தமிழ் அரங்கம்

Saturday, October 13, 2007

புலிகளும் சாதீயமும்

பி.இரயாகரன்

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிச தமிழீழமே எமது இலட்சிய தாகம் எனப் பிரகடனம் செய்தனர். அதையே தமது சொந்தக் கைகளால் புதைகுழிக்குள் அனுப்பிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பாத மந்தைக் குணம் கொண்ட தமிழ் சமுதாயத்தில் தான், புதுவை இரத்தினதுரை கதை சொல்லுகின்றார். தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் காதுக்கும் பூ வைக்க முனையும் ஒரு மோசடி தான் இது. அன்று அன்ரன் பாலசிங்கம் ரொக்சிய கட்சியில் இருந்து பெற்ற திரிபுவாத அரசியலை அடிப்படையாகக் கொண்டு, புலிக்கு இடதுசாரிச் சாயம் பூச முயன்றவர். புலிகளின் கொள்கை வகுப்பாளராக தன்னைத் தான் பாராட்டிக் கொண்டவர். தளத்தில் புலிகளின் கொள்கை வகுப்பாளராக இருந்த மு.நித்தியானந்தன், புலிகளின் பத்திரிகையில் சொந்த நடைமுறைக்கு புறம்பாகவே மாவோவின் மேற்கோள்களை அச்சிட்டு இடது சாயம் தெளித்து மக்களை ஏமாற்ற முயன்றவர். புலிகளுக்கு ஒரேயொரு ஆயுள் தலைவர் இருப்பது போன்று, கொள்கை வகுப்பாளரும் ஒரேயொருவர் மட்டுமே இருக்க முடியும் என்ற அடிப்படையில், மு.நித்தியானந்தன் கழித்து விடப்பட்டார். இதனால் புலி எதிர்ப்பாளராக வெளிவந்த மு.நித்தியானந்தன், காலத்துக்கு காலம் புலியின் நிலைக்கு ஏற்ப தாளம் போட்டு தனது பிழைப்புக்கு ஏற்ற நிலைப்பாட்டை நடத்தி வருகின்றார்.

இந்த வரிசையில் புதுவை இரத்தினதுரை "நான் இன்றும் மார்க்சியவாதியே" என்று கூறுவதன் மூலம், நக்கிப் பிழைக்கும் தனது நிலைப்பாடு சார்ந்து தான் இருக்கும் அமைப்பை மார்க்சிய இயக்கமாக சித்தரித்துக் காட்ட முனைகின்றார். பிழைப்புத் தனத்தின் கடைக் கோடியில் நின்று இப்படி புலம்புவது நிகழ்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்ட வரலாற்றில் அதற்கு ஆதரவாக இருந்த இவர், அதையே மார்க்சிய போராட்டமாக சித்தரிப்பது ஒரு விசித்திரமான விடையம். சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதிப் போராட்டமோ, ஒரு வர்க்கப் போராட்டம் அல்ல. வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த ஒரு அம்சம் மட்டும் தான். அடிப்படையில் ஒரு ஜனநாயக கோரிக்கை மட்டும் தான். சண் தலைமையில் நடந்த போராட்டம், வர்க்க அடிப்படையிலான கட்சியை கட்டுவதிலும் சரி, வர்க்கப் போராட்டத்தை நடத்துவதிலும் சரி இதில் எதையும் முன்னெடுக்கவில்லை. மாறாக பொருளாதார போராட்டங்களை வர்க்கப் போராட்டமாக காட்டி, வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பிச் சீரழித்தனர்.

அன்றைய ஜனநாயக போராட்டத்தில் கலந்த கொண்ட புதுவை இரத்தினதுரை, ஒடுக்கப்பட்ட சாதியின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். அதை மார்க்சியமாக நம்பியதும், அதையே மார்க்சியமாக விளக்குவதும், இதுவே அவரின் சித்தாந்தமான போது இயல்பில் புலிகளில் இணைவதை நியாயப்படுத்தியது. ஜனநாயகக் கோரிக்கையில் நிற்கும் ஒருவன் நிலைமைக்கு ஏற்ப ஊசலாடுவது, புதுவை இரத்தினதுரைக்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் தான் புதுவை இரத்தினதுரை, ஜனநாயகக் கோரிக்கையை கைவிட்டு வலதுசாரிகளான புலிகளில் இணைந்தார். வலதுசாரிக் கருத்துக்காக தன்னையும் தனது தோலின் நிறத்தையும் மாற்றிக் கொண்டதுடன், அவர்களின் கருத்துகளையும் அச்சடித்தது போல் பிரச்சாரம் செய்தவர். அன்றாட நிலைமை சார்ந்து வலதுசாரிய கருத்தின் அப்படையில் பல கவிதைகளை புனைந்தவர். இந்த கவிதைகளில் அவர் முன்னர் போராடிய சாதிய அம்சத்தை மருந்துக்கு கூட இணைக்கத் தவறியவர். பிழைப்புக்கும் அந்தஸ்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, மக்களின் தியாகங்களை கேவலப்படுத்திய ஒருவரே புதுவை இரத்தினதுரை.

பிழைப்புக்கு சோரம் போன புதுவை இரத்தினதுரை நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப கவிதை பாடியவர். புலிகளின் தளத்துக்கு ஏற்ப அதற்கு இசைந்து பாடியவர். சொந்த உணர்வில் இருந்து கவிதை படிக்கவில்லை. புலியின் உணர்வுக்கு ஏற்ப கவிதை படித்தவர். மக்களின் அடிப்படை உணர்வு சார்ந்த ஜனநாயகத்தை ஏறி மிதிப்பதில், தன்னைத் தான் இசைவாக்கியவர். புலம்பெயர் சமூகம் பற்றிப் பாடிய கவிதை ஒன்றை உதாரணத்துக்கு எடுப்போம்.

".. பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல

தாயகம் தீயில் எரிகையில் விட்டு

விமானத்தில் ஏறி பறந்தவர்

வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்

சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்

சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்

விட்டுப் பறந்த கோழைகள் நாளையே

வீடு திரும்பினால் காறியே துப்புவோம்

கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்

கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்

அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று

அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்

தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென

தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்

துப்புக் கெட்டவர் அகதி லேபலில்

தூசு தட்டியே காசு பிழைத்தனர்

ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்

எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்

போகட்டும் பாய்விரித்தால் போதும்

படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி

நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்

தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி

கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும் .."


என்று அன்று பாடியவர். இன்று அதுபற்றி வழங்கிய பேட்டியில் என்ன சொல்லி நக்குகின்றார் எனப் பார்ப்போம். "கவிதை எழுதுவதற்காக அந்த நேரத்தில் நான் பெற்றுக் பெற்றுக் கொண்ட மன உணர்வின் வெளிப்பாடு.... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தை தந்தது. அதே புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்." என்று இன்று நக்கிப் பிழைத்தபடி பினாற்றுகின்றார். இன்று வெளிநாட்டில் உழைத்து வாழும் மக்களின் பணத்தில் நக்கிப் பிழைக்கின்ற நிலைக்கு புலிகள் தங்கி இருப்பதால் தான், இந்த குத்துக் கரணம். பணம் தருவதைத் தான் கவிஞர் உணர்வு குன்றாதவர்கள் என்கின்றார். பணத்துக்காக தன் நிலைப்பாட்டையே மாற்றிவிடும் இந்தக் கவிஞர், பணத்தை பாயாக விரித்தால் அதையே புணரக் கூடியவர் தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இது கவிஞரின் இன்றைய உணர்வு.

அன்று எண்ணிக்கை குறைந்த நிலையில் தான், இப்படி தூற்றியதாக ஒப்புக் கொள்ளும் இவர் அதை அன்றைய உணர்வு என்கின்றார். அந்த உணர்வு சார்ந்து வெளிநாடு சென்றவர்களை பயந்து பறந்தோடிய கோழைகள் என்று காரணத்தை கற்பிக்கின்றார். உண்மையை புதைகுழிக்கு அனுப்பிவிட்டு அதை துப்பாக்கி முனையில் பாதுகாத்தபடிதான் தூற்றமுடிகின்றது. நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் பயந்து ஒடும் கோழைகள் என்பதாலா, நாட்டை விட்டு வெளியேறினர். இல்லை ஒரு நாளும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலே, புலம் பெயர வைத்தது. பிரதானமானது தேசிய பொருளாதார கொள்கை தொடர்பானது. இரண்டாவது மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பானது. இந்த இரு பிரதான காரணத்தினாலும் தான் புலம் பெயர்வு ஒரு விதியாகியது. இன்று வன்னியை விட்டே வெளியேற முடியாத பாஸ் நடைமுறை மூலமே, வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர். சொந்த தேசிய அரசியலால் அல்ல.

வெளிநாட்டை நோக்கிய புலம் பெயர்வில் பொருளாதார ரீதியான தனிமனித முன்னேற்றம் சார்ந்த அன்னிய மோகம், தேசத்தின் தேசியத்தின் அடிப்படைப் பண்பாக கொள்கையாக இருக்கும் வரை, எதையும் தூற்ற புலிகளுக்கு எந்த தார்மிக பலமும் கிடையாது. மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட இளைஞர் குழுவாக, மக்களின் அடிப்படை வாழ்வியலுடன் ஒன்றிணையாத நிலையில், அதற்கு எதிராக செயற்பட்டபடி உருவான ஒரு இயக்கமே. இந்த இயக்கம் இராணுவ தாக்குதலை நடத்திவிட்டு கோழையைப் போல் ஒடி ஒழித்துவிடும் நிலையில், அருகில் உள்ள கிராமங்களை சிங்கள இராணுவத்தின் சூறையாடலுக்கு உள்ளாக்குவதே ஒரு போராட்டமாகியது. தாக்கியவன் கோழையைப் போல் பயந்து ஒடி ஒழித்துவிடும் போது, தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் அங்கிருந்தும் அந்த மண்ணில் இருந்தும் தப்பியோடுவது ஒரு இயங்கியல் விதி.

இதில் பொருளாதார ரீதியாக ஒரு சாண் வயிற்றுக்கு வழி காட்ட முடியாத தேசிய பொருளாதார கொள்கையை பிரகடனம் செய்யும் (இன்று தேசியத்தை அழிக்கும் ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி நிற்கின்றனர்) புலிகளின் அதிகாரத்தில், சொந்த மண்ணை விட்டு சிங்கள தேசம் நோக்கிய புலம் பெயர்வும், அங்கிருந்தும் புலம் பெயர்வையும் புலிகள் தான் ஊக்குவித்தனர். இது மட்டுமா இல்லை. புலிகள் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுத்து அதன் தொடர்ச்சியில் அனைத்து அரசியல் அமைப்புகளையும் வேட்டையாடிய போது, ஈவிரக்கமற்ற படுகொலைகளே தேசிய அரசியலாகியது. இந்த நிலையில் மற்றைய அரசியல் பிரிவுகளும், இயக்க ஆதரவாளர்களும் அவர்கள் குடும்பத்தினர் முதல் கொண்டு அனைவரும் படுகொலைகளில் இருந்து தப்ப புலம் பெயர்வை ஒரு நிபந்தனையாக்கினர். எப்படி வாய் மூடி மக்கள் செம்மறிகளாக வாழ வேண்டும் என்பதை புலிகளின் உத்தியோகபூர்வமாக அன்று வெளியிட்ட கருத்தில் நாம் காணமுடியும். "40 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விமர்சனங்களை நிற்பாட்டிவிட்டு உங்களுடைய வாய்களை முடி வைத்துக் கொள்ள வேண்டும்." என்று புலிகளின் மத்திய குழு உறுப்பினர் யோகி கூறியதில் இருந்தே புதுவை இரத்தினதுரை கவிதையின் கருவைத் தேடியவர். இதை அவர் தாண்டவில்லை. சாமி சரணம் போட்டபடி வாயை உண்பதற்கு மட்டும் திறக்க கோரியவர்களுக்கு, அவற்றை இசையாக்கியவர். மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் வழங்கினால், புலிகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவர்கள் என்று தலைவரின் பெயரில் துண்டுப் பிரசுரம் போட்டு, அந்தத் தளத்துக்கு ஏற்ற மெட்டில் தான் இன்று புதுவை இரத்தினதுரையின் சொல் அலங்காரங்களும், அவரின் பிழைப்புச் சார்ந்த செழிப்பும் உயிர் வாழ்கின்றது. மக்கள் மக்கள் என்ற ஒப்பாரிகளும் தொடருகின்றது. எல்லாம் புலிமயமாகி அதுவே துப்பாக்கியின் ஒரேயொரு மொழியான நிலையில், வாய் மூடிய சமுதாயத்தில் பலவீனமான சமூக அறிவியலில் பின் தங்கிய பெண்கள், இளம் குழந்தைகள் புலிகளின் ஆதார சக்தியாகினர். இப்படித் தான் புலிகள் மீண்டும் ஆள் திரட்ட முடிந்தது. தற்போது கட்டாய இராணுவ சேவை மறைமுகமாக அமுலுக்கு வந்துள்ளது.

அன்றும் சரி இன்றும் சரி தேசிய முதலாளிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் சொத்துகளை பலாத்காரமாக அபகரித்தும், மிரட்டியும் கறக்கின்ற நிலையில், அவர்களும் கூட நாட்டைவிட்டே வெளியேறினர், வெளியேறுகின்றனர். இப்படி பற்பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டே புலம் பெயர்ந்தனர், புலம் பெயர்கின்றனர். 1983 க்கு பிந்திய இரண்டு வருட காலமே இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை மிக உச்சத்தில் இருந்த காலம். இந்த நிலையை பின்னால் ஒருக்காலும் அடையவில்லை. புதுவை இரத்தினதுரை காட்டும் காரணம் போலியானது. ஆயிரம் ஆயிரமாக 1983 - 1985 க்கும் இடையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இயக்கங்களில் இணைந்தனர். ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் புதைகுழியில் புதைத்த போது இது தலைகீழானது. புலம் பெயாந்தவனை திட்டி தீர்ப்பதால் உண்மை பொய்யாகாது.

புலம் பெயர்ந்தவனின் உழைப்பைப் பற்றி கொச்சைப்படுத்தும் போது "தூசு தட்டியே காசு பிழைப்பவர்கள்" என்ற உழைப்பின் மீதான வெறுப்பைப் பாடத் தயங்கவில்லை. ஆனால் அவர்கள் வேர்வை சிந்தி சொந்த உழைப்பில் வாழ்ந்தார்கள். ஆனால் உழைப்பில் ஈடுபடாதவர்கள் தூசு தட்டிய காசை இன்று பல்வேறு வழிகளில் வறுகுபவர்களாக மாறியுள்ளனர். அன்று கிண்டல் அடித்த அதே புலிகள் தான், இன்று அதில் தங்கி நிற்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்காக, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களின் நியாயமான போராட்டம் எதையும் புலிகள் முன்னெடுப்பதில்லை. அதற்கு எதிராக இருந்தபடி மூலதனத்துக்கு சேவை செய்வதில், தம்மைத் தாம் தலைசிறந்தவராக காட்டிக் கொள்கின்றனர். புதுவை இரத்தினதுரை காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்பப் பாடிப் பிழைப்பவர் தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் இருந்து பாடியவர் அல்ல.

தமது சொந்த நடத்தையை நியாயப்படுத்த மக்களுக்கு எதிராக பற்பல கதைகள் பல சொன்ன போதும், ஒன்றை மட்டும் தற்போதைக்கு எடுத்துக் கொள்வோம். இவர் வழங்கிய மற்றொரு பேட்டியில் "இனங்களுக்கிடையிலான சமத்துவம் எமது கனவுகளில் ஒன்றுதான். கணிசமான அளவு அது நனவாகி வருகின்றது. இனத்தின் அடையாளத்தின் மீதான அழிப்புக்கு எதிராக ஆரம்பித்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இப்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிச் சிங்கள சமூகத்தை சிந்திக்க வைத்திருக்கிறது. இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தினுள்ளே சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். (உறைந்து போகும் அடக்கு முறையை மீறியும் படுகொலையில் இருந்து தப்பியும் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகின்றார்.) நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன். தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை" புலம்பி புலம்பி உள்ளடகத்தை மழுங்கடிக்க முனைகின்றார்.

பல்வேறு அடிப்படையான கருத்துகள் மீது உண்மையை குழி தோண்டி புதைக்கின்றார். இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி சிந்திப்பதாக கூறும் இவர், இந்த ஐக்கியத்துக்கு புலிகள் குண்டு வைக்கவில்லையா? ஏன், நீர் சிங்களவன் என்று ஒருமையில் அழைத்து கவிதை பல பாடி, ஐக்கியத்தை வேட்டு வைக்கவில்லையா? அப்பாவி சிங்கள மக்களையும், இனவாதிகளையும் பிரித்தறியும் அரசியலை புலிகள் எப்போது எங்கே எந்த விடையத்தில் கையாண்டார்கள். இதை உங்கள் கவிதையில் எங்கே எப்படி சொல்லியிருக்கின்றீர்கள். அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைளை ஏற்ற சிங்கள மக்களையும் கூட இனம் காண மறுத்த தமிழ் குறுந்தேசியவாதிகள் அல்லவா நீங்கள். எல்லைகளை கடந்து நரைவேட்டையாடியும் குண்டும் வைத்த போதே ஐக்கியம் தூளாகியது. அதை கூட்டி அள்ளி இன்றைக்கு சிங்களவனே என ஒருமையில் அழைத்தபடி, ஒட்டவைப்பதாக கூறுவது நகைப்புக்குரியது. இங்கு ஐக்கியத்தை புலிகள் நாடவில்லை. மாறாக ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்கு இசைவாக நடத்துவிக்கும் பேச்சுவார்த்தை மேடையை அலங்கரிக்கும் சொற்தொடர்கள் தான், சிங்கள் மக்களுடன் ஐக்கியம் பற்றி கூறும் வார்த்தை ஜாலங்கள். உண்மையான ஐக்கியத்தை தமிழ் தேசியப் போராட்டம் கையாண்டு இருந்திருந்தால், ஒடிப் போன 60000 சிங்களப் படை வீரர்கள் புலிகளுடன் எப்போதே இணைந்து இந்த இனவாத அரசையே தூக்கி எறிந்து இருப்பார்கள்.

"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை"

என்ன வக்கிரமான கூற்று. சாதியம் உறைந்தே காணப்படுகின்றது என்பதை மறுக்கும் இவர், அதற்காக போராடத் தேவையில்லை என்கின்றார். அதே நேரம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று கூறுகின்ற போது பிழைப்புவாதத்தின் முரண்பாடு தொங்கி நிற்பதையும், சாதியை பாதுகாக்கும் புலிகளின் அரசியல் நிலைக்கு வக்காலத்து வாங்குவது தொங்கி நிற்பதையும் மறைக்க முடியவில்லை. சாதி அமைப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, புலிகளின் மேல் சாதிய யாழ் ஆதிக்க நிலைக்காக வக்காலத்து வாங்குகின்றார். ஆனால் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று குசு விடும் போது, தன்னையும் மீறி மணத்து விடுகின்றது. ஆனால் இந்த பேட்டியை துணிச்சலாக முரண்பாட்டுடன் வழங்க பின்பலம் உண்டு. இதை புரிந்து கொள்ள சரிநிகருக்கு 1990 களில் வந்த ஒரு வாசகர் கடிதத்தில் நடைமுறை சார்ந்த எதார்த்த உண்மை இதை சுட்டிக் காட்டுகின்றது. "தயவு செய்து புலிகள் பற்றித் தப்பாக எழுதுவதை இன்றுடன் நிறுத்தும்படி மிக மன்னிப்பாக கேட்கிறேன். நீர் எங்கிருந்தாலும் உமது காதுச்சவ்வு விரைவில் துப்பாக்கிக்குண்டு பட்டு வெடித்து நீர் அமெரிக்காவை விட்டு உமது பிள்ளைகளையும் பிரிந்து மேலே போகும் நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள்" சரிநிகர் பத்திரிகைக்கு இந்துமதி எழுதிய வாசகர் கடிதத்தின் உள்ளடக்கமே, இன்றும் விமர்சனம் மீதான எதார்த்தமாகும். இந்தப் பலத்தில் இருந்தே அனைத்தையும் தலைகீழாக புரட்டி கருத்துரைக்கின்றனர். நாங்கள் விமர்சிக்கும் போதும் எமது காதுச் சவ்வுகளை நோக்கிய துப்பாக்கிகளின் சன்னங்களின் ஊடுருவல் முதல் இரைப்பையை நோக்கி நஞ்சூட்டல் வரையிலான எல்லாவிதமான எதார்த்தமான நிலைமைகளையும் கடந்து கருத்துரைக்கவில்லை. எமது மரணத்தை முகத்துக்கு முன்னால் எதார்த்தத்தில் நாள் தோறும் எதிர்கொண்டே, தமிழ் தேசியம் படைத்த ஜனநாயகத்தில் வாழ்கின்றோம். கருத்துரைக்க வேண்டிய உன்னதமான உணர்வுகளை மற்றவனுக்கு மறுத்தபடி தான், புதுவை இரத்தினதுரை சாதியைப் பற்றி பிதற்றுகின்றார். புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான். புதுவை இரத்தினதுரை தனது இயக்க அரசியல் சார்ந்த சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, சொந்த தனது ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரால் கூறி நியாயப்படுத்தவும் பின்நிற்கவில்லை. "ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் (சாதி) சோந்தவர்" என்பதால் தலித்துகள் விரும்பின் குண்டியைக் கழுவி விடலாம். ஆனால் சாதியத்துக்கு எதிரான போராட்டம் என்பது, இந்து மதமும் அதனுடன் ஒட்டிப் பிறந்த சாதியமும் உள்ள வரை (மூளை ஒன்றாகவும் உடல் இரண்டாகவும், அதாவது மதமும் சாதியுமாக உள்ளது) தொடர்வதை, எந்தத் தலித்தும் எந்த இயக்கமும் தடுத்து விடமுடியாது.

சாதியம் உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களை நடத்த முற்பட்ட, நடத்திய சில நூறு பேர் புலிகளால் கொல்லப்பட்ட போது புதுவை இரத்தினதுரை அதற்கு வெண்சாமரை வீசி அரசனையும் சபையையும் வாழ்த்தி வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருந்த பெட்டைக் கோழியாவார். இதற்கு பரிசாக அவரை உயர்சாதி நிலைக்கு, கவிதையின் அந்தஸ்து சார்ந்து உயர்த்தப்பட்டார். இதனால் சாதியம் ஒழிந்து விட்டதாகவும், அதற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறும் இவர், சாதிய வேர் இருந்த போதும் பயப்பட வேண்டிய தேவையில்லை என்ற கூவ முயலுகின்றார். இதை அவர் "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று கூறி அதன் மூலம் கொக்கரிக்க முயலுகின்றார்.

01.07.2003

Friday, October 12, 2007

கற்பு, கருத்துச் சுதந்திரம்: மாயையும் உண்மையும்

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் நேரம் சினிமா நேரம் என்றாகிவிட்ட நிலையில் கலவி பற்றி குஷ்பு கூறிய கருத்தும், பின்பு அதைக் கொம்பு சீவிவிட்ட சுகாசினியும், இவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் மொத்தத்தில் இந்த நாடகம் இந்தியா டுடே போட்ட பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.


கற்பின் ஆதரவும், கலவியின் எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகவும், சகிப்புத் தன்மையற்ற பாசிசச் சமூகமாக மாறுவதன் அடையாளமென்றும் ஓநாய் போல வருத்தப்படும் இந்தியா டுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் தமக்கு ஆதரவாக அமீர்கான், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா முதலான அகில இந்திய நட்சத்திரங்களைக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றனர்.


இதையே சற்று "அறிவார்ந்த' தளத்தில் ஆதரிக்கும் வேலையினை அ.மார்க்ஸ், ஞாநி, கனிமொழி மற்றும் சிறு பத்திரிக்கைகள் செய்ய, செயல் தளத்தில் சற்று தாமதமாகவும், தயக்கத்துடனும் த.மு.எ.ச. கோமாளிகள் பேசி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாதபடி, தங்களது பெயர்கள் ஊடகத்தில் தொடர்ந்து அடிபடுவதைக் கண்ட பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் உடனடி லாட்டரியில் கிடைத்த திடீர் பரிசின் மகிழ்ச்சியோடு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குப் போடுதலையும் தொடர்கின்றனர்.


இது போக தமிழில் வெளியாகும் செய்திகளில் இரண்டு உண்மைகள் சன் டி.வி. உண்மை, ஜெயா டி.வி. உண்மை உண்டென நிறுவி வரும் மேற்படி சானல்கள் குஷ்புசுகாசினியை எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் பரபரப்புத் தளத்தில் செய்து வருகின்றனர். உறுதியாக "இன உணர்வு அற்றுப்போன தமிழ்ப் பாலைவனத்தின்' கதகதப்பில் சோர்ந்து சுருண்டிருக்கும் இனவாதப் பூனை, தமிழினம் தனது மரபு, கற்பு, பண்பாடு குறித்து சிறுத்தை போல சீறுவதாகக் கற்பித்துக் கொள்கிறது; ஒரு பகற்கனவுக்காரனின் இன்பத்தைத் துரத்தி மகிழ்கிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.


எது கருத்துச் சுதந்திரம்


யாருக்குக் கருத்துச் சுதந்திரம்?


இந்தப் பிரச்சினை கருத்திலும், காட்சியிலும் பரபரப்பாய் இருக்குமளவுக்கு அதன் உண்மை சூட்சுமமாய் மறைக்கப்பட்டிருக்கின்றது. மேட்டுக்குடியின் நனவுப் பத்திரிகையான இந்தியா டுடேயின் தலைமையில் குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாய் அலறுவது அதிலொன்று.


முதலாளித்துவ ஜனநாயகத்தின் தந்திரமான இருப்பே அது எல்லோருக்குமான நலனுக்காக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. இதில் முதலாளிகளின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் எல்லோரின் நலன் பாதிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பப்படும். ஜனநாயகத்தின் கதி இதுதானென்றால் கருத்துச் சுதந்திரத்தின் கதியும் அதுதான். சட்டத்தின் ஆசியுடன், தண்டனையின் கண்காணிப்பில் போதிக்கப்படும் ஜனநாயகத்தின் மேன்மை போன்றே அனைவருக்கும் சமமான கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான்.


உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. பலரும் பல கருத்துக்களை பேசி, எழுதி, விவாதிக்கலாம். ஆனால் அவை அமலாக்கப்படும்போதோ, முடிவெடுக்கப்படும் போதோ ஆளும் வர்க்க நலனுக்குரியவை மட்டும்தான் தேர்வாகும். மற்றவை மறுக்கப்படும். எனவே எல்லாக் கருத்துக்களும் கருத்தளவில் உலவலாமே ஒழிய, பௌதீக ரீதியான செயலாக ஒருபோதும் மாற முடியாது. ஆக அரசும் ஜனநாயகமும் அதிகாரமும் ஒரு வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க முடியும் என்ற விதி கருத்துக்களின் உரிமைக்கும் பொருந்தும்.


குஷ்பு கூறிய சுதந்திரப் பாலுறவு பற்றிய பிரச்சினை மேற்கண்ட விதியுடன் நேரிட்டுப் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டுப் பிரச்சினை என்ற போதிலும் அந்த வேலையை இந்தியா டுடே சிறப்பாகச் செய்து வருகிறது. குஷ்பு, சுகாசினி கொடும்பாவிகள் எரிக்கப்படுவதைக் கண்டிக்கும் சாக்கில் அழகுப் போட்டிக்கு ஆபத்து, பேஷன் ஷோவிற்குத் தடை, ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்படும் அராஜகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டு கண்டிக்கிறது.


இதிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துள்ளது என்று அலறும் இந்தியா டுடே, வைகோ உள்ளிட்ட தமிழின ஆர்வலர்கள் பொடாவில் அநீதியாகச் சிறை வைக்கப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன்? ஈழப்போராட்டத்தை வெறும் மேடைப் பேச்சில் கூட ஆதரிப்பதற்குச் சுதந்திரமில்லையா? குஷ்பு, சுகாசினியை ஆதரித்து ஞாயிறு மலர் வெளியிடும் இந்துப் பத்திரிக்கை தனது சக பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை ஜெயா அரசு பொடாவில் வாட்டி எடுத்தது குறித்து மூச்சு விடவில்லை.


எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைவையொட்டி பக்கம் பக்கமாக அழுது, அரற்றி, புலம்பித் தீர்க்கும் காலச்சுவடு, உயிர்மை முதலான சிறுபத்திரிக்கைகளும், போலிக் கம்யூனிஸ்டுகளின் கலைப்பிரிவான த.மு.எ.ச.வும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளென ஆந்திரத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரவரராவும் கல்யாண் ராவும் கைது செய்யப்பட்டதை ஒரு செய்தி என்ற அளவில் கூடக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டாலினின் சோவியத் யூனியனில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டதான புனைவை பொய்யை இவர்கள் நினைவு கூறுவதற்கு தவறுவதில்லை.


சாதியின் பெயரால் மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் நடத்திவரும் பிழைப்புவாத, காரியவாத, சந்தர்ப்பவாத அரசியலையும், அதன் வழி அச்சாதிகளைச் சேர்ந்த மக்கள், சந்தர்ப்பவாதத்திற்குப் பயிற்றுவிக்கப்படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் உண்மையில் அவற்றை அங்கீகரித்துக் கொண்டு குஷ்பு எதிர்ப்பில் இவர்களது பாசிச மனோபாவத்தைக் கண்டுபிடித்துக் கவலைப்படுவது நகைப்பிற்குரியது; அருவறுப்பானது.


உலகமயமாக்கத்தின் விளைவால் விரிந்து செல்லும் மேட்டுக்குடியின் அலங்கார வாழ்வை மட்டுமே அங்கீகரிக்க முயலும் இந்தியா டுடே, இந்து பத்திரிக்கைகள் சுதந்திரப் பாலுறவு குறித்த சர்ச்சையில் எடுக்கும் நிலைப்பாடும், கவலைப்படும் விதமும் ஆச்சரியமானதல்ல.


உண்மையில் குஷ்பு, சுகாசினிக்கு ஆதரவாய் பிரபலங்களை நேர்காணல் செய்வதும், ஒத்த கருத்துள்ளவர்களை வைத்து "விவாதம்' நடத்திச் செய்தி வெளியிடும் இப்பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரத்தில் யார் தலையிட்டார்கள், இல்லை, யார்தான் தலையிட முடியும்? விடுதலைச் சிறுத்தைகளோ, பா.ம.க.வினரோ தமக்கு எதிராக இப்பத்திரிக்கைகள் எப்படிச் செய்தி வெளியிட முடியும் என்று கேட்டதில்லையே. மேலும், அப்படிக் கேட்கத்தான் முடியுமா?


இதனால் இந்தியா டுடேயில் திருமாவளவனின் விருந்தினர் பக்கம் கிழிபடும் என்பதல்ல, இப்பத்திரிக்கைகளை எதிர்க்க நினைப்பது இந்திய அரசையே எதிர்ப்பது போல ஆகுமென்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே நிச்சயமின்மையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பாமரர்கள் அல்ல. கூட்டணியிலும், ஆட்சியிலும் சிறிய பங்கைப் பெற்றிருக்கும் அவர்களுக்கு தங்களது ஆட்டத்தை எந்த எல்லைவரை கொண்டு செல்லலாம் என்பதும் நன்கு தெரியும்.


எனவேதான் குஷ்புவுக்கு எதிராக ஆத்திரம் கொள்ளும் இச்சூரப்புலிகள் பார்ப்பனப் பத்திரிக்கைகள் தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக வருத்தம் வெளியிடுகிறார்கள். திருமாவளவன் ஒருபடி மேலே போய் "துடைப்பம் தூக்கிய எங்காட்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று விலகிக் கொள்கிறார்.


இவ்வாறு பார்ப்பன ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் பணிவுடன் அங்கீகரிக்கிறார்கள். விளக்குமாறு, செருப்பு, மட்டுமல்ல மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே சமூகத்தின் கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கைகள் என்று நிலைநாட்டுவதுதான் குஷ்பு விவகாரத்தின் மூலம் பார்ப்பன ஊடகங்கள் செய்ய விரும்பும் சதி.


மக்கள் தமது கோரிக்கைகளை மனுக் கொடுத்தும் பயனில்லை என்பதால் மறியல் செய்து போராடுகிறார்கள். நாக்பூரில் கோவுர் இனப் பழங்குடி மக்கள் மந்திரியைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்று போலீசின் தடியடி நெரிசலில் 150 பேரைப் பலி கொடுத்தனர். நெல்லையில் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் போலீசால் கொல்லப்பட்டனர்.


கேவலம் மனுக் கொடுப்பதற்குக் கூட உரிமையோ, சுதந்திரமோ, அனுதாபமோ இல்லாத இந்த நாட்டில் தான் குஷ்புவுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையென்று கண்ணீர் விடுகிறார்கள். தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு வழியே இல்லை என்பதால்தான் சுவரொட்டியாய், சுவரெழுத்தாய், ஊர்வலமாய், மறியலாய் மக்கள் தங்களது கோரிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்தியாடுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் கையில் இருந்தால் போலீசிடம் அடிபட்டு ஏன் சாகவேண்டும்? எனவே, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் கூட மக்களுக்கு இல்லை, முதலாளிகளுக்கு மட்டும்தான்.


அம்பானியின் குடும்பச் சண்டையை தேசியப் பிரச்சினையாக்கிய தேசியப் பத்திரிக்கைகள் அதைத் தீர்த்து வைப்பதற்குக் காட்டிய முனைப்பும், சகாரா முதலாளி சுபத்ரா ராய் தலைமறைவானது குறித்து அவை காட்டிய கவலையும், பாரிசில் உலக இரும்பு இந்திய முதலாளி லட்சுமி மிட்டல் உலகமே வியக்கும்படி நடத்திய திருமணம் குறித்த பெருமிதமும், மக்களுக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இல்லை என்பதும் வேறுவேறல்ல.


தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் அடங்கிய செய்தி ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் ஊடக முதலாளிகள். செய்தி ஊடகங்களின் முக்கிய வருவாயான விளம்பரத்தை அளிப்பவர்கள் அரசு, தொழில் துறை மற்றும் சேவைத் துறை முதலாளிகள். இந்நிலையில் ஆளும் வர்க்க நலனுக்குஉகந்தவை என்று முடிவு செய்யப்படுபவை மட்டுமே செய்தியாக, கட்டுரையாக, நிகழ்வாக, ஆய்வாக, அறிவாக முன்னிறுத்தப்படும். மற்றவை கிள்ளுக் கீரையாக மறுக்கப்படும்.


"மனம் போல தினம் ஜமாய்' என்று கோக்கை குடிக்குமாறு அமீர்கான், விவேக், விக்ரம் வலியுறுத்துவதற்கு இருக்கும் சுதந்திரம் கோக்கை மறுப்பதற்கு இல்லை. நெல்லையில் "அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்' என்ற எமது இயக்கத்தின் சுவரெழுத்துப் பிரச்சாரத்திற்காகவே, பிணையில் வர இயலாத வழக்கு காவல் துறையால் போடப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்யும் எமது தோழர்களை தொடர்ந்து தடுக்கும் போலீசு மக்களையும் மிரட்டி வருகிறது.


""கங்கை கொண்டான் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கொக்கோகோலாவுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் நடத்தும் எதிர்ப்புப் பிரச்சாரம் பொது அமைதியைச் சீர்குலைத்து விடும்'' என்று எழுத்துப்பூர்வமாகவே கருத்துரிமையை மறுக்கிறது நெல்லைப் போலீசு. குஷ்புவின் கருத்துரிமைக்காகக் குமுறி வெடிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், நெல்லைப் போலீசு அதிகாரிகளை வேலை நீக்கமா செய்யப் போகிறது?


குஷ்பு, சுகாசினி எதிர்ப்பை தமிழ் ஊடகங்கள் செய்தியாக்குவதன் காரணம், அதன் சினிமா பரபரப்பைக் காசாக்குவதுதானேயொழிய வேறு எதுவுமில்லை. அதனால்தான் குஷ்புவை ஆதரித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் செய்தியின் "தரம்' தமிழில் இல்லை. குஷ்பு பிரச்சினை குறித்த விவாதமொன்றில் சினிமா தயாரிப்பாளர் பழ.கருப்பையா குஷ்புவை அவள் இவள் என்று பேசியதைக் கண்டிக்கிறார்கள். கண்டிப்பாக இது பழ.கருப்பையாவின் ஆணாதிக்கம்தான். ஒத்துக் கொள்வோம். ஆனால் நக்சலைட்டுகளையும், காசுமீர் போராளிகளையும் அவன், இவன் என்று எழுதுவதும், தீ.கம்யூனிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்வதும் என்ன வகை ஆதிக்கம்?


பழ.கருப்பையாவது அவள், இவளென்று நிறுத்திக் கொண்டார். பெண்கள் விசயத்தில் சங்கராச்சாரி என்ன பேசினார், எப்படி நடந்து கொண்டார் என்பது நிர்வாணமான நிலையில் எந்தப் பத்திரிகையும் சங்கராச்சாரியைப் பொறுக்கி என்று எழுதவில்லை. எழுதவில்லை என்பது மட்டுமல்ல தீபாவளித் திருநாளில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதை வைத்து, அடிப்படை ஜனநாயக உரிமை பறிபோனதாக ஒரு பாட்டம் அழுது தீர்க்கவும் செய்தார்கள். ஆனால் அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று ஒரு உலகறிந்த உண்மையை எழுதியதற்காக தருமபுரியில் எமது தோழர்கள் 55 நாட்கள் சிறையில் இருந்தனர்.


ஆக, இந்தியத் திருநாட்டில் ஒருநபரை எப்படி அழைக்கலாம், அழைக்கக் கூடாது என்பதில் கூட கருத்துச் சுதந்திரம் கடுகளவும் இல்லை. எப்போதெல்லாம் ஆளும் வர்க்க நலன் இலேசாக உரசப்படுகிறதோ உடனே கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகக் கூக்குரல் எழுகிறது.


கலாச்சாரப் போலீசைக் கண்டிக்கும்


சட்டம் ஒழுங்கு போலீசு!


குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை என்றும், இவர்களைக் கலாச்சாரப் போலீசு என்றும் சித்திரிக்கும் பார்ப்பன ஊடகங்களும், போலி கம்யூனிஸ்டுகளும், அறிஞர் பெருமக்களும் இக்கருத்தை வெளியிடும்போது சட்டம் ஒழுங்கு போலீசின் குரலில் பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்கெனவே ஜனநாயகமும், கருத்துரிமையும் சட்டப்படி நிலவி வருவதைப் போன்ற பிரமையையும் உருவாக்குகிறார்கள். பாசிசத்தை ஜனநாயகம் என்று அங்கீகரிக்கும் இவர்கள் "கற்பை' பிற்போக்குத்தனம் என்று சாடுவது நல்ல நகைச்சுவை.


கற்பை ஆதரிக்கும் கருத்துப் பிரச்சாரம் செய்யலாமாம். ஆனால் அதைக் கண்ணியமான முறையில் செய்ய வேண்டுமாம். துடைப்பம், செருப்பு, கொடும்பாவி ஆகியவை கூடாதாம். செருப்பு, துடைப்பம் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதோ, வழக்குப் போடுவதோ உலகெங்கும் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக முறைகள்தானே, இதில் எங்கே வன்முறை உள்ளது? உண்மையில் இத்தகைய ஆர்ப்பாட்ட முறைகளின் மீது நடுத்தர வர்க்கத்திற்கு உள்ள வெறுப்பையே இந்து பத்திரிகை முதல் ஷங்கர் படம்வரை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வெறுப்பே நீதிமன்றங்கள் மூலம் பல விதங்களில் சட்டமாகியிருக்கின்றது.


அடுத்து குஷ்பு, சுகாசினியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு போடுவதைப் பாசிசம் என்கிறார்கள். இதை எப்படிப் பாசிசம் என்று சொல்ல முடியும்? லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாத வழக்குகளுக்காகவும், வாய்தாக்களுக்காகவும் அலைந்து கொண்டிருக்கும்போது, குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் படியேறியது குறித்துக் கண்ணீர் விடுகிறார்கள். உண்மையில் இது "நாங்கள் நீதிமன்றம், வழக்கு, விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள்' என்ற மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. சென்னை உயர்நீதி மன்றமும் குஷ்பு மீது வழக்குகள் போடுவதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.


ஆளும் வர்க்க நலன் பாதிக்கப்படும் போது மட்டும் எல்லோருக்குமான சட்டம் ஒழுங்கு "எங்களுக்கில்லை' என்ற மனோபாவம்தான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் உண்மையான இலக்கணம். கோவை குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முசுலீம்கள், பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகள் போன்றோர் உயர்நீதி மன்றத்தின் அநீதிக் கண்களுக்குத் தெரிவதில்லை. குஷ்புவின் கருத்தை எதிர்க்கும் கற்பு ஆதரவாளர்கள் தமிழ்ப் பிற்போக்காகவே இருக்கட்டும். அவர்கள் போடும் வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபிப்பதில் என்ன பிரச்சினை?


பாசிசத்தின் பாதந்தாங்கியாகக்


கருத்துச் சுதந்திரம்!


ஒரு கருத்தை கருத்தால் சந்திக்காமல், துடைப்பத்தை எடுப்பது வன்முறை என்றால் தங்கர்பச்சான் நடிகைகளைப் பற்றி தெரிவித்த கருத்துக்காக அவரை மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்தித்ததும் வன்முறைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். காசுக்காக தனது கருத்தையும், கலைத் திறமையையும், உடலையும் விற்பனை செய்கின்ற விபச்சாரர்கள் நிரம்பிய திரையுலகத்தில் விபச்சாரிகளை மட்டுமே சாடிய தங்கர்பச்சானின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிப்பதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?


கருத்துச் சுதந்திரக்காரர்களின் இந்த இரட்டை வேடம் தவிர்க்க இயலாமல் அவர்களைப் படுகுழியில் இறக்குகிறது. ""பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான், ஆனால் "மசூதி இருந்த இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்தது' என்று கூறுவதற்கும், "அங்கே கோவில் கட்டுவோம்' என்று கருத்து தெரிவிப்பதற்கும் இந்துத்துவவாதிகளுக்கு கருத்துரிமை உண்டு'' என்று கூறுகிறார் அ.மார்க்ஸ். அரை அம்மண நடனங்கள், ஏகாதிபத்திய நுகர்வு வெறிக் களியாட்டங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்த தனிநபரின் பாலியல் உரிமைகள் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டு பாசிசத்தின் கருத்துரிமையையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. குஷ்புவின் கருத்துரிமைக்காக முசுலீம்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் காவு கொடுக்கிறார் அ.மார்க்ஸ்.


முற்போக்குக் கலைஞரான பிரளயனோ தனியாருக்குச் சொந்தமான டிஸ்கோத்தே அரங்கிற்குள் போலீசு எப்படி அத்துமீறி நுழையலாம் என்று நட்சத்திர ஓட்டல் முதலாளியைப் போல இடி முழக்கம் செய்கிறார். இந்த வாதத்தின்படி தனிச்சொத்துடைமையின் பெயரால் சாதி தீண்டாமையையும், கருத்துரிமையையும் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.


எல்லா கருத்துக்களுக்கும் சமஉரிமை என்ற கருத்தே ஒரு பித்தலாட்டம். சாதி தீண்டாமையும், இந்து மதவெறிப் பாசிசமும், கற்பும், முல்லாக்களின் பத்வாக்களும், உழைக்கும் மக்களுக்கெதிரான கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற யாரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்க முடியாது. அவற்றை அங்கீகரிக்கவும் முடியாது.


பெண்ணடிமைத்தனத்தை


வளர்க்கும் பாலுறவு சர்வேக்கள்


இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வேயிலோ, குஷ்பு கூறிய கருத்திலோ ஆணாதிக்கம் குறித்து ஒரு வெங்காயம் கூடக் கிடையாது. மாறாக, மாநகர மேட்டுக்குடி இளம் பெண்களிடம் விதவிதமான பாலியல் ருசிகளை அறிமுகப்படுத்துவதற்காகவே அந்த செக்ஸ் சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்த்தால் இனிமேல் சரோஜாதேவிப் புத்தகங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றும். நடுத்தர வர்க்கம் மற்றும் மேட்டுக்குடியை விழுங்கி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தான் இந்த சர்வே.


உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உருவாக்கி வரும் நுகர்வுப் பண்பாடு, சமூகம் சூழ வாழும் ஒரு தனிநபரை பொருட்கள், ஆசைகள் சூழப்பட்ட நபராக மாற்றுகிறது. இந்த நபர் மேலும் மேலும் தனிமனிதனாக மாறி சகிப்புத் தன்மையற்ற நபராக மாறி, தனது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஏனைய மனித உறவுகளை ரத்து செய்கிறார். பாலுறவிலும் நுழையும் இந்தக் கண்ணோட்டம் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு ஆணாதிக்கத்தை எதிர்த்தோ, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தோ, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தோ உள்ள மங்கலான போராட்ட உணர்வைக் கூட பெண்களிடமிருந்து துடைத்தெறிந்துவிடும். இது தனது ஆசை, தேவைகளுக்காக எல்லா விழுமியங்களையும் துறந்து தேர்ந்த காரியவாதியாக மாறுவதைப் பயிற்றுவிக்கிறது.


இந்தியா டுடேயின் சர்வே கேள்விகளில் ஒன்றான "வேலை கிடைப்பதற்காக உடலை விற்பீர்களா?' என்ற கேள்வி அவர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. அது மாறும் சூழ்நிலைக்கேற்ப "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ளுமாறு நவீன காலப் பெண்களைப் பச்சையாகக் கேட்கிறது. கற்பு குறித்த பிற்போக்குத்தனத்தை, செத்த பாம்பை அடிக்கும் இவர்கள் தங்கள் சர்வேயில் பாலியல் வன்கொடுமை பற்றியோ, சமூகத்தில் விரவியிருக்கும் ஆணாதிக்கம் குறித்தோ ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.


குஷ்புவும் கூட தனது கருத்தில் திருமணத்துக்கு முந்தைய பாலுறவில் "பாதுகாப்பாக விளையாடுமாறு' கவலை கொள்கிறார். இங்கும் சுதந்திரப் பாலுறவின் பெயரால் பெண்ணுடலை நுகர் பொருளாக்கும் ஆணாதிக்கம் குறித்து எந்தக் கேள்வியுமில்லை. அதனால்தான் இவர்கள் கற்பை பிற்போக்கு என்று தெளிவாக வரையறுப்பதுபோல, பெண்களுக்கான முற்போக்கு எது என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அதற்கு மாறாக பெண்ணுடலை வெறும் காமப் பொருளாக உறிஞ்சக் கொடுக்கும் அடிமைத்தனத்தை அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் சிபாரிசு செய்கிறார்கள். இதுவும் கற்பு என்ற பிற்போக்குத்தனத்திற்கு கடுகளவும் குறையாத பிற்போக்கத்தனம்தான்.


சுதந்திரப் பாலுறவு என்ற கோட்பாடு நடைமுறையில் ஆணின் பொறுக்கித்தனத்திற்கும், பெண்ணின் அடிமைத்தனத்திற்கும் உதவுமேயன்றி அதில் வேறு எந்த தத்துவ ஆராய்ச்சிக்கும், மயிர் பிளக்கும் விவாதத்திற்கும் இடமில்லை. அவ்வகையில் விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க.வினரின் மலிவான பரபரப்பு அரசியலை விட இந்தியா டுடேயின் பாலுறவு அரசியல் அபாயகரமானது.


ஐ.டி. (ஐ.கூ) எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை குறித்து ஆகா, ஓகோ என்று புகழ்பாடும் இந்தியா டுடே அதில் பெண்கள் படும் துயரம் குறித்து இதுவரை எந்த சர்வேயும் எடுத்ததில்லை. இத்துறைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக ஆளாகிறார்கள், பணிநிரந்தரம் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை, வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லை. மேலும், வார இறுதிக் கேளிக்கைகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப்படுகிறார்கள். இதற்கு மறுப்பவர்கள் இத்துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பழமைவாதி என்று கேலி செய்யப்படுகிறார்கள். அந்தப் பழமைவாதிகளை ஜாலியான அடிமைகளாகப் பழக்கப்படுத்துவதுதான் இந்தியா டுடேயின் வேலை. மாறாக, அந்த நவீனப் பெண்ணடிமைகளை விடுதலை செய்வதற்கல்ல.


இந்தியா டுடேயின்


"புதிய முற்போக்கு'


கற்பு எனும் நிலவுடைமைப் பிற்போக்கைச் சாடும் சக்கில் இந்தியா டுடே உலகமயமாக்கத்தின் கேடுகளை நைசாக முற்போக்கு என்று சேர்த்து விடுகிறது. பழைய தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இது முற்போக்கு, தொழிற்சங்கம் வேண்டுமெனச் சொல்வது, வேலை நிறுத்தம் செய்வது இவை பிற்போக்கு. பேஷன் ஷோ, அழகிப் போட்டி முற்போக்கு. புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்வது, கடைகளின் பெயரைத் தமிழில் எழுதுவது பிற்போக்கு. இறுதியில் இந்த "முற்போக்கை' மறுத்து "பிற்போக்கை' ஆதரிப்பவர்களை தாலிபான்கள் என்று முத்திரையும் குத்தி விடுகிறது இந்தியா டுடே. காலாவதியாகும் கற்பை வைத்து உலகமயமாக்கத்தின் கேடுகளை ஏற்கச் செய்யும் இந்தச் சதித்தனம் எத்தனை பேருக்குப் புரியும்.


முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தை குஷ்புவை ஆதரிப்பவர்கள் பின்னுக்கு இழுப்பதாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டுப் புலம்பிய த.மு.எ.ச. அறிவாளிகளை ஏன் கோமாளிகள் என்று அழைத்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும். ஆனால் தொழிற்சங்கம் கூடாது என்ற "முற்போக்கை' மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஏற்றுக் கொண்டுள்ள படியால் அவர்களை முற்றிலும் ஏமாந்த கோமாளிகள் என்றும் சொல்லிவிட முடியாது.


கருத்துச் சுதந்திரத்திற்காக மார்தட்டும் இந்தியா டுடே தொழிற்சங்கம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும், தாராளமயத்தால் தற்கொலை செய்யும் விவசாயிகள் குறித்தும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் ஏன் சர்வே எடுக்க முன் வரவில்லை? ஆனால் பாலியல் குறித்து மூன்று மாதத்திற்கொரு முறை சர்வே எடுக்கும் வேகமென்ன, குஷ்புவுக்கு ஆதரவாக ஒதுக்கப்படும் பக்கங்களென்ன, சமூகம் "முன்னேறி'ப் போவதன் இலட்சணம் இதுதான். குஷ்புவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட இத்தகைய சமூக முன்னேற்றத்தோடு கருத்து வேறுபாடு கொண்டவர்களல்லர். அவ்வகையில் அவர்களது சண்டை அட்டைக் கத்திகளோடுதான்.


எய்ட்ஸ் நோயின் ஊற்றுக் கண்ணான விபச்சாரத்தையும், மக்களைக் காமவெறி பிடித்த விலங்குகளாக மாற்றும் திரைப்படங்களையும் தடை செய்வது குறித்து மூச்சுவிடாமல், நாடெங்கும் ஆணுறை எந்திரங்களை வழங்குவதன் மூலம் ஆண்களுக்குப் "பாதுகாப்பை' வழங்குகிறார் அமைச்சர் அன்புமணி. பெண்களுக்கு கற்புக் கவசம் அணிவித்து ஆண்களிடமிருந்து "பாதுகாக்கிறார்' அப்பா இராமதாசு. சிகரெட் உற்பத்திக்குத் தடை இல்லை; சினிமா நிழலுக்குத் தடை. சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்து தமிழ் வணிகர்களை ஒழிக்க டெல்லியிலிருந்து திட்டம். அழியவிருக்கும் சிறுவியாபாரிகள் தமிழில் போர்டு வைத்த பின்தான் அழியவேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் போராட்டம்.


குஷ்பு, சுகாசினி


மேட்டுக்குடியின்


மனச்சாட்சி!


பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் எப்படி தமிழினத்தின் பிரதிநிதிகள் இல்லையோ அதேபோல குஷ்புவும் பெண்ணினத்தின் பிரதிநிதியல்ல.


குஷ்பு தின்று தினவெடுத்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்து, சுதந்திரப் பாலுறவு குறித்துப் பேசுகிறார். அவரை தேர்ந்த சமூகவியலாளரைப் போலப் பேசுவதாகக் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது. அப்படிப் பேசியிருந்தால் ஒரு நடிகையாக கோடீசுவரியாக தான் நிலைபெறுவதற்குச் செய்த "தியாகங்களை' குறைந்தபட்சம் ஒரு மேலோட்டமான சுயவிமர்சனமாகக் கூடச் சொல்லியிருப்பார். ஆனால் அவரைப் போன்ற பெண்கள் தம்மை இழப்பது குறித்தல்ல, பெறுவது குறித்தே கவலைப்படுகிறார்கள். அதையே ஒரு வாழ்க்கை முறையாக மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.


குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்வியை ஏழ்மையினால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டால் என்ன பதில் வரும்? நிச்சயமாக "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து வாழுவதைச் சரியெனக் கூறமாட்டார். காரணம், இங்கே இழப்பினால் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்வு கிடைக்காது. அவலம்தான் கிடைக்கும். நல்ல கணவன், குழந்தைகள், கல்வி, குடும்பம் என்ற சராசரிப் பெண்ணின் ஏக்கம்தான் அந்த விபச்சாரியிடம் வெளிப்படும். குஷ்புவிடம் இல்லாத ஆணாதிக்கக் கொடுமையின் மீதான கோபமும், வெறுப்பும் இந்தப் பெண்களிடம் கண்டிப்பாக இருக்கும்.


சுகாசினி, குஷ்பு போலத்தான் என்றாலும் கூடுதலாக பார்ப்பன மேட்டிமைத்தனம் கலந்த கலவை எனலாம். தமிழின வெறுப்பும், இந்துத்துவ ஆதரவும், மேட்டுக்குடியின் போலியான தேசபக்தியும் கொண்ட, "தேசியப் படங்களை' எடுத்த மணிரத்தினத்தின் மனைவி என்ற தகுதியை அவர் சரியாகக் கொண்டிருக்கிறார்.


மணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வெடித்ததை வைத்து, ரஜினியிடம் சமூக உணர்வு பொங்கியதைப் போல, குஷ்புவிற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து சுகாசினியிடம் கோபம் கொம்பு போல சட்டென்று வெளிப்படுகிறது. மற்றபடி சராசரி தமிழ்ப் பெண்களின் வேதனை, அவலம் குறித்து அவரிடம் ஏதும், எப்போதும் வெளிப்பட்டதில்லை. பிரச்சினைகளை மேட்டிமைத்தனமாகப் பேசும் மேட்டுக்குடிப் பெண்கள், பெண்ணினத்தின் போராளியாகச் சித்தரிக்கப்படுவது, பெண்ணினத்தின் சாபக்கேடேயன்றி, பெருமைக்குரியதல்ல.


பிழைப்புவாதத்தைப் பாதுகாக்கும்


"தமிழ் ஆணுறை'!


தமிழக அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சாளர்கள், அதிலும் தீப்பொறி, வெற்றிகொண்டான், நடராசன் போன்றோர் தலைவர்கள் பெண்டாளுவதைப் பெருமையாகவும், தலைவிகள் சோரம் போனதைத் தரக்குறைவாகவும் பேசுவது ஒரு நீண்ட மரபு. அவ்வகையில் திராவிட இயக்க அரசியலில் ஆணாதிக்கத் திமிரும், பெண்களைக் கேவலமாகப் பேசுவதும் இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று.


பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பொது நீரோட்டத்தோடு கூட்டணி வைத்துக் கலந்தவர்கள்தான். இரண்டு பிரபலமான பெண்கள் பேசியதை வைத்து, தமிழ்ப் பண்பாடு, மரபு, பெருமைக்குப் போராடுபவர்களாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் இவர்கள், தமிழ்க் கற்பு குறித்துக் கதைப்பது வெறும் பம்மாத்தே. தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சூறையாடும் தாராளமயக் கொள்கையர்களின் ஆட்சியில் பங்குதாரராக இருந்து கொண்டே தமிழ்க் கற்பு பற்றிக் கதைக்கின்றனர்.


எத்தனை மேன்மைமிக்கதாக இருந்த போதிலும் கற்பு என்பது நடைமுறையில் ஒரு தனிநபரின் பாலியல் ஒழுக்கம் சார்ந்த விசயம் மட்டும்தான். ஆனால் பொது வாழ்வில் ஒழுக்கம் என்ற சொல்லை தமது அகராதியிலிருந்தே நீக்கிய கனவான்கள் தமிழ்ப் பெண்களின் கற்பு நெறி குறித்தும், மக்களின் உணர்வு புண்படுவது குறித்தும் அலட்டிக் கொள்வது அருவெறுக்கத்தக்கது; கேலிக்குரியது.


குஜராத் இனப்படுகொலை நடந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பா.ஜ.க. வழங்கிய பதவிச் சுகத்தை அனுபவித்து இன்பம் கண்ட கருணாநிதி, இராமதாசின் அரசியல் ஒழுக்கத்திற்கு விளக்கம் தேவையில்லை. "தலித் விடுதலை'க்காக மூப்பனார், பெர்ணாண்டஸ், சங்கராச்சாரி, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட யாருடனும் கூட்டு சேர தயங்காத திருமாவளவனின் அரசியல் ஒழுக்கமோ "அப்பழுக்கற்றது'. வாழ்க்கையை விருப்பம்போல அனுபவிக்கவும், முன்னேறவும் விரும்பும் பெண்களுக்கு குஷ்பு சிபாரிசு செய்யும் பாதுகாப்புக் கவசம் "ஆணுறை'. பதவி சுகத்திற்காக அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடும் இவர்களுக்கு "கொள்கை பாதுகாப்பு' வழங்கும் ஆணுறை "தமிழ்'.


தாராளமயக் கொள்கைக்கு இசைவாகச் சுதந்திரப் பாலுறவையும் உள்ளடக்கிய புதிய பார்ப்பனப் பாரதக் கலாச்சாரத்தை உருவாக்க விரும்பும் இந்து, இந்தியா டுடே அடங்கிய பழைய பார்ப்பனக் கும்பல்; தாராளமயக் கொள்கையினூடாகவும் தமிழ் மக்கள் மீது பழைய பார்ப்பனக் கற்பை நிலைநாட்டப் போராடும் கருணாநிதி, இராமதாசு, திருமாவளவன் ஆகியோர் அடங்கிய புதிய பார்ப்பன வேளாளக் கும்பல்!


இந்தத் திருடன் போலீசு விளையாட்டை ஊதிப் பெருக்கி தேசியப் பிரச்சினையாக்கி அதனூடாகத் தமிழ் தொழிற்போட்டியை நடத்திக் கொள்ளும் சன் டி.வி, ஜெயா டி.வி! இதுவரை கற்பு என்ற கருத்தை வைத்து எந்தத் தமிழ்ச் சினிமாவும் சம்பாதிக்க முடியாத பணத்தையும், ஈர்க்க முடியாத கவனத்தையும் இந்த நாடகம் பெற்று விட்டது.


தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வையும், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை அ.தி.மு.க. கவர இருக்கும் நிலையில், அவர்களை தி.மு.க. கூட்டணியில் வைத்திருப்பதற்காகவே, ஜெயா டி.வி. சார்பான குஷ்புவை எதிர்க்கும் இவர்களது நாடகத்தை சன் டி.வி., தமிழ் முரசு ஊதிப் பெருக்குவதாகச் சிலர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் கற்பை விட எம்.எல்.ஏ. சீட்டு பருண்மையானது. நாளையே ஜெயா அதிக சீட்டு கொடுத்து இவர்களைக் கவர்ந்திழுக்கலாம்.


பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களும், ஜெயாவால் ஆதரிக்கப்பட்ட குஷ்புவும் இரு தரப்பினராலும் கைவிடப்பட்டு அரசியல் கற்புக்குப் புது விளக்கங்கள் வழங்கப்படலாம். இந்தியா டுடேயும் மாறிவரும் செக்ஸ் விருப்பங்கள் குறித்து புதியதொரு சர்வேயை வெளியிடலாம்.


இளநம்பி

Thursday, October 11, 2007

பாசிசம் வீங்கி வெம்பும் போது அது தொழுநோயாகின்றது.

பி.இரயாகரன்
11.10.2007

தமிழ்மணத்தில் புலி மற்றும் புலியாதரவு பாசிசம் தானாகவே முற்றி தொழுநோயாகிப் புழுக்கின்றது. புலிப் பாசிசமோ கட்டறுத்த எருமை மாடு போல் ஓடப்புறப்பட்டு, கண்மண் தெரியாது மோதுகின்றது. அது எப்படி எங்கிருந்து வீங்கி வெம்பியது என்பதை திரும்பிப் பார்த்தால், புலித்தேசியத்தின் வங்குரோத்தை மீள உலகமறிய அம்பலமாக்கி நிற்கின்றது
தமிழ்மணத்தில் தமிழச்சி மீதான மிரட்டல் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் (அதை அவர் அரசியல்ல என்கின்றார். அது எப்படி இருந்த போதும்) தொடர்பான விடையத்தில், பாசிசம் தன்னை அலங்கோலமாக்கியது. கண்மண் தெரியாது தமிழச்சி மீதே மோதுகின்றது. இருண்டதெல்லாம் பேய் என்ற பாசிசக் கருத்தியலும், அதன் சொந்த அச்சமும் கோழைத்தனமாகவே பாய்கின்றது. சமூகம் மீதான தனது பாசிச ஒடுக்குமுறை, கோழைத்தனமான பாசிசப் பண்பாக மாறிவிடுகின்றது.

இதைத் தான் எனது கருத்தின் மீதும் சரி, தமிழச்சி கருத்துக்கள் மீதும் சரி, பாசிச வழிமுறைகளில் எதிர்கொண்டனர். கண்ணைக் கட்டி நடுக் காட்டில் விடப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்கள் கண் மண் தெரியாது அலைகின்றனர். அனைத்தையும் புலிப் பூதக்கண்ணாடியை போட்டுக் கொண்டு, குதறித் தின்ன முனைகின்றனர்.

தமிழச்சி விடையத்தை வெறும் கண்டனமாக விடுகின்ற மரபான சடங்குக்குப் பதில், அந்தப் போக்கை ஒரு ஆய்வாக அதன் பின்புலம் முழுவதையும் ஆராய நான் முற்பட்டேன். உண்மையில் எனது அக்கட்டுரை தமிழச்சியின் விடையத்தை குறிப்பாக்கியதே ஒழிய, கட்டுரையை பொதுத்தளத்துக்குள் நகர்த்தினேன்.

http://tamilarangam.blogspot.com/2007/10/blog-post_05.html

தமிழச்சி போல் அன்றாடம் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்கள் விடையத்தை நோக்கி கவனத்தைக் குறிப்பாக்க விரும்பினேன். அதன் பின்னணியை, அதன் நோக்கத்தை விவாதமாக்கவே நான் விரும்பினேன். இப்படி பிரான்ஸ், கனடா என்று எங்கும், இந்த பாலியல் வக்கிரம் புரையோடிக் காணப்படுகின்றது. அவர்கள் இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது, உளவியல் ரீதியாக மாய்ந்து மடிகின்றனர். மனைவி மீதான கணவனின் சந்தேகம் என்ற எல்லைவரை, இது வக்கிரமாகி குடும்பங்களே அலங்கோலமாகி விடுகின்றது. தமிழச்சி மாதிரி துணிவும் துணிச்சலும், அதற்குரிய ஆற்றலும் இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் எம் பெண்களுக்கு கிடையாது. அநேகமாக இவை தனக்கு மட்டும் நடப்பதாக எண்ணி, பெண்கள் பலர் பயந்து ஒடுங்கி தனக்குள்ளேயே இதை இரகசியமாக்கிவிடுகின்றனர். இதைப் பயன்படுத்தி அப் பெண்ணை பாலியல் ரீதியாக நேரடியாக சுரண்டுவதாக கூட மாறிவிடுகின்றது.

இதன் மீதான விவாதம் ஒன்றையே தமிழ் சமூகம் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். கம்யூட்டருக்கு முன் அமர்ந்து இருந்து கொசிப்பு அடிக்கின்ற புலிப்பாசிட்டுக்கள், இதைத் தமக்கு எதிராக தாமே மாற்றினர். பின் தமது சொந்த (முட்டையில்) மொட்டையில் மயிர் புடுங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

விடையத்தை திசை திருப்பிய பின், அதை கொசுக்கடியாக்கினர். அதையே கொசிக்க வெளிக்கிட்டு, அதை தமது கருத்துச் சுதந்திரம் என்றனர். விவாதம் என்ற பெயரில் மலிவான குப்பைகள். விடையத்துக்கு வெளியில், தெரு நாய்கள் போன்று ஊளையிட்டனர்.

நான் தமிழச்சி விடையத்தில் அதன் பின்னணியின் முழுப்பக்கத்தையும் ஆராய முற்பட்டேன். அவர் தமிழ்சோலை தொடர்பாக வெளியிட்ட கருத்தையும் அடிப்படையாக கொண்டு, புலியின் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பினேன். இதில் புலியை நேரடியாக குற்றம் சாட்டி இருக்கவில்லை. அவரை புலிக்கு எதிரானவர் என்றோ, புலியின் எதிரி என்றோ கூட கூறவில்லை. அவரின் தனிப்பட்ட நேர்மை காரணமாக, அவர் சந்தித்த விடையத்தை வெளிப்படையாக வைக்கின்றார்.

இந்த விடையத்தை நாங்கள் அவர் பார்க்கும் பார்வையில் இருந்து பார்க்கவில்லை. புலிகள் முரண்பட்டால், அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழிமுறை பாசிசம் தான். இது எமது கடந்த கால வரலாறு தந்த படிப்பினை. எதுவும் இதை மறுத்தலித்து விடவில்லை. இதைத்தான் தமிழச்சி விடையத்தில், கணணிக்கு முன் அமர்ந்து இருந்து புலிப் பாசிட்டுகள் நிறுவினர்.

நாங்கள் புலி முரண்பாடு ஒன்று இருப்பதையும், அந்தக் கோணத்தில் இருந்தும் இதையும் பார்த்தோம். புலிப் பாசிசம் இது போன்ற விடையத்தில், அதன் அணுகுமுறை என்பது எதிரியாக கருதிக் கையாள்வது ஊர் உலகம் அறிந்தது. புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ க்கு எதிராக புலிப்பாசிட்டுகள் நடத்துகின்ற இது போன்ற பாலியல் வார்த்தைகள், தாராளமாக அந்த வானொலியின் நிறுத்தங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக அம்பலமாகியது.

நாங்கள் இந்த விடையத்தில் அதையும் ஒரு காரணமாக ஆராய்ந்த போதும், எந்த புலி பாசிட்டுகளுக்கும் இது போன்றவற்றை தாம் செய்வதில்லை என்று கூறும் அந்தத் தார்மீக அடிப்படை இருக்கவில்லை. அதனால் குரைத்து அதை கொசிப்பாக்கினர்.

தாம் இது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்பதை சொல்ல முடியாது. இதனால் இதை தாம் செய்யவில்லை என்று கூறமுற்பட்டனர். அதை அவர்களால் பாசிச கோட்பாடுகளில் சொல்ல முடியவில்லை. சொன்ன வடிவமோ தாங்கள் தான் செய்தோம் என்று முடிபானதாக, அவர்களே வலிந்து கற்பனை செய்த வடிவில் நம்பிக் கொண்டு எதிர்வினையாற்றினர். இறுதியில் தமிழச்சி மீதான தாக்குதலாக மாறி, தமிழச்சியை தமக்கு எதிரானவராக காட்டி முத்திரை குத்தினர்.

தமிழச்சி இன்னமும் கூட, தான் எதிரானவர் இல்லை என்பதையே நிறுவிக் காட்ட முனைகின்றார். இந்த விவாதம் இப்படி தமிழச்சி மீதான ஒரு தாக்குதலாக மாறிய போக்கில், தமிழச்சி குறிப்பிட்டது போல், எனது விவாதம் தொடங்க காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பாசிசம் அதற்கு வெளியில் இயங்குவதை நாம் பார்க்கின்றோம். சத்தியக்கடதாசி, தலித் மாநாடு என்று தமிழச்சியை புலியெதிர்ப்புவாதியாக சித்தரித்தது என்பது தற்செயலானதல்ல. பெரியார் பெயரில் திடீர் புரட்சிகர பெரியாரிஸ்ட்டுகள் கணணி மூலமான அமைப்பாகி தம்மை அறிவித்தது வரை, இந்த பாசிச அசிங்கம் சிக்கலற்று அரங்கேறி வருகின்றது

சத்தியக்கடதாசி, தலித்மாநாடு என்பன புலியுடனில்லை என்பதால் அதனுடன் ஏதோ ஒரு தொடர்பை உறவைக் கொண்டு, தமிழச்சியை புலியின் எதிரியாக முத்திரை குத்தினர். பின் அவரை அப்படித் தான் நடத்தினர். கடைசியில் கணணி முன் அமர்ந்து, அவருக்கு போட்டியாக பாசிச அமைப்பைப் பெயரளவில் தொடங்கினர். இது பற்றிய பாசிச முரண்பாடுகளுடன், பாசிசத்தின் கோமாளிக் கூத்தும் அரங்கேறியது.

இது பற்றிய பாசிச முரண்பாடு என்பது, பிழையான இடத்தில் பிழையான ஆளைத் தாக்குகின்றீர்கள் என்பதாக மாறி, ஆள்காட்டி வேலையை பாசிசம் தொடங்கியுள்ளது. இரயாகரனை வேண்டுமென்றால் தாக்குங்கள் என்கின்றது. அன்று அமிர்தலிங்கம் மேடையில் ஆள் காட்ட, பிரபாகரன் முதல் கூட்டணி எடுபிடிகள் அவர்களை கொல்லவில்லையா. அதே பாணி, அதே கதை. இவற்றை எல்லாம் சொல்ல முன், தமிழ்ச்செல்வன் ஊர் உலகத்தை ஏமாற்றப் பற்களைக் காட்டுவது போல் குறுக்கீட்டுப் பதிவுகள். என்ன உத்தி, என்ன நுட்பம்.

நாம் பாசிட்டுகள் என்று இவர்களை குறிப்பிடும் போது, அவர்களுக்கு கோபம் வருகின்றது. சிலர் தாங்கள் பாசிட்டுக்கள் இல்லை என்று நம்புகின்றனர். புலி பாசிசமாக இருப்பதால், அதன் பின் நிற்கின்றவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை கவனத்தில் கொள்வது மூலம், நீங்கள் யார் என்று தீர்மானியுங்கள். புலிகள் பாசிட்டுக்கள் இல்லை என்று நிறுவப் போகின்றீர்களா, அதைச் செய்யுங்கள். இல்லை புலியைத் திருத்துங்கள் முடியாது என்று கருதினால் வெளியில் வாருங்கள்.

பாசிசம் என்ற வரையறைக்குள் எந்த தனி நபரையும் பொத்தாம் பொதுவில் நாம் அடக்க முற்படவில்லை. மாறாக வைக்கின்ற கோட்பாடு, அதன் உத்தி, அதன் நடைமுறை மீதுதான், பாசிசத்தை அதன் மீது சுட்டிக்காட்டி நிற்கின்றோம். யாரெல்லாம் புலிகளை கோட்பாட்டு ரீதியாக, அவர்களை அதன் நடைமுறையையும் சிந்தாந்த ரீதியாக ஆதரிக்கின்றனரோ, அவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை அரசியலுக்கு வெளியில், பாசிச வரையறையை செய்ய முற்படவில்லை. அதில் எமக்கு நம்பிக்கையும் கிடையாது.

நீங்கள் புலியாக இருந்து புலியில் இருந்து சிந்திப்பதற்கு பதில், தமிழ் மக்களில் இருந்து உங்களால் சிந்தித்து செயலாற்ற முடியுமா? இதைச் செய்யுங்கள், நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை, உங்களுக்கு உறைக்கவே புரியவைக்கும். தமிழ் மக்களுக்காக, அந்த மக்களில் இருந்து சிந்தித்து செயலாற்ற முனைவதன் ஒன்று தான், நீங்கள் பாசிட்டுகளல்ல என்பதை தனிமனித ரீதியாக நிறுவிக் காட்ட போதுமான அடிப்படையாகும். அதைச் செய்யுங்கள்.

மறுபக்கத்தில் தமிழச்சிக்கு நடந்ததோ, வெட்கக்கேடானதும் இழிவானதுமாகும். தமிழ் சமூகத்தின் உள்ளேயே புரையோடிக் கிடக்கின்ற இந்த அசிங்கத்தை, இந்த சமூக இழிகேட்டை, எம்மால் தட்டிக் கேட்கக்கூட நாதியற்றுப் போன சமூக கட்டுமானங்கள். இதைப் பாதுகாக்கும் அரசியல். இதற்குள் இதை எல்லாம் கண்டும் காணாமல் வாழப்பழகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், இதை எல்லாம் எதிர்த்துப் போராடாத தமிழ் தேசியம். இப்படி அம்சடக்கமானதும், இதையே ஒழுக்கமாக சமூகமே மாறிவிட்ட நிலையில், அதை நாம் அம்பலப்படுத்துவதை கணணிப் புரட்சி என்றும், உருப்படாத மார்க்சியம் என்றும் கிண்டலடிக்கின்றனர்.

உருப்பட்ட புலித் தேசியம், நடைமுறைப் புரட்சி இவற்றை எல்லாம் எப்படி நடைமுறையில் எதிர் கொள்கின்றனர். எதையும் உயிருடன் காட்ட முடியாது. புலம்ப முடியும். கொசிக்கவும், வம்பளக்கவும் முடியும். மனித சிந்தனையை உசுப்பும் எமது கருத்தையும், அறிவியல் பூர்வமாக இவர்களால் வைக்க முடியாது. கணணி புரட்சி என்று இழிவாடியவர்கள் செய்வது, செயலற்ற சமூகத்தைப் படைத்து பாசிச அமைப்பை பாதுகாப்பது தான்.

அவர்கள் இதனால் கணணி முன் அமர்ந்து இருந்தும், சிந்திக்காதே என்கின்றனர். இதை புலித் தேசியத்துக்கு எதிரான சதி என்கின்றனர். இதனால் தமிழச்சிக்கு நடந்தது சரியானது என்பதே, இவர்களின் முன் முடிவாகியது. இதை நிறுவ அரை அரை என்று அரைத்து, முடிவு கூறுகின்றது. அதாவது அதை சலித்தால், வெறும் கண்டனம் வார்த்தையை மட்டும், அதில் இருந்து இணையப் பொறுக்கியைப் போல் பொறுக்கலாம்.

அந்த பொறுக்கிக்கு துணையாக களமிறங்கிய இந்த இணையப் பொறுக்கிகள், தமிழச்சி மேல் தொடர்ச்சியாக சுற்றி வளைத்து கொரில்லாத் தாக்குதலை நடத்தினர். இதுதான் நடந்து கொண்டு இருந்தது. அதை அவர் தனித்து எதிர்கொண்ட போது, அதில் சொல் பிழை பிடித்து கடைசியில் தமிழச்சியை தூக்கு மேடையில் ஏற்றினர். இப்படி இந்த பாசிட்டுகள் மட்டும் தான், தனது சொந்த வழிகளில் செய்கின்றது. ஒரு பெண் என்ற அடிப்படையில், தன் மீதான வன்முறைக்கு எதிராக போராட வெளிக்கிட்ட தமிழச்சி, இறுதியில் சிலரால் இப்படி குற்றவாளியாக்கப்பட்டார். தமிழச்சி மீதான தமது பாசிச குற்றச்சாட்டுக்கு, சத்தியக்கடதாசியையும், தலித்மாநாட்டையும் ஆதாரமாக்கினர். இப்படித்தான் மண்ணில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.

ஆணாதிக்க சமூக ஓழுக்கம் பாசிசமாகவும் சிதைந்து நிற்கின்ற போது, அதுவே சமூகமாகி உள்ள போது, எது நடக்குமோ அந்த சோகம் தமிழச்சிக்கு நடந்தது. இது எப்படி இருந்ததென்றால், சாதாரணமாக ஒரு கற்பழிப்பு நடந்த பின், சமூகம் ஒரு பெண்ணை எப்படி இழிவாடுமோ அதுபோல் நடந்தது. அந்த பெண்ணின் உடுப்பைபப் பற்றியும், நடையுடை பற்றியும், இறுதியாக ஆட்டம்... பற்றியும் கதைத்து, பெண்ணை கைநீட்டி குற்றம்சாட்டி விடுவது போன்று இது நிகழ்ந்தது. நீதிமன்றத்தில் கற்பழிப்பை விசாரணையின் பெயரால் மறுபடியும் துகிலுரியும் நடத்தைவரை நடத்துகின்ற கூத்தையொத்த பாசிச வக்கிரத்தை, புலித் தேசியத்தின் பெயரில் செய்தனர்.

தமிழச்சி தனக்கு நடந்த அவமானத்தை, அந்தக் கொடுரமான வெட்கக்கேடான ஆணாதிக்க வக்கிரத்தை அம்பலப்படுத்தி போராடிய போது, புலித்தேசியம் அவரை குற்றவாளியாக்கியது. முதல் இணையப் பொறுக்கி தமிழச்சியை எதற்காக இழிவுபடுத்தினானோ, அந்த நோக்கத்தை புலித் தமிழ் பாசிசம் மீண்டும் அரங்கேற்றியது. இதைவிட வேறு எதையும் தமிழ் பாசிசம் இதில் செய்யவில்லை.

மானம் கெட்டு இப்படி இழிவாக இழிவாடினர். தமிழச்சி ஒரு பெண்ணாக, இந்த ஆணாதிக்க அமைப்புக்கு முன் நிமிர்ந்து நின்ற அந்த துணிச்சலை, படுகேவலமான கோழைத்தனத்துடன் தாக்கினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழச்சிக்கு எதிராக புதிய புரட்சிகர பெரியார் இயக்கம். பாவம் இந்த புல்லுருவிகளுக்கு தெரியவில்லை, புலித் தலைவர் முன்னமே இது போன்று மேற்கோளை பயன்படுத்தி கூத்து ஆடியுள்ளார் என்பது. அந்த புலித் தலைவரின் மேற்கோள் தான், அவசரத்துக்கு தமிழச்சிக்கு எதிராக இவர்களுக்கு உதவியது. இவ்வளவு காலம் தலைவரின் மேற்கோளைக் கூட கண்டு கொள்ளாத இந்த பெரியாரிய புல்லுருவிகள், திடீர் பெரியார் சங்கம் ஒன்றை கம்யூட்டருக்கு முன்னால் உருவாக்கினர்.

திடீர் பெரியாரிஸ்டு புல்லுருவிகளே! முதுகெலும்பு இருந்தால்

1. முதலில் புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.

2. தமிழர் வழிபடும் கோயில் பயன்படுத்தும் சமஸ்கிருதத்துக்கு எதிராக போராடுங்கள. (இதற்குள் இனவிடுதலை, தேச விடுதலை என்று பூச்சாண்டி) புலி கோயில் எல்லாம் சமஸ்கிருத மயம்.

3. சாதி அடிப்படையில் உள்ள பார்ப்பானை கொண்டு கோயில்களில் பூசை செய்வதற்கு எதிராக போராடுங்கள். முதலில் புலிக் கோயில்களில் அதைச் செய்யுங்கள்.

4. புலியல்லாத கோயில்களை புலியினதாக மாற்ற முனையும் அந்த பாசிச கோமாளிகளை எதிருங்கள்.

5. உங்கள் சொந்த வாழ்வைச் சுற்றி உள்ள தாலி, சடங்குகள் முதல் அனைத்தையும் அறுத்தெறியுங்கள். புலித் தலைவர் பிரபாகரன் ஐயரை வைத்துக் கட்டிய தாலி, அந்த பார்ப்பனச் சடங்குகளை எல்லாவற்றையும் விமர்சியுங்கள்.

6. இன்னும் நீண்ட பட்டியல் எம்மிடம் உண்டு. இதை தொடங்கினால் நாமும் வருகின்றோம்.

6. தமிழச்சி இட்ட பட்டியலையும் கேட்டவைகளையும் மறக்காதீர்கள்
http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_8951.html

திடீர் பெரியாரிஸ்ட்டுகள் இதை செய்ய முதுகெலும்பு கிடையாது. இந்த புல்லுருவிக் கூட்டம் பாசிச வழியில், புலியல்லாத மாற்றை விழுங்கி தின்னும் வழமையான இழிவான பாசிச உத்தி தான், இந்தத் திடீர் பெரியாரிஸ்ட்டு வேஷம்.

இந்த நாற்றம் பிடித்த பாசிட்டுகள், கம்யூட்டருக்கு முன்னால் திடீர் பெரியாரிஸ்டுகளாக மாறியது போல், பாரிஸ் தலித் மகாநாட்டை பற்றிய அவதூற்றையும் கம்யூட்டரில் கண்டு பிடித்து காறி உமிழ்கின்றனர்.

தலித் மாநாட்டை பற்றியும் எமது விமர்சனங்கள், அதில் கலந்து கொள்ளுவோர் பற்றி, எமக்கு தனித்துவமான தெளிவான அரசியல் பார்வைகள் உண்டு. ஆனால் இப்படி கேவலமாக, பாசிசத்தின் கொடூரமான சொந்த இழிவாடல்களை, நாம் சகித்துக்கொண்டு மௌனிக்க முடியாது. வழக்கம் போல் புலிகள் இதை இழிவாடுவது, முத்திரை குத்துவது, இறுதியாக படுகொலைகளை செய்வது என்ற பாசிசத்தின் வழியை எதிர்கொண்டு போராட வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.

எந்த விடையம் மீதும், அறிவியல் பூர்வமாக விவாதம் நடத்த வக்கு கிடையாது. தமிழ் மக்களுக்காக நியாயமான குரலைக் கூட பதிவு செய்ய முடிவதில்லை. மற்றவனை எதைச் செய்யவும் அனுமதிக்க மாட்டோம் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து இந்த கூத்தை அடிப்பவர்கள், நடைமுறையில் என்னத்தைக் கிழிக்கின்றனர். அவர்கள் ஆதரிக்கும் புலியுடன் நின்று போராடாது இங்கு என்ன செய்கின்றனர். எனது பதிவு ஒன்றில் கேட்கப்படுகின்றது, ஏன் பிராஞ்சு ஏகாதிபத்தியதுக்கு வந்தீர்கள். சோமாலியாவுக்கு ஏன் செல்லவில்லை. இங்கு கொழுத்த சம்பளம் அதுதானே என்று ?

ஐரோப்பிய சம்பளம் தெரியாத கிறுக்கர்களின் கேள்வி. 1980 இல் ஐரோப்பிய சம்பளம் என்ன, இலங்கை சம்பளம் என்ன என்று தேடிப்பாருங்கள். அத்துடன் பணப் பெறுமதி என்ன என்று சென்று பாருங்கள்.

இந்தக் கேள்வியின் நோக்கம் தெளிவானது. நானே புலிக்கு எழுதினால் எந்தக் கேள்வியும் இவர்களிடமிருந்து வரவே வராது. சரி அந்த சோமையற்ற பக்கத்தைத்தான் விடுவோம், நீங்கள் ஏன் இங்கிருக்கின்றீர்கள். புலி ஆதரவோ அல்லது புலியோ எந்த புற்றில் இருந்தாலும், நீங்கள் அங்கேயல்லவா போராடவேண்டும். கொழுத்த சம்பளம் என்கின்றீர்கள், உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்லுகின்றீர்கள் போலும்.

நானோ பிரான்சில் அதி குறைந்த அடிப்படைச் சம்பளத்தில் வேலை செய்கின்றேன். அதை வைத்து வீட்டு வாடகை மட்டும் தான் கட்டமுடியும். இங்கு வந்தது தற்செயலானது. சந்தர்ப்பம் சூழல். எங்கே பாதுகாப்பும், சந்தர்ப்பமும், குறைந்தபட்சம் ஜனநாயகம் கிடைத்ததோ அங்கு வருகின்றோம். பொருளாதார காரணம் தான் (நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்றுவிட்ட அரசியல், முதல் தேசியம் வரை. எம் செல்வத்தை கொள்ளை அடித்த ஏகாதிபத்தியத்தில் வந்து பிழைக்கும் மக்கள் கூட்டம்) என்றால் கூட, அதை பிழையாக நான் கருதவில்லை. 10 லட்சம் தமிழ் மக்கள் இப்படி வெளியேறியது ஒருபுறம். மறுபுறம் பிழையான போராட்டத்தினால், பிழையான தேசியத்தினால், தேசிய பொருளாதாரம் புலிகளால் அழிக்கப்பட்டதாலும் மக்கள் அங்கு வாழவழியின்றி வெளியேற்றப்பட்டனர்.

மறுபக்கத்தில் அறிவியல் பூர்வமான விவாதம், தர்க்க வாதங்கள் எதுவும் செய்யமுடியாதவர்கள், குதர்க்க வாதத்தில் குதிக்கின்றனர். குதர்க்கம், கொசிப்பு, வம்பளப்பு, சொற்களில் தொங்குவதை தமிழ் தேசிய அரசியல் என்கின்றனர். பின் அதை விவாதம் என்பது கருத்துச் சுதந்திரம் என்று அதற்கு பொழிப்புரைகள்.

கருத்தென்றால் என்னவென்று தெரியாதவர்கள். விடையத்தை திசைதிருப்ப பொருத்தமற்ற பதிவுகள். இடைச்செருகல்கள். நக்கல்கள் நையாண்டிகள். இதை எல்லாம் இன விடுதலையின் பெயரில் செய்கின்றனர்.

தமிழ் மக்கள் அன்றாடம், புலிகளின் அதே பாசிச வழிகளில் பேரினவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இதையிட்டு அக்கறையற்ற அதே பாசிச கொசிப்புகள். இதற்கு எதிராக உலகெங்கும் போராட்டத்தைக் கூட நடத்தி அதை தடுக்கமுடியாத வகையில், அனைத்தையும் பாசிசத்துக்கு உள்ளாக்கி அழித்துவிட்டனர். இவர்கள் இதற்கு எதிராகவும் ஒரு துரும்பைக் கூட எடுத்து போராட முடியாது கிடக்கின்றனர். கம்யூட்டரின் முன் அமர்ந்து நக்கல், நையாண்டி, கொசிப்பை தமிழ் மக்களின் பெயரில் செய்கின்றனர்.

எம்மைச் சீண்டி, தமது கொசிப்பை பிரதான அரசியல் நிகழ்வாக கொதிநிலைக்கு கொண்டு வருகின்றனர். உத்தி ரீதியாகவே புலிகளின் அதே பாசிச வழியை பயன்படுத்தி, தமிழ் மக்களை திட்டமிட்டே பேரினவாதிகளும் தமிழ் கூலிக் குழுக்களுடன் சேர்ந்து படுகொலை செய்கின்றனர். இப்படி நாள் தோறும் கொல்லப்படுகின்ற விடையத்தைக் கூட, இவர்களால் அம்பலப்படுத்த முடிவதில்லை. எம்மையும் அதைச் செய்யவிடாது, அதையும் தடுத்து நிறுத்த முனைகின்றனர். இப்படி இன விடுதலையின் பெயரில், பேரினவாதத்துக்கு துணையாக நின்று இணையத்தில் எம்மை முடக்க முனைகின்றனர்.

பாசிசம் வீங்கி வெம்பும் போது அது தொழு நோயாகின்றது.

பி.இரயாகரன்
11.10.2007

தமிழ்மணத்தில் புலி மற்றும் புலியாதரவு பாசிசம் தானாகவே முற்றி தொழுநோயாகிப் புழுக்கின்றது. புலிப் பாசிசமோ கட்டறுத்த எருமை மாடு போல் ஓடப்புறப்பட்டு, கண்மண் தெரியாது மோதுகின்றது. அது எப்படி எங்கிருந்து வீங்கி வெம்பியது என்பதை திரும்பிப் பார்த்தால், புலித்தேசியத்தின் வங்குரோத்தை மீள உலகமறிய அம்பலமாக்கி நிற்கின்றது
தமிழ்மணத்தில் தமிழச்சி மீதான மிரட்டல் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் (அதை அவர் அரசியல்ல என்கின்றார். அது எப்படி இருந்த போதும்) தொடர்பான விடையத்தில், பாசிசம் தன்னை அலங்கோலமாக்கியது. கண்மண் தெரியாது தமிழச்சி மீதே மோதுகின்றது. இருண்டதெல்லாம் பேய் என்ற பாசிசக் கருத்தியலும், அதன் சொந்த அச்சமும் கோழைத்தனமாகவே பாய்கின்றது. சமூகம் மீதான தனது பாசிச ஒடுக்குமுறை, கோழைத்தனமான பாசிசப் பண்பாக மாறிவிடுகின்றது.

இதைத் தான் எனது கருத்தின் மீதும் சரி, தமிழச்சி கருத்துக்கள் மீதும் சரி, பாசிச வழிமுறைகளில் எதிர்கொண்டனர். கண்ணைக் கட்டி நடுக் காட்டில் விடப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்கள் கண் மண் தெரியாது அலைகின்றனர். அனைத்தையும் புலிப் பூதக்கண்ணாடியை போட்டுக் கொண்டு, குதறித் தின்ன முனைகின்றனர்.

தமிழச்சி விடையத்தை வெறும் கண்டனமாக விடுகின்ற மரபான சடங்குக்குப் பதில், அந்தப் போக்கை ஒரு ஆய்வாக அதன் பின்புலம் முழுவதையும் ஆராய நான் முற்பட்டேன். உண்மையில் எனது அக்கட்டுரை தமிழச்சியின் விடையத்தை குறிப்பாக்கியதே ஒழிய, கட்டுரையை பொதுத்தளத்துக்குள் நகர்த்தினேன்.

http://tamilarangam.blogspot.com/2007/10/blog-post_05.html

தமிழச்சி போல் அன்றாடம் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்கள் விடையத்தை நோக்கி கவனத்தைக் குறிப்பாக்க விரும்பினேன். அதன் பின்னணியை, அதன் நோக்கத்தை விவாதமாக்கவே நான் விரும்பினேன். இப்படி பிரான்ஸ், கனடா என்று எங்கும், இந்த பாலியல் வக்கிரம் புரையோடிக் காணப்படுகின்றது. அவர்கள் இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது, உளவியல் ரீதியாக மாய்ந்து மடிகின்றனர். மனைவி மீதான கணவனின் சந்தேகம் என்ற எல்லைவரை, இது வக்கிரமாகி குடும்பங்களே அலங்கோலமாகி விடுகின்றது. தமிழச்சி மாதிரி துணிவும் துணிச்சலும், அதற்குரிய ஆற்றலும் இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் எம் பெண்களுக்கு கிடையாது. அநேகமாக இவை தனக்கு மட்டும் நடப்பதாக எண்ணி, பெண்கள் பலர் பயந்து ஒடுங்கி தனக்குள்ளேயே இதை இரகசியமாக்கிவிடுகின்றனர். இதைப் பயன்படுத்தி அப் பெண்ணை பாலியல் ரீதியாக நேரடியாக சுரண்டுவதாக கூட மாறிவிடுகின்றது.

இதன் மீதான விவாதம் ஒன்றையே தமிழ் சமூகம் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். கம்யூட்டருக்கு முன் அமர்ந்து இருந்து கொசிப்பு அடிக்கின்ற புலிப்பாசிட்டுக்கள், இதைத் தமக்கு எதிராக தாமே மாற்றினர். பின் தமது சொந்த (முட்டையில்) மொட்டையில் மயிர் புடுங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

விடையத்தை திசை திருப்பிய பின், அதை கொசுக்கடியாக்கினர். அதையே கொசிக்க வெளிக்கிட்டு, அதை தமது கருத்துச் சுதந்திரம் என்றனர். விவாதம் என்ற பெயரில் மலிவான குப்பைகள். விடையத்துக்கு வெளியில், தெரு நாய்கள் போன்று ஊளையிட்டனர்.

நான் தமிழச்சி விடையத்தில் அதன் பின்னணியின் முழுப்பக்கத்தையும் ஆராய முற்பட்டேன். அவர் தமிழ்சோலை தொடர்பாக வெளியிட்ட கருத்தையும் அடிப்படையாக கொண்டு, புலியின் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பினேன். இதில் புலியை நேரடியாக குற்றம் சாட்டி இருக்கவில்லை. அவரை புலிக்கு எதிரானவர் என்றோ, புலியின் எதிரி என்றோ கூட கூறவில்லை. அவரின் தனிப்பட்ட நேர்மை காரணமாக, அவர் சந்தித்த விடையத்தை வெளிப்படையாக வைக்கின்றார்.

இந்த விடையத்தை நாங்கள் அவர் பார்க்கும் பார்வையில் இருந்து பார்க்கவில்லை. புலிகள் முரண்பட்டால், அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழிமுறை பாசிசம் தான். இது எமது கடந்த கால வரலாறு தந்த படிப்பினை. எதுவும் இதை மறுத்தலித்து விடவில்லை. இதைத்தான் தமிழச்சி விடையத்தில், கணணிக்கு முன் அமர்ந்து இருந்து புலிப் பாசிட்டுகள் நிறுவினர்.

நாங்கள் புலி முரண்பாடு ஒன்று இருப்பதையும், அந்தக் கோணத்தில் இருந்தும் இதையும் பார்த்தோம். புலிப் பாசிசம் இது போன்ற விடையத்தில், அதன் அணுகுமுறை என்பது எதிரியாக கருதிக் கையாள்வது ஊர் உலகம் அறிந்தது. புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ க்கு எதிராக புலிப்பாசிட்டுகள் நடத்துகின்ற இது போன்ற பாலியல் வார்த்தைகள், தாராளமாக அந்த வானொலியின் நிறுத்தங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக அம்பலமாகியது.

நாங்கள் இந்த விடையத்தில் அதையும் ஒரு காரணமாக ஆராய்ந்த போதும், எந்த புலி பாசிட்டுகளுக்கும் இது போன்றவற்றை தாம் செய்வதில்லை என்று கூறும் அந்தத் தார்மீக அடிப்படை இருக்கவில்லை. அதனால் குரைத்து அதை கொசிப்பாக்கினர்.

தாம் இது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்பதை சொல்ல முடியாது. இதனால் இதை தாம் செய்யவில்லை என்று கூறமுற்பட்டனர். அதை அவர்களால் பாசிச கோட்பாடுகளில் சொல்ல முடியவில்லை. சொன்ன வடிவமோ தாங்கள் தான் செய்தோம் என்று முடிபானதாக, அவர்களே வலிந்து கற்பனை செய்த வடிவில் நம்பிக் கொண்டு எதிர்வினையாற்றினர். இறுதியில் தமிழச்சி மீதான தாக்குதலாக மாறி, தமிழச்சியை தமக்கு எதிரானவராக காட்டி முத்திரை குத்தினர்.

தமிழச்சி இன்னமும் கூட, தான் எதிரானவர் இல்லை என்பதையே நிறுவிக் காட்ட முனைகின்றார். இந்த விவாதம் இப்படி தமிழச்சி மீதான ஒரு தாக்குதலாக மாறிய போக்கில், தமிழச்சி குறிப்பிட்டது போல், எனது விவாதம் தொடங்க காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பாசிசம் அதற்கு வெளியில் இயங்குவதை நாம் பார்க்கின்றோம். சத்தியக்கடதாசி, தலித் மாநாடு என்று தமிழச்சியை புலியெதிர்ப்புவாதியாக சித்தரித்தது என்பது தற்செயலானதல்ல. பெரியார் பெயரில் திடீர் புரட்சிகர பெரியாரிஸ்ட்டுகள் கணணி மூலமான அமைப்பாகி தம்மை அறிவித்தது வரை, இந்த பாசிச அசிங்கம் சிக்கலற்று அரங்கேறி வருகின்றது

சத்தியக்கடதாசி, தலித்மாநாடு என்பன புலியுடனில்லை என்பதால் அதனுடன் ஏதோ ஒரு தொடர்பை உறவைக் கொண்டு, தமிழச்சியை புலியின் எதிரியாக முத்திரை குத்தினர். பின் அவரை அப்படித் தான் நடத்தினர். கடைசியில் கணணி முன் அமர்ந்து, அவருக்கு போட்டியாக பாசிச அமைப்பைப் பெயரளவில் தொடங்கினர். இது பற்றிய பாசிச முரண்பாடுகளுடன், பாசிசத்தின் கோமாளிக் கூத்தும் அரங்கேறியது.

இது பற்றிய பாசிச முரண்பாடு என்பது, பிழையான இடத்தில் பிழையான ஆளைத் தாக்குகின்றீர்கள் என்பதாக மாறி, ஆள்காட்டி வேலையை பாசிசம் தொடங்கியுள்ளது. இரயாகரனை வேண்டுமென்றால் தாக்குங்கள் என்கின்றது. அன்று அமிர்தலிங்கம் மேடையில் ஆள் காட்ட, பிரபாகரன் முதல் கூட்டணி எடுபிடிகள் அவர்களை கொல்லவில்லையா. அதே பாணி, அதே கதை. இவற்றை எல்லாம் சொல்ல முன், தமிழ்ச்செல்வன் ஊர் உலகத்தை ஏமாற்றப் பற்களைக் காட்டுவது போல் குறுக்கீட்டுப் பதிவுகள். என்ன உத்தி, என்ன நுட்பம்.

நாம் பாசிட்டுகள் என்று இவர்களை குறிப்பிடும் போது, அவர்களுக்கு கோபம் வருகின்றது. சிலர் தாங்கள் பாசிட்டுக்கள் இல்லை என்று நம்புகின்றனர். புலி பாசிசமாக இருப்பதால், அதன் பின் நிற்கின்றவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை கவனத்தில் கொள்வது மூலம், நீங்கள் யார் என்று தீர்மானியுங்கள். புலிகள் பாசிட்டுக்கள் இல்லை என்று நிறுவப் போகின்றீர்களா, அதைச் செய்யுங்கள். இல்லை புலியைத் திருத்துங்கள் முடியாது என்று கருதினால் வெளியில் வாருங்கள்.

பாசிசம் என்ற வரையறைக்குள் எந்த தனி நபரையும் பொத்தாம் பொதுவில் நாம் அடக்க முற்படவில்லை. மாறாக வைக்கின்ற கோட்பாடு, அதன் உத்தி, அதன் நடைமுறை மீதுதான், பாசிசத்தை அதன் மீது சுட்டிக்காட்டி நிற்கின்றோம். யாரெல்லாம் புலிகளை கோட்பாட்டு ரீதியாக, அவர்களை அதன் நடைமுறையையும் சிந்தாந்த ரீதியாக ஆதரிக்கின்றனரோ, அவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை அரசியலுக்கு வெளியில், பாசிச வரையறையை செய்ய முற்படவில்லை. அதில் எமக்கு நம்பிக்கையும் கிடையாது.

நீங்கள் புலியாக இருந்து புலியில் இருந்து சிந்திப்பதற்கு பதில், தமிழ் மக்களில் இருந்து உங்களால் சிந்தித்து செயலாற்ற முடியுமா? இதைச் செய்யுங்கள், நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை, உங்களுக்கு உறைக்கவே புரியவைக்கும். தமிழ் மக்களுக்காக, அந்த மக்களில் இருந்து சிந்தித்து செயலாற்ற முனைவதன் ஒன்று தான், நீங்கள் பாசிட்டுகளல்ல என்பதை தனிமனித ரீதியாக நிறுவிக் காட்ட போதுமான அடிப்படையாகும். அதைச் செய்யுங்கள்.

மறுபக்கத்தில் தமிழச்சிக்கு நடந்ததோ, வெட்கக்கேடானதும் இழிவானதுமாகும். தமிழ் சமூகத்தின் உள்ளேயே புரையோடிக் கிடக்கின்ற இந்த அசிங்கத்தை, இந்த சமூக இழிகேட்டை, எம்மால் தட்டிக் கேட்கக்கூட நாதியற்றுப் போன சமூக கட்டுமானங்கள். இதைப் பாதுகாக்கும் அரசியல். இதற்குள் இதை எல்லாம் கண்டும் காணாமல் வாழப்பழகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், இதை எல்லாம் எதிர்த்துப் போராடாத தமிழ் தேசியம். இப்படி அம்சடக்கமானதும், இதையே ஒழுக்கமாக சமூகமே மாறிவிட்ட நிலையில், அதை நாம் அம்பலப்படுத்துவதை கணணிப் புரட்சி என்றும், உருப்படாத மார்க்சியம் என்றும் கிண்டலடிக்கின்றனர்.

உருப்பட்ட புலித் தேசியம், நடைமுறைப் புரட்சி இவற்றை எல்லாம் எப்படி நடைமுறையில் எதிர் கொள்கின்றனர். எதையும் உயிருடன் காட்ட முடியாது. புலம்ப முடியும். கொசிக்கவும், வம்பளக்கவும் முடியும். மனித சிந்தனையை உசுப்பும் எமது கருத்தையும், அறிவியல் பூர்வமாக இவர்களால் வைக்க முடியாது. கணணி புரட்சி என்று இழிவாடியவர்கள் செய்வது, செயலற்ற சமூகத்தைப் படைத்து பாசிச அமைப்பை பாதுகாப்பது தான்.

அவர்கள் இதனால் கணணி முன் அமர்ந்து இருந்தும், சிந்திக்காதே என்கின்றனர். இதை புலித் தேசியத்துக்கு எதிரான சதி என்கின்றனர். இதனால் தமிழச்சிக்கு நடந்தது சரியானது என்பதே, இவர்களின் முன் முடிவாகியது. இதை நிறுவ அரை அரை என்று அரைத்து, முடிவு கூறுகின்றது. அதாவது அதை சலித்தால், வெறும் கண்டனம் வார்த்தையை மட்டும், அதில் இருந்து இணையப் பொறுக்கியைப் போல் பொறுக்கலாம்.

அந்த பொறுக்கிக்கு துணையாக களமிறங்கிய இந்த இணையப் பொறுக்கிகள், தமிழச்சி மேல் தொடர்ச்சியாக சுற்றி வளைத்து கொரில்லாத் தாக்குதலை நடத்தினர். இதுதான் நடந்து கொண்டு இருந்தது. அதை அவர் தனித்து எதிர்கொண்ட போது, அதில் சொல் பிழை பிடித்து கடைசியில் தமிழச்சியை தூக்கு மேடையில் ஏற்றினர். இப்படி இந்த பாசிட்டுகள் மட்டும் தான், தனது சொந்த வழிகளில் செய்கின்றது. ஒரு பெண் என்ற அடிப்படையில், தன் மீதான வன்முறைக்கு எதிராக போராட வெளிக்கிட்ட தமிழச்சி, இறுதியில் சிலரால் இப்படி குற்றவாளியாக்கப்பட்டார். தமிழச்சி மீதான தமது பாசிச குற்றச்சாட்டுக்கு, சத்தியக்கடதாசியையும், தலித்மாநாட்டையும் ஆதாரமாக்கினர். இப்படித்தான் மண்ணில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.

ஆணாதிக்க சமூக ஓழுக்கம் பாசிசமாகவும் சிதைந்து நிற்கின்ற போது, அதுவே சமூகமாகி உள்ள போது, எது நடக்குமோ அந்த சோகம் தமிழச்சிக்கு நடந்தது. இது எப்படி இருந்ததென்றால், சாதாரணமாக ஒரு கற்பழிப்பு நடந்த பின், சமூகம் ஒரு பெண்ணை எப்படி இழிவாடுமோ அதுபோல் நடந்தது. அந்த பெண்ணின் உடுப்பைபப் பற்றியும், நடையுடை பற்றியும், இறுதியாக ஆட்டம்... பற்றியும் கதைத்து, பெண்ணை கைநீட்டி குற்றம்சாட்டி விடுவது போன்று இது நிகழ்ந்தது. நீதிமன்றத்தில் கற்பழிப்பை விசாரணையின் பெயரால் மறுபடியும் துகிலுரியும் நடத்தைவரை நடத்துகின்ற கூத்தையொத்த பாசிச வக்கிரத்தை, புலித் தேசியத்தின் பெயரில் செய்தனர்.

தமிழச்சி தனக்கு நடந்த அவமானத்தை, அந்தக் கொடுரமான வெட்கக்கேடான ஆணாதிக்க வக்கிரத்தை அம்பலப்படுத்தி போராடிய போது, புலித்தேசியம் அவரை குற்றவாளியாக்கியது. முதல் இணையப் பொறுக்கி தமிழச்சியை எதற்காக இழிவுபடுத்தினானோ, அந்த நோக்கத்தை புலித் தமிழ் பாசிசம் மீண்டும் அரங்கேற்றியது. இதைவிட வேறு எதையும் தமிழ் பாசிசம் இதில் செய்யவில்லை.

மானம் கெட்டு இப்படி இழிவாக இழிவாடினர். தமிழச்சி ஒரு பெண்ணாக, இந்த ஆணாதிக்க அமைப்புக்கு முன் நிமிர்ந்து நின்ற அந்த துணிச்சலை, படுகேவலமான கோழைத்தனத்துடன் தாக்கினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழச்சிக்கு எதிராக புதிய புரட்சிகர பெரியார் இயக்கம். பாவம் இந்த புல்லுருவிகளுக்கு தெரியவில்லை, புலித் தலைவர் முன்னமே இது போன்று மேற்கோளை பயன்படுத்தி கூத்து ஆடியுள்ளார் என்பது. அந்த புலித் தலைவரின் மேற்கோள் தான், அவசரத்துக்கு தமிழச்சிக்கு எதிராக இவர்களுக்கு உதவியது. இவ்வளவு காலம் தலைவரின் மேற்கோளைக் கூட கண்டு கொள்ளாத இந்த பெரியாரிய புல்லுருவிகள், திடீர் பெரியார் சங்கம் ஒன்றை கம்யூட்டருக்கு முன்னால் உருவாக்கினர்.

திடீர் பெரியாரிஸ்டு புல்லுருவிகளே! முதுகெலும்பு இருந்தால்

1. முதலில் புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.

2. தமிழர் வழிபடும் கோயில் பயன்படுத்தும் சமஸ்கிருதத்துக்கு எதிராக போராடுங்கள. (இதற்குள் இனவிடுதலை, தேச விடுதலை என்று பூச்சாண்டி) புலி கோயில் எல்லாம் சமஸ்கிருத மயம்.

3. சாதி அடிப்படையில் உள்ள பார்ப்பானை கொண்டு கோயில்களில் பூசை செய்வதற்கு எதிராக போராடுங்கள். முதலில் புலிக் கோயில்களில் அதைச் செய்யுங்கள்.

4. புலியல்லாத கோயில்களை புலியினதாக மாற்ற முனையும் அந்த பாசிச கோமாளிகளை எதிருங்கள்.

5. உங்கள் சொந்த வாழ்வைச் சுற்றி உள்ள தாலி, சடங்குகள் முதல் அனைத்தையும் அறுத்தெறியுங்கள். புலித் தலைவர் பிரபாகரன் ஐயரை வைத்துக் கட்டிய தாலி, அந்த பார்ப்பனச் சடங்குகளை எல்லாவற்றையும் விமர்சியுங்கள்.

6. இன்னும் நீண்ட பட்டியல் எம்மிடம் உண்டு. இதை தொடங்கினால் நாமும் வருகின்றோம்.

6. தமிழச்சி இட்ட பட்டியலையும் கேட்டவைகளையும் மறக்காதீர்கள்
http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_8951.html

திடீர் பெரியாரிஸ்ட்டுகள் இதை செய்ய முதுகெலும்பு கிடையாது. இந்த புல்லுருவிக் கூட்டம் பாசிச வழியில், புலியல்லாத மாற்றை விழுங்கி தின்னும் வழமையான இழிவான பாசிச உத்தி தான், இந்தத் திடீர் பெரியாரிஸ்ட்டு வேஷம்.

இந்த நாற்றம் பிடித்த பாசிட்டுகள், கம்யூட்டருக்கு முன்னால் திடீர் பெரியாரிஸ்டுகளாக மாறியது போல், பாரிஸ் தலித் மகாநாட்டை பற்றிய அவதூற்றையும் கம்யூட்டரில் கண்டு பிடித்து காறி உமிழ்கின்றனர்.

தலித் மாநாட்டை பற்றியும் எமது விமர்சனங்கள், அதில் கலந்து கொள்ளுவோர் பற்றி, எமக்கு தனித்துவமான தெளிவான அரசியல் பார்வைகள் உண்டு. ஆனால் இப்படி கேவலமாக, பாசிசத்தின் கொடூரமான சொந்த இழிவாடல்களை, நாம் சகித்துக்கொண்டு மௌனிக்க முடியாது. வழக்கம் போல் புலிகள் இதை இழிவாடுவது, முத்திரை குத்துவது, இறுதியாக படுகொலைகளை செய்வது என்ற பாசிசத்தின் வழியை எதிர்கொண்டு போராட வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.

எந்த விடையம் மீதும், அறிவியல் பூர்வமாக விவாதம் நடத்த வக்கு கிடையாது. தமிழ் மக்களுக்காக நியாயமான குரலைக் கூட பதிவு செய்ய முடிவதில்லை. மற்றவனை எதைச் செய்யவும் அனுமதிக்க மாட்டோம் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து இந்த கூத்தை அடிப்பவர்கள், நடைமுறையில் என்னத்தைக் கிழிக்கின்றனர். அவர்கள் ஆதரிக்கும் புலியுடன் நின்று போராடாது இங்கு என்ன செய்கின்றனர். எனது பதிவு ஒன்றில் கேட்கப்படுகின்றது, ஏன் பிராஞ்சு ஏகாதிபத்தியதுக்கு வந்தீர்கள். சோமாலியாவுக்கு ஏன் செல்லவில்லை. இங்கு கொழுத்த சம்பளம் அதுதானே என்று ?

ஐரோப்பிய சம்பளம் தெரியாத கிறுக்கர்களின் கேள்வி. 1980 இல் ஐரோப்பிய சம்பளம் என்ன, இலங்கை சம்பளம் என்ன என்று தேடிப்பாருங்கள். அத்துடன் பணப் பெறுமதி என்ன என்று சென்று பாருங்கள்.

இந்தக் கேள்வியின் நோக்கம் தெளிவானது. நானே புலிக்கு எழுதினால் எந்தக் கேள்வியும் இவர்களிடமிருந்து வரவே வராது. சரி அந்த சோமையற்ற பக்கத்தைத்தான் விடுவோம், நீங்கள் ஏன் இங்கிருக்கின்றீர்கள். புலி ஆதரவோ அல்லது புலியோ எந்த புற்றில் இருந்தாலும், நீங்கள் அங்கேயல்லவா போராடவேண்டும். கொழுத்த சம்பளம் என்கின்றீர்கள், உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்லுகின்றீர்கள் போலும்.

நானோ பிரான்சில் அதி குறைந்த அடிப்படைச் சம்பளத்தில் வேலை செய்கின்றேன். அதை வைத்து வீட்டு வாடகை மட்டும் தான் கட்டமுடியும். இங்கு வந்தது தற்செயலானது. சந்தர்ப்பம் சூழல். எங்கே பாதுகாப்பும், சந்தர்ப்பமும், குறைந்தபட்சம் ஜனநாயகம் கிடைத்ததோ அங்கு வருகின்றோம். பொருளாதார காரணம் தான் (நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்றுவிட்ட அரசியல், முதல் தேசியம் வரை. எம் செல்வத்தை கொள்ளை அடித்த ஏகாதிபத்தியத்தில் வந்து பிழைக்கும் மக்கள் கூட்டம்) என்றால் கூட, அதை பிழையாக நான் கருதவில்லை. 10 லட்சம் தமிழ் மக்கள் இப்படி வெளியேறியது ஒருபுறம். மறுபுறம் பிழையான போராட்டத்தினால், பிழையான தேசியத்தினால், தேசிய பொருளாதாரம் புலிகளால் அழிக்கப்பட்டதாலும் மக்கள் அங்கு வாழவழியின்றி வெளியேற்றப்பட்டனர்.

மறுபக்கத்தில் அறிவியல் பூர்வமான விவாதம், தர்க்க வாதங்கள் எதுவும் செய்யமுடியாதவர்கள், குதர்க்க வாதத்தில் குதிக்கின்றனர். குதர்க்கம், கொசிப்பு, வம்பளப்பு, சொற்களில் தொங்குவதை தமிழ் தேசிய அரசியல் என்கின்றனர். பின் அதை விவாதம் என்பது கருத்துச் சுதந்திரம் என்று அதற்கு பொழிப்புரைகள்.

கருத்தென்றால் என்னவென்று தெரியாதவர்கள். விடையத்தை திசைதிருப்ப பொருத்தமற்ற பதிவுகள். இடைச்செருகல்கள். நக்கல்கள் நையாண்டிகள். இதை எல்லாம் இன விடுதலையின் பெயரில் செய்கின்றனர்.

தமிழ் மக்கள் அன்றாடம், புலிகளின் அதே பாசிச வழிகளில் பேரினவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இதையிட்டு அக்கறையற்ற அதே பாசிச கொசிப்புகள். இதற்கு எதிராக உலகெங்கும் போராட்டத்தைக் கூட நடத்தி அதை தடுக்கமுடியாத வகையில், அனைத்தையும் பாசிசத்துக்கு உள்ளாக்கி அழித்துவிட்டனர். இவர்கள் இதற்கு எதிராகவும் ஒரு துரும்பைக் கூட எடுத்து போராட முடியாது கிடக்கின்றனர். கம்யூட்டரின் முன் அமர்ந்து நக்கல், நையாண்டி, கொசிப்பை தமிழ் மக்களின் பெயரில் செய்கின்றனர்.

எம்மைச் சீண்டி, தமது கொசிப்பை பிரதான அரசியல் நிகழ்வாக கொதிநிலைக்கு கொண்டு வருகின்றனர். உத்தி ரீதியாகவே புலிகளின் அதே பாசிச வழியை பயன்படுத்தி, தமிழ் மக்களை திட்டமிட்டே பேரினவாதிகளும் தமிழ் கூலிக் குழுக்களுடன் சேர்ந்து படுகொலை செய்கின்றனர். இப்படி நாள் தோறும் கொல்லப்படுகின்ற விடையத்தைக் கூட, இவர்களால் அம்பலப்படுத்த முடிவதில்லை. எம்மையும் அதைச் செய்யவிடாது, அதையும் தடுத்து நிறுத்த முனைகின்றனர். இப்படி இன விடுதலையின் பெயரில், பேரினவாதத்துக்கு துணையாக நின்று இணையத்தில் எம்மை முடக்க முனைகின்றனர்.

Tuesday, October 9, 2007

இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்."

பி.இரயாகரன்


க்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசீச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர்.

இலங்கையில் பாசீசப் புலிகள், தேசிய வீரர்களாக வீரநடை போடும் கதையும் இப்படித்தான். ஈவிரக்கமற்ற, கோழைத்தனமான படுகொலைகள் சித்திரவதைகள் மூலம், பல ஆயிரம் சமூகப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர், ஒழிக்கின்றனர். நாள் தோறும் படுகொலைகள் சித்திரவதைகள் மூலமே, தமது மக்கள் விரோத பாசீச ஆட்சியை தக்க வைக்கின்றனர். மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை உள்ளடக்கி எழுந்த தேசியத்தை, துப்பாக்கி முனையில் அடக்கியொடுக்குகின்றனர். இதன் மூலம் தேசிய அடிப்படைகளை திரித்து, அதில் தான் தம்மை போராடும் சக்தியாக நிலைநிறுத்த முனைகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோரிக்கையை முன்வைப்பதன் மூலம், இந்த போராட்டத்தில் ஊன்றி நிற்பதாக காட்டுகின்றனர். இதற்கு அறிவியல் சூனியத்தை சமூகமயமாக்கி, அதில் தம்மை தாம் நிலை நாட்டுகின்றனர். இதற்காக மக்களின் இரத்தத்தையும், அவர்களின் உடல் உழைப்பையும் உறுஞ்சி வாழும் புலிகள், அர்த்தமற்ற தியாகங்களை கேடுகெட்ட வகையில் தமது கோழைத்தனமான அரசியலுக்காக பலியிடுகின்றனர்.

மாபியா குழுக்களுக்குரிய லும்பன் கொள்கையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறையுடன் இணைந்த புலிகள், பாசீசத்தை தமது அரசியலாக்கி அதையே ஆணையாக கொள்கின்றனர். இதற்காக எமது மண்ணில் பல ஆயிரம் உயிர்களை ஈவிரக்கமற்ற வழிகளில் கொன்று, அந்த இரத்ததை தமது கால் பாதங்களில் தெளித்தே தம்மைத் தாம் புனிதப்படுத்துகின்றனர். இந்த புனிதமான பாசீச இருப்பை மூடிமறைக்க, பினாமிய பிழைப்பு வாதங்கள் வக்கிரப்படுகின்றன. மாற்றுக் கருத்தை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கி வைத்த பின் தான், தேசிய பாசிட்டுகளால் அனைத்தையும் வக்கிரமாக நியாயப்படுத்த முடிகின்றது. இப்படி நியாயப்படுத்திய புனிதத்தைப் பற்றி, கோழைகள் தமது பாசீச வழிகளில் வீர வசனங்களை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மாற்றுக் கருத்துகள் மீதான தனிநபர் அரசியல் படுகொலைகள் மட்டும் தான், புலிகளை பாதுகாப்பதற்கான ஒரேயொரு அரசியல் மார்க்கமாகிவிட்டது. தமிழ்மக்களின் போராட்டத்தின் ஊடான அரசியல் தலைமையை நிறுவுவதற்கு பதில், படுகொலை அரசியல் வழியில் மட்டுமே தமது சர்வாதிகார மக்கள் விரோத தலைமையை தக்கவைக்கின்றது. இந்த பொதுத் தன்மையில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்து என்பது, தப்பித்துச் செல்லும் வழியில் தன்னை சந்தர்ப்பவாதமாக மாற்றி புரட்சிகர அரசியலை சிதைத்துள்ளது. புலிகளை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளமுடியாத, பூர்சுவா ஊசலாட்டத்தை அடிப்படையாக கொண்ட முதுகெலும்பற்ற போக்கு, மாற்றுக் கருத்தை மறுதளத்தில் வக்கிரமாகச் சிதைத்துள்ளது. இதைவிட துரோக குழுக்களாக, இனவாத அரசினதும் ஏகாதிபத்தியத்தினதும் நேரடி கைக்கூலிகளாக புலிக்கு வெளியில் ஸ்தாபன ரீதியாக ஒரு பகுதி அணிதிரண்டுள்ளது. இதற்கு புலிகளால் பாதிக்கப்பட்டவர்களினதும், போராட்டத்தில் இருந்து விலகி வாழும் பூர்சுவா வர்க்கத்தினதும் பலமான மக்கள் அடித்தளமும் உண்டு.

நேரடியாக புலிகள் மற்றும் துரோகக் குழு அல்லாத பிரிவில் ஏற்பட்ட அரசியல் சிதைவால் ஏற்பட்ட சேதம், புலிகளின் படுகொலை அழிப்பை போன்ற மற்றொரு கோர வடிவமே. உதாரணமாக கம்யூனிசத்தை வெளியில் இருந்து அழிப்பது ஒருவகை. உள்ளிருந்து கோட்பாட்டு ரீதியாக அழிப்பது இன்னொரு வகை. இவை இரண்டும் சாரம்சத்தில் ஒரே தன்மை கொண்டவை. இந்த நிலையில் குறைந்த பட்சம் சமூகத்தை பகுத்தாயும் முறை, சமுகத்தை நேர்மையாக நேசிப்பது, அவர்களின் பல்வேறு பிரச்சனைகளில் தலையிடுவது, அதைப்பற்றி சிந்திக்க தூண்டுவது என்பதே எனது நோக்கம்.

எனது நோக்கம் அரசியலற்ற பெரும் தேசிய ஒடுக்குமுறைக்கு கோட்பாட்டில் சார்பு நிலையை கொண்டோருக்கும் சரி, இலங்கை அரசுடன் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் இணைந்து செயற்படுவோருக்கும் சரி, திட்டவட்டமாக எதிரானது. அவர்கள் யாரும் இதில் இருந்து அரசியலை வெட்டி கழித்தும், திரித்தும், பயன்படுத்துவதை, எந்தவிதத்திலும் எனது அரசியல் திட்டவட்டமாக அனுமதிக்கவில்லை.

தமிழ் பேசும் மக்கள் சிங்கள பெரும் தேசிய இன பாசீச ஒடுக்குமுறையை, அதன் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக சந்திக்கின்றார்கள். இதை எதிர்த்து போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதை யாரும் கொச்சைப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியாது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை ஆதரிக்க வேண்டியது, பெரும்பான்மை சிங்கள மக்களின் தேசியக் கடமை. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டியது தேசியக் கடமை. இப்படி எமது நாட்டில் பல்வேறு ஜனநாயகக் கடமைகள் மறுக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயகத்தை உயர்த்தி பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது அனைத்துத்தரப்பினதும் அவசரக் கடமையாக உள்ளது.

இன ஒடுக்குமுறையை சிங்கள இனப் பெரும் தேசியவாதம் மூலம் முன்னெடுத்து, ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் விரிவாக்கத்தை நடைமுறைபடுத்தவும், வர்க்கப் போராட்டத்தை தடுக்கும் எல்லைக்குள்ளும் தான், இந்த இனவாதத்தை உயிருள்ள நடைமுறையாக இனவாதிகள் வைத்துள்ளனர். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையை பெறப் போராடுவது, அவர்களின் அடிப்படை உரிமையாகும். இந்த உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், தடுத்து நிறுத்தவும் எடுக்கும் அனைத்து வகையான நிலைப்பாடுகளுக்கு எதிராகவும், தொடர்ச்சியான ஒரு போராட்டத்தை இன்று தொடர வேண்டியது அவசரக் கடமையாக இருக்கின்றது. இது கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் கூட ஒரு போராட்டத்தை ஈவிரக்கமின்றி நடத்த வேண்டியிருந்தது, வேண்டியிருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை எதிர்த்து அழிக்க முனைந்த போதெல்லாம், எந்தளவுக்கு அதை கடுமையாக எதிர்த்து போராட வேண்டியிருந்ததோ, அதேயளவுக்கு இந்த சுயநிர்ணயத்தை திரித்து பயன்படுத்திய பிரிவுகளையும் எதிர்த்து போராடுவதில் சமரசம் என்பதே கிடையாது.

சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான சிங்கள பாசீச பெருந்தேசிய இனவாதம்

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்று தொடாச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தனது ஆக்கிரமிப்பின் ஊடாக, செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த இனவாத நாற்று பிரித்தாளும் தந்திரம் மூலம் ஊன்றப்பட்டது. தேசிய வளங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்வை பறித்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், மக்களின் கோபத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. கோபம் போராட்டமாக வளர்ச்சி பெற்றபோது, அதற்கு தலைமை தாங்கிய பிரிவுகள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதற்கு பின்வாங்கினர். அவர்கள் போராட்டத்தை நடத்துவதாக காட்டியபடியே, பிரிட்டிஸ் அரசுடன் கூடிக்குலாவியபடி நக்கித் திரிந்தனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கோபத்தை திசை திருப்பவும், உழைக்கும் மக்களின் போராட்டங்கள் சுயமாக வளர்ச்சி பெறுவதை தடுக்க இனவாதத்தை பிரிட்டிஸ் காலனித்துவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து மூலதனமாக்கினர். இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் வழங்கிய கதகதப்பான கம்பளங்களில் வசதியாக உறங்கியபடியே வளர்த்தெடுத்தனர். இந்த இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இனப் பிரிவுகளையும், தமது சொந்த வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு மக்களைப் பிரித்துப் பிளந்தனர். இதன் மூலம் பிரிட்டிஸ் காலனித்துவ வாதிகளுடன் ஒரு முரண்பாடற்ற நட்புறவுகளை, இனம் கடந்து தமக்குள் பேணினர். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் வகையில், இனமுரண்பாட்டை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளையும், இனக் கலவரங்களை காலத்துக்கு காலம் நடத்தினர்.

இந்த வகையில் உருவான இனம் சார்ந்த பிரிட்டிஸ் ஆதரவு இனவாத தலைமைகளை அடிப்படையாக கொண்டு, இலங்கைக்கு போலிச் சுதந்திரத்தை தங்கத் தட்டில் வைத்து பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் கையளித்தனர். இந்த சுதந்திரம் பெற்றுப்போட்ட கள்ளக் குழந்தையான ஜனநாயகம், பிரிட்டிஸ் காலனித்துவ நலன்களை பாதுகாக்க சபதம் ஏற்றது. போலிச் சுதந்திரத்தில் ஆட்சி ஏறிய ஏகாதிபத்திய இனக் கைக்கூலிகள், ஆரம்பம் முதலே இனவாதத்தை அடிப்படையாக கொண்டே ஆட்சி அமைப்பை நிறுவினர். இனவாத நடவடிக்கைகளே ஆட்சி அமைப்பின் மக்களுக்கான வாக்குறுதியாகி, அதுவே அரசியல் கொள்கையாகின. பாட்டாளி வர்க்கத்தின் கூர்மையான வர்க்கப் போராட்டங்கள் எழுந்த எழுகின்ற நிலமையை தடுக்க, இனவாதத்தை அடிப்படையாக கொண்டு சமூகத்தை பிளப்பது அவசியமானதாகவும் நிபந்தனையானதாகவும் ஆளும் வர்க்கத்துக்கு இருந்தது. இந்த இனவாதத்தில் யார் அதிகமாக இனவாதத்தை அரசியலாகக் கொள்கின்றார்களோ, அவர்களே அரசு அமைக்க முடியும் என்றளவுக்கு இலங்கை சமுகங்களிடையே இனவாத கருத்தும் கண்ணோட்டமும் புகுத்தப்பட்டது. ஒரு இனத்தை ஒடுக்கி மற்றைய இனத்துக்கு நிபந்தனையின்றி வழங்கும் சலுகைகள், தேர்தல் வெற்றியாகியது. ஆட்சியில் தொடர்ந்து இருந்த பெரும் சிங்கள தேசிய இனவாதத்தை எதிர்த்து, சிறுபான்மை இனங்கள் தமது நலன்களை தக்கவைக்கும் வகையில் தன்னை நிலைநிறுத்தியது. அதேநேரம் சிங்கள இனவாதத்தை எதிர்த்தும், சிங்கள மக்களுடன் ஐக்கியத்தை முன்னிறுத்தியும் போராட வேண்டிய நிலையில், அதை தவிர்த்து தமிழ் குறுந்தேசிய இனவாதத்தை சிறுபான்மை தலைமைகள் முன்வைத்தன. இங்கும் முஸ்லிம் மற்றும் மலையக மக்களை, தமிழ் குறுந்தேசிய இனவாத பெரும் பூர்சுவா வர்க்க கண்ணோட்டத்தில் ஒடுக்கியபடியே தேசியத்தை முன்வைத்தனர். இதன் மூலம் இலங்கையில் இனவாதத் தலைவர்கள், இனம் கடந்த நிலையில் தமது வர்க்க நலன்களை பெறுவதில் ஒன்றுபட்டனர். இந்த ஒன்றுபடுதல் என்பது சுரண்டும் வர்க்க கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டே இருந்தது. அந்த வகையில்

1. சொந்த தனிப்பட்ட வர்க்க நலன்கள் மற்றும் தமக்கு சார்பானவர்களின் வர்க்க நலன்களை அடைவதில் இனவாத எல்லையை கடந்து தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

2. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும் ஒடுக்குவதில், இனவாதம் கடந்து தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

3. சிறுபான்மை தேசிய இனங்கள் தொடங்கி படிநிலை சாதியப் பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்கு முறையைச் செய்வதில் இனவாதம் கடந்து தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

4. மற்றைய இனத்துக்கு எதிரான இனவாத கண்ணோட்டத்தை உருவாக்குவதில் தமக்கு இடையில் ஒன்றுபட்டு நின்றனர். மற்றைய இனத்துடன் ஐக்கியப்படும் அனைத்து போக்கையும் எதிர்த்து நின்றதுடன், அதை ஒடுக்குவதில் இவர்கள் இனம் கடந்த வகையில் ஐக்கியப்பட்டு நின்றனர்.

5. இவர்கள் இனம் கடந்த வகையில், கட்சி முரண்பாடு கடந்த நிலையில், காலனிய நலன்களை பேணுவதிலும், ஏகாதிபத்திய நலன்களை விரிவாக்குவதிலும் தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

6. இனவாதத்தை தமது அரசியலாகவும் நடைமுறையாகவும் கொண்டு இருப்பதில், கோட்பாட்டு ரீதியாக ஒன்றுபட்டு நின்றனர். இந்த இனவாதமே பரஸ்பரம் அவர்களின் இருப்பை பாதுகாக்கும், ஒரே அரசியல் அடிப்படையாக இருப்பது இதன் வெட்டுமுகத் தோற்றமாகும்.

7. இனவாதத்தை பரஸ்பரம் எதிர் நிலையில் முன் வைப்பதன் மூலம், ஏகாதிபத்தியத்துக்காக காவடி எடுப்பதில் ஐக்கியப்பட்டு நின்றனர்.

இனவாதத்தை தொடர்ச்சியாக விதைத்தபடி பல்வேறு இனப்பிரிவுகள் தமக்கிடையில் முரண்பாட்டுடன் தம்மையும், தமது நலன்களையும் பேணியபடி ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசம் இருந்தனர், இருக்கின்றனர். இலங்கை தேசிய பொருளாதாரத்தை மேலும் மேலும் தொடர்ச்சியாக அழித்து அதை ஏகாதிபத்தியத்துக்கு தாரைவார்த்து கொடுப்பதன் மூலம், உள்நாட்டில் வர்க்க நெருக்கடி தொடர்ச்சியாக அதிகரித்தது. வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படும் வர்க்க கொந்தளிப்பு ஒரு வர்க்கப் போராட்டமாக மாறிவிடுகின்ற நிலையில், அதை சிதைப்பது ஆளும் மற்றும் ஏகாதிபத்திய நலனுக்கு அவசியமான நிபந்தனையாகும். இதை சிதைக்க இனவாதத்தை விரிவாக்குவதன் மூலம், மக்களுக்கிடையில் இனமோதலை தூண்டி, அதையே பிரதான சமூக முரண்பாடாக்குவது இனவாதிகளின் கருத்தும் கண்ணோட்டமாகவும் இருந்தது. இதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றி பெற்றன. இனவாதமே வர்க்கங்களை அடக்கியாளும் ஒரு சுரண்டும் கருவியாகியது.

இந்த வகையில் இனவாதத்தை பெரும் சிங்கள இனவாதம் விரிவாக்கிய வரலாற்றில், சிறுபான்மை தலைமைகளும் அக்கம் பக்கமாக அதே இனவாதத்தை ஆதாரமாக கொண்டது. சிங்கள இனவாத அரசையும் அன்னிய ஏகாதிபத்திய சூறையாடலையும் பாதுகாத்தபடி, தனது தரகு மற்றும் நிலபிரபுத்துவ நலன்களையும் பேணினர். இந்த இனவாத தலைமைகளின் இனவாத கண்ணோட்டம் மீதான எதிர்ப்பும் ஐக்கியமும், தவிர்க்க முடியாதபடி இனவாத வடிவத்துக்குள்ளேயே வெடிப்பை ஏற்படுத்தியது. சொந்த இனவாத சக்திகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், வர்க்க நலன்களின் அடிப்படையில் மற்றைய இனவாத வர்க்க தலைமையுடன் கூடிக் குலாவுவதையும் வர்க்க நலன்களை அடைவதையும், அடைய முயல்வதையும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இனவாதத்தை பேணவும், தீவிரமாகவும் முன்னெடுக்கத் தவறியவர்களை துரோக சக்தியாக வரையறை செய்தது. பெரும்பான்மை இனமும், சிறுபான்மை இனமும் தமது இனவாதத்தின் உள் முரண்பாட்டால் தமக்குள் தொடர்ச்சியாக பிளவாகி, புதிய தீவிர இனவாத கட்சிகளையும், அரசியல் சட்ட அமைப்புகளையும், இனவாத நடைமுறைகளையும் தொடர்ச்சியாக மாறிமாறி கொண்டுவந்தது, வருகின்றது. இது இனவாதத்தை நவீனமாக்கி ஒடுக்கு முறையை தீவிரமாக்கியது. மறுதளத்தில் சிறுபான்மை இனவாதத் தலைமை வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு பெரும்பான்மை இனத்துடன் கூடிக் கூலாவுவதை, புதிய தீவிர இனவாத சக்திகள் துரோகமாக வரையறுத்தது. அதே நேரத்தில் சமூகத்தில் எந்த வகையில் போராடிக் கொண்டிருக்கின்றதோ, அதன் எல்லைக்குள் அதன் போக்கில் முத்திரை குத்தப்பட்ட துரோகத்தை பழி தீர்த்துக் கொள்கின்றது. இது தனிநபர் படுகொலை வரை நீண்டு கிடக்கின்றது. இந்த இனவாதம் ஆழமான தீவிர குறுந்தேசிய இனவாதத்தை, ஆணையில் வைத்தது. இந்த குறுந்தேசிய இனவாதத்தின் வளர்ச்சி என்பது, தன்னைத் தான் தூய்மையானதாக பிரகடனம் செய்தபடி, மற்றைய அனைத்தையும் துரோகமாக வரையறுத்து அழித்தொழிக்கின்றது. அதேநேரம் தனது கருத்துக்கு மாற்றான அனைத்து கருத்தையும் சிந்தனையையும் நடைமுறையையும் கூட, துரோகமாக காட்டி அழித்தொழிக்கின்றது. இது மக்களின் நேரடி கருத்துச் சுதந்திரத்தை, தனது குறுந்தேசிய இனவாதத்துக்குள் துரோகமாக வரையறை செய்து அழித்தொழிப்பது என்பது இதன் பொதுப் பண்பாகியது, பொதுப் பண்பாகவுள்ளது.

இனவாத கட்டமைப்பு என்பது சமுதாய பிளவை ஆழமாக்கிச் சென்றது. மூலதனச் சுரண்டல் அமைப்பின் வர்க்க நலன்களை பாதுகாக்கவும், தனிப்பட்ட ரீதியில் சொகுசாக வாழும் வர்க்க நலன்களை பாதுகாக்கவும் இனவாதமே அடிப்படையாக உள்ளது. மூலதனத்தை பாதுகாக்கும் இனவாத தேசிய அரசியல் வாதிகளால் எண்ணை ஊற்றி வளர்த்த இனவாத தீ, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இதற்குள் தள்ளிவிட்டு குளிர்காய்கின்றது. சிங்கள இனவாதப் பாசீசம், தமிழ் பேசும் மக்களையே தனது எதிரியாக காண்கின்றது. தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தின் மீதும், அதன் அடையாளங்கள் மீதும் கூட தனது இனவாதத் தீயை பாய்ச்சுகின்றது. அதாவது இலங்கையின் இன முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக தள்ளி, அதற்குள் அனைத்தையும் திட்டமிட்டே அடக்கியொடுக்கின்றது. இனவாதத்தை அடைப்படையாக கொண்டு உருவாக்கிய அடக்குமுறைச் சட்டங்களை கொண்டே, சிங்கள மக்களையும் ஒடுக்குகின்றது. இயல்பாக எழுகின்ற இயற்கையான தொழிலாளர் போராட்டத்தைக் கூட, இந்த இனவாத அடக்குமுறை சட்டத்துக்குள் ஒடுக்கி சிறையில் தள்ளிவிடுகின்றனர். ஏன் தொழிலாளர்களின் வருடாந்த பொது விடுமுறைகளை கூட இனவாத அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிளந்து அதை குறைத்து, சுரண்டும் மூலதன விருத்திக்கு சாதகமாக பயன்படுத்தவும் தவறவில்லை.

உலகமயமாதலின் விரிவாக்க நிபந்தனைகளை அமுல் செய்யும் போது, மொழி ரீதியாக கல்வி கற்பிக்கும் தமிழ் ஆசிரியர் எண்ணிக்கையை குறைப்பதை அடிப்படையாக கொண்டே இனவாதம் செயலாற்றுகின்றது. இனவாதத்தை அடிப்படையாக கொண்டு மக்களை பிளந்து சுரண்டும் வர்க்கத்தின் நலன்களை உறுதி செய்வதிலும், புதிய அடக்கு முறைகளை உழைக்கும் மக்களுக்கு எதிராக இனம் கடந்து ஏவிவிடுவதும், தொழிலாளர் உரிமைகளை பறிப்பதும், இந்த பிரதான முரண்பாட்டின் உள்ளடக்கமாகவும் சாரமாகவும் உள்ளது.

இன்று சிறிலங்கா அரசு தனது சொந்த அதிகாரத்தை சிங்கள இனவெறி பாசீச கட்டமைப்பு சார்ந்து, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை வரைமுறையின்றி ஏவுகின்றது. அனைத்து தமிழ் மக்களையும் சிங்கள மக்களின் எதிரியாக காண்கின்றது, காட்டுகின்றது. தமிழ் மக்களின் பண்பாட்டு கலாச்சார அடையாளங்களை அடிப்படையாக கொண்டே தமிழ் மக்களை எதிரியாக அடையாளப்படுத்தவும், தனது இனவெறி அடக்குமுறையை ஏவிவிடவும் தயங்கவில்லை. தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி அடையாளம் சார்ந்து தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் கற்பழிப்பை தாராள மயமாக்கியுள்ளது. ஏகாதிபத்தியங்களின் துணையுடன் உலகமயமாதலை விரிவாக்கும் கட்டமைப்பில், இன ஒடுக்குமுறையை ஆதாரமாக அச்சாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. இந்த வகையில் இன யுத்தத்துக்கு ஆதரவாக ஏகாதிபத்தியங்கள் தூணாகி, துணை நிற்கின்றன. இந்த இனவாத அடக்குமுறைக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி வருவதுடன், நேரடி படை உதவி ஊடான ஆக்கிரமிப்பை செய்யவும் தயாராகவுள்ளது. குறுந்தேசிய நலன்களுக்காக போராடும் புலிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை அரச சார்ந்து மிரட்டவும், தேவைப்பட்டால் ஆக்கிரமிக்கவும் ஏகாதிபத்தியங்கள் தயாராகவே உள்ளது.

1987 இல் இந்தியா ஆக்கிரமிப்பாளன் சிங்கள இனவாத அரசு சார்ந்து தமிழ் மக்களை ஒடுக்கும் வகையில் நடத்திய விஸ்தரிப்புவாத ஆக்கிரமிப்பு போன்று, அடுத்த கட்ட ஆக்கிரமிப்புக்கான தயாரிப்பில் உலகம் ஈடுபடுகின்றது. இன்று தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் உலகமே ஒரு கரமாகி வருகின்ற நிலையில், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் ஊன்றி நிற்க, சர்வதேசியத்தை அதன் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளும் வரலாற்று கட்டத்தில் நிற்கின்றோம்.

இனவாத யுத்தத்தில் மக்களின் அவலங்கள் முடிவின்றி பெருகுகின்றன

தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடும் மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந்தேசியவாதிகளான பாசீச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே அர்த்தமற்றதாக்கி விட்டது. அண்ணளவாக 25000 பேர் (1.5.2001 இல்) அதாவது நேரடியாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்திலும் உள் இயக்க ஜனநாயக போராட்டத்திலும் மாற்று இயக்க படுகொலைகள் (துரோகத்துக்கு முன்பாக) என்று, நேரடியான போராட்ட நடவடிக்கையில் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். இது தொடர்கின்றது. 60000 முதல் 100000 வரையிலான மக்கள் இராணுவ அழித்தொழிப்பு, மற்றும் இயக்க படுகொலைகள், இனப்படுகொலைகள் என்ற எல்லைக்குள் தம் உயிரை இழந்துள்ளனர். தொடர்ந்தும் இழக்கின்றனர். இதை விட இந்தியா இலங்கை இராணுவத்தினால் சில நூறு பெண்கள் கற்பழிக்கப்பட்ட பின் கொன்றும், சீரழிய வைத்தும் வெறியாட்டம் ஆடப்பட்டுள்ளது ஆடப்படுகின்றது. இது போன்று தேசிய இயக்கங்களால் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகவும் புதைக்கப்பட்டனர். மணியந்தோட்டத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிகழ்வுக்கு பின்னணியில் புலிகள் இருந்துள்ளனர். இது போன்ற சில புதைகுழிகள் எம்மண்ணில் கண்டு பிடிக்கப்பட்டன. இதை விட இயக்கத்தின் உள்ளும் வெளியிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியதுடன், இதை மூடி மறைக்க படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் இலைமறை காயாக வெளிப்படத்தான் செய்தன, செய்கின்றன.

சில பத்தாயிரம் பெண்கள் கணவனை, மகனை, தந்தையை இழந்து இந்த ஆணாதிக்க அமைப்பில், அநாதைகளாகி வயிற்றுப் பிழைப்புக்கே கையேந்தி நிற்கின்றனர், நிற்கவைக்கப்படுகின்றனர். அதே போல் அன்றாட கஞ்சிக்கு இருந்த உழைப்பைக் கூட பறிகொடுத்த பெண்கள் ஊமையாக்கபட்டுள்ளனர், ஊமையாக்கப்படுகின்றனர். இலங்கையில் 20 லட்சம் பேர் (மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்) ஊனமுற்றவர்களாக உள்ளதுடன், இதில் அண்ணளவாக 15 லட்சம் பேர் எழுந்து நடமாட முடியாத நிலையில், மூன்று சக்கர வண்டியை நம்பி பிச்சைக்கராரக வாழ்கின்றனர். சில ஆயிரம் குழந்தைகள் தாய் தந்தையை இழந்து அனாதையாகி, இந்த சுரண்டல் அமைப்பில் அனைத்து விதமான ஒடுக்குமுறைக்குள்ளாகி பரிதாபத்துக்குரியவராகியுள்ளனர், பரிதாபத்துக்குரியவராகின்றனர். இந்த அநாதைக் குழந்தைகளின் அவலத்தை பராமரிக்கும் புலிகள், தமது குறுந்தேசிய இனவாத பாசீச சர்வாதிகாரத்தை நிறுவ, அவர்களை மூளைச் சலவை செய்து நேரடியாக ஆயுதபாணியாக்குகின்றனர். சொந்த மண்ணையும் நாட்டையும் விட்டு அகதியாக மேற்கு நாடுகளில் புகலிடம் புகுந்தவர்கள், பொருளாதார ரீதியாக பலமாக இருந்த போதும், அங்கு மூன்றாம் தர அடிமையாக நிறவாதத்தையும், கொடூரமான சுரண்டலையும் சந்திக்கின்றனர். பகட்டுத்தனமான யாழ் பூர்சுவா அடிப்படை வாதத்தை கொண்ட இந்த மேற்கு புலம்பெயர் பிரிவுகள், உலகமயமாதலின் பண்பாட்டு கலாச்சாரத்தை இலங்கையில் வெம்பவைத்து வீங்கி விரிவாக்கும் வகையில், தனது ஊதியத்தை வரைமுறையின்றி பயன்படுத்த துணையாகின்றனர். அதாவது கொழும்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்கின்ற மேற்கு புலம்பெயர் உறவினர்களும், யாழ் குடாவிலும் புலம் பெயர் பணத்தை கொண்டே ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சார சீரழிவுகளை சமூக மயமாக்கின்றனர். இந்த புலம்பெயர் பணத்தை அடிப்படையாக கொண்ட பண்பாட்டு சீரழிவை நம்பி, பெருமளவில் பொறுக்கி வாழும் பல ஆடம்பர வக்கிரமான தொழில்கள் விரிவடைகின்றன. இந்த புலம் பெயர் பணத்தை உழையாது அனுபவிக்கும் சுகவாழ்வு வாழும் பிரிவினரின் அற்ப உடல் சுகத்தை போக்கும் கருவியாக, பல ஆயிரம் பெண்கள் இனம் கடந்து பலியிடப்பட்டுள்ளனர். சமூக உறவுகள் பணத்தை அடிப்படையாக கொண்ட வர்த்தகமாக மாறிவிட்டது. மறுதளத்தில் சொந்த மண்ணை விட்டு நாட்டிலும், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழும் அகதிகளின் வாழ்வு என்பது மிகக் கொடூரமானதாகும். வாழ வழியற்றதுடன், உழைப்பை இழந்ததுடன், அனைத்தையும் இழந்துவிட்ட இவர்களின் வாழ்க்கை, பல தலைமுறையை கடந்து துயரம் தொடருமளவுக்கு, உலகமயமாதல் விரிவாக்க உலகில் அவலமாக காட்சியளிக்கின்றது. சொந்த மண் முதல் புலம் பெயர் நாடுகள் வரை மனநோயாளர்கள் எண்ணிக்கை என்பது, வரைமுறையின்றி பெருகிச் செல்லுகின்றது. இடங்களுக்கும், நிலமைகளுக்கும், சூழலுக்கும் ஏற்ப இது வேறுபட்ட போதும், மனித அவலம் பெருகிச் செல்வதில் எந்த தடையையும் சந்திக்கவில்லை.

புலம்பெயர் சமூகம் சீரற்ற வயது தொடர்ச்சியின்றிய, குறித்த வயதுடையோரே புலம் பெயர்ந்தனர். இதனால் இவர்களின் எதிர்காலம் ஆழமாக சீரழிவை சந்திக்கின்றது, சந்திக்கவுள்ளது. மேற்கின் தனிமனித சுதந்திர ஜனநாயகத்தில் வெம்பிப் போகும் சமுதாய உறவுகள், எதிர் காலத்தில் குழந்தைகள் பெற்றோரை தனிமையாக கைவிட்டுச் செல்வது, ஒரு பொது போக்காக இருக்கும். இதனால் தனிமை மற்றும் கடின உழைப்பால் சீரழிந்தும், வேலையிழந்தும், இருக்க வீடு இழந்தும் அவலமாக வீதிகளில் அநாதையாக மடிவது முதல் மனநோயாளிகள் பெருக்கெடுப்பதுமாக நிலமை மாறிச் செல்லுகின்றது. புலம் பெயர் சமூகத் தொடர்பு சார்ந்து, எம் மண்ணில் உழைப்பிழந்து வாழும் கூட்டம், படிப்படியாக புலம்பெயர் தொடர்பை இழந்து சீரழிவை மூலதனமாக்குவது, அதன் பொதுக் குணாம்சமாக மாறிவருகின்றது. இதற்குள் இதை பிழைப்பாக்கியும் இந்த மக்களின் சொந்த சமூக அவலத்தை திசை திருப்பவும், இன்று புலம்பெயர் நாடுகள் முதல் இலங்கை வரை நூற்றுக் கணக்கான மதக்குழுக்கள் புதிது புதிதாக உருவாகி வருவதுடன், பாரியளவில் மதமாற்றத்தை செய்து வருகின்றனர். மக்களின் அவலத்தை பிழைப்புக்காக பயன்படுத்தும் மதங்களும் நபர்களும், மக்கள் சிந்திப்பதை தடுக்கும் வகையில் சிந்தனையை மழுங்கடிக்கின்றனர். உலகமயமாதலை மூடிமறைக்கும் வகையில், இதற்கான நிதி உதவிகள் இந்த மதவாத அமைப்புகளுக்கு தாராளமாக சென்றடைகின்றன. இந்த கூட்டம் இலங்கை முதல் ஐரோப்பா வரை பிரசுரங்களையும், விமானம் ஏறி பிரச்சாரங்களையும் செய்து தம்மை விரிவாக்கி வருகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களின் அவல வாழ்வை, தமது சொந்த சுகபோகமாக்கின்றனர்.

தேசிய விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசீசக் கோட்பாடுகளும்

புலிகளின் பாசீசமும் ஜனநாயக விரோத சமூகத்தை நிலைநாட்டுவதால், துரோகம் சார்ந்த சமூகப் பிரிவை இடைவிடாது உற்பத்தி செய்கின்றது. ஒப்பிட்டு அளவில் அரசுக்கும் புலிக்கும் இடையில் பாசீசத்தை கையாளும் அளவிலும், பண்பிலும் புலிகள் மிகவும் வக்கிரமாக உள்ளனர். ஆனால் பிரதான எதிரி அரசாக தொடர்ந்து நீடிப்பது, இங்கு உள்ள ஒரு முரண்நிலையாக உள்ளது. இதனால் புலிகளின் அழித்தொழிப்பு அரசியல், அரசுக்கு பின்னால் ஒரு பெரும் பிரிவு மக்களை அணிதிரட்டி வருகின்றது. இதனுடன் சேர்ந்து ஆயுதம் ஏந்திய மற்றும் ஏந்தாத நிறுவனமயப்படுத்தப்பட்ட துரோகக் குழுக்களும் கூட, ஒரு சமூகப் பிரிவாக வளர்ச்சி உறுகின்றது.

உலகில் மிகப் பெரியளவிலான அழித்தொழிப்பை போராடும் இயக்கமான புலிகள் செய்த போதும், இது எதிர்மறையில் தமக்கு எதிரானவர்களை உற்பத்தி செய்கின்றது. இந்த உண்மையை நாம் இலங்கையில் கற்றுக் கொள்ள முடியும். ஜனநாயக மறுப்பும், அதற்கெதிரான பாசீச தண்டனை முறையும் எதிரிக்கு பெருமளவில் ஆட்களை சேர்த்துக் கொடுக்கின்றது. ஆரம்பத்தில் இயக்கங்களாக இருந்த அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழித்த புலிகள், அதன் உறுப்பினர்களை உயிருடன் வீதிகளில் எரித்தும் அடித்தும் கொன்ற போது, அவர்கள் தவிர்க்க முடியாதபடி தப்பியோட வேண்டியிருந்தது. கையில் சிக்கிய எவரும் தொடர்ந்து உயிர் வாழமுடியாத அவலம் தமிழீழத்தின் பாசீச ஒழுக்கமாகியது. தப்பி ஒடியவர்களை அரசும் மற்றும் இந்திய அரசும் அரவணைத்துக் கொண்டது. தப்பி ஒடியவர்கள் தமது தற்காப்பைச் சார்ந்து அரசின் தயவில் தப்பிப் பிழைக்க முடிந்த நிகழ்வு, போராட்டத்துக்கு பாதகமான ஒரு தொடர்ச்சியான நிலைக்கு இட்டுச் சென்றது. இது படிப்படியாக வளர்ச்சியுற்று சித்தாந்த ரீதியாகவே ஏகாதிபத்திய சார்பும், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் போக்கும் வளர்ச்சியுற்று காணப்படுகின்றது. புலிகளை சொந்தக் காலில் நின்று எதிர்க்க வக்கற்ற இந்தக் குழுக்கள், மக்களையும் புலிகளையும் ஒன்றாக்கி எதிர்க்க தொடங்கினர். மக்களின் நியாயமான தேச விடுதலைப் போராட்டத்தையும் எதிர்த்து, எதிரியுடன் கூடி களத்தில் நிற்கின்றனர். அதை நியாயப்படுத்தும் அரசியல் பலம் பெற்றுள்ள இன்றைய நிலைக்கு, புலிகளின் ஜனநாயக விரோத பாசீசம் துணையாக நிற்கின்றது. துரோகம் அரசியல் ரீதியாக ஜனநாயகத்தை முன்னிறுத்தி நியாயப்படுத்தப்படுகின்றது. இதற்கு அரசியல் ரீதியாக கருத்துரைக்கும் அளவுக்கு, புலிகளின் பாசீசம் வழிகாட்டுகின்றது. புலிகளின் ஜனநாயக விரோத அரசியல் மலடாகிப் போனதால், பலவீனமான புலிகள் துல்லியமாக தனிமைப்பட்ட படுகொலைகள் மூலம் தமது அரசியலை வழிநடத்தகின்றனர். அரசியல் ரீதியாக புலிகளின் பாசித்தை மட்டுமல்ல, துரோகக் குழுக்களின் அரசியல் மற்றும் அது முன்வைக்கும் ஜனநாயக சித்தாந்தையும் கூட நாம் எதிர்த்துப் போராட வேண்டிய கால கட்டத்தில் நாம் போராடவேண்டியுள்ளது. உலகளவில் ஏகாதிபத்தியங்கள் நடத்துகின்ற ஆக்கிரமிப்புகள் அனைத்திலும், இந்த ஜனநாயகம் என்ற கண்ணியை புதைக்கின்றனர். இதையே அரசியல் துரோகிகளும் தமிழ் மக்களின் தேசவிடுதலைப் போராட்டத்துக்கு எதிராக புதைக்கின்றனர். புலிப் பாசிட்டுகள் தாராளமாக துரோகிகளை (இங்கு துரோகிகள் என்ற பதம் அமைப்பு வடிவம் சார்ந்த அரசியல் செயல்பாட்டு தளத்தில் கூறப்படுகின்றது. உதிரிகளை குறித்தல்ல. உதிரிகள் புலிகளின் பாசிசத்தால் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளால் அதில் தங்கி வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.) நாள் தோறும் உற்பத்தி செய்து கையளிக்கின்றனர். உலகளாவிய ஆக்கிரமிப்புக்குரிய தளத்தை கூட்டாகவே இடைவிடாது உற்பத்தி செய்கின்றனர். ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்க முடியாத வரலாற்றச் சூழலில் நாம் போராட வேண்டி உள்ளது. இந்த நிலையில் இரு தளத்தில் எமது போராட்டம் தெளிவானதும் துல்லியமானதாக மாறியுள்ளது.

பாசீசம் குறித்து அடிப்படையான தரவுகள் பலர் ஜனநாயக கோரிக்கை என்ற எல்லைக்கு கீழ் நின்று, புலிகளின் பாசீசப் போக்கின் பின் வாலாக மாறியது துரதிஸ்ட வசமானதே. சமூக இயக்கத்தின் போக்கு இப்படி நீடிப்பதும், சீரழிவதும் தொடருகின்றது. இந்த நிலையில் புலிப் பாசீசத்தை அதன் கோட்பாட்டு வேர்களில் இருந்து அம்பலப்படுத்துவதன் மூலம், அதன் அரசியல் பரிணாமத்தை அரசியல் ரீதியாக முன் வைப்பது அவசியமாகிவிடுகின்றது.

பாசீசம் குறித்து மேற்கு நாடுகளுக்கும் எமது நாடுகளுக்கும் இடையில், அதன் வளர்ச்சி வடிவத்தில் குறிப்பான வேறுபாடுகள் உண்டு. ஆட்சிக்கு வரத் துடிக்கின்ற பாசீசம், எங்கும் தேசியம் என்ற மையக் கோசத்தில் தான் தன்னை நிலை நிறுத்துகின்றது. இந்தப் பாசீச தேசியம், பல்வேறு சமூகக் கூறுகள் சார்ந்து தன்னை நிலை நாட்டுகின்றது. மதம், தூய்மைக் கூறு, சாதி, இனம், நிறம், மரபு என வௌவெறு வழிகளில், பாசீசம் தேசியத்தை கட்டமைக்கின்றது. இது குட்டிபூர்சுவா வர்க்கத்தின் நலன்களை பூர்த்தி செய்வதாக பாசங்கு செய்தபடி, தன்னை நேர்மையானவனாக தூய்மையானவனாக காட்டிய படி அரங்கு வருகின்றது. ஆனால் இந்தப் பிரிவு ஆட்சிக்கு ஏறுகின்ற போது, அந்த ஆட்சி குட்டிபூர்சுவா வர்க்க நலன்களை பிரதிபலிப்பதில்லை. இது அந்த நாட்டில் எந்த பொருளாதார கட்டமைப்பு காணப்படுகின்றதோ, அதற்கு இசைவான பொருளாதார ஆதிக்க பிரிவை பலப்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. உண்மையில் பாசீசம் உழைக்கும் மக்களை தொடர்ந்தும் சுரண்டும் வழியை நவீனப்படுத்தும், ஒரு வர்க்க சர்வாதிகாரமே. இருக்கும் சுரண்டும் வர்க்க நலன்களை தக்கவைக்கவும், அதை பாதுகாக்கவும், இருக்கின்ற அமைப்பால் முடியாத அளவுக்கு வர்க்கப் போராட்டம் நடக்கின்ற ஒரு நிலையில், பாசீசம் அதிகாரத்துக்கு வந்து சுரண்டும் வர்க்கத்தைப் பாதுகாக்கின்றது. பாசீசம் எப்போதும் அதிகாரத்துக்கு மூலதனத்தின் துணையுடன் வருகின்றது.

அரசு என்பது எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமே. ஜனநாயகம் என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமே. இது இருக்கின்ற அமைப்பில் சுரண்டும் வர்க்கத்தின் அரசாகவும், அதன் ஜனநாயமாகவும் உள்ளது. சுரண்டும் வர்க்கத்தின் அடிப்படை நலன்களை, அமைதியான முறையில் முன்னேற்ற முடியாத வர்க்கப் போராட்டங்கள் நடக்கும் நிலையில், வன்முறை மூலம் சுரண்டலை பாதுகாப்பதே பாசீசத்தின் மையமான சராம்சமாகும். ஆனால் பாசீசம் ஆட்சிக்கு வரும் போது, இடைப்பட்ட வர்க்கங்களை பெருமளவில் சார்ந்தும், அடிநிலை வர்க்கங்களின் மேலான ஆதிக்கம் சார்ந்தே சாத்தியமாகின்றது. பாசீசம் ஆட்சியை கைப்பற்ற முன்பாகவே, தன்னை முழுமையாக மூடிமறைத்த கலைவை கோட்பாடுகளுடன், இடைப்பட்ட வர்க்கங்கள் சார்ந்து தன்னை ஒரு இயக்கமாக, கட்சியாக காட்சியளிக்கின்றது.

இன்னொரு வகையான பாசீசம், இருக்கின்ற ஆட்சி அமைப்புக்குள் நிகழ்கின்றது. இங்கும் அவை முழுமையான பாசீசமாக தன்னை முதலில் இனம் காட்டுவதில்லை. உழைக்கும் மக்களை சுரண்டும் வடிவம் எந்தளவுக்கு அதிகமாக எதிர்ப்புக்கு உள்ளாகின்றதோ, அப்போது ஆட்சி அமைப்பில் பாசீசம் ஒரு கூறாக வளர்ச்சியடைகின்றது. இது பாசீசமாக முழுமை பெறுவது, பாட்டாளி வர்க்கம் ஆட்சியமைப்பை கைப்பறும் இருவழிப் போராட்டத்தில் தான். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் பாசீசம் என்பது, மேலும் கூர்மையாக பொதுவாக அரசியல் கட்சிகளின் அரசியல் வழியில் இணைந்தே காணப்படுகின்றது. இங்கு பூர்சுவா ஜனநாயகம் என்பது சமூகத்தின் ஒரு கூறாக இருப்பதில்லை. இங்கு பாசீசம் என்பது ஒரு பண்பியல் கூறாக, அதன் பொருளாதார சமூகக் கட்டமைப்பு மீது இணைந்தே காணப்படுகின்றது. இதனால் பாசீசம் என்பது அதன் சமூக பண்பாட்டு கலாச்சாரக் கூறில் இனங்காண முடியாத சமூகக் கூறாக உள்ளது. அது தன்னை கலவைக் கோட்பாடுகளால் மூடிமறைத்தபடி, இது உயிருள்ளதாக எப்போதும் உள்ளது. மக்களைச் சாராத அனைத்து சமூகக் கூறுகளும், பாசீசக் கூறை அடைப்படையாக கொள்கின்றது. இங்கு உருவாகும் அமைப்புகள், இயக்கங்கள் மக்களை விட்டு விலகி, பாசீசத்தை தனது வழியாக நடைமுறையாக கொள்கின்றது.

பாசீசத்தை புரிந்து கொண்டால் தான், நாம் சமூகத்தை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். பாசீசத்தை தவறாக புரிந்து கொள்ளாமல் இருப்பது எப்போதும் மிக முக்கியமானது. முதலில் ஒவ்வொரு ஜனநாயகமும் ஒரு சர்வாதிகாரம் தான். இதை தெளிவாக நாம் புரிந்து கொண்டாக வேண்டும். அதாவது முதலாளித்துவ (பூர்சுவா) ஜனநாயகத்தையும், முதலாளித்துவ (பூர்சுவா) சர்வாதிகாரத்தையும் எதிரெதிராக காட்டுவது, புரிந்து கொள்வது தவறானது. அரசு என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சி தான். ஒரு அரசு பற்றி, அந்த அரசை தெரிவு செய்யும் ஜனநாயகம் பற்றி, அந்த அரசு பின்பற்றும் கொள்கை பற்றிய மயக்கம் இருக்காத வரை தான், பாசீசத்தை செம்மையாக துல்லியமாக புரிந்து கொள்ளமுடியும். மக்கள் மேல் நிறுவும் ஆட்சி எந்த வடிவில் இருந்தாலும், அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி தான். அது ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசுக்கும் இது பொருந்தும். இங்கு பாட்டாளி வர்க்க அரசுக்கும் மற்றைய ஆட்சிக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு, எந்த வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது தான். இதில் துல்லியமான அடிப்படையான வேறுபாடு உண்டு. எந்த வர்க்கத்தைப் பலப்படுத்தி, எந்த வர்க்கத்தை ஒடுக்குவது என்பது பாட்டாளி வர்க்கமல்லாத அரசுகளின் அடிப்படையாகும. மாறாக பாட்டாளி வர்க்கம் தன்னை பலப்படுத்தியபடி, வர்க்கத்தை ஒழிப்பதை அடிப்படையாக கொள்கின்றது. அதாவது அனைத்து மக்களையும் உழைக்கும் மக்களாக்குவதன் மூலம், சுரண்டுவதை ஒழித்து வர்க்கங்களை இல்லாது ஒழிக்கின்றது. சுரண்டும் வர்க்க அரசு என்பது வர்க்கங்களின் நலன்களுக்காக உழைப்பது அல்லது அதைப் பாதுகாப்பது என்பதை அடிப்படையாக கொண்டது. அரசு என்பது சர்வாதிகாரத்தை அடிப்படையாகவும் ஆதாரமாக கொள்கின்றது.

பாசீசம் வர்க்கத்துக்கு அப்பாலான ஒன்று அல்ல. சுரண்டும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை மேலும் ஆழமாக்குவதே பாசீசம். அதாவது பல்வேறு வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் போராட்டத்தில், தொடர்ந்தும் சுரண்டலை தொடர்ந்து நடத்த முடியாத ஒரு நிலையில், பாசீச சர்வாதிகாரம் ஆட்சியில் அமர்த்தப்படுகின்றது. ஆனால் பாசீசம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமாக தன்னை ஒழுங்கமைக்கின்றது, ஆட்சிக்கு வருகின்றது. ஆனால் அதன் பண்பியல் சமூக கூறுகள் தொடங்கி, அதன் நோக்கம் ஒரே விதமாக வெளிப்படுகின்றது.

பாசீசத்தின் உருவாக்கதிற்கு எப்போதும் சுரண்டல் கட்டமைப்பு சார்ந்த, ஜனநாயக விரோதப் போக்கே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் உள்ளது. இதுவே பாசீசத்தின் மையமான மூல ஊற்றாக உள்ளது. ஆனால் பாசீசம் எப்போதும் உழைப்பவன் சுரண்டப்படுவதை மூடிமறைக்கின்றது. மாறாக வர்க்க கூட்டடைப் பற்றியும், ஆட்சிக்கு வந்தால் வர்க்க முரண்பாட்டை ஒழிக்கப்போவதாக மாயை ஏற்படுத்துகின்றது. மக்களை மயக்க நிலையில் தள்ளி, மந்தை நிலைக்கு தாழ்த்துகின்றது. தமது சொந்த பாசீசக் கோட்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள முடியாத இருட்டில் நிலை நிறுத்துகின்றது. கதம்பக் கூட்டுடன் கூடிய வெறித்தனமான தேசியவாத தத்துவம் இணைந்தே, பாசீசத்தை உருவாக்கின்றது. தேசியவாத வெறியை மற்றைய மக்கள் இனங்கள் மேல் கட்டமைக்கின்றது. மற்றயை இன மற்றும் இனவாத கட்சிகளின் கோட்பாடுகளின் மேல் அல்ல. ஆளும் வர்க்க கோட்பாடுகள் மேல் அல்ல. மக்களுக்கு எதிரான சுரண்டலை அடிப்படையாக கொண்டு, சுரண்டும் ஜனநாயக விரோத போக்குகளை எதிர்த்து, பாசீசம் தன்னை கட்டமைப்பதில்லை. மாறாக அதை மூடிமறைத்தபடி, அதை மேலும் ஆழமாக செய்வதை அடிப்படையாக கொண்டே மக்கள் கூட்டத்தை எப்போதும் எதிரியாக காண்கின்றது. ஆரம்பம் முதலே உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் சித்தாந்தங்களையும், அது சார்ந்த அமைப்புகளையும் வேட்டையாடுகின்றது. மக்கள் சுயமாக சிந்திக்க முடியாத நிலையை தகவமைத்து, அந்த நிலத்தில் தான் பாசீசம் செழித்து வளரத் தொடங்குகின்றது.

பாசீச இயக்கம் எப்போதும் யுத்தத்தின் போதே இலகுவாக தன்னை தகவமைக்கின்றது. சமூகங்களுக்கிடையான மக்கள் விரோத முரண்பாட்டை முன் தள்ளுவதன் மூலம், பாசீசம் தன்னைத் தான் அரங்கில் முன்நிறுத்துகின்றது. இந்த பாசீச முரண்பாட்டை யுத்த நிலைக்கு நகர்த்தும் போது, பாசீச சட்டங்கள், ஒழுக்கங்கள் இலகுவாக சமூக அங்கீகாரத்துக்கு உள்ளாகிவிடுகின்றது. முரண்பட்ட சமூகப் பிரிவுகளை ஒடுக்க உருவாகும் சட்டங்கள், படிப்படியாக இயல்பில் சொந்த மக்கள் கூட்டத்தின் கழுத்தில் கைவைத்து குரல்வளையை நெரித்தே கொன்றுவிடும் அளவுக்கு தன்னை பலப்படுத்தி விடுகின்றது. இந்த நிலைமை கனிந்து வர, தற்செயலான குறிப்பான செயல் தந்திரங்களில் முற்றாகச் சார்ந்து நிற்கின்றது. இங்கு முன் கூட்டியே திட்டமிட்ட ஒழுங்கமைப்பில் பாசீச கட்டமைப்புகள் சாத்தியமாவதில்லை. ஏனெனில் பாசீசம் மக்கள் விரோதத் தன்மை கொண்டமையால், தன்னை மூடிமறைத்தே அரங்கில் நுழைகின்றதே ஒழிய, முன் கூட்டியே ஒழுங்கமைந்த வடிவில் தன்னைத்தான் நிர்வாணப்படுத்திவிடுவதில்லை. பாசீசம் உருவாக்கம் குறிப்பாக ஸ்தாபன ரீதியான கட்டமைப்பை மட்டும் எப்போதும் அடிப்படையாக கொள்வதில்லை. மாறாக பொருளாதார நிலமை, உள்நாட்டு முரண்பாடுகள், அக புற நிலமைகள், தொழிலாளர் வர்க்கத்தின் வீச்சு என பல அம்சத்துடன் தான் பாசீசம் தன்னை தகவமைக்கின்றது. மக்கள் போராடும் தன்மையைப் பொறுத்து, பாசீச சர்வாதிகாரம் நிலைமைக்கு ஏற்ப வடிவங்களை மாற்றுகின்றது. தன்னை மூடிமறைக்கின்றது. கதம்பமாக தன்னை அலங்கரித்துக் கொள்கின்றது. தீவிரமான சமூகப் பிளவுகளை முன் தள்ளுகின்றது. அதில் தன்னை தூய்மையானவனாக, நேர்மையானவனாக காட்டிக் கொள்கின்றது. நடைமுறையில் உள்ள சமூகப் பண்பாட்டு கலாச்சாரத்தின் பிற்போக்கு கூறுகளை நுட்பமாகத் தெரிந்தெடுத்து அதை உயர்த்துகின்றது. அதை பாதுகாக்கப் போவதாக சபதம் ஏற்கின்றது.

பாசீசம் எப்போதும் மக்களின் அடிப்படையான அன்றாட பிரச்சனை மீது அக்கறையுள்ளதாக நடிக்க முடிகின்றது.

இதன் மூலம் மக்களை திரட்டமுடிகின்றது. மக்களின் நல் உணர்வுகளையும், தியாக உணர்வுகளையும் கூட பாசீசம் தனது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துகின்றது. ஆனால் எதார்த்தத்தில் பாசீசம் அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு இடத்திலும், மக்களின் அடிப்படையான தேவைகளையும் கோரிக்கைகளையும் அழிப்பதில் தீவிரமான செயல் தளத்தைக் கட்டமைக்கின்றது. மக்களை கவர்ச்சி காட்டி, அதில் அவர்களை வாழ வைத்து, அதில் இருந்து மீள முடியாத வகையில் செரித்து விடுவது பாசீசத்தின் அடிப்படையான பண்பாகும். அரசை கைப்பற்ற தீவிரமான உணர்ச்சிகரமான கோசங்களால் தன்னை அலங்கரிக்கும் அதே உள்ளடகத்தில், அதை வென்று எடுக்க மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பது அவசியம் என்பதை ஒரு பாசீச பண்பாடாகவே சமூகத்திடையே எடுத்துச் செல்லுகின்றனர். ஜனநாயகத்தின் அனைத்துவிதமான பண்புக் கூறுகளையும் பாசீசம் அழிக்கும் போது, மக்கள் நீதியின் பாலான நம்பிக்கையை முற்றாக இழந்துவிடுகின்றனர். சமூகத்தின் நீதி என்று எதுவும் இருப்பதில்லை. எல்லாவிதமான வழிகளிலும் எப்படியும் வாழ முடியும் என்ற நிலைப்பாடு, ஒரு பணக்காரக் கும்பலை அதிரடியாக உற்பத்தி செய்கின்றது. எப்படியும் வாழ முடியும் என்ற நிலையில், பாசீச கட்டமைப்புக்கு பணத்தை தாரை வார்ப்பதன் மூலம், தீடிர் பணக்கார கும்பல் ஒன்று உருவாகின்றது. நீதியான வாழ்வு மறுக்கப்படுகின்றது. மக்கள் நீதியின் பாலான நம்பிக்கைகளை இழந்து, எதையும் நியாயப்படுத்தும் நிலைக்கு சமூகத்தை இட்டுச் செல்லுகின்றது.

மக்கள் தாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை அறியாத இருட்டில் தள்ளிவிடுவதும், தாம் எப்படி இனி வாழப் போகின்றோம் என்பதை தெரியாத சூனியத்திலும் பாசீசம் செழித்தோங்குகின்றது. இது ஒட்டு மொத்தமாகவே ஜனநாயகத்தின் குரல்வளையை வெட்டிச் சாய்க்கின்றது. இதன் முதல் படியாக பாசீசம் ஆட்சியை கைப்பற்ற அரசை எதிர்க்கும் அதே நேரம், மற்றைய கட்சிகளையும் ஈவிரக்கமற்ற சமரசமற்ற அழித்தொழிப்பை நடத்துவதன் மூலம் தன்னை தூய்மையானதாக நிலை நாட்டமுனைகின்றது. அழித்தொழிப்பு சமூக இருப்பின் அடிப்படையான சமூகக் கோட்பாடாக பாசீசம் முன்தள்ளுகின்றது. எங்கும் எதிலும் அழித்தொழிப்பு மையக் கோசமாக, பாசீச அமைப்பின் நீடிப்பிற்கான உயிராகவும் மாறிவிடுகின்றது. இந்த அழித்தொழிப்பு இல்லாத எந்த நிலையிலும், பாசீச இயக்கத்தின் இருப்பு நீடிக்க முடியாது என்ற நிலை படிப்படியாக உருவாகிவிடுகின்றது. இது தன்னை மூடிமறைக்க கட்டுப்பாடற்ற இனவெறி பிடித்த, ஆதிக்க வெறி பிடித்த யுத்தத்தை முன் தள்ளுகின்றது. எதிரியை ஏன் நாம் எதிர்கின்றோம் என்ற அடிப்படையான அரசியல் காரணத்தை குழிதோண்டி புதைத்து விட்டு, இனவெறி பிடித்த ஆதிக்க வெறி பிடித்த யுத்தத்தை ஆணையில் வைக்கின்றனர். மக்களின் அடிப்படையான அரசியல் அபிலாசைகளை மறுத்து நிற்கும் பாசீசம், மாறாக மற்றைய மக்கள் கூட்டம் மீதான ஆதிக்க வெறியை அரசியலாக்கிவிடுகின்றனர். இதன் மூலம் தன்னைப் பலப்படுத்தவும் நீடிக்கவும் கடிவாளம் இடுகின்றனர்.

தனது பாசீச கட்டமைப்பை நீடிக்கவும், நிலைக்கவும் சலுகைகளை ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. ஒரு லும்பன் கூட்டத்தை உருவாக்கி, சமூக இயக்கத்தை கண்காணிக்கும் வடிவில் கட்டமைக்கின்றது. பாசீசம் தன்னைச் சுற்றி தனது கட்டமைப்பில் தன்னுடன் இணைந்து நிற்பவனுக்கே சலுகைகளை வாரி வழங்குகின்றது. இதைச் சுற்றி பெரும்பாலான மக்கள் தம்மையும், தமது தேவையையும் பூர்த்தி செய்வது நிகழ்கின்றது. எதைச் செய்தாலும் பாசீசத்தை நியாப்படுத்துவது ஒரு நிபந்தனையாக மாறிவிடுகின்றது. இது அடிப்படையில் நியாயப்படுத்துவதை கடமையாகவும், அடிப்படையான தேசியக் கொள்கையாகவும் மாற்றி விடுகின்றது. மக்களின் மந்தைத்தனத்தை இதற்கு சாதகமாக்கிவிடுகின்றது. தன்னைச் சுற்றி பொறுக்கி வாழும் லும்பன் கும்பலை அடிப்படையாக கொண்டு, பாசீசத்தைக் கட்டமைப்பதுடன், மக்களை கண்காணிக்கும் அமைப்பாக மாற்றுகின்றது.

அத்துடன் பாசீசம் தனது கட்டுப்பாட்டு பிரதேசம் தொடங்கி மற்றைய பிரதேசங்கள் எங்கும் தகவல் தொழில் நுட்பத்தினை (மீடியாக்களை), தனது பாசீச பிரச்சார வடிவமாக்கிவிடுகின்றது. பத்திரிகைகள் பாசீசத்தின் தூண்களாகி விடுகின்றது. பத்திரிகை அமைப்பு பாசீசத்தை நியாயப்படுத்தும் பினாமியத்தை, தனது சுதந்திரமான வெளிப்பாடாக பீற்றுவது பாசீச பண்பாகி விடுகின்றது. முற்றாக மாற்று கருத்து தளத்தை இல்லாததாக்குகின்றது. மக்களை முரண்பாட்டின் அடிப்படையில் சிந்திக்க துண்டும் மாற்றுக் கருத்துகள் முற்றாக இல்லாது ஒழிக்கின்றது. பாசீசத்தை நியாயப்படுத்தும் ஒரேயொரு செய்திகளும், சமூக கண்ணோட்டமும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றது. இதற்கு அப்பால் உள்ளவைகளை முற்றாக பாசீசம் அழிக்கின்றது. எங்கும் எதிலும் பாசீசம் குடிகொள்கின்றது. இந்த கட்டமைப்பு பொறுக்கி வாழும் லும்பன் கும்பல் ஒன்றால் சீராகவும் ஒழுங்காகவும் நிர்வகிக்கப்படுகின்றது. இது இயன்ற எல்லை வரை பொறுக்கி வாழும், தனது சமூக அடிப்படைக்கு தேவையான நிதியை மக்களிடம் இருந்து பகற் கொள்ளை அடிக்கின்றது. சமூகத்தை சுரண்டும் மூலதனத்துக்கு வாலாட்டி நக்கும் இந்த பாசீசக் கும்பல், மக்களை நிறுவன ரீதியாகவே சுரண்டுவதில் தன்னை ஒழுங்கமைக்கின்றது. எங்கும் எதிலும் சுரண்டலை அடிப்படையான கட்டமைப்பாக மாற்றிவிடுகின்றது. செல்வத்தை திரட்டும் போக்கு அதிகரிக்கும் போது, பாசீசம் அதன் வளர்ச்சி படியில் எகிறிச் செல்லுகின்றது. பணத்தின் திரட்டல் உயர்ச்சியடைகின்ற போது, அதை சார்ந்து பொறுக்கி வாழும் ஒரு கும்பலும் வளர்ச்சி உறுகின்றது. இது பாசீச சித்தாந்தத்தால் தன்னை ஒழுங்கமைத்து ஒரு சமூக நிறுவனமாகின்றது.

பாசீசம் மக்கள் மேல் ஒரு பயங்கரவாதத்தை கட்டமைத்து தொடரான அச்சுறுத்தல் மேல் தன்னை நிலைநிறுத்தி நீடிக்கின்றது. எங்கும் எதிலும் மிரட்டல் அடிப்படையான சமூக ஒழுங்கை முன்வைக்கின்றது. பயங்கரவாதம் என்பது சமூக உட்கூறில் உயிருள்ள ஒரு பிண்டமாகவே தொடருகின்றது. இது வரைமுறையற்ற அச்சுறுத்தலை நிலைநிறுத்துகின்றது. இந்த பயங்கரவாதத்தின் நீடித்த நிலைத்த தன்மையை, செயல் உள்ள இயக்கமாக மாற்ற, தனக்கேயுரிய லும்பன் கும்பலை சமூகத்தில் இருந்து எப்போதும் சரியாக இனம் கண்டு கொண்டு அணிதிரட்டுகின்றது. பாசீசம் தன்னையும் தனது கட்டமைப்பையும் பாதுகாக்க, சமூக உழைப்புடன் ஈடுபடாத இளம் வயதினரை அதிகம் சாhந்து நிற்கின்றது. மாற்றுக் கருத்து எதையும் தெரிந்து கொள்ளாத மந்தைச் சமூகத்தை இதற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. இளம் வயது சிறுவர் சிறுமிகளின் அடித்தளத்தில் பாசீசம் உறுதியாக தன் கால்களை ஊன்றுகின்றது. உழைப்பு பற்றி தெரிந்தேயிராத இந்த சிறுவர்கள் சிறுமிகள், உழைப்பவனின் உழைப்பை சூறையாடுவதில் தலை சிறந்த கொள்ளைக்காரராக மாறிவிடுகின்றனர். உழைப்பவனை இழிவாக கருதும் சமூக அடிப்படையை சுவீகரிக்கும் இந்த லும்பன்கள், உழைப்பவனை எப்படியும் நடத்தும் பண்பாடு உயிருள்ளதாகவிடுகின்றது. பாசீசக் கட்டமைப்பில் சமூக இழிவே உழைப்பவனை அலங்கரிக்கின்றது. உழைப்பனை சமூகத்தின் ஒரு அங்கமாகக் கூட பாசீசம் கருத மறுக்கின்றது. சமூக உறவுகளைக் கூட பாசீசம் உழைப்பவனிடம் இருந்து எட்டி உதைக்கின்றது. உழைப்பவனிடம் பொறுக்கி வாழ்வதும், சூறையாடி வாழ்வதும் இந்த சிறுவர்களுக்கு களிப்பூட்டக் கூடிய ஒரு வக்கிரமான கவர்ச்சிகரமான பொழுதுபோக்காக மாறிவிடுகின்றது. அதிக செல்வத்தை திரட்டிக் கொடுப்பதன் மூலம், நம்பகத் தன்மையை பாசீசம் அவர்களுக்கு பரிசளிக்கின்றது. மக்களை பாசீச ஒழுங்கமைப்பில் நீடிக்க வைக்கவும், அதற்குள் சிந்திக்க வைக்கவும், செயற்கையான சமூகக் கட்டமைப்புக்களை உருவாக்குகின்றனர். பாசீசம் சமுதாயத்தில் வறுமையை செயற்கையாக உருவாக்கிவிடுகின்றது. உணவுக்கு வழியற்று கையேந்தும் நிலையை உருவாக்கி, ஏழைக் குழந்தைகளை உள் வாங்குகின்றது. தாய் தந்தைகளை எதிரியிடமும், சொந்த பாசீச கட்டமைப்பிலும் கொன்று விட்ட நிலையில், அநாதைகளாகும் அப்பாவிக் குழந்தைகளை பாசீசம் அபகரிக்கின்றது. இந்த குழந்தைகளை பாசீசத்தின் நிலையான தூண்களாக மாற்றி விடுகின்றனர். பாசீசக் கட்டமைப்பின் ஆரம்ப வடிவங்கள், எப்போதும் அராஜகத்தை ஆதாரமாக அடிப்படையாகவும் கொள்கின்றது. எந்த சட்ட ஒழுங்கையும் அது தனக்கு தானே மறுக்கின்றது. மக்கள் மேல் கடுமையான அராஜக ஒடுக்குமுறையை வரைமுறையின்றி கையாளுகின்றது. தனது பாசீச சட்டத்தில் இருந்து சொந்த அணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கின்றது. இந்த அராஜக லும்பன் கும்பலின் சித்தாந்த செயல்பாடுகள் ஆரம்பத்தில், இருக்கும் எந்த சமூக அமைப்புக்கும் உட்பட்டவை அல்ல. சலுகையுடன் கூடிய பாசீச அமைப்பு, மக்களுக்கு எதிராக எதையும் எப்படியும் கையாளும் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டது. மக்களை நாயிலும் கீழானவர்களாக இழிவுபடுத்துகின்றனர்.

இந்த லும்பன் பாசீசக் கும்பல் தமக்கு இடையில் உட்கட்சி ஜனநாயகத்தை முற்றாக மறுதலிக்கின்றது. இங்கு அதிகாரத்தின் வடிவம் சார்ந்து, இராணுவ ஒழுங்கமைப்பை அரசியல் வடிவமாக்குகின்றது. ஆயுதத்தை அரசியலில் ஆணையாக்கி அதை வடிவமைக்கின்றது. இயக்கத்தின் கட்டமைப்பு இராணுவ வாதம் சார்ந்த ஒன்றாக நீடிக்கின்றது. இங்கு துப்பாக்கி குண்டுகளை ஆணையில் வைக்கின்றது. எந்த சட்ட ஒழுங்குக்கும் உட்படாத இயக்க உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக செயல்படுவது மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. மற்றைய எல்லா நிலையிலும் எதையும் எப்படியும் செய்து கொள்ள அனுமதிக்கின்றது. சொந்த அணி உள்ளிட்ட வெளியில் தமது பாசீச கட்டமைப்பை நியாயப்படுத்தக் கூடிய அணியை விலைக்கு வாங்குகின்றது. இதற்கு அடிப்படையாக போலியான பாராட்டு நிகழ்ச்சிகளை பாசீசம் கட்டமைக்கின்றது. எங்கும் எப்போதும் பொய்யும் புரட்டும், கவர்ச்சியும், போலிப் பாராட்டுகளும் பாசீசத்தின் ஒழுங்கு அமைப்புக்கும், அதன் நீடிப்புக்கும் ஆதாரமான அடிப்படையான நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

சமூகத்தை கட்டுப்படுத்தவும், அடக்கி ஆளவும் தனது அதிகாரத்தை உயர்ந்த பட்சமாக ஆணையில் வைக்கின்றது. பாசீசம் அதிகாரத்தை தலைக்கு மேல் உயரமாகவே குவித்துவிடுகின்றது. இதன் மூலம் தனது வர்க்க தன்மையை கதம்பக் கோட்பாட்டில் இருந்து, தெளிவாக பெரும் மூலதனத்தின் நலன்களை வெளிப்படுத்த தொடங்குகின்றது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக தன்னை ஒரு சீரான கோட்பாட்டு ரீதியான நடைமுறை சார்ந்த அமைப்பாக காட்ட முனைகின்றது. இது குட்டிபூர்சுவா வர்க்க நலனை பூர்த்தி செய்யும் தகுதி தனக்கு உண்டு என்று நிறுவ முனைகின்றது. ஆனால் இது கானல் நீராகவே எப்போதும் உள்ளதை அப்படியே நடைமுறை அனுபவம் இலகுவாக அம்பலப்படுத்தி விடுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களையும் அனுசரித்து செல்லும் போக்கு சார்ந்த எந்தக் கோட்பாடும் பாசீசத்திடம் இருப்பதில்லை என்பது அம்பலமாகத் தொடங்கிவிடுகின்றது.

தன்னை மூடிமறைத்துக் கொள்ள, பாசீசம் சுரண்டும் வர்க்க பிரதிநிதிகளுக்கிடையில் பகைமையை களைந்து ஒரே குடையின் கொண்டு வர முயலும் போதும், உண்மையில் ஆழமான பகைமையே அதிகரிக்கின்றது. இது இடைவிடாது முரண்பாட்டை உற்பத்தி செய்கின்றது. இது இடைவிடாத ஆயுதம் ஏந்திய தனிக் குழுக்களை உருவாக்கின்றது. லும்பன் வாழ்வின் கட்டுப்பாடற்ற சமூகப் போக்கு, தவிர்க்க முடியாமல் லும்பன் கண்ணோட்டம் சார்ந்த குழுக்களை, சமூக முரண்பாடுகள் சார்ந்து தொடர்ச்சியாக உற்பத்தி செய்கின்றது. இது ஆயுதம் ஏந்திய எல்லை வரை விரிகின்றது. இது எதிரிக்கு நல்ல வாய்பை வழங்குகின்றது. வர்க்க அமைப்பாக சமூகச் சுரண்டல் உள்ளதால், எத்தனை கட்சிகளையும் குழுக்களையும் அழித்தாலும் அவை புத்துயிர் பெறுகின்றது. வர்க்க முரண்பாடுகள் தவிர்க்க முடியாது மாற்றுக் கருத்துக்கான இயங்கியல் போக்காகின்றது. மக்கள் விரோத முரண்பாடுகளும், யுத்தமும் இன்றி பாசீசம் நீடிக்க முடியாத ஒரு நிலையை அடையும் போது, இவற்றை திட்டமிட்டு உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக முனைப்புக் கொள்கின்றது. பாசீசம் யுத்தத்ததை அடிப்படையாகவும், அடித்தளமாகவும் கொண்டு செயல்படுவதால், தேசிய பொருளாதாரத்தை அழித்து முற்றாக நாசமாக்குகின்றது. இது இன்றைய உலகநிலையில், மீள முடியாத அடிமைத்தனத்தை சமூகக் கூறாக்கிவிடுகின்றது. தேசங் கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவலை, பாசீசம் தனக்கு சாதகமாக வளைத்துப் போடுகின்றது. அவர்களின் கைக்கூலிகளாக தம்மை தகவமைத்து அதுவாகி விடுகின்றனர். ஏகாதிபத்தியம் ஆழமாக சமூகத்தில் ஊடுருவவும், தேசியப் பண்புகளை உட்செரித்து அழிக்கவும் பாசீசம் இயன்றவரை தன்னை தனது நடவடிக்கைளால் தகவமைக்கின்றது.

பாசீச கட்டமைப்பில் இருந்து மக்கள் மீட்டு எடுப்பது என்பது மிகவும் கடினமானதும், நுட்பமானதுமாகும். பாசீசம் பற்றிய தவறான மதிப்பீடு குட்டிபூர்சுவா வர்க்கத்தின் மத்தியில் ஊசலாட்டத்தையும், சோர்வையும் சீதனமாக்குகின்றது. செயலற்ற தன்மைக்கு அடிக்கால் போடுகின்றது. பாசீசம் பற்றிய தவறான மதிப்பீடுகள் எப்போதும், பாசீசத்துடன் சமரசம் செய்யும் அடிப்படைக் கண்ணோட்டத்தில் இருந்து பிறக்கின்றது. இது பரஸ்பரம் தகவமைவதால், பாசீசம் அல்லாத சக்திகளின் சோரம் போதல் வீச்சாக தொடரும். தளத்தில் ஒரு எதிரி இருக்கும் பட்சத்தில், அவனுடன் சேர்ந்து நிற்பதன் மூலமும் சீரழிவு சமாந்தரமாக கட்டமைக்கப்படுகின்றது. பாசீசத்தை வெல்ல முடியாத ஒன்றாகவும் கூட குட்டிபூர்சுவா மனபாங்கு கட்டமைக்கின்றது. பாசீசத்தின் பயங்கரவாதத்தால் பீதியுற்ற பிரமைகள், எங்கும் எதிலும் புகுந்துவிடுகின்றது. சமூக இயக்கமே பீதியில் உறைந்து போகின்றது. பாசீசம் தனது அதிகாரத்தை நிலைநாட்ட உருவாக்கும் அடிப்படையான அரசியல் நிலைப்பாடு எப்போதும், சமூகம் செயலற்ற பீதியில் தத்தளிப்பதை உறுதி செய்கின்றது. இதை வெற்றிகரமாக உருவாக்கிவிடும் போது, பாசீசம் வெற்றி பெற்றுவிடுகின்றது. பாசீசம் பற்றி தவறான சித்தரிப்பு விதைக்கப்பட்ட நிலையில், செயலற்ற தன்மைக்கு அடிகால் இடப்படுகின்றது. பாசீசத்துக்கு எதிரான அரசியல் உணர்வுள்ள கட்டமைப்பின் அவசியம் நிராகரிப்பதில் இருந்தே, பொதுவான மாற்றுச் சிந்தனைத் தளம் தன்னை தகவமைக்கின்றது. இதன் மூலம் பாசீசத்துடன் அக்கம்பக்கமாக கூடி வாழ்ந்து விட முடியும் என்ற நம்புகின்றது.

பாசீசத்தை எதிர் கொண்டு போராடுவதற்கு எதிர்நீச்சல் அவசியமானது, நிபந்தனையானது. பாசீசத்தின் பொதுச் சூழலில் அவற்றை எதிர்கொள்ள, பாசீசத்துக்கும் மக்களுக்கும் இடையிலான அடிப்படை சமூகத் தேவைகளை இனம் பிரித்து அதை அகலப்படுத்த வேண்டும். பாசீசத்தின் மக்கள் விரோத முரண்பாடுகளை அகலமாக்க வேண்டும். பாசீச அழித்தொழிப்பு சமூக நடைமுறையாகவே உள்ள நிலையில், பாசீசத்தின் பிரதான முரண்பாடாக காட்டும் அடிப்படை முரண்பாட்டில் மக்கள் நலன்களை உயர்த்தி அதை பாசீசத்துக்கு எதிராக மாற்றவேண்டும். அதாவது மக்களுக்கு ஒரு எதிரி இருக்கும் பட்சத்தில், அந்த எதிரி பாசீசத்தின் எதிரியாகவும் இருக்கும் பட்சத்தில், மக்களின் அடிப்படை நலனில் இருந்த பாசீசத்தின் நலனை பிரித்து முரண்பாட்டை சமூக மயமாக்க வேண்டும். பாசீசத்தின் நலனும், பாசீசத்துக்கு உட்பட்டுள்ள மக்களின் நலனும் எப்போதும் எங்கும் ஒன்றாக இருப்பதில்லை.

பாசீசம் இருக்கின்ற சமூகக் கட்டமைப்பை தனக்கு இசைவாக தகவமைக்கின்றது. ஜனநாயகக் கோரிக்கை எதையும் இதற்குள் புகுத்த மறுக்கின்றது. இதை நாம் எப்போதும் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமானதாகும். இதில் இருந்தே பாசீசத்தை வேர் அறுக்கும் கண்ணியை நடவேண்டும். பாசீசத்துக்கு எதிரான எதிர்ப்பை, அரசியல் உணர்வுடன் செய்ய வைப்பது அனைத்தையும் விட முக்கியமானதும், முதன்மையானதுமாகும். இங்கு உணர்வு என்பது எப்போதும் தெளிவாக அரசியல் சார்ந்தாக இருக்க வேண்டும். எப்போதும் அரசியல் உணர்வற்ற செயல்பாடுகள், பாசீசத்தை செழுமையாக வளர்ப்பதாகவே மாறும். பாசீசத்துக்கு எதிராக தன்னிச்சையான மக்கள் போராட்டம் நடக்கும் போது, பாசீசத்தை சார்ந்து நிற்கும் சக்திகள் தடுமாறுவதையும், பாசீச கொள்கை மேலான சந்தேகம் அதிகமாக எப்போதும் கேள்விக்குள்ளாகின்றது. இதை எப்போதும் சாதகமாக கொண்டு, அகலப்படுத்த வேண்டும். பாசீசம் அதிகாரத்துக்கு வந்த பின்பு அழித்தொழிப்பு ஒரு பாசீச சமூக நடைமுறையாக உள்ள ஒரு நிலையில், அவர்களின் செயல்பாடுகளுடன் நேரடியாக முட்டி மோதுவதன் மூலம் தனிமைப்படுதல், இனம் காணப்படுத்தல் அதிகரிக்கும். மாறாக மக்களின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புடையதும் பாசீசத்துடனான முரண்பாட்டையும் மிக தெளிவாக அடையாளம் கண்டு, அதை அகலப்படுத்துவதன் மூலம் பாசீசக் கட்டமைப்பில் விரிச்சலை உருவாக்க முடியும்.

பாசீச கட்டமைப்பில் முரண்பாடு கொண்ட மக்கள் கூட்டம், புரட்சிகரமான மாற்று அடிப்படை இன்றி தம்மை ஒரு நாளும் தாமாக வெளிப்படுத்த மாட்டார்கள். பாசீசத்துடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளதாக நடிப்பர். இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டு, அரசியல் ரீதியாக இதை அணுக வேண்டும். மக்கள் கூட்டம் பாசீசத்தை புகழும் போது, அங்கு பாசீசக் கட்டமைப்பு உருவாக்கி விட்ட போலியான புகழ்ச்சியான அதே கண்ணோட்டத்தில் தான் பாசீசத்தையும் அணுகுகின்றனர். இங்கு தம்மைத் தாமாக வெளிப்படுத்தி இனம் காட்டமாட்டார்கள். கடுமையான கண்காணிப்புடன் கூடிய பாசீச கட்டமைப்பில், மக்கள் அப்படித் தான் இருப்பார்கள். எங்கும் ஒரு மயான அமைதியுடன் கூடிய மௌனம் நீடிக்கும். இதை நாம் நிச்சயமாக புரிந்து கொள்வது அவசியமானது, அடிப்படையானது.

இதை புரிந்து கொள்ளாத செயலற்ற தன்மையில் இருந்து, பிதற்றுவதால் எதுவும் நடக்காது. இந்த நிலையிலும் மோதல்களும் முரண்பாடுகளும் பாசீச அமைப்புகளில் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. ஆனால் பாசீசம் தனது சொந்த முரண்பாட்டால் ஒரு நாளும் தானாக சிதைந்துவிடுவதில்லை. ஏனெனில் அதன் கட்டமைப்பு பாசீச வழிகளில் உருவானதால், தனது சொந்த முரண்பாடுகளை அதே வழியில் எதிர் கொள்ளும் திறனை அது கொண்டுள்ளது. இலகுவாகவே, அதை இயல்பான பாசீச வழிகளில் இல்லாதாக்கிவிடுகின்றது. இங்கு எந்த கூச்சலும், அதிர்வும் நடப்பதில்லை. சமூக முரண்பாடுகள் தானாக ஒடுக்கு முறையை தீர்க்கும் என்ற கற்பனை போலியானது. அதே போல் அவர்களின் ஆதிக்கத்தில் உள்ள மக்கள், ஒரே நாளில் பாசித்துக்கு எதிராக வந்துவிட மாட்டார்கள். மாற்று அரசியல் வழி சரியாக பாசீசக் கட்டமைப்புக்குள் ஊடுருவி பிளக்காத வரை, மக்கள் கூட்டம் பாசீசத்துக்கு எதிராக சுட்டு விரலைக் கூடா நீட்டாது. மாறாக தன்னை அதனுடன் இணைந்து இருப்பதாக பாசாங்கு செய்தும், போலியான புகழ்ச்சிகளை அள்ளியும் வழங்கும். இது மக்கள் தமது இருப்பிற்கான ஒரு வழியாக காண்கின்றனர்.

பாசீசத்தில் ஏற்படும் முரண்பாட்டை அகலப்படுத்த வேண்டும். இது பாசீச அமைப்பின் உள் கட்டமைப்பில், மக்கள் சார்ந்த அன்றாட வாழ்வியல் அடிப்படை விடையத்தில் உருவாக்கப்பட வேண்டும். பாசீச அரசு இயந்திரம் வர்க்க உறவுகளில் இருந்து கட்டமைக்கப்படுகின்றது என்பதை புரிந்து கொண்டால், பாசீசம் நிரந்தரமானதோ, நிலையானதோ, நீடிக்ககூடியவையோ அல்ல என்பதை புரிந்து கொள்ளமுடியும். வர்க்க உறவுகள் பாசீச கட்டமைப்பில் எப்போதும் எதிர்மறையில் முரண்பாட்டை தோற்றுவித்த வண்ணமே இருக்கும். இதை சரியாகவும், நுட்பமாகவும் புரிந்து கொண்டு பிளவுகளை ஆழமாக்க வேண்டும். பாசீசத்தைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் எப்போதும், இந்த வர்க்க உறவுகளில் இருந்து விலகியிருப்பவர்கள் அல்ல. அதற்குள் தான் இருப்பதால், மக்கள் நலன்களை முன்நிறுத்துவதன் மூலம், பாசீச கட்டமைப்பிலும் வெடிப்புகளையும் ஏற்படுத்த முடியும். பாசித்தின் மேல் உள்ள முரண்பாட்டை சரியாக பிளப்பதன் மூலம், பாசீசத்துக்கு எதிராக செயல்படுவதை அத்தியவசியமாகும்.

பாசீசத்தின் இந்த சமூக அடிப்படை புலிகளுக்கும் அப்பட்டமாக அப்படியே ஒவ்வொரு விடயத்திலும் பொருந்தும். இதை சிலர் மறுக்கின்றனர். குட்டிபூர்சுவா வர்க்கத்தின் ஜனநாயக இயக்கமாக புலிகள் உள்ளனர் என்பது முற்றாகவே தவறானது. குட்டிபூர்சுவா வர்க்கத்தின் பிரதிநிதியாக புலிகள் இருந்தாலும், புலிகளின் அரசியல் நோக்கம் இதுவல்ல. இது கூட பாசீசத்தின் முக்கியமான அடிப்படைப் பண்பாகும். புலிகள் இன்றும் குட்டிப் பூர்சுவா அடித்தளத்தில் இருந்தே ஆட்களை கவர்ந்து இழுக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் குட்டிப் பூர்சுவா வர்க்கத்தின் ஜனநாயகப் புரட்சியை, புலிகள் ஒரு துளி தன்னும் தனது அரசியலாக வரிந்து கொள்ளவில்லை. மாறாக இருக்கும் தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில், பூர்சுவா ஜனநாயக பண்பியலின் கூறுகளைக் கூட ஒழித்துக் கட்டியுள்ளனர். இதன் முன்னைய நிலைக்கு கூட, புலிகளால் மீள மீட்க முடியாது. பொருளாதார கட்டமைப்பில் கூட இதுவே நிகழ்கின்றது. தேசிய உற்பத்தியை முற்றாக ஒழித்துக் கட்டுகின்றனர். தேசிய வளங்களை ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கின்றனர். இதை பொதுவான சமூக கட்டமைப்பில் செய்துவிட முடியாது என்பது, அனைவரும் நன்கு அறிந்ததே. பாசீச சமூக கட்டமைப்பு மூலம் தான் அனைத்தும் நிறைவு செய்யப்படுகின்றது. இதை புலிகள் எப்படி சாதிக்கின்றனர். குறுந் தேசிய பாசீச வெறியை முன்தள்ளி, குறுந் தேசிய யுத்தம் பற்றி பீற்றிக் கொண்டே, முற்று முழுதாகவே தேசிய வளங்கள் அதன் ஜனநாயக கூறுகளை எல்லாம் அழித்து விடுகின்றனர்.

பாசீசத்தை அடிப்படையாக கொண்ட நாசிக்களின் தலைவரான கிட்லரின் தோழரான முக்கிய கிழட்டு நாய் கோயரிங், மக்களின் அடிப்படை உரிமைகளை எப்படி பறிப்பது என்பதை வழிகாட்டினான் அவன் அதை அழகாகவே "தலைவர்கள் தாம் விரும்பியபடியெல்லாம் மக்களை ஆட்டுவிக்கமுடியும்... நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நாம் தாக்கப்படுகிறோம் என்ற சொல்லுங்கள். சமாதானம் பேசுபவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றும், நாட்டை ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும் தூற்றுங்கள். இந்தச் சூத்திரம் எந்த நாட்டிலும் வேலை செய்யும்" என்றான். இது புலிகளுக்கு மட்டுமல்ல, இந்தியா இந்து பாசிட்டுகளுக்கும், சியோனிச இஸ்ரேலுக்கும், ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் கூட பொருந்தும். இதைத் தான் இவர்கள் தத்தம் அரசியல் ஆணையில் எப்போதும் வைக்கின்றனர்.

புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல

புலிகள் இதன் அனைத்துக் கூறுகளையும் தமது அரசியலாக, பாசீச கட்டமைப்பில் வரிந்துள்ளனர். பொய்யும் புரட்டும் அனைத்திலும் அவர்களின் மூலமாக உள்ளது. எதிரியை பற்றி வாய் கிழிய கூறிக் கொள்வதன் மூலம், ஜனநாயகத்தை பறித்தெடுக்கின்றனர். மாற்றுச் சிந்தனையை முன் வைத்து, தேசத்தின் அடிப்படை பொருளாதார நலன்களைப் பற்றி பேசும் போது, நாட்டுபற்று அற்ற துரோகி என முத்திரை குத்துகின்றனர். நாசிகளைப் போல் அவர்களை கொன்று அழிக்கின்றனர்.. புலித் தலைவர்கள் தாம் விரும்பியதை எல்லாம் செய்கின்றார்கள் என்றால், அங்கு கிட்லரின் பாசீச கட்டமைப்பை தமிழ் மக்கள் மேல் நிறுவிய, ஒரு சர்வாதிகார நிலையில் தான் சாத்தியமானது.

புலிகளின் பாசீச சித்தாந்தம் மிகவும் உறுதியானதும், முழுமையானதும், சீரானதுமாக, முன் கூட்டியே திட்டமிட்ட ஒரு கோட்பாடு அல்ல. மாறாக இந்த தத்துவம் பச்சோந்தித் தனமானது. முன் கூட்டியே அனைத்தையும், குறித்த திட்டத்துக்கு அமைய உருவாக்கியதாக புலிப் பாசீசம் காட்ட முனைகின்றது. ஆனால் நேரத்துக்கும் நிலைமைக்கு இசைவாகவே, தனது நோக்கை அடைவதில் பாசீசம் தன்னை தகவமைக்கின்றது. நிலைமைகளுக்கு ஏற்ப தனது பச்சோந்தித் தனத்தை பயன்படுத்தி, அதை தான் முன் கூட்டியே திட்டமிட்டதாக காட்ட முனைகின்றது. இதை தனிமனிதனின் உன்னதமான அறிவியல் குணங்களின் சிறப்பாக காட்டி "மேதகு" களை தலை மேல் நிறுத்துகின்றனர். கொலை, கொள்ளை என்று சமூக அழித்தொழிப்புகளில், மிகவும் முன் கூட்டியே திட்டமிட்ட அழித்தொழிக்கும் பண்பை பாசீசம் வெளிப்படுத்துகின்றது என்பது உண்மையே. ஆக்கத்திற்கான முயற்சியில் எந்தவிதமான முன் கூட்டிய திடட்மிடுதலும் பாசீசத்தில் கிடையாது. பச்சோந்தி போன்ற நிலையில் நின்று, சமூக அடிப்படைகளை அபகரித்து தலைக்கு மேல் கொண்டு சென்று தமது மதி நுட்பமான செயலாக காட்ட முனைகின்றது.

இதற்கு அடிப்படையாக பொய்யும், புரட்டும் புலிகளில் ஊறிப்போன ஒரு பாசீசப் பண்பாகி விட்டது. எதையும் எப்படி மறுப்பார்கள். அதை எப்படியும் எந்த விதத்திலும் புரட்டுவார்கள். இது அன்றாடம் இயல்பு வாழ்வில் சர்வசாதாரணமாக மக்கள் காணும் அடிப்படை உண்மையாக நீடிக்கின்றது. இதற்கு ஆதாரம் எதுவும் அவசியமற்றவை. இதை யுத்ததந்திரம் என்று அப்பட்டமாகவே நியாயப்படுத்துகின்றனர். போராட்ட காலத்தில் மக்களை மந்தைகளாக அடிமையாக வைத்திருப்பது, அவசியமுள்ளதாக கூறி நியாயப்படுத்தப்படுகின்றது. எல்லா விதமான மக்கள் சார்ந்த அமைப்புகளையும் தமது அமைப்புகளாக மாற்றிவிடுகின்றனர். அங்கு இருந்த கொஞ்ச நஞ்ச மனிதப் பண்பு சார்ந்த செயல்பாடுகளைக் கூட இல்லாதாக்கி விடுகின்றனர். தமது புகழ்களையும், தமது பாசீச வக்கிரங்களையும் ஆதரித்து அறிக்கைவிடும் றப்பர் முத்திரையாக மாற்றிவிடுகின்றனர். தனிப்பட்ட சொத்துரிமை சார்ந்த நல்ல லாபம் தரும் தொழில்களையும், நிலையான வளங்களையும் கூட அபகரித்து விடுகின்றனர். எங்கும் பாசீசம் தனது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி அடக்கிவைக்கின்றது. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாலாட்டி குலைத்தபடி, தரகராக செயல்பட எல்லா விதமான சமூக அழித்தொழிப்பையும் செய்கின்றனர். இதை சாதிக்க பெரும் நிதி மூலதனத்தை திரட்டுகின்றனர். வரியாகவும், மறு தளத்தில் சொத்தையும் நிதியையும் அபகரிப்பதன் மூலமும், சந்தையை தான் மட்டும் வைத்திருப்பதன் மூலமும், ஏழை மக்களுக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் சமூக உதவிகளின் ஒரு பகுதியை கைப்பற்றுவதன் மூலமும், கூலியில் ஒருபகுதியை அபகரிப்பதன் மூலமும் எங்கும் எதிலும் நிதி மூலதனத்தை, புலிப் பாசிஸ்ட்டுகள் பாசீச வழிகளில் அடாத்தாக திரட்டுகின்றனர்.

பாசீசத்துக்கும் நிதி மூலதனத்துக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாத பண்புகளைக் கொண்டது. "பாசீசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்" என பாசித்ததை டிமிட்ரோவ் வரையறை செய்த இந்த தீர்மானத்தை சர்வதேச கம்யூனிச அகிலம் அங்கீகரித்தது. இது மேற்கு நாட்டில் ஏற்படும் பாசீசத்தை சிறப்பாக தோலுரிக்கின்றது என்றாலும் இது புலிகளுக்கும் பொருந்திவிடுகின்றது. இங்கு புலிகள் இந்த மேற்கு நாடுகளின் கைக்கூலிகளாக இருப்பதன் மூலம், பாசீசத்தின் சர்வதேச இணைப்பாகவே மலர்கின்றனர். ஏகாதிபத்திய சுரண்டல், சூறையாடலுக்கு கம்பளம் விரிந்து அதை பாதுகாக்கும் பாசீசத்தை, புலிகளின் வழிகளில் சதிராட்டம் போடுகின்றனர். அதாவது புலிகள் குறுந்தேசிய இனவெறியை மிகவும் பிற்போக்கான வடிவில் கையாள்வதுடன், மக்களை கொள்ளையடிப்பதன் மூலம், ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கான செயல்களுக்கு துணையாக புலிகள் நிற்கின்றனர்.

இந்த துணை போதல் என்பது இன்னமும் மறைபொருளாக இருக்கின்றது. அப்பட்டமான கைக்கூலிகளாக மாறுவது இன்னமும் முழுமையாக அம்பலமாகிவிடவில்லை. இதனால் பலர் இதை நிராகரிக்கவும், மறுத்து கருத்துரைக்கவும், இதை வெறும் யூகம் என்ற கூறி பாசீசத்தை மூடிமறைக்கின்றனர். இது அம்பலமாகாது மறை பொருளாக நீடிப்பதற்கு யுத்தம் ஒரு அடிப்படையான காரணம். ஏகாதிபத்திய விசுவாசமான இரண்டு சக்திகளிடையே நடக்கும் யுத்தத்தில் சட்டபூர்வமான பிரிவை ஏகாதிபத்தியங்கள் சார்ந்து நிற்பதால், இந்த மயக்கம் குழப்பம் தொடருகின்றது. புலிகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை அரசு வழங்கிவிடும் அந்த கணம் முதல், புலிகளின் அப்பட்டமான ஏகாதிபத்திய சேவை நடைமுறை ரீதியாக அனைவரும் தெரிந்து கொள்வது ஒரு பொதுவான நடைமுறையாகிவிடும். ஆனால் இந்தப் போக்கு அம்பலமாகாத நிலையிலும், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இருப்பதால் தான் புலிகள் பாசிஸ்ட்டுகளாக நீடிக்கின்றனர். இது உள்நாட்டு விவகாரங்கள் முதல் சர்வதேச நிலைப்பாடுகள் வரை புலிகள் ஏகாதிபத்திய விசுவாசத்தை எப்போதும் பறைசாற்றியே வந்துள்ளனர். தேசம், தேசிய நலன் எதையும் புலிகள் தமது போராட்ட வழியில் கொண்டிருக்கவில்லை. புலிகளின் பாசீச நலன்களை தேசிய நலனாக காட்டி போராடுவதற்கு அப்பால், உயிருடன் வாழும் மக்களின் அடிப்படையான தேசிய நலனுக்காக புலிகள் ஒரு துளிதன்னும் போராடவில்லை என்ற உண்மை மக்களின் வாழ்வுடன் விதிவிலக்கின்றி இணைந்து நிர்வாணமாகவே உள்ளது.

மிகவும் பிற்போக்கான சமூகப் போக்கை கட்டமைப்பதே பாசீசத்தின் கோட்பாடாக எப்போதும் உள்ளது. இன்று எமது தமிழ் மண்ணில் மிக பிற்போக்கான ஒரு சமூக உள்ளடகத்தை புலிகள் நிறுவியுள்ளனர். ஒவ்வொரு மனிதனினதும் இந்த மண்ணில் வாழும் உரிமை என்பது, புலிகளைப் போல் விதிவிலக்கற்ற ஒன்று. சக மனிதனுக்கு பாதகமல்லாத, சக மனிதனின் நலனை உள்ளடக்கிய ஒரு மனிதன் இயல்பாக வாழும் உரிமையை எம் மண்ணில் கிடையாது. பாசீசம் இந்த உரிமையை மிகப் பிற்போக்கான நடைமுறைகள் மூலம் அடக்கி ஒடுக்குகின்றது. விரல் விட்டு எண்ணி விடக் கூடிய கொள்ளைக்காரர்களின் வாழ்வை பாதுகாப்பதே, புலிகளின் பொது அரசியலாகிவிட்டது. பணத்தை யார் அதிகமாக புலிகளுக்கு தாரை வார்க்கவும், அந்த பணத்தைக் கொண்டு கூட்டுக் கொள்ளை அடிக்க தயாராக யார் உள்ளனரோ, அவர்களின் ஆட்சியை நிறுவ மக்கள் மேலான மிக பிற்போக்கான பாசீச சர்வாதிகாரத்தையே புலிகள் நிறுவியுள்ளனர்.

உண்மையில் பாசீசத்தை புலிகள் எதன் மீது, எதை அழித்து நிறுவினர். ஜனநாயகக் கோரிக்கை ஒரு சமூக நடைமுறை கோரிக்கையாக உயருகின்ற போதே, அதை வலதுசாரிகள் தமது நலன்களுக்கு இசைவாக பாசீச சர்வாதிகாரத்துக்கு வித்திடுகின்றனர். புலிகளின் வரலாற்றில் இது சொந்த இயக்கத்தில் ஆரம்பம் முதலே தோற்றம் பெற்றது. அதற்கு முன்பாக கூட்டணி என்ற குறுந்தேநசியவாத கட்சியின் உள் இருந்தே, இதை புலிகள் சுவீகரித்துக் கொண்டனர். சொந்த இயக்கத்தில் எழுந்த ஜனநாயகக் கோரிக்கைக்கு பதிலாக, படுகொலையை துரோக முத்திரை இட்டு பரிசாக வழங்கப்பட்டது. இதுவே சம காலத்தில் இயக்க மோதலாகவும், மக்களுக்கு எதிரான பாசீச சர்வாதிகாரமாகவும் மாறியது. இங்கு மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் ஈவிரக்கமின்றி அழித்தன் மூலம் உருவான சம்பல் மேடுகளில் தான், புலிகளின் பாசீச சர்வாதிகாரம் நிறுவப்பட்டது.

எந்தவிதமான ஜனநாயக உரிமையையும் "மேதகு" தலைவர் பிரபாகரனின் பாசீச தமிழீழத்தில், யாருக்கு வழங்கியது கிடையாது. இதை யாரும் மறுத்து நிறுவமுடியாது. இது தான் தமிழீழத்தின் சட்ட ஒழுங்காகவும், மக்கள் மந்தையாக பாசீசத்துக்கு தலையாட்ட தெரிந்து கொள்வதுமே, தமிழ் மக்களின் தேசியப் பண்பாக புலிப் பாசிட்டுகள் உருவாக்கியுள்ளனர். இதைத் தான் "மேதகு" புலித் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களுக்கு ஓட்டு மொத்தமாக தேசியத்தின் பெயரில் வழங்கியுள்ளார்.

புலிப் பாசிட்டுகளின் தோற்றம் ஒரு வரலாற்று நீட்சியே

புலிகள் எப்படி ஒரு பாசீச இயக்கமாக உருவானார்கள் எனப் பார்ப்போம். முதலில் இதை நாம் இதன் வரலாற்று கூறில் இருந்து குறிப்பாக பார்ப்போம். சண் தலைமையிலான இடதுசாரி இயக்கம் வடக்கில் நடத்திய சாதிப் போராட்டங்கள், தேசியத்தை முன்வைத்து வந்த தேசிய வலது பிரிவுகளின் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு வர்க்க நலன்களுக்கு பலத்த நெருக்கடியை உருவாக்கியது. இதே போன்று இலங்கை அளவில் தொடர்ச்சியாக பல குழுக்களின் இடதுசாரி போராட்டங்கள் சுரண்டும் வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதை முறியடிக்க வலது பிரிவுகள் இனம் கடந்து, இன மோதலை உருவாக்கினர். இலங்கையில் 1960க்கு பிந்திய பத்தாண்டின் இறுதியில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், வலதுபிரிவை ஒற்றுமைப்படுத்தியது. அமைதியான வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. சிறிமா சஸ்த்திரி ஒப்பந்தம் மூலம் மலையக மக்களின் பிரச்சனைக்கு, அமைதியாக அந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக நாடு கடத்தல் என்ற தீர்வு எட்டப்பட்டது. மலையக பிரதிநிதிகளுக்கு சலுகைகள் வழகுவதன் மூலம் இந்த அமைதியான வக்கிரமான தீர்வுகளை அழுல் நடத்த, மந்திரி சபையில் இணைப்பது என பல சலுகைகள் வழங்கப்பட்டது. ஜே.வி.பி நடத்திய போராட்டம் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் கூர்மையான போது, வலது பிரிவுகள் தமக்குள் ஒற்றுமை கண்டனர். இந்த ஒற்றுமை மூலம் இடது போராட்டங்களை ஒடுக்க விரும்பினர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கில் சாதிய போராட்டங்களை எதிர் கொண்ட போது, அரசு மற்றும் பொலிஸ் உதவியை நாடி நின்றனர். இதை ஒடுக்குவதற்கு பாசீச அரசின் உதவியை நாடிய அதேநேரம், மக்களைப் பிளக்க வலதுசாரிகள் விரும்பினர். தமிழ் பகுதிகளில் சாதிப் போராட்டங்களால் வர்க்க அடையாளம் கண்டு அணி திரள்வது கூர்மையானது இது போல் சிங்களப் பகுதியிலும் இது காணப்பட்டது. அதே நேரம் ஜே.வி.பியின் இடது போராட்டங்களும் கூர்மையாக வளர்ச்சி பெற்றது. தமிழ் சிங்கள தலைவர்கள் இதை தடுக்கும் அரசியல் வழிகளைத் தேடினர். இனப் பிளவை ஏற்படுத்தி மக்களை பிளக்க, இரு பகுதியினரும் குறிப்பாக ஒரே நேரத்தில் முன்கையெடுத்தனர். வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடைந்ததால், வலது பிரிவுகள் தமது வர்க்க அரசியலாக இனப் பிளவுகளை ஆணையில் வைத்தனர். 1970 களில் நடந்த தேர்தலில், நாட்டில் நிலவிய பொதுவான அரசியல் மயமாகாத இடதுசாரிய கண்ணோட்டம் சார்ந்த ஆட்சியை மாற்றி அமைத்தது.

நாட்டில் இருந்த இடதுசாரிப் போக்கு, வலதுசாரிகளுக்கு நெருக்கடியை உருவாக்கியது. 1970 இல் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசாங்கம், வர்க்கப் போராட்டத்தின் அரசியல் அடிப்படைகளை தகர்க்க தேசியவாதத்தை முன் தள்ளியது. இதில் தேசிய உற்பத்தி என்ற பெயரில், சில இறக்குமதிகளை தடை செய்தது. தேசிய கல்வி போன்ற பல்துறை சார்ந்து கட்டுமானங்களை மேல் இருந்து மக்கள் மேல் திணித்தனர். அதே நேரம் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட தரப்படுத்தல் முதல் பலவற்றைத் திணித்தனர். இதை அமுல் செய்ய முன்பாகவே ஜே.வி.பியை சேர்ந்த 20 ஆயிரம் பேரை கொன்றதுடன், சண் தலைமையிலான கட்சியை சிறையில் தள்ளியது. உண்மையில் எழுந்து வந்த இடதுசாரி வீச்சை அடக்கியொடுக்கியபடி, வலது மற்றும் இடது கண்ணோட்டம் சார்ந்த வகையில் உற்பத்தி மற்றும் நடைமுறைகளை மேல் இருந்து திணித்தது. மறுதளத்தில் இளைஞர்களை திசை திருப்ப இனவாதத்தை ஒரு சமூக கண்ணோட்டமாகவே திணித்தனர். இதனால் இடது கண்ணோட்டம் நாட்டில் முற்றாக சிதைந்து சீரழிந்தது. வலது கண்ணோட்டம் முன்னணிக்கு வந்தது. ஆனால் உற்பத்திதுறை சார்ந்த சில இடது கண்ணோட்டம், உழைக்கும் மக்களைச் சுரண்டும் வலது கண்ணோட்டத்துக்கு ஆழமான நெருக்கடியைக் கொடுத்தது. சர்வதேச நெருக்கடிகளும் இணைந்து கொள்ள, சுரண்டல் என்பது தரகுத் தன்மை சார்ந்து வளர்ச்சி பெறமுடியாத நிலை நீடித்தது. சர்வதேச ரீதியாக எண்ணை நெருக்கடி, உலகை மேலும் ஆழமாக சுரண்டுவதன் மூலம், மூலதனத்தின் இழப்பை ஈடுசெய்ய கோரியது. ஆனால் இலங்கையில் அரசின் சில கொள்கைகள் இதற்கு தடையாக இருந்தது. வலது கண்ணோட்டம் உலகளவிலும், உள் நாட்டிலும் ஆழமான கோரிக்கையை முன்வைக்க தொடங்கியது. இலங்கையில் வலதுசாரிப் பிரிவுகள் தத்தம் இனப்பிரிவு சார்ந்து தம்மை நுட்பமாக ஒருங்கிணைத்துக் கொண்டன. இடதுசாரி அரசின் இனவிரோதக் கொள்கை இதற்கு எண்ணை வார்த்தது. இனம் சார்ந்து வலது குழுக்களின் நடவடிக்கைகள் சுறுசுறுப்பாகியது.

இனப்பிளவு மேலும் துல்லியமாக பண்பு வழியில் வளர்ச்சி கண்டது. ஆனால் இந்த இனப்பிளவு சார்ந்த தேசிய அடிப்படைகள் எந்த விதத்திலும், தனது வலதுசாரி அரசியல் எல்லையை தாண்டவில்லை. மேல் இருந்து திணித்த பொருளாதார கொள்கைகள் எதிர்த்து வளர்ச்சி பெற்ற இனவாத வலதுபிரிவுகள், 1977 இல் தேர்தலில் பெரு வெற்றி பெற்றது. தமிழ் சிங்களம் என்று இன அடிப்படையில், இலங்கையில் உயர்ந்த பட்சமாக இனவாதம் வெற்றிபெற்றது. இந்த வெற்றி இடது எதிர்ப்பை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட, பாசீச கண்ணோட்டமாக வளர்ச்சி பெற்றது. இதில் தமிழ், சிங்களம் என்று வேறுபாடு இருக்கவில்லை. உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு, இந்த வலது பாசீச இனவாதக் கண்ணோட்டத்தை ஆளும் வர்க்க அரசியல் சித்தாந்தமாக வரிந்து கொண்டனர். இந்த போக்கிலான இனவாத அடிப்படையில் உருவான கட்சிகள், தத்தம் நிலையில் வலது நிலைப்பாட்டை உறுதியாக கொண்டன. இந்த வரலாற்று போக்குகுப் பின்பாக, இலங்கையில் இடதுசாரிகளின் வர்க்க போராட்ட திசை மார்க்கம் இதுவரை மீண்டுவிடவில்லை.

இன அடிப்படையில் தனது பாசீச கட்டமைப்பில் உருவான வலதுசாரி அரசாங்கம், என்று இல்லாத வகையில் இனவாதத்தை ஆணையில் வைத்தது. முன்னைய அரசின் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட அனைத்து கூறுகளையும் உள்வாங்கி, மேலும் ஆழமாக்கியதன் மூலம் சுரண்டலை தீவிரமாக்கியது. ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் நலன்களை பாதுகாத்து மக்களை கொள்ளையிடவும் சூறையாடவும் தாராளமாக அனுமதித்தது. வலது தமிழ் தலைமை தமிழ் மக்களை சூறையாட அனுமதிக்கும் உரிமையை தன்னிடம் தரும்படி கோரி, சமுகத்தை என்றுமில்லாத வகையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இருந்த சிங்கள அரசு தமிழ் மக்களை ஒடுக்கியபடி, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்தது. இந்த போக்கில் அதிர்ப்தியுற்ற தமிழ் பிரிவு அந்த உரிமை தமக்கு உண்டு என்ற கோரினர். அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத அதே நேரம் சிங்கள இன ஒடுக்குமுறையை எதிர்த்தனர். ஏன் சிங்கள அரசு இன ஒடுக்குமுறையைக் கையாளுகின்றது என்ற அடிப்படைக் காரணத்தை எதிர்க்காது, வடிவத்தை மட்டும் எதிர்த்தனர். இங்கு வர்க்க நலன்கள் துல்லியமாக குறிப்பாகவும் சேவை செய்தது. இந்த எதிர்நிலைத் தன்மை இனப் பிளவைக் கட்டமைத்தது.

தமிழ் தலைமை சலுகைகள் ஊடாக பேரம் பேசி, இதை சாதிக்க முனைப்பு பெற்றது. ஆனால் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் பற்றி பீற்றினர். இந்த முரண்நிலையை இனம் காணமுடியாத நிலையில் மக்களை மந்தைக் கூட்டமாக்கினர். அரசு இனவாத கண்ணோட்டத்தில் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்ய மறுத்து, தான் மட்டுமே நேரிடையாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்து எலும்புகளை நக்கிக் கொள்வதை நடைமுறையாக்கினர். ஏகாதிபத்திய சுரண்டல் தீவிரமாக, அதற்கு நேர்வீகிதத்தில் இனவாதம் வளர்ச்சியுற்றது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துச் சென்றது. இதை எதிர்கொள்ள பாராளுமன்ற தலைமையில் இருந்த இனவாதப் பிரிவால் ஈடுகொடுக்க முடியவில்லை. தமது தரகு அரசியல் வாழ்வு வன்முறைக்கு ஊடாக சிதைந்து போவதை, அவர்களில் வர்க்க அரசியல் வாழ்நிலை அனுமதிக்கவில்லை.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1970 களின் பின் இடதுசாரி வர்க்க கண்ணோட்டத்துக்கு எதிராகவும், பாராளுமன்றம் மேலிருந்து திணித்த தேசிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும், தனது வலதுசாரி இனவாத அடிப்படையில் தன்னைத் தான் ஒரு வன்முறைக்கு தயாரான அமைப்பாக காட்டிக் கொண்டது. இதனால் அந்த அமைப்பின் மீது மிகவும் தீவிரமான பற்றுக் கொண்ட குட்டிபூர்சுவா வர்க்க இளைஞர்கள், தீவிரமான செயல்களில் இறங்கினர். இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வளர்ப்பு நாயாக இருந்தனர். முன்னைநாள் கதாநாயகர்கள் அனைவரும், கூட்டணியின் வளர்ப்பு நாய்கள் தான். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரியாக யாரை காட்டினரோ, அவர்கள் மேல் வன்முறைகளை கையாளத் தொடங்கினர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிறை சென்ற போது, அவற்றை பாராளுமன்றத் தலைமை அறுவடை செய்தது. கூட்டணியின் வழிகாட்டுதலில் படுகொலை அரசியல் செய்தவர்களை பொலிஸ் தேடி அலைந்த போது, அவர்களை பாதுகாக்க மறுத்தனர். ஆனால் அவர்கள் பூர்சுவா வர்க்க இளைஞர்கள் முன் வீரர்களான போது, கூட்டணியினர் அதை அறுவடை செய்தனர்.

1970க்கு பின் தொடர்ச்சியான 10 வருடத்தில், குட்டிபூர்சுவா இளைஞர்களுக்கும், கூட்டணிக்கும் இருந்த உறவு மெதுவாகவே வெடிப்பு கண்டது. நெருக்கடிகளின் போது இளைஞர்களை காட்டிக் கொடுத்தனர். மற்றைய நேரத்தில் அரவணைத்து அனுசரித்து போன போக்கு, பிளவுக்கான அடித்தளமாக இருந்தது. சிங்கள இனவாத அரசு ஏகாதிபத்திய சுரண்டலை மேலும் ஆழமாக ஊடுருவிச் சுரண்டவும், சூறையாட உதவுகின்ற அதே வீச்சில், இனவாதத்தை மேலும் தீவிரமாக்கியது. இதை ஈடுகொடுக்க தமிழ் தலைமையான கூட்டணியால் முடியவில்லை. குட்டிபூர்சுவா வர்க்க இளைஞர்களுக்கும் கூட்டணிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது. குட்டிபூர்சுவா இளைஞர்கள் கூட்டணிக்கு தெரியாத, தமது சொந்த ஆயுதக் குழுக்களை கட்டமைக்கவும் தொடங்கினர். ஆனால் அரசியல் ரீதியாக கூட்டணியின் வலது இனவாத அரசியலை தமது தேசியக் கொள்கையாக வரிந்து கொண்டனர். உண்மையில் போராட்டத்தில் வடிவ மாற்றம் ஏற்பட்டது. இந்த வடிவ மாற்றத்தில் எது வெற்றி பெறும் என்பது, இந்த இரண்டு பிரிவும் தீர்மானிக்கும் நிலையில் அன்று இருக்கவில்லை. சிங்கள அரசே அதில் எதை வளர்ப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. சிங்கள அரசு தன்னுடன் நேரடியாக அரசியல் ரீதியாக முட்டி மோதிய கூட்டணியின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரவிரும்பியது.

கூட்டணியில் இருந்து தன்னை வேறுபடுத்தி குட்டிபூர்சுவா இளைஞர்கள், தமது அரசியலை கூட்டணியின் அரசியலாகவே வரிந்து கொண்டனர். போராடும் வடிவத்தில் மட்டும் தம்மை வேறுபடுத்தினர். வர்க்க அடிப்படையில் தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ அடிப்படையை கொண்டிருந்த கூட்டணி, குட்டிபூர்சுவா சிந்தனையுடன் பிரிந்த தீவிரவாத இளைஞர்களில் இருந்த வேறுபட்டது உண்மைதான். ஆனால் குட்டிபூர்சுவா இளைஞர்களின் சிந்தனைக்கும் நடைமுறைக்குரிய சமூக அடிப்படை இன்மையால், அதை இனம் காண முடியாத கூட்டணியின் அரசியலால் வழிநடத்தப்பட்டு இருந்தால், கூட்டணியின் அரசியல் எல்லையை தாண்டிவிட இவர்களை அனுமதிக்கவில்லை. கூட்டணி தனது வர்க்க அடிப்படையில் இருந்த உருவான பொருளாதார நலன்கள், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுத்தது. ஆனால் இளைஞர்கள் வர்க்க அடிப்படைக்கான பொருளாதார அடிப்படை இன்மையால், விரைவாக ஆயுத போரட்டத்தில் ஈடுபடுவதை துரிதமாக்கியது. இது இன்று வரை எதார்த்தமான அரசியலாக உள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் வடிவ மாற்றத்தை மட்டும் இந்த பூர்சுவா இளைஞர்கள் ஏற்படுத்தினர். சித்தாந்த ரீதியாக, பழைய அதே கொள்கையை தமது கொள்கையாக இன்றுவரை கொண்டு உள்ளனர். கூட்டணியின் நிலப்பிரபுத்துவ தரகு தன்மையை ஆதாரமாக கொண்ட அதே தளத்தில் குட்டிபூர்சுவா கனவுகள் வெளிப்பட்ட போது எல்லாம், அவை படுகொலை அரசியலுக்குள் அழிக்கப்பட்டன. கூட்டணியின் வர்க்க சித்தாந்தமே புலியின் சித்தாந்தமாக இன்றும் காணப்படுகின்றது. பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் நாயாக வாழ்ந்த காலத்தில் எதை தனது அரசியலாக வரிந்து கொண்டிருந்தரோ, அதுவே இன்று "மேதகு" தேசிய தலைவரான பின்பும் நீடிக்கின்றது. இதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலபிரபுத்துவ தரகு கண்ணோட்டம் சார்ந்த குட்டிபூர்சுவாக் கனவு, பாசீசத்தின் மைய ஊற்று மூலமாகும. இந்த குட்டிபூர்சுவா உதிரிக் கனவுகளை உள்ளடக்கிய தனது அரசியல் வழியை நேரடியாக கூட்டணியில் இருந்து பெற்றமையால், இது இடது தன்மைக்கு எதிரான அடிப்படைக் கோட்பாட்டில் இருந்தே தன்னை தகவமைத்துக் கொண்டது. இன்றைய புலிகளின் "மேதகு" தலைவர் பிரபாகரன் உட்பட பலரும் கூட்டணியின், வளர்ப்பு நாய்களாகவே இருந்தவர்கள் தான். சொன்னதை வாலாட்டியபடி ஈவிரக்கமின்றி செய்தவர்கள் தான் இவர்கள்.

1970 களில் குட்டிபூர்சுவா வர்க்க இளைஞர்கள் ஆங்காங்கே குண்டு வெடிப்புகள், துப்பாக்கிச் சூட்டுகளை நடத்தினர். இதற்கு பலியானவர்கள் அனைவரும் கூட்டணியின் அரசியல் எதிரிகளாக இனம் காட்டப்பட்டு, துரோகியாக முத்திரை குத்தப்பட்டவர்களே. இங்கு துரோகிகள் யார் என்றால், கூட்டணிக்கு எதிரான கருத்துடையோராக இருந்தோரை குறித்து கருதப்பட்டது. கூட்டணியின் கருத்துக்கு எதிரானவர்கள், தேசியத்தின் எதிரிகளாக கருதி அழிக்கப்பட்டனர். பாசீசத்தின் உள்ளடகத்தை கூட்டணியின் அரசியல் வெளிப்படுத்தி நின்றது. கூட்டணியுடன் முரண்பட்டவர்கள் தேசியத்தின் எதிரியாக அடையாளம் காட்டினர். இவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டனர் அல்லது துரோக முத்திரை இடப்பட்டனர். இப்படி முத்திரை இடப்பட்டவர்களை தேடி அழிப்பது, தமிழ் தேசிய போராட்டமாக, அதுவே ஆயுதப் போராட்டமாக வளர்க்கப்பட்டது. இங்கு இந்த தேசியம் பாராளுமன்றத்துக்கு வெளியில், ஆயுதப் போராட்டமாக பரிணமித்து வந்த காலத்தில், துரோகம் என்பது ஒரு குறித்த கட்சிக்கு எதிரானதை மட்டுமே விளிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக இந்த துரோகம் என்பது வரையறுக்கப்பட்டவில்லை. பாராளுமன்ற அரசியலுக்கு பதில் ஆயுதப் போராட்டம் வளர்ச்சி பெற்று, அதுவே தமிழ் மக்களின் அதிகார பிரதிநிதியாக மாறிய போதும் சரி, துரோகம் என்பது ஒரு குறித்த கட்சிக்கு அல்லது இயக்கத்துக்கு எதிரானதை அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்பட்டது. தேசிய அரசியல் என்ன என்பதில் இருந்து, துரோகம் இன்று வரை வரையறுபக்கப்படவில்லை. இந்த துரோகம் மக்களின் அடிப்படையான சமூக நலன்களில் இருந்து, வரையறுக்கப்படவில்லை.

பாசீசத்தின் பண்பியல் கூறுகள் கூட்டணியின் வலதுசாரி அரசியலில் இருந்தே உருவாகியது. தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலன்களை சார்ந்து நின்ற கூட்டணி, ஏகாதிபத்திய நலன்களுக்காக மக்களிடையே பிளவை எண்ணை ஊற்றி வளர்த்தனர். இனவாதத்தை மூலதனமாக்கினர். இதே போன்ற சிங்கள அரசு இனவாதத்தை அடிப்படையாக கொண்டு தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளை பேணி பாதுகாத்தது. இதன் மூலம் ஏகாதிபத்தியம் தனது உலக ஆதிக்கத்தை நிறுவும் ஒரு பகுதியாக, இலங்கையிலும் ஆழமாக ஊடுருவி மறு கானியாதிக்கத்தை விரைவுபடுத்தி வருகின்றது.

இந்த நிகழ்ச்சி நிரலை துல்லியமாக்க, இரு தரப்பினரும் பாசீசத்தை ஒரு சமூகக் கூறாக தத்தம் இனவாத செயல்பாட்டில் மையக் கூறாக கட்டமைத்தனர். கூட்டணியின் பாராளுமன்றம் சார்ந்த போராட்டமும், குட்டிபூர்சுவா இளைஞர்களின் ஆயுதம் ஏந்திய தனிநபர் பயங்கரவாத போராட்டமும் அக்கம் பக்கமாக நிலவின. இந்த இரண்டு போக்கும் ஐக்கியப்பட்ட வழிகளில் நடைபோட்டன. இந்த இனவாதப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியை மிஞ்சும் வகையில், சிங்கள இனவாதம் தன்னை விரிவுபடுத்திய போது, தமிழ் இனவாதத்தின் உள்ளான நெருக்கடி ஆரம்பமாகியது. ஆயுதம் ஏந்தியோருக்கும், பாராளுமன்ற வாதிகளுக்கு இடையில் முரண்பாடு பரிணமித்தது. இந்த முரண்பாடு படிப்படியாகவே வளர்ச்சி பெற்றது. தமிழ் மக்கள் மேலான அதிகாரம், ஒன்றில் இருந்து ஒன்று கைமாறிய போக்கு படிப்படியாக நிகழ்ந்தது. இந்த நிகழ்வும் அதன் வளர்ச்சியும் கூட பாசீச வழிகளில் அரங்கேறியது. இங்கு துரோகம் என்பது மீண்டும் கட்சி சார்ந்தாக இருந்தது. அரசியல் வழிப்பட்டதாக மாறவில்லை. அதாவது எந்தக் கட்சி மற்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி அழித்ததோ, அந்தக் கட்சிக்கு மேல் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துரோக முத்திரை குத்தினர். ஆனால் அரசியல் ரீதியாக எந்த விமர்சனமும் இருக்கவில்லை. இது இன்று வரை தொடர்கின்றது. இது பின் தனிநபர் அதிகாரம் வரை விரிவு பெற்றது. அதாவது தலைவர் யார் என்ற அதிகாரப் போட்டி மட்டும், துரோக முத்திரை குத்தி அழிக்கப்படுவதை நியாயப்படுத்துவதே தேசிய அரசியலாகியது. 1. தேசியம் என்றும் அரசியல் வழிப்பட்டதாக அடையாளம் காணப்படவில்லை.

2. துரோகம் என்பது குறித்த கட்சிக்கு எதிரானதாகவும், தனிப்பட்ட ஒரு தலைவருக்கு எதிரானதாகவும் வரையறுக்கப்பட்டதே ஒழிய, அரசியல் வழிப்பட்டதாக இருக்கவில்லை.

3. ஆயுதம் ஏந்திய பூர்சுவா இளைஞர்களின் கைகளுக்கு, தமிழ் மக்கள் மேலான தேசிய அதிகாரம் கைமாறிய போது, கூட்டணியின் அரசியல் வழியில் இருந்து தன்னை சுய விமர்சனம் செய்யவில்லை. அதே அரசியலை தொடர்ச்சியாக பேனினர். இதை அடையும் வழியை மட்டும் மாற்றினர்.

4. மக்களை அடிமைப்படுத்துவது, அவர்களின் உழைப்பை சூறையாடுவது, சமூக ஒடுக்கு முறைகளை தொடர்ந்து பேனுவது என்ற தமிழ் தேசிய பாராளுமன்ற வழிகளில் இருந்து, குட்டிபூர்சுவா இளைஞர்களின் கைக்கு அப்படியே இடம் மாறியது. இது பாராளுமன்ற வழிகளுக்கு பதில் துப்பாக்கி முனையிலான ஒடுக்கு முறையாக மாறியது. இது அன்றாடம் வெளிப்பட்டலும், மக்கள் நடைமுறையில் உணர்ந்தாலும், சிங்கள இனவாத பாசீசத்தால் மூலமிடப்பட்டுள்ளதால் தன்னை மூடிமறைக்கின்றது.

கைமாறிய அதிகாரம் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கச் சார்பை, கூட்டணியிடம் கைமாற்றி அப்படியே ஆணையில் வைத்தது. அதே நேரம் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் நலன்களையும் ஒன்று இணைத்த கலவையாக தன்னை இனம் காட்டியது. இதன் வளர்ச்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களை உருவாக்கியது. ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் வௌவேறு ஏகாதிபத்திய தரகுகளாக செயற்படும் வரையறையை, தமது அரசியலாக வரையறுத்துக் கொண்டன. ரூசியா மற்றம் அமெரிக்க நலன்களை அடிப்படையாக கொண்டு உருவான இக் குழுக்கள், இடைநிலை பிரதிநிதிகள் ஊடாக வழிநடத்தப்பட்டனர். இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் முதல் மாபிய குழுக்கள் என்று ஒரு விரிந்த தளத்தில் இடைத் தரகு குழுக்களே, இந்த குட்டிபூர்சுவா இளைஞர்களின் அரசியலை நடவடிக்கைகளை வழிநடத்தினர். இந்த முரண்பட்ட குழுக்கள் முரண்பட்ட கலவைக் கோட்பாடுகளை முன் தள்ளினர். இந்த முரண்பாடுகள், கலவையான கோட்பாட்டின் ஒருமைக்குள் நகர்த்தியது. இதற்கு வெளியில் இடது வழியில் ஒரு சில குழுக்கள் உருவானது. இது விதிவிலக்கு மட்டுமே.

இப்படி உருவாகிய இந்த குட்டிபூர்சுவா வர்க்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பை என்றும் முன் வைத்ததில்லை. உள்நாட்டு எதிரிகளை அடையாளம் காட்டவில்லை. இனவாத எல்லைக்குள மொழி ரீதியாகவே எதிரியை அடையாளம் காட்டினர். எதிரியை பற்றி தெளிவற்ற நிலையில், உருவாகிய ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள், தமது அரசியல் வழியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்ச்சியாகவும், குட்டிபூர்சுவா நலன்களையும் ஒன்று இணைத்து ஒரு கலவையாக தன்னை ஒழுங்கமைத்தது. இவை அனைத்தும் தேசிய நலனை, அதாவது மக்களின் அடிப்படையான தேசிய நலனை முன்வைத்து போராட முன்வரவில்லை. மாறாக மக்களின் அடிப்படையான தேசிய கோரிக்கை மீது ஒடுக்கு முறையைக் கையாண்டனர். அத்துடன் மார்க்சியத்தின் சொற் களஞ்சியங்களில் இருந்த சில சொற்களை உள்வாங்கி, அதை கலவையாக்கி தம்மைத் தாம் அலங்கரித்தனர். இதனால் இந்த கலவை இனம் காண முடியாத ஒரு அரசியல் வழியாக எட்ட நிற்போரை மயக்கி நின்றது.

உருவான ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் தனது அரசியலாக, துப்பாக்கியை ஆணையில் வைத்தனர். ஆயுதமே அனைத்துமாகி, அதுவே ஒரு தமிழ் தேசிய மொழியாகி, ஒட்டுமொத்தத்தில் அரசியல் ஆணையாகியது. ஆயுதம் ஏந்தியவனின் சிந்தனை தேசியமாகவும், எதிரானது துரோகமாகவும் வரையறுக்கப்பட்டது. இப்படி உருவான அமைப்புகள், கொள்கை வழிப்பட்ட ஐனநாயக பூர்வமான ஸ்தாபன ஒழுங்கில் தன்னை கட்டமைக்கவில்லை. சில விதிவிலக்கு இருந்த போதும், அது ஒரு தலைப்படசமாக ஜனநாயக விரோதமான வகையில் அதிகார மையங்கள் உருவானது. உருவான இயக்கங்களை உருவாக்கியவர் தலைவராகவும் அல்லது ஆயுதத்தை சிறப்பாக பயன்படுத்தியவர் அல்லது மற்றவர்கள் மேல் அச்சத்தை ஏற்படுத்தும் கொலைகாரர்கள் தலைவர்களானர்கள். இது போன்ற ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டே, அமைப்புகளின் வளர்ச்சியும் அதன் ஒழுங்கமைப்பும் வரையறுக்கப்பட்டது.

இப்படி உருவான போது இதுவே அமைப்பின் ஜனநாயக வாழ்வை மறுத்து நின்றது. அவ் அமைப்பு உருவான நோக்கத்திலேயே முரண்பாடுகள் ஒட்டிப் பிறந்தது அதன் சொந்த விதியாகியது. ஒவ்வொரு விடயத்திலும் ஏற்பட்ட முரண்பாடுகளையும், துரோகமாக வரையறை செய்து அழித்தொழித்தனர், அழித்தொழிக்கின்றனர். உருவான அமைப்புகளின் கலப்புக் கோட்பாடுகள், மற்றொரு பக்கத்தில் அடிப்படையான போராட்ட வழி தொடர்பான முரண்பாட்டுக்கு அடித்தளமிட்டது. முரண்பாடுகள் இந்த அமைப்புகளின் இயங்கியல் விதியாக, அதை அழிப்பது தேசியத்தின் பண்பியல் கூறாகியது.

உண்மையில் எமது சமூக அமைப்பில் செறிந்துள்ள பாசீச பண்பியல் கூறுகள், ஆயுதம் ஏந்தியோரின் அரசியல் சித்தாந்தமாகியது. பாசீசம் இந்த தேச விடுதலை இயக்கமாக நீடிப்பதற்குரிய அடிப்படையாகவும் ஆதாரமாகவும் மாறியது. தனது சொந்த அமைப்பிலும், மக்களின் மேலும் கட்டமைக்கப்பட்ட பாசீசத்தைக் கைவிட்டால், போராட்டமே சிதைந்து விடுமளவுக்கு போராட்டம் பாசீசப் பண்பாகியது. அரசியல் ரீதியாக மக்களையும் சொந்த அணியையும் தேசிய விடுதலைப் போராட்டம் கட்டமைப்பதற்கு பதில், பாசீச பண்பியல் வழியாக தேசியம் கட்டி பாதுகாக்கப்படுகின்றது. இதைத் துல்லியமாக புலி சாhந்து ஆராய்வோம்.

புலி ஒரு பாசீச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருப்பதை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போது, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்படுகின்றது. புலிகளை வெறும் குட்டிபூர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கருதி, பாசீசத்தின் அடிப்படையை காணத் தவறுவதன் மூலம் சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகின்றது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசீசத்துக்கு துணைபோகின்றனர். உண்மையில் புலிகளின் பாசீசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசீசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசீச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசீசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதில் இருந்து சம காலம் நகர்கின்றது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசீச கண்ணோட்டத்தையும் நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.

புலிகள் குட்டிபூர்சுவா வர்க்க நலன்களையும், தேசிய பூர்சுவா வர்க்க நலன்களையும் பிரநிதித்துவப்படுத்திய ஒரு தேசிய சக்திகளா? இதற்கு எந்த ஆதாரத்தையும் யாரும் என்றும் தரமுடியாது என்பதே உண்மை. இலங்கை அரசுடன் மோதுவதால் குட்டிபூர்சுவா வர்க்க நலனையும், தேசிய பூர்சுவா வர்க்க நலனையும் பிரநிதித்துவப் படுத்திவிடுவதில்லை. மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை தெளிவாகவே ஜனநாயகப் புரட்சி நடக்காத நாடுகளில், பூர்சுவா புரட்சி நடக்க முடியாது என்பதை சோவியத் புரட்சிக்கு பின்னால் துல்லியமாக நிறுவியுள்ளது. இதை மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் யாவரும் அங்கீகரிக்கின்றனர். ஆனால் நடைமுறை ரீதியான பிரச்சனையில் இதை சரியாக கையாள்வதில்லை. இதனால் கோட்பாட்டு ரீதியாக தவறான வாதங்கள் முன் தள்ளப்படுகின்றது. குட்டிபூர்சுவா வர்க்கம் தேசிய பூர்சுவா வர்க்க நலன்களை முன்வைத்து சுயேற்சையாக போராட முடியாது. இங்கு பிற்போக்கு தரகு நிலப்பிரபுத்துவ சார்பு நிலையை எடுத்து, ஏகாதிபத்திய மறு காலனியாகம் அல்லது பாட்டாளி வர்க்கம் சார்ந்து புதியஜனநாயக புரட்சியாக மட்டும் நடக்க முடியும். இங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பிற்போக்கு வர்க்கங்கள் சார்ந்து எழும் தேசியம் பாசீசத்தையும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து நடக்கும் தேசியம் ஜனநாயகத்தையும் ஆதாரமாக கொள்கின்றது. இதற்கு வெளியில் தேசிய இயக்கங்களின் அரசியல் முதல் அதன் பண்பியல் கூறுகள் வரை எங்கும் விதிவிலக்கு இருப்பதில்லை.

இங்கு தேசியத்தின் உள்ளடக்கம் என்பது புதியஜனநாயகப் புரட்சி அல்லது ஏகாதிபத்தியம் சார்ந்த உலகமயமாதல் என்ற இரு அரசியல் வழிக்கு வெளியில், மாற்று வழி என்பது கிடையாது. பிரதான எதிரி தேசியத்தில் உயிருள்ளதாக நீடிக்கும் வரை, இந்த இரு எதிர் நிலையிலும் உள்ள முரண்பாட்டை எப்படி நாம் புரிந்து கொள்வது என்பது மிக முக்கியமானதாகும். இங்கு ஐக்கிய முன்னணி தத்துவத்தை பிரயோகிப்பதா? அல்லது எதிரியாக காண்பதா? என்பதே இதில் மிக முக்கியமான விடையம். இங்கு தான் பாசீசத்தின் அடிப்படைக் கூறுகளை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. புலிகள் ஒரு பாசீச இயக்கமா இல்லையா என்பதை புரிந்தது கொள்வதன் மூலம், குறிப்பான நிலைப்பாட்டை ஆராய்வோம். பாசீசம் பூர்சுவா புரட்சி நடந்த நாடுகளில் வெளிப்படும் போது அதற்குரிய தன்மை, பூர்சுவா புரட்சி நடக்காத நாடுகளில் இருந்து வேறுபடுகின்றது.

பூர்சுவா புரட்சி நடந்த நாடுகளில், பாசீசம் ஆட்சிக்கு வரமுன்பு சொந்த பூர்சுவா வர்க்கத்தை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றது. குட்டிபூர்சுவா வர்க்க நலன்களை வென்று தருவதாக வாக்குறுதி அளிக்கின்றது. பாசீச தத்துவமே பல்வேறு கதம்பக் கூறுகளை கொண்டே உருவாகின்றது. குட்டிபூர்சுவா மக்கள் திரளை கவருவதற்கு பாசீசம், கதம்பத் தத்துவத்தை ஆயுதமாக கொள்கின்றது. வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கப் போவதாக பிரகடனம் செய்கின்றது. உழைக்கும் மக்களின் அன்றாட போராட்டத்தில் இருந்து தன்னை விலகி இருப்பதாக காட்டுவதில்லை. பாசீசம் அதிகாரத்துக்கு வரும் காலம் என்பது, மிக கூர்மையான வர்க்கப் போராட்டம் நடக்கும் போதே நிகழ்கின்றது. மூலதனத்தை தக்கவைத்து சுரண்டலை தீவிரப்படுத்தவும், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கவும், உழைக்கும் மக்களின் நண்பனாக காட்டி ஆட்சியைக் கைப்பற்றுகின்றது. உண்மையில் மக்களின் புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தை உள்வாங்கி, அதை பெரு மூலதனத்துக்கு சாதகமாக மாற்றி அமைக்கின்றது. ஒழுங்குமுறையற்ற இனவெறியை ஏற்படுத்தி, படுபிற்போக்கான ஆதிக்க வெறியை ஊட்டுகின்றது. யுத்த வெறியை மூலதனமாக்கி தன்னை தற்காத்துக் கொள்கின்றது. உழைக்கும் மக்களை மிக கொடுரமாக சுரண்டி, சொத்துரிமையை குவிப்பதை ஆணையில் வைக்கின்றது. ஆனால் இவை அனைத்தையும் ஒளிவு மறைவாக தன்னை மறைத்துக் கொண்டே, தன்னை ஒரு ஆளும் பாசீச வர்க்கமாக மாற்றுகின்றது.

முதலாளித்துவ (பூர்சுவா) ஜனநாயக புரட்சி நடக்காத நாடுகளில், பாசீசத்தின் வெளிப்பாடும் நோக்கமும் வேறுபடுகின்றது. இங்கு உருவாகும் பாசீசம் மிக பிற்போக்கான வகையில் ஏகாதிபத்தியத்துக்கும் உலகமயமாதலுக்கும் சேவை செய்வதை அடிப்படையாக கொண்டது. ஏகாதிபத்திய சுரண்டலால் நலிந்து போகும் சமுதாயத்தில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த பிரிவுகளில் ஏற்படும் முரண்பாட்டை ஒழித்துக்கட்டவும், கிடைக்கும் எச்சிலை முழுமையாக உயர்ந்த பட்சமாக்க சிறிய கும்பல் ஒன்று அனுபவிப்பதை பாசீசம் உறுதி செய்கின்றது. அதாவது ஏகாதிபத்திய சுரண்டலை எல்லையற்றதாக்குவதும், இதில் எச்சில் இலை பொறுக்கி வாழும் ஆளும் பாசீச கும்பலின் நலன்கள் உறுதி செய்வதையும் பாசீசம் ஆதாரமாக கொள்கின்றது. இங்கு பாசீசத்தை கட்டமைக்கும் போது, குட்டிபூர்சுவா வர்க்க நலன்களையும், பூர்சுவா நலன்களை பாதுகாக்க உள்ளதாக வாய்ப்பந்தல் போடுகின்றது. பாசீசத்தின் இயல்பாக நடைமுறை சமூகப் பண்பியல் கூறாக நீடிக்கும் இன மத சாதிய வெறியில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை முன்வைத்து அதை பாசீச இராணுவக் கட்டமைப்பாக கட்டமைக்கின்றது. இராணுவ ஒடுக்குமுறைகளையும், யுத்தங்களையும், யுத்த தயாரிப்புகளையும் தொடாச்சியாக செய்கின்றது. ஏதாவது ஒரு முரண்பாட்டை வன்முறை சார்ந்த எல்லைக்குள், தொடர்ச்சியாக உயிர்வாழ வைக்கின்றது.

உண்மையில் பூர்சுவாப்புரட்சி நடந்த நாடுகளில் பாசீசம் தன்னை ஒரு சர்வதேச ஆக்கிரமிப்பாளனாக வெளிப்படுத்தி நிற்கும் போது, பூர்சுவா புரட்சி நடக்காத நாடுகளில் அதற்கு சேவை செய்வதை அடிப்படையாக கொள்கின்றது. இரண்டு பாசீசம் ஜனநாயக பண்பியல் கூறுகள் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிப்பதுடன், மாற்றுக் கட்சிகள் அனைத்தையும் அழிக்கின்றது. முழு மக்களையும் இராணுவ மயமாக்குகின்றது. தேசிய வளத்தை அழித்து, சுரண்டலை ஆழமாக்குகின்றது. பெருநிதி மூலதனத்தையும், பெரு மூலதனத்தையும் ஆதாரமாகவும் அத்திவாரமாகவும் கொள்கின்றது. இவை எப்படி புலிகளுக்கு பொருந்துகின்றது?

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஒரு ஆயுதப்போராட்டம் தேசியத்தின் பால் உருவான போது, அதன் அடிப்படையான பரிணாமமும் மக்களுக்கு எதிராகவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. மக்கள் இலங்கை இனவெறி சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இழிந்த வாழ்வின் மேல், தேசியத்தின் பெயரில் கிடைத்த ஒடுக்குமுறையும் இணைந்த போது மக்கள் எதுவுமற்ற செம்மறி மந்தை நிலைக்கு தாழ்ந்தனர். தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், இதை முன்னெடுப்போர் தொடர்பாக எதையும் மக்கள் வாய் திறந்து அபிப்பிராயம் கூறமுடியாது. வாய் உண்பதற்காக மட்டும் என்பதை, தேசிய விடுதலை இயக்கங்கள் உருவாக்கின. உண்பதற்கு கூட மக்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தினார்களா எனின் இல்லை. மாறாக இருந்த தேசிய பொருளாதாரத்தை தேசிய விடுதலை இயக்கங்கள் அழித்தன. சிங்கள இன தேசிய பாசீச வெறியர்கள் நடத்திய அழிப்பு ஒரு யுத்தம் சார்ந்ததாக இருந்த போது, தேசிய இயக்கங்கள் அதை ஒரு வாழ்வியல் மீது அழித்தனர்.

உண்மையில் பார்த்தால் மக்கள் வாழ்வியல் என்பது இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாகி அதுவே கொடுமையாக மாற்றப்பட்டது. யுத்தத்தின் வளர்ச்சில் சில பிரதேசங்கள், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக மாறியது. அப்போது அங்கு வாழ்ந்த மக்கள், விதிவிலக்குகள் தவிர புலிப் பாசீசத்தை மட்டுமே எதிர்கொண்டனர். மக்கள் வாய் பொத்தி அடிமைகளாக வாழ்ந்தனர், வாழ்கின்றனர். இதை தெளிவாக புரிந்து கொள்ள புலிப் பாசீச கட்டுப்பாட்டில் இருந்து, சிங்களப் பாசிட்டுகளின் கைக்கு அதிகாரம் மாறிய போது, மக்கள் மூச்சு விட்டது உலகெங்கும் பிரதிபலித்தது. அமைதி, பேச்சு வார்த்தை என்ற போர்வையில் சிங்கள இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகள் நடமாடிய போது, புலிகளின் ஆட்சியில் எப்படி இருக்கும் என்பதை ஈவிரக்கமற்ற வகையில் எப்போதும் பிரதிபலிக்கின்றது. மிரட்டல் ஒரு மொழியாக, படுகொலையை மூலதனமாக கொண்டு பணம் வசூலிப்பது, ஆட்களைக் கடத்தி சென்று தமது பாசீச இயக்கத்தில் பலாத்காரமாக இணைப்பது, சுயாதீனமான மக்கள் அமைப்புகளை கைப்பற்றுவது, போராட்டத்துக்கு மக்களை மிரட்டி அழைத்து வருவது, மக்களை அழைத்து வர சமூகத் தொடர்பாளர்களை பல வகையில் நிர்ப்பந்திப்பது, சலுகையுடன் கூடிய கூலிக் கும்பலை உருவாக்கி அவர்கள் மூலம் மக்களைத் திரட்டுவது, லும்பன் குழுக்களை கலாச்சாரத்தின் காவலராக்குவது என, எண்ணற்ற மனித விரோத செயல் அனைத்தும், அரங்கேற்றுவதையே எதார்த்தம் காட்டுகின்றது. இந்த நிலையில் தான் அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேச மக்கள் அடிமையாக வாழ்வதை தொடர்ச்சியாக நிறுவுகின்றது. சொந்தக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியே வருவதற்கு விதிக்கும் பாஸ் தடை, பணயமாக குடும்ப உறுப்பினர் நிறுத்தப்படுதல், சொத்துகளை எழுதி வாங்குதல், வறுமையை திட்டமிட்டே சமூக மயமாக்கல் போன்ற எண்ணற்ற செயல்களால் தான், புலிகள் மக்களை தொடர்ந்தும் தம்முடன் வாழ வைக்கின்றனர்.

அசையா சொத்துகளை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும், புலிகளின் கட்டுப்பாடற்ற பிரதேசத்திலும் கட்டாயப்படுத்தி சிறிய தொகைக்கும் அல்லது இலவசமாக பினாமிகளின் பெயரில் பெருமளவில் வாங்கப்படுகின்றது. உரிமையாளர்கள் அற்ற நிலங்கள் வீடுகள் தனிமனித சொத்துகள், சட்ட விரோதமாக புலிகளில் உள்ள தனி நபர்களால் அபகரிக்கப்படுகின்றது. இங்கு இவை எதுவும் தேசிய சொத்தாக மாற்றப்படவில்லை. புலித் தலைவர்கள் தமது பெயரிலும், பினாமிகள் பெயரிலும் சொத்துகளை அபகரிக்கப்பட்டு குவிக்கப்படுகின்றது. ஏன் இவை தேசிய சொத்தாக, சமூகச் சொத்தாக மாற்றப்படவில்லை.

ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக துகிலுரிந்து நிர்வாணமாகும் நாட்கள் கனிந்து வருவதை இவை காட்டுகின்றது. பெரும் மூலதனத்துடன் ஏகாதிபத்திய கூட்டாளிகளாக புலிகள் தம்மைத் தாம் மிதப்பாக எடுத்துக் காட்டும் நாட்கள் நெருங்கி வருகின்றது. அதை நோக்கி சொத்துகள் தேசியத்தின் பெயரில் அபகரிக்கப்படுகின்றது. ஏகாதிபத்திய வெள்ளையின மக்களின் ரசனைக்கும் ருசிக்கும் ஏற்ப, சுற்றுலா மையங்கள் முதல் பண்பாட்டு ரீதியாக நக்கிவாழவும் தமிழ் மக்களை தலைகீழாக்க புலிப் பாசிட்டுக்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவான குறுந்தேசிய வர்க்க பாசீசம்

இந்த நிலைமை ஏற்படுவதற்கு இலங்கை இனவாத பாசீச அரசை மட்டும் நாம் நேரடியாக குற்றம் சாட்டமுடியாது. மாறாக போராடும் அமைப்புகளின் மக்கள் விரோதத் தன்மையே இதன் பிரதான அடிப்படையாகவும், மூல வேராகவும் உள்ளது. இன ஒடுக்குமுறையை சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்கள் மீது திணித்து அடக்கிய போது, இதற்கு எதிரான போராட்டம் இயல்பாகவும் இயற்கையாகவும் ஒரு உரிமையாகவும் எழுந்தது. இந்த போராட்டம் பாராளுமன்ற அரசியல் வழிகளில் இருந்து நேரடியாக, அதன் பின் இருந்த இளைஞர்களின் கைகளில் அரசியலற்ற ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்த வகையில் இப் போராட்டம் இளைஞர்களின் போராட்டமாக வெளிப்பட்டது. அத்துடன் தமிழ் பாராளுமன்ற தரகு நிலப்பிரபுத்துவ அரசியல் பூர்சுவா அடிப்படை வாதத்துடன் இணைந்து, இதுவே இயக்கங்களின் பொது அரசியல் வழியானது. இந்த பூர்சுவா இளைஞர் இயக்கங்கள் ஆயுதத்தை எடுத்த அதேநேரம், நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ பாசீச அடிப்படை வாதத்தில் நின்று, ஜனநாயக மறுப்பை ஆதாரமாக கொண்டே தங்களை நிலை நிறுத்தத் தொடங்கினர். இந்த ஜனநாயக மறுப்பு சொந்த இயக்கத்துக்குள்ளும், மக்களுக்கு எதிராகவும் ஆரம்ப முதலே கொண்டிருந்தது. இதை மூடிமறைத்தபடி போராடும் சுதந்திர உரிமைக்கு எதிராகவும், மற்றைய இன மக்களுக்கு எதிராகவுமே தனது ஜனநாயக விரோத மற்றும் குறுந்தேசிய இனவாதத்தை அரசியல் மயமாக்கியது. தமிழ் மக்களின் போராட்டம் சார்ந்து எழுந்த 30 க்கு மேற்பட்ட இயக்கங்களில், ஒரு இரு இயக்கம் தவிர அனைத்தும் குறுந்தேசிய இனவாதத்தை அடிப்படையாக கொண்டு, ஜனநாயக மறுப்பை ஆதாரமாக கொண்டே உருவாகின. சொந்த இயக்கத்துக்குள் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து, சர்வாதிகார பாசீச அமைப்புகளாக உருவாகிய இயக்கங்கள், மாற்று இயக்கத்தின் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து அழித்தொழிப்பதன் மூலம் தம்மைத் தாம் நிலை நிறுத்த முனைந்தன. இந்த இயக்கங்கள் மக்களை அற்பமாக கருதியதுடன், மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் சிந்தனைச் சுதந்திரம் அனைத்தையும் அடக்கியொடுக்கியதுடன், அதை துரோகமானதாகவும் பிரகடனப்படுத்தின. மக்கள் சிந்திப்பது ஆபத்தானது என்பது அவர்களின் அரசியலாகியது. மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தையும், மக்களின் ஜனநாயக உரிமையாக கூட இயக்கங்கள் அங்கீகரிக்கவில்லை. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கோரி வீதியில் இறங்கி இயக்கத்துக்கு எதிராக போராடிய போது, புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில், இதை தாம் ஏற்றுக் கொண்டால் "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்ற கூறி மறுத்ததுடன், அதற்கு எதிராக வன்முறையையும் படுகொலைகளையும் ஈவிரக்கமின்றி நடத்தினர். உத்தியோகபூர்வமாக "மேதகு" தலைவர் பிரபாகரன் பெயரில் வெளியிட்ட துண்டுபிரசுரத்தில் "இந்த ஐந்து கோரிக்கைகள் உட்பட விஜிதரனுடன் சம்பந்தப்படாத, விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய@ மேலும் இரு கோரிக்கைகள் வெகுஜன அமைப்பின் மூலம் எம்முன் கொண்டு வரப்பட்டு பேச்சுவார்த்தை தொடரமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது." என்று புலிகள் அறிவித்து நிராகரித்த இரு கோரிக்கையும் என்ன எனப் பார்ப்போம்.

1. .மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.

2. .மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.

இந்தக் கோரிக்கை "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறிய போது, பாசீசம் சதிராட்டம் போடுவதையே காணமுடியும். எந்த வகையிலும் இதை மக்களுக்கு நிராகரிக்கும் உரிமை புலிகளுக்கு கிடையாது. மக்கள் விரோதியான புலிகள் இதை மக்களுக்கு மறுத்தார்கள். இந்த உரிமை மக்களின் அடிப்படை உரிமையாகும். இதை நிராகரிக்கும் புலிகளின் வக்கிரமான மக்கள் விரோத போக்கு, வரலாறு காணாத வகையில் அனைத்து துறையிலும் விசுவரூபம் எடுத்துள்ளது. இன்று வரை இது தான் புலிகளின் அரசியலாக, ஒழுக்கமாக, படுகொலையாக நீடிக்கின்றது. சர்வாதிகார பாசீச மக்கள் விரோத வன்முறை அரசியலே, எப்போதும் மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிக்கின்றன. புலிகள் அதன் ஓட்டு மொத்த மக்கள் விரோதிகளாக இருப்பதையே, அவர்களின் துண்டுப்பிரசுரம் அம்பலப்படுத்துகின்றது. மக்கள் மக்கள் என்று வாய் கிழிய பிதற்றும் புலிகளின் உண்மை முகம், மக்களின் அடிப்படை மனித உரிமையை மறுப்பதை ஆதாரமாக கொண்டே எழுகின்றது. இவற்றை அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக்குகின்றன. மக்களின் உரிமைகள் புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடக் கூடியது என்றால், மக்கள் விரோத கொடூரத்தை நாம் அவர்களின் சொந்த கூற்றின் ஊடாகவே புரிந்து கொள்ளமுடியும். அதி புத்திசாலியாக தனிமனித வழிபாட்டின் மூலம் நிறுவ முனையும் புலிகளின் தேசியத் தலைவர் "மேதகு" பிரபாகரனினதும், புலிகளினதும் "தணியாத தாகமான தமிழீழக் கோரிக்கை" தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திர மறுப்பில், அதன் கல்லறையின் மீதே கோரப்படுகின்றது. தமிழீழம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, புலிகளை அரசியல் அநாதையாக்கி விடுமல்லவா. அதனால் புலிகள் தமது பாசீச தனிமனித சர்வாதிகார அதிகாரத்தில் மக்களை துப்பாக்கி முனையில் மந்தைகளாக, வாய்பொத்தி கைகட்டி தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர். தமிழ் மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட சர்வாதிகார பாசீச கட்டமைப்பில் இயக்க மோதலும், உட்கட்சி படுகொலைகளும் விசுவரூபம் எடுத்தது. இதன் விளைவாக இயக்கப் படுகொலைகள் ஒரு யுத்தமாகவே புலிகளால் நடத்தப்பட்டது. உயிருடன் தீ வைத்து கொழுத்துவது முதல் ஈவிரக்கமற்ற சித்திரவதை படுகொலைகள் வரை ரசித்து செய்யவும் பின்நிற்கவில்லை. கைது செய்யப்பட்டவர்களை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று போடுவதே வீரத்துக்குரிய நடவடிக்கையாக, புலிகளின் பாசீச வக்கிரம் வெளிப்பட்டது. ஜனநாயக மறுப்பையும் படுகொலை அரசியலையும் நியாயப்படுத்தி தொடருமளவுக்கு, புலிகளின் தனிமனித தனிச் சர்வாதிகாரம் மக்கள் விரோத அரசியலில், தமிழ் மக்களின் நியாயமான சுயநிர்ணய போராட்டத்தின் பெயரில் அரங்கேறியது, அரங்கேறுகின்றது. தம்முடன் முரண்பட்ட அனைத்தையும், சொந்த இயக்கத்துக்குள்ளும் விதிவிலக்கின்றி துரோகமாக காட்டி அவர்களை இல்லாது ஒழிப்பதன் மூலம், தம்மையும் தமது பாசீச சர்வாதிகார அரசியலையும் நிலைநாட்டுகின்றனர். இங்கு எந்த இடத்திலும் அரசியல் ரீதியாக முன்னேறிய வெற்றியில், தம்மை நிலைநாட்டிவிடவில்லை. சதிகள் மற்றும் படுகொலைகளின் மூலமே புலிகள், அரசியல் அநாதையாகாது தம்மைத் தாம் தக்க வைக்கின்றனர்.

மறுதளத்தில் இந்த இயக்க அழித்தொழிப்பு பாசீச நடைமுறையில் தோற்றுப் போனவர்கள், நேரடியாக அன்னிய கைக்கூலியாக மாறினர். முன்னைய மறைமுக கைக் கூலிதனத்தை களைந்து, நேரடியாக மற்றைய நாடுகளின் சுரண்டல் விஸ்தரிப்புவாத கூலிப்பட்டாளமாக மாறினர். பின்னால் இலங்கை சிங்கள இனவெறி பாசீச அரசின் தயவில் நேரடிக் கைக்கூலியாக ஆயுதம் ஏந்திய அமைப்புகளாகவும், பாராளுமன்ற கட்சிகளாகவும் தம்மை தாம் நிலை நாட்டுகின்றனர்.

இந்த நிலைக்கு இட்டுச் சென்ற வரலாற்றில், புலிகளின் ஜனநாயக மறுப்பு தனிச் மனித சர்வாதிகாரமும், மக்கள் விரோத பாசீசத் தன்மை ஒரு அடிப்படை கூறாக இருந்தபோதும், இயக்கங்களின் முந்திய மக்கள் விரோத ஜனநாயக மறுப்புடன் கூடிய கைக்கூலித்தன அரசியலே இதன் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இருந்தது. மக்களை வெறுக்கும் சமூக கண்ணோட்டம் இதன் அத்திரவாரமாக உள்ளது. மக்களின் போராட்டம் என்பதை மறுத்து, இளைஞர்களின் போராட்டமாகி, அதுவே அன்னிய உதவியாகி, ஆயுதங்களே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற நடைமுறை, மக்களை வெறுக்கும் அளவுக்கு போராட்டம் சீரழித்தது. இது அனைத்து இயக்கத்தினதும் அடிப்படை கொள்கையாகும். எதிர் நிலையில் மற்றைய இயக்கங்களால் இங்கு புலிகள் அழிக்கப்பட்டிருந்தாலும், இதே கதிதான் புலிக்கும் நிகழ்ந்திருக்கும். புலிகளின் ஈவிரக்கமற்ற அழித்தொழிப்பு, துரோகத்துக்கு எதிராக சொந்த காலில் வாழ வழியற்ற இளைஞர்களையும், தவிர்க்க முடியாமல் துரோகத்துக்கு துணை நிற்கச் செய்தது. இது துரோக இயக்கத்தை ஆயுதபாணியாக்கியது. ஆயிரமாயிரம் இயக்க உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு தமது சொந்த குடும்பத்துடன் சாதாரணமாக வாழ முடியாத அவலமும், மறுதளத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாத பொருளாதார பலவீனமும், புலிகளின் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைக்க, துரோக இயக்கத்தின் பின்னால் தவிர்க்க முடியாமல் ஆயுதமேந்தி நிற்க நிர்ப்பந்தித்தது. இந்த துரோக இயக்கத்தின் தொடர்ச்சியான ஆள்பலத்துடன் கூடிய அடிப்படையும் ஆதாரமும், ஈவிரக்கமின்றிய புலிகளின் படு கொலையுடன் கூடிய அழித் தொழிக்கும் பாசீச அரசியலே துணை நிற்கின்றது. அதாவது இன்று அரசுடன் துரோக கைக்கூலி இயக்கங்கள் நிலைத்து நீடித்து நிற்பதற்கான அடிப்படையையும், ஆதாரத்தையும், ஆள் பலத்தையும்@ புலிகளின் பாசீச கண்ணோட்டத்துடன் கூடிய அழித்தொழிப்பு பாசீச அரசியலில் இருந்தே உற்பத்தியாகின்றது.

இந்த துரோக இயக்கத்தை எதிர்த்து பலர் சொந்த காலில் நிற்க முனைந்தனர். குடும்பத்தை சார்ந்தும், சொந்தப் பிழைப்பைச் சார்ந்தும், துரோகத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தும், ஒரு பகுதி இளைஞர்கள் தம்மை நிலைநிறுத்தினர். ஆனால் புலிகள் ஈவிரக்கமின்றி தமது பாசீச இரத்த வேட்கைக்கு இவர்களை பலியாக்கினர். எம் மண்ணில் புலிகளின் படுகொலை பாசீச அரசியலுக்கு அண்ணளவாக 5000க்கும் அதிகமான தமிழ் போராளிகள் பலியாகினர். தொடர்ந்தும் பலியாகி வருகின்றனர். இந்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலத்திலும், அதன் பின்பும் இது உச்சத்தில் இருந்தது. நாள் ஒன்றுக்கு 3, 5 படுகொலைகள் என்று, வருடம் 1000 முதல் 1500 மேற்பட்டோரை வடக்கு கிழக்கில் வீதிப் படுகொலைகளை புலிகள் செய்தனர். அன்றைய நாளாந்த பத்திரிகைச் செய்திகளில் இருந்து இதைத் தொகுத்தலே, இதை மீளவும் உறுதி செய்ய முடிகின்றது. துரோக இயக்கங்கள் புலிகளை கொன்ற போது, புலிகள் அதை அம்பலம் செய்ததை வைத்து இவற்றை வேறு பிரித்து, இதை தொகுக்க முடிகின்றது. இந்திய ஆக்கிரமிப்பாளன் நாட்டை விட்டு வெளியேறிய பின்பு, சில ஆயிரம் பேரைக் கைது செய்த புலிகள், அவர்களை வதைமுகாமில் வைத்தே படுகொலை செய்தனர். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் எம்மண்ணில் இருந்த காலத்தில், என்.எல்.எப்.ரியின் வடமராச்சி பகுதியைச் சேர்ந்த சகல தாழ்த்தப்பட்ட உறுப்பினர்களையும் தெரிவு செய்து, ஒரு கிழமைக்குள்ளாகவே சாதிரீதியாக வீதிவீதியாக புலிகள் படுகொலை செய்தனர். அதற்கு முன்பாக வடமராட்சி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த புலிகளின் பொறுப்பாளர் படுகொலை செய்யப்பட்ட பின்பே, இந்த சாதிய வெறி அரங்கேற்றப்பட்டது. இது கிழக்கில் புலிகள் இயக்கத்தில் ஆயுதம் ஏந்தியிருந்த முஸ்லீம்களை உட்படுகொலைகள் மூலம் கொன்ற பின்பே, முஸ்லீம் மக்கள் மேல் நடத்திய படுகொலையை போன்றது. தெல்லிப்பளை பகுதியில் புலி உறுப்பினர் ஓருவன் (பாரிசில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் மனைவியின் தம்பி) புலிகள் சார்பாக தானாக முடிவெடுத்து, 16 அப்பாவிகளை துரோகியாக அறிவித்து தனிப்படவே சுட்டு கொன்றான். இந்திய இராணுவம் அவனை சுட்டுக் கொல்லப்படும் வரை, அவன் தனது சொந்த மறைவிடத்தை விட்டு வெளியில் வருவதே, படுகொலை செய்ய என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த மாதிரிப் படுகொலைகள் வரலாறு காணாத மனித துயரத்தை ஏற்படுத்தியது. இன்று எம்மண்ணில் புலிகள் படுகொலை மற்றும் சித்திரவதையால் ஏற்பட்ட சமூக ஊனம், மிருகத்தனமாக அடக்கப்பட்டு அடங்கிய மன அழுத்ததுக்குள் மக்கள் ஆழமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். மாற்றுக் கருத்துடன் கூடிய சிந்தனை சுதந்திரம் மறுக்கப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையின் தொடர்ச்சியான வரலாறு என்பது, சமூகம் தொடர்ச்சியான வரலாற்று செயற்பாட்டை இழந்து சிதைவதை ஓரு பண்பாக்கியது. இதனால் மக்கள் செயற்பாடற்ற செம்மறி மந்தைகளாக, புலிகள் சொல்வதை செய்ய வேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் புலிகளின் பாசீசக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து மக்கள் தப்பியோட விரும்பினர், தப்பியோடினர், தப்பியோடுகின்றனர். சொந்த மண்ணை விட்டு தப்பியோடியவர்களின் எண்ணிக்கை, தமிழ் மக்களின் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோராவர். இந்த தப்பியோட்டம் முடிவின்றி தொடர்ந்து நிகழ்கின்றது. மக்கள் வெளியேறுவதை பலாத்காரமாக தடுத்து நிறுத்தும் வகையில் புலிகளின் அனுமதியை பெறுவது அவசியமாக்கியதன் மூலம், தமது பாசீச அதிகாரத்தின் கீழ் மக்களை சிறை கைதிகள் ஆக்கியுள்ளனர். அதேநேரம் புலிகள் கொழும்பில் நடத்தும் தொடர்ச்சியான தற்கொலை தாக்குதலை தடுக்கும் வகையிலும், அரசு வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறி வருவோரை தடுப்பதாலுமே, இன்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இயற்கைக்கு புறம்பான வகையில் அரசு மற்றும் புலிகள் மக்கள் வெளியேறுவதை கடடுப்படுத்துவது நிறுத்தப்படின், வடக்கு கிழக்கில் மக்கள் வாழ மாட்டார்கள். புலிகள் போராடும் பிரதேசத்தில் மக்களையே காணமுடியாத ஒரு சூனியப் பிரதேசத்துக்காக போராட வேண்டிய அளவுக்கு, புலிகளின் மக்கள் விரோத அரசியல் வக்கிரம் பிடித்த பாசீசமாக பரிணமித்துள்ளது.

மக்கள் மீது வன்முறையை அடிப்படையாக கொண்ட புலிகளின் அரசியல், மக்கள் சார்ந்த சமூக கூட்டுகளைக் கூட சிதைத்துள்ளது. சமூகத்தின் அனைத்து செயற்பாட்டையும் புலிகள் சார்ந்து புலி மயமாக்கப்பட்ட நிலையில், மக்களின் துயரங்கள் வரைமுறையின்றி பெருகிச் செல்லுகின்றன. இங்கு இந்த அடிப்படையை வைத்தே புதிய படுபிற்போக்கான மதவாத அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும் தம்மை விரிவாக்குவதற்கு, புலிகள் அரசியல் ரீதியாக அனுமதிக்கின்றனர். இவ்விரு போக்கினரும் போராட்டத்துக்கு எதிராக, ஏகாதிபத்திய உலகமயமாதல் நோக்கத்தை பூர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை கோருகின்றவர்களையும், தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்க கோருபவர்களையும், ஏழை மக்களின் துயரத்தை போக்க தீர்வை கோருபவர்களையும் அழித்தொழிப்பதன் மூலம், படுகொலை செய்வதன் மூலம் புலிகள் பதிலளிக்கின்றனர். இதன் மூலம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும், நியாயமான இயற்கையான மக்களின் போராட்டத்தையும் புலிகள் மறுத்து, மக்கள் விரோத கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டு தமது பாசீச அதிகாரத்தை நிறுவியுள்ளனர். ஆயுதம் மூலம் அனைத்தையும் கையாளும் புலிகளின் பாசீச ஆட்சியில், சமூக இயக்கம் என்பது நினைத்துப் பார்க்கமுடியாது. இது மக்களின் அவலங்களை எல்லையற்ற வகையில் ஆழமாக விரிவாக்குகின்றது.

சுயநிர்ணயம் என்பது உரிமையைக் கோருவதாகும்

பொருட்களை மனிதனின் உழைப்பே உருவாக்குகின்றது. இது இயற்கை மீது நிகழ்கின்றது. இப்படி உழைத்து உருவாக்கிய பொருட்கள் மீது, மனிதன் ஆளுமை செலுத்த தவறிய உலகில் நாம் வாழ்கின்றோம். மாறாக பொருட்கள் மனிதன் மேல் ஆளுமை செலுத்துகின்றது. தன் கையால் உருவாக்கிய பொருட்களின் அடிமையாகிய பரிதாபம், மனித சமுதாயத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளது. இது போல் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமைப் போராட்டத்தை கோரியவர்கள், போராடுவதற்காக ஆயுதத்தை ஏந்தினர். ஆனால் ஆயுதத்தை ஏந்தியவர்கள் ஆயுதம் மேல் ஆளுமை செலுத்தத் தவறி, போராட்டத்தை ஆயுதத்தின் அடிமையாக்கியதன் மூலம், போராட்டம் மீள முடியாது ஆயுதத்தின் அடிமையாக்கினர். இதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளனர். ஆயுதத்தின் முன் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு நலமடிக்கப்பட்ட நிலையில், ஆயுதத்தை வழிபடவும் அதன் அடிமையாக இருப்பதுமே போராட்டமாக மாறிவிட்ட புலிகளின் பாசீச சமுதாயத்தில் நாம் வாழ்கின்றோம்.

புலிகளின் மக்கள் விரோத பாசீசம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை வென்று தருவதாக கூறியபடியே, தனது தலையில் வைத்து கூத்தாடுகின்றது. "மக்கள்" "மக்கள்" என்று சொல்லுக்கு பத்துதரம் காவடி தூக்கி ஆடுபவர்கள், மக்கள் என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாத பாசிட்டுகள், மக்களையிட்டு கேவலமான பார்வை கொண்டே செயல்படுகின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமாகி அவர்களுடன் இணைந்து எந்த உழைப்பிலும் ஈடுபடாத, ஆயுதமேந்திய லும்பன் வாழ்வை அடிப்படையாக கொண்ட புலிகளின் மாபியாவுக்குரிய கட்டமைப்பு, மக்களின் வாழ்வுடன் எந்தவிதத்திலும் இணைந்து செயற்படுவதில்லை. உலகில் எங்கும் காண முடியாத அளவுக்கு மக்களின் உழைப்பின் மீது கொடூரமான வரி விதித்தும், மிரட்டி பணம் பறித்தும், மக்கள் சொத்தை கொள்ளையிட்டும், மக்களை கொடூரமாக சுரண்டியும், வலுக்கட்டாயமாக மக்களின் சொத்தை பறித்தும் தம்மை நிர்வகிக்கும் புலிகளின் லும்பன் கட்டமைப்புடன் கூடிய சொகுசு வாழ்க்கை முறை, மக்களை எப்போதும் எதிரியாக காண்கின்றது. தமது லும்பன் சுகபோக வாழ்க்கை கேள்விக்குள்ளாவதை, புலிகளை சார்ந்து பிழைத்துக் கொள்ளும் யாரும் அனுமதிப்பதில்லை. புலிகளிடம் எதிர்த்து எந்த தமிழ் மக்களும் கேள்வி கேட்டு உயிருடன் வாழ்ந்ததில்லை அல்லது சித்திரவதையை சந்திக்காது இந்தப் போராட்டத்தில் வாழ்ந்துவிடவில்லை. புலிகளின் பின்னால் ஒட்டுண்ணிகள் போல பிழைத்துக் கொள்ளும் ஒரு கூட்டமும், சொந்த புகழ் சார்ந்து பொழுது போக்கும் ஒரு நக்கிபிழைக்கும் கூட்டமும், இந்த லும்பன் அரசியல் வாழ்வின் பின்பு தமிழ்மக்களை எதிரியாக கருதி அவர்களை ஒட்டச் சுரண்டுகின்றனர்.

கூலிக்கு கரைவலை இழுக்கவோ, மீன் பிடிக்கவோ, மண்வெட்டி பிடித்து நிலத்தை பண்படுத்தவோ தெரியாத தலைமையைக் கொண்டதே புலிகள் இயக்கம். இதற்கு தன்னை தயார்படுத்த மறுக்கும் தலைமை, இதையே வாழ்க்கையாக கொண்ட மக்களை இழிவாக பார்ப்பது இயற்கையாகும். போராட்டத்தைச் சொல்லி ஒரு பகுதி இளைஞர்களை கடுமையாக உழைக்க கோரும் புலிகள், அந்த உழைப்பை மூலதனத்துக்கு வெளியில் மதிப்பதில்லை. இங்கு சுரண்டுவது மையமான நோக்கமாக குறிக்கோளாக கொண்டே உழைப்பை இயக்கத்துக்குள் பயன்படுத்துகின்றது. எமது மக்களின் உழைப்பை மதிக்காது, அவர்களின் நலனை சூறையாடும் பாசீசப் புலிகள், மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் கொடுப்பது, லும்பன் சொகுசு வாழ்வுக்கு சாபக் கேடாக அமைந்துவிடும் என்பதால், மக்களை அடிமையாக கேவலமாக நடத்துகின்றனர். இதை அவர்களின் அனைத்து நடத்தைகளுடன் கூடிய நடவடிக்கைகள் முதல் அவர்களுக்கே உரிய லும்பன் மொழி என அனைத்திலும் துல்லியமாக இதை இனம் காணமுடியும். தமிழ் மக்களின் போராட்டம் என்பது, புலிகளின் பாசீச உள்ளடகத்தில் இருந்து முற்றிலும் வேறானது. தமிழ் மக்களின் சுயநிர்ணயம் என்பது தமிழ் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறையையும் களைவதாகும். இதில் தமிழ் மக்களுக்குள் தனிச் சலுகைகளை வழங்குவதில்லை. வெறுமனே சிங்கள அரசை மட்டும் எதிர்த்தல்ல. தமிழ் துரோகிகளையும், தமிழ் அடக்கு முறையாளர்களையும் எதிர்த்தே சுயநிர்ணயத்தை தமிழ் மக்கள் கோருகின்றனர்.

தமிழ் மக்கள் தமது சுயநிர்ணயம் என்பதை சொந்த தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட போராட்டத்திலேயே வரையறுக்கின்றனர். இந்த தேசிய பொருளாதாரம் அன்னிய பொருளாதாரம் ஊடுருவுவதை அனுமதிப்பதில்லை. அன்னிய பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்தையும் சிதைப்பதை அனுமதிப்பதில்லை. இந்த தேசிய பொருளாதாரம் சுயநிர்ணயத்தை அடைய தமிழ் மக்களின் அனைத்து ஏற்றத் தாழ்வையும் எதிர்க்கின்றது. இது சாதியத்தை எதிர்க்கின்றது இது ஆணாதிக்கத்தை எதிர்க்கின்றது. பிரதேச வாதத்தை எதிர்க்கின்றது. சிறுபான்மை தேசிய இனங்களை அரவணைக்கின்றது. பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கரம் கொடுக்கின்றது. இது தமிழ் மக்கள் சுரண்டப்படுவதை எதிர்க்கின்றது. இது சொந்த மொழி வளத்தை பாதுகாக்கின்றது. மற்றைய இன மக்களுடன் ஐக்கியத்தை ஒன்றிணைவை முன்மொழிகின்றது.

இந்த தேசிய சுயநிர்ணயமே தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தின் உள்ளடக்கமும் அடிப்படையுமாகும். எமது இந்த தேசிய போராட்டத்தை படுகொலைகள் மூலம் துப்பாக்கி முனையில் தமதாக்கிய புலிகள், இந்த தேசிய சுயநிர்ணயத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்து தனது பாசீசத்தை நிறுவுகின்றது. தமிழ் மக்களின் போராட்டத்தை பாசீச படுகொலைகள் மூலம் குத்தகைக்கு எடுத்தவர்கள், தமிழ் மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை எதிர்த்தே தமது அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர். தமிழ் மக்கள் சுரண்டப்படுவதை அங்கீகரிப்பதுடன், அதற்கு படுகொலைகள் மூலம் பாதுகாப்பு கொடுக்கின்றனர். சாதிய ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டு, அதை அப்படியே பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாக எழும்போது குண்டுகளை பரிசளிக்கின்றனர். ஆண்களின் ஆணாதிக்கத்தை கம்பளம் விரித்து படுக்கவிட்டு பாதுகாப்பதிலும், இருக்கின்ற ஆணாதிக்க குடும்ப ஒழுங்கு சிதைவதை பண்பாட்டு சிதைவாக காட்டி பெண்களுக்கு ஜனநாயக மறுப்பை பரிசளிக்கின்றனர். மற்றைய இன மக்களை எதிரியாக காட்டி, அவர்களை ஈவிரக்கமின்றி கொன்று வெறியாட்டம் போடுகின்றனர். இதன் மூலம் தேசிய வெறியை ஊட்டி வளர்த்து, இனவாதத்தை தமது பாசீசத்துக்கு வேலியாக்குகின்றனர்.

சிங்கள இனவெறி பாசீச அரசு தமிழ் மக்களுக்கு எதிராக கையாளும் நேரடி இனவொடுக்கு முறை என்ற ஒரேயொரு விடயத்தில் மட்டுமே, மக்களின் கோரிக்கையுடன் புலிகள் துரதிஸ்டவசமாக இணைந்து நிற்கின்றனர். தமிழ் மக்களின் இந்த உடன்பாடு எதிரி மீதான புலிகளின் லும்பன் அரசியல் நடவடிக்கை மீது அல்ல. சிங்கள பாசீச இனவெறி அரசு தமிழ் மக்களின் எதிரி என்பதில், கொள்கை ரீதியாக மட்டுமே ஒன்றுபடுகின்றனர். ஏன் எதிரி என்ற உள்ளடகத்தில் மீது அல்ல. சிங்கள பாசீச இனவெறி அரசு தமிழ் மக்களின் எதிரி என்று கொள்கை ரீதியான உடன்பாடு தவிர, தமிழ் மக்களின் மற்றைய அனைத்து கோரிக்கையையும் பாசீச கரங்கள் மூலம் புலிகள் அடக்கியொடுக்குகின்றனர். தமிழ்மக்கள் தமது அடிப்படை உரிமையை கோருவதையே துரோகமென்று முத்திரை குத்தி, கொன்று போடுகின்றனர். அரசுடனும், இந்தியா மற்றும் ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவி காட்டிக் கொடுக்கும் தமிழ் குழுக்களின் துரோகம், இந்த உரிமைப் போராட்டத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது. தமிழ்மக்கள் தமது கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கோருவதை, சுரண்டலையும், ஆணாதிக்கத்தையும், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்து போராடுவதை, புலிகள் துரோகமாக முத்திரை குத்தி படுகொலை செய்வது, தமிழ் மக்களுக்கு எதிரான அப்பட்டமாக ஜனநாயகத்தை மறுக்கும் துரோகமாகும். சிங்கள இனவெறி அரசின் இடத்தில் தமிழ் குறுந்தேசிய ஜனநாயக மறுப்பு அதிகாரத்தை நிறுவுவதன் மூலம், தமிழ் மக்களை ஒட்டச் சுரண்டி அடக்கியாளும் அதிகாரத்தை பிரபாகரனின் தலைமையில் தம்மிடம் தரும்படியே புலிகள் கோருகின்றனர்.

இங்கு தமிழ் மக்களை அடக்கியாளும் சிங்கள இனவாதிக்குப் பதில், குறுந்தேசிய இனவாதத் தமிழனை (பிரபாகரனை) அதிகாரத்தில் ஏற்றுவதன் மூலம், தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்கு முறையை களைவதற்கு அப்பால் எதையும் பெற்றுவிடப் போவதில்லை. சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கும் இனவெறி அடக்குமுறை மட்டுமே, புலிகளின் ஆட்சியில் இல்லாது போகும். புதிய அடக்குமுறை தமிழன் தலைமையில், தமிழ் மக்களுக்கு இருப்பதை விட கோரமாக பரிசளிக்கப்படும். அதே நேரம் சுரண்டல், சாதிய கொடுமைகள், ஆணாதிக்கம் என்று அனைத்து அடக்கு முறையையும் புலிகள் பாதுகாத்து, மேலும் கூர்மையாக அடக்குமுறையை தமிழ் மக்கள் மேல் தொடர்ந்தும் கையாள்வர். அதை தனிச் சர்வாதிகார பாசீச நடைமுறை ஊடாகவே நிறுவிப் பாதுகாப்பர். இன்று இதன் பண்புகளை புலிகளின் அன்றாட அனைத்து நடைமுறைகளில் நாம் காணமுடியும்.

இனவெறி அரசுக்கு எதிரான புலிகளின் போராட்டத்தில் தமிழ் மக்களின் நலன்கள் என்ற ஒரு விடயத்தில் ஒன்றிணைந்து நிற்பதால் மட்டுமே, புலிகளை அரசியல் ரீதியாக தக்க வைக்கின்றது. இலங்கையில் இன முரண்பாடு முதன்மை முரண்பாடாக மாறியுள்ள நிலையில், அந்த முரண்பாட்டில் போராடும் சக்திகளை சரியாக மதிப்பிடுவது அவசியமாகும். இந்த வகையில் புலிகளின் மக்கள் விரோத பாசீச போக்குகளை கடுமையாக விமர்சிக்கும் அதேநேரம், இலங்கை அரசுக்கு எதிரான போரட்டத்தில் புலிகளின் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் எதிரிகளான அரசு மற்றும் அன்னிய தலையீட்டை நடத்த முனையும் எந்த சக்தியும், எந்த வடிவிலும் புலிகளை அழிப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனெனின் இன முரண்பாடு முதன்மை முரண்பாடாக தெளிவாக எமக்கு முன்னால் நிற்கின்றது. புலிகளின் பாசீச குறுந்தேசிய இனவாதத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் விரோத போக்கை முறியடித்து, மக்களின் அடிப்படை உரிமையை உள்ளடக்கிய போராட்டத்தை முன்னெடுக்க, இன முரண்பாட்டை கையில் எடுக்க வேண்டியுள்ளது. இன முரண்பாட்டை கையில் எடுத்து போராடுபவர்களே புலிகளை அரசியல் ரீதியாக அழிப்பதன் மூலம், தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை உள்ளடங்கிய போராட்டத்துக்கு, புலிகளுக்கு பதிலாக தலைமை கொடுக்க வேண்டிய வரலாற்று கட்டத்தில் நிற்கின்றோம். இதை மீறி எந்த வரலாறும் சுயமாக இயங்கி விடுவதில்லை.

குறிப்பு: இக்கட்டுரை "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற இரயாகரன் எழுதி வெளிவராத நூலில் இருந்து, சமகால முக்கியத்துவம் கருதி இப்பகுதி தரப்படுகின்றது.