தமிழ் அரங்கம்

Saturday, July 19, 2008

கொம்பனித் தெரு சம்பவம் புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர்

கொம்பனித் தெரு சம்பவம் : புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர், மக்களின் வாழ்விடங்களையும் கூட அன்னியனுக்காக தரை மட்டமாக்குகின்றனர்.

இலங்கையில் நடப்பது இதுதான். 'பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் பணம் சம்பாதிப்பது ஒருபுறமாயும் நாட்டின் தேசியவளத்தையும் மக்களின் அடிப்படை வாழ்வையும் விற்பது மறுபுறமாயும் அரங்கேறுகின்றது. 'புலிப்பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து சம்பூர் பிரதேசம் இந்திய வல்லாதிக்கத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதே போல் கொம்பனித் தெருவில் வசித்த 600 குடும்பங்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டு, அவர்கள் 'பயங்கரவாத ஒழிப்பு" இராணுவத்தால் நிர்க்கதியாக அடித்துத் துரத்தப்படுகின்றனர். இவை எல்லாம் யாருக்காக? யாருடைய நலனுக்காக? மக்களின் நலனுக்காகவா எனின், நிச்சயமாக அதுவல்ல. மாறாக பணம் கொழுத்தவன் மேலும் கொழுப்பதற்காகத் தான்.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இயக்கத்திடம் ஜனநாயகத்தைக் கோரிய மக்கள் போராட்டம்

அன்று உண்மையான நேர்மையான சமூக பற்றாளர்கள், தேசியபற்றாளர்கள் தான், உண்மையாக இந்த மக்களுக்காக முதல் களப்பலியானார்கள். ஆனால் இவர்களை யாரும் இன்று வரை போற்றுவது கிடையாது. இவர்களை நான் நாங்கள் மட்டும் தான், போற்றுகின்றோம். அவர்களிள் அரசியலை நாம் மட்டும் தான், முன்வைக்கின்றோம். அவர்களின் வாரிசுகள் நாங்கள். இதையும் இன்று சிலர் திரிக்க முனைகின்றனர். பிந்தைய புலியின் இயக்க அழிப்புக்குள், இதையும் சேர்த்து குழைத்து தீத்தவே முனைகின்றனர். புலி மட்டும் தான் அனைத்தும் என்ற கண்கட்டு வித்தையைக் காட்டி, அதுவே வரலாற்று உண்மை என்று காட்ட முனைகின்றனர்.

Friday, July 18, 2008

எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!

பார்ப்பனரல்லாத "மேல்'சாதி இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. அவர்களிடம் புராணங்களின் மீது ஒருவித விமர்சனமற்ற மரியாதையையும், உதிர்ந்து கொண்டிருந்த கூட்டுக் குடும்பங்களின் மீது ஒரு அனுதாபம் கலந்த கரிசனையையும் இப்படங்கள் தோற்றுவித்தன. கதாநாயகர்களின் சோகத்தில் மாத்திரமே தனது துன்பங்களை இனம் காணப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களிடம் யதார்த்தத்தை ஈவிரக்கமின்றி முன்வைத்தன ராதாவின் பாத்திரங்கள்.

1942இல் ராதா நடித்த "இழந்த காதல்' எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த "போர்வாள்' நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமெனக் கோருகிறது. பிரகாசம் அரசாங்கம் இக்கருத்து பிரிட்டிஷாருக்கு எதிரானது என்பதால் நாடகத்தைத் தடை செய்தது. 1947இல் கருணாநிதி எழுதிய "தூக்குமேடை' பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.

Thursday, July 17, 2008

தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

நக்சல்பாரி எழுச்சியைக் காட்டிக் கொடுத்த மார்க்சிஸ்டு தலைமையை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறி மா.லெ. இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட (மறைந்த) தோழர் ரங்கனாதனின் கிராமம் காரப்பட்டு. சுற்றுவட்டார நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி அவற்றின் ஊடாக உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை அவர் உருவாக்கி வளர்த்திருக்கும் கிராமம் அது.

தலித் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான கலவரங்கள் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற காலங்களிலும் கூட சாதிவெறி தலைதூக்காத கிராமம் காரப்பட்டு. உள்ளூர் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த தலித் மக்களைத் திரட்டி வெற்றிகரமானதொரு கோயில் நுழைவுப் போராட்டத்தை வி.வி.மு. நடத்திய கிராமம் அது. அப்போராட்டத்தின் விளைவாக நிலைநாட்டப்பட்ட தலித் மக்களின் கோயில் நுழைவு உரிமையை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் கிராமம்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு தலித் மக்களும் பிற சாதியினரும் ஒருவரையொருவர் அழைப்பதையும் ஒரே பந்தியில் அமர்ந்து கலந்துண்பதையும் தனது பண்பாடாகவே மாற்றிக் கொண்டிருக்கும் கிராமம். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்களை அழைப்பதும், அவர்கள் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதும், வி.வி.மு. நடத்தும் ஊர்க்கூட்டங்களில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் வழமையாக நடைபெற்று வரும் கிராமம் அது.

தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போவதில்லை. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட பெரிதும் வாய்மொழியின் அடிப்படையிலேயே நடைபெறும் அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையும் நேர்மையும் நிலவி வரும் கிராமம் அது. கள்ளச்சாராய விற்பனை அங்கே நெடுநாள் முன்னரே ஒழிக்கப்பட்டுவிட்டது. குடித்துவிட்டுத் தெருவில் ஆடுவதும், பொது இடங்களில் புகை பிடிப்பதும் அங்கே தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து விடவில்லை. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத்தப்படுகின்றன. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய பிழைப்புவாதிகளும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட லும்பன்களும் இவற்றை எதிர்க்கத்தான் செய்தனர். தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 16, 2008

ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது?

இதை செய்தது, சொந்த தமிழ் தேசிய இனத்தில் இருந்த எதிர்புரட்சி அரசியல் தான். அது கையாண்ட வழி, சூழ்ச்சிகரமானது. முதலில் அது செய்தது என்ன? ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாக காட்டிக்கொண்டது. இப்படி அந்த மக்கள் தமது சொந்தக் கோரிக்கையுடன் ஒரு தேசியத்துக்காக அணிதிரளா வண்ணம் தடுத்தது. இதன் மூலம் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களை ஒடுக்கியது தான் எமது தேசிய வரலாறாகும்.............. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மகரஜோதி பொய்! ஐஸ் லிங்கம் பொய்! பக்திப் பரவசமும் பொய்!

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. "கஞ்சாவே பேரின்பம்' என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

"மாலை போடுவது மடமை' என்று நீங்கள் சாடினால், "ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்' என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். "பனிலிங்கம் பொய்' என்று நீங்கள் கூறினால், ""இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்'' என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள். ...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 15, 2008

உணர்வு

ஒளிபுகாத
அடர்காட்டின் நடுவில்
அரிவாள்களைக் கூராக்கி
பாதை செய்கிறோம்

ஏளனச் சிரிப்புகளும்,

வன்மம் பொங்கும்
ஊளைச் சத்தங்களும்,
முற்றும் அறிந்த
மேதாவித்தனங்களும்,
திரும்பும் திசைகளிலெல்லாம்
எதிரொலிக்கின்றன.

புதைசேறு அழுத்துகிறது

புரட்ட முடியாத பாறைகளில்
யுகங்கள் கழிகின்றன.
அரவம் நெளிகிறது.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவுடன், ஜே.வி.பி நடத்திய வேலை நிறுத்தம்

உலகில் அரசியல் அதிசயங்கள் நடக்கின்றன. இலங்கை தொழிலாளி வர்க்கத்தின் காலை உடைத்து விட்டுத்தான், இவர்கள் எல்லாம் கூட அரசியல் நாடகமாடுகின்றனர். ஜே.வி.பி திடீரென தொழிலாளர் என்று கோசம் போட, யூ.என்.பி.யும், புலிப்பினாமியான கூட்டமைப்பும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க அரசியலுடன் எழுந்திடா வண்ணம், இவர்கள் செய்கின்ற அரசியல் திருகுதாளங்கள் இவை. தொழிலாளியின் முதுகில் குத்தித் தான், இவர்கள் தமது சொந்த அரசியல் செய்கின்றனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் வெற்றி பற்றி அரசும் ஜே.வி.பியும் கூச்சல் போடுகின்றனவே, அப்படியாயின் தோற்றவர்கள் யார்? ஆம் தொழிலாளி வர்க்கம் தான், மீண்டும் தோற்றுப் போனது. அவர்கள் தோற்றுப்போகும் வகையில், தொழிலாளியின் பெயரால் ஒரு பொருளாதார வேலை நிறுத்தம்;. தொழிலாளியின் பொருளாதார அவலத்துக்கு காரணமான அரசியல் போராட்டத்தை தவிர்த்து, பொருளாதார போராட்டத்துக்குள் முடக்கி தொழிலாளியை தோற்கடித்தனர். இது தான் ஜே.வி.பி அரசியல்;. இதனால் தான் இனவாத முதலாளித்துவ யூ.என்.பி.யும், புலிப்பினாமியான முதலாளித்துவ கூட்டமைப்பும் ஆதரித்தனர்.

இவர்கள் எல்லாம் இதன் மூலம் தத்தம் சொந்த அரசியலை செய்தனர். ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு எப்படி அரசு ஆதரவு அரசியலாக்கப்படுகின்றதோ, தேசியத்தின் பெயரில் எப்படி புலிப் பாசிசம் அரங்கேற்றப்படுகின்றதோ, அப்படியே தான் தொழிலாளியின் பெயரில் இவர்கள் அரசியல் செய்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக புலியின் பெயரால் பச்சை இனவாதத்தைக் கக்கிய ஜே.வி.பி தான், இனவாத அரச பாசிசத்தைக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி இன் இந்த இனவாதம் தான், கட்சியின் ஒரு பகுதியை அரசின் ஒரு பகுதியாக்கியது. ஜே.வி.பி தொடர்ந்து இனவாத அரசியலை நம்பி அரசியல் செய்யமுடியாது. அதை அரசு ஜே.வி.பியின் ஒரு பகுதியை பிளந்து, தனக்கு ஆதரவாக வைத்தபடி
..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, July 14, 2008

தமிழக போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சி

சாதி வேறுபாடுகளைக் கடந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய இக்கிராமங்களில் சாதிக் கலவரம் ஏன்? ஏற்கெனவே இக்கிராமங்களில் சாதியப் பகைமையும் மோதல்களும் நடந்துள்ளனவா? இல்லை. இது சாதிக் கலவரமில்லை; சிறு வாய்த் தகராறையே ஊதிப் பெருக்கி சாதிக் கலவரமாகச் சித்தரித்து, போலீசும் அதிகார வர்க்கமும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய மக்களைப் பழிவாங்கவே திட்டமிட்டு இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளன. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (ஏகீகஇ) உண்மையறியும் குழுவினர் இக்கிராமங்களுக்கு நேரில் சென்று நடத்திய விசாரணையின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.


எலியார்பத்தி கிராமத்தில் கடந்த 4.5.08 அன்று டீக்கடை ஒன்றில் போதையில் இருந்த இரண்டு பேருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, அவ்வூர் பெரியவர்களால் சமரசம் செய்து தீர்க்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சிறுபான்மையாகத் தாழ்த்தப்பட்டோரும் பெரும்பான்மையாக வலையர்கள் எனப்படும் பெரும்பிடுகு முத்தரையர் சாதியினரும் உள்ளனர். சாதிய இழிவு நீடித்தபோதிலும், இருதரப்புக்குமிடையே தகராறுகளோ மோதலோ நடந்ததில்லை. டீக்கடையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு தீர்க்கப்பட்ட போதிலும், முத்தரையர் சாதி சங்கத் தலைவர் இராசு தலைமையில் சில இளைஞர்கள் தலித் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தினர். அவர்கள் மீது சிறுத்தைகள் கட்சியினர் கூடக்கோவில் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்க, அதனடிப்படையில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அடாவடிகளும் போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்தலும் தமிழகமெங்கும் தொடர்கின்றன. ஆனால் போலீசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வழக்குத்துக்கு மாறாக, எலியார் பத்தியில் அன்றிரவே பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, July 13, 2008

புலிப் புலனாய்வு அறிக்கை மீது : வதந்தி எது? உண்மை எது? சரி பகுத்தறியும் திறன் தான் எது?

''வதந்திகளை நம்பவேண்டாம் : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்" 12 யூலை 2008 வெளியிட்டுள்ள புலி அறிக்கை, மீண்டும் 10 வருடங்கள் கடந்த பின் வந்துள்ளது. யாழ்குடாவை எதிரி கைப்பற்றிய காலத்திலும், இது போன்ற அறிக்கை ஒன்றை புலிகள் விட்டு இருந்தனர். புலி சந்திக்கின்ற பொதுநெருக்கடி, மக்கள் புலியை தோற்கடிக்கின்ற உண்மையை பளிச்சென்று இந்த அறிக்கை போட்டு உடைக்கின்றது.

புலிகள் தம்மையும், தமது கடந்தகாலத்தையும் திரும்பி பார்க்க மறுப்பது, மறுபடியும் புலனாகின்றது. மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, பாசிச அரசியல் தாற்பாரியத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

எது வதந்தி, எது உண்மை என்ற எதையும் ஊகிக்க முடியாத வகையில், மக்களை இட்டுச்சென்றது யார்?, எதிரியா? இல்லை. புலிகளாகிய நீங்கள் தான். எப்போது தான் நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். உண்மை எப்போதும், மக்களின் மண்டைக்குள் குசுகுசுத்தபடியே உயிர் வாழ்கின்றது. இப்படி உண்மைகள் மக்களின் மண்டைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளது.

உத்தப்புரம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசிய ஓட்டுக் கட்சிகள்

உத்தப்புரத்தில் சட்டவிரோத ஒப்பந்தத்தை 1989இல் உருவாக்கியவர்களை "பெரிய மனிதர்கள்' என்று சொல்லி புளகாங்கிதம் அடையும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பழைய செய்தித்தாள்களை எல்லாம் ஒன்றுவிடாமல் தேடி, எங்குமே தீண்டாமை பற்றி எழுதப்படவே இல்லை என்று சொல்லி இருக்கிறார். ""ஏன் சி.பி.ஐ. இந்த விசயத்தில் போராடவில்லை?'' எனக் கேட்பவர்களுக்கு ""நான் அசைவன் எனக் காட்டிக் கொள்ள எலும்புகளைத் தொகுத்து மாலை போட்டு ஆட வேண்டிய தேவையில்லை'' எனத் தெனாவட்டாகக் கட்டுரை எழுதுகிறார். மேலும் அவ்வூரில் உண்மையைக் கண்டறியக் குழு அமைத்து, அங்கு நில வுவது "ஆன்மீகப் பிரச்சினை' என்ற மாபெரும் கண்டுபிடிப்பை அறிவித்திருக்கிறார். "அமைதி'யாக இருந்த ஊரில் அதே அமைதி தொடர வேண்டும் என்பதற்காக உத்தப்புரத்திற்கு ஒருமுறை பயணமும் செய்தார்.

தா.பாண்டியன் விரும்பும் அதே அமைதியைத்தான் பிள்ளைமார் சங்கத் தலைவர் முருகேசனும் விரும்புகிறார். ""பல அப்பாவி தலித்துகள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் சகோதர சகோதரர்களாகத்தான் வாழ விரும்புகிறார்கள். சில சமூக விரோதிகள்தான் தலித்துகளைத் தூண்டி விடுகின்றனர்'' என்று கூறும் முருகேசனின் விருப்பமெல்லாம் என்றென்றைக்கும் தலித்துகள் அப்பாவிகளாகவே இருக்க வேண்டும் என்பதே. அவர்கள் அப்பாவிகளாக இருக்கும் வரை "அமைதி' இருக்கும். இந்த அமைதியைத்தான் வலது கம்யூனிஸ்டு தா.பாண்டியனும் விரும்புகிறார்.

சாதி ஒழிப்பிற்காகவே இயக்கம் கண்ட திராவிடர் கழகம், சாதித்திமிர் பிடித்த பிள்ளைமார்களைச் செல்லமாகக் கண்டித்து தலையங்கம் எழுதியது. அச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளாத தி.க., ""சுவரை ஏதோ கோபத்தில் எழுப்பி இருக்கக் கூடும்'' என விளக்கம் கொடுத்தது. ரேசன் கார்டுகளை ஒப்படைத்துவிட்ட பிள்ளைமார்களுக்கு புத்திமதி சொல்லித் திருத்த ""பிள்ளைமார் சமூகத்தில் படித்தவர்கள், அதிகாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தங்கள் கடமையினைச் செய்ய முன்வரவேண்டும்'' என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் உத்தியைச் செயல்படுத்த பிள்ளைமாரில் முற்போக்காளர்களைத் தேடி அலைந்து அலுத்துப்போனது..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்