தமிழ் அரங்கம்

Saturday, April 11, 2009

அரசுக்கு ஆதரவு வழங்குவதே 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றனர் 'ஜனநாயகவாதிகள்"

சுத்திசுத்தி கடைசியில் புலியெதிர்ப்பு, தன் இலக்கு அரசை ஆதரிப்பதுதான் என்பதை வெளிப்படையாக சொல்லத்தொடங்கியுள்ளனர். புலிக்கு மட்டும் இன்று சேடமிழுக்கவில்லை, புலியெதிர்ப்புக்கும் வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. அரசின் பின்னால் அம்மணமாகவே பவனிவரத் தொடங்கியுள்ளனர்.

புலிகள் சேடமிழுத்தபடி தனக்கு தானே கட்டிய தன் சொந்த பாடையுடன் தனது இறுதி யாத்திரையைத் தொடங்கியுள்ளது. எதிரியுடன் சேர்ந்து குழிவெட்டிய கூட்டம், இன்று குழிக்குள் தானும் இறங்கி நிற்கின்றது. இந்த புதைகுழிக்குள் புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்புக் கும்பலும் சேர்ந்தே புதைகின்றது.

ஜனநாயகம் கிடைத்தால் மக்களுக்காக போராடப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்த புலியெதிர்ப்புக் கும்பல்தான், இன்று அரசுக்கு பின்னால் அணிதிரளுகின்றனர். தாம் மக்களுக்காக போராட முடியாதவாறு, புலிகள் ஜனநாயகத்தை மறுப்பதாக கூறித் திரிந்த கும்பல், இன்று பேரினவாதத்தை ஆதரிப்பதுதான் 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றது.

இன்று புலிகள் தன் யுத்த இறுதிக் காலத்தில் அரசுடன் சேர்ந்து மற்றொரு துரோகத்தை இழைக்காமல் முழுமையாக போராடி மடிந்தால், அரசுக்கு எதிரான உணர்வுடன் தமிழ் சமூகம் நீடிக்கும் என்ற கவலை புலியெதிர்ப்பு கும்பலுக்கு. அதுதான் 'பொறுப்புள்ள அரசியல்" என்பது, அரசை ஆதரித்து தமிழ் மக்களை அரசின் பக்கம் கொண்டு வருவதுதான் என்கின்றனர். இதையே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்றனர்.

இதற்காக மக்களி................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்து மதம் கேட்ட நரபலி

திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.

கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதிவெறியர்கள் ஒடுக்கி வருகின்றனர். செந்தட்டி ஊரிலிருக்கும் முப்பிடாதி அம்மன் கோவிலில் மூன்று சாதி மக்களும் சேர்ந்துதான் கோவில் விழாவை நடத்துவது வழக்கம். கடந்த 2003இல் குடமுழுக்கு நடைபெற்ற பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டு உள்ளே வருவதை யாதவ சாதியினர் தடுத்துள்ளனர்.

கடந்த வருடம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான சுடலை மாடசாமி கோயில் திருவிழாவின் போது பாடப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 10, 2009

புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்?

இந்த அரசியல் கேள்வி, எமக்கு புலி முத்திரை குத்தி விலகிச் செல்லும் அரசியலாக வெளிப்படுகின்றது. இது இயங்கியலை புரிந்துகொள்ள முடியாத, அற்பத்தனமான இருப்புக்கான அரசியலாக மாறுகின்றது. எமக்கு புலி முத்திரை குத்துவது, உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாக இதை திரித்து புரட்டி அனைத்தும், இதை அரசியல் காழ்ப்புடன் அணுகுவதாகும்.

புலிகளை துரோகி என்ற சொல்லுக்குள் அடக்குவதும் கூட, ஒரு புலி அரசியல் தான். துரோகி, தியாகி என்ற சொற்களுக்குள் மொத்த அரசியலும் இயங்குவதில்லை. அரசியலில்லாத லும்பன்கள் தான், இதற்குள் இயங்குகின்றனர். புலிகளை துரோகி என்று ஒரு சொல்லுக்குள் மொட்டையாக அடக்கி, நாம் கருத்துச் சொல்ல முடியாது. அது இன்று உள்ளடகத்தில் புலிகளினதும், புலியெதிர்ப்பு அரசியலினதும் அடிப்படைக் கூறாகும்.

புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்? இதை நாம் ஆராய்வோம்.

1. புலித் தலைமை சரணடையாதும், துரோகத்தைச் செய்யாதும், மரணிக்கின்றனர். இதை எப்படி அரசியல் ரீதியாக நாம் மதிப்பிடுவது?
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கருப்பு அங்கிக்குள் காக்கிச் சட்டை புத்தி

"யாருடைய உத்தரவின் பேரில் போலீசு படைகள் உயர்நீதி மன்றத்திற்குள் நுழைந்தன? எந்த அதிகாரியினுடைய உத்தரவின் பேரில் அன்று தடியடி நடத்தப்பட்டது?'' என்ற அடிப்படையான இரு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு, போலீசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஒரு "திரைக்கதை'யை இடைக்கால அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.

""பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற தடியடியைப் புரிந்து கொள்ள ஜனவரி 29 இலிருந்து தொடங்க வேண்டும்'' என்று கூறி ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி நாம் நடத்திய போராட்டங்கள், அந்தப் போராட்டத்தின் போது குறிப்பிட்ட சில வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீசினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை விவரிக்கிறார். பிப். 19 அன்று முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாக சில வழக்குரைஞர்களை போலீசு கைது செய்ததாகவும், அந்தக் கைது நடவடிக்கையைப் பிற வழக்குரைஞர்கள் எதிர்த்ததாகவும், பொறுமையைக் கடைப்பிடித்த போலீசைச் சீண்டி, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டியதாகவும், கல்லெறிந்ததாகவும்... இத்தகைய சூழ்நிலையில் வழக்குரைஞர் கும்பலைக் கலைக்க தடியடி அவசியமாகத்தான் இருந்திருக்கிறது என்றும் கூறுகிறார் கிருஷ்ணா.

"அந்தத் தடியடியில் போலீசார் வரம்பு மீறிவிட்டார்கள்'' என்று குறிப்பிடும் ஸ்ரீகிருஷ்ணா, "படையினர் அவ்வாறு வரம்பு மீறுவதைத் தடுக்க ஆணை............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 9, 2009

மக்களுக்காக போராட மறுக்கும் 'ஜனநாயகம்"

'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.

இந்த அரசியல் உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் புலியொழிப்பு என்பது, அரசை பாதுகாப்பது தான் என்றான பின்பாக, எப்படித் தான் மக்களின் அவலத்தை கண்டு கொள்வார்கள். மக்களுக்காக போராடாதவரை, மனித அவலமே அங்கு இல்லையென்பதும், அதை மூடிமறைப்பதும் தான் இவர்களின் 'மக்கள்" அரசியலாகின்றது.

புலியொழிப்புத் தான் அனைத்து அரசியல் நிகழ்ச்சியென்றான பின்பு, அதை ஒழிப்பதாக கூறிக்கொள்பவனின் குற்றங்களை பாதுகாக்கின்ற பாசிச அரசியலே இன்று 'ஜனநாயகத்தின்" பெயரில் கொக்கரிக்கின்றது.

இப்படி கிரிமினல்களின் நடத்தைகளை, புலியொழிப்பின் பெயரில் நியாயப்படுத்துவது அரசியலாகின்றது. இந்த கிரிமினல் அரசியலை 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று புகழ்ந்து எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்; தான், கிழக்கில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை என்கின்றார். இதை சொல்லும் அரசியல் அருகதை, பேரினவாத அரசுக்காவும் அரச கூலிக் ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,

தனது வானொலிப் பேட்டி ஒன்றில் 'தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் - தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?"
என்று புலம்பியுள்ளார். புலிகள் சந்திக்கும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீளும் நப்பாசை, இதில் பிரதிபலிக்கின்றது. இதனால் அனைத்து புலி ஊடகங்களும், இதனை முதன்மை கொடுத்து பிரசுரித்துள்ளனர்.

ஆனால் நிலைமை என்ன? மக்களுக்கு எதிரானவர்களை, மக்களே தோற்கடிக்கின்றனர். இதுதான் நடக்கின்றது. இதனைக் கூட புலிகளால் உணர முடியாதளவுக்கு, புலியிசம் பிரபானிசமாகி எங்கும் எதிலும் புளுக்கின்றது.

இப்படி புலியிசம் தனக்குள்ளாகவே, அழுகி நாறுகின்றது. மறுபக்கத்தில் மக்களே தமது சொந்த வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கின்றார்கள். இந்த வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிணநாற்றத்துடன் கூடிய சொந்த மரணத்தை கண்டு, புலிகள் உளறத் தொடங்குகின்றனர். தனது புலியிசத்தை தாமே வலிந்து நடுச் சந்தியில் நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க அலம்புகின்ற.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் என்பது மட்டும், புலிகளின் போராட்டத்தை வெற்றியாக்கிவிடாது. புலிகளின் ஆயுதங்களும், ஆட்ப......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப்பித்து!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது.

கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.

ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களஇந்திய அரசுகள் நடத்திவரும் கொடூரமான போரை எதிர்த்து சவடால் அடித்துவந்த திருமாவளவன் 2 சீட்டுக்காக கருணாநிதியிடம் பம்மிப் பதுங்கிவிட்டார். மருத்துவர் அண்ணன் ராமதாசு, அன்புச்சகோதரி பாசிச ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழினவாதக் குழுக்களோ, காங்கிரசு துரோகிகளை தேர்தலில் வீழ்த்துவது என்ற பெயரில் பாசிச ஜெயா பா.ஜ.க.வுக்கு மறைமுகமாகச் சேவை செய்யக் கிளம்பிவிட்டனர்.

இப்பிழைப்புவாதிகளின் துரோகங்கள் மூடிமறைக்கப்பட்டு, ஈழவிவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஓட்டுச்சீட்டு சந்தர்ப்பவாதக் கூட்டணியே தமிழகத்தின் மையமான அரசியலாக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசும், பா.ஜ.கவும் கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில்................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 8, 2009

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?


எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

புலிகள் தோற்று வருகின்றனர் என்று நாம் கூறுவதை, துரோகமாக, எட்டப்பத்தனமாக வழமைபோல் காட்டுகின்றனர். இது எப்படி தோற்காமல் முன்னேறுகின்றது என்று அவர்களால், காட்ட முடியாதுள்ளது. புலிகள் எதைத்தான், தமிழ் மக்களுக்கு பெற்று தருவார்கள் எனக் கூட அவர்களால் கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட புலிப்போராட்டம் பல பத்தாயிரம் மக்களின் மனித உயிர்களை காவு கொண்டது. போராட்டத்தின் பெயரில், இரண்டு பத்தாயிரம் இளமையும் துடிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களை பெயரில் பலியிட்டுள்ளனர். புலியுடன் முரண்பட்டதால் இதேயளவு எண்ணிக்கை கொண்ட துடிப்பும் ஆர்வமும் தியாக உணர்வும் கொண்டவர்களை துரோகி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகளின் நிலை மதிப்புக்குரியது

அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.

மனித வரலாறு தொடர்ச்சியான துரோகத்துக்கு பதில், தவறான ஆனால் வீரம்செறிந்த போராட்டத்தை தன் வரலாறாக பதிவு செய்கின்றது. எம் வரலாறு சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபை கற்றுக்கொள்ளும் வகையில், புலிகள் மரணங்கள் தன் தவறுகள் ஊடாக எமக்கு விட்டுச்செல்ல முனைகின்றது.

இந்த வகையில் துரோகிகளின் வழியை, புலிகள் தம் அரசியல் பாதையாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் போராடி மடிகின்றனர். எந்தத் துரோகியை விடவும், எந்த எட்டப்பர் கூட்டத்தை விடவும், புலித்தலைவர்கள் தம் தவறுகள் ஊடாக வானளவுக்கு உயர்ந்துதான் நிற்கின்றார்கள். கிடைக்காத சந்தர்ப்பம், சூழல் என எது எப்படி இருந்த போதும், அவை தவறுகளை அடிப்படையாக கொண்டு, போராடி மடியும் வரலாற்றை இந்த உலகுக்கு விட்டுச் செல்லுகின்றனர்.

புலிகள் அரசுடன் கூடி நிற்கு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 7, 2009

வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

1. புலிகள் இதை மறு.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 6, 2009

எட்டப்பர்களின் கொட்டம்


தமிழினத்தின் மேலான வரலாறு, இனி துரோகிகளின் ஆதிக்க வரலாறாகின்றது. புலியின் முடிவு, இப்படித் தான் வரலாறாகி எழுதப்படுகின்றது. தமிழ்மக்கள் மீண்டும், சுதந்திர மூச்சு விடமுடியாது. இதுவரை காலமும் புலிக்கு அடிமைகளாக இருந்தவர்கள், இனி துரோகிகளுக்கும் அரசுக்கும் அடிமையாக இருக்கவேண்டும். இதைத்தான், இனி எம் மக்கள் பெறப்போகின்றார்கள்.

அரசின் தயவில் அரசியல் பிழைப்பு நடத்துகின்ற எட்டப்பர் கும்பல், புலியின் அழிவில் அதிகாரத்தில் அமரவே துடியாகத் துடிக்கின்றது. அரசுடன் தொங்கி நிற்கும் தமிழ் துரோகக் கும்பலின் வரலாறு, தமிழினத்தை இனி ஓடுக்கும் வரலாறாக மாறுகின்றது.

கிடைக்கும் அதிகாரத்தை எப்படி சுவைப்பது என்ற பேரங்கள், குத்துவெட்டுகள், ஆய்வுகள், ஆட்களையே போட்டுத் தள்ளுதல் என்று.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகளின் தளபதியான தீபன் மரணம் : என் நினைவுக் குறிப்பில் இருந்து

1987ம் ஆண்டு பங்குனி மாதம் 28ம் திகதி மலை 6.30 மணியளவில் தான் தீபன் எனக்கு அறிமுகமானான். என் காதுக்குள் திடீரென துப்பாக்கியை வைத்தவன், என்னை ஒரு காருக்குள் திணித்து கடத்த உதவினான்.

அவன் கேட்ட உதவியைச் செய்த போதுதான், எனக்கு இந்த நிகழ்வு நடத்தது. இது நடக்க முன், நான் நின்றிருந்த வீட்டின் முன், என்னை கடத்துவதற்காக அருகில் இருந்த ஓரு மோட்டார் சைக்கிள் திருத்தும் இடத்தில், பழுதடைந்த ஓரு மோட்டார் சைக்கிளை திருத்தும் வேஷம் போட்டுக்கொண்டு திரிந்தான். நான் அடிக்கடி அவனை நான் கண்ட போது, என்னைக் கடத்தத்தான் நிற்கின்றான் என்று சந்தேகிக்கவில்லை.

மாலையாகிவிட்ட நிலையில் தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால் மோதல் தொடங்கியிருந்த...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 5, 2009

கொல்வதை நியாயப்படுத்தியும், கொல்லப்படுவதை எதிர்க்கும் பாசிச அரசியல்

அரசு-புலி என்று இரு தளத்திலும், இதுவே இன்று அரசியல். இதில் ஒன்றைச் சார்ந்துதான், புலி-புலியெதிர்ப்புக் கருத்துகள். இப்படி தேசிய வெறியர்களும், தேசிய எதிர்ப்பு வெறியர்களும் மக்கள் விரோத உணர்வுடன் நடத்தும், பாசிச நாடகம். மக்களிள் விருப்பத்துக்கு மாறாக, பலாத்காரமான முடிவுகளை திணிக்கின்றனர். தம் அற்பத்தனமான சுரண்டும் வர்க்க விருப்பையே, மக்களின் பிணத்தின் மேலாக அடைய முனைகின்றனர்.


இதற்காக 50000 மக்களை படுகொலை செய்தாலும் கூட, அதை எதிர்ப்தரப்பு மீது குற்றம்சாட்டி விடத் தயாராகவே புலி-புலியெதிர்ப்பு உள்ளனர். மக்களை படுகொலை செய்வதன் மூலம் தான் தமக்கு தீர்வு உண்டு என்று அடித்துச் சொல்லும் பிரச்சாரங்கள், எம்மைச் சுற்றி சூடுபறக்க நடக்கின்றது. தமிழ் மக்கள் கொல்லப்படுவது என்பதுதான், புலி-புலியெதிர்ப்பு தரப்பின் அரசியல். ஆகவே நாளை தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். புலி-புலியெதிர்ப்பு அரசியல் இதை நன்கு தெரிந்துகொண்டே, இந்த வழியை ஆதரிக்கின்றனர்.

இந்த துயரத்தை அனு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

யாழ் சமூக கட்டமைப்பின் சமூகவிளைவா, விடுதலைப் புலிகள்?

யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

இதை நாங்கள் தெளிவாகவே மறுக்கின்றோம். இந்த முடிவை கூறுபவர்கள் அனைவரும், புலி பாசிச சூழலை எதிர்கொள்ள திராணியற்றவர்கள். ஒரு மாற்று அரசியல் வழியை மக்களுக்கு முன் வைக்கத் தவறியவர்கள் அல்லது அதில் தோற்றவர்கள். ஒரு அரசியல் வழியின்றி, தம் சொந்த அடையாளத்தையே இழந்தவர்கள்;. தமது இன்றைய இந்த நிலையை நியாயப்படுத்திக் கொள்ள, இந்த தர்க்கத்தை முன்வைக்கின்றனர். இதன் மூலம் தமது செயலற்ற தன்மையையும், கருத்தற்ற ஓடுகாலித்தனத்தையும் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் சாரம், யாழ் சமூகக் கட்டமைப்பின் தன்மையைத் தாண்டி, புலிக்கு மாற்றாக எதுவும் உருவாகியிருக்கவே முடியாது என்கின்றனர். இதனால் தான், தாம் சமூகத்தை மாற்ற எதுவும் செய்யமுடியாது இருக்கின்றோம் என்று கூறி, சமூகக் கடமையை நிராகரிக்கின்றனர். இதன் மூலம் கருத்துத்தளத்தில் தம் கருத்தையே கை விடுகின்றனர்.

இந்த தர்க்கம், இதன் சாரம், இதன்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்