தமிழ் அரங்கம்

Saturday, December 8, 2007

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

பி.இரயாகரன்
08.12.2007

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர். எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

புலிகள் தோற்று வருகின்றனர் என்று நாம் கூறுவதை, துரோகமாக, எட்டப்பத்தனமாக வழமைபோல் காட்டுகின்றனர். இது எப்படி தோற்காமல் முன்னேறுகின்றது என்று அவர்களால், காட்ட முடியாதுள்ளது. புலிகள் எதைத்தான், தமிழ் மக்களுக்கு பெற்று தருவார்கள் எனக் கூட அவர்களால் கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட புலிப்போராட்டம் பல பத்தாயிரம் மக்களின் மனித உயிர்களை காவு கொண்டது. போராட்டத்தின் பெயரில், இரண்டு பத்தாயிரம் இளமையும் துடிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களை பெயரில் பலியிட்டுள்ளனர். புலியுடன் முரண்பட்டதால் இதேயளவு எண்ணிக்கை கொண்ட துடிப்பும் ஆர்வமும் தியாக உணர்வும் கொண்டவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றனர்.

இப்படி ஒரு சமூகமே புலியின் சொந்த நலன் சார் அரசியலுக்குள்ளான மதிப்பீட்டுக்குள்ளாகியது. துரோகி அல்லது தியாகி என்ற அரசியல் வரையறைக்குள் அனைத்தையும் வரட்டுத்தனமாக உள்ளடக்கினர். அதற்குள் தான் அவர்கள் போராட்டம் நடத்தினர். புலிகளின் குறுகிய அறிவுக்கு ஏற்ப, அவை மிக எளிய அரசியல் சமன்பாடாகியது. இப்படி அதன் அரசியலே குறுகிப்போனது.

இதுவே பின்னால் பணம் தர மறுத்ததால் துரோகியாகியது. போராட வர மறுத்தால் துரோகியாகியது. கேள்வி கேட்டால் துரோகியாகியது. கட்டாய இராணுவ பயிற்சிக்கு வரமறுத்தால் துரோகியாக்கியது. இப்படி அரசியல் மாபியாத்தனமாகி, துரோக தியாகி என்ற குறுகிய அரசியலுக்கு மேலும் வக்கிரமாகி வழிகாட்டியது.

இப்படி புலிகள் எதை விரும்பினரோ, அதற்கு மாற்றான அனைத்தையும் துரோகமாக்கினர். இதற்கு மரண தண்டனை வரை பரிசாக வழங்கினர். இப்படித் தான் இப்போராட்டம் படிப்படியாக தன்னைச் குறுக்கிய வட்டத்துக்குள் சுருங்கி வந்தது.

இதில் இருந்து மீள்வதன் மூலம் தான், தமிழ் மக்களுக்கு விமர்சனம் கிடைக்கும் என்பதே எமது ஆதங்கமான விமர்சனங்கள். இதைத்தான் இவர்கள் துரோகத்தனமாக காட்டுகின்றனர். இதன் மூலம் அரசியல் ரீதியாக தாம் நீடித்து விடலாம் என்று, மெய்யாகவே இவர்கள் நம்புகின்றனர்.

இது இயல்பாக புலிகளை ஆதரித்தால் அது தியாகம், புலிகளை எதிர்த்தால் அது துரோகமாகி விடுகின்றது. இது சமூகத்தின் மீதான, கொடுமையிலும் கொடுமையாகியது. புலிகள் கண் அசைவுக்கு இசையாத எதுவும், உயிர்வாழ முடியாத அவல நிலை. இப்படி இலகுவான அரசியல் வரையறை சார்ந்த வரட்டுக் கொடுமை. இப்படித் தான், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு புலிப்போராட்டம் வழிநடத்தப்பட்டது. இதற்குள் தான், புலிகளின் மொத்த அரசியல் வடிவமும் இயக்கப்படுகின்றது.

புலிகளின் சொந்த விருப்பங்கள் தான், தமிழ் தேசியமாக காட்டப்பட்டது. இதற்கு உட்படாத அனைத்தும் துரோகமாகியது. இப்படித் தான், இதற்குள் தான் புலிகளின் வரலாறு உருண்டது. இதை கண்காணிக்க, இதை நடைமுறைப்படுத்த படுகொலைகள், புலியில் நடைமுறை அரசியலாகியது. இதை நியாயப்படுத்தவே சொந்தப் பலியிடல். இதையே புலிகள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்றனர்.

இதற்கு ஆதரவை பெறுவதும், ஆட்களை திரட்டுவது என்பதும், இயல்பான சமூகத்தின் போராட்ட உணர்வில் செய்யப்படவில்லை. தேச மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளில் இருந்து செய்யப்படவில்லை. மாறாக தமது சொந்தக் கருத்தை ஒற்றைப் பரிணாமத்தில் திணித்து, தமது சொந்த புலி நலனை சாதிக்க முனைந்தனர்.

இப்படி மக்கள் நலன்கள் புலிகளின் நலன்களில் இருந்து வேறுபட்டதால் தான், கருத்து தளத்தை குறுக்கி கட்டுப்படுத்த வேண்டிய நிலை புலிக்கு ஏற்பட்டது. மக்களின் போராட்டத்தில் இருந்த புலிகள் அன்னியமாகிச் செல்ல, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை வெட்டியெறிந்தனர். மக்களோ கருத்துகளற்ற நடைப்பிணமாகினர்.

இப்படி சமூகத்தின் பன்மைத் தன்மையை அழித்து, ஒற்றைப் பரிணாமத்தில் மக்கள் முன் கருத்தைத் வரட்டுத்தனமாவே திணித்தனர். இப்படி மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை தம் பின்னால் வைத்துக்கொண்டு, வெம்பிய பிஞ்சுகளை உள்வாங்கினர். அறிவியல் ரீதியாக சமூகத்தில் சிந்தித்து செயலாற்ற முடியாத, கடைநிலையில் உள்ள சமூகப் பிரிவையே புலிகள் உள்வாங்க முடிந்தது. இதை வைத்து பிழைத்துக் கொள்ள விரும்பிய ஒரு அறிவுப் பகுதி இதை தனக்காக பயன்படுத்தியது.

இப்படி போராட்டம் மக்களில் இருந்து அன்னியமாகிய, படிப்படியாக ஒரு பிரிவின் குறுகிய சொந்த நலன் சார்ந்த போராட்டமாகியது. இதன் யுத்த தந்திரமும், பிரச்சாரத் தந்திரமும் என்பது, குறுகிய தமது இருப்பு சார்ந்த ஒன்றாகியது. இதுவே மிகமிக மலிவான அரசியலாகியது.

எதிரிகளைத் தாக்குவதும், எதிரி திருப்பி மக்களை தாக்குகின்ற போது அதை வைத்து அரசியல் செய்வதுமாக மாறியது. மக்களின் அரசியல் கோரிக்கைகள் எதுவும் இதற்குள் இல்லாத வகையில், போராட்டம் ஆழமாகவே ஒரு குறுகிய வழியில் குறுக்கப்பட்டது.

இப்படி மக்கள் தாம் போராடாத வகையில், புலிகள் அவர்களை கண்காணித்தக் கொண்டனர். மக்களை புலிகளின் வெறும் மந்தைக் கூட்டமாக்கினர். மேயவிட்டால் அதில் ஓடி மேயும் வகையில், மக்களின் உணர்வை உணர்ச்சியை மலடாக்கினர். மக்களின் உணர்ச்சியை தூண்ட எதிரி மீது தாக்குதலை நடத்தி, எதிரி மக்கள் மேல் தாக்குதலை நடத்துவதை உருவாக்கும் புலிகளின் குறுகிய யுத்த தந்திரம் அரசியலாகியது.

மக்களை அணிதிரட்டாத புரட்சி பற்றி பேசும், சேகுவேராவின் கோட்பாடுகளில் ஒன்றுதான் இது. இப்படித்தான், இதற்குள் தான் புலிகள் மக்களின் உணர்வை, உணர்ச்சியை அறுவடை செய்தனர். இப்படி புலிகள் மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியமாக்கினர். புலியின் செயலுக்கு ஏற்ப உணர்வும் உணர்ச்சியும் என்ற எல்லைக்குள், போராட்டம் கீழ் இறங்கியது.

மக்களை தமக்கு வாலாட்டவும், குலைக்கவும் பழக்கப்படுத்தினர். எந்த சுயமுமற்ற மக்கள் கூட்டத்துக்கு, வேடிக்கையும் வித்தையும் (இராணுவ சாகசங்களையும்) காட்ட வேண்டியிருந்தது. இராணுவம் மீதான தாக்குதல்கள் மூலம், ஊதிவிட்ட பலூன் போல் உணாச்சிவசப்படுத்தும் வித்தையை புலிகள் நடைமுறைப்படுத்தினர். மறுபக்கத்தில் தாக்குதல் இல்லாத போது, காற்றுப் போன பலூன் போல் உணர்ச்சியை இழந்து அது புலியை விராண்டுகின்றது.

இதில் உள்ள சோகம் என்னவென்றால், மக்கள் மட்டுமல்ல சொந்த புலிப் படையே இந்த நிலைக்குள் சோர்ந்து துவண்டு போவதுதான். புலியின் முன்னணி தளபதிகளுக்கும் இந்த கதி ஏற்பட்டுவிடுகின்றது. தலைவர் புலிகளின் தளபதிகளுக்கே எல்லாளன் படையைக் காட்ட வேண்டிய அளவுக்கு, நிலைமை நெருக்கடிக்குள்ளாhகியுள்ளது. தலைவர் தாக்குதலை நடத்தி தம் மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டியுள்ளது. இப்படி சொந்த புலித் தளபதிகளினதும், அணிகளினதும் நம்பிக்கையைப் பெற வேண்டிய அளவுக்கு அவலம். இதானாலேயே தாக்குதல்களை செய்து காட்ட வேண்டிய கட்டாய நிலை.

இப்படி புலிகளின் அரசியலே, இராணுவ தாக்குதல் தான். அதைச் சுற்றித்தான் புலிகள் உருவாக்கப்பட்டனர். அமைப்பையும், தன்னையும் பாதுகாக்க இராணுவத் தாக்குதல் என்ற குறுகிய எல்லைக்குள், இப்படி புலிகள் முடங்கிவிட்டனர். போராட்டம் இப்படி குறுகிய எல்லைக்குள் சிதைந்தது. இப்படியான நெருக்கடிக்குள் புலிகளும், புலிகளின் தலைவரும் சிக்கியுள்ளனர்.

மீள்வதற்கான தமது பாதைகள் குறுகி, அவற்றை தாமே மூடிவிட்டனர். இனி புலிகள் அரசியல் பேச முடியாது. இராணுவத்தைக் கொன்றும், மற்றவனைக் கொன்றும், அதையே அரசியலாக செய்யப் பழக்கப்பட்ட ஒரு இயக்கம், இயல்பாகவே தனிமைப்பட்டு விடுகின்றது. குறுகிய எல்லைக்குள் சுருங்கி, வெளிவர முடியாது தானாகவே மரணிக்கத் தொடங்குகிறது.

மக்களில் இருந்து அன்னியமாக, அது பணக்கார இயக்கமாகியது. பணத்தை குவிப்பதே, அதன் சொந்த அரசியல் இலட்சியமாகியது. இதனால் தன்னை ஒரு மாபியா இயக்கமாக வளர்த்துக் கொண்டது. இதன் மூலம் மக்களை சார்ந்து இருத்தல் என்பதற்குப் பதில், பணத்தை சார்ந்து இயங்குதல் என்ற வகையிலும் தன்னை மாற்றிக் கொண்டது.

இதற்கு ஏற்ப நவீன ஆயுதங்கள் புரட்சி செய்யும் என்பது புலிகளின் மற்றொரு அரசியல் சித்தாந்தம். இப்படி நவீன ஆயுதங்கள் கொண்ட தேசியத்தைக் கட்டினர். இதன் முன் மக்களோ அந்த நவீன ஆயுதங்களை வேடிக்கை பார்த்தனர். அதைப்பற்றி கதைத்தனர். நவீன ஆயுதங்கள் புரட்சி செய்ய, மக்களை வேடிக்கை பார்ப்பதன் மூலம் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்தனர்.

இப்படி குறுகிப்போன புலிகளின் அரசியல் மற்றும் யுத்த தந்திரத்ததை வரையறுத்துவிட முடியும். இதற்குப் பின்னால் மக்களின் அரசியல் உணர்வும், உணர்ச்சியும் கிடையாது. மக்கள் மந்தைகளாக, வேடிக்கை பார்ப்பவர்களாக வைத்துக் கொண்ட அடக்குமுறை தான், புலிப் போராட்டம். தமிழ் மக்களுக்கும் புலிக்குமான அரசியல் உறவு இதற்கு உட்பட்டது தான்

இப்படி கூனிக் குறுகிக் போன போராட்டமாகியது. இதற்கு மக்கள் அரசியல் கிடையாது. மக்கள் சார்ந்த நோக்கம் கிடையாது. இதுவே கடந்து போனதும், இன்றும் ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இதுவல்லாத சமூகத்தின் இருந்த அனைத்துக் குரல்களையும் வெட்டிச்சாய்த்தனர். கண்மூடித்தனமான அரசியல் படுகொலைகள் மூலம், சமூகத்தை இருண்ட சூனியத்துக்குள் தாழ்த்தி அடிமைப்படுத்தினர். தம்மை தாம், தமிழரின் ஏகப்பிரதிநிதிகளாக்கிக் கொண்டனர். இந்த கொடுமை என்பது சமூகத்தில் உயிர் உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் பிடுங்கி எறிந்தது. சமூகமோ மூச்சுத்திணறி தானாக மடியத் தொடங்கியது.

புலிகளின் இந்த பாசிசத்தை எதிர்கொள்ளமுடியாது திணறிய மற்றைய குழுக்கள், வேட்டையாடப்பட்டனர். ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட்டனர். இப்படி போராட்டம் என்பது சமூகத்தில் இருந்து அன்னியமாகி, தன்னைக் குறுக்கி அழிக்கத் தொடங்கியது.

புலிப் பாசிசத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பியவர்கள் கண்மண் தெரியாத திசையில் ஓடினர். அதில் ஒரு பகுதியை இந்திய இலங்கை அரசுகள், தமது சொந்த அரசியல் இராணுவ கூலிக் குழுக்களாக மாற்றின. இப்படி புலிகள் தமக்கு எதிரான எதிரியை பலப்படுத்தினர். எதிரியின் பக்கத்தில், தமிழரின் ஒரு பிரிவை செல்லுமாறு எட்டி உதைத்தனர்.

இப்படி தொடர்ச்சியாகவே புலிகள் சமுகத்தினுள் எதிரிகளை உற்பத்தி செய்தனர். ஒரு பாசிச சூழலை சமூகத்தின் முன் வித்திட்டனர். புலிகளின் கொடுமைகள் பலவாகப் பெருகியது. இதனால் தமிழ்ச் சமூகம் தானாகவே தப்பியோடத் தொடங்கியது. எதிரியின் பிரதேசம் பாதுகாப்பானதாக கருதும் அளவுக்கு, புலிப் பாசிசம் அவர்களை விரட்டியது. இதுவே சமூக எதாhத்தமாகியது. மக்கள் தப்பியோடாதவாறான புலிகளின் பாஸ் மற்றும் தடைகள் இதை தடுத்து நிறுத்திவிடவில்லை.

தப்பியோட முனைந்தவர்கள் கதியோ, தமது பொருளாதார வாழ்வையே இழந்தனர். கொழும்பு என்பது சுயமாக வாழமுடியாத எல்லைக்குள் பொருளாதார சுமைக்குள் மக்களை அன்னியமாக்கியது. வாழ வழியற்று அதை தேடியவர்கள், அரச கூலிக் குழுக்களின் வலையில் இலகுவாக சிக்கிக்கொள்ளத் தொடங்கினர். இப்படி புலிகள் போராட்டம், எதிரியை பலப்படுத்தும் வகையில் மக்கள் விரோதத்தை அரசியலாக்கியது. இப்படி வரலாற்றில் நம்ப முடியாத ஒன்று தான், நம்பும்படியாக நடந்தது.

இப்படி புலிகள் தம்மைச் சுற்றி, சதா எதிரியை உற்பத்தி செய்தனர். நம்பமுடியாத வேகத்தில் அது பெருகியது. அது பல தளம் கொண்ட, பல முனைப்புக் கொண்ட ஒன்றாகியது. உண்மையில் அவர்களாக அதில் ஓடிச் சென்றது கிடையாது. மாறாக புலிகள் தான் எதிரியை பலப்படுத்தும்படி, தமது பாசிசத்தை சமூகம் மீது நிறுவினர். இப்படி தம்மைத்தாம் குறுக்கி வந்தனர்.

இப்படி புலிப் போராட்டம் என்பது ஆக்கத்துக்கு பதில், அழிவைக் கொண்ட ஒன்றாக மாறியது. புதிது புதிதாக எதிரியை உற்பத்தி செய்யும் போராட்டம் தான், புலித் தேசியமாகியது. சமூகத்தின் பல்வேறு கூறுகளை உண்மையான தமிழ் தேசியமாக்க அதனால் முடியவில்லை. மாறாக தமிழ் தேசியத்துக்கு பதில், புலித்தேசியத்தை வைத்த, ஒரு குறும் கும்பலாகவே சீரழிந்து வந்தனர். அது தனக்குள் தானே ஒரு கிணற்றுத் தவளையாக முடங்கிக் கொண்டது. பரந்து விரிந்த மனித சமூகத்துடன் எப்படி இணைவது என்பதை, அதனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு அதன் அரசியல் குறுகியது.

அவர்கள் தமது குறுகிய புலி அரசியலைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை மேலும் ஒடுக்கினர். இப்படி உண்மையான தேசியத்துக்கு தலைமை தாங்க வேண்டிய புரட்சிகரமான மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி தேசியத்துக்கு தலைமை தாங்கும் தகுதியை புலிகள் இழந்தனர். புலிகளின் இராணுவ பொம்மைகளின் ஆட்சியை, மொத்த மக்கள் மேல் திணித்தனர். அனைத்தும் இராணுவ வகைப்பட்ட இராணுவ ஆட்சியாகியது. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயமான தன்மை என்பது, இராணுவத் தன்மையாகி, அதையே அது மறுக்கத் தொடங்கியது. ஒரு இராணுவ சூனியம் தோற்றுவிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் ஆழமாக ஒடுக்கப்பட்டனர். சமூக உள் முரண்பாடுகளான ஒடுக்குமுறை ஒருபுறம். அதன் மேல் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை மறுபுறம். புலிகள் ஒடுக்குமுறை, மக்கள் தமது வாழ்வையே தாங்கிக் கொள்ளமுடியாத அவலமான வாழ்வுக்குள் வீழ்ந்தனர். சமூகம் தப்பிப் பிழைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

புலிகள் இதை எதிரியின் நடவடிக்கையாக முத்திரை குத்தினர். இப்படி புலிகள் அரசியல் என்பது குறுகிவந்தது. தன்னை நியாயப்படுத்த, சமூகத்தில் எதிரியை உற்பத்தி செய்வதே புலி அரசியலாகியது. சமூக முரண்பாடுகளையே புலிகள் தமது எதிரிக்குரிய அடையாளமாக்கினர். தமது எதிரிகளின் அடையாளம், இந்த முரண்பாடுகளினான அடையாளமாக மாற்றினர். இப்படி தமிழ் மக்களின் எதிரிகள் என்று, ஆயிரமாயிரமாக புலிகள் உருவாக்கினர். இப்படி சமூகமே புலிக்கு எதிராக மாறியது. தமிழ்த் தேசியமே புலிக்கு எதிராக மாறியது. தமழ் மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து, புலி உரிமையை அதனிடத்தில் திணித்துவிட்டனர். இதை கண்காணிக்க மக்கள் மேல் வன்முறையை ஏவினர்.

உண்மையில் இப்படி தமிழ்ச் சமூகம் சொல்லவும் மெல்லவும் முடியாத பாரிய அவலத்தையும், சோகத்தையும் சந்தித்தனர். மக்கள் புலிகளுடன் வாழமுடியாத ஒரு நிலையை அடைந்தனர். புலிகளுடன் இருப்பதில் இருந்தும் தப்பியோடவே விரும்பினர். இப்படி போராட்டம் மக்களிடம் இருந்து விலகிச்சென்றது.

இலட்சம் இலட்சமாக தமிழ் சமூகம் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு அன்னிய நாட்டுக்கு தப்பி ஓடினர். புலிகளின் பாசிசமே தேசிய மொழியாகி, அது மட்டும் தான் தேசமென்னும் நிலையில் மக்கள் அங்கு வாழமுடியவில்லை. புலியின் பொருளாதார கொள்கையால், தமிழ் தேசிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. மக்கள் எப்படியும் புலிகளுடன் வாழமுடியாத நிலை.

இப்படி மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த ஓடியவர்கள் 10 இலட்சத்தை தாண்டிவிட்டது. இது மட்டுமா இல்லை. மேற்கு நோக்கி புலம்பெயர முடியாதவர்கள், சிங்களப் பகுதிகளை நோக்கி ஓடினர். அதுவும் பத்து இலட்சமாகி விட்டது. இதைவிட இந்தியாவில் ஒன்றில் இருந்து இரண்டு இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். மத்திய கிழக்கு நோக்கி புலம்பெயர்வு என்று, ஒரு தேசிய இனமே புலம் பெயர்ந்தது. புலிகள் வைத்த தேசியத்துடன் மக்கள் நிற்க முடியவில்லை. அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ முடியவில்லை.

இப்படி புலிப்போராட்டம் மக்களையே சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடித்தது. அது மக்களை தலைமை தாங்கும் தகுதியையும், மக்களுக்காக போராடும் தகுதியையும் இழந்தது. மக்களைப் போராட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கும் பாசிசத்தை விசிறி அடித்தனர்.

புலிப் பாசிசம் சொந்த மக்களை மட்டும் ஓடு என்று துரத்தவில்லை. தமிழ் மக்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லீம் மக்களை, கூட்டாகவே அடித்து விரட்டினர். வாழ்ந்த பூமியை விட்டே அவர்களை துரத்தினர். புலிகளின் குறுகிய புலிப்போராட்டம், அனைத்து மக்களையும் துரத்தி அடித்தது. மக்கள் தமது வாழ்வுக்காக போராட வேண்டியவர்கள், தமது வாழ்வை இழந்தனர். குறைந்தது மக்களுக்காக போராட வேண்டியவர்களால், மக்கள் வாழ்வை இழந்த அவலம். இப்படி இந்தப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிராக மாறியது. இதை தவறு என்றவர்களை துரோகி என்றனர். வெட்டியும், கொத்தியும், சுட்டும் போட்டனர்.

இப்படி போராட்டம் என்ற பெயரில் மக்கள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக சிதறியோடிய அவர்கள் உதைப்பட்ட நிலையில், ஐயோ போராட்டமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். போராட்டம் என்பது வெறுமனே, புலிகளின் அபிலாசைக்குள் சுருங்கி வெம்பியது.

இந்த வெம்பிப்போன அரசியல் சமூகத்தின் இழிவான ஆதிக்கத்தை சார்ந்த தன்னை நிலை நிறுத்த முனைந்தது. யாழ் மையவாதம் தலைக்கேற, பிரதேசவாத உணர்வுகளை கொண்டு முழு தமிழ் சமூகத்தையும் இதற்குள் ஒடுக்கினர். பிரதேசவாத உணர்வுகளையும், அது சார்ந்த ஒடுக்குமுறையை தக்கவைத்தபடி, பிரதேச ரீதியாக மக்களைப் பிரித்தாளுவதை கையாண்டனர். இன்று இதன் விளைவால் பிரதேசங்கையே விட்டு ஓட வேண்டிய அளவுக்கு, புலிகள் பிரதேசவாத அரசியல் இருண்டு போனது. வெளிச்சதுக்கு பதில் இருட்டு என்பதே புலி அரசியல்.

எங்கும் எதிலும் சூனியவாதம். புலிப் போராட்டம் அறநெறியற்ற ஒன்றாகியது. பொதுவாக இந்த சமூக அமைப்பில் நிலவும் தந்தைக்குரிய வழிகாட்டல் கிடையாது. தாய்க்குரிய கனிவு கிடையாது. தலைமைக்குரிய சமூகப் பொறுப்பு கிடையாது. அடி உதை, வெட்டுக் கொத்து, போட்டுத் தள்ளுதல், சதியும் சூதும், பொய்யும் புரட்டும், இதுவன்றி புலியில்லை என்றாகிவிட்டது.

இப்படி சர்வதேச ரீதியாக, தமது இழிசெயல்களால் அம்மணமானார்கள். சர்வதேச மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், அந்த மக்களை ஒடுக்கிய அரசுகளின் தயவுகளை வேண்டி நிற்குமாறு தள்ளிவிட்டனர். அவர்களோ புலிகளின் மக்கள் விரோத செயல்களை பட்டியலிட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தி தடை செய்து ஒடுக்குகின்றனர். இப்படி புலிகள் உலகளவில் தனிமைக்குள் சிக்கிச் சிதைகின்றனர்.

இந்தியாவில் ராஜீவை வெறும் தனிமனித பழிவாங்கும் உணர்வுடன் கொன்றதன் மூலம், இந்தியாவிலும் தமக்கான அரசியல் கிறுக்குத்தனம் கொண்ட சூனியத்தை நிறுவிக் கொண்டனர். எங்கும் எதிலும் தனிமைப்பட்டு, ஒரு சிறிய கிணற்றுக்குள் நின்று கத்தும் தவளையாக மாறினர்.

இவர்கள் ஒரு அரசியல் பேச்சுவார்த்தையைக் கூட நடத்தும் தகுதி தமக்கு கிடையாது என்பதை நிறுவினர். அரசியல் சூனியமாகிவிட்ட நிலையில், தமது நலன் என்ற எல்லைக்குள் நின்று அதிலும் தம்மை அம்மணமாக்கினர். தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்பதற்குப் பதிலாக அவர்கள் பேசியதோ அற்பத்தனமானவை. இப்படி ஒரு அரசியல் இராஜதந்திரமே கிடையாது. தமிழ் மக்களை தலைமைதாங்கி வழிநடத்திச் செல்லும் தகுதி தங்களுக்கு கிடையாது. என்பதை, பேச்சுவார்த்தையிலும் மீள நிறுவினர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பேச்சுவார்த்தையில் கோருவது தான் அடிப்படையானது. பேரினவாதத்தின் அரசியல் இருப்பில் கைவைத்து, அரசியல் பேசத்தெரியாத முட்டாள்கள் என்பதை நிறுவினர். சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு வைக்கும் அரசியல் தீர்வை அல்லவா அவர்கள் கோரியிருக்க வேண்டும். இது கூட தெரியாமல் புலிகள் அரசியல் நடத்தினர். இப்படி புலி அரசியல் பேரினவாத அரசை பாதுகாக்கும் அரசியலாகிப் போனது. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுக்கும் புலிகள், எப்படி அதை அரசிடம் கோருவர் என்பதே இங்கு நிதர்சனமாகியது.

இந்தியாவை நிர்ப்பந்திக்கும் வகையில், இந்தியா வாலாட்டாத வகையிலும், இந்திய மாநிலங்களுக்கு குறைந்த எதையும் நாம் பேச முடியாது என்று அழகாகவும் ஆணித்தரமாகவும் இராஜதந்திரமாகவும் கூறியிருக்க முடியும். இப்படி உலகை வெல்வதற்கு எத்தனையோ இராஜதந்திர அரசியல் வழிகள் இருந்தது. எல்லாவற்றையும் புலிகள் நாசமாக்கினர்.

எங்கும் எதிலும் இருட்டு. தமிழ் மக்கள் வெளிச்சத்தைப் பார்க்க எந்த வழியுமில்லை. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் பத்து வருடத்தில் தமிழ் மக்கள் எம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் வகையில் எதுவும் எஞ்சாது. தமிழ் இனமே இன்று குறுகி சிறுத்துவிட்டது. இலங்கையில் இரண்டாவது பெரிய இனம், நாலாவது சிறிய இனமாக எப்போதே மாறிவிட்டது. மக்கள் சொந்த வாழ்வைத் துறந்தோடுகின்றனர். தமிழ் மக்கள் அங்கு வாழவ்தற்காக இருக்கமாட்டார்கள் என்ற நிலைக்கு, புலிகள் தமிழ் மக்களின் வாழ்வுக்கான சூழலை அழித்துவிட்டனர்.

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது இப்படித் தான். எங்கும் எதிலும் தோல்வி. அவர்களை வாழ வைத்த, இராணுவ சாகசங்கள் கூட பெரும் தோல்வியில் முடிகின்றது. மீள்வதற்கான மீட்சிக்கான பாதை கிடையாது. சுயவிமர்சனம் என்ற மீள்வதற்கான பாதையை, எல்லாம் சரியாக சிறப்பாக நடப்பதாக நம்பும் கொங்கிரீட்டைப் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.

இப்படி கடந்து வந்த வரலாறு எங்கும் பாரிய மனித விரோதத்துடன் அரங்கேறியது. மனித விரோதமல்லாத எதையும், அவர்கள் உருவாக்கியது கிடையாது. தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுடையது என்பதையே மறுத்தனர். அனைத்தையும் புலியாக்கி, புலிப் போராட்டமாக்கி குறுக்கினர். வெறும் வரட்டுத்தனமான நம்பிக்கையைக் கொண்டு, உயிராற்றல் உள்ளவற்றை கருக்கினர். குறுகி குறுகி, வன்னிக்குள் முடங்கிய நிலைக்குள் சென்றுவிட்டனர்.

அங்கு வாழ்ந்த மக்களை தப்பியோடாத வண்ணம் சிறைப்பிடித்தனர். தம்மைச் சுற்றி தமது பாதுகாப்புக்காக அவர்களை நிறுத்தியுள்ளனர். மக்கள் வெளியேறாத வண்ணம், ஒரு திறந்த வெளிச் சிறையில் மக்களை அடைத்துள்ளனர். புலிகள் தமது குறுகிய வட்டத்தை சுற்றி நடக்கின்றனர். அவர்களுக்கு மனித கேடயங்களாகவே வன்னி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இப்படி வன்னியில் ஒரு லட்சம் மக்கள் புலிகளால் சிறைவைக்கபட்டுள்ளனர். அவர்களை பலாத்காரமாக ஆயுதபாணியாக்குகின்றனர். இந்த மக்களைக் கொண்டு தான், மீட்சிக்கான புலிகளின் இறுதி தற்கொலைக்கு ஒப்பான தமது தாக்குதலை நடத்த முனைகின்றனர்.

ஆனால் புலிகளின் ஆயுதம் ஏந்திய படைப்பிரிவும், அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட மக்களின் உளவியல் என்பதும், போராடும் ஆற்றலை இழந்துவிட்டது. யுத்தத்தை விரும்பாத மக்கள் முன், யுத்தம் வலிந்து திணிக்கப்படுகின்றது. இது எண்ணிக்கையற்ற மனித இழப்பையும், தமிழ் தாய்மையையுமே தொப்புள் கொடியுடன் அறுத்தெறிகின்றது. மனித அவலமும், மனிதத் துயரமும், வன்னி மேல் கவிழ்ந்து கிடக்கின்றது. மனித வாழ்வே பிணமாகி நாற, மக்கள் நடைப்பிணமாகி விட்டனர். தாம் எதற்கு உயிருடன் வாழ்கின்றோம், ஏன் வாழ்கின்றோம் என்று தெரியாத ஒரு நரக வாழ்க்கை.

புலிகள் என்ற குறுகிய சூனியத்தில், எல்லாமே பூச்சியமாகிவிட்டது. இவை இன்று இராணுவத்தின் வெற்றியாக மாறுகின்றது. புலிகளின் பாரிய மனித இழப்புகளாக மாறி வருகின்றது. தமிழ் மக்களின் சூறையாடிய பொருட் செல்வம், எதிரியிடம் அன்றாடம் சென்றுவிடுகின்றது அல்லது அழிந்து விடுகின்றது. தமிழ் மக்கள் பெறப் போவது என்ன? இறுதியில் எதுவுமில்லை. இழப்புகளைத் தவிர எதுவுமில்லை. தமிழர்கள் வாழ்ந்த பூமியில், தமிழர்கள் வாழ்வார்களா என்ற நிலை கூட இன்று உருவாகியுள்ளது. இது தான் இன்றைய உண்மையான எதார்த்தம். தமிழ் மக்கள் எப்போதோ யார் யாரிடமெல்லாமோ இழிந்து நலிந்து தோற்றுவிட்டார்கள். இப்படி தமிழ் மக்களை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கியவர்கள், இன்று தாங்கமுடியாது அதற்குள் தோற்றுப் போகின்றனர்.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து....

- ஆசிஸ் கேத்தன்.


கூட்டுச் சதியாளர்கள் மற்றும் கலவரக்காரர்கள்

அஹமதாபாத், வதோதரா மற்றும் சபர்கந்தாவில் இனஅழிப்புச் செய்திடத் திட்டமிட்டோர் இன்னும் செயல்படுத்தியவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் விஹெச்பி-பஜரங்தள்காரர்களால் கலவரங்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

மேலோட்டம்:

சபர்மதி விரைவுத் தொடர் வண்டியின் S-6 பகுதி தீக்கிரையாக்கப்பட்டத் தினம் கோத்ராவிற்கு நரேந்திர மோடி வருகைத் தந்தார். முஸ்லிம்களை நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற முதல் சைகையை, சங்க்பரிவாரங்களுக்கு அவருடைய குமுறல் சுட்டிக்காட்டியது.

அன்றிரவே, பிஜேபி மற்றும் சங்க்பரிவார மேல்மட்டத் தலைவர்கள் அஹமதாபாத், வதோதரா மற்றும் கோத்ராவில் சந்தித்து, மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் மீதுத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடப் பச்சைக் கொடி காட்டினார்கள்.

தாக்குதல் நடத்துபவர்களைக் கலவரத்திற்குப் பின் சட்டத்திலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்கிற தந்திர சூழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. இது பற்றியத் தகவல்கள் பிரபல்யமான வக்கீல்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்திரவாதமும் பெறப்பட்டது. மோடி நேரடியாக பக்கபலமாக இருப்பதாக தொண்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

குஜராத் மேல்ஜாதி மக்களிடம் ஆழமாக ஊடுருவியுள்ள ஹிந்துத்வாக் கொள்கையில் தாழ்த்தப்பட்ட இனமக்களையும் முழுமையாக இணைத்துக் கொண்டுச் செல்ல, சங்க்பரிவாரம் சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. அவர்களிடையே இவ்விணைப்பைப் பற்ற வைக்கும் மிக அவசியமான நெருப்புப் பொறியை கோத்ரா சம்பவம் அளித்தது.

ஆரம்பத்திலிருந்தே, காவல் துறையினரும் காவி கட்சியினர் போல வன்முறைக் கும்பலுடன் மிக அதிகமான சந்தர்பங்களில் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். எந்த அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய முயன்றனரோ அவர்களதுக் கைகள் கட்டப்பட்டன. அஹமதாபாத் மாநகர முன்னால் காவல் ஆணையர் பி.சி. பாண்டே என்பவர் வன்முறை கும்பலுடன் காவல்துறையினர் கைகோர்த்துச் செயல்படுவதை முன்னின்று நடத்தியதோடு, இளம் அதிகாரிகள் தனது செயல்பாடுகளுக்கு முழுமையாக இணங்கிக் கட்டுண்டு நடப்பதையும் உறுதிப்படுத்தினார்.

சங்க்பாரிவாரங்கள் தாங்களே, குண்டுகள் முதல் துப்பாக்கிகள், சூலாயுதங்கள் வரை அனைத்து ஆயுதங்களையும் தயாரித்து வினி்யோகம் செய்தோ அல்லது சங்பரிவார் தொடர்புகள் மூலமாக இந்தியாவின்

பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடத்தியோ கொண்டுவந்தார்கள். ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் குறுவாள்களை, பஜ்ரங்தள் மற்றும் விஹெச்பியினர் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்தனர்.

அஹமதாபாத்தின் சந்துகளிலும், சபர்கந்தாவின் கிராமங்களிலும், வதோதராவின் சுற்றுவட்டாரங்களிலும் இரத்த வெறிப்பிடித்த வன்முறை கும்பல்களை பிஜேபி மற்றும் சங்க்பரிவார் தலைவர்களே வழிநடத்திச் சென்றனர். ஆங்காங்கே நடைபெற்ற வன்முறைகளுக்கு காலல்துறையே பாதுகாப்பாக நின்றது.

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் மாயாபென் கொட்னானி, அஹமதாபாத்திலுள்ள நரோடா சுற்றுவட்டாரங்களில் நாள் முழுவதும் வண்டியில் சுற்றிக் கொண்டே வன்முறை கும்பல்களை இயக்கிக் கொண்டிருந்தார். இதே செயலையே குல்பர்க் பகுதியில், விஹெச்பி தலைவர்களான அதுல் வைத் மற்றும் பாரத் தெலி செய்துக் கொண்டிருந்தனர். இவர்களில் எவருமே சிறைச்சாலையில் ஒரு போதும் அடைக்கபடவில்லை.

'தீ'யே கலவரக்காரர்களின் கைகளில் மிக விருப்பமான ஆயுதமாக இருந்தது. இறந்தவர்களைத் தீயில் தகனம் செய்வது இஸ்லாத்தில் இல்லை என்பதே, எரிக்க வேண்டும் என்ற இவர்களுடைய வெறிக்கு உந்துதலாக இருந்தது. பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணைத் தாராளமாகப் பயன்படுத்தபட்டதோடு, பாதிக்கபட்டவர்களிடம் இருந்த வாயு உருளைகளும் கூட எரிப்பதற்குப் பயன்படுத்தபட்டன.

நரோடா பாட்டியாவிலுள்ள ஹிந்துக்களிடமிருந்து 23 கைத்துப்பாக்கிகளைப் பெற்றதாக பாபு பஜ்ரங்கி தெரிவித்தான். இவன் உயிர் இழப்பு குறித்த எண்ணிக்கைகளை, விஹெச்பியின் பொதுச் செயலாளர் ஜெய்தீப் படேலை 11 முறை அழைத்துச் சொன்னதோடு, முன்னாள் உள்துறை இணை அமைச்சர் கோர்தன் ஜதாபியாவிற்கும் தகவல் சொன்னான்.

நானாவதி கமிஷன் முன்பு அரசின் சட்ட ஆலோசகராகச் சென்ற அரவிந்த் பாண்ட்யாவே மோடியை பூஜிப்பவராக இருப்பதோடு, நீதிபதி ஷாவை 'தங்களுடைய ஆள்' என்பதாகவும் கூறினார். 1984ல் சீக்கிய எதிர்ப்புக் கலவரம் குறித்த நானாவதியுடைய சுய கூற்றே இன்றுவரை தூசிபடிந்துப் போயுள்ளது.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...2


ஆரவாரமில்லாத இருட்டடிப்பு:

தந்திரமாகச் சூழ்ச்சிகள் செய்வதுடன் திட்டமிட்டு கையாளக் கூடியத் தலைவர்கள், அதிகாரிகள், ஆலோசகர்கள் இருந்தனர். கற்பழித்து, கொலை செய்து, கொள்ளையடித்து எனக் கட்டளைகளை முறையாகச் செய்து முடிக்கக் கூடியவர்களும் இருந்தனர். இந்த இனப்படுகொலை ஒரு சோதனை முயற்சியே.

கோத்ரா சம்பவத்திற்குப் பின் குஜராத்தில் நடந்த வன்முறைகள் இயல்பாகவே உருவானவைகள் அல்ல. மாறாகத் தூண்டுதல்களால் நடத்தப்பட்ட வன்முறைகளே. இவ்வன்முறைகள் சதி செய்யப்படாமலோ, திட்டமிடப்படாமலோ, குறிவைக்கப்படாமலோ நடந்த ஒரு வகுப்புக் கலவரமல்ல. இது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட படுகொலைகள். இது ஒரு இன அழிப்பாகும்.

குஜராத்திலுள்ள நகர்புறங்கள் மற்றும் கிராமங்களில் முஸ்லிம்கள் வசிக்கும் சுற்றுப்புறங்கள் தெளிவாக இனம் காணப்பட்டுத் தந்திரமாக மிகச் சாதுரியமாகத் திட்டமிடப்பட்டுத் தாக்கப்பட்டது. முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் சரி, எவ்வழியானாலும் சரி, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்னும் ஒரே குறிகோளோடு, ஹிந்துக்களிலுள்ளப் பல்வேறு பிரிவினரும் ஒன்றிணைந்தனர். தெஹல்காவின் உண்மை கண்டறியும் நிகழ்வின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களைக் கொல்லும் முறையில், உயிரோடு எரிப்பதையே அதிக விருப்பமுடையதாகத் தெரிவித்தனர். ஏனெனில் இறந்தவர்களை எரிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.

பிப்ரவரி -27, கோத்ராவில் சபர்மதி விரைவு இரயில் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின், குஜராத்தின் பிஜேபி அரசாங்கம் மக்கள் பார்வையிலிருந்து முழுமையாக மறைந்து கொள்ள, ஹிந்து அமைப்புகளிலுள்ள ஆயுத கூலிப்பட்டாளங்கள் அரசு நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வழிவிடப்பட்டது. மூன்று நாட்கள் எவ்வித சட்டஒழுங்கும் இல்லாத அராஜகமான சூழ்நிலை முழுமையாக நீடித்தது. ஹிந்து அமைப்புகளான VHP,RSS, பஜ்ரங்தள், கிஷான் சங், ABVP, BJP ஆகியவற்றிலிருந்து கொள்கை வெறியுடையத் தொண்டர்களைக் கொண்டக் கொலைப் பட்டாளங்கள் அமைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் மசூதிகளும், தர்காக்களும் தகர்க்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது. அஹமதாபாத்தில் மட்டும் முஸ்லிம்களின் மார்க்கத்தலங்கள் 73ம், சபர்கந்தாவில் 55ம், வதோதராவில் 22 இடங்களும் தீக்கிரையாக்கப்பட்டது.

குஜராத்திற்கு மிகப்பெரும் அவமானத்தை உருவாக்கியவர்கள் இரு வகையானவர்கள். அவர்களில் மிகச் சாதுரியமாக, எவ்வித தடுமாற்றமுமில்லாமல் தந்திரமாக திட்டமிடக்கூடியவர்களும், இரகசியமாக சதி செய்யக் கூடியவர்களும் இக்கொடூர மனிதவர்க்க படுகொலைச் சம்பவங்களின் போது பின்னாலிருந்து சதி திட்டங்களைத் தீட்டினார்கள். இன்னும் ஹிந்துத்வா என்று சொல்லப்படும் காவிப் பட்டாளக் கும்பல்கள், மிக மோசமான வெறி நோக்கத்தோடு கொள்ளையடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் என எல்லாவிதமான அரக்கத்தனத்தையும் நடத்தினர். அச்சம்பவத்தில், வன்முறையாளர்களுக்கு உற்சாகமும் துணிவும் உண்டாக்கும் வகையில் திட்டம் தீட்டியத் தலைவர்களும் களத்தில் இறங்கிப் படுகொலைகளில் பங்கெடுத்தனர்.

அஹ்மதாபாத்: மனிதவர்க்கத்தின் படுகொலை தலைநகரம்!

நரோடா, குல்பர்க், கலுபூர், தரியாபூர் ஆகிய இடங்களில், கொலைகார வன்முறை கும்பல் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெறியுடன், சங்க்பரிவாருடைய ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றியது.

குஜராத் இனப்படுகொலையில், மிகப் பயங்கரமாக திகிலடையச் செய்யும் படுகொலைகள், அஹமதாபாத்திலுள்ள நரோடா கவ்ன் மற்றும் நரோடா பாட்டியா ஆகிய இடங்களில் நடைபெற்றவைகளாகும். பஜரங்தள் உள்ளுர் தலைவனான பாபு பஜ்ரங்கி என்பவனே இக்கோர வன்முறைகளின் முக்கிய சதிகாரர்களில் ஒருவனாவான். கோத்ராவில் சபர்மதி தீஎரிப்புச் சம்பவம் வெளியான உடனேயே, படுகொலைகள் செய்வதற்குரியத் திட்டங்களை உடனடியாக இவன் தீட்டினான். பிப்ரவரி -27 மாலையிலிருந்தே, துப்பாக்கிகளும், எரி பொருள்களும் சேகரிக்கப்பட்டதோடு, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர்களைக் கொண்டு பஜ்ரங்கி ஒரு கலவரக் குழுவை உருவாக்கினான். குற்றச் செயல்களில் பிரிசித்தி பெற்ற

இனமாகிய சாரா சமுதாயத்திலுள்ள மக்களும் இவ்வன்முறை குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களில் சுரேஷ் ரிச்சர்ட், பிரகாஷ் ரதோட் என்ற இருவருடன் தெஹல்கா பேசியபோது, "முஸ்லிம்களைக் கொல்வதின் மூலம் ஹிந்து மதத்திற்கு தாங்கள் பெரும் சேவையாற்றுவதாக நம்புகிறோம்" என இவ்விருவரும் கூறினார்கள். இவ்வாறு நம்ப வைக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 28, 2002 அன்று பஜ்ரங்கி, கொலைகள் செய்யக் கூடிய வன்முறை கும்பலை நரோடா பாட்டியா மற்றும் நரோடா கூவுனிலுள்ள ஒடுக்கமான சந்துக்களில் முன்னோடியாக வழி நடத்திச் சென்றான். அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், டாக்டருமான மாயாபென் கோடனி என்பவன், எதைப்பற்றியும் பொருட்படுத்தாத வகையில் வன்முறையாளர்களைத் தூண்டிக் கொண்டிருந்தான். கோடானி நரோடா முழுவதும் நாளெல்லாம் சுற்றி வலம் வந்தவனாக, வன்முறையாளர்களிடம் முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து வேட்டையாடி அவர்களைக் கொல்லவும் ஊக்கமூட்டிக் கொண்டிருந்தான் என தெஹல்காவின் ரகசிய உளவு கேமராவில் பதிவாகியுள்ள ரிச்சர்ட் மற்றும் ரதோட் ஆகிய இருவரும் கூறினார்கள். கோடானியின் நம்பிக்கைக்குரியத் தளபதியும் பிஜேபின் உறுப்பினருமான பிபின் பன்ஜல் என்பவனும், வெறியோடு ஆயுதம் தாங்கிய தனது ஆதாரவாளர்களுடன் அங்கு வந்திருந்தான். பஜ்ரங்கியும், மாநில விஹெச்பி பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேலும் இப்படுகொலை சம்பவங்கள் நடந்தேறிய நேரம் முழுவதும் தொலைபேசியுடன் உரையாடிய வண்ணம் இருந்தனர். ஆனால் பட்டேல் சதித் திட்டத்திலும் பங்கெடுத்தானா? என்பது பற்றி பஜ்ரங்கி ஏதும் தெரியப்படுத்தவில்லை. இருந்தாலும், படுகொலைகளின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் அவ்வப்போது பட்டேலுக்குத் தகவல் சொன்னதாகக் கூறினான். நரோடா காவுன் படுகொலை வன்முறையின் போது உயிர் தப்பியப் பலரும், நரோடா வன்முறை கும்பலுக்கு பட்டேல் தான் தலைவனாக இருந்தான் எனத் தெரிவித்தனர்.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

Friday, December 7, 2007

இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம்!

ப. வி. ஸ்ரீரங்கன்

"இலங்கையை ஆளும் கட்சிகளும், போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க
அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே
வளர்தெடுக்கப்பட்டு, இன்றுவரை உயிர்த்திருக்கும்படி
விடப்பட்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து நமது மக்கள் இலங்கையின்
பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து தமக்கு நேர்ந்த
கொடுமைகளுக்கெதிராக அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச்
சிறுபான்மை இனங்களுக்கில்லை. இதைவிட்ட குறுகிய "தீர்வுகள்"எப்பவுமே இலங்கை
மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் யுத்தவாழ்வுக்குள் இருத்தி மெல்லச்
சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும். இதைத்தாம் இன்றுவரையான எமது
போராட்ட வாழ்வு எமக்கு உணர்த்தி நிற்கிறது. இங்கே, புலிகளோ அல்லச் சிங்கங்களோ நமக்கு
எந்த விடிவையும் தரும் தகமையுடையவர்கள் இல்லை! இலங்கையை ஆளும் கட்சிகள்
சுயாதிபத்தியமுடைய தேசியக் கட்சிகளோ அல்லது முற்றிலும் பொதுவான மக்கள் கட்சிகளோ
அல்ல. "

இன்றைய உலகப் பொது நிலவரப்படி இலங்கையில் நடந்தேறும் அரசியல் இலங்கையின்-இலங்கை மக்களின் நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது எல்லோராலும் ஏற்கத்தக்வொரு உண்மைதாம். இந்தவொரு மையமான உண்மையிலிருந்து வெளிப்படும் செயற்பாடுகள் தற்போதைய அரசியலில் இலங்கைச் சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றும் பொதுக் காரியத்தைச் செய்து முடிக்கும் பரிதாபகரமாவொனரு முன்னெடுப்பாகக் கட்சி அரசியலுக்குள் வேரூன்றியுள்ளது. ஓட்டுக் கட்சிகளின் திரைமறைவுச் சதிகளிலொன்று தத்தமது மக்களை ஏமாற்றியபடி அந்நிய அரசுகளுக்கு விசுவாசமாகக் காரிமாற்றும் முகவர்களாக இருந்துகொணடே அப்பாவி மக்களை முட்டாள்களாக்குவது. இதில் மிக வேகமாகச் செயற்படும் கட்சிகள் இலங்கையை ஆளும் கட்சிகளாகவும், எதிர்கட்சிகளாகவும் இருக்கின்றன. இந்த இலங்கைக்குள் நிலவும் இனமுரண்பாடானது சாரம்சத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார முரண்பாடுகளாகவே இருக்கின்றன. அவைகொண்டிருக்கும் இலக்குகளுக்காக அத்தகைய முரண்பாட்டின் பக்க விளைவாக மொழிசார்ந்தும் இன அடையாளம் சார்ந்தும் முரண்பாடுகள் தோற்றமுறும்போது, அவற்றைத் தாரளமாக அந்நிய அரசியல் எதிர்பார்ப்புகள் தூண்டிக்கொண்டிருக்கின்றன.

இங்கே, மிக இலாவகமாகக் காரியமாற்றும் இந்த இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிகத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தரணங்களை அவை மீள் உருவாக்கத்துள் மலினப்படுத்தும் செயலூக்கத்தோடு சம்பந்தப்படுத்தி, இலங்கை அரசியலில் எந்தவிதமான முடிவெடுக்கும் நிலையை இழந்து வந்துள்ளன. இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலை இந்தக் கட்சிகளிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரக்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே. இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே கொண்டிருக்கவில்லை. இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வருவதில் நமது போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருக்கிறது.

தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில், அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன. இதற்குத் தோதாகச் சொல்லப்படும்"அரசியல் தீர்வு-சமஷ்டி-மாகணசபை-அரசியல் யாப்பு"என்பதெல்லாம் சேர்ந்த கலவையாகச் சர்வப்பொதுத் தீர்வுப் பொதியாக மயக்கமுறும் ஒரு அரசியல் செப்படி வித்தையை இந்தியாவின் ஆலோசனைப்படி "சர்வகட்சிக் கூட்டுக்கள்" முன்வைக்கும் நிலைக்கு அரசியல் விய+கம் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது, சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும், உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்தக் கட்சிகள் செய்து முடித்தன. இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது, அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே. இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்கு நிகரான இன்னொரு அரசஜந்திரத்தை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிசத் தன்மையிலானவொரு புலிகள் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்கித் தள்ளியது.

பெரும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள். இதனாலின்று முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது. அவர்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தரணங்கள் இன்று அவர்களை நோக்கி, நெருங்கி வருகிறது. புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது. எனினும, ; புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து, அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை. இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே. இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்கிப் பாகிஸ்தான் பாணியிலானவொரு ஆட்சியலகை நிலைப்படுத்துவதே. இங்கே, மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம், தொழிற்சங்கவுரிமை, வேலைநிறுத்தம், சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு. இதற்கு மிகத் தோதாகப் புலிகளின் இன்றைய இழிநிலை-குறுகிவரும் படைப்பலம் மக்களின் உரிமைகளை வெல்லுமொரு புரட்சிகரச் சக்தியாக அவர்களைத் தோன்றாதிருக்கும்படி புலிகளின் கட்டமைப்புக்குள் தனிநபர் வாதத்தையும், குடும்ப அரசியல் எண்ணவோட்டத்தையும் உருவாக்கியபடி அந்த அமைப்பின் இருப்பை அசைக்கும் புறநிலையை மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தமிழ் மக்களின் எந்தவுரிமையையும் துடைத்தெறியும் என்பது சர்வப்பொதுவுண்மையாகும்.

இந்தவொரு அரசியலை மையப்படுத்தாமல் இலங்கையை ஆளும் கட்சிகளையும்-அரச வடிவத்தையும், போராடும் இயக்கங்களையும் வெறும் கபடத்தனத்தோடு"ஐ. ஆர். சி"மட்டத்துக்கு ஒதுக்கிக் குறுக்கி, அந்நிய ஏவல்படைகளை அவர்களின் இருப்பை வெறும் கிரிமனல் மட்டத்துக்குள் திணிப்பது தமழ்-சிங்களத் தொழிலாளவர்க்கத்தை ஏமாற்றும் முயற்சி. இலங்கைக்குள் பிரச்சனைகளை முடக்கிவிடுவது திட்டமிட்ட அந்நிய நலனின் தூண்டுதல்கள்தாமென்பதை இன்றைய இளையர்களே புரிந்தொதுக்க முடியும். இத்தகைய கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோகும் சாணக்கியமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும், ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும். இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும், தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும். கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து எந்த ஏஜமானர்களுக்காக மனோரஞ்சன் வாலாட்டுகிறார்?

"இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்" தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே. இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம். திருவாளர் ஆனந்தசங்கரிப் ப+சாரியால் பாடப்படும் மேற்காணும் தேவாரத்துக்குத் தமிழ் மக்கள் பலியாகுவதற்கு ஏற்றவாறு புலிகளால் அவர்கள் முடமாக்கப்பட்டு உரிய முறையில் ஊனமாகப்பட்டபின்பே இந்தப் ப+சாரி ஜனநாயக்காவலராக நியமிக்கப்பட்டு, யுனேஸ்கோ விருது வழங்கப்பட்டது. இவையெல்லாம் காட்டும் உண்மை என்னவென்றால் மக்களின் உரிமையை மக்களே போராடிப் பெறவேண்டும் என்பதையே. இந்த மக்கள் சுயமாக எழிச்சியடையும் வலுவும் அந்த வலுவினூடாகப் புரட்சிகரமான படையணியை சுய பலத்துடன் அமைப்பதற்கும், கட்சி கட்டுவதற்குமானவொரு சூழலைப் பாதுகாப்பதே இன்றைய அவசியமானதாகும். இங்கேதாம் இந்தப் ப+சாரிகளும் அவர்களது எஜமானர்களும், புலிகளும் குறுக்கே நிற்கிறார்கள்.

2

இந் நிலையில் நாம் தொடர்ந்தெழுதும் கருத்துக்களும் அதன் எதிர்பார்ப்புகளும் வெறுமனவே புலியெதிர்ப்புத் தர இலங்கை அரச ஆதரவெனப் புரியப்படுவது என்ற தளத்தைவிட்டு, மக்களின் நலன்களைத் தூக்கிப் பிடித்தலெனும் கோணத்தில் சிந்திப்பதே இன்றைய சூழலிற் பொருத்தப்பாடாக இருக்கும்.
புலிகளின் சந்தர்ப்பவாதத்தை மட்டுமல்ல இன்றைய காலத்து அரசியற் போக்கில் நாம் அனைத்து ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்களினதும் அரசியலையும் அத்தகைய அமைப்புக்களின் தலைவர்களையும் விமர்சனத்துக்குள்ளும், ஒரு புற நிலையான மதிப்பீட்டுக்கும் உட்படுத்தியும்-வந்துகொள்ளத்தக்கதாகவும் அவசியமான குறிப்புகள் எழுதியாக வேண்டும். அன்றே, நாம் வரையறுத்தவற்றை மீளக் குறித்துக்கொள்வதற்கானவொரு சூழல் இப்போதும் உருவாகியுள்ளது. அத்தகைய சூழலையுருவாக்கும் இந்தியாமீதான விசுவாசம் எமது மக்களுக்குத் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதற்குச் சமம் என்ற எமது நோக்கால் இதை எழுதுவது மிகவும் பயனுடையதாகவிருக்குமென்று கருதுகிறோம்.

இன்றைக்குப் புலிகளெனும் இயகத்தின் இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இந்தியாவின் மிக நெருங்கிய இலங்கைமீதான அபிலாசைகளில் பிரதிபலிக்கத் தக்கதாகும். இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய ஈழத்து நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்தகட்டமாகக் காய்களை நகர்த்துகிறது, புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும், தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் அமிழ்ந்துள்ளது. இதற்கான முன் தயாரிப்பாக அது இலங்கையில் தொடந்தும் இனவாதத்தையும், ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்துவதும்அதன் வாயிலாக உறுதியான இனவாத்தைத் தூண்டி மக்களைப் படு குழியில் தள்ளிச் செல்லும் அரசியலைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது. இது இனவொருமைப்பாட்டையும், வர்க்க எழிச்சியையும் ஏற்படவிடாமல் தடுத்தாளத்தக்க ஒரு தலைமையாகப் புலிகளை வரையறை செய்வதில் அதன் நோக்கம் புலி இருப்பாக விரிகிறது. "புலி இல்லையேல் வர்க்க எழிச்சி-புரட்சி உண்டு"என்பதாகப் புரிந்தபோது மக்களின் தீராத இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான உண்மையான நோக்கத்தை விட்டுப் புலிகளைத் தொடர்ந்து பாசிசச் சக்தியாக வளர்ப்பதில் இந்தியப் புலனாய்வுத்துறைக்கு இந்திய ஆளும் வர்க்கம் வற்புறுத்தியே வருகிறது.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகள் போன்ற அமைப்பை எங்ஙனம் மதிப்பிடுவதென்று எவரும் சிந்திக்க முனையுந் தறுவாயில்:

1)புலிகள் தரகு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பவர்கள்

2)குட்டி முதலாளித்துவக் குறுந்தேசிய வாதிகள்

3)தேசிய முதலாளித்துவத்தின் எதிரிகள்

4)குழு நலனுக்காகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தைப் பேசுபவர்கள்

5)தமது இருப்புக்காகவும், அதிகாரத்துக்காவும் எந்த அந்நியச் சக்தியின் தயவையும் நாடுபவர்கள்

6)அந்நிய நலனுக்காகத் தமிழ் பேசும் மக்களின் நலன்களைத் தமது இயக்க நலனின் திசைவழியில் பேசித் தொடர்ந்து தமக்கு எதிரான சக்திகளைத் துரோகியாக்கிச் சுட்டுத் தள்பவர்கள்

7)மாற்றுச் சக்திகளை அந்நியச் சக்திகளின் கால்களில் விழுவதற்கான முறைமையில் பாசிசச் சர்வதிகாரத்தையும், ஏகப் பிரதிநித்துவத்தையும் தூக்கி நிறுத்தி மக்களின் அடிப்படை ஜனநாயகவுரிமையைப் பறித்துக்கொ(ல்)ள்பவர்கள்

8)இலங்கைத் தேசத்தின் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிக்கு-இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு எதிரானவர்கள்.

இத்தகைய மதிப்பீட்டுக்கு நாம் வந்து, தற்போது இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த மதிப்பீடு அவசியமானதுங்கூட. என்றபோதும், சமூகநலன்மீது அக்கறையுடைய சக்திகள் எவருமே புலிகளின் மிகத்தெளிவான பக்கத்தை அடையாளம் காண்பதில் எவ்விதத் தடுமாற்றத்தையும் கொண்டிருக்க முடியாதென்றே கருதுகிறோம். இந்தத் தெளிவான பக்கம் எதுவென்ற வினாவுக்கு அவர்களின் பாசிசத் தன்மையிலான சக இயக்கப் படுகொலைகளே சாட்சி பகிர்பவை. இத்தகைய படுகொலைகள் திட்டமிட்ட இந்திய உளவுப்படையின் ஆலோசனைப்படியே புலிகள் செய்து முடித்தார்கள் என்பதை அநுராதபுரப் படுகொலைகளில் உரைத்துப்பார்க்கவும். தங்களைத் தவிர மக்களின் போராட்டப்பாதையில் பிரவேசிக்கின்ற எந்த மாற்றுச் சக்திகளையும் புலிகள் மூர்க்கமாக அழித்தொழித்தவரலாறுதாம் "இந்தியப் பிராந்திய நலனுக்கு நாம் எதிகள் அல்ல" என்ற புலிகளின் தாரக மந்திரமாகும். தென்கிழக்காசியாவின் புரட்சிகரத் தீபம் ஈழத் தேசிய இனத்தின் விடுதலையோடு மிக வேகமாகத் சுடர் பரப்பி எழும் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாய் உணரத்தக்க வரலாறு இலங்கைக்குச் சொந்தமாகவே இருந்தது. அதற்கு அன்றைய இலங்கைப் படிப்பனைகள் இவர்களுக்த் துணைபுரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இங்கே எவர் வேண்டுமானாலும் புலிகளை எப்படியும் மதிப்பிடலாம். தேசியச் சக்தியாகவோ, ஐயக்கிய முன்னணி அமைக்கத்தகு அமைப்பாகவோ அன்றிப் புரட்சிகரச் சக்தியாகவோ மதிப்பிடலாம். ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் வரையறை ஒன்றேயொன்றென்பதை அவர்கள் மிக இலகுவாக உணர்த்தி வருபவர்கள். தங்களைத் தவிரப் போராட்டப்பாதையில் எவர் பிரவேசிக்கிறாரோ அவரைப் பூண்டோடு துரோகி சொல்லி ஒழித்துக்கட்டுவதே அது. அந்த மிகத் தெளிவான வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும், மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது. இத்தகைய போக்கைத் திட்டமிட்டு நடாத்தும் புலிகளின் தலைமை இன்றுவரை தனது இயகத் தலைமைக்குள்ளேயே பற்பல முரண்பாடுகளைத் தோற்றுவித்து பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொன்று தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயப் போரை இந்தியாவுக்கு ஏற்ற திசையில் வளர்த்துச் சென்று வருகிறது. இதுவே "இந்தியப் பிராந்திய நலுனுக்கு நாம் எதிகள் அல்ல" என்று இவர்களைத் தொடர்ந்து பாடவைப்பது. புலிகளால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மெல்ல அழிக்கப்பட்டுவருவதற்கு ஏற்ற வகைகளில் அந்த அமைப்பின் தலைமை மிகத் தாழ்ந்த புத்தியுடையவொரு மனிதரின் ஒளிவட்டத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டு, நமது இனத்தின் புரட்சியாளர்கள்-அறிஜீவிகள் ஓரங்கட்டப்பட்டும், கொல்லப்பட்டும் விடுதலையின் உயிர் ஊசலாட வைக்கப்பட்டு வருகிறது. இதுவே இலங்கை அரசினதும் புலியினதும் வெற்றி-இருப்புக்கான மூல ஊற்றாகும். இத்தகைய புலிகளால் நமது தேசத்தின் விடுதலையை நாம் ஒருபோதும் கனவுகாண முடியாது. எமது எல்லைகளை இவர்கள் அந்நிய நலன்களுள் கரைக்கும்போது அங்கே தேசத்தினதோ அன்றித் தேசிய அலகுகளின் இறைமையோ இருப்பதற்கில்லை.

நாம் இதுவரை ஏமாற்றப்பட்டு வரும் தரணத்தில் புலிகளை ஆயுதக் குழுவாகவும், மாற்றுச் சக்திகளை ஜனநாயகச் சக்திகளாகவும் இந்தியாவும்-மேற்குலகமும் மிக நெருக்கமாக வளர்த்தெடுத்துள்ளது. இங்கே நடாத்தப்படும் அரசியற் சாணாக்கியத்துக்கு இந்த இருவகையான இயக்கக் கட்சி வடிவமும் தேவைப்படுகிறதே அதுதாம் இந்தியா. இந்தவொரு நுணுக்கமான இந்தியச் சதி எம்மைப் போண்டியாக்கி வரும்பொழுது, இங்கே சில சிறுபிள்ளைகள்"புலிகள் இந்தியப் பிராந்திய நலுனுக்கு என்றுமே எதிரிகள் அல்ல"என்று பெருமை-உரிமை கோருவதில் தமிழ் பேசும் மக்களின் சாவுகளே நமக்கு விரிகின்றன. அது இருக்கட்டும்.

அதென்ன இந்தியப் பிராந்திய நலன்?

இந்தியத் தரகு முதலாளியத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களின் சந்தையைத் தீர்மானிக்கும் அவர்களின் அரசியல் ஆதிக்கத்துக்கும், தென்கிழக்காசியாவில் தொடர்ந்து மூல வளங்களைத் தமது உற்பத்திக் குட்படுத்துவதற்கும், அந்த உற்பத்திப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படும் பலகோடி ஏழைத் தொழிலாளர்களைத் திட்டமிட்டு நசித்துப் பிழிவதற்குமானதுதானே இந்தப் பிராந்தியத்தின் நலன். அங்கே, இந்தியாவின் பாதுகாப்பு என்ற கரடி இந்த நுணுக்கத்துள் அடங்கும் முகமூடிதாம். இதைத்தாம் பாசிசப் புலிகளின் இருப்போடும் அதன் படுகொலைகளுடாகவும் மேற்குலகமும் இந்தியாவும் செய்து முடிக்கிறது. இதைத்தாம் புலிகள் அடிக்கடி சுட்டிக்காட்டி "நாம் இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிரானவர்களில்லை"என்ற பேரத்தின்படி தமக்குச் சேரவேண்டிய அரசியல் தளத்தைத் தரும்படி இந்தியாவின் காலில் வீழ்வதும், திணறுவதாகவும்-நாய்குரிய விசுவாசத்தோடு போராடி வருகிறார்கள். இதையும் சிலர் பெருமையாக எடுத்துக்கொள்வது அவர்களது இயக்க மாயைதாம் காரணமாகும்.

இந்த நிலைமைகளில்தாம் நாம் புலிகளின் அழித்தொழிப்புகளை எங்ஙனம் முறியடிப்பதென்று சிந்திக்கிறோம்.

புலிகளின் பின்னே ஒழிந்திருக்கும் இந்திய மற்றும் மேற்குலகச் சதிகள் நமது புரட்சியாளர்களையும், மக்களையும் அழித்து வருகிறது. புத்தியுடையவர்களை மெல்ல அழித்த வரலாறு வெறும் தற்செயல் நிகழ்வல்ல.

இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம். இந்த வரையறையிலிருந்து-மதிப்பீட்டிலிருந்து நாம் அவர்களின் ஜனநாயக விரோதப்போக்கை-பாசிசச் சேட்டைகளை அளவிடுவதென்பதே இவ்வளவு காலமும் நிகழ்ந்து வருகிறது. இது தவறானபாதை. ஏனெனில், இதுவரை அழித்தொழிக்கப்பட்ட அப்பாவிப் போராளிகளினதும் மக்களினதும் சாவுகள் நமக்கு அவர்களை குறித்தும், பாசிசச் செயற்பாடு குறித்தும் உரிய வடிவில் புரிய வைத்திருக்கிறது. இது நல்லதொரு படிப்பினையாக இருக்கும் இன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்றுச் சிங்களத் தரப்பு மேல் நிலை வகிப்பதற்கும், சிங்களவர்களின் கைகள் உயர்வதற்குமான சாத்தியத்தைப் புலிகளே செய்து கொடுத்துள்ளார்கள். இங்கே, புலிகள் செய்வது தம்மைத் தவிர வேறெந்த மேய்ப்பனும் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லையென்பதைக் கருத்தியற்றளத்தில் ஆழவ+ன்றுவதற்கே. இந்தக் கோலத்தில் புலிகள் பின்வாங்குவதென்பது இதுவும் அவர்களது எஜமானர்கள் இட்டவொரு எல்லையைச் சென்றடைந்து, தமிழ் பேசும் மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைத் திசை திருப்புவதற்கான அரசியல் சாணாக்கியமே.

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது(மாற்றுப் போராட்டச் சக்திகளை அழித்தொழித்தது)எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள். அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தரணம் முன்னிருக்கும்போது, ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சுந்தரத்தின் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது. எமது கண்கள் முன்னாலேயே சரிந்த சுந்திரத்தின் குருதி இன்றுவரையும் இந்தக் கொடூரத்தைப் மறக்காது வைத்திருக்கிறது. ஈழத்தில் பலவாறாக முகிழ்த்த இயக்கங்கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதீத ஆர்வத்தாலும் , இலங்கைப் பாசிச வன் கொடுமைச் சிங்கள அரசாலும் முகழ்த்திருப்பினும் அவைகளைக் கையகப்படுத்தித் தனது தேவைக்கேற்ற வடிவத்தில் தகவமைத்த இந்தியா இறுதியில் ஒவ்வொருவரையும் மோதவிட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நின்றது. இங்கே புலிகள் என்பது அந்நியச் சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாகவும்-பிசாசுகளாகவுமே இன்றுவரை இருக்கிறார்கள்.

இது இப்படியிருந்தபோதும், நாம் தனிநபர் பயங்கரவாதம் குறித்தே எமது கவனத்தை அன்று குவித்திருந்தபோது இந்தியா நமது மீட்பனாகவே உணரப்பட்டது. அதன் தொடர்ச்சிதாம் "இந்தியாவின் பிராந்திய நலனுக்கு நாம் எதிரிகள் அல்ல"என்ற புலிகளின் வார்த்தையை நம்பி ஏமாறும் தமிழர்கள் இந்தியாவே புலிகள் சொல்வதுமாதிரி நேச நாடு எனக் கனவு காண்கிறார்கள். கோடிக் கணக்கான மனிதர்களைச் சாதி சொல்லிப் பிரித்து வீதியோரத்தில் படுத்தொழும்பவிட்ட இந்திய ஆளும் வர்க்கமா ஈழத்து மக்களுக்கு விடிவுதரத்தக்க முறைமைகளில் நடந்து கொள்ளும்?நேற்று முன் தினம் 09. 08. 2007 அன்று சற். டி. எப். தொலைக் காட்சிச் சேவையால் ஒளி பரப்பப்பட்ட மும்பாய்க் காட்சிகளைக் கண்ட ஜேர்மனியர்கள் நம் முகத்தில் காறித் துப்பாதுதாம் பாக்கி. "இந்தியா 25 வீதப் பொருளாதார வளர்ச்சியென்று பீற்றும் உங்கள் மக்கள் தெருவில் படுத்துத் துப்பிச் சாப்பிட்டு வாழும் நிலை வாந்தியை வரவழைக்கிறது. அங்கிருந்து தின்ன விழியின்றி வந்த நீங்கள் இங்கே பென்ஸ் கார் கேட்கிறீங்க. " என்று எம்மைக் கேவலமாகச் சொல்லும் ஜேர்மனியர்கள் இந்த இந்தியாவின் வன் கொடுமையை எங்களுக்கு முகத்தில் அடித்துச் சொல்கிறார்கள். இந்த இந்தியாவின் பிற்போக்கு ஒடுக்கு முறைக்குக் குடை பிடிக்கும் புலிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசிய மக்களின் விடுதலைக்கு உழைக்க முடியாது. அங்ஙனம் அவர்கள் சொல்லும் சந்தர்பங்கள் யாவும் செயற்கையாகச் சொல்லிக் கொள்ளும் தந்திரமாகும். தமது இயக்கத்தை தொடர்ந்து நிலைப்படுத்தவும், அதன் வாயிலாகத் தலைமையின் அர்ப்பத் தனங்களைக் காப்பதற்கும் எடுக்கும் முயற்சியே இந்தச் செயற்பாடுகள்.

அறுத்த கோழியைப் பார்த்துச் சிரித்ததாம் - வறுத்த கோழி!

"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு இது புதுமொழி. கோகோ கோலாவைப் போலவே "கென்டகி வறுத்த கோழிக்கறி' என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடு. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்ற தகுதியில் அமெரிக்கச் சட்டியில் விழுந்து புரண்ட ரோனேன் சென் என்ற கோழி, அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது கேள்வி எழுப்பும் எல்லாக் கட்சிகளையும் "தலையறுந்த கோழிகள்' என்று எள்ளி நகையாடியிருக்கிறது. "தலையறுந்த கோழிகளோ' தம் பெயருக்கேற்பத் துள்ளினவேயன்றி அந்தத் தூதரைத் தூக்கியெறிய இயலவில்லை.

""அமெரிக்க அதிபரே சொன்னபிறகு இவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது'', ""இந்தியா குண்டு வெடித்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அமெரிக்க அரசு தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறது.'' இவை ரோனேன் சென்னின் "வாதங்கள்'. ""இதுவரை நாம் கண்ட அமெரிக்க அதிபர்களிலேயே இந்தியாவுக்கு பெரிதும் நேசமானவர் ஜார்ஜ் புஷ்தான்... அவர் என்னிடம் அன்பாக நடந்து கொண் டார்... தேச பக்தர்களாக இருந்தால் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்.'' இவை மன்மோகன் சிங்கின் "வாதங்கள்'. ஒரு ஒப்பந்தத்தின் மீது குறிப்பான கேள்விகள் எழுப்பப்படும்போது உரிய விவரங்களுடன் அவற்றுக்கு யோக்கியமான முறையில் பதில் சொல்லவேண்டும். அமெரிக்க அடிமைத்தனத்தில் ஆழ அமிழ்த்தி வறுத்து எடுக்கப்பட்ட இந்தக் கோழிகள், இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம் குறித்த பிரச்சினையை ஏதோ மாமன்மச்சான் உறவுமுறை விவகாரத்தை விளக்கும் மொழியில் பேசுகிறார்கள். சொல்வதற்கு நேர்மையான பதில் ஏதும் இல்லை என்பது மட்டும் காரணமல்ல, இவர்களுக்கும் அமெரிக்க வல்லரசுக்குமிடையில் வெளியே சொல்லிக் கொள்ள முடியாத ஒரு கள்ள உறவொன்று நிலவுவதையும் அவர்களது மொழி நிரூபிக்கிறது. ஒப்பந்தம் குறித்து என்ன கேள்வி எழுப்பினாலும் இவர்கள் ஆத்திரமடைந்து பிதற்றுவதும் இந்த ஐயத்தை உறுதி செய்கிறது.

இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கமோ, தனது அறிவுத்துறைக் கைக்கூலிகளான பத்திரிகையாளர்களை ஏவி விடுகிறது. ""திருவோடு ஏந்தி நின்று கொண்டிருந்த பழைய இந்தியாவையே இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், புதிய வளர்ந்து வரும் இந்தியாவின் வலிமை தெரியாமல் தாழ்வுணர்ச்சியில் பேசுகிறார்கள்'', ""ஒப்பந்தத்தில் உள்ள சொற்களை விடுங்கள். அமெரிக்காவை சரிசமமாக எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை எதிர்ப்பாளர்களிடம் இல்லை'', ""இறையாண்மை போய்விடும் என்கிறார்களே, இறையாண்மை என்பது மக்களின் இதயத்தில் அல்லவா இருக்கிறது. 100 கோடி மக்களை அமெரிக்கா அடிமைப்படுத்திவிட முடியுமா என்ன?'' இப்படி வல்லரசு போதையை ஏற்றி விட்டு, அப்பட்டமான அடிமைத்தனத்தை இந்த ஒப்பந்தம் திணிப்பதை அடியோடு மறைக்கின்றன பத்திரிகைகள்.

இந்த வாதங்களுக்கு இணையாக, ஆத்திரம் கொப்புளிக்க ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் அவற்றின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகின்றன. ""எதிர்ப்பவர்கள் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சினை என்பதனால் எதிர்க்கவில்லை, இவர்கள் எப்படி இருந்தாலும் அமெரிக்க எதிர்ப்பாளர்கள், எனவே இவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை'', ""ஒவ்வொரு அயலுறவுக் கொள்கையையும் ஓட்டுக்கு விட்டுத் தீர்மானிக்க முடியுமா என்ன?'', ""அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படப் போவதில்லை. கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மன்மோகன் சிங் துணிச்சலாக இதனை அமலாக்கம் செய்யவேண்டும். கூடவே மக்கள் நலத்திட்டங்கள் (கவர்ச்சித் திட்டங்களை) சிலவற்றை அறிவித்தால் மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம். இன்னும் கூடுதலான இடங்களையும் கைப்பற்றலாம்'' என்று காங்கிரசுக்கு தைரியம் கூறுகின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் வரம்புக்கு உட்பட்டு வலது, இடது கம்யூனிஸ்டுகள் எழுப்பும் ஆட்சேபங்களுக்கு ஆளும் வர்க்கம் வழங்கும் மறுமொழி இது. மறுகாலனியாக்கத் திட்டத்தைத் தம் விருப்பம் போல அமலாக்குவதற்கு இந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை சிறிது இடையூறாக இருக்குமானாலும், அதற்கு என்ன கதி நேரும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறது ஆளும் வர்க்கம். நாம் அறிந்த வரை தலை அறுந்த கோழிகள் சண்டையில் வெல்வதில்லை.

Wednesday, December 5, 2007

இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும்.

ப. வி. ஸ்ரீரங்கன்
04. 12. 2007

லகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன், மனிதாபிமானம், மனிதவுரிமை, ஜனநாயகம்" எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின் யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும், பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன.

பெரும்பகுதி மக்களால் ஏற்கப்படும் ஒரு நிகழ்வில் அது பெரும் பங்கை அந்த மக்களுக்கு எதிராகவே ஆற்றும் யுத்தக் கூறுகளாக விரித்து வைக்கிறது. நமது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று எவராவது கூறுமிடத்து அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது. எமது சமுதாயத்துள் இந்த நிலைமை இப்போதைய சூழலாகி வருகிறது. சிங்கள இனவாத அரசு அதை நோக்கியே நம்மைத் தள்ளி நமது முழு வலுவையும் சிதைப்பதில் உலக உதவியையும் நாடியுள்ளது. இதன் தொடர் நிகழ்வில் நிர்பந்தமாக முன்வைக்கப்படும் பாரிய யுத்த முன்னெடுப்புகள் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளப் போகிறது.

எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தரணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம், கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.

இதைக் கடந்தவொரு மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலு மூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது. இது தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி " புலிகளை எதிர்பவர்கள் தமிழர்களை எதிர்பவர்கள்" என்றும் கருத்துக் கட்டுகிறது.

இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது. இங்கே, மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும், புலிகளுக்கும் மற்றும் (. . . ) குழுக்கழுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.

அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.

ஆனால், தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள். ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளால் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்தோங்கியுள்ளது.

பொதுவாக ஒரு யுத்த வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா?

திணிக்கப்படும் யுத்தால் முழுமொத்த மக்களின் விடுதலை
சாத்தியப்படமுடியுமா?

இங்கே, எந்த வர்க்கம் யுத்தத்தில் நலமடைய முனைகிறது?

அந்த நலனை அடைவதற்காகத் தன் முரண்பாட்டை முழு மொத்த மக்களினதும் முரண்பாடாக்கி வைத்திருக்கும் இந்த அரசியலில் புலிகளின் பங்கு எத்தகையது?

சுருங்கக் கூறினால்: இது தமிழ் மக்களை ஆளத்துடிக்கும் தமிழ் மூலதனத்தின் முன்னெடுப்பு. அது மக்களின் அனைத்து வளங்களையும் மூலதனமாக்கி வைத்து யுத்த்தில் தன்னை முதன்மைப் படுத்தி வருகிறது!

இங்கே, தேசிய விடுதலை என்பது இருப்புக்கான-மக்களை அணி திரட்டுவதற்கான கோசமாகவே இருக்கிறது. ஆனால், இதைச் சாட்டாக வைத்துச் சிங்கள இனவாத அரசு தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து அழித்து வருகிறது. இது மக்களை காலவோட்டத்தில் சிங்கள அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் யுத்தாமாகச் சீரழிந்து போகிறது.

புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது. வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் யுத்தசூழலால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த யுத்த சூழலைத் தீர்மானித்த பொருளாதார முரண்பாடானது வரலாற்றுப்போக்கில் வெகுவாக முழுமொத்த மனித சமுதாயத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிறது. இந்நிலையில், மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதியூக்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம், மனித வளம் அழிக்கப்படுகிறது.

இதன் உச்சபச்ச நுகர்வூக்கம் மக்களின் உயிர்வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது. இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்? தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் தொடரும் யுத்தம் திருடிக்கொண்டிருக்கிறது. இது தேசத்தின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் அனைத்தையும் ஓப்பேற்றி முடிக்கும் கருத்துக்களை மிக அராஜமாக விதைக்கிறது. இதற்கெதிரான பார்வைகளைத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானதாகச் சொல்லித் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன. இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும், யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது. அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.

நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் யுத்த முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.

இப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது. சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது. வலுகட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் புலிகள் அதன் வாயிலாகப் "புலிகள் என்றால் தமிழர்கள், தமிழர்களென்றால் புலிகளெனும்" புதிய தத்துவத்தைச் சொல்லிக் கொள்ளும் கருத்துக்கு வலுச் சேர்க்கத் தமது பரப்புரைப் பீரங்கிகளையும் தயாராக்கி வைத்துள்ளார்கள்.

இந்தக்கேடுகெட்ட சமூக யதார்தமானது மனிதவுயிர்களைப் பலியெடுத்து எதிர்காலத்தை நாசமாக்கி வரும்போது தனித்த தேசங்களும் , மக்களினங்களும் தமது சுயநிர்ணயமான அரசை, வாழ்வை, பொருள் உற்பத்தியைக் கொண்டிருக்க முடியுமா?

தொடர்கின்ற இனங்களுக்கிடையிலான யுத்தங்கள் இறுதி இலட்சியத்தை அடைந்து மக்களை நிம்தியோடு வாழும் அரசியல், பொருளியல் வாழ்வைத் தருமா? இது சார்ந்து நாம் சிந்திக்கிறோமா? கற்பனைகளில் எவரும் அரசியல், பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது.

இத்தகைய கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டுப் புலிகள் செய்யும் யுத்தம் தமிழ்பேசும் மக்களுக்கு விடுதலையளிக்க முடியாது! பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு, அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல. புலிகளின் போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி இத்தகைய மக்களின் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே, மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும், உலகினடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி யுத்தத்துக்குள் திணிப்பது இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தேசத்தை விடுவிக்க முடியாது. இது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.

சமூக முரண்பாடுகளை வெறும் மொழிவழிக் காரணியளாகக் கருதும் தமிழ்மனம்-சிங்களமனம் எங்ஙனம் உருவாக்கப்படுகிறது? இந்த மனம் கட்டவிழ்த்துவிடும் உளவியற்பயங்கரம் மற்றைய மனிதர்களைக் கொல்வதில் எதேச்சையாக முடிவுகளை எடுக்கிறது. இது குண்டுகளைக்கட்டித் தலைமையை ஒழிப்பதால் அந்த அமைப்பையே அழித்துவிடலமென மனப்பால் குடிக்கிறது. நிலவுகின்ற அமைப்பை அழிப்பதற்கு-உடைப்பதற்கு முனையாமல் தனிநபர்களை அழிப்பதால் விடுதலை வர முடியாது. என்றபோதும், தற்கொலைத் தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களுமாக யுத்தம் சூடுபிடித்து மக்களைப் புரட்டியெடுக்கிறது!

இந்தச் சமூகத்தில் ஒடுக்குமுறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும், அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி, மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும். ஆனால், இனவாத்த்தைத் தூண்டும் இத்தகைய தாக்குதல்களால் இன்னும் வலுப்படும் சிங்களப் பேரினவாதமானது இலங்கையில் சிறுபான்மையினங்களைப் பூண்டோடு அழிக்கும் வலுவைச் சிங்களக் கூலிப்படைக்கு வழங்கி, அந்த இராணவத்தை தேசிய இராணுவமாக்கி இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கனவை நிறைவேற்றி விடுகிறது.

வன்னியில் கொட்டும் சிங்கள விமானங்களின் ஒவ்வொரு குண்டிலும் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது. அதை உணருமுடியாதளவுக்குப் "புலிப் பயரங்வாதத்தை" முன் நிறுத்தி வருகிறது தமிழ்ர்களுக்குள் இருக்கும் பதவி வெறிபிடித்த குழுக்களும், இலங்கை அரசும்.

தொடர்கிற யுத்தங்களால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!

நமது சமூக சீவியம் உடைந்து, நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது. இந்தக் கொடிய யுத்தங்கள் எமது தேசத்துள் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தருவதற்கில்லை.

மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை. மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்துள் மக்களை இருத்திவைப்பதைவிட்டு, மக்களின் பிரதான முரண்பாட்டைக் கையிலெடுத்து, அவர்களை அதன்வாயிலாக அணி திரட்டிக் கொண்டு புரட்சிகரமான போராட்டத்தைப் புலிகள் செய்யாத வரை, புலிகள் யுத்த்தில் பெறும் வெற்றிகள் நிலைத்த வரலாறாக இருக்கமுடியாதென்பதற்குக் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆதிக்கம் உடைந்தது நல்ல உதாரணம்.

எனவே, புலிகளின் போராட்டச் செல்நெறியானது தொடர் தோல்விகளைத் தந்திருக்கும் இன்றைய சூழலில் இலங்கை இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும். இதைப் புலிகள் அறிவார்களா?

ஈழத்தை ஆதரிப் போரும், ஆதரிக்காதோரும். . .

ப. வி. ஸ்ரீரங்கன்


அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்:

யாரும் பொதுப்படையான அதிகாரங்களை, ஆதிக்கத்தை, இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை. மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள். இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய "புலியெதிர்ப்பு, புலி ஆதரவு-சிங்களப்பாசிச அரச எதிர்ப்பு, ஆதரவு" என்ற நிலையிலுள்ளது.

நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென. இன்றைய காலங்கள் "அரசுகள்"என்ற அமைப்பின் காலமாகும். நம்மைப் படாதபாடு படுத்தும் "அரசியல்" தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை. அது தேசங்களின் தேர்வுகள், தெரிவுகள், திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.

இங்கே நடக்கின்ற "அரசியலானது"தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது. புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது. இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது. அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள். இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.

இத்தகைய சமூகச் சூழலில்; புலம்பெயர் மக்களில் பலர் தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களில் "நன்மை தீமை" என்பவற்றை நோக்குகிறார்கள். இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.

இந்த இழி நிலையில் மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு, இயக்கங்களின் அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது? இதற்குத் துணையாக மக்களை அணிதிரட்டி அவர்களின் நலனை முதன்மைப் படுத்தும் புதிய ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்புமில்லை. இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம் எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது. எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.

மாற்றுக் கருத்தாளர்களும், அவர்களின் குழி பறிப்பும்:

மேற்குலகுக்கு வரும் தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளானலும் சரி, அல்லது மாற்றுக் கருத்தாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பழைய பெரிச்சாளிகளும்சரி தமது அரசியல் இலாபங்களுக்காகப் பதவிகளுக்காக மக்களை ஏமாற்றும் புதிய புதிய கூட்டுகளுடன் அணிசேர்ந்து தமிழரின் சுயநிர்ணயவுரிமைப் போராட்டத்தை(இதைப் புலியிடமிருந்து புரிந்து கொண்ட மூளையால் பார்க்கவேண்டாம்!புலிகளுக்கும் இதுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது)நசுக்கித் தமது வாழ்வை மேம்படுத்தத் திட்டமிட்டு செயற்படுகிறார்கள். இதைக் கவனிக்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழர்கள் "இயக்க வாத மாயையுடன்"எதிர்த்துக் கருத்திட்டு, அறிவால் வெல்ல முடியாது- அறிவின்றித் தவிக்கிறார்கள். இவர்களிடம் இறுதியில் உணர்ச்சி வசப்பட்ட தூஷண வார்த்தையே ஆயுதமாகிறது. அப்பாவி மக்களை வழிப்படுத்தி, அவர்களிடமிருக்கும் போராட்டவுணர்வை, இயக்கவாத மாயையிடமிருந்து காத்து இந்த மக்கள் விரோத அரசியலை வென்றாக வேண்டும்.

ஆனால், இங்கு நடப்பதோ வேறான நிலை. நம்மில் பலரிடமுள்ள"Tamil mind"செயற்படாமல் இருக்கிறது. இது உயிருக்குப் பயந்து நடுங்கி ஒடுங்கிப்போயுள்ளது. இவர்கள் "We are the Free"என்று தப்பித்துக்கொள்வதற்குப் புலிகளின் மக்கள் விரோத அரசியலே காரணமாகிறது. இதனால் பதவிக்காக இனத்தையே பலியிடும் மூன்றாம்தர அரசியலை ரீ. பீ. சி. வானொலிக் குழு முன்னெடுக்கிறது. இத்தகைய சூழலில் மக்கள் சார்ந்த நலன்களைத் தமது பதவிக்காகப் பொருள்தேடும் நோக்குக்காக இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் பயன் படுத்தி வெற்றி பெறுவதை இனியும் பார்த்திருக்க முடியாது.

பண்பாட்டு மௌனமும், பண்பாட்டு இடைவெளியும்:

ஈழத்தை ஆதரிப் போரும், ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(;Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள். இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைக்கின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிறது. இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது. இங்கே இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை. இன்றைய வர்க்க அரசியலில் வர்க்கத்தைத் தாண்டிய எந்த மக்கள் நலனும் கிடையாதென்ற அடிப்படை அரசியல் அரிவரிப் பாடம்கூடப் புரியாது தம்மை மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவர்களாகவும் மற்றவர்களைச் சாடவும் உரிமையை எடுத்துவிடுகிறார்கள். ". Microphysics is feeling its way into the unknown side of matter, just as complex psychology is pushing forward into the unknown side of matter, just as complex psychology is pushing forward into the unknown side of the Psyche!"-G. G. Jung இதுதாம் யுங்கின் கூற்றிலிருந்து இவர்களைப் பற்றி நான் புரிவது. இந்தப் புள்ளியே மிக மோசமானது. இது புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுகிறதென்பதை மறந்துவிட்டுப் புது பாக்களைத் தொகுத்துவிடுகிறது. இல்லாதுபோனால் மற்றவர்களுக்குப் புதுப் புதுத் தொப்பியைத் தைத்து அழகு பார்க்கிறது.

நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற உலக ஏகாதிபத்தியத்துக் ஆதரவான கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும், கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.

இதனால் சிங்கள அரசு இந்தியாவோடு சேர்ந்து காய் நகர்த்தும் அரசியல்-ஆதிக்கப் போரை எதிர் கொண்டு தோற்கடிக்க முடியாத வெறும் கையாலாகாத இனமாகத் தமிழ் மக்கள் சீரழிந்துள்ளார்கள். இந்த நிலையில் ஆயுதக் குழுக்களின் தோற்றத்தின் பின் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பறிக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை கொலைகளும், பாலியல் வல்லுறவும் எமது மக்களின் ஆன்ம பலத்தையே காவு கொண்டுவருகிறது.

இங்கே நேர்ந்தது என்னவென்றால்"ஆரு குத்தியும் அரிசியானால் சரி" என்ற தனிமனிதத் திருப்தியுறும் மனதின் பண்பாடே! இதுவேதாம் பண்பாட்டு மௌனத்தின் ஊற்றுமூலமாகும். இதன் தொடர்ச்சியானது ஆயுதக் குழுக்களால் வன்முறை சார்ந்த சமூக ஒடுக்குமுறையாக விரிந்தபோது அதுவே பண்பாட்டு இடைவெளியை இன்னும் அதிகமாக்கியது. இதனால் நாம் உயிர் தப்பிவிடுவதே தனிமனித விருப்பாக நமது சமூகத்துள் முகிழ்த்தது. இந்த விருப்புறுதியின் தேர்வே இன்றைய படுகொலைகளின் நீட்சியாகும். இதுதாம் நமது பண்பாட்டு மௌனம் தந்த அரசியலாகும்.

பண்பாட்டு இடைவெளியை, மௌனத்தை உடைக்கும் எழுத்து இயக்கம்:

இந்தச் சமூக அவலத்தின் காரணமாக எழுந்த எதிர்ப்பியக்கமாக நமது கல்வியாளர்களில் அற்பமான பகுதியினர் செயற்பட்டபோது அவர்கள் அழிக்கப்பட்டார்கள். எங்கள் கவிஞர்கள் சிவரமணி தன்னையே அழித்தாள் இதைக் கண்ணுற்று, கவிஞர் செல்வியோ கடத்தப்பட்டுக் காணாதுபோனாள். இருளின் தூதர்களான ஆயுதக் குழுக்கள் இந்த் தமிழினத்தின் ஆன்ம பலத்தையே உடைத்தெறிந்து அவர்களின் போராட்ட மனதைத் தகர்த்தபோது இதை எதிர்த்துக் கவிதை எழுதிய ஜெயபாலன், சேரன் போன்றவர்கள் இறுதியல் ஆயுத தாரிகளின் அற்ப சலுகைகளுக்காகப் பண்பாட்டு மௌனத்தைக் கடைப்பிடித்து, அந்தவகை அரசியலுக்குள் அமிழ்ந்துபோயினர். செழியனின் அற்புத மான கவிதை வரிகள் இந்த மௌனத்தை உடைக்கப் போரிட்டுக் கொண்டது.

"யேசுவே! நீர் தேடப்படுகிறீர். யேசுவே எங்கள் தேசத்தில் நீர் தேடப் படுகிறீர். கிறிஸ்த்துவ தேவாலயமொன்றில்உமது சீடர்களுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கவோ, மாட்டுக் கொட்டிலொன்றில் வைத்தோ, மரித்துப் போன மனிதன் எவனாவது மரண ஊர்வலத்திலோ நீர் காணப்படுவீராயின் கைது செய்யப்படுவீர். . . "என்றும்,

"விசாரணையின் முடிவில் சிலுவையிலல்ல தேசத் துரோகியாக மின் கம்பத்தில் அறையப் படுவீர்" என்றும் செழியனின் எழுத்துக்கள் இந்த மௌனத்தை உடைக்கப்பாடுபட்டது.

அந்தச் செழியன் கனடாவில் இன்று மௌனமானார்!

வனத்தின் அழைப்பை எழுதி என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரமணீஸ் என்ற இயற் பெயருடைய அஸ்வக் கோஸ்இன்று தினக்குரலில் பனுவல் பக்கத்தின் பொறுப்பைக் கவ்விக்கொண்டு மௌனமானார். எங்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பி, சிவசேகரம், கணேசலிங்கம். . . இத்தகைய சூரர்களுக்கும் மத்தியல் தொடர்ந்து குரல் எறிந்து இந்த மௌனத்தை உடைப்பதிலும் மக்கள் நலன் அரசியலுக்குமாக நாம் போரிட்டு வருகிறோம்.

உதிரிப் புலி எதிர்ப்பு:

இப்போது நடைபெறும் வானொலி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம், அரசியல், சுயநிர்ணயவுரிமை, தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை, தமிழ்ப் பண்பாட்டை, வரலாற்றை அனைத்தையும் எதிரானவோர் அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது. இந்தத் தமிழ் உதிரிப் பதிப்புகள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது. இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும், திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது. திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகள் முடங்கியுள்ளார்கள்.

பிராமணர்கள்போலதாம் இன்றைய புலி எதிர்ப்புக் குழுக்களுக்குள் உள்ள இலங்கையரச சார்பாளர்கள் தமது நலனுக்காக மேற்கூறிய தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வுக் கூறுகளையே அந்நியர்களுக்கு விற்கிறார்கள். இந்த நிலையிலும் இலங்கைத் தமிழினம் தனது அரிசியல் அபிலாசைகளை இன்னும் நம்பிக்கையோடு கனவு காணுகிறது.

சங்க காலத்திற்குப் பின் தொடர்ந்து பல அந்நிய ஆட்சிகளின் கீழ் தனது அடிமை விலங்கைப் புதுபித்துவரும் தமிழினம் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்று முழங்கிய ஆயுதக் குழுக்களாலும், அரசுகளாலும் ஏமாற்றப்படுவது நிசமாகி வருகிறது.

Tuesday, December 4, 2007

உ.பி.:தலித்திய ஆட்சி பார்ப்பனிய நீதி

த்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.


கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் இருக்கும் பாதேவெரா எனும் சிற்×ரின் தலித் குடியிருப்பை சேர்ந்தவர், 21 வயது நிரம்பிய சக்ராசென் கவுதம். சாமர் எனும் தலித் சாதியை சேர்ந்த சக்ராசென் பி.ஏ. பட்டம் முடித்து, எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனும் முயற்சியில் ரயில்வே உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டும், ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டும் இருந்தார். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட சக்ராசென்னையும் அவரது இரு சகோதரர்களையும் அவர்களின் தாத்தா, சிவ்மூர்த்திதான் படிக்க வைத்து வந்தார்.


2004இல் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவராக தலித் ஒருவர் இருந்தபோது, ரேசன் கடை நடத்தும் உரிமையை இவர்களின் குடும்பத்திற்கு வழங்கி இருந்தனர். தலித் சேரியின் அண்மையில் இருக்கும் பார்ப்பன குடியிருப்பை சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா, தான் நடத்தி வரும் கடையில் சந்தை விலைக்கு விற்று லாபமீட்டுவதற்காக, சிவ்மூர்த்தி, தனது ரேஷன் கடையில் இருந்து அதிக அளவில் ரேசன் பொருட்களைத் தந்தாக வேண்டுமென நிபந்தனை விதித்தார். இதற்கு உடன்பட சிவ்மூர்த்தி மறுத்து விடவே சந்தோஷ் மிஷ்ரா, இந்த தலித் குடும்பத்தினர் மீது வன்மம் கொண்டிருந்தார்.மேலும், தலித் இளைஞரான சக்ராசென் உயர்கல்வி கற்றுள்ளதைக் கண்டு பொறாமையும் ஆத்திரமும் கொண்டிருந்தார்.


பத்து மாதங்களுக்கு முன்பு கூட மிஸ்ரா, ""உங்கள் பேரனை அதிகம் படிக்க வைத்து விட்டீர்கள். ஆனாலும் அவனால் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை, பாருங்கள்!'' என்று சக்ராசென்னை ஒழித்துக் கட்ட இருப்பதாக சிவ்மூர்த்தியிடம் மிரட்டி இருக்கிறார். உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் உள்ளூர் போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டதால் மிஸ்ரா விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். உடனே உள்ளூர் தாக்குர்கள் (ஆதிக்க சாதியினர்) சிவ்மூர்த்தியிடம் "இது உள்ளூர் விசயம். நமக்குள் பேசித் தீர்க்கலாம்' என்று கூறி புகாரை திரும்பப் பெற வைத்தனர். ஆயினும், அவரின் பேரன் உயிருக்கிருந்த ஆபத்து நீங்கிவிடவில்லை. ""உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்'' என்றும் ""ஒழித்துக்கட்டுவேன்'' என்றும் பார்ப்பன மிஸ்ரா பகிரங்கமாக மிரட்டிக் கொண்டிருந்தார்.


கடந்த ஜூலை 30ஆம் நாள் இரவு அலகாபாத்தில் இருந்து ஊர் திரும்பிய சக்ராசென் கவுதம், வழக்கம்போல மறுநாள் அதிகாலையில் ஓட்டப்பயிற்சி செய்ய வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார். அவரை இன்னொரு தலித்தான இந்திரஜித் பாஸ்வான் என்பவரின் வீட்டில் வைத்து கட்டிப் போட்டு ஒரு கும்பல் அடித்து உதைத்துக் கொண்டிருக்கும் தகவலை அறிந்த சக்ராசென்னின் தாத்தாவும் தம்பியும் விரைந்து சென்று பார்த்தபோது, இரத்த வெள்ளத்தில் கிடந்த சக்ராசென்னுக்கு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.


""பாஸ்வானின் குடிசைக்கு நீ எப்படி வந்தாய்?'' என அவர்கள் கேட்டதற்கு, சந்தோஷ் மிஸ்ரா மற்றும் ஆகாஷ் துபே ஆகிய இரு பார்ப்பனர்களின் பெயர்களை உச்சரித்து விட்டு குற்றுயிராய்க் கிடந்த சக்ராசென் மரணமடைந்தார். கொலையாளிகள் இருவரும் தலைமறைவானார்கள். போலீசோ பாஸ்வானையும் அவரின் இரு சகோதரர்களையும் கைது செய்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்ட இன்னொரு தலித்தைக் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளது.


கொலைகார பார்ப்பனர்களைக் கைது செய்யவிடாமல் உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராம் ஷிரோன்மணி சுக்லா தடுத்து வருகிறார். பார்ப்பன சாதியை சேர்ந்த ஆளும்கட்சி எல்.எல்.ஏ.வான இவருக்கு, கொலையாளிகள் இருவரும் நெருங்கிய கூட்டாளிகள் மட்டுமல்ல; ஒரே சாதியையும் சேர்ந்தவர்கள்.

5 லட்ச ரூபாய் தருவதாயும், இரண்டு பார்ப்பனர்கள் மீதான புகார்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்த எல்.எல்.ஏ. பேரம் பேசியுள்ளார். சக்ராசென் கவுதமின் குடும்பமோ கொல்லப்பட்ட சக்ராசென்னின் உடலை காரில் கொண்டு சென்று மாயாவதி வீட்டு முன் வைக்க முயன்றது. ஆனால் சுக்லாவும் போலீசாரும் கார் ஓட்டுநரை மிரட்டி இதனைத் தடுத்து விட்டனர். கொலையாளிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வே உதவுகிறார் என்பதை அம்மாவட்ட பகுஜன் சமாஜின் தலைவராக இருக்கும் தலித் ஒருவரிடம் சென்று சக்ராசென் குடும்பத்தார் முறையிட்டனர். தலித்தாக இருந்தாலும் அவரோ அந்த ""சட்டமன்ற உறுப்பினர், அவரின் சாதிக் கடமையைச் செய்யத்தானே செய்வார்'' என்று சாதி வெறியர்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.


இக்கொலைக்குப் பின்னர் அந்த வட்டாரத்தில் இருக்கும் பார்ப்பன சங்கமான "பிராமண சகோதரத்துவக் குழு'வுக்கு புதுத்தெம்பு பிறந்து விட்டது. பாதேவெரா கிராமத்தின் தலித் சேரியைச் சுற்றி வந்து நக்கலான முழக்கம் ஒன்றை அக்கும்பல் முழக்கிச் செல்கின்றது. ""பிராமணர்கள் சங்கு ஊதட்டும்... பகுஜன் சமாஜிகள் தில்லிக்கு செல்லட்டும்'' என்பதே அந்த முழக்கம்.


சக்ராசென் கொலை செய்யப்பட காரணம், அவர் தலித் என்பதால் மட்டுமல்ல; சுயமரியாதையோடு படித்து முன்னேறத் துடித்த தலித் இளைஞர் என்பதால்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த உண்மை ஒருபுறமிருக்க, தலித் ஒருவர் முதல்வராக இருந்து ஆட்சி செய்தாலும், இன்றைய அரசியலமைப்பு முறையின் மூலம் சாதிவெறிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்பதையும் தனது உயிர்த்தியாகத்தின் மூலம் உறுதி செய்திருக்கிறார், சக்ராசென்.


ஆனால், பகுஜன் சமாஜின் பார்ப்பனக் கூட்டை சாதி ஒழிப்புக் குரிய போர்த்தந்திரமாகக் கருதி பல அறிவாளிகளும் அரசியல் விற்பன்னர்களும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தலித்களும் பிற சாதி உழைக்கும் மக்களும் ஒன்றுபடாமல் வெறுமனே ஓட்டுப் பொறுக்கித் தலைவர்களிடையேயான கூட்டணியால் தலித்கள் விடுதலையை வென்றெடுக்கலாம் என்பதும், பார்ப்பனர்களுடனான கூட்டணி தலித்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி விடும் என்பதும் எவ்வளவு மோசடியானது என்பதை மாயாவதியின் தலித்திய ஆட்சியே நிரூபித்துக்காட்டிவிட்டது.

· கவி

தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா?

பி.இரயாகரன்
04.12.2007

ப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்ப்பதில்லை. வர்க்க அடையாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

பேரினவாதம் குண்டை வீசும் போதும் சரி, ஒரு பிரதேசம் மீதான தாக்குதலை நடத்தும் போதும் சரி, மக்கள் கூட்டத்தை வெளியேற்றும் போதும் சரி, ஏன் இன்று நடக்கும் கொழும்புக் கைதுகள் கூட, தமிழன் மீதான அடையாளம் மீது தான் மீள மீள பேரினவாதத்தை நிறுவிக்காட்டுகின்றன.

இந்த அரசு என்பது சிங்களப் பேரினவாத பாசிச ஆட்சி தான். இதையே அவர்கள் உறுதிசெய்கின்றனர். தமிழ் மக்களுக்கு இந்த அரசால் மீட்சி கிடையாது என்பதையே, வரலாறு தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றது.

எப்படித்தான் தமிழ் மக்கள் மீட்சி பெறுவது? தமிழ் மக்கள் சொந்தமாய் மூச்சுக் கூட விட முடியாத வகையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே தாம் எனக் கூறிக்கொண்டு, அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு புலிகளின் பாசிசம் எதிர்த்தளத்தில் ஆடுகின்றது.

பேரினவாதத்தின் ஒன்று குவிந்த அந்த பாசிசத்தை எதிர்ப்பதற்கு அதனால் முடிவதில்லை. தனக்குள் ஆயிரம் ஒடுக்குமுறைகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதை பாதுகாத்தபடி, பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொள்ள முடிவதில்லை. சிங்கள பேரினவாதம் என்ற எதிரிக்கு எதிராக, தமிழ்மக்களை அழைத்துச் செல்ல புலிகளால் முடிவதில்லை. மாறாக சிங்கள பேரினவாதம் தமிழன் என்ற அடையாளம் ஊடாக தாக்குதலை நடத்தும் போது, புலிகள் தமிழனுக்குள்ளான அடையாளங்கள் மீது தாக்குதலை நடத்துகின்றது. புலிகளால் தமிழ் மக்களை முரண்பாடுகளை களையும் ஒரு புரட்சிகர தலைமை ஊடாக மக்களை வழிநடத்த முடிவதில்லை. முரண்பாடுகள் மீது தாக்குதலை நடத்தி, தமிழரைப் பிளந்து எதிரிக்கு அதை சாதகமாக்கிவிடுகின்றனர். இப்படி சிங்கள பேரினவாதத்தைப் பலப்படுத்தி நிற்கின்றனர்.

இந்த சிங்களப் பேரினவாதமோ, ஒட்டுமொத்த தமிழர் மீது பாரிய தாக்குதலை நடத்துகின்றது. இன்று கொழும்பை மையமாக வைத்து நடாத்துகின்ற இன சுத்திகரிப்பு கைதுகள் பேரினவாத முகத்தை மறுபடியும் நிறுவுகின்றது. இப்படி இலங்கையில் அதி பயங்கரமான சிங்கள பேரினவாதம் மேலேழுந்து நிற்கின்றது.

அரசு, புலிகளின் குண்டு வெடிப்புக்களை காரணம் காட்டி, பேரினவாத பாசிச நடத்தைக்கு நியாயம் கற்பிக்கின்றனர். புலிகள் குண்டு தாக்குதலை வெறும் பயங்கரவாதமாக காட்டப்படுவதை நாம் அங்கீகரிக்க முடியாது. சிங்களப் பேரினவாதம் அரசு பயங்கரவாதம், ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மேல் எவிவிடப்பட்டுள்ளது. அதன் விளைவுகள் தான், மக்களில் இருந்து விலகிய புலிப் பயங்கரவாதம். இதைக்காட்டி தமிழ் இனம் மீது தாக்குதலை நடத்துவதை நாம் அங்கீகரிக்க முடியாது.

புலிகளின் குண்டு வெடிப்புகளை நாம் மற்றொரு கோணத்தில் மட்டும் தான், விமர்சிக்க முற்படுகின்றோம். அப்பாவி மக்கள் மேலான தாக்குதலாக இருப்பதையும், இது போன்ற குண்டு வெடிப்புகள் மூலம் எதையும் தமிழ் மக்களுக்காக சாதிப்பதில்லை என்ற கோணத்தில் இதை விமர்சிகின்றோம்.

மாறாக பேரினவாத அரசு இயந்திரம் மீதோ, அதை ஒட்டிய கூறுகள் மீதான தாக்குதலை இட்டு நாம் அக்கறை கொள்வதில்லை. இரண்டும் மக்கள் விரோத ஆளும் வர்க்கங்கள், தமது சொந்த அதிகாரத்துக்காக தாக்குதலை நடத்துகின்றனர். இதையும், இதன் எல்லைக்குள்ளும் அதன் அரசியலை விமர்சிக்கின்றோம்.

அப்பாவி மக்கள் மேலான தாக்குதலை (புலியின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசு செய்தாலும் சரி அல்லது புலி அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் செய்தாலும்) ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்பதால் தாக்குவது. சிங்களவன் என்பதால் தாக்குவது என்ற அரசியல், படுபிற்போக்கானது.

இன்னொரு கோணத்தில் இதுபோன்ற தாக்குதல் மூலம், புலிகள் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதை கொடுக்க முனைகின்றனர் என்ற விடையம் எமது விமர்சனத்துக்குரியது. இது போன்ற தாக்குதல் மூலம், தமிழ் மக்கள் மேலான புலிகளின் அடக்குமுறையாக அது மாறுகின்றது. அத்துடன் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவோர், எந்த சமூக இலட்சியத்தையும் அடைவதில்லை என்ற உண்மையை, இங்கு நாம் விமர்சன நோக்கில் பார்க்கின்றோம்.

தமிழ் மக்களோ இரண்டு தரப்பால் பலியிடப்படுகின்றனர். இப்படி மீட்சிக்கான பாதை கிடையாது. எல்லாம், எல்லாத்தரப்பாலும் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றது. மக்கள் இடையில் சிக்கி நசுங்குகின்றனர்.

இப்படி தமிழ் மக்களை தலைமை தாங்கி, அவர்களை வழிகாட்ட முடியாது புலிகள் தோற்றுவிட்டனர். இதைப் பயன்படுத்தி பேரினவாத அரசு, ஒருபுறம் புலிகள் மேல் பாரிய யுத்தத்தை தொடுத்துள்ளனர். புலிகள் பாரிய நெருக்கடிகள் ஊடாக சிதைந்து கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் மொத்த தமிழ் மக்கள் மேலான அரச பயங்கரவாதத்தை, சிங்கள பேரினவாத அரச ஏவிவிட்டுள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பிரதேசம் எங்கும், பேரினவாதம் படுகொலை அரசியலை நடத்துகின்றது. சிங்களப் பகுதிகளில் தமிழ் இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்.

தமிழன் என்ற அடையாளம் கொல்லவும், சிறையில் தள்ளவும் போதுமான காரணமாகியுள்ளது. தமிழனின் நிலை இது. இன்று இதைச் சுற்றித்தான் சகலதும் இலங்கையில் இயங்குகின்றது.

பேரினவாத அரசு பெரும்பான்மை இன்றி திணறுகின்றது. பெரும்பான்மை இனவாதிகளாக இருந்த போதும், அதிகாரப் போட்டி பெரும்பான்மையை கேள்விக்குள்ளாக்கின்றது. இந்த நிலையிலும் இந்த பேரினவாத தமிழ் விரோத யுத்த அரங்கு, உயர்ந்த இனவாத அதிகாரங்களைக் கொண்டு இயங்குகின்றது. அது உயர்ந்தபட்ச பாசிச நடைமுறையைக் கொண்டு செயல்படுகின்றது. எந்த நெருக்கடியையும் எதிர் கொள்ளும் திறனை, ஜனாதிபதியின் கீழான அவரின் குடும்ப அதிகாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும், இராணுவ அதிகாரங்கள் கொண்ட இராணுவ ஆட்சியாக மாறும் போக்கில் இலங்கை வேகமாக மாறிச் செல்லுகின்றது.

அதை நோக்கிய சர்வதேச உறவுகள், சர்வதேச முடிவுகளை எடுக்கின்றனர். இன்று உள்நாட்டில் பாராளுமன்றத்தின் கீழ் ஆட்சியிருந்தும் கூட, சட்டபூர்வமான இராணுவ ஆட்சிதான்.

இது தமிழ் மக்கள் மேல் முழுமையாக பாய்கின்றது. தமிழர் மீது பல முனைத் தாக்குதலை நடத்துகின்றது. சில மாதத்துக்கு முன் தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி விரட்ட முனைந்தது. இன்று பெருமளவிலான கைது சிறை என்று, தமிழ் இனம் மீதான ஒரு இனவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

இப்படி ஒரு இனம் அங்கும் இங்குமாக பந்தாடப்படுகின்றது. விட்டில் பூச்சியாகி, இந்த இனவாத தீயில் மக்கள் வீழந்து மடிகின்றனர். மூச்சுக் கூட விட முடியாத மனித அவலம். புலிகள் பிரதேசத்தின் ஒருவிதம். புலியல்லாத பிரதேசத்தில் மற்றொரு விதம். முடிவற்ற மனித துயரங்கள். ஒரு இனத்தின் அழிப்பு எங்கும் எதிலும் நடந்தேறுகின்றது.

புலியல்லாத சிங்களப் பிரதேசத்தில் வாழ்பவர்கள், ஏதோ ஒரு காரணத்தினால் புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்கள் தான். அவர்கள் தான் இன்று, சிங்கள பேரினவாத சிறைக் கொட்டகைகளில் தள்ளப்படுகின்றனர். ஒரு இனவாதம் இப்படித் தான் செய்யும். ஜெர்மனிய நாசிகள் இப்படித் தான், இந்த வழிகளில் தான் யூதரை வேட்டையாடியது. இலங்கையில் இவை ஆரம்பத்தில் உள்ளது.

தலைமுறை தலைமுறையாக வாழ்வை இழக்கும் தமிழ் மக்கள். வாழ்வில் விடிவின்றி அங்குமிங்கமாக அலையும் வாழ்க்கை. இடைத்தரகர்களின கொண்டாட்டங்கள், ஊடாக தமிழ் இனம் நலமடிக்கப்படுகின்றது.

மலையக மக்களுக்கும் இதே கதி. உலகமயமாதல் வாழ்வையே சூறையாடிவிட, பிழைப்புத் தேடி வரும் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி. தமிழ் மக்களையே சிறைகளில் இட்டுச் செல்கின்ற ஒரு பேரினவாத அரசு. திரும்பிய இடம்மெங்கும் வாழ்வை இழப்பதை தவிர, தமிழ் மக்களுக்கு வேறு வழி கிடையாது.

புலிகளின் பிரதேசத்திலும் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது. அங்கு ஒரு காட்டுத் தர்பார். இங்கு மற்றொரு காட்டுத் தர்பார். ஒரு இனம் நிம்மதியாக வாழமுடியாத நிலை. தமிழ் மக்களின் பெயரில் இவர்கள் நடத்துகின்ற அராஜகம் சொல்லி மாளாது. மக்களின் துன்பம், அவர்களின் அலஸ்த்தை, யுத்தம் செய்கின்ற இரு தரப்புக்கும் கொண்டாட்டமாகி களிப்பூட்டுகின்றது.

இப்படி ஈவிரக்கமற்ற மனித விரோதகளாகிவிட்ட தமிழ் சிங்கள தலைவர்கள். தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வில்லை என்பதே, இன்று இலங்கையில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் தொடாச்சியாக எடுத்துக் காட்டுகின்றது.

Monday, December 3, 2007

தமிழ் தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமல்ல

பி.இரயாகரன்
04.12.2007

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் தங்களைத்தாமே ஆள்வதற்கும், தமது சமூகத் தேவைகளை அடிப்படையாக கொண்ட போராட்டமாக தேசியத்தை காண மறுப்பதும், இன்று அரசியல் எதார்த்தமாகவுள்ளது.

இதற்கேற்ப தேசியத்தை சிதைத்துவிடுகின்றனர். பின் போராடுவதாக காட்டுவது, அதை நியாயப்படுத்துவது, தேசியத்தை மறுத்தல் மூலம் தேசியத்தைக் கொச்சைப்படுத்துவது, என்ற போக்குகள் நிகழ்கின்றது. இதனடிப்படையில் புலியெதிர்ப்பு ராகவன் தேசியத்தை எதிர்க்கக் கூறுவதைப் பாருங்கள். 'நாடளாவிய தேசியம் தனது பிரசைகளை தவிர மற்றவரை அன்னியராக்குகிறது. இன ரீதியான தேசியம் இன்னுமொரு படி மேலே போய் தனது இன வரைவிலக்கணத்துள் பொருந்தாத அனைவரையும் அன்னியராக்குகிறது." சுத்தமான அரசியல் சூனியவாதம். தேசியம் அல்லாத, தேசிய பிரசைகள் யார் இருக்க முடியும். ஒரு நாட்டின் தேசிய பிரசைகள் என்பது, அந்த மண்ணை தனது மண்ணாக கொண்ட அனைவரையும் குறிக்கின்றது. இது எப்படி இல்லாத ஒன்றை அன்னிமாகும். கற்பனையில் யாரும் அதை உருவாக்கி, அன்னியமாக்கிவிட முடியாது.

தேசியம் கொண்டுள்ள சமூகக் கூறுகளை மறுக்கின்ற போதுதான், சமூகப் பிரிவுகள் அன்னியமாகின்றனர். இது தேசியத்தின் குற்றமல்ல. இதை முன்னனெடுக்கின்ற சமூகப்பிரிவுகளை உள்ளடக்கிய ஆதிக்க வர்க்கங்களின் குற்றமாகும்.

தேசியத்தின் சமூகத் தன்மையை மறுக்கும் போது, அந்த தேசியம் பிற்போக்கு கூறாகிவிடுகின்றது. தேசியம் என்பது சமூகக் கூறாக, மனித வாழ்வைச் சுற்றி இயங்குகின்றது. சமூகத்தில் நிலவும் ஒவ்வொரு ஒடுக்குமுறைளையும் களையாது, தேசம் சரியான தேசியப் போராட்டத்தை உருவாக்காது. இதற்கு மேல் தேசியதுக்கு மாற்று விளக்கம் கிடையாது. சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறையையும், தேசியம் களையப் போராட வேண்டும். இதிவல்லாத எதுவும் தேசியமல்ல.

இதற்கு புறம்பான தேசம், தேசியம் பற்றி வரையறைகள், உள்ளடக்க ரீதியாக பிற்போக்கானது. அது தனது போராட்டத்தை மக்களைச் சார்ந்து எடுத்துச் செல்லமுடியாது. அதுவே மக்கள் மேலான ஒடுக்குமுறை கொண்ட ஒன்றாக பரிணமிக்கின்றது. ஒற்றைப் பரிணாமத்தில் தேசியத்தை காட்டி, அதையே மறுப்பது என்பது, அதற்குரிய முற்போக்கு சமூக பாத்திரத்தை மறுத்தலாகும். சமூகம் சார்ந்த எந்தப் போராட்டமும், முற்போக்கான சமூகக் கூறுகளாலானது.

இதைக் காணவிடாது அதை திரிப்பது என்பதே புலியெதிர்ப்பு அரசியல் சாரம். இது தேசியத்தை புலியில் இருந்து காட்டுகின்ற நயவஞ்சகத்தனமாகும். புலிக்கு வெளியில் வேறு தேசியம் இருக்க முடியாது என்று புலியெதிர்ப்பு, புலி அரசியல் தான் இதைக் கூறுகின்றது. 'தேசியவாதம் ஒரு புறம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒற்றைப் பரிமாண அடையாளத்துள் குறுக்குகிறது. மறுபுறம் சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறைக்கப் பார்க்கிறது." இதை புலிகள் செய்வதால், புலிகளாகவே தேசியத்தை சிந்திக்கும் ராகவனாலும் மீள கூற முடிகின்றது.

'சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறை" க்காத தேசியம் இருக்கமுடியாது என்று கூறுவது தான், புலித் தேசியம். அதுபோல் தான் புலியெதிர்ப்பு தேசியமும் கூறுகின்றது. என்ன அரசியல் ஒற்றுமை. வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை களையக் கோரி போராட்டம், இந்த மண்ணில் நடந்துள்ளது. இதை வசதியாக வசதி கருதி மூடிமறைப்பது தான் புலியெதிர்ப்பு அரசியல். உண்மையில் இதற்காக போராடியவர்கள் நினைவுகளைக் கூட, இவர்கள் அங்கீகரிப்பது கிடையாது. அந்தளவுக்கு இதை களைவதற்கு எதிரானவர்கள் இவர்கள்.

இலங்கையில் அமைதி வேண்டி தீர்வுகளைத் தேடும் இந்த கனவான்கள், இதை களைவதை தமது தீர்வுத் திட்டத்தில் சேர்க்கவே மறுக்கின்றனர். இங்கு இவர்களே அதை மூடி மறைக்கின்றனர். வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை களையும் தீர்வுத் திட்டத்தை, இவர்கள் முன்வைப்பதில்லை. அதை களைய போராடுவது கிடையாது. நீங்களே அதை மறுக்கும் போது, புலிகள் போன்ற பாசிச இயக்கங்கள் எந்த மாத்திரத்தில் இதைக் களைந்துவிடும்.

மற்றவனுக்கு சொல்ல முன் உங்கள் வேலைத்திட்டம் இதை எப்படி களைய முனைகின்றது என்றல்லவா வைக்க வேண்டும். தேசியம் அதை சமூக வேறுபாடுகளை களையாது என்றால், எதுதான் அந்த வேறுபாடுகளைக் களையும். உங்கள் அரசியல் தீர்வுகளும் கூட அதை நிராகரிக்கின்றது. தேசியத்தை எதிர்க்க இப்படி பூச்சாண்டி காட்டுகின்றீர்கள்.

உண்மையில் எங்கும் இதை மூடிமறைத்து பாதுகாக்க விரும்புவது, அது கொண்டுள்ள வர்க்க அரசியல் தான். அது புலியாக இருந்தால் என்ன, புலியெதிர்ப்பாக இருந்தால் என்ன, இரண்டும் ஒன்றுதான். 'சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறை"த்து பாதுகாப்பது தான். இது புலித்தேசியத்தின் கூறு மட்டுமல்ல, புலியெதிர்ப்பு தேசிய மறுப்பின் கூறும் கூட.

பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் 'சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை" களைய போராடுகின்றது. இதை தேசியத்திலும் சரி, தீர்விலும் சரி இதையே தனது வேலைத் திட்டமாக கொள்கின்றது.


தமிழ் தேசியம் என்பது வேறு, புலித்தேசியம் என்பது வேறு

பி.இரயாகரன்
03.12.2007

புலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க முடிகின்றது. தனிப்பட்ட நான் என்ற தனிமனித தனமல்ல, மக்களைச் சார்ந்து நிற்பது. இரண்டும் வேறு என்ற அடிப்படையிலான அரசியல் அம்சம் தான், மக்களைப் பற்றி எம்மை பேச வைக்கின்றது.

இரண்டும் ஒன்று என்ற அம்சம், மக்களைப்பற்றி சிந்திக்க வைப்பதில்லை. இதுவே எதார்த்தமான உண்மை. தேசியத்தை புலிகள் ஊடாகப் பார்க்கின்ற புலியெதிர்ப்பு வாதம், இரண்டும் பிரதான மக்கள் விரோத நிலையை இயல்பாகவே எடுக்கின்றது.

1. மக்களின் உண்மையான தேசியத்தை முன்னெடுக்க அது தானாகவே மறுக்கின்றது.

2. மக்களையும் புலிகளையும் ஒன்றாக்கி, மக்களை எதிர் நிலைக்கு தள்ளிவிடுகின்றது.

இதற்குள் தான் இன்று புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது, நிறுவவும் முடியாது.

ராகவன் பேசும் புலியெதிர்ப்பு அரசியலைப் பாருங்கள் 'தமிழ் சிங்கள தேசியவாதம் இரண்டும் அதன் அரசியல் தளத்தில் ஒன்றல்ல. ஆனால் கருத்தியல் நோக்கில் ஒன்றாக இருக்கிறது. சிங்கள தேசியவாத கற்பிதத்தின் அதே தளத்தில் தான் தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது. தேசியம் கற்பிதம் என்பதற்கான கருத்து தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே. தமிழன் என்பதற்கான அடையாளம் என்பது என்ன என்பதை ஆழ்ந்துநோக்கினால் அது புரியும். சாதிய படிமுறையை கற்பிதம் என கூறுவது அபத்தம். சாதி உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பிதமல்ல." என்கின்றார்.

'அரசியல் தளத்தில் ஒன்றல்ல. ஆனால் கருத்தியல் நோக்கில் ஒன்றாக இருக்கிறது" இது என்ன? கருத்துக்கு வெளியில் அரசியல், அரசியலுக்கு வெளியில் கருத்து. அபத்தத்திலும் அபத்தம். இதையே திரோக்கியம் பேசும் தேசம்நெற் சேனனும் சொன்னார்.

என்ன அரசியல் ஒற்றுமை. இதையே சேனன் ராகவனுடன் உடன்படுவதாக கூறினார். 'சிங்கள தேசியவாத கற்பிதத்தின் அதே தளத்தில் தான் தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது" என்பது, தேசியத்தை கொச்சைப்படுத்துவது. இங்கு சிங்கள தேசியம் உருவாக்கப்படவில்லை. சிங்கள பேரினவாதம் தான் உருவாக்கப்பட்டது. கற்பித்தல் என்ற வார்த்தையே தவறானது. இல்லாத ஒன்றை கற்பித்தால் மட்டும் தான், அது கற்பிதம். சிங்கள பேரினவாதம் கற்பிக்கப்படவில்லை, மாறாக அது சமூக பொருளாதார பண்பாட்டு கூறுகளாகவே எதார்த்தத்தில் உள்ளது. இதில் இருந்து முற்றாகவே சிங்கள தேசியம் வேறுபட்டது. சிங்கள தேசியம் என்பது, தமிழ் தேசியத்துக்கு எதிரானதாக இருப்பதில்லை. மாறாக அது இலங்கை தேசியமாக பரிணாமிக்கும்.

அது உள்ளடக்க ரீதியாக ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசியமாகவே அமையும். உண்மையான தேசியம், தமிழ் சிங்கள ஐக்கியத்தைக் கொண்டுவரும். சரியான தமிழ் தேசியம் கூட, சிங்கள மக்களின் உரிமைகளையும் அங்கீகரித்து தனது போராட்டத்தை அவர்களுடன் சேர்ந்து வலுப்படுத்தும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு நிலையில் தான், இனங்களுக்கு இடையில் ஐக்கியம் என்பது இயல்பானதாக அமையும். இல்லாத தளத்தில், அங்கு இன ஒடுக்குமுறை தான் இருக்கும்.

'தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது. தேசியம் கற்பிதம் என்பதற்கான கருத்து தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே" என்பதே தவறானது. சிங்கள பேரினவாதம், தமிழ் தேசிய வாதத்தை உருவாக்கவில்லை. மாறாக தமிழ் இனம் ஒரு தேசமாக, தேசியமாக இருந்தனர், இருக்கின்றனர் என்பதே உண்மை. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருந்தனர். ராகவன் கூறுவது போல் 'தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே" என்பது, இல்லாத பொய்மைகள் மேல் அல்ல. வெறும் கற்பனையாக, எதுவுமற்ற பொய்மைகள் அல்ல. மாறாக தமிழ் இனம் தேசமாக, தேசிய இனமாக இருந்தனர், இருக்கின்றனர் என்பதே உண்மை. ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் சேர்ந்து இருக்கமுடியும் என்ற எல்லைக்குள் வாழ்ந்தவர்கள் தான், தமிழ் மக்கள். இப்படி இணங்கி வாழமுடியாதவாறு சிங்கள பேரினவாதம் நிர்ப்பந்தித்த போதுதான், சிறுபான்மை தேசியவாதமாக ஒரு போராட்டம் மேலெழுகின்றது. இது கற்பிதமாக கட்டமைக்கப்பட்டதல்ல. குறிப்பாக பிரபாகரனின் கற்பனையான கற்பிதமல்ல.

இதுபோல் சிறுபான்மையினத்தின் கற்பனையோ, கற்பிதமோ அல்ல. மாறாக ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம்.

ராகவன் கூறுவதைப் பாருங்கள் 'சாதிய படிமுறையை கற்பிதம் என கூறுவது அபத்தம். சாதி உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பிதமல்ல." இந்த வாதம் புலியெதிர்ப்பின் மொத்த அரசியல் தளத்தையும், நகைச்சுவையாக்கி விடுகின்றது. தேசியம் கற்பிதம் என்றால், சாதியமும் கற்பிதம் தான். சாதியம் உருவாக்கப்பட்டது என்றால், தேசியமும் அப்படி உருவாக்கப்பட்டது தான். சாதியம் கற்பிக்காது உருவாக்கப்பட்டது என்றால், சாதியத்தை பாதுகாக்கின்ற சராத்தையே அரசியல் ரீதியாக பிரதிபலிக்கின்றது.

இங்கு கற்பிதம் என்பதும், உருவாக்கப்பட்டது என்பதும், அரசியல் ரீதியாக கேலிக்குரியது. யாரும் எதையும் கற்பிக்கவோ, உருவாக்கவோ முடியாது. மாறாக அவை பொருள் வகைப்பட்ட சமூக உறவுகளால் ஆனது. இது திடீரென யாரும் உருவாக்கவோ, கற்பிக்கவோ முடியாது. அது போல் நீக்கவும் முடியாது.

சாதியம் என்ற பொருளாதார உறவுகள் உருவான பின்பு தான், அது சாதியமாகின்றது. தேசியம் என்ற பொருளாதார உறவுகள் உருவான பின்பு தான், அது தேசியமாகின்றது. இது இயல்பான சமூக பொருளாதார முரண்பட்ட சமூக ஒட்டத்தில் உருவாகின்றது.

இதை வெற்றிடத்தில் கற்பிக்கவும் முடியாது. இதை வெற்றிடத்தில் உருவாக்கவும் முடியாது.

Sunday, December 2, 2007

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

பி.இரயாகரன்
03.12.2007


னித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.


இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.


புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு.


தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் என்பது மட்டும், புலிகளின் போராட்டத்தை வெற்றியாக்கிவிடாது. புலிகளின் ஆயுதங்களும், ஆட்பலமும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பொதுவாக இதில் எதிரி பலமாக இருந்தும், அவன் தோற்கடிக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. இதுவே எதிர்நிலையிலும் பொருந்தும். முதலில் இந்த உண்மையை புலிகள் சுயவிமர்சனமாக உணர மறுப்பது என்பது, அவர்களின் தோல்விக்கான முதல் படியாகும்.


யுத்தத்தை வெல்ல வேண்டும் என்றால், மக்களை வெல்வது தான் யுத்தத்தின் முதல் வெற்றி. மக்களை தோற்கடித்துக்கொண்டு, எதிரியை வெல்வது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. புலிகள் அதைத் தான் மீளமீளச் செய்கின்றனர். மக்களை உருட்டிமிரட்டி அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டு, யுத்தத்தை செய்வதா சரியான யத்ததந்திரம்?


மக்கள் தமது யுத்தமாக ஒரு யுத்தத்தைக் கருதி அதை அவர்கள் நடத்தாத வரை, எந்த யுத்தத்தையும் வெல்லமுடியாது. மக்கள் யுத்தத்தை வெறுக்கும் போது, மக்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது, தோல்வியும் தவிர்க்க முடியாது. மக்கள் மேல் யுத்தத்தை புலிகள் திணிக்கின்றனர். யுத்த அவலம் மக்களை யுத்தம் செய்யத் தூண்டும் என்ற புலிகளின் 30 வருட சித்தாந்த இராணுவ வழியும், ஒரு தலைப்பட்சமான பிரச்சாரமும் தோல்வி பெற்று வருகின்றது.


மக்கள் மேல் திணிக்கப்படும் யுத்த பின்னணியிலோ, மக்களிடம் எந்த இலட்சியமுமில்லை, உறுதியுமில்லை, வீரமுமில்லை. அதை எல்லாம் புலிகள் காவு கொண்டு விட்டனர். மக்கள் எல்லாவற்றையும் புலிகளிடம் இழந்து விட்டனர். மக்களோ நடைப்பிணம். அஞ்சி நடுங்கி வாழும் கோழைகளாக்கப்பட்டுள்ளனர். இப்படி இருப்பதே தமிழ் இனம் என்ற அளவுக்கு, அவர்கள் மேல் ஒடுக்குமுறை. இவர்களால், இப்படிப்பட்ட அச்சத்திலுறைந்த மக்களைக் கொண்டு, எப்படி வெற்றிகரமான யுத்தத்தை செய்ய முடியும்.


புலிகளே மக்களை செயலற்ற தலையாட்டும் பொம்மைகளாக்கிவிட்டனர். அதுவே புலிகளை தோற்கடிக்கின்றது. இந்த நிலையில் தான் பிரபாகரன் "எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்." என்கிறார். இப்படிச் சொல்ல வைப்பது எது? தொடர்ச்சியான தோல்வி, நம்பிக்கை இழந்த நிலையில் இதைச் சொல்ல வைக்கின்றது. மக்களை தோற்கடித்து, சிங்கள பேரினவாதத்தை வெல்ல வைக்கும் அரசியல் இப்படி சரணடையவைக்கின்றது.


மக்களை புலிகள் தமது அதிகாரத்துக்கு உட்படுத்தி பொம்மைகளாகி விட்டு, உருவேற்றப்பட்ட கீ கொடுக்கும் பொம்மைகளை நம்பித்தான் புலித் தலைவர் நிற்பதை சொல்லுகின்றார். இது புலிகள் சந்திக்கும் நெருக்கடியின் உச்சத்தைக் காட்டுகின்றது. இதில் தோற்றால் குற்றவாளிகள் யார்? தான் அல்ல என்பதே, சொல்லவரும் செய்தியின் மற்றொரு சாரம்.


உண்மையில் சிங்களப் பேரினவாதம் புலிகளின் கழுத்தில் கையை வைக்கவில்லை. புலிகள் தான் தமது சொந்தக் கழுத்தில் கையை வைத்துள்ளனர். தற்கொலைக்கு ஒப்பான பாதையில், புலிகள் தமது தலையை தூக்கி கயிற்றில் மாட்டிவைத்துள்ளனர். இந்த நிலைமையின் தீவிரத்தையே, புலிகளின் மாவீரர்தின உரை பிரதிபலிக்கின்றது.


சொந்த அணிகளின் உறுதி, இலட்சியம், வீரம் என்று கூறுமளவுக்கு, புலிகளின் நெருக்கடி எதார்த்தமாகி அவர்கள் உணருகின்றனர். ஆனால் அது ஏன் தமக்கு ஏற்பட்டது என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்வதில்லை. பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் தான் ஏறுகின்றது. புலிகளும் மக்களும் கொண்டுள்ள உறவு தான், அனைத்தையும் தீர்மானிக்கின்றது. ஆனால் இதை புலிகள் நிராகரிக்கின்றனர்.


இன்று புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்பது, என்றுமில்லாத அளவுக்கு பிளவு ஆழமாகிச் செல்லுகின்றது. நினைத்துப் பார்க்க முடியாத மனித அவலத்தையும் சுமையையும், மக்கள் மேல் புலிகள் திணிக்கின்றனர். மக்கள் இதில் இருந்து விலகி ஓடவும், தப்பிச் செல்லவும் விரும்புகின்றனர். இது தான் யுத்த பூமியில் வாழும் மக்கள் ஒவொருவரினதும் நிலையாகும். பேரினவாதத்துக்கு அப்பால், புலிகளின் அரசியல் நடத்தைகளே இதை தீவிரமான எதிர் நிலைக்கு மாற்றியுள்ளது. மக்களோ புலிகளை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.


இப்படி மக்களைத் தலைமை தாங்கும் தலைமைப் பண்பே புலிகளிடம் கிடையாது. அதனிடம் ஒரு மனிதாபிமான, மக்கள் நலன் என, எதுவும் கிடையாது. ஒரு தலைமை ஒவ்வொரு மனிதனையும் வெல்லும் வகையில், இணங்கிச் செல்லும் வகையில் கையாளவேண்டிய பொறுப்புள்ள தலைமைப் பண்பை, புலிகள் நிராகரித்துவிட்டனர். மாறாக மக்களை உருட்டி மிரட்டி, அடிதடி மூலம் பணியவைத்தும், கொன்றும் மக்களுக்கு தலைமை தாங்க முடியாது. இதை செய்பவனுக்கு தலைமை தாங்க முடியும். அது தான் புலியில் நடக்கின்றது. இவனிடம் உண்மையான உணர்வுள்ள உறுதி, இலட்சியம், வீரம் இருப்பதில்லை.


இப்படித் தான் புலிகள் தோற்கடிக்கப்படுகின்றனர். தனது புதைகுழியை தானே வெட்டிக்கொண்டு செயல்படும் போது, தோல்வி தவிர்க்கப்பட முடியாது. இதில் இருந்து மீள்வதற்கு ஒரு வழிதான் உண்டு. அது புலிகள் தம்மைத் தாம் அரசியல் ரீதியாக, மக்களுக்காக சுயவிமர்சனம் செய்வது தான். தம்மை முழுமையாக சுயவிமர்சனம் செய்தால் மட்டும் தான், புலிகள் தமது தோல்வியில் இருந்து தப்ப முடியும். உருவேற்பட்ட புலி உறுப்பினரின் உறுதி, இலட்சியம், வீரம் இதைப் பாதுகாக்காது.


இதுவே பேரினவாதத்தின் வெற்றியாக மாறுவதை தவிர வேறு வழியில்லை. இப்படி நிலைமை இருக்க, அற்புதன் எம்மை மற்றொரு கோணத்தில் பார்க்க கோருகின்றார். "போர் களத்தில் உருமாற்றியுள்ள சமூக வர்க்க நிலை காரணங்களைக் கருத்தில் எடுக்க வேண்டும். புலிகளின் உள் நிகழ்ந்துள்ள வர்க்க நிலைப்பட்ட மாற்றங்களையும் இரயாகரன் கண்டு கொள்ள வேண்டும். புலிகள் என்னும் இயக்கம் எப்போதுமே ஒரே நிலையில் இருக்கிறது என்பது ஆரோக்கியமான அறிவியற் பார்வை கிடையாது." என்கின்றார். நீண்ட துயரமிக்க வகையில் மக்களை அதில் இருந்து அன்னியமாக்கி அழுங்குபிடியாகவே ஒருதலைப்பட்சமாக நடத்தப்படும் யுத்தம், பல விளைவுகளை உருவாக்குகின்றது. வர்க்கம், சாதி, பால், இனம், பிரதேசவாதம் என்று பல தளத்தில், பல சிதைவுகளையும், ஏன் இறுக்கத்தையும் கூட உருவாக்கியுள்ளது. இந்த எதார்த்தம் எழுப்பும் உண்மைகளை நாம் மறுக்கவில்லை.


பொதுவாக அனைவரும் அறிய நிலவும் இந்த உண்மைகளை நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதுக்கு அப்பால், புலிகள் எப்படிப் பார்க்கின்றனர் என்பது தான் நிலைமையினை தெளிவாக்கும். சமூக முரண்பாடுகளை இணக்கமாக புலிகள் கையாளுகின்றனரா?


முஸ்லீம் மக்கள் பற்றி புலிகளின் நிலையில் என்ன சுயவிமர்சனத்தை செய்துள்ளனர். வடக்கு கிழக்காக பிரிந்து போய்விட்ட பிரதேசவாத யாழ் மையவாதம் மீது, புலிகள் என்ன சுயவிமர்சனத்தை செய்துள்ளனர்? ஒடுக்கப்பட்ட சாதியத்தை சார்ந்தா புலிகள் உள்ளனர்? ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சார்ந்தா புலிகள் உள்ளனர் ?


இது இல்லை என்பதும், இதை தீவிரமாக மறுப்பவர்களாக புலிகள் உள்ளனர். இதனால் தான் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் போராட்டம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சார்ந்து நிற்பதன் மூலம் தான் சாத்தியம். ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்காமை, மக்கள் போராட்டமாக மாற்ற முடியவில்லை. இதை தான் நாங்கள் கோருகின்றோம்.


எம்மிடம் அற்புதன் இவற்றைப் பார்க்கக் கோருவது என்பது தவறானது. புலித் தலைமையை நோக்கி இவற்றை எழுப்புங்கள். புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்தாக வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். அதை செய்யுங்கள், அதைக் கோருங்கள். அது மட்டும் தான், தமிழ் மக்களின் உண்மையான தேசியத்தை உயிருடன் பாதுகாக்கும்.


இங்கு நாம் சுயவிமர்சனம் என்கின்ற போது, பாட்டாளி வர்க்க நிலைக்கு அவர்கள் வரவேண்டும் என்று நாம் கூறவில்லை. குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவ நிலைக்கு, தம்மை சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். தேசியத்தை உண்மையாக தமது கையில் எடுக்கும் நிலைக்கு வரவேண்டும். தேசியத்துக்கு என்று இரண்டு கூறுகள் உண்டு.


1. பாட்டாளி வர்க்க சர்வதேசிய நிலை

2. தேசிய முதலாளித்துவத்தின் தேசிய நிலை.


குறைந்தபட்சம் இந்த இரண்டாவதை புலிகள் சுயவிமர்சனம் மூலம் வந்தடைவதன் மூலம் தான், புலிகள் தம்மையே காப்பாற்ற முடியும். இதன் மூலம் தேசிய முதலாளிகள் ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரிவுகளை உள்ளடக்கிய, ஒரு இணங்கிய போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம். இது மறுக்கப்படும் போது தேசியமே மறுக்கபட்டு, போராட்டம் தோற்கடிக்கப்படும்.


இந்த சுயவிமர்சனம் என்பது அரசியல் ரீதியானது. மக்களின் நலனுக்கு உட்பட்டதே. புலியெதிர்ப்பு ராகவன் கூறுவது போன்ற மக்கள் விரோத எதிர் புரட்சிக்கல்ல. ராகவன் புலிகளிடம் கோருவது சுயவிமர்சனமல்ல, அது எதிர்ப்புரட்சி. அதை அவர் ".. மற்றைய அரசியல் கட்சிகள் அது தேசியக் கூட்டணியாக இருந்தாலென்ன முஸ்லிம் காங்கிரசாக இருந்தாலென்ன ஈ.பீ.டீ.பீ ஆக இருந்தாலென்ன அவர்களது அரசியலை சுயாதீனமாக செய்ய வழி விட வேண்டும். விடுதலை புலிகளுக்கு தங்களது அரசியல் பலத்தில் நம்பிக்கை இருந்தால் மற்றைய அரசியல் கட்சிகளை பற்றி கவலை பட தேவையில்லை. சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற விடுதலை புலிகள் இவ்வாறான விட்டு கொடுப்புகளை செய்தால் சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை அரசின் அத்துமீறல்கள் பக்கம் நிச்சயம் திரும்பும்." என்கின்றார். இது எதிர்ப்புரட்சி.


ராகவனின் இந்த புலியெதிர்ப்பு நிலையுடன் நாம் தெளிவாகவே முரண்படுகின்றோம். நாங்கள் சுயவிமர்சனம் செய்யக் கோருவது, மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கக் கோரித்தான். இன்னுமொரு புலி அரசியலை செய்யும், அவர்களின் ஒடுக்குமுறை உரிமையை அல்ல. அவர்களும் புலியைப் போல், மக்களின் உரிமையை அங்கீகரிப்பவர்கள் அல்ல. புலிகள் அதைச் செய்தால், அதுபோல் அவர்கள் செய்தால் அது வேறு.


புலியெதிர்ப்பு ராகவன் அரசியல் கோருவது சுயவிமர்சனமல்ல. தமிழ் மக்களை தமது பங்குக்கு வேட்டையாட, உரிமையை புலியிடம் கோருவது தான். நாங்கள் கோருவது, மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கும் படிதான். இதையே சுயவிமர்சனம் செய்யக் கோருகின்றோம். இதைவிடுத்து பேரினவாத சிங்கள அரசுடன் கூடி தமிழ் மக்களை ஒடுக்கும் குழுக்களின் உரிமைகளையல்ல.


ஏகாதிபத்திய நன்மதிப்புகளை அல்ல. மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அவசியமானது. புலியெதிர்ப்பு ராகவனுக்கு "சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை" என்பதற்கு, அவரின் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய அரசியலே வழிகாட்டுகின்றது. மாறாக எகாதிபத்தியத்துக்கு எதிராக போராடி, உலக மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். இதை புலிகள் சுயவிமர்சனமாக செய்து போராடாத வரை, போராட்டத்தின் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது.


இவை எவற்றையும் செய்யாது புலிகளின் தலைவரின் உரை அமைகின்றது. தமது, அதாவது புலிகளின் " .. சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறது." என்பதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நிவர்த்தி செய்ய சுயவிமர்சனத்தை செய்தாக வேண்டும். இல்லாது "இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்." என்று கூறுவதால், மேலும் போராட்டம் தோற்கடிக்கப்படும். பாரதூரமான விளைவுகள் என்பது, புலிகள் பாணியில் சிங்கள மக்கள் மேலான கண்மூடித்தனமான தாக்குதலைத் தான் புலிகள் அர்த்தப்படுத்துகின்றனர். இது மேலும் போராட்டத்தை தோற்கடிக்கும்.


இப்படி தவறை அர்த்தப்படுத்தி அதை நடைமுறைப்படுத்திக்கொண்டு "எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது." என்பது, தமிழ் மக்களின் வாழ்வுக்கான, அவர்களின் மீட்சிக்கான அரசியல் பாதையல்ல. மீட்சிக்கான பாதை மக்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதும், அவர்கள் சார்ந்து நின்று போராடுவதும் தான். மக்கள் தமது விடுதலைக்காக, தாம் போராடுவது தான். இதை நோக்கி புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்தல் தான், அவர்கள் முன்னுள்ள ஒரேயொரு மாற்று அரசியல் வழியாகும்.


இல்லாது "எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்." என்றால், இன்னும் 10 ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்து, புலிகள் தமது பாசிச அரசியல் வாழ்வையே முடிப்பர்.