தமிழ் அரங்கம்

Wednesday, January 20, 2010

இன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.


சமூக முரண்பாடுகளை களையும் வண்ணம், சமூகத்தை வழிநடத்தக் கூடிய ஒரு முன்னேறிய சமூக முன்னோடிகள் பிரிவு இன்று இலங்கையில் கிடையாது. இதனால் சமூகமோ பல முனைகளில் ஒடுக்கப்படுகின்றது. ஓடுக்குபவன் முரண்பாட்டுகளுக்கு பின்னால், மக்களை பிரித்து வழிநடத்துகின்றான்.

விளைவு சமூகம் பல முனைகளில், பாரிய சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. மனிதனாக வாழ்வதற்குரிய எந்த அடிப்படையான வசதிகளும் இன்றி தத்தளிக்கின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. மக்களுக்கு இடையில் திணிக்கப்பட்ட பிளவுகளால், சமூகங்களுக்கு இடையில் பல பிளவுகள். பிளவுகள் கொண்ட சமூகமாக மொத்த நாடும் மாறியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் இடத்துக்கிடம் வேறுபட்டு நிற்கின்றது. பல முரண்கொண்ட முரண்பாடுகளுடன்,...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: