மகஸீன் சிறையில் மூன்று கைதிகளின் நிலை கவலைக்கிடம்
தம்மை விடுவிக்கமாறு கோரி கொழும்பு மத்திய மகஸீன் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூன்றுபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பணிப்பாளர் தேவதாசனும் ஒருவர். இவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக யாழ்சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவோரில் நான்குபேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுகின்றனர்.
தேர்தல்பிரசாரக் கூட்டங்களில் பயங்கரவாதம் களையப்பட்ட பௌத்திரமான பூமி என்கின்றார் மகிந்த மன்னன். புலிகளின் முன்னால் உறுப்பினர்களைக்கூட விடுவிக்கின்றோம் என்கின்றார். அப்போது இவர்கள் என்ன விடுவிக்கப்படமுடியாத மகிந்த சிந்தனையிலான “நவீன” கைதிகளோ?
யுத்தக் குற்ற விசாரனைக்கு ஜ.நா சபை நிபுணர் குழுவை நியமிக்கும்
இலங்கையில் தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை வெளிப்படுத்தும் “சனல் 4-ல்” வெளியிடப்பட்ட ஒளிநாடா...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment