தமிழ் அரங்கம்

Monday, January 11, 2010

இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?, சீனாவின் திபெத்தில் நடந்த இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சதிகள்

மீண்டும் சீன எதிர்ப்பு தேசிய வெறி இந்திய ஆளும் வர்க்கங்களால் கிளறி விடப்படுகிறது. புத்த மதகுருவான தலாய் லாமா அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு "ஆன்மீகப் பயணம்' சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையும், அம்மாநிலத்தின் தவாங் மாவட்டப் பகுதியைத் தனது பாரம்பரிய பிரதேசம் என்று சீனா உரிமை கோருவதையும் வைத்து, இப்போது ஊடகங்கள் சீன எதிர்ப்பு தேசிய வெறியைக் கக்குகின்றன.


சீன ஊடுருவல் அதிகரித்துவிட்டது என்றும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது என்றும், சீனக் கொடியையும் சீனப் பொருட்களையும் எரித்து இந்துவெறியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். ""சீன ஊடுருவல் அதிகரித்துவிட்டது; மைய அரசு எஃகு போன்ற முதுகெலும்பில்லாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது'' என்று சாடி அறிக்கை வெளியிட்டார் பார்ப்பனபாசிச ஜெயலலிதா. பா.ஜ.க. தலைவர்களும் முலயம் சிங் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே எல்லை சச்சரவு நீடித்துவரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உண்மையில் சீன ஊடுருவல் அதிகரித்து விட்டதா? அந்நாடு இந்தியாவை ஆக்கிரமிக்கத் துடிக்கிறதா? அதனால்தான் இப்போது சீன எதிர்ப்பு என்பது முக்கிய விவகாரமாகிவிட்டதா? அதெல்லாம் இல்லை. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டப்படியே, அதன் விசுவாச அடியாளான இந்தியா, இப்போது சீன எதிர்ப்பு தேசிய வெறியைத் திட்டமிட்டு கிளறிவிட்டு வருகிறது.

புதிய நூற்றாண்டுக்கான.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: