தமிழ் அரங்கம்

Saturday, June 27, 2009

மகிந்த பாசிசத்துக்கு ஒளிவட்டம் கட்டி கூத்தாடும் பாசிச பக்தர்கள், மக்களுக்கு என்ன தான் சொல்லுகின்றனர்

மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள் யார்? இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.

இப்படி மக்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் முன்னிற்க முடியாதவர்கள், மகிந்தாவின் பாசிசத்துக்காக குலைக்கின்றனர். புலிப் பாசிசத்துக்கு பதில், மகிந்தாவின் பாசிசத்தை தமிழ்மக்கள் மத்தியில் திணிக்கவே படாதபாடு படுகின்றனர். புலியை தமிழ்மக்கள் மத்தியில் ஒழித்தல் தான், இவர்களின் குருட்டுக் கண்ணுக்கு முன்னாலுள்ள பேசும் பொருள்.
இதைச் செய்யவே, மகிந்தாவை நம்பலாமா என்ற கேள்வி கேட்டு, எப்படியோ நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்றனர். இதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று எதிர் கேள்வி கேட்டு, பாசித்துக்காக கூத்தாடுகின்றனர்.

இந்த பாசிச கூத்தாடிகள் பெரும்பாலும் நன்றாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள், சமூகத்தை மடக்கி கதைக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் ......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, June 26, 2009

ஜனநாயகம் என்றால் என்ன?

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மக்களை நம்புவதா!? மகிந்தாவை நம்புவதா!?


இன்று அரசின் கூலி எழுத்தாளர்கள் முன்வைக்கும் மையமான பிரச்சாரம் இதுதான். சுற்றிச் சுழன்று இதற்குள் மனிதவாழ்வை திரித்துக் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் புலியெதிர்ப்பு பேசிய கூட்டத்தை அரசு சார்பு அரசியல் மயமாக்கி, அரசை நம்பக் கோரும் பிரச்சாரத்தை முன் தள்ளுகின்றனர். வேறு மாற்றுவழி தமிழ் மக்களுக்கு இல்லை என்கின்றளர். இப்படி இதற்குள் தர்க்கம் செய்யும் பாசிசக் கூட்டம், மக்கள் அரசியல் எதையும் கொண்டிருப்பதில்லை, அதை நம்புவதும் கிடையாது. இப்படி செயற்படுபவர்களில் சிலர் இலங்கை இந்திய இரகசிய அரசியல் ஏஜண்டுகள்.
இவர்கள் முன்தள்ளும் தர்க்கங்கள், புலிப் பாணியிலானது. எப்படி புலிகள் மக்களை நம்பாது செயற்பட்டனரோ, எப்படி தர்க்கம் செய்தனரோ அதை ஒத்தது. அன்று புலிக்கு, இன்றோ அரசுக்காக தர்க்கம் செய்கின்றனர். எதிர்த்தால், வேறு வழி தான் என்ன என்கின்றனர். அரசின் செயல்களை ஆதரிக்கின்ற நியாயவாதங்களை இதன் மூலம் முன்தள்ளுகின்றனர். புலியின் அதே பிளேட்டை மாற்றிப் போட்டு, ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, June 25, 2009

நீங்கள் சமூகத்தின் பங்காளியாக மாற, இரண்டு இணையங்கள்; அறிமுகம்

இன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.

ஆனால் அதைக் கற்கின்ற சமூகக் கூறுகள் எல்லாம், 30 வருட இனவழிப்பு யுத்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இதைப் பகுதியளவில் தன்னும், மீட்கும் இரண்டு இணையங்கள்.

அடிப்படைக் கல்வி முதல் வாழ்வுசார் கல்வியை பெறும் வகையில், இவ் இரண்டு இணையங்களும் உள்ளதால் அதை .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?


இந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.

இவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 24, 2009

நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள் என்று குமுறிய பெண் - பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடனான சிறிய உரையாடல் மேலான தொகுப்பு

வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் "நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.

அந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர்.

இன்று அதே பெண் இந்தக் காட்டுமிராண்டிகளின் இனவழிப்பு யுத்தத்தினால் சொந்த வடுவுடன் குமுறி எழுந்தாள். அரச நாசி முகாமில் உணவுக்காக நெரிபட்டு கீழே வீழ்ந்ததால், தனக்கு கிடைக்க இருந்த ஒரு குழந்தை வயிற்றில் வைத்தே அழிந்து போனது. அதற்கு சரியான மருத்துவமின்றி, மீண்டும் கடுமையான உடல் நிலைக்கு சென்றார். இன்று இப்படி அவரின் கதையுள்ளது. அவரின் சொந்த தமக்கை ஒரு கண் பறிபோன நிலையில், உடலில் பல காயங்கள் நோய்கள் உடன், தனது நான்கு சிறு......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சி.பி.எம்மின் தேர்தல் தோல்வி: தேய்கிறது கழுதை !


“டெல்லியின் அதிகார மையங்களை ஆட்டிப் படைக்கும் சக்தி”, “இடதுசாரிகளின் ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது”, “காங்கிரசு பா.ஜ.க. அல்லாத இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி தேசிய அரசியலில் தீர்மானகரமான சக்தியாகத் திகழும்”, “2009இல் காங்கிரசு அல்லாத ஆட்சியே டெல்லியில் அமையும்” என்றெல்லாம் சவடால் அடித்துவந்த சி.பி.எம். கட்சியின் கனவுகளும் நப்பாசைகளும் சுயதம்பட்டங்களும் இன்று புஸ்வாணமாகி விட்டன. கடந்த நாடாளுமன்றத்தில் 3வது பெரிய ஓட்டுக் கட்சியாக இருந்த சி.பி.எம். இப்போது 8வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, சி.பி.எம்.இன் கோட்டையாகக் கருதப்படும் மே.வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அக்கட்சி 35 தொகுதிகளை இழந்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான படுதோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது.

Tuesday, June 23, 2009

அரச எடுபிடிகள் முன்னின்று நடத்தும் இலக்கியச் சந்திப்பு

தமிழ்மக்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்புரட்சி மடிய, மற்றொரு எதிர்ப்புரட்சி அரங்கேறுகின்றது. அது மக்கள் கோட்பாடற்ற இலக்கியச் சந்திப்பு ஊடாகவும் கூட, தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இந்த முன்முயற்சியின் ஒரு அங்கம் தான், நோர்வே இலக்கியச் சந்திப்பு.

எத்தனை ஆயிரம் மக்கள் செத்தாலும் கவலைப்படாது, கொலைகாரக் கும்பல்கள் பேரினவாத அரசுக்கு ஆள்பிடிக்க கூட்டும் சந்திப்பு. கொலைகார அரசை முன்நிறுத்தி, அதை ஆதரிக்கும் கும்பலின் சொந்த முயற்சியுடன் தான் நோர்வே இலக்கியச் சந்திப்பு அரங்கேறுகின்றது.

இந்த சந்திப்பின் பேச்சாளர் பட்டியலில் கலையரசன், ரஞ்சி போன்றவர்கள் மார்க்சியம் மூலம் தான் மக்கள் விடுதலை சாத்தியம் என்று நம்புகின்றவர்கள் இவர்கள். மார்க்சியம் மூலம் தான் அனைத்தையும் பகுத்தாய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றியோ, கடந்த 20 வருடத்தில் இதன் சாதக பாதகங்களை மார்க்சிய அடைப்படையில் பார்த்தா, இவர்கள் கலந்து கொள்கின்றனர்!? கடந்த 30 வருடத்தில் புலிப்பாசிசம் தன் எதிர்ப்புரட்சி மூலம் தமிழ்மக்களை இந்த நிலைக்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 22, 2009

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.

புலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ் காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.

தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பணம் கொடுத்து சுதந்திரத்தையும், உயிரையும் விலைக்கு வாங்க வேண்டிய மனித அவலம்


உற்றார் உறவினர் என்று, யாரும் அவர்களுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. ஏன் "மக்கள் தெரிவு செய்த ஜனநாயக" பராளுமன்ற உறுப்பினர்கள் கூட, அங்கு சுதந்திரமாக செல்லவோ, உரையாடவோ முடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்னியில் மருத்துவம் செய்த வைத்தியர்கள், இந்த மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட சிறையில் அடைத்துள்ளது. தங்கள் குற்றங்கள் உலகறியக் கூடாது என்ற ஓரே காரணம்தான், அனைத்து நடைமுறையாகியுள்ளது. குற்றவாளிக் குடும்பத்தின், பாசிச அதிகாரமாக மாறி நிற்கின்றது.

இந்த நாசிய முகாமினுள் செல்பவர்கள் கமரா முதல் தொலைபேசிகளையும் எடுத்துச் செல்ல முடியாது. வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுக்கு இதில் கடுமையான தடைகள், விதிகள். வன்னியிலும், முகாமிலும் நடந்த குற்றங்கள் உலகம் அறியக் கூடாது என்ற....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நாடாளுமன்றமா? லயன்ஸ் கிளப்பா?


அத்வானி, மாயாவதி, ஜெயலலிதா ஆகியோரின் பிரதமர் கனவு கானல் நீராகிவிட்டது. மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கிய ‘மார்க்சிஸ்டு’ கட்சி அதன் கோட்டையிலேயே கலகலத்து விட்டது. 200 தொகுதிகளில்தான் வெற்றிபெறும் எனக் கணிக்கப்பட்டிருந்த காங்கிரசு கூட்டணி 262 தொகுதிகளில் வென்றிருக்கிறது. தொங்குநிலை நாடாளுமன்றமும் குதிரை பேரமும்தான் தேர்தலின் முடிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, காங்கிரசு கூட்டணி நிலையான ஆட்சியை எளிதாக அமைத்துவிட்டது.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தலைவிரித்தாடின. இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலத்தீன் அமெரிக்க மக்கள், தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல்களில் ‘இடதுசாரி’ கட்சிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி வருகின்றனர். இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐரோப்பிய மக்கள் முதலாளித்துவம் ஒழிக என முழங்கி வருகின்றனர். ஆனால், இந்தியாவிலோ தனியார்மயத்திற்கு மாற்று வேறில்லை எனக்கூறி வரும் மன்மோகன் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த “வரலாற்றுப் பிழை”க்கு யாரைப் பொறுப்பாக்குவது?

Sunday, June 21, 2009

"சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" - விடுதலைப் புலிகளிள்

"சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" - விடுதலைப் புலிகளிள் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

"தமிழ்த் தேசியவாதத்தை அழிக்க வர்க்க கண்ணோட்டமாம்"!?

தேசியத்தில் வர்க்கமில்லை என்று, தமிழ் தேசியத்தை அழித்தவர்கள், இப்படி சன்னி கண்டு புலம்புகின்றனர். வேடிக்கையான குதர்க்கம். தமிழ்மக்களை தமிழ்தேசியத்தின் பெயரில் அழித்தவர்கள், தமது புலித் தமிழ் தேசியத்தை வர்க்கக் கண்ணோட்டம் அழிக்கப் போவதாக குமுறுகின்றனர். வேல் தர்மா என்ற இணைய பதிவாளர் "ஈழப் பிரச்சனையும் வர்க்கக் கண்ணோட்டமும்" என்ற தலைப்பில், தமிழ்மக்களை அழித்த புலித்தேசியத்தைப் பாதுகாக்க பொங்கி எழுகின்றார்.

அதை அவர் 'ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கு வர்கக் கண்ணோட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து வைத்திருக்கின்றனர்" என்று, எம்மைப் பார்த்து குமுறிய வண்ணம் கூச்சல் எழுப்புகின்றார். வர்க்கம் என்ற சொல்லை கண்டு, அதை ஆரியவாதம் என்று பகுதறிவற்ற அரைவேட்காட்டுடன் புலிப்பாசிசம் புலம்புகின்றது. வர்க்கம் தமிழனைப் பிளக்கின்றதாம். புலித் தமிழ்த்தேசியத்தின் பெயரில், வர்க்கமில்லை என்று கூறி, தமிழனையே பிளந்து போடாத பிளவையா வர்க்கம் பிளந்தது!?

தமிழனை நிர்வாணமாக்கி, அவர்களைக் கொத்திப் பிளந்தவர்கள் யார்? இப்படி தமிழனைப் பிளந்து, அவனையே துரோகியாக்கியவர்கள் யார்? தமிழனை நாயிலும் கீழாக ஒடுக்கியவர்கள் யார்? நீங்கள் தான். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் உரிமைகளை மறுத்தும்,.........
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே

குண்டுகட்டிவெடித்துச் சிதறி;
கொஞ்சமா இழந்தோம்
நெஞ்சத்து ஈரமற்று
இறந்த இராணுவத்தின் எண்ணிக்கை மட்டுமே கணக்குப்பார்த்தவன்
வெடித்துச்சிதறிய பிள்ளைகட்காய் இரக்கப்பட்டதாயில்லை
அடித்துப்பிடியுங்களென்று பணம்கொடுத்து
காருக்குள் புலிப்பொம்மையும்
கார்த்திகைக்கு மண்டபத்தில் மலரும்தூவியவன்
புலத்துத்தமிழன்
வருடாந்த உரைகட்;காய் வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்