தமிழ் அரங்கம்

Saturday, September 29, 2007

தகவல் ஊடகங்களும் சூசையும்

பி.இரயாகரன்
29.09.2007

தமிழ் மக்களின் தலைவிதி என்பது, பொய்களையும் புரட்டுகளையும் நம்புவதே. இதையே அவர்கள் கொசிப்பாக்கி, அரசியலாக்கி விடுகின்றனர். தொட்டுக் கொண்டு வம்பளக்க, ஊர் பெயர் தெரியாத அனாதை இணையங்கள்.

இப்படிப்பட்ட இணையங்கள் சரி, மூகமுடி போட்டு எழுதுபவர்களுக்கும் சரி, அவர்களுக்கு எந்த சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. எதையும் எப்படியும் எழுதி வம்பளக்க முடியும். சூடுசுரணையற்ற இந்த எருமைகளுக்கு, அடிப்படையான மனித நேர்மை கூட கிடையாது.

மக்களிடையே கொசிப்பை அரசியலாக்கி, சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்க முனைகின்றனர். இதைத்தான் அவரவர் பாணிக்கு தமிழீழம் என்றும், ஜனநாயகம் என்றும் அவர்களே கூறிக் கொள்கின்றனர். இதற்குள் தான் தியாகம், துரோகம் என்ற வார்த்தை ஜாலங்கள். இப்படி மக்களின் முதுகில் குத்தி நக்கும் கூட்டம், ஊடகவியலில் சலசலக்கின்றது.

தமிழ் மக்கள் தகவல் அறியும் உரிமை கிடையாது என்பதே, இந்த இரு தரப்பினரதும் அரசியல் நிலையாகும். தமிழ் மக்கள் உண்மையை அறியமுடியாது. தமிழ் மக்களை கேனயன்களாக நடத்துவதே, இந்த திமிர் பிடித்த புலி மற்றும் புலியெதிர்ப்புவாதிகளின் கோட்பாடாகும். இதனால் தமிழ் மக்களை நம்பி, இந்த இருதரப்பும் அரசியல் செய்வது கிடையாது. அவர்களை அரசியல் ரீதியாக அணுகுவதோ, அணிதிரட்டுவதோ கிடையாது. மாறாக கொசிப்புக்குள்ளும், வம்பளப்புக்குள்ளும் மக்களை அணிதிரட்ட முனைகின்றனர். இந்த தரப்பு கொசிப்பு, அந்தத் தரப்பு கொசிப்பை மிஞ்சுமா என்ற தர்க்கமும் வாதங்களும்.

இப்படி ஊடகவியலூடாக இயங்குகின்ற தெருப்பொறுக்கிகளின் கூட்டம். இந்த பொறுக்கிகளுக்கு எந்த சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. பெரும்பாலானவர்கள் தன்னை மறைத்துக்கொண்டு, ஊடகவியலூடாக மக்களை மேய்க்கின்றனர். தமிழ் ஊடகவியல் என்பதும், அது மக்களுக்கு சொல்வது என்பதும், சொந்த இழிவான மலிவான வக்கிரத்தைத் தான்.

ஒரு மனிதன் தான் ஏன் எதற்காக கொல்லப்படுகின்றேன் என்று தெரியாத ஒரு நிலையிலேயே கொல்லப்படுகின்றான். அவன் மற்றும் அவளின் உற்றார் முதல், மொத்த தமிழ் சமூகத்துக்கும் கொல்லப்பட்டமைக்கான காரணங்கள் தெரிவதில்லை. ஏன் கொல்லப்பட்டது என்று தெரியாத வகையில் கொசிக்க, தமிழ் மக்களை அதற்கு ஏற்ப ஊடகவியல் மாற்றி அமைக்கின்றது. இதை நியாயப்படுத்துகின்ற மலிவான இழிவான பிரச்சாரங்கள். இந்த புலி மற்றும் ஜனநாயக ஊடகவியலின் கருத்துக்கள், மனிதர்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்ற தெருப்பொறுக்கிகளாலானது.

புலியல்லாத பிரதேசத்தில் மக்கள் கண்ணிவெடி மூலம் இறந்தால் அதை இராணுவம் செய்ததாகவும், இதுவே புலிகள் பிரதேசத்தில் இறந்தால் அதை புலிசெய்ததாக கூறுகின்ற ஊடகவியல். தெருப் பொறுக்கிகளான இந்த ஊடகவியல், சம்பவம் நடந்தவுடன் அதை யார் செய்தது என்று எழுதுகின்ற கட்டுக் கதைகள். மக்களையே கேனயனாக கருதி செயல்படுகின்ற அரசியல் கூத்துகள். ஒருபுறம் தமிழீழம், மறுபுறம் ஜனநாயகம், இப்படி தமிழ் மக்களின் ரணங்களின் மேல் நின்று கூத்தடிக்கின்றனர்.

தமிழ் மக்களை நம்பக் கோருகின்றனர். நம்ப வைக்கின்றனர். இதை கேள்வி கேட்க முடியாது. சுய சிந்தனையை இழந்த மலட்டுக் கூட்டமாக மாற்றி, கொசிப்பை ஊடகவியலாக்குகின்றனர். தமிழ் மக்கள் மேல் பொய்யையும் புரட்டையும் பேந்து விடுவதே, இவர்கள் நடத்தும் ஊடக தர்மமாகின்றது. தமிழ் மக்கள் சுயமாக சிந்திப்பதையோ, சுயமாக முடிவுகளை எடுப்பதையோ அனுமதிப்பதில்லை. இதை தமக்கு எதிரானதாக கருதுகின்றனர். மக்கள் உண்மைத் தன்மையை அறியக்கூடாது என்பது, இவர்களின் மையக் குறிக்கோள்.

உதாரணத்துக்கு சூசை பற்றிய புலியெதிர்ப்பு மற்றும் அரசு சார்பு தகவல்கள். மறுபுறம் புலிதரப்பு தகவல்கள். மக்கள் இதில் இருந்து எதைத் தெரிந்து கொண்டனர். இந்தத் தகவல் எதை தான் கூறிவிட்டு சென்றுள்ளது.

சூசையின் மீள் வருகையும் அவரின் உரையும். இந்த தகவல் பின்னணியில் எது உண்மை எது பொய்? சூசையின் வருகையின் பின்னும் கூட, நாம் இனம் காணமுடியாது உள்ளது. இதே போல்தான் புலிகளின் ஆயுத முகவர் பத்மநாதன் விவகாரம். புலியெதிர்ப்பு இணையங்கள் வெளியிட்ட எந்தக் கருத்தையும், சமூக பொறுப்புணர்வுடன் மீள அணுகியுள்ளனரா? எனின் இல்லை. மக்களின் தலையில் அரைத்துக்கொண்டு அவர்கள் மேலேயே பேந்தவர்கள் தாம் புறம்போக்குகள் போல் மௌனமாகி விடுகின்றனர். இது போன்ற புதிய தகவலை புனைய தொடங்கிவிடுகின்றனர்.

புலிகள் கூட இப்படித்தான். பிரபாகரன் மகன் வெளிநாட்டில் படித்ததாக வெளியாகிய தகவல் முதல் அவர் இன்று புலிகளின் விமானப்படை பொறுப்பாளர் என்ற புலியெதிர்ப்புத் தகவல்களை எப்படி கையாண்டனர். பிரபாகரன் மகனை விமானப்படை தளபதியாக காட்டுகின்ற இலங்கை அரசின் செய்தியை தமது செய்தியாக்குகின்றனர். அரசு தரப்புச் செய்திகள் அல்லது எதிர்க்கட்சி செய்திகள், சிங்கள இனவாதச் செய்திகள் தமக்கு சார்பாக இருக்கும் போது, அதை வைத்து தம்மை மிதப்பாக்க முனைகின்றனர். இதில் உண்மைத் தன்மை பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. இப்படி எத்தனை தகவல்கள். மக்களை முட்டாளாக்கி, முடமாக்கி தம்பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற வக்கிரம். மக்களின் அறியாமை தான், இவர்களின் ஊடகவியலின் மேன்மை.

சூசை விவகாரத்தையே எடுப்போம். சூசை தொடர்பான சம்பவம், உண்மையா பொய்யா என்பதே முதலில் புலி மற்றும் புலி எதிர்ப்புத் தளத்தில் சர்ச்சையாகியது. பின் சம்பவம் ஒன்று நடந்தது உண்மையாகியது. இதையும் புலிகள் நீண்ட மௌனத்தின் பின் ஒத்துக் கொள்கின்றனர். அதை பின் சூசையே உறுதி செய்கின்றார். இது போன்ற பெரும்பாலான தகவலை புலிகள் மறைப்பது ஏன்? மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் உள்ள அக்கறை தான் என்ன?

அடுத்து இந்த சம்பவம் என்ன? இது முடிவு காண முடியாத சந்தேகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சர்ச்சையாகவே தொடருகின்றது. சூசை சொல்வதோ அல்லது புலியெதிர்ப்பு சொல்வதோ நம்பக் கூடிய வகையில் இல்லை என்பதையே, கடந்தகால அனுபவம் எமக்கு காட்டுகின்றது.

சூசைக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடு எதுவுமில்லை என்றும், இல்லை முரண்பாடு தான் என்று புலியெதிர்ப்புத் தகவலும் கூறுகின்றது. எதையும் தமிழ் இனம் இதில் தெரிந்து கொள்ள முடியாது. தலைவரின் காலம் முழுக்க அவர் பதவி இழக்காமல் அதே அதிகாரத்துடன் வாழ்ந்தால், சூசை சொல்வது சரியாக இருக்கும். இப்படி இதற்குள் நாம் விடையத்தை ஆராய வேண்டியளவுக்கு, புலிகளின் வரலாறு நேர்மையற்றது.

இப்படி தகவல்கள் புனையப்படும் விதமும், கட்டுக்கதைகளுமே தமிழ் ஊடகவியலை ஆக்கிரமித்து நிற்கின்றது. புலிகளின் வரலாற்றில் இருந்து கடந்த காலத்தையு ஒரிரு சம்பவத்தைப் பார்ப்போம்.

கருணா விவகாரமும், அதைத் தொடர்ந்து திருகோணமலை பொறுப்பாளர் பதுமன் திடீரென்று தோன்றி தான் தான் இன்னமும் திருகோணமலை தளபதி என்று ஊர் உலகம் அறிய அறிவிக்கவில்iiயா? பின் அவருக்கு என்ன நடந்தது? அந்த திருகோணமலை தளபதியின் கதை இன்னமும் மர்மம் தானே. மக்களுக்கு இதன் மூலம் புலிகள் எதைச் சொன்னார்கள்.

கருணா விவகாரம் வந்தவுடன், இரத்தக்களரி இன்றி இது தீர்க்கப்படும் என்று தமிழ்ச்செல்வன் தலைவரின் பெயரில் கூறினாரே, அது என்னவாயிற்று?

இதற்கு சற்று முன் புலிகளின் தலைவர் பிhபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் இது போன்ற கதை அரங்கேற்றப்பட்டதை பலர் மறந்திருக்கலாம். பிரபாகரனுக்கு அருகில் கருணா மற்றும் பதுமன் அமர்ந்து இருந்தது, எந்த தளபதிக்கும் இல்லாத விதிவிலக்காக இருந்தது. ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, அருகில் கிழக்கு தளபதிகள் உள்ளனர் என்றார். எமக்கு இடையில் எந்த முரண்பாடும் கிடையாது என்றனர். அந்த பத்திரிகை மாநாட்டில் இருவரும் திருட்டு மூஞ்சையுடன் முழுசிக்கொண்டு இருந்ததை நாம் எப்படி மறந்துவிட முடியும். அந்த இருவரின் கதியும் என்ன, அந்த பதவிகளுடன் அவர்கள் இன்று இல்லை.

இதற்கு சற்று முன் மாத்தையா பிரபா முரண்பாடு பற்றிய செய்திகள். புலிகள் இதை பொய்ப் பிரச்சாரம் என்றனர். இந்தியா மற்றும் இலங்கை அரசின் பொய் என்றனர். அவர்கள் இருவரும் ஒன்றாக நிற்கும் படத்தைக் கூட புலிகள் உலகுக்கு காட்டினர். கடைசியில் மாத்தையா கதை முடிக்கப்பட்டது.

இப்படி எத்தனையோ தகவல்கள், செய்திகள், காட்சிகள் எல்லாம் புலிகளின் வரலாற்றில் பொய்யாக்கப்பட்டுள்ளது. பாவம் சூசை என்பதா அல்லது புலியெதிர்ப்பை பாவம் என்பதா? காலம் இதில் ஒன்றுக்கு பதிலளிக்கின்றது.

இப்படித்தான் விடையங்கள். திரிந்தும், புரண்டும், பொய்யாகியும் புணர்ந்து கிடக்கின்றது. புலிகள் ஒருபுறம் என்றால், புலியெதிர்ப்பு அதேபாணி அதே யுத்தி. தகவலை விரும்பியவாறு தயாரித்து, பின் அதைச் சமூகம் மீது பேலுகின்றனர். ஆதாரங்கள், அடிப்படைகள் எதுவுமின்றி தகவலை தமக்கு ஏற்ப செய்தியாக்குகின்றனர்.

இதற்குள் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு. புலிகளின் வழமையான சுத்துமாத்தைப் பயன்படுத்தி, அதைத் திரித்து புரட்டிப் போடுவதே புலியெதிர்ப்பின் ஊடகவியலாகிவிட்டது. சேற்றைக் கலக்கி மீன்பிடிக்க முனைகின்றனர்.

இந்த வகையான செய்திகள் சமூகத்தினரிடையே கொசிப்புத் தன்மையைத்தான், சமூகத்தின் பண்பாடாக்குகின்றனா. கொசிப்பதும், அதற்காக செய்திகளை பார்ப்பதுமாகி, அதுவே வீங்கி வெம்புகின்றது. மறுபக்கத்தில் தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது. தமிழினம் என்ற அடிப்படையே தகர்க்கப்படுகின்றது. தமிழினத்தை அழிப்பது தான், ஊடகவியலாகின்றது. மக்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றுவதையே மறுக்கின்றது. அது தான் புலி மற்றும் புலியெதிர்ப்பின் அரசியல் சாரமாகும்.

Friday, September 28, 2007

விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் - பகத்சிங் நூறாவது பிறந்த நாள்


18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது.


எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே "விடுதலையைக்' காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளைத் திருப்திப்படுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள், 20ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.


இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.


இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய லட்சோப லட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.


""வன்முறைப்பாதையா, அகிம்சைப் பாதையா'' எனப் போராட்ட வழி முறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.


1921, 1930, 1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத் துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, "சென்டிமென்ட் அலை' அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.


இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.



""...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.'' — சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக் கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.


தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.


பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.


பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?


1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றார்.


1921ல் காந்தி "ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.


1922 பிப்.5ஆம் தேதி உ.பியில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின் மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.


தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924ன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர்.


இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.


இந்தத் தேக்க நிலையில், 1926இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் "நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன.


1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.


1925லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917ன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை "நான் நாத்திகன் ஏன்?' எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.



""அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்திய மென்று தோன்றியது.... எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கை யில் அது ஒரு திருப்புமுனையாகும். ""கற்றுணர்'' எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது...



""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.


""களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புக்களையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்.''


பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாகப் பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில், ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வோரா முதலான தோழர்கள் முயன்றனர்.


இதனடிப்படையில், 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக (இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.


காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.


லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. "பஞ்சாப் சிங்கம்' என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வடஇந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.


மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச17 அன்று, அவர் மீது தடியடிப் பிரயோகம் நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து இ.சோ.கு.க சுவரொட்டி ஒட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியா ளர்கள் நாடு முழுதும் போற்றப்பட்டனர்.


தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தொழிலாளர்விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோஷ், 1928 சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த பொழுது ""நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங் கள். நாங்கள் ஆங்கில அரசின் ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்'' என்று பகத்சிங் கூறியதாகப் பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், "மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே' இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.


அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக "தொழிற் தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.


"தொழிற் தகராறு மசோதா' நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவ தெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்தியக் கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒரு வேளை தப்ப முடியவில்லையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங். அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி "தொழிற் தகராறு மசோதா' நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டு களை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். "செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை' எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, "புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரம் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.



1929 ஜீன் 6ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.


""எங்களது ஒரே நோக்கம் "செவிடர்களைக் கேட்கச் செய்வதும்', செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித் தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது... கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.''



அன்று சர்வதேசப் பத்திரிக்கை களிலும், தேசபக்த உணர்வுமிக்க இந்தியப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜீன்12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.


சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜூலை13ம் தேதியன்று உண்ணா விரதத்தை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதின்தாஸ் செப்டம்பர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.


சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜீலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக் கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்திலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.


ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசாரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்குப் பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாக்குவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே 1 ஆம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு, ""குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்'' என அறிவித்தது. பிறகு "தடங்கலின்றி' நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்தது.


1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரி வந்த காங்கிரசுக் கட்சி, 1930ல் "பூரண சுதந்திர' கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசைப் புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931ல் "குடி அரசு' இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.


""..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கியக் காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.''


சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: ""முடிவில், அவர் (காந்தி) ....பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார்.''


(கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு)


""அவர் (காந்தி) வெளியேறும் பொழுது, மார்ச்24ல் பகத்சிங் தூக்கிலிடப்பட இருப்பதாக பத்திரிக்கை களில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலித்திருப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்... அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகத்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.''


(மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)


இதனிடையே, 1930 மே 28ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற் கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றாற் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய ஆல்ஃபிரெட் பூங்காவில் வீரமரணமடைந்தார்.


இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். "சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்öàரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், "வாருங்கள், போகலாம்' எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி, "இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்' எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.


ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரஸ் மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.


கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரஸ் கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. ""அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.'' எனக் குறிப்பிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.


"புரட்சி என்றாலே பகத்சிங் என்று தான் பொருள்' என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.


மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்öàரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையைப் போல, சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946ல் தெலிங்கானா விவசாயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. ""இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று 1857இல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.


ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. துரோகிகளின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.


தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் படங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலைப் போராட்டத்தின் வீரமரபு, 1967 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.


இதோ, துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்ஹவுஸி சிதம்பரம். ""மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக் கொள்ளாதே'' என்று மரணப் படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப். ""மகா பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை'' என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.


கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: ""இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை..


.''


· பால்ராஜ்

Thursday, September 27, 2007

இந்து மதவெறியின் பரிணாமம்: அன்று சோமபானம்! இன்று கோகெய்ன்!


போதை மருந்தை வாங்கி உட்கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ராகுல் மகாஜனின் கதையை, முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ""செண்டிமென்ட்'' கலந்து கொடுத்தன. அந்த 31 வயது இளைஞனின் தந்தை பிரமோத் மகாஜன், தனது சொந்த தம்பியாலேயே சுடப்பட்டு இறந்து போன சோகம் மறைவதற்குள்ளாகவே, மகாஜன் குடும்பத்தைத் தாக்கிய இரண்டாவது பேரிடியாக, இந்த விவகாரத்தை முதலாளித்துவ பத்திரிகைகளும், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளும் சித்தரித்து வருகின்றனர்.

ராகுல் மகாஜனின் குடும்பம் வருத்தம் அடைந்திருக்கும். ஆனால், எதற்காக? ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடையவர் என்பது மகாஜன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, வாஜ்பாய் உள்ளிட்டு, பிரமோத் மகாஜனோடு நெருக்கமாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த உல்லாச விவகாரம் அம்பலப்பட்டு கைது வரை போய், ராகுல் மகாஜனின் எதிர்கால அரசியல் வாழ்வு பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டதே என்பதுதான் மகாஜன் குடும்பத்தின் வருத்தமாக இருக்கும். ஏனென்றால், பிரமோத் மகாஜன் இறந்து போனதையடுத்து அவரது வாரிசான ராகுல் மகாஜனை பா.ஜ.க.வில் ஏதாவதொரு பதவியில் திணித்து விடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.இன் உயர்மட்டத் தலைவர்களும இதற்குச் சம்மதித்திருந்தனர்.


""ராம பக்தர்களின் கட்சியாக அறியப்பட்ட பா.ஜ.க., இப்பொழுது அனைத்துத் தரப்பினரின் கட்சியாக மாறிவிட்டதற்கு இந்த நள்ளிரவு போதையாட்டமே சாட்சி''; ""இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்திற்குப் பதிலாக, இந்தியா உறிஞ்சுகிறது என்ற முழக்கத்தை இனி பா.ஜ.க. முன் வைக்கலாம்'' என சொந்தக் கட்சிக்காரர்களாலேயே கிண்டல் செய்யப்படும் அளவிற்கு, இந்த விவகாரம் பா.ஜ.க.விற்குப் பாதகமாக உள்ளது. அதனால்தான், இந்தப் போதை மருந்து விவகாரத்தை முளையிலேயே மூடி மறைத்துவிடவும்; திசை திருப்பிவிடவும் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக முயன்றனர்.

ராகுல் மகாஜனும், விவேக் மொய்த்ராவும் தில்லியில் ஜூன் 1 அன்று இரவு தங்கியிருந்த அரசாங்க வீட்டுக்கு அருகிலேயே மைய அரசுக்குச் சொந்தமான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை இருந்தும், அவர்களை அங்கு கொண்டு சேர்க்காமல், தொலைவில் உள்ள தனியார் அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிப் போனதற்குக் காரணமே, இந்த விவகாரத்தை அதன் சுவடே தெரியாமல் மூடி மறைத்துவிட வேண்டும் என்பதுதான். பிரமோத் மகாஜனிடம் முன்பு செயலாளராக வேலை பார்த்த ஹரீஷ் சர்மாதான் இந்த யோசனையைக் கூறியதோடு, அந்த வீட்டில் போதை மருந்து உட்கொண்டதற்கான எல்லா ஆதாரங்களையும் அழித்துவிடும்படி வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் சி.ரெட்டி, அவரது உதவியாளர், மற்றும் ஹரீஷ் சர்மா இம்மூவருக்கும் இடையே அந்த நள்ளிரவு நேரத்திலும் இது குறித்து செல்ஃபோன் உரையாடல் நடந்ததாக போலீசார் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.


எதிர்பாராதவிதமாக விவேக் மொய்த்ரா இறந்து போனதால், இந்தப் போதை விவகாரம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும், அப்பல்லோ நிர்வாகம், அவர்கள் இருவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ராகுல் மகாஜனின் மாமாவுமான கோபிநாத் முண்டே, இந்த வதந்தியைப் பத்திரிகையாளர்களிடம் ஊதிப் பெருக்கினார்.

""நாங்கள் 14 விதமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்துவிட்டோம்; ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை'' என்ற புளுகு மூட்டையை அப்பல்லோ நிர்வாகம் அசராமல் அவிழ்த்துவிட்டது. ஆனால், வேறொரு ஆய்வுக் கூடத்தில் ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டது நிரூபணமான பிறகு, ""நாங்கள் செய்தது வேறு விதமான ஆய்வு; அவர்கள் செய்தது வேறுவிதமான ஆய்வு'' எனப் பூசி மெழுகியது.


""ராகுல் மகாஜன் அப்பல்லோவிற்குக் கொண்டு வரப்பட்டவுடனேயே, அவரது சிறுநீரை எடுத்துப் பரிசோதிக்காமல், திட்டமிட்டே கால தாமதம் செய்துள்ளனர். பரிசோதனைக்கு முன்பாகவே, நரம்பு மூலம் திரவ மருந்துகளை அவரது உடம்புக்குள் செலுத்தி, சிறுநீரை வெளியேற்றியதன் மூலம், ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டதற்கான ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர். ராகுல் மகாஜனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லாதபொழுது, அவரை இரண்டு நாட்கள் அந்தப் பிரிவில் தொடர்ந்து வைத்திருந்து, போலீசு விசாரணையைத் தாமதப்படுத்தியுள்ளனர்'' என அப்பல்லோ நிர்வாகம் மீது போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சில பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பங்கிற்கு, ""இதற்குப் பின்னால் திட்டமிட்ட சதி இருப்பதாகவும்; ராகுல் மகாஜனைக் கொலை செய்யும் நோக்கத்தோடு யாரோ, எதையோ கலந்து கொடுத்துவிட்டதாகவும்'' பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து, பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றனர்.


இறுதியாக, ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டது மருத்துவ ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவுடன், எல்லாவற்றுக்கும் காரணம் மொய்த்ரா தான் பிரமோத் மகாஜனிடம் அந்தரங்கச் செயலாளராக இருந்த விவேக் மொய்த்ராதான் சாஹில் ஜாரூவைத் தொலைபேசி மூலம் அழைத்தார்; மொய்த்ராதான் சரக்கு வாங்கிவரச் சொல்லி ஜாரூவிடம் பணம் கொடுத்தார். போலீசு கைப்பற்றியிருக்கும் வெள்ளை பவுடர் கூட மொய்த்ராவிடமிருந்துதான் எடுக்கப்பட்டதுதான் எனப் பழி அனைத்தையும் செத்துப் போனவன் மீது போட்டுவிட்டு, ராகுலை, வாயில் விரலை வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாத குழந்தை போலக் காட்டுகிறார்கள்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கூட, சட்டத்திலுள்ள சில தொழில்நுட்பக் காரணிகளை ராகுல் மகாஜனின் சிறுநீர் பரிசோதனையில் போதை மருந்தின் அளவு குறைவாக இருப்பது; அவரிடமிருந்து போதை மருந்து எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது; முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் போலீசார் செய்துள்ள குளறுபடிகள் வைத்துக் கொண்டு, ராகுல் மகாஜனை எதிர்பாராத விதத்தில் சிக்கிக் கொண்ட பலிகடாவைப் போலச் சித்தரித்து, ஒன்பதே நாட்களில் பிணையில் விடுதலை செய்துவிட்டது.


ஆனால், ராகுல் மகாஜனின் கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால், அவர் கோயில் காளையைப் போலத்தான் ஊர் மேய்ந்து கொண்டிருந்தார். வசதி, பணம், செல்வாக்கு இருந்த அளவிற்கு, அவருக்குப் படிப்பு ஏறியதாகத் தெரியவில்லை. விமான ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அதிலும் அவர் தேறவில்லை. எனினும், பிரமோத் மகாஜன், தனது மகனுக்கு, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ""ஜெட் ஏர்வேஸ்'' நிறுவனத்தில் விமானி வேலை வாங்கிக் கொடுத்தார். அந்த வேலையிலும் அவர் நிலைக்கவில்லை. கணினி மென்பொருள் நிறுவனம் நடத்துவதாக பேர் பண்ணிக் கொண்டிருந்த ராகுல் மகாஜன், தனது தந்தை இறந்து போனவுடன், வாரிசு உரிமையைப் பயன்படுத்தி அரசியலில் குதிக்கத் தயாரானார்.

போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தில் இருந்து விடுபட, அவர் ஏற்கெனவே ஒருமுறை இலண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மும்பய் நகரில், பெரிய மனிதர்கள் நடத்தும் இரவு விருந்துகளில் கலந்து கொள்ளும் பழக்கமுடைய ராகுல் மகாஜன், பா.ஜ.க.வின் ""இந்துப் பண்பாட்டில்'' மூழ்கிப் போனதில்லை. சம்பவம் நடந்த அன்று, போதை மருந்தை மூக்கு வழியாக உறிஞ்சியவுடனேயே, சரக்கில் கலப்படம் இருப்பதாகச் சொன்னவரே ராகுல்தான் எனச் சாட்சியங்கள் கூறுகின்றன.


அன்று இரவு போதை ஏற்றிக் கொள்ள வேண்டும் எனப் பைத்தியம் போல அலைந்த ராகுல் மொய்த்ரா ஜோடி, அதற்காக பதினைந்தாயிரம் ரூபாயைத் தாராளமாகச் செலவழித்திருக்கிறது. ஒரு ஐநூறு ரூபாயைச் சுருட்டிக் கொண்டு, அதைப் பயன்படுத்திதான் ராகுல் போதை மருந்தை உறிஞ்சியிருக்கிறார். இப்படிப்பட்ட உல்லாச ஊதாரிப் பேர்வழி, மேடையேறி, மைக்கைப் பிடித்துக் கொண்டு, ஏழை மக்களைப் பற்றியும், நாட்டு நலனைப் பற்றியும் பேசுவது கனவில் வருவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியுமா?

போதை தலைக்கேறிப் போய் செத்துப்போன விவேக் மொய்த்ரா 1980களில் இருந்தே பா.ஜ.க.வின் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். பா.ஜ.க.வின் தலைவர்கள், ""மொய்த்ரா உற்சாகமாகச் செயல்பட்ட கட்சி ஊழியர்'' எனப் புகழஞ்சலி செலுத்துகின்றனர். அவர் அப்படி உற்சாகமாகச் செய்த கட்சி வேலை என்ன தெரியுமா? கட்சிக்காக தரகு முதலாளிகளிடம் வாங்கும் நன்கொடையைப் பதுக்கி வைப்பதில், பிரமோத் மகாஜனுக்கு உதவியாக இருந்திருக்கிறார். பிரமோத் மகாஜனின் இரகசிய நடவடிக்கைகள் அனைத்திற்கும் பக்கபலமாக இருந்து வந்துள்ளார்.


பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.இன் அடிமட்டத் தொண்டர்கள் இந்து மதவெறி போதை தலைக்கேறிப் போய், சூலத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஊரைக் கொளுத்தும்பொழுது, மொய்த்ரா ஒரு கையில் பணப் பெட்டியோடும், இன்னொரு கையில் ஒயின் பாட்டிலோடும் உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்தப் பண்பாடு இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. இந்து மதவெறி அரசியலின் இன்னொரு பக்கம்தான் ராகுல் மொய்த்ராவின் அந்தரங்க வாழ்க்கை. கஞ்சா போதையும் சோமபானம் சுராபானம் அடித்துவிட்டு சுருண்டு போவதும் ஆரிய இந்துப் பண்பாடு தானே!

சங்கப் பரிவார அமைப்புகளில், ஊழல் உல்லாசம் ஊதாரித்தனத்தில் மூழ்கித் திளைக்கும் தலைவர்கள் இருப்பது, தெகல்கா ஊழல், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம் வாங்கியது, தகாத பாலியல் உறவில் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷி மாட்டிக் கொண்டது ஆகியவற்றின் மூலம் ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. அதனால்தான், வாஜ்பாயி போன்ற பெருந்தலைவர்கள்கூட போதை பழக்கத்துக்கு அடிமையான ராகுல் மகாஜனைக் கைகழுவிவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


ராகுல் மகாஜனைப் போல உல்லாசம் ஊதாரித்தனத்தில் திளைக்கும் இளம் தலைமுறையை அனைத்து ஓட்டுக்கட்சிகளிலும் காண முடியும். அந்நிய நாட்டுப் பெண் ஒருவருடன் இலண்டனில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, திடீரென அரசியலுக்கு இழுத்து வரப்பட்டு, எம்.பி. ஆக்கப்பட்டார்.

இறந்து போன பிஜு பட் நாயக்கின் மகன் என்ற ஒரே தகுதியின் காரணமாக ஒரிசாவின் முதல் அமைச்சர் ஆக்கப்பட்ட நவீன் பட்நாயக், மாலை நேரமானால், தனது நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குடியும் கும்மாளமுமாகப் பொழுதை ஓட்டுவார்.


தில்லியில் உள்ள ஒரு மதுபான விடுதியில், நள்ளிரவு நேரத்தில் தனக்கு ""தண்ணி'' ஊத்தி தர மறுத்ததற்காக ஜெஸிகா லால் என்ற பணிப்பெண்ணைப் பலர் முன்னிலையில் சுட்டுக் கொன்றான், சண்டீகர் நகர காங்கிரசு தலைவராக இருந்த வினோத் சர்மாவின் மகன் மனுசர்மா.

முலயம் சிங் யாதவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் மீது, ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால்தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ராகுல் மகாஜன் விவகாரத்தை ""செண்டிமெண்ட்'' கலந்து முடித்து விடுவதில் ஒன்றாக நிற்கின்றன.


பரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி); ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் (காங்கிரசு); விஜயராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் (பா.ஜ.க.); முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் (தி.மு.க.) என ஒரு பெரிய இளைய தலைமுறை பட்டாளம், ஓட்டுக்கட்சிகளிலும் அரசாங்கத்திலும் அதிகாரமிக்க பதவிகளில் திணிக்கப்பட்டுள்ளனர்.

திராவிடம், தேசியம், பொதுவுடைமை, ஜனநாயகம் என ஏதாவதொரு கொள்கை, தத்துவம், கோட்பாடு அடிப்படையில் தமது அரசியல்வாழ்வைத் தொடங்கிய பழைய தலைமுறை, சுயநலம், பிழைப்புவாதம், இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், பொறுக்கி அரசியல் என்ற சீரழிந்த பண்புகளோடுதான் ஓய்வு பெறுகிறது. தரகு முதலாளிகளான ராகுல் பஜாஜ், அனில் அம்பானி, விஜய் மல்லையா மற்றும் 220 கோடி ரூபாய் குடும்பச் சொத்து கொண்ட அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் போன்ற கோடீசுவரர்களைக் கூட எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும் அளவிற்கு ஓட்டுக்கட்சிகள் கொள்கை, கோட்பாடு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டன.


புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் கூட்டம் இச்சீரழிவுகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக தலை எடுக்கவில்லை. மாறாக, இச்சீரழிவுகளின் பக்க விளைவாக அரசியலில் நுழைந்திருக்கிறார்கள் அல்லது திணிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இவர்கள் எந்தவித சமூக விழுமியங்கள், மதிப்பீடுகள், ஒழுங்குமுறைகளையும் அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அதனால், இப்புதிய இளந்தலைமுறை அரசியல் தலைவர்கள் ஏகாதிபத்திய ஒட்டுண்ணிச் சுரண்டலையும், அடக்குமுறையையும் மட்டுமல்ல் ""டிஸ்கொத்தே'' பண்பாட்டையும் நியாயப்படுத்துவார்கள்.



மு செல்வம்

Wednesday, September 26, 2007

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! - தோழர்.மருதையன்

[VZ-480.jpg]









தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்!தோழர்.மருதையன்





பகுதி - 01






பகுதி - 02






பகுதி - 03





பகுதி - 04



Tuesday, September 25, 2007

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்!!

பார்ப்பன பாசிசத்திற்கெதிராக மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்

செப்டம்பர் 27ம் தேதி நடத்தும் தமிழகம் தழுவிய

ஆர்ப்பாட்டம்!!


[VZ-480.jpg]


[RSS1.jpg]



தமிழகமும் சோதனைச்சாலை தான் !


காவி டவுசர் கிழிஞ்சி போச்சி டும் டும் டும் டும்


அத்வானிக்கு அஞ்சு பைசா, ராம கோபாலனுக்கு '0' பைசா!!




குஜராத் மக்களின் நேருரை





பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்


அசுர கானம்


காவி இருள்



மனுசங்கடா



குஜராத் படுகொலையைக் கண்டித்து–தோழர்.மருதையன்


பாகம் -1


பாகம் -2



சாதி - தீண்டாமை ஒழிப்பு -தோழர்.கதிரவன்





களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை- திரு.தண்டபாணி





கருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் -- திரு.தண்டபாணி





கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவது- தோழர்.கதிரவன்






தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! - தோழர்.மருதையன்


பாகம் 1


பகுதி - 01





பகுதி - 02




பாகம் 2


பகுதி - 01




பகுதி - 02




இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை...பெரியார்தாசன்


பாகம் 1


பகுதி - 01




பகுதி - 02


பாகம் 2


பகுதி - 01





பகுதி - 02




நாட்டார் தெய்வ வாழிபாட்டின் பார்ப்பனமயமாக்கம் - சிவகுமரன்


பகுதி - 01





பகுதி - 02




இறுதித் தீர்ப்பு: குஜராத் படுகொலை:

ஆவணப்படம்


நரேந்திர மோடியே ஒரு "தேசிய" அவமானம்


காஞ்சி மடத்தின் வரலாறு

பொய்யிலே பிறந்தது


ஜெகத்துரு

ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி


காம கேடிகள்


பார்த்துப் போங்கோ...

அது ... அவாள் எடம்!


ஜெயேந்திரரின் ஜெயில் விஜயம்:

கல்கியின் அருள்வாக்கு!


ஆன்மீகத்துல இதெல்லாம் சகஜம்ப்பா!


சங்கராச்சாரியா நீதிபதி?


பார்ப்பனப் பத்திரிகைகள்:

சங்கரமடத்தின் நாடித்துடிப்பு!

வே.மதிமாறன்


காஞ்சி மடத்தின் வரலாறு

பொய்யிலே பிறந்தது


அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் மட்டும் போதுமா? சாதி ஒழிப்புப் போராட்டம் வேண்டாமா?


திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் - திருவாசகம் பாடத் தடை

மனுநீதித் தீர்ப்பு


சாதி ஆட்சிக்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சி


பார்ப்பனத் திமிருக்கு எதிராக கலகத்தில் இறங்கிய புரட்சிகர அமைப்புகள்


இந்து மதவெறியின் பரிணாமம்: அன்று சோமபானம்! இன்று கோகெய்ன்!


தீண்டாமை பார்ப்பன இந்துக் கோயில்கள் மையங்கள்!



Monday, September 24, 2007

ஜே.வி.பி முதலாளித்துவக் கட்சியே

பி.இரயாகரன்
24.09.2007


டைந்தெடுத்த பிற்போக்குவாதக் கட்சி தான் ஜே.வி.பி. தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் இயங்குகின்ற, சுரண்டும் வர்க்க நலனுக்கான உழைக்கின்ற கட்சியே ஜே.வி.பி. இதை நாம் இரண்டு பிரதான கூறுகளிலும் இனங காணமுடியும்.

1. இலங்கை தொழிலாளார் வர்க்கத்தின் கடமைகள் என்ன என்பதில், ஜே.வி.பி நிலைப்பாடுகள் சார்ந்து காணமுடியும்.

2. சமூக ஒடுக்குமுறைகள் மீதான ஜே.வி.பி யின் அரசியல் செயல்தளம் மீதும் இனம் காணமுடியும்.


இலங்கை தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள் என்ன?


தனது சொந்த பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுவதற்காக, ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிவது தான், அதன் அரசியல் கடமையாகும். அந்த வகையில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து கிளர்ச்சிகரமாக புரட்சி செய்யவேண்டும். இதைவிடுத்து, திடட்மிட்ட அரசியல் சதிகளை செய்வதல்ல. மக்கள் தான் தமது புரட்சியை செய்யவேண்டும். மக்களை அதனடிப்படையில் அணிதிரட்ட வேண்டும். இதையா ஜே.வி.பி செய்கின்றது ?


ஜே.வி.பி என்ன செய்கின்றது. தூக்கியெறிய வேண்டிய முதலாளித்துவ அரசுடன் அரசில் பங்கேற்கின்றது. சொந்த முரண்பாட்டுடன் வெளியில் இருந்து அரசை ஆதரிக்கின்றனர். அரசின் பெரும்பாலான பல்வேறு நடவடிக்கைக்கு துணை போகின்றது. அதேநேரம் ஒரு மாற்று எதிர்கட்சியாக முரண்படுகின்றனர். பாட்டாளி வர்க்கம் தூக்கியெறிய வேண்டிய வர்க்கத்துடன், கூடி அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். பாட்டாளி வர்க்க கிளர்ச்சிக்கான, ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதில்லை. மக்களை கீழ் இருந்து அவர்களின் அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் அணி திரட்டுவதில்லை. மாறாக மேல் இருந்து அரசியல் சதி செய்கின்றனர்.


கட்சித்திட்டம் முதல் யுத்த தந்திரம் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டது. இனவாதத்தின் பின் அமைப்பாக அணிதிரளும் இந்தக் கும்பல், புத்த மதவாதத்தின் பின்னால் ஓட முனைகின்றனர். ஆட்சியை மேல் இருந்து கைப்பற்ற, அனைத்து மக்கள் விரோத சக்திகளுடனும் ஜக்கிய முன்னணி கட்டுகின்றனர்.


இந்த லாவணி அரசியல் நடத்தும் ஜே.வி.பி, பாட்டாளி வர்க்கத்தின் எதிரியை சார்ந்த அரசை சதிசெய்து கைப்பற்ற முனைகின்றனர். மறுபக்கத்தில் இலங்கை உலகமயமாக்கலில் வேகம் பெற்று செல்லுகின்றது. அதற்கு துணையாகவே இப்படியாக ஜே.வி.பி ஆதரவு வழங்குகின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள், அன்றாடம் வாழ்வு இழந்து போகின்றனர். ஜே.வி.பி ஆதரிக்கும் அரசு சப்பித் துப்பும் மக்கள், அநாதரவாகி நிற்கின்றனர். ஜே.வி.பி இதற்காக அந்த மக்களை அணிதிரட்டி போராடுவது கிடையாது.


தாம் அரசை கைப்பற்ற, ஜக்கிய முன்னணி அமைத்து நெகிழ்ச்சியாக விடையங்களை கையாளுகின்றனராம். யாருக்காக? எந்த மக்களுக்காக அரசை கைப்பற்ற போகின்றனர்? அந்த மக்களின் அரசியல் கோரிக்கைகள் என்ன? எதுவுமில்லை, சதியை சொந்த நலனாக வைக்கின்ற ஒரு சதிகாரக் கும்பல் தான் ஜே.வி.பி.


இந்த ஜே.வி.பி ஆதரவுடன் ஆட்சி அமைத்த காலத்தில், நாட்டின் நிலைமை என்ன? 1978 ஆம் ஆண்டில் இலங்கை வாழ் மக்களின் கடன் நபருக்கு 2181 ரூபாவாக மட்டும் இருந்தது. இது 2002 இல் 77500 ரூபாவாக இருந்தது. இது 2004 ஆம் ஆண்டில் 96,813 ரூபாவாகவும், 2007 இல் இறுதியில் 153,280 ரூபாவாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருபுறம் திறந்த பொருளாதார கொள்கை அதாவது உலகமயமாதல், மறுபுறம் யுத்த பொருளாதார கொள்கை என இரண்டையும் ஜே.வி.பி என்ற முதலாளித்துவ இனவாதிகள் ஆதரிக்கின்றனர்.


உண்மையில் இந்த கடனோ பிரமிப்பை ஊட்டக்கூடியது. இலங்கை செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டுக் கடன்


1999 65,451.4 கோடி ரூபா

2000 72,207.9 கோடி ரூபா

2001 79,591.8 கோடி ரூபா

2002 84,061.9 கோடி ரூபா


இவை ஜே.வி.பி அரசியல் காலத்திலும் தொடர்ந்து நடக்கின்றது. 1988 இல் இலங்கையின் வெளிநாட்டு கடன் 11430 கோடியாகவே இருந்தது. வட்டி கடன் மீளமைப்பு ஏற்றுமதி வருமானத்தில் 28 சதவீதமாக மாறியது. 2001 இல் வட்டிக்காக மட்டும், இலங்கையில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாவுக்கும் 25 சதத்தையும் கட்டத் தொடங்கினர். இதுவே 2002 இல் 35 சதத்தையும் கட்டும் நிலைக்கு இலங்கைத் தேசியம் மறுகாலனியாகியது. உள்நாட்டு கடன் மற்றும் மீள் அளிக்கப்பட வேண்டிய வட்டியும் 27500 கோடியாக அதிகரித்தது. இந்தளவு நடக்கின்ற போதும், ஜே.வி.பி என்ன செய்கின்றது. வர்க்கப் போராட்டமா செய்கின்றது. இல்லை. அரசுடன் கூடிக்குலாவி விபச்சாரம் செய்கின்றனர். அரசியல் சதி செய்து ஆட்சியைக் கைப்பற்ற முனைகின்றனர். கடனை ஒருவகையில் பெருக்கும் யுத்தத்தை ஊக்குவிக்கின்றனர். யுத்த செய்ய பணம் வேண்டும். அதை ஜே.வி.பி உழைத்தா கொடுக்கின்றது. நாட்டை விற்று யுத்தம் செய்வதை ஆதரிக்கின்றனர். மக்கள் பட்டினி கிடந்து கடனையும், வட்டியையும் கட்ட வேண்டும் என்பது ஜே.வி.பி கொள்கை. ஜே.வி.பியின் இந்தக் கொள்கையால் பாட்டாளி வர்க்கம் தான் துன்பப்படுகின்றனர்.


இந்த வழியில் தான் பாட்டாளி வர்க்க புரட்சியை ஜே.வி.பி நடத்துகின்றது. உலகமயமாதல் இலங்கையை சூறையாடி வருகின்ற நிலையில், ஜே.வி.பி கண்டும் காணாத ஆதரவுடன் அதை அனுமதிக்கின்றனர். பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்தால் தானே, அதற்கு எதிராக அது போராடும்.


புலியொழிப்பு பெயரில் தமிழரை ஒடுக்கும் பேரினவாத யுத்தத்தை ஆதரிக்கும் ஜே.வி.பி, அதற்காக நாட்டை விற்றாலும் பரவாயில்லை என்ற வக்கிரமான நிலை. இன்று இதன் மீது மகிந்த குடும்ப சர்வாதிகாரம் நிறுவப்படுகின்றது. அது புலியொழிப்பு என்ற போர்வையில் நடக்கின்றது. அதையும் ஆதரிக்கின்றது. ஜே.வி.பி. கடைந்தெடுத்த அரசியல் போக்கிரிகள் என்பதைத் தவிர, வேறு எதுவும் அவர்களிடம் கிடையாது.


அன்னியனோ உல்லாசமாக நாட்டினுள் புகுந்து சூறையாடுகின்றான். 2001 இல் 8.2 கோடி டொலராக (அண்ணளவாக 820 கோடி ரூபா) இருந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள், 2002 23 கோடி டொலராக (2300 கோடி ரூபாவாக) அதிகரித்தது. இது 2003 இல் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 5000 கோடி ரூபாவாக இருந்தது. நாட்டில் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் 2003 இன் கடைசிப் பகுதியில் 290 கோடி அமெரிக்க டொலராக (அண்ணளவாக 29000 கோடி ரூபாவாக) அதிகரித்தது. 2004 இறுதியில் 300 கோடி அமெரிக்க டொலராக (அண்ணளவாக 30000 கோடி ரூபாவாக) உயரும் என்று பெருமையுடன் அரசு அறிவித்து இருந்தது இந்தளவுக்கு நாடு சூறையாடப்பட்டு கொண்டு இருக்கின்றது. ஜே.வி.பி புலியை ஒழிக்கும் அரசுக்கு, காவடியாகி நிற்பதைத்தான் பாட்டாளி வர்க்க புரட்சி என்கின்றனர்.


இலங்கை ஏகாதிபத்தியத்தாலும், அதற்கு துணையான அரசாலும் சூறையாடப்படுகின்றது. ஜே.வி.பி பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கம்பளம் விரிக்கின்றது. 1970ம் ஆண்டு இலங்கையில் இருந்த 40 சதவீதமான காட்டுப்பகுதி இன்று 22 சதவீதமாக குறைந்து போனது. நாட்டில் மக்கள் ஒரு நேர உணவுக்கு உழைத்து வாழ முடியாது போய்விட்டனர். இதனால் 2001 இல் 12 லட்சம் பேர் அரபு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றனர். 1998 முதல் 2002 வரையான காலத்தில் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் அரபு நாட்டு தொழில் செய்யும் பெண்கள் 47800 கோடி ரூபாவை, மற்றவன் குண்டி கழுவி உழைத்தனர். இதுவே இலங்கை பிரதான முதல் வருவாயில் ஒன்றாகிவிட்டது. 1998 இல் இதன் மூலம் 7900 கோடி ரூபாவை திரட்டிய அரசு, 2002 இல் 12000 கோடியை திரட்டியது. இன்று 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றவனுக்கு குண்டி கழுவி வாழ்கின்ற வாழ்க்கை.


40 வருசமாக பாட்டாளி வர்க்க புரட்சி நடத்துவதாக கூறும் ஜே.வி.பி காலத்தில், நாட்டை மூலதனம் சூறையாடுவதை இப்படி பட்டியல் இடமுடியும். இதை மாற்றும் புரட்சிகர நம்பிக்கையைக் கூட ஜே.வி.பி உருவாக்கியது கிடையாது. எந்த புரட்சிகர அரசியல் முன்முயற்சியைத் தன்னும் உருவாக்க முனையவில்லை.


மாறாக சிவப்புக் கொடியையும், தலைவர்களின் படத்தையும், புரட்சிர வசனங்களையும் கொண்டு பம்மாத்துகின்ற பம்பல்களை கடைவிரிக்கின்றனர். இது பாட்டாளி வர்க்க புரட்சியாகிவிடாது. மாறாக இலங்கையில் ஜே.வி.பி மூலம், முதலாளித்துவ சூறையாடலுக்கு உதவும் நவீன கருவிகள் தான் இவை.

Sunday, September 23, 2007

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

பி.இரயாகரன்
23.09.2007

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,



தனது வானொலிப் பேட்டி ஒன்றில் 'தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் - தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?" என்று புலம்பியுள்ளார். புலிகள் சந்திக்கும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீளும் நப்பாசை, இதில் பிரதிபலிக்கின்றது. இதனால் அனைத்து புலி ஊடகங்களும், இதனை முதன்மை கொடுத்து பிரசுரித்துள்ளனர்.

ஆனால் நிலைமை என்ன? மக்களுக்கு எதிரானவர்களை, மக்களே தோற்கடிக்கின்றனர். இதுதான் நடக்கின்றது. இதனைக் கூட புலிகளால் உணர முடியாதளவுக்கு, புலியிசம் பிரபானிசமாகி எங்கும் எதிலும் புளுக்கின்றது.

இப்படி புலியிசம் தனக்குள்ளாகவே, அழுகி நாறுகின்றது. மறுபக்கத்தில் மக்களே தமது சொந்த வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கின்றார்கள். இந்த வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிணநாற்றத்துடன் கூடிய சொந்த மரணத்தை கண்டு, புலிகள் உளறத் தொடங்குகின்றனர். தனது புலியிசத்தை தாமே வலிந்து நடுச் சந்தியில் நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க அலம்புகின்றனர்.

புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய இந்த புலியிச நெருக்கடிகளை களைவதற்கு, புலியிசம் முனையவில்லை. மாறாக அதை பாதுகாக்க, புறநிலை மாற்றத்தைப் பற்றி கனவு காண்கின்றனர். தமது எதிர்கால மரணத்தை, புறநிலை மாற்றம் தடுக்கும் என்ற சுயநம்பிககையை கனவாக காண்கின்றனர். அதை நிகழ்காலத்தில் சொல்லி, ஒப்பாரியாகவே புலம்புகின்றனர்.

புலிகள் தொடர்ச்சியாக சந்திக்கின்ற அரசியல் இராணுவ நெருக்கடிகள், அகநிலை சார்ந்ததே ஒழிய புறநிலை சார்ந்ததல்ல. அகநிலையில் மாற்றமின்றி, புற நிலையில் எந்த மாற்றமும் நிகழாது. இந்த அரசியல் உண்மையை மறுக்கும் புலி யோகி, புறநிலை மீது அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஒடக் கோருகின்றார். அக நிலையை பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை தான், இதில் உள்ள வேடிக்கை. இப்படி வித்தை காட்டி, முக்கி முனங்கியாவது ஈன வேண்டும் என்கின்றார். தாய் மரணித்தாலும், முண்டத்தை ஈனுவது முக்கியம் என்கின்றார்.

போராட்டத்தின் பெயரில் ஆயிரம் ஆயிரம் மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு, புலியிசத்தை அனைத்தையும் தூக்கிவைத்து வேடிக்கை காட்டமுனைகின்றனர். பாவம் யோகி, தானே தனக்கு ஊதி, தானே ஆடும் நம்பிக்கை. அதை அவர் கூறும் விதம் தான் நகைச்சுவையானது. 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்கின்றார். அனைத்தையும் தலைவரின் மீது பொறுப்பாய்ப் போட்டுவிட்டு, மறுபடியும் தப்பி ஒடிவிடுகின்றார். ஒரு அரசியல் வழி, அரசியல் நம்பிக்கை என்று எதையும் முன்வைத்து, மக்களை அகவழி சார்ந்து வழிகாட்ட முடிவதில்லை.

சரி 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்று கூறும் இந்த யோகி, கடந்த காலத்தில் எப்படி புலிகளில் இருந்து காணமல் போனார்? அன்று அவரை வழிநடத்திய தலைவர் மாத்தையாவுக்கு அரசியல் எடுபிடியாகி திரிந்த, அந்த அன்றைய நம்பிக்கைகள் என்னவாயிற்று! மாத்தையாவின் கால்களைச் சுற்றியதால், புலிகளின் வதை முகாம்களைத் தரிசித்து, அதைத் தாண்டி புனர்ஜென்மம் பெற்று வந்த வேகத்தில் புலம்ப வைக்கின்றது.

எந்த நம்பிக்கையும், எந்த முன் முயற்சியும், புலிகளின் உள்ளான ஒரேயொரு அகமாற்றத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு மட்டும் தான் சாத்தியம். ஆனால் அது புலியிச வரலாற்றில் இனியும் எப்போதும் நிகழாது. புலியிசம் என்பது மக்களுக்கு எதிராக மட்டும் தான், நிலைபெற்று நீடிக்க முடியும் என்பதால், மாற்றம் என்பது இனியும் நிகழமுடியாது. புலியிசத்தின் முடிவுதான் அதன் வரலாறாக மாறும்.

இந்த நிலையில் எந்த மாற்றமும் புறத்தில் நிகழ்ந்தாலும், புற மாற்றங்கள் புலியிசத்துக்கு எதிரானதாகவே செயல்படுமே ஒழிய, சார்பாக மாறாது. சார்பாக மாற்ற, புலிகளுக்கும் மக்களுக்கும் எந்த அரசியல் பொருளாதார உறவும் கிடையாது. புலிகள் தமது எதிரியாக, மக்களை நிறுத்தி வைத்து, அதையே அரசியல் செய்வது தான் புலியிசமாகும்.

இந்த நிலையில் யோகி 'புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது என்னவெனில், நாங்கள் உதவுவோம், தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது. நாங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும். இந்நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அதில் தெளிவாக இருக்க வேண்டும். எங்களுக்குரிய பணி என்னவென்று சொன்னால் அங்கு போராடுகின்ற நோக்கம் இதுதான். எங்களுடைய குறிக்கோளில் தடம்புரண்டதில்லை." மக்களையே வெறுக்கின்ற, சதா வெறுப்பேற்றுகின்ற புலியிச குறிக்கோள் தான் என்ன? மக்களின் சமூக பொருளாதார வாழ்வாதாரங்களுக்கும், புலிகளுக்கும் என்ன அரசியல் பொருளாதார உறவு உண்டு. மக்களின் குறிக்கோள் வேறு. புலியின் குறிக்கோள் வேறு. இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டமுடியாதவை.

இப்படி தடம் புரண்டு வெகுதூரம் சென்றுவிட்ட வண்டியை, மீளவும் தண்டவாளத்தில் ஏற்றமுடியாது. ஏன், அதை மீள ஏற்றவே புலிகள் அனுமதிப்பதில்லை என்பதில் உள்ள குறிக்கோளில் மட்டும், அவர்கள் தடம் புரளாது ஒட முனைகின்றனர். இது அவர்களின் சொந்த அழிவு வரை என்பதில், அவர்கள் தடம் புரண்டது கிடையாது.

'தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது." என்கின்றனர். இப்படி மக்களா சொன்னார்கள். இல்லை. நீங்கள் தான் தோற்றவனுக்கு உதவக் கூடாது, என்று சொல்லி வந்தீர்கள். ஏன் இதை இப்போது மறந்து போனீர்கள்? தோற்றவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை என்று கூறியவர்கள் யார்? நீங்கள் தான். கிட்லர் பாணியில் கூறியவர்கள் நீங்கள். இப்படி வரலாற்றையே மாற்றி எழுதியவர்கள் நீங்கள். வெற்றி என்று கூறி, அனைத்தையும் துடைத்தெறிந்தீர்கள். உங்கள் தோல்விகளை, அழகாக பூசி மொழுகினீர்கள். பாட்டுப் பெட்டியை அலறவிட்டு, அதை மட்டும் கேள் கேள் என்றீர்கள். இன்று, வெடிச் சத்தமும் பிணமும் இன்றி, எந்த வீட்டுச் சோறும் அவியமாட்டேன் என்கின்றது. பிணத்தை அறுத்து, அதையே அவித்து அவித்து கொட்டி என்ன பயன். அதுவே வினையாகி உங்களுக்கு எதிராக எழுந்து நிற்கின்றது. அனைத்தும் பொய்யும் போலியுமாகி நிற்கின்றது.

இந்த நிலையில் நீங்கள் கூறகின்றீர்கள் 'நாங்கள் எவ்வளவுக்களவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும்." என்கின்றீர்கள். சரி அந்த 'அவர்கள்" யார்? 'எங்களுடன்" என்ற நீங்கள் யார்? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன அரசியல் உறவு உண்டு? சரி, ஏன் அந்த 'அவர்கள்" உங்களுடன் 'உறுதியாக இருக்க வேண்டும்? சதா 'அவர்களுக்கு" எதிராக செயல்படும் நீங்கள், அவர்களை உறுதியாக எம்முடன் இருக்கவேண்டும் என்பது அரசியல் வேடிக்கை தான்.

மறுபக்கத்திலோ மக்கள் உங்களுடன் உறுதியாக நிற்கின்றனரா என்பதற்கு முன்னர், உங்களால் அப்படி நிற்க முடியுமா என்று அரசியல் ரீதியாக பாருங்கள். எங்கே உங்கள் கடந்தகால வீம்புகள் எல்லாம் ஓடி ஒளித்துவிட்டது. ஏன் சவக்களை அடிக்கின்றது? அரசியல் என்பதை அடிதடியாக்கினீர்கள். நாலு சொற்களில் அரசியல் செய்தீர்கள். இதைச்செய்த பலர் காணாமல் போகின்றனரே, ஏன்? கோட்டை கொத்தளங்களாக உருவான பிரமைகளும் நம்பிக்கைகளும், மணல் மேடாக சரிந்து வீழ்கின்றனவே ஏன்? உங்கள் உறுதியெல்லாம் இப்படிப் பொலபொலவென சிதைந்து போனது ஏன்?

இதை சிந்திக்கும் ஆறாவது மனித அறிவு புலியிசத்திடம் கிடையாதா? நீங்கள் ஆறறிவற்ற புலியாகத் தான் இருக்க விரும்புகின்ற வீம்புத்தனம் தான், உங்களையே இன்று ஓடவைக்கின்றது. வன்முறையை நம்பி, கொள்ளையை ஆதாரமாக கொண்ட, கோட்பாடற்ற வெறும் நம்பிக்கைகள் எதையும் பாதுகாக்காது. சொந்த அமைப்பே கண் மண் தெரியாது ஓடத் துவங்கி விடுகின்றது.

நம்பிக்கை என்றால், எதன் மீது நம்பிக்கை? எதன் மீது தான், மக்களை உறுதியாக நிற்கக் கோருகின்றீர்கள்? இன்று எப்படி கடந்தகால தியாகங்கள் தூற்றப்படுகின்றதோ, அப்படி எல்லாம் தியாகங்களும் தூற்றப்படும். இது இந்த புலி அரசியல் உள்ளடகத்தில், பொதிந்து காணப்படுகின்றது. உங்கள் முன்னாள் குரு மாத்தையா கதை, இப்படித் தான் இன்று உங்களால் தூற்றப்படுகின்றது. உங்களுடன் காலாற நடந்த கருணா கதியும் அது தான். போற்றுவதும், தூற்றுவதும் அக்கம்பக்கமாகி அரசியலாகிவிடுகின்றது. நாளை முழுப்புலிகளின் தியாகத்தையும் தூற்றுவது கூட, உங்களால் மட்டுமே சாத்தியமானது. அதுவே உங்கள் கடந்த காலம். இப்படியான அரசியல் வங்குரோத்து புலியின் உள்ளேயே, அனைத்தையும் செயலற்றதாக்கின்றது.

அதை பிரதிபலித்த யோகி கூறுகின்றார் 'பொதுவாக மனித இயல்பு எப்படிப்பட்டதென்றால், வெற்றிகளைக் கண்டு பூரிப்பதும், தோல்விகளைக் கண்டு துவளுவதும்தான். இந்த இயல்பு பொதுவானது. இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்ற மனிதர்கள், இதனையெல்லாம் பொதுவாகப் பார்க்கின்ற மனிதர்கள், தெளிவான பார்வை உடையவர்களுக்கு நம்பிக்கையூட்டி, தொடர்ச்சியாக அவர்களது பங்களிப்புக்கு உற்சாகமூட்டி, தொடர்ந்து செயற்பட வேண்டிய சூழல்தான் இருக்கிறது. அதாவது வெற்றியின்போது பலர் கூட இருப்பார்கள். தோல்வியின்போது ஒருவரும் உடன் இருக்கமாட்டார்கள் இதனைப் பலமுறை சந்தித்திருக்கிறோம்." ஏன் உடன் இருக்க மாட்டார்கள்? இந்த கேள்விக்கு புலியிசம் பதிலளிக்காது, பதிலளிக்க முடியாது. வெற்றியும் தோல்விகளும் அந்த மக்களுடையதாக இருக்காத வரை, அது தாம் அல்லாத அன்னியனுடையதாக பார்க்கப்படும். இதில் சம்பந்தப்படாத மக்கள், அதில் இருந்து ஒதுங்கிச் செல்வது இயல்பு. வெற்றியும் சரி, தோல்வியும் சரி, மக்களின் சொந்த வாழ்வுடன் தொடர்பற்ற ஒன்றாக இருப்பதன் மொத்த விளைவு இது.

இந்த நிலையில் வெற்றி பெறும் போது யார் குதூகலிக்கின்றனர்? இதன் மூலம் இலாபம் பெறுபவர்கள் தான். தோல்வி பெறும் போதோ, சுயநலத்துடன் அதைவிட்டுவிட்டு தப்பி ஒடுகின்றார்கள். புலியிசத்தின் பின் உள்ளவர்கள் சுயநலப் பேர்வழிகளே. ''உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்ததே" என்ற உங்கள் சொந்த விதிக்கமைய ஒடுகின்றனர். தப்பமுடியாது அகப்பட்டவன் மட்டும், தொடர்ந்து இப்படி உளறமுடிகின்றது. சுயநலத்தை அடிப்படையாக கொண்ட புலியிசம், மக்களின் இயக்கமல்ல. இதற்கேற்ற சுயநல இயக்கம் தான், புலியிசம். மக்கள் இதில் சம்பந்தப்படாத வகையில், இதையொட்டி வாழ்கின்றவர்களாகவும், ஒதுங்கி வாழ்கின்றவர்களாகவே உள்ளனர். கணிசமானவர்கள் பொழுதுபோக்க கொசிப்பதன் மூலம், இதையொட்டி வம்பளந்து காலத்தை கழிப்பவர்கள். தோல்வி ஏற்படும் போதும், அதையும் தூற்றி, பொழுது போக்குபவர்களும் இவர்கள் தான். இப்படித்தான் இந்த இயக்கம் உள்ளது.

இப்படிப்பட்ட இயக்கத்தில் நம்பிக்கையூட்ட, அகநிலையாக மக்களை அரசியல் ரீதியாக அணுகுவதில்லை. மாறாக புறநிலையை நம்பக் கோருகின்றனர். 'அதனால் அனைத்துலக ரீதியாக அரசு மட்டங்களிலும், மக்கள் மட்டங்களிலும் ஒரு விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இது தொடர்பான சில கருத்துருவாக்கங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால் அவையெல்லாம் செயல்வடிவம் பெற வேண்டும். முன்பைவிட அனைத்துலகம் என்பது தமிழ் மக்கள் விடயத்தில் ஆழமான ஒரு விழிப்புணர்வை இப்போது பெற்றுள்ளது என்பது உண்மை. அது ஒரு முழுமையான விழிப்புணர்வு பெற்ற நிலைமைக்கு அப்பாற்பட்டு செயற்படுமானால், நாங்கள் போராடத்தான் வேண்டும். அதற்குப் பக்கபலமாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களும் நிற்கத்தான் வேண்டியிருக்கும்." என்ன அறிவுசார் அரசியல்! புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் போதான மனித அழிவுகளையும் சிதைவுகளையும் காட்டி, ஏகாதிபத்தியம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. அதைத் தான் புறநிலை மாற்றமாக புலிகள் காண்கின்றனர். சொந்த மரணத்தைக் கூட, அரசியலாக காட்டி ரசிக்கின்ற மனவிகாரங்கள். ஏகாதிபத்தியம் வடிக்கும் முதலைக் கண்ணீரை, ஆறாக மாற்றிவிட முடியும் என்று புறநிலை மீது நம்பிக்கை ஊட்டுகின்ற விபச்சாரங்கள். புலிகள் இந்தக் கற்றுக்குட்டித்தனத்தையே அனைவரையும் நம்பக் கோருகின்றனர். ஏகாதிபத்தியம் என்பது ஏகாதிபத்தியம் தான் என்பதையே, இது மறுக்கின்றது.

ஏகாதிபத்தியத்தை ஏகாதிபத்தியமாக அறிவித்து, மக்களின் தேசியத்தை முன்னெடுக்க மறுக்கின்றவர்களின், வரட்டுத்தனமான குளறுபடிகள் இவை. ஏகாதிபத்தியத்துக்கு தொண்டூழியம் செய்து, தமிழ் தேசியத்தின் உண்மைத்தன்மையை அழிக்கின்ற வழியில் தமிழ் மக்களை விபச்சாரம் செய்யக் கோருகின்றனர். புலிகள் அழியும் போது ஏற்படும் மனித அழிவுகளையே, மூலதனமாக்கி புலிகள் பிழைக்க முடியுமா என்று பாருங்கள் என்பதை இது கோருகின்றது.

இப்படிப்பட்ட நிலையில் புலியிசத்தால் எதையும் தன்னளவில் நம்பிக்கையைக் கொடுக்க முடியவில்லை. அதை 'காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை" என்கின்றனர். தீர்க்கதரிசனமிக்க வழிகாட்டும் உங்கள் தலைவர் எங்கே? எல்லாவற்றையும், எல்லா நேரத்திலும் வழிகாட்டியதாக கூறிய தலைவருக்கே மொட்டை அடித்து, அதை 'காலமும் சூழலும்" என்று கூறும் காலகட்டத்தில் புலிகள் சரிந்து வீழ்ந்து நிற்கின்றனர். ஏன் இந்த நிலை? இதைவிட 'வேறு ஒரு வழியும் இல்லை" என்று புலியிசத்தால் ஒப்பாரிவைக்க முடிகின்றது.

இப்படி சிதைந்து சின்னபின்னமாக மாறும் புலிகள், தமது சொந்த சுயநலத்தையே உலக அரசியல் என்கின்றனர். 'உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்தே செயற்படும். தமிழர்களைப் பொறுத்தவரையில், எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் முழுமையான அர்ப்பணிப்போடு, அந்தப் போராட்டத்தினுடைய சரியான விடயங்களை தெளிவாகச் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும். அதில் இடையிடையே குழப்பம் இருக்கத் தேவையில்லை. இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" அரசியல் என்பதை சுயநலம் சார்ந்தது என்கின்றார். அரசு என்பது சுயநலம் சார்ந்தது என்கின்றார்.

இப்படி தியாகத்தையே கொச்சைத்தனமாக்குகின்றனர். அரசியலும், அரசும் சுயநலம் சார்ந்தது என்று கூறும் இவர்கள், தமிழ் மக்களுக்கும் இதைத் தான் சொன்னார்கள், செய்தார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான கொலைகள். தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வையே இதற்காக அழித்தனர். 'எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில்" என்று கூறுவது, புலியின் நலனைத்தானே ஒழிய, மக்களின் நலனையல்ல. இந்த சுயநலம் சார்ந்து 'நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம்". ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக் கூடாது என்கின்றனர். அதாவது 'அதனை ஒதுக்கி வைத்துவிட்டு" புலியின் சொந்த சுயநலத்துக்காக மக்கள் தியாகம் செய்து மாரடிக்கவேண்டும் என்றாகின்றது. மக்களாகிய நீங்கள் தியாகத்தை செய்யுங்கள், ஆனால் அதைக் குழப்பக் கூடாது என்கின்றனர். என்ன சுயநலம். புலியிசம் என்பது இதுதான் என்கின்றனர். 'இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை" என்கின்றனர். மக்களுக்காக பேசக்கூடாத புலியிசம், இதற்குள் இரண்டில் ஒன்று என்று எதுவுமில்லை. பின் நடுநிலையாவது மண்ணாங்கட்டியாவது.

'கொப்புத் தட்டுகின்ற வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டாம்" என்கின்றனர். கொப்புத்தட்டுவதல்ல மக்களின் வேலை. தமது வாழ்வுக்கு இடைஞ்சலாக உள்ள அந்த ஆலமரத்தையே அகற்றுவது தான். இந்த ஆலமரம் அமெரிக்காவாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி, மக்களுக்கு ஒன்று தான். 'கொப்புத் தட்டி" எதுவும் மக்களுக்கு சார்பாக மாறிவிடாது. 'கொப்புத் தட்டுகின்ற"தாக புலியிசம் எதை கருதுகின்றதோ, அதற்கு மாறாக கொப்புகள் தானாகவே உயிரற்றதாகி பட்டு ஒடிந்துகொண்டு இருக்கின்றன. இதனால் தான் 'காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை" என்று புலம்ப வேண்டியுள்ளது.

தமது இருப்பு சார்ந்த புலம்பலை 'தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரின் தொன்மையை, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினுடைய ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை கேள்விக்குறியின்றி வெளியிட வேண்டும். இந்த விடயத்தில் அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது" என்கின்றனர். யார் குழம்பியுள்ளனர் என்றால், அது புலிகள் தான். இதனால், அதென்ன எனத் தெரியாது பிரதிபலிக்கின்றது. 'தமிழ்த் தேசிய உணர்வு" தான் என்ன? 'தமிழரின் தொன்மை" என்ன? ' ஆழமான அர்ப்பணிப்பு உணர்வு " என்ன?

இதன் அரசியல் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? மக்களை அடக்கியொடுக்கி வாழும் புலியிசம், இதன் உணர்வை, உணர்ச்சியை நலமடிக்கும் பாசிட்டுகள் தானே. மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை மறுத்து, எந்த அரசியல் உரிமையையும் யாராலும் பெறமுடியாது. சுயநலம் தான் அரசியல், அரசு என்று விளம்பரம் செய்யும் புலியிசம், அந்தளவுக்கு மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். மக்கள் தான் தமது வரலாற்றை எழுதுபவர்களே ஒழிய, புலிகள் அல்ல. வரலாறு இதற்கு மாறாக தலைகீழாகி விடாது.

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்!

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்!

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், இந்துவெறி பார்ப்பன கும்பல் ""ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!'' என ஓலமிட ஆரம்பித்துள்ளது.

பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் போன்ற மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என இராமன் பாலம் விவகாரம் சூடேறியுள்ளது.


""தொன்மையான வரலாற்றுச் சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்'' என்று இல.கணேசன் மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பா.ஜ.க. அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறந்து விடவேண்டும்.

""ஆங்கிலேயர்கள் வரைந்த படங்கில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்'' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அ.தி.மு.க.தான், 2001 தேர்தல் அறிக்கையில் ""ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்'' என்று கூறியதை மறந்து விடவேண்டும்.

தயானந்த சரஸ்வதி எனும் இந்துவெறி சாமியார் ""ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்'' என்று சொல்கிறார். அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்? என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ""அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக் கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது'' என்கிறார்கள். நாசாவின் இணையதளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை; அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை எனச் சொன்னதையும், நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தான் என்பதையும் அவர்களிடம் யாரும் இடித்துரைக்கப் போவதில்லை.

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்? புஷ்பக விமானத்திலா?
அப்படியென்றால் அதிலேயே இலங்கைக்கும் சென்றிருக்கலாமே?""ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு'' என்று ஜெயாவும், பா.ஜ.க.வும் சொல்கிறார்கள். ஆனால், மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே! பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு "பழமையான' பாலத்தைக் காக்க, ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப் பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?

உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர்கள் ஜெயகரன், ""நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை, தீவாகிப் போனது'' என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்: குமரி நில நீட்சி, ஜெயகரன்).
இதேபோல ஆஸ்திரேலியாவுக்கும் பாப்புவாநியூகினி தீவுக்கும் இடையிலும் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியாவுக்கும் இடையிலும் நிலப்பகுதிகளை கடல் விழுங்கி வெண்மணற் திட்டுகள் அமைந்துள்ளன. அவற்றை எவரும் ராமன் பாலம் அல்லது இலட்சுமணப் பாலமாகக் கருதுவதில்லை.

இலட்சக்கணக்கான வருடங்கள் என்ன, 5000 வருடத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. அல்லது இதை நம்புபவன் கேணை.

பா.ஜ.க. உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா என்றால், இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டியதாகக் கூறப்படும் பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர, சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்க்கவில்லை. "எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் "எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ஃபேசன்' எனக் கூறும் இல.கணேசன் மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.

கருணாநிதி, தன் கூட்டணியை வைத்தே "சேது சமுத்திரத் திட்டப் பாதுகாப்புக் குழு' ஒன்றை உருவாக்கி, "சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே தி.மு.க. தனிநாடு கேட்டதாகவும், மைய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக் கேட்டதும், தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.

ராமதாசோ ""இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்'' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே ""உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால், இது போன்ற திட்டங்கள் அவசியம்'' என்கிறார்.

துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணினிகளால் இயக்கப்படுகின்றன. 1990களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்துவிட்டன.

கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஏற்கெனவே இருந்த வாழ்வை அழித்து விட்டு சேதுக்கால்வாய் மூலம் தொழில் பெருகும், வணிகம் பெருகும் என்று சொல்வதில் கடுகளவும் பொருளில்லை."தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லப்படும் சேதுசமுத்திரத் திட்ட கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ்காரன்தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி, அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை "தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப் புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை, இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது.

இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் ""சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும்; வணிகமும் தொழிலும் பெருகும்; அன்னிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகரிக்கும்; ஏற்றுமதி அதிகரிக்கும்; துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்'' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லி விடுகிறார்கள். சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹூண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.

உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப் பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்கவே ஓட்டுக் கட்சிகள், ராமன் பாலம் கட்டினானா? இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கியுள்ளன.· கவி