தமிழ் அரங்கம்

Saturday, December 29, 2007

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!
ஹவாலா கிரிமினல்
ராம்விலாஸ் வேதாந்தி!

""இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய
கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை
அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொருமுறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். எல்லõவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் ""யாரோ, எவரோ; எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ' என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல்.

""பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி' லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து "பிசினெஸ்' நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக ""கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, ""ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.

வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...

வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...

வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு
2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?

வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.

நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?

வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்:watch the video: http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே ""தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள்தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'' என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், ""நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், "" உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, ""இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். ""கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கி றார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை.

""இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, ""உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி'கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.''

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று ""அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்' என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று' பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்' என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் ""நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ ""அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!

· புதிய ஜனநாயகம், அக்டோபர் 2007

Friday, December 28, 2007

தெருக்கூத்து

தெருக்கூத்துமேர்வின் சில்வா

மேர்வின் சில்வா : மூத்திரத்தாலும் வெறுங்கையாலும் அடித்து தலையை உடைத்து சட்டத்துக்கு நீதி படிப்பித்த கதை


சட்டம் நிபுணர்களதும் நீதவான்களதும்

வழக்கறிஞர்களதும் காவற் துறையினரதும் கைகளில்

பத்திரமாகவே உள்ளதால்

கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால் சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து தப்பி ஓட இயலுமாகிறது

பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்

சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது

குடிவெறியில் காரோட்டிய யம தூதனை

அளவோடு குடி என்று செல்லமாய்க் கண்டிக்க

நீதவானுக்கு முடிகிறது.

சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.

அதை வைத்திருக்கிறவர்கள் இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.

சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்

உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி

ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்

சட்டந் தெரியாதவர்கள் பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.

அப்போது சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்

“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது தவறு”

என்று கண்டித்தார்கள்.

மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்வார்களேயானால், எவ்வளவு நன்றாக இருக்கும்.


-சி.சிவசேகரம் (இன்னொன்றைப்பற்றி)


இன்று கொழும்பில் இலங்கைத் தேசியத்தொலைக்காட்சி நிலையத்தில் சட்டத்துக்கு நீதி வழங்கிய தொலைக்காட்சித் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உரத்த குரலில் தெரிவித்தாகவேண்டியவனாகிறேன்."அதுதான் பொலிசிடம் பாரம்குடுத்தாச்சுத்தானே, அவர்கள் பாத்துக்கொள்ளுவாங்க... இனியென்ன..." என்று ஒரு ரவுடி அமைச்சன் தன் ரவுடிப்பரிவாரங்களுடன் கெஞ்சியபோது, அந்த பாதாள உலகப் பரிவாரங்களையும் கொலைகாரர்களையும் இலங்கைக் காவல் துறையும் சிறப்புப் படையினரும் தொலைக்காட்சித் தொழிலாளர்களிடமிருந்து காப்பாற்றிப் பாதுகாத்து வெளியில் கொண்டுவந்தபோது "சட்டத்" தினதும் "சட்ட ஆட்சி" யினதும் போலி முகமூடிகள் "நீதிக்கு" முன்னால் கிழிந்து தொங்கியது.இலங்கைத் தேசியத் தொலைக்காட்சி என்பது இலங்கை அரசினது தொலைக்காட்சி சேவையாகும். ( சிறீ லங்கா ஜாதிக ரூபவாகினி). அரசாங்கமாகப் பதவியிலிருக்கும் நபர்களின் செயற்பாடுகளுக்கும் திட்டங்களும் ஒத்து ஊதுவதே அதன் வேலை. இலங்கை வரலாறு முழுவதும். இன்றைக்கும். அதிலிருக்கின்ற செய்தியாசிரியர்கள் என்பவர்கள், அரசாங்கம் சொல்வதை சிங்களத்தில் செய்திக்காக எழுதிக்கொடுக்கும் வேலையை செய்து சம்பாதிப்பவர்கள். அதை தமிழில் மொழிபெயர்த்து ஓதுவதற்கு அங்கே தமிழ்ச்சேவை ஒன்றும் உள்ளது.அண்மையில் ஆழிப்பேரலை நினைவுக்கூட்டமொன்றில் மெர்வின் சில்வா என்கிற, அரசாங்கத்தின் அமைச்சன் பேசிய பேச்சின் பகுதியொன்றை அரசாங்கத்தின் ஊதுகுழலான "ஜாதிக ரூபவாஹினி" ஒளிபரப்பவில்லை என்பதற்காக இந்த ரவுடி அமைச்சன் ரூபவாகினி நிலையத்துக்குள் நுழைந்து தனது பாதாள உலக அடியாளொருவனைக்கொண்டு செய்தியாசிரியர் ஒருவரைத் தாக்கி இழுத்துக்கொண்டு திரிந்திருக்கிறான்.

இதைக்கண்ட தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் அந்த செய்தி ஆசிரியரைக் காப்பாற்றியதுடன் அங்குள்ள அறையொனில் இந்த அமைச்சனைச் சிறை வைத்து முற்றுகையிட்டு நின்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரினதும் முற்றுகையில் சிக்கிய இந்த அதிகார ரவுடிக்கு படிப்படியாக நிலமையின் தீவிரம் புரியவாரம்பித்திருக்கவேண்டும். ஜனாதிபதி தொடக்கம் அனைத்து அதிகார வர்க்கக் கூட்டாளிகளையும் உதவிக்கு அழைத்திருக்கிறது.

அதிகாரமும் ஆயுதங்களும் இல்லாத வெறும் ஊழியர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் முன்னால் இவையெல்லாம் உதவிக்கு வர முடியவில்லை.

கடைசியில் தனது பாதாள உலக அடியாட்களை அழைத்திருக்கிறது, வந்த "அடியாட்களும்" பயந்து ஓடிவிட்டார்கள்.

அறையொன்றில் குளிரூட்டியும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் வேர்க்க வேர்க்க நின்று மீசையில் மண்ணொட்டாத கதைகளை உளறிக்கொண்டிருந்த இந்த மெர்வின் சில்வா அமைச்சனுக்கும் அவனது பாதாள உலகக் கொலைகாரனுக்கும் சட்டத்தைக்காக்கும் பொலிஸ் படையும், சிறப்பு இராணுவமும் "பாதுகாப்பினை" நல்ல பொறுப்புணர்வோடும் மிகுந்த அக்கறையோடும் வழங்கிக்கொண்டிருந்த அவலத்தை இலங்கையே நேரடி ஒளிபரப்பில் வெற்றுக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தது.இயலாத கட்டத்தில் மன்னிப்பைக்கூட அதிகார எள்ளலோடு இந்த அமைச்சன் கேட்க முயன்றபோது.

ஊழியர்கள் சிவப்பு மைய்யால் இவனுக்கு அடித்தார்கள். மூத்திரத்தாலும் அடித்ததாக செய்திகள் கிடைக்கின்றன. அத்தோடு காயப்படுமடியும் அடித்தார்கள் பாருங்கள். அத்தோடு அதிகார வர்க்கம் ஆடிப்போனது. தலையில் ஐந்து தையல் போடும்படியான காயம். ரத்தம் ஒழுக ஒழுக காருக்குள் பயந்து பயந்து இந்த அதிகாரக் குறியீடு குனிந்த தலை நிமிராமல் தஞ்சம் கோரியது கண்கொள்ளாக்காட்சி.---1----

ஜனநாயகம் செத்து நாளாச்சு, ரவுடிகளினதும் துப்பாக்கிகளினது அதிகாரம் ஓங்கியாச்சு. மக்கள் கையில் இனி என்ன இருக்கு, எதுவும் செய்ய முடியாது என்ற சோர்வின் கோட்பாடுகளை மக்கள் தமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே அதிகாரத்தின் அராஜகங்களை ஊடகங்கள் காட்டுகின்றன. நிறுவனங்கள் ஓதுகின்றன.

சோர்வின் கோட்பாடுகளுக்கு அறிவுஜீவிகள் மயங்கும் தத்துவப்பின்னணியை வழங்கவென நவீனப்பின்னியப் பின்னல்கள் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் பின்னப்படலாகிற்று.

வெறுங்கை ஊழியர்கள் ஒன்றுபட்டு மூத்திரத்தால் அடித்தபோது சோர்வின் கோட்பாடுகள் சோம்பல் முறித்ததை மக்கள் உணர்ந்திருக்கக்கூடும்.

ஒரு ரவுடி அமைச்சன் ரதம் ஒழுக ஒழுக பயந்தோடியபோது பாராளுமன்ற ஜனனாயகத்தின் பாதாள உலகப் பூச்சாண்டி கலைவதற்கான கால ரேகைகளை மக்கள் கண்டிருக்கக்கூடும்.

இந்தச்சம்பவம் நாளைக்கு மறக்கப்பட்டுவிடலாம். இந்தச்சம்பவத்தின் பெறுபேறுகள் எல்லாவற்றையும் இதே அதிகாரவர்க்கம் நாளைக்குக் கொன்று புதைத்து விடலாம். ஆனால் சோர்வின் கோட்பாடுகளை நாளயண்டைக்கு இவர்கள் ஓதத்தொடங்கும்போது இந்தச்சம்பவம் ஒரு கூரிய நினைவாக, வெறுங்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக நிற்கப்போகிறது. அதுவொன்றே போதுமானது.

சட்டமும் பொலிசும் ராணுவமும் யாரைக்காப்பாற்றும் , பாராளுமன்றம் யாருக்குப் பல்லாக்குத்தூக்கும் என்பதை "பயங்கரவாத" மாயைகளைத் தாண்டி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. (தமிழ் மக்களுக்கு உணர்த்தும் தேவை இல்லை என்பதால்). சின்னஞ்சிறிய ஒளிப்பொட்டைப்போன்றதொரு சந்தப்பம்.

இலங்கையின் இந்த சம்பவம் உலகெங்கும் இதனை ஒளிப்படங்களாக, நிகழ்படங்களாகக் காட்டும்.

----2----

இந்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோதெல்லாம் மனதுக்குள் ஒரே ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

ஊழியர்கள் ஒன்றுபட்டு வன்முறை வழியாக நீதி வழங்கிய நேர இடைவெளிகளில் அங்கிருந்த தமிழ் ஊழியர்கள் என்ன செய்திருப்பார்கள்?

மெர்வின் சில்வாவைக் கொலை செய்ய முயன்றதால்தான் இந்த பயங்கரவாதிகள் சுடப்பட்டார்கள் என்று அரசாங்கப்பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல சொல்லுமளவுக்கு ஏதேனும் நேர்ந்துவிடலாம் என்று பயந்திருப்பார்களா?

பயந்து கமராக்களில் படாமல் ஒளிந்திருப்பார்களா?

இதே சம்பவம் சிரச தொலைக்காட்சி நிலையத்தில் நடந்திருந்தால் எதிர்வினைகள் எவ்வாறு இருந்திருக்கும்?

----3----

ஆனாலும், சிங்கள மக்கள் சிங்கள அதிகாரத்தை எதிர்த்து வன்முறையை தூக்கும்போது, இன்னுமொருமுறை தமிழ்த்தலைமைகள் சிங்கள அதிகார வர்க்கத்தினை காப்பாற்றாமலிருக்கட்டும்.

அப்படியான சிங்கள மக்களின் போரட்டங்கள் தங்களுக்ககவும் தான் ஏதோ ஒரு வழியில் நடக்கிறது என்பதை "சிங்கள வெறியர்களை" கண்மூடித்தனமாக எதிர்முனையில் வைப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

----4----

இதற்கு முன் இந்த மேர்வின் சில்வாவினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் மக்களும் அஹிம்சை வழியில், சனனாயக வழியில் எவ்வளவோ போராடிப்பார்த்தனர். இந்த ரவுடியின் கார்களில் ஒன்றின் கண்ணாடியைக்கூட அசைக்க முடியவில்லை.

அடி உதவுற மாதிரி அஹிம்சை உதவப்போவதில்லை.

----5----

இந்த வலைப்பதிவை எழுதி முடித்தபின் எனது ஊடகத்துறை நண்பர்கள் இருவரைத் தொடர்புகொண்டேன். அதில் ஒருவர் ரூபவாஹினியில் பணியாற்றுபவர்.

அவர்கள் சொன்ன தகவல்களின் படி,

தமிழ் ஊழியர்களும் சேர்ந்தே போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். பின்வாங்கவில்லை.

செய்தி வாசிப்பாளர்களை முன்னால் வந்து பங்குகொள்ள மற்றவர்கள் விடவில்லை. காரணம், அவர்களது முகங்கள் மிகவும் பழக்கப்பட்டவையாதலால் அதனை இவன் பார்த்துவைத்து பிறகு ஏதாவது பழிவாங்கி விடுவான் என்ற அச்சம்.

அத்தோடு பெனாசிர் கொலை விவகாரம் உலக ஊடகங்களின் தலைப்புக்களைப் பிடித்துவிட்டதால் இந்த அருமையான சம்பவம் உலகத்தின் கண்களுக்குப்பட்டுவிடாமல் போய்விடக்கூடும் என்று ஒரு நண்பர் கவலைப்பட்டார்.

---7---

இவளவு பெரிய பாதாள உலகத்தலைவன், அமைச்சன் இப்பிடி பீயாகிட்டானே என்று இரவு உணவுக்குப்போய் வந்த வழியில் சந்தித்த பலரும் சொல்லிக்கொண்டார்கள்.

நன்றி மு.மயூரன்

Thursday, December 27, 2007

பேராசிரியர் சமன்லால் உரை

கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும்

பி.இரயாகரன்
27.12.2007


கிழக்கு மக்களோ மீளமீள, யாரும் கைகொடுத்து உதவ முன்வராத துன்பத்தையே அனுபவிக்கின்றனர். கடுமையான மழையும், வெள்ளமும், அந்த மக்களை மீண்டும் ஓருமுறை அகதியாக்கியுள்ளது. இயற்கை தான் இதை உருவாக்கிய போதும், செயற்கையான யாழ் மேலாதிக்கமோ, அந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது. ஒரு உதவி, ஒரு நிவாரணம், ஒரு அனுதாபம், மனிதாபிமான உணர்வு என எதுவுமற்ற, வரட்டுத்தமான அற்பத்தனமான மனநிலையில் தமிழினம். செய்திகளில் இந்த மனித சோகம், அவலம் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. மனித அவலங்கள் இப்படித்தான் இழிவாடப்படுகின்றது. தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுபவர்களும், தமிழ் தேசிய குத்தகைக்காரர்களும் இருக்கும் வரை, எந்த மக்களும் இப்படி அனாதைகள் போல் ஆதரவற்றுக் கிடக்க வேண்டியது தான்.

இதுதான் தமிழ் மக்களின் மொத்த தலைவிதி. யாழ் மேலாதிக்கம் இதன் மேல் எழுந்து நின்று ஆடும் போது, கிழக்கு மக்களின் தலைவிதி என்பது மேலும் படு பயங்கரமானதாகி விடுகின்றது.

இப்படி அந்த மக்களின் இன்றைய அவலத்தையிட்டு, எந்தவிதத்திலும் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படி யாழ் மேலாதிக்கம் தனது தலைக்கனத்துடன், மக்களின் வாழ்வு மீது வம்பளக்கின்றது.

ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தமிழ் தேசியத்தின் மேல் ஏகபோக உரிமை கொண்டாடுபவர்கள், கிழக்கு தமிழ் மக்களை நடத்துகின்ற விதம் சகிக்க முடியாத ஒன்று. தமிழ் இனத்தின் மேலான அவமானம். கிழக்கு பிரதேசவாதம் பற்றி சதா இழிவாடுபவர்கள், எந்த விதத்திலும் அடிப்படையில் நேர்மையற்றவர்கள் என்பதையே, கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவிவிடுகின்றது.

மக்களை செம்மறித்தனத்தில் மேய்க்க முனைகின்ற யாழ் மேலாதிக்க சக்திகளின் வக்கிரத்தில், கிழக்கு மக்களின் கண்ணீர்க் கதைகள் அதி பயங்கரமானவை. அண்மைக்காலமாக அந்த மக்களின் வாழ்வைச் சுற்றிச்சுற்றி அது வதைத்து வருகின்றது.

முதலில் சுனாமி கிழக்கைச் சூறையாடி, அந்த மக்களை நாதியற்றவராக்கியது. அந்த மக்களுக்கு யாரும் கைகொடுத்து உதவக்கூட முன்வரவில்லை. அவர்களுக்கு உதவுவதற்கென தமிழ்மக்கள் வாரிக் கொடுத்த செல்வம், அந்த கிழக்கு மக்களுக்கு ஒரு துளிதன்னும் கிடைக்கவில்லை. அந்த உதவியை யாழ் மேலாதிக்க அதிகார மையங்கள் கைப்பற்றி, அதை தமது சொந்த இருப்புக்கே பயன்படுத்தியது.

இதன் பின் புலியொழிப்பின் பெயரில், தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் ஒரு பாரிய தாக்குதலை நடத்தி அவர்களை அகதியாக்கினர். கிழக்கு மக்கள் வீடு வாசல்களை இழந்து, உழைப்பின் மூலவளங்களை எல்லாம் இழந்த, ஒரு சமூகமாகிவிட்டனர். இதன் போது கூட, கிழக்குத் தமிழ் மக்களை யாழ் மேலாதிக்கம் கண்டு கொள்ளவேயில்லை. கைகொடுத்து உதவ முன்வரவில்லை.

இன்று மீண்டும் கிழக்கில் பாரிய வெள்ளம். கிழக்கு மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களைக் கூட, யாழ்மேலாதிக்கம் இருட்டடிப்பு செய்கின்றது. இதுதான் யாழ் மேலாதிக்கத்தின் தேசிய வக்கிரம்.

இப்படி அடுத்தடுத்த மக்களின் துயரங்களைக் கூட கண்டு கொள்ளாத தேசியமும், தேசமும். இதனால் தான் இது தோற்று வருகின்றது. மக்களைப் பற்றிச் சிந்திக்காத அரசியல், கடுகளவு கூட மக்களையிட்டு எண்ணிப் பார்ப்பதில்லை. மக்களின் துன்ப துயரங்களில் அக்கறை கொள்வதில்லை. யாழ் மேலாதிக்க அதிகாரம் என்பது, மக்களின் வாழ்வியல் அடிப்படைகளையே தகர்த்து விடுகின்றது.

மறுபக்கத்தில் கிழக்குப் பிரதேசவாதம் பேசியவர்களின் நிலையும் இதுதான். புலியெதிர்ப்பு புலியொழிப்பு அரசியல் பேசும் கிழக்கு மேலாதிக்கம், கிழக்கு மக்களைப் பற்றி எதுவும் பேசுவது கிடையாது. கிழக்கு மக்களை வெள்ளம் காவு கொண்டுள்ள நிலையிலும், அந்த மக்களுக்காக எதையும் செய்வது கிடையாது. இப்படிப்பட்ட கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத தலைமைகள் என்ன செய்கின்றனர் ? யாழ் மேலாதிக்கவாதிகள் போல் தமிழ் மக்களைக் கொல்லுகின்றனர், கொள்ளையடிக்கின்றனர், சூறையாடுகின்றனர், கப்பம் அறவிடுகின்றனர். இதில் தான் அவர்கள் சுயாதீனம். மற்றப்படி பேரினவாத எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக குரைக்கின்றனர். இப்படி நக்குவதில் கூட முரண்பாடுகள். அதில் ஒரு அரசியல். அதையே மாற்று அரசியல் என்று கூறி, சமூகத்தையே இதற்குள் நடுங்க வைக்கின்றனர்.

மக்களோ துன்பத்திலும் துயரத்திலும் சாகின்றனர். விடிவுகளற்ற இருட்டில் மக்கள் அல்லாடுகின்றனர். யாழ் மேலாதிக்கம் போல், கிழக்கு மேலாதிக்கமும் அந்த மக்களின் குரல்வளையை நெரித்துக் கொன்று வருகின்றது. இதற்கு இயற்கையும் துணைபோகின்றது.

இயற்கையை தனக்கு ஏற்ப மாற்ற உழைத்த குரங்கில் இருந்து தான், பரிணாமமடைந்து மனிதன் உருவானான். இன்று இயற்கையுடன் சேர்ந்து மனிதத்தன்மையை அழிக்கின்ற காட்டுமிராண்டிகள் நிலைக்கு, தமிழ்ச் சமூகம் சென்றுவிட்டது. இதையே கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவுகின்றது.

Wednesday, December 26, 2007

சுனாமிப் பேரழிவு நினைவுகளும் விளைவுகளும்

ஒரு தேசமே அழுகின்றது ஆனால் அதிகார வர்க்கங்களுக்கு அதுவே பொன் முட்டையாகிவிடுகின்றது

தென்கிழக்காசியாவில் உருவாகிய சுனாமி என்ற கடற்கோள், பல பத்தாயிரம் மக்களை உயிருடன் இழுத்துச் சென்றுள்ளது. மனித உழைப்பால் உருவான மனித நாகரீகம் இடிபாடுகளாகிவிட்டது. நிலத்தையும் கடலையும் பிரிக்கும் எல்லைகள் பிணக் குவியலாக மாறிவிட்டது. சேறும் சகதியுமாகிப் போன பூமியின் ஒரு பகுதியில், புதையுண்ட சடலங்கள் பூமியூடாக எட்டிப் பார்க்கின்றன. மனிதக் கண்கள் என்றுமே கண்டறியாத இயற்கை அழிவாக எம்முன் இவை நிற்கின்றன. இந்த நிலையில் சிதைந்து போன இயற்கையை, மனித ஆற்றல் ஈடுகொடுத்து மீட்க முடியாது திணறும் நிலைமையை இந்தச் சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

நவீனத் தொழில் நுட்பங்கள் முதல் பலமான அரசு இயந்திரங்கள் வரை தமது கையாலாகாத்தனத்தையே நிரூபிக்கின்றன. நவீன தொழில் நுட்பங்களும், பலமான அரசு இயந்திரங்களும், மனித உழைப்பைச் சுரண்டும் எல்லைக்குள் செயற்படுவதால், இந்த இயற்கை அனர்த்தங்களை (பேரழிவுகளை) எதிர்கொள்ளும் ஆற்றலையே இழந்துவிடுகின்றன. மீண்டும் மக்கள்தான் இந்த இயற்கையை எதிர்கொண்டு, இடிபாடுகளை அகற்றுவது முதல் இறந்த உடல்களை மீட்பது வரை அனைத்திற்காகவும் களத்தில் இறங்கினர். நிவாரணங்களைக் கூட அந்த மக்கள்தான் வாரிவாரி வழங்கினர். அதிகார இயந்திரங்களின் செயலற்ற தன்மையை எதிர்த்து, மக்கள் தமது சொந்த ஆற்றலையும் உழைப்பையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் சமூக உணர்வுடன் வழங்கினர். சமூகப் போக்குக்கு எதிரான தனிமனித நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பில், அரசுகள் சமூகத்துக்கு எதிராகவே உள்ளன. மக்கள் கூட்டம் இயற்கையால் அழிகின்ற போது, அரசுகள் அவற்றை வேடிக்கை பார்க்கவும், அவைபற்றி அறிக்கை விடவுமே முனைகின்றன.

தனிமனிதவாதங்களால் மலடுதட்டிப் போன சமூகத்தில், மக்கள் தமது சொந்த உழைப்பால் மீண்டும் சமூக உணர்வுடன் களத்தில் இறங்கினர். உலகமயமாதல் அமைப்பில் சிதைந்துபோய்க் கொண்டிருக்கும் சொந்த ஆற்றலைக் கொண்டு, தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்த மக்களே மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எந்தத் திட்டமிடலுமின்றி தமது அறிவுக்கெட்டிய எல்லைக்குள், வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையிலான ஒரு போராட்டத்தையே சமூக உணர்வுடன் நடத்தினர், நடத்துகின்றனர். அதிகாரத்தையும், செல்வத்தையும் மலைபோல் குவித்து வைத்துள்ளவர்கள், இறந்து போன ஏழை மக்களையிட்டோ, உயிர் தப்பிய வக்கற்றவர்களையிட்டோ, பெரும் செல்வத்தைப் பெற்று தராத இந்தப் பிரதேசங்களையிட்டோ அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் சமூக உணர்வுடன் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு முன்னால் நின்று இவர்கள் தொலைக்காட்சிக்கு அறிக்கை கொடுக்கின்றனர். அதேநேரம் இந்தச் சமூக அவலத்தின் மேல் கொள்ளையடிக்கவும், ஆக்கிரமிப்புகளை நடத்தவுமே, இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் களமிறங்குகின்றனர். அதிகாரவர்க்கம் இன மொழி வேறுபாடுகள் இன்றி உலகெங்கும் இந்த ஒரேயொரு நோக்கத்துடன் ஓநாய்களாக அலைகின்றது. இதில் விடுதலைப்புலிகள் முதல் அமெரிக்கா வரை இந்த நோக்கில்தான், இந்த மனித அவலத்தைப் பயன்படுத்துகின்றனர். மக்களைப் பற்றி எந்தவிதமான சமூக அக்கறையும் இவர்களுக்குத் துளியளவும் கிடையாது.

இந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரையிலான நாடுகள், இலங்கை மேல் விசேட கவனத்தைத் திருப்பியுள்ளனர். அதிக இழப்பைக் கொண்ட இந்தோனேசியாவைக் கூட, இலங்கை அளவுக்கு உலகம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இந்தியக் கடற்படைகள், அமெரிக்கக் கடற்படைகள் உள்ளடங்கிய இராணுவங்கள் இலங்கையில் இறங்கியுள்ளன. ஜெர்மனி உளவுத்துறையுடன் கூடிய உதவிப் படையை இறக்கியுள்ளது. இலங்கை மீதான ஆக்கிரமிப்பு, மனிதாபிமான உதவி என்ற பெயரிலும் மீட்பு நடவடிக்கை என்ற பெயரிலும் மறுநிர்மாணம் என்ற பெயரிலும் தொடங்கிவிட்டது. அமெரிக்கா இதைத் தாண்டி குறுகிய மற்றும் நீண்ட கால மீட்பு பணிக்காகவே வந்துள்ளதாக அறிவித்துள்ளது. முன்பு அமைதிப்படை என்ற பெயரில் களமிறங்கிய இந்தியா, இலங்கையில் நடத்திய ஆக்கிரமிப்பு என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது எம் கண் முன்னால் நிற்கின்றது. இன்று மனிதாபிமான உதவி, மீட்பு, மறுநிர்மாணம் என்று பலவண்ணப் பூச்சுகளுடன் தம்மை மூடிமறைத்தபடி ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டனர். இந்த மீட்பு மற்றும் புனர் நிர்மாணத்தை இந்த ஆக்கிரமிப்பாளர்கள், தமது சொந்த நலன்கள் இலங்கையில் பூர்த்தியாகும் வரை, பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக நீடித்த காலத்துக்கு நீட்டி இலங்கையில் படைகளை வைத்திருப்பார்கள். இந்த ஆக்கிரமிப்புகளையிட்டு இலங்கையில் எந்த ஒரு கண்டனத்தையும், எதிர்ப்பையும் கூட யாரும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஏகாதிபத்திய நிதியுடன், அவர்களின் கொள்ளை வழிகாட்டுலுக்குட்பட்டு இயங்கும் அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் பல, மனிதாபிமான உதவி, மீட்பு, புனர்நிர்மாணம் என்ற பல வேஷங்களுடன் முழுமூச்சாகவே இறங்கியுள்ளனர். எங்கும் அன்னியரும், அன்னிய கைக்கூலிகளும், அன்னிய நிதியும் சேர்ந்து, ஒரு தேசத்தின் தலைவிதியை என்றுமில்லாத ஒரு அடிமை நிலைக்கு நகர்த்தியுள்ளனர். இந்த நிலையில் தேசத்தின் "தேசிய' தலைவர்கள் இனம் மொழி மதம் கடந்தபடி அன்னியரின் வருகைக்காகவும், அவர்களிடம் கையேந்தி பிச்சை கேட்கின்றனர். விசுவாசமாகவே ஊளையிட்டு வாலாட்டிக் குலைக்கின்றனர்.

மனிதக் கதறல்கள், மனித ஓலங்கள் எல்லாம் எதிர்காலத் தலைமுறையின் அடிமை விலங்காகவே மாற்றப்படுகின்றது. இயற்கையால் இழந்து போன மனித இழப்பை விடவும், அன்னியரின் தலையீடே மிகப் பெரிய சமூகச் சிதைவையும், மனித இழப்பையும் ஏற்படுத்த உள்ளது. நடந்து முடிந்த இயற்கையான கடற்கோளைவிடவும், இந்த அன்னியத் தலையீடுகள் இலங்கை மக்களை முற்றாக மூழ்கடிக்க உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் உருவாக்கவுள்ள இந்தச் செயற்கையான அனர்த்தத்தை (பேரழிவை) இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகள் முதல் போராடும் இயக்கங்கள் வரை ஒரே விதமாக கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். இதை முன்கூட்டி அறியும் ஆற்றல் உள்ள நாங்கள், இந்த அபாய எச்சரிக்கையை விடுவது வரலாற்றின் கடமையாகி விடுகின்றது.

மனிதத் துயரங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியங்கள் ஒருபுறம் இலங்கையை ஆக்கிரமித்துள்ளது என்றால், மறுபுறம் இனங்களைத் தேசியத்தின் பெயரில் ஆழமாகப் பிளந்து பணத்தைத் திரட்டுகின்றனர். பிணங்களைக் காட்சிப்படுத்தி, மனிதனின் அடிப்படையான சமூக உணர்வுகளை உணர்ச்சிமயமாக்கிய மலட்டுத்தனத்தில், பல பத்து கோடி பணத்தைத் திரட்டிக் கொண்டனர். புலிகளின் பினாமி அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளிநாடுகள் எங்கும், பிணங்களைக் காட்டி கோடி கோடியாகப் பணம் திரட்டியது. தாம் மட்டும்தான் புனர்வாழ்வு செய்ய கடவுளால் படைக்கப்பட்டவர்களாகவும், மற்றவர்கள் யாரும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளக் கூடாது என்று மறைமுக மற்றும் நேரடி எச்சரிக்கைகள் ஊடாகவே பணத்தைத் திரட்டிக் கொண்டனர். தொலைக்காட்சிகளில் பிணங்களைக் காட்சிப்படுத்தியதன் மூலம் அதையே விளம்பரமாக்கி, பணத்தைத் தரும்படி மீண்டும் மீண்டும் கோரப்பட்டது. அதாவது இந்தியாவில் அனாதைப் பிணங்களைக் காட்டி புதைக்கப் பணம் கேட்கும் பொறுக்கிகள் போல், தொலைக்காட்சியில் பிணத்தைக் காட்டி கோடிகோடியாகவே பணம் திரட்டினர்.

பணத்தைத் தருவதன் மூலம், பணம் கொடுத்தவன் தனது சோகத்தைத் தீர்க்க முடியும் என்ற உளவியல் சிதைவை உருவாக்கினர். பணம் கொடுப்பதற்கு அப்பால் சமூகக் கடமை எதுவும் உனக்கு கிடையாது என்ற மலட்டு உணர்வை உருவாக்கினர். இயற்கை மக்களுக்கு ஏற்படுத்திய துயரத்தில் பங்கு கொண்ட மக்கள், தமது சொந்த உழைப்பில் ஒரு பகுதியைப் பணமாகக் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாம் கொடுத்த பணம் போய் சேர்ந்ததா என்பதைக் கண்காணிக்கும் உரிமை எதுவும், பணம் கொடுத்த மக்களுக்குக் கிடையாது. தாம் கொடுத்த பணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படிப் பகிரப்பட்டது என்று கேட்கும் உரிமையும் கிடையாது. ஏன் தமிழ் மக்கள் எவ்வளவு புனர்வாழ்வு நிதியை வழங்கினர் என்று கேட்கும் உரிமையும் கிடையாது. கடந்த காலத்தில் புலிகளின் வரலாற்றில் மக்கள் கொடுத்த பல பத்து கோடி பணத்துக்கு எது நடந்ததோ, அதுவே இன்றும் நடக்கின்றது.

இவை பற்றி கேள்வி கேட்காது செம்மறி ஆடுகள் போல் பணத்தைத் தா என்பதே, புனர்வாழ்வு நிவாரணத்தின் அடிப்படை கோட்பாடாகவே அரங்கேறியது. அதாவது உனது கடின உழைப்பால் உருவான பணத்தை மட்டும் தந்துவிடு என்பது புலித் தத்துவம். மற்றபடி செம்மறியாடுகளாக எதையும் நிமர்ந்து பார்க்காது, மந்தைகள் போல் மேயுங்கள் என்பதையே, தமது அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் உணர்வாக்கியுள்ளனர். பணத்தைத் தருவதன் மூலம் துயரத்தைப் போக்கிக் கொள் என்ற எல்லைக்குள், மனித அவலம் மலினப்படுத்தப்பட்டது. பணம் தராதவனும், தம்மிடம் பணம் தராதவனும் ஒரு தமிழ்த் துரோகியாக முத்திரை குத்தப்பட்டான். தம்மிடம் பணத்தைத் தராது சுயமாகப் பணத்தைத் திரட்டி செயல்படுபவர்கள் எல்லாம் அதியுயர்ந்த தேசத்துரோகிகள் ஆவர். அதை நேரடியாக அந்த மக்களுக்கு எடுத்துச் செல்வது அதியுயர்ந்த தேச துரோகமாகும். புனர்வாழ்வு நிதிகள் நேரடியாக அல்ல, அவை ஆயுதங்களாகப் போகவேண்டும் என்பது, புலிப் பினாமிகளான புனர் வாழ்வுக் கழகத்தின் நடைமுறை மற்றும் கோட்பாடாகும். தமக்கு வெளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்பவர்களுக்கு எதிராக, புலிப் பினாமிய இணையத் தளங்கள் எச்சரிக்கைகள் கூட விடுத்து இருந்தன. இதைத் தொலைக்காட்சிகள், ரேடியோக்கள் செய்தியாக்கின.

உண்மையில் 2001இல் 20,000 மக்களைப் பலி கொண்ட குஜராத் நிலநடுக்கத்தின்போது இந்து பாசிஸ்ட்டுகளான சிவசேனை எதைச் செய்ததோ, அதையே புலிகள் செய்கின்றனர். சிவசேனை அந்த மக்களுக்கு கிடைத்த நிவாரணங்கள் அனைத்தையும் பலாத்காரமாகக் கைப்பற்றியது மட்டுமின்றி, சிவசேனைக்கு வெளியில் செய்யப்பட்ட நிவாரணங்களையும் பறிமுதல் செய்து தனதாக்கியது. நிவாரணத்தின் ஒரு பகுதியை இந்துக்களுக்கு மட்டும் வழங்கியதுடன், முஸ்லீம் மக்களுக்குக் கிடைப்பதை, முற்றாகத் தடுத்தனர். பெரும் நிதியை இந்த நிவாரணங்கள் மூலம் சுருட்டிக் கொண்ட சிவசேனை, இந்தப் பெரும் நிதியைக் கொண்டே 2004ஆம் ஆண்டில் முஸ்லீம் மக்கள் மீதான இந்துப் பாசிசத்தைக் கட்டவிழ்த்து 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்களைக் கொன்றனர். இவை இன்று அப்பட்டமாக அம்பலமாகி வருகின்றது. இதுவே தமிழ் மக்கள் வழங்கிய நிவாரண நிதிக்கு நிகழும். இதற்கு வெளியில் யாரும் பூதக்கண்ணாடி கொண்டு வெளிச்சம் காட்ட முடியாது. இந்த எல்லைக்குள் தான் புலிகளின் நிதி சேகரிப்பு நடைபெற்றது.

இதற்குச் சகல தகவல் தொடர்பு வழிகளையும் பயன்படுத்தினர். புலிகளின் நேரடி பினாமி தொலைக்காட்சிக்கு வெளியில் இயங்கிய தொலைக்காட்சிகளுக்குக் கூட, மறைமுகமான நிர்ப்பந்தத்தைப் புலிகள் கொடுத்தனர். உதவி அனைத்தையும் தம்மிடம் வழங்கக் கோரும் நிர்ப்பந்தத்தை அறிவித்தல்கள் மூலம் ஏற்படுத்தினர். மனித அவலத்தை, மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் வக்கிரமாக்கி அதை விளம்பர நிகழ்ச்சியாக்கிக் கொண்டிருந்த போது, உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் வழங்குங்கள் என்று வலிந்து கூறுமளவுக்கு நிகழ்ச்சிகள் ஒரு செயற்கை தன்மையுடன் ஒளிபரப்பாகின. புலிகள் என்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக வலிந்து கூறப்பட்டது. இந்த உதவும் செய்திகளின் போது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புனர்வாழ்வுக் கழகம் உதவுவதாகச் செய்தியாளர்கள் அங்கு செல்லாத நிலையிலும் கூறிய சம்பவங்கள் ஒரு திணிப்பாகவே அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அதாவது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற புலிகள், தமிழ் மக்களுக்கு உதவுவதாகக் கூறும் வார்த்தைகள் வக்கிரமான காட்சிகள் மீதான ஒரு ஆக்கிரமிப்பாகவே இருந்தது. அதாவது இதைக் கூறுவதற்காகவே காட்சிகள் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. இதன் மொத்த நோக்கமே தமிழ் மக்களின் மந்தைத்தனத்தை, பணமாக்குவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியப் பாணியில் பொய்ப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு புலிகள் பிரச்சாரத்தைக் கட்டமைத்தனர். கட்டமைக்கின்றனர். உலக மக்களை அடிமைப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கேடுகெட்ட வக்கிரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது போல், புலிகள் தமிழ் மக்கள் மேல் தமது சொந்த வக்கிரத்தை உருவாக்கினர். பிணங்களை விளம்பரப்படுத்தி பணத்தைத் திரட்டினர். இந்த வக்கிரமான விளம்பரத்தின் போது, வாழும் உயிர்களின் உளவியல் சிக்கல்களை உருவாக்கக் கூடிய காட்சிகளைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாகவே ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிப் படிமங்கள் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர்களையும், அவர்களின் சிறு குழந்தைகளையும் எதிர்காலத்தில் பல உளவியல் நோய்க்கு இட்டுச் செல்லும் அபாயத்தை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை. பிணக் குவியல்களும், பிணங்களும் ஒரு செய்தி என்ற கட்டமைப்பைத் தாண்டி, அதை அநாகரிகமாக விளம்பரமாக்கி பல மணி நேரம் தொடர்ச்சியாக சில நாட்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நலிந்து பல உளவியல் நோய்க்குள் சிக்கியுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம், புதிதாகத் தீர்க்க முடியாத பல உளவியல் நோய்கள் உள்ளாகும் அளவுக்கும், அவர்களின் குழந்தைகளுக்குப் பைத்தியத்தை உருவாக்கும் அளவுக்கு ஒரு உளவியல் யுத்தத்தை நடத்தியே பணத்தைத் திரட்டினர். இந்தக் காட்சிகள் எல்லாம் மனிதத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள நடத்தப்பட்டவையல்ல. பணம் திரட்டும் ஒரேயொரு நோக்கில் மட்டுமே நடத்தப்பட்டவை.

இப்படி திரட்டப்பட்ட பல பத்துக் கோடிப் பணத்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி கொடுப்பார்கள் என்ற எந்தத் திட்டத்தையும் யாரும் எதிர்காலத்தில் பெறமுடியாது. அதாவது தாம் கொடுத்த பணத்தைக் கண்காணிக்கும் உரிமை கொடுத்த மக்களுக்குக் கிடையாது. பணம் கொடுத்தவர்கள் பலர், இந்தப் பணம் ஆயுதங்களாகவே செல்லும் என்ற அதிருப்தியுணர்வுடன் தான், தமக்கு வேறு மார்க்கம் இன்றி கொடுத்ததைச் சொல்லி புலம்புவதைக் காண்கின்றோம். புலிகள் ஒன்றும் மக்களுக்காக இயங்கும் மக்கள் இயக்கம் அல்ல. கரையோரங்களில் கஞ்சிக்கே வழியற்று வாழ்கின்ற இந்த மக்களையிட்டு என்றுமே அக்கறைப்பட்டது கிடையாது.

முல்லைக்கரைகளில் வாழ்ந்த இந்த மக்களுக்கு 1995இன் பின்பாக அரசு வழங்கிய 25,000 ரூபா நிவாரணத்தைக் கொண்டே, பஞ்சம் பிழைத்து வாழ்ந்த வாழ்வை சூசையே தனது சொந்தப் பேட்டியில் ஒப்புக் கொள்கின்றார். அரசுதான் அங்கு உதவி செய்து இருந்தது. இந்த மக்களின் அவலத்தை வக்கிரமாகப் படமாக்கி காசு பண்ணியவர்களும் சரி, இதை அரசுக்கு எதிராக முன்னிறுத்தி அரசியல் விபச்சாரம் செய்த சக்திகளும் சரி என்றுமே இந்த ஏழை மக்களையிட்டுக் கவலைப்பட்டது கிடையாது. ஓட்டைகள் விழும் ஓலைக் கீற்றில், மாற்று உடுப்புகளின்றி வாழ்ந்த இந்த ஏழைகளின் வாழ்வை எந்தத் "தேசியவாதிகளும்' கண்ணெடுத்து பார்த்ததில்லை. இந்த ஏழைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தையே தேசியமாகவும், அதையே வாழ்வாகவும் கொள்கையாகவும் கொண்ட ஒரு பொருளாதாரக் கட்டுமானத்தையே புலித் தேசியம் பீற்றுகின்றது. புலிகளின் பொருளாதாரக் கொள்கை மக்களின் பொருளாதார வாழ்வையிட்டு எந்தச் சமூக அக்கறையையும் கொண்டிருந்ததில்லை. புலிகளின் பொருளாதாரக் கொள்கை அவர்களின் வரலாறு முழுக்க, மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மக்களின் ஏழ்மையும், அவர்களின் கூலி வாழ்வும் புலிகளின் முதலீடுகளுக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த இயற்கை அனர்த்தங்களுக்கு (பேரழிவுகளுக்கு) முன்பு இந்த மக்களையிட்டு, அவர்களின் சமூகப் பொருளாதார வாழ்வையிட்டு அக்கறையற்ற புலிகளின் அரசியல் கொள்கை, பல பத்து கோடி நிதிகளை அந்த மக்களுக்குக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, புலிகளின் முதலீடும், புலிகளின் தனிப்பட்ட முதலீடும் பெருகவே வழிவகுக்கும். உண்மையில் இன்று உயிர் தப்பியவர்கள் புலிகளிடம் கூலிக்கு வேலை செய்ய முடியும். இந்த மக்களின் சுய உற்பத்திகளை அழித்துவந்த புலிகளுக்கு, இயற்கை கொடையாக அதை வேகமாக அழித்துக் கொடுத்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் ஈடேறவிடாது புலிகளின் முதலீட்டில் கூலிகளை உருவாக்கும் வல்லமை வாய்ந்த நிதியாதாரங்களை, பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் அவர்களுக்கு எதிரா கவே திரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு என பரந்துபட்ட மக்கள் வாரி வழங்கிய நிதி, அவர்களுக்கு எதிராகவே உற்பத்தித் துறையில் செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது. இது உயிர் தப்பியவர்கள் மேல் உருவாகும் மற்றொரு சுனாமிதான்.

இதைவிட சேர்க்கப்பட்ட புனர் வாழ்வு நிதியின் பெரும் பகுதி, மீண்டும் ஏகாதிபத்திய ஆயுதச் சந்தையில் புதைந்து போவதை யாரும் தடுக்க முடியாது. மிகுதி பெரும் சொந்த முதலீடாகவே மாறும். இதை நாம் நடைமுறையில் புலிகளின் பல முதலீடுகளில் என்ன நடக்கின்றது என்பதை வைத்துக் காண முடியும். இதற்கு மாற்று விளக்கம் யாராலும் நடைமுறையில் காட்ட முடியாது. இவற்றைக் கடந்தகாலத்தில் புலிகளின் செயல்பாடுகள் அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகின்றன. இந்தக் கடற்கோள் ஏற்படுவதற்கு முன்பு மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டி, சேர்க்கப்பட்ட நிதி, அந்த மக்களுக்குச் சென்றதை எந்தக் கொம்பனாலும் காட்ட முடியாது. இதற்கு ஒரு துப்பாக்கி குண்டால்தான் பதில் தரமுடியும். இதுதான் உண்மை. இதற்கு வெளியில் உண்மை கிடையாது.

உண்மைகளைப் புதைகுழியில் புதைத்தபடியே தான், புலிகள் சிறீலங்கா அரசுக்கு எதிராக உடனடியாகவே குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கின்றனர். இவையெல்லாம் ஒருதலைப் பட்சமானவை. சிறீலங்கா அரசு ஒரு சிங்கள இனவெறி இனவாத அரசாக இருப்பதும், தமிழ் மக்களை விட சிங்கள மக்களுக்கு அதிக சலுகைகளையும், முதன்மையான உதவிகளையும் வழங்குகிறது என்பதும் உண்மைதான். அப்படித்தான் இந்த இனவெறி அரசு இயங்குகின்றது. ஆனால் புலிகள் கூறுவது போல் அல்ல. புலிகள் தாம் தம்மளவில் மக்களுக்கு எதையும் செய்ய முடியாத நிலையில், இதை எதிரி மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தமது சொந்தக் கையாலாகாத்தனத்தை மூடிமறைக்கின்றனர். சொந்த மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கிழமை கடந்துபோன நிலையிலும் அந்த மக்களைப் புலிகளின் தலைவர் சென்று பார்க்கவில்லை. இது ஒரு இனம் தெரியாத புகைச்சலாக, எரிச்சலாகக் குசுகுசுக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவரின் பெயரால் வந்த அறிக்கை 30 கோடி ரூபாவை நிவாரணமாக அறிவித்துள்ள நிலையில், அவை மக்களுக்குச் சென்றதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. தலைவரின் பெயரில் விடப்பட்ட அறிக்கை, இனம் கடந்து, மொழி கடந்து தமிழ் சிங்களம் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் புலிகள் கட்டமைப்பு புலித் தலைவரின் அறிக்கைக்கு மாறாக, சிங்கள மக்களுக்கு எதிரான பிளவை அகலப்படுத்தும் தீவிர தமிழ் இனவாதப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தலைவரின் அறிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள உண்மை, 30 கோடி நிதிக்கு (இதுவும் மக்களின் நிதிதான். இந்த நிதி இருந்த காலத்தில்தான், வன்னியில் எலும்பும் தோலுமாக மக்கள் வாழ்வைப் படமாக்கி முன்பு காசு சேர்த்தனர்). மட்டும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் புலிகளின் நிவாரணம் எங்கே எப்படி மக்களுக்குச் சென்றுள்ளது.

அறிவிழந்த உணர்ச்சிவசப்பட்ட சில முட்டாள்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மருத்துவம் மற்றும் உணவு விநியோகங்களை எடுத்துக்காட்டுகின்றனர். இது அந்தப் பிரதேசத்தை ஆளும் புலிகளின் கடமை. இந்த இடத்தில் புலிகள் அல்லாத யார் இருந்திருந்தாலும் இதைச் செய்திருப்பார்கள். உலகெங்கும் இது நடந்தது. உண்மையில் இந்தக் கட்டமைப்பிலும் அணிதிரட்டப்படாத மக்களின் உதவியைத்தான், புலிகளால் எடுத்து மீளக் கொடுக்கப்பட்டது. புலிகள் அல்லாத தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் இதைச் செய்தது. இராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. அதற்காக இராணுவத்துக்கு நிதியை வழங்கிவிட முடியுமா? இது போல்தான் புலிகளும்.

2.1 மக்களுக்காக வாழ்பவர்கள் மட்டும்தான், புனர்வாழ்வைக் கூடியளவுக்கு நேர்மையுடன் செயல்படுத்துவார்கள் அல்லவா!

இந்த நிலையில் ஆரம்ப நாட்களில் அரசின் நிவாரணங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பது, உண்மைதான். ஆனால் இதைப் புலிகள் தமிழ் மக்களுக்கு மட்டும் அரசு இப்படி செய்கின்றது என்று ஒருதலைப்பட்சமாகக் குற்றம் சாட்டிய போது, உண்மை வேறொன்றாக இருந்தது. அரசு சிங்கள மக்களுக்கும் கூட உதவி செய்யவில்லை என்பதைப் பூசி மெழுகிவிடுகின்றனர். சிங்களப் பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்கள் அரசின் உதவி எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியதை, தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. இது இந்தியா முதல் அனைத்து நாடுகளினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் குற்றச்சாட்டாக முன் வைத்தபோது அதில் நியாயம் இருந்தது.

ஆனால் புலிகள் தமிழ் மக்களுக்கு மட்டும் உதவி செய்யவில்லை என்று இலங்கை அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றி அதிக பணம் கறக்கும் உத்தியை அடிப்படையாகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை விட, பாதிக்கப்படாத மக்களை ஏமாற்றி பணம் கறப்பதே, இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. அதாவது பாதிக்கப் பட்ட மக்களின் பெயரில், தமக்குப் பணம் சேர்க்க இதைப் பயன்படுத்திக் கொண்டனர். இதன்போது தமிழ் இனவாதம் என்றுமில்லாத உச்சத்தை அடைந்தது, மற்றொரு பக்கத்தில் புலிகளின் பணம் சேர்க்கும் உத்தி, சிங்கள மக்களுக்கு அரசு உதவி செய்வதாகக் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் முதுகில் குத்தினர். அரசுகளின் கையாலாகாத்தனத்தையும், அரசின் செயலற்ற தன்மையையும், அது சார்ந்த உண்மைகளையும் மூடி மறைப்பதன் மூலம், தமிழ் இனவாதத்தையே விரிவாக்கி தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளனர்.

உலகமயமாதலில் நவீன காலனியக் கைக்கூலிகளாகச் செயல்படும் தேசிய அரசுகள் மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் உடனடியாக நேரடியாக வழங்க முடியாது. எந்த நிவாரணமும் உலகவங்கியின் அனுமதியுடன் தான் வழங்க முடியும். இது இலங்கை இந்தியா என்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். உலகமயமாதலில் மனித அழிவுகளின்போது நிவாரணத்தை வழங்க சிறப்பு வடிவங்களை உருவாக்கியுள்ளனர். ஏகாதிபத்திய நிதியாதாரத்தில், அவர்களின் கைக்கூலிகளாகச் செயல்படும் தன்னார்வ அரசு சாராத குழுக்கள் தான் நிவாரணத்தை வழங்க முடியும். இது உலகமயமாதலின் அடிப்படையான விதிகளில் ஒன்று. இன்று உலகளவில் இப்படி இயங்கும் பல தன்னார்வக் குழுக்களின் வரவு செலவுகள், பல தேசங்களின் தேசிய வருவாயைவிடவும் அதிகமாகும். நிவாரணத்தை இடைத் தரகர்கள் இன்றி தமது விசுவாசிகள் மூலம் குறிப்பாக கிடைக்கப் பண்ணுவதன் மூலம், அதிக லாபத்தை மூலதனம் சம்பாதிக்கின்றது. அத்துடன் மக்கள் மேல் ஏகாதிபத்திய அரசியல் பொருளாதாரச் செல்வாக்கையும் செலுத்த முடிகின்றது. இந்த நிலையில் அரசுகள் சுரண்டலைப் பாதுகாக்கும் ஒரு இயந்திரத்தைக் கொண்ட ஒரு நிறுவனம் மட்டும்தான். நீண்டகால நிவாரணத்தை உலக வங்கியின் அனுமதியுடன்தான், அரசுகள் நீண்ட இடைவெளியில் வழங்க முடியும். இது இன்றைய அரசுகள் பற்றியதும், உலகமயமாதலில் பொதுவான ஒரு நடைமுறையாகும். இந்த இடத்தில் அரசுகள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி நிறுவனங்களே.

இந்தக் கட்டுப்பாடுகள் எதுவுமற்ற புலிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றால் எதுவுமில்லை. அரசு போல் தான், இவர்கள் தலைமையின் உத்தரவுகளுக்குக் காத்திருந்தனர். பரந்தமக்கள் கூட்டமும், பொது நிறுவனங்களும், தன்னார்வக் குழுக்களும் இணைந்தே ஆரம்ப மீட்புகள் முதல் ஆரம்ப நிவாரணங்களைச் செய்தனர். இவர்களுடன் அடிமட்ட புலிகளும் கைகோர்த்து நின்றனர். உண்மையில் இதுபற்றி புலித் தலைவர்களின் முதலாவது அறிக்கை வெளிவந்த காலதாமதத்தைக் கொண்டே, இதைக் கவனத்தில் எடுக்க முடியும். இதேபோல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ராணுவம் செயல்பட்டது. பின்னால் புலிகள் செய்ததெல்லாம், பொதுமக்களின் தன்னெழுச்சியான செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி அவற்றைத் தாம் செய்வதாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினர். நிவாரணங்களைக் கைப்பற்றி தாம் கொடுப்பதாகக் காட்டுவதே நிகழ்கின்றது. இந்தக் கைப்பற்றல் என்பது படிப்படியாகச் சொந்த இனத்தைக் கடந்து வளர்ச்சியுற்றதுடன், மற்றைய இனங்கள் மேலாதானதாகவும் மாறியது. இதுவே பிரதான முரண்பாடுகளாகப் புலி சார்பு, புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் ஒன்றையொன்று குற்றம் சாட்டி செய்தியாக்கின. மக்களுக்கு யார் கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதும், அதைக் கைப்பற்றுவதும் வன்முறையாகவே நிகழ்கின்றது. இங்கு புலிகள் தாம் கொடுப்பதைப் பறித்ததாகக் கூறவில்லை. மாறாக மற்றவர்கள் கொடுப்பதைச் சிங்களவர்கள் பறிப்பதாகக் கூறுவது, புலிகள் கொடுக்கவில்லை என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது. இந்தளவுக்கும் அதிக நிவாரணங்களை வெளியில் இருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சிங்கள மக்கள் கொண்டு சென்றுள்ளனர். இங்கு அரசு அல்ல.

குறிப்பாகத் தமிழர்கள் யாரும் கண்டு கொள்ள மறுக்கும் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குச் சிங்கள முஸ்லீம் மக்களின் உதவிதான், குறைந்தபட்சமான அடிப்படையான உதவியாக இருந்தது. இதேபோல் திருகோணமலைக்கும், இந்த உதவி தங்குதடையற்ற வகையில் சென்றது. இதேநேரம் ஐரோப்பாவில் கோடிக்கணக்கான பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. பல கிராமங்களுக்கு யாரும் செல்லாத ஒரு நிலையில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். இந்த உண்மைகள் திட்டமிட்டே மூடிமறைக்கப்படுகின்றது. இதேநேரம் தனிப்பட்ட நபர்களினதும், பொது அமைப்புகளினதும் விநியோகங்கள் படிப்படியாக முற்றாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதை மறுவிநியோகம் செய்யப்படுவதுமாகவே புலிகளின் கையோங்கி வருகின்றது. இவற்றைத் தனிப்பட்ட பல சம்பவங்கள் செய்தியாக்கி வருகின்றன. தமிழ் மீடியாக்கள் இவற்றைச் செய்தியாக்க கடும் தடைகளும், நிர்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மாறாக இனவாத நோக்கில் மட்டும், மற்ற இனங்கள் மீதான குற்றமாகத் தமிழ் மீடியாக்கள் புனைகின்றன. பல சந்தர்ப்பங்களில் இதற்கு ஆதாரமே இருப்பதில்லை. தமிழ் இனவெறியைக் கக்கும் ஒரு எல்லைக்குள் மட்டும் நிகழ்ச்சிகளைப் பூதக்கண்ணாடி கொண்டு தேடி, அதையே பெரிதாகக் காட்டிவிடுகின்றனர். இதன் மூலம் இனவாதத்தை இந்த இயற்கை அனார்த்தத்தின் பேரழிவின் ஊடாக, மேலும் அகலப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த நிவாரண விநியோகத்தில் நடத்தும் இன ரீதியான இழுபறியான வலிந்த பிரச்சாரம், மூன்றாவது தரப்பின் (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்) தலையீட்டைத் தன்னிச்சையாக நடத்தும் நிலைக்கு ஏதுவாக மாறிவருகின்றது.

இவையெல்லாம் புலித் தலைவரின் அறிக்கைக்குப் புறம்பாக உள்ளது. இந்த அறிக்கை பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தில் பங்கு கொள்வதாகக் கூறிச் செல்கின்றது.ஆனால், சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஊடாகவே சகல தமிழ்ச் செய்தி மீடியாக்களும் விளம்பரப் பிரச்சாரத்தைச் செய்வதுடன், என்றுமில்லாத ஒரு இனப்பிளவை அகலமாக்கியுள்ளனர். அதாவது யுத்தம் நடந்தபோது ஏற்பட்ட இனப் பிளவைவிட இன்று தமிழ் மீடியாக்களின் குறுகிய பிரச்சாரத்தில் ஏற்பட்ட இனப்பிளவு அகலமானது. பாதிக்கப்பட்ட மக்களிடையே இந்தப் இனப் பிளவு குறைந்துள்ள நிலையில், இதற்கு உதவிய தமிழ் மக்களிடையே பிளவுக்கான இனஉணர்வுகள் சார்ந்த அடிப்படைகள் வெட்கம் கெட்ட முறையில் அகலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய சிங்கள, முஸ்லீம் மக்களிடையே நேச உறவுகள் நெருங்கிக் காணப்படுகின்றது.

பிணத்தை விளம்பரம் செய்து, சிங்கள மக்களைக் கேவலப்படுத்தி பணம் சேர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான தமிழ்த் தேசிய வியாபாரம் சர்வதேச புதிய தலையீடுகளால் நடுச்சந்திக்கு வந்துள்ளது. ஏன் புலம்பெயர் நாடுகளில் கோடிக்கணக்கில் சேகரிக்கப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செல்வதை ஏகாதிபத்தியம் கண்காணிக்கவும், அப்படி பணம் செல்வது உறுதிபடுத்தப்படாவிட்டால் அவற்றைப் பறிமுதல் செய்யும் நிலைமைக்கு இலங்கையில் சர்வதேசத் தலையீடுகள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இனவிரோத குறுந்தேசிய உணர்வுகளைப் பயன்படுத்தி நிதியைத் திரட்டியபோது, இந்தக் குறுந்தேசிய இன உணர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பல அடிப்படையான பிரச்சாரங்களுக்கு, கையாண்ட கூற்றுகள் அடிப்படையற்றதும் ஆதாரங்களற்றதுமாகக் காணப்படுகின்றது. மறுபக்கத்தில் புலித்தலைவரின் அறிக்கைகள் தமது சொந்த இழப்பு மீது கூட ஒன்றுக்கொன்று முரணானதாக வெளியிடப்படுகின்றது. முரண்பாட்டின் வடிவமாகவே நிகழ்ச்சிகள் முன்வைக்கப்பட்டது. செய்திகள் அடிப்படையும் ஆதாரமுமற்ற ஒன்றாகவே எப்போதும் முன்வைக்கப்பட்டது. கடற்கோள் நிகழ்ந்த அன்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, தமிழ் மீடியாக்கள் மட்டக்களப்பு மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கருதிக் கொண்டிருந்தன. இதன்போது தீபம் தொலைக்காட்சி மட்டக்களப்பு பாதிப்பைக் கூறியதுடன், தமிழர்களின் இழப்பையிட்டு ஜே.வி.பி. சிரித்து கொண்டாடுவதாகப் புலிப் பினாமியாகவே செய்தி தயாரித்து வெளியிட்டது. உண்மையில் அக்கணம் ஜே.வி.பி.யின் கோட்டைகளாக விளங்கிய பிரதேசங்களில், பல ஆயிரம் மக்கள் நீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். செய்திப் புனைவுகள், கற்பனைக்கு எட்டாத இனவாதத்துடன் முன்வைக்கப்பட்டது. மனித இழப்பைவிடவும் புலிப் பினாமியத்துக்கும் புலிக்கும் இசைவாகச் செய்திகளைத் திரித்துத் தருவது உச்சத்தையே எட்டியது.

இந்தப் புனைவு விளம்பரச் செய்திகளில் மற்றொரு உண்மையை நாம் காணமுடியும். இந்தச் செய்திகள் முல்லைத்தீவை நோக்கி திடீரென நகர்ந்தது. முல்லைத்தீவே அதிக இழப்பைச் சந்தித்ததாகக் காட்ட முனைந்த நிகழ்வு முன்னிலைக்கு வந்தது. இதில் பி.பி.சி. தமிழ்ச் செய்தி தொகுப்பாளராகவும், பவ்வியமாகப் புலிப் பினாமியாகவும் புலம்பும் ஆனந்தி அம்மாவும் தாளம் போடத் தொடங்கினர். முல்லைத்தீவு இழப்பைப் பெரிதாகக் காட்டும் விளம்பரம், நிதி சேகரிப்பின் மையமான கோஷமாகியது, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகள், தமிழ் மீடியாக்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. புலிகள் அல்லாத உதவிகள் இருட்டடிப்பு செய்து, தமிழ்க் குறுந்தேசிய உணர்வுக்குச் செங்கல் இட்டனர். குறிப்பாக அம்பாறை இழப்பைக் குறைவாகச் சித்தரிக்க முனைந்தனர். அம்பாறையில் அதிக இழப்பு என்று கூறியவர்களைப் பொய்யர்களாகச் சேறு பூசினர். திடீரென யாழ்ப்பாணமும், முல்லைத்தீவும் செய்தியில் முதன்மை நிகழ்ச்சிநிரலாகியது. தமிழ் மக்களின் இழப்பு அதிகம் என்று கூறுவதன் மூலம் பணத்தை உலகளவில் அதிகம் கறக்க முடியும் என்ற புலிகளின் தத்துவத்தைத் தமிழ் மீடியாக்கள் பயன்படுத்திக் கொண்டன. அதுவும் முல்லைத்தீவில் அதிக இழப்பும், அடுத்து யாழ்ப்பாணம் அதிக இழப்பாகவும் சித்தரிக்கும் போக்கு முன்னிலைக்கு வந்தது. இதன்போதே நிதி சேகரிப்பு உச்சத்தை அடைந்தது. ஆனால் இழப்பு அம்பாறையில் மிகப் பெரிதான ஒன்றாக இருந்தது. இலங்கையில் உயிர் இழந்தோரில் அரைவாசி பேர் அம்பாறையைச் சேர்ந்தவர்கள். அதிக அகதிகள் அங்கு உருவாகியுள்ள நிலைமையை முற்றாகத் தமிழ் மக்களின் மத்தியில் திட்டமிட்டு மறைத்தனர். இந்த நிலையில் எந்த நிவாரணமும் அங்கு செல்லவில்லை. பிணங்கள் குவியல் குவியலாக ஏற்றப்பட்டுப் புதைக்கப்பட்ட நிலையில், அம்பாறையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட அமைப்புகள் பிணங்களைப் புதைக்க வந்து உதவும்படி ஒரு வேண்டுகோளை அனைத்து மக்களிடமும் பகிரங்கமாக விடுத்தனர். இதன்போது கூட தமிழ் மீடியாக்கள் அம்பாறை இழப்பையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக அதை மூடிமறைத்தன.

மாறாகப் புலிப் பினாமிய இணையத்தளங்கள் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மீது சேற்றை வாரி வீசின. முஸ்லீம் மக்களின் இழப்பை மிகைப்படுத்துவதாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகவும் தூற்றின. இதைத் தமிழ் மீடியாக்கள் செய்தியாக்கின. குறிப்பாக தீபம் தொலைக்காட்சி ஊடாக அனஸ் என்ற செய்தியாளர் அம்பாறை இழப்பைக் கொண்டு வந்தபோது, புலிகளின் இணையத்தளமான நிதர்சனம் அனஸ்சை தவறான தகவல் தருபவராக, விபரித்து ஒரு தேசத்துரோகியாகவே காட்ட முனைந்தது. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தின் இழப்பை மறைத்து, தமிழ் மக்களின் முட்டாள்த் தனத்தின் மீது பணத்தைக் குவித்துக் கொண்டனர். அம்பாறையில் இழப்பு பற்றி முழுமையான புள்ளிவிபரங்கள் வெளிவராவிட்டாலும் பெருமளவில் முஸ்லீம் மக்கள் இழப்பு இலங்கை அளவில் கணிசமானது. தமிழ் மக்கள் அளவுக்கு முஸ்லீம் மக்களின் இழப்பு சமமானது. கிடைத்துள்ள புள்ளிவிபர அடிப்படையில் அதிக இழப்பைச் சிங்கள இனம் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு உதவிகளைக் கொள்ளையிட, முஸ்லீம் மக்கள் பற்றி புலிகளுக்குத் திடீர் கருசணை ஏற்பட்டது. இரண்டு லட்சம் ரூபா என்ற அற்பத் தொகையைக் கொடுக்கும் அறிவிப்பு வெளியிட்டதுடன், அவர்களைத் தமிழ் மக்களாகக் காட்டுவதும் தொடங்கியுள்ளது. கடந்தகால மனக்கசப்பான சம்பவங்களை மறப்போம் வாருங்கள் என்று புலம்பத் தொடங்கியுள்ளனர். கிடைக்கும் நிவாரணத்தை பங்கு போடுவதற்கு முஸ்லீம்களைத் தமிழ் மக்களாகக் காட்டுவது அதிகரித்துள்ளது. சிங்களவர்களை விட தமிழரின் இழப்பு அதிகம் என்று காட்டுவது உண்மையில் வெளிநாட்டு உதவியைப் பங்கிடுவதில் புலிகளுக்குத் தணியாதத் தாகமாகி விடுகின்றது.

உண்மையில், தமிழ் மக்கள் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களைவிட அதிகம் இறந்து இருந்தால் நல்லது என்ற நிலைப்பாட்டைப் புலிகள் தங்களின் வெளிப்படுத்தல் ஊடாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழருக்கே அதிக இழப்பு என்று இதனடிப்படையில் காட்டமுனைந்தனர். அதிகம் தமிழ் மக்கள் இறந்து இருந்தால், அதில் அதிக லாபத்தை அடைய முடிந்திருக்கும் என்ற புலிகள் நிலைப்பாடு அவர்களின் வெளிப்படுத்தல்களில் பிரதிபலித்தது. இதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக பணத்தைத் திரட்டவும், உலக உதவிகளை அதிகம் பெறவும், அதிக இழப்புக்காக ஏங்கியதைத் தொலைக்காட்சிகள் மற்றும் செய்திகள் அப்பட்டமாகப் பிரதிபலித்து நின்றன. உலகளாவிய பல நாடுகளின் இழப்பைக் குறுகிய தமிழின இழப்பாகக் காட்டமுனைந்தனர். மேற்கு நாட்டு அரசியல்வாதிகளையும், பிரமுகர்களையும் ஏமாற்றி பணம் திரட்டினர். திரட்ட முனைப்பு கொண்டனர். மேற்கு மக்களை ஏமாற்றி எல்லா இழப்பும் தமக்காகக் காட்டி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி பணம் திரட்டினர். இலங்கையின் மொத்த இழப்பையும் காட்டி, தமது குறுகிய நலன்களுக்கு மேற்கு மக்களின் பணத்தைத் திரட்டினர். பிணங்களை விளம்பரமாக்கி சந்தைப்படுத்திய ஒரேயொரு தேசியம், தமிழ்தேசியம் மட்டும் தான் என்ற வரலாற்றை நவீன காலத்தில் பதிவு செய்துள்ளனர்.

02.01.2005

ஈழம், கொசோவோ, குர்தீஸ் போராட்டங்கள் (2)

ப. வி. ஸ்ரீரங்கன்
26. 12. 2007.

"Der Feind meines Feindes ist mein Freund". "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்"என்றபடி நமது அரசியலில் இப்போது காய்கள் நகருகின்றன. இலங்கையில் நிகழும் அரசியல் சித்துவிளையாட்டில் தமிழக-இலங்கைத் தமிழ் பாராளுமன்றச் சகதிகளின் குழிப்பறிப்போ சொல்லி மாளாதது. எனினும், நாம் மேலே செல்வோம்.


இன்றைய தரணத்தில் தமிழீழ அரசு உருவாகுவதற்கும், அது தமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்லாது அனைத்துச் சிறுபான்மை மக்களுக்குமானவொரு அரசாக அமையுங் காரணத்தில் ஒரு முற்போக்கான தேசிய விடுதலைப் போரை முன்வைத்திருக்க முடியும். பேரினவாதச் சிங்கள அரசுக்கும் அதன் பாசிசக்கட்டமைப்புக்கும் அந்தக் கட்டமைப்பால் முன்தள்ளப்பட்ட சிங்களவெறி இராணுவத்துக்குமான மாற்றீடாக-முன்னுதாரணமாக ஈழம் மக்களை நேசிக்கும், உழைக்கும் மக்களைக்கூறுபோடதாவொரு முற்போக்கான நாடாக உருவாதற்கான பெரும் சாத்தியப்பாடுகள் இலங்கையில் இருந்தது. இத்தகையவொரு சாத்தியப்பாடானது உலக அரங்கில் எமக்கான பாரிய அநுதாபத்தையும், நம் மக்களின் நியாயத்தையும் நிலைப்படுத்தியிருக்கககூடிய சாத்தியப்பாடே அன்றிருந்து. இத்தகைவொரு அரசியல் சாதகமான சூழலில் எமது மக்களின் தேசம் உருவாக்கும் அபிலாசை வெறும் கனவாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், நாம் சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறைக்குள் தினமும் நசிபட்டுவரும்போது நம்மிடம் பிரிந்து போகும் நிலையைத் தவிர வேறொரு முடிவு இருந்திருக்க முடியாது.


இத்தகைய சூழலை மிக இலகுவாகக் கணக்குப்போட்ட இந்தியா அன்று தனது முற்போக்கு முகமூடியோடு நம்மை அணைத்தபடி நமது முதுகில் குற்றுவதற்காக நமக்குள்ளே பற்பல ஆயுதக்குழுக்களை உருவாக்கிப் புலிகளை வளர்த்து எமது அரசியல் எதிர்காலத்தையே நாசம் செய்து, உலக அரங்கில் நம்மையும், நமது ஜீவாதாரவுரிமையான சுயநிர்ணய உரிமையை வெறும் கேலிக்கிடமாக மாற்றியமைத்து தனது நோக்கில் வெற்றியீட்டியது.


இன்று, நமது மக்கள் படும் மிகக்கொடுமையான அடக்குமுறை உலகுக்குத் தெரிவதற்குப் பதிலாக புலிகள் செய்யும் பயங்கரவாதத் தாக்குதல்களே பூதாகரமாகத் தெரிகிறது. உலகத்தின் பார்வையில் நமது போராட்டம் தேவையற்ற ஒன்றாகவும், ஒரு பயங்கரவாதக் குழுவால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதப் போராட்டமாக மாறியதற்கு யார் காரணம்?


பதில் மிக இலகுவானது. ஆனால், அதன் உண்மையை ஏற்பது கடினமானது.


தமிழ் ஓட்டுக் கட்சி அரசியலிலிருந்து முன் தள்ளப்பட்ட அரசியலும் அதன் வாயிலாகத் திட்டமிட்டு இந்தியாவால்-உலக ஏகாதிபத்திய அமெரிக்காவால் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுக்களே இத்தகைய நிலைக்குக் காரணமாகும். இன்றைய புலிகளின் பரிதாபகரமான நிலை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். தம் மக்களையே வேட்டையாடிக்கொண்டு, அந்த மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகச் சொன்னவொரு பாசிச இயகத்தின் அழிவு இன்று நெருங்கி வருகிறது. அது தன் இருப்புக்காகத் தனது எஜமானர்களோடு நடாத்தும் பேரம் உலகப் பிரசித்தி பெற்றது. அது எங்கெங்கே பேரங்களைச் செய்ததென்று கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாகக் கொசோவோ, குர்தீஸ் இன மக்களின் போராட்டத்தோடு நமது மக்களின் நியாயமான உணர்வு-ஒரு தேசம் உருவாக்கும் கனவு ஏன் வீணானது என்பதை ஒத்துப் பார்ப்பதே இதன் நோக்காக இருக்கிறது.


இலங்கையின் இனவாதச் சிங்கள அரசு தமிழ் பேசும் மக்களுக்கிழைத்த அரசியற் துரோகங்கள் பெரும் சமூகக் குற்றமானது. அது யுத்தகாலத்தில் செய்த மனிதவிரோதக் கொலைகளானது பெரும் இனவழிப்பானது. அது, கொசோவோ மக்களுக்கு, குர்தீஸ் மக்களுக்கு நேர்ந்ததைவிடப் பன்மடங்கு பெரிதானதாகும். என்றபோதும், நமது அரசியல் தோல்வியில் முடிந்து, இந்தியக் கயமைவாத அரசிடம் தஞ்சம் கோரும் நிலைக்கு எமது போராட்டச் சக்தியைப் பலவீனமாக்கியது வரலாறு. நாம் எதற்காக நமது மக்களின் சுயவெழிச்சியை முடக்கினோம்? நமது மக்களின் தயவில் நிற்காது இந்தியாவை-ஏகாதிபத்திய மேற்குலகை எங்ஙனம் நம்பினோம்?


இங்கேதாம் வர்க்க நலனும், அதன் இருப்பும் நம் அரசியல் அபிலாசையைச் சிதைத்து வந்திருப்பதைக் கட்டுரைகளுடாகச் சொன்னோம். எமது மக்கள் இயல்பாக ஒரு தேசத்தை நிர்மாணிக்கும் நிலைக்குள் உள்வாங்கப்பட முன்னமே அப்படியொன்று நிகழும் தரணத்தைப் புரிந்த அந்நியச் சக்திகள் மிக அவசரமாக முன் தள்ளிய "தமிழீழக்"கோரிக்கையானது நம்மைக் கெலிக்க வைத்து, நமது கால்களில் ஊன்றி நிற்கும் பக்குவத்தை உடைத்து நம்மைக் கோமாளிகளாக்கிப் பாசிசச் செயற்பாட்டை நோக்கித் தள்ளிப் பல பத்தாயிரம் நமது மக்களையே வேட்டையாடியது. இது ஒருகட்டத்தில் இந்திய உளவுப்படையானது புலிகளை வைத்து அப்பாவிச் சிங்கள மக்களை அநுராதபுரத்தில் வேட்டையாடி எமது போராட்டத்தை மிகவும் சூழ்ச்சியோடு முறியடிக்கும் காயை நகர்த்தியபோது, இதற்கும் புலிகள் உடந்தையாக இருந்தார்கள். இதையும் அவர்களின்(புலிகளின்)அரசியல் ஆலோசகர் அடியெடுத்துக் கொடுத்தபோது, அந்தத் துரோகி யார்?அந்நிய நலனை முன் நிறுத்தியவொரு கைக்கூலியென நாம் பதினைந்தாண்டுகளுக்கு முன்னுரைத்தோம். இன்று, எமது போராட்டத்தின் செல்நெறியூடாக மிகவொடுங்கிய தாழ்நிலைப் போராட்டமே செய்ய முடியாதவொரு நிலையில் எங்கள் மக்களின் உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தும் நிர்மூலமாகிப் போயுள்ளது. நாம் தலை தூக்கமுடியாதவொரு சூழலுக்குள் மிகத் தந்திரமாகத் தள்ளப்பட்டுள்ளோம். இதிலிருந்து எமது மீட்சி எந்த வகையில் நிகழ முடியும்?


இலங்கை அரசானது எமது மக்கள்மீது மிகத் திட்டமிட்ட வகையில் இனவழிப்பைச் செய்தது. இது யுக்கோஸ்லோவிய இன அழிப்புப்போன்றே நமக்குள் நடந்தேறியது. ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பு என்றவொரு அமைப்பு யுக்கோஸ்லோவியாவின் கொசோவோ மக்களுக்கெதிரான இனவழிப்புப்பற்றி எழுதுகிறது"Die Angriffe folgen einer Systematik, die an jene aus dem Bosnien-Krieg erinnert. Sie beginnen häufig mit Überraschungsangriffen im Morgengrauen, die teils mit schweren Waffen wie Boden-Boden-Raketen und raketengetriebenen Granaten geführt werden. Dann werden Scharfschützen postiert, die der Zivilbevölkerung die Bewegungsfreiheit nehmen. Viele Zivilisten verbergen sich deshalb tagsüber im Wald und kehren nachts in ihre Häuser zurück, um sich mit dem Nötigsten zu versorgen. Schließlich ziehen schwer bewaffnete Truppen auf, die tagsüber alle Straßenverbindungen blockieren. Unter ihrem Schutz kommen Spezialeinheiten in dunklen Uniformen mit Macheten und "Skorpion"-Gewehren tschechischer Produktion in die jeweilige Ortschaft. Diese Truppen sollen Massaker begangen haben. Nach Tagen oder Wochen des Terrors werden die Bombardierungen wieder gesteigert und auch in der Nacht fortgesetzt, bis die Bevölkerung den Ort verläßt. Es folgen Plünderungen im großen Stil. Die Häuser werden niedergebrannt. Das Vieh bleibt unversorgt oder wird getötet.
Nach einer Statistik der GfbV wurden zwischen Anfang März und Ende Juli 1998 mehr als 250 albanische Dörfer von den serbischen Truppen angegriffen, mit schwerer Artillerie bombardiert und ganz oder teilweise zerstört. Laut der US-amerikanischen Menschenrechtsorganisation Physicians for Human Rights wurden Frauen festgenommen und vergewaltigt. Einige der Frauen seien anschließend "verschwunden". Nach Schätzungen der GfbV kamen bis Ende Juli mindestens 1. 000 Zivilisten ums Leben. "
பொஸ்னிய யுத்தம்பற்றி நினைக்கும்போது திட்டமிட்ட வகையில் தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதே ஞாபகத்தில் வருகிறது. அடிக்கடி ஆச்சரியப்படக்கூடியதாக்குதல் வைக்கறைக்குள் ஆரம்பிக்கும். ஒருபகுதி ஆயுதங்கள் தரைக்குத் தரை தாவும் ரொக்கட்டுக்கள், ரொக்கட்டுக்களால் இயக்கமுறும் கிரனைட்டுக்கள் உள்வாங்கப்பட்டும், அத்தோடு மிகவும் பாதுகாப்பு வலயப்படுத்தி குடிமக்களின் சுதந்திரமான நடமாட்டம்வேள்வியாகப்படும். இதிலிருந்து தப்புவதற்காகவே மக்கள் தங்களுக்கு அவசியமான உணவாதாரத்தை எடுத்துகொண்டு பகலில் காடுகளுக்குள் ஒழிந்திருந்துவிட்டு இரவில் வீடு மீள்வார்கள். பயங்கர ஆயுதம் தரித்து துருப்புகள் பகற்பொழுதினூடாக வீதிகளை மூடித் தடை செய்தவாறு தமது பாதுகாப்பு அரண்களை நிலையெடுத்தபடி சிறப்புப்படையணிகள் மங்கலான இராணுவயுடையுடனும், கையில் மெக்கனற்-ஸ்கொறோப்பியின் வகை ஆயுதங்களின் நுட்பத்தோடு அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தியபடி இருப்பார்கள். இந்தத் துரப்புகளே நரவேட்டையை நடாத்தியவர்கள். நாட்கணக்காகவும் சிலவேளை கிழமைக்கணக்காவும் வான் தாக்குதல்கள் நடக்கும், பின்பு மீளவும் இரவு நேரத்தில் தாக்குதல் முன்னெடுக்கப்படும். அந்தப் பகுதி மக்கள் இடம் பெயரும் வரைத் தாக்கல் நிகழும். தீயிட்டுக் கொளுத்தும் விளைவுகள் ஆரம்பிக்கும். வீடுகள் தீக்கரையாக்கப்படும், கால் நடைகள் பராமரிபற்று நிற்கும் அல்லது கொல்லப்பட்டிருக்கும். ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பின் கணிப்பீட்டின்படி 1998 ஆம் ஆண்டு மாச் ஆரம்பம் முதல் யூலை இறுதிவரை அல்பானியர்களின் 250 கிராமங்கள் செர்பிய இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. கடினமான ஆட்டிலெறிகளால் முற்று முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அக் கிராமங்கள் தாக்கியழிக்கப்பட்டன. அமெரிக்காவின் மனிதவுரிமை அமைப்பான Physicians for Human Rights சொல்வதன்படிப் பெண்கள் கைது செய்பட்டுப் பாலியற் பலாத்தகாரப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுள் சிலர் இறுதியிற் காணாதே போயினர். ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பினது கணிப்பீட்டின்படி யூலை இறுதிக்குள் 1000 பொதுமக்கள் பலி கொள்ளப்பட்டார்கள். "- http://www. bndlg. de/~wplarre/gfbv-03. htm


இவ் வகையான எத்தனை தாக்குதல்களை இலங்கைப் பாசிச அரசு நம்மீது நடாத்தியது. இதைவிடக் கொடிய பெரும் இடப்பெயர்வையெல்லாம் ஈழமக்கள் கண்டார்கள். பெருந்தொகையான மக்கள் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டார்கள். பெண்களின் பெண்ணுறுப்பில் குண்டு புதைத்துக் கொல்லப்பட்டார்கள். எனினும், உலகம் திரும்பிப் பார்க்காத நிலைமையில் நமது"தடுப்பு யுத்தம்"நடந்தேறியது. இன்றுவரை சிங்கள மேலாதிக்க அரசின் கொடிய இராணுவமானது தமிழ்பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்கெதிரான புலிவேட்டையென்ற போர்வையில் பல்லாயிரக்கணக்காக வருத்தி அவர்களின் வாழ்விடங்களை அபகரித்தும், கொன்றும் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது. என்றபோதும், புலிகளின் தவறான யுத்தச் செல்நெறியால் நம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்திய வல்லாதிக்கம் நம் மக்களை இலங்கை நரவேட்டையாட ஒப்புதல் அளித்தபடி நம்மைப் படுகுழியில் தள்ளுவதற்காகப் புலிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இலட்சணத்தில் தமிழ்ப் பாரளுமன்றப் பண்டியள் இந்தியாவால்தாம் தீர்வு சாத்தியமாம்-மயிர்!


இதுவொரு உதாரணம்தாம்.


ஆனால், கொசொவோவின்மீதான இவ்வளவு கரிசனை-ஓராயிரம் குறிப்புகள், எழுத்து வடிவங்களெனக் குவிந்துகிடக்கும் சூழலில் அந்தத் தேசத்தின்மீதான ஆர்வம் என்ன?பொருளாதார ஆர்வங்கள் அங்கே நிலைபெறவில்லையா?உண்டு. இதுவொரு பகுதி நலனே. கொசொவோவானது கனிப் பொருளுடையது. அதன் மூலப்பொருள்கள்மீதான பெரும் தொழில் நிறுவனங்களின் மிகையார்வானமானதும் இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்துக்கான அங்கீகரிப்புக்கு உடந்தையாக இருக்கிறது. கொசொவோ யுக்கோஸ்லோவியாவின் கனிவளம் நிரம்பிய பகுதியாகும். எனவே, இதை அன்றைய ஜனதிபதியான மிலோசேவிச்(Milosevic) இழக்க விரும்பவில்லை(Im Kosovo befinden sich große Vorkommen an Nickel, Kupfer, Blei und enorme Vorkommen an Chromerzen. (Mit Albanien zusammen verfügt das Gebiet über die zweitgrößten Chromerzvorkommen der Welt). Es ist klar, daß dieser Gegensatz, riesiger Reichtum an Bodenschätzen auf der einen Seite und soziale, sowie nationale Unterdrückung auf der anderen ). இன்றோ மேற்குலகப் பெரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கண்களில் அதன் உலோகம், செம்பு, ஈயம், ஈயக் குரோமியம் போன்ற முலவளத்தைத் திருடுவதற்காகவே இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்துக்கான ஒத்துழைப்பு நகருகிறது. அல்பானியர்கள் வாழும் கொசோவோவில் உலகத்திலேயே இரண்டவது பெரும் ஈயக் குரோமிய இருப்பு இருக்கிறது.


தொடரும்.

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள்


ப.வி.ஸ்ரீரங்கன்
23.12.2007

திரு.பிரபாகரனின் கடந்த மாவீரர்தினவுரையில் கொசோவோ குறித்தவொரு மேற்கோள் காட்டப்படுகிறது.கொசோவோ யுத்தஞ் செய்வதற்கானவொரு சூழலை அன்றைய ஒன்றிணைந்த யுக்கோஸ்லோவிய அரசியல் மற்றும் பொருளியல் ஆர்வங்கள்மட்டும் ஏற்படுத்தியிருக்கவில்லையென்பதும் அது வரலாற்று ரீதியாகத் தாக்கி அழிக்கப்பட்ட வரலாறானது துருக்கிய ஒஸ்மானியச் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடர்வதும் நாம் அறிந்த வரலாறுதாம்.முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களும் அதற்குப் பின்பான சோசலிசத்துக்கெதிரான பனிப்போர்கள்-சூழ்ச்சிகளும் கிழக்கைரோப்பாவின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிகளைத் திட்டுமிட்டுத் தாக்கி அழித்த வரலாறும் இந்த மேற்குலக மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குமான தொடர்புகள் அதிகமாகவே இருக்கிறது.

இந்த வகையானவொரு அரசியல்,இனவொதுக்கல்-அழிப்புகளுக்கும் நிகராகத் தமிழ் பேசும் மக்களும் (ஒத்ததன்மையோடே) இலங்கையில் முகங்கொடுக்கிறார்கள்.எனினும்,எமது போராட்டத்தைப் பயங்கரவாதமெனச் சொல்வதற்கான அரசியற்காரணங்களுக்கும் இன்றைய கொசோவோ அரசியல் தீர்வுக்கான அரசியில் பரிந்துரைப்புகளுக்குமான மேற்குலக ஆர்வங்கள் வெவ்வேறான திசைவழிகளில் நகரும் தரணத்தில்,நம்மைப் பயங்கரவாத முத்திரைக்குள் அடக்க முனையும் அரசியலைப் புலிகளுடாகச் செய்வித்த மேற்குலகமானது, இன்று கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அங்கீகரிக்க முனைகிறது.வரும் பெப்பரவரிமாதம் 2008 இல் கொசோவின் சுதந்திரப் பிரகடனம் அறைகூவலிடப்படுகிறது.இங்கே, அவற்றை ஏற்பதற்கான-அங்கீகரித்து ஆதரிப்பதற்கான முறைமைகளில் உலக ஆர்வங்கள் அரசியல் முன்னெடுப்பைச் செய்கின்றன.

கொசோவோ தனிநாடாவதற்கான பரிந்துரைப்புகள் ஐ.நா.வரை பேசப்படுகிறது.ஆர்வமுள்ள நாடுகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே அதை முன்னின்று செயற்படுத்தும் வகைகளிலான அழுத்தத்தைக் கொடுத்தபடி கொசோவோவின் பிரச்சனைகளைத் தீர்பதற்காக முனைந்து வருவதும்,இந்த அதீத விருப்புக்குள் ஐரோப்பாவின் கட்டம் கட்டமான ஆர்வங்கள் மிக நேர்த்தியாக இருக்கின்றன.வளர்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய உள்ளிணைவுகளும் அதுசார்ந்த பொருளாதார மற்றும் கட்டுமானக்காரணங்களும் புதிய ஐரோப்பாவின் தலைமையைச் சில வளர்ந்த ஐரோப்பாவுக்கு(ஜேர்மனி,பிரான்ஸ்) வழங்கிய கையோடு,இத்தகைய நாடுகள் மிக ஆழமாகச் செரித்துவரும் பொருளியல் இலாபங்களை மேலும் நிலைப்படுத்தி வருவதற்கு, கொசோவோவின் இனப்பிரச்சனை முட்டுக்கட்டை இடுகிறது.
கொசோவோ முஸ்லீம்மக்கள் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்குள் உள்வாங்கப்படும் ஒவ்வொரு நிலைமைகளும் அகன்ற ஐரோப்பாவுக்கு எதிரானதாகவே இருக்குமென்பதை ஐரோப்பியப் பொருளியல் வல்லுநகர்கள் குறித்தே வருகிறார்கள்.இது கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்துக்கூடாக அந்த மக்களை ஏமாற்றிவிடத்துடிக்கும்(தனிநாடுண்டு விலங்குடன்) அரசியலைக் கொண்டிருப்பினும் அகன்ற ஐரோப்பிய இணைவுகளுக்கும் மற்றும் ஐரோப்பிய செங்கன் ஒப்பந்தக் காரணங்களுக்கும்-நலன்களுக்கும் மிகக் கெடுதியாக இருக்குமென்பதும் மிக முக்கிய காரணமாகிறது.

ஐரோப்பியப் பொருளாதார வலையமானது மிக இலகுவாகத் தங்கு தடங்கலின்றி முழுமொத்த ஐரோப்பாவையும் கட்டிப்போடுவதற்கு எல்லைகள் தகர்வது மிக அவசியமாக இருக்கிறது.இத்தகைய காரணத்தால் செங்கன் ஒப்பந்தம் அமூலக்கு வந்து தற்போது எல்லைகள் தகர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கூடாக இஸ்லாமியக் குண்டுகள் வருவதற்கான தளமாகக் கொசோவோ இருப்பதற்கான சில அசமாத்தங்களை முன்கூட்டியறிந்த ஜேர்மனிய மற்றும் ஐரோப்பியப் புலனாய்வுத்துறை மிகவும் நேர்த்தியாகச் சொல்லும் அறிவுரை:"அகன்ற ஐரோப்பாவில் எதிரிகளற்ற அரசியல்நகர்வு".இந்தப் பொறிக்குள் நிலவும் பாரிய ஒடுக்குமுறையானது அரசியல் மற்றும் சட்டங்களால்மட்டும் நிலை நாட்டத்தக்க பாதுகாப்புக் கிடையாது.எனவே, தேசங்களையும் அந்தந்த மக்களையும் உள்ளிருந்து கண்காணிப்பதற்கான குறைந்தபட்ச ஜனநாயக அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அவசியமாகிறது. கொசோவோ தினிநாடாவதும் அதன் பிறப்பில் அந்த நாட்டில் புதிதாகப் பிறந்த குழந்தையை ஐரோப்பியத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி"தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் குட்டி"வருவதற்கும் முழுப்பாத்திரையும் ஐரோப்பியத் துருப்புகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான ஒரு அரசியல் சூதாட்டம் ஆரம்பமாகிறது.

Am 19. Dezember 2007 befasst sich zum wiederholten Mal der UN-Sicherheitsrat mit dem zukünftigen Status der serbischen Provinz Kosovo. Grundlage aller Überlegungen müssen das geltende Völkerrecht (Art. 2 der UN-Charta) und die Resolution 1244 (1999) sein: Danach ist und bleibt das Kosovo so lange Bestandteil des souveränen Staates Serbien, solange dieser selbst einer Abtrennung nicht zugestimmt hat. Die Kosovo-Albaner, die USA und eine Reihe von EU-Staaten wollen die Unabhängigkeit des Kosovo und nehmen dafür die Risiken, die damit verbunden sind, in Kauf.Im Folgenden dokumentieren wir zwei Artikel, die vor der Sitzung des UN-Sicherheitsrats erschienen sind. Zuvor aber die Agenturmeldung vom Scheitern der Verhandlungen im UN-Sicherheitsrat.

மக்கள் உரிமை-இனங்களின் உரிமை ஆர்டிக்கல் 2 ஐ.நா-சபைச் சாசனம் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தையும் அந்த நாடு செர்பியாவிலிருந்து பிரிந்த சுதந்திரமான தேசமாக ஏற்றுக்கொள்ளுமானால் இலங்கையிலும் மூன்று தசாப்பதாக நடக்கும் போரில் இலட்சம் மக்கள் அழிந்து,தமிழ் பேசும் மக்களின் தேசம் சுடுகாடாகியுள்ள இன்றைய நிலையில் தமிழ்பேசும் மக்களால் ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டால்,அதாவது கொசோவோ பிரகடனப்படுத்திய ஒருசில மணி நேரத்தில் ஈழம் தன்னைப் பிரகடனப்படுத்தினால் இதை இந்த ஐ.நா.வவின் சாசனமும்,ஐரோப்பாவும் ஏற்கும் நிலை உள்ளதா?

இங்கேதாம் வருகிறது எது பயங்கரவாதமென்று.

இதுவொரு தரணம்.

இங்கே, நமது அரசியல் வெற்றிபெறும் ஒரு தரணம் வருகிறது.

இதைச் சாதகமாக நிலைப்படுத்தும் இராஜ தந்திரம் தமிழர்கள் தரப்பிடம் இருக்கிறதா?

கிறிஸ்த்துவுக்கு முன் 1000 ஆண்டளவில் கொசோவோவின் மக்கள் குடியேறிதற்கான தரவுகள் கிடைக்கின்றன.எனினும், அவர்களை ஐரோப்பியச் சில வரலாற்றாளர்கள் தனித்துவமான இனமில்லையென்றும் வாதாடுகிறார்கள்;(1000 v. Chr.: Verschiedene Stämme der Illyrer bewohnen die westliche Hälfte der Balkanhalbinsel vom Norden des heutigen Griechenlands bis nach Pannonien. Die albanische Forschung sieht die Albaner als Nachfahren der alten Illyrer. Westliche Forscher gehen davon aus, dass die Albaner aus einem altbalkanischen Volk hervorgingen, welches die Romanisierung im unzugänglichen Berggebiet Nordalbaniens überdauerte. )இரண்டு மில்லியன்கள் மக்கள் தொகையுடைய கொசோவோவின் மக்கள்தொகையில் 50 வீதமானவர்கள் எந்த வேலைவெட்டியுமற்ற வெறும் ஊர் சுற்றிகளாகவும் ,கிரிமினல்களாகவுமே இருப்பதாகக் குறிப்புகள் உண்டு.அதுவும் அவர்களின் சனத் தொகையில் எழுபது வீதமானவர்கள் 15-30 வயதுக்கு உட்டபட்ட குடிகள்.கொசோவோவர்கள் தம்மைப் பிரிந்து செல்லக்கூடியவொரு இனமாகப் பிரகடனப்படுத்து ஒத்திசைவாக இருக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிகா நமது மக்கள் இலங்கையில் மூன்று மில்லியன் இருந்தும் கொசோவோவைவிடப் பன்மடங்கு பொருளாதாரப்பலத்தைக் கொண்டவொரு இனமான ஈழத்தமிழரையும் அவர்களின் போராட்டத்தையும் எங்ஙனம் பயங்கர வாதப் போராட்டமென்கிறது?

இங்கேதாம் நமது புலிகளின் உலகத் தொடர்பு,பின்புலம் அவர்களின் தோற்றம் தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் குறித்த அரசியல் ஆய்வு வருகிறது.அங்கே, புலிகள் தமிழ் இனவிடுதலைக்கு எதிரானவொரு பாத்திரத்தைக் கொண்டிருப்பதை நாம் பல்வேறு கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம்.எனவே, இதை நீட்டிமுடக்காது மேலே தொடர்வோம்.

இன்றைய ஐரோப்பாவானது கொசோவோவை வேட்டையாடி போர்கள் எத்தனையோ செய்தது.

இது, உலகில் நிகழும் தேசிய விடுதலைப் போராட்டங்களைத் தடுத்தபடி இப்போது கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை ஊக்குவித்து அங்கீகரிக்கக் காத்திருக்கும் தரணத்தில் ஐரோப்பாவின் முகப்பில்-வாசலில் இனவொடுக்குதலுக்கு முகங்கொடுக்கும் பெருந்தொகையான மக்களினம் குர்தீஸ் மக்களாகவே இருக்கிறார்கள்.குர்திஸ் இனமானது ஐரோப்பாவின் காற்பந்தாக இருக்கும் இன்றைய நிலையில், அவர்களின் சனத்தொகையானது 26 மில்லியன்களாகும்.இவர்கள் துருக்கி,ஈராக்,சிரியா என்று பற்பல எல்லைகளில் கிடந்து தமது தேசத்துக்காப் போராடும்போது, பதின்நான்கு மில்லியன்கள் குர்தீஸ் மக்களைத் துருக்கியில் ஓடுக்கும் துருக்கி அரசோ நாடுவிட்டு நாடு தாண்டி ஈராக்கில் குர்த்தீஸ் வலயத்தில் அமெரிக்க ஒப்புதலோடு வான் தாக்குதல் செய்து வருகிறது.இங்கே, இந்த ஐரோப்பிய மனிதாபிமானம் கிழிந்த கதையாகவே இருக்கிறது.

இக்கட்டுரை தொடரும்.

Tuesday, December 25, 2007

தாகத்திற்கா தண்ணீர் இலாபத்திற்கா

தாகத்திற்கா தண்ணீர் இலாபத்திற்கா

Sunday, December 23, 2007

உச்சநீதி மன்றம் அல்ல வேதாந்தி மன்றம்!

ச்ச நீதிமன்றம் என்ற பெயரில் கவுரவமாக அழைக்கப்படும்
பார்ப்பனக் கட்டைப் பஞ்சாயத்து மன்றம், கடந்த இரண்டு
நாட்களாகப் போட்டு வரும் உத்தரவுகளையும் பேசி வரும்
பேச்சுக்களையும் கேட்கக் கேட்க இரத்தம் கொதிக்கிறது. சுயமரியாதையற்ற புழுக்களைத் தவிர, வேறு எந்த உயிரினமும் இவற்றைக் கேட்டுக்கொண்டு சகித்திருக்க முடியாது. கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களைக் கொஞ்சம் மனதில் ஓட விட்டுப் பாருங்கள்.


இராமன் பாலம் என்ற மோசடியைத் திடீரென்று அரங்கேற்றி, சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு இடைக்காலத் தடை கோரி சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனக் குள்ள நரி உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்தது. உடனே, குபீரென்று பார்ப்பனப் புற்றிலிருந்து கிளம்பிய நச்சுப்பாம்புகள் சீறத்தொடங்கின. ஜெயலலிதா, சோ, அத்வானி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி, தினமணி, தினமலர் என ஒரு கும்பல் படமெடுத்து ஆடத்தொடங்கியது. அடுத்த கணமே சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.


முடக்கப்பட்ட இத்திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி அக்டோபர் 1ஆம் தேதியன்று தமிழகம் தழுவிய முழு அடைப்பு நடத்த தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் அழைப்பு விட்டன. இராமனைக் கற்பனைக் கதாபாத்திரம் என்று கருணாநிதி கூறிவிட்டதால், நாடெங்கும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் குமுறிக் கொண்டிருப்பதாகக் கூச்சலிட்டது இந்தப் பார்ப்பனக் கும்பல். இராமனுக்கு இத்தகைய பேராதரவு இருக்கும்போது ஏன் கவலைப்படவேண்டும்? தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை இந்துக்களிடம் ""கருணாநிதியின் முழு அடைப்புக்கு ஆதரவு கொடுக்காதீர்கள்'' என்று அறைகூவல் விடுத்திருக்கலாம். அல்லது ""இராமன் பாலத்தைக் காப்பாற்றுவோம்'' என்று தாங்களே ஒரு போராட்டத்தை அறிவித்திருக்கலாம். ஆனால், இந்தப் பார்ப்பன நரிகளுக்கு அதைச் செய்யும் துணிவு இல்லை. ஏனென்றால், இராமனுக்கு ஆதரவாகக் குரைப்பதற்கு தமிழகத்தின் வீதிகளில் ஒரு சொறிநாய் கூடத் தயாராக இல்லை. எனவேதான், இந்தக் குறுக்கு வழி. முழு அடைப்பை எதிர்த்து முதலில் உயர்நீதி மன்றத்தையும் பிறகு உச்சநீதி மன்றத்தையும் அணுகினார் ஜெயலலிதா. அடுத்த கணமே நீதி பேசத்தொடங்கியது.


""1998இல் முழு அடைப்பு சட்டவிரோதம் என்று கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதை உச்ச நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த நாட்டில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் கிள்ளுக் கீரையாகவே மதிக்கப்படுகின்றன. உங்களுடைய எதிர்ப்பு யாருக்கு எதிராக, இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்த உச்சநீதி மன்றத்துக்கு எதிராகவா, மத்திய அரசுக்கு எதிராகவா?''


""பந்த் என்பது சட்டவிரோதம் என்று உச்சநீதி மன்றம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. பிறகு அதை நடத்துமாறு தனி நபரோ, அமைப்போ அழைப்பு விடுக்கக் கூடாது. முழு அடைப்பு என்றால் அரசியல் சட்டப்படி அங்கு ஆட்சி நடக்கவில்லை, அரசு சீர்குலைந்து விட்டது என்றே அர்த்தம். எனவே முழு அடைப்பு நடத்தக் கூடாது'' என்று செப்டம்பர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பி.என். அகர்வால், பி.பி. நவலேகர் என்ற இரு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழு அடைப்பைக் கைவிடுவதாகவும் உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமே நடத்த இருப்பதாகவும் அறிவித்தார் கருணாநிதி.


""உண்ணாவிரதப் போராட்டமும் நீதிமன்ற அவமதிப்புதான். அதுவும் நடத்தக்கூடாது'' என்று எகிறினார் ஜெயலலிதா. கோடம்பாக்கம் தொழிலைஅரசியல் அரங்கில் தொடர்வதற்கு வந்திருக்கும் சரத்குமார், விஜயகாந்த் போன்ற கழிசடைகள், உடனே ஜெயலலிதாவுக்கு ஒத்துப்பாடின. ""நீதி மன்றத்துக்கு சவால் விடுவது போல இருக்கிறது முதல்வரின் உண்ணாவிரத அறிவிப்பு. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட முடியவில்லை என்றால் அவர்கள் ராஜிநாமா செய்து விடுவதுதான் முறை'' என்று தலையங்கம் எழுதியது ஆர்.எஸ்.எஸ் ஸின் அதிகாரபூர்வமற்ற நாளேடான தினமணி.


""கடை அடைப்புக்கும் வேலை நிறுத்தத்திற்கும் ஆதரவு தர வேண்டாம்'' என்று இந்தப் பார்ப்பனக் கும்பல் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கலாம். ராமன் படத்தைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாக பஜனை பாடி இராமன் பாலத்துக்கு ஆதரவாகப் பக்தர்களைத் திரட்டியிருக்கலாம். ஆனால், இவை எதையும் செய்யும் தைரியமோ யோக்கியதையோ பார்ப்பனக் கும்பலுக்கு இல்லை. அதற்கு வால் பிடிக்கும் சுயமரியாதையற்ற கழிசடைகளுக்கும் இல்லை.


பார்ப்பனக் கும்பலின் அரட்டல்களுக்கு அஞ்சாமல் உண்ணாவிரதம் நடந்தது. கூட்டணிக் கட்சிகன் வேண்டுகோளின் படியும், அவர்களுடைய தொழிற்சங்கங்கள் விடுத்திருந்த அறைகூவலின் அடிப்படையிலும் பொது வேலைநிறுத்தமும் கடை அடைப்பும் வெற்றிகரமாக நடக்கத் தொடங்கின. உடனே, அக்டோபர் 1ஆம்தேதி காலையே மீண்டும் உச்சநீதி மன்றத்துக்குப் போனார் ஜெயலலிதா.""உங்கள் உத்தரவு மீறப்படுகிறது'' என்று அங்கே முறையிட்டார். அதனைக் கேட்ட மறு கணமே நீதிதேவதை சாமியாடத் தொடங்கி விட்டது.


""நீங்கள் சொல்வது உண்மையானால் அங்கே அரசமைப்பு எந்திரம் சீர்குலைந்து விட்டதாகத்தான் அர்த்தம். அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்... நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள். தலைமைச் செயலரையும் முதல்வரையும் எங்கள் முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம்'' என்று சீறினார் நீதிபதி அகர்வால். ""எங்கள் உத்தரவுக்கு தவறான அர்த்தம் கற்பிக்காதீர்கள். எச்சரிக்கை! நெருப்புடன் விளையாடாதீர்கள்'' என்று தி.மு.க. அரசை எச்சரித்தார்.


எவ்வளவு திமிர்? எத்தனை ஆணவம்? பிரெஞ்சுப் புரட்சி தொடங்குவதற்கு முன்னால் ""அரசா...? நான் தான் அரசு'' என்று ஆணவமாகப் பேசினான் பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி. அந்தத் திமிர் பிடித்த மன்னனின் தலையைப் பத்தோடு பதினொன்றாக இழுத்து வைத்து கில்லெட்டினில் வெட்டி எறிந்தார்கள் பிரெஞ்சு மக்கள். அதற்குச் சற்றும் குறைவில்லாத ஆணவமும் திமிரும் நீதிபதி அகர்வாலின் பேச்சில் நிரம்பி வழிகிறது. ஏதோ தமிழ்நாடே பற்றி எரிவதைப் போலவும், தெருவுக்குப் பத்து கொலை நடப்பதைப் போலவும், அரசாங்கம் அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதைப் போலவும் குமுறி வெடிக்கிறார் நீதிபதி.


ஒரு பொது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்ததைக் கண்டு நீதிபதிக்கு ஏன் அத்தனை அடக்கவொண்ணாத ஆத்திரம்? அவர்களுடைய உத்தரவு மதிக்கப்படவில்லை என்பதனாலா? எப்போதுமே""எங்களுடைய உத்தரவை யாரும் மதிப்பதில்லை'' என்று அகர்வால் ஒப்புக் கொள்கிறார். அப்போதெல்லாம் வராத ஆத்திரம் இப்போது மட்டும் வருவது ஏன்?


அதுதான் அவாள் நெஞ்சில் புகைந்து கொண்டிருக்கும் பார்ப்பன வெறி. எந்த இராமனை இவர்கள் தேசிய நாயகனாகவும், தேசிய தெய்வமாகவும் கொண்டாடுகிறார்களோ, எந்த இராமனின் பேரை மட்டுமே மூலதனமாக வைத்து பாரதிய ஜனதா என்ற கட்சி மைய அரசையே கைப்பற்ற முடிந்ததோ, எந்த இராமனையும் பார்ப்பன புராண இதிகாசங்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போற்றிக் கொண்டாடுகிறார்களோ, எந்த இராமனின் பெயரால் சேது சமுத்திரத் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதோ, அந்த இராமனுக்குத் தமிழகத்தில் கால்காசுக்கு மதிப்பில்லை. அந்த இராமனை ஏளனம் செய்தால் தமிழ் மக்கள் ரசித்துச் சிரிக்கிறார்களேயன்றி, யாரும் கோபத்தில் வெடிக்கவில்லை. நீதிபதியின் ஆத்திரம் கருணாநிதி அரசின் மீது அல்ல, தமிழக மக்களின் மீது.


""தனிப்பட்ட கட்சிகளின் உரிமையை விட பொதுமக்களின் உரிமை மேலானது. எல்லாவற்றையும் நிறுத்துவதன் மூலம் உங்கள் ஒற்றுமையையும் வலிமையையும் காட்டுவதுதான் உங்கள் நோக்கம்'' என்கிறார் நீதிபதி. வேலைக்குப் போக முடியவில்லையே, கடைக்குப் போய் சாமான் வாங்க முடியவில்லையே, கோர்ட்டுக்குப் போய் நீதி வாங்க முடியவில்லையே என்று தமிழ் மக்கள் யாரும் ஆற்றொணாத் துயரால் அழுது புலம்பவில்லை. பொது மக்களின் மேலான உரிமையை மதிக்கும் விதத்தில் அவர்களை வாய்தா போட்டே கொல்லும் நீதிமன்றங்களை மக்கள் அறிவார்கள். காலை 11 மணிக்கு வந்து அமர்ந்து மதியம் 2 மணிக்கு கேட்பாரின்றி எழுந்து செல்லும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வலிமையையோ நாடே அறியும்.


பேருந்துப் படிகளில் காலே வைக்காத, டீக்கடைகளில் டீ குடிக்காத, ஜெயலலிதாவும், சோவும், சுப்பிரமணிய சாமியும், இராம. கோபாலனும்தான் நீதிபதிகளைப் பொறுத்தவரை தமிழக மக்கள். அவாள் பதறினால் இவாளுக்குத் தசையாடுகிறது. பார்ப்பனப் பாசிசக் கும்பலுக்கு எதிரான தமிழ் மக்களின் அலட்சியத்தையும் வெறுப்பையும் பளிச்செனக் காட்டிய இந்தப் பொது வேலை நிறுத்தத்தின் நோக்கம்தான் நீதிமன்றத்தின் பிடறியைச் சூடேறச் செய்கிறது.


ஜெயலலிதாவின் வக்கீல் ""அங்கே பந்த் நடக்கிறது'' என்று சொன்னால் ""அப்படியா, விவரங்களை ஒரு மனுவாகத் தாக்கல் செய்'' என்று கூறவேண்டும். அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசு தரப்புக்கு நோட்டீஸ் தரவேண்டும். அதன் பிறகு விவாதம். அதற்கப்புறம் தான் தீர்ப்பு. ஆனால் பந்த் நடக்கிறது என்ற ஒரு வார்த்தையைக் கேட்டவுடனேயே ""நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை செய்வோம், கருணாநிதியைக் கோர்ட்டில் நிற்க வைப்போம்'' என்று வெடிக்கிறார் அகர்வால். ஒரு நீதிபதியின் நடுநிலையைப் புரிந்து கொள்ள இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் வேண்டும்? இது பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம் அல்லாமல் வேறு என்ன? அரசை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரத்துடன் ஜெயலலிதாவை முதல்வராகவும் அத்வானியைப் பிரதமராகவும் நியமிக்கும் அதிகாரமும் அகர்வாலுக்கு வழங்கப்பட்டால்தான் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும் போலிருக்கிறது!


"பந்த்' நடத்தக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தடை விதித்த பின் வேறு எந்த மாநிலத்திலும் பந்த் நடக்கவில்லையா? எத்தனை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது? தமிழகத்தின் மீது மட்டும் ஏன் இத்தனை காழ்ப்பு? ஒரு மாத காலம் குஜராத் பற்றி எரிந்ததே, 2000 முஸ்லீம்கள் பட்டப்பகலில் நட்டநடுவீதியில் கொலை செய்யப்பட்டார்களே, இலட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அகதி முகாமில் தங்கியிருந்தார்களே, அத்தனையும் தொலைக்காட்சிகளின் அன்றாடம் வெளிவந்து உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதே, அப்போது எங்கே போயிருந்தது இந்த உச்ச நீதி மன்றம்? மோடி அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்று ஒரு பேச்சுக்காவது நீதிமன்றம் சொல்லியிருக்கிறதா? அங்கே அரசமைப்பு எந்திரம் சீர்குலையவில்லையா? அல்லது 1992இல் அயோத்தியில் பாரதிய ஜனதா நடத்திய கடப்பாரை சேவைக்கு அனுமதி அளித்ததே உச்சநீதி மன்றம், பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடே இரத்த வெள்ளத்தில் மிதந்தபோது, நீதிபதிகள் எதில் மிதந்து கொண்டிருந்தார்கள்?


""நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அங்கே அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டதாகத்தான் அர்த்தம்'' என்று வெடிக்கிறார் நீதிபதி. அப்படி ஜெயலலிதாவின் வக்கீல் என்னதான் சொன்னார். குஜராத்தையும் மும்பையையும் போல நாடெங்கும் இரத்த ஆறு ஓடியதா, கடைகள் சூறையாடப்பட்டனவா, கும்பல் கும்பலாகப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்களா? இவையனைத்தையும் போலீசே முன்நின்று நடத்தியதா? அல்லது சட்டீஸ்கரைப் போல சட்டவிரோதமாக சல்வா ஜுடும் என்ற கூலிப்படையை அரசாங்கமே உருவாக்கி, அவர்கள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியை அரசு அவர்களிடம் ஒப்படைத்ததா? இப்படி ஏதாவது நடந்திருந்தால் அவற்றையெல்லாம் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கையாகவே உச்ச நீதிமன்றம் கருதியிருக்கும்.


இங்கோ தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடைய தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தத்தின் காரணமாகப் பேருந்துகள் ஓடவில்லை. அரசுத்துறைகள் இயங்கவில்லை. போலீசையும் இராணுவத்தையும் வைத்து அவர்களை "அடித்து உள்ளே தள்ளாமல்' அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதைத்தான் ""அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டது'' என்று கூறுகிறது நீதிமன்றம். மாட்சிமை தங்கிய நீதிபதிகள் அரசியல் வேலை நிறுத்தம் கூடாது என்று உத்தரவிட்டால் உடனே அரசியல் கட்சிகள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும். ""வேலைக்குப் போ'' என்று சொன்னால் உடனே தொழிலாளர்கள் வேலைக்குப் போகவேண்டும். ""கடையைத் திற'' என்றால் வணிகர்கள் திறக்க வேண்டும். ""கடைக்குப் போய் காப்பி குடி'' என்று உத்தரவிட்டால் நாம் குடிக்க வேண்டும், நாம் குடிக்க மறுத்தால் போலீசை வைத்து அரசு நம்மைக் குடிக்க வைக்க வேண்டும். தவறினால் தமிழகத்தில் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டதாகவே நீதிமன்றம் கருதும். சட்டமன்ற அவைத்தலைவரின் வானளாவிய அதிகாரம் குறித்த பி.எச்.பாண்டியனின் பிரகடனத்தை நெடுநாட்களுக்கு முன் தமிழகம் கேட்டிருக்கிறது. இந்த உச்ச நீதிமன்றப் பாண்டியர்களின் அதிகாரச் சாட்டையிலிருந்து நம் வீட்டின் கழிப்பறையும் படுக்கையறையும் கூடத் தப்ப முடியாது போலிருக்கிறதே!


""மை லார்ட், நான் என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தான் இன்று பேருந்தை ஓட்டவில்லை'' என்று ஒரு ராமசாமி, மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க விரும்பினால், அவர் என்ன செய்ய வேண்டும்?


ராம் ஜெத்மலானியையோ, சாந்தி பூஷணையோ வக்கீலாக அமர்த்திக் கொள்ள வேண்டுமா? ராமசாமியை அடித்து வேலைக்கு இழுத்து வருவதற்கு காவல்துறை என்ன முயற்சிகளை மேற்கொண்டது என்ற விவரங்களை மாநகரக் காவல்துறை ஆணையர் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டுமா? இந்த இராமனுக்கும் அவன் கட்டிய பாலத்துக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு மகா கனம் பொருந்திய ""சோ'' ராமஸ்வாமி அய்யர்வாளைத் தவிர வேறு அய்யர்வாள் யாரையும் திருவல்லிக்கேணியிலோ, மடிப்பாக்கத்திலோ, மயிலாப்பூரிலோ கூடத் தேடிப்பிடிப்பது துர்பலம் என்ற உண்மையை "ஹிஸ் ஹைனஸ் அகர்வால்'வாளுக்கு எப்படிப் புரிய வைப்பது?


""உங்களுடைய எதிர்ப்பு யாருக்கு எதிராக, இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவா?'' என்று தமிழக அரசின் வக்கீலைக் மடக்குகிறார் நீதிபதி. தட்டிக் கேட்க ஆளில்லைன்னா தம்பி சண்டப் பிரசண்டன் தான்! உச்ச நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்ட நெறியின் காரணமாக தி.மு.க. வேண்டுமானால் வாயை மூடிக்கொண்டிருக்கலாம். நாம் கேட்கிறோம், ""யாருக்கு எதிராக என்று இடிமுழக்கம் செய்யும் பிரம்மஸ்ரீ சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜிகளே, சேது சமுத்திரத் திட்டத்துக்கு நீங்கள் விதித்த தடை யாருக்கு ஆதரவாக, உங்கள் இரத்த உறவான பார்ப்பனக் கும்பலுக்கு ஆதரவாகவா?''


"இல்லை' என்று யோக்கியன் எவனாவது சொல்ல முடியுமா? தொல்லியல் துறையின் அறிவியல் ஆய்வுகளைத் தூக்கி வீசிவிட்டு, சுப்பிரமணிய சாமி கொடுத்த வால்மீகி இராமாயணத்தையும், துளசி தாஸ் இராமாயணத்தையும் ஆதாரமாகக் கொண்டு ""இராமர் பாலத்தைப் பாதுகாப்பதற்காக'' இடைக்காலத் தடை கொடுத்திருக்கிறதே ஒரு நீதிமன்றம், இது உலகத்தில் எங்காவது நடக்குமா? மனுநீதி கோலாச்சிய மன்னராட்சியில் தவிர வேறு எங்காவது இப்படி ஒரு தீர்ப்பை எழுத முடியுமா? அந்த இராமனால் கொலை செய்யப்பட்ட சம்புகன் என்ற சூத்திரனின் வரலாறுக்கு வால்மீகி இராமாயணத்திலேயே ஆதாரம் இருக்கிறது. உச்சநீதி மன்றத்துக்குக் கீழேதான் சம்புகன் புதைக்கப் பட்டிருக்கிறான் என்று நாங்கள் வழக்கு தொடுக்கிறோம். நீதி மன்றத்தை இடித்து விட்டு அகழ்வாராய்ச்சி நடத்தத் தயாரா? பாபர் மசூதிக்குக் கீழே ராமன் கோயில் இருக்கிறதா என்று அகழ்வாராய்ச்சி செய்து பார்க்க அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதே, அதே போல ஒரு உத்தரவு எங்களுக்குக் கிடைக்குமா? அல்லது அவாளுக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் உத்தரவாகுமா?


2001இல் தொடங்கி பாரதிய ஜனதா நடத்திய எந்த ஆய்வின் போதும் அவர்களின் கண்ணில் இராமன் பாலம் தட்டுப்படவில்லை. ஜெயலலிதாவின் 2004 தேர்தல் அறிக்கையிலும் ஆதாம் பாலம்தான் இருக்கிறது. திடீரென்று அந்தப் பாலம் மதம் மாறி இராமன் பாலமானது எப்படி? கருணாநிதி திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை எழுப்பிய போதும், அதற்குத் தினமணி உள்ளிட்ட எந்தப் பார்ப்பன மணியும் பதிலளிக்காமல் வழுக்கிச் செல்வதைப் பார்ப்பன வித்தகம் என்பதா, கயமை என்பதா? எப்படிச் சொன்னால் அவாளின் மத உணர்வுக்கு பங்கம் நேராமல் இருக்கும்? 2500 கோடி ரூபாயைக் கடலில் கொட்டிய பிறகு, திடீரென்று இப்போது இராமன் பாலம் என்கிறீர்களே, இத்தனை நாளும் இதனை ஏன் எழுப்பவில்லை என்றொரு கேள்வியை சுப்பிரமணிய சாமியிடம் உச்சநீதி மன்றம் கேட்கவில்லையே, இந்த ஞாபக மறதியை குற்றவியல் சட்ட மொழியில் எப்படிக் கூறலாம்? இதனை கிரிமினல் நெக்லிஜன்ஸ் (குற்றமுறு அலட்சியம்) என்பதா அல்லது பார்ப்பனக் கும்பலுடன் நீதிமன்றம் சேர்ந்து நடத்திய கிரிமினல் கான்ஸ்பைரசி (குற்றமுறு சதி) என்பதா?


""தனிப்பட்ட கட்சியின் நலனை விட பொதுமக்களின் நலன்'' மேலானதாம்! அடடா, எப்பேர்ப்பட்ட தத்துவம்! அத்வானி நடத்திய இரத்த யாத்திரையின் போது அவரிடமல்லவா இதைச் சொல்லியிருக்க வேண்டும்? ஒருவேளை, அத்வானியைப்போல செலக்டிவ் அம்னீசியா நோயினால் உச்சநீதி மன்றமும் பீடிக்கப் பட்டிருந்தது போலும்! "பொது மக்களின் நலன்'பற்றி உச்சநீதி மன்றம் பேசும் போது நமக்குப் புல்லரிக்கிறது. மாடர்ன் பிரட், பால்கோ, விமான நிலையங்கள், தொலைபேசித்துறை, எண்ணெய் வயல்கள், சுரங்கங்கள் என்று பொதுச் சொத்துக்களை தனிப்பட்ட முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் இந்த அரசாங்கம் அள்ளிக் கொடுத்தபோது, அவற்றுக்கு எதிராக எத்தனை பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன! அவற்றையெல்லாம் உச்சநீதி மன்றம் ஏன் தள்ளுபடி செய்தது? ஒருவேளை ""தனிப்பட்ட சில தொழிலாளர்களின் நலனைக்காட்டிலும் உலகத்துக்கே பொதுவான பன்னாட்டு முதலாளிகளின் நலன் மேலானது'' என்ற நீதிமன்றம் கருதியிருக்கக் கூடும்!


""இந்த நாட்டில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் கிள்ளுக் கீரையாகவே மதிக்கப்படுகின்றன'' என்று மனம் வெதும்புகிறார்கள் நீதிபதிகள். நர்மதை அணைக்கட்டுத் திட்டத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிவாரணத்தைக் கூடத் தராமல் 2 இலட்சம் பழங்குடி மக்களை அவர்களுடைய வீடுகள், கோயில்கள், நிலங்களுடன் தண்ணீரில் அமிழ்த்தினார் நரேந்திர மோடி. அப்போது நீதியை நிலைநாட்டும் இந்தக் கரிசனை நீதிபதிகளுக்கு வரவில்லையே! ""ஐயா உங்கள் உத்தரவை அரசு நிறைவேற்ற மறுக்கிறது'' என்று மேதா பட்கர் தாக்கல் செய்த மனுவை, ""நிர்வாகத்துல இதெல்லாம் சகஜமம்மா'' என்று கூறித் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். அந்தத் தீர்ப்பை விமரிசித்த அருந்ததி ராயை நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக உள்ளே தள்ளியது.


ஒருவேளை இராமாயணம், மகாபாரதம் போன்ற புளுகு மூட்டைகள் எதையாவது மேதா பட்கர் ஆதாரமாகத் தாக்கல் செய்திருந்தால் நீதி கிடைத்திருக்குமோ? அப்படியே செய்திருந்தாலும் பழங்குடி மக்களைப் பார்ப்பன மக்களாக்கியிருக்க முடியாதே! பழங்குடி மக்கள் என்றாலே கிள்ளுக் கீரைகள்தான் என்பதால், அவர்கள் தொடர்பான அந்த உத்தரவும் கிள்ளுக் கீரையாக மதிக்கப்பட்டதில் நீதிபதிகளுக்கு இயல்பானதாக இருந்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் இராமன் பாலம் என்னும் மணல் திட்டைப் போல 2 இலட்சம் பழங்குடிகளின் நிலமும் கோயில்களும் எப்படிப் புனிதமானதாக ஆக முடியும்?


உச்சநீதி மன்றத்தின் முல்லைப் பெரியார் தீர்ப்பைக் கேரள அரசும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கர்நாடக அரசும் கிள்ளுக்கீரையாகக் கருதவில்லை என்பதென்னவோ உண்மைதான். அவற்றை மலம் துடைத்த காகிதமாகக் கருதி நீதிபதிகளின் முகத்தில் எறிந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒருவேளை நீதிபதிகளின் நாசித்துவாரத்தில் அந்த மணம் ஏறவில்லையோ! அல்லது மேட்டூர், முல்லைப்பெரியார் அணைகள் தொடர்பாக புராண இதிகாச ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதுதான் தமிழகம் இழைத்த குற்றமோ!


""ஐயா, உங்கள் உத்தரவை கருணாநிதி அரசு அவமதிக்கிறது!'' என்று அம்மாவின் வக்கீல் சொல்லி முடிப்பதற்குள், நீதிபதிகளுக்கு ரவுத்திரம் தலைக்கேறுகிறது. ""அப்படியா, கூப்பிடு கருணாநிதியை!'' என்று உறுமுகிறார்கள். அம்மாவுடன் ஒப்பிடும் அளவுக்கு வேறு யாராவது நீதித்துறையை அவமதித்திருக்கிறார்களா? சென்னை உயர்நீதி மன்றத்தில் அம்மண டான்ஸ், நீதிபதியின் மருமகன் மேல் கஞ்சா கேஸ், வேறொரு நீதிபதிக்கு சூட்கேஸ், ஸ்டெச்சரில் சகோதரிகளின் நீதிமன்ற விஜயம், அய்யோ என் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று ஒரு நீதிபதியின் அலறல்.. இவையெதுவும் எந்த நீதிபதிக்கும் அவமதிப்பாகவேபடவில்லை. பிள்ளை நெஞ்சில் உதைத்தால் தாய்க்கு அவமதிப்பா என்ன? நீதிபதிகளை ஜெயலலிதா நோட்டால் அடிக்கலாம் அல்லது ஜோட்டாலும் அடிக்கலாம். அதைச் சகித்துக் கொள்வார்கள். ஆனால் "உண்மை' என்று அழைக்கப்படும் பொருளால் அடிக்கப்படும்போது மட்டும் அதனை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.


இன்று அவமதிப்பால் குமுறும் அகர்வாலுக்கு முன்னதாக வேறொரு "வால்' உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அவர் பெயர் சபர்வால். தன்னுடைய பிள்ளைகள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டுவதற்காக டெல்லி நகரத்தின் சிறுவணிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கடையைக் காலி செய்ய வேண்டும் என்றார் அந்த வால். அதிகாரம் இல்லாதவன்தானே அடியாள் வைத்து காலி செய்யவேண்டும். அப்பாவைத் தலைமை நீதிபதியாகப் பெற்றிருக்கும் மகனுக்கு போலீசும் இராணுவமும்தான் அடியாட்கள். சிறுவியாபாரிகளை அடித்தே விரட்டினார் சபர்வால். சபர்வால் ஓய்வு பெற்ற பின்னர் சமீபத்தில் இந்த அயோக்கியத்தனத்தை ஆதாரங்களுடன் வெளியிட்டது "மிட்டே' என்ற பத்திரிகை. உடனே அந்தப் பத்திரிகை ஆசிரியரையும் பத்திரிகையாளர்களையும் "நீதிமன்றஅவமதிப்பு' குற்றத்துக்காக உள்ளே தள்ளிவிட்டது டெல்லி உயர்நீதி மன்றம். நீதிபதி ஓய்வு பெற்றாலும் அவரது மதிப்பு ஓய்வு பெறுவதில்லையே!


"உண்மை'என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் நீதிபதிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடிய அவமதிப்பாகக் கருதுவதில்லை. உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் மீது நீங்கள் யாராவது குற்றம் சாட்ட எண்ணினால் உங்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. அந்த ஆதாரங்களை வெளியிட்டால் அடுத்த கணமே நீதிமன்ற அவமதிப்புக்காக நீங்கள் உள்ளே போக வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை. அதாவது, குற்றம் சாட்டுபவன்தான் முதல் குற்றவாளி. சரி, அப்புறமாவது நீதிபதிகள் அந்தக் குற்றச்சாட்டை விசாரிப்பார்களா என்றால், அதுவும் கிடையாது. அதையெல்லாம் விசாரிக்கத் தொடங்கினால், நீதிமன்றத்தை அப்புறம் யார் மதிப்பார்கள்? ஆய்வு, விசாரணை எல்லாம் எப்போதுமே அவாளுக்குக் கிடையாது. "நீதிபதிகள் குற்றமற்ற சொக்கத்தங்கங்கள்' என்று நாம் நம்பித்தான் ஆக வேண்டும். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்பதைப்போல! அணிலையும் குரங்கையும் வைத்து இராமன் பாலம் கட்டினான் என்பதைப்போல! நம்ப மறுத்தால் நீங்கள் மதத்தை அவமதித்த குற்றத்துக்கு ஆளாவீர்கள் அல்லது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்கு ஆளாவீர்கள்.


""பந்த் என்பது சட்டவிரோதம் என்று அறிவித்த பிறகு அதை நடத்துமாறு ஒரு தனிநபரோ, கட்சியோ எப்படி அழைப்பு விடலாம்?'' என்று கேட்கிறது நீதிமன்றம்.""மனுநீதியின் படி தன்னுடைய இராஜ்ஜியத்தில் சூத்திரன் தவமிருப்பது சட்டவிரோதம்'' என்று இராமன் அறிவித்திருந்தான். அந்தத் தடையை மீறி சம்புகன் என்ற சூத்திரன் தவமிருந்தான். இராம ராஜ்ஜியத்தில் நடந்துவிட்ட இந்த "அதருமத்தின்' விளைவாக ஒரு பார்ப்பானின் மகன் செத்துப்போனானாம். உடனே, சூத்திரன் சம்புகனின் தலையைச் சீவி தருமத்தை நிலைநாட்டினானாம் இராமன். பார்ப்பானின் பிள்ளையும் உடனே உயிர்த்தெழுந்தானாம். இதை விவரிக்கிறது,வால்மீகி இராமாயணம்.


"சட்டவிரோதம்' என்று உச்சநீதி மன்றம் சொன்ன பிறகும் இராமனுக்கு எதிராகத் தமிழகத்தில் முழு அடைப்பு நடக்கிறது. உடனே ஒரு பாப்பாத்தி கூச்சலிடுகிறார். அது மட்டுமல்ல, பார்ப்பன பாசிசக் கும்பலின் மரண ஓலமே நீதிமன்றத்தின் செவிப்பறையைக் கிழிக்கிறது. இத்தகைய அதருமத்தை உச்சநீதி மன்றத்தால் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? ""டிஸ்மிஸ் செய்'' என்று ஆணையிடுகிறார் அகர்வால். "தலையைச் சீவு' என்கிறான் வேதாந்தி.

இராமாயணம் கற்பனைக் கதை என்று யார் சொன்னது?

அணுசக்தி ஒப்பந்தம்: அடிமை அடியாள் அணுசக்தி!

அமெரிக்கஇந்திய
அணுசக்தி ஒப்பந்தம்:
அடிமை அடியாள் அணுசக்தி!அன்பார்ந்த நாட்டுப்பற்றார்களே,

இந்தியாவின் அணுசக்தித் தேவையை நிறைவு செய்வது என்ற
போர்வையில், ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது மன்மோகன் சிங் அரசு. கட்டிய மனைவியைக் காமுகனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, கதவுக்கு வெளியே காவல் நிற்கும் மாமாப்பயலைப் போல, பிரதமர் பதவி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டையே கள்ளத்தனமாக அமெரிக்காவுக்கு விலை பேசியிருக்கிறார் மண்மோகன் சிங். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்னும் இந்த அடிமைச் சாசனத்தையும், அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தையும் படிக்கின்ற தன்மானமுள்ள எந்தக் குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும்.

""இந்தியா இனி அணு ஆயுத சோதனை நடத்தக்கூடாது. அணு ஆயுதம் தயாரிப்பதற்குப் பயன்படும் மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்தியாவின் அணு மின் நிலையங்களையும், அணு ஆயுதங்கள் மற்றும் யுரேனிய, புளூட்டோனியக் கையிருப்புகளையும், அமெரிக்காவும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியும் சோதனையிடுவதற்கு ஒப்புக்கொள்ளவேண்டும். ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பது மட்டுமின்றி, ஈரானுடனான வணிக உறவுகளையும் நிறுத்திக் கொள்ளவேண்டும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளை இந்தியா ஒழுங்காக நடைமுறைப்படுத்துகிறதா என்பதை அமெரிக்க அரசு ஆண்டுதோறும் பரிசீலிக்கும். அதில் திருப்தியடைந்தால் மட்டுமே இந்திய அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை அமெரிக்கா வழங்கும். இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உண்டு. அவ்வாறு அமெரிக்கா விலகி விட்டாலும், தனது அணு உலைகளை சோதனைக்குத் திறந்து விடுவது என்ற ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலக முடியாது'' என்பதே அணுசக்தி ஒப்பந்தத்தின் சாரம்.

குமுறுகிறார்கள் விஞ்ஞானிகள்!

தலையை அடமானம் வைத்து தலைப்பாகை வாங்கும் இந்த தேசத் துரோகமான ஒப்பந்தம் எதற்கு? நாட்டையே விலையாகக் கொடுத்து வாங்கும் அளவுக்கு அணு மின்சாரத்துக்கும் அதன் மூலப்பொருளான யுரேனியத்துக்கும் என்ன முக்கியத்துவம்? இந்த யுரேனியம் கிடைக்காவிட்டால் நாளைக்கே நாடு இருண்டு விடுமா, தொழில் உற்பத்தி முடங்கிவிடுமா? எதுவும் இல்லை.

""தற்போது இந்தியாவின் மின்சாரத் தேவையில் 3% மட்டுமே அணுசக்தி மூலம் பெறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அணு உலைகளை இறக்குமதி செய்தாலும் இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட இந்தியாவின் மின்சாரத் தேவையில் 7 சதவீதத்தை மட்டுமே அணுசக்தியால் வழங்க முடியும். அணுசக்தித் தயாரிப்புக்குப் பயன்படும் தோரியம், உலக இருப்பில் 80% தமிழ்நாடு, கேரளக் கடற்கரைகளில்தான் இருக்கிறது. யுரேனியத்தை இறக்குமதி செய்யாமல் இதனைக் கொண்டே மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி விட்டார்கள். இன்னும் 15, 20 ஆண்டுகளில் நம் தேவையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய இயலும். அணுசக்தித் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவைக் காட்டிலும் நாம் அதிகமாக முன்னேறியிருக்கி÷றாம். சோதனை என்ற பெயரில் நமது தொழில் நுட்பம் அனைத்தையும் அமெரிக்கா திருடிவிடும். நமது ஆராய்ச்சிகளை முடக்கிவிடும்'' என்று இந்திய அணு விஞ்ஞானிகள் கதறுகிறார்கள்.

அமெரிக்க மின்சாரம்
என்ன விலை?

இறக்குமதி யுரேனியத்தையும் அமெரிக்க அணு உலைகளையும் நம்பி உற்பத்தி செய்யவிருக்கும் மின்சாரத்தின் விலை என்னவாக இருக்கும்? இன்று நீர்மின் சக்தி மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட்டுக்கு 50 காசுகள். அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்கவிலை சராசரியாக 2 ரூபாய். இதே அனல்மின் சக்திக்குத்தான் அமெரிக்க என்ரான் நிறுவனம் யூனிட் 6 ரூபாய் என்று விலை வைத்தது விளைவு மகாராட்டிர மின்வாரியம் ஒரே ஆண்டில் திவாலானது.

இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின்படி 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அணு உலைகளை இறக்குமதி செய்யப் போகிறது அரசு. இதே அணு உலைகளை சுயசார்பாக நிறுவினால் 2 லட்சம் கோடிதான் செலவாகும் என்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள். அநியாய விலை கொடுத்து வாங்கும் இந்த அணு உலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாயாக இருக்குமா, 10 ரூபாயாக இருக்குமா? இந்த அடாத விலை கொடுத்து "அமெரிக்க மின்சாரத்தை' வாங்க நம்முடைய மக்களால் முடியுமா?

இப்படிப்பட்ட கேள்வி எதற்கும் இந்த அரசு பதில் சொல்லவில்லை. காற்றாலை, சூரிய ஒளி, நீர்மின் சக்தி போன்றவற்றில் இதே 3 லட்சம் கோடியை முதலீடு செய்வதைக் காட்டிலும் "அமெரிக்க அணு மின்சாரம்' தான் ஆதாயமானது என்று ஆராய்ந்து அதன்பின் இந்த முடிவு எடுக்கப்படவில்லை.
உதவியா, சதியா?

சரியாகச் சொன்னால் இந்த அணு உலைகளை அமெரிக்காவிடமிருந்து இந்தியா கேட்டுப் பெறவில்லை. இவை நம்மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஒரு அணு உலையைக் கூட ஏற்றுமதி செய்ய முடியாத அமெரிக்க முதலாளிகள் அவற்றை இந்தியாவின் தலையில் கட்டுகிறார்கள். விலை போகாத சரக்கை விற்றுக் காசு பார்ப்பதுடன் மின் உற்பத்தித் துறையில் இந்தியாவின் சுயசார்பை ஒழித்து யுரேனியத்துக்கு அமெரிக்காவிடம் கையேந்தும் நிலையையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

எனவேதான்,""பெட்ரோல் விலையைப்போல யுரேனியத்தின் சந்தை விலையும் ஏறிக்கொண்டே போகும். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி யுரேனியம் தருவதை அமெரிக்கா நிறுத்திவிட்டால் பல லட்சம் கோடி பணம் கொடுத்து இறக்குமதி செய்த அணு உலைகள் அனைத்தும் செயலிழக்கும். நாடே திவாலாகி விடும்'' என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இவை எதற்கும் மன்மோகன் சிங் காது கொடுக்கவில்லை. எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த தடைகளை சவாலாக ஏற்று சுயசார்பாக அணு தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கும் இந்திய விஞ்ஞானிகளுடைய உழைப்பின் மேன்மையையும், தன்மான உணர்ச்சியையும் இந்த ஒப்பந்தம் கற்பழிக்கிறது. விஞ்ஞானிகள் ஆத்திரத்தில் குமுறுகிறார்கள். அமெரிக்க அரசோ, எப்பாடுபட்டேனும் இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் மீது திணிப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. ஏன்?

அணுசக்தி மீதும் அமெரிக்க ஆதிக்கம்!

ஏனென்றால் இது சாதாரண ஒப்பந்தமல்ல, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கான சதித்திட்டம். தற்போது உலகெங்கும் மின்சார உற்பத்திக்குப் பயன்பட்டுவரும் எண்ணெய், நிலக்கரி முதலான எரிபொருட்கள் இன்னும் சில பத்தாண்டுகளில் தீர்ந்து விடும். தற்போது வளைகுடாவின் எண்ணெய் வணிகத்தின் மீதும், எண்ணெய் போக்குவரத்துக் கடல் வழிகளின் மீதும் அமெரிக்காதான் மேலாதிக்கம் செய்து வருகிறது. சர்வதேச எண்ணெய் வணிகம் அமெரிக்க நாணயமான டாலரில் நடப்பதால் அது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்துக்கு உதவுகிறது.

தற்போது உலகின் எண்ணெய் இருப்பு வறண்டு வருகிறது. "அணுமின்சாரமே மாற்று' என்ற நிலை உலகளவில் உருவாகி வருகிறது. எனவேதான், அணுசக்தியின் மீது தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள அமெரிக்கா துடிக்கிறது. மற்ற நாடுகள் அணுசக்தியில் சுயசார்பு அடைந்து விட்டால், தனது அரசியல், இராணுவ, பொருளாதார மேலாதிக்கம் கேள்விக்குள்ளாகிவிடும் என்று அஞ்சுகிறது. "அணு ஆயுதம் தயாரித்து விடுவார்கள்' என்பதற்காக மட்டும் ஈரானையும் வட கொரியாவையும் அமெரிக்கா மிரட்டவில்லை. ""தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத எந்த நாடும் அணுமின்சாரம் கூடத் தயாரிக்கக் கூடாது'' என்பதுதான் அமெரிக்காவின் உண்மையான திட்டம். எனவேதான் சுயசார்பாக அணு தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கும் இந்தியாவையும் முடக்க முனைகிறது.

இவையெல்லாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்காக நாம் இட்டுக்கட்டிக் கூறும் விசயங்கள் அல்ல; இப்போது போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் வெறும் அணுசக்தி ஒப்பந்தமும் அல்ல. ஜூன்28, 2005இல் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவுடன் ரகசியமாகச் செய்துகொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கம்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தம். இதை நாம் சொல்லவில்லை. சமீபத்திய "இந்தியா டுடே' இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மன்மோகன் சிங்கே ஒப்புக் கொள்கிறார். அமெரிக்கஇந்திய இராணுவ உறவுக்கான புதிய சட்டகம்'' என்ற அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகத்தான் "அணுசக்தி ஒப்பந்தம் குறித்த புஷ்மன்மோகன் கூட்டறிக்கை' ஜூலை, 18ஆம் தேதி வெளியிடப்பட்டதாக ஒப்புக் கொள்கிறார்.

ஆசிய மேலாதிக்கத் திட்டம்!

இந்த இராணுவ ஒப்பந்தத்தின் நோக்கமே அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத் திட்டத்திற்கு இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்வதுதான். ""மேற்கு ஆசியாவில் ஈராக்கிற்கு அடுத்து ஈரானில் தலையிடுவது, கிழக்காசியாவில் வட கொரியாவைப் பணிய வைப்பது, மத்திய ஆசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, தெற்காசியாவில் ஆப்கானைக் கட்டுக்குள் வைப்பது, அனைத்துக்கும் மேலாக சீனாவை மிரட்டிப் பணியவைப்பது'' இவை ஆசியாவை மேலாதிக்கம் செய்வதற்கு அமெரிக்கா போட்டிருக்கும் திட்டங்கள். குறிப்பாக, சீனா கம்யூனிசத்தைத் தலைமுழுகி முதலாளித்துவ நாடாக மாறிவிட்ட போதிலும், எதிர்காலத்தில் அது தனக்கொரு சவாலாக வளர்ந்து விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. அதைச் சமாளிக்கும் நோக்கத்துக்காகவே இந்தியாவைத் தன்னுடன் இராணுவ ரீதியாகப் பிணைத்துக் கொள்கிறது.

அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்துக்கும், உலக மேலாதிக்கத்துக்கும் பயன்படும் வகையில் புவியியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது இந்தியா. அமெரிக்க போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் எண்ணெய் நிரப்பிக் கொள்வதற்கும், அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளவும், ஓய்வுஉல்லாசக் கேளிக்கைகளில் ஈடுபடவும் இந்தியாவை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத ஆசிய நாடுகளையும், பிற உலக நாடுகளையும் விரைந்து சென்று தாக்குவதற்குத் தோதான ஏவுதளமாகவும் இந்தியாவை மாற்ற முனைகிறது.

"தீவிரவாதிகளின் ஆயுதக் கடத்தலைக் கண்காணிப்பது' என்ற பெயரில் சர்வதேசக் கடல் பிராந்தியம் முழுவதற்கும் போலீசுக்காரனாகத் தன்னை நியமித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இந்தக் கண்காணிப்பு வேலையில் அமெக்கக் கடற்படைக்கு அடியாளாக இந்தியக் கடற்படையையும் ஈடுபடுத்துவதற்கு பிரணாப் முகர்ஜி போட்டிருக்கும் இரகசிய ஒப்பந்தம் வழி செய்கிறது. மொத்தத்தில் அமெரிக்காவின் உலக ஆக்கிரமிப்புப் போர் இரதத்தின் சக்கரத்தில் இந்தியா பிணைக்கப்பட்டு விட்டது. உலக மக்கள் அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் இஸ்ரேலைப்போல இந்தியாவும் அமெரிக்க அடியாளாக மாற்றப்படுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் விளைவு.

அமெரிக்க அடியாட்களாக
இந்திய சிப்பாய்கள்!

அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நாடு பிடிப்பதற்காக உலகெங்கும் நடத்திய ஆக்கிரமிப்புப் போர்களில், அவர்களுடைய காலாட்படையாகச் சென்று செத்து மடிந்தார்கள் இந்திய சிப்பாய்கள். இன்று ஈராக், ஆப்கான் வரிசையில் அமெரிக்கா தொடுக்கும் ஆக்கிரமிப்புப் போர்களிலெல்லாம் அவர்களுடைய அடியாட்படையாகச் சென்று இந்திய சிப்பாய்கள் செத்து மடிவதற்கு பிரணாப் முகர்ஜி போட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் மக்களின் விரோதத்துக்கும், அல் கொய்தா போன்ற இயக்கங்களின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்தியா இலக்காகும். இவற்றை சமாளிக்க அதிநவீன அமெரிக்க ஆயுதங்கள் இறக்குமதியாகும். இராணுவச் செலவு மேலும் அதிகரிக்கும். அடுக்கடுக்காக வரிவிதிப்பும் அதிகரிக்கும், அடக்குமுறைகளும் அதிகரிக்கும். இவைதான் இந்த ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு நõளை வழங்கவிருக்கும் வெகுமதிகள்.

இன்று இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஈரானைத் தாக்குவதற்கான நிமிட்ஸ் கப்பல், எதிர்ப்புகளை மீறி சென்னை துறைமுகத்துக்கு வந்தது. தங்களை அமைதிப் புறாக்களாக சித்தரித்துக் கொள்வதற்காகத்தான் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தின் சிப்பாய்கள் நம்மூர் பள்ளிக்கூடங்களுக்குப் பெயிண்டு அடித்தார்கள். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அரசாங்கமே "அழகிகளையும்' அறைகளையும் ஏற்பாடு செய்து தந்தது. தமிழக போலீசு அவர்களுக்குக் காவலும் நின்றது. இதே ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் கொச்சியில் அமெக்கக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியும், மே.வங்கத்தில் விமானப்படைக் கூட்டுப்பயிற்சியும் நடத்தப்பட்டன. சீனாவை மிரட்டுவதற்கான ஒத்திகையாக அடுத்த மாதம் வங்காள விரிகுடாவில் இந்திய இராணுவம் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்க இராணுவங்களுடன் இணைந்து கூட்டாக ஒரு இராணுவ ஒத்திகையையும் நடத்தவிருக்கிறது. இப்படி அமெரிக்காவுடன் "ஒத்துழைத்தால்தான்' இந்தியா வல்லரசாக முடியும் என்று கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் கூறுகிறார் மன்மோகன் சிங்.

இந்தியாவுடனான இந்த இராணுவஅணுசக்தி ஒப்பந்தங்களின் மூலம் பல லட்சம் கோடிக்கு ஆயுதங்களையும் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அணு உலைகளையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளையடிக்கலாம் என்று நாக்கில் எச்சில் ஊறக் காத்திருக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். அணுமின் நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்வதால் டாடா, அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகளும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற திரைமறைவில் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு எடுபிடி வேலை செய்வதன் மூலம் தமது தொழிலையும் வர்த்தகத்தையும் விரிவாக்கி கொள்ளை இலாபம் ஈட்டலாமென்று தரகனுக்கே உரிய புத்தியோடு கணக்குப் போடுகிறார்கள். கனவு காண்கிறார்கள்.

பொய்கள்... பொய்கள்... பொய்கள்!

இந்த தேசத்துரோக ஒப்பந்தத்தை நியாயப்படுத்த முடியாது என்பதனால்தான் மன்மோகன் சிங்கும் பிரணாப் முகர்ஜியும் ஆரம்பம் முதலே அடுக்கடுக்காகப் புளுகி வருகிறார்கள். ""ஆயுதம் எதுவும் வாங்கப் போவதில்லை. சும்மா ஒரு நல்லெண்ண விஜயம்தான்'' என்று பேட்டி கொடுத்துவிட்டு விமானமேறினார் பிரணாப் முகர்ஜி. அமெரிக்க இராணுவ அமைச்சர் ரம்ஸ்ஃபீல்டும் பிரணாப் முகர்ஜியும் கையெழுத்திட்ட ""இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம்'' ஜூன் 28ஆம் தேதியன்று ரகசியமாகக் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்காவிலிருந்து திரும்ப வந்த பின்னர் ஜூலை 11ஆம் தேதியன்று ""அமெரிக்காவுடன் எந்த விதமான இராணுவ ஒப்பந்தமும் போடவில்லை'' என்று நாடாளுமன்றத்திலும் அப்பட்டமாகப் புளுகினார் பிரணாப் முகர்ஜி.

ஜூலை, 2005இல் அமெரிக்காவுக்குக் கிளம்புமுன் ""என் உயிருள்ள வரை இந்தியாவின் அணிசேராக் கொள்கையைப் பாதுகாப்பேன். தேசிய, சர்வதேசப் பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்'' என்று பேட்டியளித்தார் மன்மோகன் சிங். ஆனால் இன்றைய அணுசக்தி ஒப்பந்தத்தின் முன்வரைவான ""மன்மோகன் சிங்புஷ் கூட்டறிக்கை'' ஜூலை 18ஆம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து வெளியானது.

அடுத்து சர்வதேச அணுசக்தி முகமையில் நட்பு நாடான ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ""அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்துதான் இப்படி அநீதியாக வாக்களித்திருக்கிறீர்கள்'' என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் ""அமெரிக்காவெல்லாம் மிரட்டவில்லை, நாங்களாகத்தான் வாக்களித்தோம்'' என்று சாதித்தார் மன்மோகன் சிங். ""நாங்கள்தான் இந்தியாவை மிரட்டி வாக்களிக்க வைத்தோம்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி குட்டை உடைத்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்தின் முன்வரைவு அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அதில் கண்டுள்ள நிபந்தனைகள் தெரியவந்தன. இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ""அநாவசியமாக பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். நான் நாடாளுமன்றத்தில் என்ன வாக்குறுதி கொடுத்தேனோ அதை மீறி ஒப்பந்தம் போட மாட்டேன். போதுமா?'' என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை அடைத்தார் மன்மோகன் சிங். இப்போது அந்த வாக்குறுதிக்கு முரணாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ""இனி ஒப்பந்தத்தை திருத்தவோ மாற்றவோ முடியாது'' என்று திமிர்த்தனமாகப் பேசுகிறார் மன்மோகன் சிங்.

""இந்தியா அணுகுண்டு வெடிப்பதற்கு ஒப்பந்தத்தில் தடையேதும் இல்லை'' என்று மறுபடியும் நாடாளுமன்றத்தில் சவடால் அடித்தார் மன்மோகன் சிங். ""குண்டு வெடித்தால் ஒப்பந்தம் ரத்து ஆகும்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அன்று மாலையே அறிக்கை வெளியிட்டது.

எவ்வளவு தில்லுமுல்லுகள், அயோக்கியத்தனங்கள்! ஒவ்வொரு பித்தலாட்டமும் அம்பலமாகி சந்தி சிரிக்கிறது. இத்தனை மானக்கேடுகளுக்குப் பிறகு சொரணையுள்ள மனிதனாகயிருந்தால் நாண்டு கொண்டு செத்திருக்க வேண்டும். ஆனால் உளவாளிக்கு ஏது சூடு சொரணை? அமெரிக்க உளவாளியான இந்த மானங்கெட்ட சிங், மூஞ்சியில் காறித்துப்பினாலும் துடைத்துக் கொண்டு மழுங்கப்பயலைப் போலப் பல்லிளிக்கிறார். முன்னாள் உலக வங்கி அதிகாரியான இந்த அமெரிக்க அடிமை, தான் பதவியிலிருந்து இறங்குவதற்குள் இந்தியாவையும் எப்பாடு பட்டேனும் அமெரிக்க அடிமையாக மாற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்.

சர்வகட்சித் துரோகிகள்!

பதவி சுகத்தையும் பொறுக்கித் தின்பதையும் தவிர வேறு எந்த இலட்சியமும் இல்லாத தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., லல்லு முதலான பிழைப்புவாதிகளோ எதை விற்கவும் யாரை விற்கவும் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடத் தயாராக இருக்கின்றனர். மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அனைத்துக்கும் மனப்பூர்வமாகத் துணை நிற்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக இன்று சவடால் அடித்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளோ, ஏதோ இப்போதுதான் அவர்களுக்கு விசயமே தெரியவந்ததைப் போல நடிக்கின்றனர். ""இந்தியாவின் இறையாண்மை பறிபோவதா?'' என்று பதறித் துடிக்கின்றனர். எல்லோரையும் விஞ்சும் விதத்தில் மன்மோகன் சிங்கைக் காட்டமாகத் தாக்கி ஒரு அறிக்கை வெளியிடுவதன் மூலம் தன்னைத் தீவிரமான "தேசபக்தை'யாக மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ள முயல்கிறார் ஜெயலலிதா. பாரதிய ஜனதாவின் அமெரிக்க அடிவருடித்தனத்துக்கு ஆதரவாய் நின்ற இந்த அருவெறுக்கத்தக்க அரசியல் கழிசடையும், சந்திரபாபு நாயுடுவைப் போன்ற அமெரிக்க எடுபிடிகளும் நாட்டின் இறையாண்மை பற்றிக் கவலைப்படுவதாகக் கூறுவது உண்மையான நாட்டுப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு மட்டும்தான் பயன்படும்.

அடிக்கொள்ளி
பாரதிய ஜனதா கட்சிதான்!

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் எதிர்ப்பு நாடகத்தைத் தலைமையேற்று நடத்தும் பாரதிய ஜனதாக் கட்சிதான் இந்த இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் இரண்டிற்குமான இரகசியப் பேச்சு வார்த்தையை தொடங்கி வைத்தது.

1998இல் அணுகுண்டு வெடித்த மறுகணமே ""அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தத்தில் (இகூஆகூ), கையெழுத்திடத் தயார்'' என்று அமெரிக்க அதிபர் கிளின்டனின் காலில் விழுந்தார் வாஜ்பாயி. அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இராணுவ அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங் தான், அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஸ்ட்ரோப் டோல்பாட்டுடன் இந்த இரகசிய ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தையைத் தொடங்கி வைத்தார். 1998இல் பா.ஜ.க தொடங்கி வைத்ததை 2005இல் காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது.

அன்று ""அமெரிக்க என்ரானை அரபிக் கடலில் வீசுவோம்'' என்று கூறி காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து மகாராட்டிரத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதா, ஆட்சிக்கு வந்த மறு கணமே என்ரானுடன் ஒப்பந்தம் போட்டது. பெரும்பான்மையே இல்லாமல் வெறும் 13 நாட்களுக்கு தற்காலிகப் பிரதமராக இருந்த வாஜ்பாயி, அந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அரசின் அங்கீகாரத்தையும் வழங்கினார். உற்பத்தியே செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 90 கோடி ரூபாய் தண்டம் கட்டி மகாராட்டிர அரசு போண்டியானது. பிறகு திவாலான என்ரானின் பல நூறு கோடி ரூபாய் கடனை மத்திய அரசு அடைத்தது. இது பாரதிய ஜனதாவின் யோக்கியதைக்கு ஒரு பானைச்சோறு. மன்மோகன் சிங்கைக் காட்டிலும் விசுவாசமான அமெரிக்க அடிமைகளான பாரதிய ஜனதாவினர் ஆட்சிக்கு வந்தால் அணு உலைகளென்ன, நம் அடுப்பு உலைகளையும் சேர்த்து அமெரிக்காவுக்கு அடமானம் வைத்து விடுவார்கள் என்பதே உண்மை.

மன்மோகன் மார்க்சிஸ்டு"கொள்கை' வேறுபாடு!

""எங்களுடைய ஆட்சேபணைகளைப் பரிசீலிக்கும் வரையில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கவேண்டும்'' என இப்போது தீர்மானம் போட்டிருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005இலேயே அம்பலமாகி விட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்கத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தார்கள். ""அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக'' சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். ""அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது'' என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள். இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.

""உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனித முகத்துடன் இருக்கவேண்டும்'', ""சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும்'', ""பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்'' இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது, ""அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது'' என்று பசப்புகிறார்கள்.

""தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு, துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?'' என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியம்கூட இவர்களுக்கு இல்லை. ""இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்லவேண்டும், அதை காங்கிரசு முடிவு செய்து கொள்ளட்டும்'' என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்.

இந்தப் பசப்பல்களுக்கும் மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. ""பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம்தான் நாட்டைத் தொழில் மயமாக்கி முன்னேற்ற முடியும்'' என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங். ""அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார். கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே ""காங்கிரசு அரசைக் கவிழ்க்க மாட்டோம்'' என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.

அது மட்டுமல்ல; டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும்படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள். மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிக்காவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.

""முழுதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?'' என்கிறார் மன்மோகன் சிங். ""முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம்'' என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள். இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள "கொள்கை' வேறுபாடு.

அம்பலமானது போலி ஜனநாயகம்!

இந்த ஒப்பந்தம் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையையும் அம்மணமாக்கியிருக்கிறது. நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கக் கூடிய இந்த ஒப்பந்தத்தை நாலு அதிகாரிகள்தான் இறுதியாக்கிக் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது அமைச்சரவைக்கே தெரியுமாம்.

""÷பாடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே அரசு தற்போதுள்ள நிலையிலேயே இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளக் கூடாது'' என்றும், விதி184இன் கீழ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி பெரும்பான்மையின் முடிவை அமல்படுத்த வேண்டுமென்றும் சமாஜ்வாதி, பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள் அவைத்தலைவரிடம் கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ""இது போன்று கூற (அதாவது நாடாளுமன்றத்தின் ஒப்புதலை இந்த ஒப்பந்தம் பெற வேண்டும் என்று கூற) இந்த அவைக்குத் தகுதி இல்லை. நாடாளுமன்றத்தின் மூலம் தடை செய்யப்படாமல் ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தத்தின் அமலாக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் (வேண்டுமானால்) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம்'' என்று தீர்ப்பளித்திருக்கிறார் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி.

தனிப் பெரும்பான்மை கூட இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாங்கம் தன் விருப்பத்துக்கு நாட்டையே அடமானம் வைத்து ஒப்பந்தம் போடலாம்? அதில் திருத்தம் கொண்டு வருவதற்குக் கூட பெரும்பான்மைக்கு உரிமை கிடையாதாம்! நாடாளுமன்றம் என்பது வெறும் அரட்டை மடம் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? ""வாக்குரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம்; இந்திய ஜனநாயகம் ஒரு போலி ஜனநாயகம்'' என்று தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோமே, அந்த உண்மை இதோ கண் முன்னே நிரூபணமாகியிருக்கிறது.

அடிமையாக மாட்டோம்,
அடியாளாக மாட்டோம்!

மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது. 1994இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.

மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. சிறு தொழில்களை அழித்து மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடக் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ளப் போகிறோமா?

நாட்டுப்பற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!

அமெரிக்கஇந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத் தளமாக
இந்தியாவை மாற்றியமைப்போம்!எதிர்க்கிறார்கள் அணு விஞ்ஞானிகள்!

""நமது நாட்டில் உள்ள தோரியம் இருப்பைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 3,50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். (தற்போதைய நமது மின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் மெகாவாட்) நமது எதிர்கால எரிசக்தித் தேவைக்கு உத்திரவாதம் அளிக்க முடியும். இதை நீண்டகாலத்துக்கு முன்பே நாம் மதிப்பட்டுள்ளோம். நமது 500 மெகாவாட் அதிவேக ஈனுலையின் முன்னேற்றத்தைக் கண்டு (தோரியத்தை அடிப்படையாகக் கொண்டது) பல முன்னேறிய நாடுகள் புழுங்கிக் கொண்டிருக்கின்றன... இந்தத் துறையில் நமக்கு 40 ஆண்டு அனுபவம் உண்டு என்பது அமெரிக்காவுக்கும் தெரியும்... தோரியத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நமது திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது வெளிப்படையாகவே தெரியவில்லையா என்ன?''

ஏ.என்.பிரசாத், முன்னாள் இயக்குநர், பாபா அணு ஆராய்ச்சி மையம், அணு உலைப் பாதுகாப்பு ஆலோசகர், சர்வதேச அணுசக்தி முகமை, வியன்னா. (டெக்கான் கிரானிக்கிள், ஆக7, 2007)

""எதிர்காலத்தில் 30,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அணுஉலைகளை நாம் இறக்குமதி செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த அணு உலைகளை வாங்குவதற்குக் குறைந்த பட்சம் 3 இலட்சம் கோடி ரூபாயை நாம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேலும் 12 இலட்சம் கோடி ரூபாய்களை நாம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை இந்த அணு உலைகளுக்கான எரிபொருள் (யுரேனியம்) முடக்கப்பட்டால் மொத்தம் 15 இலட்சம் கோடி ரூபாய் மூலதனம் முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும்...

""நமது பிரதமரும் திட்டக் குழுவின் துணைத்தலைவரும் (அலுவாலியா) பிரபலமான பொருளாதார வல்லுநர்கள். அவர்களுக்கு இந்த உண்மை புரியாமலா இருக்கும்? 15 இலட்சம் கோடி மூலதனம் முடக்கப்படுவதால் ஏற்படக்கூடிய நட்டத்தைப் பற்றி ஒரு கணம் சிந்தித்தால், அதற்குப் பின் "அணுவெடிச்' சோதனை செய்து பார்க்கலாம் என்ற தைரியம் எதிர்காலத்தில் எந்த அரசாங்கத்துக்காவது வருமா?''

டாக்டர்.ஏ.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர்,

அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அரசு.