தமிழ் அரங்கம்

Monday, January 11, 2010

தை 2010 தேர்தல் பெறும் அர்த்தம் – தாயகத்திலிருந்து ரவி

உலகின் வினோதமான அரசியல் போக்கு ஒன்றின் குவிமையப்படுத்தலாக இலங்கை எதிர்கொள்ளும் இன்றைய ஜனாதிபதித்தேர்தல் அமைந்திருக்கிறது. இதுவரையிலான இலங்கையின் தேர்தல்கள் ஏதோவொருவகையில் அதன் தலைவிதியை வரையறுப்பதாக அமைந்ததுண்டு. இன்றைய தேர்தல் அடிப்படையில் எந்த மீட்சிக்கும் நம்பிக்கையற்றதாக முகங்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும், இதுவரையில்லாத அளவில் கடும்போட்டி நிலவுவதாகவும் இது அமைந்துள்ளமை நகைமுரன். ஓரிரு வாரங்களுக்கு முன்வரை ஆளுந்தரப்பின் வெற்றி நிச்சயம் என்பதாக இருந்தபோதே போட்டி வலுவானது என்பதாக உணரப்பட்டது. போட்டிக்கு மூன்று வாரங்களுக்குட்பட்டதாக நாட்கள் நகரும் போது எதிர்த்தரப்பு வெல்ல வாய்ப்பு வலுத்துவருகின்றமையை அவதானிக்க முடிந்த போதிலும் கடுமையான போட்டி என்பது மாறிவிடவில்லை..

எதிர்த்தரப்பை வெற்றிகொள்ள வைப்பதற்கு ஐரோப்பா முதன்மைபெறும் இலங்கைக்கான உதவிவழங்கும் நாடுகளது ஒன்றியமும் அமெரிக்காவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காய்நகர்த்தல்களைச் செய்தபடியுள்ளன. சென்ற ஆண்டின் இறுதியில் சமர்ப்பித்திருக்க வேண்டிய வரவு–செலவுத்திட்ட ஆண்டறிக்கையை அரசு சமர்ப்பிக்கவில்லை. உதவிவழங்கும் நாடுகள் நிவாரணங்களின் மீதான கடும் வெட்டுகளை நிர்ப்பந்தித்து உடன்படவைத்த பின்னரே இந்த அரசுக்கு முண்டுகொடுக்க இணங்கியிருந்தனர். அதற்கேற்ற வெட்டு;களுடன் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துத் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: