தமிழ் அரங்கம்

Saturday, February 7, 2009

புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் ...

தமிழ் மக்களைக் காக்க வக்கற்ற `சோளக்காட்டு பொம்மை` அரசியல், இதே ஐரோப்பிய நகரங்களில் `பொங்கு தமிழாக` யுத்தப் பிரடணம் செய்து விட்டு இன்று யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. இன்றைய உலக ஒழுங்குக்கான நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள முடியாத நெருப்புக் கோழிகளாகத் தலைகளைப் புதைத்த புலம் பெயர் தமிழர்கள், புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் தம் தலைகளை அறியாமல் புதைப்பதை தீவிரப்படுத்துகிறது.

உலகமே சுற்றி நின்று புலிகள் மீது போர் தொடுப்பதாகக் கூறுகின்ற இவர்களே அவர்களிடம் கருணை மனுக்களைக் கொடுக்கின்ற பரிதாப நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். சுட்டுவிரலை நீட்டி இந் உலகத்திடம் தமிழ் மக்களின் தார்மீக உரிமைகளைக் கோர முடியாத புலிகள், தம் கைவிரல்களுக்குள்ளேயே தமது கதையை மெளனமாக எண்ணத் தொடங்கி விட்டனர்.

புலிகளின் கைகளில் மாட்டியிருக்கும் வன்னி மக்கள் - அவர்களின் வெளியேற்றத்துக்கான மறுப்பு, சிங்கள பெளத்த இனவாதிகளின் இன
......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, February 6, 2009

அர்த்ததமற்றுப் போகும் போராட்டங்கள்

புலிகள் தம் தற்காப்பை, தம் இருப்பை தம் சொந்தப் போராட்டம் மூலம் அணுக வேண்டும். அவர்கள் தம் சொந்த வழியில் இதற்கு விடை காணவேண்டும். அதைச் செய்ய வக்கின்றி, மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து, இதன் மூலம் அரசியல் பேரம் பேச முனைவது, அடிமுட்டாள் தனமான பயங்கரவாதத் தற்கொலையாகும்.

இதன் பின்னணியில் புலிகள் நடத்தும், நடத்தவிருக்கும் போராட்டங்கள் புலிப் போராட்டம் போல் ஒரு அடி கூட முன்னேறுவதில்லை. அடிசறுக்கி வீழ்கின்றது. கடந்தகாலத்தில் அரசியல் பேச்சுவார்த்ததையை எப்படி தோற்கடித்து தாம் தோற்றனரோ, அப்படி இந்த போராட்டங்களும் நடக்கின்றது.

மக்களை கொன்று குவிக்கும் காட்சிப் படங்களை காட்டி, தமிழ் மக்களை அணி திரட்டியது போல், உலகத்தை அணி திரட்ட முடிவதில்லை............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈழமக்கள் மேல் மலம் கழிக்கும் சந்திப்பு :

இந்தக் கழுதை இதை விமர்சிக்க எடுத்துக்கொண்ட அடிப்படையோ, புலிகளின் பாசிசம் தான். இதைத்தான் இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை, தம் சொந்த மேலாதிக்க கனவுக்கு பயன்படுத்துகின்றது.

புலிப்; பாசிசத்ததை எதிர்கொள்வது எப்படி? இதை மார்க்சியம் எப்படி அணுகக் கோருகின்றது? அது எம் சொந்த மக்களின் பிரச்சனை. மக்களாகிய நாங்கள் தான், அந்தப் பாசிசத்தை எதிர்கொண்டு போராடி அதை அழிக்க வேண்டும். இதை முதலில் மார்க்சியவாதி அங்கீகரிக்க வேண்டும். இந்த பாசிசம் எங்களுடைய பிரச்சனை. இதைச் சொல்லி இந்தியாவோ, ஏகாதிபத்தியமோ தலையிட முடியாது.

தெளிவாக இதில் இந்தியா தலையிடமுடியாது. அப்படி தலையிட எந்த அதிகாரமும் அதற்கு கிடையாது. அதுவே அத்துமீறல், ஆக்கிரமிப்பு. இப்படி தலையீட்டால், ஆக்கிரமித்தால், அதற்கு எதிராக போராடுவது மார்க்சியர்களின் சர்வதேசியக் கடமை. இதையா நீங்கள் செய்கின்றீர்கள்?

தேசிய சுயநிர்ணய............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, February 5, 2009

ஈழமக்கள் மேல் மலம் கழிக்கும் சந்திப்பு : இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள்

இந்தக் கழுதை இதை விமர்சிக்க எடுத்துக்கொண்ட அடிப்படையோ, புலிகளின் பாசிசம் தான். இதைத்தான் இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை, தம் சொந்த மேலாதிக்க கனவுக்கு பயன்படுத்துகின்றது.

புலிப்; பாசிசத்ததை எதிர்கொள்வது எப்படி? இதை மார்க்சியம் எப்படி அணுகக் கோருகின்றது? அது எம் சொந்த மக்களின் பிரச்சனை. மக்களாகிய நாங்கள் தான், அந்தப் பாசிசத்தை எதிர்கொண்டு போராடி அதை அழிக்க வேண்டும். இதை முதலில் மார்க்சியவாதி அங்கீகரிக்க வேண்டும். இந்த பாசிசம் எங்களுடைய பிரச்சனை. இதைச் சொல்லி இந்தியாவோ, ஏகாதிபத்தியமோ தலையிட முடியாது.

தெளிவாக இதில் இந்தியா தலையிடமுடியாது. அப்படி தலையிட எந்த அதிகாரமும் அதற்கு கிடையாது. அதுவே அத்துமீறல், ஆக்கிரமிப்பு. இப்படி தலையீட்டால், ஆக்கிரமித்தால், அதற்கு எதிராக போராடுவது மார்க்சியர்களின் சர்வதேசியக் கடமை. இதையா நீங்கள் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?

இலங்கையில் யுத்த பிரதேசமல்லாத இடங்களில் வாழும் இருபது லட்சம் தமிழர்களும், மிக அமைதியாகவே தாமும் தம்பாடுமாக வாழ்கின்றனர். இதற்குள் யுத்த பூமியில் சிக்கியுள்ள தம் உறவினர்களுக்காக ஏங்கும் ஒரு பிரிவினரும், இனம் காணப்பட்டவர்கள் காணாமல் போதலைச் சுற்றியும் எழும் பதற்றமும் பரபரப்பும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. மற்றும்படி தம் இனம் அழிவதையிட்டு, அக்கறையற்ற வாழ்தலையே, எம் மண்ணில் வாழும் தமிழ் சமூகம் தன் வாழ்வாக தேர்தெடுத்துள்ளனர்.
தம் இனம் மீதான யுத்தம், பேரினவாத கொக்கரிப்புகள் என்று எதையும், சமூகம் எதிர்கொள்ளத் தயாராகவில்லை. புலம்பெயர் சமூகம் மட்டும், இடைக்கிடை புலியைச் சுற்றி உருவெடுத்து ஆடவைக்கப்படுகின்றது. மண்ணில் வாழும் மக்கள் அமைதியாகி, நடைப் பிணமாகிவிட்டனர். பேரினவாதத்தை நக்கும் கண்ட கண்ட நாய்கள், மக்களை மேய்க்;கும் நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலைமை எப்படி உருவானது.

உண்மையில் இதை புலிகள் தான் உருவாக்கினர். தாம் அல்லாத எந்த செயலையும், எம் மண்ணில் உயிர்வாழ அனுமதிக்கவில்லை. மொத்தத்தில் அதை அழித்தன் விளைவு, சமூகம் செயலற்ற தன்மைக்கு சென்றுள்ளது. சமூகத்தில் எதைச் செய்தாலும் புலிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற பாசிச சர்வாதிகாரம், அவர்கள் மேலான அழித்தொழிப்பின் போது ..........

தமிழ் மக்களை கொன்றுகுவிக்க ஏகாதிபத்தியம் காட்டும் பச்சைக்கொடி

குறுகிய வட்டம், குறுகிய சிந்தனை, மறைமுக எதிரி பற்றிய நல்லெண்ண பார்வைகள், எல்லாம் இன்றும் புலியூடாக சிந்திக்கின்ற பார்க்கின்ற அவலம். தொடர்ந்தும் மனித அவலத்தை புலிக்கு ஊடாகவே, பார்க்கப்படுகின்ற அவலம்;. இப்படி மனித அழிவிலும், அதை சொல்வதிலும் சுதந்திர மனிதனாக மக்கள் மாறவில்லை.

இருந்த போதும், விடுதலைப் புலிகள் கூவி இனி விடியாது என்பது அனைவருக்கும் தெட்டத் தெளிவாகிவிட்டது. பேரினவாதமோ கொக்கரிக்கின்றது. எம் பரிதாபகரமான நிலையோ, இதுதான். இந்த நிலையில் மக்களை விடுவி அல்லது அனைவரையும் சேர்த்தே கொல்வோம் என்கின்றது சிங்கள பேரினவாதம். அதற்கு மேலாக அங்கே உள்ளவர்கள் அனைவரும் புலிகள் என்று முத்திரை குத்தி, அழிக்கத் தயாராகின்றது பேரினவாத பாசிசம்.

எப்படி, எந்த நிலையில் மக்களை கொல்வது என்பதற்கு பேரினவாதம் நாள் குறிக்கின்றது. இதற்கு துணையாக சிங்கள பேரினவாதத்தை ஏகாதிபத்தியம் கைதூக்கி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, February 4, 2009

மேற்கு நாட்டு மக்கள் கண்டுகொள்ளாத போராட்டம்

பலர் நம்புகின்றனர் இது ஊடகத்துக்கு வந்துவிட்டால், மேற்கு மக்கள் வீதிகளில் இறங்குவார்கள் என்று. அவர்கள் இதை புரிந்துகொள்வார்கள் என்று. ஏகாதிபத்தியம் கருணை காட்டுமென்று.

தம் கண்ணை குருடாக்கியவர்கள் என்ன நினைக்கின்றனர். தாங்கள் தவறல்ல, தம் செய்கைகள் தவறல்ல, நம் நடத்தைகள் தவறல்ல என்று நம்புகின்றனர். விளைவு மேற்கு மக்கள் பற்றிய அவநம்பிக்கையாகின்றது. அவர்கள் பற்றிய தவறான புரிதல், தனிப்பட புலம்ப வைக்கின்றது. தவறு அவர்களது அல்ல, மாறாக தவறுகளே நீங்கள் தான்.

கடந்த வரலாற்றை மீளத் திரும்பிப் பாருங்கள். நீங்கள் எப்போதாவது, அந்த மக்கள் நடத்திய போராட்டத்துடன் இணைந்து போராடியிருகின்றீர்களா!..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களை கொன்றுகுவிக்க ஏகாதிபத்தியம் காட்டும் பச்சைக்கொடி

குறுகிய வட்டம், குறுகிய சிந்தனை, மறைமுக எதிரி பற்றிய நல்லெண்ண பார்வைகள், எல்லாம் இன்றும் புலியூடாக சிந்திக்கின்ற பார்க்கின்ற அவலம். தொடர்ந்தும் மனித அவலத்தை புலிக்கு ஊடாகவே, பார்க்கப்படுகின்ற அவலம்;. இப்படி மனித அழிவிலும், அதை சொல்வதிலும் சுதந்திர மனிதனாக மக்கள் மாறவில்லை.

இருந்த போதும், விடுதலைப் புலிகள் கூவி இனி விடியாது என்பது அனைவருக்கும் தெட்டத் தெளிவாகிவிட்டது. பேரினவாதமோ கொக்கரிக்கின்றது. எம் பரிதாபகரமான நிலையோ, இதுதான். இந்த நிலையில் மக்களை விடுவி அல்லது அனைவரையும் சேர்த்தே கொல்வோம் என்கின்றது சிங்கள பேரினவாதம். அதற்கு மேலாக அங்கே உள்ளவர்கள் அனைவரும் புலிகள் என்று முத்திரை குத்தி, அழிக்கத் தயாராகின்றது பேரினவாத பாசிசம்.

எப்படி, எந்த நிலையில் மக்களை கொல்வது என்பதற்கு பேரினவாதம் நாள் குறிக்கின்றது. இதற்கு துணையாக சிங்கள பேரினவாதத்தை ஏகாதிபத்தியம்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தப்புத் தாளமும்,வழி தவறிய பாதமும்

தமிழ் மக்களைக் காக்க வக்கற்ற `சோளக்காட்டு பொம்மை` அரசியல், இதே ஐரோப்பிய நகரங்களில் `பொங்கு தமிழாக` யுத்தப் பிரடணம் செய்து விட்டு இன்று யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. இன்றைய உலக ஒழுங்குக்கான நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள முடியாத நெருப்புக் கோழிகளாகத் தலைகளைப் புதைத்த புலம் பெயர் தமிழர்கள், புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் தம் தலைகளை அறியாமல் புதைப்பதை தீவிரப்படுத்துகிறது.

உலகமே சுற்றி நின்று புலிகள் மீது போர் தொடுப்பதாகக் கூறுகின்ற இவர்களே அவர்களிடம் கருணை மனுக்களைக் கொடுக்கின்ற பரிதாப நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். சுட்டுவிரலை நீட்டி இந் உலகத்திடம் தமிழ் மக்களின் தார்மீக உரிமைகளைக் கோர முடியாத புலிகள், தம் கைவிரல்களுக்குள்ளேயே தமது கதையை மெளனமாக எண்ணத் தொடங்கி விட்டனர்.

புலிகளின் கைகளில் மாட்டியிருக்கும் வன்னி மக்கள் - அவர்களின் வெளியேற்றத்துக்கான மறுப்பு, சிங்கள பெளத்த இனவாதிகளின் இன அழிப்புக்கா.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அப்பாவி மக்களை கொல்லக் கோரும் போராட்டங்கள்

புலிப் போராட்டங்களோ எப்போதும் எதிர்நிலைத்தன்மை வாய்ந்தவை. மக்களின் விடிவிற்கு பதில், துயரத்தை துன்பத்தையும் விதைக்கின்றது. இன்று மக்களின் அவலமும், அவர்கள் படுகொலை செய்யப்படுகின்ற பரிதாபமும்; ஒருபுறம். புலிகள் தாம் தப்பிப்பிழைக்க இதை மக்கள் மேல் திணிக்கின்றனர்.
மறுபக்கத்தில் பேரினவாதம் கொக்கரிக்கின்றது, மக்களை விடுவி அல்லது உன்னுடன் சேர்த்து மக்களையும் கொல்வேன் என்கின்றது. மக்களுக்காக தான் தாங்கள் போராடுவதாக கூறுபவர்கள் என்ன சொல்கின்றனர், யுத்தத்தை நிறுத்து என்று கூறி வீதிகளில் இறங்குகின்றனர். அவன் நிறுத்தமாட்டான் என்பது இன்று அறிவுபூர்வமாக தெளிவாகியுள்ளது.

இல்லை நிறுத்துவான் என்ற உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக, யுத்தத்தைத் நிறுத்தாவிட்டால், என்ன செய்வது!? அங்கு சிக்கியுள்ள மக்களையும்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, February 3, 2009

விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.

நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.

வரலாறு உங்க...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.

நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.

வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பைநீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும்.மேலும் மக்களால்
ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சிமட்டும் அங்கிருக்கும்.
நான் பலகட்சி ஜனநாயகத்துக்குஎதிரானவன்.
அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தைதுரிதமாக நாங்கள் முன்னேற்ற
முடியும். ஒரு சோசலிசஅமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

பிரபாகரன்: இல்லை..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 2, 2009

தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் போராட்டம்

வன்னி மக்களின் அவலம், அவர்கள் எதிர் கொள்கின்ற உணர்வுகளில் ஒரு சிறு துளியை பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளுடன், பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புலிகள் தாம் ஏற்படுத்திய மனித அவலத்தை, தம் பாசிச வலையமைப்பு ஊடாகவே, மக்களுக்கு இந்த உணர்வுகளை கொடுத்துள்ளனர். ஆனால் அது அவர்களுக்கு எதிராக மாறிவருகின்றது.

இந்த மனித அவலத்தில் இருந்து வன்னிமக்களை மீட்க முடியாது என்ற தெளிவும், அது சார்ந்த பட்டறிவும், உணர்வாகி மக்களை புலிகள் விடுவிக்க கோரும் உணர்வாக புலிக்கு எதிராக மாறிவருகின்றது.

மக்களின் அவலத்தை பார்த்து போராடச் சென்றவர்கள், புலிகளுமல்ல, புலியிசத்தை ஏற்றுக் கொண்டவர்களுமல்ல. மாறாக புலிகள் தம் பிரச்சாரத்துக்காக உருவாக்கியுள்ள மனித அவலத்தை பார்த்து, அதற்கு எதிரான உணர்வுகளுடன் ஈடுபடுகின்றனர்.

காலகாலமாக சிங்கள பேரினவாதம் கையாண்டு வந்த தமிழின அழித்தொழிப்பு, அது கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறியாட்டங்கள்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.
இதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.

இந்திய இராணுவ நடவடிக்கையின் போது :
- சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.

- புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை பெண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை.

- மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.

-திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.

-ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 1, 2009

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?

நீ தமிழன் என்றால், பாசிச புலியை ஆதரி என்று மிரட்டப்படுகின்றோம். இல்லையென்றால், பேரினவாத கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம். சர்வதேசியத்தை கைவிட்டு, வர்க்கம் கடந்த தமிழனாக மாறி புலிப் பாசிசத்தை ஆதரிக்க மறுக்கும் நாம், தமிழ்நாட்டு சர்வதேசியவாதிகளிடம் இருந்து எமக்கான ஊக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் அங்கிருந்து அவை வெளிப்படுவதற்கு பதில்;, தமிழன் என்ற அடையாள உணர்வூடாக புலியை விமர்சிக்காத கருத்துக்களாக வெளிவருகின்றது. எமக்கோ கிடைப்பது நெத்தியடிதான்.

இன்றைய நிலைக்கு வலதுசாரிய பாசிசப் புலிகள் காரணம் என்பதும், அவர்கள் தம் தோல்வியை தடுக்க மக்களை பணயமாக வைத்து பலியிடுகின்றனர் என்பதும் வெளிப்படையான உண்மை.

இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரமோ, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதல் பார்ப்பனியம் வரை இட்டுக்கட்டியவையல்ல. அ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அன்று உண்ட நஞ்சும், இன்று மூண்ட தீயும்...

அன்று சிவகுமாரன் உண்ட நஞ்சு, அவன் கையில் இருந்த ஆயுதம் அவன் மனதில் இருந்த உறுதியான போராட்ட உணர்வு இவைகள் அனைத்தையும் மீறி அவனை மரணத்துக்குத் தள்ளியது. அவன் அன்று எடுத்த எடுப்பில் தனது உயிரை மாய்த்து

விடவில்லை. அவன் உண்ட நஞ்சு கூட ஒரு நொடிப் பொழுதில் தன்னை அழித்துவிடும் நஞ்சாகக் கூட அது இருந்திருக்கவில்லை!

சிறையும் வீடுமான அவனது போராட்ட வாழ்கை, அன்றைய மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் மீதான வெறுப்பு ஒர் ஆயுதப் போராட்டத்துக்கான அவசர வருகையாகவே அது இருந்தது. அவன் மரணப்படுக்கையில் இருந்த போது கூட, அவனது உயிர் மீண்டு வருவதற்கான மாற்று மருந்துகளும் அவனுக்கு அருகிலேயே இருந்தன. ஆனால் அவன் சந்தோசமாக தமிழ் மண்ணுக்காக இறந்து போவதையே விரும்பினான்.

அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதால், சிறையிலிருந்தும், சித்திரவதைகளிலிருந்தும் தான் மீண்டு வர முடியாதென்றும், இனித் தன்னால் இந்த மக்களுக்காக போராடுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் இந்த அரசு விட்டுவைக்காது என்பதையும் உணர்ந்தான். அதனால் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்தத் தமிழ் மக்களுக்காகக் கொடுத்து.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பாரதி இன்றிருந்தால்…

சிங்களத் தீவினிற்கோர்
பாலமைப்போம் - என்ற
என்
நடபுப்பாலம்
மக்களை ஆக்கிரமிக்கும்
பாலமானதடி கிளியே!

மன்னனும் நானே
மக்களும் நானே
கண்ணனும் நானே
போரிடவும் –
போராட வைப்பவரும்
நாமேயென.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மனித அவலத்தை நிறுத்த, யுத்தம் நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா!?

மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால், அரசு மற்றும் புலியல்லாத ஒரு சூனியப்பிரதேசத்துக்குள் மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டும். இது மட்டும்தான் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.

இதைக் கோராத வரை, இதை நடைமுறைப்படுத்தாத வரை, புலி பலிகொடுப்பவராக, அரசு பலியெடுப்பவராக மாறி இரத்த ஆற்றில் அரசியல் செய்வார்கள். அதைத்தான் இன்று செய்கின்றனர்.

எதார்த்தம் ஒன்றாக இருக்க வேறு ஒன்றாக அதைப் புரிந்துகொள்வது, யுத்த நிறுத்தத்தை கோருவதாக உள்ளது. இது மனித அழிவை நடைமுறைப்படுத்துவதாக மாறுகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகின்றது. அதனிடம் மக்களை பலியிட அனுமதிப்பது ஏன்?! இது எப்படி சரியாகும்;. சரி புலிகள் கூறுவது போல், மக்கள் புலிகளுடன் நிற்பதாக வைப்போம். அதற்காக அவர்க...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.