தமிழ் அரங்கம்

Sunday, January 10, 2010

இலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை!

இம்மாதத் தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் வரையான யாழ் மாவட்ட மக்கள் மீள் குடியேற்றத்துக்கு வந்துள்ளனர். ஓகஸ்ட் மாதம் 5ம் திகதியில் இருந்து யாழுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் (03.நவம் 09)அன்று 47,042 பேராக உள்ளது. அன்று இரவு 289 குடும்பங்கனைச் சேர்ந்த 894 பேர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வைத்து, அவர்களது உறவினர்கள் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் சண்டிலிப்பாய் பிரதேசசெயலகத்தைச் சேர்ந்தவர்களாகும். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவை கைக்குள் வைத்து, இரண்டு கிழமைக்கான அரிசி பருப்பு கருவாட்டுடன்: நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சாய்த்து விடப்பட்டுள்ளனர். இவ்வாறு துரையப்பா விளையாட்டு அரங்கிலும் வைத்து பலர் ‘சாயத்;து’ விடப்பட்டுள்ளனர். இதுதான் இக் குடியேற்றத்தின் திருவிளையாடல்!

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து, தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதாக விண்ணப்பித்த 2139 பேர்வரை (02.நவம் 09)ல் யாழுக்கு அனுப்பப்பட்டனர். இதில் 132 குடும்பத்தைச் சேர்ந்த, 466 தீவக மக்கள் சாவகச்சேரியிலிருந்து – அவர்களது பகுதிக்குச் ‘சாய்க்கப்’ பட்டனர். மற்றும் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேரை கரவெட்டி விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்தில் வைத்துச் ‘சாய்க்கப்’பட்டுள்ளனர.;
.

கடந்த பத்து மாதங்களாக......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: