தமிழ் அரங்கம்

Tuesday, February 23, 2010

கருவறைக் கண்ணீர் – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே

உன் கருவிலிருக்கும்

கடைசி மகள் எழுதும்

கண்ணீர் கடிதம்.

உனது கருவறைச்

சுவர்களில் – எனது

சுட்டு விரல் தீட்டும்

ஓவியம் புரிகிறதா? –நீ

.....

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!

வருடம் தோறும் ஒரு இலட்சம் தமிழ்தாய் நாட்காட்டி அச்சிடுவதும் அதன் வருமானம் சுளையாக அனைத்துலக பிரிவினரிடம் கைமாறுவதும் தெரிந்ததே. ஒரு நாட்காட்டி 10யூரோ படி விற்கப்படுவதுண்டு. இதன் செலவு தவிர்ந்து முழு இலாபமாக 10இலட்சம் யூரோக்கள் கையில காசு.

இவ்வளவு காலமும் போராட்டத்தை சாட்டி கைமாறிய பணம். இம்முறை 2010 கலண்டர் வருமானம் எங்கு சென்றது? யாரின் கையில் இந்த ஒட்டுமொத்த பணமும் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் கஸ்ரோ இளவரசர்களுக்கு மட்டும் இது தெரியும்.

கடந்த மே 18க்கு முதல் சுவிசில் எல்லா கன்ரோன்களிலும் அவசர நிதியென கேட்ட போது போராட்டத்தை காப்பாற்ற சுவிசில் பல ஆயிரம் பேர் சுவிஸ் வங்கிகளில் கடனாக எடுத்து கொடுத்த பல இலட்சம் பிராங்குகள் மாதம் மாதம் மீளளிக்க முடியாத சோகம் ஒவ்வொரு கன்ரோன்களிலும் கறையாக உள்ளது. இந்த கடன்களை திருப்பிக்கேட்டோர் அனைத்துலக மக்குகளால் துரோகிகளாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9மாதங்களாக போராட்ட அமைப்பின் பல்வேறு வருவாய் தரும் நிதி மூலங்களின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாமல் முடக்கப்பட்டுள்ளது.

மறுஆய்வு முதல் கட்டமாக ஒவ்வொரு தமிழ் தேசியத்தை மானசீகமாக ஆதரிக்கும் ஒவ்வொருவரின் வீடுகளிலும் தொங்கும் தமிழ்தாய் நாட்காட்டியின் கணக்கு கேட்பதுடன் ஆரம்பிக்கின்றோம். அனைத்துல..........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, February 22, 2010

இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை

இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை

இனிச் சருகுகள் காலம்

குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்

படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்

காடையர் இழிசெயல் வெறியொடு

தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….

வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்

சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…


வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்

வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்

பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்....

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்றைய இலங்கையின் அரசியல் நிலவரம் - தாயகன் ரவி

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் தமிழ் மக்களை உண்மையாகவே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என எழுதியவர்கள் இருந்தனர்@ தற்கொலைத் தாக்குதலிலிருந்து தற்செயலாகத் தப்பிப்பிழைத்த சரத் மரண விளிம்பைத் தொட்டு மீண்டவர், இதன் வன்மத்தைத் தமிழர்மீது காட்டத்தயங்காத குணமுடையவர் என்று கூறப்பட்டது.


மனிதன் ஒன்றை நினைக்க கடவுள் வேறென்றை நினைக்குமாம். இன்று தமிழ் மக்களை மட்டுமன்றி சரத்தையும், ஏன் – வெற்றிபெற்ற மகிந்த உட்பட இலங்கைமக்கள் அனைவரையுமே உண்மையிலும் கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற கட்டத்தில் இலங்கை நிலவரம் உள்ளாக்கப்பட்டுள்ளது.


“தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்பது எழுபதாம் ஆண்டுத் தேர்தல் முடிவை அறிந்தவுடன் தந்தை செல்வா அருளிச்சொன்னது. எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ, நாற்பது ஆண்டுகளின் போக்கில் இப்படி முழுநாட்டையும் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலை ஆட்டிப்படைக்கிறது.


பிரித்தானிய அரசின் பிரித்தாளும் சதியுடன் கைமாற்றப்பட்ட ஆட்சியதிகாரத்தைக் கையேற்ற இலங்கையின் அதிகார வர்க்கப் பிரதிநிதிகள் இலங்கையை இந்த நிலைக்கு வளர்த்துள்ளார்கள். முதல் ஆட்சியாளர்க........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, February 21, 2010

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது!

இலங்கை மக்கள் இன்னொருமுறை வாக்களித்து விட்டால், இன்னொரு ஐந்தாண்டுகள் அரசியல்பற்றி சிந்திக்கத் தேவையில்லை! வாக்கு வாங்கியவர்கள் உங்களின் அரசியல் வாழ்வை கொண்டோடி விடுவார்கள்!

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அரசியலுக்கு, மக்களும், மக்களுக்கு இவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள்!
அரசியல் கட்சிகள் பலவற்றை செய்வதில்லை, நடைமுறைப்படுத்துவதில்லை, என்ற ஏமாற்று நோக்கில் இருந்தே, மக்களை நோக்கி தேர்தல் வாக்குறுதிகளை வைக்கின்றார்கள். ஆனால் நடைமுறைப்படுத்தும் விதத்தில், உத்திகளை, சாகசங்களை கையாண்டு மக்களை மயக்கி, மக்கள் பிரதிநிதிகள் ஆகிவிடுகின்றார்கள். இதுதான் முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பாசாங்கு அரசியல்!

இலங்கையில் மட்டுமல்ல, சர்வ உலகிலும் பாராளுமன்றத்திற்கு ஊடான அரசியல் ஏகப்பெரும்பான்மையான மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதில்லை. பாராளுமன்றமும், பாராளுமன்ற ஜனநாயக அரசிய.....

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்