தமிழ் அரங்கம்

Friday, January 15, 2010

முன்னாள் "இடது புலிக்கு" வாக்குப் போடக் கோருகின்றனர், "மே18" என்ற "இடது" புலிக் கும்பல்

"இது முடிவல்ல, புதிய தொடக்கம்" என்று கூறி, பன்றித் தொழுவத்துக்கு வழிகாட்டுகின்றனர். மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தால், கள்ள வாக்கு போடுவார்களாம்! தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்குமாம்! ஆகவே மக்களே தேர்தலை பகிஸ்கரிக்காதீர்கள். மக்களே வாக்கு போட்டு எங்கள் பெட்டியை நிரப்புங்கள்! என்கின்றனர்.

தேர்தலில் வாக்குப் போட்டால் தேர்தல் மோசடிகளும், கள்ளவோட்டு போடுவதும் நடைபெறாதாம். இதனால் நாம் இந்த பன்றித் தொழுவத்தில் நிற்கும் பன்றிகளுக்கு வாக்குப் போட்டு, இந்தப் போலி ஜனநாயக மோசடியை தேர்தல் மோசடியின்றியும் கள்ளவோட்டின்றியும் பாதுகாக்க வேண்டுமாம்!

இதை "மார்க்சியத்தை"யும் பேசிக்கொண்டு, மக்களின் காதுக்கு பூ வைக்கின்றது "மே18" என்ற புலிக் கும்பல் சொல்லுகிறது. புலித்தேசியத்தை அரசியலாக கொண்ட கும்பல் "மார்க்சியம்" பேசிக்கொண்டு, இன்று தேர்தல் கடையையும் விரிக்கின்றனர். கடந்த காலத்தில் புலியின் உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக இருந்ததுடன், கேசவனை நேரடியாக காட்டிக் கொடுத்து கொன்றவர்கள் இவர்கள். இன்றும் அதே சதி அரசியல். இவர்களின் கடந்தகால அரசியல் புலியுடன் நடந்தது. நிகழ்கால அரசியல் இன்று வாக்கு போடக் கோருகின்ற அளவுக்கு, அது " கள்ள வாக்கு" ஊடாக தன்னை நியாயம் கற்பிக்கின்றது.

இவர்களால்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: