தமிழ் அரங்கம்

Showing posts with label வலதுசாரி. Show all posts
Showing posts with label வலதுசாரி. Show all posts

Thursday, May 14, 2009

மக்களுக்கான அரசியலை நிராகரிக்கும், புதிய அரசியல் போக்குகள்

புலிகளின் அழிவு, புலிக்குள் இருந்த பலரை புலிக்கு எதிரான அரங்கிற்கு கொண்டு வருகின்றது. புதிதாக கருத்துத்தளத்தில் இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கத்தில் அரசு சார்பானவர்கள் அம்பலமாவதால், இதற்கு வெளியில் பலர் தெளிவடைகின்றனர். இது இன்றைய புதிய அரசியல் நிகழ்ச்சிப் போக்காக உள்ளது.

இப்படி விழிப்புற்று தெளிவுறும் இந்தக் காலகட்டத்தில், இவை மக்களுக்கு சார்பாக மாறிவிடவில்லை. இப்படி வெளிவருபவர்கள் மக்களுக்கான ஒரு அரசியலை முன்னிறுத்தி, அதற்காக செயல்படத் தயாராகவில்லை என்பதுதான், ஒரு கசப்பான உண்மை. இரண்டு வலதுசாரி போக்குகளில் இருந்து வெளிவருபவர்கள், அதை விமர்சிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் வலதுசாரிய அரசியலைத் தாண்டி, இடதுசாரிய மக்கள் அரசியலை முன்னெடுக்க அவர்கள் தயாராகவில்லை.

மக்களுக்கான அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் வர்க்கப் போராட்டமும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில், இந்த சமூகத்தில் நடைபெறும் இன்றைய அரசியல் மாற்றங்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 23, 2009

மாறும் அரசியல் சூழலை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதே, எமது உடனடியான அரசியல் இலக்காகும்

கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல் நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.

சமூகத்தை எந்தப் போக்கு ஆதிக்கம் வகித்துக் கொண்டிருந்ததோ, அதற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி நடத்தினோம், நடத்தி வருகின்றோம்.

கடந்தகாலத்தில் புலிகள் தமிழ்மக்களை தம் வலதுசாரிய பாசிசப் பிடிக்குள் கட்டிவைத்திருந்தனர். இந்த நிலையில் மக்கள் முன் அவர்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திப் போராடினோம். இது அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, மிகச் ச..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, July 20, 2008

புலம்பெயர் இலக்கியத்தில் மக்கள் நலன் மறுப்பும் இதற்கெதிரான போராட்டமும்

ஆரம்ப புலம்பெயர் இலக்கியம் மக்களின் நலனை உயர்த்தியது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு அது படிப்படியாக மக்களுக்கு எதிராகவே மாறத் தொடங்கியது. புதிய சொத்துடைய மத்தியதர வர்க்கமாகவும், முதலில் சொந்தமாக பணத்தை கொண்டு வாழத் தொடங்கிய சூழல்களும், இந்த சூழலுக்கு ஏற்ப வலதுசாரிய பூர்சுவா குடும்பங்கள் உருவானது. இவர்கள் முன் மக்கள் நலன்சார் அரசியல் என்பது, தமது புதிய பூர்சுவா வாழ்வியல் இருப்புக்கு எதிரானதாக கருதியது. இதனால் மக்கள் நலன் அரசியலை எதிர்ப்பது, இவர்களுக்கு அவசியமாகியது.

இப்படி மக்கள் விரோத கோட்பாடுகள், கருத்துக்களே எங்கும் குடிபுகுந்தது. நான், நாங்கள் மட்டும் தனித்து நின்றோம். மறுபக்கத்தில் இடது கலந்த வலதுசாரியம் புலி எதிர்ப்பை அளவுகோலாகக் கொண்டு, மக்கள் அரசியலைத் திரித்து அதில் மிதக்க முனைந்தது.

இதை நான், நாங்கள் மட்டுமே கடுமையாக எதிர்த்து நின்றோம். மக்கள் அரசியலை இதற்கு எதிராக உயர்த்தினோம். இயல்பாகவே நாம் இவர்களின் முதல் எதிரிகளானோம். இவர்கள் தமது செயல்பாட்டுக்கு எதிர்ப்பைச் சந்தித்தது, எம்மிடம் இருந்துதான். எமது எதிர்ப்பு என்பது அரசியல் தளத்தில் இருந்ததால், இது தனிப்பட்ட முரண்பாடாகா வண்ணம் எமது கடுமையான ஈவிரக்கமற்ற விமர்சனத்தை முன்வைத்தோம். இதை தனிப்பட்ட முரண்பாடாக்க முனைந்த போதெல்லாம், அதை நாம் தோற்கடித்தோம்.

Wednesday, July 16, 2008

ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது?

இதை செய்தது, சொந்த தமிழ் தேசிய இனத்தில் இருந்த எதிர்புரட்சி அரசியல் தான். அது கையாண்ட வழி, சூழ்ச்சிகரமானது. முதலில் அது செய்தது என்ன? ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாக காட்டிக்கொண்டது. இப்படி அந்த மக்கள் தமது சொந்தக் கோரிக்கையுடன் ஒரு தேசியத்துக்காக அணிதிரளா வண்ணம் தடுத்தது. இதன் மூலம் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களை ஒடுக்கியது தான் எமது தேசிய வரலாறாகும்.............. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்