தமிழ் அரங்கம்

Showing posts with label விடுதலைப் போராட்டம். Show all posts
Showing posts with label விடுதலைப் போராட்டம். Show all posts

Monday, August 25, 2008

சீரழிந்து விட்ட விடுதலைப் போராட்டம்: எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு என்ன நடக்கும்?

இது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.

இப்படி புலி அழிப்புக்கு முன்னும் பின்னும், அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தான் இயங்கின. இன்று பலரும் கருதுவது போல், புலிகள் மட்டும் இதைச் செய்யவில்லை. தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைக்கான போராட்டம், அனைவராலும் சிதைக்கப்பட்டது. இந்த நிலையில் இதை மொத்தமாக செய்து முடிக்கும் வகையில், புலிகளின் பாசிச சர்வாதிகாரம் அனைத்தையும் தன்வசப்படுத்தி அழித்தது.

அது தமிழ் மக்களின் பெருமூச்சுகளுக்குக் கூட, தனது படுகொலை அரசியல் மூலம் பதிலளித்தது. தமிழ் இனத்தில் எஞ்சி இருந்த சமூகக் கூறுகள் அனைத்தையும் நலமடித்தது. தமிழ் இனம் சொல்லி அழக் கூட நாதியற்ற நிலைக்கு, அவர்களை அரசியல் அனாதையாக்கி விட்டுள்ளளர்.

மாபியாத்தனமும், பாசிசமும் தேசியமாக, தமிழ் இனம் வரைமுறையின்றி எல்லா வடிவங்களிலும் சுரண்டப்பட்டது. சொத்து முதல் கருத்து வரை, தமிழ்........ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்