தமிழ் அரங்கம்

Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Sunday, May 10, 2009

ஈழப் போரும் இந்திய மேலாதிக்க நலன்களும்

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால் தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.

வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். "வல்லரசாக' வளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி நாடு விரித்த வலையில் சிக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறுவதைக் கேட்பதற்குக்கூடக் கூச்சமாக இருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, "பல நேரங்களில் இலங்கை இந்தியாவிற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதால், சிங்களர்களை இந்தியா நம்பக் கூடாது; தமிழீழம்.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 6, 2009

பார்ப்பனிய பூனூலாகிப் போன தமிழீழம்

பிரபாகரனின் தமிழீழம் இன்று பாப்பாத்தி ஜெயலலிதாவின் தமிழீழமாக மலர்கின்றது. அப்படி நம்புகின்ற, நம்ப வைக்கின்ற ஈழத் தமிழ் முட்டாள்கள். பெரும்பான்மை தமிழன் அரோகரா என்று கூறியபடி, அதற்கு பின்னால் எங்கே ஒடுகின்றோம் என்று தெரியாது ஓடுகின்றனர். பலதரம் தடுக்கி வீழ்ந்த இவர்கள், மீண்டும் மீண்டும் குருட்டு நம்பிக்கையுடன் எழுந்து ஒடுகின்றனர்.

பிரபாகரன் ஆகாய விமானம் வரை வேடிக்கை காட்டி இந்தா தமிழீழம் என்றவர். இன்று அவர் மீதான நம்பிக்கையை படிப்படியாக இழக்க, பார்ப்பனியம் வழிநடத்தும் அம்மா ஜெயலலிதாவின் கற்பனை தமிழீழத்தில் இன்று சரணடைகின்றனர்.

வலதுசாரிய புலியிசம் தன் அந்திமத்தில் கூட, தமிழினத்தை கனவுலகில் நிலைநிறுத்த முனைகின்றது. அதை இந்தியாவின் றோவின் பின், மீளவும் வடியவிடுகின்றது. எந்த றோ இந்த தமிழீழத்தை வலதுசாரி பாசிசமாக வளர்த்து அழிக்க இதில் தலையிட்டு, பணமும் பயிற்சியும் வழங்கியதோ, அந்த றோவின் பின் மீண்டும் புலிகள். இப்படி றோ மக்களை சார்ந்திருக்கக் கூடிய, அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தொழித்தது. இன்றும் மக்கள் சொந்தமாக எதையும் அணுகக் கூடாது என்ற றோவின் அக்கறை, ஜெயலலிதா ஊடாக புலியிசத்துக்கு ஆப்பு வைத்துள்ளது. தமிழீழத்தை வைத்து சு.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, April 18, 2009

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.

சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து இருப்பதில்லை.

இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு...........
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்