தமிழ் அரங்கம்

Sunday, November 29, 2009

ஆந்திர முதல்வர் நாற்காலிச் சண்டை: திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் சவால்!

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின. ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.
ஜெகன்மோகனின் ஆதரவாளர்களோ 120 எம்.எல்.ஏ.க்களிடமும், 40 எம்.பி.க்களிடமும் அவரை முதல்வராக்க விரும்புவதாகக் கையெழுத்து வாங்கியும், சோனியாகாந்திக்குத் தந்தியடித்தும் மேலிடத்தை மிரட்டினர்.

அம்மாநில அமைச்சர்கள், ரோசய்யா கூட்டிய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். சில அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினார்கள். ஆந்திராவில் நோய் வாய்ப்பட்டும், வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொண்டும் இறந்து போன 420 பேர்கள், ராஜசேகர ரெட்டியின் சாவினால் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து சுற்றுக்கு விட்டனர். இதன் மூலம் மக்களிடையே......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: