இந்திய சமூகத்தில் சாதிய அமைப்பு இன்னமும் நீடித்திருப்பதற்கும் கட்டிக் காக்கப்படுவதற்குமான காரணங்களில் இது முக்கியமானதாகும். ஆனால், இங்கே ஒவ்வொரு சாதியும் தனது நிலை குறித்துப் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் பொழுது, தற்போது தலித்துகள் என்றழைத்துக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட பட்டியலின சாதிகளிலேயும் கூட அருந்ததியர்கள் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய சாதிகள் மட்டும் அத்தகைய வாய்ப்பு இல்லாத அடிமட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
மொத்த சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதிகள் (ஒட்டு மொத்த பட்டியலின சாதிகள்) எப்படி மிகக் கீழான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ, அதேபோல அவர்களிலும் மிக மிகக் கொடூரமான அவலங்களையும் அடக்குஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்பவர்களாக அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதிகள் உள்ளன. சமூகப் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்பட்ட இடஒதுக்கீடு ஏற்பாடு கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் அமலில் இருந்தும், அது உண்மையான சமூக நீதியை வழங்கவில்லை என்பதற்கு உயிருள்ள வரலாற்றுச் சாட்சியமாக விளங்குபவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.
கல்வி மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு முன்னுரிமை வழங்கி தக்க வாய்ப்பளிப்பதற்கானதே இடஒதுக்கீடு என்பது ""சமூகநீதி''க்காரர்களின் நியாயவாதம், கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களை விட, அந்த வகைகளில் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயினும் பொருளாதார ரீதியில் மிகமிகப் பின்தங்கியவர்களுக்கும் தக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முற்பட்ட சாதியினர் முன்வைக்கும் எதிர்வாதம். ஆனால், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மட்டுமல்ல, வேறு எந்த ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் மிகமிக அடிமட்டத்தில் வாழ்பவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கின்படி அல்லாமல், ஒடுக்கப்பட்ட சாதிகள் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகளின் அளவுகளின் அடிப்படையில் சமூகநீதி வழங்கப்படுமேயானால், இந்த அருந்ததிய மக்களுக்கும் புதிரை வண்ணார்களுக்கும்தான் முதன்மை முன்னுரிமை அடிப்படையில் மிகக் கூடுதலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு வகுக்கப்பட்டிருக்கும் முறையோ, இம்மக்களை முற்றாகப் புறக்கணித்ததோடு, இம்மக்களின் முதுகிலேறி இச்சாதிகளுக்கு மேலுள்ள சாதிகள் இடஒதுக்கீட்டின் பலன்களை அறுவடை செய்து கொள்ளும்..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்