தமிழ் அரங்கம்

Saturday, November 10, 2007

அவதூறு அரசியலும், மூடிமறைத்த சந்தர்ப்பவாதமும்

பி.இராயகரன்
10.11.2007


த்தம் சொந்த அரசியல் நிலையை தெளிவுபடுத்த முடியாதவர்கள் என்ன செய்கின்றனர். தமது சமூக விரோத நடவடிக்கையை கண்டு கொள்ளாமல் இருக்க, அவதூறு அரசியல் செய்கின்றனர். உண்மையில் இனம் தெரியாத படுகொலையாளி, படுகொலைகளை எந்த அரசியல் நோக்கத்துக்காக செய்ய முனைகின்றானோ, அதே நோக்கமும் அதே உத்தியும் தான், இந்த இனம் தெரியாத இணையங்கள் முதல் இனம்தெரியாத நபர்களின் அவதூறுகள் வரை உள்ளடங்கி நிற்கின்றது. இதற்கு வேறு எந்த நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அறிக்கை (முழுமையாக இந்தக் குறிப்பின் பின் தொடர்ந்து பார்ர்வையிடலாம்) இந்த விடையத்தைச் சுற்றிக் கதைக்க முற்படுகின்றது. மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாத வகையில், அவதூறு அரசியல் அனைத்தையும் முழுங்கி திமிரோடு படமெடுத்தாடுகின்றது.

இதை எதிர்கொள்வதற்கு துணிச்சலான நேர்மையான அரசியல் அடிப்படை தேவை. இதை அம்பலப்படுத்த, சொந்த அரசியல் நிலையை தெளிவுபடுத்துவதால் மட்டுமே சாத்தியமானது. இல்லாது போனால் இனம் தெரியாத நபரின் அரசியல் பேடித்தனம் போல், இதை எதிர்கொள்ள முடியாது.

நேர்மையான தெளிவான அரசியல் அணுகுமுறை தேவை. மூடிமறைத்த சந்தர்ப்பவாத பசப்பலால் கருத்துரைத்தல், யார் நண்பன் யார் எதிரி என்பதை அரசியல் ரீதியாக தெளிவுபடுத்த மறுத்தல் என்பது, அவதூறின் அரசியல் ஊற்று மூலம்.

அவதூறு அரசியல் என்பது,

1. சாதாரணமான செய்திகளைக் கூட அவதூறு வடிவில் திரிக்கின்றது.
2. தனிமனிதன் ஊடாக குறித்த அரசியல் வழியை இழிவாட முனைவது.
3. தனிமனிதனை இழிவுபடுத்திச் செயல் இழக்கப்பண்ணுவது.

இந்த வகையில் அவதூறுகள் கொலையாளிக்குரிய நேர்த்தியுடன் திட்டமிட்டு புனையப்படுகின்றது. சமூகத்தில் எதையும் நம்பகத்தன்மையற்றதாக மாற்றுகின்றது. இவை இனம் தெரியாத இணையங்கள் மூலம், இனம் தெரியாத நபர்கள் மூலம், புனைவுகள் வடிவில் வருகின்றது. இனம் தெரியாத கொலையாளிகள், இனம் தெரியாத வழிகளில் எப்படி கொலை செய்கின்றனரோ, அப்படித்தான் இவையும். கொல்ல முடியாத தளத்தில், இப்படி இயங்குகின்றது.

குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை என்பது, குற்றவாளிகள் சொந்த அவதூறுகளின் மூலம், உண்மையையும் பொய்யையும் அரசியல் ரீதியாகவே நீற்றுப் போகச் செய்கின்றனர். நானும் நீயும் ஒன்று என்ற சொல்ல முனைந்து, குற்றவாளிகள் தன்னை எதிர்ப்பவனின் வாயை அடைக்கச் செய்கின்றனர். தாம் குற்றவாளிகளாக இருந்து செய்யும் அரசியலை பாதுகாக்க, எதிர்தரப்பின் மீது நடத்தும் தாக்குதல் மூலம், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அசிங்கமான நுட்பமான உத்தி தான் அரசியல் அவதூறு.

இது பற்றி நான் விரிவாக பிறிதொரு கட்டுரை மூலம், அந்த அரசியல் முதுகெலும்பற்ற அரசியல் அவதூறு வடிவத்தையே உடைத்தெறிவோம்.

இங்கு ஞானம் பற்றிய விடையம் வைக்கப்படுகின்றது. தலித் முன்னணி, இதை தனது சொந்தத் தலையில் போட்டுக்கொண்டுள்ளது. தலித் முன்னணி இதை வெறும் அவதூறனது என்று அவர் சார்பாக உறுதி செய்கின்றதா? நல்ல விடையம். இதன் பின்னணியில், ஞானம் ஏன்? எதற்கு? மௌனம் சாதிக்கின்றார்!

ஞானம் இதை தெளிவு படுத்தாதவரை, இதை முடிவுக்கு கொண்ட வர இயலாது. இதுவே இன்றைய ஒரு அரசியல் செய்தியாக, நிகழ்ச்சியாக மாறிவிட்டது. சமூக இயக்கத்தில் உள்ளவர் நிச்சயமாக அதற்கு பதிலளித்தேயாக வேண்டும். இதற்கு வெளியில் அரசியல் செயல்தளம் கிடையாது. இது வெறும் ஞானம் பிரச்சனை அல்ல. கருணாவை உள்ளடக்கிய ஒரு தளம்.

கருணா என்ற கொலையாளி ஊரை எல்லாம் கொள்ளையடித்துவிட்டு தினவெடுத்தவன். இந்திய இலங்கை அரசின் ஊரறிந்த எடுபிடி. புலிகளில் இருந்த போது, கடைந்தெடுத்த பாசிட். எதையும் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. அப்படிப்பட்டவன் தனது சுயநலத்தை மூடிமறைக்க, கிழக்கு பிரதேசவாதத்தை எடுத்து, சமூகத்தை தனது பங்குக்கு மேலும் பிளந்தவன். ஊரறிய ஒரு சமூக விரோத பொறுக்கி. இந்த பொறுக்கி, எந்த இயக்கத் தலைவனுக்கும் குறைந்தவனுமல்ல, மேம்பட்டவனுமல்ல. கருணா வைத்த அரசியல், புலிகள் முதல் ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் போன்றவர்களின் இருந்து வேறுபட்டதல்ல. கொலை, கொள்ளை, மக்களுக்கு எதிரான எதிரிகளுடன் சேர்ந்து நடத்தும் அரசியல்.

இதனுடன் ஞானத்துக்கு என்ன தொடர்பு? அவர் ஏன் இதை தெளிவுபடுத்த மறுக்கின்றார்? சந்தர்ப்பவாதமும், மூடிமறைக்க முனைகின்ற அடிப்படையில், கேள்விகள் உருவாகின்றது.

அவதூறு சார்ந்த அடிப்படை எல்லைக்குள், அதை முறியடிக்கும் எல்லைக்குள், பிரஞ்சு ஆவணங்களை வைத்தே அதை முறியடிக்க முடியும். வீட்டுக்கடன் பத்திரம், வங்கி ஊடான பண பரிமாற்றம் உட்பட பல.

இதை வைப்பதன் மூலம், இந்த அவதூறின் முழு பரிணாமத்தையும் தகர்க்க முடியும். ஆனால் அதை ஞானம் செய்ய மறுப்பது ஏன்? இந்தக் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கின்றாரா? இந்தக் கேள்விகள் என்பது, நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகிவிட்டது.


இலங்கைத் தலித் சமூகங்களுக்கு எதிரான சதிகளின் நவீன வடிவம்

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி பிரான்ஸ்)

சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...

இது எமது தலித் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக தொடரும் மரபாகவே நீடிக்கின்றது.

சாதியத்தின் கொடுமையும் அதன் தீண்டாமை உணர்வும் காலத்திற்குக் காலம் வௌவேறு பரிமாணங்களில் தனது கோரமுகத்தைக் காட்டவே செய்கின்றது. அதன் வரலாற்றுத் தொடர்ச்சியின் மற்றோர் வடிவம்தான் அண்மையில் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கு எதிராக புகலிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்களாகும்.

ஆம்… பார்க்காமலும்... கேட்காமலும்...பேசாமலும் குந்தியிருக்கும் குரங்கு நிலைச் சமூகமென எம்மை நிரூபிக்க எத்தனிக்கும் செயல்தான் புகலிடத்தில் நிகழ்ந்து வருகிறது.

1970 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தொடர்ச்சியான தலித் சமூக விடுதலைப் போராட்டமானது தமிழ்த் தேசிய விடுதலை எனும் பெயரால் திசைமாற்றப்பட்டது. ஆனால் தலித் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையானது தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலிலிருந்து உரித்தெடுக்க முடியாது ஊனிலும், உணர்விலும் உறைந்து நிற்கிறதே.. ஏன்..!

எமது சமூகம், எம் மத்தியில் நிலவும் சாதியம், எமது அரசியல், எமது ஆயுதப்போராட்டம், அதை முன்னெடுத்த இயக்கங்கள், சர்வதேசியக் கோட்பாடுகள் என அனைத்திலும் எமக்குள்ள அதிகபட்ச அனுபவமும் தேர்ச்சியுமே எமது தற்போதைய இலங்கைத் தலித்

சமூக மேம்பாட்டு முன்னணி எனும் வளர்ச்சி நிலை. தொடரும் யாழ்ப்பாணிய மேலா-திக்கத்தின் தொடர்ச்சிதான் எம்மை பரந்துபட்ட சிந்தனைக்கான களம் நோக்கியும் நகர்த்தியது.

எமது முன்னெடுப்புக்களில் பல்வேறு தரப்பினர் மத்தியில் மாறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். இப்பினும். அதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் ஏற்பாடு செய்த தலித் மாநாட்டிற்கு பல்வேறு தரப்பினருடைய ஒத்துழைப்பும, உதவிகளும, ஆலோசனைகளும் கிடைத்ததானது எம்மை உச்சாகப்படுத்தியதென்னவோ உண்மைதான்!

மாற்றுக் கருத்தியலாளர்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள், பல்வேறுபட்ட தமிழ்

அரசியல் கட்சிகள், பல்வேறு ஊடகங்களான, இணையத் தளங்கள், வானொலிகள், பத்திரிகைகள், என நீங்கள் அனைவரும் எமக்கு பக்கபலமாக இருப்பதாகவே நாம் கருது-கிறோம். ஆனால் உங்கள் ஆதரவும், எங்களது நியாயமான கோரிக்கைகளையும் பொறுக்காத ஒரு சிலரின் நயவஞ்சக, அயோக்கியத்தனமான நடவடிக்கைகளானது எமக்கும் உங்களுக்குமிடையிலான உறவுகளையும@ எமது தலித் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளையும் சிதைக்கும் பாசிசப் போக்காக முகம் காட்டுகிறதே..ஏன்..!

தலித் மாநாடு ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்பாகவே எமது முன்னணியில் வன்முறையையும் கொலைகளையும் ஆதரிக்கும் அங்கத்தவர்கள் இருப்பதாக கேள்வி பரப்பப்பட்டது. பிற்பாடு அசோக், யோகன் கண்ணமுத்து அவர்கள் தலித் மாநாட்டிலும் இக்குற்றச்சாட்டை எம்மீது சுமத்தினார்.

கொல்லப்படுவதற்கும்... கொல்லக் கொடுப்பதற்கும் உகந்த ஒரு சமூகமாகவே எமது தலித் சமூகம் கருதப்பட்டு வருவதை எமது சமூகம் சார்ந்து சிந்திப்பவர்கள் அறிவீர்கள். இது வரலாற்று உண்மையல்லவா? ஆனால் எம்மத்தியில் கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆதரவுளிப்பவர்கள் இருப்பதாகப் புனையப்படுகிறதே ஏன்?

எம்மிடம் கொலையைத் தூண்டுபவர்களும், வன்முறை ஆதரவாளர்களும் இருப்பதாக மறைமுகமாகக் கூறி ஒற்றைக்கால் தவம் புரிகிறார்கள். இந்தத் ‘தவசிகள’. இவர்கள் வேறு யாரும் அல்ல ‘அனைத்து அராஜகங்களுக்கும’ எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவும். மிகப் பென்னாம்பெரிய ஜனநாயகவாதிகளாகவும் தம்மை இனம் காட்டிக் கொள்கின்ற நிழல் மனிதனான ‘கருணைதாசன்’ எனும் ‘நபரும்.’ தீப்பொறி எனும் இணையத்தளமுமே ஆகும். இவர்களையே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை ஒழித்துக்கட்ட முனையும் நயவஞ்சகத்தனம் கொண்ட, அயோக்கியத்தனமான சக்திகளாக நாம் இனம் காண்கின்றோம்.

மாநாடு முடிந்து அதனது சுமைகளை நாம் இறக்கும் முன்பாகவே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அங்கத்தவரான எம்.ஆர். ஸ்டாலின் (ஞானம்) மீதான அவுதூறுகளை மேற்படி இரு அயோக்கிய நயவஞ்சக சக்திகள் மொட்டைக் கடிதங்களாகவும், ஆதரமற்ற செய்திகளாகவும் பரப்பிவருகிறார்கள். இதற்கான பிரதம சூத்திரதாரியாக இருப்பது நிழல் மனிதனான ‘கருணைதாசன’ என்பது எம்மைப்போலவே அம் மர்ம ‘நபரை’ நீங்களும் இனம் காண்பதொன்றும் கடினமானதல்லவே!!

இவர்களின் திட்டமும்...நயவஞ்சக நோக்கமும்.

கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இடது சாரிச் சிந்தனையாளர்கள் இடையில் மௌவனமாகி அடங்கிப்போனது எதனால்? அதை நாம் அதிகம் விளக்கத்தேவையில்லை. தமிழ்த் தேசிய விடுதலை என்பதற்குள் எமது தலித் சமூகத்தையும் உள் இழுத்து.. ஆயுதம் முகம் காட்டிப் பல்லிளித்துச் சன்னதமாட...@ அடங்கிப்போனது தலித் சமூகத்திற்கான கேள்விகள்.

அன்று நேராக ஆயுதம் எம்முன் நீண்டது... நாம் மௌனமானோம். அது அன்றைய வைதீக பாசிசம். இன்று எம்மீது ஆயுதம் நீட்டத் தூண்டுகிற செயலானது நவீன பாசிசம்.

எமது அங்கத்தவர் ஞானம் கருணாவுடன் தொடர்பு கொண்டவர். கருணாவிடம் பணம்வாங்கி வீடுகள் சொத்துகள் வாங்கிக் குவிப்பவர். அவரின் சொந்தப் பெயர் இது. அவர் இன்ன விலாசத்தில் இருக்கிறார். இப்படி அனைத்துத் தகவல்களும் கொடுத்து... புலிகளே உங்கட எதிரிகளை நாம் காட்டியுள்ளோம் உங்களுக்கு தில் இருந்தால் போய் சுடுங்கள். இதுதான் நவீன பாசிசம்.

இவர்கள் அனைத்து அராஜகங்களுக்கும் எதிரானவர்களாம், மிகப்பென்னாம் பெரிய ஜனநாயகவாதிகளாம். இவர்கள் தாம் ஜனநாயகத்தை நேசிப்பதாகவும், அனைத்து அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் புரட்டுகள் புனைந்து கொண்டு தமது பாசத்திற்கும் நேசத்திற்குமான புலிகளுக்கு ஆதரவான நிதர்சனம் எனும் இணையத்திலும் எமக்கான அவதூறுகளையும் பிரசுரித்து மகிழ்கின்றார்களே . இதன் மர்மம்தான் என்ன…!!!

நிதர்சனத்தின் புனைவுகளுக்கும், தீப்பொறி, கருணைதாசன் போன்றவர்களின் புரட்டுகளுக்கும் புனைவுகளுக்கும் என்ன வேறுபாடு…! என்ன உறவு…!

மேலும் இந்தக் கருணைதாசன் எனும் ‘நிழல் மனிதன்’ பல மறுப்புக் கருத்துக்களெனும் தனது நிலைப்பாடுகளை புலிகளின் ஈழமுரசு பத்திரிகையின் ஊடாக பிரசுரித்தும் வருகிறார் எனும் செய்தியும் உலாவுகிறதே!! இதனதும் மர்மம்தான் என்ன…!!!.

இவர்களது சதித்திட்டமானது தலித் சமூக மேம்மாட்டு முன்னணிக்கும் சேர்த்தே நிகழ்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஞானத்துடன் இருந்த தனிப்பட்ட பிரச்சனையும் தீரும். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகளும் முடங்கிவிடும். கருணாவின் ஆள், கருணாவின் செல்வாக்கு, கருணாவின் பணம் இதெல்லாம் தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கும் சொரிகிறது. என யாழ்ப்பாணிய பொதுப் புத்தி இலகுவாகவே சாட்சியம் சொல்லும் எனும் நம்பிக்கையிலல்லவா இவர்கள் செயல்படுகிறார்கள். பாசிசத்திலே பால்குடித்து வளர்ந்த ‘நபர்களாக’ அல்லவா இனம் காட்டிக் கொள்கிறார்கள் கருணைதாசனும், தீப்பொறி இணையத்தளமும்.

எமது வேலைத்திட்டத்தின் முன் நிபந்தனையாக இருப்பது கலாச்சாரப் பண்பண்பாட்டுத் தளத்திலான சமூக விடுதலை என்பது. அதை நாம் தலித் மாநாட்டிலும்

வலியுறுத்தியுள்ளோம். எமது முன்னணியின் செயற்கபட்டாளர்களில் ஒருவரான ஸ்ராலின் ஒரு தலித்தாகவும், பிராந்திய ரீதியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகவும் உள்ளார். ஒடுக்கப்படும் இப்பிரிவினர்மீது சமூக அரசியல் தளங்களில் மேலாதிகம் செலுத்துவது ‘யாழ்மையவாத’ கருத்தியலே என்பதை அடையாளம் கண்டு அவற்றை கணக்கில் எடுத்துச் செயல்படுபவர். அந்தவகையில் தான் யாழ்மேலாதிக்க அரசியல் செயல்பாடுகளுக்கு எதிராகவும், இராணுவ சக்திகளால் நிர்மூலமாக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகவும் அவரது குரல் கடந்த காலங்களில் பலமாக ஒலித்து வந்தது. இலக்கிய சந்திப்புகளிலும், மாற்று சஞ்சிகைகள், மற்றும் வெளியீடுகள் போன்றவற்றிலும் இருந்துவரும் அவரது பங்களிப்புகள் இவற்றை உறுதிப்படுத்தியே வந்திருக்கின்றன. புகலிட இலக்கியம் கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்புக் கூறுகளுக்கு எம்.ஆர்.ஸ்ராலினது பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியன அல்ல அவர் புலியிலிருந்து கருணா பிரிந்ததன் பிற்பாடுதான் இதைப் பேசத் தொடங்கியவரல்ல என்பதையும் பலர் அறிவர். ஆகவே சமூகம் சார்ந்த சாதியப் பிரச்சனைகளையும், பிராந்தியம் சார்ந்த அரசியலிலும் ஞானம் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர்.

அந்தவகையில் தான் யாழ்மேலாதிக்க அரசியல் செயல்பாடுகளுக்கு எதிராகவும், இராணுவ சக்திகளால் நிர்மூலமாக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகவும் அவரது குரல் கடந்த காலங்களில் பலமாக ஒலித்து வந்தது. இலக்கிய சந்திப்புகளிலும், மாற்று சஞ்சிகைகள், மற்றும் வெளியீடுகள் போன்றவற்றிலும் இருந்துவரும் அவரது பங்களிப்புகள் இவற்றை உறுதிப்படுத்தியே வந்திருக்கின்றன. புகலிட இலக்கியம் கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்புக் கூறுகளுக்கு எம்.ஆர்.ஸ்ராலினது பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியன அல்ல அவர் புலியிலிருந்து கருணா பிரிந்ததன் பிற்பாடுதான் இதைப் பேசத் தொடங்கியவரல்ல என்பதையும் பலர் அறிவர். ஆகவே சமூகம் சார்ந்த சாதியப் பிரச்சனைகளையும், பிராந்தியம் சார்ந்த அரசியலிலும் ஞானம் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர்.

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் சாதியம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டுமாகவே அவரது பங்களிப்பும் நிகழ்ந்து வருகிறது. அவரது நேர்மையிலும் அவரது செயல் பாடுகளிலும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய நாம் மிகுந்த நம்பிக்கையுடனேயே செயல்பட்டு வருகின்றோம். அவர் தொடர்பாக ‘குறைந்த பட்ச நேர்மையும் அற்று’ நிழல் ’நபரான’ கருணைதாசன் எழுதும் முட்டாள்தனமான மொட்டைக்கடிதத்தையும், தீப்பொறியின் ஆதாரம் அற்ற செய்திகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு ஈ.பி.டி இயக்கத்தின் பொருளாதார உதவியுடனேயே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணி செயல்படுகிறது எனும் குற்றச்சாட்டும் தலித் மாநாடு தொடங்கவதற்கு முன்பாகவே பரப்பப்பட்டது. இவையாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்படி நயவஞ்சக அயோக்கியத்தனமுடையோரின் செயல் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

எமது த.ச.மே. முன்னணிக்கு ஆதரவு வழங்குபவர்களான ஜனநாயக முற்போக்கு சக்திகளே நீங்கள்தான் இதை பரிசீலிக்கவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கிறீர்கள் என நாம் கருது-கின்றோம். தலித் சமூகத்தின் கடந்த காலப் போராட்டங்கள் திசைதிருப்பப்பட்டதன் ஓர் தொடர்ச்சியாகவே நாம் இதையும் அடையாளம் காண்கின்றோம்.

அப்படி நாம் கருதுவதில் தவறுகள் இருப்பின் அதைக்களைந்து எமது சமூகத்தின் நம்பிக்கைக்கு உதவுமாறும் உங்ளைக் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது தலித் சமூகத்தின் துன்பங்களும், துயரங்களும் செவிகளில் நுழையாது வெறுமனே காற்றில் மட்டுமே கரைந்து கொண்டிருப்பதா?



வர்ணாசிரம கிரிமினல் இராமன்!ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!

""இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொரு முறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். அனைத்துக்கும் மேலாக பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் ""யாரோ, எவரோ எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ' என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல். ""பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி' லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து "பிசினெஸ்' நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக ""கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, ""ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.

வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...

வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...

வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?

வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.

நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?

வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்:watch the video: http://www.ibnlive. com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே ""தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள் தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'', என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், ""நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், "" உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, ""இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். ""கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கிறார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ் பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை.

""இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, ""உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி'கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்''

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று ""அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்' என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று' பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்' என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் ""நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ ""அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!

· சூரியன்

வேதாந்தியை எதிர்த்தால் "பயங்கரவாதி'!

சாம் வர்மா என்ற அமெரிக்காவில் குடியேறிய இந்து, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று வேதாந்தி மீது போபால் போலீசு நிலையத்தில் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள பெடுல் என்ற நகரில் இவரும் சில பக்தர்களும் கட்டியுள்ள கோயிலில் கடந்த ஜனவரி மாதம் நடந்த திருவிழாவில் உபந்நியாசம் செய்ய வேதாந்தியை அழைத்திருக்கிறார். தட்சிணை போதாது என்றும் ஒரு கார் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகிகளிடம் தகராறு செய்திருக்கிறான் வேதாந்தி. "தங்களால் இயலாது' என்று அவர்கள் கூறவே, ""கோயிலில் கிறித்தவர்களையும் முஸ்லீம்களையும் வேலைக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோயிலே தீட்டாகிவிட்டது'' என்று அவர்களிடம் கூச்சல் போட்டதுடன் ""பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்தக் கோயில் செயல்பட்டு வருகிறது'' என்று அமெரிக்காவில் போகிற இடத்திலெல்லாம் பிரச்சாரம் செய்திருக்கிறான் வேதாந்தி. பீதியடைந்த சாம் வர்மா, வேதாந்தி மீது பெடுல் நகரப் போலீசிலும் ஒரு வழக்கைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

Friday, November 9, 2007

இருதலைக் கொள்ளி இடையில் மக்கள்!

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியாக அழுத்திக் கொண்டிருக்கிறது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். துப்பாக்கியின் குதிரை அழுத்தப்படுவதற்கான தருணம் குறித்த திகிலை காங்கிரசு"மார்க்சிஸ்டு' கூட்டுக் கமிட்டி பராமரித்துக் கொண்டிருக்கிறது. ""இடி.. இடி..'' என்ற கூச்சலுடன் 15 ஆண்டுகளுக்கு முன் அரசியல் அரங்கை ஆக்கிரமித்த பார்ப்பன மதவெறியின் திரிசூலம், இன்று ""இடிக்காதே.. இடிக்காதே'' என்ற கூச்சலுடன் மக்களின் இதயத்தைக் குறிபார்க்கிறது. இன்று திடீரெனக் கிளம்பியிருக்கும் இராமர் சேது விவகாரம், அரசியல் களத்தில் நிற்கும் காங்கிரசு, "மார்க்சிஸ்டு'கள், பா.ஜனதா ஆகிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கைகொடுக்கிறது.

"மார்க்சிஸ்டு'களின் கோரிக்கைக்கு இணங்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்கான கமிட்டியை காங்கிரஸ் அரசு உருவாக்கியது. ""இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் இந்தியா எதிர்காலத்தில் அணுவெடி சோதனை நடத்த முடியாது. தனது வெளியுறவுக் கொள்கைகளைச் சுதந்திரமாகத் தீர்மானிக்க முடியாமல், அமெரிக்காவின் எடுபிடியாக மாறவேண்டியிருக்கும். அமெரிக்கா நினைத்தால் யுரேனியம் சப்ளையை நிறுத்த முடியும்'' என்றெல்லாம் அமெரிக்காவின் ஹைட் சட்டம் கூறுவதால், ""இந்த 123 ஒப்பந்தம் ஒரு அடிமை ஒப்பந்தமே'' என்பது "மார்க்சிஸ்டு'களின் நிலை. இந்தியா அமெரிக்காவுடன் போட்டிருக்கும் 123 ஒப்பந்தத்தை ஹைட் சட்டம் கட்டுப்படுத்தாது என்று நிறுவுவதற்கு வழக்குரைஞரும் அமைச்சருமான கபில் சிபல் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் வெறும் சொல் ஜாலங்களே என்பதை பிரபல பாதுகாப்புத் துறை ஆய்வாளர் பிரம்ம செலானி உள்ளிட்ட பலர் அம்பலமாக்கிவிட்டனர். ஹைட் சட்டத்துக்கு உட்பட்டதுதான் இந்த ஒப்பந்தம் என்பதை பல அமெரிக்க அதிகாரிகள் பலமுறை பிரகடனம் செய்ததுடன், ஹைட் சட்டத்தைத் திருத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் தெளிவுபடுத்திவிட்டனர். பிறகு இந்தக் கமிட்டி எதை ஆய்ந்து கத்தை கட்டப் போகிறது? எதுவும் இல்லை.

""சும்மா உட்கார்ந்து டீ குடிக்கலாம். அதற்கு மேல் இந்தக் கமிட்டியால் ஒரு பயனும் இல்லை'' என்கிறார் வலது கம்யூனிஸ்டு எம்.பி குருதாஸ் தாஸ் குப்தா. "மார்க்சிஸ்டு' கட்சியின் யெச்சூரியோ, ""கமிட்டியின் சிபாரிசுகளுக்கு அரசு கட்டுப்படும் என்று தான் நம்புவதாகக்'' கூறுகிறார் (தி இந்து, செப்25)

""கமிட்டியின் முடிவுகள் அரசைக் கட்டுப்படுத்தாது'' என்று பகிரங்கமாகவே அறிவிக்கிறார் அமைச்சர் கபில் சிபல். பிறகு எதற்காக இந்தக் கமிட்டி?

தன்னுடைய அரசை "மார்க்சிஸ்டு'கள் கவிழ்த்துவிடாமல் தடுக்கத்தான் காங்கிரசு இந்தக் கமிட்டியை அமைத்திருப்பது போலத் தோன்றினாலும், கள்ளத்தனமாகக் காய் நகர்த்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ள இக்கமிட்டியை ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்துகிறது காங்கிரசு. தங்கள் கையால் காங்கிரசு அரசைக் கவிழ்க்கும் காட்சி மனத்திரையில் தோன்றி அச்சுறுத்துவதைத் தடுக்க, இந்த மூடுதிரையால் தம் கண்களைக் கட்டிக் கொள்கிறார்கள் "மார்க்சிஸ்டு'கள். ""5 ஆண்டுகள் முடிவதற்குள் உங்கள் அரசைக் கவிழ்க்கும் சூழ்நிலைக்கு எங்களைத் தயவு செய்து தள்ளிவிடாதீர்கள்'' என்று வெளிப்படையாகத் தங்கள் அச்சத்தை வெளியிடவும் "மார்க்சிஸ்டு' களுக்குக் கூச்சமாக இருக்கிறது. ""அடுத்த அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த ஒப்பந்தத்தைத் தள்ளி வைக்கலாமே; ஒப்பந்தம் குறித்து பரிசீலிக்க அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சிக்கும் நாம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்'' என்கிறார் யெச்சூரி (தி இந்து, செப்25). இப்படியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குள்ளேயே ஒரு முன்விட்டையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் "மார்க்சிஸ்டு' கட்சி முன்னேறுகிறது.

காங்கிரசு அரசைக் காப்பாற்றுவதற்காக "மார்க்சிஸ்டு'களுக்குத் தேவைப்பட்ட இந்தக் கமிட்டி, இப்போது தம் சொந்தக் கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கே அவசியமானதாகிவிட்டது. அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக "மார்க்சிஸ்டு'களின் பொதுச்செயலர் காரத் ஒருபுறம் சண்டமாருதம் செய்து கொண்டிருக்க, ""அணுசக்தியை மார்க்சிஸ்டுகள் எதிர்க்கவில்லை'' என்று ஜோதிபாசுவும். ""அணு சக்தி தவிர்க்க முடியாதது என்று தான் கருதுவதாக'' புத்ததேவும் பேசியிருக்கிறார்கள். இந் நிலையில் தம் சொந்தக் கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்கே "மார்க்சிஸ்டு'களுக்குத் தனியே ஒரு கமிட்டி தேவைப்படுகிறது.

""அணுசக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மறுப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மட்டுமின்றி, அரசியல் சட்டத்துக்கே விரோதமானது'' என்று முன்னாள் உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளான வி.ஆர். கிருஷ்ண அய்யர், ப.ப.சாவந்த், சுரேஷ் ஆகியோர் கட்டுரை எழுதியிருக்கின்றனர். அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்பதற்கும், "மார்க்சிஸ்டு'களின் புனிதத் திருக்கோயிலான நாடாளுமன்றத்தின் மகிமையைக் காப்பாற்றுவதற்கும் இத்தகையதொரு பொன்னான வாய்ப்பு இருந்தபோதும் அவர் களால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் காங்கிரசு அரசைக் காப்பாற்றுவது தலையாய கடமையாக அவர்கள் முன்நிற்கிறது.

"காங்கிரசுமார்க்சிஸ்டு அணுசக்தி கமிட்டி என்ன செய்கிறது' என்ற கேள்வியிலிருந்தும், இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் சந்தி சிரிப்பதிலிருந்தும் இராமன் சேது விவகாரம் அவர்களைத் தப்ப வைத்திருக்கிறது. வழக்கு விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் தாக்குதலில் நிலைகுலைந்து குப்புற விழுந்த காங்கிரசு, "விழுந்தாலும் புதையல் மீதுதான் விழுந்திருக்கிறோம்' என்பதைப் பிற்பாடுதான் புரிந்து கொண்டது. எனினும், புதையலைக் காத்துக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா எனும் பூதம். அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதத்தை பொது அரங்கிலிருந்து அகற்றுவதற்கும், தனது திரைமறைவு வேலைகளைத் தொடருவதற்கும் காங்கிரசு அரசுக்கு இராமபிரான் பயன்பட்டபோதிலும், பாரதிய ஜனதா எனும் பூதம் இப்பிரச்சினையின் மூலம் மீண்டும் உயிர்த்தெழுந்திருப்பது காங்கிரசை அச்சுறுத்துகிறது. இந்த அபாயத்தைச் சமாளிக்க காங்கிரசிடம் வேறு ஆயுதங்கள் இல்லை. கமிட்டி போட்டு அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையை 6 மாதம் தள்ளிவைத்து அப்படியே கண்காணாமல் செய்துவிடலாமென "மார்க்சிஸ்டு'கள் முயற்சிப்பதைப் போலவே, இராமன் பாலம் விவகாரத்துக்கும் நீதிமன்றத்தில் 3 மாதம் வாய்தா கேட்டிருக்கிறது, காங்கிரசு அரசு.

பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை இது லாட்டரிப் பரிசுதான். 1992இல் அயோத்தியில் அடக்கம் செய்யப்பட்ட இராமன், 2007இல் இராமேசுவரத்தில் திடீரென்று உயிர்த்தெழுந்திருக்கிறான். உட்கட்சித் தகராறுகளாலும் கழுத்தறுப்புகளாலும் நொறுங்கிப் போயிருந்த கட்சியை அள்ளிக் கட்டுவதற்கு இராமன் பயன்பட்டிருக்கிறான். அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்துக்கும், இராணுவ ஒப்பந்தத்துக்கும் அச்சாரம் போட்டுவிட்டு, இப் போது எதிர்ப்பது போல நடிப்பதற்கும் கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்த பாரதிய ஜனதாவை அந்தச் சிரமத்திலிருந்து விடுவித்திருக்கிறது இந்த இராமன் சேது பிரச்சினை. ஏகாதிபத்திய அடிமைத்தனத்துக்குத் துணை நின்றபடியே இந்து தேசியம் பேசுவதற்கான வாய்ப்பை இது பாரதிய ஜனதாவுக்கு வழங்கியிருக்கிறது.

மறுகாலனியாக்கமும் இந்துமதவெறிப் பாசிசமும் தொடர்பற்ற வேறு வேறான பிரச்சினைகள் அல்ல என்பதற்கும், பாரதிய ஜனதாவும் காங்கிரசும் எதிரெதிரான கொள்கைகள் கொண்ட வெவ்வேறு தன்மையிலான கட்சிகள் அல்ல என்பதற்கும் இவை நிரூபணங்கள். 90களில் பாபர் மசூதி இடிப்புக்கு மறைமுக ஆதரவு கொடுத்து, இந்து மதவெறிப் பாசிசத்தைத் தூண்டிவிட்டதன் மூலம் ""காட்'' ஒப்பந்தம் மற்றும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பியது காங்கிரசு அரசு. இந்து தேசியவெறியைத் தூண்டிய பாரதிய ஜனதா, ""காட்'' ஒப்பந்தத்துக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதன் மூலம் காங்கிரசுடன் இணைந்து கொண்டது.

இன்றோ, அணுசக்தி ஒப்பந்தமும், இராமன் சேது பிரச்சினையும், காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சிகளும் வேறுவேறானவை என்பதைப் போல எதிர்நிலைப் படுத்தப்படுகின்றன. "கண்மூடித்தனமாக அமெரிக்காவை எதிர்ப்பது எங்கள் கொள்கையில்லை' என்று கூறி அணுசக்தி ஒப்பந்தத்தை வழிமொழிகிறது பாரதிய ஜனதா. "மத உணர்வைப் புண்படுத்துவதை அனுமதிக்க முடியாது' என்று கூறி பார்ப்பன பாசிசத்துக்குத் துணை நிற்கிறது காங்கிரசு. இவையிரண்டையும் எதிர்க்கின்ற கட்சிகள் எதுவும் நாடாளுமன்ற அரசியல் அரங்கில் இல்லை.

அமெரிக்க அடிமைத்தனமும் பார்ப்பன பாசிசமும் நாட்டின்மீது இருளாகக் கவிந்து கொண்டிருக்கின்றன. இரு பெரும் அபாயங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தும், அவற்றைப் புரிந்து கொள்ள இயலாத தன்னுணர்வற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள், உலகக் கோப்பை வெற்றியின் போதையில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

·

Thursday, November 8, 2007

அவதூறை லாடமாக்கி ஒட்டும் தேசம்

பி.இரயாகரன்
08.11.2007


தேசம் சஞ்சிகையின் ஆசிரியரும், ஆசிரியரின் இணக்கத்துடன் சில இனம் தெரியாத பொறுக்கிகளும் சேர்ந்து விவாதம் நடத்துகின்றனராம். அந்த விவாதக் கேவலத்தைத் http://www.thesamnet.net/ இல் முழுக்க காணமுடியும். விவாதக் கருப்பொருளுக்கு வெளியில் காறித் துப்புவது என்பது , "தேசத்" துக்கு அவதூறாக இருக்கவில்லை. அவரே விவாதத்துக்கு வெளியில் சென்ற கேவலம் நடந்தது. அவதூறுகளை செய்கின்ற போது, தம்மை மூடிமறைத்துக் கொண்டு செய்வது தேசத்துக்கு அவதூறாக தெரியவில்லை. எம் மீதான எந்தக் குற்றச் சாட்டுக்கும், நாம் பதிலளிக்க தயாராக உள்ளோம். உங்களைப் போல் கேடுகெட்டவர்கள் அல்ல நாங்கள். இப்படிபட்டவற்றுக்கு முன் கூட்டியே பதிலளித்து வந்துள்ளோம். இப்படி கேட்டவனின் ஒழுக்கம், ஊரறிய நாறுகின்றது. கொலைகளை செய்து விட்டு அதை ஆதரித்துக் கொண்டு, இன்றும் உலகளாவிய கைக்கூலிகளாக இருந்தபடி, இனம் தெரியாத நபர்களாக வந்து தாக்குகின்ற அந்த பேடிகளின் நோக்கம், யாரும் அரசியலை கதைக்க கூடாது என்பது தான். மண்ணில் இனம் தெரியாத படுகொலை போல், விவாதம் என்ற பெயரில் இந்த இனம்தெரியாத தெரு நாய்கள் ஊளையிடுகின்றது. எனது முதல் பதிவைத் தொடர்ந்து, அவதூறை சுமத்தி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல் ஊரைக் கூட்டியே ஊளையிடுகின்றனர்.

அரசியல் ரீதியாக விவாதிக்க முடியாத, கைக்கூலி இயக்கங்களின் அனாமதேய ஒப்பாரிகள். முகம் தெரிந்து வந்தால், அவர்களின் அரசியல் யோக்கியதை நாறிப்போகும். மற்றவனை குற்றஞ்சாட்டி இழிவாடி, தமது பொறுக்கித் தின்னும் அரசியலை பாதுகாக்க அனாமதேய வழிகளில் இயங்குகின்றனர். இதற்கு தேசம் பாய்விரிக்கின்றது. இந்தத் தொழில், எப்படி அரசியல் ரீதியாக முன்னேறுகின்றது என்று பார்ப்போம். அவதூறுக்கு புதிய இணையங்கள்.

புலிகளை ஏதோ ஒரு எல்லையில் ஆதரிக்கும் சில தரப்பு (உதாரணமாக அற்புதன், பெயரிலி, அமீபா, மயூரன் ... போன்றவர்கள் கூட, இதில் சிலர் தம்மை யார் என்று அடையாளப்படுத்தியுள்ளனர்) ஒரு எல்லைக்குள் கட்டுகின்ற விவாதம் சார்ந்த நேர்மை கூட, புலியெதிர்ப்பு தரப்பிடம் கிடையவே கிடையாது. புலிகளுக்ளுக்குள் இருக்க கூடிய தியாக மனப்பாங்கு புலி அல்லாத தளத்தில் கிடையாது என்ற உண்மையை இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டும். புலியல்லாத தரப்பில் பெரும்பான்மை, தியாகத்துக்கு பதில் பொறுக்கித் தின்பதையே அரசியலாக கொண்டவர்கள். இலங்கை இந்தியக் கூலிக் கும்பலாகவும், இதனுடன் ஏதோ ஒரு வகையில் உறவும் கொண்டவராக உள்ளனர்.

இந்த இனம்தெரியாத நபர்கள், தேசம் இணையத்தில் விவாதம் என்ற பெயரில் தேசத்தின் அனுமதியுடன் அதில் வந்து பேலுகின்றனர். இப்படி என் மீது தாக்குதலை திட்டமிட்டு, அவதூறாக நடத்துகின்றனர். எமது அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்களின் காழ்ப்பே, இப்படி கொட்டுகின்றது.

இந்தளவுக்கும் தேசம் சஞ்சிகை ஆசிரியருடன், நாம் ஒரு இணக்கமான இணங்கிப்போகும் அரசியல் விவாதத்தை கையாண்ட போதும், அது திட்டமிட்ட தொடர்ச்சியான தாக்குதலாக மாறிச் சென்றது. தேசம் சஞ்சிகை 'ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது" என்றது. இதுவே போலித்தனமானது என்பதும், என் மீதான சேறடிப்புக்கு உட்பட்டதாக, எம்முன் அந்த தளத்தில் நிறுவப்பட்டிருந்தது. இதை ஒட்டிய ஒரு அரசியல் விவாதம் அவசியம் என்பதால், தேசம் இணையத்தின் 'ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது" என்ற, போலித்தனத்தை அம்பலப்படுத்துவதை, நிதானமாக பொறுப்புடன் தவிர்த்து இருந்தோம்.

தேசம் இப்படி கூறியபடி தான், கருணைதாசன் என்ற இனம் தெரியாதவர் வைக்கின்ற ஆதாரங்கள் அற்ற அவதூறையும், தீப்பொறி வெளியிட்ட மற்றைய கட்டுரையில் சிலவற்றை நீக்கியபடி வெளியிட்டு இருந்தது. இதற்குண்டான ஆதாரங்களை தேசம் வைக்கமுடியாது.

தனிமனித குற்றச்சாட்டுகளை சொந்த பெயரில் வைக்க முடியாத போது, அதை அரசியல் சேறடிப்புகளாக செய்யும் போது, தேசத்துக்கு அது அவதூறாகத் தெரிவதில்லை. குற்றச்சாட்டை முன்வைப்பவன் வெளிப்படையாக முன்வராத போது, அதை கருத்தாக அனுமதிப்பது என்பது, இனம் தெரியாதது மட்டுமின்றி அது ஆதாரமற்றதும் கூட.

என்னை அந்த இனம் தெரியாத அவதூறு பேர்வழி (இவர்கள் மண்ணில் கொலையாளிகள்) 'பல்வேறு தனிநபர் தாக்குதல்களை முன்னின்று நடத்திய நீங்கள்" என்று.கூறுகின்றனர். இதற்கு ஆதாரம் எங்கே? ஒரு கருத்தற்ற அனாதைக் கழுதை, அதை ஆதாரமாக வைக்காமல் இப்படி கூறுவது, தேசத்துக்கு அனுமதிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. 'பல்வேறு தனிநபர் தாக்குதல்களை" நடத்தியவர் என்றால், யாரை எப்படி? அதை வையுங்கள். ஏன் ஒழித்து நின்று, தேசத்துடன் சேர்ந்து கல் எறிகின்றீர்கள். தேசம் இது போன்ற பொறுக்கிகளுடன் சேர்ந்து, விபச்சார விடுதியா நடத்துகின்றீர்கள்? அரசியலுக்கு வெளியில், தனிமனித தாக்குதல் எதையும் செய்ய வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அப்படி செய்ததாக உங்களால் நிறுவ முடிந்தாதல், அதை முதலில் நிறுவுங்கள்.

தேசம் இதை அனுமதிக்கின்றது. இப்படி பலவற்றை அனுமதித்தது. 'மில்லியன் கணக்கில் சாவடிச்ச ஸ்டாலினுக்கு சலாம் போடும் நீங்கள்" என்கின்றனர். இதில் ஸ்ராலின் மில்லியன் கணக்கில் சாகடித்தார் என்பதற்கு, எந்த ஆதாரம் உண்டு. அந்த ஆதாரம் எங்கே? என் மீதான அரசியல் அவதூறு இப்படியும் தெளிவாகின்றது. அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைத்தனம், இப்படித் தெளிவானது. இதில் உள்ள மற்றைய அவதூறு, மில்லியன் கணக்கான சாவுக்கு (அதற்கே ஆதாரம் இல்லை), நாம் சலாம் போடுகின்றோம் என்பது. எங்கே? எப்போது? சலாம் போட்டோம். இதற்கு எல்லாம் என்ன ஆதாரம். அரசியல் நோக்கம் சார்ந்த அவதூறே, இதன் அரசியல் பின்னணியாகும். இதை ஸ்ராலின் பற்றிய ஒரு விவாதத்தில் நடத்தியிருந்தால், பரவயில்லை. முன்னாள் இன்னாள் கொலைகார குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டுவது, அரசியல் அவதூறு என்ற விவாதத்தில் நடந்தது. உண்மையில் இயக்க குற்றவாளிகளை பாதுகாக்க, அதை அரசியல் ரீதியாக எழுப்புவன் மீதான சேறடிப்பு இது.

இதற்காக குலைக்கும் விதத்தைப் பாருங்கள் 'ரயாகரன் அண்ணர் நிறைய புரட்சியே பேசுவார். ஆனால் ஹற்றன் நசனல் பாங்க் பற்றிக் கேட்டால் அண்ணர் கடும் ரென்சன் ஆயிடுவார்." என்ன அரசியல்? நான் விவாதிக்கும் விடையம், கடும் ரென்சனை உருவாக்குகின்றதோ!

இந்த இனம் தெரியாத பேடி, என்னை நேரில் கேட்டு நான் ரென்சனான கதை, நல்ல வேடிக்கை தான் போங்கள். இதை ஆதாரமாக கொண்டு, அனுமதித்த தேசத்தின் அரசியல் யோக்கியதை வேறு. நீங்கள் கேட்டு, இப்படி கேட்டு, நான் ரென்சன் ஆகிய ஆந்த ஆதாரம் எங்கே? எங்கே? எப்போது கேட்டு, நாம் ரென்சன் ஆனோம்? 'பழசு கொஞ்சம் இழுத்தால் தான் மீண்டும் அமைதி வரும் போல!" என்ன உங்கடை நாற்றல் கோமணத்தையா? கவனம் நன்றாக தேசத்துடன் சேர்ந்து இழுத்து கட்டுங்கள்.

இப்படி அவதூறு என்பது தெளிவானது, அரசியல் உள் நோக்கம் கொண்டது. அரசியல் பேச துப்புக் கிடையாது. நீங்கள் ரென்சனாதாக கூறிய கதையை, உங்கடை ரென்சனை குறைக்க உதவும் என்பதால், உங்களைப் போன்ற அரசியல் அனாதைகள் தெரிந்துகொள்ள இதைப்பற்றி மீளக் கூறுவது அவசியமானது.

என்.எல்.எப்.ரி ஹற்றன் நசனல் வங்கியை கொள்ளை அடித்தது என்பது, அந்த இயக்கம் சார்ந்தது. அந்த இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் என்ற வகையில், அந்த அரசியல் நடைமுறையை ஒட்டி விமர்சனங்கள் சுயவிமர்சனங்கள் எமக்கு உண்டு. அதை நாம் எழுத்தில் வைத்துள்ளோம். இந்தளவுக்கும் அந்த அமைப்பில் இருந்த கட்சியின் மத்தியகுழு உறுப்பினரல்ல. அதன் வெகுஜன அமைப்பான என்.எல்.எப்.ரியின் மத்தியகுழு உறுப்பினரல்ல. அதன் பிரதியீட்டு உறுப்பினராக இருந்து பின்னால் மத்தியகுழு உறப்பினரானவன்.

நான் அந்த அமைப்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1988 இன் இறுதியில் அந்த அமைப்பில் இருந்து வெளியேறியவன். இதற்கு முன் இரண்டு தடவை ராஜினாமாவை செய்தவன். ஒரு இயக்கம் சார்ந்த நடவடிக்கைக்கு எனக்கு அவதூறு. நல்ல வேடிக்கை தான் போங்கள். அந்த கணக்கு வழக்கு அந்த அமைப்புடன் தொடர்புடையது. நான் அந்த அமைப்பில் இருந்து அரசியல் ரீதியாக விலக முன், எந்தக் குற்றச்சாட்டையும் யாரும் எனக்கு எதிராக வைத்தது கிடையாது. அதன் பின் அந்த அமைப்பின் நிதிப்பொறுப்பாளர், அப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தது கிடையாது.

ஒரு இயக்கம் செய்த கொள்ளையை அடிப்படையாக கொண்டு, அது மோசடி செய்யப்பட்டு இருக்கும் என்று கருதுவது தவறானது. ராகவன் தேசியம் தலித்துக்கு எதிரானது என்று, தனது பழைய புலித்தேசியத்தில இருந்து எப்படி கண்டுபிடித்தாரோ, அப்படி மற்றைய இயக்கத்தில் நடந்தைக் கொண்டு தூற்றுவது கடைகெட்ட அரசியல். வேறுபட்ட இயக்கங்களின் அரசியல் தன்மை சார்ந்த நேர்மை மீது, அரசியல் அவதூறு பொழிவதற்கு தேசத்துக்கு ஆதாரம் அவசியமற்றதாகின்றது. தேசத்தின் அரசியல் என்பதே, அரசியலற்ற எடிட்டிங்காக காட்டிக் கொள்வது. அரசியலற்ற நடுநிலை பின்பற்றுவதாக காட்ட முனைவது.

எனது முதல் கட்டுரையைத் தொடர்ந்து, இறந்த இராணுவத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறி பேரினவாதத்துக்காக இயங்கும் இனம்தெரியாத அவதூற்றுப் பேர்வழி என் மீது கற்றன் நசனல் பற்றி கதைக்குது. இராணுவத்துக்கு அஞ்சலி, இராணுவம் கொன்ற மக்களுக்கும் அஞ்சலி. எப்படிப்பட்ட போக்கிரி அரசியல். அந்த இராணுவக் கூலி 'புலிகளை தோற்கடிக்கும் முயற்சியில் பலியான மாற்று அமைப்பு போராளிகள், இராணுவீரர்கள் எதனையும் (நான்) கண்டு கொள்ளவில்லை. ...பாசிசப் புலிகளை இராணுவ பலம் கொண்டுதான் தோற்கடிக்க முடியும்." இப்படிக் கூறித் தான், கற்றன் நசனல் பற்றி கதைக்குது. தேசத்தின் விபச்சாரம், இது போன்ற முன்னாள் இயக்க கொலையாளிகளின் உதவியுடன் தான், தன்னை விளம்பரம் செய்கின்றது.

இது கூறுது, 'மக்கள் மக்கள் என அலம்பும் ரயாகரன் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் பாரிஸில் ஜந்து பேரைத்தானும் அணி திரட்ட முடியாத நிலையில் இருக்கிறான்." அப்படித்தான் இருக்கட்டும். உங்களுடன் உள்ளவர்கள் யார். சிங்கள அரசினதும், இந்திய அரசினதும் பணம் வாங்கி கொலை செய்யும் கூலி இராணுவ கொலைகாரக் குழுக்கள் தான். இப்ப அதற்குள் எலும்புச் சண்டை. இதற்கு நடுநிலை அரசியல் பேசும் தேசம் ஒப்பாரிவைக்கிறது.

இப்படிப்பட்ட அரசியல் வங்குரோத்து, அடிப்படையில் அப்பட்டமான அரசியல் அவதூறாகின்றது. அவதூறுக்கே புதிய இணையங்கள். தாம், தாம் சார்ந்த வாழ்வியலில் நடைமுறையில் கெடுகெட்ட வழிகளில் செயல்பட்டதால், செயல்படுவதால், குற்றச்சாட்டை புனைவது அவர்களால் இயல்பாகின்றது.

இப்படிபட்ட ஒரு நிலையில் இதைக் கண்டு கொள்ளாமல், அவதூறு என்றால் என்ன என்று விவாதம் நடத்த முனைந்தோம். அதை தேசம் விரும்பவில்லை. தேசம் ஆசிரியர் தனது நடுநிலை அரசியல் மூலம், புலிப் பாசிட்டுகளையும் எம்மையும் ஒன்று என்று காட்ட முனைந்தார். அதை அவர் 'சாஸ்திரிகளும் ரயாகரன்களும் ஒரே பதிலையே அளிக்கின்றனர்" அறிவித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

பாசிட்டுகளும், மார்க்சியவாதிகளும் ஒன்று என்றார். இதைத்தான், நபர் வழியாக கூறினார். விவாதத்தை நபர் சார்ந்தாக காட்டி, சேறடிக்க முனைந்தார். நாம் வைப்பது மார்க்சியமல்ல என்றால், அது தவறு என்றால், அதை தவறு என்றும் நிறுவ வேண்டும். தனிநபராக காட்டுவதை தவிர, வேறு என்ன நடுநிலை அரசியலை அவர் செய்யமுடியும்.

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, இருப்பது இது தான். 'தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் பற்றி விமர்சிக்கும் றயாகரன் எதுவித பொறுப்பும் அற்று தான் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் சில விசயங்களை வருணிக்கிறார். குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் வைக்கப்படாததால் அவை இங்கு நீக்கப்பட்டு உள்ளது." இதற்கு முன் 'தலித் மாநாட்டை தொகுத்த விதம் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்திருக்கிறீர்கள். மேலெழுந்த வாரியான இந்தக் குற்றச்சாட்டு அர்த்தமுடையதாககத் தெரியவில்லை. உங்கள் கருத்தை தொகுக்கத் தவறியதாகவும் கருத்தை திரிவுபடுத்தி விடுவதாகவும் வேறு குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த அரங்கில் நீங்கள் வைத்த எந்தக் கருத்தை நான் தொகுக்கவில்லை என்பதையும் அதில் எதை நான் திரிபுபடுத்தி இருந்தேன் என்பதையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டி இருந்தால் அது என்னைத் திருத்திக் கொள்ளவும் உதவியாயிருக்கும். ஆனால் மேலெழுந்த வாரியான குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவையாகப் போய்விடும்." என்றார் தேசம் ஆசிரியர்.

இப்படித்தான் இதற்குள் தான், தொடங்கியது விவாதம். இது படிப்படியாக திட்டமிட்ட தாக்குதலாக தொடங்குகின்றது. எப்படியான வாதம் மீது, என்மீதான காழ்ப்புகள் கொட்டப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள, அவர்கள் நீக்கிய பகுதியைப் பாருங்கள். 'வேடிக்கை என்னவென்றால், அண்மைக் காலமாக புலியின் இணையமான நிதர்சனம் டொட் கொமும் அதனுடன் (அதனுடன் என்பது தீப்பொறியுடன்) இணங்கி செயல்படுகின்றது. சுவிஸ் ஜெயிலில் ராம்ராஜ்சை புலிகள் சந்தித்ததும், ஈ.என்.டி.எல்.எப் ஏகபோக தலைவர் ராஜனின் சகோதரர் கொழும்பில் காணாமல் போன பின்னணியுடன், இந்த தேன் நிலவு இவர்களுக்கு இடையில் நடப்பதுவும் வெளிப்படையானது. இப்படி இந்த இரண்டு இணையமும், ஒன்றுடன் ஓன்று சார்ந்து செயல்படுகின்றது." என்ற பகுதி தான் வெட்டப்பட்டிருந்தது.

இதைத்தான் ஆதாரமற்றதாக தேசம் கூறுகின்றது. வெட்டி நீக்குகின்றது. சரி இதை விவாதிப்போம் என்றால், என்ன நடந்தது என்பதைத தான் நாம் தெரிந்து கொண்டோம்.

உண்மைத்தன்மை என்பது அரசியல் சார்ந்தது. இதை மறுத்து நடுநிலைத் தன்மை ஊடான உண்மைக்கு, எதிரான அரசியலாகின்றது. சரி இதை நீக்கியவர்கள், இதை மற்றவர்களுக்கும் கடைப்பிடித்தனரா?

இல்லை. ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் இணையம், ஞானம் பற்றி எழுதியதில் அனுமதிக்கின்ற வரிகளைப் பாருங்கள். '.. இவர் எந்தக் காலத்திலும் தனது சொந்தப் பெயரில் செயற்பட்டது கிடையாது. இவர் புலிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இரட்டை வேடம் போட்டு செயற்பட்டதை தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்." இதை எழுதியவன், எப்போது எங்கே சொந்தப் பெயரில் எழுதியுள்ளான். அவனே அனாதை, மற்றவனை அனாதை என்கின்றது. ஞானம் புனைபெயரில் எழுதிய போதும், அவர் யார் என்பது அனைவரும் அறிய அவர் கூறுவதுதான். இதில் யார் போக்கிலி? இந்த விடையத்தை எமக்கு மறுக்கும் தேசம், இதை அவருக்கு அனுமதிக்கின்றது.

தேசம் ஆதாரமாக கண்ட அந்தக் கட்டுரையில், எங்கே எப்படி இந்த இரட்டை வேடம் ஆதாரமாக நிறுவப்பட்டது. நாங்கள் சொன்னோம் 'வேடிக்கை என்னவென்றால், அண்மைக் காலமாக புலியின் இணையமான நிதர்சனம் டொட் கொமும் அதனுடன் (அதனுடன் என்பது தீப்பொறியுடன்) இணங்கி செயல்படுகின்றது." என்று கூறினோம். இது ஆதாரமில்லை. இதுவே தேசத்தின் இரட்டைநிலை. நாங்கள் தொடர்ச்சியான சில அவதானங்களின் அடிப்படையில் கூறியது, எப்படி அவதூறாகும். இதையே முழு சமூகமும், அண்மைக் காலமாக உணருகின்றது.

தேசம் ஆதாரத்துடன் அனுமதித்து, ஞானம் பற்றி ஈ.என்.டி.எல்.எவ் இணையம் கூறுவதைப் பாருங்கள் 'சமூக அக்கறை கொண்ட சில நண்பர்களின் அயராதமுயற்சியினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனுள் நீங்கள் நயவஞ்சகமான திட்டங்களோடு உட் புகுந்து உங்கள் கிறீமினல் மூளையை பயன்படுத்தி நீங்கள் செய்த திருவிளையாடல்களை பிரான்சில் உள்ள கிழக்கின் மைந்தர்கள் அறிவார்கள்." இதற்கு ஆதாரம் தான் என்ன? அந்த கிறிமினல் மூளை தான் என்ன? தேசம் பதில் கூற முடியாது. இதை சொன்னவனே கூறமுடியாது. அந்த கிழக்கிலங்கை, அந்த மைந்தர்கள் யார்? தேசத்திடம் அதற்கு ஆதாரமிருக்கும் என் நம்புகின்றீர்களா? எம்மிடம் கேட்காமலே வெட்டுகின்ற சர்வாதிகாரம். அரசியலுக்கு வெளியில் எழுதியவர் நடுநிலை நண்பர்கள் என்பதால், இப்படி எழுதுவது அவருக்கு பிரச்சனை இல்லை. அரசியல் ரீதியாக நாம் சொல்வது தான் அவருக்கு பிரச்சனை.

உண்மையில் நாங்கள் இந்த விடையம் தொடர்பாக எழுதிய கட்டுரையில், கட்டுரையை எழுதியவரை மறைமுகமாக பெயர் குறிப்பிடாது குறிப்புணர்த்தி எழுதினோம். அதை இன்னார் என்று, தேசத்தின் அனுமதியுடன், ஒரு அனாமி எழுதியுள்ளது. அதற்கு தேசத்துக்கு ஆதாரம் தேவைப்படவில்லை. நாம் குறிப்புணர்த்தி எழுதிய கட்டுரையை ஒட்டி, எனது நண்பர் ஒருவர், தனது விமர்சனத்தில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஒத்தது என்றார். நேரடியாக பெயரை குறிப்பிட்டு எழுதினால் அது ஆதாரமற்ற அவதூறாகிவிடும். இப்படி நன்கு தெரிந்த அந்த நபர் எழுதி கட்டுரை அப்படியே, தேசத்தின் நண்பர் என்பதால் வெளிவந்தது.

அந்த தேசத்தின் நண்பர் எழுதுகின்றார், 'கிழக்கு மக்களுக்கான சேவையென்பது புகலிடத்தில் எங்களை வளம்படுத்திக்கொண்டு சொத்துக்கள் சேர்ப்பதல்ல" ஞானம் இப்படி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டுகின்றது. தேசம் அதை ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்று, அதை வெளியிடுகின்றது. இந்த அளவீடுகளை கணிக்க நியூட்டன் விதியெதும் தேசத்திடம் இருந்தால், அதை நாங்கள் அளந்து பார்க்க தாருங்களேன். கிட்டு திருடி வைத்திருந்த பொக்கற் நாய் போல், அன்று மாற்று இயக்க ஆயுதங்களை அந்த நாய் முகர்ந்து கண்டுபிடித்ததாக வந்த பத்திரிகைச் செய்தி போல், இது உள்ளது. தேசத்தின் மோப்ப சக்தி அதிகம் தான். ஞானம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன? ஆதாரம் இருப்பதால் அனுமதித்த தேசம், இன்று அதற்கான பதிலையும் அவர் தான் தரவேண்டும். இப்படி திட்டமிட்டு நடுநிலைத்தன்மை என்ற போலித்தனத்துடன், தேசம் இதை அனுமதிக்கின்றது. பிறகு எம்முடன் விதண்டாவாதம் செய்கின்றது.

'ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது" என்பது, இதில் மீளவும் எப்படி அம்பலமாகின்றது. தேசம் ஆதாரத்துடன் அனுமதித்த அடுத்த அவதூறின் நுட்பத்தை பாருங்கள். '.. பிள்ளையான் இராணுவ அதிகாரியிடம் கேட்ட கேள்வி ஒன்றின் போது இலண்டனில் புங்குடுதீவு கிருஸ்ணன் ஊடாக கருணா முதலீடு செய்துள்ளது போல் பிரான்ஸில் சின்ன மாஸ்டர் அல்லது ஞானம் என்று அழைக்கப்படும் மாசிலாமணி இராஜேந்திரன் பெயரில் பாரீஸில் வாங்கப்பட்ட வீடுகள் மற்றும் முதலீடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிள்ளையானால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது தொடர்பாக தனது கட்டுரையில் எவ்வித கருத்துக்களையும் கூறாமல் மறுத்தது ஏன்.?"

இதற்கு ஆதாரம் என்ன? பிள்ளையான் கேட்ட அந்த உண்மைத் தகவலின் அடிப்படை என்ன? யார் சொன்னது? தேசம் இதை எப்படி உறுதி செய்தது? எப்படி இவருக்கு இது தெரியவந்தது? அவதூறை இப்படியும் செய்து, அரசியல் செய்ய அதை அனுமதிக்க தேசத்துக்கு பிரச்சனையில்லை.

தேசம் அனுமதிக்கும் அந்த நண்பர் 'உங்களின் கிறீமினல் தனங்களை தட்டிக் கேட்ட நண்பரொருவரை நீங்கள் புலிகளின் பினாமிகளை வைத்து பிரான்ஸ் லாச்சபலில் தட்டிக் கேட்ட வரலாற்றை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை" ஞானம் தான் பினாமியை வைத்து அடித்தார், என்பதற்கு என்ன ஆதாரம்? இப்படி எல்லாம் நட்பு சார்ந்து அனுமதிக்க முடிகிற தேசத்துக்கு, நாம் சொல்வது மட்டும் அவதூறு. அது தனிநபர் தாக்குதல்.

இப்படி ஆதாரமற்றுக் கொட்டுகின்ற தேசத்தின் நண்பரின் அவதூறை பாருங்கள் 'பிரான்சில் இருக்கும் யாழ் மையவாத வேளாள இந்து சதானிகளோடு உங்களுக்குள்ள கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபார உறவுகளுக்கு என்ன பெயர் நண்பரே" எப்படிப்பட்ட ஆதாரங்கள், இதன் பின்னணியில் தேசத்திடம் உள்ளது. தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டில் ' உங்களின் கடந்த கால வரலாற்றை புரட்டும்போது மேற்கூறிய குற்றச்சாட்டுக்கு நம்பகத்தன்மை கூடுகின்றது. இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போராட்டம் உச்சநிலை(?) அடைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஜக்கியதேசியக் கட்சியின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியின் நிதி உதவியோடு "உண்மை" என்ற பெயரில் கொழும்பிலிருந்து மாதா மாதம் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை தொடர்பூடக சாதனங்கள் மூலம் (Media as a weapon of power) முயன்ற பாதுகாப்பு அமைச்சின் வெளிப்பாடே உண்மை பிரசுரத்தின் அரசியலாகும். இப் பிரசுர வெளியீட்டுக்கு கொழும்பு துறைமுக கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த ஒரு தமிழ்பேசும் தொழில்சங்கவாதி பொறுப்பாக இருந்தார். இவ் பிரசுர விநியோகப் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெடுத்து தமிழ் பிரதேசங்களுக்கு தபால் மூலம் இலவசமாக விநியோகித்துவந்தது." ஞானம் பற்றிய இந்தக் குற்றசாட்டின் மீது ஆதாரம் என்ன? எந்த ஆதாரத்தையும், அவர்கள் வைக்கவில்லை. தேசத்துக்கு இவை பிரச்சனையில்லை. இரயாகரன் தான் பிரச்சனையாகின்றார்.

தேசம் ஆதாரத்துடன் உறுதி செய்து, இனம் தெரியாத நபர் மூலம் ஞானம் மீதான தொடரும் குற்றச்சாட்டை பாருங்கள். 'புகலிடத்திலுள்ள புளொட் தோழர்கள் வன்முறைகளுக்கு எதிரானவர்களாகவும் (?) ஜனநாயகத்தை கோருகின்றவர்களாகவும் (?) இருக்கும்போது" என்று தனது துரோக அரசியலை வெளிப்படுத்தும் அந்த தேசத்தின் நண்பர், தொடர்ந்தும் கூறுகின்றார் 'குறிப்பாக உங்களின் சந்தர்ப்பவாத சுயநலத்திற்காக புலிகளிடம் தங்கள் உயிரைக் பறிகொடுத்த மட்டக்களப்பு புளொட் அமைப்புத் தோழர்கள் மூவரையும் நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை." நேரடியாக ஞானம் மீது கொலை உடந்தை குற்றச்சாட்டு. இதற்கு தேசத்திடம் ஆதாரம் உண்டு என்ற அடிப்படையில் அதை அனுமதித்துள்ளனர். ஞானம் மீது இந்த கேள்வியை, தேசத்தை ஆதாரமாக கொண்டு நாம் இனி குற்றம்சாட்ட முடியும். அப்படித்தானே, ஆதாரம் எதுவுமின்றி தேசம் எதையும் அனுமதிக்கவில்லை அல்லவா!. இப்படி கேடுகெட்ட போக்கிலி அரசியல் செய்வது தேவைதானா? தவறு இழைத்து விட்டால், அதைத் திருத்துங்கள். ஒருதலைப்பட்சமான, ஒரு சார்பாக எடிட்டிங் சர்வாதிகாரத்துக்கு விளக்கம் சொல்லாதீர்கள்.

மறுபக்கத்தில் இப்படி ஞானம் மீதான தேசத்தின் ஊடான குற்றச்சாட்டுக்கு, தேசத்தின் வரையறையிலேயே ஆதாரமற்றது. இங்கு நாம் ஞானத்தை பற்றிய குற்றச்சாட்டை நாம் மறுக்க முற்படவில்லை. அதற்கு எம்மிடம் ஆதாரம் கிடையாது. அவரின் அரசியல் நிலை, எம்மால் அதை நிராகரிக்க முடியாத எல்லையில், எம்மை நிறுத்துகின்றது. அரசியல் ரீதியாக, இதை எழுப்பும் உரிமையை நாம் மறுக்க முனையவில்லை. அதை சொந்தப் பெயரில், சொந்த அரசியல் நடைமுறை ஊடாக வைப்பதை நாம் நிராகரிக்க முற்படவில்லை.

இதை அனுமதிக்கும் தேசத்தின் உள் நோக்கத்துக்கும், எமது நிலைக்கும் இடையில் உள் தெளிவான வேறுபாடு இதுதான். இந்த உள்நோக்கம் இரயாகரனை அவதூறாக சித்தரிப்பது தான். இரயாகரனின் அரசியலை மறுப்பது தான். அதை சேறடிப்பது தான். துரோகிகளும், இந்திய இலங்கை கைக் கூலிகளும் செய்கின்ற அரசியலை பாதுகாப்பது தான். இதை பிளந்து போராட வேண்டிய பணி தொடரும்.

பின் குறிப்பு

இதே தேசம்நெற்றில் நாவலன் ஏன் தாக்கப்படுகின்றார்? அவர் கட்டுரையை ஒட்டி விவாதிக்காதவைகள் ஏன் அனுமதிக்கப்படுகின்றது?

நாவலன் தாக்கப்படுவது நாவலன் பேசும் மார்க்சியம், மக்களை பற்றி பேசிவிடும் என்ற அச்சம் தான், அவர் மீதான அவதூறாகின்றது. இந்த பொறுக்கி அரசியல், நாவலனின் ஒழுக்கம் பற்றியும் நேர்மை பற்றியும் கேட்கின்றது. நாவலன் தனது சொந்த பெயரில் எழுதுகின்றார். சரி நீங்கள் யார்? இதில் உங்கள் நேர்மை ஒழுக்கம் முதல் அவதூறு வரை நிர்வாணமாகின்றது.

நாவலனை இழிவுபடுத்துவர்கள் ஒன்றைத் தெரிந்த கொள்ளுங்கள். உங்களை போன்று இந்திய இலங்கை கூலிக்குழுவாக, அவர்கள் பின் நாவலன் தவண்டவரல்ல. கடந்த காலத்தில் நீங்கள் செய்யாதவைகளை, அவர் மக்களுடன் நின்று உங்களை எதிர்த்துச் செய்தவர்.

ஜனநாயகத்தைக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் முக்கியமான தலைவர்களில் ஒருவர். ரெலோ இயக்கத்தினை எதிர்த்து உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவர். இவரும், நேரு (என்.எல்.எவ்.ரி யில் சேர்ந்த போது ரெலோவால் கொல்லப்பட்டவர்), மனோ மாஸ்ட்டர் (புலிகளால் கொல்லப்பட்டார்) நடத்திய அந்த போராட்டம் தான், சென்னை மரினா பீச் உண்ணாவிரதம் வரை சென்றது. இது மட்டுமல்ல பாசறை என்ற அமைப்பின் ஊடாக இயங்கிய அவர், பல வெகுஜன அமைப்புகளில் முன்னணி வழிகாட்டியாக செயல்பட்டவர். அக்கால பல ஜனநாயக போராட்டத்தில் ஊக்கமாக பங்கு பற்றியவர். இப்படி பல.

உங்களைப் போல் இந்திய இலங்கை அரசுகளின் பின் தவண்டு நக்கி திரிந்தவர் அல்ல, நக்குபவருமல்ல. கொலைகளைச் செய்தவரல்ல. முதலில் நீங்கள் வெளிப்படையாக வந்து, உங்கள் அரசியலை வையுங்கள். பின் நாவலனை விமர்சியுங்கள்.

உங்களுக்கு தேசம் பாய்விரிக்கலாம், மக்கள் ஒருநாளும் பாய் விரிக்கமாட்டார்கள்.


நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!


நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக் கனலை மூட்டுவோம்!!


1917 நவ 7.

"உழைக்கும் மக்களால் வாழவே முடியாது,
இதில் ஒரு நாட்டை ஆளமுடியுமா?"என்று இறுமாப்புடன்
ஏளனம் பேசியது முதலாளித்துவம்.

உழைக்கும் மக்களால் மட்டுமே
இழிவான தனியுடைமைச் சுரண்டல் இல்லாமல்
ஒரு நாட்டை ஆளமுடியும்
என்ற உண்மையை எடுத்துக் காட்டியது கம்யூனிசம்.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்
உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரங்களும் என்ற
உயரிய நாகரிகத்தை - ஒரு சோசலிச அரசை
உலகுக்கு அறிவித்தது ரசியப்புரட்சி.

ரசியாவிலும், சீனாவிலும் - முதலாளித்துவ மீட்சி,
ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்கக் கந்தகம்.
ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும் நேரடியாக நுழையும்
அமெரிக்கத் தலைமையிலான இராணுவக் கம்பெனிகள்

123 லெ·ப்ட் ரைட்
ஒப்பந்தத்தைத் திணித்து
அரைகுறை இறையாண்மையையும் பறித்து
இந்தியாவை அடிமையாக்கி
ஆசிய அடியாளாக்கவும் துடிக்கிறது
உலக ரவுடி அமெரிக்கா

ஏனைய நாடுகளையும், இந்தியாவையும் மறுகாலனியாக்கும்
ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டுக் கம்பெனிகள்;
விவசாயத்தைச் சின்னாபின்னமாக்கி
அடிமாட்டு விலைக்கு நம் நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளும்
அந்நியக் கம்பெனிகளுக்கே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

விளைப்பொருளுக்கு விலையின்றி வேலை வாய்ப்புக்கு வழியின்றி
அலைக்கழிக்கப்படும் நமக்கும் நம் வாரிசுகளுக்கும்
மலேசிய நீல் மெட்டலின் குப்பைத் தொட்டிகள்.
சீரழிய வழி நெடுக டாஸ்மார்க் புட்டிகள்.

வர்க்க உணர்வை சீரழிக்க
பார்ப்பன இந்துமதவெறிப்
பாசிஸ்டுகளின் இராம அவதாரங்கள்
உழைக்காமல் உடலை வளர்க்கும்
ஊதாரிச் சாமியார்களின் ஆன்மீகப் போதனைகள்.

ஆற்றுநீரும், ஆழ்கடலும், நீள் மலையும்
காற்று மண்டலமும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
அவன் கார் கம்பெனி கருக்கிவிடும்
தூசு மண்டலமும் தொற்று நோயும் நமக்கு.

பன்னாட்டுக் கம்பெனிகள் காட்டுவதைப் படித்து
பன்னாட்டுக் கம்பெனிகள் நீட்டுவதைக் குடித்து
இந்நாட்டுக் குடிமகன் போல் என்னமாய் நடித்து
போதும்...... இன்றோடு இந்தக் கேவலத்தை நிறுத்து!

அந்நியனுக்குப் பண்ணைவேலை செய்யும்
ஒரு கால் செண்டர் வேலையா உன் கனவு?
நம்முடையது இந்த நாடு, நமக்கெதற்கு அந்நியக் கம்பெனிகள்?

நாடு நம்முடையது என்றால்....
உழைக்கும் மக்களுக்கே அதிகாரம் என்றால்....
எண்ணிப்பாருங்கள்.... இது தான் உண்மையான மகிழ்ச்சி!
இனைந்து செயலாற்ற வாருங்கள்,
இங்கும் நடக்கும் ஒரு நவம்பர் புரட்சி!

பார்ப்பன இந்து மதவெறிப்
பாசிசத்தை வேரறுப்போம்!
தமிழகத்தில் வேரூன்ற அனுமதியோம்!

ஆபாச, நுகர்வு வெறிக் கலாச்சாரத்தைத்
தூக்கி எறிவோம்!

அருவெறுப்பான பிழைப்புவாதக்
கண்ணோட்டத்தைத் துடைத்தெறிவோம்;
அனைத்து உழைக்கும் மக்களுக்கான
புரட்சி அரசியலைப் படைத்திடுவோம்!

மறு காலனியாக்கத்தை முறியடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

[மக்கள் கலை இலக்கியக் கழகம் - நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு வெளியிட்ட நோட்டீஸ் -ல் இருந்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது.]

Wednesday, November 7, 2007

அவதூறை சுமத்தி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல்

பி.இரயாகரன்
07.11.2007

லண்டன் தேசம் சஞ்சிகையின் இணைய அரசியல் என்பது, எடிட்டிங் மூலம் அரசியல் ரீதியாக சேறடித்து இயங்குவது. இப்படிப்பட்ட இந்த எடிட்டிங் சர்வாதிகாரத்தை, அரசியல் ரீதியாக விவாதிக்க தயாரற்ற நிற்பது. அதை நான் விவாதிக்க முற்பட்ட போது, நடத்திய அந்த கூத்தை நீங்களே பாருங்கள். http://thesamnet.net/?p=59#comment-95 எனது பதிவு ஒன்றில் இருந்து ஒரு பகுதியை நீக்கிய தேசம், அதை அவதூறு என்றது. சரி, அதை எப்படி, எந்த அரசியல் மூலம் தீர்மானித்தார்கள்? எப்படி அது அரசியல் ரீதியாக அவதூறு என்று விவாதிக்க முற்பட்ட போது, தேசம் சஞ்சிகை அந்த அரசியல் விவாதத்துக்கு வெளியில் நடத்திய அந்த அசிங்கம் தான் இவைகள். இந்த அசிங்கத்தை பூர்த்தியாக்க, விவாதத்துக்கு வெளியில் மூகமூடி போட்ட நபர்கள். இனம்தெரியாத நபர்கள் கொலைக்கே ஆதாரமின்றி படுகொலை செய்வதுபோல், இனம் தெரியாத நபரைக்கொண்டு தனிநபரைத் தாக்கி தேசம் அரசியல் செய்கின்றது.


இப்படி கொலைகார இயக்கங்களில் தலைவர்கள் முதல் இன்றும் அதில் உள்ளவர்களுடன் நடத்துகின்ற அரசியல் கூத்துகளை பாதுகாக்க, எமக்கு அவதூறு பட்டம் சூட்டுவது பலருக்கு அவசியமாகின்றது. தமக்கு என்று எந்த அரசியல் வரையறையும் கொண்டிராத சமரசவாதம், தொகுப்புவாதம், நட்புவாதம், நடுநிலைவாதம் கொண்ட அரசியல் உறவு, தவிர்க்க முடியாது எமது அரசியலை எதிர்ப்பதை அவசியமாக்குகின்றது. பாட்டாளி வர்க்க விடுதலை முன்வைக்கும் எமது அரசியல், எதிரிகளை தெளிவாக சமகால அரசியல் போக்கின் மீது முன்னிறுத்தி வைக்கின்றது. இந்த நிலை, "தேசத்"தின் சமரசவாதம் சார்ந்த கூட்டு குவியலை தகர்த்துவிடும். அதில் எம்மை அப்புறப்படுத்துவதன் மூலம் தான், அந்த கூட்டு அவியலை செய்ய முடியும். இதனால் எமக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு. இது எவ்வளவு பொய்யானது என்பதையும், அதை எமக்கு மட்டும் பொருத்தியதையும் அம்பலப்படுத்தியேயாக வேண்டும்.


அடுத்து மனித குலத்தையே கொன்று குவித்த, அதையே அரசியலாக கொண்டவர்களுடன் உள்ள உறவு, எம்மை அரசியல் ரீதியாக அவதூறாக வரையறுத்துக் காட்டுகின்றது. இதன் மேல் நாம் அரசியல் விவாதத்தை நடத்தியாக வேண்டும். இதை இரண்டு தளத்தில், இந்த அரசியல் பின்னணியை உடைத்துக் காட்ட முனைகின்றோம்.


1. எமது எழுத்தை அவதூறாக காட்டி, குற்றங்களை பாதுகாக்க முனையும் அரசியல் பற்றியது

2. எதை அவதூறு என்று எமக்கு கூறினரோ, அதை அவர்கள் ஒரு தலைப்பட்சமாக எனக்கு எதிராக பயன்படுத்தி நடத்திய தனிமனித தாக்குதலைப் பற்றியது


எமக்கு அவதூறு, கொலைகாரக் கும்பலுக்கு கம்பளம்


மனித விரோத குற்றவாளிகளை விமர்சிக்கும் போது, அதை அவதூறாக சித்தரித்து குற்றங்களை பாதுகாக்கும் அரசியலே, தேசம் இணைய சஞ்சிகையில் அரங்கேறியது. இதை அவருடன் விவாதத்தில் குறிப்பிட்ட போது, அதை அவர் ஒற்றைவரியில் மறுத்தார். இதை விவாதிக்க முற்பட்ட போது, என் மீது குற்றம் கண்டுபிடிக்கவும், அதே நேரம் இனம் தெரியாத அவரின் ஆதரவாளர் நபர்களைக் கொண்டு தனிமனித தாக்குதலை நடத்தினார். எனது அரசியலை மறுத்து, தனிமனிதனாக புலியுடன் சமப்படுத்தி குற்றவாளியாக நிறுவ முனைந்தார். இதையே தான் புலியெதிர்ப்பு அரசியல் செய்கின்றது. அதாவது புலி அரசியலை அவர்கள் விமர்சிப்பதில்லை. தம்பி தேசம் அதை விட்டுவிடுமா! அதே உத்தி அதே தாக்குதல்.


புனைபெயரில் சுற்றி நின்று விவாதத்துக்கு வெளியில் குலைத்த அவதூறுகளைத் தாண்டி, நான் தொடர்ச்சியாக இதை அரசியல் ரீதியாக விவாதிக்க முற்பட்டேன். ஆனால் அவர்கள் இதை விவாதிக்க தயார் இல்லை என்பது தெரிந்த நிலையில், தேசத்தின் தளத்தில் தொடாந்தும் இனி விவாதிப்பதில்லை என்ற முடிவை எடுத்தோம்.


இப்படி ஒரு குற்றக் கும்பல் பாதுகாப்படுவதும், தொடர்ந்தும் சமூக குற்றங்களாகவே மக்கள் விரோத அரசியல் செய்வது பல வழிகளில் தொடருகின்றது. இதை பாதுகாப்பதே தேசத்தின் நோக்கம் என்பது தெளிவான நிலையில், அதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.


ஒரு இயக்கத்தின் தொடர்ச்சியான குற்றங்கள், அதை தலைமை தாங்கிய நபர்கள், அதை கோட்பாட்டு ரீதியாக பாதுகாத்து கொண்டவர்கள், இன்று அந்த சமூக விரோத கூலிக் கும்பலுடன் செயல்படுகின்ற நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தான், தேசம் ஆதாரமற்ற அவதூறு என்கின்றது. குற்றம் சாட்டுபனை குற்றவாளியாக நிறுத்தி, இனம்தெரியாத அந்த கொலைகார கும்பலுடன் சேர்ந்து தேசம் அவதூறு பொழிகின்றனர்.


இப்படித் தான் தேச இணைய விவாதத்தளம் எம்மை அணுகியது. உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய குற்றங்கள் இழைத்தவர்களை, இப்படியும் தேசம் பாதுகாக்க முனைகின்றது. அதே அரசியலை, அந்த குற்ற அரசியல் பரம்பரை தொடர்வதை, அனுசரித்து பாதுகாக்கின்றனர். தனிப்பட்ட நட்பு, மனிதத் தன்மையுடன் கூட இதை பார்க்க அவர்களை அனுமதிப்பதில்லை. அதே அரசியல், அதே இயக்கவாதத்துடன், முன்னைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொண்டு தான் இயங்குகின்றது. அதாவது எந்த இயக்கமும் தனது கடந்தகால குற்றங்களுக்காக சுயவிமர்சனம் செய்தது கிடையாது. அந்த அரசியலை கேட்கவா வேண்டும். எல்லாம் கூலிப்பட்டாளங்கள். இந்த கூட்டத்தை சேர்ந்தவர்களை விமர்சித்து குற்றம் சாட்டும் போது, தேசத்துக்கு அது அவதூறாக ஆதாரமற்றதாகப் படுவதாய்க் காட்டி கொதித்துப் போகின்றனர். எடிட்டிங் அரசியல் செய்வதன் மூலம், இதன் மீது தனிமனித தாக்குதலை நடத்துகின்றனர்.


மக்கள் விரோத இயக்கங்கள், அதன் தலைவர்கள், அதை கோட்பாட்டு ரீதியாக பாதுகாக்கின்றவர்களைக் குறித்தும், அவர்களின் அரசியல் நடத்தைகளை நாம் அம்பலப்படுத்தும் போதும், அதை தனிநபர் தாக்குதல் என்கின்றனர். சிலர் அவர்களை நாம் பண்பற்ற மொழியால், மொழி வன்முறைக்கு உள்ளாக்குகின்றோம் என்கின்றனர்.


இது தான், என் மீதான அவதூறுகளின் அரசியல் சாரம். புளுத்துப் போன இந்த அரசியலை சாரத்தை நிறுவ, இரயாகரன் என்ற நபர் தனிப்பட்ட கோபதாபத்துடன் இதை செய்வதாக சித்தரிக்க முனைவதே இதில் உள்ள மற்றொரு அரசியல்.


இப்படி இதை தனிமனித நடத்தையாக, தன்மையாக காட்டுகின்றனர். இயக்கங்களின் நடத்தைகளை, தலைவர்களின் நடத்தைகளை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது என்பதைக் கூறி, அந்த இயக்க அரசியலை பாதுகாக்கும் நுட்பம். அரசியல் துரோகத்தை மூடிமறைக்கவும், தமிழ் மக்களின் எதிரியிடம் பணம் வாங்கி மக்களை கொன்று குவிக்கும் கொலைகார கூலி இராணுவமாக இயங்கும் அந்த இழிவை மறைக்க, ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் என்று அடை மொழிகள் வேறு. இப்படி சோரம் போகின்ற மலட்டு அரசியல்.


புலிக்கு எதிரானவராக உள்ளவர்கள் யார் தான், புலியின் அரசியலை விமர்சிக்கின்றனர். புலியின் அரசியலைக் கூட விமர்சிக்காதவர்கள். நாம் மட்டுமே அதையும் செய்ய முனைகின்றோம். புலியின் அரசியலை விமர்சிக்கும் யாருக்கும், ஒரு மக்கள் அரசியல் வேண்டும். புலி அரசியலை விமர்சிக்காது தனிநபர்களை தாக்குவது, அதேபோல் தம் மீதான விமர்சனத்தை தனிநபர் தாக்குதலாக காட்டுவது அரங்கேறுகின்றது. தேசம் போன்றவர்கள் கூட, புலியின் அரசியலைக் கொண்டு, தமக்கு முதலாளித்துவ மனித முகத்தை காட்ட முனைகின்றனர். இந்த போக்கில் நின்று, எம்மை அரசியலற்றவராக காட்டி தாக்க முனைகின்றனர். இப்படி எம்மை காட்டுவதன் மூலம், குற்றங்களுக்கு இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் பொறுப்பாளிகளல்ல என்று கூறி, பாதுகாப்பதே அதன் அரசியல்.


இதைத் தான் தேசம் செய்கின்றது. எனது விவாதத்தை தனது தளத்தில் திசை திருப்பியபடி, இதைத் தான் செய்தது. நான் கருத்துரைக்கின்றேன் என்றால், எனக்கு ஒரு அரசியல் உண்டு. இதை நானே கூறும் போது, அதை தேசம் மறப்பது அபத்தம். எனது அரசியலை யாரும் ஏற்றுக்கொள்ளமால் இருக்கலாம், ஆனால் எனக்கு ஒரு அரசியல் உண்டு. அது தவறு, என்றால் அதை முதல் நிறுவ வேண்டும். அதாவது எப்படி? எந்த புரட்சிகர வர்க்கங்களுக்கு எதிராக உள்ளது என்று நிறுவவேண்டும். அதேபோல் எந்த சமூக அக்கறையுள்ள நபருக்கு எதிராக உள்ளது என்றும் தான். அதைச் செய்ய எவருக்கும் அரசியல் வக்கு கிடையாது.


என்ன செய்கின்றனர், அரசியல் சார்ந்த எனது செயல்பாட்டை எடிட்டிங் அரசியல் மூலம் சேறடிக்கின்றனர். இந்த அரசியல் செயல்பாட்டை அங்கீகரிக்காமல் இருப்பது, வெறம் தனிமனிதனாக காண்பது என்பதும், அப்படிக் காட்டுவதும் அவர்கள் கொண்டுள்ள அரசியல் வங்குரோத்தின் விளைவு. நாம் எமது சொந்த பெயரில் வைப்பதை, புனைபெயர் வெள்ளை வேட்டிகாரப் பொறுக்கிகளின் தாக்குதலுடன் ஒப்பிடுவது, எடிட்டிங் செய்வது நயவஞ்சகத்தனமானது.


தமது அரசியல் என்னவென்று சொல்லாமல் செய்கின்ற, பிற்போக்கு அரசியல் ஆட்டம் காண்பதன் விளைவு தான், எம்மை கடிக்க முனைகின்றது. நான் ஒரு அரசியலை, அதாவது மார்க்சியத்தை அரசியலாக கொண்டவன். இது மார்க்சியமல்ல என்று சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு, அதை மறுத்து நிறுவும் உரிமையும் உங்களுக்கு உண்டு. அதை விடுத்து, நீங்கள் சொல்வதை மார்க்சியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல என்று உளறுவது, அபத்தம். இப்படி கூறிக்கொண்டு, அரசியலற்ற இரயாகரனை பிரித்தெடுத்து, தாக்குவது என்ற கடைகெட்ட பாதையை, தேசம் தெரிந்தே செய்கின்றது.


எதற்காக, யாரும் பேசாத, பேசத் தயாரற்றதுமான, இலங்கையில் நடந்த குற்றங்களின் குற்றவாளிகள் யார் என்ற விடையத்தை பேசுவதால் அதற்கு எடிட்டிங். இவர்கள் கூடி அரசியல் கும்மாளம் அடிக்கும் அரசியல் தளத்தில், அந்த குற்றவாளிகளும் உள்ளனர் என்பதே உண்மை. அதை அம்பலப்படுத்தும் எம்மையும், எமது கருத்தையும் தனிமனித அவதூறாக ஒற்றை வரியில் சேறடிப்பது. அது எப்படி என்று அரசியல் ரீதியாக, நிறுவ முடிவதில்லை. எடிட்டிங் மூலம் நிறுவ முனைகின்றனர்.


இலங்கையில் நடந்த பாரிய குற்றங்களின், குற்றவாளிகள் யார்? தணிக்கை எடிட்டிங் மூலம் பாதுகாக்கின்ற கூத்தைக் கடந்து, நாங்கள் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்லுகின்றோம், யார் அந்த குற்வாளிகள் என்பதை. இயக்கத்தின் தலைமையைச் சேந்தவர்கள், அதை கோட்பாட்டு ரீதியாக வழிகாட்டியவர்கள், இன்றும் அதை பாதுகாக்கின்றவர்கள், அந்த அமைப்புகளில் செயல்படுபவர்கள் குற்றவாளிகள் என்பதில் யாருக்கும் விவாதம் இருக்க முடியாது. யாரெல்லாம் சுயவிமர்சனம் செய்யவில்லையோ, யாரெல்லாம் அந்த அரசியலை மறுக்க முனையவில்லையோ, அவர்கள் குற்றவாளிகள் தான். இதை இன்றும் பார்க்கத் தவறுகின்ற, அவர்களை பாதுகாக்கின்ற, அவர்களுடன் உறவைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும், இந்த குற்றங்களுக்கு உடந்தையாக நின்றுதான் அரசியல் செய்கின்றனர். இப்படி சொல்வது வறட்டுவாதமல்ல. குறுகிய தனிமை வாதமும் அல்ல. இதை அவதூறு என்று சொல்லி செய்வது, மனிதனுக்கு எதிரான குற்றங்களை மூடிப் பாதுகாப்பது தான்.


இதை செய்ய முனையும் தேசமும் அதையொத்தவர்களும், இதற்கு ஆதாரமில்லை என்பது அரசியல் நகைச்சுவை தான். தமிழ்ச்செல்வனின் பல்லுப் போலே. இதை ஆதாரமற்ற அவதூறாக கூறுவது என்பது, சமூக விரோத குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான்.


சமகாலத்தில் கருணாவின் கைது பற்றிய செய்தியும், போர் குற்றவாளியாக தண்டிக்க வேண்டும் என்ற தகவலும் வருகின்றது. யார் எப்படி எந்தத் தளத்தில் விசாரிப்பது என்பதில், எமக்கு மாறுபட்ட அபிப்பிராயம் உண்டு. குற்றங்களுக்கு உடந்தையாக அதை வழிகாட்டிய பாலசிங்கத்தை பாதுகாத்த பிரிட்டன், எப்படி கருணாவை குற்றவாளியாக்க முடியும் என்பது தான் இதில் உள்ள வேடிக்கை. குற்றவாளிகளே குற்றவாளிகளை விசாரித்தல் தான், மேற்கின் அரசியல் சார்ந்த விசாரணை நாடகங்கள்.


இது ஒருபுறம் இருக்க, கருணா குற்றவாளிதான். ஆயிரம் ஆயிரம் மக்களின் மரணத்தை, அந்த மக்களின் அழிவை ஏற்படுத்திய குற்றவாளி தான். இது நிறுவப்பட்டால், புலிகளின் ஒவ்வொரு தலைவனும் குற்றவாளிகள் தான். இது சிறிலங்கா அரச தலைவர்களுக்கும் பொருந்தும்.


இது எப்படி சரியானதோ அப்படித்தான், கூலி இயக்க தலைவர்கள் நிலையும். குற்றத்தையே அரசியலாக்கி அதையே வாழ்க்கையாக்கிக் கொண்ட இயக்கத்தின் தலைமைகள் மீதான விமர்சனத்தை குற்றச்சாட்டை அவதூறக காட்டுவது, அதை பாதுகாப்பது தான். குற்றத்துக்கும், தொடரும் குற்றங்களுக்கும் துணை போவது தான்.


இதில் என்ன சந்தேகம். நான் குற்றச்சாட்டை வைத்த ஈ.என்.டி.எல்.எவ் வை எடுங்கள். கோடி கோடியாப இந்தியாவிடம் பணம் வாங்கி இயங்கும் ஒரு கூலிக்க மாரடிக்கும் துரோக இயக்கம். இந்தியப் பணம் இல்லையென்றால், அதன் பெயரே இருக்காது. ஆயிரக்கணக்கில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து படுகொலை செய்த ஒரு இயக்கம். எநததனை தாலியை அறுத்தவர்கள். அவர்கள் இருந்த புளாட்டில், உள்ளியக்கத்திலேயே சில நூறு பேரைக் கொன்றவர்கள்.


இந்த இயக்கத்தை, இந்த இயக்கத்தில் உள்ளவர்களை நாம் குற்றம் சாட்டினால் அது அவதூறாம். இந்த இயக்க வானொலியில் அரசியல் ஆய்வு செய்யும் அந்த 'நேர்மையான" சிவலிங்கம், முடிந்தால் ஈ.என்.டி.எல்.எவ் படுகொலைகளைப் பற்றி அந்த வானொலியில் ஆய்வு செய்யட்டும் பார்ப்போம். இன்று உள்ளவர்கள் அதற்கு பொறுப்பாளிகள் என்ற குற்றம் சாட்டட்டும் பார்ப்போம். அவர்களின் அரசியல் நேர்மை இப்படி ஒட்டையானது. ஈ.பி.டி.பி கொலைகளை அவர்களின் வானொலியில் ஆய்வாக செய்யட்டும் பார்ப்போம். சரி இதை "தேசம" செய்யட்டும் பார்ப்போம். உங்கள் அரசியல் விபச்சாரத்தால் முடியாது. எம்மால் மட்டும் தான் முடியும். அந்த மக்களுடன், அந்த மக்களின் துயரங்களுடன் நாம் மட்டும் முரணற்ற வகையில் நிற்க முடிகின்றது. இதனால் தான் எமக்கு சேறடிப்பு.


மனிதனைக் கொன்று போட்டு, கூலிப்பணத்தில் வளர்ந்த கூலித் துரோக இயக்கம் தான் ஈ.என்.டி.எல்.எவ். யாராவது மறுக்க முடியுமா? இந்த இயக்கம் இன்று ஜரோப்பாவில் ஜனநாயகத்தின் பெயரில் இயங்குகின்றது. இந்த இயக்கம் கருணாவுடன் சேர்ந்து புலிக்கு எதிராக நடத்திய கொலைகளை மூடிமறைத்துக் கொணNட, தற்போது புலியுடன் சேர்ந்து உறுமுகின்றது. இது தீப்பொறி ஊடாக, அதன் முகத்தின் ஒரு பக்கத்தை காணமுடிகின்றது. இப்படி குற்றங்களுக்கு துணையாக, உடந்தையாக, பங்காளியாக, சதிகாரக் கும்பலாக இன்றும் அது இருக்கின்றது, இயங்குகின்றது.


இதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் தான் ராம்ராஜ். இவர் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரையிலான குற்றங்கள் சார்ந்து, ஒரு குற்றவாளியா இல்லையா? ஆம் குற்றவாளி. இதை தனிமனித தாக்குதலாக காட்டுவதால், அந்த குற்றம் பொய்யாகிவிடாது.


புளாட் என்ற அமைப்பில், உள்ளியக்க படுகொலைகளை நடத்திய போது, அதை ஆதரித்ததால் இயக்கத்தின் விசுவாசமான நம்பிக்கைக்குரிய முன்னணி உறுப்பினரானவர். கிளிநொச்சி அறிந்த பரந்தன் ராஜன் என்ற ரவுடியும், கொலைகளில் முக்கிய பங்காற்றியவன். மனித விரோதத்தையே செய்து முக்கிய உறுப்பினரிடையே அதிகாரச் சண்டைகள் உருவானது. இந்திய உளவு அமைப்பின் தேவையுடன் வேறு சிலர் இணைந்தும் பிரிந்தும், தனி கூலி இயக்கமாக ஈ.என்.டி.எல்.எவ். உருவானது. இதன் குற்றங்கள் முழுக்க ரீ.பீ.சீ ராம்ராஜ்சுக்கும் பொருந்தும்.


கருணாவுடன் சேர்ந்து நடத்திய கொலைகளிலும், ஈ.என்.டி.எல்.எவ் பங்குபற்றியது. இந்த குற்றங்களைத் தெரிந்தும், அதை 'ஜனநாயக ரீ.பீ.சீ" வானொலி ஆதரித்தது. இன்று வரை அதை மூடிமறைத்து, ஜனநாயக உபதேசம் செய்கின்றனர். இன்று புலியுடன் ஒரு அரசியல் கூத்து. இப்படி கொலைகார அரசியலையே அரசியல் நடைமுறையாக கொண்ட ஒரு இயக்கம், தமது செயல்களை எப்படி உரிமை கோரிச் செய்யும். சாட்சியங்களை விட்டு வைத்தா, அது ஜனநாயக வேஷத்தைப் போடும். "தேசம" அப்படித் தான் என்கின்றது. என்ன நரித்தனம்.


கேள்வி தெளிவானது. அந்த இயக்கம் குற்றவாளி இயக்கமா இல்லையா என்பதுதான்? அந்த இயக்கத்தின் அரசியல் மக்களைக் கொன்று குவிக்கும் அரசியலா இல்லையா என்பது தான்? மனித குற்றங்களை அந்த இயக்கம் செய்ததா இல்லையா என்பது தான்? மக்களை ஒடுக்க ஒரு கூலிக் குழுவாக, கூலி இராணுவமாக இயங்குகின்றதா இல்லையா என்பது தான்? இதை நீங்கள் மறுத்தால், நிறுவ முடிந்தால், எம் மீதான குற்றச்சாட்டுகள் சரியானது.


இதையே அரசியலாக செய்த இயக்கம் பற்றிய குற்றச்சாட்டு. அந்த இயக்கத்தின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதைத்தான் தேசம் மறுக்கின்றது. இந்த மாதிரியான இயக்கத்தின் தலைவர்கள், சகலவிதமான குற்றங்களையும் செய்கின்ற, உடந்தையாக செயல்படுகின்றவர்கள், எந்த சமூக அறநெறியும் அற்றவர்கள். தெளிவாக கூறினால், பாரிய குற்றங்களை செய்கின்ற ஒரு இயக்கத்தில் இருக்கின்றவர்கள். இவர்கள் எந்த சமூக அறநெறியையும் கொண்டிருப்பதில்லை. சதி, மூடிமறைத்த முகங்கள், வஞ்சகம், கொலை வெறித்தனம், சோரம் போகும் கைகள் என்று, பல இழிமுகங்கள் இவர்களுக்கு உண்டு. யாராலும் இதை மறுக்க முடியாது.


இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, யாரும் நிறுவ வேண்டிய அவசியம் கிடையாது. அது அவர்களின் அரசியல் முகமாக, வாழ்வாக, அவர்களின் இயக்கமாக, அரசியல் சார்ந்ததாக உள்ளது. அவர்களை, அவர்களின் அரசியல் பொறுக்கித்தனத்தை இயக்கத்துக்கு வெளியில் பிரித்துக் காட்டுபவர்கள், நயவஞ்சகர்கள் மட்டும் தான். உண்மையை உண்மையாக ஒத்துக்கொள்ள, சுயவிமர்சனம் செய்ய மறுப்பவர்கள் தான் இதை செய்கின்றனர்.


சமூகத்தில் இருந்து (இவர்களை ஒத்தவர்களிடம் இருந்தல்ல), இவர்கள் பற்றி வரும் குற்றச்சாட்டுகளுக்கு, ஆதாரம் அவசியம் கிடையாது. அவை அவர் சார்ந்த இயக்கத்தின் அன்றாட செயல்கள் தான். இந்திய கூலிப்படையாக இருக்க பணம் வாங்கியவர்கள், அந்த கூலித்தனத்தை நிறைவேற்ற கொன்று குவிப்பவர்கள், யாரிடமும் எப்படியும் எங்கும் கை நீட்டுபவன் தான். அவனிடம் என்ன அரசியல் நேர்மை இருக்கமுடியும். மனிதவிரோத, சமூக விரோத செயல்களை விட வேறு எந்த அறநெறியும் இருப்பதில்லை.


அவர்கள் ஜனநாயக வேஷம் போடலாம், மார்க்சிய மூலம் ப+சலாம். எப்படிப்பட்ட கோமாளி வேஷம் போட்டாலும், கடந்தகால நிகழ்கால குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது, உடந்தையாக இருப்பதை யாராலும் மன்னிக்க முடியாது.


உண்மையில் புலிக்கும் எமக்கும் இடையில் ஒரு கோடு நிரந்தரமாக பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றது. இதனால் புலி மீதான இது போன்ற குற்றச்சாட்டுகள் மேல், இயல்பாக யாரும் கேள்வி கேட்பதில்லை. புலியல்லாத தளத்தில், இந்தக் கோடு எதுவும் கிடையாது. கொலைகார கூலி இயக்கங்களின் தலைவர்கள் முதல் பொறுக்கித் தின்னுகின்றவர்கள் வரை, புலியல்லாத தளத்தில் கோடுகள் எதுவுமின்றி இன்றி சுதந்திரமாக வலம் வருகின்றனர்.


உண்மையான ஜனநாயகவாதிக்கும், கூலிக் கொலைகார கருங்காலிகளுக்கும் இடையில் மூடிமறைக்கப்பட்ட அரசியல் விபச்சாரமே நடக்கின்றது. உணமையான சமூக அக்கறை உள்ளவர்களுக்கும், கொலை செய்வதையே அரசியலாக கொண்டவர்களுக்கும் இடையில் எந்த அரசியல் கோடும் கிடையாது.


நாம் மட்டும் தான் அந்த அரசியல் கோட்டை தெளிவாக கொண்டுள்ளோம். இதனால் எமது செயல்பாட்டை எதிர்த்து, எம்மை எதிரியாக பார்க்கின்ற போக்கு என்பது இயல்பானது. எமது ஆயுதமோ மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியது. அதை மறுக்கின்றவர்களை நாம் அம்பலப்படுத்தும் போது, அதை அவதூறக காட்டுவது நடக்கின்றது.


நாங்கள் தெளிவாகவே கேட்கின்றோம். ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், புளாட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற இயக்கங்கள், மனிதப் படுகொலைகளை நடத்தவில்லை. ஆக உங்கள் ஜனநாயகப் படி, புலிகள் மட்டும் தான் கொலைகளைச் செய்தவர்கள். இந்த இயக்கங்கள் குற்றவாளிகள் இல்லையா? அதன் தலைவர்கள் தானே அதை பொறுப்பேற்க வேண்டும். இன்றும் இதில் சிலர் பல்லுக் கழட்டிய பாம்பாக இருக்கின்றது என்பதுக்கு அப்பால், மற்றவர்கள் கொலைகளைச் செய்கின்றனர். இதன் தலைவர்கள் கடந்த மற்றும் நிகழ்கால குற்றங்கள் மீது குற்றவாளிகள் அல்லவா?


உங்கள் ஜனநாயகம் இதைப் பற்றி ஏன் கண்டு கொள்வதில்லை. தீக்கோழி மாதிரி நிலத்துக்குள் தலையை புதைத்துக் கொண்டு செய்யும் குழிபறிப்பு அரசியல், மறுபக்கத்தில் தமிழ் மக்களின் முதுகில் குத்தும் ரீ.பீ.சி அரசியல். மனிதவிரோதத்தை அரசியலாக கொண்ட காடைத்தனம் இது. இந்தக் கூலி இயக்கங்கள், மக்களுக்கு எதைத்தான் வைக்கின்றன. உங்களிடம் ஒரு சொட்டு நேர்மை இருந்தால், சொல்லுங்கள். மனிதக் குற்றங்களை, சமூகக் குற்றங்களையும் அரசியலாக கொண்ட இயக்கங்களில் இருந்து, நாங்கள் அதாவது நாம் மட்டுமே தெளிவான ஒரு கோட்டைக் கீறி, அதை நிறுவி வருகின்றோம். இந்த அரசியலை அவதூறு என்றும், ஆதாரமற்றது என்றும் சொல்லுகின்றவர்கள், அந்தக் குற்றத்துக்கு உடந்தைதான்.


அவர்களுடன் எமக்கு எந்த அரசியல் உறவும் கிடையாது. அவர்களைப் புலியல்லாத தளத்தில் அம்பலப்படுத்துவது தான் எமது அரசியல். அவர்களின் தலைவர்கள் யாரையும் நாம் சந்திப்பது கிடையாது. அவர்கள் மக்களின் பிரதான எதிரிகள். இந்த வகையில் எமது எதிரிகள் கூட.


இதனால் எம்மீது அவதூறு. இப்படி அவர்களைப் பாதுகாப்பவர்கள், அவர்களுடன் நடத்துகின்ற அரசியல் தேன்நிலவுகள், துரோக சந்திப்புகள், இரகசிய நடவடிக்கைகள், பேரங்கள் என்று பற்பல. புலம்பெயர் நாடு எங்கும் இந்த அரசியல் விபச்சாரம், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. இதனால் அடிக்கடி இந்த கொலைகார தலைவர்கள், மேற்கு நாடுகளுக்கு வருகின்றனர். இப்படி இரகசிய சந்திப்புகள், இரகசிய சதிகள் நடக்கின்றது.


இந்தக் குற்றவாளிகளின் தயவில் ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தான், எம்முடன் மோதுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள். கூறப்போனால் புலியல்லாத தளத்தில் உள்ள 90 சதவீதமானவர்கள், குற்றங்களை மறைத்து அதற்கு துணை நிற்பவர்கள். சமூக விடுதலைக்கு எதிரான கடைந்தெடுத்த அற்பர்கள். பொறுக்கித் தின்பதையே அடிப்படையாக கொண்ட, அரசியல் நக்குண்ணிகள்.


வெளிப்படையான எந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. மூடிமறைத்த, தமது அரசியல் நடத்தைகளை இரகசியமாக நடத்துபவர்கள். புனை பெயர்களில் அவதூறு பொழிபவர்கள். இவர்கள் ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சதிகள், ஏகாதிபத்தியத்தின் ஆள்காட்டியாக இயங்குவது உட்பட, இயக்கங்களிள் குற்றங்களை திட்டமிட்டு பாதுகாப்பதே, இவர்களின் அரசியல். எமக்கு அவர்கள் சுமத்துவது ஆதாரமற்ற அவதூறுப் பட்டம்.


ஆம், நாம் சரியாக இருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இந்த அரசியல் பிளவு அவசியமானது. இது மட்டும் தான், தமிழ் மக்களின் உண்மையான மனித உணர்வுகளுடன் ஒன்று கலந்து, எடுப்பாக தன்னை எதிர்காலத்தில் வெளிப்படுத்தும். அதை நோக்கிய போராட்டம் தொடரும்.


இதன் இரண்டாம் பகுதி தொடரும்.

Tuesday, November 6, 2007

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!

""ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''

மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது. இதனை வெறுப்பில் விழைந்த வசவாக எடுத்துக் கொள்ள முடியாது. மும்பய் மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்ட விதத்தையும்; மும்பய் மற்றும் கோவை கலவர சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முசுலீம்கள் என்பதாலேயே, அவ்வழக்குகளில் நீதி மறுக்கப்பட்டு விடுவதையும் ஒப்பிட்டுப்பார்த்தால், ஜாகீர் உசேனின் விமர்சனத்தில் உள்ள நியாயத்தை எவரும் மறுத்துவிட முடியாது.

1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும்; 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மதானி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.

""தடா''சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் கூட , நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டு பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலோ, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 168 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. மதானிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.

இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டுக்கால ""தண்டனையை''அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில், தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

மதானி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போல பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.

ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், ""இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக'' "கண்டுபிடித்து' தீர்ப்பளித்தது. ""இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்'' என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ""இந் நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக'' எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலீசும், நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.

கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நட வடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின் படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும்; எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

""இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்து போலீசுக்காரர் சில முசுலீம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; இந்து தீவிரவாதிகளும் போலீசும் கைகோர்த்து கொண்டு நடத்திய வன்முறை'' என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முசுலீம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, சிறப்பு நீதிமன்றம் கோவை கலவரத்தைப் பற்றி வாய் திறக்கவே மறுத்துவிட்டது.

குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே, ""அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை'' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. ""குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ""உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக''க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.

இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாபை சாட்சி சொல்ல போலீசார் அழைத்து வந்தனர். முனாப் நீதிமன்றத்திலேயே, ""தனது அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீசார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை'' அம்பலப்படுத்தியதோடு, போலீசார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.

விசாரணையின் பொழுது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறிய பொழுது, போலீசாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி உதவினர். நீதிபதியோ, போலீசாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.

குற்றவாளிகளைச் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழும், சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் காட்டியிருக்கின்றனர். போலீசாரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும் கூட, சாட்சிகளை போலீசார் தயார்படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.

கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. ""இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரை போலீசில் அன்றே ஒப்படைத்ததையும்; போலீசார் இவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16..02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும்; இந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும்; இவர்களுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும்'' எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முசுலீம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.

அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு; சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று இடங்களில் குண்டு வைத்த தீவிரவாதிகளை நேரில் பார்த்த சாட்சியாக விஜயகுமார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், பல இடங்களில் குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை நேரில் பார்த்த சாட்சிகளாக நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், ""இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்'' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கின் மிக முக்கியமானகுற்றவாளியாக முன் நிறுத்தப்பட்டவர் மதானி. அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீசாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீசு தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள் அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின் பொழுதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, இவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் கூட மறுத்துவிட்டது.

தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சங்கராச்சாரிக்குச் சிறைச்சாலையில் தனிச்சமையல் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த மதானிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'', ""இந்தியா ஒரு மதச் சார்பற்ற குடியரசு'' என இந்திய அரசியல் சாசனம் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இது ஒரு மோசடி என்பதை நிரூபிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீதிமன்றங்களே அந்தத் திருப்பணியைச் செய்து விடுகின்றன.

அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றி தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முசுலீம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.

18 முசுலீம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட ஏறத்தாழ 100 வழக்குகள், போதிய சாட்சியம் இல்லாததால் விசாரிக்க முடியாது எனக் கூறிக் கைவிடப்பட்டது நம்முன் எத்தனை பேருக்குத் தெரியும்? போலீசுக்கு மாமூல் கொடுக்க மறுத்து வந்த முசுலீம்களின் வியாபார மேலாண்மை தகர்க்கப்பட்டதையும்; குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டிருக்கும் பல முசுலீம்கள் நடைபாதை வியாபாரிகள் என்பதையும் எந்த ஓட்டுக்கட்சிகள், பத்திரிகைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன?

மும்பய் வெடிகுண்டு தாக்குதலின் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிம் ""ஓடி ஒளிந்து வாழும்'' குற்றவாளியாக ""தடா'' நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், மும்பய் கலவரத்தின் தளபதியாகச் செயல்பட்டதாக, அக்கலவரத்தை விசாரித்த சீறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சிவசேனாதலைவர் பால் தாக்கரேயை, மும்பய் நீதிமன்றமே வழக்குகளில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. அவர் கலவரத்தைத் தூண்டிவிடவில்லை என காங்கிரசு கூட்டணி ஆட்சியே நற்சான்றிதழ் வழங்கிவிட்டது. சிறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ் சுமத்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த மதுகர் சர்போத்தர், பா.ஜ.க.வைச் சேர்ந்த கோபிநாத் முண்டே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மீது சட்டத்தின் சுண்டு விரல் கூட படவில்லை.

கலவரத்தின் பொழுது ஹரி மசூதிக்குள் போலீசு படையோடு புகுந்து, அங்கு தொழுகை செய்து கொண்டிருந்த ஏழு முசுலீம்களைச் சுட்டுக் கொன்ற நிகில் காப்ஸே என்ற போலீசு துறை ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கூட எடுக்கப்படவில்ல. மாறாக, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் முதுகுத் தண்டில் சுடப்பட்ட ஃபருக் மாப்கர், கலவரத்தில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கிற்காக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு வந்து போகிறார்.

சுலைமான் பேக்கரி எனும் நிறுவனத்திற்குள் புகுந்து, அங்கு பாதுகாப்பிற்காகப் பதுங்கியிருந்த முசுலீம்களின் மீது கண்மூடித்தனமாகச் சுட்டு, ஆறு பேரைக் கொன்ற ஆர்.டி.தியாகி என்ற போலீசு அதிகாரி, நிரபராதி என விடுவிக்கப்பட்டதோடு, அவர் பதவியில் இருந்து நிம்மதியாக ஓய்வும் பெற்றும் விட்டார்.

சிறீகிருஷ்ணா கமிசன் நிகில் காப்ஸே, ஆர்.டி. தியாகி உள்ளிட்டு 31 போலீசு அதிகாரிகளைக் குற்றவாளிகள் என ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளது. எனினும், அக்காக்கி சட்டை கிரிமினல்கள், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மட்டுமல்ல, காங்.கூட்டணி ஆட்சியிலும் வழக்குவிசாரணை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2,300 வழக்குகளில் 1,371 வழக்குகள், மதச்சார்பற்ற காங்கிரசு ஆட்சியில்தான், கலவரம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, போதிய சாட்சியம் இல்லை என்ற காரணத்தால் கைவிடப்பட்டன.

மகாராஷ்டிரம் இந்து மதவெறியர்களின் செல்வாக்கு மிக்க மாநிலம் என்றாலும், மும்பய் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பையடுத்து, மும்பய் கலவர வழக்குகளிலும் நீதி வேண்டும் எனப் பல்வேறு முசுலீம் அமைப்புகளும், சனநாயக சக்திகளும் குரல் எழுப்பி வருகின்றன. தனது மதச்சார்பற்ற முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரசு கூட்டணி ஆட்சி, கலவரம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆராய கமிட்டியொன்றை நியமிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஆனால், கோவை கலவரம் தொடர்பாக இப்படிப்பட்ட வெற்று அறிவிப்பை வெளியிடக்கூட "சமூக நீதிக் காவலர்' மு.க.வின் ஆட்சி தயாராக இல்லை; தமிழகமும் வாய்மூடி மௌனம் காக்கிறது. இந்த மௌனத்தை உடைக்காமல், இந்து மதவெறியர்களை வீழ்த்த முடியாது; தண்டிக்கவும் முடியாது!

· வசந்தன்

Monday, November 5, 2007

சி.பி.எம்.இன் இரட்டை நாக்கு....

மிகவும் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை என்று காட்டிக் கொண்டு இந்தியப் போலி கம்யூனிஸ்டுகள் பின்பற்றி வரும் நடைமுறை, எப்போதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும்தான் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுப்பது என்ற பெயரில் காங்கிரசின் சிறுபான்மை ஆட்சியை உண்மையில் நிபந்தனையற்ற முறையில் போலி கம்யூனிஸ்டுகள் ஆதரித்து வருகின்றனர்.எனவேதான் ஆரம்பம் முதலே போலி கம்யூனிஸ்டுகளுக்கு உடன்பாடே இல்லாத பல்வேறு விசயங்களுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எவ்விதத் தயக்கமும் இன்றி முன்னுரிமை அளித்து வருகிறது. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம், சர்வதேச அணுசக்தி கட்டுப்பாட்டு முகமையில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது, அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தம் போன்ற பிரச்சினைகளில் போலி கம்யூனிஸ்டுகளின் கருத்துக்களை மன்மோகன் சிங் அரசு கொஞ்சமும் மதியாது செயல்பட்டது. போலி கம்யூனிஸ்டுகளும் அப்பிரச்சினைகளில் அடையாள எதிர்ப்பு மட்டுமே காட்டி விட்டு, பிறகு கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டனர்.


இதுபோன்றுதான் அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இரண்டாண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங்ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டு, இறுதி முடிவுக்கான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஜூலையில் ஒப்பந்தம் அமலாக்கத்திற்கு வந்தபோது அதை கைவிட வேண்டும் என்று போலி கம்யூனிஸ்டுகள் முதலில் கூறினர். ""முடியவே முடியாது; இடதுசாரிகள் விரும்பினால் ஆதரவை விலக்கிக் கொள்ளட்டும்; ஒப்பந்தத்தை கைவிடுவதானால் நான் பதவி விலகி விடுவேன்'' என்று மன்மோகன் சிங் சவாலும் மிரட்டலும் விட்டபோது போலி கம்யூனிஸ்டுகள் பீதியடைந்தனர். ஒப்பந்தத்தைக் கைவிடுவது என்பதற்கு பதிலாக மறுபேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கோரினர். ""மறுபேச்சு வார்த்தைக்கு இடமே கிடையாது; இரண்டு அரசுகளும் கையெழுத்திட்டு ஒப்பந்தம் இறுதியாகி விட்டது'' என்று அமெரிக்க அமைச்சர் பர்ன்ஸ் திமிராகப் பேசியபோது போலி கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலையை மேலும் தளர்த்திக் கொண்டனர்.


""ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் வேண்டாம்; நிறுத்தி விடவும் வேண்டாம்; அதன் அமலாக்கத்தைத் தற்காலிகமாக தள்ளிப் போடுவதுதான் தமது கோரிக்கை'' என்று போலி கம்யூனிஸ்டுகள் மேலும் கீழே இறங்கினார்கள். ஆனால், மன்மோகன் சிங் அரசோ அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியது. அதன் வெளியுறவு செயலர் சர்வதேச அணுசக்தி கட்டுப்பாட்டு முகமையின் ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான பயண ஏற்பாடுகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார். இந்திய அணுசக்தி நிலைகளை அமெரிக்காவின் கைக்கூலிகள் மேற்பார்வையிடவும் ஒப்பந்தப்படி அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை அமலாக்கவும் அணுசக்தி மூலப்பொருட்களை பெறவுமே அவர் அக்கூட்டத்திற்கு செல்கிறார்.


அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதில் மன்மோகன் சிங் அரசு காட்டிவரும் தீவிரத்தால் மேலும் பீதியடைந்த போலி கம்யூனிஸ்டுகள் தங்கள் உருட்டல் மிரட்டல் நாடகங்களையெல்லாம் முடித்துக் கொண்டு ஒப்பந்த எதிர்ப்பையே கைவிட்டனர். ஒப்பந்தம் குறித்த இடதுசாரிகளின் ஆட்சேபம், சந்தேகம், அச்சம் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கான அரசின் பொறுப்புப் பற்றியே இப்போது பேசுகின்றனர். ஒப்பந்தத்தை விட, அமெரிக்காவின் சர்வதேச அணுசக்தி கொள்கையை வரையறுக்கும் ஹைட் சட்டம் குறித்துத்தான் இடதுசாரிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அந்தச் சட்டம் இந்தியாவை எப்படிக் கட்டுப்படுத்தும் என்று ஆராய்வதே இப்போது முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தினாலோ கைவிட்டாலோ ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது முன்வைக்கின்றனர்.


மன்மோகன் சிங் அரசு இதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துத் தருவதாக வாக்களித்திருக்கிறது. அக்குழுவில் அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை வகுத்ததில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்க அடிவருடிகளே இடம் பெற்றுள்ளனர். இறுதியில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமலாக்குவதில் உள்ள எதிர்ப்புகளையெல்லாம் போலி கம்யூனிஸ்டுகள் கைவிட்டு விட்டனர். இதற்கிடையே அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் "ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களெல்லாம் தலையறுந்த கோழிகள் போன்று அங்குமிங்கும் அலைகின்றனர்' என்று கிண்டலடித்ததை மட்டும் பெரிதுபடுத்துகின்றனர். உண்மையில், இந்திய அரசியல் சட்டப்படியே இந்திய நாடாளுமன்றம் தலையில்லாத முண்டங்களைக் கொண்டதுதான். அந்நிய நாடுகளுடனான ஒப்பந்தங்கள் எதுவும் நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறத் தேவையில்லை. அரசின் நிர்வாக அதிகாரங்களில் தலையிடும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது. அவை நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகுதான் அமலாக்கப்பட வேண்டும் என்கிற தடையுமில்லை. இந்தப் போலி ஜனநாயகத்தின் மூலம் புரட்சி நடத்துவதாகக் கூறும் போலி கம்யூனிஸ்டுகள் தலையில்லாத முண்டங்கள் தவிர வேறென்ன?

Sunday, November 4, 2007

உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் சமூகத்தை மாற்றாது.

பி.இரயாகரன்
04.11.2004

மிழ்ச்செல்வன் பற்றி சிறிரங்கன் எழுதிய கட்டுரையின், எதிர்நிலைத்தன்மை பற்றிய ஒரு (சுய) விமர்சனம். அதேநேரம் எம்மைப் பற்றிய ஒரு பொதுவான, பல கூறு கொண்ட (சுய) விமர்சனத்தை நாம் செய்யவேண்டியுள்ளது.

சிறிரங்கன் எழுதிய கட்டுரை இதுதான். http://srisagajan.blogspot.com/2007/11/blog-post.html வெறும் சரியான அரசியல் உணர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்ட கட்டுரை இது. சமூக உணர்ச்சியை கருத்தில் கொள்ளத் தவறியது. நேரடியான தொலைபேசி ஊடான எமது கலந்துரையாடலில், அவர் அதை ஏற்றுக்கொண்டார். குறித்த விடையத்தில் விமர்சனத்தின் நோக்கம், சமூக அக்கறை தான். ஆனால் அது முழு நிலைமையையும் பார்க்கத் தவறியது. வெறும் உணர்ச்சிக்கு உந்தப்பட்டு, ஒரு பகுதி மீதான குறிப்பாகியது. வெறும் தனிமனித உணர்ச்சிக்கு உட்பட்டு, பாட்டாளி வர்க்க போராட்டத்துக்கு உதவும் வகையில் அது கற்றுக் கொடுக்கவில்லை. மரணங்களை புலிக்குள் குறுக்கிப் பார்ப்பது, அதை புலிக்குள் மட்டும் பொதுமைப்படுத்துவது என்று பொதுக் கோட்பாட்டுத் தவறை அது செய்கின்றது. பிரதான எதிரியை காணத்தவறிவிட்டது.

சிறிரங்கன் தொடர்பாக இதை எழுத்தினாலும், எம்முடன் கருத்தியல் ரீதியாக நிற்கக் கூடிய பலரின் நிலையிது. மிக ஆச்சரியப்படத்தக்க வகையில், இவை அடிக்கடி வெளிப்படுகின்றது. இதனுடனான அரசியல் போராட்டம், என்பது, களைப்பூட்டும் வகையில் தொடருகின்றது. இந்த தவறுக்கான அரசியல் வேர் என்பது, நாம் பாட்டாளி வாக்கம் என்ற அடிப்படையில், எம்மை புடம் போடத் தவறியது தான். இதை பொதுத்தளத்தில் வழிநடத்திய எனது (சுய) விமர்சனமும் உள்ளடங்கியது.

பொதுவாக புலியல்லாத அனைத்து தரப்பையும் ஜனநாயகவாதியாக பார்க்கின்றதும், முற்போக்கானதாக பார்க்கின்றதுமான பலர், எம்முடன் எம் கருத்துடன் உள்ளனர். எம்முன்னுள்ள சோகமே இதுதான். இதனால் நாம் கடும் அரசியல் நெருக்கடியை சந்திக்கின்றோம்.

புலியல்லாத தளம் என்பது, புலிப் பாசிசத்தின் எதிர்வினையால் உருவாகின்றது. இதனடிப்படையில் தான் நாம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான போக்குகளை ஒரே தளத்தில் சந்திக்கின்றோம். எமது சோகம் உண்மையில், பாட்டாளி வர்க்க புரட்சியை விரும்புபவனும், ஏகாதிபத்தியத்துக்காக இயங்குபவனும் புலியல்லாத ஒரே தளத்தில், ஒன்றாக இயங்குவது தான், இது திரிபின் பிரதான அடிப்படையாகி விடுகின்றது. இதை கோடு பிரித்து இயங்குவது என்பது, பாட்டாளி வர்க்கமாக தன்னை அடையாளம் காண்கின்ற ஒவ்வொரு நிலையிலும் தான் சாத்தியமானது.

இது இல்லாத பட்சத்தில், புலியை எதிரியாக ஒரு தலைப்பட்சமாக மிகைப்படுத்தி பார்ப்பது என்ற அபாயம், இயல்பாகத் தோன்றுகின்றது. இலங்கையின் முதலாவது எதிரி அரசு என்பதை, எமது சிந்தனை முறையே மறுதலிக்கத் தொடங்குகின்றது. பிரதான எதிரியின் எடுபிடிகளும் புலியல்லாத தளத்தில் ஆதிக்கம் வகிப்பதை, வேறுபிரித்துப் பார்க்கத் தவறுகின்ற அரசியல் போக்கு எம்மத்தியில் இயல்பாக காணப்படுகின்றது. இதை புரிந்து கொள்ளும் பாட்டாளி வர்க்க அரசியல் நிலைப்பாடு என்பது, இல்லை என்பதே, அரசியல் சிதைவின் உட்கூறாகும். நாம் எம்மை (சுய) விமர்சனம் செய்தேயாக வேண்டும்.

புலியில் பெரும்பான்மையோர் சமூகத்தின் பால் ஏதோ அக்கறையுள்ளவர்கள். புலியல்லாத புலியெதிர்ப்பில் சிறுபகுதியே இப்படி உள்ளது. இது மிக நுட்பமானது, ஆனால் இதுவே உண்மை. ஆனால் பொதுவாக புலியல்லாத தளத்தில் எம்முடன் உள்ளோர் கூட, எதிர்மறையில் புரிந்துள்ளனர்.

இப்படி நாம் சந்திக்கின்ற எதிர்வினைகள், நெருக்கடிகளை உதாரணத்துடன் பார்ப்போம். நாம் ஒரு விமர்சனத்தை செய்யும் போது, அக்கட்டுரையின் இணைப்பைக் கொடுக்கின்றோம். இதை எம்மத்தியில் உள்ளவர்கள் தவறு என்கின்றனர். பிற்போக்குக் கருத்துத்தளத்தை பார்வையிட உதவுவதாக எதிர்க்கின்றனர். இதை மறுத்து நாம் போராட வேண்டியுள்ளது. விமர்சனம் முறையில் நாம் மட்டும் தான், இந்த ஜனநாயக வழிமுறையைக் கையாளுகின்றோம் என்பது உண்மைதான். மற்றவர்கள் செய்யாத விடையத்தை வைத்துக்கொண்டு, எம்மீது இது பற்றி குற்றச்சாட்டாக மாறுகின்றது. எதிரிவர்க்கத்தின் ஜனநாயக விரோதத்தை உள்வாங்கி, அதை செய்யக் கோருகின்ற கோட்பாடு இது. கருத்து விவாதத்தை நாம் மட்டும் தான் நடத்துகின்றோம், என்பதைக் காண்பதில்லை. கருத்துவிவாதத்தில் கருத்தைப் படிக்கும்போது, மறுகருத்தை முழுமையாக புரிந்து உள்வாங்கும் சுயவாற்றல் தான், சமூகத்துக்கு மிக முக்கியமானது. கருத்துத் திணிப்பை அல்ல, தெளிவு அவசியமானது. எதிர்தரப்பை அரசியல் ரீதியாக உள்வாங்கி, அதை புரிந்து கொண்டு, எதிர்வினையாற்றுவதும் தான் சரியானது.

இது போன்று சோபாசக்தியின் இணையத்துக்கான இணைப்பும், அவரின் இணைய கட்டுரைகள் சிலவற்றை மறுபிரசுரம் செய்வதும் கூட இரண்டு திரிபை உருவாக்குகின்றது.

1. அந்த இணையத்தை எம் கருத்து நிலைக்கு ஏற்புடையதாக பார்க்கின்ற வழிபாட்டுக் கண்ணோட்டம்.

2. பிழையான ஒன்றுடன் நாம் எம்மை அறிமுகப்படுத்துவதாக கருதுகின்ற போக்கு. சோபாசக்தியின் தனிமனித நடத்தைகள், கோட்பாடற்று எதிரியுடன் உள்ள அரசியல் உறவு முறைகள் பலவற்றை முன் வைக்கின்றனர்.

இந்த இரண்டுமே தவறான போக்கு. சோபாசக்தி எமது இணையத்துக்கு இணைப்பைக் கூட கொடுத்தது கிடையாது தான். எனக்கு கல்வெட்டு வெளியிட்டவர் தான். சமூகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூட, அவரின் இணையம் பிரசுரிக்கின்றது. இவ்வளவு இருந்தும் நாம் அவர்களுடன் இணங்கி நிற்பது, அவரிடம் காணப்படும் மக்கள் சார்பான குறைந்தபட்ச கருத்தை ஊக்குவிக்கும் எல்லைக்குள் தான். வேறு எந்த நோக்கமும், இதற்கு வெளியில் கிடையாது. சமூகம் பற்றிய அக்கறையுள்ள எந்த சிறு முயற்சியையும், நாம் எதிர் மனப்பாங்கில் அணுகமுடியாது. அவர்கள் எமக்கு எதிராக வேலை செய்தாலும், நாம் அதைச் செய்ய முடியாது. இந்த வகையில் தான், நாம் கூட்டங்களுக்கு செல்லுகின்றோம். அங்கு அதை உணர்த்த முனைகின்றோம். சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுள்ள ஒவ்வொருவரையம் நெருங்க முனைகின்றோம்.

மற்றொரு உதாரணம். லண்டன் "தேசம் " பத்திரிகையை எடுக்கலாம். எமக்கு எதிராக அவதூறு கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. தனிமனித குற்றம் காணவிழைவது முனைப்பாகியுள்ளது. ஆனால் எமது இணையத்தில் ஒரேயொரு இணைய இணைப்பு அவர்களுடையதே. அவர்கள் புலி மற்றும் புலிnதிர்ப்பு அணியுடன் அரசியல் உறவுகளை கொண்ட நிலையிலும், நாம் அதில் காணப்பட்ட சரியான அம்சங்களின் அடிப்படையில் அணுகுகிறோம். அரசியலுக்கு வெளியில் திட்டமிட்ட தனிமனித தாக்குதலாக, அவதூறுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நிலைக்குள் அவர்கள் இயங்கத் தொடங்கியுள்ளனர். தேசம் பற்றிய தனியான விவாதத்தின் தேவையை, அண்மைய அவதூறுகளின் நோக்கம் ஏற்படுத்தியுள்ளது.

இப்படி எம்முடன் இல்லாத நபர்களின் கருத்துகள் மீதான அணுகுமுறை என்பது, அவர்கள் எந்த வகையில் மக்களுடன் நெருங்கி வருகின்றார்களா என்பதை அடிப்படையாக கொண்டது. அவர்கள் தோழர்களாகி விடுவதில்லை, தோழர்களாக்க முனைகின்றோம், முடியாவிட்டால் எதிரியின் பக்கம் செல்வதை தடுக்க முனைகின்றோம்.

எம் மத்தியில் உள்ள திரிபுகள், தவறான கண்ணோட்டங்கள் பல. எமது சிந்தனை முறையில் புலியல்லாத புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய தர்க்கங்கள் வாதங்கள் எம்மை ஆக்கிரமித்துவிடுகின்றது. அதுவே எமது மாற்று சிந்தனை முறையாகி விடுகின்றது. எதிரியை இனம் காண மறுக்கின்றது. எதிரியை மிகையாக ஒரு தலைபட்சமாக்குகின்றது. இது எம் மத்தியில் உள்ள சிந்தனை முறையை, முழுமையாக ஆக்கிரமித்து நிற்கின்றது.

உதாரணமாக கரும்புலிகள் கொல்லப்பட்டதை, புலிகளின் பலிகொடுப்பாக பார்க்கின்ற சிந்தனை என்பது, எந்த வகையில் புலியெதிர்ப்பின் சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டது. வேறுவிதமாக இதை கேட்கலாம்? புலியெதிர்ப்பு சிந்தனை முறை, எந்த வகையில், அரசு மற்றும் ஏகாதிபத்திய முறையில் இருந்து வேறுபட்டது.

இந்த எல்லைக்குள் எத்தனை விதமான கருத்துகள். சொல்லுங்கள் தோழர்களே. நாங்கள் ஒரே தளத்தில், சிலவேளைகளில் எல்லோரும் ஒரே சிந்தனை முறையில் உள்ளோம். உண்மையில் நாங்கள் எமக்கான ஒரு சரியான சிந்தனை முறையை உருவாக்கவில்லை. புலி அல்லது புலியெதிர்ப்பு சிந்தனை முறைக்குள் நாம் நிற்கின்றோம். துயரமான உண்மை. நாம் எம் பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில் பகுத்தாய முடிவதில்லை. வெறும் இந்த இரண்டு தரப்பு உணாச்சிக்குள்ளும் பலியாகின்றோம்.

புலியல்லாத தரப்பை ஜனநாயகவாதியாக பொதுமைப்படுத்துவது,. அத்துடன் அதை முற்போக்காக பார்க்கின்றோம். ஆனால் உண்மையில் அவர்களின் நடைமுறைகள் தான், எம்மை அவர்களில் இருந்து விலக வைக்கின்றது. அவர்களின் அரசியலல்ல. எனது போராட்டமே இதற்குள் தான் நடத்தப்படுகின்றது. உண்மையில் எ(ன)மது கருத்துப் பலம் என்பது கருத்தால் அல்ல, இந்த இடைவெளியில் தாங்கி நிற்பதை நாம் சுயவிமாசனத்துடன் நாம்(ன்) ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இலகுவாக இதை புரிய, இரயாகரனின் தனிப்பட்ட நேர்மை, இதில் இதைப் பாதுகாக்கின்றது. இது தவறான அரசியல். தனிமனித வழிபாட்டு அரசியல். இன்றைய நிலையில், எனது தனிப்பட்ட நேர்மை சிதைந்தால், இந்த கருத்துப் போக்கு வெற்றிடமாகிவிடும் அவலம். கருத்தால் மோத முடியாத எதிரிவர்க்கம், இதைச் செய்யத்தான் இரயாகரனை வலைபோட்டு தேடுகின்றனர். இப்படி உண்மையில் பாட்டாளி வர்க்க சிந்தனை முறையை உள்வாங்கிக கொள்ளாமை என்பதே, எம் மத்தியில் உள்ளது.

ஜனநாயகவாதி, முற்போக்குவாதி யார் என்றால், புலிக்கு எதிரானவராக இருந்தால் போதும் என்ற தவறான கண்ணோட்டம், எம்மத்தியிலும் ஆழமாகவுள்ளது. இதன் விளைவு எமக்கு எதிரானதாக மாறுகின்றது. புலியெதிர்ப்பு மீதான விமர்சனத்தை, அதன் ஏகாதிபத்திய அரசு சார்புப் போக்கை அம்பலப்படுத்தும் போது, அவதூறாக அவசியமற்றதாக காட்டுகின்ற அரசியல் போக்கை எம் மத்தியில் சந்திக்கின்றோம். ஏன் தனிமைப்படுவதாக காண்பது கூட நிகழ்கின்றது. இப்படி சமரசவாதமும், கடும் தீவிர எதிர்ப்புவாதமும் எம்மத்தியில் உள்ளது. கோட்பாட்டு ரீதியாக வலது திரிபும் இடது திரிபும் உள்ளது.

எமது அணியின் பொதுத்தளம் ஒன்றாக இருப்பதால், புலி பற்றிய ஒருதலைப்பட்சமான, மிகைப்படுத்திய கருத்துகளாக மாறுகின்றது. புலி தான் எதிரி, புலியல்லாதவர்கள் எதிரியல்ல என்ற நிலை கட்டமைக்கப்படுகின்றது. இது பொதுத்தளத்தில் நடுநிலைவாதிகளை உருவாக்குகின்றது. பாட்டாளி வர்க்கத்துடனும் புலியெதிர்ப்பு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் நடுநிலைக் கோட்பாட்டை உருவாக்குகின்றது. இன்னுமொரு தளத்தில் இதுவே பாட்டாளி வர்க்கத்துக்கும் புலிப்பாசிட்டுகளுக்கும் இடையில் நிற்கின்ற, சமநிலைக் கோட்பாடு உருவாகின்றது. எமது சமூக அமைப்பு எங்கும் இது புரையோடிக் காணப்படுகின்றது. எமது சிந்தனை முறையில் இதன் தாக்கம் பலமானது.

இப்படி உருவாகும் ஒரு தலைப்பட்சமான சிந்தனை, பாட்டாளி வர்க்கத்துக்கு சேவை செய்வதில்லை. புலியல்லாத தளத்தில் நின்று, நிகழ்ச்சிகளை ஆராய்கின்ற போது என்ன நடக்கின்றது. வெறும் புலிகள் என்ற நோக்கில் இருந்து மட்டும், அதன் ஊடாக எதிராக எதிர்வினையாற்றுகின்ற அரசியல் மிக மிகத் தவறானது. எம்மைச் சுற்றிப் புலிகள், புலியெதிர்ப்பு என்ற இரண்டு ஊடகவியல் தகவல்களும், தத்தம் பிரச்சாரத்தை எம்மீது திணிக்கின்றது.

இதை அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது எதிர்வினை என்பது வெறும் உணர்ச்சிக்கு உட்பட்டதாக அமைந்து விடுகின்றது. இதைத்தான் சிறிரங்கனின் கட்டுரை செய்துள்ளது. எம்முடன் உள்ள சிலர், அந்தக் கட்டுரை படிக்காத நிலையில் கூட இதைப் பிரதிபலித்தனர். ஆச்சரியப்பபடத்தக்கதான ஒற்றுமை, தவறான அரசியலில். எதை முறியடிக்க நாம் போராடுகின்றோமோ, அதை நாம் பிரதிபலிக்கின்ற எழுதுகின்ற அவலம். புலியெதிர்ப்பில் இருந்து, நாம் எப்படி வேறுபடுகின்றோம். அவர்கள் கூறுவது போல், அப்படி ஒன்றும் இல்லையா? பாட்டாளி வர்க்க நிலைப்பாடு எதுவும் கிடையாதா?

சிறிரங்கனின் கட்டுரையின் உள்ளடகத்தின் சாரம் ஒற்றைப் பரிணாமத்தில் சரியாக இருந்த போதும் கூட, அது முழுமையானதல்ல. எதிரியை கணக்கில் எடுக்கத் தவறியது. புலியெதிர்ப்பைக் கணக்கில் எடுக்கத் தவறியது. இணையத்தில் ஈ அடித்து ஆத்திரமூட்டும் சிலரை குறியாக வைத்து எதிhவினையாற்றுவது, மொத்த சமூகத்துக்கும் பொருந்தாது. அதுவே மிகமிகக் குறுகிய வட்டம்.

இந்தக் கட்டுரை தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறானவர்கள் மத்தியில் வைக்கப்பட்டது. இந்த மரணத்தை அரசு எப்படி பார்க்கின்றது. புலியெதிர்ப்பு எப்படி பார்க்கின்றது. என்ற எந்த ஆய்வும், இதற்குள் உள்ளாக்கப்படாமை வெளிப்படையானது. ஒரு அரசியல் தொடர்ச்சியில் உள்ள இயல்பான பொறுப்பணர்வு கொண்ட கூட்டு செயல்பாட்டின் பொதுத்தளத்தை கவனத்தில் எடுக்கத் தவறியது. தனிமனித உணர்ச்சி முன்னிலைப்படுத்தப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் கூட்டு செயற்பாட்டுக்குரிய உணர்வு நிலை, அந்தக் கணம் மறக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துக்கு இதனால் என்ன நன்மை. இந்த வகையில் இந்த போக்குகள் மீதான (சுய) விமர்சனம் அவசியமானது. இதை பலர் பல தளத்தில் கையாளுகின்றனர்.

கரும்புலிகள் 21 பேர் கொல்லப்பட்ட நிகழ்வை, வெறும் பலிகொடுப்பாக காட்டுகின்ற வாதம் வடிவம் தவறானது. இதை புலியெதிர்ப்பு கூறுகின்றது. இதையே நாம் சொல்வதாக இருந்தால், எம்மால் எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது. பாட்டாளி வர்க்க சிந்தனையை உணர்வுபூர்வமாக உள்வாங்காமையால், அதை இலகுவாக பலிகொடுப்பாக மறுக்கின்றது. அதில் ஒரு தியாகம் உண்டு எனபதை, ஏன் பார்க்க மறுக்கின்றது. நாங்கள் அந்த தியாகத்துக்கு தயாராக உணர்வுபூர்வமாக இல்லை எனபதனாலா, அதை வெறும் பலிகொடுப்பாக காட்டி மறுக்க முடிகின்றது.

இதன் பின் உள்ள புலிகளின் அரசியலை விமர்சிக்கலாம், தியாகத்தையோ அந்த உணர்வைவோ அல்ல. புலியெதிர்ப்பு போராட்டத்தை மறுத்து, பொறுக்கித் தின்பதை கற்றுக் கொடுக்கின்றது. தியாகத்தையோ அல்லது சமூக உணர்வையோ அல்ல. நாம், நாங்கள் எங்கே எப்படி நிற்கின்றோம்.

தாக்குதலை, தாக்குதலை ஒட்டிய வடிவத்தை எப்படி? நாம் விமர்சிக்க முடியும். பாட்டாளி வர்க்கம் இந்த இடத்தில் இருந்தால், எதிரிக்கு எதிராக இது போன்ற தாக்குதலை செய்யாதா? புலிகளின் அரசியலை விமர்சிக்க முடியும். புலிகள் இதன் மூலம் கொடுக்கும், மக்களுக்கு எதிரான இதன் விளைவுகளை, நாம் விமர்சிக்க முடியும். தாக்குதல் வடிவத்தை, தியாகத்தை எப்படி விமர்சிக்க முடியும். அரசு நடத்துகின்ற காட்டுமிராண்டித்தனமான விடையங்களை, ஏன் நாம் தவிர்த்துவிடுகின்றோம். அதை ஆதரிக்கின்ற ஒரு உள் உணர்வோட்டம், புலியெதிர்ப்பு கோட்பாடாக மாறிவிட்டதை அல்லவா எடுத்தியம்புகின்றது. ஆம் புலிகளின் நடத்தையாலும், புலியெதிர்ப்பின் வலைக்குள் நாம் விழுங்கப்பட்டு கொண்டு இருக்கின்றோம்.

தாக்குதல்கள் என்பது, எந்தப் போராட்டத்திலும் உள்ளவை தானே. சிங்களப் படையில் இறப்பவர்கள், பலி கொடுப்பில்லையா? யார் அழுகின்றனர்? புலியெதிர்ப்பு இதைப் பேசுவதில்லை: அவர்கள் உயிர் இல்லையா! புலிகள் மட்டுமா சுயநலம் கொண்டவர்கள்? சிங்கள அரசு இல்லையா? இதை நாம் ஏன் குறைந்தபட்சம், ஒரு தட்டில் கூட போடத் தவறுகின்றோம்.

ஒரு போராட்டத்தில் இழப்புகள் இயல்பானது தானே. அதை புலிகள் செய்தால் மட்டும் தவறு என்பது, அப்படிக் காட்டுவது புலியெதிர்ப்பு வாதத்தின் அடிப்படையிலானவை. இதே இடத்தில் பாட்டாளி வாக்கம் இருந்தால் இழப்பு இருக்காதா? இதை புரிந்து கொண்டு விமர்சனத்தை கட்டமைப்பது அவசியமானது. பாட்டாளி வர்க்கம் போராட்டம் நடைபெற்றால், இதுபோன்ற இழப்புகள் இருக்குமா? இருக்காதா? நிச்சயம் இருக்கும். இழப்புகள் எந்த வர்க்கத்துக்கு, எப்படி நன்மை பயக்கின்றது என்ற கேள்விகளில் இருந்து, இதை நாம் ஆராயக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்செல்வன் கொல்லப்பட்டதையும், அநுராதபுரத்தில் கொல்லப்பட்ட நிகழ்வையும் ஒரே தட்டில் ஒன்றாக வைத்துப் பார்ப்பது அரசியல் தவறாகும். அரசியல் ரீதியாக புலியெதிர்ப்பின் எல்லைக்குள் இது சரிந்து வீழ்வதாகும். உண்மையில் இதை புலியல்லாத பொதுத்தளத்தில் வைத்து மதிப்பிட வேண்டும். புலி என்ற எல்லைக்குள் வைத்து குறுக்கி மதிப்பிடுவது, புலியெதிர்ப்பின் உள்ளடக்கமாகும்.

இந்தச் சம்பவத்தை எடுத்தால் ஒன்று ஒரு தாக்குதலுக்கு சென்ற போது கொல்லப்பட்டவர்கள். மற்றது எதிர்தரப்பு தாக்குதலின் போது கொல்லப்பட்டது. இரண்டும் ஒன்றல்ல. இந்த மரணத்தை மதிப்பிடும் போது, இரண்டையும் ஒன்றாக்குவது தவறானது. ஒன்றில் மரணம் எதிர்பார்க்கப்படுவது. இரண்டாவது எதிர்பாராது நடப்பது. இதன் உணர்வலைகள் வேறுபட்டது. ஒன்றாக அதை சிறுமைப்படுத்துவதும் வரி, காட்ட முனைவது, உண்மையான அதன் பின்னுள்ள தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும். இங்கு விமர்சனம் உண்டு, ஆனால் தியாகத்தை சரியாக மதிப்பிட வேண்டும். மனித தியாகத்தைக் கொச்சைப்படுத்துகின்ற புலியெதிர்ப்புவாதத்தின் இழிநிலைக்கு நாங்கள சரிவது என்பது அனுமதிக்க முடியாது.

தியாகங்கள் தவறான அரசியல் சார்ந்து இருந்தாலும் கூட, அது மதிக்கப்பட வேணடும். தவறான தியாகத்தின் பின்னுள்ள அரசியல் அல்லவா விமர்சிக்கப்பட வேண்டும். தியாகத்துக்கு பதில் பொறுக்கித் தின்னுகின்ற நரிக் கூட்டத்தின் ஜனநாயகமும் அதன் முற்போக்கும் கேவலமானது. இதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது மன்னிக்க முடியாது. நாங்கள் கோட்பாட்டு ரீதியாக அந்த நிலைக்கு சரிந்து விடுகின்றோம் என்பதே அர்த்தம்.

தியாகங்கள் எந்த போராட்டத்திலும் நடப்பவை தான். இதை புலியெதிர்ப்பு போல் நாங்கள் மறுக்க முடியுமா? எங்கள் அரசியல் என்ன? தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நிகழ்வு போன்று, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் போது நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை. இதை பெர்துமைப்படுத்த முடியுமா? முடியாது.

அடுத்து தலைமையையும் அணிகளையும் சமப்படுத்தி பார்க்கின்ற கோட்பாடு. மலிவான அரசியல் நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. எப்படியும் கொச்சைப்படுத்திவிட வேண்டும் என்ற புலியெதிர்ப்பு நிலை, இதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. ஒரு போராட்டத்தின் தலைமைக்கும் அணிகளுக்கும் வேறுபாடு உண்டு. இது எதிர்ப்புரட்சியில் சரி, புரட்சிகர போராட்டத்திலும் கூட உள்ளாhந்த அம்சம் உண்டு. எதிர்ப்புரட்சிகர அணியின் தலைமையையும், அணிகளையும் ஒன்றாக வைத்து அணுகுவது தவறானது. அவர்களைச் சரியான பாதைக்கு வென்று எடுத்தல் என்பதில், ஒரே அணுகுமுறை என்பது எவ்வளவு பாதகமானது. சமப்படுத்தல் என்பது, எந்த ஆய்வு முறையிலும் தவறானது. தலைமையின் முக்கியத்துவம், அதுவும் போராட்டத்தில் மிக முக்கியமானது.

அரசியலை முன்வைக்காத புலியெதிர்ப்பின் சாரம் எவ்வளவு தான் சரியானதாக இருந்தாலும் கூட, அது தவறானது தான். கோயிலின் முன் கூடி நிற்கும் மக்கள் முன், கடவுள் என்பது பொய், நீங்கள் முட்டாள்கள் என்று சொன்னால், என்ன நடக்கும். பைத்தியம் என்பார்கள். இதையா நாங்கள் செய்யப் போகின்றோம் ?

சமுதாயத்தின் அவலத்தை காண்கின்றோம். அதன் அடிமைத்தனத்தைக் காண்கின்றோம். இதனால் நாம் எப்படியும் செயல்பட்டு விட முடியுமா? முடியாது. உண்மையாக இதை மாற்ற விரும்புகின்றோமா? இங்கு அற்ப மனவுணாச்சிக்கு இடமில்லை. எதையும், சமூகத்தில் இருந்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மாற்றத்தை அடைய குறுக்கு வழி கிடையாது. தனமனித உணர்ச்சியால் அதை சாதிக்க முடியாது. இதற்குள் நின்றால், மொத்த போராட்டத்தையே நாசம் செய்கின்றோம் என்று அர்த்தம்.

நாங்கள் பாட்டாளி வர்க்கமா? இதை நாங்கள் உணருகின்றோமா? கருத்துக்களை, சிந்தனையை பாட்டாளி வர்க்க நிலையில் நின்று செய்கின்றோமா?

தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள், அவதூறுகள், இழிவாடல்கள் பல தளத்தில் நடக்கின்றது. இதையேவா நாம், கருப் பொருளாக கொள்ளப் போகின்றோம்? எமது போராட்டம் மக்களுக்கானது என்பதை மறக்கலாமா? ஆத்திரமூட்டலுக்குரிய உணர்ச்சிகளுக்கு பதிலளித்துக் கொண்டு இருக்கப் போகின்றோமா?.

நான் என்னை ஒரு வர்க்கமாக உணர முடியவில்லையே ஏன்? பாட்டாளி வர்க்க உணர்வில், நாம் நடைமுறையில் போராடுகின்றோம் என்றால், நிகழ்ச்சிகளை எப்படி எதிர் கொள்வோம்? உண்மையில் பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருக்கவில்லை என்பது (சுய)விமர்சனத்துக்குரியது.

கற்றுக்கொடுத்தல் மட்டுமா இல்லை, நாம் முதலில் கற்றுக்கொள்வதும் அவசியம். சமூகத்தினை ஆழமாக நுட்பமாக புரிந்து கொள்வது அவசியம். நாங்கள் சரியான கருத்துள்ளவராக இருக்கலாம். அதனால் சமூகத்தை கற்றுவிட்டோம் என்பதல்ல.

பாருங்கள் தமிழ்ச்செல்வனின் மரணத்தை சமூகம் புரிந்து கொண்டது எப்படி? நாங்கள் புரிந்து கொண்ட வடிவிலா? இல்லை. நிச்சயமாக இல்லை. கட்டமைக்கும் பிரச்சாரங்கள் முதல் பொய்ப் பித்தலாட்டங்கள் என்று எப்படி எந்த பிம்பத்தை கட்டியிருந்தாலும், சமூகம் அதை எப்படி பார்க்கின்றது என்பது முக்கியமானது. இங்கு எமது அறிவு சார்ந்த உணர்ச்சிக்கும் இடமில்லை. பல விடையத்தில் பல தளத்தில் இதை நாம் உணருகின்றோம். இதை (சுய) விமர்சனம் செய்தேயாக வேண்டும்.

புலியிசத்தை தமிழ் தேசியமாக, தேசிய விடுதலைப் போராட்டமாக வரிந்து கொண்டு திணிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் நடக்கின்ற மரணத்தை, எழுந்தமானமாக காட்டமுடியாது. சம்பவங்கள் கூட ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. அப்படித் தான் பரட்சியும். இங்கு உணர்ச்சிக்கு, ஆவேசத்துக்கு இடமில்லை.

தமிழ்செல்வன் பற்றிய எமது மாறுபட்ட கருத்தைச் சொல்லாமல் இருப்பது கூட அரசியல் தான். சொல்வது மட்டுமா அரசியல்? தமிழ்ச்செல்வனை அரசியல் தலைவராக அரசியல் ரீதியாக புலிகளால் எப்படி காட்ட முடியவில்லையோ, அதே போல் அரசியல் ரீதியாக நாம் காட்டத் தவறுவது, எமது சிந்தனை முறை அப்படி இல்லாமல் இருப்பது (சுய) விமர்சனத்தக்கு உட்பட்டது.

இது எமது கருத்து சார்பின் தோல்வி. எமது கருத்து சரி என்ற நம்புகின்ற ஒவ்வொருவரும், அதை கருத்தியல் ரீதியாக அணுகுவது என்பது ஒரு சிந்தனை முறையாக இருக்க வேண்டும். இதை நாம் வெல்லத் தவறினால், நாம் (பாட்டாளி வர்க்கம்) தோற்கடிக்கப்படுவோம்.

சமூகப் பொறுப்புணர்வு என்பது கூட்டுப் பொறுப்புணர்வு. இதை யாரும் மறக்க முடியாது. என்னிடம் கேட்பது, என்னை மையப்படுத்துவது தவறானது. பாட்டாளி வர்க்க சிந்தனையை அடிப்படையாக கொள்ள மறுப்பதன் விளைவு இது. இதை நாம் (சுய) விமர்சனத்துக்கு உள்ளாக்கியாக வேண்டும்.

நாம் சந்திக்கவுள்ள புதிய நெருக்கடிகளுக்கு இது அவசியம். எமது போராட்டத்தின் வீச்சு, தவிர்க்க முடியாது மார்க்சிய வேடத்தில் பலர் அணுகுவதை துரிதமாக்கியுள்ளது. புலி மற்றும் புலியெதிர்ப்பு அணிகளின் ஒரு பகுதி, மார்க்சிய மற்றும் அரசியல் முகத்துடன் களத்தில் மோதுவதை துரிதமாகியுள்ளது. எமது போராட்டத்தின் போக்கில் இருந்து கோட்பாட்டு ரீதியாக தப்பிப்பிழைக்க, அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்தித்துள்ளது. நுட்பமான இந்த மக்கள் விரோதப் போக்கை எதிர்கொள்ளும் நாம், எமது போராட்டத்தின் அடுத்தகட்டத்தை வெல்ல எம்மை (சுய) விமர்சனத்துக்குள்ளாக்கவேண்டும்.