தமிழ் அரங்கம்

Thursday, January 21, 2010

பிரபாகரன் துப்பாக்கி முனையில் உருவாக்கிய புலித்தேசியம், இன்று துரோகத்துக்காக தனக்குள் மோதுகின்றது

புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின் துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.


பிரபாகரன் தன் துப்பாக்கி மூலம் மேய்த்த புலித் "தேசியம்", படுகொலைகள் மூலம் கட்டமைக்கப்பட்டது. இது புலித்தேசியமாக மாற, துரோகம் தியாகம் என்ற வறையறையின் எல்லைக்குள் அரசியலை முடக்கியது. இதற்கு வெளியில் சிந்திப்;பது துரோகமாக காட்டி, பிரபாகரன் தன் வழியில் அனைத்தையும் போட்டுத் தள்ளினான்.

இதற்கு அப்பால் பிரபாகரனின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்வதே தேசியமாகியது. இப்படி துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள் தேசிய தியாகிகளாக, அதை மீறி மேய்ந்தவர்கள் துரோகிகளானார்கள். இன்று அதை மேய்க்க பிரபாகரனுமில்லை, அவனின் துப்பாக்கியுமில்லை. அவனின் துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள், இன்று பிரபாகரனை மேய்கின்றனர்.

அன்று பிரபாகரன் தன் துப்பாக்கி.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: