தமிழ் அரங்கம்

Saturday, September 10, 2005

இது பற்றி உங்கள் ...

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

அண்மையில் தமிழ்மணம் விவாதங்களில் பலத்த கருத்து மோதலை உருவாக்கிய சிறுமி விவகாரம் பற்றி நிதர்சனம்.கொம் இணையத்தளத்தில் வெளிவந்த புதிய கருத்தை அப்படியே தருகின்றோம். இந்த இணையமே புலிகளின் செய்திகளை வழங்கும் மைய ஊடாகமாகும். உலகளாவிய தமிழ் ஊடாகங்கள் இதில் இருந்தே தமது செய்திகளை கூட்டிக்கழித்து வெளியிட்டு வருகின்றனர்.

"தமிழ் ஊடகங்களுடன் சேர்ந்து நிதர்சனம் விட்ட தவறுக்கு மனம் வருந்துகின்றது.

( வெள்ளிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2005 ) ( அருள் )

சிறுமி தற்கொலை முயற்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்று எமது செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக மனம் வருந்துகின்றோம். சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதால் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகிய செய்தி முற்று முழுதிலும் தவறான செய்தி என்பதனை நிதர்சனம் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சம்பவத்தில் மிகப்பெரும் சதி அரங்கேற்ற்றப்பட்டுள்ளது என்பதை மிகவும் மனவருத்தததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். திட்டமிட்ட முறையில் முதல் தடவையாக யாழ் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளிநாட்டு உளவுச் சக்திகளினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும் ஒரு சில விடயங்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் ஒரு அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்பகின்றோம்.


நீண்டகாலமாக இந்தியத் தூதுவரலாயத்தினால் இவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்து அண்மையில் இந்தப் பாலியல் சதி அரங்கேறுவதற்கு முதல் இந்தியாவில் பி.ஏச்.டி விரிவுரை ஒன்றுக்குச் செல்ல முற்பட்ட வேளை இந்தியத் தூதுவராலயத்தினால் இவருடைய வீசா விண்ணப்பப் படிவம் முகத்திற்கு முன்னால் தூக்கி வீசப்பட்டது.

அண்மைக் காலமாக சேது சமுத்திரத் திட்டத்தினைத் தீவிரமாக எதிர்த்து வந்த இந்த விரிவுரையாளர் நீண்ட நெடும்காலமாக ஈ.பி.டி.பி தேசவிரோத சக்தியாலும் அவர்களின் துணையுடன் யாழ் குடாநாட்டில் இயங்கும் இந்திய உளவுப்பிரிவின் எடுபிடிகளாலும் இவருக்கு எதிரான திட்டமிட்ட முறையில் சதி அரங்கேற்றப்பட்டது.

நீண்டகாலகமாக உயிர் அச்சறுத்தலின் மத்தியில் ஊடகத்துறையினருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பல இக்கட்டான காலகட்டத்திலும் குரல் கொடுத்த இந்த விரிவுரையாளரின் செயற்பாடுகளை முடக்குவதற்குப் பலவகைகளில் பலரும் முயன்றும் பயனற்ற சந்தர்ப்பத்தில் சிறுமியொருவரை இவரின் குடும்பத்துடன் நயவஞ்கத்திற்காக நட்பாகப் பழகியவர் ஊடாக ஈ.பி.டி.பி.பி யினர் இவருடைய வீட்டிற்கு வேலையாளியாக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை மிகவும் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றிய தேசவிரோத சக்திகள் தற்போது தமது கபடத்தனத்தில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளதுடன் தமது துரும்பாகவும் பயன்படுத்திய சிறுமியை எவரும் சந்திக்காதவாறும் எவரும் விசாரணை செய்யாதவாறும் இரகசியமாகத் தடுத்த வைத்துள்ளனர்.

பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியலில் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்ப கட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஆசரியர்கள் மற்றும் அனைத்து யாழ் மாவட்ட கல்விமான்களும் விழிப்பாக இருக்கமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எமது இணையத்தில் இந்தச் செய்தி வெளிவந்தமையால் அந்த செய்தியின் உண்மைத் தன்னை தொடர்பாக நாம் உரிய முறையில் வினாவிய போது பல சதிகள் இவற்றுள் அரங்கேறியுள்ளதுடன் இந்தச் சதியில் தொடர்புபட்ட ஒரு பாடசாலை ஆசியர் கொழும்புக்குத் தப்பியோடியுள்ளார் என்பதுடன் செய்தியீன் உண்மைத் தன்மை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக உடனடியாக இந்தத் தகவலை வெளிக்கொணர்வதுடன் தவறான செய்திகளை வெளியிட்டதற்காக மீண்டும் நிதர்சனம் மனம் வருந்துகின்றது."


இது நிதர்சனச் செய்தி.

மற்றொரு செய்தி

அந்த தமிழ் குழந்தைக்கு எதிராக பேராசியருக்கு ஆதரவாக நீதிமற்றத்தில் ஆஜராகுபவர்கள் தமிழ்கூட்டமைப்பு எம்பிகள். அவரை பிணையெடுக்க நீதிமன்றம் சென்றவர்களும் தமிழர் கூட்டமைப்பு எம்பிமாரே.
இது பற்றியெல்லாம் உங்கள் கருத்து என்ன? பெண்ணிலைவாதிகளே உங்கள் கருத்து என்ன?

http://www.tamilcircle.net/

Friday, September 9, 2005

பண்பாட்டுச் சிதைவுகள்...

பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.

இலங்கையில் யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானம், பண்பாட்டுச் சிதைவை தமிழ் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்த பணம் உருவாக்கிய ஆடம்பரம், அந்தஸ்த்து, திமிருடன் கூடிய வக்கிரம், சிறுபான்மையினரின் பண்பாக இருந்த போதும், அவர்களே சமூகத்தின் முழுமையையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.

இந்த பண்பாட்டு கலச்சாரச் சிதைவு தமிழ் பிரதேசங்கள் எங்கும், இலங்கைத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் பொதுவாக நடக்கின்றது. இந்தச் சிதைவு பொருளாதார ரீதியான சமூக எற்றத் தாழ்வின் இடைவெளி அதிகரிப்பால் தேசியமயமாகின்றது. இந்த சமூக எற்றத் தாழ்வு பொதுவாகவே இரண்டு தளத்தில் பிரதானமாக நடக்கின்றது.

1.புலம்பெயர்ந்த மேற்கு நாட்டில் இருந்து, சொந்த மண்ணுக்கு சென்று வரும் ஒரு பிரிவால் நடக்கின்றது.

2.யுத்த பொருளாதரத்தை அடிப்படையாக கொண்டு உருவான தீடிர் பணக்கார கும்பலால் நடக்கின்றது.

இதுவும் மூன்று வகையைக் கொண்டது. இது தமிழ் மக்களை எல்லை இல்லாது வகையில் சுரண்டியதால் உருவானது. மற்றையது புலம் பெயாந்த நாட்டில் வாழ்வோரிடம் உறவை முன்நிறுத்தி வறுகுவதன் மூலம் உருவானது. இறுதியாக புலம் பெயர் சமூகத்துக்கு சேவை செய்வதன் மூலம், உயர் நுகர்வை பூர்த்தி செய்யும் வக்கிரமான நடைமுறை மூலம் உருவாகின்றது.

ஒட்டுமொத்தில் உலகமயமாதல் பண்பாடு இதற்கு அக்கபக்கமாக செயல்படுகின்றது. இலங்கையில் இனவாத யுத்தம் தொடங்க முன் இருந்த சமூகமும், யுத்தம் தொடங்கியவுடன் இருந்த சமூகமும் இன்று இல்லை. சமூகம் மேலும் கீழுமாக பிளந்ததனால், வக்கிரம் பிடித்த வெம்பிக் கிடக்கின்றது.

இந்த சமூகப் பிளவில் போராடிய இயக்கங்களின் பங்கும் பணியும் குறிப்பாக இருந்துள்ளது. இந்த பணப் பண்பாடு போராட்ட அடிப்படையையும், போராட்டத்தில் பங்கு கொள்வோரையும் கூட தகர்க்கின்றது. அவர்களும் இயல்பாகவே அதுவாக மாறிவிடுகின்றனர். பல போராட்ட உணர்வுகள், பணப் பண்பாட்டுக்குள் தேசியமயமாகின்றது. அவற்றை இக் கட்டுரை இதற்குள் ஆராயவில்லை. சமூக அமைப்புகுள் நடக்கும் பணப் பண்பாட்டு மற்றத்தையும், அதன் சமூச் சிதைவையும் பார்ப்போம்.

அமைதி சமாதானம் மேற்கு நோக்கி புலம்பெயர் சமூகத்தின் குசியான உல்லாசப் பயணங்களை உருவாக்கியுள்ளது. சொந்த மண்ணை நோக்கி நகர்ந்துள்ள இந்த உல்லாசம், பணப் பண்பாடாகி தேசிய வக்கிரமாகின்றது. ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்து, இலங்கைக்கான விமானச் சேவையை இலங்கை விமானங்களே நாள்தோறும் நடத்தும் அளவுக்கு, புலம் பெயர் சமூகம் உல்லாச பயணங்கள் விரிவடைந்துள்ளது.

இப்படி இலங்கை விமானம் மூலமும், அன்னிய விமானம் மூலமும் உல்லாசம் செல்லும் தமிழர்கள், ஈரோ நணயங்கiயும், டொலர் நோட்டுகளையும் கொண்டு செல்லுகின்றனர். இந்த பணம் அங்கு 100 மடங்கு பெறுமானமுடையதாக மாறுகின்றனது. இதன் மூலம் அங்குள்ள வாழ்க்கை தரத்தை விட, 100 முதல் 200 மடங்கு நுகரும் ஆற்றலை இயல்பாகவே இவர்கள் அடைகின்றனர். அத்துடன் உல்லாச பயணமாக இருப்பதால், நுகரும் ஆற்றால் 1000 மடங்கு மேலானதாக மாறுகின்றது. இந்த நுகரும் ஆற்றல் ஒரு சமூக அதிர்வை எற்படுத்துகின்றது. பணத் திமிரை எற்படுத்துகின்றது. ஒரு வக்கிரத்தை உருவாக்கின்றது. ஒரு அலட்சியத்தை உருவாக்கின்றது. எடுத்தெறியும் போக்கை உருவாக்கின்றது. சமூகத்தை எறி மிதிப்பதை சமூக அதிந்தஸ்தாக கருதுகின்றது. உயர்மட்டக் கனவுகள் இயல்பாக நனவாக, பண்பாட்டு கலச்சார சிதைவுகள் சர்வ சாதரணமாகியுள்ளது. நுகர்வு சார்ந்த சமூக வாழ்வியல் இருப்பை, தீர்க்க முடியாத மனநோய்க்குள் வடிகாலக்கியுள்ளது. பண்பாட்டு கலாச்சார உறவுகள் லும்பன் குணம்சமடைந்துள்ளது.

பணம் மூலம் கிடைத்த தீடிர் சமூகத் தகுதி, அந்தஸ்த்து மிகவும் தவறான சமூக உறவாக்கங்களை வழிநடத்த துண்டுகின்றது. அலட்சியம், எடுத்தெறிதல், வேண்டவெறுப்பாக அனுகுதல், திமிராக விதாண்டவாதம் செய்தல், சமுக இருப்பையும் அதன் அறிவையும் கேலி செய்தல் என நீளும் பணப்பண்பாடு, எங்கும் சிதைவையும், அவலத்தையும் நிரந்தரமாகியுள்ளது. பணத்தின் மூலம் கிடைத்த சமூகத் தகுதியை கையாளும் போது, அடிப்படையான சமுகப் புரிதல் இன்றி தமிழ் சமூகத்தையே சிதைக்கின்றனர். மேற்கத்தைய பண்பாட்டில் காணப்படும் ஜனநாயக விழுமியங்களை கோட்பாட்டு ரீதியாக எற்றுக் கொள்ளாத புலம்பெயர் தமிழ்ச் சமூகம், நடைமுறையில் அதன் ஒரு பகுதியை அனுபவிக்கின்றது. இப்படி உணர்வுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி சமூகப் பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்வதில்லை. அதை இழிவாகவும் கேவலமானதாவும் காட்டி வெறுக்கின்றனர். ஆனால் பணம் மூலம் கிடைத்த தீடிர் சமூகத் தகுதியின் மேல், மேற்கத்தை சமூக உறவுகளை கண் முடித்தனமாக திணிப்பதன் மூலம், பல நிரந்தர மனநோய்யாளர்களையும், நிரந்தர சமூகப் பிளவுகளையும் எற்படுத்துகின்றனர்.

உழைப்பை 100 முதல் 200 மடங்காகி விடும் நுகரும் ஆற்றலுடன் கூடிய பணவெறி, அனைத்தையும் இழிவாக கருதத் தொடங்குகின்றது. தமிழ் மண்ணில் நிகழும் மனித உழைப்பை எள்ளி நகையாடுகின்றது. கடந்த காலத்தில் உழைத்து வாழ்ந்த சொந்தப் பண்பாட்டை எள்ளி நகையாடுகின்றனர். அதை தமது பகட்டு வாழ்க்கையால் மூடி மறைக்கின்றனர். மேற்கத்தை நவீன நகரங்களில் எப்படி ஒரு பணக்கார கும்பல் சொகுசாக வாழ்கின்றதோ, அதே போன்று ஒரு சொகுசு வாழ்வை ஒரு மாதத்துக்குள்ளாகவே வாழ்ந்து வக்கரிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதி இது போன்று ஆர்ப்பட்டமாக ஆடம்பரமாக வாழ்கின்றது. பல பத்து லட்சங்களை செலவு செய்யும் மனநிலையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், அட்டகசங்கள் புலம்பெயர் நாட்டில் இருந்து உல்லாசம் சென்றவனின் உணர்வாக, அதை வெளியில் இருந்து மக்கள் கூட்டம் அண்ணந்து பார்க்கின்றது.

மக்கள் இந்த பணக்காரக் கும்பலை அண்ணந்து பார்க்கின்றார்கள் என்பதை, இந்தப் பணக்கார கும்பலும் அதன் செல்வாக்கு உட்பட்ட பிரிவும் எற்றுக் கொள்வதில்லை. அப்படி அங்கு வறுமையில் மக்களா என்று விதாண்டவாதம் செய்கின்றனர். ஆனால் உண்மை என்ன. 2003 இன் மார்கழி மாதம் வெளியாகி புள்ளிவிபரம் ஒன்றில்; யாழ் குடாவில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் 5 உறுப்பினரைக் கொண்டது என்றால், 4 லட்சம் பேர் வாழ வழியற்ற வறுமைக்குள் சிக்கியுள்ளனர். இது யாழ்குடா நாட்டு மக்கள் தொகையில் பெருபான்மையை இந்த கதிக்குள்ளாக்கியுள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இதை மேலும் உறுதி செய்கின்றது. 80 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக வடக்கு கிழக்கில் பாடசாலைக்கு செல்லவில்லை. 65 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை இடையில் கைவிட்டுள்ளனர். இப்படி சமூகத்தின் பெரும் பகுதி வறுமைக்குள் சென்றுள்ளது. இதை எள்ளி நகையாடும் வகையில் மறுபக்கத்தில் அட்டகசமான வாழ்க்கை ஒன்ற அரங்கேறுகின்றது. நிலத்தில் கால் பதிக்காது, வாகனங்களில் பவனி வருகின்றனர். சமூக உறவுகளையும் பண்பாடுகளையும் எடுத்து எறியும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக உறவினரைப் பார்க்க ஆட்டோவில் வந்து, ஆட்டோவை வாசலில் நிறுத்தி விட்டு உறவு கொண்டாடி விட்டு மீளும் தீமிர் பண்பாட்டு வரை அரங்கேறுகின்றது. ஆடம்பரமே வாழ்கையாகிப் போன யாழ்குடா நாட்டில் 35000 வாகனங்கள் இன்று ஒடுகின்றன. மிக நெருங்கிய குடும்ப உறவுகளின் பண்பாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு, பணத்திமிருடன் ஆடம்பரமாக சுற்றி வருவதும், தேவைப்பட்டால் உயர் தரமான ஒட்டல்களில் கூட தாங்கி நின்று தமது பெருமையைப் பீற்றுகின்றனர். இதை மையமாக வைத்து பல நவீன உல்லாச விடுதிகள், ஒட்டல்கள், சூப்பர் மக்கற்றுகள், வெளி நாட்டவருக்கு மேற்கத்தை பொருட்களை கொண்ட நவீன மக்கற்றுகள், சுற்றுலா மையங்கள், விசேட குளிருட்டப்பட்ட வாகனங்கள் என்று விரிந்த அடிப்படையில் ஒரு புல்லுருவி வர்க்கத்துக்காக உருவாகியுள்ளது. விரைவில வடக்கு கிழக்கில்; பெண்களைக் கொண்ட மாசஸ் மையங்கள், முதல் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் எல்லைவரை சூழல் விரைவில் மாறிவிடும். இன்று வெளிநாட்டு தமிழனின் பணத்தை ஆதாரமாக கொண்ட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு, இது ஒரு சேவைத் தொழிலாகிவிட்டது. மேற்கத்தை தமிழனின் தேவையை பூர்த்தி செய்யும் சேவைத் தொழிலை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையும், அவனின் பொருளாதார கட்டமைப்புக்களும் உருவாகின்றது. உற்பத்தியை எடுத்தால் மேற்கு தமிழனின் தேவையை பூர்த்தி செய்யும், எற்றுமதி உற்பத்தியாக தேசிய உற்பத்தி மாறிவிட்டது. இது எகாதிபத்திய உலகமயமாதல் தேவை பூர்த்தி செய்யும் எல்லைவரை விரிவடைகின்றது.

பணம் பண்பாடடை அடிப்படையாக கொண்டு சமூக அந்தஸ்து பெற்ற புலம்பெயர் தமிழன், தமது செல்வாக்கு உட்பட்ட குடும்பங்களுக்குள்ளான சாதாரண பிரச்சனைகளை வெட்டொன்று துண்டொன்றாக கையாண்டு வக்கிரமாகவே பிளக்கின்றனர். சொத்துகளை உரிமை கோரவும், விற்று தின்னவும் நுகர்வு வெறியுடன் சொத்துச் சண்டைகள் குடும்பங்களிடையே தொடங்கி வைக்கின்றனர். அடங்கி கிடந்த சாதிச் ஆதிகத்தைக் கூட கிண்டி கிளறிவிடுகின்றான். எங்கும் எதிலும் தலையிடும் புலம்பெயர் சுற்றலாத் தமிழ் பயணிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை எட்டாத உயரத்துக்கு மாற்றிவிட்டனர். சந்தையின் விலை எது தீர்மனிக்கின்றது என்ற ஆராய்ந்தால், புலம்பெயர் தமிழனின் வாங்கு திறனுக்கு எற்ப மாறிவிடுகின்றது. எழைகளின் நுகர்வு என்பது முற்றாக அலட்சியமாகியுள்ளது. உதாரணமாக கௌவுனவத்தை வேள்வியின் போது 800 ஆட்டுக் கிடாய் வெட்டப்பட்ட போது, கிடாய் ஒன்றின் குறைந்த விலையாக 20000 ரூபாவுக்கு விற்பனையானது. புலம்பெயா தமிழன் தனது பணப் பலம் மூலம் ஒவ்வொரு கிடாயாக தமக்குள் போட்டியிட்டு வாங்கினர். இறைச்சிப் பங்கின் விலை 1000 ரூபாவாக இருந்தது. ஐரோப்பிய சந்தை விலையை விட அதிகமானதாக இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. மீன் சந்தையில் மீன்கள் ஏலாம் கூறும் போது, புலம்பெயர் தமிழன் சாதாரண சந்தை விiலையை விட அதிகமாக ஒரே கேள்வியில் வாங்கிவிடுகின்றான்;. அங்கு வாழும் மக்களை எரிச்சல் ஊட்டக் கூடிய வகையில், பண வக்கிரம் தலைவிரித்தாடுகின்றது. இதற்கு எதிரான வெறுப்பு பல தளத்தில் வெளிப்படுகின்றது. உதாரணமாக வீதிகளில் செல்லும் இளைஞர்கள் அக்கபக்கமாக சென்று வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் போது, அவர்கள் கூறும் காரணம் காரில் வருவோரு வெளிநாட்டவர்கள்.

ஒருபுறம் புலம்பெயர் சமுகம் உருவாக்கிய இந்த பகட்டு வாழ்க்கையை மிஞ்சும் வகையில், யுத்த பொருளாதாரத்தை பயன்படுத்தி உருவான திடீர் பணக்கார கோடிஸ்வரர்கள் பல நூறு பேர் வடக்கு கிழக்கில் உருவாகியுள்ளனர். இவர்களின் வாழ்கைத் தரத்துடன் கூடிய ஆடம்பரங்களும் பகட்டுத்தங்களும் புலம்பெயர் தமிழ் சுற்றுலப் பயணிகளால் கூட வாழ முடியாத வகையில் உள்ளது. புலம்பெயர் தமிழன் மூக்கில் கை வைக்கும் அளவுக்கு வெம்பிக் கிடக்கின்றது. அங்கே உள்ளவர்கள் எப்படி வாழ்கின்றனர், நாங்கள் எங்கே ஒரு முலைக்குள் என்று சொல்லி புலம்பும் அளவுக்கு இந்த வெப்பிராயம் வெடிக்கின்றது. அவர்களின் நுகர்வின் அளவு லட்சங்கள், கோடிகளாக மாறிவிட்ட நிலையில், எங்கும் அதை நோக்கிய கனவுடன் தமிழ்ச் சமூகம் எல்லாவிதமான சமூகச் சீரழிவிலும் ஈடுபடுகின்றது. சமூகத்தின் தற்கொலை எதார்த்தமாகியுள்ளது.

இந்த தீடிர் பணக்கார கும்பல் யுத்த நெருக்கடியை தனக்கு சாதகமாக்கி, பல பத்து கோடிகளை தன்னகத்தே குவித்துள்ளது. இராணுவம் மற்றும் புலிகளுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்து பொருட்களை கடத்தி வருவதன் மூலம், அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் மேலான தட்டுப்பாட்டை பணமாக்கினர். லஞ்;சங்கள், வரிகள் எதுவாக இருந்த போதும், அவற்றை மக்களின் தலையில் சுமத்தியதன் மூலம், இலகுவாக லாபங்களை பல மடங்காக்கினர். புலம்பெயர் சுற்றுலாப் பயணிகளின் அற்ப நுகர்வு வக்கிரங்களை பூர்த்தி செய்யும், பணப் பண்பாட்டுக்கு இசைவான சந்தைப் பொருளாதாரத்தை இந்த தீடிர் பணக்காரக் கும்பல் உருவாக்கி அதையும் கட்டுப்படுத்துகின்றது. பணத்தை குவிப்பதில் வெற்றிபெற்றுள்ள இந்தக் கும்பல், தமிழ் பிரதேசங்களின் புதிய சுரண்டும் வர்க்கமாக உருவாகியுள்ளது.

மனித சமூக உறவுகள் சிதைந்து, அதற்கு பதில் பண உறவுகள் முதன்மை அடைந்துள்ளது. அறிவு, முதுமை, சமூக ஆற்றல், அனுபவம், பெரியவர்கள் என்ற வடிவில் நீடித்த சமூக அந்தஸ்தும், சமூக பண்பும் மறுக்கப்படுகின்றது. மாறாக பணம் சார்ந்த அந்தஸ்தும் பண்பும் திணிக்கப்படுகின்றது. சமூக கண்ணோட்டம் சிதைந்து சுயநலம் முதன்மை பெறுகின்றது. லும்பன் வாழ்க்கை முறையுடன் கூடிய பண்பை, இந்தப் பணப் பண்பாடு சமூகப்பண்பாடாக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்றாகியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல பத்தாயிரம் உயிர் தியகங்களுடன் நடக்கின்ற அதே மண்ணில், நடந்த வரும் பண்பாட்ட கலாச்சார சிதைவு ஒரு இனத்தின் அடிப்படையையே அழிக்கின்றது. பாரிய உளவியல் சிக்கலை இது உருவாக்கின்றது. தற்கொலைகளையும், மன நோய்களையும், குடும்பச் சிதைவுகளையும், சமூகப் பிளவுகளையும் நிரந்தரமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று தொடாகின்ற சூழல் நிலையில், இது அவலமாக பிரதிபலிக்கின்றது

Wednesday, September 7, 2005

பெண்ணின் கற்புரிமையை...

பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க 'கற்பு' என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

''கற்பு'' என்ற சொல்லை கைவிடாமல் பாவிப்பவர்கள் என ''கேள்வி'' கடந்து கோட்பாடு அற்று விவாதிக்கின்றனர். இங்கு ''கேள்வி''யல்ல முடிவாக கூறும் போதுதான் இதன் அரசியல் வெட்ட வெளிச்சமாக புரிகின்றது. ''கற்பு'' என்பதை கருத்துமுதல்வாதமாக புரிகின்ற போது கருத்தால் மறுப்பது நிகழ்கின்றது. நேரடியாக பொருள் அல்லாத விளைவுகளில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் தொடர்பான விவாதத்தை இது கோருகின்றது. தேசியம், வர்க்கப்போராட்டம் போன்றன பொருள்முதல்வாதம் சார்ந்ததா? அல்லது கருத்துமுதல்வாதம் சார்ந்தா? என்ற கேள்வி எழுகின்றது. சமுதாயத்தில் உடன்பாடற்றவைகளை கருத்துமுதல்வாதமாக காட்டி விளக்குவது பொருள்முதல்வாதத்தை மறுப்பதாகும்.
மக்களிடம் அன்னியப்பட்ட புத்தியீவிகள், மக்களுக்கு அன்னியமான கோட்பாடு கொண்டோர் "கற்பழிப்பு"க்கு எதிராக "கற்பு" என்ற கோட்பாட்டை எதிர்த்து போராடுவதற்கு பதில் மொழியில் ஒளித்து (என்னதான் சொல்லை மாற்றினாலும் ஆணாதிக்க சமூக அமைப்பில் அச் சொல்லுக்குரிய அர்த்தங்கள் மாறிவிடுவதில்லை. மாறுவதாயின் சமூக அமைப்பு மாறவேண்டும்.) விளையாடுகின்றனர்.
"கற்பழிப்பில்" ஈடுபடும் ஒருவன் பெண்ணுக்கு "கற்பு"ரிமை உண்டு என்ற ஆணாதிக்க நிலையில் நின்று, அதை அழித்து சூறையாடும் போது, அதற்கு எதிரான ஆணாதிக்க நோக்கத்தை வெளிப்படுத்தும் குற்றத்தை (எப்போதும் சர்ச்சைக்கு உள்ளாவது கற்பழிப்பு குற்றத்துக்கு எதிராக எழுதும் போதே) வேறு எந்த சொல்லும் மாற்றீடு செய்யமுடியாது. இப்படி மாற்றீடுவது என்பது ஆணாதிக்க வெளிப்பாடான "கற்பழிப்பின்" நோக்கத்தை அதன் வக்கிரத்தையும் மழுங்கடித்து, "கற்பு" மீதான ஆணாதிக்க பொருள் சார்ந்த செயல் தளத்தை "தேசியம் கற்பிதம்" என்று கூறி (இங்கு "தேசியம்" முதலாளித்துவ கோரிக்கை.
"கற்பு"இன்று ஆணின் கோரிக்கை. ஆனால் பாட்டாளி வர்க்கம் தேசியத்தின் ஜனநாயக கோரிக்கையை ஆதரிக்கின்றது. இது போல் பெண்ணின் ஜனநாயக உரிமையாக பெண் உருவாக்கிய "கற்புரிமையை" ஆணாதிக்கத்திடம் பாதுகாக்க பெண் போராட வேண்டியுள்ளது. அதவாது இங்கு கற்புரிமை என்பது ஆணுக்கு எதிரான ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணின் தற்பாதுகாப்பு வடிவமாகவுள்ளது. இதைத்தான் எல்லா ஆணாதிக்கமும் சூறையாட விரும்புவதும் பெண்ணின் எதிர்ப்பும் ஆகும்.) தேசத்தை ஏகாதிபத்தியம் சூறையாடுவதை மூடிமறைப்பது போல், இன்று ஆண் உருவாக்கிய பெண்ணின் "கற்பை" கற்பிதமாக்கி ஆணாதிக்கம் சூறையாடுவதை பூசி மெழுக விரும்புகின்றனர். அதாவது ஒரு பெண் தனது சொந்த உடல் மீதும், உணர்வு மீதும் பாதுகாக்கும் தனித்துவத்தை ஆணாதிக்கம் சூறையாடும் போது அது பெண்ணின் கற்புரிமையாக பெண் முன் உள்ளது. ஆதிய சமூகங்களில் ஆண் - பெண் வரைமுறையற்ற புணர்ச்சியில் இருந்த போது பெண்தான் ஆணைத் தெரிவு செய்யும் தாய்வழி சமூகம் இருந்தது.

பின்னால் தனிச் சொத்துரிமையூடாக ஆண் சொத்துரிமையை பெற்று, சமூகம் மீது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தொடங்கிய போது, பெண்ணின் உரிமை படிப்படியாக பறிக்கப்பட்டு, பெண் மீது ஆணின் வரைமுறையற்ற சூறையாடல் சமூகத்தில் உருவானது. இந்த வளர்ச்சியில் பெண் தற்காப்பு நிலையெடுத்து குறித்த ஆணை சார்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டாள். இது பெண்ணின் கற்பாக இருந்தது. பெண் தான் விரும்பும் ஒரு ஆணுடன் மட்டும் உறவு கொள்ளும் எல்லைக்குள் இது இருந்தது. இந்த தற்காப்பை படிப்படியாக பெண்ணிடம் இருந்து ஒரு ஆண் தனது சலுகைக்குரிய, தனக்குரிய சொத்தாக மாற்றினான். பரஸ்பரம் இணைமணத்தில் ஆணைத் தெரிந்தெடுக்கும் தெரிவை, பெண் ஆணாதிக்க சூறையாடலுக்கு எதிராக தற்காப்பு நிலையில் பெற்றதை, தொடர்ச்சியில் ஆண் சார்ந்த தனிச்சொத்துரிமை பெண்ணை தனது சொத்துரிமையாக்கியது என்பது, வர்க்கப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான புதிய ஒடுக்குமுறையாகும். இந்த எல்லைக்குள் கூட கற்பு பெண்ணின் தற்காப்பு அரண்களை பிரதி செய்கின்றது. இன்று ஆணாதிக்க சமூகத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியை, ஒழுக்கத்தை மீளக் கோருவது ஆணாதிக்கமே ஒழிய பெண்ணியமல்ல. பெண்ணை விளம்பர பதுமையாக்கப்பட்டு அனைத்துதுறையிலும் சூறையாட அலைவதை நாம் காணமுடியும். இங்கும் பெண் தொடர்ந்து தற்காப்பு நிலையெடுப்பதும், உலகமயமாதல் பெண்ணை மேலும் மேலும் நிர்வாணமாக்குவதும் கண்கூடு.

விபச்சாரத்தில் பெண் எதை காசுக்கு விற்கின்றாள். உடலையல்ல சொந்தக் கற்புரிமையை என்பது பல பெண்ணியல் வாதிகளுக்கு புரிவதில்லை. ஆண் மட்டுமே இங்கு உடலை அனுபவிக்கின்றான். பெண் சொந்தக் கற்புரிமையை தன்மானம் கடந்து விற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். ஆணாதிக்கம் பெண்ணை உடல் சார்ந்து அணுகுவதால் ஆணாதிக்க மொழியில் தான் பெண் உடலை விற்கின்றாள் என்ற கருத்தமைவு புனையப்படுகின்றது.
ஏங்கெல்ஸ் என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். "... பொதுமகளிர் முறை நேரடியாகக் குழு மணத்திலிருந்து வந்ததாக, கற்புரிமையை வாங்குவதற்குச் செலுத்தும் காணிக்கை என்ற முறையில் பெண்கள் உடலுறவுக்குத் தம்மை ஒப்படைத்ததிலிருந்து வந்ததாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். பணத்துக்காக உடலுறவுக்குத் தம்மை ஒப்படைத்ததிலிருந்து வந்தாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். பணத்துக்காக உடலுறவுக்கு உடன்படுதல் முதலில் ஒரு மதச் சடங்காக இருந்தது. அந்தச் சடங்கு காதல் தெய்வத்தின் ஆலயத்தில் நடைபெற்றது." முதல் விபச்சாரம் பணத்தைக் கொடுத்து தொடங்கிய போது பெண்ணின் கற்புரிமையை கடவுளின் பெயரில் ஆணாதிக்கம் வாங்கிக் கொண்டது. பெண்ணின் சுதந்திரத்தை விலை பேசிய அந்த நிமிடமே, பெண்ணின் கற்புரிமையை பெண் உடல் உரிமையில் இருந்து இழந்து விடுகின்றாள். பெண் தனது தெரிவைவிட பணத்தைப் பெற்று இழப்பது உடல் உரிமையையல்ல கற்புரிமையையே என்பதே இங்கு அடிப்படையான உள்ளடக்கமாகும்.
உடல் என்பது மனிதனில் வெறும் உறுப்புகளின் பிம்பமல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனிலும் உடல் என்பது உள்ளார்ந்த தனித்துவமிக்க புற உலகை புரிந்து வெளிப்படுத்தும் தன்மைதான் மனிதனின் உள்ளடக்கமாக உருவாகின்றது. அதாவது உடல் எல்லா மனிதனுக்கும் பொதுவானதாக உறுப்புகளின் தொகுதியாக இருக்கும் அதே நேரம், வெளிப்படுத்தும் வடிவம்தான் வேறுபடுகின்றது. ஒரு விபச்சாரிக்கும், விபச்சாரி அல்லாத பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு உடலுரிமையை விற்பதில் அல்ல கற்புரிமையை விற்பதில் தொடங்குகின்றது. இது பெண்ணின் நிலையில் ஆணாதிக்கம் விதிந்துரைக்கும் கற்பையல்ல, மாறாக அப்பெண்ணால் தீர்மானிக்க முடியாமல் சூறையாடப்படும் கற்புரிமையைத்தான். இதை அவள் விரும்பி அல்ல, சமூக நிலைமையால் அவளை மீறி இது செயல்படுகின்றது.

அ.மார்க்ஸ் தேசியத்தை கற்பிதம் என்றார். தேசியவிடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகின்றது என்றார். ஆனால் தேசம் முன்கூட்டியே இருப்பதை மறுத்து, அதில் இருந்தே போராட்டம் தொடங்குகின்றது என்பதை மறுப்பது அடிப்படையிலேயே கருத்துமுதல்வாதமாகும். இது இயங்கியலின் வரலாற்று வளர்ச்சி விதிகளை மறுக்கின்றது. பொருள் முன்கூட்டியே தோன்றுவதும், அதில் இருந்தே அடுத்த கட்ட பாய்ச்சல் நிகழ்வது இயங்கியல் ஒழுங்காகும். இதை மீறமுடியாது. இதை மறுத்து தேசியத்தை கற்பிதமாக கூறுவது, ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்து உதிக்கின்றது. பூ வருமுன்பு விதை பெறமுடியாது. வசனம் மக்கள் பேச முன் வசனம் மொழியில் வரமுடியாது. ஆனால் இது பின் ஒழுங்கமைக்கப்படுகின்றது. அது முந்திய வடிவிலும், திரிந்த வடிவிலும் கூட மாற முடியும். பூ விதையாக மாறும் போது இயங்கியல் ஒழுங்கிலும், பூ பித்தெறியும் போது திரிந்த வடிவிலும் மாறுகின்றது, மாற்றப்படுகின்றன.
தேசிய விடுதலைப் போராட்டம் இருக்கும் தேசத்தில் இருந்து அரசை உருவாக்குகின்றது. அல்லாது திரிந்த வடிவில் தரகாக துரோகம் செய்யமுடியும். இதுபோல்தான் கற்புரிமை பற்றிய வாதங்களும்.
பெண் தனது பாலியல் நடத்தை மீதான சொந்த தெரிவை தெரிந்த போதே கற்புரிமை பொருள் வடிவம் பெறுகின்றது. ஆனால் அது ஆணாதிக்கத்தால் முதிர்ச்சி பெற்ற போது கற்புரிமையின்; அர்த்தம் திரிகின்றது. இதனால் பொருளில் திரிபடைந்து மாற்றம் காண்கின்றது. அதே நேரம் பழையது தொடாந்து இருப்பதை மறுக்கின்ற போது, பெண்ணின் சுதந்திரத் தெரிவை மறுப்பதை அடிப்படையாக்குகின்றது. கற்புரிமை மொழிக்கு முன்னமே யதார்த்தத்தில் இருக்கின்றது. அதன் பின்புதான் மொழி வருகின்றது. இந்த மொழி திரிபடைவது பின்னால் நிகழ்கின்றது. ஆனால் பலர் இயங்கியலின் உட்கூறைக் கண்டு கொள்ள முடியாத இயங்கியல் மறுப்பாளராக இருக்கின்றனர்.
எங்கெல்ஸ் இயங்கியல் வளர்ச்சியை மறுப்பது பற்றி கூறிய கருத்துகள் இந்த இடத்தில் சிறப்பாக பொருந்துகின்றது. " 'வசனம்' என்ற சொல் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் வசனம் பேசியது போன்று." எனக் குறிப்பிட்ட போதே வசனம் முன் கூட்டியே மக்களால் பேசப்பட்டது. வசனம் வந்த பின்பு அதன் அர்த்தம் மாறிவிடுவதில்லை. அது எந்த மொழியில் இருந்தாலும் பொருந்தும். உண்மையில் இந்த சொல் என்பது கற்பனையானவையல்ல. சொல் என்பது பொருளைக் குறித்து அடையாளப்படுத்துவதுதான். பொருளை அடையாளப்படுத்தவது என்பது மக்களிடையே இருந்த தூரம், காலம், சூழல்... போன்ற இயற்கையின் விளைவாலும், சேர்க்கையான உழைப்பின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியாலும் ஒரு பொருளைக் குறித்த அடையாளப்படுத்தல், மொழியின் உச்சரிப்பில் வேறுபட்டாலும் அதன் அடையாளப்படுத்தல் ஒன்றையே குறிக்கின்றது. இந்த ஒன்றைக் குறித்து அடையாளப்படுத்தலை வந்தடைந்த பாதை வேறுபட்டு, அதன் விரிவான அர்த்தம் மற்றும் பயன் பாட்டின் தன்மை வேறுபாடுகள் இருந்த போதும் பொருள் குறித்த அடையாளப்படுத்தல் பொது சாராம்சத்தில் ஒன்றையே குறிக்கின்றது. இது உலகில் காணப்படும் பல்வேறு ஒரே பொருளுக்கும் பொருந்தும்.
உதாரணமாக நெல் இனத்தை எடுத்தால் அதில் பலவகையானவை, பலதன்மையுடன் இருந்த போதும் அது ஒன்றைக் குறித்து நெல்லாகின்றது. இதன் பொது சாராம்சம் இதை தெளிவாக நிர்ணயிக்கின்றது. எங்கெல்ஸ்சின் இந்த வளர்ச்சி விதியை விளக்கும் போது ". எனவே நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்பது யாது? மிகவும் பொதுவான, இந்தக் காரணத்தால் மிகவும் பரந்த செயல்விளைவுடைய மற்றும் முக்கியமான இயற்கை, வரலாறு, சிந்தனை ஆகியவற்றினுடைய வளர்ச்சியின் விதியாகும். ... ..இயங்கவியல் இயற்கை, மனித சமுதாயம், சிந்தனை ஆகியவற்றினுடைய இயக்கம் மற்றும் வளர்ச்சியின் பொது விதிகளைப் பற்றிய விஞ்ஞானமே தவிர வேறு எதுவுமன்று.. இயங்கியல் விதிகளை மூன்றாகச் சுருக்கலாம்.
1.அளவுநிலை பண்பு நிலையாகவும் பின்சொன்னது முன்சொன்னதாகவும் மாறுபாடு அடைவது என்னும் விதி.
2.எதிர்நிலைகள் பரஸ்பரம் ஊடுருவல் என்னும் விதி.
3.நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்னும் விதி"
இதை மறுத்தே சொல்லின் பொதுசாராம்சத்தை கொச்சைப்படுத்தமுடிகின்றது.

பல சிக்கலான செயல்களின் தொகுப்பில் தான் பொருள் உண்டாகின்றது, நிலைக்கின்றது, நீடிக்கின்றது, மாறுகின்றது, சிதைகின்றது, மீளவும் உருவாகின்றது. ஓரு பொருள் ஒரு இயக்கம் என அனைத்தும் சிக்கலான பல இயக்கங்களின் விளைவுகளாகத் தான் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்து மாறிக் கொண்டுள்ளது. இது பொருளின் பொதுத் தன்மையை குறித்த அக்கணத்துக்கே உரியவகையில் எந்த நிலையிலும் (அது வினாடியாக இருந்தாலும் நீடித்த பல கோடி வருடங்கள் ஆனாலும்) கொடுக்கின்றது. வளிமண்டலத்தை எடுத்தால் ஓட்சிசன் (O2)இ நைதரசன் (N2), காபனீர் ஒட்சைட் (CO2) ...... போன்ற வாயுக்கள் ஊடான ஒரு பொது உண்மையை, அது சார்ந்த சாராம்சத்தை பூமி எங்கும் கொண்டு உள்ளது. சுரண்டலை எடுத்தால் உழைப்பைச் சுரண்டும் பொதுச் சாராம்ச உண்மை, உலகெங்கும் பொதுவாக உள்ளது. பெண்ணை எடுத்தால் ஆணாதிக்க சுரண்டல் சாராம்ச உண்மை உலகளவில் பொதுவாக உள்ளது. சாதியை எடுத்தால் சாதி ஒடுக்கு முறையுடன் கூடிய சுரண்டல், சாதி உள்ள நாடுகளில் பொதுவாக உள்ளது. இது எல்லா இயக்கத்திற்கும், பொருளிற்கும், சிந்தனைக்கும் பொதுவான உண்மையானதாக உள்ளது. இது மாற்றத்துடன் புதிய சாராம்சத்தை தொடர்ந்து பிரதிபலிக்கின்றது. தொடர்ந்தும் மாற்றத்துக்குள்ளாகின்றது.

மாற்றம் என்பது வெற்றிடத்தில் நிகழமுடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களுக்கிடையில்தான் மாற்றம் நிகழமுடியும். கற்பு என்ற சொல் வெற்றிடத்தில் இருந்து உருவாகியதல்ல. அது போல் மாற்றமும் வெற்றிடத்தில் நிகழமுடியாது. நிகழமுடியும் எனின் அது கருத்துமுதல்வாதமாகும்;. கற்பு என்பது கற்பிதமல்ல. அப்படி இருக்கவும் முடியாது. சொல்லுக்குரிய அர்த்ததில் கற்பு பற்றிய எதிர் கண்ணோட்டத்தில் கற்பிதம் எனக் கூறுவது அல்லது அதை மறுத்து எழுதுவது இலகுவானதாகும், இது புரட்சிகர வாய் வீச்சாகின்றது. கற்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. வரலாற்று ரீதியாக இயற்கையில் மாறிவந்த மனித சமூகசாரம் கற்பை பற்றிய வரையறைக்கு, மாறுபட்ட வரலாற்று வளர்ச்சியுடன் விளக்கத்தை கொண்டிருந்தது. இது பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட வரலாற்று வளர்ச்சி விதியுடன் ஒன்று ஆளுமை பெற்றது. மற்றயது உள்ளுராக நீடித்ததுடன் முரண்பட்டு போராடியது. கற்பு பற்றிய ஆணாதிக்க ஒழுக்கம் ஏகாதிபத்தியத்தால் மறுப்புக்குள்ளாகும் போது, அங்கு கற்புரிமை பற்றிய பெண்ணின் நியாயமான உரிமை அரங்குக்கு வருகின்றது.

"கற்பு", "கற்பழிப்பு" மொழியியல் ரீதியில் திரிக்கப்பட்டவை. தமிழ் லெக்சிக்கன் கற்பு என்பதை "களவுக் கூட்டத்துக்குப் பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்த இல்லறம் புரியும் ஒழுக்கம்" என்று வரையறுத்துள்ளது. கற்பு பற்றிய தொல்காப்பியர் தொல் பொருள் 142 இல் கூறுவதைப் பார்ப்போம்.

"கற்பென ப்படுவது கரணமொடு புணரக்
கொள்ளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைத்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"

அன்று திருமணத்துக்கு முந்திய களவுக் காதல் அனுமதிக்கப்பட்டிருந்த எல்லையில், கற்பு திருமணத்துக்கு பின் ஆண் பெண் விசுவாசத்தை கோரப்பட்டது. அதாவது வாரிசுரிமை ஒருதார மணத்தை வரையறுத்த போது, திருமணத்துக்கு முந்திய உறவு நிபந்தனையாவதை தடுக்கின்றது. ஏனெனின் ஆண் தனது குழந்தை என்பதை உறுதி செய்யும் திருமணத்தினூடாக கோரிய கற்பு மட்டுமே நிபந்தனையாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முந்திய கன்னியில் உடலுறவு மூலம் கருத்தரிக்கின்ற போதும், அல்லது திருமணம் முடிந்தவுடன் முந்திய உறவால் குழந்தை உருவாகின்ற நிலைமையில் இருந்து, அப்பெண் பெறும் குழந்தை மீதான வாரிசுரிமையை ஆண் ஏற்க மாறுக்கின்ற போது அல்லது திருமணமே நடக்காத போதே 'கற்பு' கன்னியிலும் பாதுகாப்படுவதை நிபந்தனையாக படிப்படியாக கோருகின்றது.
கன்னியில் உடலுறவுச் சுதந்திரம் இருந்ததையும், இது மாறிவந்த சமுதாயத்தையும் துல்லியமாக சங்க இலக்கியம் கோடு இட்டுக் காட்டுகின்றது. மேலும் தொல் காப்பியர் தொல்பொருள் 99 இல்
"அச்சமும் நாணும் மடனும் முத்துறத் நிச்சமும் வெண்பாற்குரிய என்ப" என்கின்ற போது பெண்ணின் அடிமைத்தனத்தை உறுதி செய்கின்றார். ஆணுக்கு விதிவிலக்காக்கியதன் மூலம் ஆணாதிக்க தனிச்சொத்துரிமையை உறுதி செய்கின்றார்.

மேலும் அவர் தொல் பொருள் 111 இல் " நாணம் உயிரினும் சிறந்தது" என்றும் "நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தது." என்று கூறியதுடன் கற்பின் தன்மையை மூன்று வகையாக பிரிக்கின்றார். "மூதானந்தம் (கணவன் இறந்ததை அறிந்தவுடன் இறக்கும் பெண்), புறக்காடு (உடன் கட்டை ஏறும் பெண்), தாபநிலை நோன்பை வழுவாது பேணுபவன்)" என வகுத்துள்ளார்.

புறம் 196 இல் "சாந்தம், அமைதி, மென்சொல், பேச்சில் துடுக்கை தவிர்த்தல், போன்ற பண்புகள் கற்புடைய பெண்ணின் குணங்களாக அமைந்தன" என்று மாறிவந்த சமுதாய விளக்கம் போதித்தது. வாரிசுரிமையில் ஆணின் இரத்த வழியில் உறுதி செய்ய பெண்ணை கட்டுப்படுத்த, அடக்கி ஆளவேண்டிய வடிவில் இந்த நிபந்தனைகள் கற்பு வடிவில் முன்வைக்கப்பட்டு கோரப்படுகின்றது. இதில் இருந்தே மேலும் உடல் சார்ந்து கோருவதுடன், மற்றயவை முந்தியவை பெண்ணின் பொதுவான இயல்பாக நடைமுறைக்கு வந்துவிடுகின்றது. புறம் 198 இல் "கடவுள் சான்ற கற்பு" என்று மேலும் விளக்கம் பெற்ற போது கற்பு கோலோச்சி பெண்ணை அடக்கி ஆள்வதைக் காட்டுகின்றது.

ஆணாதிக்கம பெண்ணின் கற்புரிமையை உள்வாங்கி பெண் மீது திரித்து, திணித்த போது, இதன் சமூகப் பெறுமானம் பெண்ணை இழிவு படுத்தியது. இது போல் பறை, பறையன் என்ற சொல்லையும் எடுக்க முடியும். பறை என்ற இசைக் கருவியை திரித்து அந்த இசையையும் சாதிப் பண்பாட்டால் பொருளாகப்பட்ட பறை தீட்டு படுத்தப்பட்டது. இங்கு இவ் இசைக் கருவி இழிவுக்குள்ளானது. பறை, பறையன் சாதி ரீதியாக இழிவுக்குள்ளாகும் போது அவ் இசைக்கருவியினை நாம் மறுக்கமுடியுமா? பார்ப்பனியம் அதைத்தான் கோருகின்றது. ஆனால் இசைக் கருவியான பறையை பாதுகாக்கவும், அதன் மீதான சாதிக் கறையையும் அகற்றப் போராட வேண்டியுள்ளது. பறை மீது கறைபடிந்திருக்கும் சமூக மதிப்பீடுகளை மீளவும் புரட்சியுடாக புரட்டி எடுப்பதன் மூலம் அதன் இயல்பான இயற்கையான நிலைக்கு மாற்றீடு செய்யப்படவேண்டும்;. இது போல் நடைமுறை சார்ந்து பல திரிபடைந்துள்ளது.

"கற்பு", "கற்பழிப்பு" இது போன்றவையே, தனிமனிதன் முதல் மக்கள் மீதான அத்துமீறல்களின் போது அதை எதிர்த்த போராட்டத்தில் கற்புரிமை என்ற பதம் அடிப்படையான போராட்டத்தை குறித்து நின்றது. சமூகத்தின் வாழ்வு பண்பாட்டை பாதுகாக்கும் இந்த கற்புரிமை என்ற வரைமுறை எல்லா காலத்திலும் அடிப்படையானதாக இருந்தது. ஒரு தேசம் கற்பழிக்கப்பட்டது என்று குறிப்பிடும் போது அதன் அர்த்தம் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலாக ஓங்கி ஒழீக்கின்றது. தனிச் சொத்துரிமை சமுதாய விழுமியங்களையும், தனிமனித உரிமைகளையும் பறித்த போது, பறிகொடுத்தவன் தனது உரிமையை கற்புரிமையாக அடையாளம் காண்பதும் போராடுவதும் வழக்கில் வந்தது. மொழியியல் ரீதியில் இதன் அர்த்தம் ஒடுக்கப்பட்டவனின் குரலாக, சொந்த உரிமைக்கு ஆதரவுhன குரலாகவும் பரிணாமித்தது.

சொத்துரிமைச் சமூகம் சொத்துக் குவிப்பதை பொது பண்பாடாக உரிமையாக்கிய போது இந்த சொல்லின் இயற்கையான அர்த்தத்தை தனது சொத்துரிமை மீதான "கற்பாக" கண்டது. பெண்ணை அடிமையாக்கி தனது சொத்துரிமையாக்கிய சுரண்டும் வர்க்கம், பெண்ணின் உரிமை மீது கற்பை நிலை நாட்டிக் கொண்டனர். பெண் மீதான ஆணின் உரிமை பெண்ணின் மீதான வேலியாக "கற்பு" சிறையிட்டது. சொத்துரிமையை வாரிசாக்கும் ஓரே பாதுகாப்பு வேலி இந்த கற்புதான் என்பதை ஆணாதிக்கம் கண்டது.

ஆனால் கற்புரிமை தனிச் சொத்துரிமை வளர்ச்சியூடாக பெண் மீதான ஆணின் பொருளாதார மேலாதிக்க பாலியல் ஆதிக்க நாட்டத்தை தடுக்க, பெண்ணின் தற்காப்பின் உரிமையாக இருந்தது.. பெண் தான் தெரிவு செய்யும் ஆணுடன் உறவு கொள்ளும் உரிமையை பாதுகாக்க, பெண்ணின் உரிமை கற்புரிமையாக பெண்ணுக்கு இருந்தது. ஓருதார மணத்தை முதலில் தனது தற்காப்பில் பெண் தெரிவு செய்த போது, ஒருதாரமணம் இன்று இருப்பதில் இருந்து வேறுபட்டு பெண்ணின் இணை மணமாகவே இருந்தது. ஆனால் தனிச் சொத்துரிமை வளர்ச்சி பெற்று வளர்ந்த போது பெண்ணின் தற்காப்பு ஒருதாரமணத் தெரிவை, ஆணாதிக்கம் தனது பொருளாதார ஆதிக்கத்துடன் குறித்த ஆணுக்கு மட்டமானதாக திரித்து இறுக்கிய போது கற்புரிமையும் அதற்குள் சிக்கிக் கொண்டது.

ஏங்கெல்ஸ் ஆய்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியமான விடயத்தைப் பார்ப்போம். "--- 'பொதுமகளிர் முறையிலிருந்து ஒருதார மணத்துக்கு மாற்றமடைந்த காலம் நெடுகிலும் அந்த மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் பெண்களே என்று பாஹாஃபென் கூறுவது மீண்டும் முற்றிலும் சரியானதே. பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சியின் விளைவாக, அதாவது பழைய பொதுவுடமை முறை பலவீனமடைந்து மக்கள்தொகையின் அடர்த்தி அதிகரித்ததன் விளைவாகப் பழைய சம்பிரதாய பாலியல் உறவுகள் தமது வெகுளித்தனமான, பூர்வீகமான காட்டுத் தன்மையை இழந்து வர வர அந்த உறவுகள் மேன்மேலும் தரக்குறைவாக, ஒடுக்குபவையாகப் பெண்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவர்கள் கற்புரிமைக்கு, விடுதலை என்ற முறையில் குறிப்பிட்ட ஒரு நபரைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் திருமணம் செய்து கொள்வதில் வேட்கை கொண்டிருந்திருக்க வேண்டும். இந்த முன்னேற்றம் ஆண்களிடமிருந்து தோன்றியிருக்க முடியாது. அவர்கள் நடைமுறைக் குழுமணத்தின் இன்பங்களைக் கைவிடுவதற்கு ஒருபோதும்-இன்றைய நாள் வரையிலும் கூட- கனவு கூடக் கண்டதில்லை என்ற காரணமே இதற்குப் போதும். பெண்கள் முயன்று இணை மண முறை நோக்கி மாற்றம் கண்ட பிறகுதான் ஆண்கள் கண்டிப்பான ஒருதார மணத்தை - அது பெண்களுக்கு மட்டுமே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை - புகுத்த முடிந்தது.'' ஏங்கெல்ஸ்சின் இந்த ஆய்வுகளை இன்று பலர் மறுக்கின்றனர்.
அதுவும் ஏகாதிபத்திய பெண்ணிய வாதிகளும், அராஜக வாதிகளும் இதை மறுப்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கின்றனர். ஒருதார மணத்தை ஏன் பெண் தெரிவு செய்தாள் என்ற அடிப்படையான காரணத்தை மறுப்பதும், அதே நேரம் கற்புரிமையை அதாவது பெண்ணின் சுதந்திரமான செயல்ப்பாட்டை மறுத்து சூறையாடுவதை மூடிமறைப்பதும், இன்றைய பெண்ணியத்தின் ஆணாதிக்கமாகவுள்ளது. கட்டற்ற விபச்சாரத்தை அதாவது ஆணைப் போல் ஈடுபடும் உரிமையை பெண்ணியமாக காண்போர் எங்கெல்ஸ்சின் குறித்த ஆயு;வுகளை மூடிமறைத்தபடி விபச்சாரத்தை சமூக மயமாக்க துடிதுடிக்கின்றனர்.
இந்த இடத்தில் ஏங்கெல்ஸ்சின் குறிப்பு ஒன்றைப் பார்ப்போம். "ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும் படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் - தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை - மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண், பெண் சமத்துவம் பெண்கள் பல கணவர் முறைக்குப் போய் விடுவதை விட ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பேரூதவி செய்யும்..." என்ற கூற்றில் இன்றைய பெண்ணியச் சிதைவைக் காணமுடியும்.
ஆண் பெண் சமத்துவத்தை அடையாது ஆணாதிக்க சலுகையில் வெம்பிய விடுதலைகள், பெண்களை பல கணவர் முறைக்குள் ஆணாதிக்க வழியில் சிதைவதைக் காட்டுகின்றது. ஆண் பெண் சமத்துவத்தை சொத்துரிமை ஒழிப்பில் சாதிக்காத நிலையில், கிடைக்கும் சலுகைகள் ஆணாதிக்க வழியில் பல கணவர் முறைக்குள் சென்று விபச்சாரத்தை பெண்களுக்கு பொது சாராம்சமாக்குகின்றது. சுதந்திரமான விபச்சாரம் பெண்ணின் கற்புரிமையை மறுக்கின்றது. அது ஒருதார மணத்தையும் இணை மணத்தையும் மறுத்து, விபச்சாரத்தை வரைமுறையற்ற புணர்ச்சியில் வைக்கின்றது. எனவே மொழியில் கற்புரிமையை முதலில் மூடிமறைக்கின்றது. அதை ஆணாதிக்க புரிதலின் அடிப்படையில் பார்க்கின்றனரே ஒழிய, பெண்ணிய நோக்கில் அதன் தெரிவில், அதன் வரலாற்று காரணத்தில் காண்பதில்லை.
பறை இசைக் கருவிக்கு எது நடந்ததோ அது கற்புரிமைக்கும் நடந்தது. சமூகத்தை இருக்கும் (ஏகாதிபத்திய) ஜனநாயக வடிவில் புரிவதும், அதன் அடிப்படையை பார்க்க மறுப்பதும், ஏகாதிபத்திய எல்லைக்குள் பொத்தென கவிழ்ந்து விழுவதேயாகும். இன்று தேசத்தின் பொருளாதாரத்தை சூறையாடும் போது தேசத்தின் கற்புரிமையை எப்படி அர்த்தமற்றதாக மாற்றுகின்றனரோ, அதுபோல் பெண்ணின் கற்புரிமைக்கும் நிகழ்கின்றது.

கற்புரிமையை சமூகமும், பெண்ணும் தெரிவு செய்த போது இருந்த அர்த்தம் திரிபடைந்து ஆணாதிக்க பொருளாதார மொழிக் கொள்கைக்குள் புதிய வடிவத்தை பெற்றது. இதுதான் பறைக்கும் நிகழ்ந்தது. வரலாற்றில் எத்தனையோ திரிபுகள் இயற்ககைக்கு புறம்பாக பொருளாதார மாற்றங்களுடன் தோன்றி உறுதிப்பட்டுள்ளது. இதை அது மாறிவந்த வழியாக அடையாளம் கண்டு, அந்த பொருளாதார வடிவத்தை தகர்ப்பதன் மூலமே இதன் தோற்றத்தை ஒழிக்கவும், சிலதை மீளவும் பழைய இயற்கை வடிவில் மீட்டெடுக்கவும் முடியும். கற்புரிமை வாரிசுரிமையூடாக திரிபடைந்து கற்பான போது, அங்கு அதன் நோக்கம் தனிச் சொத்துரிமையை இரத்த வழியில் ஆண் உறுதி செய்வதை நிபந்தனையாக்கியது. ஆண் தனது குழந்தை என்பதை உறுதி செய்ய 'கற்பு' அவசியமாக இருந்தது. இந்த ஆணாதிக்க 'கற்பு' தனிச் சொத்துரிமையிலான வாரிசுரிமையில் உருவானதால், அதை ஒழிக்கமால் 'கற்பு' ஒழிக்கப்படுகின்ற போது அங்கு விபச்சாரமே கற்பை அழிக்கின்றது.

ஆனால் இன்று "கற்பு" சொற் பிரயோகத்தை பாவிப்பதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் எதற்காக இதை கையாளுகின்றனர். அராஜகவாத கோட்பாட்டில் சிக்கி கொண்டவர்கள்தான் இதை கோருகின்றனர். ஏங்கெல்ஸ் அராஜகவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி எதிர்த்து போராடுகின்றார் எனப் பார்ப்போம். "விஷயங்களின் பெயர்களை மாற்றிவிட்டால் விஷயங்களையே மாற்றி விட்டதாக இந்தக் கனவான்கள் நினைக்கிறார்கள். மிகவும் ஆழமான இச்சிந்தனையாளர்கள் இப்படி மொத்த உலகத்தையுமே கேலி செய்கிறார்கள்" இந்த மாதிரி மொழியில் ஒளித்து புரட்சி செய்பவர்களை ஏங்கெல்ஸ், மார்க்ஸ் உள்ளிட்டோர் எப்படி அடையாளம் காண்கின்றனர் எனப் பார்ப்போம். "பிரிவுகளின் சுயாட்சி, சுயாட்சி உடைய கோஷ்டிகளின் சுதந்திரமான சம்மேளனம், எதேச்சாதிகார-எதிர்ப்பு, அராஜகவாதம்- இவை அனைத்துமே 'வர்க்கத்தினின்று இழிந்தவர்கள்', 'கதியற்றவர்கள்', 'பதவி முன்னேற்றமோ வாய்ப்புகளோ இல்லாதவர்கள்'.. ......." இவர்கள்தான் அராஜகவாதக் கோட்பாடுகளின் அடிப்படையானவர்கள். லெனின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலிலில் ஏங்கெல்ஸ்சின் மேற்கோளைப் பயன்படுத்தும் போது, அரசு அதிகாரம் தொடர்பாக 'அதிகாரம்' என்ற சொற்தொடர் மீது அராஜகவாதிகளின், வாய் வீச்சை அம்பலப்படுத்த பயன்படுத்திய வாதங்களைப் பார்ப்போம. "... ஒரு பொருளின் பெயரை மாற்றுவதன் மூலம் அப்பொருளையே மாற்றி விடுவதாய் நினைத்துக் கொள்ளுகின்றார்கள்... உண்மைகளை எல்லாம் பார்க்காமலே கண்களைக் கெட்டியாய் மூடிக் கொண்டு ஆவேசமாய் இச்சொல்லை எதிர்த்துப் போராடுகிறார்கள்... என்பது தெரியாமமே பேசிக் கொண்டிருக்கிறார்கள் - அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும் , அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்."

சிங்கள தேசிய இனப் பாசிசம் தமிழ் தேசியத்தை சிதைத்த போது உருவான தேசியவிடுதலைப் போராட்டம், மறுதளத்தில் எந்தளவுக்கு பாசிசமாக வளர்ச்சி பெற்றதோ, அந்தளவுக்கு சமூகத்தை விட்டோடும் ஓடுகாலிகளை உருவாக்கியது. சமூக அவலங்களுக்குரிய மாற்றத்தை மக்களை திரட்டி போராட முடியாதவர்கள், அராஜகவாதத்தை தமது புரட்சியாக பிரகடனம் செய்கின்றனர். அதை உயர்ந்தபட்ச புரட்சியாக காட்டி மாற்றுகின்றனர். மக்களின் பிரச்சனைக்காக அணிதிரட்டி போராட முடியாத புலிகளும் மற்றய இயக்கங்களும், ஒரு குண்டு வெடிப்பு மூலம் புரட்சி செய்வதை பிரகடனம் செய்கின்றனர். இதன் மூலம் மக்களின் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கின்றனர். இது இன்றுவரை பொது அரசியலாக, பூர்சுவா வர்க்கத்தின் இயல்பான ஆதரவுக் கண்ணோட்டமாகவுள்ளது.

இதில் தோற்றுப் போனவர்கள், இதற்குள் பதவியை பிடிக்க முடியாதவர்கள், வர்க்கத்தில் இருந்து அன்னியமானவர்கள், வர்க்க கோட்பாட்டில் இருந்து விலகியவர்கள், தன்னவர்குழுவின் கோட்பாட்டாளர்கள் என்று சமுதாயத்தில் மக்களை அணிதிரட்டி சமூகத்தை மாற்றுவதை கைவிட்டு இழிந்து போன பிரிவுகளின் சமூக தளமே, அராஜக வாதத்தின் ஊற்று மூலமாகின்றது. இது ஒரு வெடி குண்டு போல் புரட்சி கற்பனையில் மூழ்கிப் போகின்றது. இது பல்வேறு துறையில் புரட்சி பற்றி சொற்களின் ஊடாக, சிலவரிகளூடாக வாய்யடித்தல் செய்கின்றது. இதையொட்டி மார்க்ஸ் ஏங்கெல்ஸ் "...ஒரு தத்துவஞானி ஏதாவதொரு வகையில் விமர்சனம் செய்த உடனே அது செத்துவிட்டதாகக் கருதப்படும், வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்படும், அதோடு எல்லா செய்முறைக் காரியங்களுக்கும் கூட ஒழிக்கப்பட்டுவிடும்." என்று புரட்சி பேச தயங்குவதில்லை. இதில் ஒன்றுதான் "கற்பு" என்ற சொல்லை மாற்றி வேறு சொற்களை போடுவது. சொற்களில் உலகத்தையும், சொந்த மக்களையும் ஏமாற்ற முயன்று, அராஜகவாத அரசியல் ஆதரவுடன் தன்னை மக்களுக்கு மேல் நிலைநிறுத்துகின்றது. "கற்பு"க்கு எதிராக நடைமுறையில் மக்களை அணிதிரட்டி போராடுவதுக்கு தயாரற்ற பிரிவுகள், சொற்களில் புரட்சியை செய்துவிட கனவுகாண்கின்றது. இதை மறுத்து மக்களை அணிதிரட்டி போராடி ஒழிக்க கோரும் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக புரட்சிகர வசனம் பேசுகின்றது. இது எப்படி மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கேட்டால் பதில் அளிக்க யாரும் இருப்பதில்லை. ஆனால் மொழியில் தன்னை புரட்சியாளனாக நிலைநிறுத்தி பிழைக்க முயல்கின்றது.
மொழி என்பது பொருளாதார வடிவத்துக்கு உட்பட்டதென்ற இயங்கியல் வளர்ச்சியை மறுக்கும் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டு அராஜகத்தை, இயங்கியல் மறுப்பில் கோருகின்றனர். சொற்கள் பொருளில் இருந்து தோன்றுகின்றது என்பதை மறுக்கும் இயங்கியல் மறுப்பு, அடிப்படையில் மொழியில் கருத்துமுதல்வாதத்தை திணிக்கின்றது. "யதார்த்தமான உறவுகளுக்குப் பதிலாக சித்தம் புரட்சியின் முக்கியமாக சித்தரிக்கப்படுகின்றது." அதனால் சமூகத்தில் பொருள் உறவு எப்படி உள்ளது என்பதை ஆராயமறுக்கின்றது.

பொருளாதார உறவே சமூக உறவாக பரிணாமிக்கின்றது. பெண் ஒரு ஆணுடன் வாழும் போது அதைத் தாண்டி (இங்கு தாண்டல் என்பது பரஸ்பர விசுவாசத்தை துரோகம் செய்வதாகும். இது ஆண் செய்தாலும் பொருந்தும்) கள்ள உறவு கொள்ளும் போது அல்லது திருமணத்துக்கு முன் உறவு கொண்டு ஏமாற்றப்படும் (இங்கு எப்போதும் ஆணாதிக்கம் பெண்ணை ஏமாற்றியும், விருப்பத்துடனும் பெண்ணின் தற்காப்பு கற்புரிமையை கற்பழிக்கின்றனர்.) போது ஆணாதிக்கம் இது போன்றவைகளை கற்பாக வேறு விளக்கம் செய்து, பெண்ணின் மீது மட்டும் இதை நிபந்தனையாக்குகின்றது. திருமணம் செய்து வாழ்வை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண் மீள திருமணம் செய்யும் போது கற்பிழந்தவளாக சமூகம் அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் மறைமுகமான வகையில் மறு திருமணம் இதை எல்லைப்படுத்துகின்றது. அடையாளப்படுத்தல் எல்லாம் சமூக ஒழுக்க விழுமியத்துக்குள் உட்பட்ட பொருளாதார வடிவத்தால் மட்டும் வரையறுக்கின்றது. எனவே "கற்பு" என்பது எல்லா நேரமும் இரண்டாவது ஆணுடன் கொள்ளும் பெண்ணின் புணர்ச்சிக்குள் வரையறுப்பதில்லை. மாறாக நிலப்பிரபுத்துவ பண்பாட்டு மீறலின் போதே வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு நிலையில் பெண்ணுக்கு தற்காப்பு ஆயுதமாகவும் மறுதளத்தில் ஆணாதிக்கத்தின் சூறையாடலாகவும் வழக்கில் நீடிக்கின்றது.

பெண்ணின் "கற்பு"க்கு லட்சணமாக பெண்மீதான ஒழுக்கம் எதைக் கோருகின்றது. இந்து மதப் புராணங்களில் நளாயினி தனது புருஷன் குஷ்டரோகியாக இருந்தபடி அவன் தாசி வீட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னால், அவனை கழுவி கூடையில் வைத்து தலையில் தூக்கிச் சென்று தாசி வீட்டில் விடவேண்டும். இதைப் போல் தாசி வீட்டில் இருந்து மீண்டும் தூக்கிவரவேண்டும். இதுதான் பெண்ணின் "கற்பு"க்கு ஆணாதிக்கம் கொடுத்த விளக்கம். பெண் இதை செய்ய மறுக்கும் போது "கற்பு" இழந்தவளாக கருதப்பட்டாள். "கற்பு" பற்றிய விளக்கங்கள் ஆணின் தேவையை பூர்த்தி செய்வதில் கோரப்பட்டது. இது மறுக்கப்படும் போது பெண்ணின் கற்புரிமையாக இது இருக்கின்றது. அது இன்று குறிப்பாக பெண்ணின் உடல் சார்ந்ததாக மட்டும் எஞ்சிப் போயுள்ளது.

பெண் மீதான வன்முறையூடாக அல்லது ஏமாற்றி கைவிடப்படும் போது அல்லது இரண்டாவது உறவு கொள்ளும் போதும் "கற்பிழ"ந்தவளாக ஆணாதிக்கம் விளக்கம் கொடுக்கின்றது. "கற்பு" ஆண்களால் பெண்கள் மீது மட்டும் நிபந்தனையாக்கிய சமூக அமைப்பு பொருளாதார அமைப்பால் ஒரு சமூக இயக்கமாக, அதனை ஒரு பொருளாக மாற்றிய நிலையில் இது கற்பிதமல்ல. மாறாக இது ஒரு சமூக பொருளாதார அமைப்பால் இறுக கட்டப்பட்டுள்ளது. இந்த சமூகப் பொருளாதார அமைப்பு நிலப்பிரபுத்துவத்தின் வடிவமாக உள்ளது. இந்த நிலப்பிரபுத்துவம் பாட்டாளி வர்க்க ஆட்சியால் அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் மூலம் என இரண்டு சமூக பொருளாதார நிலைகளில் மட்டும் தகரும் போது "கற்பு" கோட்பாடு தகர்ந்துபோகும். இதில் ஏகாதிபத்தியம் சார்ந்து "கற்புரிமையை ஆணாதிக்கம் சார்ந்த ஆண் வேட்கையிலும், பாட்டாளிவர்க்கம் பெண் சார்ந்த ஆணாதிக்க "கற்பை" பெண் ஆண் சார்ந்து கற்பிதமாக்கும்.
ஏகாதிபத்தியம் பெண்ணின் கற்புரிமையை ஒழிக்கும் போது பெண்ணை விபச்சார தளத்துக்குள் அதை ஒழிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் "கற்பை" ஒழிக்கும் போது பரஸ்பரம் சேர்ந்து வாழும் சுயேட்சையான சுயநிர்ணய எல்லைக்குள் ஒழிக்கின்றது. இது இரண்டுக்கிடையிலான அடிப்படைவேறுபாடு. ஏகாதிபத்தியம் கற்புரிமையை­ ஒழிக்கும் போது அனைத்து சமூக பொருளாதார துறையிலும் மனிதனின் கற்புரிமைத் தனத்தை ஒழித்து தனது சூறையாடலுக்கு ஏற்ற விபச்சார தனத்தை ஏற்படுத்துகின்றது. பாட்டாளிவர்க்கம் மனித வாழ்வின் அடிப்படையான மனிதப் பண்பாட்டை ஆணாதிக்க "கற்பை" ஒழிப்பதன் ஊடாக மனிதனின் கற்புரிமையை அதாவது தன்மானத்தை பாதுகாத்து நிலைநிறுத்துகின்றது.

எப்போதும் "கற்பு" மீதான போராட்டம் என்பது பெண்ணுக்கு கற்பு உண்டு என்கின்ற ஆணாதிக்கம் மீது "கற்பு"க்கு எதிரான போராட்டத்தை கோருவதும், கற்பு என்ற ஒன்று இல்லை என்பதை நிறுவுவதன் ஊடாக, இது பொதுவாக "கற்பு இழந்தவள்"' என்ற பொருளின் ஊடாக வருவதால் "­கற்பை" கற்பிதமாக்க சமூகத்தை மாற்ற போராட வேண்டும். கற்பழிப்பு போன்ற குற்றத்தில் கற்புரிமை அழிப்புக்கு எதிரான எழுத்துக்களை போராட்டங்களை கற்பழிப்பு (இங்கு கற்பிழந்தவளாக பொதுவில் கருதாமல் இந்த வன்முறைக்கு எதிராக கற்பழிப்புக்கு எதிரான பெண்ணின் கற்புரிமையின் குரலாக உள்ளது) மீது எழுதியும், போராடியும் பெண்ணின் கற்புரிமை மீது கற்பிதமாக்க வேண்டும். இது மட்டுமே நடைமுறை சார்ந்த மக்கள் சார்ந்த ஓரே செயல்தள நடைமுறையாகும். இதை மறுத்து, சரிநிகரில் (தன்னவர் நிதியில் வரும் பத்திரிகை அல்லவா) தொடக்கிய இச்செயல், யதார்த்தத்தில் மக்களால் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் பொருளாக்கப்பட்டுள்ள, "கற்பு"க்கு எதிரான போராட்டத்தை மறுதலிக்கும் செயலாக இதுமாறியுள்ளது.
"கற்பு", "கற்பழிப்பு" போன்ற சொற்கள் ஆணாதிக்க பொருளாதார கட்டமைப்பால் அதிகாரம் பெற்றுள்ளதால், அது மக்களுக்குள் உருவகம் சார்ந்து பொருள் சார்ந்து போயுள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை மறுதலித்த, சொற்களை மாற்றிய விளையாட்டுக்கள் அதற்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கவே செய்கின்றது. முன்பு காந்தி தாழ்ந்த சாதிகளை "அரிஜன்" என அழைத்து சொற்களை மறைத்தது போல், இன்று "தலித்" என்று சொற்களை மறைத்தபடி சாதிகளின் ஒழிப்புக்கு பதில் நீடிப்பை சொற்களுக்குள் எப்படி பாதுகாக்கின்றனவோ, அதேபோல்தான் "கற்பு", "கற்பழிப்பு" சொற்களுக்கும் நிகழ்கின்றது. அரிஜன் என்று காந்தி அழைத்த போது எப்படி சமூகம் தன்னளவில் சோடை போனதோ, அதேதான் தலித்தின் பின்னும் நிகழ்கின்றது. தாழ்ந்தசாதிகள் அதன் அடையளத்துடன் புதுப் பெயர் பெற்று விளங்கியதே எஞ்சியது.
இதே போன்று இந்தியா இலங்கையில் சேரி எல்லாவற்றையும் காலணியாக்கி புது வாசனை (சென்ர்) காட்டிய போதும், சேரி சேரியாகவே தொடர்கின்றது. காலணி அதே அர்த்தத்தை பெற்று புது சேரியானது. இதுபோல்தான் கற்பும் புதுவாசனை பெற்று, அதன் அர்த்தத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போராட்டத்தை மட்டுப்படுத்தி சிதைக்கின்றது. இதை எல்லாம் எதிர்த்து நடைமுறையில் ஈடுபட, மாற்ற தயார் அற்றவர்களின் வாயடிப்புதான் இந்த மொழியில் மாற்றும் விளையாட்டுகள். மக்களுக்குள் இதன் அர்த்தங்கள் இச்சமூக அமைப்பின் அதே வழியில் தொடர்ந்து உயிர்வாழ்வதும், மாற்றங்கள் மாறுகின்ற பொருளாதார வடிவங்கள் அதன் மீதான போராட்டத்தால் மட்டுமே நிகழ்கின்றன.
ஒடுக்கும் வர்க்கத்தால் "கற்பிக்கப்பட்ட" கற்பனை புனைவுகள், ஒரு பொருளாதார அமைப்பால் உருவகம் பெற்று பாதுகாக்கப்படும் போது அதற்கு எதிரான போராட்டத்தால் மட்டுமே இல்லாது ஒழிக்கமுடியும். இல்லாது சமூகத்தில் இருந்து அன்னியப்பட்ட, நடைமுறையில் செயல்ப்பட தயார் அற்றவர்கள், அதற்கு தெளிவான கோட்பாடு இன்றி "நடுநிலை", "கேள்வி", "பரிசீலனை"யின் பின் அரசியல் பேசுவோர், தம்மை எழுத்தாளராக காட்டிக் கொள்ள விரும்பும் புத்தியீவிகளின் கோட்பாடுகள் ஒடுக்குபவன் சார்ந்து சொற்களை ஒழித்துக் காட்டுவதன் மூலம் பாதுகாக்கின்றனர்.

இது இன்று மட்டுமல்ல அன்றும் இருந்தன என்பதற்கு மார்க்ஸ்சின் மூலதனம் பாகம் 1.2 இல் பக்கம் 722 இல் "தத்துவத்தின் வறுமை" என்ற நூலில் எழுதியதை மீள மார்க்ஸ் எடுத்துக்காட்டியதைப் பாhப்போம். ..., ஓர் உருவக வழக்குதான் அடித்தளம் என்றாகிறது. சமுதாயம் தன்னைப் பீடித்துள்ள 'கேடுகளை எல்லாம் ஒழித்துக் கட்ட' விரும்புகிறதா? சரி, ஓசைக்கேடான சொற்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டியதுதான், மொழியை மாற்ற வேண்டியதுதான். சமுதாயம் இதற்காக வேண்டி அறிஞர் பேரவைக்கு விண்ணப்பம் செய்து அதன் அகராதிக்கு ஒரு புதிய பதிப்பை வெளியிடுமாறு கேட்டால் போதும்" என புரட்சியை மழுங்கடிக்க, பிரச்சனையை திசைதிருப்ப சொற்களை மாற்றி வித்தை காட்டிய அறிஞர் புத்திஜீவிகளுக்கு அன்று மார்க்ஸ் பதிலளித்தது இன்றும் அச்சொட்டாக அதையே மீளச் செய்வோருக்கும் பொருந்துகின்றது.

"கற்பு" என்பதை நாம் எப்படி அணுகுகின்றோம்?

1.நிலப்பிரபுத்துவ மற்றும் மதவாத கோட்பாடுகளில் "கற்பு" பற்றிய அனைத்து ஒழுக்கங்களையும் எதிர்ப்பதிலும், அதை கண்டித்து போராடுவதிலும் பாட்டாளி வர்க்கம் தன்னை முன்நிறுத்துகின்றது.

2.ஏகாதிபத்திய உலகமயமாதலின் வளர்ச்சியில் நிலப்பிரபுத்துவம் தகர்கின்ற போது கற்புரிமைக் கோட்பாடு தகர்ந்து விபச்சாரமாக மாறுகின்றது

பாட்டாளி வர்க்கம் பெண்ணின் நிலையை இவ்விரண்டிலும் இருந்து வேறுபடுத்துகின்றது. காட்டுமிராண்டித்தனமான "கற்பு" கோட்பாட்டு நடைமுறையை எதிர்த்தும், விபச்சார வாழ்முறையை எதிர்த்தும் என இரு தளத்தில் போராடுகின்றது. முதலாவது தளத்தில் நிலப்பிரபுத்துவ கற்பை எதிர்த்து போராடும் போது பெண்ணின் சுயநிர்ணயத்தை முன்நிறுத்துகின்றது. ஒரு பெண் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்வது பிரிந்து வாழ்வது அவளின் உரிமையாக கற்புரிமையை முன்வைக்கின்றது. இது சமுதாயத்தின் சுதந்திரத்தில் எல்லைப்படுத்துகின்றது. மறுதளத்தில் பெண் சமுதாய சுதந்திரத்துக்கு எதிரான தனிமனித சுதந்திரத்தில் தனது தனித்துவத்தை விபச்சார நிலைக்கு நகர்த்தும், ஏகாதிபத்திய கற்புரிமை அழிப்பு கோட்பாட்டை எதிர்த்து பெண்ணின் தனித்துவத்தை உரிமையை தற்காப்பாக கோருகின்றது.

பெண் மீதான ஆணாதிக்க சூறையாடலை தற்காப்பதிலும், பெண் ஆணாதிக்கத்துக்கு எதிராக தான் தெரிவு செய்த கற்பரிமையை பாதுகாக்க, (உதாரணமாக டிஸ்கோ பாலியல், ஒரே நேரத்தில் பலரை காதலித்து உறவு கொள்வது, திருமணத்துக்குள் இருந்தபடி வெளியில் பலருடன் உறவு கொள்வது, கணவன் மனைவியை மாற்றி உறவு கொள்வது, காதலை கைவிட்டு நுகர்வை அடிப்படையாக கொண்ட பலகணவன் உறவுகள்... போன்றன) இந்த ஏகாதிபத்திய சகாப்த்ததில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் தலைமையில் முன்நிறுத்துகின்றது. பெண்ணுக்கு மட்டும் இருக்கின்ற ஒருதார மணத்தை மறுத்து, பெண் சுயமான வகையில் பிரிந்தும் சேர்ந்தும் வாழும் எல்லையால் பெண் தன்னை தற்காத்து கொள்ளும் கற்புரிமையை கோருவதாகும். மறுதளத்தில் பெண் மீதான ஆணாதிக்க கட்டுப்பாட்டுக் கற்பை எதிர்த்து (உதாரணமாக மறுமணம், குடும்பத்தில் இருந்து விலகி மீள திருமணம் செய்தல், காதலித்து தோல்வி பெறும் பட்சத்தில் மீள் காதலித்தல், ஏமாற்றப் படும் போது மீளவும் காதலித்து வாழும் உரிமை, பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் சாதாரணமாக வாழும் உரிமை... போன்றவற்றில் காணப்படும் ஆணாதிக்க ஒருதார மணத்தில் உள்ள கற்புக் கோட்பாட்டை எதிர்த்து போராடுதல்) பெண்ணின் சுயநிர்ணயத்தை கற்புரிமையில் முன்வைக்கின்றது. அதாவது தேசியத்தில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் சொந்த தேசியத்தை கோருவது போல், பாட்டாளி வர்க்கம் கற்புரிமை மீது தன்னை நிலை நிறுத்துகின்றது. இதை மறுக்கின்ற இரண்டையும் எதிர்த்து தன்னை அரசியல் மயமாக்கி ஆயதபானியாக்குகின்றது.

Tuesday, September 6, 2005

வன்முறை தொடர்பாக ...

வன்முறை (கொலை) தொடர்பாக புலியெதிர்ப்பு, புலிசார்பு நிலைப்பாட்டின் மீதான சமூக எதிர்வினைகள்


தமிழ் மக்களின் நியாயமான ஒரு ஜனநாயக போராட்டத்தின் மீது நடத்தப்படும் அரசியல் விபச்சாரம், ஒட்டுமொத்த சமூக கூறுகளை சிதைத்து அதை நலமடிக்கின்றது. இந்த வகையில் புலிகள் ஒருபுறமென்றால், மறுபுறம் புலியெதிர்ப்பு அணியினர் பரஸ்பரம் போட்டி போட்டு களமிறங்கி நிற்கின்றனர். இவை பல்துறை சாhந்ததாக உள்ளது. தமிழ்மக்களின் சமூக அறியாமையை அடிப்படையாக கொண்டு, அதை தக்கவைப்பதில் இவர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் எதுவும் இருப்பதில்லை.
அறிவியல் பூர்வமற்ற வகையில், தர்க்கவாதமற்ற நிலையில், மக்களின் நலன்களை அடிப்படையாக கொள்ளாத ஒரு நிலையில், கருத்துகளை திரித்து தமது சொந்த தேவைக்கு ஏற்ப கையாளுகின்றனர். உண்மையில் புலிசார்பு, புலிஎதிர்ப்பு அணிகள் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம்சாட்டும் போது, தமது சொந்த அரசியல் நடத்தைகளை கேள்விக்குள்ளாக்காத வகையில், ஒரு ஜனநாயக மறுப்புவாதிகளாக இருப்பதில் தமக்கு இடையிலே ஒரு ஒற்றுமையைப் பேணுகின்றனர்.

தமது சொந்த அரசியல் நடத்தைகளையும், பொதுவான சமூக நடத்தைகளை மீதும் பொது விவாதம் நடத்துவதாக பீற்றுபவர்கள், ஜனாநயகத்தின் அடிநாதமாக தாமே இருப்பதாக கூறுபவர்கள் கூட, தமது சொந்த கருத்தின் பின்தளத்தை கேள்வி கேட்க ஒரு நாளும் அனுமதிப்பதில்லை.

புலிகளை எடுத்தால் கடந்த மூன்று பத்தாண்டுகளில் அவர்களின் அரசியல் நடத்தைநெறிகள் அப்பட்டமாகவே மக்கள் முன் அம்பலமாகி நிற்கின்றது. தமிழ் மக்களின் மூச்சுக்குழாயில் கையை வைத்த படி, புலிகள் கட்டமைத்துள்ள பாசிச சர்வாதிகார அரசியல் நடத்தைநெறிகளை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவர். இதைப் புரிந்து கொள்வதில் புலி உறுப்பினர்கள் கூட விதிவிலக்கற்றவராகவே உள்ளனர். அவர்களின் சொந்த நடத்தை நெறிகள் கூட, இதற்குள் ஒரு அச்சம் கலந்த இனம்தெரியாத ஒரு பீதிக்குள் தான் அவர்களால் கூட இயங்கமுடிகின்றது. தமிழ்பேசும் மக்கள் இந்த பொது தலைவிதிக்குள், தமது சொந்த கால்களை உணர்ந்தபடி தான் எதிர்வினையாற்றுகின்றனர். இது பெரும்பாலும் மவுனமாகவும், சிலவேளைகளில் ஊனமாகவும் எழுந்தபோதும், சமூகத்தின் உள்ளக் குமுறல் கொந்தளித்த ஒரு கடலலையாகவே எப்போதும் காணப்படுகின்றது.

சிங்கள பேரினவாத இன ஒழுக்குமுறையை தமிழ்மக்கள் மீது எந்த விதத்திலும் தளர்த்த ஒரு நிலையில், தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகள் மிதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தான் புலிகள் போன்ற அமைப்புகள, தொடர்ந்தும் இந்த சமூகத்தில் உயிர்வாழ முடிகின்றது. சிங்கள பேரினவாதம் தான், புலிகளை தமிழ் சமூகத்தில் தக்கவைக்கும் ஒரேயொரு நெம்புகோலாகவுள்ளது. இதற்கு வெளியில் புலிகள் சமூகத்தில்; தன்னை நிலைநிறுத்தக் கூடிய வகையில், எந்தவிதமான சமூக ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. பொதுவாக காணப்படும் சமூக பிற்போக்கு கோட்பாட்டின் பிரதிநிதியாக புலிகள் இருந்தபோதும் கூட, சமூக பிடிப்பற்ற வகையில் காணப்படும் புலிகளின் (அரசியல்) நடத்தை நெறிகள் புலிகளை சமூகத்தில் இருந்து அன்னியமாக்கியுள்ளது. புலிகள் மக்களை மக்களாகவே கருதுவதில்லை. தம்மைத்தாம் மேலே உயர்த்தி, மக்களை நாயினும் கீழான தமது அடிமைப் பிறவிகளாக இருக்கவும், தமக்கு வாலாட்டுவதற்கு மட்டும் அனுமதிக்கின்றனர். இந்த ஒரு நிலையில் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒரு பகை முரண்பாட்டில் இருந்து தப்பிப்பிழைக்க, சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை பாலம் அமைத்துக் கொடுக்கின்றனது. இந்தநிலை இன்று பொதுவான ஒரு சமூக ஒட்டமாக, உயிருள்ள ஒரு இணைப்பாகவும் நீடிக்கின்றது. புலிகளின் ஆன்மா ஈடேற்றம் இப்படித்தான் சமூகத்தில் நீடிக்கின்றது.

இந்த நிலையில் புலிக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள முரண்பாடு, பலரை புலிக்கு எதிராக பலாத்காரமாகவே அன்றாடம் உந்தித் தள்ளுகின்றது. இது பலதளத்தில் மௌனமாக மாறும் போது, சில இடத்தில் இதுவே புலிக்கு எதிரான ஒரு மாற்றுக் குரலாகவும் மாறுகின்றது. இந்த குரல் வளைகளை அறுப்பதை நியாயப்படுத்துவதில் தான், புலிகளின் தேசியம் இன்று தகவமைந்து நிற்கின்றது. இந்த வக்கிரமான நியாயவாதங்களே, இன்று புலிகளின் சொந்த அரசியலாகிவிட்டது. புலிகள் அல்லாத மாற்றுக் கருத்து சார்ந்தவர்களின் குரல்வளைகளை அறுத்தெறிவதன் மூலம், புலிகள் தமது சொந்த நியாயவாதங்களை முன்வைக்க முனைகின்றனர். இதுமட்டும் தான், இன்று புலிசார்பு ஊடாகவியலாகிவிட்டது. எமது மண்ணில் தொடங்கி புலம்பெயர் நாடுகள் வரை அனைத்து தமிழ் செய்தி ஊடகங்களையும் தமக்கு வாலாட்ட வைக்கின்ற ஒரு நடைமுறையில் தான், புலிகளின் ஒருதலைப்பட்சமான நியாயவாதங்கள் முன்தள்ளப்படுகின்றது. தொடாச்சியாகவே நேர்மையற்ற தமது சொந்தச் செயல்பாடுகளையும், பொய்களையும், புனைவுகளையும் அரசியலாக்கி அதை ஊளையிட்டு பரப்புகின்றனர். இதுவே பொதுவாக சமூக ஆதிக்கமுள்ள ஒரு பொது மொழியாக இன்று அரங்கேறுகின்றது. இதுவே பினாமித் தொழிலாகிவிட்ட ஒரு நிலையில், சமூகத்தின் உயிர்துடிப்புள்ள எவையும் எதிர்நீச்சல் போடமுடியாத வகையில் அள்ளுண்டு செல்லுகின்றது.

இதற்கு மாற்றாக செயற்படுவோர் கூட அதேபாணியில் பின்பற்றுவதன் மூலம், தம்மை இந்த சமூகத்தின் மாற்றாகவே காட்டமுனைகின்றனர். இந்த மாற்று காலத்துக்கு காலம் காணமல் போய்விடுவதும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகவே இருந்து வந்துள்ளது. அமைதி சமாதானம் என்ற ஒரு அரசியல் நாடகத்தின் பின்பாக, புலியெதிர்ப்பு, அரசுசார்பு குழுவல்லாத ஒரு பிரிவினர் புலம்பெயர் நாடுகளில் திடீரென அரசியல் அரங்குக்கு வந்துள்ளனர். இவர்கள் புலிகள் அல்லாதோருக்கு தாங்களே மாற்று என்கின்றனர். புலி அல்லாதோரை தமது சொந்த அரசியல் வழிகளிலான உள்நோக்குடன் வழிகாட்ட முனைப்பு கொள்கின்றனர்.

இவர்களின் அரசியல் முற்றுமுழுதாகவே புலிகளைச் சார்ந்து காணப்படுகின்றதே ஒழிய மக்களைச் சார்ந்ததல்ல. புலிகள் தாம் செய்தவற்றையே மூடிமறைக்கும் போது அதை அம்பலப்படுத்துவதுடன், சில ஆதாரமற்ற செய்திகளையும் கூட புலிகளைப் போல் மறுதளத்தில் முன்தள்ளுகின்றனர். பொதுவாக யுத்தநிறுத்த காலத்தில் புலிகள் செய்து கொண்ட அவர்களின் சொந்த ஒப்பந்த விதிக்கு மாறாக செயல்படுவதை, புலிகள் தொடர்ச்சியாக மூடிமறைக்கின்றனர். இதை அம்பலப்படுத்தியே புலியெதிர்ப்பு அரசியல் திடீரென சமூக அரங்குக்கு வந்துள்ளனர். இவர்களின் அரசியல் எல்லை, இதற்குள் தான் கட்டமைக்கப்பட்டது. இது புலிகள் அல்லாத ஒரு தளத்தில், ஒரு அரசியல் மாற்றாக தமிழ் மக்கள் முன் உண்மையில் உள்ளதா?

இந்தக் கேள்வியை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சமூக நோக்கில் எழுப்பும் ஒருவனுக்கு, இதன் பின்னுள்ள அரசியல் பின்புலத்தை அறிந்துகொள்வது சாத்தியமானதே. பலர் பொதுவாகவே தமிழ் பாசிச கட்டமைப்புக்கு வெளியில் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றலற்ற வகையில், உலக அனுபவத்தை தெரிந்துகொள்ள முடியாத ஒரு சமூக சூனியத்தில் வாழ்கின்றனர். அவர்கள் முன் புலிகளின் பாசிச நடத்தைகள் மட்டுமே நடைமுறை சார்ந்து இனம் காணும் ஒரு குறுகிய ஒரு செயலாக இருப்பதால், இயல்பாகவே பிழையான இதற்கு ஒத்த மற்றொரு சமூகப் போக்குக்கு பலியாகிவிடுகின்றனர். புலிகளை எதிர்க்கும் வடிவங்களுக்குள் சமூக நியாயம் இருப்பதாக கருதி, அந்த நிலைப்பாட்டை கோட்பாட்டு ரீதியாக ஆதரிப்பது நிகழ்கின்றது. இந்த கோட்பாடுகள் சூழ்ச்சிமிக்கவை. மிகவும் திட்டமிட்ட வகையில், மனித உளவியல் சிக்கல்கள் மீது தகவமைக்கப்படுகின்றது. பொதுவாக இவை ஏகாதிபத்தியம் உலகளாவில் தனது சொந்த உலக ஆதிக்கத்தை தக்கவைக்க முன்வைக்கும் அரசியல் வாதங்களின் உள்ளடகத்தில் இருந்தே, தமது சொந்தக் கோட்பாட்டை முன்தள்ளுகின்றனர். அதாவது புலிக்கு மாற்று ஏகாதிபத்திய அனுசரணையுடன் கூடிய மாற்றைத்தான், தமிழ்மக்களின் மாற்றாக முன்வைக்கின்றனர். புலியெதிர்ப்பு அரசியல் இதை தாண்டி ஒரு அங்குலம் கூட நகர்வதில்லை.

இன்று தமிழ்மக்கள் மத்தியில் நாள்தோறும் தவறாது நடத்தப்படும் கொலைகளை அடிப்படையாக கொண்டு, ஒரு சூழ்ச்சிமிக்க அரசியல் முன் தள்ளப்படுகின்றது. ஒரு மனிதனை ஒரு மனிதன் கொல்லும் உரிமை கிடையாது என்ற, ஒரு அடிப்படையான இயற்கை சார்ந்த சமூக விதியை மிகவும் முறைகேடாகவே தமது உள்நோக்குக்கு ஏற்ப திரித்து பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஒரு சமூகவிரோத கோட்பாட்டை முன்தள்ளி, மனித விரோத அரசியலை அரங்கேற்றுகின்றனர். கொலை என்ற ஒரேயொரு விடையத்தை மட்டும் எடுத்து, அதை மட்டும் கொண்டு புலியெதிர்ப்பு அரசியலை செய்யமுனைகின்றனர்.

இங்கு கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தைகளை கேள்விக்கு உள்ளாக்குவதை தடுக்கும் அரசியல் உள்ளடக்கம் மூலம், தமது சொந்த அரசியலை தக்கவைக்கின்றனர். கொன்றவனின் அரசியல் நடத்தை நெறிகள் புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியல் செல்நெறிக்கு உட்பட்ட வரையறைக்குள் புணரப்பட்டு அது தக்கவைக்கப்படுகின்றது. கொலைகாரர்களின் அரசியல் நெறி கொல்பவனுக்கு இந்த சமூக அமைப்பில் தனது இருப்புக்கு எப்படி தேவைப்படுகின்றதோ, அந்தளவுக்கு புலியெதிர்ப்பு அணியினருக்கும் அது தேவைப்படுகின்றது. இதனால் கொலைகாரனின் அரசியலை சேதமின்றி பாதுகாக்கும் வகையில், கொலைகளை எதிர்க்கும் அரசியல் அரங்கேறுகின்றது.

இன்று எதார்த்தத்தில் அமைதி, சமாதானம் என்ற பெயரில் ஒரு மனிதவிரோத அரசியல் நடத்தைகளே, சமூகம் எங்கும் அரங்கேற்றப்படுகின்றது. இதன் போது குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஒருவர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மனித சடலங்களாக அண்ணளவாக 400 அளவில் கிடைத்துள்ளது. மிகுதி கடத்தப்பட்டு காணமல் போன நிலையில், புதைக்கப்படுகின்றது அல்லது எரிக்கப்படுகின்றது. கொலைகள் வரைமுறையின்றி தொடருகின்றன. இந்த கொலைகள் எதிலும், புலிகள் தாம் சம்பந்தப்படவில்லை என்ற அறிவிக்கின்றனர். கதிர்காமர் கொலை உட்பட வடக்குகிழக்கு முதல் இலங்கை முழுக்க நடந்த கொலை எதனுடனும் தாம் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை என்கின்றனர் புலிகள். இது வழமைபோல் புலிகளின் அறிக்கைகள் மூலம் அன்றாடம் தொடருகின்றது. ஆனால் இயல்பு வாழ்வில் கொலை செய்யாத புலியையிட்டு, மக்கள் பீதி கலந்த வாழ்நிலையில் அனைத்தையும் புலிகளிடமே இழக்கின்றனர். இந்த நிலை ஏன் என்று தெரியாது, புலியாதரவு அரசியல் பினாமி ஆய்வாளர்களுக்கே புரியாத புதிராகி, மண்டையில் இருந்த மயிர்களெல்லாம் விழுகின்றதாம்.

இந்த நிலையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற கொலைகளில் 90 சதவிகிதத்துக்கு மேலானவை திட்டவட்டமாக புலிகளால் செய்யப்பட்டவை தான். மிகுதி பெருமளவுக்கு புலிகளில் இருந்து பிரிந்த கருணா தரப்பால் செய்யப்படுகின்றது. இங்கு இனம் காணப்பட்ட சிறிலங்கா இராணுவ துப்பாக்கி சூடுகளை உள்ளடக்கி இதைக் குறிப்பிடவில்லை. பொதுவாக இனம்காணாததும், கண்காணிப்பு குழு யாரையும் குற்றம்சாட்டாத கொலைகள் பற்றியதுமே இக் கருத்து. இந்தக் கொலைகளில் புலிகளுடன் ஏதோ ஒருவிதத்தில் முரண்பட்டவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

22.02.2002 முதல் 30.06.2005 வரையிலான காலத்தில் நடந்த மொத்த கொலைகளில் 12 மட்டும் தான் கண்காணிப்பு குழு புலிகள் செய்ததாக உறுதி செய்து அறிவித்துள்ளது. மற்றைய கொலைகள் யாரும் செய்யாத உயிருள்ள கொலைகளாகவே உள்ளது. இந்த நிலையில் இக்காலத்தில் உறுதி செய்யப்படாத யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்கள் இராணுவதரப்பால் 132 ம், புலிகள் தரப்பால் 3006 ம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் தொகையான யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்கள் இனம்தெரியாத நபர்களால் செய்யப்பட்ட நிலையில் உறுதி செய்யப்படாதவையாகி உள்ளது. அத்துடன் பெருமளவிலான ஒப்பந்த மீறல்கள் கண்காணிப்பு குழுவின் பதிவுக்கே வருவதில்லை. இதில் கொலைகளும் அடங்கும்.

இங்கு இந்த தொடர் கொலைகளை நாம் எந்த விதத்தில் எப்படிப் புரிந்துகொள்வது. கொல்லப்பட்டவர்களின் அரசியல் நடத்தை நெறிக்கு அப்பால், இன்று இப்படி தொடரும் கொலைகள் எந்தவிதத்திலும் தமிழ்மக்களின் வாழ்வியல் நெறி சார்ந்தவையாக இருப்பதில்லை. தமிழ்மக்களின் வாழ்வை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில் இக்கொலைகள் தொடர்ச்சியாகவே அரங்கேற்றப்படுகின்றது. கொலைகாரனின் நோக்கம் தமிழ் மக்களின் எந்தவிதமாக சமூக உயிர்துடிப்பையும் அனுமதிக்க மறுத்தலாகும். தமிழ் சமூகத்தின் அடிமைத்தனத்தில் ஆன்ம ஈடேற்றத்தையும், இந்த உலகில் சுகபோகமாக வாழ்வதற்கான ஆதாரத்தை தனக்கானதாக மாற்றி அதை தக்கவைப்பதுதான் இந்த கொலைகளின் நோக்கமாகும்.
அவர்களே தாமே விரும்பி செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய, ஒரு யுத்தநிறுத்தமும் அமைதியும் தொடருகின்ற ஒரு சூழலில் இவை அரங்கேறுகின்றது. உண்மையில் இவை அடிப்;படையான அரசியல் நேர்மையின்மையை தொடர்ச்சியாக சந்தேகத்துக்கு இடமின்றி அம்பலப்படுத்தி விடுகின்றது தாம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்த விதியை மறுத்து செயல்படுவதும், தமிழ்மக்களை ஏமாற்ற கருத்துரைப்பதும் இங்கு அரங்கேறுகின்றது. இந்த ஒப்பந்தம் புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு குழுக்களின் ஆயுதங்களை களையக் கோரிய பின், அவர்கள் மேலான படுகொலை எந்த வகையிலும்; அரசியல் நேர்மையற்றது. மறுபக்கத்தில் இந்த அரசுசார்பு ஆயுதக் குழுக்களுடன் தொடர்பற்ற மாற்றுக் கருத்துடையவர்கள் மேலான படுகொலைகள் என்று, விரிந்ததளத்தில் நடத்தப்படும் படுகொலைகள் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையின் தொடர்ச்சி தான்.

கொலை செய்யப்படுபவர்கள் ஏன் எப்படி இந்த குறித்த நிலைக்குச் சென்றார்கள் என்ற அரசியல் கேள்வியை புலிகள் ஆராயாது கொல்லுகின்றனர். இதையே புலியெதிர்ப்பு அணியினரும் செய்ய மறுக்கின்றனர். கொல்லப்பட்டவனின் சொந்த அரசியல் நிலைக்கு இருவருமே ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதை மூடிமறைக்கவே விரும்புகின்றனர். இதனாலேயே கொலை செய்கின்றனர். இதனாலேயே கொலையை மொட்டையாக கண்டிக்கின்றனர்.

கொலைகளை திட்டமிட்டு அதையே அரசியலாக்கி ஒரு தேசியமாக விளக்கி கொலை செய்பவர்கள், எந்த விதத்திலும் கொல்லப்படுவர்களை பொதுவான சமூக நீரோட்டத்துக்குள் கொண்டுவருவதற்கான எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. மாறாக பொது சமூக நீரோட்டத்துக்கு வரமுடியாத வகையில் தமது சொந்த நடத்தைகளால் எட்டி உதைக்கின்றனர். சமூக நீரோட்டத்தில் இருந்து தமிழ் மக்களின் எதிரியின் பக்கத்துக்கு தள்ளுவதில் இந்த கொலைகார அரசியல் மற்றும் நடத்தை நெறிகள் அன்றாடம் அரங்கேற்றப்படுகின்றது. நாள் தோறும் எதிரியின் பக்கத்துக்கு நூற்றுக் கணக்கில் புதிதாக ஆட்களை தள்ளிச் செல்வதில் தமது பொது அரசியல் நடத்தை நெறியை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றனர்.
குறுகிய புலியெதிர்ப்பு அரசியலுக்கு உட்பட்டு இக்கொலையைக் கண்டிப்பவன், திட்டவட்டமான உள்நோக்குடன் கொல்லப்பட்டவனின் மக்கள் விரோத அரசியல் நெறியை மூடிமறைப்பதன் மூலம் அந்த அரசியலை ஊக்கப்படுத்துகின்றனர். இந்த வாதம் கொல்லப்படுபவர்கள் அனைவரும் தவறான மக்கள் விரோத அரசியல் நெறியால் கொல்லப்படுகின்றனர் என்ற அடிப்படையை உள்ளடக்கி இது வாதிடவில்லை. கொல்லப்பட்டவனின் சரியான அரசியல் நடத்தை நெறியை உயர்த்தவும், கொல்லப்பட்டவனின் தவறான அரசியல் நெறியை விமர்சிக்க மறுக்கும் புலியெதிர்ப்பு கோசங்களுக்கு பின்னால் காணப்படுவது மக்கள் விரோத போக்காகும். கொலைகாரன் கூட மக்கள் விரோதியாகவே இங்கு செயல்படுகின்றான்.
மக்கள் விரோத போக்கை கொண்ட அரசியல் நடத்தைநெறிகள், அனைத்து சமூக தளத்திலும் அங்கீகரிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. கொலைகாரனின் அரசியல் நடத்தை நெறி எப்படி மக்கள் விரோதத்தால் கட்டமைக்கப்படும் போக்கில், கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தை நெறியும் கூட மக்கள் விரோதத்தால் கட்டமைக்கும் ஒரு அரசியல் மேடையைத்தான், கொலையை கண்டிக்கும் புலியெதிர்ப்பு பிரிவினரும் செப்பனிடுகின்றனர். கொலைகாரனின் மக்கள் விரோத அரசியல் நெறியால் வெளிவரும் ஒருவனை, மக்கள் நலன் சார்ந்த ஒரு சமூக அரசியல் நெறிக்குள் செல்வதை புலியெதிர்ப்பு கண்டனங்கள் வழிகாட்டுவதில்லை.

உண்மையில் கொல்லப்பட்டவனின் அரசியல் நெறி எதார்த்தத்தில் பல தளத்தில் காணப்படுகின்றது. இதில் அரசுசார்பு குழுக்களில் இருக்கும் போது கொல்லப்படுபவர்களில் அடிமட்டத்தில் உள்ளவர்கள, தனது உயிரை தற்பாதுகாக்கும் ஒரு நிலையில் தான் இந்த அரசுசார்பு குழுக்களின் அரசியல் நெறியை பின்பற்றுகின்றனர். இதற்கு வெளியில் எந்த விதத்திலும் இலங்கையில் சுதந்திரமாக வாழமுடியாத வகையில் கொலைகார அரசியல் நெறியும், இலங்கையின் பொருளாதார சமூக கூறும், அவர்களின் கழுத்தைப் பிடித்து தவறான அரசியல் ஒன்றின் பின் தள்ளிச் செல்லுகின்றது. மறுதளத்தில் திட்டமிட்டே எதிரி சார்ந்த நிலைப்பாட்டை எடுத்து, அவர்களுடன்; இணங்கி நிற்றல் நிகழ்கின்றது.

இதை சிறப்பாக தெளிவாக புரிந்துகொள்ள புலம்பெயர் நாட்டில் காணப்படும் புலியெதிர்ப்பு அரசியல் நடத்தை நெறி எடுப்பாகவே தன்னைத்தான் வெளிப்படுத்துகின்றது. இவர்களின் சுயாதீனமான சுதந்திரமான செயல்பாட்டுக்கு இலங்கை போன்று பொதுவான சூழல் காணப்படுவதில்லை. இந்த நிலையில் வலிந்து தேர்ந்தெடுக்கும் இவர்களின் சொந்த அரசியல் நடத்தை நெறி, மக்களுக்கு எதிராகவே காணப்படுகின்றது. இந்த நடத்தை நெறி இலங்கை அரசு சார்பாக இயங்கும் குழுக்களின் அரசியல் நிலைக்கு ஏற்ற ஒரு கோட்பாட்டு நெறியை முன்வைக்கின்றது. மக்களின் நலன்கள் எதையும் இவர்கள் முன்வைப்பதில்லை. புலிகள் அல்லாத அனைத்து தரப்பினரினதும் கருத்துக்களை, அதாவது சிங்கள பேரினவாதம் முதல் ஏகாதிபத்தியம் வரை முன்வைக்கும் கருத்துக்களை கோட்பாடுகளை தூக்கி நிறுத்தி, அதையே புலிக்கு மாற்றாக முன்வைக்கின்றனர். இந்த வகையில் தொடரும் கொலையை கண்டித்தல் என்ற பெயரில், ஒரு கொள்கை வழி ஏகாதிபத்திய கோட்பாட்டு அரசியலை முன்வைக்கின்றனர்.

கொலையைக் கண்டிக்கும் பொதுவான சமூக கண்ணோட்டத்தை கொண்டு, கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவதை இவர்களின் ஜனநாயகம் தடுத்து நிறுத்துகின்றது. குறிப்பாக எடுப்பின் ரி.பி.சி கொலை செய்யப்பட்டவனின் அரசியல் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவதை, கொலைகாரனின் அரசியல் நடத்தை நெறிக்கு ஊடாக திட்டமிட்டே மறுக்கின்றனர். இதன் மூலம் கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தைகளை ஆதரித்து பாதுகாக்கும் வகையில், மிகவும் திட்டமிட்ட வகையில் விடையங்களை நகர்த்துகின்றனர். இது ரி;பிசி மட்டுமல்ல பல புலியெதிர்ப்பு அரசியலின் பொதுவான நிலையாகும்.
மனிதனை மனிதன் கொல்லுதல் இயற்கையின் தெரிவு அல்ல. இதை நாம் எமது மனித விரோதக் கோட்பாட்டுக்கு இசைவாக திரித்துபுரட்ட முடியாது. மனித விரோதமும், அது சாhந்த கோட்பாடுகள் கூட இயற்கையின் தெரிவல்ல. மனித விரோதப் போக்குகள் தான், மனிதனை கொன்றொழிக்கின்றது. இது புலிகள் தரப்பில் மட்டும் இருப்பதில்லை. இது அனைத்து மனித விரோதப் போக்குகளிலும், காணப்படும் பொது செல்நெறியாகும்.

உண்மையில் இங்கு மனிதனைக் கொல்லுதல் என்பது ஒரு வன்முறையின் குறிப்பான ஒரு வடிவம் மட்டுமே ஒழிய இது விசேடமானதல்ல. வன்முறை என்பது விரிந்த அடிப்படையைக் கொண்டது. இன்றைய உலகம் தழுவிய சமூக அமைப்பே வன்முறையி;லானவை. பண்பில் மட்டும் ஏற்றவிறக்கம் கொண்ட ஒரு உலகம் காணப்படுகின்றது. இறக்கத்தில நின்று ஏற்றத்தை விமர்சிப்பது வன்முறையை எதிர்ப்பதாக மாறிவிடாது. அதுவே ஒரு அரசியல் மோசடி. உண்மையில் இப்படி செய்வது கூட வன்முறைதான். இன்று ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கும் போது, அது வன்முறையாகின்றது. இதன் வேறுபட்ட வடிவத்தில் கொலையும் ஒன்று. வன்முறையின் தோற்றம் என்பது, ஒன்றுபட்ட சமூகச் செயல்பாட்டை மறுத்தல் என்ற கோட்பாட்டில் இருந்து தொடங்குகின்றது. சமூகத்தின் பொதுச் சுதந்திரம், சமூகத்தின் பொது ஜனநாயகம் என்பவற்றை மறுக்கும் போதே வன்முறை உருவாகின்றது. இதன் ஒரு வடிவம் தான் கொலை.
கொலைகளை கண்டிப்பவன் முரணற்ற வகையில் வன்முறை எதிர்ப்பாளனாக இருக்க வேண்டும். அதாவது சமூகத்தின் நலனை அடிப்படையாக கொண்டு, வன்முறையின் வடிவத்தை சமூக நலநோக்கில் அதை முன்னிறுத்தி அணுகவேண்டும். சிலவகை வன்முறைகளையும், சில வகை கொலைகளை மட்டும் கண்டிப்பவன் நிச்சயமாக கொலையை கண்டிப்பவன் அல்ல. மாறாக இந்த சமூக அமைப்பில் தனக்கென ஒரு கோட்பாட்டுடன், உள்நோக்கம் கொண்ட மக்கள் விரோதியாக இருந்தபடி தன்னை மூடிமறைக்க விரும்புபவன் தான். கொலை என்பது சமூகத்தில் காணப்படும் பலவகையான வன்முறைகளில், ஒரு குறித்த வடிவம் சார்ந்த செயல்பாடு மட்டும்தான். ஆனால் புலியெதிர்ப்பு அரசியல் இந்த கொலை வடிவத்தை மட்டும் எதிர்க்கும் போது, சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பொது வன்முறையை எதிர்ப்பதில்லை. மாறாக பொதுவான சமூக வன்முறையின் தீவிரமான ஆதரவு கோட்பாட்டுடன் சேர்ந்து இயங்குகின்றனர். புலியெதிர்ப்பு அணியினர் எப்போதும் கொல்லப்பட்டவனின் வன்முறையைக் கூட கேள்வி கேட்பதை அனுமதிப்பதில்லை.

இங்கு கொல்லப்பட்டவன், கொல்லுபவன் என இரு வன்முறை சார்ந்த அரசியல் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டுள்ள நிலையில், புலி எதிர்ப்பணியினர் புலிக்கு எதிராக அவர்களின் வன்முறையை மட்டும் எதிர்க்கின்றனர். புலிகள் ஒருவனைக் கொன்றால் அவனின் சமூக நடத்தையையும், அவனின் வன்முறைப் பாத்திரத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதில் ஒரு புனிதமான மௌனத்தை பேணியும், கேள்விக்குள்ளாக்குவதை தடுத்தும் ஒரு அரசியல் விபச்சாரத்தை நடத்துகின்றனர்.

கொலைகள் உலகத்தில் இல்லாது ஒழிக்க வேண்டுமென்றால், அதற்குரிய அனைத்து சமூக நடத்தை நெறிகளையும் முரணற்ற வகையில் மறுதலிக்கவேண்டும். இந்த வகையில் சமூக அடிப்படைக் கோட்பாட்டை கொண்டே, கொலைகளை பகுத்தாயவேண்டும். மக்களின் சமூக கூறுகளின் உயர்ந்த செயல் நடைமுறைகள் முழுதுமாக சார்ந்து இருக்கவேண்டும்;. இல்லாதவரை இது போலித்தனமான குறுகிய உள்நோக்கம் கொண்ட ஒன்றாக இருப்பதை தாண்டி வேறொன்றுமாக இது இருப்பதில்லை.

கொலை என்பது வன்முறையின் ஒரு வடிவம் மட்டும் தான். கொலைகளை எதிர்ப்பதாக கூறுவதும் சரி, மரண தண்டனையை அகற்றவேண்டும் என்று ஏகாதிபத்திஙகள் சிலவற்றின் உலகளாவிய கோட்பாடும் சரி உள்நோக்கம் கொண்டவை. மக்களின்; காதுக்கே பூ வைப்பவை. மரணதண்டனை தவிர்ந்த கைது, சிறை, சித்திரவதை என்று தொடரும் நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை வடிவங்கள் இன்றி, இந்த சமூக அமைப்பு இயங்குவதில்லை. இப்படி இருக்கும் போது கொலையை மட்டும் எதிர்ப்பது ஏன்? வன்முறைகளில் கொலையும் ஒன்று அந்தளவே. சிறைச்சாலைகள், பொலிஸ், வன்முறையை அடைப்படையாக கொண்ட அதிகாரவர்க்கமின்றி அரசு அதிகாரமே இயங்குவதில்லை. இவை அனைத்தும் நிறுவனப்படுத்தப்பட்ட, சட்டவாக்கம் பெற்ற வன்முறை உறுப்பாக உள்ளது. இதை புலியெதிர்ப்பு பிரிவினர் எதிர்ப்பதில்லை. இதை ஏகாதிபத்தியங்களும் எதிர்ப்பதில்லை. வன்முறை அளவிலும், பண்பிலும், கண்காணிப்பிலும் வேறுபட்ட வடிவங்களில் உலகளவில் எங்கும் எதிலும் காணப்படுகின்றது. பொது அரசியலே கண்காணிப்பு அரசியலாகிவிட்டது.

சமூகத்தைப் பிளந்து கட்டமைக்கப்பட்டுள்ள பொது வன்முறையில், ஒரு சட்டபூர்வமான ஒழுங்குக்கு உட்பட்டு இருக்கும் அனைத்து வடிவமும் வன்முறை கொண்டவையே. ஒரு மனிதனின் உழைப்பை மற்றொருவன் சுரண்டி வாழ்வதே வன்முறைதான். மனிதனின் தேவையை மறுக்கும் இந்த சமூக அமைப்பே, வன்முறையால் கட்டமைக்கப்பட்டவை தான். மனித சமூத் தேவையை மறுத்த வன்முறைக்கு, உலகளாவில் வருடாந்தம் குறைந்தபட்சம் 10 கோடி பேர் பலியாகின்றனர். இதையிட்டு இவர்கள் யாரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால் நாங்கள் இதையும், புலியின் வன்முறையையும் எதிர்த்து முரணற்ற வகையில் போராடுகின்றோம். இதனால் பிரஞ்சு ஏகாதிபத்திய அரசியல் பொலிஸ் என்னை உத்தியோகபூர்மாக அழைத்து, உத்தியோகபூர்வமற்ற வகையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு சார்பாகவும் எழுதுவதை நிறுத்தும் படி மிரட்டும் ஒரு அரசியல் வன்முறையை எனக்கு விடுத்துள்ளனர். வன்முறை என்பது சமூக இயக்கத்தில் ஊடுருவி காணப்படும் ஒரு சமூக செயல் நெறியாகவே உள்ளது. இதில் சூழலும், சந்தர்ப்பங்களும், நிலைமைகளும் வேறுபட்ட போதும், எங்கும் வன்முறைக்கு உள்ளாகியபடி சமூக எதார்த்தம் உள்ளது.

வன்முறையை சமூகத்தில் இல்லாது ஒழிக்க விரும்பும் ஒருவன், சமூக செயல்பாட்டின் பொதுத் தன்மைக்குட்பட்ட வகையில் சமூக இருப்பியல் சார்ந்து நின்று கோரவேண்டும். இங்கு வன்முறையை வன்முறையால் மட்டும்தான் இல்லாதொழிக்க முடியும். இது எப்படி என்று சிலர் புறுபுறுக்கலாம். சமூகம் வன்முறையாலான நிலையில், சிலர் இந்த வன்முறையைக் கொண்டு சுபீட்சமாக வாழும் தனிமனித வாழ்க்கை முறைமை வன்முறையால் தகமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைய உலக நியதியாகவே உள்ளது. சமூகம் இதை மறுதலிக்கும் போது இதற்கு எதிரான வன்முறையை, எதிர் வன்முறையின்றி சமூகத்தால் இதை மாற்றி அமைக்க முடியாது.

உலகம் தழுவிய பொதுக் கோட்பாடு சார்ந்து இதை புரிந்து கொள்வது சிரமம் என்றால், சிறியளவில் சமூகத்தில் இருந்து இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளமுடியும். சிறுகுழந்தைகளை ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக கற்பழிக்கும் ஆதிக்கமுள்ள ஒருவனை எப்படி சமூகம் அணுகமுடியும். அரசின் ஆதரவுடன், உள்ளுர் ஆதிக்ககும்பல்களின் துணையுடன் தொடர்ச்சியாக சிறு குழந்தைகளை கற்பழிக்கும் போது, குறித்த நபரின் சமூக விரோத நடத்தையை எப்படி சமூகம் எதிர்கொள்ளும். சமூகமே திரண்டு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அவனை கொன்று விடுவதையே தேர்ந்தெடுக்கும். சமூக விரோத வன்முறைகளுக்கு (செயல்களுக்கு) எதிரான சமூக வன்முறைகளை கையாள்வது இந்த சமூக அமைப்பில் தவிர்க்க முடியாது. இதுவே வாழ்வுக்கான போராட்டமாக உள்ளது.

சமூக நலன், சமூக விரோதம் என்பது புலிகள் கூறுவது போல் அல்ல. புலிகள் சமூக நலன் என்பது தனது சொந்த நலனையும், சமூக விரோதம் என்பது தனக்கு எதிரானதே என விளக்கியே தண்டிக்க முனைகின்றது. சமூகம் இதற்கு வெளியில் இயங்குகின்றது. சமூகம் என்பது சமூக பொருளாதார அரசியல் என மொத்த நலனை உள்ளடக்கியது. இதற்குள் நின்று தான் சமூக நலனையும், சமூக விரோதத்தையும் பிரித்தறிய வேண்டும். புலிகளின் நலன் சமூகத்தின் நலனல்ல. இவை இரண்டும் இரண்டு வெவவேறு திசையில் நேர் எதிராகவே பயணிக்கின்றது. சின்ன ஒரு இலகுவான உதாரணம். புலிகள் மக்களின் ஜனநாயகத்தை இப்போது வழங்கமுடியாது என்கின்றனர். அது தமிழீழம் கிடைத்த பின்தான் வழங்குவோம் என்கின்றனர். இந்தக் கூற்றில் புலிகள் தாம் அனுபவிக்கும் ஜனநாயகத்தை மக்களுக்கு இப்ப வழங்கமுடியாது என்று கூறுவதே, புலிகளினதும் மக்களினதும் நலன்கள் வெவவேறு திசைகளில் செல்வதையே எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்னும் போது, அதை இப்போது இல்லை என்கின்றனர்;. இப்படி பல உதாரணம் உண்டு. புலிகள் சமூக விரோதம் என்பது, சமூக நலனையே. இப்படி எதிர்நிலை சித்தாந்தமே சமூக நலன் பற்றி உள்ளது.

ஒரு சமூக நிறுவனம் மக்களின் நலன்களை அடிப்படையாக கொள்ளாத வரை, கொலைகளும் தண்டனைகளும் இந்த சமூகத்தின் போக்காகவே இருக்கும். ஒவ்வொரு புலியெதிர்ப்பு அணியினரும் எந்த சமூக நலனை மக்கள் சார்ந்து கொண்டுள்ளனர் என்றால், அதற்கு அவர்கள் பதில் தரமாட்டார்கள். நாம் இங்கு சமூக நலனை முன்னிறுத்தும் போது, கொலைகளையும்; தண்டனைகளையும் சமூக நலன் என்ற நோக்கில் இருந்து காணவேண்டும்.

மக்கள் மட்டும் தான் வரலாற்றைப் படைப்பவர்கள். மக்களுக்கு வெளியில், மக்களைப் பற்றி பேசாத எந்தக் கோட்பாடும், சிந்தாந்தமும் போலியானது. அது மக்கள் விரோதத் தன்மை கொண்டவையுமாகும். இந்த வரலாற்றுப் போக்கில் நேர்மையாக மக்களை நேசிக்க மறுப்பவர்களும், அதை கற்க மறுப்பவர்கள் அனைவரும், வரலாற்றில் மக்கள் விரோதிகளாகவே இனம் காணப்படுவர்.

நேர்மையாக சமூத்ததை ...

நேர்மையாக சமூத்ததை நேசிப்பவனால் தான் உண்மையாக இருக்க முடியும்.


உண்மைத் தன்மை என்பதே சமூக இருத்தலின் அதிவாரமாகும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. எதையும் எமது சார்பு நிலையில் நின்று அறிதல் என்பது, உண்மையை ஒரு நாளும் தரிக்கவே முடியாது. உண்மையாக இருத்தல் என்பது, நேர்மையாக சமூகத்தை நேசித்தால் என்பதாகும். இதையே நாம் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

''ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையிலும், சமூகம் காட்டும் மௌனங்கள் பித்தலாட்ட அரசியலாகிவிடுன்றது'' என்ற எனது கட்டுரையைத் தொடாந்து, அதற்கு கருத்தக் கூறியவர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றறொரு கட்டுரையாகிவிடும். அதை தவிர்த்து ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

அதற்கு முன்பாக உண்மையில் நான் இந்த விடையம் பற்றி எழுதுவதில்லை என்றே இருந்தேன். வழமைபோல் உண்மையை குழிதோண்டி புதைக்கும் புலி எதிர்ப்பு, புலி சார்பு நிலைக்குள் விடையங்கள் சுருங்கி, அர்த்தமற்ற வகையில் விதாண்ட வாதங்களாகவே பொதுவாக தமிழ்மணம் விவாதங்கள் அமைந்துவிடுகின்றன. பொதுவாக சரியான கருத்தை தூற்றிவிடுகின்ற சூழலில், தூசணத்தால் சமூகத்தை புணர்ந்துவிடுகின்ற நிலையில், உண்மை என்பது புதைகுழியில் போடப்பட்டே வந்தன. இதில் தூசணத்தால் புணர்தல் என்பது எப்போதும் வக்கிரமாக அமைகின்றது. இது தொடர்பாக நான் ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதியிருந்தேன்.

கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்றவர்களின் நடைமுறை தொடர்பாக

http://tamilcircle.net/news/badwords.html

இந்த விவாதம் கூட இந்த எல்லைக்கு அப்பால் நகர்ந்துவிடவில்லை. விடையத்தை திசை திருப்பவும், ஒர தலைபட்சமாக தூற்றிக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் விடையத்தை அனைவரும் மறந்து வம்பளந்து கொண்டிருந்தனர். இது ஆணாதிக்க சமூகப் பிரச்சனை என்பதை புரிந்துகொள்ளமால், ஆணாதிகத்துக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இதை சமூக உணர்வின் பால் உண்மையின் பால் விடையத்தை திருப்பவும், ஆணாதிக்க அமைப்பின் மேல் திருப்பவும் இந்த விவாதத்தை நான் தற்செயலாகவே நேரம் இருந்தமையால் எழுதமுடிந்தது.

உண்மையில் சமூகத்தில் நடக்கும் தொடரான பல மனித விரோத விடையங்கள் இப்படி அன்றாடம் பலமுறை சிதைக்கப்படுகின்றன அல்லது அவை பூசி மொழுகப்படுகின்றன. அண்மையில் ஊடாகவியல் மீதான தாக்குதல், வடமாரச்சியில் பல வீடுகள் எரிக்கப்பட்ட நிகழ்சிகள், புலிகள் போதைவஸ்தே கடத்தவில்லை என்ற தகவல் உட்பட பற்பல விடையங்கள் அன்றாடம் திரிக்கப்பட்டு, அவை திட்மிட்டு கைவிடப்பட்டு அவை பூசிமொழுகப்படுகின்றன. அதற்கு கவர்ச்சியாக அலங்கரித்து சிங்கரித்து நிறுத்துகின்றனர். அனைத்தையும் உண்மையின் பால் திருப்ப முயல்வது முடியாது. இவை பெரும்பாலும் அர்த்தமற்றவையாக மாறிவிடுகின்றன. நேர்மையான, சமூக பொறுப்யுள்ள ஒரு சமூகம் இல்லாத ஒரு நிலையில், உண்மையை குழிதோண்டிப் புதைக்க முனையும் ஊடாகவியலும் விவாதத் தளங்களுமே அறிவியல் துறையாகிவிட்ட நிலையில், நாம் தனிமனிதனாக சமூகத்தை சரியாக திருத்திவிடமுடியாது. தமிழ் மக்களின் சவக்குழி இப்படி தோண்டப்பட்டே உள்ளது. அதைச் சுற்றிநின்று கூச்சலீடும் பேய்களின் ஊளைச்சத்தம் தான், இன்று தமிழ் மக்களின் தகவலாகிவிட்டது.

ஒரு நேர்மையான சமூகப் பொறுப்புள்ள விவாதங்கள் நடப்பதில்லை. சார்பு நிலை சார்ந்து உண்மையை மூடிமறைக்கும் வகையில் வக்கிரமாகவே சமூகம் புணரப்படுகின்றது. எப்படி தமிழ் ஊடாகவியல் இயங்குகின்றதோ, அப்படியே தான் தமிழ்மணம் விவாதத்தளங்கள் இயங்குகின்றன. இதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலiயில் நாம் சிறுபொறிகளை எற்படுத்தி, உண்மைகளை தேடுபவர்களை நோக்கி சிறயளவில் நாம் பயணிக்க முனைப்பு கொள்கின்றோம். ஆனால் இதில் கூட தத்தம் சார்புநிலையை கடந்து சிந்திக்க துண்டுவது என்பது, மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. இனி குறித்த விவாதத்துக்குள் சிலவற்றை பார்ப்போம்.

1.மயூரன் தனது கருத்தில் எனது ஆய்வை செயற்கையாக உள்ளது என்கின்றார். அது எப்படி செயற்கையாக உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் அதை புரியவைக்கவுமில்லை. அவர் ''அந்த 18 வயதுக்கு குறைந்த பெண் 'கற்பழிக்கப்பாட்டாள்' என்கிற சொல்லை உண்மையாகவே நீங்கள் பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக்கொள்கிறீர்களா?'' என்ற அவரின் கேள்வி எனக்கு ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்கின்றாரா?

இந்தச் செய்தி முதலில் தகவலாகவே வெளிவந்தது புலிசார்பு செய்தி நிறுவனங்களான புதினம் மற்றும் நிதர்சனம் இணையத்தில் தான். வைத்தியசாலை தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த தகவலை வெளியிட்டு இருந்தனர். இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு இயங்கும், புலம்பெயர் ஊடாகவியல் இதை அன்றே தமது செய்தியாக ஒளிபரப்பியிருந்தன. இந்த செய்தியில் பலமுறை கற்பழிக்கப்பட்டது முதல், சிறுமி (வயது உட்பட) என்ற தகவல் முதல், எந்த நேரத்தில் எப்படி திட்மிட்ட முறையில் (மணைவி இல்லாத நேரத்தில்) நடந்தது என முழுத் தகவலையும் கொண்டிருந்தது. இதில் சம்பந்தப்பட்டவர் பல்கலைக்கழக பேராசியர் என்ற தகவலையும், அந்தச் சிறுமி இந்த கொடுமை தாங்காது தற்கொலை செய்ய முயன்ற நிலையில், காப்பற்றபட்ட ஒரு நிலையில் வழங்கிய செய்தியையே வெளியிட்டு இருந்தனர். செய்தி என்ற வகையில், இது எந்தக் கலப்புமற்றதாக வெளிவந்தது. இந்த உண்மைத் தன்மை மிகுதியாக இருந்தது. இது பாதிகப்பட்ட சிறுமி உயிர் காப்பற்றப்பட்ட நிலையில் வழங்கிய முதல் வாக்குமூலமாகும்.

இந்தச் செய்தி உதையனிலும் வந்தாக ஞபாகம். அன்று மாலைதான் புலியெதிர்ப்பு இணையத்திலும் ஒரு செய்தியாக மட்டும் வெளிவந்தது. பேராசியார் யார் என்று தெரிந்த பின்பு, இச் செய்தி பலவாக திரிபடையத் தொடங்கியது. இதில் சந்தேகத்தை மயூரன் எழுப்புகின்றார். இதை செயற்கையான கற்பனை என்ற கூற முனைந்தால், இது உண்மையாக இல்லாத வரை சரி. உண்மையானால் இதுவே அபத்தம் தானே.

இரண்டாவது இச்சம்பவம் உண்மையல்ல என்றாலும், விவாத அரசியல் உள்ளடக்கம் எந்தவிதத்திலும் தவறானதாகது. எனெனின் எனது விவாதம் ஆணாதிக்க அமைப்பின் செயல்பாடு மீதானதே.
இரண்டதாக மயூரன் புலிகளுடன் எல்லா நேரத்திலும் ''அவ்வாறு அடித்துக்கூறுவது எல்லா நேரங்களிலும் பொருத்தப்பாடுடையதாக நான் நினைக்கவில்லை.'' என்கின்றார். இதையே நானே எனது கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளளேன். எனது கட்டுரையில் ''சமூகத்தின் பொறுப்பான இரு முக்கிய பதவிகளில் இருந்தபடி நடந்த இந்த குற்றத்தை, நாம் சமூக நேர்மையுடன் இதை ஆராய தவறுவது அப்பட்டமாக இதற்கு துணைபோவது தான். இது போன்ற குற்றங்கள் ஒரு பேராசியர், ஒரு போராளி என்பவர்களால் சமூகத்தில் நடக்க முடியாது என்பதல்ல. இதை ஒரு போராளி அமைப்பு, ஒரு பல்கலைகழகம் தமது கொள்கையாக கொண்டு உள்ளனர் என்பதுமல்ல.
இதற்கு வெளியில் இந்த குற்றத்தின் ஊற்று மூலத்தில் இந்த சமூக நிறுவனங்களின் பங்கு என்ன என்பதே எமது சமூக விசாரனை கோருகின்றது.'
' என்ற பதிலே இதற்கு தெளிவாக பதிலளித்துள்ளது. நான் பரிசில் முன்பு ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட பின் கொன்ற ஒரு நிகழ்வை ஒட்டி எழுதிய கட்டுரை ஒன்றை இங்கு பார்வைக்கு தர முனைகின்றேன்.

பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

http://tamilcircle.net/books/book-03/Book%2003-03/Book%2003-03-67.htm

இந்தக் கட்டுரை கூட செயற்;கையாக எழுதப்பட்டவையல்ல. இக்குற்றத்தை செய்தவர்களுக்கு அண்ணளவாக 25 வருட சிறை தண்டனை தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆணாதிகத்தின் உதிரித்தனமான போக்கே உள்ளது. ஆனால் யாழில் நடந்தது மிகவும் திட்மிட்ட ஒன்று.

2.மற்றொருவர் கற்பழிப்பு என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்துவது தவறு என்கின்றார். இது பற்றி நான் விவாதிக்கத் தயாரகவே உள்ளேன். சொற்களை மாற்றி புரட்சி செய்வாதல் விடையங்கள் மாறிவிடுவதில்லை. இந்த சொற்பிரயேகம் பற்றி நான் எழுதிய கட்டுரையை பார்வைக்கு தருகின்றேன்.

''பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க ''கற்பு'' என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?''

http://tamilcircle.net/books/book-03/Book%2003-02/Book%2003-02-22.htm

இதைப் படித்து இதற்கு பதிலளிப்பின் எனது கருத்துகளை மறுபரிசீனை செய்ய முடியும்.

3.இன்றைய நிலைமையில் மாற்ற என்ன செய்யமுடியும் என்ற மற்றொருவரின் விவாதம். நான் மாற்று என எதையும் வீம்பக்க உங்கள் முன் முன்வைக்கவில்லை. நடைமுறையில் புரட்சியளானாக செயல்பாடத வரை, இதற்குள் வாருங்கள் என்று என்னால் போலியாக கூறமுடியாது. இது விமர்சனத்துக்குரியதாக கூட இருக்கலாம்.

மாறாக நான் உங்களைக் கோரமுடியும், உண்மையை உண்மையாக, நேர்மையாக சமூகத்தை அனுகுவதை நடைமுறையில் செய்யுங்கள் என்;று. இப்படி உள்ளவர்களே மாற்றைப்பற்றி குறைந்தபட்சம் நேர்மையாக சிந்திக்கமுடியும். இதுவே இல்லாத போது, நாம் மாற்று என எதையும் வழிகாட்டமுடியாது. எனது விவாதம் புலிசார்பு புலி எதிர்ப்புக்குள் சிக்கிக் கொள்வதில் இருந்து, வெளியில் சமூக நலனை உயர்த்தி விவாதிக்க முனைகின்றேன். உலகம் தளுவிய அளவில் அனைத்து விடையத்தையும் மனிதன் தானாக புரிந்துகொள்ள வேண்டும்;. இதைத் தான் நான் சுயாதீனமாக செய்ய முனைகின்றேன்.

இதனால் தான் பிரஞ்சு அரசியல் பொலிஸ் கூட எழுதுவதை நிறுத்தக்கோரியது. பிரஞ்சு ஏகாதிபத்திய அரசியல் பொலிஸ் என்னை உத்தியோகபூர்மாக அழைத்து, உத்தியோகபூர்வமற்ற வகையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு சார்பாகவும் எழுதுவதை நிறுத்தும் படி மிரட்டும் ஒரு அரசியல் வன்முறையை எனக்கு விடுத்துள்ளனர். வன்முறை என்பது சமூக இயக்கத்தில் ஊடுருவி காணப்படும் ஒரு சமூக செயல் நெறியாகவே உள்ளது. இதில் சூழழும், சந்தர்ப்பங்களும்;, நிலைமைகளும் வேறுபட்ட போதும், எங்கும் வன்முறைக்கு உள்ளாகியபடி சமூக எதார்த்தம் உள்ளது.

நாம் அனைத்து தளத்திலும் செயல்படுவதன் மூலம் தான் உண்மையை தரிசிக்க முடியும். இன்று எமது பிரச்சனை சரி, எந்தப் பிரச்சனையானலும் உலகத்தைப் புரிந்துகொண்டு விமர்சிப்பதில் தங்கியுள்ளது. மற்றயை விடையங்களில் அக்கறைப்பாடாத வரை, அதன் மீதான உலகப் பார்வை முன்னெடுக்காத வரை, சமூக மாற்று என்பது கிடையாவே கிடையாது.
எம்மை மீறி நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்த வண்ணம் தான் உள்ளது. சமூகம் தயாராகாத எந்த நிலையிலும் அதை தனிமனிதன் மாற்றிவிட முடியாது. இது எதார்த்தம். சமூகத்தை நோக்கி எமது போராட்டத்தை நடத்தவரை, சமூத்தின் விழிப்பை நாம் எற்படுத்த முடியாது. திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்தை எடுப்பின் என்ன தான் நடந்துவிட்டது. அப்படியே அது உள்ளது. அதைக் குண்டு வைத்து தகார்த்தாலும் நிலைமை மாறிவிடாது. அரசியல் ரீதியாக நாம் சரியாக இல்லாதவரை, அது மாறிவிடாது.

மாற்றம் என்பது சிங்கள மக்களையும் உள்ளடக்கியது. இதன்பால் நாம் சரியாக செயல்படவிட்டால், சிறப்பான அரசியல் நடைமுறை உருவாக மாட்டாது. சிங்கள மக்களை வென்று எடுக்கும் யுத்ததந்திரத்தை நாம் ஒருபோதும் கொண்டிராத வரை, பொது சூழல் எதையும் மாற்றாது.

4.துண்டில் பரமுவேலன் கருணாநந்தனுக்கு ஒரு குறிப்பு. நான் உங்களை அறியேன். நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பின், நான் தொடர்புகொள்ள ஆவலாக உள்ளேன். மற்றையது நான்கு நாட்களுக்கு முன் எமது இணையத்தில் இருந்து எடுத்தப்பபோட்ட

''வன்முறை (கொலை) தொடர்பாக புலியெதிர்ப்பு, புலிசார்பு நிலைப்பாட்டின் மீதான சமூக எதிர்வினைகள்'' என்ற கட்டுரையை ஏன் அகற்றி இருந்தீர்கள் என்பதும் புரியவில்லை.

http://tamilcircle.net/news/politicalmurder.htm

இனி நான் உங்களுக்கு சொல்லவரும் விடையத்துக்கு வருகின்றேன்;. விவாதம் என்பது சமூகப் போக்கில் இருந்து இனம் காணப்படவேண்டும். தேனீ இணையம் புலியெதிர்ப்பு என்ற ஒரேயொரு அரசியல் பாதையில் இருந்து அனைத்தையும் வாந்தியெடுப்பவாகள். புலிக்கு எதிராக அமெரிக்கா பேய்களுடளும் கூடிக்கூலாவத் தயாரனவர்கள். இதை அரசியல் ரீதியாக சுயமாக புரிந்துகொள்ளுங்கள்.

குறித்த கட்டுரையின் தலைப்பு கூட ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்குரிய வகையில், இடப்பட்டு இருந்தது. அவர்கள் இதன் ஊடாக புலிகளை தூற்றவே விரும்பினார்களே ஒழிய, இந்த ஆணாதிக்க சமூக அமைப்பின் விளைவாக இதைப் பார்த்து அதற்கு எதிராகப் போராட முனையவில்லை. குறித்த சிறுமியின் நலன் அவர்களின் குறிக்கோலாக இருக்கவில்லை. இது அவர்களின் அரசியல் தெரிவு. குறித்த கட்டுரையை நீங்கள் போட்டதில் நாம் உடன்பட முடியதவராக இருந்தோம். இதைவிட நீங்கள் சுயமாக ஒன்றைப்போட்டு இருக்கலாம்; அது ஆரோக்கியமான, ஆணாதிகத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டதுக்கு சரியாக வழிகாட்ட கூடியதாக இருந்து இருக்கும்.

கட்டுரைகளை தெரியும் போதும், சமூக நோக்கில் அவை எந்தளவுக்கு மக்களுடன் இணங்கி நிற்கின்றன என்பதைப் கூர்ந்து பாருங்கள். எழுந்தமானமாக எடுத்துக் கையாள்வது என்பது, சமூகத்துக்கு எதிரானவர்களைப் பலப்படுத்துவதற்கே உதவுகின்றது. இதை தான் நாம் புலிகளின் போராட்டத்தின் மீது எமது விமர்சனமாக உள்ளது. குறுகிய புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாது, சமூக நோக்கில் விடையங்களை இனம் கண்டு அனுக வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

உண்மையாக இருப்போம். உண்மைக்காக நேர்மையாக போராடவோம். இதுவே குறைந்தபட்சம், எமது உண்மையான சமூக அக்கறையாக எம்முன் உடனடியாக உள்ளது.

கருத்தை கருத்தாகவே ...

கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்றவர்களின் நடைமுறை தொடர்பாக


சமூகத்தின் சீரழிவு எந்தளவுக்கு பண்பாடு கடந்து தரம் தாழ்ந்து செல்லுகின்றதோ, அந்தளவுக்கு சமூகம் மீதான வன்முறை பல வழிகளில் திணிகப்படுகின்றது. இதன் பொது அதிகாரத்தின் மொழி முதல் அதன் சொந்த நடைமுறைவரை அனைத்தும் ஈவிரக்கமற்ற வகையில் கொடூரமான வகையில் தன்னைத்தான் காட்டிக்கொள்ள விரும்புகின்றது. சமூகத்தின் உயிர்துடிப்புள்ள எந்த சுயாதீனமான செயலையும், அதன் முளையிலேயே சிதைத்துவிடும் ஒரு சமூக வக்கிரத்தை உருவாக்கி, அதில் தான் தாலாட்டு பெறுகின்றனர். ஒரு மனிதனின் ஜனநாயக உரிமையை மக்களின் பெயரில் துப்பாக்கி முனையில் குத்தகை எடுத்து அதை மறுக்கும் இவர்கள், தன்னிலை விளக்கமாகவே இந்த ஜனநாயகம் மக்களுக்கு இபபோது அவசியமற்றது என்று புலம்புவது இன்றைய எதார்த்தமாகியுள்ளது. சமூகத்தின் ஜனநாயகத்துக்கு பயந்த கோழைகளின் உளறலாகவே இது வெளிப்படுகின்றது. சமூகத்துக்கு பயந்த கோழைகள் எப்படி இயங்குவார்கள் என்பதை மாhக்ஸ் அழகாகவே ''கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடத்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.'' என்றார். இது தான் இன்று எம்மண்ணில் அனைத்து கூறுகளிலும் காணப்படுகின்றது.

திறந்த விவாத இணையத் தளங்களில் முனவைக்கப்படும் கருத்துக்கு பதிலளிக்க வக்கற்ற அனாமதேயங்களின் அணுகுமுறைகள், எமது தமிழ்தேசியத்தில் புளுத்துக் கிடக்கும் பாசிச பண்பாட்டையே தெளிவாக வெளிப்படுத்துகின்றது. சமூகம் (மக்கள்) சார்ந்து முன்வைக்கும் கருத்துக்கு, அவர்கள் பதிலளிக்க முடியாது மூச்சுத் திணறுகின்றனர். இதனால் கருத்தை முன் வைத்தவனை அமெரிக்காவின் நாயாகவும், இலங்கை அரசின் எடுபிடிகள் என்றும் பலவிதமாக தமது கற்பனை திறனுக்கு ஏற்ப பற்பலவாக எழுதுகின்றனர். அதேநேரம் எழுதுவதற்கு தண்டனையாக படுதூசணத்தால் திட்டி தீர்க்கின்றனர். இதன் போது அம்மாவை, சகோதரியை, மனைவியை, மகளை புணர்வோம் என்று, தமிழ்தேசிய வக்கிரத்தை வீரவசனமாக்கி எழுதுகின்றனர். கொலைகாரன், கொள்ளைக்காரன், பல பெண்ணை கற்பழித்தவன் என்று கூட எழுதுகின்றனர். இப்படித்தான் பல ஆயிரம் தியாகத்துடன் கூடிய எமது தமிழ் தேசியம், மாற்றுக் கருத்தை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கின்றது.

சமூக கருத்துக்கு பதிலளிக்க வக்கற்ற நிலையில், சமூகத்தின் மாற்றுக் கருத்துகளை சமூகத்தின் எதிரியின் கருத்தாக, மொட்டையாகவே அடிப்படையும் ஆதாரமுமற்ற வகையில் முத்திரை குத்துகின்றனர். அதேநேரம் இந்த அநாமதேயக் கும்பல், மிக நெருங்கிய உறவுப் பெண்களை பாலியல் வன்முறை செய்வதாக கூறுவதும், கருத்தாளனை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்துவதுமே, இன்று எமது தமிழ் தேசியமயமாகிப் போனதை நாம் எதார்த்தத்தில் எங்கும் இடைவெளியின்றி காண்கின்றோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எழுதியவனின் கருத்துடன் தொடர்பற்ற தாயை, சகோதரியை, மனைவியை, மகளை பாலியல் ரீதியாக புணர்ந்ததாகவும், புணரப்போவதாக கூறும் போது, அவர்கள் என்னதான் குற்றத்தைச் செய்தார்கள். இது தான் தமிழ் தேசியத்தின் தணியாத தேசிய தாகமோ! மற்றொரு பக்கத்தில் எழுதியவனின் நெருங்கிய உறவாக உள்ள இந்த நான்குவகைப் பெண்களுக்கு, வேறு சகோதரர்களும், சகோதரிகளும் உள்ளனர். அவர்களில் சிலர் புலியாகவும், புலி சார்பு நிலைப்பாட்டை கொண்டு செயல்படுவர்களாக உள்ளனர். இதன் மூலம் புலியின் தாயை, புலியின் சகோதரியை, புலியின் மனைவியை, புலியின் மகளையும் பாலியல் ரீதியாக புணரப் போவதாக அனாமதேய குறுந் தமிழ் தேசியவாதிகள்; கூறுகின்றனர். இதையெல்லாம் புலிகள் கண்டிக்க மறுக்கும் மறுபக்கத்தில் இது தேசியத்தில் பொதுவாக அரங்கேறத்தான் செய்கின்றது. இதை எழுதியவனின் புலி சார்பு உறவினர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இதில் நிகழ்கின்றது. இங்கு என்ன ஒற்றுமை. என்ன தேசிய பண்பாடு.

உண்மையில் புலிகள் கருத்துக் கூறமுடியாத எல்லா தளத்திலும், அவர்கள் தமது சர்வாதிகார அடக்குமுறையை ஏவமுடியாத அனைவர் மீதும், இந்த தேசிய வக்கிரத்தையே அரங்கேற்றுகின்றனர். எதிரி பற்றிய நிலைப்பாட்டை, வெறுமனே புலி ஆதரவு எதிர்ப்பு என்ற தளத்தில் மிகக் கொச்சைத்தனமான வகையில் குறுக்கி, அதை அரசியல் ரீதியில் அணுக முடியாது தூற்றுகின்றனர்.

புலிகள் இயக்கம் மக்கள் நலன் சார்ந்தாக இருந்தால், அவர்கள் இப்படி ஒரு நாளுமே தூற்ற முடியாது. பெண்விடுதலை பற்றி வாய்கிழிய மேற்கோள் இட்டு அறிக்கை செய்யும் புலிகள் ஒருபுறம், மறுபக்கம் புலி சார்பாக மிகக்கேவலமாக பெண்கள் மீது கொச்சையான தூசணத்தில் பாலியல் வன்முறை செய்யப் போவதாக கூறுகின்றனர். இதுதான் குறுந்தமிழ் தேசியத்தின் இரட்டை வேடம். நேர்மையற்ற இந்த வேடம் அனைத்து துறையிலும் நேர்மையற்று பொது அணுகுமுறையில் காணப்படுகின்றது. இதை அடிப்படையாக கொண்ட தமிழ் தேசியம், எப்படி மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கமுடியும். உண்மையில் பெண் விடுதலையை புலிகள் நேசித்தால், இப்படி ஒரு நாளுமே தேசியத்தின் பெயரில் பெண்களை கேவலப்படுத்துவதை அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு எதிராக கொதித்தெழவேண்டும்.

புலிகளின் போராட்டம் சரி, அவர்களின் தியாகமும் சரி மக்களின் நலன் சார்ந்ததாக இருத்தல் என்பது, அவர்களாலேயே எப்போதும் எங்கும் மறுதலிக்கப்படுகின்றது. மக்கள் நலன் என்பது வெற்றுக் கோம்பைகளில் இருந்து உருவாகுவதில்லை. மக்கள் நலன் என்பது, மக்களுக்காக எதைச் செய்யப் போகின்றோம் என்பதை தெளிவாக பிரகடனம் செய்து, அதை நடைமுறைப்படுத்துவது தான். இதை விடுத்து தலைவர் செய்வார், அவருக்கு எல்லாம் தெரியும், தமிழீழம் கிடைத்த பின்பு மக்களின் நலனை பூர்த்தி செய்வோம் என்று கூறும் பம்மாத்து விதண்டாவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை.

எல்லாவற்றையும் செய்வார் என்று கூறும் உங்கள் தலைவர், தற்செயலாக இயற்கையாகவே மரணித்தால் என்ன நடக்கும். தியாகங்கள் முதல் தமிழீழத்தின் பின் மக்கள் நலன் பேணப்படும் என்று கூறிய அனைத்தும் அர்த்தமற்ற ஒன்றாகிவிடும்;. உண்மையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது, புலிகளுக்கு சிறிதளவு கூட அக்கறை கிடையாது. மக்களின் வாழ்வு சார்ந்த சமூகப் பொருளாதார கூறுகள் ஒன்றாக இருக்க, புலிகளின் சமூகப் பொருளாதாரக் கூறுகள் வேறு ஒன்றாகவே உள்ளது. அதாவது மக்களின் சமூக வாழ்வியல் போக்குக்கு எதிராகவே புலிகளின் வாழ்வியல் உள்ளது. இதனால் தான் புலிகள் மக்களின் ஜனநாயகத்தை மறுத்த, பாசிச சர்வாதிகாரத்தை சமூகம் மீது பொதுவாகவே திணிக்கின்றனர். பின்பு தமிழீழத்தின் பின்பே சாதியத்தையும், பிரதேசவாதத்தையும், ஆணாதிக்கத்தையும், வர்க்க ஏற்றத் தாழ்வையும் ஒழிக்கப் போவதாகவும், அதேநேரம் தாம் ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்கப்போவதாக புலம்புகின்றனர். இவற்றை மக்களின் பெயரில் கூறிக் கொள்வது இங்கு நிகழ்கின்றது.

இதை நாம் விமர்சிக்கும் போது அப்பட்டமான அவதூறுகளை முத்திரையாக்கி, பாலியல் வன்முறையை செய்யப் போவதாக அனாமதேயங்கள் வக்கரித்து கொக்கரிக்கின்றனர். பெண்கள் பற்றி கேவலமான வக்கிரம். பெண் புலியாக உள்ள ஒவ்வொரு பெண்ணையும், இந்த தேசிய வீரர்கள் ஒரு பாலியல் பண்டமாகத் பார்ப்பதால் தான், அவர்களின் தேசிய மொழி இப்படி வக்கிரமாக கொப்பளிக்கின்றது. எல்லாப் பெண்களையும் புணரும் தேசிய சந்தர்ப்பத்துக்காக, காத்துகிடக்கும் ஒரு சமூக வக்கிரமாக இது பிறப்பெடுக்கின்றது.

இதை பொதுவாக புலிகளை ஆதரிக்கும் மிதவாதிகளும், புலிகள் மாறியுள்ளதாக கூறி நக்கித் திரிவோரும், புலிகள் திருந்திவிட்டதாக கூறும் பச்சோந்திகளும் இதை ஒருநாளுமே கண்டு கொள்வதில்லை. இதை மறுத்து போராடுவதில்லை. இதை மறைமுகமாக ஆதரிப்பதே இங்கு நிகழ்கின்றது. பினாமிகளாகவே நக்கித் திரியும் எல்லாக் கூட்டங்களும், இதற்கு ஏதோ ஒரு விதத்தில் துணைபோபவர்கள் தான். வேடங்களும், வேஷகளும் மறுபட்டாலும், இவர்களின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது. சமூகத்தின் முரண்பட்ட கூறுகளையும், அது சாhந்த மற்றுக் கருத்தை முடக்க வேண்டும் என்;ற குறிக்கோலில், அனைத்து வழிவகைகளையும் கையாளப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு எந்தவிதமான மாறுபாடே கிடையாது. நடிப்பதைத் தாண்டி, இவர்கள் சாமபேதம் எதையும் பார்ப்பதில்லை.

சமூகத்தின் வாழ்வியலாக உள்ள சமூக பொருளாதார நலன்களை நாங்கள் உயர்த்தி நிற்கின்றோம் என்ற உண்மையை இதனுடாக ஒருநாளும் மழுங்கடித்துவிட முடியாது. நமது கண்ணுக்கு முன்னே நடந்துள்ள, நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் மீதுதான், நாம் எப்போதும் கருத்துக் கூறுகின்றோம். நடைபெறாத எவற்றின் மீதும், நாம் கற்பனையில் கருத்துக் கூறுவதில்லை. வடக்கு கிழக்கு தொடங்கி இலங்கை முதல் உலகம் வரை நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகள் மீதே கருத்துரைக்கின்றோம். இதை சொல்லக் கூடாது என்பதே இன்றைய தேசியமாக உள்ளது. இதை முடக்க ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை புனைவது முதல் பாலியல் ரீதியாக புணரப்போவதாக கூறுவதும், கொன்று விடுவதும் தான், இன்றைய புலிகளின் தேசிய ஜனநாயகமாக உள்ளது.
நங்கள் வடக்கு கிழக்கு தொடங்கி இலங்கை முதல் உலகம் வரை நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகள் மீது கருத்துக்களை கூறும் போது, வெறுமனே புலியெதிர்ப்பு அணியைப் போல் புலிகள் பக்கத்தை மட்டும் விமர்சிப்பவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்தியம் முதல் அரசியல் துரோகத்தைச் செய்யும் குழுக்கள் வரை விமர்சிப்பவர்களாக நாம் உள்ளோம். நாங்கள் கம்யூனிஸ்ட்டுக்கள் என்பதால், எமக்கு மக்கள் நலன் மட்டுமே எப்போதும் முக்கியமானது. இதில் நாம் எதையும் பாகுபாடு காட்டுவதில்லை. சந்தர்ப்பவாதமாக எமக்கு நாமே மூகமுடியை போட்டுக் கொள்வதில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறியது போல் ஷஷகம்யூனிஸ்ட்டுகள் தத்துவார்த்தக் கொள்கை என்பது யாரோ ஒரு மகானால் - எப்போழுதோ கண்டுபிடிக்கப்பட்ட ஒன்ற அல்ல. மாறாக இது வாழ்க்கை அனுபவத்தில் - நமது கண்ணுக்கு முன்னே நடந்துள்ள, நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் இருந்து எழுந்த விஞ்ஞான ரீதியான பொதுவான முடிவுகளே ஆகும். எதார்த்தம் சார்ந்த இந்த உண்மை இருந்தே, எமது அனைத்து எழுத்துகளும் கருத்துகளும், நடைமுறைகளும் முன்வைக்கப்படுகின்றன. தவறுகள் திருத்திக் கொள்ளப்படுகின்றன.

சமகாலத்தில் நாங்கள் எமது கட்டுரைகளில் எம்மை நாமே கம்யூனிஸ்ட்டுகள் என்று அறிவித்ததில்லை. அதேபோல் மேற்கோள்களை காட்டுவது குறைவு. மாறாக எம்முன் நடக்கின்ற, நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளின் மீதான, விமர்சன ரீதியான மக்கள் சார்பான எமது அணுகுமுறைகள் தவிர்க்க முடியாது எம்மை கம்யூனிஸ்ட்டாக இருப்பதை மீன்டும் உறுதி செய்கின்றது. உலகெங்கும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் இந்த ஒருமித்த பார்வை கொண்டிருப்பதால், எமக்கு இடையில் ஒரு உற்சாகமான ஒருமித்த முடிவை எப்போதும் வந்தடைகின்றோம்.

இந்த வகையில் ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எதிராக மிக கடுமையாக எழுதுகின்றோம். எமது முதன்மை எதிரி இவர்களே என்பதை தெளிவாகவே அம்பலப்படுத்தி வருகின்றோம். சமகாலத்தில் ஏகாதிபத்தியத்தையும், இலங்கை பேரினவாதத்தையும் மிக கடுமையாக விமர்த்தவர்களில் நானே இலங்கையில் முதன்மையானவன். இன்று யாரும் இதை இலங்கையில் செய்யவில்லை. ஏன் இலங்கை அரசை விமர்சிப்பதை புலிகள் கூட செய்ய முடியவில்லை. இதனடிப்படையில் சில நூறு கட்டுரைகள் எழுதியுள்ளேன். தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன். மிக விரைவில் ஏகாதிபத்தியத்தை அப்பலப்படுத்தும் வகையில் உலகமயமாதலுக்கு எதிராக மூன்றுக்கு மேற்பட்ட நூல்களை அடுத்தடுத்து வெளியிடவுள்ளேன்.

நாங்கள் அரசையும், ஏகாதிபத்தியத்தையும் விமர்சிப்பதை தடுக்க வகையில், குருட்டுக் கண்ணுள்ள புலிகளின் முயற்சியாகவுள்ளது. இதைத்தான் பிரான்சின் அரசியல் பொலிசும் செய்ய முனைந்தது, செய்ய முனைகின்றது. பிரான்சு அரசியல் பொலிஸ் என்னை தமது அலுவலகத்துக்கு அழைத்து, உத்தியோக பூர்வமற்ற ஒரு நிலையில் குறிப்பாக ஏகாதிபத்தியத்தையும் இலங்கை அரசையும் எதிர்த்து எழுதுவதை உடன் நிறுத்தக்கோரியது. இதைத் தான் மீண்டும் புலிகள் செய்ய முனைகின்றனர். என்ன ஒற்றமை, என்ன ஜக்கியம். மக்களின் சமூகபொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி எமது எழுத்து சார்ந்த நடைமுறையை, ஆளும் வர்க்கங்களால் சகிக்கமுடியவில்லை. பிரான்சு ஏகாதிபத்தியம் முதல் புலிகள் வரை இதைத்தான் பொதுவாக சமூகம் சார்ந்தவர்கள் மீது கையாள முனைகின்றது.

இதில் தமிழ் தரப்போ ஒரு படி மேலே நிற்கின்றனர். நாலு தூசணத்தை விட்டால் வெட்டுவன் கொத்துவன் மண்டையில் போடுவன் என்கின்றது. இதைத் தாண்டி இவர்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாத மரமண்டைகளாக இருக்கின்றனர். இதையிட்டு நாம் அலட்டிக் கொள்ளமுடியாது தான். ஒரு விவாதத்தில் கூட கலந்து கொள்ளத் தெரியாத அடிமுட்டாள்கள், தமக்கு தெரிந்த அந்த நாலு தூசணத்தால் எழுதுவதைத் தாண்டி எதையுமே சமூகத்துக்கு தர வக்கற்றவர்களாக உள்ளனர். இந்த முட்டாள்களுக்கு பதிலளிப்பதை விடுத்து, இந்த மாதிரியான லும்பன்கள் சமூகத்தில் புரையோடிப்போய் காணப்படுவது என்பது, தமிழ் தேசியத்தின் தேசிய கொடையாகவே உள்ளது.

இந்த மாதிரி நாலு தூசணத்தை வைத்து புலம்பும் கும்பலுக்கு பதிலளிப்பதும், போட்டிக்கு பதிலளிப்பதும் அவசியமற்றதுதான். ஆனால் இந்த போக்கின் சமூக வேர்கள் என்ன என்பதை ஆராய்வது மிக அவசியமானது.

1. உண்மையில் சமூக விரோத லும்பன்களாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய நபர்கள், பெரும்பாலும் புலிகள் இயக்க உள்சுற்று மொழிகளில் இருந்தே உருவாக்கப்படுகின்றனர். அதாவது பயிற்சி, கட்டளைகள், அடங்கி நடக்க கோரும் மொழியாடல் அனைத்தும், புலிகளில் இதுவே இன்றைய மொழியாக உள்ளது. நீங்கள் கூர்மையாக அவதானித்தால், இது அமெரிக்கா இராணுவத்தின் அடக்குமுறை மொழியாடல் கூட. அமெரிக்கா இராணுவத்தினை காட்டும் ஆங்கில சினிமாவில் கூட இது தெளிவாக அப்பட்டமாக உள்ளது.

2.இன்று புலம்பெயர் நாடுகள் முதல் வடக்குகிழக்கு வரை அன்றாடம் நடக்கும் குழு மோதல்கள், வன்முறைகளின் ஊற்று முலமே இந்த வலதுசாரிய புலி அரசியலின் இருந்தே உருவாகின்றது. சாதாரணமாக நடக்கும் வெட்டும் கொத்தும் கூட, அவர்களின் வாழ்வியலில் பாழாகிப் போன ஒரு சின்ன விடையமாகவே உள்ளது. அத்துடன் அவர்களின் இரசனைக்குரிய ஒன்றாகவே இது மாறிப் போய்விட்டது.

3.எப்போதும் தூசண மொழியாடல் சார்ந்த வார்த்தைகள், பெண்களையே குறிப்பாக வன்முறைக்கு உள்ளாக்குகின்றது. இது இந்த ஆண்களின் அன்றாட பாலியல் சார்ந்த வாழ்வியல் நெருக்கடியும், உளவியல் பிரச்சனையும் கூட. அதாவது இது ஒரு ஆணாதிக்கம் சார்ந்த ஆண்களின் மனநோய் கூட. பெண்களை கற்பழித்தல் முதல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் அன்றாட நடைமுறைகளில் ஈடுபடுபவர்களே, இப்படியான மொழியை இலகுவாக கையாளமுடிகின்றது. மற்றொரு பக்கத்தில் அதை செய்ய விரும்பமுள்ளவர்களினதும், இந்தவாய்ப்பு கிடைக்காதவர்களின் கற்பனை வளமுள்ளவர்களின் விருப்பமாகவும், அவர்களின் வக்கிரமாகவும் உள்ளது.

4.இந்த மாதிரி தூசணத்தாலும், வன்முறையாலும் அணுகுவதன் மூலம், இந்தச் சமூகத்தில் எதை அவர்கள் சாதிக்க நினைக்கின்றனர். அறிவியல் ரீதியாக சமூகத்தை தெரிந்து கொள்ளவும், விவாத இணையங்களின் பக்கம் பெண்களை வருவதை இதன் மூலம் தடுக்கவும் விரும்புகின்றனர். மக்களின் சமூக அறிவை தெரிந்து கொள்ளமுடியாத வகையில், தமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இதன் மூலம் தெளிவாகவே சொல்ல முனைகின்றனர்.

5.இவர்கள் தமிழ் மக்களின் ஏகபோகத் தலைவர்களாக தம்மைத்தாம் கூறிக் கொள்கின்றனர். தமிழ் மக்களையே இழிவுபடுத்தி அடக்கியாளும் அதிகாரத்தை இவர்கள் கைப்பற்றினால், இந்த தூசணப் பேராசிரியர்கள் எதைத் தான் சமூகத்துக்கு தருவார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. தமிழீழத்தின் அதிகாரம் செலுத்தும் ஒரேயொரு தேசிய மொழி இதுவாகத்தான் இருக்கும்.

6.நான் புலிகளின் வதை முகாமில் இருந்துடன், அவர்களின் சித்திரவதைகளை சந்தித்தவன். அந்த வதை முகாமில் இருந்து தப்பியவன்; என்ற வகையில், புலிகளின் தேசிய மொழியை நன்கு அறிந்தவன். அங்கு புலிகளின் மொழியே தூசணமாகவே இருந்தன. (16.07.1987 ரயாகரன் புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்த வாழ்வை கைவிட்டு பகிரங்கமான 21.08.1987 அன்று பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை இணையத்தில் பார்க்க முடியும்.)

http://tamilcircle.net/general/general-34.htm

அவர்களின் உத்தியோகபூர்வமான கட்டளைகள் முதல் அனைத்தும் துசணமின்றி இருப்பதில்லை. அவர்களுக்கு இடையில் கூட இது விதிவிலக்காக இருப்பதில்லை. விசாரணை, தண்டணை முதல் அனைத்தும் இந்த மொழியூடாகவே இருந்தது.

7.சமூக முரண்பாடுகளையும், சமூக இடைவெளிகளையும் எதிர்கொண்டு தீர்க்க வக்கற்ற கோழைகள் இப்படி அணுகுவது இயல்பானது. சமூகம் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாத வரை, முரண்பாடுகளை தூசணத்தினினால்; தூற்றுவதே அவர்களுத் தெரிந்த ஒரேயொரு கொள்கையாகும். அல்லது போனால் மண்டையில் போடுவதன் மூலம் கோரிக்கை எழுவதை தடுக்க முனைகின்றனர்.

8.புலிகளுக்கு ஆதரவாக மிதவாதமாக கருத்துகளை முன்வைப்பவர்கள், தமது அணி சார்பாக இப்படி அனுகும் போது, மௌனமாக அதை அங்கீகரித்தபடி தான் தம்மையும் தமது மிதவாதக் கருத்தையும் வெளிப்படுத்த முனைகின்றனர். அவர்கள் இந்த மாதிரியான சமூக விரோத அணுகுமுறையை கண்டிப்பதில்லை. உண்மையில் இந்த இரு பிரிவும் நகமும் சதையுமாகத்தான் கூடி நிற்கின்றனர். இது முன்பு புளாட்டில் அரசியல் பிரிவும் இராணுவப் பிரிவும் ஒருங்கிணைத்து மக்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டதோ அப்படியே உள்ளது.

''கொடுமையின் சுமை அழுத்தும்போது
மனிதன் ஊமையாகிவிடுகின்றான்''

பின்பு அவன் பெயரில் ஊர்வலம், அறிக்கை, மொழி என அனைத்தையும் புணர்ந்து புனைந்து விடுகின்றனர். கருத்தை கருத்தாக எதிர்கொண்டு கருத்துக்கு பதிலளிக்க வக்கற்ற போன நிலையில், எட்டப்பன் என்றும் நாய் என்றும் கைக்கூலி என்றும் துற்றவே முடிகின்றது. யார் நாய், யார் எட்டப்பன் யார் கைக்கூலி என்பதை எல்லாம், வரலாற்றில் யாருக்கும் மிகச் சரியாக பொருத்தும் என்பதை, காலம் தெளிவாகவே உங்கள் போன்றவர்களுக்கு பதிலளிக்கும். இதை யாரும் தடுத்து நிறுத்தமடியாது. வினைவிதைத்தவன் தான் வினையைத் தான் அறுக்க முடியும்.

பேரினவாதத்தின் சமூக பொருளாதார உள்ளடகத்தை புலிகள் விமர்சிப்பதில்லை. அதில் அவர்களுக்கு இடையில் நீக்கலற்ற ஒரு ஒற்றுமை. சந்திரிக்கா என்ற சிங்கள பேரினவாதியினை நான் விமர்சித்துள்ள அளவுக்கு, புலிகள் கூட இதுவரை விமர்சிக்கவில்லை. இன்றைய சிங்கள அனைத்துக் கட்சிகளையும், நாம் தெளிவாகவே சிங்கள பேரினவாதிகளாகவே விமர்சித்து வந்துள்ளோம்;, விமர்சித்து வருகின்றோம். எனது கட்டுரையின் பெரும்பகுதி பேரினவாதத்துக்கு எதிராகவே எழுதப்பட்டுள்ளது. நாங்கள் பேரினவாதத்தை மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் கூட சேர்த்தே தான் விமர்சிக்கின்றோம்.
இதை மூடிமறைக்க தூசணத்தில் திட்டி தீர்ப்பதுதான் தமிழ்மொழி வளர்ச்சி என்றால், அதைத் தான் தமிழ் தேசியத் தலைவர் தமிழீழத்தின் மொழியாக்க உள்ளார் என்றால், அதை தராளமாக விரிவாகச் செய்யுங்கள். தூசணம் என்பது பெண்களை பாலியல் ரீதியாக இழிவாக்கி கொச்சைப்படுத்துவதே. இப்படிக் கொச்சைப்படுத்தியா விடுதலைப்புலிகள் பெண்களை அணிதிரட்டினார்கள். தமிழீழச் சட்டம் இப்படி கூறுவதை தண்டணைக்குரியதாக சரியாகவே வரையறுக்கின்றது. ஆனால் அந்த தேசியத்தின் பெயரில் நீங்கள் கூறுவது முரணாது. புலிகள் சட்டங்கள் புலிக்கு பொருந்தது என்பதைத் தான், மீண்டும் இவை நிறுவுகின்றன.

தமிழ்மொழியை இப்படித் தான் வளர்தெடுக்க வேண்டும் என்று, தமிழ் தேசியம் வழிகாட்டுகின்றதா! இதைத்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனியாத தமிழீழத் தாகம் என்கின்றாரா! இந்த தேசிய மொழிக்காகத்தான இவ்வளவு தியாகம் செய்து போராடுகின்றனர்.!

நாங்கள் அப்படி ஒரு நாளும் கருதவில்லை. நீங்கள் அப்படிக் கருதினால், அதை நாங்கள் மொழித் துரோகம் என்போம். தமிழன் தமிழில் கதைப்பதை மறுக்கும் தேசியத்தை, எப்படி மௌனமாக அங்கிகாரிக்க முடியும். துசணத்தால் கதைக்கும் தமிழன் நாடு எங்கே உள்ளது. உங்கள் அப்பா அம்மா துசணத்தையா தமிழ் மொழியாக உங்களுக்கு பாலுட்டி தாலாட்டடில் கற்றுத் தந்தனர் அல்லது உங்கள் தேசிய தலைவர்கள் அப்படிக் கற்றுத்தந்தனரா?. உங்கள் மனைவி, அக்கா, தங்கச்சி முதல் அப்பா அம்மாவுடன் தூசணத்தால் தான் கதைப்பீர்களோ?

மனிதன் சார்ந்த சமூக உறவுகள் சிதைந்து போகின்றன. இதற்கு பதிலாக பண உறவுகள் முதன்மை அடைகின்றன. அறிவு, முதுமை, சமூக ஆற்றல், அனுபவம், பெரியவர்கள் என்ற வடிவில் நீடித்த சமூக அந்தஸ்தும், சமூக அறிவு சாhந்த பண்பும் மறுக்கப்படுகின்றது. மாறாக பணம் சார்ந்த அந்தஸ்தும், தனிமனித வழிபாட்டு பண்பும் அறிவின் சூனியத்தில் திணிக்கப்படுகின்றது. சமூக கண்ணோட்டம் சிதைந்து அதனிடத்தில் சுயநலம் முதன்மை பெறுகின்றது. லும்பன் வாழ்க்கை முறையுடன் கூடிய லும்பன் பண்பை, பணப் பண்பாட்டையும் தேசிய கூறாக்கி அதையே சமூகப்பண்பாடாக்குகின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மொத்த விளைவுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

பல பத்தாயிரம் உயிர் தியாகங்களுடன் தொடங்கிய தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்குவது பண்பாட்டு கலாச்சார சிதைவைத்தான். ஒரு இனத்தின் சமூக அடிப்படையையே அழிக்கின்றது. இதுவே பாரிய உளவியல் சமூகச் சிக்கலை உருவாக்குகின்றது. தற்கொலைகளையும், மனநோய்களையும், குடும்பச் சிதைவுகளையும், சமூகப் பிளவுகளையும், சமூக அறியாமையும் நிரந்தரமாக்குகின்றது. தமிழ் சமூகம் தமது சொந்த அறியாமையில் சூனியத்தை நோக்கி ஒடுகின்றது. இதில் நாம் கொடூரமாகவே குதறப்படலாம் சிதைக்கப்படலாம், ஆனால் மனிதனின் சமூகக் கூறு வரலாற்றில் இதை நிரந்தரமாக அனுமதிப்பதில்லை.