தமிழ் அரங்கம்

Showing posts with label பயங்கரவாதி. Show all posts
Showing posts with label பயங்கரவாதி. Show all posts

Sunday, June 29, 2008

காசுமீர் : புதைக்கப்பட்ட உண்மைகள்

""துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிணங்களே இங்கு வருகின்றன. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போயிருக்கும் அவற்றைப் போலீசு அதிகாரிகளின் ஆணைக்கேற்ப நாங்கள் புதைத்து விடுவோம்'' என்கிறார் இக்கல்லறையை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான முகமது அக்பர் ஷேக். இக்குழு புதைக்கப்படும் பிணங்களைப் புகைப்படமெடுத்து ஆவணமாக்குவதற்கு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி இராணுவத்தால் தடை செய்யப்பட்டது. இறந்து போனவர்களைப் பற்றிய விவரங்கள் குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. ""யாரேனும் காணாமல் போன தனது உறவினரை தேடிக் கொண்டு குப்வாரா காவல் நிலையத்திற்குச் சென்றால், அவர்கள் புகைப்படங்களைக் காட்டுவார்கள். அடையாளம் கண்டு கொண்டால் அவர்களிடம் கல்லறையின் அடையாள எண் தரப்படும். ஆனால் அங்கு புதைக்கப்பட்டிருப்பதோ, பெரும்பாலும் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்தான்'' என்கிறார் ஒரு போலீசு அதிகாரி.

ஆனால், காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களோ, யூரி மாவட்டத்தைச் சேர்ந்த "மறைக்கப்பட்ட உண்மைகள்' எனும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ""இது வடிகட்டிய பொய். அங்கு புதைக்கப்பட்டிருப்பது பயங்கரவாதிகளல்ல. காஷ்மீரில் காணாமல் போனவர்கள்தான்'' என்கிறார்கள். யூரியில் மட்டும் இதைப் போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. இந்தத் தகவல் வெளியான பிறகு சிறீநகரில், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போலீசு கலைத்தது.

சிறீநகரை ஒட்டியுள்ள கந்தர்பால் மாவட்டத்தில் ""வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்'' எனப் புதைக்கப்பட்ட 5 பேரினுடைய பிணங்களைத் தோண்டி எடுத்து விசாரணை செய்தபோது,..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, June 12, 2008

புலி என்றும் அரச கைக்கூலிகள் என்று, நாம் தூற்றப்படுகின்றோமே! ஏன்?

மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.


புலியை ஆதரிக்காத அனைவரும் துரோகி என்று கூறி புலி நடத்தும் அரசியல் படுகொலை போல், அரச ஆதரவு அல்லாத அனைத்தையும் புலியாக காட்டி படுகொலை செய்வது போல், இன்று நாம் இருதரப்பாலும் தமக்கு எதிரானவராக அடையாளம் காணப்படுகின்றோம்.

நாங்களோ பெரிதாக ஒன்றும் கூறவில்லை. மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு, அரசும் புலிகளும் எப்படி காரணமாக இருக்கின்றனர் என்பதையே, நாம் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி விமர்சித்து வருகின்றோம்.

எமது இந்த அரசியலை எதிர்கொள்ள, இவ்விரண்டு மக்கள் விரோதப் பிரிவினராலும் முடிவதில்லை. இதனால் நாம் தொடர்ச்சியாக தூற்றப்படுகின்றோம். முன்பு இவர்கள் எமது இந்த விமர்சனத்தை தனிநபர் தாக்குதலாக தூற்றியவர்கள். இன்று எம்மை புலி என்றும், அரச கைக் கூலிகள் என்றும் தூற்றுகின்றனர்.

கடந்த காலத்தில் தனிநபர் முனைப்புகள் முதன்மை பெற்று, தனிநபர் ஊடாக அரசியல் வெளிப்பட்டது. அவர்கள் ஊடாக அவர்களின் அரசியல் இனம் காணப்பட்டு, அவை எம்மால் அமபலப்படுத்தப்பட்டது. இதையே அவர்கள் தனிநபர் தாக்குதல் என்றனர். இன்று அந்த நபர்களில் பெரும்பான்மையானோர் பேரினவாத அரசின் பின்நிற்கின்றனர். அரசு சார்பு குழுக்களின் அடிவருடிகளாகவும், அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், அவர்களுடன் சேர்ந்தே புலம்பெயர் அரசியல் விபச்சாரம் செய்பவராக அனைவரும் அம்பலமாகி கிடக்கின்றனர். புலி ஒழிப்பை அரசுடன் சேர்ந்து செய்யும் துரோகக் கும்பலாக அம்பலமாகி நிற்கின்றது. புலம்பெயர் புலியல்லாத நிகழ்ச்சி நிரல்கள், அரச வேலைத் திட்டத்துக்கு ஏற்புடையதாகவே அமைக்கின்றது. இதற்கு மாறாக இவர்கள் எதையும் மாற்றாக முன் வைப்பதில்லை. எதைக் கதைத்தாலும், அதை ஆதரிப்பதில் போய் முடிகின்றது.
.

Tuesday, June 3, 2008

குஜராத் : இந்து பயங்கரவாத்தின் இன்னொரு முகம்

மோடி ராஜ்ஜியத்தில் 'இந்த"ப் பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை குஜராத்தில் நடந்துவரும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

இந்துவெறி பாசிச பயங்கரவாதி மோடியின் ராமராஜ்ஜிய பேயாட்சிக்கு பாசிச ""துக்ளக்'' சோ விழா எடுத்துப் பாராட்டுகிறார் என்றால், அக்ரஹாரப் பத்திரிகையான ""கல்கி''யோ, தொடர்ச்சியாக மோடி சிறப்பிதழ் வெளியிட்டுத் துதிபாடுகிறது.

மோடி என்றாலே குஜராத்தில் நிலவும் பாசிச பயங்கரவாத ஆட்சியும், முஸ்லீம் இனப்படுகொலையும்தான் நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வரும். இவற்றை மூடி மறைத்துவிட்டு, அந்நிய முதலீட்டைப் பெறுவதிலும் தொழில் வளர்ச்சியிலும் அம்மாநிலம் முன்னோடியாகத் திகழ்ந்து, மோடியின் ஆட்சியில் ""ஊக்கமிகு குஜராத்''தாக மாறிவிட்டதென்று அப்பத்திரிகைகள் ஏற்றிப் போற்றுகின்றன. ஆனால், பார்ப்பனப் பத்திரிகைகளால் ஏற்றிப் போற்றப்படும் குஜராத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட மாணவி மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சிக் கொடூரத்துக்கு எதிராக அம்மாநில மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களைத் தொடுத்து, மோடி ராஜ்ஜியத்தின் யோக்கியதையை நாடெங்கும் திரைகிழித்துக் காட்டியுள்ளனர்.

வட குஜராத்தில் உள்ள பதான் நகரின் அரசு ஆசிரியைப் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட மாணவி ஒருவரை (எதிர்கால நலன் கருதி அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை), அக்கல்லூரியின் பேராசிரியர்கள் 6 பேர் அவரை மிரட்டிக் கூட்டாகப் பாலியல் வன்புணர்ச்சி செய்து வந்திருக்கின்றனர். ""தேர்வுகளில் அகமதிப்பீட்டு மதிப்பெண்களைக் குறைத்து விடுவோம்'' என்று மிரட்டியே கடந்த 6 மாதங்களில் 14 முறை அக்கல்லூரியின் கணினிக் கூடத்திலும், ஆய்வுக் கூடத்திலும் வைத்து வன்புணர்ச்சியை ஏவியுள்ளனர்.
.