தமிழ் அரங்கம்

Saturday, July 4, 2009

சிங்களப் பேரினவாத நாசி முகாமில் என்ன நடக்கின்றது!? வன்னி மண்ணுக்கு என்ன நடக்கப் போகின்றது!?

வன்னி நிலம், வன்னி நீர், வன்னி மக்கள் என்று அனைத்தையும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பேரினவாத அரசு விற்று வருகின்றது. வன்னியின் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில, இவை அரங்கேறுகின்றது. மக்களின் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமான நடமாட்டம் என அனைத்தும், இனவாதிகளுடன் சேர்ந்து மண்ணை ஆக்கிரமிக்கும் பன்நாட்டு நிறுவனங்களால் "அபிவிருத்தி" என்ற பெயரில் பறிக்கும் கூட்டுச்சதி இங்கு அரங்கேறுகின்றது.

வன்னி இனி, வன்னி மக்களுக்கானதல்ல, அவை பன்நாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானதாகின்றது. இதற்குப் பெயர் தான் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்".

இதற்காக மக்களை வதைக்கும் ஒரு நாசிய இன முகாம்களில், தமிழ் மக்களை அடைத்து வைத்துள்ளனர். மிருகங்களை பழக்கும் அதே உத்தியை, இங்கு கையாளுகின்றனர். கையேந்த வைத்து, பண்ணை அடிமைகளாக, நாயிலும் கீழாக மக்க
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு

எம் மக்கள் இடரிலும் துயரிலும்
இதயம் வெடிக்கவில்லை ஈரமெழவில்லை
இடித்துரைக்கும் ஓர்மம் எழவில்லை
கோரமெதிர்த்து கொடும்பகை வீழ்த்தும் போராய் எழுக
கலையும் இலக்கியமும் மக்களிற்கானது…...இல்லையென்பாயெனின்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 3, 2009

அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை.

ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.

மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன், உருத்திரகுமார், வழுதி என்று அனைவரும் சேர்ந்து நடத்திய இந்த துரோகத்தை, தியாகமாக காட்;ட முனைகின்றனர். இதையே சமூகத்தின் விளைநிலமாக்க முனைகின்றனர்.

வேடிக்கை என்னவென்றால் யா....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 2, 2009

மைக்கல் ஜாக்சன் என்ற அமெரிக்கத் தொழுநோயை, ஏகாதிபத்திய அமெரிக்கா உலகுக்கும் ஏற்றுமதியாக்கியது

உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.

இதன் மூலம் உழைக்கும் மனித வர்க்கத்தின் போராடும் ஆற்றல் சீரழிக்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன், அதை தன் உடலுக்குள் அவன் வடியவிட்டான். அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் மக்கள் நலனுக்காக அல்லாது, மக்களை சுரண்டிச் சூறையாடும் வண்ணம் அவைகளை தெரிந்தெடுத்து முன்னுக்குத் தள்ளியது. இக்காலத்தில் தான் பொப் மாலி மக்கள் பற்றி பாடிய பாடல்கள் புகழ்பெற்று இருந்தது. இது ஏகாதிபத்திய நலனுக்கு எதிரானதாக இருந்தது.

இந்த இடத்தில் தான் மைக்கேல் ஜாக்சனை ஏகாதிபத்தியங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்;தது. மக்களுக்காகவல்லாத பாடல்க....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 1, 2009

வழுதியும் புரளியும்

தூசுதட்டி எழும் துகள்கள் நாசிக்குள் ஏறி
முச்சுத்திணறல் வருகி;றதாம்
அடித்துவீசும் காற்ரே அடங்கிப்போ
வானில் கலக்கட்டும்
வருங்காலத்தலைமுறையின் சுவாசத்துள் படியட்டும்
முப்புதாயிரத்துடன் முடிவதாயில்லை
மெல்லக்கொல்லும் வழிமுறை
புதியஅண்ணன்மார் வரவுக்காய்
மீண்டும் புரளிகள.......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.

இலங்கையில் யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானமும், பண்பாட்டுச் சிதைவைத் தமிழ்ப் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளுமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்தப் பணம் உருவாக்கிய ஆடம்பரம், அந்தஸ்த்து, திமிருடன் கூடிய வக்கிரம், சிறுபான்மையினரின் பண்பாக இருந்த போதும், அவர்களே சமூகத்தின் முழுமையையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.

இந்தப் பண்பாட்டுக் கலச்சாரச் சிதைவு தமிழ் பிரதேசங்கள் எங்கும், இலங்கைத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் பொதுவாக நடக்கின்றது. இந்தச் சிதைவு பொருளாதார ரீதியான சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி அதிகரிப்பால் தேசியமயமாகின்றது. இந்த சமூக ஏற்றத் தாழ்வு பொதுவாகவே இரண்டு தளங்களில் பிரதானமாக நடக்கின்றது.

இதுவும் மூன்று வகையை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, June 30, 2009

இன ஐக்கியத்துக்குப் பதில், இன ஆக்கிரப்பை முன்னிறுத்தும் "ஜனநாயக" நாய்கள்

சிங்கள இராணுவ இயந்திரம் மூலமான பௌத்த ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் நியாயப்படுத்துகின்றனர், தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய மரமண்டைகள்.

இப்படி இன்று தமிழ்ப்பகுதியில் அரசால் கட்டப்படும் பௌத்த கோயில்கள், சிங்கள பேரினவாத மேலாதிக்கத்தின் அடையாளங்கள். இனவழிப்பு சிங்கள இராணுவ இயந்திரத்தைக்கொண்டு, மக்களின்; விருப்புக்கு மாறாக நிர்மாணிக்கப்படும் இனவாத அடையாளங்கள். இரண்டு மக்களும் சேர்ந்து இதைக் கட்டவில்லை. இனத்தை அழித்த சிங்கள இராணுவ இயந்திரமே, இதைச் செய்கின்றது.

இதன் மேலான பொது விவாதம் மீது, தமக்கு மட்டும் "ஜனநாயகம்' கோரிய கூட்டம் ஏன் கட்டக் கூடாது என்கின்றது. சிங்களப் பகுதியில் பௌத்தமல்லாத மதங்களில் கோயில்கள் இல்லையா என்கின்றது!? சிங்கள் குடியேற்றத்தைக் கூட தமிழ்ப் பகுதியில் ஏன் நடத்தக் கூடாது என்கின்றது. சிங்களப் பகுதியில் தமிழ்மக்கள் வாழவில்லையா என்கின்றது!?

அரை லூசுத்துமான "ஜனநாயகம்", தனக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரியது. இது மகிந்தாவின் பாசிசத்தின் பின், ஓடி நக்குகின்றது. இந்த கூட்ட...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 29, 2009

இனக் (புலி) களையெடுப்பை நியாயப்படுத்தும் மூதேவிகள்

ஜனநாயக வேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.

புலிப் பாசிசம் இதே போன்றே 30 வருடமாக தமிழ் மக்கள் மத்தியில் களையெடுப்பை நடத்திய போது, நாங்கள் அதற்கு எதிராகப் போராடினோம். அரசு இன்று அதே போன்ற களையெடுப்பையே நடத்துகின்றது. அன்று எந்த அடிப்படையில் எதிர்த்தோமோ, அதே அடிப்படையில் இன்றும் நாம் மட்டும் எதிர்க்கிறோம். அன்று தேசியத்தின் பெயரில் புலிகள் இதைச் செய்தனர். இன்று "ஜனநாயக"த்தின் பெயரில் அரசு இதைச் செய்கின்றது. இப்படி பாசிசத்தின் இரு வேறு முகங்கள். அதே போல் "தேசியம், ஜனநாயகம்" என்று, பாசிசம் முன்னெடுக்கும் களையெடுப்பை, மனிதவிடுதலையாக காட்டி கொஞ்சும் பச்சோந்திகள் கூட்டம்.

யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்ற தர்க்கத்தை முன்வைத்து, இன்று "ஜனநாயகம்" பேசும் மூன்றாம்தரப் பேர்வழிகள் நியாயப்படுத்துகின்றனர். இப்படி அரசு சார்பாக இயங்கும் வானொலிகள், தொலைக்காட்சிகள், இந்த தர்க்கத்.....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, June 28, 2009

தம் பெண்களைக் கூட்டிக் கொடுத்து வாழக் கூடியவர்கள்தான், மகிந்தாவின் பாசிசத்தை ஆதரிக்கின்றனர்.

மகிந்தாவின் பாசிசம் மக்களுக்கானதே என்று வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், தவிர்க்க முடியாதவை என்கின்றனர். இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், புலியின் கடந்த இதற்கு ஒப்பிட்டு நியாயம் செய்கின்றனர். நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ, இதை ஏற்றேயாக வேண்டும் என்கின்றனர்.

இப்படிப்பட்ட இவர்கள் நாளை தாம் வாழ வழியில்லை என்றால் என்ன செய்வார்கள்? தம் பெண்டுபிள்ளைகளை விபச்சாரத்துக்கு விட்டு வாழக் கூடியவர்கள். இவர்களின் வாழ்வு சார்ந்த சிந்தனை முன், வேறு மாற்று வழி எதுவும் கிடையாது. தமிழ்மக்கள் பற்றி இவர்கள் வைக்கும் நிலைப்பாடு சார்ந்த இந்த நிபந்தனை, பெண்டுபிள்ளைகளை விபச்சாரத்துக்கு விடுவதையே கோரும். இந்த வகையில் தான் இன்று, தமிழ்மக்களை அணுகுகின்றனர். இவர்கள் வைக்கின்ற தீர்வுகள், நியாயங்கள், தர்க்கங்கள் என்று அனைத்தும், இதற்குள் அடங்கிக் கிடக்கின்றது. "கவுரவமான" பூர்சுவா வர்க்க நிலையில் வாழ்ந்தபடி, மக்களுக்கான எந்த அரசியலையும் வைக்க வக்கற்றவர்கள். மகிந்த பாசிசத்தின் நன்மைகள் பற்றியும், அதன் தவிர்க்க முடியாத தன்மை பற்றியும் உபதேசிக்கின்றனர். இதற்கு இணங்கி வாழ் என்று, மற்றவனுக்கு உபதேசம் செய்யும் மாமாக்கள தான் இவர்கள்.

மக்களை ஒடுக்கியும், அவர்களை சுரண்டியும், அவர்கள் (சுய) உரிமைகளை மறுத்தும் நிற்கும் பாசிச அரசை எதிர்த்தால், இது புலியை ஆதரிப்பதாகவும் புலியை மீள கொண்டு வரமுனைவதாகவும், மீண்டும் நாட்டில் அமைதியிழக்க செய்யும் முயற்சி......
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நேசசக்திகளை இணைக்காவரை தேசப்போர் வெல்லாது

சுத்தியலும் அரிவாழும் இலட்சினை
சோமவன்ச வார்த்தையெல்லாம் இனவெறி
கழனியாற்ரில் மிதந்ததெல்லாம் மறந்தாய்பதவிக்
கதிரைக்காய் பறந்தின்று அலைந்தாய்
பச்சைத்துரோகி நீ
கத்திக்குளறாதே ராஜபக்ச தமிழருக்கு ஒன்றும்
கொட்டிக்கொடுக்கான்
வெட்டிப்புடுங்கான் தெரியுமுனக்கு
வேசத்தைக்கலைத்திறங்கு தேசத்தில் மக்களிடம்
இல்லையெனில் விமல் வீரவன்ச வளியில்
போயுறங்கு ராஜபக்ச மடியில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம்

தமிழீழத்தின் பெயரில் நடந்தேறிய வலதுசாரிய பாசிசப் படுகொலைகளை, சாதியப் படுகொலையாக திரித்து சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல் தான் 'மறைவில் ஐந்து முகங்கள்". தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர் மீது நடத்துகின்ற சாதிப் படுகொலைகளே தமிழீழத்தில் நடப்பதாக திரிக்கும் உயர்சாதிய வெறியர்கள், மனுதர்ம அடிப்படையில் நீதியைக் கோருகின்றனர்.

ஒரு வரலாற்று திரிபு, ஒரு அரசியல் திரிபாக இங்கு புகுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய வலதுசாரிய பிற்போக்கு அரசியலை ஆராய, விமர்சிக்க மறுக்கின்ற போது அது சாதியமாக திரிபுறுகின்றது. ஏன் இந்த கொலைகளை தமிழீழத்தின் பெயரில் செய்கின்றனர் என்பதையும், இதன் பின்னுள்ள வர்க்க அரசியலைக் கூட இந்த நாவல் திரித்து மூடிமறைக்க முனைகின்றது. உண்மையில் தமிழ்தேசியம் தமிழீழப் பாசிசமாக உருவானபோது, வலதுசாரி அரசியல் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகின்றது. தனது சொந்த வலதுசாரிய பிற்போக்கு அரசியலை பாதுகாக்க, கொலைகார அரசியல் வரலாற்றையே இந்த நாவல் தனக்கு ஏற்ப திரிக்கின்றது. தனது உயர்சாதிய மனுதர்மத்தை முன்னிலைப்படுத்தி, நடப்பது உயர் சாதியப் படுகொலைகளே என்று இந்த நாவல் தர்க்கித்து சித்தரிக்க முனைகின்றது.

உண்மையில் 'மறைவில் ஜந்து முகங்கள்" என்ற நாவலின் அரசியலே, சாதியம் தான். ஆனால் இயக்க படுகொலைகளைப் பற்றி இந்த நாவல் பேசுவதால்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்