தமிழ் அரங்கம்

Saturday, April 4, 2009

பழைய தோசைக்காக புளித்துக் கிடக்கும் உழுத்தந் தலைகள்

இன்று தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் என்று ஒரு பகுதியினர் வாதிட்டு வருகின்றனர். இதற்கு இவர்கள் புலிகள் பலவீனப்பட்டு விட்டதையும் இதனால் அரசியல் தீர்வைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றும் - இவர்கள் வாதிட்டு வருகின்றனர்.

ஒர் ஆயுத ரீதியான போராட்டம் ஒர் இராணுவத் தீர்வுக்கானது என்றும் இதற்கு எந்த அரசியலும் கிடையாது என்றும் ஒரு துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் குண்டு ஒர் அரசியலின் அதிகார மொழி என்பதையும் மறுத்துரைக்கும் ஒரு தலைமறைவான பிரச்சாரம் என்பதை இவர்கள் வசதியாக மறைத்து விடப் பார்க்கிறார்கள்.

இன்று இனப்பிரச்சனை இலங்கை அரசியலில் புரையோடிய பிரச்சனையாக உள்ளதாவும் அரசியல் வாதிகளின் கடந்தகால தவறுகளாகவே இவைகள் உருவாகி விட்டதாகவும் இவர்கள் கருதுகின்றனர். அதாவது பாராளுமன்றத்தில் இவர்கள் சரிவர நடந்து கொள்ளாததே இதன் மூலகாரணம் என்பதே இவர்களின் முடிந்த முடிவாகும். அதாவது இவர்களின் கருத்துப்படி இப்பிரச்சனைக்கான தீர்வு ஒன்றில் நல்ல அரசியல் வாதிகள் இப்பிரச்சினையை பாராளுமன்றத்துக்குள் முன்னெ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 3, 2009

மக்களை கொல்வதை ஆதரிப்பதன் மூலம், 'ஜனநாயகத்தை" மீட்கும் அரசியல்

புலியல்லாத அரசியல் தளம் இப்படித்தான் உள்ளது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசும் அனைவரும் பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தம் 'ஜனநாயகத்தை" நக்குகின்றனர்.

இப்படி தம் சொந்த மக்களை கொல்ல ஆதரவு தெரிவித்துக்கொண்டு, அவர்களுடன் கூடி நடத்துகின்ற எலும்புத்துண்டு அரசியல் இதுவே. இதற்கு வெளியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இவர்களிடம் கிடையாது. இதை மூடிமறைக்க, எத்தனையோ வேஷங்கள். எத்தனையோ அடையாளங்கள். பேரங்கள் பெயரில், பிழைப்புவாத அரசியல்;. மக்களின் உரிமையின் பெயரில், மக்களின் உரிமைகளையே மறுக்கும் மாமா அரசியல். தமிழ் மக்கள் முன் எதையும் வெளிப்படையாக வைக்கவும், அதை விவாதிக்கவும் வக்கற்ற பச்சோந்திக் கூட்டம்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

யுத்தத்தை முன்னெடுக்க முடியாமல் சிங்கள அரசும் மக்களிடம் தோற்றுப் போன புலிகளும்...

யுத்தத்தை வெல்ல முடியாமல் சிங்களப் பேரினவாத அரசு முழி பிதுங்கிய நிலையில் நிற்கின்றது. மகிந்தாவின் வாலைப் பிடித்து பிழைப்பு அரசியல் நடாத்திவரும் பீரிஸ் உலகநாடுகளின் அழுத்தத்தை காரணமாக காட்டி இன்னும் மூன்று வாரங்களில் போரை முடிவுக்கு கொண்டுவரப் போவதாக சொல்லி தங்கள் இயலாமையை மறைக்க முற்படுகின்றார். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இனவெறியன் மகிந்தா தன் இலட்சியத்தில் நின்று விலகப் போவதில்லை என்று மேடைக்கு மேடை வீரம் பேசி உளறிக் கொண்டு திரிகின்றான். இத்தனை ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களையும், அப்பாவி சிங்கள இளைஞர்களையும் சாகடித்த பழி இவர்களை நிம்மதியாக தூங்க விடப் போவதில்லை. இன்னொரு வெள்ளை வேட்டிக் கூட்டம் சோனியாவின் வால்பிடிகள், எல்லா அழிவுகளையும் பின்னால் நின்று செய்து முடித்துவிட்டு இன்று ஒன்றும் தெரியாத சமாதான விரும்பிகளாக காட்டிக் கொண்டு இலங்கை அரசின் போர் நிறுத்தத்தை தாம் வரவேற்பதாகக் கூறிக் கொண்டு தங்கள் சொந்த அரசியலுக்கு இலாபம் தேட முனைகின்றார்கள்.

இன்னொருபுறம் தங்கள் பாசிசத்தாலேயே தங்கள் தோல்வியையும், இழப்புகளையும் அழிவுகளையும் தேடிக் கொண்ட புலித்தலைமைகள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 2, 2009

மக்களை விற்றுப் பிழைக்கும், புலம்பெயர் போக்கிலிகள்

புலம்பெயர் புல்லுருவிகள் 28-29.03.2009 அன்று பேரினவாதத்துடன் கூடிக் குலாவிய போது, தாம் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டுமென்ற வேண்டுகோள் விட்டார்களாம். அரசாங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டதாம். இப்படியெல்லாம் பிபிசிக்கு தமிழ் சேவைக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.

வேடிக்கையான வேண்டுகோள். கசப்பு கடைக்காரனிடம், ஆட்டை பாதுகாக்க கோரிய புலியெதிர்ப்பு கூத்து. கொல்பவனிடமே தமிழ் மக்களை மீட்கும் தார்மிக பொறுப்பை பற்றி விவாதித்தார்களாம்.
.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

சாயம் வெளுத்துப் போகும் ஓநாய் கூட்டங்கள்

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

இன்று அவர்களில் பலர் தமது செய்கைகள் மூலம் அம்பலமாகிவருகின்றனர். புலிகள் அரசு பேசுசுவார்த்தையின் போது, புலிகள் தாம் படுமோசமான மக்கள் விரோதிகள் என்பதை ஊர் உலகம் அறிய தம்மை அம்பலமாக்கினர். இதே காலத்தில் ஜனநாயகம் பேசும் கூட்டம் புளுத்து, திடீர் மிதப்பாகினர். ஆனால் அரசு புலியின் யுத்த தொடங்கியவுடன், தாங்கள் புலிகளை மிஞ்சிய மக்கள் விரோதிகள் என்பதை, தமது சொந்த அரசியல் நாற்றத்துடனேயே எடுப்பாக அவர்கள் அம்பலமாக்கி வருகின்றனர்.


'ஜனநாயகத்தின்" பெயரில் ரீ.பீ.சீயையும், தேனீயையும் மையமாக வைத்து ஜனநாயகம் பேசியவர்கள, இலங்கையின் இந்தியாவின் அரசியல் எடு............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 1, 2009

தமிழ்மக்களின்; விடுதலைக்கு, மூன்றாவது பாதைபற்றியே சிந்திக்கவேண்டும்!

வன்னிநில மக்களின் பேரவலம் பற்றி எழுத்தில் எழுதவோ, ஓவியத்தில் வடிக்கவோ முடியாது. அம்மக்களின் வாழ்வு நீண்ட துயராகவே உள்ளது.

வன்னிநில மக்களின் பேரவலத்திற்கு உலகில் குரல் கொடுக்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். மகிந்தா-கோத்தபாயா முதல் சர்வதேச சமூகம் வரை மனித அவலம் பற்றி நாளாந்தம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஓபாமாவின் அமெரிக்கா கூட 'தாங்கொனாத் துயரில்" போர்ப் பொறிக்குள் அகப்பட்ட மக்களை வான் ஊர்திகள் கொண்டு அழைத்துச் செல்லலாமா என சிந்தித்தது!

தமிழகத்தில் திராவிடக் கழகங்கள், - ஏனைய அரசியல்; தலைவர்கள் 'தம் உயிரினும் மேலான உடன்பிறப்பபுக்களை இரத்தத்தின் இரத்தங்களை" தொப்புள் கொடி உறவுகளுக்காக (தேர்தல்) போர்க்கோலம் பூண வைத்துள்ளனர்! nஐயலலிதா கூட உண்ணாவிரதம் முதல், (தீக்குளிக்க முற்படாத குறை) உண்டியல் குலுக்கல் வரை போயுள்ளார்! தமிழ்மக்களைக் கொன்றொழிக்கும் மத்திய அரசும் தன்னால் காயப்பட்டவர்களுக்கு, அங்கவீனமானவர்களுக்கும்; மருத்துவத்திற்காக வைத்தியர் குழுவையும் அனுப்பியுள்ளது. பாரதிய ஐனதாக்கட்சியின் தலைவர் அத்வானி எல்லோரையும்விட மே.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அமைப்புசாராத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம்: கானல் நீர் தாகம் தீர்க்காது!

தேர்தலைக் குறிவைத்து நிறைவேற்றப்பட்ட சமூகப் பாதுகாப்புச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக ஏழைகூலித் தொழிலாளர்கள் வேலை தேடி பெருநகரங்களை நோக்கி நகர்கின்றனர். மொழி, மாநில எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்க்கை அவர்களைப் பெயர்த்து எறிகின்றது.

குறிப்பாக பீகார், ஒரிசா, உத்திரபிரதேசம் ஆந்திரா மாநிலங்களிலிருந்து சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்குக் கூலி வேலை செய்ய வருகிறார்கள். இதேபோல தமிழகத்தில் இருந்தும் புலம் பெயர்ந்து பெங்களூரு, மும்பை, கேரளம் போன்ற இடங்களுக்குப் போகிறார்கள். அமைப்பு சாராத தொழிலாளர்களாக வகைப்படுத்தப்படும் இவர்களுக்குக் கிடைக்கும் வேலையோ நிரந்தரம் இல்லாதது.

Tuesday, March 31, 2009

காசியும், கஸமாலமும்!

ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த மனித உடலின் வயிற்றுப் பக்கத்தில் பெருத்து ஊதிப்போய் கிடக்கிறது. சில நாட்களாகவே ஆற்றில் கிடந்திருக்க வேண்டும். சற்று தூரத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆற்றின் ஓரங்களில் அரையும் குறையுமாக வெந்தும் வேகாத நிலையில் இருக்கும் பிணங்களை நாய்கள் கடித்து தின்றுக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் உலகில் வேறு எங்கும் பார்த்துவிட முடியாது. இந்து மதத்தின் புனிதத்தலமாகிய காசியில் தான் இவற்றையெல்லாம் பார்க்கும் பாக்கியம் நமக்குண்டு.

மக்கள் அந்த தண்ணீரை புனித நீராக அள்ளி அள்ளி குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள், கும்மாளமடிக்கிறார்கள், பக்தி பரவசத்தின் உச்சத்தை அடைகிறார்கள். அந்த தண்ணீரை புனித நீராக எது அடையாளப்படுத்துகிறது இவர்களுக்கு? வீட்டில் குடிக்கும் நீரில் சி............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, March 30, 2009

மக்கள் தாம், தம் உயிர்வாழ்வதற்காக சுயமாக முனைவது இன்று தேசவிரோதக் குற்றம்

தமிழ் தேசியம் இந்தளவுக்கு முன்னேறியுள்ளது. உயிர்வாழ முனைந்தால் தண்டனை. பேரினவாத குண்டடியில் நீயாக தப்ப முனைந்தால், நீ தேசத் துரோகி. இந்த குண்டடியில் இருந்து தப்பிப் பிழைக்கும் 10, 12 வயது குழந்தைகளைக் கூட, யுத்தம் செய்யவென்று தம் யுத்தமுனைக்கு கடந்திச் செல்லுகின்றனர் தேசிய மீட்பாளர்கள்.

இவர்களிடம் இருந்தும், குண்டடியில் இருந்தும் தப்பி வந்தவர்களை, திறந்தவெளிச் சிறை கூடங்களில்; அடைத்து வைக்கப்படுகின்றனர். இப்படிச் சமூகத்தை மீட்கின்ற மீட்பாளர்கள் தம் சொந்த பாசிச சகதிக்குள், தமிழினத்தை புதைக்கின்றனர்.

எம்மைச் சுற்றியுள்ள மாயைகள், நம்பிக்கைகள், தீர்வுகள் எல்லாம் பாசிசத்தன்மை வாய்ந்தவை. இங்கு பகுத்தறிவுக்கு இடமில்லை. மனிதாபிமானம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எல்லாம் சர்வாதிகாரம். இணங்குதல், இணங்கியதாக நடித்தல் என்று, பாசிச அரசியல் அசை போடப்படுகின்றது.

இப்படி புலிப் பாசிசத்தின் தெரிவு எதுவோ, அதுவே தான் தமிழரின் சிந்தனை, செயல் என அனைத்தும். இப்படித்தான் தமிழன் வா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வகுப்புவாத பாறாங்கல்லும், அதன் கோளாறு அரசியலும்..(2)

(3)
சிறுபான்மை
மக்களின் விடுதலைப் போரடாட்டத்தைப் பொறுத்த வரையில், தரகு முதலாளிய அரசின் இன ஒடுக்கு முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்ற பிரச்சினையே இன்றும் முதன்மை பெற்றிருக்கிறது. இன்று இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்ககடிகளால், மக்களிடம் இருந்து எழுந்து வரும் ஜனநாயகக் கோரிக்கைகளை தீர்க்க முடியாமல் கிடப்பில் போட்டு வரும் இவ் அரசு, இதை மூடி மறைப்பதற்காக இனமுரன்பாட்டை முன்தள்ளி வருகிறது. இவ்வாறு இனமுரண்பாட்டை முன்தள்ளி, சிறுபான்மை தேசிய இனங்கள் மீது இன அழித் தொழிப்பாக இதை இலகுவாக நடத்தி வருகிறது. பெருகிவரும் அரசின் ஜனநாயக விரோதத்துக்கு எதிராக மக்கள் போராடாமல் தடுப்பதற்கும், மறுபுறத்தே சிறுபான்மை தேசிய இனங்களின் தேசிய அடையாளங்களை அழித் தொழித்து அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக்குவன் ஊடாக, அவர்கள் ஒரு பலமான தேசிய புரட்சியை நடத்தி விடாதபடியும், இவ் ஏகாதிபத்திய மூலதனத்தைப் பாதுகாக்க இவ்வரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. ஏனெனில் தமிழ்தேசிய புரட்சி, இலங்கையில் வர்க்கப் புரட்சியின் வெளிப்பாடு என்பதை அரசு தெளிவாகவே உணர்ந்துள்ளதுடன், இது ஏகாதிபத்தியத்தின் மையத்தை தாக்கி அழிக்கும் முனைப்பைக் கொண்டது என்பதையும் அது அறியும்.

அரசு என்பது ஒரு வர்க்கத்தின் பிரதிநிதி! ஆகவே இவ் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அவ்வர்க்கம், சிறுபான்மை இனத்துக்குள் இல்லையா? என்ற கேள்வியும் உண்டு. நிச்சயமாக சிறுபான்மை இனங்களுக்குள்ளும் உண்டு. அவ்வாறானால் இவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது? அவர்களும் அவ்வாறே இருப்பர். இருக்கின்றனர்.( நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, March 29, 2009

அதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்

'யாழ்ப்பாணத்திலை உங்கடை சனத்துக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கிறன். நான் வித்தியாசமானவன். நான் சந்திரிகா போலை இல்லை..." இது வீதிச்சண்டியன் ஒருவனின் வாக்குமூலமல்ல. சபிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியின் குரல். 'நான்தான் உன்ரை செக்குரிற்றியை வாபஸ் பெற்றனான். உன்ரை இடத்துக்கு உனக்குப் பாதுகாப்புத்தர ஒருத்தரும் வரமாட்டாங்கள். போய் பிரபாகரனிட்டை கேள் உனது பாதுகாப்பை. காட்டுச் சட்டங்களைப் புகழ்ந்துகொண்டிருக்கிறவையள் உங்கடை ஆக்கள்..." நாட்டுச் சட்டங்களை கையில்வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் உரையாடல் இது. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 16. ஒரு காலைநேர சந்திப்பு. 25 பத்திரிகையாசிரியர்கள். வித்தியாதரன் இதை எதிர்கொள்ள நேரிட்டது.. தனது பாதுகாப்பு திடீரென திரும்பப் பெற்றுக்கொண்டது பற்றி அவர் எழுப்பிய கேள்வி கிளறிய குப்பைக்குள்ளிருந்து அரசின் சகல மக்களுக்குமான பிரதிநிதித்துவம் கோவணத்துடன் எழுந்தது.

சுடரொளி (கொழும்பு), உதயன் (யாழ்ப்பாணம்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரன். 27 பெப்பரவரி 2009 அன்று வெள்ளைவான் கைதுசெய்து சென்று சட்டத்திடம் ஒப்படைக்கிறது. கிரிமினல்தனமும் சட்டமும் சந்திக்கும் புள்ளிகள் அப்படி இருக்கிறது நமது இலங்கை நாட்டில்.

இலங்கை எதை நோக்கிப் போகிறது? லசந்த விக்கிரமதுங்கவின் பேனா முறித்து வீசப்பட்டபோது இன்னொருமுறை எழுந்த கேள்வி இது. தான் கொ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

நாசமாகப் போவாங்கள்! நீங்கள் எல்லாம் ஆறறிவுள்ள மனிதர்களா!?

எம்மினத்தை கொன்று குவித்து வரும் சிங்கள இராணுவம். கடந்த 30 வருடத்தில் பல பத்தாயிரம் உயிர்களின் இரத்தத்தைக் குடித்த இராணுவம். இது உனக்கு தெரிந்தும், இந்த இராணுவத்திடம் திட்டமிட்ட வகையில் மக்களையே கூட்டம் கூட்டமாக பலியிட்டு கொல்கின்றாயே, ஏன்? இந்த கொலைவெறிக்கு உடந்தையாக நிற்கும் மாபியா அரசியலை ஆதரிக்கிறாயே, ஏன்? நீ எல்லாம் ஆறறிவுள்ள மனிதனா!? இதை வைத்து பிரச்சாரம் செய்யும் அரசியல், நாசமாகப் போகட்டும்.

......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

சி.பி.எம் -இன் உத்தமர் வேடம் கலைகிறது

முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளைப் போல சி.பி.எம் கட்சியும் ஊழலில் சிக்கிச் சீரழிந்து நிற்கிறது. கொள்கை சித்தாந்தம் அனைத்தையும் கை கழுவிவிட்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குக் காவடி தூக்கி, சிங்கூர் நந்திகிராமத்தில் போராடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, இப்போது லாவலின் ஊழல் விவகாரத்தால் எஞ்சியிருந்த ஒட்டுக் கோவணத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான பினாரயி விஜயன் மீது, ரூ. 390 கோடி லாவலின் ஊழல் வழக்கில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஊழல் கறை படியாத கட்சி என்ற மாயபிம்பத்தையும் அது தகர்த்தெறிந்து விட்டது.

ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குரிய வழக்குகள் வரும்போதெல்லாம், "மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேணடும்'' என்று கூப்பாடு போட்டு வந்த சி.பி.எம். கட்சி, இப்போது "தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக மைய அரசு பயன்படுத்தும் இன்னொரு ஆயுதம்தான் சி.பி.ஐ.'' என்று புதிய விளக்கம் கொடுக்கிறது. அக்கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மீது ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான், இந்தத் திடீர் ""பல்டி''க்குக் காரணம்.

"1996 முதல் 2001 வரை கேரளாவில் முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துடன் மூன்று நீர்மின் திட்டங்களுக்கான ஒப்பந்த...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்