் 10 சதவீகிதமாக உள்ள போது, இங்கு அது 25 சதவீகிதத்தைத் தாண்டியுள்ளது. குறித்த பகுதியில் இளைஞர்களின் வேலையின்மை 50 சதவீகிதத்தை தாண்டுகின்றது. இது வன்முறை பிரதேசங்கள் எங்கும் ஒரெவிதமாக உள்ளது. பொதுவாகவே சமூகத்தில் இருந்தம், இது முற்றிலும் மாறுபட்ட பிரதேசங்களாகவே உள்ளது. வேலையின்மை பெருமளவில் வெள்ளையினம் அல்லாதவர்களிடையே தான் அதிகமாக உள்ளது. வேலையில்லாத நிலையிலும், எந்தவிதமான சமூகப் பொழுது போக்குமற்ற நிலையில், வீதிகளில் வன்முறை கொண்டு திரியும் உதிரிக்குழுக்களாகவே இவர்கள் மாற்றப்படுகின்றனர்.

பிரஞ்சு சமூகம் இந்த வன்முறைக்கான சமூகக் காரணங்களை கண்டறிந்து தீர்க்கத் தவறிவிடுகின்றது. முன்பு அரசில் இருந்த சோசலிச அரசு இவர்களை கட்டுப்படுத்த அவர்களின் தொடர் குடியிருப்புகளையே இடித்து தள்ளி, வன்முறை இளைஞர்களை இடமாற்றி புதிய தொடர் குடியேற்றங்களை நடத்தினர். அதாவது வன்முறை குழுக்களுக்கு இடையிலான தொடர்பை துண்டிப்பதன் மூலம் வன்முறையை கட்டுப்படுத்த போவதாக இதன் மூலம் பீற்றினர். அதத்துடன் அவர்களில் ஒருவரை தெரிவு செய்து பொழுதுபோக்கு கலச்சார மையங்களை கடந்த காலத்தில் திறந்தனர். இதன் மூலம் சமூக வன்முறைகனைக் கட்டுபடுத்த முடியும் என்று நம்பினர். இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின் அந்த சமூக மையங்களையும், காலச்சார நிலையங்களையும், பொழுது போக்கு மையங்களையும் முடியதுடன், அவர்களை வேலையைவிட்டே துரத்தியடித்தது.

அதற்கு பதிலாக பொலிஸ் எண்ணிக்கை அதிகரித்ததுடன், சிவில் உடை பொலிஸ்சாரை பெருமளவில் அமர்த்தி வன்முறையைக் கட்டுப்படுத்த போவதாக கூறி, பொலிஸ்சாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. பொலிஸ் தனது கையில் அதிகரத்தைக் கொண்டு, இந்த சமூகங்கள் மீதான இனவாத அனுகுமுறையைக் கையாளுகின்றது. பொலிஸ் சமூகத்தின் முன் தன்னை வன்முறையற்ற ஒன்றாக காட்டி நடித்து வந்த பாத்திரத்தை தாண்டி, வன்முறை கொண்ட பொலிஸ் குண்டாகளாக நடமாடத் தொடங்கினர். இந்த சமூகத்தை எந்தநேரமும் கண்கணிக்கும் ஒரு இனவெறிக் கும்பலாகவே, தமத சொந்த நடத்தைகள் மூலம் மாறிவருகின்றது.

இந்தப் போக்கு வன்முறை கொண்ட இளைஞர் குழுக்களின் முன் சவாலாக மாறிவருகின்றது. அந்த இளையர்கள் ஆதிக்கம் செலத்தும் பகுதிகள் எங்கும் பொலிசார்ருக்கு எதிரான வகையில், தூசணத்தால் எழுதப்பட்ட சுலோகள் முதல் குறித்த சில மந்திரிக்கு எதிராகவும் கூட சவால் விடப்பட்டு எழுதப்படுகின்றது. உண்மையில் பொலிசாரின் அதிக அதிகாரம் கொண்ட நடத்தைகளை எதிர்த்து, சவால்விடும் வகையில் இளைஞர் குழுக்கள் அனுகத் தொடங்கினர். இதுவே நகர்புறக் கெரிலா வகையிலான வன்முறைத் தாக்குதலாக மாறியது. ஏன் இந்த வன்முறை குழுக்கள் உருவாகின்றன என்ற ஆராய்ந்து திர்க்க முற்பாடத நிலையில், அதிகரித்த அதிகாரம் கொண்ட பொலிஸ் நடைமுறை மற்றும் சட்டங்கள் மூலம் பரிகாரம் காணும் அரசின் நாசி அரசியல் சார்ந்த வழிமுறை, வன்மறையை மேலும் அதிகரிக்க வைக்கின்றது.

இதன் விளைவும் இந்த அராஜகவாத வன்முறைக் கும்பலுக்கும் இடையில் எந்த தொடர்பற்ற ஒரு நிலையலும் கூட, அவர்களின் நடத்தையில் ஒரு ஒருமித்த இணைப்பை எற்படுத்திவிடுகின்றது. இதன் எதிர்வினை சகல மட்டங்களில் பிரதிபலிக்கின்றது. குறிப்பாக இப்படி 1000 மேற்பட்ட இடங்களில், தடக்குள் ஒழுங்கு படுத்தப்படாத அதேநேரம் இனைந்த செயலாற்றக் கூடிய வகையில், பொலிஸ் நடவடிக்கைகளே தன்னியல்பாக இணைப்புகளை உருவாக்கிவிடுகின்றது. உண்:மையில் ஒழுங்குபடுத்தபட்ட நலீன வசதிகளகளைக் கொண்ட பொலிசார், இதைக் கட்டுபடுத்தவே முடியாது திணறுகின்றது. அந்தளவுக்கு சமூக முரண்பாடு தீவிரமான நிலையை அடைந்துள்ளது.

பொலிசாரின் இனவாதம் சார்ந்த அன்றாட நடத்தைகள் தான், இவர்களின் ஒருங்கினைந்து செயல்படக் கூடிய வகையில் ஒரு அடிப்படையாகவே மாறற்றி விடுகின்றது. இந்த நிலையில் இன்றைய உள்துறை அமைச்சர் சாக்கோசியே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி கட்சின் வேட்ப்பளராக போட்டியிட உள்ளார். அவர் வழமையான வலதுசாரிக் கொள்கைக்கு பதிலாக, தீவிர இனவாதியான லுப்பெனின் அரசியல் கொள்கைகள் சிலவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், வெற்றிபெற முடியும் என்று கருதுகின்றார்.

நாசிய இனவாதியான லுப்பென் கட்சிக்கு உள்ள இனவாத நிறவாத அரசியல் செல்வாக்கை உடைக்க, அக் கட்சியின் இனவாதக் கொள்கைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தனது வெற்றி சாத்தியம் என்று நம்புகின்றார். இந்த வகையில் நாசிய இனவாதக் கொள்கைகள் பலவற்றை தனதாக்கி, லுப்பெனுக்கே சாவல் விடுமளவுக்கு இனவாதியாக வளாச்சியுறுகின்றார். இதை லுப்பெனே தீட்டி தீர்த்து சொல்லும் நிலைக்கு, அரசியல் நிலவாரம் மாறிவருகின்றது.

வன்முறை கட்டுப்படுத்துவதே நிற இனவாதிகளின் அரசியல் கொள்கைகளில் பிரதான கொள்கையாக உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவது என்பது, வன்முறையில் பெருமளவில் ஈடுபடும் வெளிநாட்டவர் மீதான நடவடிக்கையே. இதை அடிப்படையாக கொண்டே தேர்தல் வியூகங்கள் நடைமுறையில் வளாச்சியுறுகின்றன. வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு, இன்றைய வன்முறைகள் அவசியமாகிவிட்டது. வன்முறையை அதிகரிக்க வைப்பதன் மூலம், அதைக் கட்டுப்படுத்தும் அரசியல் காதநாயகர்களுக்கே தேர்தல் வெற்றி என்பது இன்றைய உள்துறை அமைச்சரின் கொள்கை மட்டமல்ல, தீவிர இனவாத நாசிகளின் கொள்கையும் கூட. இந்த வகையில் பொலிஸ் வன்முறை இந்த சமூகங்களுக்கு எதிராக அதிகரிப்பதன் மூலம், எதிர் வன்முறையை அதிகரிக்க வைக்கமுடிகின்றது. இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அதிகாரத்தை பெறுதல் என்ற இலட்சியம் இன்றைய அரசியலாக உள்ளது.. இதை நோக்கித் தான், இந்த வன்முறை நகருகின்றது.

அண்மைக் காலமாக வெளிநாட்டவர்களின் சிறு தொழில் துறைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது என்றுமில்லாத வகையில் கடுமையான கண்கணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது. சட்டப்படி நடவடிக்கை என்ற பெயரில், வெளிநாட்டவரின் வர்த்தக முயற்சிகள் முடக்கப்படுகின்றன. இது ஒரு இனவாத அடிப்படையில் தொடர்ச்சியாகவே அன்றாடம் நடக்கின்றது. வெளிநாட்டவர்களின் மேல் கடுமையான அழுத்தம் மற்றும் நிர்ப்பந்தங்கள் மூலம் வெறுப்பபை வளர்க்கின்றனர். மறுபுறம் இந்தச் சமூகங்களை குற்றப் பரம்பரையினராக, இது போன்ற நடவடிக்கைகள் மூலம் காட்டி, பிரஞ்சு சமூகத்தை இனவாதமாக்கும் அரசியலலை நகர்த்துகின்றனர்.

இன்று பிரஞ்சு சமூகத்தில் குற்றங்களை எடுத்தால் அதிகளவுக்கு திட்மிட்ட குற்றங்களைச் செய்வோர் பிரஞ்சு சமூக்கத்தவராகவே உள்ளனர். ஆனால் உதிரியான வன்மறையை எடுத்தால், வெளிநாட்டு சமூகமாக உள்ளது. குற்றத்தின் தன்மையே தன்னியல்பான ஒரு சமூக ஆய்வாகி, பலவற்றை போட்டுடைக்கின்றது. திட்மிட்ட குற்றங்கள் தான் ஆபத்தானவை அபாயகாரமானவை. ஆனால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இந்த இனவாதிகள் யாரும் பீற்றுவதில்லை. உதிரிக் குற்றங்களை கட்டுப்படுத்துவது பற்றி பீறிடுவது, உள்ளடகத்தில் நிறவெறிக் கொள்கையே.

உண்மையில் இந்த வன்முறையாளர்கள் சமூகத்தில் இருந்து அன்னியமான சூழலில், தனித்தவிடப்பட்ட நிலையிலேயே உருவாகின்றனர். பிரஞ்சு பாட்டாளி வர்க்கத்தில் தனது விடுதலை பற்றி நம்பிக்கையினங்கள் தான், இதற்கான முக்கிய காரணம்;. சமூகத்தின் விடுதலை பற்றி சொந்த உணர்வு சிதையும் போது, பிரஞ்சு எகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொள்கையை இனம் காணமுடியாத சமூகமாக மாறுகின்றது. இந்த நிலையில் அந்த சமூகதத்தின் அவலநிலையை இனம் காணமுடியாத போது, இதை மாற்றியமைக்கும் போராட்டத்தை பிரஞ்ச சமூகம் முன்னெடுக்க முடிவதில்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை முன்னிறுத்தி போராட முடியாத ஒரு நிலையில், பாதிக்கப்படும் சமூகத்தில் உதிரித்தனமான லும்பன் தனமான வன்முறைக் கும்பலாகவே அவை சீராழிகின்றது.

பரிஸ் நகரில் கறுப்பின மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டித் தொகுதி முழுக்கவே எரிந்த நிகழ்ச்சிகள் கூட மிக அண்மையில் தான் நிகழ்ந்தன. குறிப்பாக இந்த வீட்டுக் குடியிருப்புகள் நிலைபற்றி தொலைகாட்சிகளில் காட்சிபடுத்தப்பட்டன. துர்நாற்றமும் அதற்கேற்ப அழுகிப்போன வீடுகளில், அந்த மக்கள் மட்டும் வாழவில்லை. பூஞ்சனம் சுவர் வண்ணமாக அலங்கரிக்க அதில் கரப்பான் பூச்சிகள் நீந்தி விளையாடு;கின்றன. எலி முதல் எல்லா உயிரணத்தினதும் குடியிருப்புகள் அவை. இங்கு மனிதர்கள் வாழமுடியாத நிலையில், அங்கு வாழ்க்கை நடத்தும் மக்கள் எப்படி தமது வாழ்வுடன் சிதைந்து போகின்றார்களோ, அப்படித் தான் அந்தப் பெற்றோரின் குழந்தைகளும் கூட சிதைந்து போகின்றார்கள். உலகில் நாகரிகமாக பாரிசில் இப்படி வீடுகளில் வசிக்கும் பல லட்சக்கானக்கான மக்களின் நிலையிட்டு கண்டு கொள்ளாத சமூகம், என்ன தார்மீகப் பலத்துடன் இந்த வன்முறையை கண்டிக்கமுடியும்.

இப்படி பலவிதமாக வளரும் குழந்தைகள், வன்முறையில் ஈடுபட்டால் பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் என்று வலதுசாரி அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர். நகைப்புக்குரிய இந்த வாதம் சட்டமானல், நீதிமன்றத்தில் ஒரு பெற்றோரின் ஒரு குழந்தை வன்முறையுடனும் அதே பெற்றோரின் மற்றைய குழந்தை வன்முறையில் ஈடுபடவிட்டால், எப்படித்தான் தீர்ப்பை வழங்குவர். தண்டனை தாய்க்கா! அல்லது தந்தைக்கா! அல்லது இருவருக்குமா! குற்றத்துக்கு காரணம் பெற்றோரின் வளர்ப்பு என்ற வாதமே நகைப்புக்குரியது. குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு கணிசமாக உள்ளது என்ற போதும் கூட, குழந்தையின் மொத்த வளர்ச்சியையும் தீர்மானிப்பது அந்த குழந்தையைச் சுற்றியுள்ள சமூகம் தான். குழந்தைக்கு முன்னால் காட்டப்படும் அனைத்து சினிமாவும் (காட்டூன் உட்பட) வன்முறை கொண்டதே. ஆனால் குழந்தை வன்முறையில் ஈடுபடக் கூடாது என்ற அரசியலே நகைப்புக்குரிய ஒன்று மட்டுமல்ல, சமூகத்தையே ஏமாற்றுவதே.

இதேநேரம் லும்பன் தனம் கொண்ட அராஜக சமூகங்கள் பிரஞ்சு சமூகத்தில் இருக்கின்றன. அவர்கள் இது போன்ற வன்முறையில் ஈடுபடுவதில்லை. மாறாக அரசுக்கு எதிராக மட்டும் வன்முறையில் ஈடுபடுகின்றன. இங்கு திட்மிட்ட ஒழுங்குமுறை உண்டு. ஆனால் அதில் இருந்து இது முற்றிலும் மறுபட்டதுடன், உதிரி வன்முறைக் கும்பலாகவே உள்ளது. உண்மையில் இந்த சமூகத்தின் இனவெறிக் கொள்கைக்கு எதிராக பிரஞ்சு சமூகம் போராடத வரை, இனவாதிகள் விரும்பும் வன்முறையும் பொலிஸ் ஆட்சியுமே மேலும் வக்கிரமடையும்.

இது பற்றி புலம்பெயர் தமிழர்கள் எப்படி எதிh வினையாற்றுகின்றனர். நாங்கள் தமிழ் பாசிசத்தை ஆதாரிக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், பாசிசம் சொல்லும் ஒழுங்கும் கட்டுப்பாட்டை இயல்பில் ஆதாரிப்பவராக மாறிவிடுகின்றனர். பிரஞ்சு உள்துறை அமைச்சரை ஆதாரிக்கும் வகையில் இவர்கள் கூச்சலெழுப்புகின்றனர். சட்டம், ஒழுங்கு என்ற பிதற்றுகின்றனர். வேலையற்றோருக்கு வழங்கும் சமூக உதவியை எடுத்து, திண்டுவிட்டு தினவெடுத்து திரிவதாக வம்பளக்கின்றனர்.

உண்மையில் சமூக உதவி 18 வயதுக்கு கூடியவர்களுக்கு 26 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கிடையாது. அவர்களின் பெற்றொருக்கும் கூட இதற்காக எந்த சமூக உதவியும் கிடையாது. இங்க திண்டு தினவெடுத்தல் என்ற வார்த்தையை ஒரு இழிவான அடிப்படையில் பிதற்றுவதே. ஊரில் "பள்ளு பறைகள்'' திண்டு திணவெடுப்பதாக இழிவாடிய எமது உயர் சாதிய சமூகங்கள், இங்கு "கறுவல் அடை'' என்று இழிவாடுகின்றனர்.

சிலா கேட்கின்றனர் இரவு எட்டு மணிக்கு பிறகு வீதியில் இளைஞர்களுக்கு என்ன வேலை என்கின்றனர். தாம் மிகச் சிறந்த ஒழுக்கமுள்ளதும், சட்டத்துக்கு கட்டுப்பட்டவராகவும் கூட காட்டுகின்றனர். ஆனால் தனது குழந்தைகள் இதில் ஈடுபடுவதில்லை என்றும், ஈடுபடுபடப்போவதில்லை என்றும் நம்புகின்றனர். பணிவுள்ள கூலிகளாக இருப்பதே, தமது இனத்தின் பெருமை என்ற பீற்றுகின்றனர். இதைத் தான் இன்று வன்முறையில் ஈடுபடும் குழந்தைகளில் பெற்றோரும் கூட ஒரு காலத்தில் கூறியவர்கள்.

தமிழ் குழந்தைகளின் இன்றைய நிலையென்ன. அவர்கள் இன்னமும் பெற்றோரின் கட்டுபாட்டில் இருக்கக் கூடிய சிறிய வயதில் பெருமளவில் காணப்படுகின்றளர். ஆனால் அவர்கள் வன்முறையாளரக வளரக் கூடிய அனைத்துச் சூழலும் வீட்டில் காணப்படுகின்றது. உதாரணமாக தமிழ் பெற்றோரின் குழந்தைகள் படுக்கப்போகும் நேரமே, பெருமளவில் இரவு பன்னிரண்டு மணிதான். இந்தக் குழந்தைகள் வளர்ந்த பின்பு, இரவு பன்னிரண்டு மணி வரை பெற்றொருடன் (கிழவன் கிழவியுடன்) வீட்டில் இருக்குமா அல்லது வீதியில் நிற்குமா? நிச்சயமாக வீதியில் தான். வீட்டில் 12 மணிவரை வீட்டில் இருக்கக் கூடிய பொதுச் சூழல் சாத்தியமே இல்ல. மற்றொரு உதாரணம் பெருமளவில் குழந்தைகளை தாய்மார் காட்டுபடுத்த முடியாத நிலைக்குள் சென்று விடுகின்றனர். தமிழ் தாய்மாரின் தொனதொனப்பு குழந்தைகளை வீட்டைவிட்டு வீதியில் நிறுத்தும். இப்படி சாதாரணமாக பல விடையங்களைப் பார்க்கமுடியும். எமது குழந்தைகள் வன்முறையில் ஈடுபடக் கூடிய சூழல் வீட்டில் இருந்தே உருவாகின்றது.

இன்று தமிழ் குழந்தைகள் பலர் வீதிகளில் நிற்கின்றனர். சனத்தொகை வீகிதத்துடன் இதை ஒப்பிடின் வன்முறை கொண்ட தமிழ் குழுக்கள், சில குறித்த தமிழ் பிரதேசங்களில் காணப்படுகின்றது. கொலை, கொள்ளை, அடிதடி, வன்முறை என்று, தமிழரின் சில விசேட குணத்துடன், எதையும் எப்படியும் செய்யும் ஒரு நிலையில் கணப்படுகின்றனர். ஏன் இன்று இந்த வன்முறை பற்றி, முரண்பட்ட நேர் எதிரான அபிராயம் கூட குடும்பத்தில் காணப்படுகின்றது. பெற்றோர் பொலிஸ் பக்கம் நிற்க, சுதந்திரமான குழந்தைகள் இளைஞர்கள் பக்கம் நிற்கின்றனர்.

எமது சிந்தனை முறை துரோகி, தியாகி என்ற மட்டும் மதிப்பிட்டு பழகியதால், பொலிசை ஆதாரிப்பது அல்லது பொலிசாருக்கு எதிரான கும்பல் வன்முறையை ஆதாரிப்பது என்று எங்கும் ஒரு விதண்டவாதங்கள் அரங்கேறுகின்றன. இந்த வன்முறை கும்பலின் உருவாக்கம் என்பது, அந்த சமூகத்துக்கு மட்டுமான பொது விதியல்ல. இது எமக்கும் பொருந்தும். இதை எமது விதண்டவாதங்கள் தடுத்து நிறுத்திவிடாது. மாறாக இதன் உண்மை முகத்தை கண்டு, அதை நாம் உணர்ந்து எதிர்வினையாற்றும் போதுதான், இதில் இருந்து எமது குழந்தைகளையும் சமூகத்தையும் சரியாக வழிகாட்டமுடியும்.

Sunday, November 6, 2005

பாடல்கள், உரைகள் மற்றும் காட்சிகள்

வெவ்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒலி, ஒளி தொகுப்புகள் பாடல்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இது மனித இனம் மனிதனாக வாழவேண்டிய அவசியத்தை பாடல்கள், உரைகள் மற்றும் காட்சிகள் மூலமாக உணரவைக்கின்றது. மனித அவலங்களின் பன்முகத் தன்மையையும், அவற்றுக்கான சமூக காரண காரியங்களை விளக்கி அதை மாற்றக் கோருகின்றது.

இதை கேட்க http://tamilcircle.net/CASTE/caste.main.htm

Monday, October 31, 2005

நுகர்வு வெறியும்

இன்ப நுகர்ச்சியியும் நேர்விகிதத்தில்
ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்கின்றது.


ஏற்றுமதி பொருளாதாரம் அன்னிய மூலதனக் கொழுப்பை அடிப்படையாக கொண்டது. இலங்கையின் தேசிய உற்பத்திகள் வெள்ளையர்களும், பணக்காரர்களும் நுகர வேகமாக நாடு கடந்து செல்லுகின்றது. வெள்ளையர்கள் சுற்றச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் கழிப்பவை, இறக்குமதியாக நாட்டினுள் வருகின்றது. இதைவிட மிகை உற்பத்திகள், சர்வதேச சந்தையில் தேங்கிப் போனவை நாட்டின் உள் கொட்டப்படுகின்றது. அதையும் கடனாக தலையில் கட்டிவிட்டு, பின் வட்டி வசூலிப்பதும் கூட ஒரு இறக்குமதின் அடிப்படைக் கூறாகி உள்ளது. அடிப்படை தேவையற்றவையும், கழிவுகளையும் விளம்பரம் செய்து வாங்க வைக்கும் உளவியல் சிதைவை எற்படுத்தி, தேவை அற்றவைகளை தேவையானதாக்கி இறக்குமதி ஊக்குவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் கொழும்புத் துறைமுகம் பொருட்களை எற்றி இறக்குவது 2002 மற்றும் 2003 கிடையிலான முதல் 6 மாதத்தில் 13.5 சதவிகிதத்ததால் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 843 கோடி ரூபாவை ஈட்டியது. உண்மையில் ஏகாதிபத்தியத்தின் பிரதான உற்பத்தியும், பெரும் மூலதனம் கொண்டதும், சுற்றுச் சூழலலை நஞ்சாக்கும் வாகன உற்பத்தியின் அடிப்படைக் கழிவுகளை கொண்டு, மீள் அமைக்கப்பட்ட நிலையில் இலங்கையரின் தலையில் எப்படி கட்டிவிடுகின்றனர் எனப் பார்ப்போம்.


2003 முதல் 8 மாதத்தில் வாகன இறக்குமதி முந்தைய வருடத்தை விட 63 சதவீதத்தால அதிகரித்துள்ளது. 25000 வாகனங்களை யப்பான், பிரிட்டன், தென்கொரியா, இந்தியா, பிரான்ஸ், nஐர்மனி எற்றுமதி செய்துள்ளது. வாகனங்களை இறக்கி எற்றும் தொழில் 2003 முதல் எட்டு மாதத்தில் 200 சதவிதத்தால் அதிகரித்திருந்தது. 2002ம் ஆண்டு எடுத்தால் 113351 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டது. 2002 இல் நாட்டில் 18 92 367 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இவற்றில் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் 9 23 467 யாகும். பத்து பேருக்கு ஒரு வாகனம் நாட்டில் ஒடுகின்றது. இதில் அரைவாசி மோட்டார் சைக்கிள்கள். சுற்றுச்சூழலை நாசமாக்கி, வீதிகளை நச்சுப் புகையாக்கி உள்ளது. இதனடிப்படையில் பல புதிய நோய்களும், நோயாளிகளின்; எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இந்த வாகனங்களின் எரிபொருள் பூர்த்தி செய்ய எரிபொருள் இறக்குமதி பெருகிச் செல்லுகின்றது.
வாகனங்கள் ஒட வீதிகள் அகலப்படுத்துவதுடன், புதிய வீதிகள் கட்டப்படுகின்றன. ஏகாதிபத்திய கடன்கள் பெருமளவில் இதற்குள் திருப்பிவிடப்படுகின்றன. எகாதிபத்திய பொருளாதாரம் சார்ந்து தேசிய பொருளாதாரம் விபச்சார நிலைக்கு தரம் தாழ்ந்துவிட்டது. எற்றுமதி பொருளாதாரத்தின் அடிப்படை இதற்குள் இருக்கும் போது, நாட்டில் எழைகள் ஒரு பக்கம் அதிகரித்துச் செல்லுகின்றனர். இளைஞர் சமூகத்தின் பண்பாடுகள் இந்த வாகனப் பண்பாட்டைச் சுற்றிய கனவில் மிதக்க வைக்கின்றது.

இந்த வாகனக் கனவுடன் கூடிய ஆடம்பரத்தின் விளைவுகளில் விபத்தம் ஒன்றாகும் ஆசிய நாடுகளில் வீதி விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவோரில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது. 2001ஆம் ஆண்டில் இலங்கையில் 52ஆயிரத்து 57 வீதி விபத்துகள் எற்பட்டன. இதனால்; 2159 உயிரிழப்புகள் நடந்தன. 2002ஆம் ஆண்டில் 55031 வீதி விபத்துகள் நடந்தன. இதனால் 2160 உயிரிழந்தனர். கொழுப்பு தேசிய வைத்தியசாலையில் நாள்தோறும் 300 முதல் 350 வீதி விபத்து சார்ந்து மருத்துவ உதவி கோரிவருகின்றனர். 2002 இல் 150000 பேர் வந்ததுடன் 434 இறந்தனர். இலங்கையில் அதிக மரணத்தை எற்படுத்துவதில் வாகன விபத்தும் ஒன்றாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 7 பேர் வீதி விபத்துகள் பலிகொள்கின்றது. எகாதிபத்திய சந்தைக் கட்டமைப்பு இலங்கையில் குவிக்கும் கழிவுகள், ஆடம்பரப் பொருட்கள் மக்களை பல தளத்தில் மூலதனத்துக்காக பலியிடுவதையே உறுதி செய்கின்றது.

Sunday, October 30, 2005

ஏகாதிபத்திய தன்மை பெற்று

புலியெதிர்ப்பு அரசியலாக பரிணமிக்கும் பாரிஸ் இலக்கியச் சந்திப்பு


நவம்பர் 12-13 இல் பாரிசில் இலக்கியச் சந்திப்பாம். அங்கு அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வு சார்ந்தும், உலக மக்களின் வாழ்வு சார்ந்தும், தாம் படைத்த இலக்கியத்தையும் தமது அரசியலையும் பற்றி பேசப்போகின்றார்களாம். புலிக்கு மாற்றாக, புலி அல்லாத மக்கள் இலக்கியம் அரசியல் பற்றி பேசப்போகின்றார்களாம்;. எகாதிபத்தியத்தை எதிர்த்து, உலகமயமாதலை எதிர்த்து, பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து மக்கள் இலக்கியம், மக்கள் அரசியல் பற்றி பேசப் போகின்றார்களாம். நம்புங்கள் இந்த அரசியல் மோசடியை.

இந்த மோசடிக்காரர்களின் கடந்தகால அரசியல் வரலாறோ, புலம்பெயர் நாட்டில் எப்போதும் அற்பத்தனமானதாகவே இருந்துள்ளது. புலிகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் இவர்கள் மக்களின் முதுகில் எறி நிற்கவே எப்போதும் பிரயத்தனம் செய்கின்றனர். இலக்கிய சீராழிவுவாதிகளாகவே வாழ்ந்து சீராழிந்துபோன நிலையில், இன்று இதன் ஒரு பகுதி சர்வதேச ஆக்கிரமிப்புக்கு இசைவாகவே புலியெதிர்ப்பு அரசியல் வாதிகளாகவே புனர்ஜென்மம் எடுத்து நிற்கின்றனர்.

புலியைப் போல் புலியெதிர்ப்பு கும்பல் மக்கள் நலன்களென எதையும் மக்களுக்காக முன்வைப்பதில்லை. புலியின் மக்கள் விரோத நடத்தைகளை மட்டும் பொறுக்கியெடுத்து எதிர்க்கும் இவர்கள், அதை மக்கள் நலன் சார்ந்தாக பசப்புகின்றனர். இதை மக்களிடம் எடுத்துச் சென்று, அரசியல் ரீதியாக அவர்கள் தமது சொந்த அதிகாரத்துக்காக போராட அழைப்பதில்லை. மாறாக ஏகாதிபத்திய தயவில் புலியெதிர்ப்பு, இதுவே இவர்களின் அரசியல் குறிக்கோலாகியுள்ளது. இதை எடுத்தியம்பவே இங்கு கூடுகின்றனர்.

இவர்களின் சந்திப்புகள் முதல் அரசியல் மற்றும் இலக்கிய முன்னெடுப்புகள் அனைத்தும், மக்களுக்கானதாக மக்களைச் சார்ந்து நின்று முன்னெடுக்காதவரை, அவை நிச்சயமாக பிற்போகனவையே. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வுடன் தொடர்புடையதாக அல்லாத ஒரு நிலையில், இவை உள்ளடக்க ரீதியாக பிற்போக்கு அரசியல் சக்திகளின் கால் பாதத்தையே துடைத்துவிட விரும்பும் முயற்சிகளே. புலியெதிhப்பு அணி என்ன செய்கின்றது என்றால் பேரினவாதத்தையும், எகாதிபத்தியத்தையும் மென்மையாக விமர்சித்தபடி, புலி அழிப்புக்கு அவர்களை அழைக்கின்றனர்.

அதாவது புலிகளை விட சிங்கள பேரினவாத்தையும், ஏகாதிபத்தியத்தை மென்மையானதாக காட்டுவதே புலியெதிர்ப்பின் மைய அரசியலாகும்.
புலியை பிரதான எதிரியாகவும், ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாதத்தை மென்மையான எதிரியாகவும், அதேநேரம் நண்பனாக இருப்பதாக கட்டுவதே இவர்களின் அரசிலாகும்;. இதையே இச் சந்திப்பில் செய்யவுள்ளனர்.

அதாவது தன்னார்வக் குழுக்களின் அரசியல் செயல்பாட்டை ஒத்த ஒரு அரசியல் மோசடியைச் செய்கின்றனர். மிக நெருக்கமாக நெருங்கி நின்ற புலி அரசியலுக்கும் உங்களுக்கும் அரசியல் ரீதியாக என்ன வேறுபாடுகள் உண்டு என்று கேட்டால், கண்ணை உருட்டி முழிக்கின்றனர். உடனே புலிக்கொலை, ஜனநாயகமின்மை, சிறுவர்களை படைக்குச் சேர்த்தல் இவை தான் முரண்பாடு என்பர். இதை விட்டால் வேறு முரண்பாடுகள் இவர்களுக்கு இடையில் கிடையாது. இந்த கும்பல் அதிகாரத்தைப் பெற்றால் இதைத் தான் செய்வார்கள். உதாரணமாக புலியை அழித்தல் என்ற இவர்களின் கோட்பாடு, இவை அனைத்தையும் அப்படியே செய்யும். இதைவிட்டால் வேறு வழி எதுவும் இவர்களிடம் இல்லை. முன்பு இதைத்தான் புலியைப் போல் செய்தவர்கள் தான். இன்று செத்த சாரைப் பாம்பாகவே கிடந்தவர்கள், உயிர்த்தெழ துடிக்கின்றனர். புலிகளின் மனிதவிரோத நடத்தைகளே, இவர்களின் உயிர்துடிப்புள்ள அரசியலிலும் உள்ளது. புலியின் அரசியல் தான், புலியெதிர்ப்பு அரசியலும் கூட. மறுத்து மற்றாக உங்கள் அரசிiலை வைக்க முடியுமா? என்றால், விழிபிதுங்க எதுவும் கிடையவே கிடையாது என்கின்றனர். ஆனால் ஏகாதிபத்திய தலையீட்டை லட்சியமாக கொண்டு, தமது கருத்துகளையே பிதுக்கிவிடுகின்றனர். மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக மட்டும், கருத்து எதுவும் சொல்ல முடியதவராக உள்ளனர்.

தமிழ்மக்களின் பெயரில், அவர்களின் மீட்பாளர்கள் என்று கூறிக் கொள்ளும் இந்த கும்பல்களின் மோசடிகள் பலவிதமானவை. இதில் இலக்கியச் சந்திப்பும் ஒன்று. கடந்த 15 வருடமாகவே இந்த இலக்கியச் சந்திப்பு, தமிழ் மக்களுக்காக எதைப் படைத்துள்ளது என்று நேர்மையாக ஒருவன் எழுப்பும் கேள்வி, அதன் உண்மை முகத்தைக் காணவே போதுமானது. மக்கள் நலன் என்ற அடிப்படையில் ஒருவன் நேர்மையாக நின்று இதைக் கேட்பனாகில், அவனுக்கு வேறு எந்த அரசியல் அடிப்படையும் புரிந்துகொள்ள தேவையற்றது. ஒரு தனிமனிதனின் சொந்த நேர்மையே போதுமானது, இந்த இலக்கிய சந்திப்பின் கபடத்தையும் அதன் நாடகத் தன்மையையும் புரிந்துகொள்ள.

இந்த இலக்கிய ஜம்பவான்கள் யாரும் யாரையும் கட்டுப்படுத்தா இலக்கியச் சந்திப்பு என்று தம்மைத்தாமே கூறிக் கொண்டாலும், இதற்குள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிழல் தலைமை ஒன்று செயல்பட்டது. உண்மையில் துதிபாடிகளும், பிரமுகர்களும், தன்னார்வக் குழுக்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளவர்களும், புலி எதிர்ப்புக் கும்பலுடன் கூடி நிற்பவர்களின் ஆதிக்கம் தான், இதனை வழிநடத்துகின்றது. இதற்கு பூதக் கண்ணடி தேவையில்லை.

இங்கு நீங்கள் வலைபோட்டு தேடினலும், யாரும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி நிற்பதை இனங்காணவே முடியாது. மக்கள் நலன் சார்ந்து மூச்சு எழுவதைக் கூட, இவர்கள் இச் சந்திப்பில் அனுமதிப்பதில்லை. மக்கள் நலனை கோரிய பலரை, சந்திப்பு தனிமைப்படுத்தி துரத்தியடித்தது. இதுவே இலக்கியச் சந்திப்பின் சுதந்திரமும், ஜனநாயகம். புலிக்கு எப்படி கொலை வெறிகொண்ட ஒரு அரசியல் உண்டோ, அப்படி இதற்கு ஒரு அரசியல் உள்ளது. அது புலியைப் போல் மக்கள் நலன் என்பதை எட்டி மிதித்து, அதை சுடுகாட்டுக்கு அனுப்புவதுதான். முதலில் இவர்கள் செய்தெல்லாம் மக்களின் நலனைக்கோரிய 1987 க்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கனவரின் அரசியல் குறிக்கோலை, அரசியல் ரீதியாக புதைத்தது தான். பின் அப்படிப்பட்ட நபர்கள் வரலாற்றில் மக்களுக்காக வாழ்ந்து மடிந்த வரலாற்றையே, இருட்டடிப்பு செய்தது தான். மக்கள் விரோத கொலையாளிக்கு நிகரான ஒரு செயலையே, மீண்டும் இந்த இலக்கிய அரசியல் ஜம்பவான்கள் செய்து முடித்தனர். பின் தம்மைத் தாம் புனிதமானவராக காட்டி, சமூகத்தையே தம் பின்னால் அழைக்கின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் நீடித்த சமூகத் துயரங்கள், இந்த தேசிய போராட்டத்துடன் அக்கபங்கமாகவே சோடி சேர்ந்து நிற்கின்றது. சோடி சேர்ந்த போராட்டம் படிப்படியாக அக்கபக்கமாக வந்த மக்களின் வாழ்வை அழித்து, அதில் இன்று குதிராடடம் போடுகின்றது. மனித துயாரங்கள் எங்கும் எதிலும் புரையோடி நிற்கின்றது. இந்த நிலையில் தான், இந்த இலக்கிய அரசியல் ஜம்பவான்கள் கூடிக்கூத்தாடி திண்டு குடிக்கின்றனர். அந்த மனிதத்தையிட்டு எள்ளவும் கூட சமூக அக்கறையற்று முதுகுசொறிந்து பினாற்துவதே, இந்த சந்திபுக்களில் அன்றாடம் நடக்கின்றது.

புலிகளுடன் முரண்பட்டவர்கள் என்ற அடையளத்துடன் வந்து கூத்தாடிய இந்தக் கும்பலின் ஒரு பகுதி, இன்று புலியுடன் சங்கமித்து நிற்கின்றது. மற்றொரு பகுதி சாதாரண மனிதனை விடவும் மிகமோசமான பிழைப்பவாத சமூக விரோதிகளாகவே மாறிவிட்டனர். எஞ்சியோர் முதுகுசொறிவோரும், துதிபாடிகளுமாவர். இவர்கள் கூடி கூத்தாடுவதையே இலக்கியச் சந்திப்பாக்கினர். இன்று இதற்குள் புலியெதிர்ப்பு அணியினரும், புதிய புலியெதிர்ப்பு அணியினரும் புகுந்து, இதைக் கைப்பெற்றும் போராட்டம் தொடங்கியுள்ளது. இதுவே லண்டன் பெண்கள் சந்திப்பிலும் நடந்தது.
வழமையான இலக்கிய சந்திப்பையொட்டி பெண்களுக்கும், புலியெதிர்ப்பு பெண்களின் தலையிட்டுக்கும் இடையிலான போராட்டமே, பெண்கள் சந்திப்பு பற்றிய அண்மைய சர்ச்சையாகும். இதுவே சென்ற இலக்கியச் சந்திப்புக்கு பின் நடந்தது. தற்போது ஏகாதிபத்திய தலையீட்டுகள் மூலம், புலிக்கு மாற்றாக அதிகாரத்தில் உக்காரவிரும்பும் புலியெதிர்ப்பு கும்பல் கூடும் ஒரு கூட்டமாகவே பாரிஸ் இலக்கிய சந்திப்பு, அரசியல் சந்திப்பு மாறிவிட்டது. இது சென்ற கூட்டம் முதலே புது அவதாரம் பெற்று நிற்கின்றது. முன்கூட்டியே கருத்துரைக்க கேட்டவர்களுக்கு, இம்முறை இச்சந்திப்பு கருத்துக்கூறும் உரிமையையே மறுத்துரைத்துள்ளது. மேடையை அவர்கள் பயன்படுத்திவிடுவார்கள் என்று கூறியே, இந்த மறுப்புக்கு சுயவிளக்கம் வழங்கிநிற்கின்றது. இவர்கள் கூறும் ஜனநாயகம், சுதந்திரம் முதல் அனைத்தும் போலித்தனமானதே என்பதையே மீண்டும் இது அம்பலமாகி நிற்கின்றது.

மறுபக்கத்தில் கடந்த சந்திப்பு முதல் இரண்டுபட்ட குழுவாக பிளவுற்று வருகின்றது. பாரிஸ்; சந்திப்பு அதை மேலும் ஆழமாக பிளக்கும். கடந்த பதினைந்து வருடத்தில் புலியல்லாத தரப்பு, சர்வதேச தலையீட்டுக்கான சூழலுடன் தனக்குள் பிளவுறுகின்றது. தீவிர புலியெதிர்ப்பாகவும், மற்றையது புலி எதிர்ப்பு பேசாத சமூக சீராழிவு இலக்கிய கும்பலாக பிளவுற்று வருகின்றது. இதுவே இணையத்தளங்களில் கூட, ஒரு விவாவதத்தை கூட இதன் எல்லைக்குள் தான் புலம்பின.

இவர்களுக்கு இடையிலான இந்தப் பிளவை, பாரிஸ் இலக்கியச் சந்திப்பு தெளிவாக உருவாக்கும்;. புலிகளை எதிர்க்கும் புலியெதிர்ப்பு அணி, இம்முறை பலம் பொருந்திய தாக்குதல் திசையில் பாரிஸ் இலக்கியச் சந்திப்பையே இரண்டாக்குவர். இலக்கியச் சந்திப்பு மீதான அதிகாரத்தை பெறும் நோக்குடன், திட்டமிட்ட சதிகளுடன் அவர்கள் கூடுகின்னறனர். இதற்காக பல புதிய புலியெதிhப்பு அணியினர் களத்தில் இறங்கியுள்ளனர். பல புதிய புலியெதிர்ப்பு விதண்டவாத அரசியல் பேசுபவர்கள் களத்தில் உள்ளனர். எங்கும் பொய்யும் புரட்டும் இன்றைய மொழியாகிவிட்டது. செய்திகள் முதல் அனைத்தும் புனையப்படுகின்றது. கொலைகளைச் செய்துவிட்டு மற்றவன் மீது போடப்படுகின்றது. யாரும் அதை நம்பத் தயாரற்ற நேரத்திலும் கூட புனையப்படுகின்றது. புனைவை புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அணியினரும் கூட புனைகின்றனர். நம்பகத்தன்மை, நேர்மை என எதுவும் பொதுவான சமூக சிந்தனையோட்டத்தில் நலமடிக்கப்பட்டு விட்டது.

இந்த இலக்கியச் சந்திப்பும் இதைத்தான் செய்யவுள்ளது. மக்களை அரசியலில் முட்டாளாக்கி ஏகாதிபத்தியத்துக்கு சோரம் போகும் புலியெதிர்ப்பு அரசியலையே, இந்த இலக்கியச் சந்திப்பு நிலைநாட்ட முனைப்புக் கொண்டுள்ளது. புலிக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களால் எற்பட்டு வரும் தீர்மானகரமான முடிவுகளை ஒட்டி, இந்த இலக்கியச் சந்திப்பும் அதன் பின்னால் சரிந்து செல்வதை யாரும் தடுக்கமுடியாது. மக்கள் விரோத அரசியல் தளத்தில் நிற்கும் புலிகள், புலியல்லாத புலியெதிர்ப்பு அணியினர் கொண்டுள்ள சர்வதேச மக்கள் விரோத நிலைப்பாடு, அதிகாரம் பெற்ற ஒன்றாக மாறிவருகின்றது.

எம்முன்னுள்ள பணி என்ன?

இந்த மக்கள் விரோத புலியெதிர்ப்பு மற்றும் இலக்கிய சீராழிவு சந்திப்புகளைப் பகிஸ்கரிப்போம்!

மக்களின் சமூக பொருளாதார அரசியலை முன்வைத்து இதை அம்பலப்படுத்தி கிளர்ச்சி செய்வோம்!

இதை அம்பலப்படுத்தி இந்த சந்திப்புக்கு வெளியிலும், ஏன் சந்திப்பிலும் கூட கிளர்ச்சி செய்வதே, மக்கள் நலனை விரும்பும் ஒவ்வொருவர் முன்ளுள்ள நேர்மையான அரசியல் மற்றும் இலக்கிய பணியாகும்!

Friday, October 28, 2005

ஜனாதிபதி தேர்தலும்

இனப்பிரச்சனையும்

இனப்பிரச்சனையே மீண்டும் மீண்டும் தேர்தல் சூதாட்டத்தில், மிகமுக்கியமான ஒரு அரசியல் கூறாகவிட்டது. இத்தேர்தல் கூட இனப்பிரச்சனை மீதான பேரினவாதத்தின் காய் நகர்த்தலாகவே அமைந்துள்ளது. சிறுபான்மை இனங்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறையே, தேசிய பிரச்சனைக்கு வித்திட்டது. இதை இன்று பலரும் மறந்து போகின்றனர். புலிகளே இனப்பிரச்சனை என்று காட்ட முனைகின்றனர். இந்த நிலையை சர்வதேச சமூகம் வரை எடுத்துச் சென்றுவிட்டனர். இதில் புலிகளின் பங்கும் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு பேரினவாதிகளின் இதற்கு பொறுப்பாக இருந்துள்ளது.

இருந்தபோதும் இன்றுவரை பேரினவாதிகளின் பேரினவாத ஒடுக்குமுறை தொடரும் அதேநேரம், அதில் இருந்து சிறுபான்மை இனங்கள் மீள்வதற்கான ஒரு பாதை இதுவரை இந்த சமூக அமைப்பில் உருவாகிவிடவில்லை. இது புலிகளின் இராணுவ நோக்கிலும் சரி, பேச்சு வார்த்தையிலும் சரி, இதற்கான ஒரு விடிவு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுரண்டும் வார்க்கத்தின் நலனையே பாதுகாக்கும் தேர்தல் என்ற கூத்து ஆடப்படுகின்றது. இது இரண்டு பிரதான ஆளும் கட்சியான சிங்களப் பேரினவாதிகளிடையே, தமிழ்மக்களின் இனப் பிரச்சனையை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக, அரசியல் ரீதியாகவே ஆழமாக பிளவுறவைத்துள்ளது.

இன்றைய உலகில் நடைபெறும் எந்தத் தேர்தல்களும், மக்களின் நலனுக்காக நடத்தப்படுவையல்ல. மாறாக சுரண்டு வர்க்கத்தின் நலனுக்காக, அதை அண்டிப் பிழைப்போருக்கு இடையிலான சுதந்திரமான போட்டியாகவே நடத்தப்படுகின்றது. சுரண்டும் வர்க்கம் மேலும் மேலும் மக்களைச் சுரண்ட அனுமதிக்கும் உள்ளடகத்தில் இருந்தே, தேர்தல்கள் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. உலகில் இந்த சமூக அமைப்பில் நடைபெறும் எந்தத் தேர்தலும், மக்களின் வாழ்வியல் உரிமைக்காக எதையும் தேர்தல் மூலம் பெற்றுத் தருவதில்லை. மாறாக சில சீர்திருத்தங்கள் மூலம், சுரண்டும் வர்க்கத்தின் இருப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சில சலுகைகளை வழங்கி அதை மீளவும் பறிக்கும் தந்திரத்தையே சகல சுதந்திரமான ஜனநாயக ஆட்சி மற்றங்களும் செய்கின்றன. மக்கள் ஜனநாயக தோதல் மூலம், தமது வாழ்வியல் சுதந்திரங்களை இழப்பதற்கான வாக்களிக்கும் முறையே இன்றைய ஜனநாயகத் தேர்தலாகும்.

இந்த நிலையில் இலங்கையில் ஜனதிபதி தேர்தல், இன்றைய ஆளும் வர்க்கத்தின் (சந்திரிக்காவின்) விருப்பமின்றியே நடத்தப்படுகின்றது. இந்தநிலையில் இந்த ஜனதிபதி தேர்தல் ஏகாதிபத்தியங்களின் ஆழமான தலையீடு இன்றி நடத்தப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், யார் வேட்பளர்கள் என்று உறுதியான நிலையில், பேரினவாதம் தனது சொந்த முகத்துடன் சிறுபான்மை இனங்களை பகடைக்காயாக முன்வைத்து களத்தில் இறங்கியுள்ளது. இதில் எந்த வேட்பளரும் விதிவிலக்கல்ல. தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலுடனும், புலிகளுக்கு எதிரான அரசியலுடனும் கூடிய இரண்டு அம்சங்களையும் அடிப்படையாக கொண்டு தேர்தல் வியூகங்கள் அமைந்துள்ளன.

பிரதான கட்சியான யூ.என்.பியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தத்தம் பக்கத்துக்கு அணிகளை இணக்க வகையில் பேரங்களுடன் தேர்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டன. சிறுபான்மை இனங்கள் தம்தரப்பில் பேரம் பேசி, தமது சொந்த தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் சிறுபான்மை இனங்களின் அரசியல் நலன்களையே பேரப்பொருளாக முனவைத்து கூட்டுச் சேர்ந்து நிற்கின்றன. இதில் புலிகள் முதல் ஜே.வி.பி ஈறாக, மக்கள் விரோத தேர்தல் சூதாட்டத்தில் நடிகர்களாகவே களத்தில் நிற்கின்றனர்.

அரசியல் கட்சிகளின் இடையிலான அரசியல் கூட்டை தீர்மானிப்பதே உலகமயமாதல் தான்

இந்த தேர்தலில் சிறப்பாக பேரினவாதம் தனக்குள் இரண்டு பிரிவாக பிளந்து நிற்கின்றது. வலதுசாரிகளான யூ.என்.பி ஒருபுறமும், போலி இடதுசாரிகளும் கடும் போக்கு வலதுசாரி பேரினவாதிகளும் மற்றொரு அணியாக களத்தில் அணிவகுத்து நிற்கின்றனர். இந்த இணைப்பின் புள்ளியாக புலிகள் இருக்கின்றனர். போலி இடதுசாரிகளாகவே தனது வரலாறு முழுக்க நடித்த சிறிலங்கா சுதந்திரகட்சியின் தலைமையிலான அணி, வலதுசாரியன படுபிற்போக்கான பேரினவாதிகளுடனும், ஜே.வி.பி என்ற தீவிர இடது இனவாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்த போது எற்பட்ட மற்றங்கள் இலங்கை அரசியலுக்கு புதியது.

இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கூட பிளந்துவிடும் அளவுக்கு, அதன் அடிப்படையான சர்வதேச கொள்கைகளையே தகர்த்து விடுமளவுக்கு நிலைமை முற்றியுள்ளது. இந்த அரசியல் பிளவு ஆழமானதே. உண்மையில் என்ன நடக்கின்றது.

உண்மையில் உலகமயமாதல் என்ற கொள்கை வழியில் இலங்கையில் நடக்கும் சமூக அசைவுகள், இலங்கை அரசியலிலும் அரசியல் கட்சிகளிலும் அதிர்வை உருவாக்கின்றது. ஏகாதிபத்தியம் தனது தலைமையில் தனது நலனில் நின்று வழிகாட்டும் உலகமயமாதல் கொள்கை, இலங்கையில் மோதலை உடன் நிறுத்தப்பட்டு ஒரு சமாதானம் காணப்படவேண்டும் என்பதில் தெளிவானதும் உறுதியான நிலையைக் கொண்டுள்ளது. இந்த அம்சத்தின் அடிப்படையில் தான் இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளும் தத்தம் பங்குக்கு இயகுவதால், பிளவுகளும் கூட்டுகளும் உருவாகின்றன.
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற விடையத்தில் பேரினவாதம் இதுவரை எந்த ஒரு தீர்வுக்கான முன்மொழிவையும், புலிகளுடன் சேர்ந்தும் சரி அல்லது தனித்தும் சரி முன்வைக்கவில்லை. அதேநேரம் யுத்தம் இல்லாத ஒரு சூழலும், புலிகளின் ஒரு தலைப்பட்சமான முன்முயற்சி கொண்ட ஒரு நிழல் யுத்தமும் நடக்கின்றது. இந்த நிலையிலும் கூட, ஒரு யுத்தமற்ற சூழல் நிலவுதற்கான மர்மான சூழல் ஆச்சரியமானவையல்ல. நான்கு வருடங்களாக நீடிக்கும் அமைதி மற்றும் யுத்த நிறுத்தின் பின்னால் உண்மையில் புலிகளும் சரி, பேரினவாத அரசும் சரி உண்மையான ஈடுபாட்டுடன் ஈடுபடவில்லை. ஆனால் அதை உண்மையான ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தி வைத்திருப்பதே உலகமயமாதல் சமூக அமைப்புத்தான். ஆனால் இந்த உண்மை வெளியில் இனம் காணமுடியாத வகையில் சூக்குமாகவே காணப்படுகின்றது. தாம் தப்பி பிழைக்கவே புலிகள் வலிந்து ஒரு தலைபட்சமாக சண்டையை தொடங்க விரும்பும் முன்முயற்சிகளும், தொடர் கொலைகளும் கூட ஒரு யுத்தமாக மாறிவிடவில்லை, மாற்றிவிடவில்லை. புலிகள் விரும்புவது போல் உருவாகாத யுத்த சூழல், அவர்களின் அரசியல் தோல்வியாகவே தொடருகின்றது.

யுத்ததுக்கு எதிரான கடுமையான சர்வதேச (உலகமயமாதல்) அழுத்தத்தை புலிக்கும், பேரினவாதிகளுக்கு உலகமயமாதலுக்கு தலைமை தாங்கும் ஏகாதிபத்தியம் தெளிவாக கொடுக்கின்றது. அதன் பிரதிநிதியாகவே நோர்வையுள்ளது. இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கவேமுடியாது. ஜே.வி.பி முதல் சிங்கள உறுமய வரை நோர்வையை புலி சார்பாக கூறும் கூற்றின் பின்னால் உள்ள பேரினவாத யுத்தவெறி, உண்மையில் யுத்தம் தொடங்காது நிர்பந்திக்கும் நோர்வையின் அனுகுமுறைக்கே எதிரானதே. நோர்வை ஏகாதிபத்தியத்தின் ஏக பிரதிநிதியாகவே, தனது ஏகாதிபத்திய கடமையைச் செய்கின்றது. வாரிவழங்கும் அரசியல் பொருளாதார சலுகைகள் முதல் அனைத்தையும் வாரி வழங்குவது என்பது, போராட்டத்தின் நோக்கத்தை உடைக்கவும், சிதைக்கவும் கையாளும் அரசியல் உத்தி அவ்வளவே. இந்த சலுகைகளுக்கு புலிகள் பலியாகியுள்ளனர். பேரினவாதத்தை நடைமுறைப்படுத்தி அரசியல் பிழைப்பை நடத்தவேண்டிய நிலையில் உள்ளவர்களின் கண்ணுக்கே, இவைகள் தெரிவதில்லை. இதில் தான் புலி எதிர்பணியினரும் அடங்குவர்.

புலிகள் தொடர்ந்தும் செய்யும் கொலைகள், சிறுவர்களை தமது கூலிப்பட்டளத்துக்காக கடத்திச் செல்லல், பணத்தை கப்பமாகவும் பலகாரமாகவும் வாங்கி சூறையாடல் போன்ற, புலிகள் பல விதமான மனிதவிரோத செயலையிட்டு, ஜே.வி.பிக்கும் சரி சிங்கள உறுமயாவுக்கும் சரி எந்தவிதமான சமூக அக்கறையும் கிடையாது. உண்மையில் இவர்களுக்கு சமூக அக்கறை என எதுவும் கிடையாது. உதாரணமாக சுனாமி நிதியை மோசடி செய்த இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சாவுடன் கூடி நின்று மக்களை அடிமைப்படுத்துவதற்கு, எதையும் செய்ய தயாரகவே உள்ளனர்.
இதற்காக மனிதனை பிளந்து அரசியல் பேசும் இந்தக் கும்பல், அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட அங்கிகரிப்பதில்லை. ஏன் ஜே.வி.பி ஆயுதம் எந்திய காலங்களில், அவர்களின் மனிதயுரிமை மீறல்கள் புலிக்கு நிகரானதே. இங்கு எதற்கும் பூதக் கண்ணடி தேவையில்லை.

தேசிய இனப்பிரச்சனைக்கு ஏன் தீர்வு காண முனைகின்றது யூ.என்.பி

தேர்தல் கூட்டுகளின் பின்னால் உள்ள அரசியல் உள்ளக்கம் என்ன எனப் பார்ப்போம். யூ.என்.பி உலகமயமாதல் என்ற அமைப்பில், அவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு கட்சியாகவே உள்ளது. ஏகாதிபத்தியங்களால் தாம் விரும்பி எற்கப்படும் ஒரு ஆளும் வர்க்க கட்சியாகவே யூ.என்.பி உள்ளது. இந்த அரசியல் கட்சியின் தொடர்ச்சியான வலதுசாரி அரசியலும், மூலதனத்துக்கு அதற்கும் இடையிலான உறவு அசைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்தநிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கதம்பமான பொருளாதார கொள்கைக்கும் இடையில், உலகமயமாதல் யூ.என்.பியை அதிகம் விரும்புகின்றது. யூ.என்.பி உலகமயமாதல் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் அழுல் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு கட்சி. இந்த நிலையில் தான், தேசிய இனப்பிரச்சனையிலும் கூட யூ.என்.பி தீர்வுக்கான ஒரு நெம்புகோலைக் கொண்டுள்ளது. இது எப்படி எனப் பார்ப்போம்.

பாரம்பரியமாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து, நாட்டை பிளவுபடுத்தி இலகுவாக சமூகங்களை சுரண்டவும் இதே யூ.என்.பி தான் காரணமாக இருந்தது. ஆனால் இதே கட்சி தான் பிளவை அகற்றி, ஒன்றுபடுத்தும் அதிக சாதகமான கூறுகளை இன்று கொண்டுள்ளது. எமது இவ்வாய்வு சார்ந்த இக் கருத்து, வலதுசாரியான தமிழ் பொது கண்ணோட்டத்தில் இருந்து முற்றிலும் மறுபட்டது. இது நடக்கும் மற்றம் சார்ந்த இயங்கியல் கூறில் உருவானவையல்ல. மாறாக சுயநல அரசியல் நோக்கில் இருந்து குருட்டுத்தனமான நம்பிக்கை சார்ந்து அங்குமிங்கும் ஊசாலாட்டத்துடன் கூடி உருவாகின்றது.

தமிழ் மக்களுக்கு எதிரானதும், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரானதுமான பல இனவாத நடவடிக்கைகளை முன்னின்று இலங்கையில் அழுல்படுத்தியது இந்த யூ.என்.பி தான். மூலதனத்தின் சுரண்டல் நலன்களைப் பேன சிறுபான்மை இனங்களைப் பிளந்து, அதில் நக்கிவாழும் ஒரு சமூகப் பிரிவையே உருவாக்கியதும், இதே யூ.என்.பி தான். எப்போதும் யூ.என்.பி சிறுபான்மை மக்களை ஒடுக்கியபடி, தனக்கு பின்னால் சிறுபான்மை பிரிவின் ஒரு பகுதியை பேரம் பேசும் உத்தியூடாக தொடர்ச்சியாகவே தக்கவைத்துக் கொண்டது. இது வாக்கங்களின் நலன்கள் என்ற நோக்கில் முரணவையல்ல.

உண்மையில் அனைத்து சுரண்டு வர்க்கங்களின் நெருக்கடியற்ற சூறையாடலுக்கும், அதை அண்டி வாழ்வோரின் நலனுக்காவுமே செய்தன. இதற்கு வெளியில் எந்த நோக்கமும் இவர்களுக்கு இருக்கவில்லை. இதே யூ.என்.பி இன்று அதே நோக்கத்துடன் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவிரும்புகின்றது. இது ஒன்றும் அதிசயமானவையல்ல.
இனப்பிரச்சனைக்கான இன்றைய தீர்வும் கூட, அடிப்படையில் சுரண்டும் வர்க்கத்தின் நலன்கள் என்ற உள்ளடகத்தில் அவசியமானதாகவும், முன் நிபந்தனையாகியுள்ளது. இந்த நிலையில் இனப்பிரச்சனைக்கு இந்த சமூக அமைப்பில் தீர்வு காணவிரும்பும் எவர் முன்பும், யூ.என்.பி இருப்பது ஆச்சரியமானவையல்ல. யூ.என்.பி வேறு, உலகமயமாதல் வேறல்ல.
உலகமயமாதல் எதை விரும்புகின்தோ, அதை யூ.என்.பி செய்து முடிக்கும்.
உலகமயமாதல் இலங்கையில் சுரண்டுவதற்கு அமைதி தேவை என்பதில் உறுதியாக இருப்பதால், அதை யூ.என்.பியே நடைமுறைப்படுத்தும் இயல்பான கோட்பாட்டு நடைமுறையைக் கொண்டுள்ளது.

யூ.என்.பி பாரம்பரியமாகவே சுரண்டு வர்க்கத்துடன் கொண்டிருந்த ஜக்கியம், இயல்பாகவே சிறுபான்மை சுரண்டு வர்க்கத்துடன் கொண்டுள்ள உறவும் வர்க்க ரீதியாக மிகவும் நெருக்கமானவை. எவ்வளவு தான் இன அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறையை யூ.என்.பி செய்ய போதும் கூட, சிறுபான்மை பிரிவின் சுரண்டும் வர்க்கம் யூ.என்.பியுடன் கொண்டிருந்த உறவு வர்க்க ரீதியாக இருந்தமையால் மிக நெருக்கமானதே. சிறுபான்மை இனங்களின் மேலான அரசியல் செல்வாக்கை இந்த சுரண்டும் வாக்கமே கொண்டிருந்தது. இது இயல்பாகவே சிறுபான்மை இனங்களை, யூ.என்.பியின் பால் எப்போதும் அனுதபத்துடன் கூடிய வர்க்க ஆதாரவை வழங்கி வந்துள்ளது. இந்த வகையிலும் இந்த சமூக அமைப்பில் இனப்பிரச்சனை தீர்வில், யூ.என்.பி உடன் நிகழும் வாய்ப்பே, நிகழ்தன்மை கூடியவையாக உள்ளது.

இங்கு தமிழ்மக்கள் மட்டுமின்றி மலையக முஸ்லீம் மக்களை தலைமைதாங்கும் சுரண்டும் வர்க்கம், யூ.என்.பியுடன் கொண்டுள்ள உறவு நகமும் சதையும் போன்றது. இக்கட்சிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமது சேர்ந்த சுயநல வர்க்க அரசியலுக்காக பல சந்தர்ப்பங்களின் கூட்டுச் சோந்தபோதும் கூட, எப்போதும் யூ.என்.பியுடன் தான் தனது ஆழமான வர்க்கப் பிணைப்பைக் கொண்டிருந்தன. சிறுபான்மை இனத்தில் அனைத்து சுரண்டும் வாக்க பிரதிநிதிகளும் யூ.என்.பியின் பால் கொண்டுள்ள உறவு தாய் மகன் உறவாகவே உள்ளது. சிறுபான்மை இனத்துக்கு யூ.என்.பி தான் அதிகளவு கெடுதியான முடிவுகளை எடுத்திருந்த போதும் கூட, வாக்க ரீதியான பினைப்பு அதன் தலைவர்களை யூ.என்.பி பின்னால் தான் எப்போதும் அணிவகுத்து வைத்திருந்தது.

புலிகளின் நலன்களைப் பொறுத்த வரையில், அவர்களின் நலன்கள் சமூகத்தை உயர்ந்தபட்சம் சுரண்டுவது தான். தீவிர வலதுசாரிகளான புலிகளுக்கும், கூட்டணியின் அரசியல் வாரிசாகவே உருவான புலிகளுக்கும், யூ.என்.பி உடன் உள்ள பிணைப்பு வர்க்கரீதியானது. இது அரசியல் ரீதியாக பிளக்க முடியாத ஒன்று. இதில் முரணற்றதும், கொள்கை ரீதியான ஐக்கியம் உள்ளது.

யூ.என்.பி ஆட்சிகாலத்தில் மிக மோசமான இன ஒடுக்குமுறைகளையும், புலி ஒழிப்பு யுத்தங்களையும் எதிர்கொண்ட போதும் கூட, புலிக்கும் யூ.என்.பி உள்ள உறவுக்கு பின்னால் ஒரு அதியுயர் சமூக பினைப்பு காணப்படுகின்றது. அது வர்க்க ரீதியானது. தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு, யூ.என்.பி உடன் மிக இலகுவானதும் மிக சாத்தியப்பாடன ஒன்றாகவுள்ளது. உலகமயமாதல் விரும்பும் அமைதியை, யூ.என்.பி உடாக சாத்தியமாக்க கூடிய ஒன்றாக இருப்பதால், இத் தேர்தல் முடிவுகள் அதை நோக்கியே நகருகின்றது.

சில கட்சிகளின் சொந்த இருப்புகே இனவாத அரசியலை அடிப்படையாகவுள்ளது.

உலகமயமாதல் சமூக அமைப்பு அரசியல் தீர்வு மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுனையும் நிலையில், அதை எதிர்ப்பதன் மூலம் சில கட்சிகளின் எதிர்காலமே அடங்கி உள்ளது. இந்த வகையில் யூ.என்.பி புலிகளுடன் உடன்பாடு காணமுனையும் உலகமயமாதல் தீர்வை எதிர்ப்பதன் மூலம் தான், சில கட்சிகளின் எதிர்கால அரசியல் வாழ்வே உள்ளது. இதானல் தொடரும் அமைதி சமாதானம் மூலமான தீர்வுத் திட்டத்தையும், புலிகளுடன் இணங்க முற்படும் எந்த முடிவையும் எதிர்ப்பதே இவர்களின் இன்றைய சந்தர்ப்பவாத அரசியலாகிவிட்டது. இதுவே சிறிலங்கா சுதந்திரகட்சிக்குள்ளான ஒரு அரசியல் பிளவாகியுள்ளது. இப்பிளவு உலகமயமாதல் நோக்கை ஆதாரிக்கும் சந்திரிக்கா தலைமையிலான அணிக்கும், அதை எதிர்க்கும் பிரிவுக்கும் இடையிலானதாகவும் உள்ளது. இதுவே ஆழமாகி வெடிக்கும் போது, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவு யூ.என்.பி உடன் ஒரு கூட்டரசங்கத்தை அமைக்கும் வகையில், நிலைமை மாறிச் செல்லுகின்றது. உண்மையில் இனப்பிரச்சனையில் யூ.என்.பியும் புலிகளும் தமக்கு இடையில் ஒரு உடன்பாட்டின் மூலம் காணும் தீர்வு, சிங்கள உறுமய, ஜே.வி;.பி முதல் சுதந்திரக்கட்சியின் மகிந்த பிரிவின் அரசியல் எதிர்காலமே சூனியமமாகிவிடும். இந்த அரசியல் உண்மைக்கான வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்பமே, யூ.என்.பி இருந்த அதிகார முரண்பாடுகளால் பிரிந்து வந்த பண்டராநாயக்கவால் உருவாக்கப்பட்டது. உருவாக்கும் போதே அந்த பழைய கட்சியின் அரசியல் கொள்கைகளை விமர்சித்தல்ல, யூ.என்.பியின் இனவாத சுரண்டல் அரசியலுடன் தான் புதுக்கட்சியை ஆரம்பித்து அதற்கு பூச்சூட்டவே விரும்பினார். பிரிந்து வந்தவர் பூச் சூட்டி அரசியலில் பிழைத்துக் கொள்ள, (பிரபாவிடமிருந்து பிரிந்து வந்த கருணா தான் பிழைத்துக் கொள்ள சமூக முரண்பாடாக இருந்த பிரதேசவாதத்தை முன்வைத்தது போல்), மக்களையே எமாற்றி கவர வேண்டியிருந்தது. இந்த வகையில் யூ.என்.பியினால் அதிர்த்தியுற்ற சமூகப் பிரிவுகளை இனம் கண்டு, அனுகும் அரசியல் உத்தி கையாளாப்பட்டது. சிங்கள் எழை விவசாயிகளையும், நிலப்;பிரபுத்துவ பண்பாடின் பிரதிநிதியாக செயல்பட்ட அடிப்படைவாத பிழைப்புவாத பிக்குகளின் மதத்தையும் வலிந்து ஆரத்தளுவியபடி தான், பண்டரநாயக்காவின் அரசியல் கட்சி பரிணமித்தது. யூ.என்.பியோ சுரண்டும் வர்க்கத்தை ஆதாரித்து நின்ற நிலையில், பண்டரநாயக்க அதனால் பாதிக்கப்பட்ட அடிமட்ட சிங்கள பிரிவுகளை அணிதிரட்ட முடிந்தது. இதற்கு ஏற்ப துரோக கம்யூனிட் கட்சிகளின் உதவி கிடைத்தபோதே, அதிகரத்தைப் பிடிக்க முடிந்தது. இப்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெயாரளவில் இடதுசாரி தன்மை கொண்டதாக, இந்த சமூக அமைப்பில் தன்னைக் காட்டிக் கொள்ளமுடிந்தது.

யூ.என்.பி 1948-1949 களின் மலையக மக்களுக்கு எதிராக பிரஜாவுரிமைச் சட்டம் கொண்ட வந்த போது அதன் பிரதான நோக்கம் இனரீதியானதல்ல. வர்க்க ரீதியான நோக்கமே முதன்மை பெற்று இருந்தது. மலையகத்தில் அதிக செல்வாக்கு பெற்று இருந்த இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை கட்டுப்படுத்தும் நோக்கமே முதன்மை பெற்றிருந்தது. ஆனால் பின்னால் கொண்டு வரப்பட்ட இனவாதச் சட்டங்களோ, போட்டிக் கட்சியை முடக்கும் வகையில், இனவாதம் முதன்மை பெற்ற ஒன்றாக இருந்தது. இந்த இனவாதம் மூலம் வர்க்க நோக்கில் சமூகங்களை பிளந்து சுரண்டும் நோக்கமே இதன் மையக்கூறாக இருந்தது. இங்கு மாறிமாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதம் என்பது, அதன் குறிப்பான மைய அரசியலாக இருந்தது. இது போன்றே சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவம் செய்த கட்சிகளும் கூட இந்த இனவாத நோக்கில் இருந்தே தம்மையும், தமது தனிப்பட்ட வர்க்க நலனையும் பேனிக் கொண்டனர். இதில் ஜே.வி.பி முதல் புலிகள் வரை எந்தவித்திலும் விதிவிலக்கல்ல.

யூ.என்.பியின் இனங்களை பிரித்தாளும் தந்திரதினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற திணறின. இந்த நிலையில் தனது தாய் கட்சி வழியில் ஆட்சியை கைப்பற்ற விரும்பிய பண்டரநாயக்க, பேரினவாதத்தையும் நிலப்பிரபுத்துவ மதவாதத்தையும் படிப்படியாக உள்வாங்கி ஒரு பேரினவாதக் கட்சியாகவே அதிகாரத்தை பிடிக்கமுடிந்தது. யூ.என்.பிக்கும் சிறலங்கா சுதந்திரகட்சிக்கும் சுரண்ட வர்க்கத்தின் நலன்களை பேனுவதில் எந்த கருத்த முரண்பாடுகளும் இருக்கவில்லை. அதை அழுல்படுத்தும் விதத்தில் தான் நெகிழ்சி போக்கை அடிப்படையாக கொண்ட வேறுபாட்டைக் கையாண்டனர்.

இலங்கையில் சுரண்டும் வர்க்கத்தின் முற்றுமுழுதான நலன்களை உறுதிசெய்யும் வகையில் பேரினவாத சித்தாந்தமே இரண்டு கட்சியினதும் ஆன்மாவாகியது. இதனுடன் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் படிப்படியாக இணைந்து கொண்டன. இந்த நிலையில் இன்று இனப் பிரச்சனையில் யூ.என்.பிக்கு நிகரகவே தமிழர் பிரச்சனையை இந்த சமூக அமைப்பில் தீர்க்க சிறிலங்கா சுதந்திரகட்சி ஒரு பகுதி எடுத்த முடிவை, மற்றொரு பகுதியால் எதிர்க்கப்பட்டது, எதிர்க்கப்படுகின்றது.

இனப் பிரச்சனையின் தீவிரமான இறுதியாக எம்முன்னுள்ள 14 வருடம் சந்திரிக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியே அதிகாரத்தில் அமர்ந்து இருந்தது. இதில் இறுதி நான்கு வருடமும் அமைதியைக் கொண்ட காலமாகும். சந்திரிக்காவின் காலத்தில் தான் உலகில் தீவிரமான பல மற்றங்களும் நடந்தேறின. உலகமயமாதல் முதல் செப்டெம்பர் 11 வரையிலான உலகை மற்;றியமைக்கக் கூடிய பல மற்றங்களை உலகம் சந்தித்தது. இது இலங்கையிலும்; பிரதிபலித்தது. உலகமயமாதல் என்ற உலகம் தளுவிய புதிய அடக்குமுறை இயந்திரம், இலங்கை சமூகத்தின் அனைத்துக் கூறையும் அடக்கியொடுக்கும் வகையில் புகுந்து கொண்டது. ஆனால் எந்த அரசியல் கட்சியும் சரி, ஜே.வி.பி முதல் புலிகள் வரை அதை அரசியல் பொருளாதார ரீதியில் துளியளவு கூட எதிர்க்கவில்லை. அதற்கு இசைவான கொள்கைகளைக் கொண்ட நிலையில், இவர்களின் சொந்த அரசியல் இருத்தலுக்கே இனவாத அரசியல் அவசியமாகிவிட்டது. வெளிப்படையாகவே தம்மை காட்டிக் கொள்ளும் சுரண்டும் வர்க்கம் சார்ந்த கட்சிகளுக்கு இனவாதம் அவசிமில்லாததாகவிட்டது. இதை அகற்றுவது அவர்களுக்கு அவசியமாகிவிட்டது.

இந்த நிலையில் இலங்கையில் உலகமயமாதல் விரும்பும் அமைதி சமதானம் என்ற சுரண்டலுக்குரிய அடிப்படையான நிலைப்பாட்டை, நிறைவு செய்வது உலகமயமாதலை முன்னெடுத்துச் சென்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் கடமையாக இருந்தது. சந்திரிக்காவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் இதை நிறைவு செய்யும் போராட்டத்தில், சொந்தக் கட்சிக்குள்ளும் கூட்டுக் கட்சிக்குள்ளும் கூட ஒருமித்த பலம் வாய்ந்த சக்தியாக அதனால் ஒருநாளுமே இருக்கமுடியவில்லை. இது இன்றைய உலகமயமாதல் விரும்பும் அமைதி சமதானத்துக்கு தடையானதாக மாறிவிட்டது. உலகமயமாதல் விரும்பும் சுரண்டலுக்கு எற்ற அமைதி மற்றும் சமதானத்தை அழுல்படுத்த முனைந்த போது கட்சியினுள்; இருந்த இனவாதிகள் எற்படுத்திய தடையும், விட்டுக் கொடுப்பும், படிப்படியாகவே அந்தப் பிரிவை பலப்படுத்தியது. இதுவே இன்று மகிந்த சந்திரிக்க மோதலாகவுள்ளது. இதை ஜே.வி.பி திட்மிட்ட அரசியல் சதிகள் மூலம் பலப்படுத்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியையே பிளந்து வருகின்றனது. இத தான் அவர்களின் புரட்சி சித்தாந்தமும் நடைமுறையும்.
மறுபக்கம் புலிகள் ஜனநாயக விரோத செயல்பாடுகள் அமைதி சமாதனத்தின் போது படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு சமாதானம் நோக்கிய நகர்வு என்பது அவர்களுக்கு தற்கொலைக்கு ஒப்பானதாகவே இருந்தது, இருக்கின்றது. மக்களை எப்போதும் துப்பாக்கி குண்டுகளால் சுட்டு அடக்கியாண்டவர்கள் என்ற வகையில், சமாதானம் மூலம் மக்களை அடக்கியாள முடியாத என்ற நிலையில் சமதானத்துக்கு முட்டுக்கட்டை இட்டனர், இடுகின்றனர். சமதானம் என்பது அவர்களைப் பொறுத்த வரையில், தமது சொந்த அதிகரத்துவம் தகர்ந்து போகும் அபாயத்தையே எப்போதும் பறைசாற்றியது, பறைசாற்றி வருகின்றது. இதானல் வீச்சானதும் விரிவானதுமான ஜனநாயக விரோதப் போக்கை அங்கிகரிக்கும் உள்ளடகத்தில் மட்டும் தான், சமாதனம் பற்றி உளறமுடிகின்றது. மக்களை துப்பாக்கி முனையில் மட்டுமே கட்டுப்படுத்திய புலிகளால் அதைவிடுத்து ஒரு நாளும் உயிர்வாழமடியாது. மக்களை மிரட்டிப் பணியவைக்க, கொலைகள் அவர்களின் உயிர் வாழும் அரசியலுக்கு அவசியமாகி விடுகின்றது. இதனால் துப்பாக்கியும் கொலையும் அல்லாத சமாதான சூழல் எதற்கும் இணங்கிப் போக மறுக்கும் புலியின் இயல்பு, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் போக்குடன் மிகவும் ஒன்றுபட்டு நின்றது. அமைதி சமாதானம் என்ற நடைமுறை சார்ந்த போக்கு, இரண்டு பக்க அரசியல் நிலையிலும் எதிரான உள்ளடகத்தில் காணப்படுகின்றது. அமைதி சமாதானம் என்பது புலிகள் மற்றும் ஜே.வி.பி உள்ளடக்கிய கூட்டு கும்பலுக்கு அவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இந்த நிலைமை, ஏகாதிபத்திய தலையீட்டை நடத்த முடியாத ஒரு நிலையும், அதேநேரம் புலிகளை அடிபணியவைக்க முடியாத வகையில் நிலைமை காணப்படுகின்றது. இதற்கு அரசின் உள்முரண்பாடுகளே கராணமாகும். இன்றைய நிலையில் ஏகாதிபத்திய தலையீடு குறைந்தபட்சம் அரசின் ஒரு தலைப்பட்சமான ஒரு தீர்வுடன் சாத்தியமானதாகவே உள்ளது. ஏகாதிபத்திய தலையீட்டை அவர்களே நியாயப்படுத்தம் வகையில் புலிகள் மனிதவிரோத குற்றங்கள் பெருகிவருகின்றன.

இந்த நிலையில் சுதந்திரக்கட்சி இனப்பிரச்சனையை தீர்க்கும் தகமையை இழந்து நிற்கின்றது. இந்த சமூக அமைப்பில் கூட ஒரு சமாதானம் என்பதை, அவர்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. உண்மையில் சந்திரிக்கா தலைமையிலான சுதந்திரக் கட்சியின் இறுதி நான்கு ஆண்டில் எற்பட்ட மற்றங்களைக் கூட சந்திரிக்காவின் அரசு உருவாக்கவில்லை. யூ.என்.பி பராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு நிலைiயில் தான் சமதானம் அமைதி நாடகம் தொடங்கப்பட்டது. சர்வதேச தலையீட்டுடன் தொடங்கிய இந்த இழுபறியான அமைதி சமாதான என்ற நாடகம், கடுமையான பல நிலைமைகள் உடாகவே நகர்ந்தது. யூ.என்.பி அரசை இனப்பிரச்சனைக்கான தீர்வு அடிப்படையில் முரண்பட்ட சந்திரிக்கா, ஜனநாயக விரோதமாக அந்த அரசைக் கலைத்த போது மீண்டும் தீர்வுத் திட்டம் சொந்த முரண்பாட்டால் ஆழமான நெருக்கடிக்குள்ளாகியது. இதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஜே.வி.பியும் கொண்ட உறவு இனப்பிரச்சனையை மேலும் சிக்களுக்குளக்கியது. பராளுமன்றத்தில் ஜே.வி.பி இன்றி ஆட்சியை தக்கவைக்கவே முடியாது என்ற நிலையில், புலிகளை விட ஜே.வி.பி யுடான உடன்பாடு முதன்மையானதாக மாறியது. இழுபறியான நிலைக்குள் சமதானமும் அமைதியும் சென்றது. புலிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு தமது ஜனநாயக விரோதச் செயல்களை அதிகப்படுத்தினர்.

பேரினவாதமே ஜே.வி.பியின் அரசியலாகிப் போனது

மறுபக்கம் ஜே.வி.பி அரசியல் என்பது இனப்பிரச்சனையை விட்டால் மாற்று அரசியல் இல்லை என்ற நிலைக்குள் மேலும் ஆழமாகவே சீராழிந்தனர். ஜே.வி.பியே பேரினவாதத்தின் தீவிர செயல்பாட்டாளராகினர். உலகமயமாதல் என்ற சுரண்டல் சமூக அமைப்பில், ஒரு இடதுசாரி அரசியல் என்பது ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதே. அதை ஜே.வி.பி முற்றாகவே மறுதலிக்கின்றது. மாறாக சதிகள் மூலம் பராளுமன்ற கதிரைகள் மூலம் ஆட்சிக்கு வரத்துடிக்கும் இவர்கள், பராளுமன்ற சாக்கடைக்கு எற்ற மக்கள் விரோத அரசியலில் மூழ்கத்தொடங்கினர்.
முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி நடைபெறாத நாடுகளில், பராளுமன்றம் உட்பட அனைத்து ஆட்சி அமைப்புகளும் ஜனநாயக விரோதமானவையே. முதலாளித்துவத்தின் முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு முதலாளித்துவ பராளுமன்றமின்றி, குறைந்தபட்ச ஜனநாயகம் என்பது அறவே சாத்திமில்லை. நிலப்பிரபுத்துவ காட்டுமிரண்டி பண்பாட்டையும், அடக்குமுறையையும் அடிப்படையாக கொண்டதும், மேல் இருந்து திணிக்கபட்ட ஒரு பராளுமன்றம் ஜனநாயக பூர்வமானவையல்ல. ஆனால் ஜே.வி.பி அதை ஜனநாயக பூர்வமானதாக கூறிக் கொண்டு, உழைக்கு மக்களின் அடிமை முதுகின் மேல் எறிநிற்கவே துடிக்கின்றனர். இதற்கு எற்ற ஒரு அரசியல் இன்றி, பேரினவாதத்தையே தனது அரசியலாக வரிந்து கொண்டுள்ளனர்.

இதன் மூலம் ஜே.வி.பி பராளுமன்றத்தின் ஆட்சியைக் கைப்பற்றும் சக்கடை அரசியலில் இறங்கியது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்த மறுத்து, பராளுமன்ற கதிரைக்கு ஊடாக ஆட்சியை பிடிக்கும் தனது அரசியல் வழியையே தனது கொள்கையாக வரிந்து கொண்டனர். இந்த நிலையில் தான் கொண்டிருந்த இடதுசாரிய பாரம்பரிய கொள்கைகள் ஒவ்வொன்றாக கைவிட்டு வருகின்றது. மக்களை தமது பின்னால் புரட்சி பேசி தக்கவைக்கவும், பராளுமன்றத்தில் அதிக கதிரைகளை பிடித்து பேரம்பேசவும் அல்லது ஆட்சியைப் பிடிக்கவும் மக்களின் அற்ப உணர்வுகளில் வடிகால் தேடுவது அவசியமாகின்றது. இந்த வகையில் தான் இன்றைய ஜே.வி.பியின் அரசியல் பரிணாமம் பெறுகின்றது.

வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட நிலையில், அதில் அம்பலமாகாத வகையில் புரட்சிகர சொல் அலங்கார வார்த்தைகளை உச்சரித்தபடி குறுகிய இனவாத உணர்வுடன் களத்தில் இறங்குகின்றனர். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையாக உள்ள ஜனநாயகக் கோரிக்கையைக் கூட மறுக்கும் ஜே.வி.பி, ஒன்றுபட்ட வாழ்வில் இதை தீர்க்கமுடியும் என்கின்றனர். சுத்த அயோக்கியத்தனமானதும், எமாற்றுவதில் கைதேர்ந்த மூடிச்சுமாற்றி அரசியலாகும்;. மனிதன் மனிதனாக மட்டும் உள்ள நிலையில், யாரும் இதை தீர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த பராளுமன்ற கதிரை அரசியல் ஊடாக, மனிதனை மனிதனாக உருவாக்கவே முடியாது. தனிப்பட்ட அந்த கதிரை பேர்வழி கூட, ஒரு மனிதனாக இருப்பதில்லை. அவன் ஒரு மோசடிக் காரணாகவே இருக்கின்றான். மனிதன் மனிதானாக இல்லாத நிலையில் தான், சமூக முரண்பாடுகள் உருவாகின்றன.

சமூக முரண்பாட்டின் உள்ளடகத்தை விரிவாக்கி விளக்குவதும், அதை நடைமுறையில் மாற்றியமைக்க முன்வைக்கப்படுவதே மார்க்சியம். மனிதன் மனிதனாக மாறும் நிலையில், மார்க்சியம் கூட முழுமையாக அதற்குரிய விளக்கமும் அற்றவிடும். அதற்கு பின் மார்க்சியத்துக்கு எந்த ஆயுளும் கிடையாது. சமூக முரண்பாடுகளை விளக்கும் மார்க்சியம், அதை மாற்றியமைக்கும் போராட்டத்தையே வழிகாட்டுகின்றது.

இந்த வகையில்; தான் தேசிய இனப்பிரச்சனையும்;. தேசிய இனப்பிரச்சனை இனங்களுக்கு இடையிலான மனித முரண்பாடுகளில் ஒன்று. இதை ஜனநாயக பூர்வமாக தீர்க்க முன்வராத அரசியல், அடிப்படையில் இந்த முரண்பாட்டை மேலும் ஆழமாக்கின்றது. இந்த அரசியல் அப்பட்டமான இனவாதமாகும். இனவாதத்தை இதற்கு வெளியில் விளக்கவேமுடியாது. சாதியம், ஆணபாதிக்கம் எப்படி உள்ளதொ அப்படித் தான் இனவாமும்;. இதை ஜனநாயக பூர்வமான வழிகளில் தீர்க்கமறுப்பது சுத்த அயோக்கியத்தனமானதும், அந்த ஒடுக்கமுறைக்கு துணை போவதுமாகும்.
இங்கு இந்த முரண்பட்டின் பின்னால் புலிகள் உயிர் வாழ்ந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இங்கு இந்த முரண்பாடு நிலவுகின்றது. புலிகள் இல்லாத ஒரு நிலையில் தொடங்கிய இன முரண்பாடுகள், ஜனநாயக பூர்வமாக தீர்க்க மறுத்தால் புலிகள் அழிந்த பின்பும் கூட தொடரும்.

ஜனநாயக பூர்வமான அரசியல் தீர்வே வர்க்கப் போராட்டத்தின் அரசியல் உள்ளடக்கமாகும். வர்க்கப் போராட்டத்தையே கைவிட்ட ஜே.வி.பி, தமிழ் மக்களின் பிரச்சனையை ஜனநாயக பூர்வமாக தீர்ப்பதற்கான தடைக்கல்லாகவே மாறிவிட்டனர். ஜே.வி.பினா இதை மட்டுமின்றி வர்க்கப் போராட்டத்தின் அனைத்து சமூகக் கூறுகளையும் கைவிட்ட நிலையில், சொல்லில் புரட்சி பேசியபடி, இடதிலிருந்து வலது கோடியில் அணிவகுத்து நிற்கின்றனர்.

வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் நடத்தாது, உலகமயமாதலை எதிர்ப்பாதாகவும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகவும் வாய்யளவில் புரட்சிகர அலங்கார வார்த்தைகளை பேசுகின்றனர். மார்க்கிய ஆசான்களின் படங்களையும், வர்க்க போராட்ட கொடிகளையும் ஆட்டிய படி, மக்கள் முன் கவர்ச்சியாகவே தம்மை காட்சிப்படுத்துகின்றனர். இதையே தான் உலகில் வர்க்கப் போராட்டத்தை கைவி;ட அனைத்து போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்தன, செய்கின்றன. அந்த பாதையில் தான் ஜே.வி.பி மக்களின் முதுகில் எறிநின்று பவணி வருகின்றனர்.

வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்தில் தேசிய பிரச்சனையை தீர்க்க உள்ள சரியான ஜனநாயக உள்ளடகத்தை நிராகரிக்கின்றது ஜே.வி.பி. இந்நிலையில் இலங்கையில் பிரதான பிரச்சனையாக உள்ள இனப்பிரச்சனையில் வேறு என்ன முடிவைத் தான், மார்க்சியத்துக்கு புறம்பாக எடுக்க முடியும்;. அது அப்பட்டமான இனவாதம் தான். வர்க்கமற்ற சமுதாயத்தில் தேசிய இனங்கள் என்ற சமூகப் பிளவு இருக்க முடியாத என்ற உண்மையை, வர்க்க உள்ள சமுதாயத்துக்கு காட்டி ஜனநாயகக் கோரிக்கையையே மறுக்கும் அராஜாகவாத நிலைக்கு தமது அரசியலை இட்டுக்கட்;டி திரித்துக் காட்டுகின்றனர். இது கூட இனவாதம் தான். இதில் இருந்து கொண்டுதான், பேரினவாதத்துடன் இலகுவான ஒரு அரசியல் புள்ளில் சந்திக்கும் நிலைப்பாட்டை கொண்டு ஐக்கியத்துக்கு அவர்களால் வரமுடிகின்றது.
தமிழ் மக்களுக்கு ஜனநாயக பிரச்சனை எதுவும் கிடையாது என்ற கடைகோடியில் நின்று உரைக்கின்றனர். அதை வெறும் புலிப் பிரச்சனையாகவும், புலியால் தான் தமிழ் மக்களுக்கு பிரச்சனையாகவும் காட்ட முனைகின்றனர். சொந்த பேரினவாத நடத்தைகளும், ஒடுக்குமுறையுமே அனைத்துக்குமான காரணம் என்பதை மூடிமறைக்க முனைகின்றனர். பேரினவாத அரசுடன் கூடி நிற்கும் தமது இனவாதக் கொள்கையை ஆதாரித்து, அந்த பேரினவாத அரசில் பங்கேற்கின்றனர். தீவிர வலதுசாரியான அடிப்படைவாத மதவாதிகளான சிங்கள உறுமயவுடன் கூடி நின்ற ஒன்றாகவே குரைக்கின்றனர். இலகுவாகவே பேரினவாதம் இவர்களை இணைப்பதுடன், இனப்பிரச்சனையில் கொள்கை வேறுபாடுகள் இன்றி இணையமுடிகின்றது. இதையே தான் தமிழ் துரோக குழுக்களுடனும் அவர்களால் செய்ய முடிகின்றது.

இலங்கையில் பிரதான முரண்பாடக உள்ள இனப்பிரச்சனையில் இனவாதிகளுக்கு இடையில் எற்பட்ட ஒன்றுபட்ட ஐக்கியம், அதிகாரத்துக்கு வரும் போது இனவொடுக்குமுறையாக தீவிரமாகும். ஜனநாயகபூர்வமாக இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கும் அரசியல், சொந்த குறுகிய அரசியல் நலன் சார்ந்து உலகமயமாதல் முன்வைக்கும் தீர்வையும் கூட மறுதலிக்கின்றது. மாறாக புலிகளை அழித்தல் என்ற யுத்த கோசமே இதன் பின் உள்ளது. இதற்கு உலகமயமாதலின் நிதியை பயன்படுத்த ஒரு கணம் கூட பின்நிற்பதில்லை. சமதானபூர்வமாக தேசிய இனப்பிரச்சனையை தீர்க்க முன்வராத ஒரு நிலையில், யுத்தமே மாற்றுத் தீர்வாகின்றது. இங்கும் புலிகளின் மக்கள் விரோத இராணுவவாதம் தீர்வுக்கு பதில், இழுபறியான யுத்தமே திணிக்கப்படும். இதில் லாபம் அடைபவர்கள் யார்? மக்களா! அல்லது மக்களின் முதுகில் சவாரி செய்ய நினைப்பவர்களா?

புலிகளுடான யுத்தம் இதுவே ஜே.வி.பி மற்றும் சிங்கள உறுமயாவின் மையக் கோசம். இது புலியெதிர்ப்பு குழுக்களின் கோசம் கூட. இதே கோசம் தான் புலிக்கும் உள்ளது. என்னென்றால் யுத்தமற்ற அரசியல் சூழல், இவர்கள் அனைவரையும் அரசியல் ரீதியாக ஒழித்துவிடும். புலிகள் இருக்கும் வரைதான் ஜே.வி.பி, சிங்கள உறுமயாவும் அரசியல் ரீதியாக உயிர்வாழமுடியும் என்ற நிலையில் அவர்களின் அரசியலே இனவாதமாகிவிட்டது. அதை போல் புலியெதிர்ப்பு கோஸ்டிகளின் நிலையும்;. அதனால் தான் இவர்கள் அனைவரும் மகிந்த தலைமையிலான யுத்தத்தை நோக்கி நகரும் கும்பலுக்கு ஆதாரவு வழங்குகின்றனர்.

புலிகள் யுத்தத்தை விரும்பிய போதும், புலிகளைப் பொறுத்தவரையில் யுத்தத்தை நோக்கிச் செல்லமுடியாத வகையில் சர்வதேச அழுத்தம் கடுமையாக உள்ளது. சர்வதேச தலையீடுக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரகவே ஏகாதிபத்தியத்திடம் உள்ளது. இதுவே புலிகளின் யுத்த மோகத்தை தடுக்கின்றது. புலித் தலைவர்கள் யுத்தத்தை நோக்கிய அறைகூவல்களை எல்லாம் சின்னபின்னமாக்கின்றது. ஏகாதிபத்தியத்தை பகைத்து முன்னெடுப்பு என்பது, வாய் சவாடல்களைத் தவிர புலிகளால் முடியாத ஒன்றாகவே உள்ளது. ஏகாதிபத்திய விசுவாசிகளான புலிகள், வாலைச் சுருட்டி ஏகாதிபத்தியத்தை நக்கவே விரும்புகின்றனர். ஏஜமானிடம் தம்மை வளர்ப்பு நாயாக அங்கீகரிக்கவே வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த நிலையில் புலிகளின் தலைவர்களின் குழந்தைகள் மேற்கில் சொகுசாக வாழும் சிறப்புச் சலுகைகளைக் கூட, புலியை தடை செய்த நாடுகள் எற்படுத்தியுள்ளன. ஒரு சமுதாயத்தை பழ் கிணற்றில் தள்ளியபடி, புலிகளின் தலைவர்களின் குழந்தைகளை அவர்கள் எதை தமது சொர்க்கமாக கருதகின்றரோ அந்த ஏகாதிபத்தியத்தில் கல்விகற்று நக்க அனுப்புகின்றனர். உயர்கல்வி பெறும் வகையிலான சூழல் கூட, மேற்கை மீற முடியாத வகையில் சலுகைக்குள் உட்பட்டுத்திவிட்டது. இதை புலிப் பெற்றோர்கள் மீறும் போது, அதன் முதல் எதிரிகளாக குழந்தைக்கு பெற்றோர்களே இருப்பர்.

இந்த நிலையில் புலிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே இன்று தொடர்ந்து தக்கவைத்துள்ள சொந்த கூலிப்பட்டளத்தை எமாற்றவும், அவர்களை இராணுவ ரீதியாக தொடர்ந்தம் தக்கவைக்கும் வகையில் யுத்தம் பற்றி பிரச்சாரங்கள் முதல் சிறிய தாக்குதல்களும் ஆங்காகே புலிகள் நடத்துகின்றனர். ஆனால் யுத்தத்தை நோக்கி நகரமுடியவில்லை. இந்த நிலையில் தான் பேரினவாதிகளும் கூட யுத்தத்தை நோக்கி நகர முடியாதுள்ளனர்.

உலகமயமாதல் எதை விரும்புகின்றதோ, அதை நோக்கி இவர்களின் சோரம் போன அரசியல் கொள்கைகள் இருப்தால் யுத்தம் இவர்கள் யாரலும் தொடங்க முடியாதுள்ளது. அமைதி சமதானம் இதுவே ஏகாதிபத்தியத்தின் இலங்கைக்கான இன்றைய மையக் கோசம்;. இதனால் இன்றைய தேர்தலில் யூ.என்;.பி வெற்றி என்ற மையக்கோசத்துடன் உலகமயமாதல் செயல்படுகின்றது. இந்த வெற்றி உலகமயமாதலின் சுரண்டும் நலனுக்கு எற்ற சமாதானத்தை உருவாக்கும் ஒரு சூழல் காணப்படுகின்றது. புலிகள் விரும்பவிட்டாலும் கூட, இந்த சமதானம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படும். அந்த சமதானத்தை அன்னிய சக்திகள் தமது கையில் எடுக்கும் சூழல் மேலும் நெருக்கமாகி வருகின்றது. அதையே ரணில் சுயாட்சி என்ற அறிவித்த படி அரங்கில் தெளிவாக முன்வருகின்றார்.

மகிந்த தலைமையில் யுத்த கோசத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜே.வி.பியும், சிங்கள உறுமயாவுக்கு உலகமயமாதலின் ஆதாரவு கிடையாது. சுரண்டப்படும் மக்களின்; அரசியல் ஆதாரவும் சரி, அதேநேரம் அரசியல் வழியென எதுவும் கிடையது. ஜே.வி.பி, சிங்கள உறுமயாவின் அரசியல் புலிகளை எதிர்ப்பதாக மட்டும் உள்ளது. புலிகள் இல்லை என்றால், இவர்களின் அரசியல் எதிர்காலமே கிடையாது. அந்தளவுக்கு அரசியல் ரீதியாக புலியெதிர்ப்பு அரசியலாக இவர்களின் செயல்பாடுகள் குறுகிவிட்டது. வர்க்கப் போராட்டம், உலகமயதால் எதிர்ப்பு போராட்டம் என எதையும் இவர்கள் நடத்துவதில்லை.
தீவிர யப்பானிய விசுவாசிகளான ஜே.வி.பி, தமது அரசியல் கொள்கை விளக்கங்களை யாப்பான் மொழியில் வெளியிடுகின்றனர். ஆனால் தமிழில் அதை வெளியிடுவதில்லை. அந்தளவுக்கு இவர்களின் வர்க்க பாசமும், பேரிவாதமும் காணப்படுகின்றது. சிங்களவனின் வாக்கை எப்படி பெறுவது என்பதே இவர்களின் மைய பிரச்சனையாகிவிட்டது. எப்படி சதிகள் மூலம் இந்த ஜனநாயகத்தின் ஒட்டைகள் மூலம் அதிக ஆசனங்களைப் பெறுவது என்பதும், எப்படி சதிகள் மூலம் கட்சிகளுக்குள் புகுந்து விளையாடுவது என்று சி.ஐ.ஏ பாணி அரசியலைத்தான் ஜே.வி.பி நடத்துகின்றனர். இதைத் தான் புலிகளும் நடத்துகின்றனர். அண்ணனும் தம்பியாகவே மக்களின் முதுகில் எறிநிற்கின்றனர். மக்களின் அடிமைத்தனத்தின் மேல் நின்று கொக்கரிக்க விரும்புகின்றனர் அவ்வளவே.