தமிழ் அரங்கம்

Showing posts with label ஜே.வி.பி. Show all posts
Showing posts with label ஜே.வி.பி. Show all posts

Friday, March 20, 2009

மகிந்தாவின் பாசிசத்துக்கு முண்டு கொடுக்கும் புலியிசம்

மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.

மக்கள் சமாதானத்துக்காகவும் அமைதிக்காகவும் ரணிலுக்கு வாக்களிப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட புலிகள், தமிழ்மக்களின் இந்த விருப்பத்தை குழிபறிக்கவே, மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றனர். இப்படி புலிகள் யுத்தத்தை விரும்பித்தான், தம்மை தூக்கில் போடும் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். முந்திக்கொண்டே யாழ்குடாவில் கிளைமோர் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தினர். இப்படி புலிகளே யுத்தத்தை தொடங்கினர். மறுபக்கத்தில் மகிந்த அரசை தேர்ந்தெடுக்கவும், மக்களை வாக்களிக்கவிடாது தடுக்கவும், மகிந்த புலிகளுக்கு கையூட்டும் வழங்கினார். இப்படித்தான் தமிழ் மக்களைக் கொல்லும் கொலைகார பாசிட்டுக்கள், புலிகளின் துணையுடன் அதிகாரத்துக்கு வந்தனர்.

தான் இந்த அதிகாரத்துக்கு வர, மகிந்த போட்ட வேடமோ அப்பாவி வேஷம். கையெடுத்து கும்பிட்டும், இரந்தும், நடித்தும், இந்த பாசிட் அதிகாரத்தை கைப்பற்றினான். இதற்கு முன் பிரதமர் பதவியில் இருந்த போது, சாதுவைப் போல் வேஷம் போட்டு, அதிகாரத்தை கைப்பற்றவே தன்னை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டான். இந்த அதிகாரத்துக்கு வர ஜே.வி.பியின் உதவி.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, July 15, 2008

முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவுடன், ஜே.வி.பி நடத்திய வேலை நிறுத்தம்

உலகில் அரசியல் அதிசயங்கள் நடக்கின்றன. இலங்கை தொழிலாளி வர்க்கத்தின் காலை உடைத்து விட்டுத்தான், இவர்கள் எல்லாம் கூட அரசியல் நாடகமாடுகின்றனர். ஜே.வி.பி திடீரென தொழிலாளர் என்று கோசம் போட, யூ.என்.பி.யும், புலிப்பினாமியான கூட்டமைப்பும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க அரசியலுடன் எழுந்திடா வண்ணம், இவர்கள் செய்கின்ற அரசியல் திருகுதாளங்கள் இவை. தொழிலாளியின் முதுகில் குத்தித் தான், இவர்கள் தமது சொந்த அரசியல் செய்கின்றனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் வெற்றி பற்றி அரசும் ஜே.வி.பியும் கூச்சல் போடுகின்றனவே, அப்படியாயின் தோற்றவர்கள் யார்? ஆம் தொழிலாளி வர்க்கம் தான், மீண்டும் தோற்றுப் போனது. அவர்கள் தோற்றுப்போகும் வகையில், தொழிலாளியின் பெயரால் ஒரு பொருளாதார வேலை நிறுத்தம்;. தொழிலாளியின் பொருளாதார அவலத்துக்கு காரணமான அரசியல் போராட்டத்தை தவிர்த்து, பொருளாதார போராட்டத்துக்குள் முடக்கி தொழிலாளியை தோற்கடித்தனர். இது தான் ஜே.வி.பி அரசியல்;. இதனால் தான் இனவாத முதலாளித்துவ யூ.என்.பி.யும், புலிப்பினாமியான முதலாளித்துவ கூட்டமைப்பும் ஆதரித்தனர்.

இவர்கள் எல்லாம் இதன் மூலம் தத்தம் சொந்த அரசியலை செய்தனர். ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு எப்படி அரசு ஆதரவு அரசியலாக்கப்படுகின்றதோ, தேசியத்தின் பெயரில் எப்படி புலிப் பாசிசம் அரங்கேற்றப்படுகின்றதோ, அப்படியே தான் தொழிலாளியின் பெயரில் இவர்கள் அரசியல் செய்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக புலியின் பெயரால் பச்சை இனவாதத்தைக் கக்கிய ஜே.வி.பி தான், இனவாத அரச பாசிசத்தைக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி இன் இந்த இனவாதம் தான், கட்சியின் ஒரு பகுதியை அரசின் ஒரு பகுதியாக்கியது. ஜே.வி.பி தொடர்ந்து இனவாத அரசியலை நம்பி அரசியல் செய்யமுடியாது. அதை அரசு ஜே.வி.பியின் ஒரு பகுதியை பிளந்து, தனக்கு ஆதரவாக வைத்தபடி
..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்