தமிழ் அரங்கம்

Showing posts with label சி.பி.எம்.. Show all posts
Showing posts with label சி.பி.எம்.. Show all posts

Sunday, May 17, 2009

குசேலன் குபேரனான கதை

சி.பி.எம். என்பது ஒரு கட்சியல்ல; அதுவொரு முதலாளித்துவக் கம்பெனி. கம்பெனி என்றால் அதற்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். ஆண்டுதோறும் சொத்து விவரங்களைத் தணிக்கை செய்து, வருமான வரி அலுவலகத்துக்குச் சட்டப்படி தாக்கல் செய்யும். சி.பி.எம். கம்பெனியும் இப்படி ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறது. கடந்த 2006 மார்ச் 31ஆம் தேதி முடிய உள்ள நிதியாண்டில் சி.பி.எம். கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77.27 கோடிகளாகும்.

இழப்பதற்கு ஏதுமில்லாத தொழிலாளி வர்க்கத்தின் கட்சி; பஞ்சைப் பராரிகளின் கட்சி; சொத்துடமை முறையை ஒழித்து சோசலிசத்தைப் படைக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் கட்சி இப்படிப்பட்ட கட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. முதலாளித்துவ கம்பெனிகளின் சொத்து நாள்தோறும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பல்கிப் பெருகுவதைப் போல, சி.பி.எம். கம்பெனியின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Thursday, August 21, 2008

அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நாறிப்போனது சி.பி.எம்.இன் கோஷ்டி சண்டை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதில் யார் யாருக்கோ நெருக்கடிகள் இருந்தாலும், உண்மையான நெருக்கடி சி.பி.எம். கட்சிக்குள்தான் தற்போது மையம் கொண்டுள்ளது. அக்கட்சியின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, நாடாளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தின் மூலம், அக்கட்சியில் நிலவும் கோஷ்டி சண்டையும் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று திரும்பப் பெற்றன. அதையொட்டி அரசுத் தலைவரிடம் கொடுத்த பட்டியலில் சி.பி.எம். கட்சி எம்.பி.க்களின் வரிசையில் நாடா ளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதையறிந்த சோமநாத் பொங்கியெழுந்து விட்டார். ""அவைத் தலைவரான நான் எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன்; எனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்த்தது தவறு'' என்று சீறினார். மற்றவர்களால் ""மாண்புமிகு சபாநாயகர்'' என்று அழைக்கப்படும் தன் பெயரை ""தோழர்'' என்று பட்டியலில் சேர்த்து கட்சி தன்னை இழிவுபடுத்தியதைக் கண்டு சோமநாத்துக்கு மகாகோபமாம்!

Tuesday, July 22, 2008

சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்

எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது. இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர். .... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்