தமிழ் அரங்கம்

Thursday, February 11, 2010

ரணங்கள் மறந்திட – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

தீப் பிளம்பதில்

நெருப்புத் தனல்

சுவாசித்து

மயக்கமில்லா

அறுவைச் சிகிச்சையில்

ரணமாகி

கண்ணீர் வற்றிய

மலர் துவிப்

பயணித்த

நெடுந்துராப் பயணம்

எம் பயணம்

நாவறள.....

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தமிழ் மக்கள் விட்ட கண்ணீரும், சரத்பொன்சேகாவின் மனைவி அநோமா விட்ட கண்ணீரும்

இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.


இனப் பிளவுகள் ஊடாக எப்படி தமிழ்மக்களின் கண்ணீரை சிங்கள மக்கள் உணரவில்லையோ, அப்படி நாம் மக்களை வழிகாட்ட முடியாது. சிங்கள மக்களின் கண்ணீரையும் ஆளும் வர்க்கத்தின் கண்ணீரையும் தமிழ்மக்கள் உணராமல் இருத்;தல், தொடர்ந்தும் அது ஒரு இனத்தின் தற்கொலையாகும்;. இதை உணரவிடாமல் செய்தல் இனவாதமாகும். இது சாராம்சத்தில் பேரினவாத பாசிசத்தின் இருப்பை பாதுகாத்தலாகும்.

தமிழ்மக்களை யுத்த முனையில் கொன்று குவித்த ஒரு இராணுவத்தின் தளபதியை, இன்று பாசிசம் தன் சிறையில் தள்ளியுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது?

1. அரச பாசிசத்தை தன் குடும்ப இராணுவ சர்வாதிகாரமாக இலங்கை மக்கள் மேல் நிறுவவே, இந்தக் கைது அரங்கேற்றியுள்ளது.

2. பேரினவாத அரசு........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, February 10, 2010

யாழ் குண்டு வெடிப்பில் குளிர்காயும் புதிய ஜனநாயகக் கட்சி அரசியல்

மார்க்சியத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கினால், பாசிச நடத்தைகளையும் அது சார்ந்த வக்கிரங்களையும் தொழத் தொடங்கிவிடுகின்றனர். பாசிசத்தைக் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, மார்க்சிய சொற்களைக் கொண்டு உளறத் தொடங்குகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி நடந்து முடிந்த தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கையோ கேவலமானதும், கேலிக்குரியதுமாகும்.

தன்னை ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக கூறிக்கொண்டும், மண்ணில் தாம் ஊன்றி நிற்பதாக காட்டிக்கொண்டும், அரச பாசிசம் நடத்தும் கூத்துகளையும், அது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளையும் மூடிமறைக்கின்றது. ஏன் அதைத் திரித்து இட்டுக் கட்டுகின்றது. இப்படித்தான் கடந்த காலத்தில் புலி பாசிசத்தை மூடிமறைத்து அதைத் தொழுததால், அது புலியின் ஆசியுடன் ஒரு கட்சியாக நீடித்தது.

தேர்தலின் மூலம் கட்டவிழ்த்த அரச பாசிசத்தையும், அதன் தேர்தல் மோசடிகளையும் மூடி மறைத்த படி, தேர்தல் முடிவை திரித்துக் காட்டுகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி கூறுகின்றது "குறிப்பாக வட புலத்து மக்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்திருக்கிறார்கள். மிகக் குறைந்தளவான 18-20 வீத வாக்குகள் மட்டுமே அளித்ததன்" மூலம், மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தனர்.........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, February 9, 2010

சரத் பொன்சேகரவின் கைது : போர் குற்றச் சட்சியங்களை அழிக்கும் மற்றொரு போர் குற்றம்

மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரனையில் வெளிபடுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகர. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகரவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர் குற்றம் மிகப் பாரியது.

சட்டத்துக்கு புறம்பான குற்றக் கும்பல் ஒன்றைக் கொண்டு, ஆயிரக்காணக்கான தமிழர்களை படுகொலை செய்தது மகிந்த குடும்பம். இதை வெளிபடுத்தத் தயார் என்ற அறிவித்தைத் தொடர்ந்து, கொலைகாரக் கும்பல் முன்னாள் இராணுவ தளபதியையும் எதிர்கட்சி வேட்பளரையும் கைது செய்து கொட்டமடிக்கின்றது.

இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. க்கு எதிராக இரண்டு அழித்தொழிப்பை நடத்திய இலங்கை அரசு, பல பாத்தாயிரம் பேரை படுகொலை செய்தது. இந்த படுகொலைக்காக யாரையும், எந்த நீதிமன்றமும் விசாரித்தது கிடையாது, தண்டித்தது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இனங்களைப் பிளந்தவர்கள், இனவழிப்பு போரை அரசு நடத்திவந்தது. பல பாத்தாயிரம் மக்களை இனத்தின் பேரால் கொன்றனர். இறுதி யுத்தம் என்ற பெயரில் இன அழித்தொழிப்பை நடத்தியவர்கள், மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர்.

இது பற்றி பொது சமூக அக்கறை இன்றி, குறுகிய தளத்தில் இக் குற்றங்கள் அர்த்ததமற்று போனது. ஆளும் வர்க்கங்கள் உருவாக்கிய இ.......

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கழிந்து சென்ற 36 மணித்தியாளங்களுக்குள் 33 வன்முறைகள் நடந்திருந்தன! இது மணித்தியாலத்துக்கு சராசரியாக ஒரு வன்முறையாக வராலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்திச் செல்கிறது. …

பாரதூரமான வன்செயல்களாக 18 சம்பவங்களும், தீ மூட்டல் சம்பவங்களாக 07 சம்பவங்களும் போக, மீதி 15 வன்முறைகளாக இருக்கிறது. இதில் 02 கொலைகள் உட்பட துக்கமான அல்லது பாரதூரமான 04 ன்கு சமபவங்களும், ‘தீ’ நடவடிக்கைள் மற்றும் ஒரு கொள்ளை உட்பட: இந்த 33 வன்முறைகளும் பதிவாகியுள்ளது. இவற்றை சி.எம்.ஈ.வி உம் : இதனூடாக 1997 ல் உருவான கபே, மற்றும் எவ்.எம்..எம் ( FreeMedia Movement ) இணைந்து உருவாக்கிய ‘இன்போர்ஃம்’ ( HumanRights Documentation Centre. ) செய்திகளாக வெளியிட்டும் உள்ளது.

தேர்தலின் மறுநாள் அதிகாலையானது மனித வேட்டையோடுதான் விடிந்தும் இருக்கிறது!

தேர்தல் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த அதிகாலை வேளையும், சரத் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும்: கம்பளை பொலீஸ்.........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, February 8, 2010

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய சிறப்பு வரிச் சலுகை தடையும், அரசியல் விளைவுகளும்

வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.

மறுபக்கத்தில் இலங்கை அரசு சுய பொருளாதார முன்னிறுத்திய தேசியம் சார்ந்தோ, மக்கள் நலன் முன்னிறுத்தியோ இந்தத் தடை வரவில்லை. இலங்கை அரசின் மக்கள் விரோத பாசிச நடத்தைக்கு எதிரானதல்ல இந்த தடை. தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தல்ல, இந்தத் தடை. மனித உரிமை சார்ந்தல்ல இந்தத் தடை.

மாறாக இது உலகளாவிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் அடிப்படையிலானது இந்தத் தடை. இதற்கு இலங்கை அரசின் போர் குற்றங்கள் உட்பட மனித விரோத கூறுகளை முன்னிறுத்தியே, இந்த விசேட வரிச் சலுகையை இரத்து செய்துள்ளது. புலிகள் மேலான தடையின் போதும், இப்படித் தான் செய்தது.

மனித உரிமை, மக்கள் நலன் சார்ந்த விடையங்களை முன்னிறுத்தி, இலங்கை அரசை தனிமைப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் மற்றைய.......

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தேர்தல் ஆணையாளர் குடும்பம்?…. செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்?

இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே!

எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும், மனைவியையும் சிறைக்கைதிகளாக்கி, அவர் சுதந்திரமாக சொன்ன எல்லாவற்றையும் பொய்யாக்கி, நான் இப்போது சொல்வதே மெய்யென சொல்லவைத்த "கணனி மாயாஜால மன்னராகிய" நீங்கள் இலங்கை வரலாற்றில் ஓர் அதிஸ்டசாலியான ஜனாதிபதிதான்.

சுதந்திரதினத்திற்கு ஓர் வாரத்திற்கு முன்பாக, தோதல் ஆணையாளர் சுதந்திரமாக பலவற்றை சொன்னார். நடைபெற்ற தேர்தல் சுதந்திரதான தேர்தலல்ல. மக்கள் வாக்காளிக்காத பெட்டிகளையே எண்ணினோம், வெற்றியாக்கினோம். இவ்வெற்றிக்கனி இலங்கை வரலாறில் யாருக்குமே கிடைக்காத அதிஸ்ட வெற்றிதான். இவ்வகையில் மகிந்தா ஓர் பாக்கியசாலியும்..........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, February 7, 2010

மகிந்த இட்டுக்கட்டும் இராணுவ புரட்சியும், மகிந்த சிந்தனை திணிக்கும் இராணுவ ஆட்சியும்

தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச ஆட்டம் போடுகின்றது.

ஒரு சர்வாதிகார குடும்பத்தின் கீழ் ஒரு குற்றக் கும்பல் தங்கள் குற்றங்களை மூடிமறைக்கவும், கொள்ளையிட்டதை அனுபவிக்கவும் முனைகின்றது. இதனால் எதிர்கட்சி மீதும், ஊடகவியல் மீதும் வன்முறை, கைது, கடத்தல் என்று ஒரு போரையே தொடுத்துள்ளது. அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய பின், அதற்கு ஏற்ப ஆதாரங்களை தேடுகின்றது. வேடிக்கையிலும் வேடிக்கை.

சரத்பொன்சேகா வென்றால் இராணுவ ஆட்சியைத்தான் தருவார் என்ற கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள், இறுதியில் இராணுவ புரட்சி நடத்த இருந்ததாக கூறி அவரின் ஆதாரவாளர்களை எல்லாம் கைது செய்கின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. கைது செய்து, ஆதாரத்தைத் தேடுகின்றனர். கைதானவர்களை சித்திரவதை செய்தும், பணத்தைக் கொடுத்தும், தம் பாசிசத்தை நிலைநிறுத்தும் ஆதாரத்தைப் புனைய முனைகின்றனர்.

இதன் மூலம் மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த, இராணுவத்தை எடுபிடி அமைப்பாக்க முனைகின்றனர். அந்த வகையில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்