தமிழ் அரங்கம்

Monday, August 1, 2005

எமது போராட்டத்தின்...

எமது போராட்டத்தின் உள்ளடக்கம் தான் என்ன?

முதலாளித்துவ புரட்சியாளனாக திகழ்ந்த சேக்ஸ்பியரின் மிக உன்னதமான கவிதை வரிகள் இவை.

புரட்சியை புரட்சியாகவே நேசிக்கின்றான். அதற்காகவே அவன் கவிதை படிக்கின்றான்.

கந்தலாடை கட்டிய ஏழையின் தவறுகள்
கணப்போதில் வெளியே தெரிகின்றன.
பகட்டுடை உடுத்திய பணக்காரன் தவறுகள்
பலருக்குத் தெரிவதில்லை; பார்வைக்கும் வருவதில்லை;
பொருள் படைத்தவன் புரியும் தவறுகள் இருளுக்குள் மறைகின்றன
இல்லையென்றும் ஆகின்றன.
நீதியின் வலிய கரங்கள் அவ்விடம் நோக்கி நெருங்குவதில்லை;
நெருங்கினால் நொருங்குகின்றன
பொருளில்லார் புரியும் தவறுகள் புதைந்து விடுவதில்லை!
பொசுங்கிப் போவதுமில்லை!
ஒரு சிறு துரும்பு கூட ஏழையின் இரும்புக் கோட்டையைத் தகர்த்து விடுகிறது!

பாட்டளிவர்க்க புரட்சியைக் கோரி ஆங்கிலேய புரட்சிக்காரன் சாளி இந்தக் கவிதை படிக்கின்றான்;

அருவெறுக்கத்தக்க முகமூடி கிழிந்துவிட்டது.
மனிதன் செங்கோல் அற்று இருக்கின்றான்
சுதந்திரமாக எவ்விதத் தடையுமின்றி இருக்கிறான்
மனிதன் சமத்துவமாக
வர்க்கமற்ற
குலங்கள் அற்ற
தேசமற்ற நிலையில் இருக்கிறான்
மனிதன் எல்லா அச்சத்திலிருந்தும்
எல்லா வழிபாட்டிலிருந்தும்
எல்லா வேறுபாட்டிலிருந்தும் நீங்கி,
தானே தனக்கு அரசனாக இருக்கிறான்.

நாங்கள் எந்தக் கவிதையைத் தான் படிக்கின்றோம்,
படிக்கப் போகின்றோம்.
எமது இலட்சியங்கள் தான் என்ன?