தமிழ் அரங்கம்

Friday, October 7, 2005

தண்ணீர்க் கொள்ளையர்கள்

சென்னையில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தண்ணீர் வியாபாரிகள் முதலாளிகள் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். சென்னை தாம்பரம் வட்டாரத்தில் 20 கிராமங்களிலிருந்து மட்டும் 20,000 லாரிகள் அன்றாடம் தண்ணீர் கொண்டு செல்கின்றன என்று கூறுகிறது, சென்னை வளர்ச்சி ஆய்வுக்கழகம் (MIDS) என்ற அரசுசார் நிறுவனத்தின் ஆய்வு. திருவள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு கிராமங்களிலிருந்து மட்டும் அன்றாடம் 1000 லாரிகள் தண்ணீரைக் கொண்டு செல்வதாகவும், பாலாற்றின் கரைப்பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும் கூறுகிறது இந்த ஆய்வு.

தண்ணீர் வியாபாரிகளில் பலர் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் இவர்கள் நகரங்கள், பெருநகரங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்கள், ஊற்றுக்கள் ஆகியவைகளை விலைக்கு வாங்கி, அங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வந்து புட்டிகளில் அடைத்து பெரும் இலாபத்திற்கு விற்கின்றனர் பல ஆயிரக்கணக்கான லாரிகளில் அன்றாடம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்கப்படுகின்றது.

யார் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்ற ஒழுங்குமுறை எதுவுமில்லை; போட்டா போட்டிதான் நிலவுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் எடுத்து, அவ்வளவையும் நல்ல விலைக்கு விற்று கூடிய விரைவில் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தண்ணீர் முதலாளியின் ஆசையாக வெறியாக இருக்கின்றது; நகர்ப்புறங்களில் உள்ள பெரும் பெரும் நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவறைகளுக்குக் கூட நல்ல குடிநீர் லாரி லாரியாய் வந்து இறங்குகிறது.

நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்காகத் தவிப்பது அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீர் முதலாளிகளின் லாப வெறி அதிகரிக்கிறது. சல்லடைக் கண்ணாகப் பூமியைத் துளைத்தெடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதை ஈடுகட்ட ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தைக் கூட்டுகிறார்கள். அதுவும் வறண்டு இன்னும் ஆழப்படுத்துகிறார்கள்.

இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் லாபவெறிக்கு இணையாக பம்பு செட்டுகளின் குதிரைத்திறன் 500750 என அதிகரிக்கிறது. குழாய்க் கிணறுகளின் விட்டம் அதிகரிக்கிறது. வெறி கொண்டு உறிஞ்சும் இந்த எந்திரங்களின் மூர்க்கத்தனத்தில் பூமி ஒரு குழந்தையைப் போலத் துடிக்கிறது. சுற்று வட்டார விவசாயிகளின் வீடுகள் நடுங்குகின்றன. மரங்களும் செடி கொடிகளும் வாடித் துவண்டு கருகுகின்றன. வழக்கமாக நீர் அருந்திய குளம் குட்டைகள் வறண்டு போனதால் போகுமிடம் தெரியாமல் பிரமை பிடித்தாற்போல் அலைகின்றன, கால்நடைகள்.

நீர்வளம் கொழித்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தை இரண்டே ஆண்டுகளில் சுடுகாட்டுப் பொட்டலாக மாற்றியதே கொக்கோ கோலா நிறுவனம், அது இப்படித்தான

நன்றி தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

-----------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

Wednesday, October 5, 2005

மக்களின் அதிகாரம் ஒங்குக!

உடனடியாக யுத்தத்தை நிறுத்து! அமைதியை நிரந்தரமாக்கு! தேசிய பொருளாதாரம் ஒங்குக! மறு காலனியாதிக்க முயற்சி ஒழிக! மக்களின் அதிகாரம் ஒங்குக!


* தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

* சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவதையும், ஜக்கியப்பட்டு வாழ்வதையும் அடிப்படையாக கொண்டது என்பதை பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.

* சுயநிர்ணயம் என்பது தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்;.

* தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதாவது உலகமயமாதலை திட்டவட்டமாக எதிர்த்து சுயநிர்ணயத்தை வரையறுக்கவேண்டும்.

* சகல வெளிநாட்டு மூலதனங்களையும், சொத்துக்களையும் நட்டஈடு இன்றி தேசிய மயமாக்கி தேசிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்.

* மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டும்.

* ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பணப்பயிர் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

* தேசிய வளங்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றின் சமூகப் பெறுமானத்தை உயர்த்தி வளர்தெடுக்க வேண்டும்.

* தேசியத்தை கூறுபோட்டு ஏலம் போட்டு விற்க கோரும் சகல வெளிநாட்டுக் கடன்களையும், உள்நாட்டு தரகு கடன்களையும் அதற்கான வட்டிகள் கொடுப்பதையும் உடன் நிறுத்தவேண்டும். அதை தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக திருப்பிவிடவேண்டும்.

* சிறுபான்மை தேசிய இனங்களான மலையக, முஸ்லீம் மக்களின் சுயாட்சி பிரதேசங்களை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

* சிறுபான்மை இனங்களின் ஜனநாயக பூர்வமான வளர்ச்சியை உறுதி செய்யும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

* சிறுபான்மை இனங்கள் மேலான கடந்தகால, நிகழ்கால இனவாத ஒடுக்கமுறையை தெளிவாக அடையாளம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

* சிறுபான்மை இனங்களும் பெரும்பான்மை இனங்களும் பரஸ்பரம் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தேசியத்தை உயர்த்தி ஐக்கியத்தை வளர்க்க வேண்டும்.

* சகல இனப் பிளவு நடவடிக்கையையும் எதிர்த்து போராடவும், ஐக்கியத்தை வளர்ப்பதும் அடிப்படையான தேசிய கடமையாக ஏற்க வேண்டும்.

* மலையக மக்களின் பிரஜாவுரிமை வழங்கப்படுவதுடன், இது வரலாற்று ரீதியாக மனித விரோத குற்றத்தை இனம் காணவேண்டும்.

* இனவாத ஒடுக்குமுறைக்கு வௌவேறு பிரிவினர் சிறுபான்மை இனத்தில் தொடங்கி பெரும்பான்மை இனம் வரை எந்த வகையில் இணைந்தும் தனித்தும் நடத்தினர் என்பதை, தெளிவாக அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

* பெரும்பான்மை இன மக்கள் மேல் நடத்திய குறுந்தேசிய இனத் தாக்குதலை இனம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்

*ஓ திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்து உருவான குடியேற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகள் சிறுபான்மை இனத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.

* இங்கு ஆயுதமேந்தியவர்கள் அந்த இடத்தை விட்ட வெளியேற்றப்பட வேண்டும்.

* அதே நேரம் அந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மை இன மக்களின் பாதுகாப்புக்கு வாழ்க்கைக்கு சிறுபான்மை இனங்கள் பொறுப்பு எற்க வேண்டும்.

* இனயுத்தத்தை நிறுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்துவது அவசியமானது.

*மூன்றாவது நாட்டின் மத்திஸ்தம் என்ற போர்வையில் நடக்கும், ஏகாதிபத்திய தலையீட்டை உடன் நிறுத்த வேண்டும்.

* சகல வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும், எதிர் காலத்தில் இதை கண்காணிக்க தலையீட முயலும் அமைதிப்படை முயற்சியும், உடன் தடுத்து நிறுத்தி வெளியேற்றப்பட வேண்டும்.

* அமைதியையும் சமாதனத்தையும் ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் இனம் கண்டு, பரஸ்பரம் அங்கீகரித்து ஏற்படுத்த வேண்டும். இங்கு ஜனநாயக கோரிக்கை என்பது எந்த இனத்துக்கும் விசேட அதிக சலுகைகளை வழங்குவதை மறுக்கின்றது.

* சகல இனவாத படைகளையும் கலைத்து, மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும்.

* சகல நிர்வாக அலகுகளும் கீழ் இருந்து மேல் நோக்கி விரிவுபடுத்த வேண்டும்.

* மக்களை தமது சொந்த பிரதேசத்தில் மீள குடியேற்ற வேண்டும்.

* பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

* உலகளவில் நாடு திரும்ப விரும்பும் அரசியல் மற்றும் பொருளாதார அகதிகளுக்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்தியா அகதிகள் விடையத்தில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

* கடலிலும் நிலத்திலும் புதைக்கபட்ட கண்ணி வெடிகளை அகற்றி மக்களின் சமூக பொருளாதார மீட்சிக்கு முதலுரிமை வழங்க வேண்டும்

* திட்டமிட்ட இனவாத அடிப்படையில் கொண்டு வந்த இரட்டை பிரஜாவுரிமை பறிப்பை ரத்து செய்து, இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதாவது இலங்கை பிரஜாவுரிமையை வைத்திருக்கும் உரிமையை நாடு கடந்தவர்களுக்கு வழங்கவேண்டும்.

* நாடு கடந்து வாழ்பவர்களை கட்டாயப்படுத்தி நாடு கடத்துவதற்கு எதிராக போராட வேண்டும்

* யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, கல்விச் சீரழிவுகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.

* குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த நிலையில் ஆதரவற்று வாழ்கின்றவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையான வசதிகளை வழங்க வேண்டும்.

* யுத்தத்தில் அங்கவீனமானவர்களுக்கு விசேடமான அடிப்படையான வாழ்க்கை ஆதாரங்களை உறுதி செய்யவேண்டும்.

* அனைத்து அரசியல் கைதிகளையும், சமூக பொருளாதார கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

* கடந்த கால அரசியல் படுகொலைகளை வரலாற்று ரீதியாக இனம் காணப்பட்டு அவற்றை சமூக ஆதாரமாக்க வேண்டும்.

* தனிச்சலுகை கொண்ட மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயக விரோத சமூகப் பொருளாதார கூறுகளை உடன் தடை செய்யவேண்டும்.

* சகல இனவாத, மதவாத, சாதியக் கட்சிகளையும் தடை செய்யவேண்டும்.

* இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், கல்வி, கலை இலக்கியங்கள், அமைப்பு வடிவங்கள், மற்றும் பண்பாட்டு கலாச்சார கூறுகள் அனைத்தும் நீக்கப்படவும், தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் வரலாற்று ரீதியாக அடையாளம் காணவேண்டும்.

* அரசில் இருந்து மத ஆதிக்கத்தை, மதத் தன்மை நீக்கவேண்டும். மாறாக மக்களின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமைக்குள், மக்களின் சமூக பொருளாதார தேவை பூர்த்தி செய்வதன் ஊடாக, வழிபாட்டின் சமூக அறியாமையை படிப்படியாக நீக்கவேண்டும்.

* சமூகத்தில் இனம் கடந்து புரையோடிப் போயுள்ள சாதிய கொடுமைகளை முற்றாக நீக்கவும், அதற்கெதிரான அனைத்து முயற்சிகளை முற்றாக தடை செய்யவேண்டும்.

*அனைத்து சாதிப்படி நிலைகளும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய கூறுகள் முற்றாக தடை செய்ய வேண்டும்.

* சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவு தெளிவாக வரலாற்று ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

* தீண்டாமை ஒரு சமூகக் குற்றமாக பிரகடணம் செய்யவேண்டும்.

* சமூக அடிமைப் பிராணியாக வாழும் பெண்களின் மேலான ஆணாதிக்க கொடுரங்களில் இருந்து பெண்களை விடுவிக்கவேண்டும். இதற்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

* பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாகவே அடையாளம் காணவேண்டும்.

* மனிதனை மனிதன் சுரண்டும் ஜனநாயக விரோத்தை ஒழித்துக்கட்டவேண்டும். இதை மீட்டு எடுக்கும் அனைத்து முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்.

* மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி. சார்ந்து நடத்தும் பிளவு நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்வி முறைகள், பொருளாதார கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சார கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் அத்துடன் இதை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் இயற்கையான உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து அரசு சராத ஏகாதிபத்திய நிதியுதவியில் இயங்கும் நிறுவனங்களையும் (தன்னார்வக் குழுக்களையும்) முற்றாக தடை செய்ய வேண்டும். அத்துடன் வெளிநாட்டு நிதியாதாரத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

* மக்களின் உழைப்பு, அவர்களின் வாழ்வு, அவர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை உயர்வானதாக மதித்து அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

* சகல வெளிநாட்டு உள்நாட்டு கலாச்சார பண்பாட்டு சீரழிவை தடை செய்யப்பட வேண்டும். மாறக தேசிய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தேசிய உற்பத்தி மீது வளர்தெடுக்க வேண்டும்.

* நிலப்பிரபுத்துவ தரகு பண்பாட்டு கலாச்சாரத்தை தடை செய்யவேண்டும். மக்களின் உயர்ந்த சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்வை மீட்டெடுக்கவேண்டும்

* மக்களின் உழைப்பும், வாழ்வும் சார்ந்த பண்பாட்டு கலாச்சரத்தை முன்னிலைப்படுத்தும் அதேநேரம், உலகளாவில் இருந்து இதை வரவேற்க வேண்டும்.

* இனவாத இனப்பிளவை அடிப்படையாக கொண்ட தரப்படுத்தல் முறையை எதிர்த்து, பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கவேண்டும்.

* பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை, உயர்த்தவேண்டும்.

*இலங்கை தேசிய வளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கு ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை வழங்க வேண்டும்.

* உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துகான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இனைந்த, அவர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் கல்வியை வழங்கவேண்டும்.

* முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில், பின் தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில், சமுக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்.

* இலங்கையில் தாய் மொழிக்கு அடுத்ததாக பரஸ்பரம் தமிழ் மற்றும் சிங்களத்தை கட்டாய மொழியாக்க வேண்டும்

* பல்கலைக்கழகம் வரை தாய் மொழி கல்வியை அமுல்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலக் மொழியிலான அடிப்படைக் கல்வியை தடை செய்யப்படவேண்டும்.

* கல்வியில் இருந்து மதக் கல்வியை முற்றாக தடை செய்யப்படவேண்டும்.

* அனைவருக்கு பல்கலைகக்கழகம் வரை இலவசக் கல்வியை தாய் மொழியில் வழங்க்கப்பட வேண்டும்

*இன மத அடிப்படையிலான வேலை வாய்ப்புமுறை தடை செய்யப்பட வேண்டும்.

* சகல மக்களுக்கும் வேலை வாய்ப்பை தேசிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

* மக்களின் சமூகத் தேவையை முதன்மைப்படுத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும்.

* சமூக இழிவாக கருதும் வேலைகளில் சமூக கடமைகளை ஒழித்துக் கட்டவும், சமூக இழிவாகப் பட்ட வேலைகளின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தவேண்டும்.

* சிறிலங்க என்ற இனவாத பெயருக்கு பதில் மக்களின் வாழ்வியிலுடன் தொடர்புடையதாக மாற்றப்பட வேண்டும்

* சகல வெளிநாட்டு சார்ந்த இராணுவத்துறை, உளவுத்துறை, சேவைத்துறை, கலை கலாச்சாரத்துறை, பொருளாதாரத் துறை என அனைத்தும் முற்றாக தடை செய்யப்டவேண்டும்.

* தேசியத்துக்கு எதிரான தரகு முதலாளித்துவ வாக்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராக போராடி அந்த வர்கத்ததை ஒழிக்க வேண்டும்.

* உழைக்கும் மக்களின் தலைமையிலான மக்கள் ஆட்சியை அமைக்க வேண்டும்.

* தேசியத்தை அழிக்கும் காட் ஒப்பந்தம் முதல் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் கிழித்தெறிய வேண்டும்.

* ஏகாதிபத்தியங்களையும் அதன் பொருளாதார அடிப்படையான உலகமயமயமாதலையும் எதிர்த்து போராடவேண்டும்.

* உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதாரவை எமது தேசியம் சார்ந்து நிற்கவும், அவர்களின் ஆதாரவையும் கோரவேண்டும்.

* உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போரட்டங்களுக்கு ஆதாரவை தெரிவிக்கவும், அதற்கு ஆதாரவாக போரடவும் வேண்டும்.

* மறுகானித்துவ முயற்சியை எதிர்த்து ஆயுதபாணியாக வேண்டும்.

* மக்களின் கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

* எட்டுமணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஒய்வு, எட்டு மணி நேர உறக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். உழையாதவனுக்கு உணவில்லை என்ற சட்டம் அமுல்படுத்த வேண்டும்.

* வயோதிபர்கள், அங்கவீனர்கள், குழந்தைகள் சமூக பொறுப்பில் பராமரிக்க வேண்டும்.

* அனைவருக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

* அனைவருக்கும் இருப்பிடம், உணவு, நீர், சுத்தமான காற்று கிடைப்பதை இச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்;.

* மக்களின் ஒய்வுகள் சமூக வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மக்களின் எழுச்சிக்கான அடிப்படைகளை உறுதி செய்யவேண்டும்.

* இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அது சார்ந்து பொருளாதார கட்டமைப்புகளுடன் கூடிய வாழ்வு முறையும் முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

* கற்பு, விதவை, தீண்டாமை போன்ற இழிவுக் கொடுமைக்கான சமூக பண்பாட்டுக் கூறுகளையும், கடமைகளையும் எதிர்த்து அதை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

வரைமுறையற்ற நேரடி மற்றும் மறைமுக வரிமுறை நீக்கப்பட்டு நியாயமான சமூக பொருளாதார அடிப்படையில் வரிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவையும், அவர்களின் வாழ்க்கையுமே ஒரு தேசத்தின், தேசியத்தின் அடிப்படையான விடையமாகும். மக்களின் வாழ்வைப் பற்றி, அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வையிட்டு அக்கறைப்படாத அனைத்தும், மக்களை சூறையாடுவதுதான். இது சிறுபான்மை பிரிவின் நலன்களுடன் தொடர்புடையதாக, உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு உட்பட்டதே. இதை யாரும் மறுக்க முடியாது.

இடைக்கால தீர்வு, படிப்படியான தீர்வு என்று காட்டும் எல்லா வகையான மோசடியும் மக்களுக்கு எதிரானதே. அதேபோல் ஒரே நாளில் தீர்வும் என்பதும் மோசடியே. உழைக்கும் மக்கள் தமது பிரச்சனையை தாமகவே தீர்க்கும் ஒரு வரலாற்றுப் பாதையில், பல படிகளைக் கடக்கலாம். ஆனால் அதை நிட்சயமாக உழைக்கும் மக்களின் ஆட்சியாக மட்டுமே இருக்கமுடியும். உழைக்கும் மக்கள் அல்லாத எந்த ஆட்சியும், முன்வைக்கும் படிநிலை தீர்வுகள் எப்போதும் உழைக்கும் மக்கள் மேலான படிமுறை அடக்குமுறைதான். இது எப்போதும் தேசத்தை, தேசியத்தை, தேசிய வளத்தை, இயற்கையை, உழைப்பை, உழைப்பின் வளத்தை, உழைப்புத் திறனை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழித்து ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு சேவை செய்வதாகவே இருக்கும். இதை நாம் அனுமதிக்க போகின்றோமா! இதை எதிர்த்து நாம் என்ன செய்யப் போகின்றோம்! சரணடைவா! போராட்டமா! நீ நிச்சயமாக இதில் ஒன்றை தெரிவு செய்தாக வேண்டும்.

தேசியத்தை பாதுகாப்போம்!
ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்!
சர்வதேசியத்தை பாதுகாப்போம்!
உலகமயமாதலை எதிர்ப்போம்!

---------------------------------------------------------------------------------

முஸ்லிம் மதமும் ஆணாதிக்கமும்

அத் 4.34,35 இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்கு காரணம் அல்லாஹ் அவர்களின் சிலருக்குச், சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் ஆண்கள் இல்லாத போது (அப்பெண்கள்) அல்லாவின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு, நல்லறிவு புகட்டுங்கள்.. படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்... மேலும் அவர்களை அடியுங்கள்."

பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிந்து நடக்க கோரும் குர்ஆன் பெண்ணின் கீழ்ப்படிவுக்கான காரணம் ஆணின் செல்வத்தில் வாழ்பவள் என்பதை விளக்குகின்றது. இந்தச் செல்வத்தை அல்லா கொடுத்தார் என்றதன் மூலம் ஆணாதிக்க தனிச் சொத்துரிமையை இறை சட்டமாக்கினர்.

இதன் மீதான போராட்டமின்றி பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் இழந்து போன சொத்துரிமையை மீளப் பெறும் சமூக மயமாக்கல் போராட்டத்தினுடாகவே, பெண்ணின் விடுதலை நிபந்தனையாகின்றது. தனிச் சொத்துரிமையே பெண் அடிமைப்பட்டதற்கு காரணம் என்பதை, நபிகள் புரிந்து, அதனால் பெண்களை அதற்குட்பட்டு வாழக் கோரிய அளவுக்கு இன்று பெண்ணிலைவாதிகள் தனிச்சொத்துரிமைக்கான காரணத்தை காண மறுக்கின்றனர்.

நபிகள் அனுபவரீதியாக யுத்தத்தில் கொள்ளையடித்த செல்வச் செழிப்பில் பெண் மேலும் மேலும் அடிமையாக சிதைந்து சென்றதை, ஒரு தத்துவவாதிக்குரிய அனுபவத்துடன் காரணத்தை சரியாகவே புரிந்த கொண்டு விளக்கினர். இதனால் பெண்களின் உரிமைகள் சிலவற்றை நிபந்தனைக்குட்படுத்தி பாதுகாக்க முற்பட்டார்.

ஆனால் ஆணாதிக்க சொத்துரிமை, யுத்த செழிப்பால் வேகமாக வளர்ந்த போது, பெண்ணின் அடிமைத்தனத்தை அங்கீகரிப்பது மட்டுமே நபிகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் சமூக எல்லையாகவிருந்தது.

Tuesday, October 4, 2005

சமூக விரோதிகள் என்ற பெயரில்


சமூக விரோதிகள் என்ற பெயரில் இயக்கங்களால் படு கொலை செய்யப்பட்ட ஒரு மனிதன், உங்கள் முன் இங்கு காட்சியாகவே உள்ளது. இது போன்ற ஆயிரக்கான கொலைகள் மேட்டுக் குடிகளின் களிப்பூட்டும் ஆரவாரங்களுடன் நடத்தப்பட்டன. தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தின் (உண்மையான சமூக விரோதிகள் இவர்கள் தான்) தயவில் உதித்த இயக்கங்கள், சாதாரண பொது மக்களுக்கு எதிரான நடத்தைகளில் இதுவும் ஒன்று. உண்மையில் மக்களின் வாழ்வை அழித்து அதில் சுகபோகமாக வாழ்வை அமைக்கும் தனிமனிதப் பயங்காரவாத லும்பன்கள் நடத்திய சமூகவிரோதக் கொலைகளே இவைகள். மக்கள் மேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான இத போன்ற படுகொலைகள் பல ஆயிரம். அதில் ஒன்று தான் இது.

இயற்கை

நம்மைப் பழிவாங்குகிறது

''இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது'' என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.

Monday, October 3, 2005

மலையக மக்கள்

மற்றைய சமூகங்களும்

அடிமைகளாகவே வாழ்ந்த இந்த மக்களை அடிமைகளாக நிலைநிறுத்தவும், கண்காணிக்கவும் சாதிய அடிமைப் பிளவை பயன்படுத்திய பிரிட்டிசார், உயர் சாதிகளைச் சேர்ந்தோரையே கங்காணியாக நியமித்தனர். அதாவது நிலப்பிரபுத்துவ மத அடிப்படைவாத சாதிய வடிவத்தையே மலையக மக்கள் மேல் நிலைநிறுத்தினர். இதையே மலையக மக்கள் திரட்டிய போது ஒடுக்கப்பட்டவற்றை பாடல்கள் ஊடாக பாடத் தயங்கவில்லை.

"கண்டி கண்டி எங்காதீங்கா
கண்டி பேச்சு பேசாதீங்கசாதி
கெட்ட கண்டியிலே
சங்கிலியன் கங்காணி"

மலையக மக்களை கண்காணிக்கவும் சுரண்டவும் இடைத்தட்டாக கங்காணிகள் என்ற புதிய வர்க்கம் உருவானது. இவர்கள் உயர்சாதியாக இருந்ததுடன் மலையக மக்களை அடக்கியாண்டனர். கூலிகள் முதல் அனைத்தையும் இவர்களுக்கு ஊடாகவே கொடுத்ததன் மூலம் அடக்கியாளும் வகையில் படிநிலை வடிவத்தை வெள்ளை நிற காலனித்துவவாதிகள் கையாண்டனர். உழைப்பைச் சுரண்டுவதிலும், அவர்களை அடக்கியாள்வதிலும் பிரித்தாளும் வடிவத்தை, சமூக முரண்பாடுகளில் இருந்து எடுத்து தரகு வடிவத்தில் கையாண்டனர். பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் நிலப்பிரபுத்துவ முறையையும் சாதி வடிவத்தையும் ஒருங்கே பயன்படுத்தி, மலையகமக்கள் மேல் கறுப்பு அதிகார வர்க்கத்தை உருவாக்கினர். இப்படியாக பெரிய மற்றும் சிறிய உயர்சாதி கங்காணிகள் இருந்தனர். 2000க்கும் மேற்;பட்ட பெரிய கங்காணிகள் இருந்ததுடன், அவர்கள் ஜமீந்தார்கள் போல் வாழ்ந்தனர். நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய வடிவத்துக்குரிய அனைத்து ஒழுக்க வடிவத்தையும் ஈவிரக்கமின்றி இவர்கள் கையாண்டார்கள். கூலியாக 4 சதமும், சில்லறை தொழிலுக்கு 2 சதமும் வழங்கிய இவர்கள், காலை 5.30 முதல் மலை 6.30 மணிவரை வேலை வாங்கினர். இந்த வேலையை சர்வ சாதாரணமாகவே சவுக்கடிகள் மூலம் பெறப்பட்டது. மலையக மக்கள் இந்த உழைப்பின் கொடூரத்தை, சோகத்தை சொல்லிப் பாடத் தயங்கவில்லை.

"கோண கோண மலை ஏறி
கோப்பி பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதச்சானாம் சின்ன தோர"

"ஊத்தாத அடமழையில்
ஒதறல் எடுக்குதடா - அந்த
தாத்தான் கணக்கப்புள்ள
கத்தி தொலைக்கிறானே
ஏத்தல ஏறி எறங்க முடியுமா
சீத்துபூத்தன் னெனக்கு
சீவன் வதை போகுதையோ
எத்தனை நாளைக்கிதான் - இந்த
எழவ எடுக்கிறது
வெக்கங்கெட்ட நாயிகளும்
எகத்தாளம் போடுதுன்னு
இருந்துதான் பாத்துடுவோம்"

என்று குமுறும் பாடல், சுரண்டலுக்கே சவால் விடுகின்றது. வாழ்வின் நரகலை அனுபவிப்பவன், அதைக் கண்டு சினந்தெளும் பாடல் வரிகள் இவை. ஆனால் இந்த மக்களுக்கு எதிரான வர்க்கமோ தமது கொழுத்த வாழ்வை அனுபவிக்க, இந்தியாவில் ஆள் காட்டிகள் மூலமே ஆட்கள் பிடித்து கடத்தினர். ஆள் காட்டிகள் ஏமாற்றியும் கட்டாயப்படுத்தியும் பிடித்த போது, அங்கு கலவரங்கள் நடந்தன. மக்கள் கடத்தப்பட்ட கிராமங்கள் கண்காணிக்கப்பட்டன. இதில் பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். கண்டி மக்களின் சோகம் வெளியில் தெரிவதை தடுக்க குறிப்பாக பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். மூலதன திரட்டலுக்கு தேவைப்பட்ட உயிருள்ள உழைப்பின் அளவே, ஆளும் வர்க்கத்தின் நனவுகளை யதார்த்தமாக்கியது. சுரண்டலுக்கு தேவையான ஆட்களை கடத்தி வர பல்வேறு வழிகள் கையாளப்பட்டது. மலையக மக்களை கடத்திக் கொண்டு வரும் எண்ணிக்கை பெருகிச் சென்றது. இதற்கு இசைவாக பிரிட்டிசார் கொடூரமான சுரண்டலை தமிழ் நாட்டில் ஏற்படுத்தி பஞ்சத்தை உருவாக்கினர். 1833-34 இல் குண்டூர் பகுதியில் 30 முதல் 50 சதவீதமான மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். 1876-78 இல் தஞ்சாவூர் பகுதியில் 40 லட்சம் மக்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்டனர். இதை விட பரவலாக பல இடங்களில் பஞ்சம் மக்களை கொடூரமாக கொன்றது. இந்த சூறையாடும் பிரிட்டிசாரின் வரலாற்றில் இருந்தே மலையக மக்களின் நாடு கடத்தல் இலகுவாக்கியது. மலையகம் மட்டுமல்ல, உலகின் பல பாகத்துக்கும் பிரிட்டிசார் இந்தியா மக்களை நாடு கடத்த முடிந்தது. பல நேரங்களில் செயற்கையாகவே பஞ்சம் வரவழைக்கப்பட்டதுடன், உற்பத்தியில் பாதியை வரியாக பிரிட்டிசார் கோரினர். இந்த மனித விரோத கொடூரங்களின் மூலமே நாட்டை விட்டு மக்களை கடத்தினர்.
-----------------------------------------------------

Sunday, October 2, 2005

முதலளித்துவ உபதேசம்

ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. 'பொதுச் சொத்தின் அவலம்' (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

1968 டிசம்பரில் 'சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது. ஹார்டின் முன்வைக்கும் 'அறிவியல் பூர்வமான' ஆய்வின் முடிவுகளில்

யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின், யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு ஆணையிடுகிறார். ''பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் 'மனித உணர்ச்சி'யை கட்டுப்படுத்த முடியாது; அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!'' என்று மக்களை, குறிப்பாக, ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.

நன்றி புதியகலச்சாரம்

--------------------------------------------------------------

புலிப் பாசிசத்தை ஒழிக்க,

ஆயுதம் எந்தக் கோருகின்றது புலியெதிர்ப்பு பாசிசம்.....

.....சரி எகாதிபத்தியம், பேரினவாதமும் வரவிட்டால் என்ன, எங்களிடம் பாசிசத்தை ஒழிக்க மாற்று வழி இல்லையா என்ற கேட்டு, இதோ பார் இருக்கின்றது என்று புதிய சரக்கொன்ற ஒன்றை மாற்றாக முன்வைக்கின்றனர். அது என்ன என்று ஆச்சரியமாக இருக்கலாம். அந்த திரொக்சிய பினாமிய வழி "புலிவிரோத அரசியற் சக்திகளுக்கு முன்னால் மீண்டும் ஓர் மாபெரும் கைங்கரியத்தையும் கடமைப் பாட்டையும் வரலாறு திணித்துள்ளது. அது எண்பத்தி மூன்றை விடவும் மிகப்பெரியது, கடினமானது. அதுதான் புலிக்கெதிராக மீண்டும் ஆயுதமேந்திய எழுச்சியை மேற்கொள்ள வேண்டும்." ஆக ஆக இறுதியாக புலிப்பாசித்தை ஒழிக்கவே ஒரு வழியைக் கண்டு பிடித்தாயிற்று. இதைவிட்டால் வேறு வழி கிடையாது. ஆகவே புலி பாசித்தை ஒழிக்க இதுவே மாற்று என்கின்றனர். எனவே ஈ.பீ.டீ.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ,மட்டக்கிளப்புக் கருணா அணியுடன் கூடி, பாசிச ஒழிப்பில் ஈடுபட வருமாறு தேனீயும், ரி.பி.சியும், திரொக்சிய காவடியும் புலியெதிர்ப்பு அணிகளிடம் கோருகின்றனர். இதைக் கேட்டு யாருமே சிரிக்க வேண்டாம். தேனீ வாசகர்கள் எதிர்வினை இன்றி இதை வாசித்து சேரிப்பதும், ரி.பி.சி வாசகர்கள் இதை செம்மறியாடக கேட்டு நிற்பதும், எந்த விதத்திலும் புலிப்பாணி பிரச்சாரத்துக்கு குறைந்தவையல்ல. இதைத்தான் அவர்கள் உங்களைச் செய்யக் கோருகின்றனர். அதைத் தான் உங்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

இந்தக் கும்பல் கருத்துகளில் ஒரு விதண்டவாதமும், முரண்பாடும் இருப்பதை அதன் வாசகர்கள் கவனிக்காது இருக்கவே இருக்கிறது புலியெதிர்ப்பு அரசியல். ரிபிசியும், தேனீயும் அது சார்ந்த கும்பல்களும் புலியை மடக்க முன்வைக்கும் அரசியல் இங்கு நெருடுகின்றது. புலிகளை மடக்க முன்வைக்கும் ஒருவாதம் கேள்விக்கு உள்ளாகின்றது. அனைத்து அரசியல் படுகொலைகளை எதிர்க்கும்; இந்த கும்பலின் அரசில், அதாவது யாரையும் யாரும் கொல்வதற்கு உரிமை இல்லை என்ற விடையத்தை, இந்த ஆயுதம் எந்த விடுக்கும் அரசியல் எப்படிக் கையாளும். அங்கு யாரையும் யாரும் கொல்லும் கொலைகள் இருக்காதோ! தாங்கள் ஆயுதம் எந்துவது, யாரையும் யாரும் கொல்வதற்காக அல்ல, சும்மா கவர்ச்சிக்கு எந்துவதற்கே என்கின்றனர். நம்புங்கள் இந்த அரசியல் கோமளித்தனத்தை. புலிக்கு நிகாரன இவர்களின் கபடமான அரசியலை. தேனீ ஆசிரியர் ரி.பி.சியில் தொலைபேசி மூலமே கொலையை கண்டியுங்கள் என்று புலிகளை மடக்கி வாய்கிழய உபதேசித்த அதே கிழமை தான், ஆயுதம் எந்திய பாசிசத்தை ஒழிக்கும் வரலாற்று கடமைக்கு அறைகூவல் விடுத்த கட்டுரைக்கு ஊh பெயர் தெரியாது அனாதையாகவே பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதை ரி.பி.சி பெருமையுடன் ஒளிபரப்பியது.

யாரையும் யாரும் கொல்லமுடியாது என்று கூறும் இந்த கயவாளிகள் தான், புலிப் பாசிச ஒழிப்புக்காக எகாதிபத்தியம் இலங்கை அரசு இராணுவ ரீதியாக தலையிடக் கோருகின்றனர்?. அத்துடன் ஆயுதம் எந்தவும் கோருகின்றனர். இந்தப் புலிப் பாசிச ஒழிப்பில் யாரும் யாரையும் கொல்ல முடியம் என்பது இவாகள் சொல்லாத சொல்லும் செய்தி. இன்றைய அவர்களின் சந்தர்ப்பவாத நிலவரப்படி, வலிந்த கோரும் தலையிட்டின...

இக் கட்டுரையை விரிவாக பார்வையிட http://tamilcircle.net/news/theene%20politi.htm

------------------------------------------------------------------------

பெண்

பொருளாதாரத்தில் சுதந்திரம் என்றால் ஏகாதிபத்திய சூறையாடலையும், பெண் சுதந்திரம் அடைந்து விட்டாள் என்றால் ஆணுக்கு சோரம் போதலையும், பாலியல் சுதந்திரம் என்றால் விபச்சாரத்தையும் தாண்டி உலகம் உருளாது. அப்படி உருளும் என்றால் ஏகாதிபத்திய எடுபிடிகளின் சுதந்திரத்தையே பாதுகாத்து நிற்கும் விபச்சாரத்தையும் குறித்துச் சொல்லுகின்றது. அந்தளவுக்கு சமுதாயத்தில் சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றிய விளக்கங்கள் சீரழிந்துபோய்விட்டது. பெண் கட்டற்ற பரிபூரணமான சுதந்திரம் அடைந்து விட்டாள் அல்லது தூய ஜனநாயகத்தை கொண்டு உள்ளாள் என்றால் உண்மையில், ஆணாதிக்கத்தின் பரிபூரணமான கட்டற்ற அடிமைத்தனத்தையும், ஒடுக்கமுறைக்கும் உட்பட்ட நடத்தைகளை, செயல்களைத் தான் சுதந்திரமாகவும், ஜனநாயமாகவும் வெளிப்படுத்துகின்றனர். முதலாளித்துவ விளைவுகளையும், அதன் எச்சங்களையும் தான், சுதந்திரத்திலும் ஜனநாயகத்திலும் விளைவாக்கி, அதை சமுதாயத்தின் பொது வடிவமாக காட்டி நியாயப்படுத்துகின்றனர்.
------------------------------------------------------------

/