தமிழ் அரங்கம்

Sunday, January 10, 2010

"வியூகம்" முன்னுரை : "மே18" இயக்கம் "தன்னியல்புவாதம்" மூலம் முன்மொழியும் வர்க்கமற்ற அரசியல் (பகுதி 01)

"மே 18" இயக்கம் வெளியிட்ட வியூகம் இதழ் தனது முன்னுரையூடாக, கடந்த தமிழ் தேசியத்தின் தோல்விக்கு "தன்னியல்புவாதம்" தான் காரணம் என்கின்றது. இதே காரணத்தையே 1992 களில் "உயிர்ப்பு" சஞ்சிகை ஊடாக கூட இவர்கள் முன்வைத்தனர். இப்படி முன்வைத்ததன் ஊடாக, அது அன்று புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக மாறியதே கடந்த வரலாறாகியது.


இன்று மீண்டும் ஜான் அதே "தன்னியல்புவாதம்" கோட்பாட்டை முன்தள்ளுகின்றார். பிரபாகரன் செத்த நாளாக அரசு அறிவித்த மே 18 ஜ, தனது அமைப்பின் பெயராக முன்வைத்து கொண்டு மீண்டும் தமிழ்தேசியம் பேசுகின்றார். இப்படி "மே18" இயக்கம் மூலம் ஜான் முன்தள்ளும் அரசியல் என்பது, தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த "தேசியத்தை" அரசியல் ரீதியாக "தன்னியல்புவாதம்" மூலம் முன்மொழிந்து பாதுகாக்கின்றார். கடந்த காலத்தில் தேசியத்தின் பெயரில் நடத்திய மக்கள் விரோத பாசிச அரசியலை பாதுகாக்க, அதை "தன்னியல்புவாதம்" என்று கூறி, அதையும் பாதுகாத்து நிற்கின்றது "வியூகம்" இதழ்.

"தன்னியல்புவாதம்" தான், தமிழ் தேசியத்தின் தோல்வி என்கின்றனர். அது தேசியத்தின் தோல்வி அல்ல என்கின்றனர். தேசியம் முன்வைத்த அரசியலின் தோல்வியல்ல என்கின்றனர். இங்கு தேசியம் முன்வைத்த அரசியல் சரியானது, "தன்னியல்புவாதம்" தான் தோல்விக்கான காரணம் என்கின்றனர்.

இப்படி "மே 18" இயக்கம் "வியூகம்" ஊடாக வியூகம் போட்டு அதை "தன்னியல்புவாத' மாக முன்தள்ளும் அரசியல், கடந்தகாலத்தின் மக்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: