பிரபாகரனில் இருந்து தமிழ் தேசியத்தைத் தொடரவே, அதற்கொரு கோட்பாட்டை மே18 இயக்கம் வியூகம் மூலம் முன்தள்ளுகின்றது. இவர்கள் வேறுயாருமல்ல. தீப்பொறி முன்வைத்த அரசியலை கேசவனுக்கு பின் மறுதலித்தவர்கள். தீப்பொறியை கைவிட்டு, உயிர்ப்பு சஞ்சிகை மூலம் அரசியலை புலிக் கோட்பாடாக்கியவர்கள்.
இந்த அரசியல் கோட்பாட்டின் மூலம், புலிகளின் உளவு அமைப்பாக மாறியவர்கள் தங்களை தமிழீழக் கட்சியாக்கினர். இதை அன்று ஜான் "தன்னியல்பு வாதம்" என்ற கோட்பாட்டின் மூலம், புலிக்கு பின்னால் அழைத்துச் செல்ல முடிந்தது.
இன்று பிரபாகரன் இறந்த "மே18"இன் பெயரில், ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதற்கு "வியூகம்" போடும் வண்ணம் வியூகம் சஞ்சிகை மூலம், மறுபடியும் "தன்னியல்புவாதம்" என்ற தனது முந்தைய கோட்பாட்டை கொண்டு வரலாற்றை "தன்னியல்புவாதமாக" திரித்துக்காட்ட முனைகின்றார். இந்த "தன்னியல்புவாதம்" என்ற கோட்பாட்டின் ஊடாக, பிற்போக்கான ஒடுக்கும் (சுரண்டும்) வர்க்கங்கள்; முன்தள்ளிய தேசியத்தில் இருந்த வர்க்க அடிப்படைகளை நீக்கி, அதன் அரசியல் சமூக கூறுகளையும் மறுதலித்து "தன்னியல்பு வாதமாக" காட்டமுனைகின்றனர். தமிழ்தேசிய சுரண்டும் வர்க்கம் கடந்த தன் வரலாற்றில் தனிமனித முனைப்புடன் அது ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை, வர்க்க அடிப்படையில் இருந்து பிரித்து "மே 18" இயக்கம் காட்ட முனைகின்றது. இதை கடந்த வரலாறாக்கி, அதை "தன்னியல்புவாத"த்தின் அரசியல் விளைவாக இட்டுக்கட்ட முனைகின்றனர்.
நாம் முதலில் ....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment