தமிழ் அரங்கம்

Saturday, May 9, 2009

ஈழம் - பதுங்கு குழி - குறும்படம்

வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம்.

அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே.

மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார். போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பதாயிரம் மக்கள் ......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கிழக்கு கிரிமினல்களின் 'உதயம்" போல் தான், வடக்கின் 'வசந்தமுமாகும்"

இன்று கிழக்கில் எது நடக்கின்றதோ, அதுதான் நாளை வடக்கிற்கும். இதையே சிங்கள மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் 'மாண்புமிகு" பேரினவாதியான ஜனாதிபதியும் கூறுகின்றார்.

கிழக்கில் கருணா – பிள்ளையான் என்ற இரு கிரிமினல்கள், அரசின் துணையுடன் ஒரு மாபியாத் தொழிலையே நடத்துகின்றனர். இதுவோ சர்வதேச கிரிமினல்களுடன், வலைப்பின்னல் கொண்டது.

அண்மையில் கசிந்து வெளியாகும் செய்திகளின்படி, கிழக்கு 'விடிவெள்ளிகள்" மனிதர்களை கடத்திச்சென்று உடல் உறுப்புகளை கூட சர்வதேச சந்தைக்கு சப்ளை செய்வதாக தெரிகின்றது. ஒருபுறம் கப்பத்தை அறவிடுவது மறுபக்கம் உடல் உறுப்புகளை கூறுபோட்டு விற்பது வரை அரங்கேறுகின்றது.

அண்மையில் கிழக்கு 'விடிவெள்ளி"கள் மட்டக்களப்;பில் கொன்ற சிறுமி தினுஷிகாவின், இரு கண்களும் சிறுநீரகமும் கூட அகற்றப்பட்டு இருந்ததாக.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 8, 2009

ஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்

''ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் போருக்கு சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் காங்கிரசுக்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசு ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, காங்கிரசுதி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே இத்தேர்தலில் தமிழர் கடமையாக இருக்க முடியும். களத்தில் சம போட்டியில் நிற்கக் கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே, இவர்களைத் தோற்கடிக்க முடியும். இவர்களை எதிர்த்து நிற்கும் வலிமையான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயமாக அந்த வலிமையான கூட்டணி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான்!'' என்று இச்சந்தர்ப்பவாதத்துக்குக் கொள்கை சாயம் பூசி பேட்டியளித்துள்ளனர். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும் "விடுதலை' இராசேந்திரனும்.

பார்ப்பனபாசிசத்தைச் சித்தாந்தமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, தொடக்கத்திலிருந்தே ஈழ விடுதலைப் போரை எதிர்த்தும் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும் வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள பாசிச அரசின் தற்போதைய கொடிய போரின்போது கூட, ''போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள்'' என்று.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இன்று செய்யவேண்டியது என்ன?

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், நாம் முன் செல்ல வேண்டும். அரசு மற்றும் புலியுடன் இருக்க கூடிய அனைத்து விதமான அரசியல் உறவுகளுக்கும், அதை பிரதிநிதித்துவம் செய்யும் நபர்களுடனான அரசியல் உறவுகளுக்கும் முதலில் முடிவு கட்டவேண்டும்.

அவர்கள் மேல் விமர்சனம், அம்பலப்படுத்தல், மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டுதல் மூலம், எம் அரசியல் தனித்துவத்துடன் நாம் முன்செல்லவேண்டும். ஒரு சமுதாயப் புரட்சிக்காக, எதிர்ப்புரட்சி சக்திகளை தனிமைப்படுத்தி, நாம் தனித்துவமாக செயல்படவேண்டும்.

ஓடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலனையும், தமிழ்மக்களின் நலனையும், இன்று நாம் மட்டும் தான் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்;. இதற்கு நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க, தனித்து போராட வேண்டியுள்ளது. அதாவது அரசு சார்பு 'ஜனநாயகம்" மற்றும் புலி சார்பு 'தேசியம்" பேசும் சக்திகளுக்கு வெளியில், நாம் தனித்து தனித்தன்மையுடன் போராட வேண்டும். எம்மருகில் அக்கம் பக்கமாக இயங்கும் இவ்விரண்டுமே, எதிர்ப்புரட்சிக் கூறுகளாகிவிட்டது. தேசியம், ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கையை தவறாக கையாண்டு, தனக்கேற்ற எதிர்ப்புரட்சி கூறாகியுள்ளது. இதி.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 7, 2009

இந்திய சீனா மேலாதிக்க முரண்பாடும், இலங்கையின் எதிர்காலமும்

இந்தியாவானது பேரினவாத இனவொடுக்குமுறையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது. இதுவே தமிழினத்துக்கு எதிரான, கடந்த 30 வருட வரலாறாகும். இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக உருவாக்கியது.

ஆனால் ஏகாதிபத்திய சார்பு புலிகள் இயக்கம் தம் பாசிச மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், இந்தியா சார்புக் குழுக்களை சேர்த்து அழித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கம் தான் நிறுவிய வழியில் சிதறிப்போனது.

இருந்தபோதும் சிங்களப் பேரினவாதிகள் புலிகள் மேல் நடத்திய தாக்குதலினால், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய இந்தியா, அதை தமிழின அழிப்பாகக் காட்டியது. இதன் மூலம் நேரடியான ஆக்கிரமிப்பை நடத்தி, தன் மேலாதிக்கத்தை நிறுவமுனைந்தது. ஆனால் புலிகள் மற்றும் சிங்கள அரசுடனான இந்தியாவின் மோதல் போக்கால், இதிலும் தோல்வியை தழுவியது. இப்படி இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலனை, இலங்கையில் தான் விரும்பியவாறு இந்தி..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 6, 2009

பார்ப்பனிய பூனூலாகிப் போன தமிழீழம்

பிரபாகரனின் தமிழீழம் இன்று பாப்பாத்தி ஜெயலலிதாவின் தமிழீழமாக மலர்கின்றது. அப்படி நம்புகின்ற, நம்ப வைக்கின்ற ஈழத் தமிழ் முட்டாள்கள். பெரும்பான்மை தமிழன் அரோகரா என்று கூறியபடி, அதற்கு பின்னால் எங்கே ஒடுகின்றோம் என்று தெரியாது ஓடுகின்றனர். பலதரம் தடுக்கி வீழ்ந்த இவர்கள், மீண்டும் மீண்டும் குருட்டு நம்பிக்கையுடன் எழுந்து ஒடுகின்றனர்.

பிரபாகரன் ஆகாய விமானம் வரை வேடிக்கை காட்டி இந்தா தமிழீழம் என்றவர். இன்று அவர் மீதான நம்பிக்கையை படிப்படியாக இழக்க, பார்ப்பனியம் வழிநடத்தும் அம்மா ஜெயலலிதாவின் கற்பனை தமிழீழத்தில் இன்று சரணடைகின்றனர்.

வலதுசாரிய புலியிசம் தன் அந்திமத்தில் கூட, தமிழினத்தை கனவுலகில் நிலைநிறுத்த முனைகின்றது. அதை இந்தியாவின் றோவின் பின், மீளவும் வடியவிடுகின்றது. எந்த றோ இந்த தமிழீழத்தை வலதுசாரி பாசிசமாக வளர்த்து அழிக்க இதில் தலையிட்டு, பணமும் பயிற்சியும் வழங்கியதோ, அந்த றோவின் பின் மீண்டும் புலிகள். இப்படி றோ மக்களை சார்ந்திருக்கக் கூடிய, அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தொழித்தது. இன்றும் மக்கள் சொந்தமாக எதையும் அணுகக் கூடாது என்ற றோவின் அக்கறை, ஜெயலலிதா ஊடாக புலியிசத்துக்கு ஆப்பு வைத்துள்ளது. தமிழீழத்தை வைத்து சு.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 5, 2009

தமிழினத்தையே நலமடிக்கின்றனர் பேரினவாதிகள்


இவையெல்லாம் பேரினவாதம் திட்டமிட்டு தமிழ்மக்களை வதைக்க, வதைக்கும் முகாமாக மாற்றியுள்ளது. புலிகளிடம் இருந்து மக்களை மீட்க 'மனிதாபிமான" யுத்தம் என்ற பெயரில், ஆயிரக்கணக்கில் படுகொலைகளை தமிழ் மக்கள் மேல் அரங்கேற்றியது இந்த பாசிச அரசு. இந்த படுகொலையில் இருந்து தப்பி வந்த மக்களை 'மீட்பு" என்ற பெயரில் இன்று பிடித்துவைத்துள்ள கொலைகாரர்கள், அந்த அப்பாவி மக்களையே பலாத்காரமாக சிறைவைத்துள்ளது. மக்களுக்கே இந்தக் கதை என்றால், சரணைடைந்த புலிகள் மற்றும் பிடிபட்ட புலிகளுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சரணடைபவர்கள் வதைக்கப்பட்டு, சிதைக்கப்படுகின்றார்கள். இதைவிட அவர்கள் மரணம் மேன்மையானதாக இருந்திருக்கும்.

புலியல்லாத அப்பா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 4, 2009

கிழக்கின் 'உதயமாக" உருவான 'விடிவெள்ளிகளும்", தினுஷிகாவின் படுகொலையும்

மீண்டும் மீண்டும் தொடரும் கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள். கிழக்கின் 'உதயம்" பெற்றெடுத்த 'விடிவெள்ளிகள்" மற்றொரு குழந்தை தினுஷிகாவின் படுகொலையாக அதை அரங்கேற்றி காட்டியுள்ளது.

அண்மையில் சிறுமி வர்ஷாவின் படுகொலையும், அதைத் தொடாந்து கைதான 'விடிவெள்ளிகள்" மூலம், இதன் பின்னணி உண்மை வெளிவராமல் தடுக்க அடுத்தடுத்து போட்டுத் தள்ளிய மாண்புமிகுக்கள் கொண்ட 'உதயம்" தான் கிழக்கில் இன்று உதித்துள்ளது.

இப்படி மாண்புமிகு கருணா முதல் பிள்ளையான் வரையான சமூக விரோதிகளுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், பேரினவாத அரசை எப்படி குனிந்து நக்குவது என்பதில் தான் அடங்கியுள்ளது. இதன் மூலம் அரசியல் பரம்பரையினர் குற்றங்களை, தம் வெள்ளை வேட்டிக்கு பின்னால் மூடிமறைக்க முடிகின்றது. பேரினவாத பாசிசம் இப்படி சமூக விரோத தமிழ் பாசிட்டுகளின் .......
........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மாற்று அரசியலற்ற அனைவரும், பேரினவாதத்தின் பின்தான் நடை போடுகின்றனர்

புலிகள் தாமல்லாத அனைத்தையும் பாசிச முறையில் மறுத்த போது உருவான முரண்பாடு என்பது, வெறும் புலியெதிர்ப்பு அரசியல் வரை மாறியது. இப்படி சென்றவர்களின் பெரும்பகுதி, புலியை ஒழிக்க பேரினவாதத்தையும் இந்தியப் பேய் அரசையும் ஆதரித்தனர்.

மறுபக்கத்தில் என்ன நடந்தது!? எந்த ஒரு மாற்று அரசியல் வழியையும் முன் வைக்காதவர்கள், புலியுடனான தம் அரசியல் முரண்பாட்டுக்கு எப்படி தீர்வு கண்டனர், காண்கின்றனர். அவர்களை அறியாமல், அரசின் பின் தான் அதற்கான தீர்வை இனம் காண்கின்றனர். புலம் பெயர் 'மாற்றுகள்", 'மறுத்தோடிகள்", 'இலக்கியவாதிகள்" என்று வேஷம் போட்ட அனைவரும், கூடிக் குலாவி வைக்கும் அரசியல் மக்களைச் சார்ந்தல்ல. இதைத்தான் நாம் முன் வைக்கின்றோம் என்று சொல்ல, அவர்களிடம் மாற்றாக எதுவுமில்லை. புலிகளின் எதிர்தரப்பாக இருக்கும் இவர்கள், அரசைச் சார்ந்து தான் நிற்கின்றனர். இது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தன்னும், இதுதான் அவர்களின் அரசியல் முடிவாக அமைகின்றது.

இன்று தமிழ்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 3, 2009

அரச எடுபிடிகள் முன்னின்று நடத்தும் இலக்கியச் சந்திப்பு

தமிழ்மக்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சி மடிய, மற்றொரு எதிர்ப்புரட்சி அரங்கேறுகின்றது. அது மக்கள் கோட்பாடற்ற இலக்கியச் சந்திப்பு ஊடாகவும் கூட, தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இந்த முன்முயற்சியின் ஒரு அங்கம் தான், நோர்வே இலக்கியச் சந்திப்பு.

எத்தனை ஆயிரம் மக்கள் செத்தாலும் கவலைப்படாது, கொலைகாரக் கும்பல்கள் பேரினவாத அரசுக்கு ஆள்பிடிக்க கூட்டும் சந்திப்பு. கொலைகார அரசை முன்நிறுத்தி, அதை ஆதரிக்கும் கும்பலின் சொந்த முயற்சியுடன் தான் நோர்வே இலக்கியச் சந்திப்பு அரங்கேறுகின்றது.

இந்த சந்திப்பின் பேச்சாளர் பட்டியலில் கலையரசன், ரஞ்சி போன்றவர்கள் மார்க்சியம் மூலம் தான் மக்கள் விடுதலை சாத்தியம் என்று நம்புகின்றவர்கள் இவர்கள். மார்க்சியம் மூலம் தான் அனைத்தையும் பகுத்தாய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றியோ, கடந்த 20 வருடத்தில் இதன் சாதக பாதகங்களை மார்க்சிய அடைப்படையில் பார்த்தா, இவர்கள்.......
.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்