தமிழ் அரங்கம்

Saturday, May 23, 2009

இரத்தம் தோய்ந்த வெற்றியும் மை பூசிய மசிரும் - ரவி

இலங்கை அரசின் ஜனாதிபதி கறுப்பு மயிருடனும் கறுப்பு மீசையுடனும் கம்பீரமாய் வருகிறார். ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கும் அவசரத்தில் விமானத்திலிருந்து இறங்கிவருகிறார். இதுவரை மண்ணைப் பிரிந்து அகதியாக இருந்ததுபோன்ற, அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு மண்ணில் முதன்முதல் காலடி வைப்பதுபோன்ற ஒரு பாவனையில் மண்ணை தொட்டு வணங்குகிறார். அவர் பரபரப்பாக இருந்தார். விமான ஓடுபாதையில் அமைச்சர் பட்டாளம் குதூகலமாய் வரவேற்றுக் கொண்டிருந்தது..

. அந்தப் பெண்ணின் முதுகுப்பகுதி நீளத்துக்கும் கோரமாகக் கிழிபட்டிருந்தது. வன்னி மண்ணில் சரிந்து வீழ்ந்திருந்தாள் அவள். இலையான்கள் காயத்தை மொய்த்துக்கொண்டிருந்தன. சதையின் கிழிவுக்குள் உட்புகுந்த இலையான்கள் வெளிவரத்துடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போதெல்லாம் அவளின் கிழிந்த சதைகள் பொருமுவதும் அமர்வதுமாக அசைந்துகொண்டிருந்தது. அவள் உயிருடன் இருந்தாள். முனகினாள். இரத்தம் கொட்டியபடி இருந்தது. காயத்துள் புகுந்த இலையானின் அரிப்பை விரட்ட அவளது கைகள் எழ எத்தனித்து எத்தனித்து தோல்விகண்டன. கண்கள் திறந்திருந்தன. ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஈழத்தின் அரசியல் எழுச்சியை தட்டித் தடவி தமக்கேற்றபடித் திருப்பும் அதிகாரங்களின் கலை- ஜனகன்


புலிகளுக்குச் சார்பாக எந்தச்சக்திகளும் இல்லாமற்போனது புலிகளின் இயல்பு, இன்றைய உலக அரசியற் சூழல் போன்றவை வழிவந்த துரதிஷ்டம். முன்பெல்லாம் இந்தியா போன்ற சக்திகள் புலிகளை ஆதரித்து தமது கைப்பாவையாக நடத்தியுள்ளன. பிறகு இக்கட்டான முட்டுச்சந்துகளுக்குள்ளிருந்து வெவ்வேறு சக்திகள் புலிகளைக் காப்பாற்றி விட்டிருந்த.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வரலாற்றில் பிரபாகரன்

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.

தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான். மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன். இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 22, 2009

புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?

திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

இந்த சதி வலையின் முன் பக்க பரிணாமத்தை நன்கு தெரிந்தவர்கள், இதை வழி நடத்தியவர்கள். சரணடைய வைத்து, இந்த துரோகத்தை முழுமையாக வழி நடத்தியவர்கள் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதை சொல்கின்றனர். உண்மையில் புலித்தலைமையை விட்டில் பூச்சியாக்கிய அரசியல், அதன் பின்னணி என்பது துரோகத்தாலானது.

.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் புதிய அபாயம்

ஆறுகளும் பசுமையான வயல்களும், மலைகளும் நீர்வீழ்ச்சியும், காடுகளும் விலங்குகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் குலுங்கியது. "ஒருபிடி மண்ணைக்கூட அந்நியனுக்குத் தரமாட்டோம்!; தென்கொரிய டேவூ நிறுவனமே, நாட்டை விட்டு வெளியேறு!; நாட்டைத் தாரைவார்க்கும் சர்வாதிகார அதிபர் ஒழிக!'' என்ற முழக்கங்களுடன் அந்நாட்டு விவசாயிகள் அணிதிரண்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

போராட்டத்தை ஒடுக்க சர்வாதிகார அதிபர் மார்க் ரவலோமானனா கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத அடக்குமுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். இப்போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, தலைநகர மேயரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆண்ரி ரஜேவினா சர்வாதிகார அதிபருக்கெதிரான நாட்டு மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவரைச் சர்வாதிகார அதிபர் பதவி நீக்கம் செய்ததும், நாடெங்கும் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் மார்க் அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போன நிலையில், இராணுவம் மற்றும் சட்டவாத நீதித்துறையின் ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவரான ஆண்ரி, சர்வாதிகார அதிபரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு கடந்த மார்ச் மூன்றாம் வாரத்தில் புதிய அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 21, 2009

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.

தமிழ் மக்கள் முன் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம், இயல்பாக எம்முன் ஒரு இனந்தெரியாத சூனியத்தை உருவாக்குகின்றது. எங்கும் இனந்தெரியாத சோகம், அவலமாகின்றது. நடந்ததை நம்பாமல் இருக்க முனைகின்றது. மக்கள் நடைப்பிணமாக, அஞ்சலி கூட செலுத்த முடியாது, அவர்கள் அரசியல் அனாதையாகி நிற்கின்றனர்.

இந்த நிலையில் படுகொலையுடன் கூடிய இந்தச் சதி என்பது உண்மையானது. யுத்த முனையில் இருக்காத மூன்றாம் தரப்புகளின் கூட்டுச்சதி தான், புலித் தலைவர்களின் மொத்த மரணம். இந்த மரணத்தின் பின், எதிர்பாராதா வண்ணம் வெளிவரும் காட்சிகள்;. எப்படி இது நடந்தது, என்ற அதிர்ச்சி. இதனால் இறந்தது 'எங்கள்" தலைவரல்ல என்று கூறுமளவுக்கு, நம்ப முடியாத அதிர்ச்சிகள்.

அப்படியாயின் நடந்தது என்ன?............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 20, 2009

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.

உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு; அக்காட்டின் நடுவே திடீரென ''டும், டும்'' என முரசொலிக்க, எங்கும் எதிரொலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் வில்அம்பு, கோடரி, அரிவாள், தடிகளுடன் பழங்குடியின மக்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அணிதிரள்கிறார்கள். ''கொலைகாரர்கள் வந்துவிட்டார்களா? சி.பி.எம். குண்டர்கள் எங்கே?'' என்று பதற்றத்தோடு நாற்புறமும் அவர்கள் தேடுகிறார்கள். முரசொலி கேட்டதும் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சி, அவர்கள் பின்வாங்கி ஓடி விட்டார்கள் என்று தெரிந்த பிறகு, அம்மக்கள் திரும்பிச் செல்கிறார்கள்.

"கடந்த நவம்பரிலிருந்து இப்படியொரு முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை நாங்கள் செய்துள்ளோம். உயரமான மரங்களில் ஏறி, எங்களில் ஒருவர் கண்காணிப்பார். சி.பி.எம். குண்டர்களோ, போலீசோ, அரசு அதிகாரிகளோ இப்பகுதிக்குள் நுழைந்தால், உடனே அவர் முரசொலிப்பார். உடனே நாங்கள் அணிதிரண்டு அவர்களை முற்றுகையிடுவோம்'' என்கிறார் சுபாஷ் மஹடோ என்ற பழங்குடியின விவசாயி.

Tuesday, May 19, 2009

முழுமையான அழிவிலிருந்து புலிகள் தப்பியிருக்க முடியாதா!?


தாம் தம் சாவு நோக்கி நகர்கின்றோம் என்று அவர்கள் தெரிந்து கொள்ளாது இருந்தனர். தமக்கு ஏன் இந்த நிலை என்று, தம் மரணம் வரை தெரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை. தலைவருக்கு வெளியில் யாரும் இதைப்பற்றி சிந்திக்க முடியாது என்பது இயக்க நடைமுறை.

இன்றைக்கு இந்த நிலைமை ஏற்படுவதை தடுக்க, இதுவே தடையாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் தப்ப, அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்து போனது. இதை நாம் குறித்த அக்கால கட்டத்தில் தெளிவுபடுத்தி வந்தோம்.

ஒரு இனத்தின் மீதான அழிவு அரசியலை புலிகள் கையாண்டு வந்தனர். நாம் இதில் இருந்து மக்களை பாதுகாக்கவும், போராட்டத்தை சரியாக இட்டுச்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்தியா நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை ...

அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

 

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

 

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தி......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 18, 2009

இறுதிவரை போராடி மடிந்த புலித் தலைவர்களின் மரணம்

அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடுத்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தின் மேலான இனவெறுப்பையும், அலட்சியத்தையும் அருவருக்கத்தக்க முறையில் பேரினவாதம் விதைக்கின்றது.

தமிழினமோ செய்வதறியாது
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பாரிய இனவழிப்பின் இறுதிக்கட்டமும், புலிகளின் இறுதி கட்டமும்

இன்று, இந்த மணி, இந்த நிமிடம், இந்தக் கணம், ஒரு பாரிய மனித அவலத்தின் மேல், ஒரு அழிப்பு யுத்தம் நடக்கின்றது. இது ஒரு இனத்தின் மேலாக நடக்கின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை பலியிடுதல் இன்றி, இந்த அழித்தொழிப்பு நடக்கவில்லை. மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதாகக் கூறும் ஒரு பொய்ப் பிரச்சாரம் மூலம் இந்த இனவழிப்பு உச்சத்தில் அரங்கேறுகின்றது.

இதன் மூலம் ஆகப் பெரும்பான்மையான தமிழ்மக்கள், தங்கள் தலைமையாக நம்பிய ஒரு தலைமை அழிக்கப்படுவதை பார்க்கின்றனர். அவர்கள் இந்த அழித்தொழிப்பை, வெறும் புலி அழிப்பாக பார்க்கவில்லை. அப்படி தமிழ்மக்கள் நம்பவுமில்லை. தமிழினத்தின் மேலான அழித்தொழிப்பாகவே, தமிழ் மக்கள் உணருகின்றனர். சாராம்சத்தில் அதையே பேரினவாத அரசு, கொக்கரித்தபடி செய்கின்றது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மாயாவதியின் பார்ப்பன சேவை பல்லிளித்தது தலித்தியம்

தாழ்த்தப்பட்டோரை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் எனும் அரசியலை முன்வைத்து, "பார்ப்பனர்கள், வைசியர்கள், ராஜபுத்திரர்களை செருப்பால் அடிப்போம்'' என்ற புகழ்பெற்ற முழக்கத்தின் மூலம் தனது அடித்தளத்தை உ.பி.யில் உருவாக்கி இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. தற்பொழுது இம்மூன்று சக்திகளுடன் சமரசமாகியதன் மூலமும், பார்ப்பனர்களுக்குப் பதவிகளைக் கொடுத்ததன் மூலமும் அக்கட்சி உ.பி.யில் 2007இல் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. தமிழ்நாட்டில் தலித்தியம் பேசிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், தாழ்த்தப்பட்டோரின் வாக்கு வங்கியை வைத்துப் பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத அரசியல் வித்தகர்களும் இப்பரிசோதனைக்காக மாயாவதியைப் போற்றிப் புகழ்ந்தார்கள். திருமாவளவன் கூட, "இந்திய நாடெங்கும் இந்த வெற்றியின் தாக்கம் தீயாய்ப் பற்றிப் பரவும்'' என மதிப்பிட்டிருந்தார்.

தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டிலும் அதே உத்தியுடன் களமிறங்கியுள்ளது. அதிகார வர்க்கப் பார்ப்பனர்களையும்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 17, 2009

இறுதிக் காலக்கெடுவின் பின் பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.

இதற்கு அமைய இறுதி இனவழிப்பாக 48 மணி நேரத்தை பிரகடனம் செய்தார் 'மாண்புமிகு” கொலைகார ஜனாதிபதி. ஆனால் அந்தக் காலம், இனவழிப்பு இயந்திரத்துக்கு போதவில்லை. அந்தளவுக்கு மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அறிவித்த 48 மணி நேரத்தை விட, அது மூன்று மடங்கு நேரத்தையும் கடந்துவிட்டது. இன்னமும் இந்த இனவழிப்பு யுத்தம் முடியவில்லை. அவசரமாக இனவழிப்பின் நற்செய்தி அறிவிக்க விமானத்தில் ஏறி ஒடோடி வந்த வேகத்தில், கால் தடுக்கி விழுந்த மண்ணை முத்தமிட்ட ஜனாதிபதியால் கூட, இந்தக் கணம் வரை கூட நற்செய்தியை வெளியிட முடியவில்லை.

பயங்கரவாதம் ஒழிந்த மண்ணுக்கு தான் செல்வதாக உலகறிய கொக்கரித்தவர், பயங்கரவாத மண்ணை மீள முத்தமிட்டவேண்டிய சோகம்.

இவை எல்லாம்............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிக்கு ஏன் இந்தக் கதி ஏற்பட்டது!?

புலித்தலைமை முதல் புலிப்பினாமிய வலதுசாரி கும்பல் வரை, இதற்கான அரசியல் காரணத்தை தெரிந்து கொள்ள மறுக்கின்றது. தாமல்ல, பல காரணங்களைக் கற்பிக்க முனைகின்றது. தாங்கள் சரியாகவே இருந்ததாகவும், இருப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. இப்படி அவர்கள் தாங்கள் கற்பிக்கும் காரணங்கள் ஊடாக, தமது தவறான வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து நகர்த்த முனைகின்றனர். தாமல்லாத காரணம் தான், இந்த தோல்விக்கான காரணம் என்ற சொல்ல முனைகின்றனர்.

புலிகளுக்கு வெளியிலான புறநிலையான காரணங்கள் தான் புலியின் அழிவுக்குரிய யுத்தமாக மாறியது என்றால், அதற்கு அகநிலையான காரணமாக புலிகளே இருந்துள்ளனர். இங்கு புலிகளின் அகநிலைக் காரணங்கள் தான், இந்த யுத்தத்தை அவர்களுக்கு எதிரான முழு அழிவுக்கும் இட்டுச்சென்றது. இதை மறுதலிக்கும் வண்ணம், புலிப்பினாமிகள் தம் வலதுசாரிய அறிவிலித்தனத்துடன் புலம்புகின்றனர்.

1. பல நாடுகளின் இராணுவ உதவியை பேரினவாத அரசு பெற்றதாலும், தமக்கு எதிராக உலகம் தளுவிய சதிகளாலும் தான், புலிகள் தோற்றனர் என்கின்றனர். இதுவா காரணம்!?

இந்த வாதம் தமது சொந்த வலதுசாரிய பாசிசத் தவறுகளை நியாயப்படுத்த வைக்கின்ற தர்க்கம். உலகில் எந்த விடுதலைப் போராட்டமும், உலகம் தளுவிய தாக்குதலை எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். இதை எதிர்கொள்ள முடியாதவர்கள், சரியான...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

குசேலன் குபேரனான கதை

சி.பி.எம். என்பது ஒரு கட்சியல்ல; அதுவொரு முதலாளித்துவக் கம்பெனி. கம்பெனி என்றால் அதற்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். ஆண்டுதோறும் சொத்து விவரங்களைத் தணிக்கை செய்து, வருமான வரி அலுவலகத்துக்குச் சட்டப்படி தாக்கல் செய்யும். சி.பி.எம். கம்பெனியும் இப்படி ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறது. கடந்த 2006 மார்ச் 31ஆம் தேதி முடிய உள்ள நிதியாண்டில் சி.பி.எம். கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77.27 கோடிகளாகும்.

இழப்பதற்கு ஏதுமில்லாத தொழிலாளி வர்க்கத்தின் கட்சி; பஞ்சைப் பராரிகளின் கட்சி; சொத்துடமை முறையை ஒழித்து சோசலிசத்தைப் படைக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் கட்சி இப்படிப்பட்ட கட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. முதலாளித்துவ கம்பெனிகளின் சொத்து நாள்தோறும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பல்கிப் பெருகுவதைப் போல, சி.பி.எம். கம்பெனியின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.