தமிழ் அரங்கம்

Showing posts with label பட்ஜெட். Show all posts
Showing posts with label பட்ஜெட். Show all posts

Tuesday, August 26, 2008

விவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம் : விவாசயக் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கும் நிபந்தனைகள் நயவஞ்சகமானவை

வங்கிக்கடனில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். தள்ளுபடி நடைமுறைக்கு வரும் முன்பே பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தி ''விவசாயிகளுக்காக நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்'' என்றும் ''தவறான கணக்கை எழுதிய பள்ளிக்கூடச் சிறுவனின் சிலேட்டைத் துடைத்து விட்டு, புதுக்கணக்கை எழுத வைத்திருக்கிறோம்'' என்றும் சிதம்பரம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.

பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான நெறிமுறைகளை வகுத்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. இதன்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகையை அடகு வைத்துக் கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது. இரண்டரை ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, June 8, 2008

கொள்ளைக் கூட்டத்தின் ஒப்பாரி

இது அவரின் சொந்த கருத்து மட்டுமல்ல. விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த விமர்சனம் என்ற பெயரில் மேட்டுக்குடி கும்பலின் வர்க்க வெறுப்பும், பொச்சரிப்பும் இப்படித்தான் பொங்கி வழிகிறது.

ஒரு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி (இதுவே ஃபிராடு என்பது தனிக்கதை) குறித்து இப்படி அங்கலாய்த்துக் கொள்ளும் ""சோ'' வகையறாக்கள், ஒவ்வொரு ஆண்டும் வரிச் சலுகை என்ற பெயரில் பல பத்தாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், தரகு முதலாளிகள் மேல்தட்டு வர்க்கத்திற்காகத் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.

கடந்த (200708) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 58,655 கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.

பங்குதாரர் நிறுவனங்கள் உள்ளிட்ட பிற வர்த்தகத் தொழில் நிறுவனங்களுக்கு 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ, 4,000 கோடி.

தனிப்பட்ட நபர்களுக்கு, 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பு 38,000 கோடி ரூபாய்.

தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகையால், 200708இல் அரசுக்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 88,000 கோடி ரூபாய்.
.

Friday, June 6, 2008

மற்றவன் மூளையை கழற்றிவைத்து விட்ட திமிரில், மூளை இருக்க என்று கேட்பதே பார்ப்பனியம் - பகுதி 2

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளைஉயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.

இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.

எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு ""ரெடிமேட்'' காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. ""சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்'' மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
.