தமிழ் அரங்கம்

Saturday, December 6, 2008

இடித்துவிட்டான் மசூதியை

இடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம்)

வானரங்களின் பாசிசம்

நாம் எதிர்பார்த்தது போல் 450 வருடங்கள் பழைமை வாய்ந்த முஸ்லீங்களின் பாரம்பரியம் மிக்க பாபர் மசூதியை, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிசத், பஜ் ரங்தத் ஆகிய பிழைப்புவாத அரசியல் மத வெறி கும்பல்களால் பாமர உழைக்கும் மக்கள் வெறியூட்டப்பட்டு மசூதி உடைப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனித நாகரீகத்துக்கு சவாலாக நடத்தபட்ட இச்சம்பவத்தில் ஆயிரத்தி நூறு மனித உயிர்கட்கு அதிகமாகவும், இது சம்மந்தமாக ஏற்கனவே தொடர்ந்து வந்த தாக்குதலில் 3000 மனித உயிர்கட்கு அதிகமாகவும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

வறுமை, பஞ்சம், வேலையில்லாத்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.

இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்க..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.
இது தனக்குள்ளான ஒடுக்குமுறைகளை அனுமதிக்காது. அதாவது தனக்குள்ளான முரண்பாடுகளை களையும் போராட்டத்தை நடாத்திக் கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி தனது சொந்த விடுதலையை அடையப் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

இப்படி போராடாத, போராட முனையாத அனைத்துமே மக்கள் விரோதப் போராட்டம் தான். இப்படி குறைந்தபட்சம் மக்கள் போராட்டம் இருக்க, மக்களை பிளவுபடுத்தி அதை அரசியலாக பாதுகாக்கும் மக்களின் எதிரிகள் எல்லாம், தாம் மக்கள் போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர்.

தாம் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தான், ஜோஷ் புஸ் முதல் பின்லாடன் வரை மக்களின் தொண்டைக்குழியையே அறுக்கின்றனர். புலிகளாக இருக்கலாம், புலியெதிர்ப்பாளனாக இருக்கலாம், போலிக் கம்ய+னிஸ்ட்டாக இருக்கலாம், அரசியல் கருத்தற்றவராக கூறிக்கொள்பவராக இருக்கலாம், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனமாக இருக்கலாம், இப்படி பற்பலவிதமானவர்கள் எல்லாம் மக்களின் விரோதிகளாகவே உள்ளனர். ஆனால் இவர்கள் தாம்............... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.
எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

புலிகள் தோற்று வருகின்றனர் என்று நாம் கூறுவதை, துரோகமாக, எட்டப்பத்தனமாக வழமைபோல் காட்டுகின்றனர். இது எப்படி தோற்காமல் முன்னேறுகின்றது என்று அவர்களால், காட்ட முடியாதுள்ளது. புலிகள் எதைத்தான், தமிழ் மக்களுக்கு பெற்று தருவார்கள் எனக் கூட அவர்களால் கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட புலிப்போராட்டம் பல பத்தாயிரம் மக்களின் மனித உயிர்களை காவு கொண்டது. போராட்டத்தின் பெயரில், இரண்டு பத்தாயிரம் இளமையும் துடிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களை பெயரில் பலியிட்டுள்ளனர். புலியுடன் முரண்பட்டதால் இதேயளவு எண்ணிக்கை கொண்ட துடிப்பும் ஆர்வமும் தியாக உணர்வும் கொண்டவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றனர்.

இப்படி ஒரு சமூகமே புலியின் சொந்த நலன் சார் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, December 5, 2008

இப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா !

இனியும், உன் தலை
நிலம் நோக்கி....?
வேண்டாம் இந்த வெட்கக்கேடு.
முற்றுபுள்ளியை
முதலில் அடிமைச்சாசனத்தின்
நெற்றியில் வை.
உன் கையில் பற்றியுள்ள
மரக்குச்சிகலைத் தூக்கித் தூற எறி.
ஆதிக்க வர்க்கங்களின்
விலா எலும்பினை உடைத்து

.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 4, 2008

பசுத்தோல் போர்த்திய கேள்விகள்

என்னையும்

எப்படி இந்துவாக்கினர்?
..
யாரெல்லாம்
இசுலாமியர் இல்லையோ
யாரெல்லாம்
கிறித்தவர் இல்லையோ
என்பதில் தொடங்கி
யாரெல்லாம்
மனிதர்கள் இல்லையோ
என்ற பரிணாமத்தில்
மாட்டிக் கொண்டேனோ நானும்?
..
எப்படி நானும்
இந்துவாய்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, December 3, 2008

நலம், நலமறிய நக்சல்பரி...

நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.
உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.


.கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்
ஒரு இழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.


.அங்கங்கே ஆள் வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, December 2, 2008

மும்பாய் பயங்கரவாதம் அநுராதபுரப் பயங்கரவாதம் ஒரு ஒப்பீட்டுப் பார்வை

இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில் மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.


இலங்கை நாட்டின் அநுராதபுரத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி 146 அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி தாங்கள் பெண்கள் குழந்தைகள் வயோதிபர், புத்தபிக்குகள் என யார் எவர் என்று பாராமல் சுட்டுத்தள்ளிய படுகொலையை நிகழ்த்தும்படி தங்களுக்கு ஆலோசனையும் பணமும் ஆயுதமும் பயிற்சியும் உளவுத் தகவலும் தந்து தங்களை வேண்டிக் கொண்டவர்கள் யாருமல்ல இந்திய அரசேயாகும் என்றார்.

இறைமையுள்ள ஒரு நாட்டின் அப்பாவி குடிமக்களை குறிவைத்து கொலைக்களமாக்கி அவர்களின் உயிர் குடித்து இரத்தத்தை ஆறாய் ஓடவைத்த பயங்கரவாதத்தை பணம் ஆயுதம் மற்றும் திட்டம் தயாரித்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆளும் வர்க்கமே! இன்.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில் மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.

இலங்கை நாட்டின் அநுராதபுரத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி 146 அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி தாங்கள் பெண்கள் குழந்தைகள் வயோதிபர், புத்தபிக்குகள் என யார் எவர் என்று பாராமல் சுட்டுத்தள்ளிய படுகொலையை நிகழ்த்தும்படி தங்களுக்கு ஆலோசனையும் பணமும் ஆயுதமும் பயிற்சியும் உளவுத் தகவலும் தந்து தங்களை வேண்டிக் கொண்டவர்கள் யாருமல்ல இந்திய அரசேயாகும் என்றார்.

இறைமையுள்ள ஒரு நாட்டின் அப்பாவி குடிமக்களை குறிவைத்து கொலைக்களமாக்கி அவர்களின் உயிர் குடித்து இரத்தத்தை ஆறாய் ஓடவைத்த பயங்கரவாதத்தை பணம் ஆயுதம் மற்றும் திட்டம் தயாரித்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆளும் வர்க்கமே! இன்.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, November 30, 2008

அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம்

இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், இதைப் பார்த்து ரசிக்கின்றோம். காலம் ப+ராவும் கொலை வெறியுடன், மற்றவனை அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம். மனிதத்தை வதைக்கும் கொடுங்கோலர்கள், பதைபதைக்க அதன் அத்திவாரமே ஆடுவதைக் நாம் கண்டு மனக்கிளர்ச்சி கொள்கின்றோம்.

சாதியின்பெயரால், மதத்தின் பெயரால் கொன்று குவித்த ஆவிகள், இதை பார்த்து குதூகலமடைகின்றன. ஆளும் அரச பயங்கரவாதமும், அதன் துணையுடன் ஆட்டம் போடும் இந்துத்துவவாதிகளால், மனிதம் சிதைக்கப்பட்ட போதெல்லாம் எந்த நீதி விசாரணையும் நடந்தது கிடையாது. இந்தக் குற்றத்துக்காக யாரும் தண்டிக்கப்பட்டது கிடையாது. இந்த குற்றவாளிகளும் அவர்களின் ரசிகர் கூட்டமும் தான் 'பயங்கரவாதம்" தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர். படுபாதகமான தம் செயலுக்காக தாம் கொல்லப்படுவதற்கு எதிராக, கொல் என்று கொக்கரிக்கின்றனர். சித்திரவதைக் கூடங்களையும், சிறைக் கொட்டகைகளையும், சட்டங்களையும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்து பயங்கரவாதம் தான், பம்பாய் தாக்குதலை (வழி)நடத்தியுள்ளது.

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள், இந்து பயங்கரவாத அடையாளங்களை தரித்திருந்தனரே, ஏன்!?

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள (முஸ்லீம் தனிநபர் பயங்கரவாதம் மூலம்), இந்து பயங்கரவாத அடையாளங்களையே தம் கவசமாக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தான் மிக வெற்றிகரமான, முழு உலகை அதிரவைத்த ஒரு தாக்குதலை அவர்கள் இலகுவாக நடத்த முடிந்தது.

இதுவும் எமக்கு ஒரு தெளிவான செய்தியைத் தருகின்றது. இந்து பயங்கரவாதிகள் தம்மை அடையாளப்படுத்தும் அடையாளங்களை 'பயங்கரவாதிகள்" தரித்ததன் மூலம், இலகுவாக அவர்கள் தம் இலக்கை அடையமுடியும் என்பதை நிறுவியுள்ளது. கடலில் தொடங்கி ஆடம்பர சொகுசு விடுதி வரை சுதந்திரமாக தாக்குதலை நடத்திச் செல்ல அனுமதித்துள்ளது.

இந்து பாசிச பயங்கரவாதிகள் நடத்திய பாபர் .................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மனித படுகொலைகளைக் கண்டு ரசிப்பவர்கள் தான், பம்பாய் மரணத்தை கண்டு புலம்புகின்றனர்

இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், இதைப் பார்த்து ரசிக்கின்றோம். காலம் ப+ராவும் கொலை வெறியுடன், மற்றவனை அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம். மனிதத்தை வதைக்கும் கொடுங்கோலர்கள், பதைபதைக்க அதன் அத்திவாரமே ஆடுவதைக் நாம் கண்டு மனக்கிளர்ச்சி கொள்கின்றோம்.

சாதியின்பெயரால், மதத்தின் பெயரால் கொன்று குவித்த ஆவிகள், இதை பார்த்து குதூகலமடைகின்றன. ஆளும் அரச பயங்கரவாதமும், அதன் துணையுடன் ஆட்டம் போடும் இந்துத்துவவாதிகளால், மனிதம் சிதைக்கப்பட்ட போதெல்லாம் எந்த நீதி விசாரணையும் நடந்தது கிடையாது. இந்தக் குற்றத்துக்காக யாரும் தண்டிக்கப்பட்டது கிடையாது. இந்த குற்றவாளிகளும் அவர்களின் ரசிகர் கூட்டமும் தான் 'பயங்கரவாதம்" தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர். படுபாதகமான தம் செயலுக்காக தாம் கொல்லப்படுவதற்கு எதிராக, கொல் என்று கொக்கரிக்கின்றனர். சித்திரவதைக் கூடங்களையும், சிறைக் கொட்டகைகளையும், சட்டங்களையும், தண்டனைகளையும் மக்களுக்கு எதிராகவே 'பயங்கரவாதத்தின்" பெயரில் உருவாக்குகின்றனர். இப்படி அரச பயங்கரவாதம் மக்கள் மேல் குதறியதும், அதற்கு எதிரான போராட்டமும் தான் மனித வரலாறு.

பம்பாய் தாக்குதல், செப் 11 போல் ஆளும் வர்க்கத்ததைக் கிலி கொள்ள வைத்துள்ளது. இதைக் காட்டி யுத்த வெறியும், அடக்குமுறையும், அடிப்படைவாதமும் மேல்நிலைக்கு உசுப்பேற்றப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் உலகம் இரண்டாக........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பம்பாய் 'பயங்கரவாதம்" ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

'பயங்கரவாதம்" என்று எதை நீங்கள் கருதுகின்றீர்களோ, அது எதனால் எப்படி ஏன் உருவாகின்றது என்பதை இனம் காணவும், அதற்கு காரணமானவர்களை எதிர்த்து சமூகம் போராடதவரை இது போன்ற 'பயங்கரவாதத்தை" யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. மாறாக 'பயங்கரவாதம்" செய்யும் நபர்களை, சமூக விழிப்புணர்வற்ற நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள் என்ற உண்மை, உங்களையே அழிக்கும்.

இந்த ''பயங்கரவாதம்" போட்டி போட்டு நேரடி ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்