தமிழ் அரங்கம்

Friday, October 10, 2008

தூங்கிறயா நடிக்கிறியா

தூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா? )

ஹியுலுநாக்கின் கொட்டடி மரணம் : அமெரிக்க மோகிகளுக்கு ஒரு பாடம்

தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்க்கும் அல்லது அத்துறையில் படித்து வரும் இந்திய இளைஞர்களின் கனவு, அமெரிக்காவுக்குப் போய் எப்படியாவது பச்சை அட்டை (எணூஞுஞுண இச்ணூஞீ) வாங்கி, அமெரிக்காவிலேயே "செட்டிலாகி'' விட வேண்டும் என்பதுதான். இயற்கையின் பிழையால், இந்திய நாட்டில் பிறக்க நேர்ந்து விட்ட அமெரிக்க மோகிகளின் மனசாட்சியை, இந்தக் கதை உலுக்க முடிந்தால், அது நமது "அதிருஷ்டம்'தான்!

இது, கற்பனைக் கதையல்ல; அமெரிக்காவின் பச்சை அட்டையைப் பெறும் முயற்சியில் தோற்றுப் போனதோடு, அதில் தனது உயிரையும் இழந்துவிட்ட ஹியு லு நாக் என்ற சீன இளைஞனின் உண்மைக் கதை இது.

கள்ளத் தோணி மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்து, அந்நாட்டிலுள்ள "வியர்வைக் கடைகளில்'' நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, ஏதாவதொரு பொந்தில் தூங்கி எழுந்து வாழ்க்கையை ஓட்டும் ஆசியக் கொத்தடிமை தொழிலாளி போன்றவர் அல்ல, ஹியு லு நாக்.

அவர் கணினிப் பொறியாளர். நியூயார்க் நகரில் உள்ள புகழ் ............... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இராணுவத் தீர்வை திணிக்க அரசியல் தீர்வு

இப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.

இப்படி அரச பயங்கரவாதம் தன்னை மூடிமறைக்க முனைகின்றது. தனது பயங்கரவாத வழியிலான இராணுவத் தீர்வை, தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றது. இதை எங்கும் எதிலும் செய்கின்றது. இதற்கு ஏற்பவே தமிழ் அரசியல்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பேரினவாதிகள் மட்டுமல்ல, தேசியம் ஜனநாயகம் என்று கூறி பிழைக்கும் கூட்டம் கூட அங்கீகரிப்பது கிடையாது. தேசியம் ஜனநாயகம் என்று கூறி அரசியல் செய்பவர்களும் சரி, இதற்கு இடையில் மிதப்பவர்களும் சரி, தமிழ் மக்களைச் சார்ந்து நிற்பதை மறுப்பதே, அவர்களின் அரசியலாகிவிட்டது. தேசியவிடுதலை என்பது ஆயுதங்களாகி விடுகின்றது. ஜனநாயகம் என்பது இந்திய இலங்கை கூலிக் கும்பலாக மாரடிப்பதாகி விடுகின்றது. இவர்கள் தேசியம் ஜனநாயகம் என்பதை, ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, தமிழ் மக்களைக் கூறுகூறாக துண்டு துண்டாக வெட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் எதைத்தான், எப்படித் தான், தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும்.

இதனாலும், தமது வர்க்க குணத்தாலும், தமிழ் மக்களின் உணர்வுகளை, உரிமைகளைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவை அழிக்கப்படுவதையும் எப்படித் தான் அடையாளம் காணமுடியும், எப்படித்தான் அதை அடையாளம் கண்டு கோரமுடியும்.

விளைவு பேரினவாதம் ..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 9, 2008

தண்ணி வந்தது…

தண்ணி வந்தது…(அடிமைச்சாசனம்)

அண்ணாதுரை : பிழைப்புவாதத்தின் பிதாமகன்

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது "தம்பிமார்கள்' பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார்மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி "கண்ணீர்த்துளி'களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, "நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்'' என்று பித்தலாட்டமாடினார். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்'' என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் "திராவிட நாடு'' என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்று............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 8, 2008

கஞ்சி ஊத்த வக்கில்லே

கஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம்)

தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல் நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது. ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான்.

தி.க. மகளிரணியோ "காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மூக்கு, காதுகளில் நகைகளை மாட்டுவதால் அந்தத் துறைக்கான எடுப்பையும் கம்பீரத்தையும் குலைத்துவிடுவதாக, குறைத்து விடுவதாக அமைவதால் அந்த நிலையிலிருந்து அப்பெண்கள் விடுபடவேண்டும்'' எனத் தீர்மானம் போட்டுள்ளது. கூலிகேட்டுப் போராடினாலோ, மறியல் அறப்போரில் ஈடுபட்டாலோ ஆண்போலீசுக்குச் சற்றும் குறையாமல் பெண்போலீசும் வெறிநாய்கள் போல் உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றது . இந்தக் கொடூர மிருகத்திடம் "எடுப்பையும்' "கம்பீரத்தையும்' யாராவது ரசிக்க முடியுமா? நகைகளைத் துறந்து வந்து அடித்து உதைத்தால் "எடுப்பாக' இருக்கிறது என்று ரசிக்கத்தான் முடியுமா?

பெரியார் தி.க.வினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள "தளபதி' வீரமணி, நீதிமன்றத்தில் தன்னை "இந்து' என்று குறிப்பட்டுள்ளார். "இந்து என்றால் .திருட...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, October 7, 2008

சாயி பாபா

சாயி பாபா

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1(பகுதி - 01) - மருதையன்

இந்திய அமைதிப்படையா? காமவெறி பயங்கரவாதப் படையா?

உள்நாட்டுப் போரில் நிலைகுலைந்து, வறுமையும் பட்டினியும் பீடித்து, தீராத அவலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, காங்கோ. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அந்நாட்டின் வடமேற்கே மாசிசி நகரிலுள்ள நிவாரண முகாம்களில் பஞ்சைப் பாராரிகளான கருப்பின மக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். வாகனங்கள் அணி வகுத்து சீறிக்கொண்டு வந்தன.

நீலநிற இரும்புத் தொப்பி அணிந்த ஐ.நா. மன்றத்தின் அமைதிப்படை சிப்பாய்கள், ரொட்டி, பால், முட்டை முதலான உணவுப் பொருட்களுடன் வந்திறங்கி, அம்மக்களுக்கு விநியோகித்தனர். சிறிதுநேரத்தில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பலநாட்களாகப் பட்டினி கிடக்கும் பலர், உணவுக்காக அச்சிப்பாய்களிடம் கெஞ்சிக் கதறினர்.

கைக்குழந்தைகளுடன் கதறும் தாய்மார்களைப் பார்த்ததும் அமைதிப்படை சிப்பாய்களுக்கு வக்கிரமான "கருணை' பிறந்தது. "ரொட்டியும் பாலும் முட்டையும் வேண்டுமா? தருகிறோம். அதற்கு நீங்கள் எங்களுடன் படுக்கைக்கு வரவேண்டும். சம்மதமா?'' என்று கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்தனர் அச்சிப்பாய்கள். வேதனையும் வெறுப்பும் கொப்பளிக்க, பட்டினியில் பரிதவிக்கும் கருப்பினத் தாய்மார்கள் அங்கிருந்து வெளியேறினர். பசியை ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்கலாம். பாலியல் இச்சைக்கு இணங்காவிடில் ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்காது என்றால், அப்பெண்கள் என்ன செய்ய முடியும்? அகதிகளாக உழலும் அவர்களின் பட்டினியைச் சாதகமாக்கி கொண்டு, காங்கோ .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, October 6, 2008

குறவன் குறத்தி

குறவன் குறத்தி

புரட்சியின் ஓசை கேட்கிறதா?

புரட்சியின் ஓசை கேட்கிறதா?

Sunday, October 5, 2008

குஜராத் மக்களின் நேருரை பகுதி -01

குஜராத் மக்களின் நேருரை பகுதி -01

தமிழில் இப்படி ஒரு இணையம் கிடையாது


4000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.
இந்த வகையில்
1.அறிவுக் களஞ்சியம் 40 உபதலைப்பைக் கொண்டது. அண்ணளவாக 700 கட்டுரைகள் உள்ளது.

2.அரசியல் - சமூகம் பி.இரயாகரன் அண்ணளவாக 655 கட்டுரைகள் உள்ளது.

3.புதிய ஜனநாயகம் அண்ணளவாக 630 கட்டுரைகள் உள்ளது.

4.புதிய கலாச்சாரம் அண்ணளவாக 270 கட்டுரைகள் உள்ளது.

5.அரசியல் - சமூகம் 30 மேற்பட்ட எழுத்தாளர்களுடைய கட்டுரைகள். அண்ணளவாக 400 கட்டுரைகள் உள்ளது.

6.நூல்கள் அண்ணளவாக 22 நூல்கள் உள்ளது.

7.ஒலி – ஒளி அண்ணளவாக 9 உப தலையங்கத்தின் கீழ் 440 தலைப்புகளில் 300 மணித்தியாளங்கள் கொண்டவை. இவை பல்துறை சார்ந்தவை.

8.சமூகவியலாளர்கள் 11 பேருடைய 480 கட்டுரைகள் உள்ளது.

9.ஆவணக் களஞ்சியம் 12 உப தலைப்பில் 300 ஆவணங்கள் உள்ளது.

10.இணைப்புக்கள் 55 இணைப்புகள் உள்ளது.

11.நிழற்படங்கள் - பல நூறுபடங்கள்
இவ் இணையத்தை சமூகத்தில் அறிமுகம் செய்யவும். சமூகத்துக்கு தேவையானவை என்று கருதும் எல்லாவற்றையும், நாம் இணைக்கத் தயாராக உள்ளோம். அந்த வகையில் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்கப்படுகின்றது. இணைக்க கூடிய கட்டுரைகளை தந்து உதவவும்;. இதில் இணைகப்பட்டவை மூலம் (உரிமம்) தவறுதலாக பதியப்பட்டு இருப்பின், அதை சுட்டிக்காட்டின் திருத்தப்படும்.

மேலும் தொழில் நுட்ப ரீதியாக இதைச் செலுமைப்படுத்த முனைகின்றோம். இதற்கும் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்க்கப்படுகின்றது.

பிள்ளைக்கறி தின்னும் பிரிமியர் மில்!முதலாளியின் இலாபவெறிக்கு இளம்பெண் உயிர்ப்பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்துள்ள சுண்டகாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி என்ற இளம்பெண். கூலி விவசாயி நடராஜ் என்பவரின் மகளான இவர் ஓசூர் வட்டம் பாகலூரை அடுத்துள்ள பெலத்தூர் பிரிமியர் மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக வேலையில் சேர்க்கப்பட்டார். தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கி, கிருஷ்ணவேணியை 3 மணிநேரம் கூடத் தூங்க விடாமல், அவசர வேலை என்று மிரட்டி ஆலை நிர்வாகம் அவரைக் கசக்கிப் பிழிந்துள்ளது.


இதனால் தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, மாதவிடாய்க் கோளாறுகள் உள்ளிட்ட பல உடல் உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதை மறந்து ஓய்வு கிடைக்கின்ற 34 மணி நேரத்தில் நன்றாகத் தூங்குவதற்காக ஆலை நிர்வாகமே தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளப் பழக்கப்படுத்தியுள்ளது.

தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் கடின உழைப்பு,.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, October 4, 2008

கொக்கோகோலாவின் ஏகபோக விநியோகத்தை, அதிக வரி மூலம் புலிகள் தமது கட்டுப்பாட்டில்...

புலிகளின் வரவாற்றில் அவர்களை முதன் முதலாக தமிழ் மக்கள் மிக நெருக்கமாகவே, சொந்த அனுபவவாயிலாக புரிந்து கொண்டுள்ளனர். மக்களை நேரடியாக பாதிக்கின்ற உடனடி நிகழ்ச்சி, பரந்துபட்ட மக்களை விழிப்படைய வைத்து விடுவதுண்டு. இது புரட்சிக்குரிய தயாரிப்பு காலங்களில் புரட்சியின் உந்து விசையாகின்றது. தமிழ் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி உடனடி நிகழ்வால் அல்ல, ஒரு குறுகிய கால நடவடிக்கையால் நடந்துள்ளது. அமைதி சமாதானம் புலிகளுக்கு எதிரான மனஉணர்வை தமிழ் மக்களின் உணர்வு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 வருட போராட்டத்தில் அவர்களின் போலித்தனமான வேடங்கள் மக்கள் முன் அம்பலமானது, இந்த அமைதிக்கு பின்னான காலகட்டத்தில் தான், மக்கள் ஒவ்வொருவரும், சுயமாக புலிகளை சொந்த அனுபவம் வாயிலாக மிக நெருக்கமாக புரிந்து கொண்ட நிகழ்வு, முதன் முறையாக நிகழ்ந்துள்ளது. இந்த அனுபவம் துரதிஸ்டவசமாக தவிர்க்க முடியாது, சொந்த இனத்தின் மொத்த நலனுக்கு எதிரானதாக உள்ளடகத்தில் பிரபலிக்கின்றது. எந்த பிரச்சார சமூக வடிவங்களையும் தாண்டிய மக்களின் சொந்த அனுபவம், புலிகளின் அரசியல் அழிவுக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது. தமது சொந்த அழிவுக்கே தாமே வித்திடும் அழிவுக்குரிய மக்கள் விரோத நடவடிக்கைகளை, புலிகள் தமது சொந்த அரசியலாக வரிந்து கொண்டுள்ளனர்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக .....

மூன்றாவது தமழீழத் தேசிய விளையாடு விழாவை புலிகள் 20.2.2004 கிளிநொச்சியில் நடத்தினர். அந்த தேசிய விழாவில் கொக்கோகோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரியளவில், புலிக் கொடியின் பின்னணியில் வடிவமைக்கப்பட்டடிருந்தது. (பார்க்க 21.2.2004 தினக்குரல் பத்திரிகையில்) சாதாரண செய்திப் பத்திரிகையிலேயே இப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. உத்தியோகபூர்வமற்ற வகையில் புலிகளின் ஆதரவுடன், தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக மாறியுள்ளது. இதன் மூலம் துரோகியான தேசிய குளிர்பானத்துக்கு, துரோக தண்டனையாக மரணதண்டனை வழங்கப்பட்டு விட்டது. இதை யாரும் உரிமை கோரவில்லை. இதற்காக வழமைபோல் யாரும் குரல் கொடுக்கவுமில்லை. புலிகள் பன்னாட்டு பொருட்களின் இடைத்தரகராக மாறிவரும் நிலையில், தேசிய பொருளாதாரத்தின் எஞ்சிய மூச்சுகளும் சேடமிழுக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் கொழும்புத் தரகர்களுக்கு கீழ் இருப்பதை விட, நேரடி தரகராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் சிங்கள இனவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற கூத்தை நடத்துகின்றனர்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மறையாது மடியாது நக்சல்பாரி

மறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு)

உலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி!

"கம்யூனிசம் தோற்றுவிட்டது; தனியார்மயம் தாராளமயம் உலகமயம்தான் ஒரே தீர்வு!'' என்று எக்காளமிட்ட முதலாளித்துவம், அனைத்துலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவிலேயே முதுகெலும்பு முறிந்து மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டு விட்டது. அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; கட்டுப்பாடற்ற ஊகவணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகள் இவற்றால் விபரீத விளைவுகள் நேரிடும் என்று தெரிந்தே "அப்படியெல்லாம் நடக்காது; எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்ற ஆணவத்தோடு செயல்பட்ட தனியார் ஏகபோக நிதிக் கழகங்கள், "சப் பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்கு தரப்படும் கடன்களால் ஆதாயமடைந்த பின்னர், நெருக்கடி தீவிரமாகி அடுத்தடுத்து திவாலாகி குப்புறவிழுந்து கிடக்கின்றன.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மாக் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியதும் அமெரிக்க அரசு, அவற்றை அரசுடைமையாக்கி நிதிச் சந்தையை தூக்கி நிறுத்த 20,000 கோடி டாலரைக் கொட்டியது. அதைத் தொடர்ந்து, உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. அதற்கடுத்து, மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குருப் நிறுவனம் திவாலாகி, அமெரிக்க அரசு 8500 கோடி டாலரை இழப்பீடாகக் கொடுத்து அரசுடைமையாக்கியது. தற்போது............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, October 3, 2008

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு :

1.காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

 

2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை

 

3.கருவாகி உருவான கதை

 

4.விசுவாச நாய்கள்

 

 

5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

 

6.சாத்வீகச் சதிச் செயல்

 

7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி

 

8.நிலப்பிரபுக்களின் தாசன்

 

9.மூக்கில் நாறிய சுயராச்சியம்!

 

10.அகிம்சையின் நோக்கம்

 

11.மகான் அல்ல; மக்கள் விரோதி!

 

12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

 

13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை

 

14.மக்கள் முதுகில் குத்திய காந்தி

 

15."சுதந்திரம்' ஒரு கபட நாடகமே!

 

16.குழப்பவாதிகள்

 

17.படுபிற்போக்காளர்கள்

 

18.இந்து சநாதனி

 

19.சர்வாதிகாரிகள்

 

20.ரௌடிக் கும்பல்

 

21."வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

 

22.மேலும் சில ஆதாரங்கள்


ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும்

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, புலியல்லாத பிரதேசத்தில் புலிக்கு நிகரான பாசிசம். எங்கும், எதற்கும் படுகொலை, கடத்தல், காணாமல் போதல், கைது, புலியென முத்திரை குத்தல், இழிவுபடுத்தல் என அனைத்தும், இந்த ஜனநாயகத்தில் அரங்கேறுகின்றது. இதுவே ஜனநாயகமாக, இந்த பாசிசம் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது.

முன்பு புலிகளின் பகுதியில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ முனைந்தவர்கள், புலியல்லாத பிரதேசத்தில் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் வாழமுனைந்தனர். ஆனால் இன்று, புலியல்லாத பிரதேசத்தில் சுதந்திரமாக வாழமுடியாது என்ற நிலை. அரசின் கூலிக் கும்பலாக எடுபிடிகளாக மட்டும் தான், யாரும் வாழமுடியும் என்ற நிலை. அரசுக்கு கைக்கூலியாக இருந்தல் தான், சுதந்திரம் என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதையும் சுதந்திரமாக பேசவும், சொல்லவும், செய்யவும் முடியாதளவுக்கு, பாசிசம் மனித சுதந்திரத்தை வேட்டையாடுகின்றது. இதையே தமிழ் மக்களின் ஜனநாயகம் என்கின்றனர். இதைத் தான் தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.

தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களையே விலங்கிட்டுள்ளது. கண்காணிப்பும், படுகொலை அரசியல் வெறியாட்டமும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 2, 2008

வெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?)

வெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?)

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! – பாகம் 2 மருதையன்

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! – பாகம் 2 மருதையன்

தேசம் தேசியம் என்பது புலிகளின் கண்டுபிடிப்பா?

இப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ஏற்ப வைக்கத் தயாராகவே உள்ளது.

அந்த வகையில் 'தமிழ் தேசியத்தை விமர்சித்தால் புலி எதிர்ப்பு, சிங்கள தேசியத்தை விமர்சித்தால் அரச எதிர்ப்பு என கருப்பு வெள்ளையாக பார்க்கும் சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்கின்றது. இப்படி கேட்பது ராகவனுக்கு வேடிக்கையாகி விடுகின்றது.

'..சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்று கேட்கும் இதில் இருந்து விடுபடும் நீங்கள், எதை அதற்கு பதிலாக எம்முன் வைக்கின்றீர்கள். முதலில் அதைச் சொல்லுங்கள். அப்போது தானே நாமும் விடுபட முடியும். நீங்களே விடுபடுவில்லை என்பதல்லவா உண்மை. நீஙகள் எல்லாவற்றையும் புலிக்கூடாக, புலியொழிப்புக்கு ஊடாக பார்க்கவில்லையா? இது தானே கறுப்பு வெள்ளைக் கோட்பாடு. சொல்லுங்கள்.

ராகவன் எழுப்பும் இந்த தர்க்க வாதமே, அரசியல் உள்ளடகத்தில் தவறானது. விமர்சித்தல் என்பது,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 1, 2008

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கம்பலை விரட்டு! – பாகம் 1 மருதையன்

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கம்பலை விரட்டு! – பாகம் 1 மருதையன்

யாழ் மக்கள் சுபீட்சமோ, பேரினவாத 'ஜனநாயக"த்தில் கிடைக்கின்றதாம்!

ஜனநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை முறை எதுவும் கிடையாது. நாம் இதில் இருந்து வேறுபட்டுப் பார்க்கின்றோம்.

மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்து இதை நோக்குவதால், புலி மற்றும் புலியெதிர்ப்பு பிரிவுகளிடம் இருந்து கடுமையான எதிர்த்தாக்குதலை ஒரே நேரத்தில் சந்திக்கின்றோம். அவர்கள் இதைக் கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள முடியாது என்பதால் தான், தனிமனித அவதூறுகளாக சந்திக்கின்றோம். அரசியல் ரீதியாக இதைப் புறந்தள்ளிக்கொண்டு தான், மக்களின் உரிமைகளை நோக்கி முன்னிறுத்தி முன்னேற முடியும். இதை எமது அனுபவம் மட்டுமின்றி, விமர்சனமும் சுயவிமர்சனமும் கூட எடுத்துக் காட்டுகின்றது.

 

பேரினவாத 'ஜனநாயக"த்தில் மக்களுக்கு 'ஜனநாயகம்" கிடைக்கின்றதா? ஆம் என்று சொல்லுகின்ற, அதை ஆதரிக்கின்ற, கண்டும் காணாமல் விடுகின்ற வகையில் புலியல்லாத 'ஜனநாயக" தளங்கள் இயங்குகின்றது. இதற்குள் தான், இப்படித்தான் புலியல்லாத தளங்கள் அரசியல் பேசுகின்றது. ஜயா 'ஜனநாயக" வாதிகளே, இது எப்படி? என்று கேட்டால், நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். நீ ஒருவன் தானே என்று நக்கலும் நையாண்டியும் அடித்து குலைக்கிறார்கள், கடிக்கின்றார்கள் கடித்துவிட்டு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்



Tuesday, September 30, 2008

நாம் இந்து இல்லை சொல்லடா

நாம் இந்து இல்லை சொல்லடா (அசுரகானம்)

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல

புலித்தேசியம் ஜனநாயகத்தை மறுக்கின்றது. புலியெதிர்ப்பு ஜனநாயகம் தேசியத்தை மறுக்கின்றது. இதற்குள் நடுநிலை என்பதும் அல்லது இதில் ஒன்றை ஆதரிக்க கோருவதுமான விமர்சனங்கள் அர்த்தமற்றவை.
இந்தப் போக்குகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. புலியை அழிப்பது ஜனநாயகமும் அல்ல, புலியெதிர்ப்பை அழிப்பது தேசியுமுமல்ல.

அண்மையில் "தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்" என்று புதுவை இரத்தினதுரை அழைக்கின்றார். விசித்திரமான கோணங்கித்தனமான அழைப்பு. யாரைத் தான் அழைக்கின்றார்? அவர் சார்பு ஊடகங்கள் நடத்தும் புலிப் பல்லவிக்கு அப்பால், வேறு எதைத்தான் அவர் படைக்கக் கோருகின்றார். சரி எதைத்தான் ஒரு மனிதன் சுதந்திரமாக படைக்க முடியும்?

சரி, தமிழ் மக்களின் கண்ணீர் கதைகளை உலகுக்கு சொல்வது என்பதானால், எந்த உலகத்துக்குச் சொல்வது? சரி, எந்தக் கண்ணீர் கதையைக் கூறுவது? மக்களின் கண்ணீர் பற்றி மூக்கால் சிந்தி நடிப்பதற்கு அப்பால், புலிக்கு மனிதம் பற்றிய கோட்பாடே கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வு மீது எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் கிடையாது. புலிகளின் மாபியாத்தனத்தையும், பாசிசத்தையும் கேள்விக்கு இடமின்றி ஆதரிக்கும், மந்தைக்குரிய இழிபிறவிகளாக மக்களைக் கருதி நடத்துவதே புலிக்கோட்பாடாகும். இதற்கு வெளியில் தமிழ் மக்களின் நலன் சாhந்த பேச்சுக்கு அங்கு இடமேயில்லை. அவர்கள் மொழியில் கூறுவதானால் அதாவது "மேதகு" தலைவர் பிரபாகரன் பெயரில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று புலிகள் அறிவித்து நிராகரித்.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 29, 2008

இடித்துவிட்டான் மசூதியை

இடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம்)

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது


புலிகள் எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுமிராண்டிகளாக, பண்பாடற்றவர்களாக உறுமுகின்றார்களோ, அந்தளவுக்கு தமிழ் இனத்தில் எலும்பு சிதிலங்கள் மட்டும் எஞ்சுவதை யாரும் தடுக்கமுடியாது. பேரினவாதம் மிகவும் பலமான நிலையில், தமிழ் இனத்தை புலிகளைக் கொண்டே அழிக்கின்ற எதார்த்தத்தை, ஒரு காலமும் தமிழ் இனம் தானாக எண்ணியிருக்கமாட்டது. பேரினவாதத்தின் சூழச்சிமிக்க அரசியல் நரித்தனத்துக்கு எதிராக, நியாயமான ஒரு போராட்டம் (அரசியல் மற்றும் இராணுவம்) அவசியமாக இருந்த போது கூட, அதை நியாயமான மக்களின் கோரிக்கைளால் தனிமைப்படுத்தி வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் ஆளுமை காட்டுமிராண்டிகளுக்கு எப்போதும் கிடையாது என்பதை தமிழினத்தின் சார்பாக மீண்டும் புலிகள் நிறுவிவருகின்றனர்.

புலிகள் இயக்கமே பதவி வெறியர்களாலும், கொள்ளையடிப்போராலும், சுத்துமாத்துகாரர்களும், ஒட்டுண்ணிகளாலும், பிழைப்புவாதிகளாலும் சூழப்பட்டுவிட்டது. அது இன்று ஒரு போராட்ட இயக்கமே அல்ல என்ற நிலைக்கு, படிப்படியாக தனக்குத் தானே நஞ்சிட்டு சீரழிந்து சிதைந்து வருகின்றது. இந்த சிதைவுகள் சமூகத்துக்கே நஞ்சாகின்றது. தியாகங்கள் எல்லாம் சிலரின் நலனுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகளை பயன்படுத்தி தாம் நன்றாக வாழமுடியும் என்று நம்புகின்ற பொறுக்கிகளின் கூட்டமே, புலியைச் சுற்றி இன்று.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 28, 2008

அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு


அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு

'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது

தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது. இந்த புலியெதிர்ப்பு அரசியல், மக்களை தமது நடைமுறை அரசியல் போராட்டங்களில் இருந்து எட்டியுதைக்கின்றது. மாறாக மக்களை தமது சொந்த எடுபிடி அரசியலுக்கு பயன்படுத்த கூவியழைக்கின்றது. மக்களை புலிகள் எப்படி தமது சொந்த குறுகிய நலனுக்கு பயன்படுத்த முனைகின்றனரோ, அப்படியே புலியெதிர்ப்பு கும்பலும் செய்ய முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பல் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஏற்ற மறுகாலனிய சூழலையுருவாக்க, மக்களை தமது அரசியல் எடுபிடிகளாகவே வரக்கோருகின்றனர்.


 இதைவிட வேறு எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் கிடையாது. இந்தக் கும்பல் இதைத்தான் தமிழ்மக்களின் புதிய தலைமை என்கின்றனர். இதனடிப்படையில் ஒரு கட்டுரை தேனீ இணையத்தில் வெளியாகியது. "தமிழ்மக்களுக்கு இன்று புதியதொரு ஜனநாயக தலைமைத்துவம் தேவை." என்ற தலைப்பில் வெளியாகியது. ஞாநி என்ற புனைபெயரில் எழுதும் திரோஸ்கியவாதி புலியெதிர்ப்பு எடுபிடி அரசியலை, அரசியல் மயப்படுத்த முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பலுக்கு அரசியல் அடியெடுத்து கொடுப்பவர்கள் இந்த திரோஸ்கியவாதிகள் தான். புலிக்கு அரசியல் வழிகாட்டியவர் முன்னாள் திரோஸ்கிய பாலசிங்கம் என்றால், புலியெதிர்ப்பு கும்பலுக்கும் திரோஸ்க்கிய அன்னக்காவடிகள் வழிகாட்ட முனைகின்றனர்.


எங்கள் எல்லோருக்குமுள்ள அடிப்படையான சந்தேகமே, அனைத்துக்குமானதாக உள்ளது. இந்த "புதியதொரு ஜனநாயக" தலைமை ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமா? பேரினவாதத்தை எதிர்க்குமா? சுரண்டலை எதிர்க்குமா? சாதியம், ஆணாதிக்கம் போன்ற சமூக அநீதிகளையும், சமூக முரண்பாடுகளை ஒழிக்குமா?............
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, September 27, 2008

வீர சோழ தப்பாட்டக் குழுவினர்

வீர சோழ தப்பாட்டக் குழுவினர்

நிதர்சனம் டொட் கொம் நித்திரையில் கனவு காண்கின்றது

''ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!" என்று நிதர்சனம் டொட் கொம் அறை கூவுகின்றது. (இக் கட்டுரை முழுமையாக கீழ் உள்ளது.) எல்லாம் முடிந்த பின், முடித்து வைத்த பின், எதைத் தான் இனி தமிழ் இனம் பாதுக்காக்க முடியும். விமர்சனம் சுயவிமர்சனமின்றி, எதையும் குறைந்தபட்டசம் யாரும் மீட்க முடியாது. செத்துக் கொண்டிருக்கும் புலி தேசியத்தை விமர்சிக்காமல் விட்டுவிடுதால், அது உயிர் வாழ்ந்துவிடமா!?

உயிருடன் அணுயணுவாக செத்துக் கொண்டிருக்கும் புலியை விமர்சிப்பதற்கு இனி எதுவுமில்லை. அது தனது சவப்பெட்டிக்கே, தானே ஆணி அடித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்படி ஏன் இந்த நிலையை அடைந்தது என்பதை திரும்பிப் பார்ப்பது மட்டும் அவசிமாகின்றது..................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

முந்தானை விரிக்கும் புலம்பெயர் 'ஜனநாயகம்"

இந்த 'ஜனநாயகம்" தனது சொந்த மனவிகாரங்களையும், முரண்பாட்டையும், தனிமனித காழ்ப்புகளையும்;, அரசியல் முலாம் ப+சி கொட்டித் தீர்ப்பதைத் தான் மாற்றுக் கருத்து என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான கருத்துகளுக்கு புலியெதிர்ப்பு தளத்தில் இடமில்லை. அவை இவர்களால் மறுக்கப்படுகின்றது, மறுபக்கத்தில் அவை அனுமதிக்கப்படுவதில்லை. இது புலியெதிர்ப்பாக வேஷம் போட்டுவிடுகின்றது. மக்களின் விடுதலைக்கான கருத்துகள் இந்த 'ஜனநாயகத்தில்" வைக்கப்படுவது கிடையாது.

இதனால் தான் இது அரசுடன் அல்லது புலியுடன் தஞ்சமடைகின்றது. இதற்கு வெளியில் இந்த புலம்பெயர் 'ஜனநாயகம்" என எதுவும் சுயமாக கிடையாது. இந்த வெட்டை வெளியில் தான், தேசம் (நெற்) பவ்வியமாக மிதக்க முனைகின்றது. இரண்டையும் பயன்படுத்தி பிழைக்கும் 'தொழில் நேர்மை" ஊடாக, இது ஒரு அலியாக பிறப்பெடுத்துள்ளது. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு அரச பாசிட்டுகள் துணை இன்றி எப்படி இன்று இயங்க முடியாதோ, அப்படித் தான் தேசமும். புலி புலியெதிர்ப்பு பாசிட்டுகளை சார்ந்தும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளிடையே முரண்பாடுகளையும் தனது பங்குக்கு உருவாக்கித் தான், தேசம் உயிர் வாழ முடிகின்றது. இதைத் தான் தேசம் பொறுக்கிகள் தமது 'தொழில்நேர்மை" .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, September 26, 2008

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

5.தூங்கிறயா நடிக்கிறியா

தூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா? )

மாற்றுப் பயிர்த் திட்டம் : விவசாயிகள் விட்டில் பூச்சிகளா?

கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு ஒரு மாற்றுப் பாதையை காட்டுவதாகப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள், பாரம்பரிய உணவு மற்றும் தானிய உற்பத்தியில் உள்ள நிலங்களில் இம்மண்ணுக்கே அறிமுகம் இல்லாத புதிய பயிர்களையும் மற்றும் ஏற்றுமதிக்கான பயிர்களையும் விவசாயம் செய்ய வழிகாட்டுதல் கொடுக்கின்றன.

 இதை விவசாய விஞ்ஞானிகள் பன்முகப் பயிர் (Crop diversification) விவசாயம் என்கிறார்கள். பன்முக விவசாயத்தை மேற்கொள்வதே விவசாயிகளை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள். இதனடிப்படையில் மைய விவசாய அமைச்சர் சரத்பவார், "கோதுமை, அரிசி உற்பத்தியைக் குறையுங்கள்; மாற்றுப் பயிர்களைப் பயிரிடுங்கள்'' என விவசாயிகளைப் பார்த்து அறிவுரை கூறி வருகிறார்.


இந்த மாற்றுப் பயிர் விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டியது பா.ஜ.க. கூட்டணி அரசு. மாற்றுப்பயிர் விவசாயத்தை ஜூலை 8, 2004 அன்று தேசியத் தோட்டகலைத் திட்டத்தின் ஊடாக (
National horiculture Mission-NHM) அமல்படுத்தியது. இத்திட்டத்தின் அடிப்படையில் பழங்கள், காய்கள், வாசனைப் பொருட்கள், மருத்துவச் செடிகள், மலர்கள், தென்னை, பாக்கு, முந்திரி, கோக்கோ, ஹெர்கின், நெல்லி, காட்டாமணக்கு, சர்க்கரைச் சோளம், மற்றும் பல்வேறு புதிய வகைப் பயிர்கள் பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்தகைய பயிர்களை வல்லுனர்கள் "தோட்டப்பயிர்'' என்று வரையறுத்துள்ளனர். மேலும் இந்தப் புதிய............  முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, September 25, 2008

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு.

தமிழ் மக்களின் நியாயமான.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்து வென்றால் சொல் சம்மதமா?

 இந்து வென்றால் சொல் சம்மதமா? (காவிஇருள்)

ஆந்திராக்ஸ் பீதி : அமெரிக்காவே குற்றவாளி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதையடுத்த சில தினங்களில், "ஆந்த்ராக்ஸ்'' என்ற நச்சுக் கிருமியின் உயிர் அணுக்கள் தடவப்பட்ட கடிதங்கள், சில அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களைக் குறி வைத்து அனுப்பப்பட்டன. மர்மமான முறையில் நடந்த புதிய வகையான இத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடம் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறிவந்த அமெரிக்கக் கூலிப் பிரச்சாரக் கும்பல், ஆந்த்ராக்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள் தொடங்கியிருக்கும் உயிரியல் யுத்தம் எனப் பீதியூட்டின. ஈராக் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க வேண்டும் எனத் திட்டம் போட்டுக் காத்திருந்த அமெரிக்க ஆளும் கும்பல், அமெரிக்க மக்களை மூளைச் சலவை செய்ய ஆந்த்ராக்ஸ் தாக்குதலையும் பயன்படுத்திக் கொண்டது.

ஆந்த்ராக்ஸ் கிருமி தடவப்பட்ட கடிதம் யார் வீட்டுக்கு வருமோ என்ற பீதி ஒருபுறமிருக்க, அமெரிக்க உளவு அமைப்பான "எஃப்.பி.ஐ.'' யார் வீட்டுக் கதவைத் தட்டுமோ என்ற அச்சத்திலும் அமெரிக்க மக்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், எஃப்.பி.ஐ., வெள்ளைத் தோல் அல்லாத அந்நியர்களை மட்டுமல்ல, அமெரிக்க விஞ்ஞானிகளைக் கூட விட்டு வைக்காமல், விசாரணை நடத்தியது. உயிரியல் விஞ்ஞானிகள் அனைவரும் சந்தேகப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

Wednesday, September 24, 2008

காடு களைந்தோம்

காடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை)

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?


ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் தீர்வாக காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகள் என்றுமேயில்லாத அளவுக்கு இராணுவ ரீதியாக தோற்றுக் கொண்டிருக்கின்றனர். பேச்சவார்த்தை என்ற அரசியல் மேசையில் தோற்றவர்கள், அதைத் தொடர்ந்து இன்று இராணுவ அரங்கில் தோற்பது தொடங்கியுள்ளது. அரசியல் மேசையில் தோற்று வந்த ஒரு நிலையில், வெல்வதற்காக அவசரமாகவே ஒரு தலைப்பட்சமாக வலிந்த ஒரு இராணுவ அரங்கைத் தொடங்கினர்.

இப்படி உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படாத ஒரு யுத்தத்ததை நோக்கி அவசரமாக ஒடிய புலிகள், தொடர்ச்சியாக அதில் தோற்றுப் போகின்றனர்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 23, 2008

இந்து என்று சொல்லாதே

இந்து என்று சொல்லாதே கவிதை – தோழர் துரை. சண்முகம்

'அவர்களுக்கு நிலம் சொந்தமாய் இருந்தது!" ஆந்திராவில், சி.பொ.மண்டலத்தால் நிலத்தை விழந்துவிட்ட தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் போராட்ட வாழ்வு

அண்மையில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தின் ஜட்செர்லா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 விவசாயிகள் சுயேச்சைகளாகக் களமிறங்கினர். அவர்கள் தேர்தலில் நின்றது சட்டசபைக்குச் செல்வதற்கு அல்ல. சிறப்புப்பொருளாதார மண்டலம் எனும் பேரால் தங்கள் நிலம் பறிக்கப்பட்டதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவே இத்தேர்தலில் நின்றனர். 8 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பிரித்து இதற்கு முந்தைய தேர்தலில் வென்ற தெலுங்கானா ராஷ்டிர சமிதியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளனர்.

2003ஆம் ஆண்டில் "பசுமைப்பூங்கா' அமைப்பது என்ற பெயரில் நில அளவை ஆரம்பிக்கப்பட்டதும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் திரண்டெழுந்து சாலைமறியல் செய்தனர். தலைநகர் வரை போராட்டத்தை எடுத்துச் சென்று சட்டசபை முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 2005ஆம் ஆண்டில், "பசுமைப்பூங்கா' என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரோபந்தோ பார்மா எனும் மருந்துக் கம்பெனிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் போலபள்ளி கிராம நிலத்தின் சந்தை மதிப்போ ரூ. 20 லட்சத்தும் மேல். ஆனால், இழப்பீடாக ஏக்கருக்கு வெறும் 18 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் அதிகார வர்க்கம் மோசடி செய்து ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 22, 2008

இந்துங்கிறவன் எவன்டா

இந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம்)

அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் ஈழத்து இயக்க அரசியல் : ஷோபா சக்தியும் கல்வெட்டும் சேனனும்: -சில கருத்துக்கள்.

இரயாகரனுக்குக் கல்வெட்டுப் பாடிய சோபா சக்திக்கு என்ன நியாயமிருக்கிறதோ இல்லையோ அதை வரவேற்று நியாயப்படுத்தும் சேனனுக்கு என்ன அருகதையிருக்கு பெண்ணின் உள்ளாடை-அதிகாரம்-ஆண்மொழி குறித்துப் பேசுவதற்கென்று நாம் கேட்டு வைப்போம்!எஸ்.போ.வின் எழுத்துக்களைப் படித்த அன்றைய இளைஞர்கள்,ஒரு பெருமைக்காக அவரை அப்படியே கொப்பி பண்ணிய வரலாறு எனக்குள்ளும் ஓடுகிறது.

Sunday, September 21, 2008

நந்தனை எரித்த தீ இன்னும் தணியவில்லை.

8.கடவுள் கடவுள்

கடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை)

 ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது

திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள் அடுத்தடுத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் இவற்றின் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன. நவீன பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், சாலைகளை அகலப்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசு, நகர்ப்புற மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து மேம்படுத்துவதாக மக்களும் கருதுகின்றனர்.

47 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழும் தமிழ்நாட்டில்தான் நகரமயமாக்க வேகம் இந்தியாவிலேயே அதிகம் என்பதால், இம்மக்களுக்கு தரமான சேவை செய்திடவும் உள்கட்டுமானங்களை வலுவாக்கிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினை உருவாக்கி அதற்கு 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளில் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ. 1200 கோடி கடன் தந்திருக்கிறது, மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி.

Friday, September 19, 2008

நாயும் வயிறு வளர்க்கும்

நாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை)

அமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி!

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவர், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் மேற்படிப்புப் படித்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் 2001இல் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் முசுலிம்கள் நிம்மதியாய் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் குடும்பத்துடன் கராச்சி திரும்பினார்.

தனது கணவர் தன்னை விவாகரத்து செய்ததால், வேலை தேட மீண்டும் அமெரிக்கா சென்று வேலை கிடைக்காமல் 2003இல் நாடு திரும்பிய சித்திகி, அந்த ஆண்டே காணாமல் போய்விட்டார். 2004இல் இருந்து சித்திகி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க சித்திரவதைக் கூடமான பக்ராம் விமானதளத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக பிரிட்டன் பத்திரிக்கையாளர் ரிட்லீ அண்மையில் சொல்லி இருந்தார். கைதி எண் 650 எனும் பெயரில் அடைபட்டிருந்த சித்திகியை பக்ராம் சிறையில் இருக்கும் எவருமே கண்ணால் பார்க்கக்கூட அனுமதிக்கப்பட்டதில்லை. பெண் அழுகைக்குரல் ஒன்றால் மட்டுமே அவர் அக்கொட்டடியில் அடைபட்டிருந்தது பிற கைதிகளுக்குத் தெரிய வந்தது. பலமுறை அவர் அச்சிறையில் அமெரிக்க இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். 2004இல் அமெரிக்க உளவுத்துறையின் தேடப்படுவோர் பட்டியலில், அல்கொய்தாவிற்காக வைரம் கடத்தினார் என்று டாக்டர் சித்திகியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் சித்திரவதைக் கொடுமை அனுபவித்த டாக்டர் சித்திகியை 2008 ஜூலை 17இல் தான் ஆப்கன் போலீசார் கைது செய்ததாகக் கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நிறுத்தினர். அவர் மீதான அல்கொய்தா தொடர்பேதும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. வைரம் கடத்திய கதைக்கும் ஆதாரம் காட்ட முடியவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் சந்தேகப்படும்படியான வேதியல் திரவம் அடங்கிய பாட்டில், குண்டு தயாரிக்கும் செய்முறைப் புத்தகம் முதலானவற்றை வைத்திருந்ததாகக் கைது செய்ததாகவும்,...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? : புதிய ஜனநாயகம் வெளியீடு

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? :

அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை விடுதலையும் இல்லை

அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை விடுதலையும் இல்லை தோழர் துரை சண்முகம்

Thursday, September 18, 2008

பாரடா… உனது மானிடப் பரப்பை! (பாரடா… உனது மானிடப் பரப்பை)

பாரடா… உனது மானிடப் பரப்பை! (பாரடா… உனது மானிடப் பரப்பை)

எச்சரிக்கை… எச்சரிக்கை…(காவிஇருள்)

எச்சரிக்கை… எச்சரிக்கை…(காவிஇருள்)

அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.

இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்கள். இவ்வளவு சாமியார்கள் இருப்பதால் அங்கே எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் கமழுமென்றுதான் பக்தகோடிகள் எதிர்பார்ப்பார்கள்.

Wednesday, September 17, 2008

தில்லைச் சமரில் வென்றது தமிழ்!

தில்லைச் சமரில் வென்றது தமிழ்!

போஸ்கோ தீர்ப்பு : நீதிக்குத் தூக்கு!

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் தனது இரும்பு உருக்காலையை நிறுவிக் கொள்ள அனுமதி அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம். 55,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு உருக்காலையை அமைக்கத் திட்டமிட்டுள்ள போஸ்கோ, ஆலை அமைப்பது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஆலோசனைகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளது.

போஸ்கோ தொடங்கவுள்ள இரும்புச் சுரங்கம் மற்றும் உருக்காலையால் ஒரிசாவின் பாரதீப் பகுதியில் உள்ள பெரும் வனப்பகுதியே மொட்டையடிக்கப்படும் என்பதால், சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கு ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்பது ஒரு ஆலோசனை. காடுகளை அழித்து விட்டுச் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது? இந்த கமிட்டி மரம் நடும் திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கப் போகிறதா என்பது போன்ற கேள்விகளுக்குள் எல்லாம் உச்சநீதி மன்றம் சென்றதாகத் தெரியவில்லை; கமிட்டி என்பதோடு பிரச்சினையை முடித்து விட்டது.

காடுகள் அழிக்கப்படுவதால் அதில் இருந்து துரத்தப்படும் பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவி வழங்க 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது இரண்டாவது ஆலோசனை. ஒரிசா மாநில அரசு போஸ்கோவுடன் போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாது அதன் கைக்குப் போகப் போகிறது. இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து விற்கும்போது, இன்றைய நிலவரப்படி அதனின் மதிப்பு ஏறத்தாழ 28 இலட்சம் ரூபாய் கோடியைத் தொடும். எனவே, நிவாரண உதவிக்காக 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது சுண்டைக்காய் பணம்தான்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 16, 2008

அகமதாபாத் குண்டு வெடிப்புகள் : நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்த போர்

ஜூலை 25, 2008 அன்று பெங்களூருவின் எட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்த வீரியம் கொண்ட குண்டுகள் வெடித்தன. அதில் ஏழுபேர் காயமடைய, ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய நரேந்திர மோடி "ஜெய்ப்பூரிலும், பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கலாம், ஆனால், குஜராத்தின் மண்ணில் பயங்கரவாதிகள் அடியெடுத்து வைக்க முடியாது'' என்று முழங்கினார். அன்று மாலையே அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் 21 தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நான்கு இடங்கள் மோடியின் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை.

2002 குஜராத் கலவரத்தின் எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மற்ற எவரையும் விட மோடிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் பாசிஸ்ட்டுகள் தமது அதிகார பலத்தை மட்டுமே அபரிதமாக நம்புவார்களே ஒழிய, மற்றெதனையும் சட்டை செய்யமாட்டார்கள். மோடியின் மண்ணில் நடந்த குண்டு வெடிப்பில் 56 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், 200க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தார்கள். அதற்கும் அடுத்த நாளே சூரத்தில் 17 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.

சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் கைவரிசை என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். தனது ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்களை நரபலி கொடுத்த ஆஸ்ரம் பாபு எனும் சாமியாருக்கு மோடி ஆதரவளிப்பதால், பூரி சாமியார் இப்படிச் சொல்லியிருப்பதாகக் கருதலாமென்றாலும் அகமதாபாத் குண்டுவெடிப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே போலீசு டம்மி குண்டுகளை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை இசுலாமியத் தீவிரவாதிகளே வைத்திருப்பார்கள் எனக் கருதினாலும், மொத்தத்தில் ஒரு பயபீதியை ஏற்படுத்தும் அவர்கள் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

Monday, September 15, 2008

போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி: புதிய மொந்தையில் பழைய கள்ளு

காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடன் உறவு இல்லாதவர்களுடன்தான் கூட்டணி என்ற முடிவை தமிழகத்தின் இடது, வலது போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தாங்கள் நீடிக்கவில்லை என்று இக்கட்சிகள் உணர்த்தியுள்ளதோடு, ""காங்கிரசா, இடதுசாரிகளா? யாருடன் கூட்டணி என்பதை இனி முடிவெடுக்க வேண்டியது தி.மு.க.தான்'' என்றும் கூறிவிட்டன. பா.ஜ.க. பக்கம் அ.தி.மு.க. சாய்ந்துவிடாமல் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும்விதமாக இக்கட்சிகள் இம்முடிவை அறிவித்துள்ளன.

அணுசக்தி ஒப்பந்தத்தையொட்டி காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொண்ட பிறகு, நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசு அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் போலி கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து இடதுசாரி கூட்டணிக் கட்சிகளும் தேவேகவுடா, அஜித்சிங், சௌதாலா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையிலான கட்சிகளும் மாயாவதி கட்சியோடு கூட்டணி கட்டிக் கொண்டு, மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்றும் பேச்சு வார்த்தைகள் நடத்தின. இதனை காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற மூன்றாவது அணி என்னும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றும் போலி கம்யூனிஸ்டுகள் நாமகரணம் சூட்டியுள்ளனர்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 14, 2008

80 களின் நடுப்பகுதியிலிருந்து ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராக கடுமையாக புகலிட சஞ்சிகைகள் போராடிப் பெற்ற ...

இந்த அறிக்கையில் எனது பெயரும் (அடைமொழியுடன்) வந்திருக்கிறது. அறிக்கை இணையத்தளத்தில் வெளிவந்த பின்னரே அதை நான் வாசித்தேன். இதற்கு முன்னர் இது எமக்கு மின்னஞ்சல்மூலம் வந்திருந்தபோதும் இதை நான் வாசித்திருக்கவில்லை. அனுமதியின்றி எனது பெயரைப் போட்டது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

இருந்தும், அக்கறைகொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையேயல்ல என்றவகையிலான சகிப்புக் கருத்துகளுடனும், பாவஞ்செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்றவகையிலான தகுதிகாண் கருத்துகளுடனும் உடன்பட ஏதுமில்லை. மிக விலாவாரியாக நோக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினையின் ஒரு பின்னூட்டம்போல இந்த அறிக்கை ஆகியிருப்பது இதன் முக்கிய குறைபாடு. அது இணையத்தளங்களின் தொடர்ச்சியான வாசிப்புகளினூடாகவோ, புகலிட -குறிப்பாக பாரிஸ் அரசியல் இலக்கியச்- சூழலின்மீதான அவதானிப்புகளினூடாகவோ அது பயணிக்கவில்லை. உடனடி அணுகலாக அந்த அறிக்கை பிரசவித்திருக்கிறது. இவ்வகை விமர்சனங்களை அல்லது குற்றச்சாட்டை இணையத்தளங்கள் ஒரு சுயநோக்கல் அடிப்படையில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். இப்படியொன்று............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பெட்ரோல்-டீசல் விலையேற்றம் : குளிர் காயம் அமெரிக்கா

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகச் சூதாடிகள்தான் காரணமே ஒழிய, சந்தைக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமேயில்லை'' என்றார், ப.சிதம்பரம். அவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், திருட்டு வழக்கில் "அப்ரூவர்'' ஆகிவிட்ட குற்றவாளியின் சாட்சியத்திற்கு நிகரானது. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும்.

ப.சிதம்பரம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், "மேற்காசிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகளிடையே நடந்துவரும் போட்டியும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்'' எனக் கூறியிருக்கிறார். (பிசினஸ்லைன், ஜூலை 4).

Saturday, September 13, 2008

தேசம்நெற் சூத்தையைக் கிண்டும், பேரினவாதக் குச்சிகள் : தனிமனித அவதூறு அரசியலை விட, மக்கள்விரோத அரசு சார்பு அரசியல் ஆபத்தானது.

புலிகளின் தோல்விகள் பேரினவாதத்தின் வெற்றியாக மாறுகின்றது. புதிய இந்த நிலைமை தான், புலம்பெயர் நாட்டிலும் பேரினவாத நிகழ்ச்சியாக அனைத்தும் மாறத் தொடங்கிவிட்டது. ஜனநாயகம், சுதந்திரம் என்பது புலியை அழித்தல், அதனிடத்தில் அரசை நிறுவுதல் என்பதாகத் தான், புலியல்லாத புலம் பெயர் அரசியல் புழுத்துவிட்டது. இதற்கு புலியெதிர்ப்பு என்பது, இனிமேல் ஒரு அடைமொழி தான். புலிக்கு எதிரான ஒவ்வொரு நிகழ்ச்சியும், அரசை எதிர்ப்பதில்லை அதை ஆதரிக்கின்றது. அரசை ஆதரிக்கின்ற கும்பல் இன்றி, புலம்பெயர் மாற்று என எதுவும் இன்று கிடையாது. எல்லாம் அதுவேயாகிவிட்டது.
இந்த அடிப்படையில் தான் 'அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல" என்ற அறிக்கையும் வெளிவந்துள்ளது. அரச எடுபிடிகளின், அதன் கைக் கூலித்தனத்தின் இழிவான இழிந்த பண்பு கெட்ட நடத்தைகளை பாதுகாக்க, இந்த அறிக்கை உதவும் என்று மனப்பால் குடிக்கின்றனர். தேசம்நெற் என்ற அவதூறு இணையத் தளத்தை கண்டிப்பதன் மூலம், தமது சொந்த மனித விரோத இழிசெயலை ஜனநாயகமானதாக காட்ட முனைகின்றனர்.

பேரினவாத அரச எடுபிடிகளாக, அரச கைக்கூலித்தனத்தையே அரசியலாக கொண்ட கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து நடத்துகின்ற மக்கள் விரோத அரசியல் விபச்சாரத்தை, தேசம்நெற்றைக் கண்டிப்பதன் மூலம் நிமிர்த்த முனைகின்றனர்.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தெற்கு ஒசெட்டியா : அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்

ஆகஸ்ட் 7ஆம் நாள் பின்னிரவு. ரஷ்யாவை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு பிராந்தியமான தெற்கு ஒசெட்டியாவின் மீது ஜார்ஜியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. பீரங்கித் தாக்குதலில் அச்சிறு மாநிலத்தின் தலைநகரான ஷின்வெலி தரைமட்டமாக நொறுங்கியது. காகசஸ் மலைப் பிராந்தியமெங்கும் குண்டுகளின் வெடியோசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்த இப்போர்த் தாக்குதலில் தெற்கு ஒசெட்டியாவின் நாடாளுமன்றக் கட்டடம், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், தேவாலயங்கள் என அனைத்தும் நொறுங்கிக் கிடக்கின்றன. இக்கொடிய போர்த் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி ஒசெட்டிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உற்றார் உறவினர், வீடுவாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளனர்.

சோவியத் ஒன்றியம் 1991இல் சிதைந்த போது, அதுவரை ரஷ்யாவுடன் ஐக்கியப்பட்டிருந்த ஜார்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. ஜார்ஜியாவின் வடபகுதியில் ஒசெட்டியர்கள் எனும் தேசிய இனச் சிறுபான்மையினர் உள்ளனர். காகசஸ் மலையின் தெற்கேயுள்ள இப்பகுதி தெற்கு ஒசெட்டியா என்றழைக்கப்படுகிறது. வடக்கு ஒசெட்டியா, ரஷ்யாவுடன் இணைந்துள்ளது.

ஜார்ஜியா தனிநாடாகியபோது, தெற்கு ஒசெட்டியர்கள் சுயாட்சி உரிமை கோரிப் போராடினர். அதேபோல ஜார்ஜியாவின் மேற்குப் பகுதியிலுள்ள அப்காசியர்கள் எனும் சிறுபான்மை தேசிய இனத்தினரும் சுயாட்சி உரிமை கோரி போராட்டங்களைத் ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, September 12, 2008

கேரளா : சனாதனிகள் - பாதிரிகள் - முசுலீம் மதவெறியாகளின் புனிதக் கூட்டு!

கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதிலிருந்து கேரள மாநிலமெங்கும் கிறித்தவர்களும் முஸ்லீம்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவர்களது போராட்டத்தை ஆதரித்தும், இடதுசாரி கூட்டணி ஆட்சியை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. காங்கிரசின் மாணவர் சங்கங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை தெருவிலே போட்டுக் கொளுத்தி வருவதோடு, பொதுச் சொத்துக்களையும் நாசப்படுத்துகின்றன.

"இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கும் 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலை ரத்து செய்!'' என்பதே அவர்களது போராட்டத்தின் மைய முழக்கம். வகுப்புகள் புறக்கணிப்பு, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் கட்டுகட்டாக பறிக்கப்பட்டு தீயிட்டு எரிப்பு, சாலை மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு, கண்டனப் பேரணி என கேரளத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன. காங்கிரசு ஆதரவு ஆசிரியர் சங்கங்கள் இப்பாடப்புத்தகப்படி நாங்கள் பாடம் நடத்த மாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. ஜூலை மாதத்திற்குள் இப்பாடபுத்தகத்தை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய கிளர்ச்சி செய்யப் போவதாக முஸ்லிம் லீகும் 12 முஸ்லிம் அமைப்புகளும் அரசுக்குக் கெடு விதித்தன. கேரள அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ள 7ஆம் வகுப்பு.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, September 11, 2008

பிணக்காடாகிறது ஈராக் : அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லபட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பன்னாட்டு விமானநிலையத்தில், கடந்த ஜூன் 25 அன்று பரபரப்பான காலை நேரத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் கார் ஒன்று அனைத்துவிதமான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் முடித்து விட்டுச் செல்கிறது. அலுவலக வேலைகள் தொடங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில், 8.40 மணிக்கு அமெரிக்க இராணுவ வண்டி ஒன்றில் இருந்து 9 வீரர்கள் அக்காரை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அக்கார் தீப்பற்றி எரிந்து போகிறது.

அதே விமான நிலையத்தில் இருக்கும் ரஷீத் வங்கியின் மேலாளர் ஹபீத் அபோத் மஹ்திதான் அக்காரை ஓட்டி வந்தவர். பெண் ஊழியர்கள் இருவரையும் வங்கிக்குத் தனது காரிலேயே அவர் அழைத்து வந்து கொண்டிருந்தபோதுதான் இவ்வாறு கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நூறு முறைக்கும் மேலே சுடப்பட்டு சல்லடையாக்கப்பட்ட காரின் எஞ்சின் தீப்பற்றி மூவருமே சாம்பலாகிவிட்டனர்.

உடனே அமெரிக்க இராணுவம் "மூன்று குற்றவாளிகள் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றனர்; திருப்பச் சுட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி வெடித்ததில் மூன்று குற்றவாளிகளும் மாண்டனர்'' என அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இராணுவ வண்டியில் இரண்டு இடங்களில் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருப்பதாகவும் மேலும் அது கதையளந்துள்ளது.

மஹ்தியின் கார் குண்டுகளால் துளைக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரது ஆறாவது மகன் முகம்மது ஹபீத் அங்கு விரைந்திருக்கிறார். தன் கண் முன்னாலேயே தீப்பிழம்புகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த தனது தந்தையை நெருங்க விடாமல் அமெரிக்கப் படைவீரர்கள் அவரைத் தடுத்து விட்டனர். மஹ்தியின் ஆறு குழந்தைகளையும் அநாதைகளாக்கிவிட்ட அமெரிக்க இராணுவமோ பத்தாயிரம் டாலரை இழப்பீடாக அக்குடும்பத்துக்கு வழங்க முன்வந்தது. அதை வாங்க மறுத்த அக்குடும்பத்தினர், "இப்படுகொலையில் ஈடுபட்ட அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் ஈராக் அமெரிக்க நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, September 10, 2008

அரச கைக்கூலி பிள்ளையானும், பிள்ளையானின் அரசியல் மதியுரைஞர் ஞானமும்

இவர்களின் கைக்கூலி அரசியல் பணி என்ன?

1. பேரினவாத அரசுடன் சேர்ந்து அபிவிருத்தியின் பெயரில் கிழக்கை ஏகாதிபத்தியத்துக்கும், பேரினவாதத்துக்கும் விற்றல்.

2. வடக்கு மக்களையும், கிழக்கு (தாம்) அல்லாத தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்கில் இருந்து முற்றாக ஒழித்தல்.

3. இன்னமும் புலியுடன் இருக்கின்ற கிழக்கு உறுப்பினர்களின் புலிக் குடும்பங்களை படுகொலை செய்து, அவர்களை ஒழித்தல்.

இதுதான் கிழக்கில் கருணா - பிள்ளையான் கும்பலின் அரசியலாக அரங்கேறுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு கூலிக் கும்பலாக இருந்து செய்வது, இதைத்தான்.

ரவுடியும், கைக்கூலியுமான பிள்ளையானுக்கு ரை கட்டி, கோட்டுப்போட்டு, நாசனலும் வேட்டியும் கட்டி, வேஷம் போட்டுக் காட்டுவது வெளிப்படையான கவர்ச்சி அரசியலாகிவிட்டது. இதை வழகாட்டும் கும்பல், ஊர் உலகத்தை ஏமாற்றவும், பதவிகள், பட்டங்கள். அமைதி சமாதானம் பெயரில் கோசங்கள், அறிக்கைகள் என்று, தடபுடலாக ஜோக் அடிக்கின்றனர். இதுவோ இப்படி ஒரு மோசடிக் கும்பலாக, இந்தா அபிவிருத்தி அந்தா விடிவு என்று அறிக்கைகள் ஊடாக, வித்தை காட்டுகின்றனர்.

இதற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஞானம். ஸ்டாலின் என்ற புனைபெயரில்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 9, 2008

பெரியவர்களையே தேசியத்தின் பெயரில் அடித்து உதைப்பதை எம் சமூகம் எண்ணிப் பார்த்திருக்குமா!?

வயது முதிர்ந்தவர்களை, பெரியவர்களை அடித்து உதைப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? புலித் தேசியத்தின் பெயரிலும், புலியின் குறுகிய நலனுக்காகவும், சமூகத்தால் கவுரவமாக மதிக்கப்பட்டவர்கள் தாக்கப்படுகின்றனர்.

அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி என அனைவரும் பகிரங்கமாக வெளிப்படையாகத் தாக்கப்படுகின்றனர். முன்பு இதை இரகசியமாகச் செய்ய, அவர்களை தம் வதைமுகாமுக்கு எடுத்துச் செல்வார்கள் புலிகள். தற்போது அவர்களின் வதைமுகாம்கள் நிரம்பி அங்கு இடமின்மையால், கண்ட கண்ட இடத்தில் பகிரங்கமாகவே அடித்து நொருக்குகின்றனர்.

இப்படித் தாக்குதலின் போது கால், கை முறிந்தவர்கள், எலும்பு உடைந்தவர்கள், அங்கவீனமானவர்கள், மரணமானவர்கள், அவமானத்தாலும் இயலாமையினாலும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையோ, எண்ணில் அடங்காது.

இதனால் முற்றாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம், மறுபக்கம் மனநோய்க்குள் முழுச் சமூகம் சேடமிழுக்கின்றது.

இதை செய்பவர்கள் அவர்களின் குழந்தைகளின் ஒத்த வயதுடைய, புலி காடையர் கும்பல்கள் தான். எந்த இலட்சியமுமற்ற, நோக்கமுமற்ற, பொறுக்கித்தின்னும் லும்பன் கும்பலாக வளர்ந்த வேட்டை நாய்கள் தான். அந்த வேட்டைக் கும்பலின் வக்கிரத்தை, அதன் இழிந்த நடத்தைகளையும் அனுபவரீதியாக காணாத, அனுபவிக்காத எந்த மக்களும் இன்று வன்னியில் கிடையாது.

சமூகமே அங்கு புலியைத் தூற்றுகின்றது. அடி உதையைக் கடந்து, எந்தப் பெண் தான் புலிகளைத் தூற்றவில்லை? 'நாசாமாப்போவாங்கள்", 'மண்ணுக்குள் போவாங்கள்" என்று, சாபமிடாத எந்தப் பெண் தான் அங்கு உண்டு! தம் குழந்தைகளை புலியிடம் பறிகொடுத்த தாய்மையும், குழந்தைகளின் பிணத்தை மீளத் தரும் புலிக்கு எதிராக, தூற்றிப் போடும் சாபங்களால், புலித் தேசியம் ஒருபுறம் செத்துக் கொண்டிருக்கின்றது. புலியின் கண்காணிப்பு, அடக்குமுறையையும் மீறி, புலியைக் காறி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 8, 2008

நினைவின் குட்டை : கனவு நதி

காஷ்மீர் : இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி

நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த காசுமீர் மக்களின் சுதந்திர வேட்கை மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. காசுமீர் பள்ளத்தாக்கில், ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்றுவரும் போராட்டங்களில்"சுதந்திர காசுமீர்'' என மக்கள் முழங்குகிறார்கள். ஆகஸ்டு 15 அன்று, காசுமீர் தலைநகர் சிறீநகரில் உள்ள லால் சௌக்கில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கொண்டே கீழே இறக்கி விட்டு, பாக். நாட்டின் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.

இந்திய தேசியவாதிகள் அனைவரும் இதனைக் கண்டு ஆடிப் போய்க் கிடக்கிறார்கள். இந்திய இராணுவம், கடந்த பத்தாண்டுகளில் காசுமீரில் ஏற்படுத்தியிருந்த "அமைதி'யை, பிரிவினைவாதிகளும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் சீர்குலைத்துவிட்டதாக அதிகார வர்க்கம் குற்றஞ்சுமத்துகிறது. ஜாடியில் இருந்து வெளியே வந்துவிட்ட"சுதந்திர பூதத்தை'' மீண் டும் ஜாடிக்குள் எப்படி அடைப்பது என மைய அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு திரிகிறது.

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள காசுமீர் சட்டசபைத் தேர்தலில், ஜம்முவைச் சேர்ந்த இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொள்ளத் திட்டம் போட்ட காங்கிரசு மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை, அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது. இதற்கு எதிராக...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 7, 2008

சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஆவணப்படும்

தி.க.வீரமணியின் இலாபவெறி