தமிழ் அரங்கம்

Saturday, January 2, 2010

சிவசேகரத்தின் தொப்பி : மகிந்தாவுக்கும் பொருந்தும் குழையடிப்போருக்கும் பொருந்தும்

சிவசேகரம் போன்றோரின் இன்றைய திடீர் அரசியல், கடந்தகாலத்திய தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதாகும். அதே நேரம் கடந்தகால புரட்சிகர அரசியல் செயல்பாட்டை மறுத்தலாகும்;. இதுவே இன்று இவர்களின் திடீர் அரசியலாக, கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத அனைவரும் கூடி, எமக்கு எதிராக குழையடிக்கும் அரசியலை முன் தள்ளுகின்றனர்.


இதற்கு 'மா.லெ.மாவோ" சிந்தனை முதல் தங்களை இட்டுக்கட்டி சமூகத்துக்கு காட்டமுனைகின்றனர். தங்களைப் பற்றியும், தங்கள் அரசியல் பற்றியும் வெளிப்படையற்ற தன்மை, மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாக வெளிப்படுகின்றது. அது தன் அரசியல் எதிராளியை திரித்துப் புரட்டுகின்றது.

தவறுகள் செய்த எமக்கு "தவறு செய்யாதவர்கள்" என்று பட்டம் கட்டி, தவறுகளையும் கிரிமினல்களையும் பாதுகாக்க கவிதை பாடுகின்றார் சிவசேகரம். அவர் எம்மைத் திரித்து குழையடிப்போரின் துணையுடன் வக்கரிக்க, அதுவே கவிதையாகின்றது. அவரின் 'மா.லெ.மாவோ" சிந்தனையோ "தவறு செய்யாதவர்கள்" என்று திரித்து, கிரிமினல் அரசியலை "தவறாக" காட்டி கூடி குழையடிக்க முனைகின்றது.

எம் மக்களையும், ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, January 1, 2010

புது நம்பிக்கையுடன் மனித குலம் வாழத் துடிக்கும் புத்தாண்டு

மனிதனை மனிதன் ஒடுக்கி அவனை அடிமை கொண்டு இயங்குகின்றது உலகம். மனிதர்களை அடக்கியும், அடங்கியும் வாழும் இந்த உலகில், மனித குலம் தான் சந்திக்கும் நெருக்கடிக்களுக்கு தனிதனியாக தீர்வைத் தரும் என்ற சுய நம்பிக்கையுடன் தான் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அன்றாவது நாம் மகிழ்சியாகவும், திருத்தியாகவும் இருப்பதன் மூலம், அந்த வருடம் முழுக்க வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தான், மனிதன் புத்தாண்டை கொண்டாடுகின்றான்.


இந்த ஒரு நாள் மகிழ்ச்சியை, வாழ்நாள் மகிழ்ச்சியாக்க மனிதன் முனைகின்றான். உற்றார், உறவினர் தொடங்கி சமூகத்துடன் தன் உணர்வுகளை பகிர்ந்து, ஒன்றாக கூடி உண்டு மகிழ்ச்சியை பகிர்கின்றான்.

இந்த ஒருநாள் மகிழ்சியையும், அவனின் உணர்வையும் சந்தையாக்கி அவனின் உணர்வையே கொள்ளையடிக்கின்றது மூலதனம். இன்றைய உலக ஜனநாயகம், இதைக்கொண்டு அவனை தொடர்ந்து அடிமைப்படுத்துகின்றது சந்தை இயக்கும் பொருட்கள் மனித உணர்வை நலமடிக்க, மனித உணர்வுகள் பொருட்கள் சார்ந்தாக வடிகின்றது.

இப்படி எதிர்கா..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


புத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்!

சிந்தனையை – தன்மனதில்..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, December 31, 2009

2009

சுற்றவர முட்கம்பி, நீட்டிய துப்பாக்கிகளுடன் சிங்கள இராணுவம், மாரிகால மழை, வெள்ளம், குளிர் என்ற அனைத்துவகை துன்பங்களுடன் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு புது வருடம் பிறக்கிறது. அழிவு அரசியலின் தலைமையால் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டவர்களாக இந்த மக்கள் சிங்கள தேசியத்தின் காலடியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்.

புலித்தலமையின் அழிவு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்கு, இதுவரை தெரியாமலிருந்த எதிரிகளையும் தெரிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.

“மணியோடர் சமூகமாக” இருந்தமையால் போர்க்காலத்திலும் யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த உறவுகளின் உண்டியல்களினால் பொருளாதார ரீதியாக பிழைத்துக் கொண்டது. ஆனால் வன்னி முகாம் மக்களுக்கு இந்த “வசதி” இல்லை. முகாமைப் போய்ப் பார்த்தோம், மகிந்த அவர்களை நன்றாகவே “வைத்திருக்கிறார்” என்ற தமிழ்குடிகளின் அறிக்கைகள்தான் அவர்களுக்குப் பரிசாக கிடைக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், வெளியில் போனால் அவர்களுக்கு வீடில்லை, வருமானம் இல்லை, ஆகவே முகாம்தான் சிறப்பானது என்கிறார்கள். அந்த மக்களுக்கு உதவுவது அவர்களது போர்க்குணாம்சத்தை மழுங்கடித்து விடும் என்று புரட்சிகரமாக முழங்கப்படுகிறது.

2009_1மே 17ஆம் திகதிவரை தமிழீழம் வாழ்க என்று ஆவேசத்துடனும், துடிப்புடனும் இருந்த புலம்பெயர்ந்த தமிழ்தேசிய வீரர்கள் பின்னர் அடங்கிப்போய், இப்போது வேட்டைக்காரன் பார்ப்பவர்கள் துரோகிகள் என போராட்டதின் அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளனர்.

புலி அரசியலால் இல்லாமல் செய்யப்பட்டிருந்த புலி அல்லாத இன்னொரு அரசியல் புலித்தலமைகளின் அழிவின்பின் தமது குண்டாந்தடிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. “உன்னைப் பற்றி எனக்கு முன்பே தெரியும்” என்று ஆளாளுக்கு “ஓடவிட்டு” போர் புரிய ஆரம்பித்துள்ளனர். அரசியலற்ற போரையும், வீடியோவுக்கான இராணுவத் தாக்குதல்களையும் தமிழீழத்துகான ஒரேவழியாக புலம்பெயர் புலித்தேசியம் தாரகமந்திரமாகக் கொண்டிருந்தது. இப்போதும் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பொறுக்கி அரசியல்

இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல; பொறுக்கி அரசியல்! இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் வசவுகள், பேசும் தலைவர்கள் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

""நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது'' என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழவும், அதையே ரசிக்கவும்கூடப் பழகிவிட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர்கள் (Crowd Pullers) கவர்ச்சி நிலை தலைவர்கள் (Charismatic Leaders)தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

""பொறுக்கி அரசியல்'' என்று..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, December 30, 2009

தளபதிகளும் தவறு செய்வர்!

தளபதிகளும் தவறு செய்வர்!
அரசின்
படையின்
பாடசாலையின்
பல்கலைக்கழகத்தின்
இணையதளத்தின் - ஏன்
உலகின் ஒவ்வொன்றின்
அதிபதிகளும்
தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்லவே!


சிவகேரம் எனும்
“பேர்”-ஆசிரிய...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, December 29, 2009

பிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும்

தமிழ்மக்கள் மேல் அரச பாசிசமும், புலிப் பாசிசமும் பாய்ந்து குதறிய போது, "முன்னேறிய பிரிவு" என்று தம்மைத்தாம் கூறும் கூட்டம் என்னதான் செய்தது!? அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா? வரலாற்றில் அது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடியதாக, எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க "முன்னேறிய பிரிவு" என்று தன்னை தான் அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று குழையடிக்கின்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக, மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்திருக்கவில்லை.


மக்கள் தங்கள் வாழ்வை இழந்து போராடிக்கொண்டு இருந்தபோது, கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்தவர்கள் ஒருபுறமும். மறுபுறம் புரட்சி பற்றி கனவு காண வைத்துக் கொண்டும் இருந்தனர். பிரபாகரன் செத்தான் என்றவுடன் பதறியடித்துக் கொண்டு, பாயை விட்டு எழும்பியவர்களும், கனவு கலைந்தவர்களும் "மார்ச்சியம்" "புரட்சி" என்று உருவெடுத்தாடுகின்றனர். தம்மைப் போல் தான் அனைவரும் படுத்துக் கிடந்தனர், கனவு கண்டனர் என்ற கூறிக் கொண்டு, சுயவிமர்சனத்தை அனைவரின் பெயரிலும்;, சுயவிமர்சனம் என்றால் என்ன என்று கூறத்தொடங்கியுள்ளனர். இப்படி கனவு கலைந்த கையுடன், இன்று குழையடிக்கும் அரசியலை முன்தள்ளுகின்றனர்.

1983 இல் இயக்கங்கள் வீங்கி வெம்பிய போது, அது மார்க்சியத்தையும் சோசலிச தமிழீழத்தையும் கூட சேர்த்தே முன்வைத்தது. இது நந்திக் கடற்கரையில் முடியும்வரை ஆயிரம் வே~ம் போட்டது. பிரபாகரன் செத்தவுடன், 1983 இல் நடந்தது போல் மீண்டும் மார்க்சியம் புரட்சி ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, December 28, 2009

வினவாதே மூடு !

இன்னும் வெட்டவும் புரளவும் தலைகள் இருக்கின்றன.
புதைப்பதற்கு சவுக்கந் தோப்புக்களும்
எலும்பும் கிடைக்காமல் எரிப்பதற்கு சுடலைகளும்
எங்கள் கண்காணிப்பில் தான்
வினவு என்பது வீண் வார்த்தை
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, December 27, 2009

"மே18"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்

"மே 18" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் "அயோக்கியத்தனம்" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.

கடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராகப் "போராடியவர்கள்", மக்களுக்கு ஏற்படுத்திய சமூக விரோதக் கூறுகளைப் பற்றி பேசுவது அவசியம். அன்றும் இன்றும், இது தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. சிலர் இன்று புலியிடம் மட்டும் கோருவது போல், இதை நாம் கோர முடியாது. அப்படி கோருகின்ற அரசியல், தம்மை மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும். இன்று இதுவே மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலாக, மேலோங்கி வருகின்றது.

புலிகள் மட்டும் மக்களை கொன்று புதைக்கவில்லை. புலியல்லாத இயக்கங்கள் முதல் இயக்கத்துக்கு மாற்றாக மாற்று அரசியல் செய்தோர் வரை, தங்கள் மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களை ஓடுக்கினர், ஓடுக்கவுதவினர். இக்காலத்தில் "மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்" பெயரில் இயங்கிய புதிய ஜனநாயகக் கட்சி கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியது கிடையாது. குரல் கொடுத்ததும் கிடையாது.

புலிகள் செத்த பின்பு, வரிந்து கட்டிக்கொண்டு புலிக்கு அந்தியேட்டி நடத்த முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு துடக்கு கழித்து,.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

திருச்சி (தஞ்சை) மாநாட்டிற்கு சென்ற சிவாஜிலிங்கம் திருப்பி அனுப்பப்பட்டார்.

தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து செல்வதற்காக சென்ற ஜனாதிபதி வேட்பாளர் (சுயேட்சை) சிவாஜிலிங்கம், திருச்சி விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்ப்பபட்டுள்ளார்.

தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிவாஜிலிங்கம் வரவில்லையென்பதை இந்தியா நாடுகடத்தலின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளது. புலிகளுக்கே அந்நிலையென்றால் சிவாஜிலிங்கம் எம்மாத்திரம்!

2005-ல் ஜனாதிபதித் தேர்தலின் போது, புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் – இன்று தமிழ்மக்கள் எதிர்;கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணம் – இரா சம்பந்தன்

நீங்கள் அசல் கிரிமினல் வக்கீல்கள். உங்களின் வக்கீல் வாதங்களை, பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலை, தமிழ்மக்களின் அவல வாழ்வோடு வைத்து கூத்தாடுகின்றீர்;கள். பிரபாகரனின் மண்டை பிளக்கப்படும் வரை, உங்கள் சிந்தனைச் செயற்பாடு, அவரின் மண்டைக்கூடாகவே வந்தது. இப்போ யாருக்கூடாக சொல்கின்றீர்கள் – செயற்படுகின்றீர்கள் என்பது பரம ரகசியமல்ல.

பொன்சேகாவின் யுத்தம்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்