தமிழ் அரங்கம்
Sunday, October 16, 2005
தொடர் கொலைகளால்
மனித இனத்தில் உயிர்வாழும் ஆற்றல் என்பது, உயிர் வாழ்வதற்கான போராட்டத்துடன் ஆரம்பமாகின்றது. தமிழ் மக்களின் போராட்டம் கூட அப்படித் தான் தொடங்கியது. ஆனால் எமது போராட்டத்தின் இன்றைய நிலை என்ன? தனிமனித அதிகாரத்துக்காகவும், சமூக ஆதிக்கத்துக்காகவும் தொடங்கி இன்று தமிழ் மக்களிடம் பணத்தை சூறையாடல் என்ற எல்லைக்குள் எமது போராட்டமே சீரழிந்து கிடக்கின்றது. தமிழீழமே எமது இலட்சியம் என்று தொடங்கிய போராட்டம் தனது ஆன்மாவையே தொலைத்து, இன்று போராட்டம் என்பது பணம் திரட்டும் போராட்டமாக மாறிவிட்டது. எந்த அசைவும் இயக்கமும் பணம் திரட்டலை அடிப்படையாக கொண்டே இயக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் போராட்டம் திசை மாறிய வரலாற்றின் ஒவ்வொரு கணமும், அது தனது சொந்த இலட்சியங்களை கைவிடுவதில் இருந்தே தொடங்கியது. இன்று தமிழ் மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டம் என்பதே, தமிழ்தேசியம் பேசும் தேசியவாதிகளின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பிப்பிழைக்கும் போராட்டமாக சீரழிந்து விட்டது. இரண்டு தனிமனிதர் சுதந்திரமாக நடக்கும் சமூக நிகழ்வுகளையிட்டு உரையாடவே முடியாது. அது கண்காணிக்கப்படுகின்றது. கதைப்பதை தடுக்கும் வகையில் மிரட்டப்படுகின்றது. இது மரண தண்டனைக்குரிய குற்றமாகவும் உள்ளது. இது எமது தேசத்தின் எதார்த்தம்;. இதற்காகவா நாம் போராடப் புறப்பட்டோம். இதற்காக மிகப் பெரிய தியாகங்கள் செய்யப்பட்டன.
இன்று மக்கள் உயிர்வாழும் போராட்டத்தில் தப்பிப்ழைப்பதற்காக, தமிழ் தேசியவாதிகளின் நெற்றிக் கண்ணில் இருந்து மறைந்து வாழவேண்டிய சமூக அவலம். இந்த சமூக அவலத்துக்கு வெளியில் யாரும் உயிர் வாழவில்லை. இதுவே தமிழ் தேசியம் மக்களுக்கு வழங்கும் சுதந்திரம். நக்கிப் பிழைக்கத் தெரிந்தவர்கள், சமூகத்தை மோசடி செய்யத் தெரிந்தவர்கள், சமூகத்தின் அவலத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அனைவரும், பணத்தை சூறையாடும் தமிழ் தேசியத்துடன் வலிந்து ஒட்டிக் கொண்ட ஒட்டுண்ணியாக மாறி அதை பாதுகாக்க முனைகின்றனர். போராட்டத்தின் சிதைவு ஒட்டுண்ணிகளின் வாழ்வாகிவிட்டது.
இந்த சமூக விரோத ஒட்டுண்ணிகளிடமும், ஒட்டுண்ணிகளை தாங்கி அதன் வேரில் நிலைத்து வாழ கணவு காணும் புலிகளும், யாரைத்தான் சூறையாடுகின்றனர். தமிழ் மக்களைத் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. எதிர்நிலையில் இங்கு இழப்பவர்கள் யார் என்றால், தமிழ் மக்கள் தான். எந்தப் பாவமும் அறியாத எழை எளியதுகளையும். கைகட்டி வாய் பொத்தி நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைத்தையும் இழக்கின்றனர். தமது குழந்தைகளை, தமது சொந்த உழைப்பை, பாரம்பரிய சொத்துகளை எல்லாம் புலிகளிடம் அன்றாடம் இழப்பது தமிழ் பேசும் மக்கள் தான். புலியின் செல்வங்கள் அனைத்தும், தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டவை தான். புலியின் ஒட்டுண்ணிகளிடம் குவிந்து கிடக்கும் செல்வங்களும் கூட மறைமுகவழிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்டவைதான். இன்று புலிகளை சார்ந்து வாழும் குடும்பங்கள் முதல் பல வழிகளில் உழையாது வாழும் அனைத்து செல்வங்களும் கூட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டவைதான்.
புலிகள் ஏழைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. எங்கும் சூறையாடலே தாரக மந்திரமாக அரங்கேறுகின்றது. இதை மீறுபவர்கள் அனைவரும் தேசத் துரோகியாக காட்டப்பட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். கொன்றவனைக் கூட உரிமை கோர வக்கற்ற தேசிய வக்கிரம் இன்று கொலுவேற்றுள்ளது. முதுகெலும்பற்ற அரசியல் பேடைத்தனம்;, எங்கும் எதிலும் பணத்தைச் சூறையாடும் மாபியாப் போராட்டமாகிவிட்டது.
பணத்தைக் கொடுத்தவன் வாழ்க்கை பூராவும் சித்திரவதையை அனுபவிக்கத் தொடங்குகின்றான். கடன், குடும்ப வறுமை என்று தொடங்கும் உளவியல் சிக்கல் ஒரு பகுதினரை சிக்கி உருக்குலைகின்றது. இருப்பவன் கொடுக்கும் போது, கொடுத்த பணத்துக்காக புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு தாழ்ந்து போகின்றான். கொடுத்த பணத்தை ஏதோ ஒரு வழியில் மக்களிடம் இருந்து மீளப் பெறும் வழியில், தனக்கு துணையாக புலியை ஆதரித்து நிற்பது இயல்பாகிவிடுகின்றது.
மறுபக்கம் இந்த ஆதரவு பணம் திரட்ட தொடரும் கொலைகளுக்கு உடைந்தையாகி, மனித நாகரீகத்தையே அழிவுக்கும் நிலைக்கு கைகொடுக்கின்றது. இது பணம் கொடுத்தவனின் மற்றொரு உளவியல் சிக்கலுக்குள் சிக்கி விடுகின்றது. உளவியல் சித்திரவதை சமூகத்தின் போக்கில் நிரந்தரமான தலைவிதியாகி விடுகின்றது. உளவியல் பாதிப்பு கூடிய ஒரு பிரதேசமாக வடக்குகிழக்கு இன்று மாறி நிற்பதில் என்னதான் ஆச்சரியம் தான் இருக்க முடியும். இதை மேலும் ஆழமாக்கும் சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களை வாழமுடியாத மன உளைச்சல் இன்றி உயிர்வாழ முடியாத நிலையை உருவாக்கி விடுகின்றது. அடிமைவாழ்வும், மனித உளவியல் நோய்க்குள் சிக்கிக் கிடப்பதும் தான் பிரபானிசம் தரும் விடுதலையாகிவிட்டது. மனிதனை ஆறுதல்படுத்தக் கூடிய எந்த ஆற்றலும் இந்த பிரபானிசத்துக்கு கிடையாது. பொலிஸ்காரன் நடேசன் அறிமுகப்படுத்திக்காட்டிய பிரபானிசம், பொலிஸ் பாணியிலானதே. அதற்கு மனித முகம் கிடையாது. மனிதாபிமானம் கிடையாது. கொல் கொன்று ஒழி. இதைவிட்டால் சிறையும் நீதிமன்றங்களும். இதற்கு வெளியில் சமூகம் பொது சிறைக் கூடாரமாகவே சுற்றி வளைத்து கழுத்தில் கைவைத்து நெரிக்கப்படுகின்றது. மூச்சு திணறும் சமூகத்தில் இருந்து ஆக்கத்துக்கான எந்த சமூக விடுதலையும் இன்று கிடையாது.
அதுவே தமக்கு சேவை செய்யத் தயாரற்ற அனைவரையும் கொன்று போடுதல் என்பது, தமிழ் தேசிய அகராதியில் உன்னதமான ஒழுக்கமாக செதுக்கப்படுகின்றது. ஆனால் அந்த ஒழுக்கத்தையே உரிமை கோரமுடியாத கோழைத்தனமான வசைபாடல்கள் மூலம் அனைத்தையும் விதாண்டவாதம் செய்கின்றனர்.
செய்த கொலையை நியாயப்படுத்த முடியாது கொலை செய்ய பல பெயர்களில் பல படையணிகள். சங்கிலியன் படை, வன்னியன் படை, எல்லாளன் படை என்று பற்பல படைகள். இதை மறுக்க அவர்களே கற்பனை செய்து கூறும் பல பெயர் கொண்ட பல குழுக்கள். ஒட்டுக் குழு, துணைப்படை என பல. அனைத்தும் அவர்களின் சொந்தக் கற்பனையே. அதாவது கொலையாளியே அனைத்தையும் கற்பனை செய்கின்றான்.
நாகரிக சமூக அமைப்பில் பொதுவாக தூக்கில் இடுபவனை தூக்கில் இட ஒரு கொலையாளி தேவை எப்படியோ, அதேபோல் ஒரு பாதிரியாரும் அங்கு பிரசன்னமாகின்றான். இங்கு தூக்கில் இடுபவன் பணியும், அதுபோல் பாதிரியார் பணி;யும் மக்களை அடக்கியாளத் தேவைப்படுகின்றது. அதாவது மக்களை அடக்கியாள தூக்கில் ஒரு கொலையாளி எப்படி தேவைப்படுகின்றானோ, அதே போல் மக்களின் சமூகக் கொந்தளிப்பை தணிக்க ஒரு பாதிரியாரும் தேவைப்படுகின்றான்.
இதுபோல் தான் இன்று கொலையும், கொலையை மறுக்க அல்லது நியாயப்படுத்த பல வண்ணக் கதைகளும் தேவைப்படுகின்றன. மக்களை அடிமைப்படுத்தி அடக்கியாள இரண்டும் புலிக்கு தேவையாக உள்ளது. இங்கு கொலை செய்ய கொலையாளியும், கொன்றதை நியாயப்படுத்த அல்லது திரிக்க பல வண்ண தூய்மைவாதிகளும் அரங்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். இரண்டையும் ஒரே இடத்தில் இருந்து தெளிவாகவே நாம் இனம் காணமுடியும். கொல்வதாக மிரட்டுவதையும், அதை மறுப்பதையும் நாம் இன்று, தமிழ் மக்கள் மத்தியில் தெளிவாக இனம் காணமுடியும். எதையும் புரட்டி திரித்து அராஜகம் செய்யும் அதிகாரத்தை துப்பாக்கி முனையில் செய்து காட்டுகின்றனர்.
ஒரு மனிதனை கொன்று விட்டு வந்து அதை நியாயப்படுத்தும் அர்த்தமற்ற வாதங்கள் செய்வது இல்லையென்றால் அதை மறுக்கும் வாதங்கள். கொன்றவனே அதை எதிர்த்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடுமளவுக்கு எங்கும் சிறு கும்பலே, மக்களின் பெயரில் தேசத்தையே எரிக்கின்றனர்.
மறுபுறம் முன்னைநாள் கொலைகார இயக்கங்கள், இன்று இலங்கை அரசின் கைக்கூலிகளாகி அரங்கில் நிற்கின்றனர். இன்று நடக்கும் 90 சதவீதமான கொலைகளை புலிகள் செய்யும் போது, அதற்கு பின்னால் ஒளிந்து நின்று 10 சதவீதமான கொலைகள் இவர்கள் நாசுக்காக செய்து விட்டு வந்து நியாயவாதம் பேசும் வக்கிரமும் அரங்கேறத்தான் செய்கின்றது. கொலையைக் கண்டிக்கும் போது இரு தரப்பும் பரஸ்பரம் தமது தரப்பு கொலையை பாதுகாக்கும் உரிமையை முகமூடி போட்டுக் கொண்டு, தமிழ் மக்களின் கழுத்தையே வெட்டியெதிய பின் நிற்பதில்லை.
இந்த நிலையில் நாட்டை ஆக்கிரமிக்கவும், தமிழ் மக்களின் தேசிய கோரிக்கைகளை புதைக்கவும் காத்திருக்கும் வல்லூறுக்கள் தேசத்தின் மேல் வட்டமிடுகின்றன. இதற்கு துணைபோகும் புலியெதிர்ப்புக் கும்பல் வல்லூறுக்களின் பின்னால் மறைந்து நின்று ஏதாவது எச்சம் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் அலைகின்றன.
இதற்கு துணைபோகும் உதிரிகளான ஒநாய்களும் புலிகளும் சேர்ந்து காட்டையே அழிக்கின்றன. எங்கும் அராஜகம். சமுதாயத்தின் அமைதியான இயல்பான வாழ்வு அன்றாடம் சிதைவுறுகின்றது. மனப்பயம், மன உளைச்சல் என்று உளவியல் நெருக்கடியில் தமிழ் இனம் அன்றாடம் மரணப் போராட்டத்தை நடத்துகின்றது.
இதை எல்லாம் எதற்காக செய்கின்றார்கள் என்று கேட்டால், பாய்ந்து குதறுகின்றன. தமிழீழம் எமது இலட்சியம் என்றவர்கள், அதை மறந்து பணம் திரட்டுவதே இலட்சியமாகிவிட்டது. இந்த நிலையில் இதற்காகவே ஏகபிரதிநிதித்துவம் வேண்டியும் தனித் தலைமை என்றும் கூறி, தமிழ் இனத்தின் அடிமைத்தனத்தை ஏற்று அங்கீகரிக்க உலகம் முன்வர வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்த நிலையில் தாம் எதற்காக கொல்லுகின்றோம் என்று கூற முடியாத வகையில் நியாயமற்ற கொலைகள். அதை மூடிமறைக்க, திசை திருப்ப விதவிதமான படைகளின் பெயராலும் எச்சரிக்கை. கொன்று விட்டு அதை மற்றவனின் பெயரில் சொல்ல பல பெயர்களில் படைகள். இந்த அரசியலை நியாயப்படுத்த நிதர்சனம் டொட் கொம் என்று பல. எல்லாம் அவனே. கொல்வதும் அவனே, அதை நியாயப்படுத்துவதும் அவனே. கொலையை மற்றவன் பெயரில் சொல்வதும் அவனே. பல பெயர்களை உற்பத்தி செய்து, அதை உண்மையானதாக நடமாடவிடுவதும் அவனே.
கொலையை நியாயப்படுத்தும் விதங்கள் கூட வக்கிரமானவை. இதற்கு அது பழிவாங்கல்கள், அது உட்கொலை என்று பல வண்ணக் கதையாடல்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிந்து இருப்பதை இவர்கள் காண்பதில்லை. உலகத்துக்கும் கூட இந்த உண்மை பளிச்சென்று தெளிவாக இருப்பதை காண்பதில்லை. அடுப்படியில் பூனை களவாக கண்ணை மூடி பால்குடித்த கதை போல், புலிகள் பால் குடிக்க முனைகின்றனர். குடித்த பாலை மற்றவர்களுக்கு கொடுக்க முனைகின்றனர்.
இந்தக் கொலைகளினால் லாபம் பெறுவர்கள் யார். தமிழ் மக்களும் அல்ல. புலிகளும் அல்ல. நீண்டகால நோக்கிலும், குறுகிய கால நோக்கிலும் லாபம் பெறுபவர்கள் ஏகாதிபத்தியமும் ஏகாதிபத்திய தமிழ் கைக்கூலிகளுமே. அத்துடன் பேரினவாதமும், பேரினவாத தமிழ் கைக் கூலிக் குழுக்களும் தான்.
பிழைப்பு வாதிகளும், பொறுக்கித்தின்னிகளும், ஒட்டுண்ணிகளும், நக்கிபிழைப்போரும் இந்த கொலைகளை நியாயப்படுத்த அவர் அவர் இடத்தில் இருந்தபடி செய்யும் கருத்துக்கு அப்பால், அவர்களுக்கு என்ற ஒரு தனி அபிப்பிராயம் உண்டு. யார் உண்மையான கொலையாளி என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, மக்களை முட்டாளாக்க முடியும் என்ற அவாவுடன் பினாற்றுகின்றனர். ஆனால் இவர்களால் தான் புலியின் அழிவு என்பதை, வரலாறு தெளிவாக அறைந்து சொல்லும். புலிகளின் அழிவு உறுதி என்று தெரிந்தவுடன் இந்தக் கும்பல் தான், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாகவும், பேரினவாதிகளின் எடுபிடிகளாகவும் களத்தில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்பர். இவர்கள் சந்தர்ப்பத்துக்கும், நிலைமைக்கு ஏற்ப பிழைப்பவர்கள். இது புலிக்கு எதிராகவும் நிச்சயமாக மாறும். இதை உலக வரலாறு எங்கேயும் பொய்யாக்கியது கிடையாது. உண்மையான தியாகங்கள் அனைத்தையும் இவர்களே முன்னணியில் நின்று புதைகுழியில் இட்டு நிரப்புவர்.
உண்மையான சமூக விரோதிகள்
உங்கள் ஆதாரவக்கும் ஒத்துலைப்புக்கு மனமார்ந்த நன்றிகள். எந்தக் கருத்தையும் நன்றியுடன் தனது சொந்தப் பெயரில் அல்லது புனை பெயரில் போடுவது இட்டு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது எந்தளவுக்கு எவ்வளவு மாறுபட்ட கருத்தாக இருந்தாலும், அது மதிப்புக்குரியதே. முரண்பாடுகள் இன்றி பூமியும் சரி, பூமியின் இயற்கையும் சரி இயங்காது. அதாவது அது உயிர்வாழ முடியாது. இந்த இயற்கையில் உள்ள மனிதர்கள் எந்த மட்டில்.
குறிப்பாக வசந்தன் போட்ட கருத்தினை எனது பெயரில் போட்டபோது, அதில் உள்ள ஒரு தியாகத்தையே கேவலப்படுத்துவது தான். இந்த தியாகம் எதற்காக எப்படி செய்யப்படுகின்றது என்பது பற்றி எனக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்த போதும் கூட, தியாகம் செய்ய முன்வந்த உணர்வு மதிப்புக்குரியதாக உள்ளது. அதாவது தனிப்பட்ட அந்த மனிதன் தியாகம் செய்ய முன்வரும் போது, சுயநலன் சார்ந்த தனிமனித அரசியலையே கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது. தனிமனிதர்கள் தம்மை தியாகம் செய்யும் போது, அது உண்மையான சமூக விடுதலையை அடையாத வரை, அந்த தியாகம் அர்த்தமற்றதாக இருந்த போதும் கூட, இந்த தியாகத்துக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக போராடி தியாகத்தை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இந்த தியாகத்தை கொச்சைப்படுத்தி வருபவர்கள், தமது சுயநல அரசியல் பயன்படுத்தும் போது, தியாகங்களை மற்றவர் பெயரால் ஒட்டிக் கேவலப்படுத்துவது நிகழ்கின்றது.
இது சமூகத்தின் எல்லா துறைக்கும் பொருந்தும். கருத்தால் கருத்துக்கு பதிலளியுங்கள். மக்கள் மேல் நம்பிக்கை இருந்தால், மக்களை நேசித்தால், உங்கள் சரியான கருத்து வெற்றிபெறும். அதைவிடுத்து கருத்தைச் சொல்பவனை கொல்வது அல்லது இது போன்ற மற்றவன் பெயரால் ஆள் மாறட்டம் செய்பவர்கள சுத்த அயோக்கியர்கள். இங்கு எந்த நேர்மையும் கிடையாது. எந்த மனிதப் பண்பும் கிடையாது. ஒளித்து நின்று கல்லெறியும் கும்பலாகவேயுள்ளது.
இவர்கள் சமூகத்தில் இழிந்துபோன எந்தச் செயலையும் செய்யும் வகையாறுகள். சமூகத்தில் தம்மை அடையாளம் காட்டின் மதிபற்றவர்கள். சமூகத்தில் ஒளித்து நின்ற கொண்டு, சமூத்தையே பிறண்டித் திண்பவர்கள். சமூக பண்பாடுகள், சமூக கலச்சாரங்கள் எதுவுமற்ற உண்மையான சமூக விரோகள் இவர்கள்.
பி.இரயாகரன்16.10.2005
Saturday, October 15, 2005
எனது பெயரில் பதிவிடுவர்களின்

அரசியல் நேர்மை எதுவோ, அதுவே கொலைகளை செய்து விட்டு அதை மறைக்கும் வாதங்களும், நியாயவாதங்களும். கருத்தை எதிர் கொள்ளமுடியாது துசாணத்தால் எனது பதிவில் பதிவிட்டவர்கள், இன்று எனது பெயரில் ஈழநாதன், ஜனநாயகம், துண்டில்... போன்ற தளங்களில் பதிவிடுகின்றனர். அதவது தமது சொந்த செயல்பாட்டை கூட நியாயப்படுத்த முடியாது, எனது பெயரால் அதை செய்கின்றனர்.
இது எம்மண்ணின் சாபக்கேடுதான். சொந்த தயாகத்தை, சொந்தப் போராட்டத்தைக் கூட சரியானது எனச் சொல்ல முடியாத நிலையில், அதை மற்றவன் பெயரால் சொல்லும் அளவுக்கு போராட்டம் சிதைந்து விட்டது.
1986ம் ஆண்டு மிகவும் தீர்க்கதரிசனமாக பல்கலைக்கழக மாணவாகள் இதை எப்படி பார்த்தார்கள். இந்த மனிதவிரோத கும்பலுக்க எதிராக போராடிய போது அவர்கள் சரியாகவே ஒட்டிய செய்தியில்
காயடிக்கும் தமிழ் தேசியம்

Friday, October 14, 2005
கொன்று குவிக்கும்
நாம் உலகின் அங்கீகாரத்தையும், மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டின் நிச்சயமாக மக்களின் சமூக பொருளாதார உறவுடன் உள்ளடங்கி சமூகம் சார்ந்த கோரிக்கைளை முன்வைக்க வேண்டும். ஆனால் உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படையான தேசியப் பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு என்ன அரசியல் தீர்வை தாங்கள் முன்வைக்கின்றோம் என்பதை முன்வைக்காது பேரினவாத அரசியல் களத்தில் இறங்கி நிற்கின்றன. அமைதி சமாதானத்தைக் கொண்டு வருவோம் என்ற மக்களை ஏமாற்றும் அரசியல் கோசத்தைத் தவிர, அதை எந்த தீர்வின் ஊடாக என்பதை சொல்லாத பேரினவாதமே, இன்று வெற்றிகரமாக அரங்கேறுகின்றது.
மறுபுறம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை பேரினவாத கட்சிகள் முன்வைக்க கோரும் அரசியல் யுத்த தந்திரத்தை, புலிகளும் அதன் எடுபிடி கூலிக்கும்பலும் மறுதலிக்கின்றது. சுயநலம் பிடித்த தமது அற்ப கோரிக்கைகளுடன் தமது அரசியல் செயல்பாட்டை மட்டுப்படுத்தி, மக்களுக்கு வழங்கும் பொருளாதார நிவாரணங்களை கொள்ளையடிக்கும் எல்லைக்குள் தமது அதிகாரம் என்ற கோரிக்கைக்கும், தமிழ் மக்களின் பிரச்சனையை குறுக்கிவிட்ட நிலை இன்று காணப்படுகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் பேரினவாதம் முன்னும், தமிழ் தேசிய குறுந்தேசியவாதிகள் முன்னும் காணமல் போய், அவை கந்தலாகிவிட்டன. தியாகத்துடன் தொடங்கிய போராட்டம் சுயநலன் சார்ந்த இராணுவ கும்பல்களின் குறுகிய போராட்டமாகவே சிதைந்து போனது.
இந்த நிலையில், அற்பத்தனமான சுயநலம் சார்ந்த குறுகிய நோக்கங்களுடன், புலிகள் விசர் பிடித்த நாயாகவே துப்பாக்கியும் கையுமாக அலைகின்றனர். இன்று வரி கொடுக்க மறுத்தாலும் மரணதண்டனை விதிக்கும் எல்லைவரை, எங்கும் எதிலும் ஒரு அராஜகம் நிலவுகின்றது. மட்டக்களப்பில் கருணா புலி மோதலைக் கடந்து, இன்று யாழ் குடா வரை ஒரு தலைப்பட்சமாக, படுகொலைகளை புலிகள் மீண்டும் துடிப்புடன் தொடங்கியுள்ளனர். இது எதிர் தரப்பில் பதிலடி கொலைகளை உருவாக்கும் சூழலை விரைவாகவே உருவாக்கி வருகின்றது.
இன்று தேசியத்தின் பெயரில் கொலை செய்யப்படும் வடிவங்கள், நோக்கங்கள் கூட மேலும் மேலும் அதீதமான மனித விரோதத் தன்மையுடையதாக மாறிச் செல்லுகின்றது. புலிகள் தமது அரசியல் நடவடிக்கையை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து விலத்தியவுடன், விரிவான தொடர் படுகொலைகள் தொடங்கிவிடுவதை வரலாறு மீண்டும் எடுத்துக் காட்டுகின்றது. மனிதப் படுகொலைகள் புலிகளுக்கு விருப்பமான புலி உணர்வாக இருப்பதும், அதை ரசிக்கும் ஒரு கூலிக் கும்பலைக் கொண்டு இதை நியாயப்படுத்துவதும் அன்றாட நிகழ்ச்சியாக எம்முன் உள்ளது. எமது சமூகம் மனநோய் பிடித்த வன்மமும் வக்கிரமும் கொண்ட, சுயநலத்தில் தன்னைத் தான் தகவமைத்து நிற்கின்றது. உலகம் இதற்கு எதிரான மனித உணர்வு சார்ந்து இருப்பதை, இந்த கிணற்றுத் தவளைகள் கண்டு கொள்ளாத வகையில் தமது சொந்த கிடுகுவேலியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். ஆனால் சுனாமி பேரலை ஒன்று பொங்கி கரைகளில் நிற்பதை காணமறுக்கும் சமூக மூடர்களாக, எமது கைக்கூலிச் சமூகம் தமது கண்களை மூடி, காதைப் பொத்தி உணர்வை இழந்து, தனது சமூக மரணத்துக்காக கிணற்று பொந்துகளில் வரிசையில் நிற்கின்றன.
இதற்கு தலைமை தாங்கும் புலிகளின் அரசியலுக்கு, ஒரேயொரு அரசியல் மொழிதான் அதற்கு உண்டு. அது மனிதப் படுகொலை. தமிழ் மக்களை விரும்பியவாறு அடக்கியாளவும், அணிதிரட்டவும், கொள்ளையிடவும் உள்ள அரசியல் வழியே, படுகொலை அரசியல் தான். இதுவே புலிகளை அதிகாரத்தில் தக்கவைக்கின்றது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் ஒன்றுபடாத புலிகள் இயக்கம், அந்த மக்களின் பொருளாதாரத்தை சூறையாடுவதில் மட்டும் மொத்த அரசியல் நகர்வையும், அது சார்ந்த குறுகிய அரசியலையும் கொண்டுள்ளனர்.மக்களின் வாழ்வோ ஆழமான சமூகச் சிதைவைக் கண்டு வருகின்றது. இது பற்றி எந்தவிதமான சமூக அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை. மக்களை அடக்கியாள தொடர் படுகொலைகளை தொடர்சியாக செய்வது அவசியம் என்பதே, பிரபானிசத்தின் சித்தாந்தம். இதைத் தான் அவர்கள், தமது தமிழ் தேசியம் என்கின்றனர். கொல், முடிந்தால் கொன்று குவி, இது புலித் தேசியத்தின் பிரபானிச சித்தாந்தமாக உள்ளது.
இப்படிக் கொல்வதன் மூலம் தமிழீழத்தை நீங்கள் அடைய முடியமென்றால், தமிழ் மக்களை வரிசையில் விட்டே சுட்டுக் கொல்லுங்கள். ஜெர்மனிய ஆரியர்களின் தூய்மையை பாதுகாக்க நாசிசத்தை சித்தாந்தமாக வரிந்து கொண்டு, பாசிசத்தை அடிப்படையாக கொண்ட கிட்லர் யூதர்களை இப்படித் தான் கொன்றான். இதன் மூலம் ஜெர்மனிய சமூகத்தை தூய்மைப்படுத்தி உலகை ஆள தகுதியாக்க முனைந்தது போல், நீங்களும் தமிழ் மக்களை வரிசையில் நிறுத்தி கொலை செய்யுங்கள். இதன் மூலம் தமிழீழத்தைப் பெறுங்கள். அதை விடுத்து அன்றாடம் சிறுக சிறுக கொன்று குவிக்கும் கொலை வெறியாட்டம், தமிழ் தாய்மையின் கருவறையை குதறிக் கிழிப்பது போன்றதே. நீங்கள் ஒன்று செய்யலாம், தமிழீழத்தின் பெண்களின் தாய்மைக்குரிய கருவறைகளை வெட்டியெறிந்து, புலிகளையே தூய்மையாக்க முடியும்;. பெண்கள் பால் கொடுக்காது இருக்க, அவர்களின் சொந்த மார்பகங்களை அறித்தெறியுங்கள். ஆண்கள் குழந்தையை உற்பத்தி செய்யும் ஆற்றலை வரிசையில் நிறுத்திவைத்து நலமடியுங்கள். அதை உங்களால் செய்ய முடியும். அந்தளவுக்கு உள்ளது உங்கள் வக்கிரம். கொலைவெறியுடன் கூத்தாடும் உங்களுக்கு இவைகள் எந்தமட்டில்.
இவர்களின் சமூக ஒழுக்கமோ கெடுகெட்டது. விபச்சாரிக்கு மரணதண்டனை, விபச்சாரனுக்கு சட்ட ஆலோசனையுடன் பாதுகாப்பை வழங்கும் தேசிய வக்கிரம். இவை எல்லாம் தேசியத்தின் பெயரில் அரங்கேறுகின்றது. சமூக நடத்தை நெறிகள், எந்தவிதமான நீதி நேர்மையுமற்ற வகையில், அனைத்தையும் புலிகள் என்ற இராணுவ கும்பலுக்கு சார்பாக வளைத்துப் போடுதல் தான், தமிழ் தேசியமாக காட்டப்படுகின்றது. மக்கள் வாய் பொத்தி, மௌனமாகவே தமது கடுமையான உழைப்பின் விளைவை புலிகளின் முன் சமர்ப்பித்து, உயிர் வாழும் உரிமைக்காக தம்மை வழிபடக் கோரும் புலித்தேசியமே இன்று எம்மண்ணில் அரங்கேறும் காட்சி படிமங்கள்.
புலிகள் மாறிவிட்டார்கள், அதோ பாருங்கள் என்று சிறகு கட்டி பறந்த புலி கூலிக் கும்பல்கள், இன்று நடப்பதை இட்டு மௌன விரதம் இருக்கின்றனராம். தமிழ் பத்திரிகைகள், புத்திஜீவிக் கும்பல்கள் என அனைத்தும், மக்களுக்கு எதிராக, கூலிக்கும் புகழுக்கும் மாரடிக்கும் சமூகவிரோத கும்பலாக சீரழிந்துவிட்டது.
உண்மையில் புலிகளின் கொலைப் பட்டியலில் அன்றாடம் மடிந்து போகும் உயிர்களின் மீதான புலித் தீர்ப்புகள் சார்ந்த குற்றங்கள், உண்மையின் பாலானவையல்ல. மாறாக புலிகளின் சொந்த நடத்தைகள் ஏற்படுத்திய அதிர்வில் ஏற்பட்ட பிரதிபலிப்புகளின் மேல் தான், படுகொலை அரங்கேறுகின்றது. புலிகள் தாம் வலிந்து சமூகத்துடன் முரண்படும் அவர்களின் அன்றாட நடத்தைகளே, தன்மானம் உள்ளவர்களின் அதிருப்;திக்கு உள்ளாகின்றது. இதை எதிர்க்கின்ற ஒரு ஜனநாயக செயல்பாட்டின் போதே, அதை எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைகளான புலிகள், இதன் மீதான படுகொலைகளை அன்றாட நிகழ்ச்சி நிரலாக்கிவிட்டனர். அன்றாட செய்திகளில் கொலைகள் இல்லாது இருப்பின், சூரியனே உதிக்க மறுக்கின்றது. தமிழீழத்தில் சூரியன் அஸ்தமித்து இருண்டுவருகின்றது. இன்று ஒன்று இரண்டு மூன்றாக படுகொலைகள் நாளாந்தம் பெருகிச் செல்லுகின்றது. மக்களின் மேலான இந்த துர்நடத்தைகள் மூலம், பயப்பீதியை விதைத்து, அதன் மேல் பிரபானிச சித்தாந்தம் கொலுவீற்றிருக்கின்றது. இதன் மூலம் மக்களின் உழைப்பை திருடி, பெரும் சொத்துகளை குவித்து புலிகள் வயிற்றை வளர்கின்றனர் என்றால், இதற்கு எதிரான புலியெதிர்ப்பு வாதிகளும் கூட இதைச் சொல்லித் தான் தமது வயிற்றை வளர்க்கின்றனர்.
பாவம் மக்கள். மக்கள் வாழ்விழந்து இந்த அரசியல் கூத்தில் தத்தம் உயிர்களையும், தமது உழைப்பு சார்ந்த பொருட்களையும் இழந்து, வாய்பொத்தி கைகட்டி வாழ்வதே பிரபானிசத்தின் சித்தாந்த உள்ளடக்கமாகும். இதைத் தான் பொலிஸ்காரன் நடேசன் தனது சொந்த தொழில் சார்ந்த தேசிய மொழியில், பிரபானிசம் என்று மிகவும் உள்ளக் கிளர்ச்சியுடன் அறிவித்தார். பொலிஸ்காரன் நடேசன் கூறியது போல், இது அனைத்து தமிழ் சமூகக் கூறிலும் அன்றாடம் மனித சிந்தனைத் தளத்தை ஆட்டிப்படைக்கும் இயக்க கூறாக மாறிவிட்டது. புலி பிரபானிசத்தின் கொலைகள் அற்ற நாட்கள், அதை சர்ந்து வாழும் லும்பன் பிழைப்புவாத ஆதரவாளர்களுக்கு மிகவும் சோர்வான நம்பிக்கை தகர்ந்த நாட்களாக மாறிவிடுகின்றது. ஒரு மனநோய்க்குரிய மனித பிழற்சி கண்ட, மனித விரோத வெறி அவர்களையே ஆட்டிப்படைக்கின்றது.
இந்தக் கும்பல் தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் எல்லாம், தமிழ் சமூகத்தில் இருந்தே துடைத்தெறிந்த நிலையில் குதிராட்டம் போடுகின்றனர். எஞ்சியிருக்கும் சமூகக் கூறுகளையும், அதன் சமூக வேர்களையும் அழிப்பதற்காக தொடர் படுகொலைகளை நடத்துகின்றனர். மனித விரோதத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க, சொந்த இராணுவ கட்டமைப்பு பலவீனமாவது அன்றாட நிகழச்சியாகிவிட்டது. சொந்த உள் படுகொலைகளையும் தாண்டி, முரண்பாடுகள் மேலும் நுட்பமாகி கூர்மையடைகின்றன. மறுபுறம் தமது இந்த கொலைவெறி இராணுவ கும்பல் நலன்களை கட்டிப்பாதுகாக்க உதவிய, சுயமான பங்களிப்பு என்ற சமூக உணர்வு ஓட்டமே அடியோடு தகர்ந்து போயுள்ளது. மக்களுக்கும் இந்த புலி இராணுவ கும்பலுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்தே வந்துள்ளது. தமது சொந்த நடத்தைகளே, தமது இராணுவ கும்பலுக்கு ஆட்களை பெறுவது மேலும் சிரமமானதாகி விடுகின்றது.
இதன் ஒரு அங்கமாகவே மிகவும் பின்தங்கிய சமூக அறிவு மட்டத்தில் உள்ள, இளம் பெண்களை முதலில் அணிதிரட்ட முடிந்தது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் அடிமைநிலையால், இயல்பாகவே பின்தங்கிய அறிவு மட்டத்தினை உடைய பெண்களை புலிகள் தமக்கு சார்பாக பயன்படுத்தினர். பெண்களை தமது இராணுவ கும்பல்வாத செயலுக்காக பெருமெடுப்பில் அணிதிரட்டினர். இதுவும் வாழ்க்கை அனுபவம் மற்றும் பொதுவான சமர்ச்சீரான நிலையால், தொடர்ந்தும் இந்த இராணுவ கும்பல்வாத அரசியலுக்கு அணிதிரட்டும் பாதை முட்டுக்கட்டைக்கு உள்ளானது. இதை அடுத்து குழந்தைகளின் அறியாப் பருவத்தையும், கவர்ச்சிகரமான மயக்கத்தையும் பயன்படுத்தி தமது இராணுவ கும்பல்வாத அரசியலுக்கு ஏற்ற கூலிக் கும்பலாக குழந்தைகளை மாற்றியமைத்தனர். இந்த குழந்தைகளின் அரசியல் அறிவே நாலு தூசணம் தான். இதைவிட்டால் எந்த பொது அறிவும் கிடையாது. இந்த குழந்தைகளுக்கு சமூக வாழ்வுடன் ஒன்றிப் போன எந்த வாழ்வியல் உணர்வும், உணர்ச்சியும் கிடையாது. உணர்ச்சியற்ற பொம்மைகள் போல், கீயை முறுக்கிவிட்டால் கொலை வெறியாட்டத்தில் மூழ்கி எழக்கூடியவர்களாகவே, இவர்களை பிரபானிசம் உற்பத்தி செய்து குவித்துள்ளது. கொல் முடிந்தவரை கொல், இது அவர்களுக்க தெரிந்த நாலு தூசணத்துடன் உச்சாடனம் செய்யும் அதியுயர் தேசிய சித்தாந்தாமாகும்.
மக்களின் சமூக உழைப்பை சூறையாடி ஆடம்பரமாக வாழும் மேற்கத்தைய மனப்பாங்குடன் கூடிய லும்பன் உணர்வுடன், வெறிபிடித்து உறுமுகின்றனர். எந்நேரமும் துப்பாக்கி வேட்டுகளை தீர்க்கும் மனவுளைச்சல் சார்ந்த ஒரு உணர்வுடன், கூண்டில் அடைத்து கிடக்கும் வெறிகொண்ட ஒரு விலங்காகவே இந்த குழந்தைகளை பிரபானிசம் உற்பத்தி செய்துள்ளது. மறுபுறம் சமூகம் தனது குழந்தையை இட்டு கொண்ட பயப்பீதி, இயல்பாகவே தமது சொந்தக் குழந்தைகளை, இந்தப் புலி இராணுவ கும்பல் நெருங்காத வண்ணம் அதீதமான கண்காணிப்பை கொண்ட தற்காப்பை அடைந்தது. இது இயல்பாகவே குழந்தைகளை ஆயுதபாணியாக்கும் பிரபானிச சித்தாந்தம் தடைப்பட்டு, புலி இராணுவ கும்பலுக்கு ஆட்களை சேர்ப்பதில் புதியதொரு நெருக்கடி உருவானது.
வெறிகொண்டு அலையும் புலி இராணுவ கும்பல், இதில் இருந்து மீள பலாத்காரமாகவே குழந்தைகளை கடத்திச் சென்று இராணுவ மயமாக்கும் திட்டத்தை இன்று அமுல்படுத்தியுள்ளனர். எங்கும் கட்டாய இராணுவ பயிற்சி என்ற பலத்காரமான செயல் நடத்தைகள், இன்றைய எதார்த்தமான செய்தியாக உள்ளது. இதையே மக்கள் புரட்சி என்று பிரபானிச சித்தாந்தம் வரையறுக்கின்றது. கட்டாய பயிற்சி முறைக்கு, குழந்தைகளை கடத்திச் செல்லுதல், இன்று புலியின் அரசியல் நடத்தை நெறியாகியது. புலிகளின் அரசியலில் இதுவும் ஒன்றாகிவிட்டது. புலியின் அரசியல் என்பது வரி அறவிடல், குழந்தையை கடத்துதல், படுகொலைகளை செய்தல், மக்களை கண்காணித்தல், வன்முறையை சூழ்ச்சியாகவே தூண்டுதல், பொய்களை உற்பத்தி செய்து விதண்டாவாதமாக்குதல், இதைத் தாண்டி புலிக்கு என்று வேறு அரசியல் கிடையாது.
அமைதி சமாதானம் என்ற புலிகள் வரையறுப்பது இதைத்தான். தாம் விரும்பியவாறு சுதந்திரமாக இதைச் செய்யும் உரிமையை, அங்கீகரிப்பதைத் தாண்டி வேறு எதுவுமல்ல. இதற்கு ஒரு அரசியல் அதிகாரத்தைக் கோருகின்றனர். இதையே தமிழீழத்துக்கான முதற்படி என்கின்றனர்.
இதுவே பேரினவாதத்துக்கு மிகவும் இனிப்பான ஒரு விடையம். தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதம், எதை காலகாலமாக செய்ய நினைத்ததோ அதை புலிகள் நடைமுறைப்படுத்தி இருப்பதையிட்டு பேரினவாதம் மகிழ்;ச்சியில் திளைக்கின்றது. தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வு புலிகளின் நடைமுறை ஏற்படுத்தும் ஆழமான பாரிய சிதைவு, பேரினவாதத்தின் ஆதிக்க மனபான்மைக்கு இனிப்பான ஒரு வெற்றிதான். இதன் மூலம் தமிழ் மக்கள் மீள முடியாத வரலாற்று சிதைவைச் சந்தித்துள்ளனர். புலிகள் என்ற இராணுவக் கும்பல் தமிழ் மக்களின் வாழ்வையே இன்று சூறையாடும் நிலையில், இயல்பாகவே இலங்கையில் சிங்கள இனம் மேன்மை பெற்ற ஆதிக்க இனமாக மாறிவிட்டது. இது பல தளத்தில் நிகழ்ந்துள்ளது.
இது எண்ணிக்கையில், பொருளாதார பலத்தில், சமூகக் கூட்டில், பண்பாட்டில் என எங்கும் தமிழ் சமூகத்தை விடவும், மிகவும் மேன்மை பெற்ற ஒன்றாகவும், பலம் பொருந்திய ஒன்றாக மாறிவிட்டது. மலையக, முஸ்லிம் மக்கள் கூட தமிழ்மக்களின் வாழ்வை விட மேன்மை பெற்ற, ஒரு சமூக அடிப்படையை அடைந்துள்ளனர். உண்மையில் புலியின் சமூக நடத்தை நெறிகள் எங்கும் எதிலும், தமிழ் இனத்தின் சுய அடையாளத்தை அழித்து வருகின்றது. தமிழ் மக்களின் சமூக இருப்பின் அழிவு, புலி இராணுவ கும்பலின் சுகபோகமான வாழ்வுமுறையாக பரிணமிக்கின்றது. இதற்காகவே வெறிகொண்ட மனித விரோதநடத்தை நெறிகள் மேலும் மேலும் கூர்மையாகின்றது.
அமைதி சமதானம் என்று, எதை எங்கு நோக்கிலும், அங்கு அதில் புலிகளின் மனிதவிரோத நடத்தையே மேன்மை பெற்ற போக்காக உள்ளது. தனது சொந்த மக்கள் விரோதத் தன்மையிலான போக்கையிட்டு, எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாத கூலி இராணுவ குணாம்சத்தை பெற்றுவிடுகின்றது. இதற்கு தலைமை தாங்கும் பிரபானிச சித்தாந்த தலைமை, தனது குறுகிய சொந்தப் பாதுகாப்பு என்ற குறுகிய வேலிக்குள் மேலும் மேலும் பதுங்கிக் கொள்கின்றது. தனது சொந்த நடத்தையால் மக்களையிட்டு ஏற்படும் அச்ச உணர்வு, இயல்பாகவே அனைத்தையும் எதிரியாக காண்பதும் சித்தரிப்பதும் அன்றாட போக்காகிவிடுகின்றது. கண்ணை மூடிக்கொண்டு கண்ணில ;படுவதை எல்லாம் சுட்டுப் பொசுக்கி, தமது சொந்த பிரபானிச சர்வாதிகார கனவில் மிதக்கின்றது. காலகாலமாக அவர்கள் திண்டு குடித்து வளர்ந்த இராணுவப் பாதை, எந்தவிதமான மாற்றமும் இன்றி அனைத்தையும் இராணுவ வழியில் காண்கின்றது. இதுவே கூலி இராணுவத்துக்குரிய கண்ணோட்டத்தை பெற்றுவிட்டது. கூலி பிரச்சாரக் கும்பல், கூலி புத்திசீவிக் கும்பல் என்று எங்கு திரும்பிலும், எதிலும் கூலித்தனம் காணப்படுகின்றது.
விரிவான கட்டுரைக்கு http://tamilcircle.net/news/europ.htm
Thursday, October 13, 2005
மக்களின் வாழ்வை
இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் ஐரோப்பாவின் இன்றைய முடிவுகளையிட்டு கூறியவை, தமது சொந்த குழுவாத இராணுவ எல்லையைத் தண்டியவையல்ல. மக்களின் நலனையிட்டு அலட்டிக் கொள்ளாத அதே நேரம், சொந்த மனித விரோத நடத்தையையிட்டு அலட்டிக் கொள்ளாது புலம்பமுற்படுகின்றார். ஐரோப்பியா என்ற எகாதிபத்தியம் பற்றிய, தேசிய உணர்வு எதுவுமற்ற நிலையில் இந்தப் புலம்பலே வெறும் அலட்டலாகவே மாறியது. கிளியைப் போல் பினாற்றும் இந்த அலட்டல், வழமைபோல் எதுவும் நடைமுறைக்கு உதவாத சொற்களின் கோவையாக இருக்கின்றது. இருந்தபோதும் கூட தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இந்த இராணுவ கும்பல்வாத புலிகளே இருப்பதால், இதனை நாம் மக்கள் நோக்கில் இருந்து பரீசிலிப்பதை அவசியமாக்கின்றது.
தமிழ்ச்செல்வன் "இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் பங்கேற்றுள்ள இருதரப்பினரில் ஒருதரப்பாகிய தமிழரின் நியாயத்தைச் சொல்லும் பாதைகளை தனது பயணத் தடை மூலம் ஐரோப்பிய ஒன்றியம் மூடியிருப்பதாக" கூறுகின்றார். தமிழ்ச்செல்வன் கூறுவது போல் எந்த சமூக நியாயத்தையும் யாரும் தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் சமூக நியாயமல்லாத எதையும் யாரும் தடுத்த நிறுத்தமுடியும். ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த ஏகாதிபத்திய மேலான்மை மூலம், தனது தடைகள் மூலம் தமிழரின் நியாயங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு இனத்தின் நியாயத்தை உலக மக்களிடம் சொல்வதை யாரும் தடுக்க முடியாது. இங்கு உள்ள அடிப்படை விடையமே, தமிழர் தரப்பில் நின்று எமது நியாயத்தையே நாங்கள் சொல்ல தவிறிவிட்ட எமது அரசியல் நிலையில், அவை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு புதைகுழிக்கு அனுப்பபட்டுவிட்டது. தமிழரின் நியாயம் என்று எதையெல்லாம் நாம் இன்று சொல்ல முனைகின்றோம். உண்மையில் மக்களின் சமூக பொருளாதார நியாயங்களை நாம் சொல்வதில்லை. புலிகளின் சொந்த நலன் சார்ந்த நியாயங்களையே, தமிழரின் நியாயங்களாகிவிட்ட நிலையில், உலக மக்களிடம் சொல்வதற்கு என எதுவும் இருப்பதில்லை. இந்த தடைக்கு முன்னம் ஐரோப்பிய மக்களுக்கு என்ன நியாயத்தைத் தான் புலிகள் சொன்னர்கள். எமது தலைவர் பிரபாகரன் என்று சொன்னதைத் தவிர, வேறு எதைத்தான் சொல்ல முடிந்தது. தமிழர்தரப்பு நியாயம் என்று சொல்வதற்கு புலிகளிடம் எதுவும் இருப்பதில்லை.
ஐரோப்பியத் தடை தெளிவாக புலிகளிடம் ஒரு செய்தியைக் கூறுகின்றது. அதாவது படுகொலைகளை நிறுத்தும் படி. சிறுவர்களை இராணுவ நடவடிக்கைக்கு திரட்டுவதை நிறுத்துக் கோருகின்றது. மிக நுட்பமாக இதனடிப்படையில் தடை அறிவிக்கப்பட்டது. கொல்வதும், சிறுவர்களின் சமூக அறியாமையை சுயநலனுக்கு பாவிப்பதையும் தமிழர் தரப்பு நியாயமாக எப்படி நாம் எற்றுக் கொள்வது. யாராலும் இதை தமிழரின் உரிமை என்று கூற முடியுமா? ஆனால் தமிழ்ச்செல்வன் இதற்கு நேர்மையாக பதிலளிக்காது "தமிழர் தாயகத்தில் எமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டு வருவது தீவிரமடைந்து வருகின்றன. இதை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்." என்கின்றார். தமது தரப்பு மீதான கொலைகளை இதற்கு மாற்றாக வைத்து, தாம் கொல்லும் உரிமையை நியாயப்படுத்துகின்றனர். புலிகள் தரப்பில் சார்ந்தவர்கள் ஒப்பிட்டளவில் சிறுபகுதியினர் மட்டுமே. தமிழர்கள் பெருமெடுப்பில் கொல்லப்பட்டதைப் பற்றி பேசாது, தமது தரப்பில் கொல்லப்பட்டத்தை மட்டும் பேசுகின்றார். தமிழரின் எகபிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வதில் உள்ள முரண்நிலை இது.
தமது தரப்பு அல்லாத கொலையைக் கண்டிக்கத் தவறுவதுடன், கொலைகளை தொடர்ந்தும் புலிகள் அன்றாடம் செய்கின்றனர். ஏன் இந்த தடைக்கு பின்பும் கொல்லப்படுகின்றனர். இது சற்று மாறி அடித்துக் கொல்வது என்ற புதிய வடிவில் மாற்றம் காண்கின்றது. புலிகள் தரப்பின் மீதான தாக்குதல்கள் குறிப்பாக மட்டகளப்பிலேயே அதிகமாக உள்ளது. அங்கு புலியில் இருந்து பிரிந்த கருணா தரப்பு உடன் நடக்கும் பரஸ்பர மோதலே இக் கொலைகளின் அடிப்படையாகும்;. இந்த மோதலில் யாரும் தலையிடக் கூடாது என்ற பிரகடனம் செய்த புலிகள் தான், இன்று தொடரும் பரஸ்பர மோதலில் கொல்லப்படுபவர்களையே தம்தரப்பு மீதான கொலைகளாக காட்டுகின்றனர்.
இன்று இதையும் தாண்டி கிழக்கில், இராணுவம் மீதான ஒரு தரப்பாக தொடாச்சியான குண்டுத் தாக்குதலை புலிகள் நடத்துகின்றனர். இதை வடக்குகிழக்கு எங்கும் பொது நடைமுறையாக்கவே புலிகள் தீவிரமாக முனைகின்றனர். யுத்தத்தைத் துண்டும் வகையில், இவை உந்தித் தள்ளப்படுகின்றன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு நோக்கிய ஒரு கவணத்தை திருப்புவதற்கு பதில், சொந்த மக்கள் விரோத நடத்தைகளை மூடிமறைக்கவே குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கின்றனர். இது ஐரோப்பிய தடையை எந்தவிதத்திலும் மாற்றுவதற்கு பதில் தீவிரமாக்கும். ஐரோப்பிய தடையில் உள்ள எகாதிபத்திய அம்சத்தை தனிமைப்படுத்தி அதை அம்பலப்படுத்தி ஐரோப்பிய மக்களை வென்றெடுக்கும் உத்தி, இங்க தமிழ்ச்செல்வனால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகின்றது. தொடர் கொலைகளை நிறுத்தவும், சிறுவர்களை படையணிக்காக கடத்துவதை நிறுத்தவும் தவறும் புலிகள், அதை செய்யும் உரிமையைத்தான் ஐரோப்பிய தடடையை நீக்குவதற்குடாக கோருகின்றனர். இது ஒரு முரண்நிலையானதும், அறிவியலுக்கு உதாவதும் கூட.
ஐரோப்பிய தடையை நீக்கக்கோரிய கையெழுத்து வேட்டையும், ஊர்வலங்களும், எழுச்சி மாகநாடுகள் எதுவும் இந்த தர்க்கத்தின் முன் வீண்விரயமாகிவிடும. தமிழ்மக்களை அன்றாடம் கொன்று குவிக்கும் உரிமைக்காக, தம் மீதான தடை நீக்கக் கோருவது அர்த்தமற்றவை. மாறக நடைமுறையில் கொலைகளை நிறுத்தி, முன்மாதிரியாக சுயவிமர்சனம் செய்து தடைக்கு எதிராக அதில் உள்ள ஏகாதிபத்திய உள்ளடகத்துக்கு எதிராக போராடவேண்டும். இந்த போராட்டதத்தை மறுக்கும் வரை, இவை எல்லாம் விலலுக்கு இறைத்த நீராகவே அமையும். ஐரோப்பிய மக்களைக் கூட தமக்கு சார்பாக வென்றுறெடுக்க முடியாது. இந்த நிலையில் தான் தமிழ்ச்செல்வன் "யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்த வேண்டும்." என்ற வாய்கூசாது கூறுகின்றார். சிங்களப் பேரினவாதம் தான் ஒப்புக்கொண்ட விதிகளை அழுல்படுத்துவதற்கு முன்னம், அதைக் கோரும் எமது தரப்பு அதில் நேர்மையாக செயல்படுவது அவசியமானது. சொந்த அரசியல் நேர்மையில் நின்று தான், மற்றவனின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பமுடியும். நான் நேர்மையினமாக இருந்து கொண்டு, மற்றவனின் நேர்மையினம் பற்றி சிலாகிப்பது அர்த்தமற்றவை.
இதில் முக்கியமானது புலிகள் ஒருதரப்பாக தமிழர் தரப்பைக் கொல்வதும், சிறுவர்களை கடத்திச் செல்வதும். இதை நாங்கள் செய்யும் உரிமை தான், யுத்தநிறுத்த ஒப்பந்த விதி என்று தமிழ்ச்செல்வன் கூற முனைகின்றார். இது புலி இராணுவவாத கும்பல்களின் அரசியலற்ற வெட்டித்தனத்தின் விளைவே இப்படி வெளிவருகின்றது. இந்த நிலையில் இந்தத் தடையை "இலங்கைத் தீவில் அமைதியைக் கொண்டு வரும் இருதரப்பினருடைய சம அந்தஸ்தை, சம அங்கீகாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக" தமிழ்ச்செல்வன் தாங்கள் விரித்த வலையின் மேல் நின்று கொண்டு பிதற்றுகின்றார். உண்மையில் சம அந்தஸ்து என்ற நிலையை பலவீனமாக்குவது ஐரோப்பிய யூனியனா அல்லது நாங்களா என்ற கேள்வியை நேர்மையாக புலிகள் எழுப்பி விடையளிக்க வேண்டும். தமிழர் தரப்பை ஒரு தரப்பாக நாமே கொன்று குவிப்பதால் தனித்தரப்பாக இருக்கும் அங்கீகாரத்தை இழந்துவரும் தீவிரமான இன்றைய நிலையைத்தான் முதலில் கேள்வியாக எழுப்பவேண்டும். அதற்கு பின்புதான் ஏகாதிபத்தியங்களின் சொந்த உள்நோக்கை தமிழச்செல்வன் கூறுவது போல் அல்லாது, ஏகாதிபத்திய உள்ளடகத்தில் கேள்விக்குள்ளக்க வேண்டும்.
சம அந்தஸ்துடனான உங்கள் நிலையை நீங்களே தகர்த்த படி, அதை மற்றவன் தகர்ப்பதாக கூறுவதே நகைப்புக்குரியது. இப்படி நாம் செய்தபடி "சர்வதேச சமூகத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை பலவீனமடைந்து போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்ற கூறுவது வேடிகை தான். இதை தமிழ்மக்களின் பெயரில் இதைக் கூறவது மிகக் கேவலமானது. மக்கள் தான் வன்முறையில் ஈடுபடுவதாகசுவும், தமிழ் மக்கள் தான் கொலை செய்வதாகவும் புலியின் அரசியல் விளக்கங்கள் ஒருபுறம் அடிக்கடி கூறப்படுகின்றது. இதன் மூலம் மக்களின் பெயரில் பிரபானிசமே சந்திக்கு வருகின்றது.
சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழப்பதாக தமிழ் செல்வன் கூறும் போது, இது புலியின் நம்பிக்கை பற்றிய பிரச்சனையாகவே மாறுகின்றது. இந்த நம்பிக்கையினம் தாம் கொலை செய்யும் உரிமை மீது கோரமுடியும் என்ற பிரபானிசத் தத்துவத்தை, மக்களின் பெயரில் வெளியிடுவதே அபத்தமாகும். மக்களா கொலை செய்யச் சொன்னார்களா? மக்களா அறியப்பருவம் கொண்ட தமது பச்சிளம் சிறு குழந்தைகளை, கடத்திச் சென்று பயிற்சி அளிக்கச் சொன்னர்கள்? இதன் மீது தடை வரும் பொது, மக்கள் நம்பீக்கை தகர்ந்து நிற்கின்றார்கள் என்று வாய்கூசாது எப்படித் தான் இப்படி அபத்தமாகவே புலிகளால் சொல்ல முடிகின்றது.
இப்படி அப்படி புலம்புவது பின் "யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தினோம்." என்ற கூறுவது என்பது, கபடர்களின் நேர்மையற்ற ஒரு செயல். தமிழ் மக்களையே அவாகளின் பெயரில் எமாற்றும் நரித்தனம.; கேள்விக்குள்ளாகத வாய்பூட்டு அரசியல் சர்வாதிகாரத்தில், இப்படி எதையும் எப்படியும் சொல்லிவிட்டுச் செல்லாம் என்ற நிலையில் இன்று தமிழ் மக்களின் சமூக அவலம் உள்ளது.
இந்த நிலையில் "கதிர்காமரின் கொலையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ளாமல் சிறிலங்கா அரசின் ஒருதலைப்பட்சமான முறைப்பாடுகளையும் குற்றச்சாட்டுகளையும் மட்டும் நம்பி ஐரோப்பிய ஒன்றியம் இப்படியான முடிவுகளை எடுக்கக் கூடாது" என்று கூறுவதற்கு முன், இது போன்ற நடத்தை நெறிகளை நீங்கள் கொண்டிருப்பதை நீங்கள் நடைமுறையில் மாற்றி காட்டியிருக்க வேண்டும். அமர்தலிங்கத்தின் கொலையின் போது கூட, அதை நீங்கள் அல்ல என்றீர்கள். புலியில் இருந்து பிரிந்து சென்ற சிலரின் உதிரி நடவடிக்கை என்றீர்கள். பின் தமிழ்ச்செல்வன் கொலைக்கான காரணத்தை தலைவரிடமே கேட்க் வேண்டும் என்றார். ராஜிவ் கொலையில் போது நீங்கள் அல்ல என்றீர்கள். இதை புதியஜனநாயகம் குழு செய்தாக கூறினீர்கள். பின் உதிரி குழுக்களின் நடவடிக்கை என்றிர்கள்;. இதை பின் ஒரு துன்பவியல் சம்பவம் என்று இன்று வருணிக்கின்றீர்கள். 1985 இல் அணுதாரபுரத்தில் நடந்த 150க்கு மேற்பட்ட கொலையை மறுத்தீர்கள். பின் அதை இந்தயா தந்த பணத்துகாக செய்தாக கூறினீர்கள். இப்படி பற்பல. இப்படி பல கொலைகளுக்கு நடந்தது.
நேர்மையான அரசியல் முன்மாதிரி இல்லாத உங்கள் நடத்தை நெறிகள், உண்மையில் நீங்கள் ஒன்றை செய்யவிட்டாலும் கூட உங்களுக்கு அது பொருந்திவிடும் நிலையில் நீங்கள் இருப்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அதை மாற்றுவதே அவசியமானது. புலிகள் பூனையாகிவிடவில்லை. இது சிலருக்கு எற்பட்ட மாலைக் கண் நோயால் அப்படி விபரிதத் போதம், உண்மை அப்படியல்ல. முதலில் நாம் எதையும் செய்யவில்லை என்று சொல்ல முன், நாம் நிச்சயமாக எம்மையும் எமது நடத்தைகளை சுயவிமர்சனம் செய்து சீரிய நடைமுறையில் மாறியிருக்க வேண்டும்.
தமிழ்ச்செல்வன் கூறுகின்றார் "அமைதி முயற்சிகளில் இரண்டு தரப்புகள் இருக்கின்றன." என்ற கூற்று, எப்படி தொடரும் கொலையை நியாயப்படுத்த போதுமானது. உண்மையில் இப்படி கூறியபடி தொடரும் கொலைகள், படிப்படியாகவே அமைதி முயற்சியில் ஒரு தரப்பு சார்ந்த தீர்வாக மாறும் ஒரு நிலையை நோக்கிய, எகாதிபத்திய நகர்வுகள் மாறிச் செல்வதையே துரிதமாக்கின்றது. அதாவது புலிகள் தாங்களாகவே அதில் இருந்து விலகி, ஒரு தரப்பாக அரசு தீர்வை முன்வைக்கும் வகையில் தம்மைத் தாம் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் பின்பாகவே சர்வதேச நகர்வு உள்ளது. இந்த சர்வதேச நகர்வை புரிந்து கொள்ளாமல் அலட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை. இந்த நிலையில் "சமதரப்பு என்ற அடிப்படையில் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைச் சொல்வதற்கான பாதைகளை மூடிவிட்டு மற்றொரு தரப்பான சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கிற குற்றச்சாட்டுகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது என்பது எந்த விதத்திலும் நியாயமற்றது" என்ற கூறுகின்றனர். உண்மையில் தளித்தரப்பாகவே விலகிவரும் புலிகள் நடத்தைகள் உள்ளது. இதை புலிகளின் கொலைக் கலச்சாரம் தூண்டிவருகின்றது. இந்த நிலையை சிறிலங்கா பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமும் எற்படுத்தியதற்கு அப்பால், புலிகள் தாமவே இந்த நிலையை எற்படுத்தி வருவது முதன்மையான ஒன்று. ஏகாதிபத்தியமும், பேரினவாதிகளும் புலிகளின் நடத்தை நெறிகளில் இருந்தே, இதற்கான சாதகமான கூறுகளைப் பெறுகின்றனர். அவர்கள் தனித்து எந்த முடிவுகளையும் அந்தரத்தில் எடுக்கவில்லை. புலிகளின் நடத்தைகளில் இருந்து, தமது நோக்கத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கின்றனர். தமிழ்மக்களின் தேசியம் சார்ந்த ஜனநாயக கோரிக்கையில் இருந்து, இந்த முடிவை எடுக்கும் ஒரு நெம்புகோலை மக்கள் வழங்கிவிடல்லை. மக்களுக்கு எதிராக இயங்க கங்கயம் கட்டி நிற்கும் புலிகளின் சொந்த நடத்தை நெறிகள் தான் இதை வழங்குகின்றன.
இந்த நிலையில் இந்தத் தடை "தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி இருக்கிறது. தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். தமிழர்கள் மீது இன வன்முறையை, ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்துவிட சிங்கள இனவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதுபோல் இம்முடிவு அமைந்திருக்கிறது." "ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினால் சிங்கள இனவாத சக்திகள் பலமடைந்திருக்கின்றன." என்று கூறுவதில் உள்ள உண்மைக்கு அப்பால், இந்த நிலமையை உருவாக்கிய எமது தரப்பு மனித விரோதச் செயலுக்காக நாம் வெக்கப்பட வேண்டும். பேரினவாதத்தை எப்பொதும் பலப்படுத்தி வந்தவை எமது சொந்த நடவடிக்கைகளே. எமது சொந்த நடத்தை நெறிகள் மகக்ளுக்கு எதிராக மாறுகின்ற போது, அதை மக்களுக்கு எதிரான மற்றைய சக்திகள் பயன்படுத்துவது இயல்பானது. இதையே இன்று புலிகள் செய்கின்றனர்.
இதில் இருந்து தப்பிப்பிழைக்கவே தமிழ்ச்செல்வன் வழமையான வகையில் "எங்களைப் பொறுத்த வரையில் சமாதான முன்னெடுப்புகளில் காத்திரத்துடனும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவில் வலுவுடனும் இருக்கிறோம்." இது காலவாதிகிப் போன வழமையான புலிகளின் விளையாட்டு அனுகுமுறை. பேரினவாதம் பலம்பெற்று வரும் இன்றைய நிலையில், இந்த தந்திரம் யாராலும் நேர்மையாக இருப்பதாக கருதுவதில்லை. வழமையானதும், குருட்டு தனமானதுமான அனுகுமுறை. இலங்கை அரசு மட்டுமல்ல, உலகமே இந்தச் சூழச்சியை புரிந்து கொள்கின்ற இன்றைய நிலையில், தமிழ்மக்கள் கூட இதை நம்பத் தயாரற்ற நிலையில் உள்ளனர். இப்படி கூறுவது, தம்மைத்தாம் திருத்தி செய்கின்ற ஒன்றுதான். தமிழ்செல்வன் ஒரே வார்த்தைகளை மீள மீள கூறுகின்ற ஒரு கிளிப்பிள்ளையாக இருப்பதால், இதைத் தாண்டி எதையும் சமூகத்தின் முன் வைக்க முடிவதில்லை. நடைமுறைக்கும், சொல்லும் வார்த்தைக்கும் உள்ள இடைவெளியும், வழமையான வகையில் அமைகின்றது. அவர்களே தாம் வெட்டும் புதைகுழியில் புதைந்து போகும் வகையில் மாறி வருகின்றது. இதை பேரினவாதம் பெருவெற்றிக் களிப்புடன் காண்கின்றது. புலிகள் தாமகவே தாம்மை தனிமைப்படுத்தி வெறும் இராணுவக் கும்பல் வாதத்துக்குள் மூழ்கடிந்து நிற்கின்றது. தனது குழுவாத சொந்தக் கோரிக்கைக்களை கூட சிதைக்கும் உத்தியுடன் இயங்குகின்றது. இந்த நிலையில் "நீண்டகாலமாக இன வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம் கொடுத்த எம்மக்கள் அரசியல் விழிப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் அனைத்தும் நீதியான முறையிலேயே நடைபெற்று வந்துள்ளது." என், மக்களின் பெயரில் தமிழ்ச்செல்வன் ஒபபாரி வைக்கின்றார். தமிழ் மக்கள் பேரினவாதத்தை எப்படி புரிந்து, அதை எப்படி தமது சொந்தக் கோரிக்கையாக முன்வைக்கின்றனர் என்பதில் இருந்தே அனைத்தும் அம்பலமாகி விடுகின்றது. மக்கள் தமது சொந்த அரசியல் பொருளாதார சமூகக் கூறுகளில் இருந்து, பேரினவாதத்தைப் புரிந்து நிற்கின்றனர் என்று, தமிழ்சசெல்வனால் ஒரு நாளுமே கூற முடியாது. புலிகளே அதை புரிந்து கொண்டது கிடையாது. புலிகளின் அடிமைகளாகவே அடிமைப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் கதி அதைவிடக் கீழனாதே.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் "..காலம் காலமாக மாறி மாறி வந்த சிறிலங்கா அரச தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதிலும் தமிழ் மக்களின் மீதான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்துவதிலும்தான் ஈடுபட்டு வருகிறார்கள்." என்று கூறுவது மூலம், சொந்த மக்கள் விரோத நடத்தைகளை நிவர்த்தி செய்யமுடியாது. தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் பெயரில் மக்களையே காலகாலமாக எமாற்றும் போது, அதை பேரினவாதத்தால் மிக இலகுவாகவே எமாற்ற உதவுகின்றது. பேரினவாதம் தமிழ் மக்களை எமாற்ற, நாமே காரணமாக இருக்கின்றோம். இதற்கு எமது சொந்த நடத்தைகள், சொந்த அரசியல் நெறிகள் தான், இலகுவாக பேரினவாதம் மக்களை எமாற்ற உதவுகின்றது. நாங்கள் சரியாக இருந்தால், எந்த பேரினவாதமும், எந்த எகாதிபத்தியமும் எமது மக்களை எமாற்றமுடியாது. நாங்கள் எதை இந்த உலகத்திடம் கோருகின்றோம். எமது மக்களின் சொந்த சமூக பொருளாதார வாழ்வியல் மீதான உரிமையைக் கோருகின்றோமா? அல்லது புலிகளின் இராணுவ நலன் சார்ந்தவற்றை கிறக்குபுத்தியுடன் கோருகின்றோமா?
இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் கூறுகின்றார் "நீண்ட சமாதான காலத்தின் மீது தமிழ் மக்கள் விரக்தியும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் தங்களுடைய அரசியல் அபிலாசைகளை நேரடியாக திரண்டு வந்து சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கிற நிகழ்வுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளன." என்ன வெற்றுவேட்டுத் தனம். மக்களை பினாமி அமைப்புகளின் வெயரில், மக்களின் சொந்தக் கோரிக்கைகள் அல்லாத புலிக் கோரிக்கைகளின் பெயரில் கூட வைக்கும் கும்பல் சேர்க்கும் நடத்தைகள் மூலம், எதையும் தமிழ்மக்கள் உண்மையில் பெறப்போவதில்லை. மாறாக மேலும் மேலும் புலிகள் மக்களிடம் இருந்து அன்னியமாவதுடன், உலகில் இருந்தும் கூட அன்னியமாகின்றனர்.
விரிவான கட்டுரைக்கு http://tamilcircle.net/news/europ.htm
Wednesday, October 12, 2005
பிரபானிசம் மீதான சர்வதேச நெருக்கடி
இந்தப் பல்லவி ஒருபுறம் கண்ணை மூடிக்கொண்டே பூனையாட்டம் எல்லாம் சரியாக இருப்பதாக கனவில் மிதக்க வைக்கின்றது. ஆனால் உலகம் வேகமான நகர்வுகளை பிரபானிச சித்தாத்தின் மீதாக நடத்திக் கொண்டுள்ளது. இன்று தேசிய இனப்பிரச்சனை, வெறும் புலிப் பிரச்சனையாக உலகில் முன் மாற்றப்பட்டுவிட்டது. இது மிகவும் சேகமான விடையம். இது தமிழ் மக்களுக்கு எதிரானது. தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பதை உலகம் கைவிட்டு, பிரபானிச கொலைகளை நிறுத்துவது பற்றியும், சிறுவர்களை படைக்கு சேர்ப்பது பற்றி பிரச்சனையாக மாற்றிவிட்டது. இந்த நிலைமை எப்படி, எந்த நிலைமையின் கீழ், தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு எதிரனதாக முன்னுக்கு வந்துள்ளது என்பதை தமிழினம், இன்னமும் இனம் காணவில்லை. மாறாக இந்த நிலைமையிலும், கொலைகளும் சிறுவர்களை தமது படைக்கு பலக்காரமாகவும் திரட்டுவதும் அதிகரித்துச் செல்லுகின்றது.
இந்த நிலையில் குறித்த இரு நிபந்தனைகளின் மீது தான், ஜரோப்பிய பயணத் தடை அழுலுக்கு வந்துள்ளது. தொடரும் கொலைகள் முழுமையான தடையை நோக்கிய, ஒரு சர்வதேச நகர்ச்சியாக உள்ளது. புலிகள் இதை வலிந்து கோரும் வகையில், அவர்களின் நடத்தைகள் உள்ளன. புலிகள் என்ற இராணுவக் கும்பலின் சமூகபொருளாதார கண்ணோட்டங்கள், ஏகாதிபத்தியத்துக்கு எற்புடையதாக இருந்த போதும் கூட, அதன் மாபியத் தனம் அவர்களுக்கு எற்புடையவையல்ல. இந்த மாபியத் தனம் ஏகாதிபத்திய சமூகபொருளாதார நலன்களையே பாதிக்கும் வண்ணம், புலிகளின் செயல்பாடுகள் அமைந்து இருப்பதால் அதை அனுமதிக்கப் போவதில்லை. இலங்கை ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு ஏற்ற, ஒரு வளமான பிரதேசமாக, உள்ளது. இந்த நிலமைகளில் புலி என்ற இராணுவ மாபியத்தனம் மேற்க்கு அவசியமற்ற ஒன்றாகவுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனை என்ற அரசியல் விடையம் பின்தள்ளப்பட்டு, அவை மழுங்கடிக்கப்படுமளவுக்கு புலிகளின் தொடர்ச்சியான மக்கள் விரோத நடத்தைகள் காரணமாகியுள்ளது. புலிகள் பிரச்சனை கொலைகள் மற்றும் சிறுவர்களை படைக்கு அணிதிரட்டுதல் என்ற அடிப்படையில் குறுக்கிக் காட்டும் வகையில், உலகமே அதற்குள் சென்றுவிட்டது. உலகின் முன் தமிழ் மக்களின் பிரச்சனை படிப்படியாக காணமல் போய்விட்டது. இதை முதலில் புலிகள் முன் காணமல் போனது. இதுவே இன்று உலகமயமாகின்றது. உலகின் முன் புலிப் பிரச்சனை அவர்கள் செய்யும் கொலைகள், சிறுவர்களை படைக்கு திரட்டுதலாக குறுகிப் போய்விட்டது. புலிகளின் அரசியல் வேலை இதுவாகவே இருந்த போது, இதற்குள் சர்வதேச சமூகமும் வழிநடத்தப்படுகின்றது.
ஆளால் இங்கு கொலைகள், சிறுவர்களை படைக்குச் சேர்த்தல் எதிரான உண்மையான சமூக கருசணையில் இருந்த ஏகாதிபத்திய உணர்வுகள் வெளிப்படவில்லை. மாறாக இந்த நெம்புகோலில மூலம் தான், தனக்கு சாதகமான தலையீட்டை இலங்கையில் நடத்தும் ஒரு புற நிலையான தயாரிப்புக்குள் உலகம் சென்றுள்ளது.
இன்று இலங்கையில் ஒரு தலையீட்டை நடத்தக் கூடிய புறநிலையான தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. இதற்கு எற்ப புலிகள் என்ற இராணுவக் கும்பலின் நடத்தைகள், சாதகமான விளைவுகளை உருவாக்கி வருகின்றது. ஏகாதிபத்திய அரசக்கும், அந்த நாட்டு மக்களின் உணர்வுக்கு இடையில் உள்ள இடைவெளி, இலங்கை பிரச்சனையில் முரண்பாடத வண்ணம் இருப்பதற்கு, புலிகள் நடத்தைகள் காரணமாக அமைந்து வருகின்றது. கொலைக் கலச்சாரமும், சிறுவர்களை படைக்கு சேர்த்தல் ஏகாதிபத்திய மக்களால் எற்றுக் கொள்ள முடியாத அதேநேரம், அரசுடன் முரணற்ற வகையிலான இத இணைப்பை எற்படுத்தி விடுகின்றது. உண்மையில் எதிர்கால நிகழ்ச்சிகள் எப்படி நிகழவாய்ப்பு உண்டு என்பதை, ஊகிப்பது சிரமானதல்ல.
ஒன்றுபட்ட ஏகாதிபத்திய தலையீட்டுகான சூழல், நிச்சயமான தயாரிப்பில் இருப்பதை நாம் முதலி;ல் தெளிவாகவே இனம் கண்டேயாக வேண்டும். அதற்கு முன்பாக புலிகள் விரும்புகின்றனரா அல்லது இல்லை என்பதைத் தாண்டியும், ஒரு தீர்வுத் திட்டத்தை ஏகாதிபத்தியம் இலங்கையில் உருவாக்கும். இந்த அடிப்படையில் இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமான ஒரு தீர்வுத்திட்டத்தை அறிவிக்கும் நிலைமை முனைப்பு பெற்றுள்ளது. இதை தெளிவாக எகாதிபத்தியம் முன்தள்ளி வருகின்றது. இன்றைய தேர்தல் இதை மிகவும் சாதகமாக்குவதுடன் (இங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்), புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் வகையில் இந்தத் நிரந்தர தீர்வுத்திட்டம் அமையும். அதாவது இந்தியா ஆக்கிரமித்த போது, எற்பட்ட திர்வுத்திட்டம் போல் அல்லாது, இது சர்வதேச ரீதியாக முன்வைக்கும் சூழல் அதிகரிக்கின்றது. இதை கண்காணிக்கும் உரிமைய ஐ.நா தலைமையிலான இராணவத் தலையீடாகவே அமையும். இதன் போது புலிகள் பேச்சு வார்த்தைக்கு தயாரற்றதும், அரசியல் அல்லாத இராணுவக் கும்பலாக இருப்பதை தனிமைப்படுத்தி காட்டுவதில் வெற்றி பெறுவார்கள். இதற்குபுலிகளின் சமகால நடத்தைகளே அச்சாணியாக அமையும்.
இந்த நிலையில் மனிதப் படுகொலைகள், சிறுவர் படையணிக்கு திரட்டுதலை மனித இனத்துக்கு எதிரான ஒரு குற்றமாக பிரகடனம் செய்யும், அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி ஏகாதிபத்தியம் செல்லுகின்றது. இதன் மூலம் புலிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குரிய ஒரு குற்றவாளிகளாக பிரகடனம் செய்யும் நிலைமையும், குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை உலகம் எற்கும் ஒரு நிலைக்கும் நிலைமை மாறிச் செல்லுகின்றது. புலிகளின் வலிந்து செய்யும் அன்றாட நடத்தைகளே, இதை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளது.....
வெளிவரவுள்ள ஒரு கட்டுரையின் ஒரு சிறு பகுதியில் இருந்து
Tuesday, October 11, 2005
மலையக மக்களின் இரத்த
மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது. இலங்கையில் திட்டமிட்ட தொடர்ச்சியான இனவழிப்பு வரலாற்றை இந்த மக்களுக்கு எதிராகவே, தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகள் கூட்டாக தொடங்கி வைத்தனர். இதை நீண்ட வரலாற்றுப் போக்கில் மூடிமறைத்ததன் மூலமும், மௌனம் காத்ததன் மூலமும் இன அழிப்பை ஊக்குவித்தனர். குறுந் தமிழ் தேசியம் இன ஒடுக்கமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய போதும், இந்த மக்களையிட்டு அக்கறைப்படவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1987 இல் செய்து கொண்ட ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கூட, இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை ஏற்றி வரும் கப்பலில் மலையக மக்களை நாடு கடத்துவது என்றே ஒப்பந்தம் வரையறுக்கின்றது. ஒரு இனத்தின் நலனுக்காக மற்றைய இனத்தை பலியிடுவது இதில் மையமாகின்றது. இன்று வரை தமிழ் தேசியம் இது பற்றி எதைத்தான் செய்துள்ளது. இன்றைய இன நெருக்கடியை மலையக மக்களில் இருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும். மலையக மக்களின் பிரச்சனையும், எல்லையோர தமிழ் விவசாயிகளின் நிலப்பிரச்சனையும் சமகாலத்தில் தொடங்கியதுடன், திட்டமிட்ட வகையில் நீண்ட ஒரு இனவழிப்பாக நடத்தப்பட்டது, நடத்தப்படுகின்றது. இதை குறுந் தேசியம் என்றுமே தேசியத்தின் மையப் பிரச்சனையாக்கவில்லை. மேல்மட்ட யாழ்ப்பாணத்தானின் பிரச்சனையில் இருந்து தேசியத்தை புரிவதால், இலங்கையின் தேசிய பிரச்சனையை ஒருக்காலும் தீர்க்க முடியாது. மலையக மக்களின் இரத்தத்தை பிழிந்து எடுத்து தான், இலங்கையின் அனைத்து வளங்களையும், மற்றைய இனங்கள் பயன்படுத்தின என்றால் மிகையாகாது.
இலங்கை ஏற்றுமதி வருவாயை கூட்டித் தந்த இந்த மக்களின் உழைப்பு, மற்றைய இனங்களின் நலனுக்காக வாங்கிய கடனுக்காக கடன் மற்றும் வட்டியை கட்டுகின்றது. 1988 இல் வட்டி மற்றும் கடனுக்காக மொத்த ஏற்றுமதியில் 28 சதவீதத்தை கட்டினர். இது தீவிரமடைந்து 2001 இல் வட்டிக்காக மட்டும் இலங்கையில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 25 சதத்தையும் கட்டத் தொடங்கினர். இதுவே 2002 இல் 35 சதத்தையும் கட்டும் நிலைக்கு இலங்கை தேசியம் மறுகாலனியாகி வருகின்றது. வட்டி கட்டும் பெரும் பொறுப்பை மலையக மக்களின் கடும் உழைப்பு வழங்குகின்றது.
காலனித்துவவாதிகள் உலகெங்கும் மனிதனையே கடத்திச் சென்று சூறையாடி உழைப்பும், காலனிகளை சுரண்டி கொழுத்து உருவான மேற்கத்திய வளங்களும் எப்படி உருவானதோ, அது இலங்கைக்குள்ளும் பொருந்தும். மலையக மக்களை சூறையாடி அனுபவிப்பதை மற்றைய இனங்கள் அங்கீகரித்ததுடன், அதையே ஒரு இயங்கியல் போக்காக்க மலையக மக்களை இழிநிலைக்குத் தள்ளினர். இதனால் இந்த மலையக மக்களை வரலாற்று ரீதியாக சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியமானதாகும்;.
காலனித்துவம் கால்பட்ட எல்லா இடங்களிலும் மனிதனை வேட்டையாடி கொன்று போட்டதன் மூலம் மண்ணின் மக்களுக்கு பசியையும் கடும் உழைப்பையும் தண்டனையாக்கிய, தன்னையும் தனது நலனையும் தக்கவைத்ததுடன் சூறையாடியதை சொந்த நாட்டுக்கு கடத்தினர்.
காலனிகளைச் சூறையாட கடுமையான எதிர்ப்புகள் உருவான போதும், அந்த மண்ணின் மைந்தர்கள் சுயபொருளாதார பலம் பெற்று இருந்த போதும், உழைக்கும் அடிமை மனிதர்களை வெளியில் இருந்து கொண்டுவந்து தேசிய வளங்களை சூறையாடுவது என்ற வழியை கையாண்டனர். உழைக்கும் அடிமைகளை வெளியிடங்களில் இருந்து கொண்டு வரவும் இரு பிரதான வழிகளைக் கையாண்டனர்.
1.பலாத்காரமாக மனிதர்களை அடிமையாகக் கடத்துவது ஒரு ஜனநாயக உரிமையாகியது.
2.ஆசை காட்டியும், நிர்ப்பந்தம் கொடுத்தும் மனிதர்களை சொந்த பிறப்பு மண்ணில் இருந்தே அகன்றியெடுத்து கடத்துவது அரையடிமை வழி. இதற்காக உள்ளுரளவில் இருந்த வர்க்க, இன, மத, நிற, சாதி முரண்பாடுகளை பயன்படுத்தினர். இந்த வகையில் மலையக மக்களின் ஏற்ற தாழ்வான சாதியம் மற்றும் வறுமையை பயன்படுத்தியும் இந்த அரை அடிமைகள் கடத்தப்பட்டனர். இதை ஊக்குவிக்க மறைமுகமாக வறுமையை உருவாக்கியும், சாதிய கொடுமையை அகலமாக்கியும் தாழ்ந்த சாதி மக்களை அரை அடிமைகளாக கிராமப்புறங்களில் இருந்துகடத்தப்பட்டனர்.
1823ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 14 கூலிகளின் உழைப்பை, கோப்பிச் செய்கையில் முதலிட்டதன் ஊடாக சுரண்டிக் கிடைத்த 600 பவுண்ட் பணத்தை சொந்தமாகப் பெற்ற காலனித்துவ வெள்ளையன் கதாநாயகன் ஆகியதால், அரை அடிமை கூலிகளை நாடு கடத்தி வரும் வரலாறு தொடங்கியது. தேயிலை றப்பர் தோட்டத்துக்கு முன்னமே டச்சுக்காரர் கறுவாபட்டை உற்பத்தி சார்ந்து, 10000 இந்தியத் தமிழர்களை கொண்டு வந்ததாக தகவல் உள்ளது. ஆனால் அது பற்றிய தரவுகள் முழுமையாக கிடைக்கவில்லை. மலையக மக்களின் வரலாறு 1823 இல் தொடங்குகின்றது. 1824 இல் 5000 ஏக்கரில் 10000 பேர் இந்த கோப்பிச் செய்கைக்குள் ஈடுபடுமளவுக்கு மூலதனம் வீங்கியது. இந்த கோப்பி உற்பத்தியூடாக 1980 வரை மலையக மக்களின் உயிரையும், உழைப்பையும் கொள்ளையிட்ட வரலாறே, மனித அவலத்தில் பிறந்த கோப்பி கதையாகியது.
இந்த உற்பத்தியில் மலையக தொழிலாளர்களின் உழைப்பை மூலதனம் உறிஞ்சி பெற்றபோது, சவுக்கடியே அதிகாரத்தின் சட்டபூர்வ வடிவமாகியது. இந்த கோப்பிச் செய்கையில் மூலதனம் வரைமுறையின்றி சுரண்டி கொழுத்த போது உற்பத்தியின் அளவும் சுரண்டும் தொழிலாளர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துச் சென்றது. இது 1845 இல் 25198 ஏக்கராகவும், 1847 இல் 50071ஏக்கராகவும், 1848 இல் 60000 ஏக்கராகவும், 1871 இல் 196000 ஏக்கராகவும், 1878 இல் 273000 ஏக்கராகவும், 1881 இல் 256000 ஏக்கராகவும் மாறியது. இந்த கோப்பிச் செய்கை மலிவான அரையடிமைக் கூலியை அடிப்படையாகக் கொண்டு கிடைத்த கொள்ளையில், ஆட்சியமைப்பில் காலனித்துவ நிர்வாகிகளாக செயற்பட்ட அனைத்துப் பிரிவினரும் இதில் முழுமையாக ஈடுபட்டனர். குறிப்பாக ஆள்பதி, இராணுவத்தினர், நீதிபதி, கிறிஸ்துவ மதகுருமார், அரசு நிர்வாகத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். சூறையாடுவதற்கு வசதியாக சூறையாடுபவர்களின் நலன் சார்ந்து பல போக்குவரத்து பாதைகளும், அபிவிருத்திகளும் செய்யப்பட்டன. இதையும் மலையக மக்களின் அரை அடிமை உழைப்பை சவுக்கடிகளின் வரித் தளும்புகளில் இருந்தே எழுந்தன. பாலங்கள், வீதிகள், புகையிரதப் பாதைகளை போடுவதில் இந்த அரை அடிமைகள் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்த கோப்பிச் செய்கை சார்ந்து கிடைத்த ஒவ்வொரு சதத்துக்கும் பின்னாலும், அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் அபிவிருத்திகளின் பின்னால் மலையக மக்களின் அரை அடிமை வரலாறு காணப்படுகின்றது.
இன்று சிங்கள மக்கள் சரி தமிழ் மக்கள் சரி குறுந் தேசிய இனவாதம் பேசி உரிமை கொண்டாடும் வீதிகள் முதல் அனைத்து வசதிகளிலும் மலையக மக்களின் உழைப்பு படிந்து கிடக்கின்றது. உலகெங்கும் பருகிய மற்றும் பருகும் கோப்பி முதல் தேனீர் வரை மலையக மக்களின் இரத்தமும் அதன் சுவையும் கலந்து கிடக்கின்றது. இதை உன்னால் நம்ப முடியவில்லையா? இனவாதத்தை வரலாறாக கொண்ட உனது கல்வி அறிவில், இவை எல்லாம் உனக்கு திட்டமிட்டே உனக்கு மறுக்கப்படுகின்றது. ஏன்னெனில் தமிழ் சிங்கள குறுந் தேசியவாதிகள் அனைவரும் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாகவே அன்று முதல் இன்றுவரை நக்கித் திரிபவர்கள். இதனால் இதை உனக்கு மறைப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். அதை மறைக்கவே இன மோதலையும் இன அழிப்பையும் தேசியமாக, இதை வீரமாக்கி உன்னை மந்தையாக்கிவிடுகின்றனர். இதை உனது கோரிக்கையாக்கி உன் மீது சுமத்தி மந்தையாக்கிய வரலாற்றையே, நாம் இனவாத எல்லைக்குள் தெரிந்து வைத்துள்ளோம். இந்தியாவின் சாதிய கொடூரத்தின் அழுங்கு பிடிக்குள்ளும், கத்துவட்டிக்காரன் சூறையாடலுக்குள்ளும், உற்பத்தி மீது 50 சதவீத வரியை கோரி உருவான சமூக நெருக்கடிகளிடையே இடை தரகர்களின் வர்க்க நலன் சார்ந்து ஏமாற்றப்பட்ட மக்களே மலையக மக்களாவர். இந்த வரலாற்று பின்னணியில் இலங்கைக்கு கடத்தும் வரலாறு தொடங்கியது. இந்தியக் கரைகளை நோக்கி அவர்களின் அரை அடிமைப்பயணம் நடையாகவே தொடங்கியது. அவர்கள் தம்முடன் எடுத்து வந்த பொருட்களை கடற்கரையை வந்தடைய முன்பே வழிப்பறி திருடர்களிடம் பறிகொடுத்தனர். அங்கிருந்து சிறு வள்ளங்கள் மூலம் உயிரைக் கையில் பிடித்தபடி அடிமைப் பயணம் ஆரம்பமானது. இப்படி அரை அடிமைகளாக கடத்தப்பட்ட மக்கள், மன்னார் கரைகளில் இறக்கப்பட்டு அடர்ந்த இருண்ட காடுகள் ஊடாக மலையகம் நோக்கி கால்நடையாக கடத்தப்பட்டனர். இப்படி மலையகம் வந்து சேரும் போது, வந்தவர்களில் 25 சதவீதமானவர்கள் அடிமைப் பயணத்தின் போதே கொல்லப்பட்டனர். இந்த அடிமைப் பயணத்தில் வள்ளம் கவிழ்வதிலேயே மரணம் தொடங்கியது. மன்னாரில் இருந்து தொடங்கிய கால் நடையாக அடர்ந்த இருண்ட காடுகளில் ஊடேயான பயணத்தில், மிருகங்களுக்கு உணவாகும் மனித அவலம் தொடங்கியது. வழிநடைப் பயணத்தில் உணவும், நீரும், மருத்துவ வசதி இன்றி இறந்த அடிமைகள் மேல்தான் மலையக வரலாறு தொடங்கியது. இந்த வழிநடைப்பயணத்தில் மலேரியா கோர தாண்டவமாடியது. உடல் நிலை காரணமாக நடந்து செல்ல முடியாதவர்கள், ஒரு குவளை தண்ணீர், ஒரு வாய் சோற்றுப் பருக்கையுடன் பாதை வழியில் மிருகத்துக்கு உணவாக கைவிட்டுச் செல்ல மூலதனம் கோரியது. அவர்கள் கையை நீட்டி தம்மை அழைத்துச் செல்லக் கோரி கதறிய கதறல் காடுகளையே உலுப்பியது. ஆனால் சவுக்குகள் அதை தடுத்து நிறுத்தின.
இடை வழியில் இறந்தவர்கள் பாதை வழியில் விடப்பட்டனர். குழந்தையின் தாய் இறந்த போது எல்லாம்; குழந்தை உயிருடன் கைவிடப்பட்டது. சவுக்கடியில் தொடர்ந்து முன்னேற முடியாதவர்கள் கைவிடப்பட்டனர். இப்படி இறந்தவர்களையும் உயிருடன் கைவிடப்பட்டவர்களையும் மிருகங்கள் கடித்துக் குதறப்பட்டு எஞ்சிய எலும்புக் கூடுகள், பிந்திய தமது அடிமைப் பயணத்தை தொடங்கியவர்களின் பாதை வழி அடையாளமாக மாறியது. ஒரு நூற்றாண்டாக இந்த மனித அவலம் தொடர்ந்தது. மலையகத்தை ஒரு வளமிக்க பூமியாக்க சொந்த உடலை வழியெல்லாம் உரமாக்கிய படி தான் மலைகளில் கால்களை வைத்தனர். மலையகத்தின் மலை முகட்டை நோக்கி கால்களை எடுத்து வைத்த போது, அவர்களுக்கே அந்நியமான கடும் குளிர் புதிய பலிகளைக் கோரியது. மனிதர்கள் முன்பு செல்லாத அடர்காடுகளை நோக்கிய மலையக மக்களின்; காலடிகளும், அந்த காட்டை பண்படுத்திய கைகளும், கடுமையான சூழலுக்குள் தம் உடலை நிலத்தில் உரமாக்கியபடி தான் இலங்கையின் முதல் ஏற்றுமதி வருவாயைத் தந்த உற்பத்திகளை உருவாக்கினர். அவர்கள் கால்படாத, கை தொடாத, உடலை விதையாக்காத மலையகம் எதுவுமில்லை. அமெரிக்காவில் நீக்ரோ அடிமைகளை சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்று பருத்தி தோட்டங்களில் மூலதனத்தை உருவாக்கியது போல், மலையக அரையடிமைகளை சவுக்குமுனையில் நிறுத்தி உருவான றப்பர் மற்றும் தேயிலை தோட்டத்தின் மூலம் மூலதனம் திரட்டப்பட்டது. இந்த மண்ணை வளப்படுத்திய போது இறந்தவர்களின் கணக்கு வரலாறு இல்லை. கூலிகள் என்று மூலதனத்தால் நாகரீகமாக அழைக்கப்பட்டவர்கள், தம்மைத் தாம் பலியிட்டு உருவாக்கிய மலையகத்துக்காக அலையலையாக கொண்டு வரப்பட்டனர். ஒவ்வொரு சதத்தையும் லாபமாக அதிகமாக பெறுகின்ற ஒவ்வொரு தரமும், மலையக மக்கள் தம்மைத் தாம் மூலதனத்துக்காக சுயதியாகம் செய்ய வைத்தனர். இந்த வகையில் 1842 இல் 14000 பேரும், 1843 இல் 31000 பேரும், 1844 இல் 71000 பேரும், 1845 இல் 67000 பேரும் இந்தியாவில் இருந்து அரை அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர். இப்படி வருடாவருடம் மூலதனத்தை பெருக்க ஆயிரக்கணக்கில் கொண்டு வரப்பட்டனர். இறந்தவர்கள் போக மலையகத்தில் மலையக மக்களின் எண்ணிக்கை 1827 இல் 10000 மாகவும், 1847 இல் 50000 மாகவும், 1877 இல் 146000 மாகவும் அதிகரித்தது. 1926ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டளைச் சட்டம் ஒன்றின் படி ஆரம்பத்தில் மலையகம் வந்தவர்களில் 100 க்கு 40 பேர் சூழல் சார்ந்து இறந்ததை உறுதி செய்கின்றது. 1841 க்கும் 1849 க்கு இடையில் 70000 பேர் அதாவது 25 சதவீதத்தினர் மரணமடைந்ததாக கொழும்பு ஒப்சேர்வர் தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மலையகம் உருவான வரலாற்றையே நாம் இங்கே காண்கின்றோம். சிங்கள மக்கள் வாழ்ந்த சொந்த நிலங்களில் இந்த மலையகம் உருவாகவில்லை என்பதை, இந்த மரணங்கள் தெளிவுபடவே எமக்கு நிறுவுகின்றது. சிங்கள இனவாதிகளின் பொய்யை இந்த மரணங்கள் மூலமே அந்த மக்களின் மூதாதையர் உறுதி செய்கின்றனர். மூலதனம் தனது சொந்த நலன் சார்ந்து, லட்சக்கணக்கான மக்களின் பிணங்கள் மேல் மூலதனத்தை உருவாக்கி, அதை கொள்ளையிட்டு பிரிட்டனுக்கு கடத்தியது. இதன் போது இதற்காக மனித அவலத்தைச் சந்தித்த மலையக மக்கள் எந்தவிதத்திலும் குற்றவாளிகள் அல்ல. ஆனால் தமிழ் சிங்கள இனவாதிகள் முதல் மேல்தட்டு வர்க்கத்தினர் அவர்களுக்கு செய்த கொடூரம், பிரிட்டனின் கால்களை நக்கியதன் தொடர்ச்சியாகவே இருந்தது, இருந்து வருகின்றது. சிங்கள மக்கள் மலை அடிவாரங்களிலேயே தம்மை தாம் அந்த மண்ணுடன் பிணைத்து நின்றனர். சிங்கள மலையக மக்கள் முரண்பாடு என்று எதுவும் அன்று உருவாகவில்லை. நிலம் தாராளமாக பரந்து விரிந்து கிடந்தது. அத்துடன் மலையகத்தின் கடுமையான சூழலுக்கு ஏற்ற நிலையில், சிங்கள மக்களின் வாழ்வியல் அமைந்து இருக்கவில்லை. மாறாக நல்ல நட்புறவு நிலவியது. சிங்கள மலையக மக்களிடையே இயல்பான திருமணங்கள் கூட நிகழ்ந்துள்ளது. இது போல் முஸ்லீம் மக்களிடையேயும் இந்த உறவு இருந்துள்ளது. இதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமிய பாடல்களே காலம் கடந்தும் ஆதாரமாக உள்ளது.
"சிங்களக்குட்டி அடி செவத்தக்குட்டி ரன்மெனிக்கே
ஒன்னாலே என் உசிரு என் தங்க ரத்தினமே
வீணாகப் போகுதடி என் தங்க ரத்தினமே"
"நானூறு ஆளுக்குள்ளே
நடுவே நிற்கும் துலக்கக் குட்டி
விரல்கள் பத்தும் தேயிலையில்
விழிகள் ரெண்டும் எம்மேல்"
இது போன்ற பல பாடல்கள் உண்டு. உழைப்பு, உபை;பின் தன்மை, இனங்களின் கலப்பு, உழைப்பில் மற்றைய இனங்களின் பங்கு பற்றிய போது உருவான உறவுகள், மனித அவலம், சாதிக் கொடுமை, உயர் வர்க்கத்தின் அடக்குமுறை, எதிர்த்து நிற்றல் என்று எண்ணற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கிராமிய பாடல்களாகக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டன. இன்றும் அவைகள் வரலாறாக உள்ளன. மூலதனத்தின் கொடுமை தாங்காது மலையகத்தில் இருந்து தப்பியோடுபவர்கள் வேட்டையாடப்பட்டனர். இது அமெரிக்கா கறுப்பின அடிமைகளுக்கும் நிகழ்ந்தது. 1865 இயற்றப்பட்ட அடிமைச் சட்டம் ஒன்று வேலையை விட்டு நீங்குவது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனம் செய்தது. தப்பியோடிவர்களை பிடித்து வந்து சாட்டையால் விளாசப்பட்டனர். அத்துடன் பொலிசில் ஒப்படைத்தனர். இப்படி தப்பி ஓடுபவர்களை தடுக்க கடி நாய்கள் பயன்படுத்தப்பட்டன. மந்தைகளை கட்டுப்படுத்தி வளர்க்கும் வடிவத்தையே பிரிட்டிசார் கையாண்டனர்.
அயர்லாந்து மக்களின் உழைப்பையும் வாழ்வையும் வழங்கிய விவசாய மண்ணில் இருந்து துரத்தி பிரிட்டிசார், அந்த மண்ணில் மந்தை வளர்ப்பை உருவாக்கிய போது கிடைத்த அதே அனுபவத்தைக் கொண்டே, மலையக மக்களை மந்தை நிலைக்குள் வைத்திருந்தனர். இந்த மந்தைக்குரிய அரையடிமை வாழ்வை நீடிக்க ஷஷதுண்டு முறை அழுலில் இருந்தது. இது 1921 லேயே நீக்கப்பட்டது. மலையக மக்களின் சோக வரலாற்றில் உருவான அவர்களின் பிணங்களின் மேல்தான், இலங்கையின் தேசிய வளங்கள் கட்டியமைக்கப்பட்டன. மலையக மக்களின் உழைப்பின் ஊடாக உருவான ஏற்றுமதியில் கிடைத்த வருமானம், அந்த மக்களின் நலனுக்காக ஒருநாளும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக மற்றைய இனங்களுக்கே வழங்கப்பட்டது.
மலையக மக்களின் இரத்தத்தை குடிக்கும் அட்டைகளான ஒருசிலருக்கு சலுகை வழங்குவதன் மூலம், இதைத் தொடரமுடிகின்றது. இன்று பன்நாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக தொழிலாளியைச் சுரண்டி மேற்கு தொழிலாளிக்கு சலுகை வழங்குவது போல், மலையகம் சூறையாடப்பட்டு இலங்கையில் மற்றைய இனத்துக்கு சலுகை வழங்கப்பட்டது. இதில் யாழ்ப்;பாணம் அதிக சலுகை பெற்றது. யாழ் பாடசாலைகளுக்கான மூலதனத்தை தேயிலைத் தொழிலாளர்களின் இரத்தத்தில் இருந்து கறந்தனர். இதன் மூலம் அவர்களையே ஒடுக்க யாழ் உயர் வர்க்கத்தையே பிரிட்டிசார் உருவாக்கினர். இதைப் போல் சிங்கள மேட்டுக் குடிகளையும் உருவாக்கினர். இதையே பிரிட்டிசார் தமது ஆட்சி மையங்கள் நிலவிய பிரதேசங்கள் எங்கும் கையாண்டனர். இந்த வகையில் மலையக மக்கள் இந்த நாட்டையும், பிரிட்டனையும் வளப்படுத்த வழங்கிய உழைப்பினை ஆராய்வோம்.
Monday, October 10, 2005
வர்க்க ரீதியான
வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி பெற்றது. இன்று இலங்கையில் மொத்தமாக 10 590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10 042 ஆகும்;. இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும்;. மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர். இலங்கையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 80 000 யாகும். 1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் 42 லட்சமாகும். இதில் 1 முதல் 5ம் வகுப்புவரை 19 லட்சம். 6 முதல் 11 வரை 21 லட்சம். 12 முதல் 13 வரை 2 லட்சமாகும். ஆரம்பபாடசாலையில் (கல்வி (1-5)) 8 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. இடைநிலைக் கல்வியில் (6 முதல்11) 25 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. உயர் கல்வி வயது எல்லையில் மூன்று சதவீதமான மாணவர்களே கல்வி கற்கின்றனர். இவை இனம் கடந்த நிலையில் இலங்கையில் கல்வியின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது. மொத்த ஆசிரியர்களில் ஆரம்ப பாடசாலையில் 80 சதவீதமும், இடைநிலைப் பாடசாலையில் 60 சதவீதமும்; மொத்தத்தில் 70 சதவீதம் ஆசிரியர் தொழிலில் பெண்கள் உள்ளனர். உயர் கல்வியை நோக்கிச் செல்லச் செல்ல பெண்களின் எண்ணிக்கையிலும் கூட வீழ்ச்சி ஏற்படுத்துகின்றது. ஆணாதிக்க அமைப்பும் கூட பொதுவாக இலங்கையில் பெண்களின் கல்விக்கு தடையாகவே உள்ளது.
1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுதியில 73 சதவீதமானவர்கள் தனியார் அல்லது உயாதர பாடசாலையைச் சேர்ந்தவர்கள். 18 சதவீதமானவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள். இவர்களும் உயாந்தர பாடசாலைகளின்; பழைய மாணவர்களாவர். 1983 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராய்ந்த போது, 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து, பல்கலைக்கழகம் தெரிவனோர் 39.2 சதவீதமட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படுவதையும், 17.6 சதவீதமான மேட்டுக் குடியில் இருந்து 60.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை காட்டுகின்றது. கல்வி உயர்குடிகளின் பிடியில் இருப்பதையும், தெசிய இனப் போராட்டங்கள் இதற்குள் நிகழ்வதையும் காட்டுகின்றது.
கல்விக்கான செலவு தேசிய வருமானத்தில் 2.9 வீதமே ஒதுக்கப்படுகின்றது. இந்த செலவில் 76 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்துக்கும், 16 சதவீதம் நலனளித்தல் சேவைக்கும், 7 சதவீதம் பயணத்துக்கும், 1 சதவீதம் தராதர மேம்பாட்டுக்கும், ஒரு சதவீதமே கற்பிக்கும் உபகரணத்துக்கும் செலவு செய்யப்படுகின்றது. கல்விக்கு ஒதுக்கும் பணம் முதல் அது செலவு செய்யப்படும் வடிவம் வரை ஒட்டு மொத்த மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. உயர்கல்வியில் சிலரை உருவாக்கும் வகையில் கல்விக்கான நிதியொதுக்கீடு காணப்படுகின்றது. ஒரு சிலருக்கு வெளியில் உள்ளவர்களின் கல்வியின் தரத்தை இழிந்த நிலையில் நிலை நிறுத்தி, கூலிகளாக சேவை செய்ய கல்வி கோருகின்றது. சாதாரண பாடசாலையை விட உயர்தரப் பாடசாலைகள் 300 சதவீதம் அதிகரித்த நிதியுதவிகளைப் பெறுகின்றன. உயர் அதிகார வர்க்கத்தையும், சழூக அந்தஸ்துக்குரிய சமூக பிரிவுகளையும் உருவாக்கும் வகையில் கல்வி திட்டமிடப்படுவதையே, இலங்கையின் ஆளும் வர்க்கம் தனது கொள்கையாக கொண்டு இருக்கின்றது. இதை தமிழ் குறுந் தேசியமும் உயர்த்தும் அதே நேரம் தலையில் வைத்து கூத்தாடுவதிலும் பண்பாட்டு தன்மை கொண்ட தமிழ் தேசிய வெறியாக காணப்படுகின்றது.
1984 இல் 1 46 977 ஆசிரியராக இருந்த நிலை 1994 இல் 1 67 579 ஆகியது. சம்பளச் செலவு 120 கோடியால் அதிகரித்தது. பணவீக்கத்தை ஏற்படுத்திய பின்பு 1995 இல் 45 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதன் மூலம் செலவு 280 கோடியால் அதிகரித்தது. ஆனால் தேசிய ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படவில்லை. பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இது பூசிமொழுகப்பட்டது. அதேநேரம் இந்த ஆசிரியர் நியமனம் கூட இனவாத அடிப்படையில் சிங்கள இனத்துக்கே வழங்கப்பட்டது. ஆசிரியர் நியமனம் பற்றாக்குறை சார்ந்த இடங்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர். அதாவது 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை காணப்படுகின்றது. இதுவே 1971க்கும் 1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. முஸ்லீம் மக்களுக்கு வழங்கிய விதிவிலக்கான ஒரு சலுகையாக இருந்த போதும், இன அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் முஸ்லீம் மக்களின் கல்வி நிலையை மேம்படுத்தவில்லை. சிங்கள சமூகம் அதிக சலுகைகளை தொடர்ச்சியாக பெற்று வந்தன. இதை தமிழ் இன அடிப்படையில் பொதுமைப்படுத்திய போது இனவாதத்தின் அடிப்படை வெளிப்படுகின்றது. ஆனால் இந்த பொதுமைப்படுத்தலின் உள்ளே பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக, சிறுபான்மை ரீதியாக ஆராயும் போது இந்த இடை வெளி மேலும் அகலமாகின்றது. வெறுமனே இதை இன அடிப்படையில் புரிந்து கொண்டு தீர்க்கமுடியாது. அப்படி இனத் தேசியவாத அடிப்படையில் தீர்க்க எடுக்கும் முயற்சி, யாழ் சமூகத்தின் மிதமிஞ்சிய சலுகைகளை பெறுவதையே அடிப்படையாகக் கோருவதாகும்;;. தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு என்பது பின்தங்கிய தமிழ் மாவட்டங்கள், சாதிகள், சிறுபான்மை இனங்கள் என்று அடிப்படையில் தான் காணப்படுகின்றது. யாழ்குடா நாட்டில் அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் எண்ணிக்கை காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில் ஏற்படும் சில நெருக்கடிகள் கூட, இனவாத எல்லையில் புரிந்து கொண்டு விளக்குவது கூட யாழ் மேலாதிக்க தன்மைக்கு கவசமிடுவதாகும். யாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 1 84 350யாகும.;; 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் காணப்படுகின்றது. இதிலும் கிளிநொச்சியின் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட பின்தங்கிய பகுதி என்பதால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இன்றைய யாழ்குடாநாட்டில் உள்ள நெருக்கடிகள் யாழ் பூர்சுவா சமூக கண்ணோட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றது. அதிக பணம் சேகரிக்கவும் மேற்கு பற்றிய காலனித்துவ அடிமைப்புத்தியும் இணைந்தபோது, மேற்கு நோக்கிய ஆசிரியர்களின் புலம்பெயர்வு செயற்கையான பற்றாக்குறைக்குள் யாழ்குடா நகர்த்தியது. அத்துடன் மேற்கு நோக்கி நகரும் திருமணங்களும்;, பிள்ளைகளை நோக்கி புலம் பெயரும் பெற்றோர்களும் ஆசிரியராக இருக்கும் எல்லா நிலையிலும், செயற்கையான நெருக்கடிக்கு கம்பளம் விரிக்கின்றது. இதை தேசியம் பொதுமைப்படுத்துகின்றது. அதற்கு பின்தங்கிய மாவட்ட நெருக்கடிகளை யாழ் தேசியம் தனக்கு சாதகமாக்குகின்றது. தேசியம் பின் தங்கிய மக்களின் நலனில் இருந்து தேசியத்தை பொதுமைப்படுத்தத் தவறி குறுந்தேசியமாகியது. பின் தங்கிய தமிழ் மாவட்ட மற்றும் சிறுபான்மை தமிழ் இனங்களின் நிலைமையை கிடைத்த புள்ளிவிபரத் தரவுகளில் இருந்து ஆராhய்வோம்.
Sunday, October 9, 2005
மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில், சமூக பண்பாட்டுச் சிதைவை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அரசுசார நிறுவனம் ஒன்றின் அறிக்கை இலங்கையில் 10000 பாலியல் வன்முறைகள் குடும்பத்தில் நடப்பதாக அறிவித்துள்ளது. இதில் அரைவாசி தந்தைமாரால் நடத்தப்படுகின்றது. இதில் 100 மட்டுமே சட்டத்தின் முன் வருகின்றது. இதில் 54.5 தந்தைமாருக்கு எதிரான புகராகும். இந்த நிலையில் கரு அழிப்பு இலங்கையில் வருடம் 9 லட்சமாகியுள்ளது. இதில் 15 சதவீதம் திருமானமாக கரு அழிப்பாக உள்ளது. பல லட்சம் குடும்பங்கள் பிரிந்த தனிமையில் வரைமுறையின்றி சிதைகின்றது. கணவன் மனைவி பிரிந்து வௌவேறு நாடுகளில் வாழ்வது, நிரந்தரமான சமூக போக்காகியுள்ளது. ஒழுக்கம் மீதான பரஸ்பர சந்தேகங்கள் மன உழைச்சலையும், உளவியல் சிதைவையும் எற்படுத்தியுள்ளது. விவகரத்துகள் பெருக்கெடுக்கின்றது. உழைப்பை பகிர்வதில் எற்படும் முரண்பாடுகள் சமூக உறவக்கத்தையே பிளக்கின்றது. குழந்தைகள் தாய் இன்றி வாழ்தன் மூலம், வக்கிரமடைந்த வருகின்றனர். குழந்தைகள் மேலான பாலியல் ரீதியான வக்கிரங்கள் தலைவிரித்தாடுகின்றது. பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றது. குழந்தைகள் மேலான பாலியல் வன்முறை தேசிய பண்பாகின்றது. குற்றங்களின் தன்மை வக்கிரமடைகின்றது. தற்கொலைகள் என்றுமில்லாத அளவில் அதிகரித்து, ஆசியாவிலேயே முதன்மை நாடாகியுள்ளது. இவற்றை தனித்தனியாக விரிவாக கிழே பார்ப்போம்.
வெளிநாட்டை நோக்கி செல்லும் ஒவ்வொரு பெண்ணும், பாலியல் ரீதியான பாதுகாப்பற்ற ஒரு நிலையில் தள்ளப்படுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா நோக்கி தமிழ் எஜன்சி மூலம் வரும் ஒவ்வொரு பெண்ணின் தலைவிதியும் கூட. தனிப்பட்ட ஆண்கள் திட்டமிட்டு உருவாக்கும் நான்கு சுவர்களைக் கொண்ட சமூகச் சிறைக்குள், பாலியல் மிருகங்களின் வன்முறைக்கு உட்படுகின்றனர். சிலர் தவிhக்க முடியாத வகையில் இணங்கிப் போகின்றனர். எதிர்த்தால் மரணம் அவர்களின் தலைவிதியாகின்றது. இறந்த பெண்களின் பிரதேதங்களை விமானம் மூலம் எற்றி இறக்கப்படுவது அதிகரிக்கின்றது. வீட்டு வேலைக்கு செல்லும் பெரும்பாலன பெண்களின் கதி இது. இந்த வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்;ற பெண்களில், 91 சதவீதம் பேர் வீட்டு வேலைக்கே இலங்கை அரசால் எற்றுமதி செய்யப்படுகின்றனர். 2000 முதல் 2003 ஐப்பசி வரை வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர்களின்; 400 இறந்த உடல்கள் கட்டுநாயக்க விமான நிலையில் தரையிறங்கியது. பெரும்பாலவை பெண்களின் சடலங்களாக இருந்தது.
மத்திய கிழக்கில் 37 இலங்கையரின் பிரேதங்கள் 2003 ஜூலை மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்தது. இந்த 37 பேரில் 22 பேர் பெண்களாவர். இந்தப் பெண்கள் அனைவரும் பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாகளுக்குச் சென்றவர்களாவர். இறந்த இந்த 37 பேரில் 16 பேர் சவூதி அரேபியாவில் இருந்து சடலமாக மீள அனுப்பபட்டவர்கள். 9 பேர் லெபனான் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. இவற்றைவிட ஹெங்ஹொங்கில் கொலை செய்யப்பட்ட ஒரு பணிப்பெண்ணின் சடலமும், தற்கொலை செய்துகொண்ட மூன்று பணிப்பெண்களின் சடலமும், திடீர் விபத்துக்களில் இறந்த 8 பேரின் சடலமும் தேசிய சொத்தாக மீண்டன. சடங்களை பெறுவது, அதை எற்றி இறக்குவதும், சடங்கள் அனாதையாகது உறுதி செய்வதும் தமது தேசிய கடமையாக பீற்றி, அவர்கள் மேல் அக்கறை உள்ளதாக அரசு தம்பட்டம் அடிக்கின்றது. ஆனால் சொந்த நாட்டில் சொந்த மக்கள் உழைக்கவும் வாழவும் வழிகாட்டவும் வக்கற்றவர்கள், அன்னிய நாட்டில் தொழில் புரிவோரின் தொழில் பாதுகாப்பு உட்பட மனித உரிமையை பாதுகாக்க வக்கற்றவர்களின் அரசை தெரிவு செய்வதையே, நாம் ஜனநாயகம் என்று பீற்றுவது இன்றைய சமூக அறிவாகிப் போன உலகத்தில் நாம் மந்தைகளாக வாழ்கின்றோம் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.
12 லட்சம் பேர் அரபு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தொழில் புரிகின்றனர். இதில் 65 சதவீதம் பேர் வீட்டுப் பணிப் பெண்களாக பெண்கள் வேலை செய்கின்றனர். 2002 இல் வீட்டுப் பணிப் பெண்கள் இலங்கை அரசாங்கத்திடம் தமது நிலை தொடர்பாக 7103 முறைபாடு செய்துள்ளனர். இலங்கை அரசிடம் செய்த முறைப்பாடுகளே இவ்வளவு என்றால், குற்றத்தின் அளவு பல மடங்காகும். இதை மேலும் ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். 2000 ஆண்டு முதல் ஆறு மாதத்தில் நாடு திரும்பிய பெண்களில் 240 பேர் பாலியல் வன்முறை தொடர்பாக, கொழும்பு விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் முறையிட்டுள்ளனர். இந்த முறையீடுகள் 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 70 சதவீத்தில் அதிகரித்தது. இவை சமூக ஆணாதிக்க ஒழுக்க பண்பாட்டுக் கோவைகளை மீறி முறையிடப்பட்டவை. உண்மையில் குற்றம் பல மடங்காக இருப்பதை நாம் காணவேண்டும். இதற்கு வெளியில் மனித அவலங்கள் பன்மைத் தன்மை வாய்ந்தவை. 2002 இல் 1704 முறைப்பாடுகள் சம்பளம் தரப்படமை பற்றி முறையிட்டுள்ளனர். இது 45 சதவீத்தால் அதிகரித்துள்ளது. அலைகழிய வைத்து தொலை கொடுத்த முறைபாடு 2002 இல் 1041 கிடைத்துள்ளது. இவை அனைத்தம் நாடு திரும்பும் போது, பல தடைகளைத் தாண்டி கொழும்பு விமான நிலைத்தில் முறையிடப்பட்டவை மட்டுமே இவை. 2002 இல் 44 கற்பழிப்பு பற்றி முறைப்பாடு செய்துள்ளனர். 2002 இல் 20 பேர் தந்தைகளற்ற குழந்தைகளுடன் நாடு திரும்பியுள்ளனர். இது 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 157 சதவீத்தால் அதிகரித்துள்ளது.
2002 இல் கிடைக்ப்பெற்ற 7103 முறைபாட்டில் 3191 முறைபாடு சவுதியில் சென்று திரும்பியோர் செய்துள்ளனர். இதைவிட குவைத்தில் தொழில் புரிந்தோர் 1041யும், லெபனில் தொழில் புரிந்தோர் 800யும், அரபு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் புரிந்தோர் 497யும், Nஐhடனில் தொழில் புரிந்தோர் 467 முறைபாடுகளையம் செய்திருந்தனர். இதைவிட பலவித இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அண்ணளவாக 1300 பெண்கள் 2003 முதல் 6 மாத கால எல்லைக்குள் திருப்பி வந்தாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வகையில் குவைத் நாட்டிலிருந்து 503 பேரும், சவூதி அரேபியாவிலிருந்து 406 பேரும் திரும்பி வந்தனர்.
குற்றங்கள், மனித அவலங்கள், பிரேதங்களும் இறக்குமதியாக்கும் அரசு, தொடர்ந்து மனித உழைப்பை எற்றுமதியாக்குவதில் பின் நிற்கவில்லை. இதை மூடிமறைக்க முறைப்பாட்டு மையங்கள், உதவித் திட்டங்கள், தீர்வற்ற விசாரனைகள், காப்புறுதித் திட்டங்கள், பயிற்சிகள் என்று தன்னை அலங்கரிக்கின்றது. இதன் மூலம் மனித உழைப்பின் எற்றுமதியை அதிகரிக்கின்றது. வெளிநாட்டு வெலைவாய்ப்பு நிறுவனம் 2002 இல் பணிப்பெண்களுக்கான பயிற்சி என்ற பெயரில், 29761 பேருக்கு உழைப்பை எப்படி முகம் சுளிக்காது குண்டி கழுவி சம்பாதிப்பது என்ற பயிற்சியை அளித்துள்ளது. உள்ளது. 2002 முதல் ஆறு மாதத்தில் இது 20 சதவீத்தால் அதிகரித்துள்ளது. இந்த மனித எற்றுமதியில் 571 வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர்கள் செயல்படுகின்றனர். இந்த மனித விரோத தொழிலைச் செய்ய, 2002 இல் புதிதாக 50 நிறுவனங்கள் இதற்கான அனுமதியைக் கோரியது.
மறு தளத்தில் அரசு மனித எற்றுமதியை செய்ய புதிதாக கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒன்று, 191581 பேருக்கான எற்றுமதியை உறுதி செய்துள்ளது. இதைவிட மலேசிய அரசங்கத்துடன் செய்த ஒப்பந்தம் ஒன்று, வருடம் 20000 கூலித் தொழிலார்களை எற்றுமதி செய்யக் கோருகின்றது. இதில் சிறந்த பயிற்சி பெற்ற தோட்ட தொழிளாகள் முதன்மையாக அனுப்பப்பட உள்ளனர். அத்துடன் தற்பொழுது மலேஸியாவில் தொழில் புரியம் பத்தாயிரம் பேரின் சட்டவிரோதத் தன்மை அகற்ற ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.
மனிதனை எற்றுமதி செய்வதே தேசிய கடமை என்ற கொக்கரிக்கும் அரசின் சட்டபூர்வமான ஜனநாயக பூர்வமான சமூக அமைப்பில், இதை நாம் அங்கிகரிப்பது எமது சுதந்திரம் என்றால், எமது மனிதவிரோத உணர்வு வக்கிரமானதே. இந்த மனித எற்றுமதியை ஊக்குவிக்கும் போது, அதன் மனித விரோத சமூக கட்டமைப்பு நிறுவனமயமாகும் போது, கொழுத்த பணத் திரட்சியே இதன் அடிப்படையாக உள்ளது.
1998 முதல் 2002 வரையான காலத்தில் வீட்டுப் பணி பெண்கள் மற்றும் அரபு நாட்டு தொழில்; செய்யும் பெண்கள் 47800 கோடி ரூபாவை இலங்கைக்காக உழைத்து திரட்டினர். இதில் 1998 இல் 7900 கோடி ரூபா திரட்டிய மனித உழைப்பு, 2002 இல் 12000 கோடியாக அதிகரித்தது. 10 லட்சம் உடல் உழைப்பாளிகளின்; அவலமான உழைப்பை சூறையாடிய போது இது கிடைத்துள்ளது. இதில் 4000 கோடி ரூபாவை இலங்கை வங்கிகளில் போட்டனர். மிகுதியில் பெரும் பகுதியை உலகெங்கும் கடைவிரித்துள்ள பன்நாட்டு ஆடம்பர நுகர்வுச் சந்தையில் துலைத்தனர். மறுபுறத்தில் சேமிப்பை உலக வங்கியும், பெரும் முதலீட்டலர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் அவற்றை அபகரிப்பதுடன், பணவீக்கம் மூலம் அவற்றை பெறுமதி அற்றதாக்கி செல்லாக் காசக்கின்றனர். மனித ஏற்றமதி மூலம் கிடைக்கும் பணத்தைக் கூட தேசிய உற்பதியில் முதலிடப்படவில்லை. அவை பன்நாட்டு நிறுவனங்களுக்கு சென்று அடைவதை அரசு உறுதி செய்கின்றது. தேசிய சமூகங்களின் மனித அவலங்கள் மூலதனமாக திரட்டப்படுகின்றது. தேசிய பாடசாலைகள் மூடப்படுகின்றன. மக்களை குடிகராராக்கி, பிரச்சனைகளை அதற்குள் முடிவுகட்ட மதுவிற்பனை நிலையங்களை திட்டமிட்டு அரசு திறக்கின்றது.
உலக வங்கியின் நோக்கம் என்ன?
1998இல் மத்திய அரசும், உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள நீர்ப்பாசனத் துறை குறித்த அறிக்கை ''பாசனநீரின் விலையைப் படிப்படியாக உயர்த்த முடியாது. அதிரடியாக உயர்த்துவதுதான் நல்ல பலனைத் தரும் என்று ஆந்திர அனுபவம் காட்டுகிறது'' எனக் கூறுகிறது.
மைய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மே 1999இல் வெளியிட்டுள்ள ஆவணம் உலக வங்கியின் முடிவுகளை வழி மொழிகிறது. ''தண்ணீர்ச் சேவை என்பது ஒரு தொழிலாகக் கருதப்பட்டு வர்த்தக நோக்குடன் நடத்தப்பட வேண்டும். போட்ட முதலுக்கு போதிய லாபமும் ஈட்ட வேண்டும்'' என்கிறது.
* ஓரளவு வாங்கும் சக்தியுள்ள நுகர்வோர் நிறைந்த நகர்ப்புறங்களில் குடிநீர் விற்பனையை கொள்ளை லாபம் தரும் தொழிலாக மாற்றி அதனைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல்.
* வாங்கும் சக்தியில்லாத ஏழை விவசாயிகள் நிறைந்த கிராமப்புறத்தில் பாசனக் கால்வாய்கள் மற்றும் ஏரி குளங்களை உள்ளூர்ப் பண்ணையார்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் ஒப்படைத்து பாசனக் கட்டணம் வசூலித்தல்; இலவச மின்சாரத்தை ரத்து செய்வதன் மூலம் குழாய்க் கிணற்றுப் பாசனத்தை முடக்குதல்; இதன் மூலம் ஏழை நடுத்தர விவசாயிகளை மட்டுமல்ல, பணக்கார விவசாயிகளையும் விவசாயத்தை விட்டே வெளியேற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பண்ணையார்களின் கட்டுப்பாட்டிற்குள் விவசாயத்தைக் கொண்டு வருதல்.
- இந்தியாவின் நகர்ப்புறங்களையும் கிராமப்புறங்களையும் தண்ணீரின் மூலம் அடிமைப்படுத்த உலக வங்கி வகுத்திருக்கும் இரண்டு அம்சத் திட்டம் இதுதான்.
உலகின் உணவு உற்பத்தி முதல் தொழில் உற்பத்தி வரையிலான அனைத்தையும், காடுகள், மலைகள், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்ற வேண்டும். அவற்றைத் தாம் விரும்பிய வகையில் சூறையாடவும், கொள்ளை லாபமீட்டவும் உலக முதலாளிகள் உரிமை பெற்றிருக்க வேண்டும். இதற்குத் தடையாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சட்டங்கள், மக்களின் உரிமைகள், அரசியல் ரீதியான இடையூறுகள் ஆகியவற்றை அகற்றுவதுடன் தொலைநோக்குடன் சிந்தித்து பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குப் பாதையும் அமைத்துத் தரவேண்டும் - இவைதான் உலக வங்கியின் நோக்கங்கள்.
இதனடிப்படையில் அது வகுத்துள்ள தண்ணீர் தனியார்மயத் திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏற்கெனவே பல்வேறு படிநிலைகளில் அமலாகிக் கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு சான்றுகளைப் பார்த்தாலே போதும், வரவிருக்கும் விபரீதத்தை நாம் புரிந்து கொண்டு விட முடியும்.
ஏக்கருக்கு 8000 ரூபாய் பாசனவரி மகாராட்டிரா சட்டம்!
ஆறு குளம் ஏரி போன்ற பொது நீர் நிலைகளிலிருந்து பாரம்பரியமாகப் பாசனம் செய்து வரும் விவசாயிகள் அந்தத் தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. இந்த ஆணையை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றும் விதத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று மகாராட்டிர அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது.
''மகாராட்டிரா நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்'' என்ற இந்தச் சட்டம், ''நீர்வளத்தைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, இயக்குவது ஆகிய அனைத்துச் செலவுகளையும் ஈடு செய்யும் விதத்தில் தண்ணீரின் விலை நிர்ணயிக்கப்படும்'' என்கிறது. ''இதன்படி ஒரு ஏக்கர் பாசனத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8000க்கும் மேல் ஒரு விவசாயி செலுத்த வேண்டியிருக்கும்'' என்கிறார் முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் திரு. தேசர்தா.
இதுமட்டுமின்றி, ''பல மாவட்டங்களில் சொட்டு நீர்ப்பாசன முறை மட்டும் தான் அனுமதிக்கப்படுமென்றும், இந்தக் கருவிகளை நிறுவாத விவசாயிகளுக்குப் பாசன நீர் தரப்பட மாட்டாது'' என்றும் கூறுகிறது இச்சட்டம். இக்கருவிகளை நிறுவுவதற்கு மட்டுமே ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் செலவாகும். அதனை இயக்குவது மற்றும் பராமரிப்பதற்கான செலவுகள் தனி. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட விவசாயிகள் ஒன்றரை மடங்கு பாசனவரி கட்டவேண்டுமென்றும் கூறுகிறது இச்சட்டம். அதாவது ஏக்கருக்கு 12,000 ரூபாய்.
''தண்ணீரின் விலையை அரசாங்கம் தீர்மானிக்காது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீர்வளத்துறை வல்லுநர், தனியார்துறை முதலாளி ஆகிய மூவர் கொண்ட 'ஒழுங்குமுறை ஆணையம்'தான் ஆண்டுதோறும் பாசன நீரின் விலையை நிர்ணயம் செய்யும்'' என்றும் கூறுகிறது இந்தச் சட்டம்.
இந்தச் சட்டத்தின் விளைவை ஒரே வரியில் சொல்கிறார் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாய சங்கத் தலைவர். ''இதுவரை பாசன வசதி இல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்தான் தற்கொலை செய்து கொண்டார்கள். இனி பாசன வசதி பெறுபவர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்!
''ஏப்ரல் மாதம் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த கையோடு மே 10ஆம் தேதியன்று, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது மகாராட்டிர அரசு. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என்று விளக்கமும் சொல்லியிருக்கிறது.
பாசன நீரையும், நிலத்தடி நீரையும் விவசாயிகளிடமிருந்து 'பாதுகாத்து' பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாட்டை கச்சிதமாக முடித்து விட்டது காங்கிரசு அரசு. இப்படியொரு சட்டம் கொண்டு வரப் போவதாக எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் சட்டத்தின் நகலை சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூடப் படிக்கத் தராமல், ஒரே நாளில் 16 சட்டங்களில் ஒன்றாகக் குரல் ஓட்டு மூலம் விவசாயிகள் மீதான இந்த 'மரண தண்டனை' நிறைவேற்றப்பட்டு விட்டது.
தமிழகத்திலும் பாசனநீருக்கு வசூல்!
பாசன நீருக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் வசூலிப்பது என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறொரு வழிமுறையையும் உலக வங்கி கையாள்கிறது. இந்த வழிமுறை தமிழ்நாட்டில் தற்போது மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
''புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கும், ஏற்கெனவே உள்ள பாசனக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், ஏரிகள், கிளைக் கால்வாய்கள் ஆகியவற்றைப் புனரமைத்துப் பயனாளிகளின் பொறுப்பிலேயே அவற்றைப் பராமரிக்க வழிவகை செய்யவும் நீர்வள ஆதாரத் தொகுப்புத் திட்டம்2 என்ற திட்டத்தினை 3900 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு தயாரித்து, இதற்கு உலக வங்கியின் நிதி உதவியைப் பெற உள்ளது'' என்று மார்ச் 23ம் தேதியன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்.அதாவது, அணைக்கட்டுகள் முதல் பாசனக் கால்வாய்கள் வரை எதையும் இனி அரசு தன் செலவில் பராமரிக்காது. அதைப் பயன்படுத்துபவர்கள்தான் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது அரசு. அதாவது, பாசனநீருக்குப் பணம் கொடுக்க முடிந்த விவசாயிக்கு மட்டும்தான் தண்ணீர். மற்றவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு பணம் கொடுப்பவர்களுக்குப் பெயர்தான் 'பாசன நீர்ப் பயனாளிகள்'.
ஒவ்வொரு பாசனப் பகுதியிலும் 'பாசன விவசாயிகள் சங்கம்' என்ற ஒன்றை உருவாக்க வேண்டுமாம். 25 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள 'விவசாயி'தான் அதன் தலைவராக முடியுமாம். தண்ணீரின் விலை அங்கே தீர்மானிக்கப்படுமாம். இதுதான் உலக வங்கியின் திட்டம். தமிழக அரசின் பொதுப்பணித்துறையே முன்நின்று பாசன விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பாசன நீரைப் பெறுவதற்கு விவசாயிகள் கொண்டிருந்த பாரம்பரிய உரிமைகளும், நீரைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றி வந்த மரபுகளும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டு விட்டன. ''பணம் கொடுப்பவனுக்குப் பாசனநீர்'' என்ற இந்த விதி ஏழை நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டுத் துரத்தும். அவர்களது நிலங்களைப் பண்ணையார்கள் பறித்துக் கொள்ளவும் வழி வகுக்கும்.
இவையெதுவும் வெறும் ஊகமல்ல. ஒரிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில், 'தண்ணீர்ப் பஞ்சாயத்து' என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பாசன நீர் முழுவதையும் பண்ணையார்களிடம் ஒப்படைப்பதில் முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் 'தண்ணீர்ப் பயனாளிகள் சங்கத்தை'த் துவக்கி வைப்பதற்கு வந்த உலக வங்கித் தலைவர் உல்பன்சனையும், 'பயனாளி' களையும் விரட்டியடித்தார்கள், தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்ட ஏழை விவசாயிகள
நன்றி தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
Friday, October 7, 2005
தண்ணீர்க் கொள்ளையர்கள்
தண்ணீர் வியாபாரிகளில் பலர் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் இவர்கள் நகரங்கள், பெருநகரங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்கள், ஊற்றுக்கள் ஆகியவைகளை விலைக்கு வாங்கி, அங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வந்து புட்டிகளில் அடைத்து பெரும் இலாபத்திற்கு விற்கின்றனர் பல ஆயிரக்கணக்கான லாரிகளில் அன்றாடம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்கப்படுகின்றது.
யார் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்ற ஒழுங்குமுறை எதுவுமில்லை; போட்டா போட்டிதான் நிலவுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் எடுத்து, அவ்வளவையும் நல்ல விலைக்கு விற்று கூடிய விரைவில் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தண்ணீர் முதலாளியின் ஆசையாக வெறியாக இருக்கின்றது; நகர்ப்புறங்களில் உள்ள பெரும் பெரும் நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவறைகளுக்குக் கூட நல்ல குடிநீர் லாரி லாரியாய் வந்து இறங்குகிறது.
நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்காகத் தவிப்பது அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீர் முதலாளிகளின் லாப வெறி அதிகரிக்கிறது. சல்லடைக் கண்ணாகப் பூமியைத் துளைத்தெடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதை ஈடுகட்ட ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தைக் கூட்டுகிறார்கள். அதுவும் வறண்டு இன்னும் ஆழப்படுத்துகிறார்கள்.
இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் லாபவெறிக்கு இணையாக பம்பு செட்டுகளின் குதிரைத்திறன் 500750 என அதிகரிக்கிறது. குழாய்க் கிணறுகளின் விட்டம் அதிகரிக்கிறது. வெறி கொண்டு உறிஞ்சும் இந்த எந்திரங்களின் மூர்க்கத்தனத்தில் பூமி ஒரு குழந்தையைப் போலத் துடிக்கிறது. சுற்று வட்டார விவசாயிகளின் வீடுகள் நடுங்குகின்றன. மரங்களும் செடி கொடிகளும் வாடித் துவண்டு கருகுகின்றன. வழக்கமாக நீர் அருந்திய குளம் குட்டைகள் வறண்டு போனதால் போகுமிடம் தெரியாமல் பிரமை பிடித்தாற்போல் அலைகின்றன, கால்நடைகள்.
நீர்வளம் கொழித்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தை இரண்டே ஆண்டுகளில் சுடுகாட்டுப் பொட்டலாக மாற்றியதே கொக்கோ கோலா நிறுவனம், அது இப்படித்தான
நன்றி தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
-----------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.
விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net
Wednesday, October 5, 2005
மக்களின் அதிகாரம் ஒங்குக!
* தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.
* சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவதையும், ஜக்கியப்பட்டு வாழ்வதையும் அடிப்படையாக கொண்டது என்பதை பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.
* சுயநிர்ணயம் என்பது தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்;.
* தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதாவது உலகமயமாதலை திட்டவட்டமாக எதிர்த்து சுயநிர்ணயத்தை வரையறுக்கவேண்டும்.
* சகல வெளிநாட்டு மூலதனங்களையும், சொத்துக்களையும் நட்டஈடு இன்றி தேசிய மயமாக்கி தேசிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்.
* மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டும்.
* ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பணப்பயிர் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.
* தேசிய வளங்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றின் சமூகப் பெறுமானத்தை உயர்த்தி வளர்தெடுக்க வேண்டும்.
* தேசியத்தை கூறுபோட்டு ஏலம் போட்டு விற்க கோரும் சகல வெளிநாட்டுக் கடன்களையும், உள்நாட்டு தரகு கடன்களையும் அதற்கான வட்டிகள் கொடுப்பதையும் உடன் நிறுத்தவேண்டும். அதை தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக திருப்பிவிடவேண்டும்.
* சிறுபான்மை தேசிய இனங்களான மலையக, முஸ்லீம் மக்களின் சுயாட்சி பிரதேசங்களை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
* சிறுபான்மை இனங்களின் ஜனநாயக பூர்வமான வளர்ச்சியை உறுதி செய்யும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.
* சிறுபான்மை இனங்கள் மேலான கடந்தகால, நிகழ்கால இனவாத ஒடுக்கமுறையை தெளிவாக அடையாளம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.
* சிறுபான்மை இனங்களும் பெரும்பான்மை இனங்களும் பரஸ்பரம் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தேசியத்தை உயர்த்தி ஐக்கியத்தை வளர்க்க வேண்டும்.
* சகல இனப் பிளவு நடவடிக்கையையும் எதிர்த்து போராடவும், ஐக்கியத்தை வளர்ப்பதும் அடிப்படையான தேசிய கடமையாக ஏற்க வேண்டும்.
* மலையக மக்களின் பிரஜாவுரிமை வழங்கப்படுவதுடன், இது வரலாற்று ரீதியாக மனித விரோத குற்றத்தை இனம் காணவேண்டும்.
* இனவாத ஒடுக்குமுறைக்கு வௌவேறு பிரிவினர் சிறுபான்மை இனத்தில் தொடங்கி பெரும்பான்மை இனம் வரை எந்த வகையில் இணைந்தும் தனித்தும் நடத்தினர் என்பதை, தெளிவாக அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.
* பெரும்பான்மை இன மக்கள் மேல் நடத்திய குறுந்தேசிய இனத் தாக்குதலை இனம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்
*ஓ திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்து உருவான குடியேற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகள் சிறுபான்மை இனத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.
* இங்கு ஆயுதமேந்தியவர்கள் அந்த இடத்தை விட்ட வெளியேற்றப்பட வேண்டும்.
* அதே நேரம் அந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மை இன மக்களின் பாதுகாப்புக்கு வாழ்க்கைக்கு சிறுபான்மை இனங்கள் பொறுப்பு எற்க வேண்டும்.
* இனயுத்தத்தை நிறுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்துவது அவசியமானது.
*மூன்றாவது நாட்டின் மத்திஸ்தம் என்ற போர்வையில் நடக்கும், ஏகாதிபத்திய தலையீட்டை உடன் நிறுத்த வேண்டும்.
* சகல வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும், எதிர் காலத்தில் இதை கண்காணிக்க தலையீட முயலும் அமைதிப்படை முயற்சியும், உடன் தடுத்து நிறுத்தி வெளியேற்றப்பட வேண்டும்.
* அமைதியையும் சமாதனத்தையும் ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் இனம் கண்டு, பரஸ்பரம் அங்கீகரித்து ஏற்படுத்த வேண்டும். இங்கு ஜனநாயக கோரிக்கை என்பது எந்த இனத்துக்கும் விசேட அதிக சலுகைகளை வழங்குவதை மறுக்கின்றது.
* சகல இனவாத படைகளையும் கலைத்து, மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும்.
* சகல நிர்வாக அலகுகளும் கீழ் இருந்து மேல் நோக்கி விரிவுபடுத்த வேண்டும்.
* மக்களை தமது சொந்த பிரதேசத்தில் மீள குடியேற்ற வேண்டும்.
* பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
* உலகளவில் நாடு திரும்ப விரும்பும் அரசியல் மற்றும் பொருளாதார அகதிகளுக்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்தியா அகதிகள் விடையத்தில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.
* கடலிலும் நிலத்திலும் புதைக்கபட்ட கண்ணி வெடிகளை அகற்றி மக்களின் சமூக பொருளாதார மீட்சிக்கு முதலுரிமை வழங்க வேண்டும்
* திட்டமிட்ட இனவாத அடிப்படையில் கொண்டு வந்த இரட்டை பிரஜாவுரிமை பறிப்பை ரத்து செய்து, இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதாவது இலங்கை பிரஜாவுரிமையை வைத்திருக்கும் உரிமையை நாடு கடந்தவர்களுக்கு வழங்கவேண்டும்.
* நாடு கடந்து வாழ்பவர்களை கட்டாயப்படுத்தி நாடு கடத்துவதற்கு எதிராக போராட வேண்டும்
* யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, கல்விச் சீரழிவுகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.
* குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த நிலையில் ஆதரவற்று வாழ்கின்றவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையான வசதிகளை வழங்க வேண்டும்.
* யுத்தத்தில் அங்கவீனமானவர்களுக்கு விசேடமான அடிப்படையான வாழ்க்கை ஆதாரங்களை உறுதி செய்யவேண்டும்.
* அனைத்து அரசியல் கைதிகளையும், சமூக பொருளாதார கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.
* கடந்த கால அரசியல் படுகொலைகளை வரலாற்று ரீதியாக இனம் காணப்பட்டு அவற்றை சமூக ஆதாரமாக்க வேண்டும்.
* தனிச்சலுகை கொண்ட மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயக விரோத சமூகப் பொருளாதார கூறுகளை உடன் தடை செய்யவேண்டும்.
* சகல இனவாத, மதவாத, சாதியக் கட்சிகளையும் தடை செய்யவேண்டும்.
* இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், கல்வி, கலை இலக்கியங்கள், அமைப்பு வடிவங்கள், மற்றும் பண்பாட்டு கலாச்சார கூறுகள் அனைத்தும் நீக்கப்படவும், தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் வரலாற்று ரீதியாக அடையாளம் காணவேண்டும்.
* அரசில் இருந்து மத ஆதிக்கத்தை, மதத் தன்மை நீக்கவேண்டும். மாறாக மக்களின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமைக்குள், மக்களின் சமூக பொருளாதார தேவை பூர்த்தி செய்வதன் ஊடாக, வழிபாட்டின் சமூக அறியாமையை படிப்படியாக நீக்கவேண்டும்.
* சமூகத்தில் இனம் கடந்து புரையோடிப் போயுள்ள சாதிய கொடுமைகளை முற்றாக நீக்கவும், அதற்கெதிரான அனைத்து முயற்சிகளை முற்றாக தடை செய்யவேண்டும்.
*அனைத்து சாதிப்படி நிலைகளும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய கூறுகள் முற்றாக தடை செய்ய வேண்டும்.
* சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவு தெளிவாக வரலாற்று ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
* தீண்டாமை ஒரு சமூகக் குற்றமாக பிரகடணம் செய்யவேண்டும்.
* சமூக அடிமைப் பிராணியாக வாழும் பெண்களின் மேலான ஆணாதிக்க கொடுரங்களில் இருந்து பெண்களை விடுவிக்கவேண்டும். இதற்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் தடை செய்ய வேண்டும்.
* பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாகவே அடையாளம் காணவேண்டும்.
* மனிதனை மனிதன் சுரண்டும் ஜனநாயக விரோத்தை ஒழித்துக்கட்டவேண்டும். இதை மீட்டு எடுக்கும் அனைத்து முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்.
* மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி. சார்ந்து நடத்தும் பிளவு நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்வி முறைகள், பொருளாதார கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சார கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் அத்துடன் இதை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் இயற்கையான உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.
* அனைத்து அரசு சராத ஏகாதிபத்திய நிதியுதவியில் இயங்கும் நிறுவனங்களையும் (தன்னார்வக் குழுக்களையும்) முற்றாக தடை செய்ய வேண்டும். அத்துடன் வெளிநாட்டு நிதியாதாரத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
* மக்களின் உழைப்பு, அவர்களின் வாழ்வு, அவர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை உயர்வானதாக மதித்து அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.
* சகல வெளிநாட்டு உள்நாட்டு கலாச்சார பண்பாட்டு சீரழிவை தடை செய்யப்பட வேண்டும். மாறக தேசிய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தேசிய உற்பத்தி மீது வளர்தெடுக்க வேண்டும்.
* நிலப்பிரபுத்துவ தரகு பண்பாட்டு கலாச்சாரத்தை தடை செய்யவேண்டும். மக்களின் உயர்ந்த சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்வை மீட்டெடுக்கவேண்டும்
* மக்களின் உழைப்பும், வாழ்வும் சார்ந்த பண்பாட்டு கலாச்சரத்தை முன்னிலைப்படுத்தும் அதேநேரம், உலகளாவில் இருந்து இதை வரவேற்க வேண்டும்.
* இனவாத இனப்பிளவை அடிப்படையாக கொண்ட தரப்படுத்தல் முறையை எதிர்த்து, பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கவேண்டும்.
* பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை, உயர்த்தவேண்டும்.
*இலங்கை தேசிய வளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கு ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை வழங்க வேண்டும்.
* உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துகான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இனைந்த, அவர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் கல்வியை வழங்கவேண்டும்.
* முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில், பின் தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில், சமுக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்.
* இலங்கையில் தாய் மொழிக்கு அடுத்ததாக பரஸ்பரம் தமிழ் மற்றும் சிங்களத்தை கட்டாய மொழியாக்க வேண்டும்
* பல்கலைக்கழகம் வரை தாய் மொழி கல்வியை அமுல்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலக் மொழியிலான அடிப்படைக் கல்வியை தடை செய்யப்படவேண்டும்.
* கல்வியில் இருந்து மதக் கல்வியை முற்றாக தடை செய்யப்படவேண்டும்.
* அனைவருக்கு பல்கலைகக்கழகம் வரை இலவசக் கல்வியை தாய் மொழியில் வழங்க்கப்பட வேண்டும்
*இன மத அடிப்படையிலான வேலை வாய்ப்புமுறை தடை செய்யப்பட வேண்டும்.
* சகல மக்களுக்கும் வேலை வாய்ப்பை தேசிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
* மக்களின் சமூகத் தேவையை முதன்மைப்படுத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும்.
* சமூக இழிவாக கருதும் வேலைகளில் சமூக கடமைகளை ஒழித்துக் கட்டவும், சமூக இழிவாகப் பட்ட வேலைகளின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தவேண்டும்.
* சிறிலங்க என்ற இனவாத பெயருக்கு பதில் மக்களின் வாழ்வியிலுடன் தொடர்புடையதாக மாற்றப்பட வேண்டும்
* சகல வெளிநாட்டு சார்ந்த இராணுவத்துறை, உளவுத்துறை, சேவைத்துறை, கலை கலாச்சாரத்துறை, பொருளாதாரத் துறை என அனைத்தும் முற்றாக தடை செய்யப்டவேண்டும்.
* தேசியத்துக்கு எதிரான தரகு முதலாளித்துவ வாக்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராக போராடி அந்த வர்கத்ததை ஒழிக்க வேண்டும்.
* உழைக்கும் மக்களின் தலைமையிலான மக்கள் ஆட்சியை அமைக்க வேண்டும்.
* தேசியத்தை அழிக்கும் காட் ஒப்பந்தம் முதல் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் கிழித்தெறிய வேண்டும்.
* ஏகாதிபத்தியங்களையும் அதன் பொருளாதார அடிப்படையான உலகமயமயமாதலையும் எதிர்த்து போராடவேண்டும்.
* உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதாரவை எமது தேசியம் சார்ந்து நிற்கவும், அவர்களின் ஆதாரவையும் கோரவேண்டும்.
* உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போரட்டங்களுக்கு ஆதாரவை தெரிவிக்கவும், அதற்கு ஆதாரவாக போரடவும் வேண்டும்.
* மறுகானித்துவ முயற்சியை எதிர்த்து ஆயுதபாணியாக வேண்டும்.
* மக்களின் கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டும்
* எட்டுமணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஒய்வு, எட்டு மணி நேர உறக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். உழையாதவனுக்கு உணவில்லை என்ற சட்டம் அமுல்படுத்த வேண்டும்.
* வயோதிபர்கள், அங்கவீனர்கள், குழந்தைகள் சமூக பொறுப்பில் பராமரிக்க வேண்டும்.
* அனைவருக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
* அனைவருக்கும் இருப்பிடம், உணவு, நீர், சுத்தமான காற்று கிடைப்பதை இச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்;.
* மக்களின் ஒய்வுகள் சமூக வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மக்களின் எழுச்சிக்கான அடிப்படைகளை உறுதி செய்யவேண்டும்.
* இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அது சார்ந்து பொருளாதார கட்டமைப்புகளுடன் கூடிய வாழ்வு முறையும் முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.
* கற்பு, விதவை, தீண்டாமை போன்ற இழிவுக் கொடுமைக்கான சமூக பண்பாட்டுக் கூறுகளையும், கடமைகளையும் எதிர்த்து அதை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.
வரைமுறையற்ற நேரடி மற்றும் மறைமுக வரிமுறை நீக்கப்பட்டு நியாயமான சமூக பொருளாதார அடிப்படையில் வரிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.
மக்களின் அடிப்படைத் தேவையும், அவர்களின் வாழ்க்கையுமே ஒரு தேசத்தின், தேசியத்தின் அடிப்படையான விடையமாகும். மக்களின் வாழ்வைப் பற்றி, அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வையிட்டு அக்கறைப்படாத அனைத்தும், மக்களை சூறையாடுவதுதான். இது சிறுபான்மை பிரிவின் நலன்களுடன் தொடர்புடையதாக, உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு உட்பட்டதே. இதை யாரும் மறுக்க முடியாது.
இடைக்கால தீர்வு, படிப்படியான தீர்வு என்று காட்டும் எல்லா வகையான மோசடியும் மக்களுக்கு எதிரானதே. அதேபோல் ஒரே நாளில் தீர்வும் என்பதும் மோசடியே. உழைக்கும் மக்கள் தமது பிரச்சனையை தாமகவே தீர்க்கும் ஒரு வரலாற்றுப் பாதையில், பல படிகளைக் கடக்கலாம். ஆனால் அதை நிட்சயமாக உழைக்கும் மக்களின் ஆட்சியாக மட்டுமே இருக்கமுடியும். உழைக்கும் மக்கள் அல்லாத எந்த ஆட்சியும், முன்வைக்கும் படிநிலை தீர்வுகள் எப்போதும் உழைக்கும் மக்கள் மேலான படிமுறை அடக்குமுறைதான். இது எப்போதும் தேசத்தை, தேசியத்தை, தேசிய வளத்தை, இயற்கையை, உழைப்பை, உழைப்பின் வளத்தை, உழைப்புத் திறனை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழித்து ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு சேவை செய்வதாகவே இருக்கும். இதை நாம் அனுமதிக்க போகின்றோமா! இதை எதிர்த்து நாம் என்ன செய்யப் போகின்றோம்! சரணடைவா! போராட்டமா! நீ நிச்சயமாக இதில் ஒன்றை தெரிவு செய்தாக வேண்டும்.
---------------------------------------------------------------------------------
முஸ்லிம் மதமும் ஆணாதிக்கமும்
பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிந்து நடக்க கோரும் குர்ஆன் பெண்ணின் கீழ்ப்படிவுக்கான காரணம் ஆணின் செல்வத்தில் வாழ்பவள் என்பதை விளக்குகின்றது. இந்தச் செல்வத்தை அல்லா கொடுத்தார் என்றதன் மூலம் ஆணாதிக்க தனிச் சொத்துரிமையை இறை சட்டமாக்கினர்.
இதன் மீதான போராட்டமின்றி பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் இழந்து போன சொத்துரிமையை மீளப் பெறும் சமூக மயமாக்கல் போராட்டத்தினுடாகவே, பெண்ணின் விடுதலை நிபந்தனையாகின்றது. தனிச் சொத்துரிமையே பெண் அடிமைப்பட்டதற்கு காரணம் என்பதை, நபிகள் புரிந்து, அதனால் பெண்களை அதற்குட்பட்டு வாழக் கோரிய அளவுக்கு இன்று பெண்ணிலைவாதிகள் தனிச்சொத்துரிமைக்கான காரணத்தை காண மறுக்கின்றனர்.
நபிகள் அனுபவரீதியாக யுத்தத்தில் கொள்ளையடித்த செல்வச் செழிப்பில் பெண் மேலும் மேலும் அடிமையாக சிதைந்து சென்றதை, ஒரு தத்துவவாதிக்குரிய அனுபவத்துடன் காரணத்தை சரியாகவே புரிந்த கொண்டு விளக்கினர். இதனால் பெண்களின் உரிமைகள் சிலவற்றை நிபந்தனைக்குட்படுத்தி பாதுகாக்க முற்பட்டார்.
ஆனால் ஆணாதிக்க சொத்துரிமை, யுத்த செழிப்பால் வேகமாக வளர்ந்த போது, பெண்ணின் அடிமைத்தனத்தை அங்கீகரிப்பது மட்டுமே நபிகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் சமூக எல்லையாகவிருந்தது.
Tuesday, October 4, 2005
சமூக விரோதிகள் என்ற பெயரில்

சமூக விரோதிகள் என்ற பெயரில் இயக்கங்களால் படு கொலை செய்யப்பட்ட ஒரு மனிதன், உங்கள் முன் இங்கு காட்சியாகவே உள்ளது. இது போன்ற ஆயிரக்கான கொலைகள் மேட்டுக் குடிகளின் களிப்பூட்டும் ஆரவாரங்களுடன் நடத்தப்பட்டன. தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தின் (உண்மையான சமூக விரோதிகள் இவர்கள் தான்) தயவில் உதித்த இயக்கங்கள், சாதாரண பொது மக்களுக்கு எதிரான நடத்தைகளில் இதுவும் ஒன்று. உண்மையில் மக்களின் வாழ்வை அழித்து அதில் சுகபோகமாக வாழ்வை அமைக்கும் தனிமனிதப் பயங்காரவாத லும்பன்கள் நடத்திய சமூகவிரோதக் கொலைகளே இவைகள். மக்கள் மேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான இத போன்ற படுகொலைகள் பல ஆயிரம். அதில் ஒன்று தான் இது.
இயற்கை
''இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது'' என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.
Monday, October 3, 2005
மலையக மக்கள்
அடிமைகளாகவே வாழ்ந்த இந்த மக்களை அடிமைகளாக நிலைநிறுத்தவும், கண்காணிக்கவும் சாதிய அடிமைப் பிளவை பயன்படுத்திய பிரிட்டிசார், உயர் சாதிகளைச் சேர்ந்தோரையே கங்காணியாக நியமித்தனர். அதாவது நிலப்பிரபுத்துவ மத அடிப்படைவாத சாதிய வடிவத்தையே மலையக மக்கள் மேல் நிலைநிறுத்தினர். இதையே மலையக மக்கள் திரட்டிய போது ஒடுக்கப்பட்டவற்றை பாடல்கள் ஊடாக பாடத் தயங்கவில்லை.
"கண்டி கண்டி எங்காதீங்கா
கண்டி பேச்சு பேசாதீங்கசாதி
கெட்ட கண்டியிலே
சங்கிலியன் கங்காணி"
மலையக மக்களை கண்காணிக்கவும் சுரண்டவும் இடைத்தட்டாக கங்காணிகள் என்ற புதிய வர்க்கம் உருவானது. இவர்கள் உயர்சாதியாக இருந்ததுடன் மலையக மக்களை அடக்கியாண்டனர். கூலிகள் முதல் அனைத்தையும் இவர்களுக்கு ஊடாகவே கொடுத்ததன் மூலம் அடக்கியாளும் வகையில் படிநிலை வடிவத்தை வெள்ளை நிற காலனித்துவவாதிகள் கையாண்டனர். உழைப்பைச் சுரண்டுவதிலும், அவர்களை அடக்கியாள்வதிலும் பிரித்தாளும் வடிவத்தை, சமூக முரண்பாடுகளில் இருந்து எடுத்து தரகு வடிவத்தில் கையாண்டனர். பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் நிலப்பிரபுத்துவ முறையையும் சாதி வடிவத்தையும் ஒருங்கே பயன்படுத்தி, மலையகமக்கள் மேல் கறுப்பு அதிகார வர்க்கத்தை உருவாக்கினர். இப்படியாக பெரிய மற்றும் சிறிய உயர்சாதி கங்காணிகள் இருந்தனர். 2000க்கும் மேற்;பட்ட பெரிய கங்காணிகள் இருந்ததுடன், அவர்கள் ஜமீந்தார்கள் போல் வாழ்ந்தனர். நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய வடிவத்துக்குரிய அனைத்து ஒழுக்க வடிவத்தையும் ஈவிரக்கமின்றி இவர்கள் கையாண்டார்கள். கூலியாக 4 சதமும், சில்லறை தொழிலுக்கு 2 சதமும் வழங்கிய இவர்கள், காலை 5.30 முதல் மலை 6.30 மணிவரை வேலை வாங்கினர். இந்த வேலையை சர்வ சாதாரணமாகவே சவுக்கடிகள் மூலம் பெறப்பட்டது. மலையக மக்கள் இந்த உழைப்பின் கொடூரத்தை, சோகத்தை சொல்லிப் பாடத் தயங்கவில்லை.
"கோண கோண மலை ஏறி
கோப்பி பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதச்சானாம் சின்ன தோர"
"ஊத்தாத அடமழையில்
ஒதறல் எடுக்குதடா - அந்த
தாத்தான் கணக்கப்புள்ள
கத்தி தொலைக்கிறானே
ஏத்தல ஏறி எறங்க முடியுமா
சீத்துபூத்தன் னெனக்கு
சீவன் வதை போகுதையோ
எத்தனை நாளைக்கிதான் - இந்த
எழவ எடுக்கிறது
வெக்கங்கெட்ட நாயிகளும்
எகத்தாளம் போடுதுன்னு
இருந்துதான் பாத்துடுவோம்"
என்று குமுறும் பாடல், சுரண்டலுக்கே சவால் விடுகின்றது. வாழ்வின் நரகலை அனுபவிப்பவன், அதைக் கண்டு சினந்தெளும் பாடல் வரிகள் இவை. ஆனால் இந்த மக்களுக்கு எதிரான வர்க்கமோ தமது கொழுத்த வாழ்வை அனுபவிக்க, இந்தியாவில் ஆள் காட்டிகள் மூலமே ஆட்கள் பிடித்து கடத்தினர். ஆள் காட்டிகள் ஏமாற்றியும் கட்டாயப்படுத்தியும் பிடித்த போது, அங்கு கலவரங்கள் நடந்தன. மக்கள் கடத்தப்பட்ட கிராமங்கள் கண்காணிக்கப்பட்டன. இதில் பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். கண்டி மக்களின் சோகம் வெளியில் தெரிவதை தடுக்க குறிப்பாக பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். மூலதன திரட்டலுக்கு தேவைப்பட்ட உயிருள்ள உழைப்பின் அளவே, ஆளும் வர்க்கத்தின் நனவுகளை யதார்த்தமாக்கியது. சுரண்டலுக்கு தேவையான ஆட்களை கடத்தி வர பல்வேறு வழிகள் கையாளப்பட்டது. மலையக மக்களை கடத்திக் கொண்டு வரும் எண்ணிக்கை பெருகிச் சென்றது. இதற்கு இசைவாக பிரிட்டிசார் கொடூரமான சுரண்டலை தமிழ் நாட்டில் ஏற்படுத்தி பஞ்சத்தை உருவாக்கினர். 1833-34 இல் குண்டூர் பகுதியில் 30 முதல் 50 சதவீதமான மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். 1876-78 இல் தஞ்சாவூர் பகுதியில் 40 லட்சம் மக்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்டனர். இதை விட பரவலாக பல இடங்களில் பஞ்சம் மக்களை கொடூரமாக கொன்றது. இந்த சூறையாடும் பிரிட்டிசாரின் வரலாற்றில் இருந்தே மலையக மக்களின் நாடு கடத்தல் இலகுவாக்கியது. மலையகம் மட்டுமல்ல, உலகின் பல பாகத்துக்கும் பிரிட்டிசார் இந்தியா மக்களை நாடு கடத்த முடிந்தது. பல நேரங்களில் செயற்கையாகவே பஞ்சம் வரவழைக்கப்பட்டதுடன், உற்பத்தியில் பாதியை வரியாக பிரிட்டிசார் கோரினர். இந்த மனித விரோத கொடூரங்களின் மூலமே நாட்டை விட்டு மக்களை கடத்தினர்.
-----------------------------------------------------
Sunday, October 2, 2005
முதலளித்துவ உபதேசம்
1968 டிசம்பரில் 'சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது. ஹார்டின் முன்வைக்கும் 'அறிவியல் பூர்வமான' ஆய்வின் முடிவுகளில்
யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின், யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு ஆணையிடுகிறார். ''பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் 'மனித உணர்ச்சி'யை கட்டுப்படுத்த முடியாது; அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!'' என்று மக்களை, குறிப்பாக, ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.
நன்றி புதியகலச்சாரம்
--------------------------------------------------------------
புலிப் பாசிசத்தை ஒழிக்க,
.....சரி எகாதிபத்தியம், பேரினவாதமும் வரவிட்டால் என்ன, எங்களிடம் பாசிசத்தை ஒழிக்க மாற்று வழி இல்லையா என்ற கேட்டு, இதோ பார் இருக்கின்றது என்று புதிய சரக்கொன்ற ஒன்றை மாற்றாக முன்வைக்கின்றனர். அது என்ன என்று ஆச்சரியமாக இருக்கலாம். அந்த திரொக்சிய பினாமிய வழி "புலிவிரோத அரசியற் சக்திகளுக்கு முன்னால் மீண்டும் ஓர் மாபெரும் கைங்கரியத்தையும் கடமைப் பாட்டையும் வரலாறு திணித்துள்ளது. அது எண்பத்தி மூன்றை விடவும் மிகப்பெரியது, கடினமானது. அதுதான் புலிக்கெதிராக மீண்டும் ஆயுதமேந்திய எழுச்சியை மேற்கொள்ள வேண்டும்." ஆக ஆக இறுதியாக புலிப்பாசித்தை ஒழிக்கவே ஒரு வழியைக் கண்டு பிடித்தாயிற்று. இதைவிட்டால் வேறு வழி கிடையாது. ஆகவே புலி பாசித்தை ஒழிக்க இதுவே மாற்று என்கின்றனர். எனவே ஈ.பீ.டீ.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ,மட்டக்கிளப்புக் கருணா அணியுடன் கூடி, பாசிச ஒழிப்பில் ஈடுபட வருமாறு தேனீயும், ரி.பி.சியும், திரொக்சிய காவடியும் புலியெதிர்ப்பு அணிகளிடம் கோருகின்றனர். இதைக் கேட்டு யாருமே சிரிக்க வேண்டாம். தேனீ வாசகர்கள் எதிர்வினை இன்றி இதை வாசித்து சேரிப்பதும், ரி.பி.சி வாசகர்கள் இதை செம்மறியாடக கேட்டு நிற்பதும், எந்த விதத்திலும் புலிப்பாணி பிரச்சாரத்துக்கு குறைந்தவையல்ல. இதைத்தான் அவர்கள் உங்களைச் செய்யக் கோருகின்றனர். அதைத் தான் உங்களுக்கு வழிகாட்டுகின்றனர்.
இந்தக் கும்பல் கருத்துகளில் ஒரு விதண்டவாதமும், முரண்பாடும் இருப்பதை அதன் வாசகர்கள் கவனிக்காது இருக்கவே இருக்கிறது புலியெதிர்ப்பு அரசியல். ரிபிசியும், தேனீயும் அது சார்ந்த கும்பல்களும் புலியை மடக்க முன்வைக்கும் அரசியல் இங்கு நெருடுகின்றது. புலிகளை மடக்க முன்வைக்கும் ஒருவாதம் கேள்விக்கு உள்ளாகின்றது. அனைத்து அரசியல் படுகொலைகளை எதிர்க்கும்; இந்த கும்பலின் அரசில், அதாவது யாரையும் யாரும் கொல்வதற்கு உரிமை இல்லை என்ற விடையத்தை, இந்த ஆயுதம் எந்த விடுக்கும் அரசியல் எப்படிக் கையாளும். அங்கு யாரையும் யாரும் கொல்லும் கொலைகள் இருக்காதோ! தாங்கள் ஆயுதம் எந்துவது, யாரையும் யாரும் கொல்வதற்காக அல்ல, சும்மா கவர்ச்சிக்கு எந்துவதற்கே என்கின்றனர். நம்புங்கள் இந்த அரசியல் கோமளித்தனத்தை. புலிக்கு நிகாரன இவர்களின் கபடமான அரசியலை. தேனீ ஆசிரியர் ரி.பி.சியில் தொலைபேசி மூலமே கொலையை கண்டியுங்கள் என்று புலிகளை மடக்கி வாய்கிழய உபதேசித்த அதே கிழமை தான், ஆயுதம் எந்திய பாசிசத்தை ஒழிக்கும் வரலாற்று கடமைக்கு அறைகூவல் விடுத்த கட்டுரைக்கு ஊh பெயர் தெரியாது அனாதையாகவே பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதை ரி.பி.சி பெருமையுடன் ஒளிபரப்பியது.
யாரையும் யாரும் கொல்லமுடியாது என்று கூறும் இந்த கயவாளிகள் தான், புலிப் பாசிச ஒழிப்புக்காக எகாதிபத்தியம் இலங்கை அரசு இராணுவ ரீதியாக தலையிடக் கோருகின்றனர்?. அத்துடன் ஆயுதம் எந்தவும் கோருகின்றனர். இந்தப் புலிப் பாசிச ஒழிப்பில் யாரும் யாரையும் கொல்ல முடியம் என்பது இவாகள் சொல்லாத சொல்லும் செய்தி. இன்றைய அவர்களின் சந்தர்ப்பவாத நிலவரப்படி, வலிந்த கோரும் தலையிட்டின...
இக் கட்டுரையை விரிவாக பார்வையிட http://tamilcircle.net/news/theene%20politi.htm
------------------------------------------------------------------------
பெண்
------------------------------------------------------------
/
