தமிழ் அரங்கம்

Thursday, December 3, 2009

போலீசு அதிகாரி கடத்தல் விவகாரம்: பயங்கரவாதிகள் யார்?

மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தின் ஜங்கல் மகால் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மேதினிப்பூர் பகுதியிலுள்ள சங்கராயில் போலீசு நிலையத்தைத் தாக்கி, அதிந்திர நாத் தத்தா என்ற போலீசு அதிகாரியைக் கடந்த அக். 20 அன்று மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். பி.பி.சி. செய்தியாளர்களின் முயற்சியால் அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமிடையே பேரம் பேச்சு வார்த்தை நடந்து அக்.22ஆம் தேதியன்று போலீசு அதிகாரியான அதிந்திரநாத் தத்தா விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 14 பழங்குடியினப் பெண்கள் உள்ளிட்ட 23 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப் 3ஆம் தேதியன்று கைது செய்யப் பட்டு, எவ்வித விசாரணையுமின்றி ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்கார் வட்டார பழங்குடியினப் பெண்கள் மீது கொலை முயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள், சதி செய்தார்கள் என்றெல்லாம் பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன. தாங்கள் எதற்காகக் கைது செய்யப்பட்டோம், தற்போது எதற்காக விடுதலை செய்யப்படுகிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்த 14 பெண்களுக்கு ஊருக்குத் திரும்பிச் செல்வதற்குக் கூட போக்குவரத்து செலவுக்குக் கையில் காசில்லை. அவர்களது உற்றார் உறவினர்கள் கூட, தங்களையும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று கைது செய்வார்களோ என்ற......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: