தமிழ் அரங்கம்

Saturday, November 21, 2009

ம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர் காணலை இங்கே நீங்கள் ஒலிவடிவில் கேட்கலாம்.

ம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர் காணலை இங்கே நீங்கள் ஒலிவடிவில் கேட்கலாம்.


பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது


புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது.

இதற்குள் சிங்களப்.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, November 20, 2009

புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும்

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

புலித் தலைமை சரணடைந்ததும், அவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை. புலித்தலைமை தன்னை பாதுகாத்துக்கொள்ள, இறுதியாக அது தேர்ந்தெடுத்தது சரணடைவை. அதற்கு அமையவே, இதில் மூன்றாம் தரப்பும் சம்பந்தப்பட்டது உண்மை. இந்தப் பின்னணியில் தான், இந்தப் படுகொலை அரங்கேறியது.

இவை அனைத்தும் நடந்திருந்தும், ஏன், எதற்காக இதை மக்களுக்கு தெரியாத வண்ணம் அனைவரும் திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர்? அங்கு என்ன நடந்தது? அவை எப்படி நடந்தது? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? ஏன் இதை மக்களுக்கு மூடி மறைக்கின்றனர்?

மக்களை மந்தையாக.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 19, 2009

எப்போதும் மக்களின் எதிரியாகவே கூத்தாடிய கூட்டமைப்பு

வலதுசாரி தமிழ் அரசியல் என்பது, யார் அதிகாரத்தில் உள்ளனரோ, அவர்களின் பாதம் தொழுது மக்களின் முதுகில் குத்துவதுதான். அன்று புலிப் பாசிசத்தினை தவழ்ந்து நக்கியவர்கள், இன்று மகிந்தாவுக்கு ஆரத்தி எடுத்து நக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த வலதுசாரிய பிழைப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு. தமிழ் காங்கிரஸ்சில் இருந்த சிலர், தமிழரசுக் கட்சியாகினர். மீண்டும் தமிழ் காங்கிரஸ்; உள்ளடங்க, கூட்டணியாகினர். புலியின் பின் தொழுது எழுவதற்காய் கூட்டமைப்பாக்கினர். இவர்கள் தங்கள் இந்த வரலாறு நெடுகிலும், மக்களுடன் மக்களுக்காக நின்றது கிடையாது. சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாக, வலதுசாரிய வக்கிரத்துடன் மக்களின் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள். இதற்கமையவே தமிழ் மக்களை குறுகிய இனவாதத்துடன் இன ரீதியாக பிளந்தனர். அதையே தமிழ் மக்களின் விடிவிற்கான அரசியலாகவும் காட்டினர்.

இப்படி பேரினவாதத்தின் துணையுடன், தமிழ் குறுந் தேசியத்தை விதைத்தனர். குறுகிய இனவாதத்தை தமிழ் தேசியம் என்றனர். இப்படி தங்கள் குறுகிய அரசியல் பிழைப்பு வாதத்தைத் தாண்டி, தமிழ் மக்களை இவர்கள் வழிகாட்டவில்லை. இதனால் இந்த மிதவாத பிழைப்புவாதம் நெருக்கடிக்குள்ளானது. இதன் பின் இருந்த இளைஞர்கள், தங்கள் தலைமைகளின் பிழைப்புவாதத்தையே கேள்விக்குள்ளாக்கினர்.

இவர்களின் மிதவாதத்.... ..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.

தமிழ் மக்கள் முன் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம், இயல்பாக எம்முன் ஒரு இனந்தெரியாத சூனியத்தை உருவாக்குகின்றது. எங்கும் இனந்தெரியாத சோகம், அவலமாகின்றது. நடந்ததை நம்பாமல் இருக்க முனைகின்றது. மக்கள் நடைப்பிணமாக, அஞ்சலி கூட செலுத்த முடியாது, அவர்கள் அரசியல் அனாதையாகி நிற்கின்றனர்.

இந்த நிலையில் படுகொலையுடன் கூடிய இந்தச் சதி என்பது உண்மையானது. யுத்த முனையில் இருக்காத மூன்றாம் தரப்புகளின் கூட்டுச்சதி தான், புலித் தலைவர்களின் மொத்த மரணம். இந்த மரணத்தின் பின், எதிர்பாராதா வண்ணம் வெளிவரும் காட்சிகள். எப்படி இது நடந்தது, என்ற அதிர்ச்சி. இதனால் இறந்தது 'எங்கள்" தலைவரல்ல என்று கூறுமளவுக்கு, நம்ப முடியாத அதிர்ச்சிகள்.

அப்படியாயின்......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 18, 2009

குண்டுகளால் பொட்டு வைத்ததால் பொட்டம்மானான கொலைகாரனின் பெயரில் மாவீரர் உரையாம்!?

தமிழ் மக்களை "தேசியத்தின்" பெயரில் மொட்டை அடித்த கும்பல், மக்களின் காதுக்கு பூ வைத்து தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவ முனைகின்றது. பேரினவாதம் தன்னிடம் சரணடைந்த பிரபாகரனைக் கொன்று, அவனுக்கு கோமணத்தைக் கட்டி அவமானப்படுத்திக் காட்டியது. புலத்துப் புலிகள் தமிழ் மக்களிடம் எஞ்சிய கோமணத்தையும், அவன் அறியாமலே எப்படியும் உருவலாம் என்று எண்ணுகின்றது.

புலத்து புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்க, பிரபாகரனை உயிருடன் இருப்பதாக காட்ட முனைந்தது. ஆனால் பிணத்துக்கு உயிரூட்ட முடியாத நிலையில், தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பவைக்க முடியவில்லை. கொஞ்சப் புலிகள் மட்டும், அப்படி நம்பி பிதற்றித் திரிகின்றனர். தலைவரை முன்னிறுத்தி, மக்களை ஏமாற்றி புலி வியாபாரத்தை இனியும் செய்;ய முடியாதநிலை. இதனால் காணாமல் போனவராக உள்ள பொட்டரைக் காட்டி, தமிழ் மக்களின் கோமணத்தை உருவ முடியும் என்று புலத்து புலிகள் கணக்கு போடுகின்றனர்.

கைது செய்தவர்களின் நெற்றி பொட்டில் சுட்டுக் கொல்வதால், "பொட்டர்" என்ற பெயர் பெற்று தலைவனானவன் தான் பொட்டன். இந்தக்...... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும், அமெரிக்காவின் நப்பாசையும்!

தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது; இலவச ஆரம்பக் கல்வி அளிப்பது; போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சில சில்லறை சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க முயன்றதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிரடி இராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்ட ""அதிசயத்தை'' நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஹோண்டு ராஸ் நாட்டில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த அதிரடி இராணுவப் புரட்சி அப்படிபட்ட அதிசய நிகழ்வாகும்.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா, ஈக்வடார், எல்சல்வடார் ஆகிய நாடுகளில் 1980களில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெ ற்று வந்தபொழுது, அத்தேசிய விடுதலைப் போராட்டங்களைச் சீர் குலைக்கவும், ஒடுக்கவும் ஹோண்டு ராஸ்தான் அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்பட்டு வந்தது. குறிப்பாக, நிகரகுவாவில் அமெரிக்கா வுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வந்த சாண்டினிஸ்டா போராளிகளை ஒழிப்பதற்கான மையமாக ஹோண்டுராஸை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. அன்று தொடங்கி இன்று வரை ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அதன் தளபதிகளுக்கும் அமெரிக்காதான் பயிற்சியும் நிதியுதவியும் அளித்து வருகிறது. ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அந்நாட்டைச் சேர்ந்த முதலாளிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இருந்து வரும் பிணைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அந் நாட்டு அரசியல் சாசனச் சட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப் பட்ட பின்னணி கொண்ட நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் எந்த இலட்சணத்தில் செயல்பட்டிருக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை.

ஹோண்டுராஸில்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 17, 2009

மகிந்த கும்பலின் எதிரியாகிவிட்ட சரத் பொன்சேகாவை போட்டுத் தள்ளுவார்களா!?

மகிந்த கும்பல், முன்னாள் கூட்டாளியான சரத் பொன்சேகாவுக்கு செய்யாத அவமானம் கிடையாது. தொடர்ந்தும் சகல விதமான நெருக்கடிகளையும், தனிமைப்படுத்தலையும் தீவிரமாக்கியிருக்கும் மகிந்த கும்பல், ஆளை போட்டுத்தள்ளுவதன் மூலம் தான் தன் குடும்ப சர்வாதிகாரத்தை தக்க வைக்கமுடியும் என்ற அரசியல் நிலைக்குள் நகர்ந்து வருகின்றது. சரத் பொன்சேகாவை நாளை துரோகி என்று கூறும் வண்ணம், அண்மையில் மகிந்தாவின் உரை ஒன்று வெளிவந்துள்ளது. தன்னுடன் இல்லாத அனைவரும், துரோகிகள். இதுதான் மகிந்த சிந்தனையும், மகிந்த சித்தாந்தமுமாகும்.

மகிந்த கும்பலின் அரசு தன் எதிரிகளையும், தனக்கெதிரான கருத்துகளையும் அரசியல் ரீதியாக எதிர் கொள்ள முடிவதில்லை. மாறாக தனக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களை போட்டுத் தள்ளுவது வரையான ஒரு அரசியல் நடைமுறைதான், இலங்கையின் இன்றைய ஜனநாயகமாகும்.

தன்னுடன் இல்லாதவர்கள் அனைவரையும் மிரட்டுவது, விலை பேசுவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது, இறுதியாக போட்டுதள்ளுவது....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகள் மட்டும் உலாவிய பாரிஸ் லாச்சப்பலில் மக்களுடன்


அப்போது விநியோகிதவர்களில் ஓருவர் அவர்களுக்கு துண்டுபபிரசுரம் சம்பந்தமாகவும், சிந்தனைமையம் சமபந்தமாகவும் விபரங்களைச் சொன்னார். தொடர்ந்து யார் இவர்கள் என வினாவினர். ஓரிருவர்களின் பெயர்களைச் சொன்னபோது அதில் ஒருவர் நீங்கள் அவர்களின் கைக்கூலிகளா? என்றார். அதற்கு அவரோ, நானோ, அல்லது சிந்தனை மையத்தில் உள்ளவர்களோ யாருடைய கைக்கூலிகளும் அல்ல என்றார்.

Monday, November 16, 2009

சூரிச் இல் 11.10.2009 அன்று நடந்த கலந்துரையாடல் (தொடர்ச்சி…)

பாகம்-2
ரயாகரன் :வணக்கம். நேரடியாகவே விவாதத்துக்குப் போகலாம் என நினைக்கிறேன். இங்கு உரையாற்றியவர்களினது கருத்துகளிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன். மே17 க்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களில் முக்கியமானது அதுவரைகாலமும் புலிப் பாசிசத்தினூடாகத்தான் அனைத்தும் என புலியல்லாத தரப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அது முடிவுக்கு வந்திருக்கின்றது. புலத்துப் புலிகள் அதனுடைய நிதியாதாரத்துக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளின் பாசிசம் தகர்ந்து போக அரசு பாசிசம் மேலெழுந்து வந்துள்ளது. எதைப் புலி செய்ததோ அதை இன்று அரசு செய்துகொண்டிருக்கின்றது. கடந்தகாலத்தில் புலிப் பாசிசம் எனறு சொல்லிக் கொண்டு அதற்கு எதிராகப் போராடினோமோ அல்லது எதிர்த்து நின்றமோ அதேயளவு காரணங்கள் எல்லாவற்றையும் மூடிவைத்துவிட்டு இன்று அரசை ஆதரிப்பவர்களாக பெரும்பான்மையாக புலியெதிர்ப்புப் பேசியவர்கள் மாறி நிற்கின்றார்கள். ஒரு மாற்றத்தை நோக்கிய தேவை அவசியம் என்பதைத்தான் நாம் இன்று சொல்லி நிற்கின்றோம்.

Sunday, November 15, 2009

நக்சல் வேட்டை….அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போர்!நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழ

நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

""நக்சல் ஒழிப்பு கோப்ரா படை, மத்திய ரிசர்வ் போலீசு, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் இப்போரில் பயன்படுத்தப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் செயற்கைக் கோள் வழியே அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்படும். நக்சல்பாரிகள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களின் வன்முறையை முறியடிக்க உளவுத்துறை, இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் () என்ற உயர்மட்ட அமைப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் நிறுவப்படும். தேசத்தின் பாதுகாப்பு நலனையொட்டி உருவாக்கப்படும் இத்தகைய அமைப்புக்கென தனியே சட்டம் இயற்றப்படும்'' என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்