தமிழ் அரங்கம்

Saturday, January 16, 2010

தேர்தல் சந்தடி ஊடாக தமிழினத்தை அமைதியாக அழிக்கும் புதிய தந்திரங்கள்

யுத்தத்தை நடத்த தீர்வு பொதியைக் காட்டுவது, பேரினவாதத்தின் இனவழிப்பு தந்திரம் என்பதை அனைவரும் அறிவர். இது போல் தேர்தலை வெல்ல, தேர்தல் வாக்குறுதிகள். இதே போல் தமிழினத்தை அமைதியாக அழிக்க, அதிரடியான தேர்தல் நாடகங்கள். இந்தவகையில் முன்வைக்கும் அதிரடித் தீர்வுகள், அந்த மக்களின் இருப்பையே சிதறடித்து வருகின்றது.


யுத்தம் மூலம் தமிழ் மக்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கியவர்கள், தங்கள் யுத்தக் குற்றத்தை மூடிமறைக்க அந்த மக்களை முட்கம்பிக்கு பின்னால் பலாத்காரமாக அடைத்து வைத்தனர். இங்கு அவர்களை மூச்சுவிடக் கூட விடவில்லை. எல்லாவிதமான வன்முறையும் அவர்கள் மேல் ஏவப்பட்டது. பாலியல் வன்முறை முதல் அரச எடுபிடி குழுக்களின் கப்பங்கள் வரை பரிசாக கிடைத்தது. இதையே இந்த மக்கள் முட்கம்பிக்கு பின்னால் ஒரு வாழ்வாக அனுபவித்தனர். இப்படி அந்த மக்களை முட்கம்பிக்கு பின்னால் கூட இந்த அரசு நிம்மதியாக இருக்க விடவில்லை. எந்த சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க கூட அனுமதிக்கவில்லை. தமக்கு நடந்ததைச் சொல்லி புலம்பக் கூட உரிமையிருக்கவில்லை.

ஏன் இந்த முட்கம்பிக்கு பின்னால் பலர் காணாமல் போனார்கள். பலர் வாழ்விழந்தனர். பலர் நிரந்த நோயாளியானார்க...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: