தமிழ் அரங்கம்
Saturday, September 27, 2008
Friday, September 26, 2008
மாற்றுப் பயிர்த் திட்டம் : விவசாயிகள் விட்டில் பூச்சிகளா?
கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு ஒரு மாற்றுப் பாதையை காட்டுவதாகப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள், பாரம்பரிய உணவு மற்றும் தானிய உற்பத்தியில் உள்ள நிலங்களில் இம்மண்ணுக்கே அறிமுகம் இல்லாத புதிய பயிர்களையும் மற்றும் ஏற்றுமதிக்கான பயிர்களையும் விவசாயம் செய்ய வழிகாட்டுதல் கொடுக்கின்றன.
இதை விவசாய விஞ்ஞானிகள் பன்முகப் பயிர் (Crop diversification) விவசாயம் என்கிறார்கள். பன்முக விவசாயத்தை மேற்கொள்வதே விவசாயிகளை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள். இதனடிப்படையில் மைய விவசாய அமைச்சர் சரத்பவார், "கோதுமை, அரிசி உற்பத்தியைக் குறையுங்கள்; மாற்றுப் பயிர்களைப் பயிரிடுங்கள்'' என விவசாயிகளைப் பார்த்து அறிவுரை கூறி வருகிறார்.
இந்த மாற்றுப் பயிர் விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டியது பா.ஜ.க. கூட்டணி அரசு. மாற்றுப்பயிர் விவசாயத்தை ஜூலை 8, 2004 அன்று தேசியத் தோட்டகலைத் திட்டத்தின் ஊடாக (National horiculture Mission-NHM) அமல்படுத்தியது. இத்திட்டத்தின் அடிப்படையில் பழங்கள், காய்கள், வாசனைப் பொருட்கள், மருத்துவச் செடிகள், மலர்கள், தென்னை, பாக்கு, முந்திரி, கோக்கோ, ஹெர்கின், நெல்லி, காட்டாமணக்கு, சர்க்கரைச் சோளம், மற்றும் பல்வேறு புதிய வகைப் பயிர்கள் பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்தகைய பயிர்களை வல்லுனர்கள் "தோட்டப்பயிர்'' என்று வரையறுத்துள்ளனர். மேலும் இந்தப் புதிய............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்