தமிழ் அரங்கம்

Saturday, August 23, 2008

சட்டபூர்வமாகி வரும் கட்டணக் கொள்ளை


கல்வி வியாபாரிகளோ இந்தக் கட்டண உயர்வு தாங்கள் எதிர்பார்த்ததை விட 25,000 ருபாய் குறைவானது என்று ஒப்பாரி வைக்கின்றனர். கட்டண உயர்வு குறித்து ஆராய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் கமிட்டி, கட்டணத்தை உயர்த்துவது குறித்து கல்வியாளர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்டு, அதன்படி நடந்ததாகக் கூறுகிறார் பொன்முடி. இந்தக் கமிட்டியிடம் எந்தப் பொதுமக்கள், கல்வியாளர்கள் கட்டணத்தை உயர்த்தக் கோரினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

கடந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ரூ.32,500 கட்டணமாகப் பெற்று பெற்று கல்வி வியாபாரிகள் சம்பாதித்தது மட்டும் 180 கோடி ரூபாய் என்கிறார்கள். இது வெறுமனே கணக்குக் காட்ட மட்டுமே. ஆனால் உண்மையில் ஒரு சீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டாய நன்கொடையாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை கல்விக் கட்டணமாகவும் வசூலிக்கிறார்கள்.

கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூச்சலிடவே, சென்ற ஆண்டு 18 கல்லூரிகளிலும் அதன் நிர்வாகிகளின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசு. தனது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளிடம், ''என்ன, இப்போது வந்திருக்கிறீர்கள், அட்மிசன் டயத்தில் வந்திருந்தால் இன்னும் அதிகமாகக் கிடைத்திருக்குமே!'' என்று ஜேப்பியார் நக்கலாகக் கூறினாராம். அந்தச் சோதனைக்குப் பின்னர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

Friday, August 22, 2008

வன்னி மக்களை யுத்த இலக்கில் வைத்து அழிப்பதன் மூலம், யுத்தத்தை வெல்ல முனையும் புலியின் யுத்த தந்திரம்

உலகில் புலிகள் மட்டும் தான் இதை செய்யும் அளவுக்கு, மனவக்கிரத்தைக் கொண்டவர்கள். சொந்த மக்களையே யுத்த முனையில் நிறுத்தி, அவர்களை தமக்காக சண்டை செய் என்று நிர்ப்பந்திக்கின்ற புலி அரசியல் தான், புலிகள் சொல்லும் மக்கள் யுத்தம். மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பொதுவான அழித்தொழிப்பில் மக்களைக் குறிப்பான இலக்காக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முனையும் பிரச்சார யுத்தம்.

இப்படி புலிகள் தமது இறுதிக் காலத்தை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாது திணறுகின்றனர். கண்மூடித்தனமான பலாத்காரமான நடிவடிக்கைகள் ஊடாக, தமது சொந்த அழிவை மேலும் துரிதப்படுத்துகின்றனர். இப்படி மக்களை யுத்தமுனையில் நிறுத்தி, மக்கள் பயிற்சி, முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி என்று கூறிக்கொண்டு, வீங்கி வெம்பிய தமது சொந்தப் படங்களை வெளியிடுகின்றனர்.

அன்று அமைதி-சமாதானம் ஒப்பந்தத்தை மீற, யாழ்குடாவில் மக்கள் படையின் பெயரில் வீங்கி வெம்பிய புலிகள் நடத்திய தாக்குதல் தான், இன்று புலியின் சொந்த அழிவு வரை வந்து நிற்கின்றது. அந்த மக்கள் படையைச் சேர்ந்த புலிகள் தான், பெருமளவில் காணாமல் போனவர்களும, கொல்லப்பட்டவர்களுமாவர். இதனால் புலிகள் தாம் அல்லாத பிரதேசங்களில் காணாமல் போய்விட்டனர்............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, August 21, 2008

அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நாறிப்போனது சி.பி.எம்.இன் கோஷ்டி சண்டை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதில் யார் யாருக்கோ நெருக்கடிகள் இருந்தாலும், உண்மையான நெருக்கடி சி.பி.எம். கட்சிக்குள்தான் தற்போது மையம் கொண்டுள்ளது. அக்கட்சியின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, நாடாளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தின் மூலம், அக்கட்சியில் நிலவும் கோஷ்டி சண்டையும் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று திரும்பப் பெற்றன. அதையொட்டி அரசுத் தலைவரிடம் கொடுத்த பட்டியலில் சி.பி.எம். கட்சி எம்.பி.க்களின் வரிசையில் நாடா ளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதையறிந்த சோமநாத் பொங்கியெழுந்து விட்டார். ""அவைத் தலைவரான நான் எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன்; எனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்த்தது தவறு'' என்று சீறினார். மற்றவர்களால் ""மாண்புமிகு சபாநாயகர்'' என்று அழைக்கப்படும் தன் பெயரை ""தோழர்'' என்று பட்டியலில் சேர்த்து கட்சி தன்னை இழிவுபடுத்தியதைக் கண்டு சோமநாத்துக்கு மகாகோபமாம்!

Wednesday, August 20, 2008

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள் : புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா, ஐ.பி. உள்ளிட்ட அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் காவிமயமாகியிருப்பதை மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திக் காட்டி விட்டன. இக்குண்டு வெடிப்புகள் நடந்த மறுநிமிடமே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இதொய்பா, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத் அல்ஜமாத்இஇஸ்லாம், இந்திய முஜாஹிதீன் உள்ளிட்ட சில முசுலீம் தீவிரவாத அமைப்புகள் மீது பழி போடப்பட்டது. குண்டு வைத்த சதிகாரர்கள் என விளம்பரப்படுத்தப்பட்டு, ஓரிரு முசுலீம்களின் உருவப் படங்கள் வெளியிடப்பட்டன. இராசஸ்தான் மாநில போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 500 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நடவடிக்கைகளின் மூலம், குண்டு வெடிப்போடு தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாகிவிட்டது; இனி வழக்கு நடத்தி, அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியது தான் பாக்கி என்கிற மாதிரியான பிம்பம் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, இந்துக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கு சம்பந்தமான புலனாய்வுகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன என்பதும்; போலீசார் தங்களின் தோல்வியை மறைத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே, கைது எண்ணிக்கையைக் காட்டியுள்ளனர் என்பதும் தற்பொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இக்குண்டு வெடிப்பை நடத்திய சதிகாரர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட உருவப்படங்கள் தற்பொழுது போலீசாராலேயே கைகழுவப்பட்டு விட்டன; ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வகை வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் கூறியதை, அவர்களே இப்பொழுது மறுத்துள்ளனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாகக் ... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 19, 2008

வன்னி மக்களின் துயரமும், தமிழ் மக்களின் கையாலாகாத்தனமும்

அனைத்து சுயாதீனத்தையும் இழந்துவிட்ட தமிழ் இனம், புலியினதும் அரசினதும் கோரப்பற்களுக்கு இடையில் சிக்கி அழிகின்றது. அகதியானலும் சரி, அமைதியின் பெயரில் அரசு புலி என்று யார் ஆண்டாலும் சரி, தமிழ் மக்கள் மலடாக்கப்பட்டு ஊமையாக்கப்பட்டுள்ளனர். எங்கும் எல்லையற்ற மனித அவலம்.

மனிதம் சந்திக்கின்ற சொந்த துயரத்தை யாரும் பேச முடியாது. தேசியத்தின் பெயரில், பயங்கரவாதத்தின் பெயரில், எல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றது.

இன்று பேரினவாதம் நடத்தும் இனவழிப்பு யுத்தமோ, புலிகளின் பாசிச அரசியலின் மேல் அரங்கேற்றப்படுகின்றது. புலிகளும் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள பாரிய முரண்பாட்டை பயன்படுத்தியே, புலிகள் ஒழித்துக்கட்டப்படுகின்றனர். மறுபக்கத்தில் இதன் மூலம் தமிழ் இனத்தின் சுயநிர்ணயம் என்ற கோரிக்கைக்கு அடிப்படையாக இருந்த, சமூக பொருளாதார அடிக்கட்டுமானங்கள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தலைமை முதல், அதன் சமூக பொருளாதார கூறுகளை எல்லாம் அழித்துவிட்டனர்.

புலிகள் அழித்ததை ஆதாரமாகக் கொண்டு, பேரினவாதம் அதன் சமூகக் கூறுகளையே இல்லாதாக்கி வருகின்றது. பேரினவாதத்துக்கு தொண்டு செய்யும் கைக் கூலித்தனம் தான் .....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, August 18, 2008

வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

1. புலிகள் இதை மறுக்கின்றனர். புலிகள் இன்னமும் கொண்டுள்ள இராணுவபலம், உளவு அமைப்பின் திறன், உதிரியான பாசிச லும்பன்களை இன்னமும் ஒருங்கிணைத்துள்ள ஸ்தாபன வடிவம்,.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 17, 2008

குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?


அதாவது குழந்தை பணம் சம்பாதிப்பதை வழிகாட்டுவதா, பெற்றோரின் கடமை? இப்படித்தான் பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆகவே ஆட்டுக் கிடாயை வளர்க்கும் மனநிலையில் தான், குழந்தையை வளர்க்கின்றனர். மொழி மற்றும் உடல் வன்முறை மூலம் இதைச் செய்யமுனைகின்றனர். இப்படி இணக்கமற்ற குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.

குழந்தையை இணக்கமான வகையில், அறிவியல் பூர்வமாக இணங்கி நிற்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும், என்று பெற்றோர் கற்பனை கூட செய்வதில்லை. ஆனால் அதையே, குழந்தை தம்முடனான சமூக உறவில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். முரணிலையான அணுகுமுறையுடன் கூடிய பெற்றோரின் செயல்பாடுகள். அதாவது சமூகமாக குழந்தை தம்முடன் வாழவேண்டும் என்று விரும்பும் சுயநலம், தாம் அல்லாத மற்றவருடன் சமூகத்துக்கு எதிராக சுயநலத்துடன் வாழத்தூண்டும் நடைமுறையைக் கையாளுகின்றனர்.

பெற்றோர் குழந்தை வளர்ப்பில் சரி, குழந்தை பெற்றோர் பராமரிப்பில் சரி, பரஸ்பரம் இணங்கிய அணுகுமுறை தான், சுயநலமல்லாத சரியான சமூக மனித ....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்