தமிழ் அரங்கம்

Friday, November 7, 2008

ஈழம்: ஜெயாவின் "புலி'' பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

"கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் — என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.

Thursday, November 6, 2008

காங்கிரஸ் என்றொரு கட்சி

காங்கிரஸ் என்றொரு கட்சி (அடிமைச்சாசனம்)

ஓபாமா ஒரு கானல் நீர்

கொடூரமான வெள்ளை அமெரிக்கா எகாதிபத்தியத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உலகம் உள்ளது என்பதை, ஓபாமா வெற்றி பற்றிய குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாட்டு மக்கள் முதல் ஏகாதிபத்திய நாட்டு மக்களும் கூட நம்பிகையுடன் ஓபாமாவை பார்க்கின்றனர்!

சிலர் உலகையே ஆளும் கறுப்பு இனத்தவரின் ஆட்சி என்கின்றனர். வேறு சிலர் சிறுபான்மையினத்தவரின் ஆட்சி என்கின்றனர். மற்றும் பலர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்கின்றனர்.

உலகில் ஒரு மாற்றம் வரும் என்று, குடுகுடுப்புக்காரன் மாதிரி பலரும் கருத்துரைக்கின்றனர். ஆளும் வர்க்கம் முதல் ஆளப்படும் வர்க்கம் வரை இந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏகாதிபத்திம் முதல் மூன்;றாம் உலக நாடுகள் வரை இந்த எதிர்பார்ப்பில் மயங்கி நிற்கின்றனர். அனைத்து வர்க்கங்களும் இலகற்ற எதிர்ப்பார்ப்பில், எதோ மாற்றம் வரும் என்று நம்புகின்றனர். உலக ஊடாகவியல் இதற்கு எண்ணை வார்த்து ஊற்றுகின்றது. ஆம் உலகம் மாறப்போகிறது. எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்கின்றனர்.

ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில்....

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் - அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்பட்டுள்ளது

நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். ""வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.


செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன ""பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.

அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்

1930ஆம் ஆண்டு அமெரிக்கப் ...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, November 5, 2008

பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!

அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக், ஆப்கான் மீது நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரினாலும்; உள்நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள், ஒரு மாற்றத்தை விரும்புவதாகவும்; அம்மாற்றத்தைப் பிரதிபலிப்பவராக ஒபாமா இருப்பதாகவும் பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும், அமெரிக்காவில் வெள்ளை இனவெறி முன்னைப்போல கோலோச்சவில்லை என்பதற்கு பாரக் ஒபாமாவின் தேர்வு எடுப்பான சான்று என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள பாரக் ஒபாமாவை எதிர்த்து, ஜான் மெக்கெய்ன் என்ற வெள்ளை இன கிழட்டு நரியைக் குடியரசுக் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேல்தலில், ஒபாமா தோற்று, ஜான் மெக்கெய்ன் வெற்றி பெற்றால், அது ஜார்ஜ் புஷ் மூன்றாம் முறையாக பதவியேற்பதற்குச் சமமானதாகும். ஏனென்றால், உலகெங்கிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை விரிவுபடுத்த, ஜார்ஜ் புஷ் எட்டடி பாய்ந்தால், ஜான் மெக்கெய்னோ பதினாறு அடி பாயக் கூடியவர்.

Tuesday, November 4, 2008

சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்

தமிழ்மக்களின் உரிமையை எப்படி 'அரசியல் நீக்கம்" செய்வது என்பதை, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலிடம் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். அண்மையில் குமுதம் வெளியீடான தீராநதியில், 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்ற தலைப்பில் ஷோபாசக்தியின் பேட்டி ஒன்றை அ.மார்க்ஸ் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை அவர் 'வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கின்றேன்" என்ற அ.மார்க்ஸ் குறிப்புடன் அது வெளிவந்துள்ளது
'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும்…" என்கின்றார் ஷோபாசக்தி அன்ட் அ.மார்க்ஸ் கம்பனி. இதைத்தான் பேரினவாதம் அன்று முதல் இன்று வரை கூறுகின்றது. இந்தியாவும் இதைத் தான் கூறுகின்றது. ஏகாதிபத்தியம் இதைத்தான் கூறுகின்றது.

இதன் மூலம் தான் தமிழ் மக்களின் உரிமையை 'அரசியல் நீக்கம்" 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்பதானால் அடையமுடியும்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இடதுகளான சி.பி.எம். மின் புரட்சித் திட்டம்

அடுத்த தேர்தலில் யாருடன் இலட்சியக் கூட்டணி கட்டுவது என்ற பெரும்பிரச்சினையை சி.பி.எம் கட்சி ஒருவழியாகத் தீர்த்துவிட்டது. அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான என்.வரதராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாக "அப்பாயின்ட்மெண்ட்'' வாங்கி, இரவு 9 மணிவரை காத்திருந்து "புரட்சிக்கலைஞர்' விஜயகாந்தை சந்தித்துக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார். விஜயகாந்தும் "முதலிலேயே சொல்லி இருந்தால் விருந்து வைத்திருப்பேனே' எனச் சொல்லி தோழர் மனதைக் குளிரவைத்ததோடு, தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரிகள் "அரசியலில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தூய உள்ளத்தோடு செயல்படுபவர்கள்' என்று இவர்களுக்குச் சான்றிதழும் கொடுத்து விட்டார்.


இனி தேர்தலில் "புரட்சிக்கலைஞரின் ஆசிபெற்ற' சின்னம் என்று அரிவாள் சுத்தியல் சின்னத்துக்கு முன்னால் அவர்கள் ஒரு அடைமொழியைப் போட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் விஜயகாந்த் என்றால், ஆந்திரத்திலோ நடிகர் சிரஞ்சீவியின் கட்சியுடன் போர்த்தந்திரக் கூட்டணி அமைக்க சி.பி.எம். பேரம் பேசுகிறது.

இடதுகளான சி.பி.எம். மின் புரட்சித் திட்டம் இப்படி என்றால், வலதுகளான சி.பி.ஐ. கட்சியோ "புரட்சித்தலைவி'யுடன் பேச இருப்பதாகச் சொல்லிவிட்டது. ஆனால், புரட்சித்தலைவியோ தனது துணைப்பிரதமர் கனவுக்கு சி.பி.ஐ.யின் தயவெல்லாம் தேவைப்படாது என்பதனால், பாஜகவுடன் பேச்சு நடத்திவருகிறார். அ.தி.மு.க.–பா.ஜ.க. பேரம் கைகூடாவிட்டால், புரட்சித் தலைவியுடன்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, November 3, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! -மருதையன்

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் -மருதையன்

ஏ.ஐ.டி.யு.சி. வழங்கும் முற்போக்கு கொழுக்கட்டை!

காங்கிரசையும் பா.ஜ.க.வையும் புறக்கணித்து விட்டு, மதச்சார்பற்ற மூன்றாவது அணி கட்டப் போவதாக கூறி வருகிறார், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களின் பண்டிகைகள் விழாக்களில் ஊக்கமாகப் பங்கேற்று, கூடிக் குலாவி வாழ்த்து தெரிவிப்பது மத நல்லிணக்கத்தைப் பேணுவது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் கற்பித்துக் கொண்டுள்ளன. இதன்படியே, தமிழகமெங்கும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள், இந்துமத ஆயுதபூஜை பண்டிகையை நீண்டகாலமாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றன. சி.பி.எம். கட்சியின் சி.ஐ.டி.யு.வை விட முற்போக்கான சங்கமாகக் காட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் கோவில்பட்டி நகரக் கிளை, இவ்வாண்டு இந்துமத விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சீரும் சிறப்போடும் கொண்டாடி, பூசைகள் நடத்தி மக்களுக்கு கொழுக்கட்டை வழங்கியிருக்கிறது. இது அச்சங்கத்தின் 13வது ஆண்டு விழாவாம். இதற்காக பேருந்து நிறுத்தத்தில் அலங்கார வளைவு அமைத்து அசத்தி விட்டார்கள்.

Sunday, November 2, 2008

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2 தோழர்.கதிரவன்

பெரியாரியம் பேசும் பினாமி ஒன்று, விடுத்துள்ள கொலை பயமுறுத்தல்

பச்சைத் தூசணத்தால், பெண்ணின் பாலியல் உறுப்பால், எனது அம்மாவின் பெயரால், என்னை கொலை செய்யத்தவறியது புலிகளின் மாபெரும் தவறு என்கின்றார் காசிபராதி என்று பெயரில் தளம் வைத்துள்ளவர். 'புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!" என்ற எனது கட்டுரைக்கு இப்படி ஒரு பின்னோட்டம் விட்டுள்ளது.


இப்படி அனுமதிகப்படாத பல பின்னோட்டங்கள் இதுவும் ஒன்று. அதை அப்படியே கிழே மீளத் தருகின்றோம். மொழியல் ரீதியாக தமிழையும், பெண்ணையும் இது இழிவுபடுத்திய போதும், புலித்தேசியத்தை தலையில் வைத்து ஆடுபவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த பின்னோட்டம் உதவும்.

இதற்கு பெரியரையும், பகுத்தறிவையும் எப்படிப்பட்ட பொறுக்கிகள் எல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதையும், ஒரு இந்தியனாக நடித்தபடி ஒரு இணையத் தளத்தை பயன்படுத்தி நிற்கின்றனர் என்பதை, காசிபாரதியின் தளத்தில் சென்று நீங்கள் காணமுடியும்;. இந்திய மக்களை எமாற்ற முனையும் இந்த ஈழத்து புலிப் பொறுக்கி, பெரியாரைக் கூட விபச்சாரம் செய்கின்ற இழிவான புலித்தேசிய நடத்தையையே இது காட்டுகின்றது.

புலிப் பாசிசம் எப்படிப்பட்டது என்பதை இந்த பின்னோட்டம் காட்டுகின்றது. நான் 1987 இல்; புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பமுன், அடி எதை ஊடாக அனுபவித்த வார்த்தைகள் தான் இவை. தமிழ் மக்கள் இந்த மொழி ஊடாகத்தான் அடிமையாகப்பட்டுள்ளனர்

இதுதான் அந்த பின்னோட்டம்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தீராத யுத்தம் தீர்க்க முனையும் தீர்வு-என்ன?

"மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்-பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக இவர்களின் ஊடாக நமக்குள் வந்துகொண்டபின், யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை-பிராந்திய நலன்களை எட்டுகின்றன.யுத்தத்துக்குள் மூழ்கிய தமிழ் மக்களின் அழிவைத் திட்டமிட்டு நகர்த்திய இந்திய அரசு, இப்போது ஒன்றுந்தெரியாத பாப்பாவாக நடிக்கிறது.வாய்ச் சவடால் விட்ட புலிகளோ மரணத்தின் விளிம்பில் மக்களைத் தள்ளிவிட்டுத் தாமும் அழியும் அரசியலைக்கொண்டியங்கித் தமிழ் நாட்டிடம் உதவி கேட்கும் போராட்டத்தோடு தமது கதையை மெல்ல முடித்துவருகிறார்கள்.தேசியத் தலைவர்,தளபதிகள்,அரசியல் ஆலோசகர்கள்,அரசியல் பொறுப்பாளர்கள் எல்லோரும் தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் மண்டியிட்டுத் தமது உயிர்வாழ்வுக்காக உயிர்பிச்சை எடுக்கும் ஒருமுகமாகச் சினிமாக்கூட்டத்திடம் "இனவுணர்வுப் போராட்டம்"செய்யத் டுகின்ற்ரானர்.புரட்சி,விடுதலை,சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்.புலிகள் இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, November 1, 2008

அமெரிக்கா

அமெரிக்கா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்


முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?
1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள். ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, October 31, 2008

சாதீயக்கொடுமைகள்

சாதீயக்கொடுமைகள்

தமிழ்மக்கள் இராணுவப் பகுதிகளில் வாழ்வதையே விரும்புகின்றனரே ஏன்!?


மறுபக்கத்தில் தமிழனை இராணுவம் வெட்டுகின்றான் கொத்துகின்றான் என்ற, பிரச்சாரத்தை புலிகள் செய்கின்றனர். இருந்தபோதும் தமிழ்பேசும் மக்கள் புலிகளுடன் வாழ்வதைவிட, சிங்கள பகுதியில் வாழ்வதையே விரும்புகின்றனர். புலிகளிடம் இருந்து தப்பிச்சென்ற பெரும்பான்மை தமிழ் இனம், சிங்களப் பகுதிகளில் தான் வாழ்கின்றனர். புலிகளின் பகுதிகளில் வாழ்பவர்கள், தப்பிச்செல்ல வழியின்றியும், பொருளாதார ரீதியாக வேறு பிரதேசத்தில் வாழ முடியாதவர்களும் தான் எஞ்சியுள்ளனர். இவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிச்செல்லவும், புலிகளுடன் சோந்து வாழவிரும்பாத எதிர்மனப்பாங்குடன் தான் வாழ்கின்றனர்.

இதுவே இன்றைய எதார்த்தம்;. யுத்தம் கடுமையாகி, புலிகளின் அழிவை தீர்மானிக்கின்ற இக்கட்டான நிலைக்குள், புலிகளின் பாசிசம் பேரினவாதத்தைப் பலப்படுத்தியுள்ளது. புலிகள் தப்பிப்பிழைக்க, எஞ்சியுள்ள மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துவதை புலிகளின் பாசிசம் வழிகாட்டுகின்றனர். யுத்த சூழலை விட்டு தப்பிச்செல்லாத வண்ணம், மக்கள் பலாத்காரமாகவே துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமான யுத்தத்தில், தமிழ்மக்கள் வலுக்கட்டாயமாகவே பலியிடப்படுகின்றனர்.

பேரினவாதம் குண்டுகள் பொழிந்து அப்பாவித்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

சென்னை : விற்பனைக்கு! இரண்டாவது மாஸ்டர் பிளானின் மகாதிமியங்கள்!

சென்னை, தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதால்தான் தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை என்று தீயணைப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

அதனால் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நெரிசல் மிகுந்த இடத்தில், எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இன்றி இந்தக் கட்டிடம், இவ்வளவு விதி மீறல்களுடன் கட்டவும், இயங்கவும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சரவணா ஸ்டோர்ஸ் கடை மட்டுமன்றி தி.நகரில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை விதிகளை மீறித்தான் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களினால் பொதுமக்களின் உயிருக்கு எப்போதும் ஆபத்துதான். ஆனால், இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து கவலைப்படுவதே இல்லை. பொதுமக்கள் நலனில் சிறிது கூட அக்கறையில்லாத, லஞ்ச பணத்திற்கு எளிதில் விலை போகக்கூடிய, இப்படிப்பட்ட அதிகாரிகளை நம்பித்தான் இந்த அரசு சென்னை நகரத்தை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியமைக்கப் போகிறதாம். இதற்கென சென்னை மாநகரப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்தத் திட்டத்தின்படி, சென்னையைத் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதலீட்டாளர்களைக் கவரும் நகரமாக மாற்ற உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள், தடையற்ற மின்சார விநியோகம், நல்ல தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை ஏற்கெனவே ஏற்ப டுத்தப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அவை மேலும்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 30, 2008

பிணங்கள் பேசுகின்றன!

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

நொய்லா கிராமத்துப் பெண்களுக்குஅதிரடிக் கணினிப் பயிற்சியளிக்கப்பட்டது,இந்தியாவின் குக்கிராமமும் இணையத்துடன்பிணைக்கப்பட்டிருப்பதைக் கிளிண்டனுக்கு நிரூபிக்க.

காஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதிசுட்டுத்தள்ளப்பட்டார்கள் - காஷ்மீர் பிரச்சினையைக்கிளிண்டனுக்குப் புரிய வைக்க.
நாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;பன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;பிச்சைக்காரர்கள் வீதிக்கு வந்தனர்.

35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.

ஏனென்றால் இது நாடகமில்லை.

நோக்கம் எதுவாக .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கவர்ச்சித் திட்டங்கள் : வறுமையை ஒழிக்குமா?

வறுமை காரணமாக தனது குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அத்துயரக் கதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் சேலம் அருகே வறுமை காரணமாக தான் பெற்று வளர்த்த மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஒரு இளம்பெண். மூன்று குழந்தைகளும் மாண்டுபோக, அவர் மட்டும் காப்பற்றப்பட்டு வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறார்.


வறுமையின் கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது ஏதோ விதிவிலக்கான துயரச் சம்பவம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. இன்று அந்த மூன்று குழந்தைகள்; நாளை...? ஒருவரல்ல, இருவரல்ல; தமிழகத்தில் பாதிப்பேர் வறுமையில் உழலும் ஏழைகள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது, உலக வங்கியின் புள்ளி விவர அறிக்கை.

உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உலகளாவிய வறுமை குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளி விவர அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள அளவுகோலின்படி ஒரு டாலருக்கும் கீழான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று உலக வங்கி வரையறுத்தது. ஒரு மனிதனுக்கு உயிர் வாழத் தேவையான, குறைந்தபட்சம் 2100 கலோரிகள் சத்து தரும் உணவை வாங்குவதற்கு எவ்வளவு தொகை தேவையோ அதை அடிப்படையாக வைத்து, சராசரியாக 1.25 டாலருக்கும் (ரூ.55) குறைவான வருமானமுள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 29, 2008

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

பரோவா. எகிப்திய மன்னன்.தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,தனது ஆடை ஆபரணங்களையும்,பொக்கிஷங்களையும், அடிமைகளையும்தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.பூவுலக வாழ்வைச்சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.ஆசை நிறைவேற்றப்பட்டது.பிறகு அவனுடைய வாரிசுகளும்அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.

ஒருவேளை.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது!

இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.

சற்றே நொண்டி நடக்கும் கால்கள்; கொக்கி போல் வளைந்த ஒரு கை; ஆனால், தீர்க்கமான மன உறுதி; அவ்வப்போது முகத்தில் அரும்பும் புன்னகை – இதுதான் அசாருதீன் என்கிற சிறுவனின் அடையாளம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் நடத்திய இந்து மதவெறித் தாக்குதலின் இரத்த சாட்சியாய் வாழ்ந்து வருபவன்தான் இந்தச் சிறுவன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு, கோத்ரா இரயில் தீப்பிடித்த சம்பவத்தைச் சாக்காக வைத்து குஜராத் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்துவெறிப் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் வயிற்றைத் திரிசூலங்களால் குத்தி உள்ளே இருந்த சிசுக்களையும் இந்துபயங்கரவாதிகள் சிதைத்தார்கள். இந்த நரவேட்டைகள் நின்ற பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள் இரண்டு விசுவ இந்து பரிசத் தொண்டர்களின் பிணங்கள், அகமதாபாத் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரமோல் என்னும் கிராமத்திற்கு அருகில் நெடுஞ்சாலையில் கிடந்தன.

இந்துவெறியர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவ்விருவரும் ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, October 28, 2008

காலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1

காலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1

தேசியத்தை மறுப்பது என்பது சாராம்சத்தில் உலகமயமாதலை ஆதரிப்பதுதான்

புலியை தேசியமாக பார்ப்பவர்கள், தேசம் தேசியம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை காணமுடியாதவர்களாவே உள்ளனர். புலியெதிர்ப்புக்கு தேசிய மறுப்பு தத்துவம் வழங்க முனையும் ராகவனாக இருக்கலாம், ஸ்ராலினை மறுக்கும் திரோஸ்க்கியம் பேசுகின்றவர்களாக இருக்கலாம், சாராம்சத்தில் அவர்களின் அரசியல் ஒத்துப் போகின்றது.

தேசம், தேசியம் என்பது கற்பனையான பொருளற்ற வெறும் சிந்தனையல்ல. அதாவது கருத்துமுதல்வாதக் கற்பனையல்ல. மாறாக பொருள் வகைப்பட்ட ஒன்றின் மீதான சிந்தனை. இதை திரொஸ்கிகள் தேசிய மறுப்பின் ஊடாக மறுக்கின்றனர். ராகவன் கருத்தமுதல்வாதமாகவே பாhக்கின்ற அளவுக்கு, புலியெதிர்ப்புவாதம் அவரின் கண்ணை மூடிநிற்கின்றது.

தேசம் என்பது பொருள் வகைப்பட்டது என்ற எதார்த்ததை மறுக்கவே, ஸ்ராலினை மறுப்பது அவசியமாகின்றது. தேசத்தின் பொருள் வகைப்பட்ட எதார்த்தத்தின் குறைந்தபட்ச வரையறை இருப்பதை, புரட்சிக்கு தலைமை தாங்கி ஸ்ராலின் தான் முதன் முதலில் வரையறுத்துக் காட்டுகின்றார். இதனால் தத்தவமேதையான லெனின் அதை மிகச் சிறந்த மார்க்சிய வரையறையாக, உலகம் முன் அங்கீகரித்தார். வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் இருந்து ஒரு சமூகப் பிரச்சனையை, ஸ்ராலின் மார்க்கிச வரையறை நேராக்கிவிடுகின்றது. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையிலான இந்த நிலையை, திரோஸ்கி அன்று ஏற்றுக்கொண்டது கிடையாது. இன்றுவரை அது தான் அவர்களின் நிலை. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையில் தான்,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, October 27, 2008

மாத்தையாவும் பிரபாகரனும் - பிள்ளையானும் கருணாவும்

செம்மறித் தமிழர்களுக்கு எல்லாரும் நாடகம் காட்டுகின்றனர். மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.

இதேபோல் இன்று பிள்ளையான் கருணா மோதல். இலங்கை அரசின் கைக்கூலிகளுக்குள் நடக்கும் எலும்புச் (பதவிச்) சண்டை. ஆளையாள் கொல்வதில் தொடங்கிய இந்தச் சண்டை, ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பிரெய்ன்வாஷ்

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.

Sunday, October 26, 2008

குறுகிய சுயநலமே தமிழ் தேசியமாகியது

புலிகள் முதல் தமிழ்நாட்டு சினிமாக் கழிசடைகள் வரை, தத்தம் சொந்த சுயநலத்தையே தமிழ் தேசியமாக்கினர். தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து, கூச்சல் போடுகின்றனர், கூத்தாடுகின்றனர்.

தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றி அக்கறையற்ற தமிழ் உணர்வு என்பது, தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தைக் கொம்பு சீவி விடுவதுதான். தமிழ் இனத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை. தமிழர்களும் ஒடுக்குகின்றனர். அதாவது பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் புலிகளும் தான் ஒடுக்குகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வு என்பது, போலியானது பொய்யானது. அது ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரானது.

கருணாநிதி முதல் கழிசடை சினிமாக் கும்பல் வரை போடுகின்ற கூச்சல், தமிழ்மக்களின் அடிப்படையான உரிமைகள் சார்ந்ததல்ல. அது அவர்களின் சொந்த நலன் சார்ந்தது. அடுத்த தேர்தலை வெல்லுதல், யாருடன் அரசியல் கூட்டு என்ற உள்ளடகத்தில், அறிக்கைகள் கருத்துகள், பிளவுகள், கைதுகள் என்று எல்லாம் அரங்கேறுகின்றது.

இவை எவையும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.

நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா?கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசிய மென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.


இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு .இல்லாததனாலேயே.................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலியைத் தனிமைப்படுத்தி அழிப்பது

புலியை அழிப்பதும், தமிழ்மக்களை காப்பதும் என்ற அரசியலையே தமிழக அரசியல் ஜனரஞ்சகமாக்கப்படுகின்றது. பேரினவாத யுத்தத்துக்கு, எதைச் செய்யவேண்டும், எதைச்செய்யக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு, புலிக்கு எதிரான யுத்தமாக நெறிப்படுத்தவே அனைவரும் (கருணாநிதி முதல் (ஜெயலலிதா வரை) முனைகின்றனர். புலியை அழிக்கக் கூடாது என்பவர்களை, தன் சட்டத்தின் எல்லைக்குள் ஒடுக்குகின்றது, ஒடுக்கக் கோருகின்றது.

புலியில் இருந்து தமிழ்மக்களை தனிமைப்படுத்துவதும், இதன் மூலம் புலியைத் தனிமைப்படுத்தி அழிப்பது என்ற அடிப்படையில் தான், தீர்வை (சுயநிர்ணயமல்லாத தீர்வை) வைக்கும்படி இந்தியா முதல் அமெரிக்கா வரை தெளிவாகக் கோருகின்றது. இந்த நிகழ்ச்சி நிரலின்படி தான், தமிழகத்தின் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றது. இதற்குள் பேரினவாதம் இறங்கிவர மறுப்பதும், அதை உருவாக்குவதும் தான் திரைமறைவில் நடக்கும் இன்றைய இராஜதந்திரங்களும் முரண்பாடுகளும். பேரினவாதத்திடம் இவர்கள் கோருவது, தமிழினத்தின் சுயநிர்ணயத்தை மறுக்கும் வகையில் ஒரு தீர்வை. அதாவது நாய்களுக்கு ஒரு எலும்பைத் தான்
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, October 25, 2008

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனையா!? அப்படியாயின் அது என்ன? அதைப் புலிகள் தீர்ப்பார்களா? எப்படி?

இந்தக் கேள்விக்கு இன்றைய (புலித்) தேசியம் பதிலளிக்க முடியாது திணறுகின்றது. புலிகள் தமிழரை ஆளும் உரிமையைத்தான் தமிழர் பிரச்சனை என்று நம்புகின்ற அடிமுட்டாள் தனத்தில் இருந்து இராணுவ ரீதியான பேரினவாத செயலை நிறுத்துவது தான் தமிழரின் பிரச்சனை என்று கருதுகின்ற பொதுவறிவுக்குள் தான், தமிழரின் மேல் சிங்கள மேலாதிக்கம் நிறுவப்படுகின்றது.
புலிகள் அழிக்கப்பட்டால், அதாவது பேரினவாதம் வெற்றிபெற்றால் தமிழர் இரண்டாம் தரக் குடிகளாக அடிமைகளாகி இந்தப் பிரச்சனையே இல்லாது போகும். இது இரண்டு விதத்தில்.

1. தமிழரின் மந்தை அரசியல் நிலை காரணமாக, தமிழரின் பிரச்சினை இதுவாக உணரப்பட்டுள்ளது. இதனால் இதனுடன் இது முடிவுக்கு வந்துவிடும்.

சோல்சனிட்சின் : "அவலத்தில்" பிறந்த இலக்கிய அத்வானி

சோல்சனிட்சின் இறந்துவிட்டார். ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு பனிப்போர் காலத்திய ரசிய வல்லரசு எதிர்ப்பு என்ற நோக்கங்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் கடை விரிக்கப்பட்ட சோல்சனிட்சின் தனது 89 வது வயதில் ரசியாவில் மரணமடைந்தார். அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு சோல்சனிட்சினின் உடனடிப் பயன்பாடு 80களின் இறுதியிலேயே முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது.

"கம்யூனிசத்தின் முடிவு' கைக்கு எட்டியபின், "அறம்' "ஆன்மீகம்' போன்ற மாயக்கவர்ச்சி கொண்ட சொற்களின் மூலம் கம்யூனிச எதிர்ப்புக்கு உணர்ச்சி வேகமூட்டிய சோல்சனிட்சின், உலக முதலாளி வர்க்கத்துக்குத் தேவைப்படவில்லை. அறமின்மையை நியாயப்படுத்தும் "சித்தாந்தங்களின் முடிவு' தான் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்ய பின்நவீனத்துவம் அரங்கிற்கு வந்து விட்டது. இவ்வகையிலும் சோல்சனிட்சின் ஒப்பீட்டளவில் அவர்களுக்குக் காலாவதியாகி விட்டார்.

"சோசலிசம் என்பது கம்யூனிஸ்டு கட்சி அதிகாரவர்க்கத்தின் ஆட்சியே' என்று முத்திரை குத்தி, கம்யூனிசத்தை அவதூறு செய்வதற்கு முதலாளித்துவத்திற்குப் பயன்பட்ட சோல்சனிட்சின் என்ற அந்த ஆயுதம், இன்று அதே அதிகாரவர்க்க உளவுநிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான புடினின் திருக்கரத்தால் ஞானஸ்நானம் செய்து கொண்டு, புதிய ரசியாவின் புனிதச்சின்னமாகப் புத்துயிர்ப்பும் பெற்றிருக்கின்றது.

Friday, October 24, 2008

கஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு

கஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு

தமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது


இதில் ஒரு மயக்கமும், தத்துவக் குழப்பமும் காணப்படுகின்றது. புலித்தேசியமும், தமிழ் தேசியமும் ஒன்று என்றும், புலிப் பாசிசம் தமிழ் தேசியத்தக்காகத் தான் போராடுகின்றது என்றும் நம்புகின்ற, நம்ப வைக்கின்ற கூத்து அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும், மாற்று அரசியல் பேசித் திரிந்த சிலரும், தமிழ் உணர்வு என்று இந்தியாவில் பிதற்றுவோரும், இப்படி அரசியலின் பின் கூத்தாடுகின்றனர்.

புலி முகமூடியை மூடிமறைத்தபடி பல புதிய இணையங்கள் முதல் தமிழ்வுணர்வு என்று கூத்தாடும் இந்தியப் புல்லுருவிகள் வரை இதில் அடங்கும். தமிழ்மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்றது, அவர்களின் சொந்த செயலுக்கு வழிகாட்ட மறுக்கும், தனிமனித வழிபாடு சார்ந்த குறுகிய பிதற்றல்கள்.

பொதுவாக அரசியல் ரீதியாக சமூகத்தைப் பார்க்கின்றவர்கள் பலர், இன்று புலிகளின் தோல்வி தமிழ் தேசியத்தின் தோல்வி என்று கூறுகின்ற மட்டமான அரசியல் நிலைக்குள் வீழ்ந்து புதுப் புலியாகின்றனர். புலிகளின் வெற்றியில் தான் தமிழ் இனத்துக்கு ஏதாவது கிடைக்கும் என்று கூறுகின்ற அளவுக்கு, இவர்களின் அரசியல் தரம் கெட்டுக்கிடக்கின்றது. பேரினவாதத்தின் வெற்றியால், தமிழ் மக்களுக்கு எதுவும் கிடையாது என்ற எதார்த்தம் சார்ந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றனர். இப்படி புலியை நியாயப்படுத்த, பேரினவாதத்தை துணைக்கு அழைக்கும் தர்க்கம். இதை ஆதரி அதை எதிர் என்ற எல்லைக்குள், மக்கள் தேசியத்தை மீண்டும் மீண்டும் தூக்கில் போடுகின்றனர்.

புலிகள் சரி, பேரினவாதம் சரி மக்களை எப்படி கையாளுகின்றது என்பதையிட்டு இவர்களுக்கு அக்கறை கிடையாது. இருசாராருமே தமிழ் மக்களை தமது சொந்த எதிரியாகவே கருதுகின்றனர். தமிழ்மக்களின் உரிமைகளை, தத்தம் நலனுக்கு எதிரானதாகவே கருதுகின்றனர். இதனால் தமிழ் மக்களை ஒடுக்குகின்றனர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா?

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. ஊடகங்களும் நீதிமன்றங்களை இப்படித்தான் பயபக்தியுடன் அணுகுகின்றன. யாராவது அப்படி தப்பித் தவறி பேசிவிட்டால் பிடித்தது சனி! உலகமறிந்த அருந்ததிராயையே ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்தார்களே!

ஆக, இவ்வளவு பாதுகாப்பு வசதிகளையும், புனிதத் திருவுருவங்களையும் கை வரப் பெற்றிருக்கும் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேட்கப் போகிறார்கள்? நீதித்துறையில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தப்பித் தவறி ஒரு சிலர் பிடிபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு வரலாறுதான்.

1990களில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றியவர் சௌமித்ரா சென். இவரை..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 23, 2008

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.

இதனால் இதை சாதிப்பதில் பேதம்
எதுவுமற்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஓரிசா : பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடு! இந்து மதவெறியின் சோதனைச்சாலை!!

ஒரிசா, பார்காரா மாவட்டத்திலுள்ள பாதம்பூரில் தொழுநோயாளிகளுக்கான சேவை மையம் மற்றும் ஒரு அனாதை இல்லத்தையும் பாதிரியார் எட்வர்டு சீகொய்ரா நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி அவரது மையத்தின் கதவு வேகமாகத் தட்டப்படுகிறது. யாரோ உதவி கேட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்த பாதிரியார் உடனே கதவைத் திறக்கிறார். வெளியே ஆயுதங்களுடன் இந்து மதவெறிக்கூச்சலோடு ஒரு கும்பல் உள்ளே நுழைகிறது.
சுமார் 45 நிமிடம் அந்தக் கும்பல் அவரை அடித்து நொறுக்குகிறது. தோளிலும், கையிலும் , மண்டையிலும் அடிபட்ட பாதிரியார் சுயநினைவற்று வீழ்கிறார். அவரை குளியலறையில் அடைத்த கும்பல், இல்லத்தில் இருக்கும் ரஜ்னி மஜ்கி எனும் 19 வயதுப் பெண்ணை உயிரோடு கொளுத்துகிறது. "ஃபாதர், என்னைக் கொளுத்துகிறார்கள்; எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்று அந்தப் பெண் கத்துவது அரை நினைவோடு மயக்கத்திலிருக்கும் பாதிரியாரின் காதில் மெல்லக் கேட்கிறது. இறுதியில் அந்தப் பெண்ணைக் கொன்ற கும்பல் சேவை மையத்தை தீ வைத்துக் கொளுத்துகிறது. தற்போது உடலில் பல எலும்பு முறிவுகளுக்காக மும்பையில் சிகிச்சை பெறும் இந்தப் பாதிரியார், உதவி கேட்டு அந்த இளம் பெண் கதறியது தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும் என்று வருந்துகிறார்.

பெற்றோராலும், பின்னர் வளர்ப்பு பெற்றோராலும் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் தஞ்சம் புகுந்து இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 22, 2008

ஒப்பந்தங்களும் பேரினவாதிகளும்

எப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்
முதல் அரசுடன் கூட்டு முன்னணி அமைப்பவர்கள் வரை, இந்த பேரினவாத எல்லைக்குள் தான் தம்மையும் குறுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் எதையும், இவர்கள் யாரும் கண்டுகொள்வதே கிடையாது. மக்களின் துன்ப துயரங்களை உருவாக்குவதன் மூலம், தாம் வாழ்வதே அவர்களின் அரசியல் கொள்கையாகிவிட்டது.

இதற்குள்ளாகத் தான் யுத்தநிறுத்த ஒப்பந்தமும், அதை கிழித்தெறிவது வரையும் நடைபெற்றது. சிரான் ஒப்பந்தம், சுனாமி மீள்கட்டுமான ஒப்பந்தம் என பற்பல. எல்லாம் கிழிக்கப்பட்டது. இது ஒருபுறம். மறுபுறம் உருவாக்கிய ஒப்பந்தம் புதியதாக மனித துயரங்களை உருவாக்கியது என்றால், அதை கிழிப்பதும் மற்றொரு மனித துயரத்தை தொடங்குவது என்று அர்த்தம். மக்களின் நன்மைக்காக யாரும் கையெழுத்திடவில்லை, அது போல் கிழித்தெறிவதுமில்லை. எல்லாம் சுயநலம் கொண்ட கும்பல்களின் குறுகிய அற்பத்தனங்கள் தான் இவை.

எல்லா அரசியல் கட்சிகளும் இதற்குள் தான், தமது இலாப நட்ட கணக்குகளுடன் பினாற்றுகின்றனர். செய்து கொண்ட ஒப்பந்த்ததை கிழிப்பதால், உண்மையில் யார் இலாபம் அடைகின்றனர். பேரினவாதிகள், யுத்த வெறியர்கள், இதை ஆதரிக்கும் அரசியல் வாதிகள், யுத்தம் மூலம் சம்பாதிப்பவர்கள், அரசின் தயவில் இயங்கும் தமிழ் கூலிக் குழுக்கள் தான், யுத்தம் மூலம் நிறைவான இலாபத்தை அடைகின்றனர். தமிழ் சிங்கள மக்களோ, இதைக் கிழித்தெறிவதால் எந்த இலாபத்தையும் அடையப்போதில்லை. அவர்கள் யுத்தத்தின் சுமையிலான துயரங்களையும் துன்பத்தையும் இதன் மூலம் அடைவர்.
மக்களின்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பிஞ்சென்றும் பாராது இலாபவெறி

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ நிறுவனம். இந்திய மருத்துவத்தின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதையும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் இலட்சியமாகக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனம். இந்த நிறுவனம்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தரும் டாலருக்காக பிஞ்சுக் குழந்தைகள் மீது, புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகளை நடத்தி, இதுவரை 49 குழந்தைகளைக் கொன்றுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கேட்டிருந்த தகவல் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 4,142 குழந்தைகள் மீது, அதிலும் பெரும்பான்மையாக (2,728) ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீது இந்த நிறுவனம் சோதனைகளைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகளின் போது 49 குழந்தைகள் இறந்துள்ளன.

கடந்த 30 மாதங்களில் 42 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், வெளிநாடுகளில் தயாரான 5 மருந்துகள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டச் சோதனை செய்யப்பட்டுள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், இறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. ஆனால், புதிய மருந்துகளால் ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகள் பற்றியோ, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றியோ எவ்விதத் தகவலும் இல்லை. இது பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என்று எய்ம்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. அதாவது, மருத்துவச் சோதனைகளுக்கு....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, October 21, 2008

வேஷம் கட்டியாடும் இந்தியப் புல்லுருவிகள்

ஈழத்தமிழ் மக்களின் துயரத்தின் பெயரால், இந்திய தமிழ் இனத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அற்ப அரசியல் தமிழ் உணர்வாக்கப்படுகின்றது. தமிழ் உணர்வு என்பது, பேரினவாதத்திற்கு இந்தியா உதவுவதற்குப் பதில் புலிக்கு உதவக் கோருவதாகிவிட்டது.

இதைப் போன்றுதான் ஈழத் துரோகக் குழுக்களும் இந்தியாவிடம் கோரின. அதாவது தமக்கு உதவும்படி. இப்படி இந்தியாவின் வளர்ப்பு நாயாக நக்கியவர்கள், இன்று இலங்கை அரசின் கால்களை நக்குகின்றனர். இவ்வாறு தேசியம், ஜனநாயகம் எல்லாம் இந்தியாவின் நலனுக்கு சேவை செய்வனவாகிவிட்டன. இதையே தான் தமிழ் உணர்வாளர்கள் மீண்டும் வாந்தி எடுக்கின்றனர். சரி இந்தியாவின் நலன்கள் என்ன? அதனிடம் இருப்பது என்ன மக்கள் நலனா? அதுவோ தென்னாசியாவின் பேட்டை ரவுடி. ரவுடி அரசியலைத் தவிர, அதனிடம் மக்கள் அரசியலா உண்டு!

இந்தியா தன் சொந்த மக்களை ஒடுக்கும் ஒரு அரசு. சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக, குலைக்கும் அரசு. இலங்கையில் உள்ள இந்திய மூலதனத்தின் நலன்களைத் தாண்டி, அதன் அங்கம் அசையாது. எந்தத் தலையீடும் இதற்கு உட்பட்டது. சிங்கள பேரினவாதத்தை அது திருப்தி செய்வதன் மூலம்தான், இலங்கையில் இந்தியாவின் நலனையும் செல்வாக்கையும் நிலைநிறுத்த முடியும். இல்லாது போனால் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் கையில் சிக்கும். இது பொதுவான நிலை. சும்மா குலைப்பதால், இதை மீறி எதுவும் நடவாது. இந்தியக்
......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தேசத்துரோகியாகணும்னா பெப்சியைக் குடி

தேசத்துரோகியாகணும்னா பெப்சியைக் குடி – ம.க.இ.க

இந்தியத் தலையீட்டைக் கோரும் தேசியம்

இதைக் கோருவதுதான் புலித் தேசியம் என்றால், தமிழ்நாட்டு தமிழ் உணர்வும் இதற்குள் தரங்கெட்டு கிடக்கின்றது. ஒரு இனம் தனக்காக தான் போராடமுடியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. இயக்கங்கள் முதல் இந்தியா வரை, தமிழ்மக்கள் தமக்காக போராடுவதை திட்டமிட்டே தடுத்து நிறுத்தினர்.

இதன் முதிர்வில் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராடுவது, புலிக்கு எதிராக போராடுவதாக கூறி அவர்கள் மேல் புலிப்பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இப்படி ஒரு இனத்தின் மேல் அவலத்தை விதைத்தவர்கள், இன்று அதில் குளிர் காய்கின்றனர். ஒரு இனத்தை எந்தளவுக்கு இழிவுபடுத்தமுடியுமோ, அந்தளவுக்கு மீண்டும் மீண்டும் அதைச் செய்கின்றனர். சமகால அரசியல் நிகழ்ச்சிகள், 1983, 1987 களில் இந்தியா தலையிட்டது போல் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது. 1987 இல் எப்படி இந்தியத் தலையீடு கோரப்பட்டதோ, அதே போன்று ஒரு நிலைமை உருவாக்கப்படுகின்றது.

பேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ வெறிச்செயல், மனித துயரத்தையே ஆறாக பெருக்கெடுக்க வைக்கின்றது. இதை தடுத்து நிறுத்த, இந்தியத் தலையீட்டை முன்வைக்கின்றனர். இதுபோல் 1987 இல் தலையீடு நிகழ்ந்த போது என்ன நடந்தது!?

பல ஆயிரம் தமிழ்மக்களை கொன்ற இந்திய இராணுவம், இலட்சக்கணக்கான மக்களை அகதியாக்கியது. பல நூறு பெண்களின் கற்பையே சூறையாடிவர்கள், பொருளாதாரத்தை சுடுகாடாக்கினர். இதைத்தவிர எதையும், இந்திய ஆக்கிரமிப்பாளன் தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. அன்று தம்முடன் சேர்ந்து நின்ற கூலிக்குழுவான ஈ.என்.டி.எல்.எப், வை இன்றும், இந்தியா பராமரித்து வருகின்றது.

பேரினவாதத்துக்கு
இணையா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

சுப்ரமணியபுரம்: ரசிக்கத்தக்க ரவுடித்தனம்?


இந்தப் படத்தில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் உணர்ச்சி எது? ஒரு நண்பர் குழாமின் உயிர்த்துடிப்பான உற்சாகமும் நட்பின் அடிப்படையில் அவர்களிடையே நிலவும் விசுவாசமும்தான் அந்த உணர்ச்சி. அழகர், பரமன், காசி, டுமுக்கான், மற்றொருவன் என ஐவரடங்கிய அந்தக் குழாமின் சேட்டைகள், காதல், பிரச்சினைகள், பிரிவு, மறைவு, அனைத்தையும் பார்வையாளர்கள் அவற்றில் தோய்ந்து ரசிக்கின்றார்கள். எல்லோரிடமும் மலரும் நினைவுகளாய்ப் புதைந்திருக்கும் நண்பர் குழாமின் நினைவுகளை இந்தப் படம் மீட்டுத் தருகின்றது. ஒவ்வொரு நண்பர் குழாமிலும் அப்பாவுக்குத் தெரிந்தே தம் அடிக்கும் வீரர்கள், அப்பாவுக்கு பயந்து ஒளியும் கோழைகள், காதலிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள், அதற்காக அலைபவர்கள், காசை ஒளித்து செலவு செய்யும் காரியவாதிகள், மறைக்காமல் செலவு செய்யும் வள்ளல்கள், தோற்றப்பொலிவு இல்லாததைத் தனது நகைச்சுவை மூலம் ஈடு செய்யும் குழுவின் ஜோக்கர்கள் எனப் பலரகம் உண்டு. பாசம், காதல் மட்டுமல்ல, நண்பர் குழாம் சென்டிமென்டைக் கிளறினாலும் காசு எடுக்கலாம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கின்றது. *

Monday, October 20, 2008

கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும்

இசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்

தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா?

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

பேரினவாதம் குண்டை வீசும் போதும் சரி, ஒரு பிரதேசம் மீதான தாக்குதலை நடத்தும் போதும் சரி, மக்கள் கூட்டத்தை வெளியேற்றும் போதும் சரி, ஏன் இன்று நடக்கும் கொழும்புக் கைதுகள் கூட, தமிழன் மீதான அடையாளம் மீது தான் மீள மீள பேரினவாதத்தை நிறுவிக்காட்டுகின்றன.

இந்த அரசு என்பது சிங்களப் பேரினவாத பாசிச ஆட்சி தான். இதையே அவர்கள் உறுதிசெய்கின்றனர். தமிழ் மக்களுக்கு இந்த அரசால் மீட்சி கிடையாது என்பதையே, வரலாறு தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றது.

எப்படித்தான் தமிழ் மக்கள் மீட்சி பெறுவது? தமிழ் மக்கள் சொந்தமாய் மூச்சுக் கூட விட முடியாத வகையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே தாம்......

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.
···
அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, October 19, 2008

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்

சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.

வாய்பேசவே முடியாத அசாதாரணமான ஒரு நிலையில், மக்கள் தேசியத்தின் பெயரில் வாழவைக்கப்படுகின்றனர். மக்கள் தமது சொந்தக் கருத்தை ஊமையாக வெளிப்படுத்தும் விதத்தின் மூலம், இதன் மீதான தமது ஆழ்ந்த வெறுப்பைப் பிரதிபலிக்கின்றனர். தேசியத்தின் பெயரிலான யுத்தம் இப்படி என்றால், தேசியத்தின் பெயரிலான அமைதியும் கூட மக்களுக்கு எதிராகவே உள்ளது. மக்கள் புலித் தேசியத்தின் பெயரில் வாழவழியின்றி, தேசியத்தின் பெயரில் வாழ்வை இழந்து நிற்கின்றனர். சொந்தக் குழந்தையை, குடும்ப உறுப்பினரை, உறவினரை, ஏன் சமூகத்தின் கூட்டைக் கூட இழந்து விட்டனர். இதன் மேல் எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாத நிலையில் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். சொல்பவன் மேலும் இழப்பை தாங்கிக் கொள்ள வேண்டிய துயரமே, எமது புலித் தேசியமாகிவிட்டது.

இது மட்டுமா இல்லையே, உழைப்பை, சொத்துக்களை, சுற்றுச் சூழலை, சிந்தனை ஆற்றலை, ஏன் சமூகத்தின் ஆற்றல்மிக்க பரஸ்பர இயங்கியல் உறவை எல்லாம் தமிழன் இழந்துவிட்டான். இதையே தேசியம் என்கின்றனர். இதையே தமிழ் தேசிய வெற்றி என்கின்றனர். பிரபாகரனும். சுற்றி வாழ்பவர்களின் வாழ்க்கையையும் தான் தேசியம் என்றும், தேசிய வெற்றியும் என்கின்றனர். இந்த சிறு கும்பல் இத........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்.. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

· தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.

Saturday, October 18, 2008

தோற்ற வழியும், தோற்காத வழியும்

இரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.

இப்படி இலங்கை மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு, எந்தத் தீர்வும் அந்த மக்களிடம் இருந்து இதுவரை கிடையாது. இப்படி சரியான தீர்வுகளின்றி, சரியான வழிகாட்டலின்றி, மனித அவலம், தொடர்ச்சியாக தீர்வாக மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்றது.

இந்த வகையில் பிரதான முரண்பாடாகி மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளோ இரண்டு. அவை பிரதேசத்துக்கு பிரதேசம் ஒன்று மற்றொன்றாகி முதன்மையாகின்றது. அவை எவை?

1. பேரினவாதம். இது தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து, தமிழனை பாசிச வழிகளில் அடக்கியொடுக்குகின்றது.

2. புலிகள். இது தமிழ்
............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்உருவாக்கி

ஷகீலா : கவர்ச்சி சுதந்திரமா? பர்தா கண்ணியமா?


2003ஆம் ஆண்டு பாளையங்கோட்டை கலைவாணி திரையரங்கில் ஓடிய "இளமைக் கொண்டாட்டம்' என்ற திரைப்படத்தில் சென்சார் செய்யாத காட்சிகளில் ஷகீலா நடித்துள்ளார் என்பதற்காக அவர் மீதும், அவருடன் நடித்துள்ள நடிகர் வினோத் மீதும், திரையரங்க நிர்வாகிகள், ஊழியர்கள் மீதும் தணிக்கை செய்யப்படாத படத்தைத் திரையிடுதல் மற்றும் ஆபாசமாக நடித்துக் கூட்டம் கூட்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கின் வாய்தாவுக்காக நெல்லை வந்த ஷகீலா பர்தாவில் மறைந்து கொண்டு வந்த போதிலும் நீதிமன்ற வளாகத்தையே மக்கள் கூட்டத்தால் நிரப்பி விட்டார். நீலத்திரையில் பார்த்த கனவுக்கன்னி கருப்புத் திரைக்குள் ஒளிந்து வந்த போதிலும், தமது கனவுக்கன்னியை நேரில் தரிசிக்கும் பரவசமான வாய்ப்பை அங்கிருந்த மக்கள் இழக்க விரும்பவில்லை. ஷகீலாவின் வாய்தா என்றைக்கு என்ற தேதியை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் கவர் பண்ண காமிராவோடு நிருபர்களும் வந்து விட்டார்கள். வழக்கை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார் நீதிபதி. தேதியை ஷகீலா குறித்துக் கொண்டாரோ இல்லையோ, நிருபர்களும் ரசிக மகாஜனங்களும் நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்கள்.

Friday, October 17, 2008

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,

தனது வானொலிப் பேட்டி ஒன்றில் 'தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் - தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?" என்று புலம்பியுள்ளார். புலிகள் சந்திக்கும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீளும் நப்பாசை, இதில் பிரதிபலிக்கின்றது. இதனால் அனைத்து புலி ஊடகங்களும், இதனை முதன்மை கொடுத்து பிரசுரித்துள்ளனர்.

ஆனால் நிலைமை என்ன? மக்களுக்கு எதிரானவர்களை, மக்களே தோற்கடிக்கின்றனர். இதுதான் நடக்கின்றது. இதனைக் கூட புலிகளால் உணர முடியாதளவுக்கு, புலியிசம் பிரபானிசமாகி எங்கும் எதிலும் புளுக்கின்றது.

இப்படி புலியிசம் தனக்குள்ளாகவே, அழுகி நாறுகின்றது. மறுபக்கத்தில் மக்களே தமது சொந்த வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கின்றார்கள். இந்த வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிணநாற்றத்துடன் கூடிய சொந்த மரணத்தை கண்டு, புலிகள் உளறத் தொடங்குகின்றனர். தனது புலியிசத்தை தாமே வலிந்து நடுச் சந்தியில் நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க அலம்புகின்றனர்.

புலிகள் தாமே வலிந்து .............. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்உருவாக்கி

போகாதே நந்தா போகாதே

போகாதே நந்தா போகாதே -நாடகம்

குஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!

மாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது'' என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.

ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. "கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்' என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.

"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு .நடந்து..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 16, 2008

கடவுள் பிடிபட்டார்!

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.

புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
···
முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட.....ஈழத்தமிழர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஈழம்: இந்திய மேலாதிக்கத்தை முறியடிப்போம் !

ஒரு இறுதித் தாக்குதலுக்கு உரிய மூர்க்கத்துடன் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது சிங்கள இனவெறி அரசு. புலிகளிடமிருந்து கிளிநொச்சியை கைப்பற்றி விடுவோம் என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கையின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா.
இந்திய அரசு துணை நிற்பதுதான் சிங்கள இராணுவத்தின் இந்தத் திமிருக்கும் வெறிக்கும் மிக முக்கியமான காரணம். இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களும் போர்த்தளவாடங்களும் நிதியும் கொடுத்து புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவத்தை ஏவி விட்டிருக்கிறது இந்திய அரசு. புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயம்பட்டு குட்டு அம்பலமான பின்னரும் இவை எதற்கும் பதிலே சொல்லாமல் மவுனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.

கருணாநிதியும் முடிந்தவரை வாய்திறக்காமல் இருந்து விட்டு, பின்பு வழக்கம் போல பிரதமருடன் தொலைபேசியில் பேசிவிட்டார். இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆள்படையும் கொடுத்து உதவி வரும் இந்திய அரசு, உடனே இலங்கைத் துணைத் தூதரை அழைத்துத் தனது கவலையை வெளியிட்டிருக்கிறது. இதைவிடக் கேவலமான முறையில் தமிழக மக்களை இழிவு படுத்தமுடியாது.

துவக்கம் முதலே தெற்காசியப் பிராந்திய மேலாதிக்கம் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மட்டும்தான் இந்திய அரசு ஈழத்தமிழர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 15, 2008

இந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே

இந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! (ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! )

சட்டத்தை மதிக்காத எஸ்.ஆர்.எஃப்.நிர்வாகத்திற்கு போலீசு பாதுகாப்பு! போராடிய தொழிலாளிகளுக்கு தடியடி, கைது!

கும்மிடிப்பூண்டியிலுள்ள எஸ்.ஆர்.எஃப். ஆலைத் தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக "எஸ்.ஆர்.எஃப். புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்'' என்ற பெயரில் அணி திரண்னர்.


சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் சங்கத்தை உடைக்கப் பல்வேறுவிதமான சதிகளை நிர்வாகம் கைக் கொண்டு வருகிறது. சங்கம் தொடங்கியதற்காக 11 பேரை மத்தியப் பிரதேசத்துக்கு பணியிட மாற்றம் செய்வது; சங்க நிர்வாகிகளை "தொடர்பணி'' என்ற பெயரில் இராஜஸ்தான், கேரளா, கோயமுத்தூர் என ஆலையின் இதர கிளைகளுக்கு விரட்டி, மாதக்கணக்கில் ஊருக்கு வர முடியாதபடி செய்வது, பொய்க் குற்றம் சுமத்தி பணியிடை நீக்கம் செய்வது, பணிநீக்கம் செய்வது என நீளும் நிர்வாகத்தின் சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது.

இந்நிலையில் சங்க நிர்வாகிகளை பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கக் கோரி, தொழிலாளர் நல ஆணையரிடத்தில் தொழிற் தாவா தாக்கல் செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்ததுதான் தாமதம் உடனே செப்டம்பர் 2ந் தேதியன்று சங்க நிர்வாகிகள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது, நிர்வாகம்.

சங்க நிர்வாகிகளைப் பதம்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, October 14, 2008

புண் இருந்தால் சீழ் இருக்கும்

அனுபவ ரீதியான வாழ்வில், அனைவரும் அறிந்த சாதாரண உண்மை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளும் சரி, புலிகளும் சரி இந்த உண்மையை மறுக்கின்றனர். தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை இருவரும் மறுக்கின்றனர். ஒருவர் இதை பயங்கரவாதம் என்கின்றார் என்றால்,
மற்றவர்கள் துரோகி என்கின்றனர். இப்படி புண்ணை வைத்துக்கொண்டு, சீழை நக்குவதே இவர்களின் விபச்சார அரசியலாகும்.

இன்றைய அரசியல் எதார்த்தம் இதுவே. சிங்கள பேரினவாதம் இருந்தால் அதற்கு விளைவு இருக்கும். அதைப் பயங்கரவாதம் என்று கூறவது அடிமுட்டாள் தனமாகும். மக்கள் நலனை முன்னிறுத்தாத இக்கூற்றுகள், தீவிரமான பயங்கரவாதியின் கூச்சலாகும். இந்தவகையில் பேரினவாதிகள், மனித உரிமையை மறுக்கும் பேரினவாதிகள் தான். தமிழருக்கு எதிரான திட்டமிட்ட சிங்கள பேரினவாத அரசியல் சூழ்ச்சிகள், இன்று சிறு குழுவின் இராணுவ சர்வாதிகார பாசிச நிலையை அடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் மொத்த தமிழ் மக்களையும் சிங்கள மக்களுக்கு எதிரானதாக நிறுத்த முனைகின்றது.

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே கூறிக்கொண்டு, இதை வெறும் வார்த்தையாக்கிக் கொண்டு, மக்கள் தான் புலிகள் என்ற சிங்கள பேரினவாதத்தின் பாசிச நடைமுறைகள். சிங்கள பேரினவாத பாசிச இராணுவ சர்வாதிகார வழிகளில், மொத்த தமிழ் மக்களும் குதறப்படுகின்றனர். ஓட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் சொல்லொணாத் துயரத்தையும், மனித அவலத்தையும் சந்திக்கின்றனர்.

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை மறுக்கும் புலிகள். மறுபக்கத்தில் பேரினவாதமோ இல்லையில்லை, புலிகளும் தமிழ் மக்களும் ஒன்று என்கின்றனர்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்திய – அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் : துரோகத்தின் வெற்றி!

இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை (123 ஒப்பந்தம்) நிறைவேற்றுவதற்கான இறுதிக் கட்ட பேரங்கள் நடந்து வருகின்றன. சர்வதேச அணுசக்திக் கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இந்திய அணு உலைகளைக் கண்காணிப்பது தொடர்பான ஒப்பந்தமும்; யுரேனியம் உள்ளிட்ட அணு மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக, அணுமூலப் பொருட்கள் வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒப்பந்தமும் நிறைவேறியுள்ள நிலையில், 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் சடங்கு மட்டுமே எஞ்சியிருக்கிறது.

123 ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறி, நடைமுறைக்கு வரும் நாள் நெருங்க நெருங்க, அதனின் உண்மையான முகமும்; இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட "அரும்பாடுபட்டு வரும்'' மன்மோகன் சிங் பிரணாப் முகர்ஜி எம்.கே நாராயணன் சிவசங்கர் மேனன் அனில் ககோத்கர் என்ற ஐவர் கும்பல் கடைந்தெடுத்த பித்தலாட்டப் பேர்வழிகள் என்பதும் அம்பலமாகி வருகிறது.

துரோகமா மாற்று அரசியல்?

மக்களுக்கு எதிரான துரோகத்தை நியாயப்படுத்துவதே மாற்று அரசியல் என்று, புலியெதிர்ப்புக் கும்பல் நிறுவ முனைகின்றது. புலிகளிள் ஒவ்வொரு பல்லும் விழும்போது, துரோகமே மாற்று என்று நிறுவப்படுகின்ற அரசியல் வக்கிரம் ஒருங்கே அரங்கேறுகின்றது. வரலாற்றின் முரண்நிலை, இதுவாக இருப்பதாக காட்டப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் என்பது, இதுதான் என்று அறைந்து ஒட்டப்படுகின்றது. இது மீறப்பட முடியாத வகையில் ஊடகவியல் மாற்றுகள் அனைத்தையும் முடக்கி மலடாக்குகின்றது. இந்த வகையில் தமிழ் மக்களை கண்னை பிரித்து, சிந்திக்க நிர்ப்பந்திக்கின்றது.

இதுவல்லாத கருத்துக்கு, சிந்தனைக்கு சமூகத்தில் எந்த இடமுமில்லை என்பது இவர்களின் நிலைப்பாடு. இதில் இவர்களுக்கிடையில் வேறுபாடு கிடையாது. மக்கள் தம்மைப்பற்றி தாமே சிந்திப்பது, இவர்களைப் பொறுத்த வரையில் ஒரு ஜனநாயகக் குற்றம். இப்படி இரண்டு தளத்தில் மக்களின் (எமது) அறிவு, சிந்தனை, செயல், மனிதநேயம் என்று எல்லாவற்றையும் காயடித்து, நலமடிக்கின்றனர். இதில் இருந்து எந்த விதத்திலும் மனிதர்களின் பன்முகப் பார்வை விரியக் கூடாது என்பதில், புலிகள் முதல் புலியெதிர்ப்பு கும்பல் வரை மிகக் கவனமாகவுள்ளது.

ஒன்றையொன்று எதிர்த்தபடி, இதற்குள் தமிழ் மக்கள் இயங்கவேண்டும் என்பது மாற்றுக் கருத்தின் உள்ளடக்கமாக காட்டுவது அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கங்களான புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி என அனைத்தும் மாற்றுக் கருத்துக்களை கொண்ட நபர்களை கொலை செய்து, அதன் மூலம் தலைமைக்கு வந்தவர்களால் தான் இன்னமும் அவ்வியக்கங்கள் துரோக வழியில் வழிநடத்தப்படுகின்றது. இந்த அமைப்புக்கள் இந்தியா இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரையிலான ஐந்தாம் படையாகவே இன்றுவரை

Monday, October 13, 2008

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள்.

அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஈழத் தமிழ்மக்கள் துயரத்தில் பிழைக்கும், தமிழக அரசியல்வாதிகள்

அன்று முதல் இன்று வரை இதுதான் கதை. இவர்கள் எப்போதெல்லாம் தலையிட்டார்களோ, அப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களின் துயரம் பெருகியது. இந்தியா தலையிட வேண்டும் என்று இன்று மீண்டும் கூச்சல் போடுபவர்கள், முன்பும் இதுபோல் கூச்சல் இட்டனர். இதன்போது தமிழ் இனத்தையே இந்தியா கொன்று குவித்தது. மறுபடியும் பிழைப்புவாதிகள், ஈழத் துயரத்தை வைத்து தமது சொந்த அரசியலைச் செய்கின்றனர். 

 

பேரினவாதமோ புலியொழிப்பின் பெயரில், ஒரு முழு யுத்தத்தையே தமிழ்மக்கள் மேல் நடத்துகின்றது. ஒருபுறம் புலிப் பாசிட்டுகள் திணறுகின்றனர். மறுபக்கம் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரத்தையும் மனித அவலத்தையும் சந்திக்கின்றனர்.

 

புலிகளால் கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபடுத்தப்படும் பலர் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் இராணுவக் களையெடுப்பில் பலர் (பெருமளவில் புலிகளும், சிறியளவில் அப்பாவிகள்) காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். புலிப் பிரதேசத்தில் இருந்து தப்பமுனைவோருக்கு சித்திரவதை முதல் மரணம் வரையான தண்டனையே, வாழ்வின் விதியாகின்றது. தமிழ் இனத்தின் குழந்தைகள், பல வழியில்  பலரால் அழிக்கப்படுகின்றனர்.

 

யுத்தத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் எந்த சொந்த முடிவையும் சுயமாக எடுக்கமுடியாது,  அவர்கள் மரணத்தின் விளம்பில் நிற்கின்றனர். யுத்த முனையில் இருந்து தப்பிச் செல்ல முடியாத வகையில், அவர்கள் மனித கேடயமாக்கப்பட்டுள்ளனர்.

 

மக்களை அங்கிருந்து வெளியேறா.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்


முதலாளிக்கு நிலம்! உழுபவனுக்கு குண்டாந்தடி! – சி.பி.எம்.இன் நிலச்சீர்திருத்தக் கொள்கை!

"கேரளத்தைப் பார்! வங்கத்தைப் பார்! நிலச்சீர்திருத்தம் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது'' எனக் கிளிப்பிள்ளையைப் போல சி.பி.எம். கட்சி ஒவ்வொரு சந்துமுனையிலும் தனது கூட்டங்களில் பெருமை பொங்கப் பேசுவது வழக்கம். இதையெல்லாம் பார்த்து சி.பி.எம். ஆளும் மாநிலங்களில் நிலமற்றவர்களே கிடையாதோ என எண்ணுபவர்களும் உண்டு. ஆனால், சி.பி.எம். ஆளும் கேரளத்தில் நிலமற்ற மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டங்கள், இந்தப் போலிப் பெருமையை அம்மணமாக்கிவிட்டன.

கேரளாவைச் சேர்ந்த நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள், சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் அரசு பதவி ஏற்றபோது, "சாது ஜன விமோச்சன சம்யுக்த வேதி'' எனும் அமைப்பின் கீழ் திரண்டு தாங்கள் மானத்தோடு வாழ நிலம் கேட்டுப் போராடினர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் அரசு தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சந்தனப்பள்ளி இரப்பர் எஸ்டேட்டில், 500 குடும்பங்கள் கூடாரங்கள் போட்டு போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தை "பொதுத்துறை நிறுவனத்தை சிதைக்கும் செயல்' என ஏ.ஐ.டி.யூ.சி. முதல் பி.எம்.எஸ். வரை அனைத்து ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களும் எதிர்த்தன. பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் 5 ஏக்கர் நிலம், ரூ.50ஆயிரம் வரை இழப்பீடு என அரசு உறுதி தந்ததன் பேரில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஓராண்டுக்குள் நிலமில்லாத மக்கள் அனைவருக்கும் நிலம் வழங்கப்படும் என்று அரசு உறுதிமொழி கொடுத்தது.

அரசு கொடுத்திருந்த ஓராண்டுக் காலக் கெடு முடிந்தும் நிலம் ஏதும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்நிலையில்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, October 12, 2008

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் என்பது மட்டும், புலிகளின் போராட்டத்தை வெற்றியாக்கிவிடாது. புலிகளின் ஆயுதங்களும், ஆட்பலமும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பொதுவாக இதில் எதிரி பலமாக இருந்தும், அவன் தோற்கடிக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. இதுவே எதிர்நிலையிலும்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

"காமவெறி போலீசுக்காரனைத் தூக்கில் போடு!'' திருச்சியை அதிர வைத்த சுவரொட்டி பிரச்சாரம்

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் சென்னை செல்வதற்காகக் காத்திருந்த இரு இளம்பெண்களை, இரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காமவெறி பிடித்த போலீசுக்காரன் சரவணன், விசாரணை என்ற பெயரில் தனது வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்முறையை ஏவியுள்ளான். இக்கொடுஞ்செயலை அறிந்து திருச்சி நகரமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்தப் பொறுக்கியின் பொழுதுபோக்கே இப்படி இளம்பெண்களைத் தனது போலீசு அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி கடத்திச் சென்று நாசமாக்குவதுதான் என்பது முதற்கட்ட விசாரணையிலேயே தெரிய வந்துள்ளது. ஆனாலும், இவனோடு கூட்டுச் சேர்ந்து காமவெறியாட்டங்களை நடத்தி வரும் இதர போலீசு கும்பலைப் பற்றிய உண்மைகள் திட்டமிட்டே . மறைக்கப்பட்டுள்ளன............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, October 11, 2008

இசையும் பிரச்சாரமும்

இசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-1 தோழர்.மருதையன்

என்னை (கொமினிச) படுகொலை செய்யக் கோரும் ஒரு பேப்பர் கதை

சில நாட்கள் கழித்து உடுவில் பகுதியில் ஒரு வாசகசாலையில் புகுந்து பத்திரிகைகளைப்புரட்டினேன். உதயன் பத்திரிகையில் முதற்பக்கத்தில் ஒரு செய்தி. ""யாழ்மாவட்டத்தின் ரஸ்ய சார்பு கொமினிச அமைப்பாளரான விஜயானந்தன் சுட்டுக்கொலை."" அந்தக்கொமினிச பிசாசிற்கு குழையடிக்கப்பட்டு விட்டது.எனக்குத்தெரியும் நிச்சயமாக அவன் நரகலோகம்தான் போயிருப்பான். ஆனால் இன்று புலம்பெயர்ந்த தேசங்களிலும் கொமினிசம் பேசியபடி சில பிசாசுகள் உலவியபடிதான் இருக்கின்றன.இவைகள் குழையடிக்கப்படுவது எப்போ????????.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்