தமிழ் அரங்கம்

Thursday, January 21, 2010

நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!

அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. ""அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

நேபாளத்தின் புதிய இராணுவத் தலைமைத் தளபதி சத்ரமான் சிங் குருங், கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லிக்கு வந்து இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூரையும் அரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் சந்தித்திருக்கிறார். அரசுமுறை மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், மாவோயிஸ்டுகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி விவாதிக்கவே அவர் வந்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் இராணுவப் படை நேபாள இராணுவத்துடன் இணைக்கப்பட்டு, புதிய நேபாள இராணுவம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியத் தலைமைத் தளபதியோ, அவ்வாறு........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: