தமிழ் அரங்கம்

Friday, January 15, 2010

விவசாயிகள் – மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்

தனியார்மய தாராளமயத் தாக்குதலை மேலும் மூர்க்கமாகத் தீவிரப்படுத்தக் கிளம்பிவிட்டனர் காங்கிரசு துரோகிகள். பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்துள்ள திமிரில், உழைக்கும் மக்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடவும் துணிந்துவிட்டனர்.

தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளின் கொள்ளைக்காகவும், வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை இறக்குமதியைத் தாராளமயமாக்கவும், மாநில அரசுகளுக்குப் பெயரளவில் இருந்த அதிகாரங்களைப் பறிக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்முதல் விலையைக் கொண்டுவருவது என்ற பெயரில், அக்டோபர் இறுதியில் கரும்பு விலை நிர்ணய அவசரச் சட்டத்தை மைய அரசு அறிவித்தது. கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.1298 எனத் தன்னிச்சையாகக் கொள்முதல் விலையை நிர்ணயித்து, இந்த “”நியாயஆதார” விலைக்கு மேல், மாநிலஅரசுகள் பரிந்துரை விலையை அறிவித்தால், இந்த விலை வித்தியாசத்தை மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் மீது இதைச் சுமத்த முடியாது என்று இச்சட்டம் கூறுகிறது. இதை ஏற்க மறுத்து, கரும்பு விவசாயிகளைத் திரட்டி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து, இச்சட்டத்தின் 5ஏ விதி திருத்தப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு புதிய மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த ஒரு விதியில் மட்டுமே சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளையும் போண்டியாக்கும் கொள்முதல் விலை மற்றும் பிறவற்றில் எந்த மாற்றமுமில்லை.

இதேபோல, மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மசோதா (2009), நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவுள்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: