தமிழ் அரங்கம்

Saturday, August 29, 2009

சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்


ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப+ர்வ பத்திரிகையான சியரட்ட பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும், லங்கா ஈ நிய+ஸ் இணையத்தளத்தின் சிறப்புக் கட்டுரை ஆசிரியராகவும் இதற்கு முன்னர் பணியாற்றிய பிரகீத் எக்நேலியகொட என்பவரே இவ்வாறு கடத்ததப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர், நேற்று முன்தினம் (27) இரவு தனது வீட்டிற்கு நடந்துசென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது வீதியின் அந்தப் பிரதேசத்தில் சனநடமாட்டம் அற்றுக் காணப்பட்டதாகவும் தமக்கெதிரே கொண்டுவந்து நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து அவசராக இறங்கிய மூன்று இளைஞர்கள், தன்னை இழுத்து வேனில் போட்டுக் கொண்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். வேனில் ஏற்றப்பட்ட தமது கண்கள் கட்டப்பட்டு, ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" (பகுதி 5)

'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு குழு அறிவித்துள்ளது. இங்கு அவர்கள் 'புலி அனுதாபிகள்' என்று கூறுபவர்களை, புலிகளாக, பாசிட்டுகளாக பார்த்தால் மன்னிக்க முடியாத வரட்டுத்தனமாம்.

இப்படி கூறி ஈழத்து கம்யூனிஸ்டுகளை புலியுடன் சென்று, வென்று எடுப்பது தான், சரியான அரசியல் யுத்ததந்திரம் என்கின்றனர். இதை அவர்கள் நடத்த, நாங்கள் அம்பலப்படுத்த, அதை வறட்டுவாதம் என்று முத்திரை குத்தியுள்ளனர்.

மற்றொரு நாட்டு கம்யூனிச இயக்கத்தின் அரசியல் வழிமுறைக்கு எதிரான போராட்டத்தை, "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" என்று வினவு, திடீரென வினவு குழுவாக மாறி அறிவித்திருக்கின்றது. இந்த அரசியல் வழிமுறை சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது. ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய (நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளல்ல என்றால் அதைச் சொல்லுங்கள்) நாங்கள், பாசிசத்தை எந்த அரசியல் வழி ஊடாக, யாரைச் சார்ந்து எப்படி போராட வேண்டும் என்ற பிரச்சாரத்தை, கிளர்ச்சியையும் கடந்த 30 வருடமாக பலரை இழந்தபடி தொடர்ச்சியாக செய்து வ....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.


கேரள முதல்வரும், கேரள மாநில சி.பி.எம். கட்சி நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான அச்சுதானந்தனை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) விலிருந்து நீக்கியதன் மூலம் இப்புதிய கொள்கையைச் செயல்படுத்தவும் கிளம்பி விட்டது.

கேரளத்தில் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியும், அக்கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியும் பதவிக்காகவு ம், சி.பி.எம் கட்சியின் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அனுபவிக்கும் அதிகாரத்துக்காகவும் தீராத நாய் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பினாரயி விஜயன் மீதான லாவலின் ஊழல் விவகாரம் வீதிக்கு வந்து நாறத் தொடங்கியதும், இந்த கோஷ்டி மோதல் உக்கிரமடைந்தது.

அதென்ன லாவலின் ஊழல்? கேரளாவில் 1996 முதல் 2001 வரை சி.பி.எம். முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான "இடது முன்னணி' ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, August 28, 2009

தோழர் வினவின் தளத்தின் கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்ல, ஒரு பாசிட்டே (பகுதி 4)


வினவு கொள்கையளவில் கூட பாசிசம் இங்கு மூடிமறைக்கும் என்பதை ஏற்க மறுத்தார். பாசிசத்தை இந்த உள்ளடக்கத்தில் வைத்து பிரிக்க முடியாது என்பது வாதமாக மாறும் போது, அரசியல் ரீதியான ஒரு முரண்பாடாக அது மாறிச் செல்லுகின்றது.

இந்த வகையில் இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் புலிக்கு ஆதரவாக "எதையும்" எழுதவில்லை என்ற வாதம் எம்முன் முன்வைக்கப்படுகின்றது. கட்டுரையாளர் முன் வைப்பதே புலிவாதம் தான். புலிக்கு ஆதரவாக "எதையும்" எழுதவில்லை என்று கூற, கட்டுரையாளரோ கொள்கையளவில் புலிப் பாசிசம் வைத்த தேசியத்தை, தான் ஏற்;றுக் கொள்வதை மறுக்கவில்லை என்ற உண்மை இங்கு வெளிப்படையானது. அதை அவர் ".. எனக்கு புலிகள் மீது எப்பொழுதுமே எங்கள்
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, August 27, 2009

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்


கிளிநொச்சித் தாக்குதல் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில், தா. பாண்டியன், பழ.நெடுமாறன் போன்ற அரசியல் வாதிகள், இந்திய அரசே தலையிடு போன்ற சுலோகங்களுடன் போராட்டங்களை ஆரம்பித்தனர். கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலான போராட்டங்களை நடத்தினர். அவர் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.

தோழர் வினவின் தளத்தில் கூறும் ஈழ அனுபவம் புரட்டுத்தனமானது

கடந்த வரலாற்றில் தமிழ்மக்கள் சந்தித்தது, புலிப் பாசிசம் கூறுவது போல் ஒரு அனுபவமல்ல. பேரினவாதம் முதல் இயக்கங்கள் வரை, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின. புலிகள் மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை வழங்கினால், தாம் அரசியல் அனாதையாகிவிடுவோம் என்று வெளிப்படையாக துண்டுப்பிரசுரம் போட்டு சொல்லுமளவும் புலிப் பாசிசம் கொட்டமடித்தது.

(பார்க்க.....தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு) தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மாணவர் சமூகம் முன்னிறுத்தி, புலிப் பாசிசத்துக்கு சவால் விட்டது. இது புலிகளை அரசியல் அனாதையாக்கி விடும் என்று புலிகள் பகிரங்கமாகவே கூறினர். இவை எல்லாம் அந்த மண்ணில் நடந்தது. இப்படிப் போராடியவர்களைத் தான், புலிகள் தேடி அழித்தனர். இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவன் விமேலேஸ்வரன், புலிகளால் படுகொலை செய்யப்பட்டான்;. பார்க்க பு.ஜ கட்டுரையை (புலிகளின் பாசிசம்); இந்தப் பாசிசத்தை முகம் கொடுக்காத சமூக உறுப்பினர் எம் மண்ணில் யாரும் கிடையாது. இந்த வகையில் தான் இயக்கங்களுக்கும் அதன் அடிவருடித்தனத்துக்கும் எதிராக, 22 வருடத்துக்கு முந்தைய பல்வேறு துண்டுப் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, August 26, 2009

பேரினவாத பரிசிட்டுகள் இனவழிப்பை எப்படி நடத்தினர் (விடியோ ஆதாரம் இணைப்பு – வலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம்)

மகிந்த சிந்தனையும், அதன் ஜனநாயகமும் இதுதான். தமிழினத்தின் மேல், கைது செய்தவர்கள் மேல், சரணடைந்தவர்கள் மேல் ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்தனர். சிறிலங்கா அரசே குற்றக் கும்பலாக, கூட்டுப் படுகொலைகளை நடத்தியும், ஒரு இனத்தின் இனவழிப்பை நடத்தி முடித்துள்ளது.

இந்தப் பாசிசப் பயங்கரவாதத்;தின் மேல்தான், வெள்ளைவேட்டி அரசியல் முதல் ஜனநாயகத் தேர்தல் வரை நடத்தினர், நடத்துகின்றனர். புலியெதிர்ப்பு "ஜனநாயகம்" வரை பேசுகின்றனர். வடக்கின் "வசந்தம்" முதல் கிழக்கின் "உதயம்" வரை, தலையில் தூக்.....
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, August 25, 2009

தோழர் வினவின் தளத்தில் அப்பாவி வேஷம் போட்டு நிற்கும் தமிழ் பாசிசம் (பகுதி 2)

பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில்தான், பாசிசம் தன்னை தற்காத்துக் கொள்கின்றது, நிலைநிறுத்திக் கொள்கின்றது. அதற்கமைய நடிப்பது, பாசிசத்திற்கு கைவந்த கலை. ஆணாய், பெண்ணாய், எதுவுமறியாத அப்பாவியாய் என்று தொடங்கி அழுவது, ஒப்பாரி வைப்பது என்று அதற்கு தெரியாத பாசிசக் கலை கிடையாது. பொய்யில் புரண்டு, புழுப்பதுதான் பாசிசம்.

அது எப்போதும் தன் சொந்த பாசிச வரலாற்றை, தனக்கு எதுவும் தெரியாத ஒன்றாகவே ஊர் உலகத்துக்கு காட்டும். அதைப் பற்றி எதையும் பேச மறுக்கும். தனது பாசிசத்தால் மக்கள் சந்தித்த எந்த மனித அவலத்தையும் பேசமறுத்து, எதிரி மக்களுக்கு செய்த கொடுமையை மட்டும் எடுத்து வைத்து பேசும்.

இப்படி பாசிசம் தன்னையும் தன் பாசிச வரலாற்றையும் எதுவுமற்றதாகக் காட்டித்தான், சமூகத்துக்குள் தன்னை புகுத்திக் கொள்கின்றது. வினவு தளத்தில் புலிப்பாசிசம் இந்த வகையில்தான், மூடிமறைத்தபடி ஊடுருவியுள்ளது. சர்வதேசிய..
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 24, 2009

இந்து வெறியர்களுக்கு குஜராத் ! இந்திய இராணுவத்துக்கு காஷ்மீர்!!

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.

காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலையிலேயே சென்று விட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார். மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃப ரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கு...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 23, 2009

முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்

வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு.

இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது. 15000 பேருக்குமேல் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அவர்கள் பற்றிய விபரம் தெரியவரவில்லை எனவும் மனிதஉரிமை அமைப்புகள் கூறுகின்றன. புலிகளின் உறுப்பினர்களிலிருந்து புலிக்கு சாப்பாடு கொடுத்தவர்வரை சுழியோடி தேடிப்பிடித்து அழிப்பதுதான் புலியழிப்பு என சொல்வதை நாம் கேட்டாகவேண்டியிருக்கிறது. இது இந்த இடைத்தங்கல் முகாமின் வாழ்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்குமெனின், இந்த மக்களின் துயரம் நீளவேசெய்யும்.இப்போ வெள்ளம் இந்த முகாமை சிப்பிலியாட்டுகிறது. கடும் மழையில் கூடாரங்கள் குறுகிப்போயிருக்கின்றன. சுமார் 3 இலட்சம் மக்களின் கதி இன்னும் பரிதாபத்துக்கு உரியதாக மாறியிருக்கிறது. வெள்......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் (பகுதி 1)

தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது. இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.

மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.

இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்


நம்ப மறுப்பவர்கள், தயவுசெய்து, தமிழகத் தலைநகர் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மீனாட்சி பல்கலைக்கழகத்தை வந்து பாருங்கள்.

இப்பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்தபொழுது, "பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரையில், சென்னைப் புறநகர்ப் பகுத யில் உள்ள சிறீமுத்துக்குமரன் பொறியியில் கல்லூரியைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஆய்வுக் கூடங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என இப்பல்கலைக்கழக நிர்வாகிகள் அன்புக் கட்டளை போட்டார்களாம். பணத்தைக் கட்டிச் சேர்ந்த பிறகு வந்து பார்த்தால், "இப்பல்கலைக்கழகத்திற்கென்று தனி வளாகம் எதுவும் கிடையாது; கட்டிடம் மட்டுமின்றி, இப்பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரமே கிடையாது'' எனப் புலம்புகிறார், இப்பல்கலைக்கழகத்தை நம்பி மோசம் போன ஒரு மாணவர். பல்கலைக்கழக மானியக் குழு, மீனாட்சி பல்கலைக் கழகத்தை அங்கீகரித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மானியக்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்